ஏய் பெண்ணே

#1
"சிறகடித்து சைக்கிளில் அவள்
சிட்டுக்குருவியாய் பறக்க
சிறிதேனும் என்னை பார்க்க மாட்டாளா என ஏங்கி
நான் சிறு திருப்பத்தில்
சிந்தனை வயத்தில் காத்திருந்தேன்
அச்சிந்தனையிலே அவளின் சிறகினை உடைத்து இருப்பேன்
என் செல்வவளமிக்க மகிழுந்து அதில்"

"சற்று மோதியிருந்தாலும்
அவளுக்கு சமாதி நிச்சயம்"

"ஏய் பெண்ணே
அறிவில்லை உனக்கு என்றேன்"

"நீ திருப்பத்தில்
திணறுவாய் என அறியவில்லை நான் என்றாள்"

"ஓ வார்த்தையாலேயே விளையாடும்
அறிவாளியோ நீ என்றேன்"

"அதை இன்னும்
அறியவில்லையோ நீ என்றாள்"

"அச்சமின்றி சென்றாயே
செத்திருந்தால் நீ என்ன செய்திருப்பாய் என்றேன்"

"நான் செத்தபின் என்ன செய்யமுடியும் என்னால்
என்னை சுற்றி இருப்பவர்கள் வேண்டுமானால்
எனக்கு இறுதி சடங்கு செய்திருப்பார்கள் என்றாள்"

"ஏன் உனக்கு உயிர் வாழும்
ஆசையே இல்லையா என்றேன்"

"வாழும் வருடங்களின்
எண்ணிக்கை அது தேவையில்லை
என்னை எண்ணி துடிக்கும்
நெஞ்சம் அது எண்ணிலடங்காததாய் இருந்தால் போதும்
அது தான் என் வாழ்வின் வெற்றி என்றாள்"

"என்னை எண்ணி மட்டுமே
துடிக்கும் இதயம் பல
எனக்கு உண்டு
உன்னை எண்ணி தவிப்பவர்களை
நீ எண்ணி பார்த்ததுண்டா என்றாள்"

"சொந்தங்கள் மட்டும் போதும் என்று
சொல்கிறாயா என்றேன்"

"இரத்த பந்தத்தில் மட்டும் சொந்தம் வருவதில்லை
உனக்காக இரத்தம் தருபவர்களும் சொந்தம் தான் என்றாள்"

"அப்படி நீ சேர்த்து வைத்த
சொந்தம் அது உன்னை சேற்றில் தான் தள்ளும் என்றேன்"

"சிரித்துக்கொண்டே அவள் சொன்னால்
சேற்றிலும் தாமரையாய் நான் மலர்வேன் என்று"

"மறுவார்த்தை இன்றி மௌனமாய் நின்றேன்"

"மங்கை அவள்
மறுபடியும் திரும்பி செல்லும் நேரம்
ஏய் பெண்ணெ உன் பெயர் என்ன என்றேன்"

"கன்னி என் பெயர் கனி என்றாள்"

"காலம் முழுதும் உன் கணவனாய் இருக்க
கனி அவளின் கடைக்கண் பார்வை அது கிடைக்குமா என்றேன்"

"கண்டதும் காதலா என்றாள்"

"உன் சொற்களினால்
சொக்கி நிற்கிறேன் என்றேன்"

"சொப்பனம் இது கலைந்து விடும் என்றாள்"

"என் சொப்பன சுந்தரியே நீதானடி என்றேன்"

"சொந்தங்களோடு வந்து
என்னை சொந்தமாக்கிக்கொள் என்றாள்"


"சொர்க்கத்தில் இருப்பது போல் உணர்ந்தேன்"

"சுற்றும் முற்றும் கண்டேன்
காணவில்லை என் சொப்பண சுந்தரியை"

"பிறகு தான் சுயம் பெற்றேன்
இது சொப்பணம் என்று"

"ஏய் பெண்ணே
என்னை ஏமாற்றுவது ஏனோ
கனவில் கண்ட உன் கரம் சேரும் நாள் எதுவோ"

"ஏய் பெண்ணே
எங்கிருக்கிறாயடி நீ"
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top