• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஏரிக்கரை 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
ஹாய் டியர்ஸ் குறுக்கால வர்ரதுக்கு மன்னிச்சு....அது ஒண்ணுமில்லை டியர்ஸ் இந்த ஏரிக்கரை -ன்றது ரொம்பவே ரொம்ப குட்டியான கதை தான் . கதை முடிய போகுதுனு நான் இப்பவே சொல்லிக்கறேன் டியர்ஸ் அப்றம் யாரும் என்னை அடிக்கவரக்கூடாது ???...


ஓகே டியர்ஸ் ரொம்ப பேசுனா நீங்க கட்டைய தூக்குனாலும் தூக்குவிங்க??? சோ நான் ஜகா வாங்கிக்குறேன் ....???
 




Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
பூக்களும் கற்றுகொள்கிறது மென்மையை மழலையிடம்......

ஏரிக்கரை 9 :

பைல் வந்தவுடன் அதை முகிலிடம் கொடுத்த அரசு , டேய் இந்தா படிச்சு உனக்கு என்ன தோணுதுனு பாரு என்றவன் சிறிது நேரம்
கழித்து , முகில் ....அத பாத்து முடிச்சாச்சுனா நம்ப ஏரிக்கரைக்கு கிளம்பலாம் .


முகில் , எஸ் பாஸ் ...ஆனா பாஸ் ...அங்க போய் என்ன தேட போறீங்க .

அரசு , யாருக்கு தெரியும்.

முகில் , பாஸ் ....

அரசு , டேய் வாடா இங்க வெட்டியாதான இருக்க போற ... ஏதோ என் உள் மனசு சொல்லுது அங்க போய் பார்னு... போய்தான் பார்ப்போமே .

முகில் , நல்லா சொல்லுச்சு உங்க உள்மனசு என முனங்க ....
என்னடா அங்க முனங்குற என அரசு கேட்டதற்கு , ஹீஹீ ஒண்ணுமில்ல பாஸ்...உங்க உள்மனசு எம்புட்டு அறிவா சொல்லுதுன்னு புகழ்ந்தேன் பாஸ் என்றவன் ..சரி சரி டைம் வேஸ்ட் பண்ணாம வாங்க கிளம்பலா...என பேச்சை மாற்றினான் .


....................................................

உச்சிக்கு பொழுதில் ஏரிக்கரைக்கு கூட்டி வந்த அரசுவிடம் முகில் , பாஸ் நம்ப அப்பத்தா மேல உங்களுக்கு பாசமே இல்லை...அதான் அவங்க சொன்னதெல்லாம் மறந்துட்டீங்க போல என பொய்யான கோபத்துடன் கூறினான் .

அரசு , டேய் அடிவாங்காம என்னன்னு தெளிவா சொல்லு. நம்ப அப்பத்தா என்ன சொல்லுச்சு ?? நான் என்னை மறந்தேன் ??

முகில் , அதான் பாஸ் அப்பத்தா நம்ம கிட்ட உச்சிப் பொழுதில் யாரும் இல்லாத இடத்துக்கு போக கூடாதுன்னு சொல்லி இருக்குல... என்னை மாதிரி அழகான பையன பார்த்தா மோகினி பிசாசு வந்து கூடவே கூட்டிட்டு போய்டுமாம் ...அச்சச்சோ பாஸ் இதுக்கு எதுக்கு அம்மாம் பெரிய கல்ல தூக்குறிங்க மீ பாவம்.

அரசு , என் வாயில நல்லா வந்துறும் சொல்லிட்டேன் ...எருமை எருமை போய் ஒழுங்கா தேடுடா என சொல்லி தனியாகச் சென்று தேடத் தொடங்கினான் .

முகில் , என்னைத்த இவரு உத்து உத்துபாக்கறாரு என முனகியவனுக்கு சட்டென்று ஞாபகம் வந்தது.....பாஸ் உங்களுக்கு ஒன்னு தெரியுமா ? 25 வருஷத்துக்கு முன்னாடி இந்த நாளில் தான் அந்த குழந்தையை அந்த அம்மா இங்க தூக்கிப் போட்டார்களாம் .

அரசு , பைல்லே பார்த்தேன் டா ...அப்போல இருந்துதான் இந்த இடத்துல ஏதோ கிடைக்கபோதுன்னு தோணிட்டே இருக்கு .நிச்சயமாக ஏதாவது கிடைக்கும் தேடு .

முகில் , ம்ம்ம்க்கும் தேடு தேடுன்னு
சொல்றாரு ஆனா எத தேடனும்னு சொல்றாரா ?... ஆமா 25 வருஷத்துக்கு முன்னாடி காணாமல் போன குழந்தை திரும்ப இப்போ கிடைக்க போகுதா என்ன ... சரி பாஸ் சொன்னதுக்காகவாது குத்துமதிப்பா எதையோ தேடுவோம் என புலம்பிகொண்டே எத தேடறதுனே தெரியாம தேடிட்டியிருந்தான் முகில் .


வெளியே திட்டினாலும் அவனின் பேச்சை இதழில் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்த அரசு , தூரத்தில் ஒருவர் ஏரிக்கு அருகில் வருவதைக் கண்டு உற்றுப் பார்த்தான் .

40 வயதிருக்கும் என எண்ணும்படியான தோற்றத்துடன் கைகளில் வலை எடுத்து வந்த அவரைக் காணும்பொழுதே மீன் பிடிக்க வந்தவர் என தெரிந்தது .

அருகில் வந்த பின்பே இவர்கள் இருவரையும் கண்டவர் தயங்கி தம்பிங்களா யாரு நீங்க ? என்ன பண்றிங்க இங்க ?

பதில் சொல்ல போன முகிலை கண்களால் தடுத்தவன் ...நாங்க சும்மா இந்த ஊரை சுத்தி பார்க்க வந்தவங்க பெரியவரே, இந்த வழியா போகும்போது ஏரிய பார்த்தோம் சரி கிட்ட வந்து பார்ப்போமேனு வந்தோம் ...நான் அரசு இவன் என் நண்பன் முகில் ....உங்க பேர் என்ன பெரியவரே ?

என் பெயர் ஜோசப் தம்பி , நான் மீன்பிடி வேலை செய்யறவன். சரி தம்பி நீங்க பாருங்க என்றவர் சற்று தள்ளி சென்று அங்கிருந்த மரத்தின் கீழ் தன் கையிலிருந்த வலையை வைத்துவிட்டு அதன் அருகிலேயே அமர்ந்து அந்த ஏரியை கண்களில் சொல்லமுடியா உணர்வுடன் பார்த்திருந்தார் .

இவரின் செய்கையை பார்த்துக்கொண்டிருந்த முகிலும் அரசுவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள முகில் அவரிடம் ....பெரியவரே என்ன இப்படி உட்கார்ந்துடீங்க ...மீன் பிடிக்கலையா ஒருவேளை நாங்க இருக்கிறது தொந்தரவா இருக்கா?

ஜோசப் , அச்சோ அப்படியெல்லாம் எதுவும் இல்ல தம்பி.அது நான் இப்போ மீன்பிடிக்க வரல இந்த ஏரியை பாக்கத்தான் வந்தேன் . என்ன தம்பி இப்படி பார்க்கிறீங்க நீங்க எதுக்கு பார்க்குறீங்கன்னு புரியுது . வருஷம் வருஷம் நான் எங்க இருந்தாலும் இந்த நாள்ல இங்க வந்துஉட்கார்ந்துட்டு போவேன் தம்பி . அதில எனக்கு ஒரு திருப்தி ....

அரசு , பெரியவரே நீங்க சொல்றத பார்த்த ஏதோ விஷயம் இருக்கும்போல ... என்ன விஷயம்னு எங்களுக்கு முழுசா சொல்லுங்களேன்.

ஜோசப் , எதுக்குப்பா உங்களுக்கு அந்த கதைலாம் ....நீங்கபோய் சுத்தி பாருங்க .

முகில் , நாங்க எல்லாம் பார்த்துட்டோம் பெரியவரே நீங்க சொல்லுங்களேன் .

இரண்டுபேரும் வற்புறுத்த அவர் சொல்ல தொடங்கினார்

ஒரு இருபது இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால நடந்தது தம்பி . அப்போ எல்லாம் இந்த ஏரியில் மீன், நண்டு, நத்தைனு நிறைய இருக்கும் .

அதுவும் இந்த ஏரி நண்டுகளுக்கு தனி கிராக்கி . வழக்கம் போல ஒரு நாள் நண்டுபிடிக்கதற்காக வலையை வீசிட்டு கயிற இந்த மரத்தில்தான் கட்டிட்டு போனேன் .

ஒரு ஒருமணி நேரம் கழிச்சு வந்த போது வலை ரொம்ப எடையாய் இருக்கே இன்னைக்கு நிறைய நண்டு சிக்கி இருக்குன்னு நினைச்சு மேலே இழுத்து பார்த்தப்போ ஒரு நிமிஷம் என் உடம்புல இருக்க ரத்தம்லாம் உறுஞ்சி போயிடுச்சு தம்பி .

இருவரும் என்னாச்சு என பதற ...

ஜோசப் , அந்த வலையில் ஒரு குழந்தை இருந்திச்சி .அந்த குழந்தை எப்படி வந்துச்சுன்னு தெரியல குழந்தையோட உடம்பு முழுக்க நண்டுகளா இருந்திச்சி ... அந்த குழந்தையை தன்னுடைய இரையா நினைச்சு கடிச்சிட்டு இருந்துச்சிங்க .

பதறி போய்... கஷ்டப்பட்டு ஒன்னொன்னா பிடிச்சு தூக்கி போட்டேன் தம்பி ஆனா அதுக்குள்ள அந்த குழந்தையோட உடம்புல நிறைய காயங்கள் ...அந்த குழந்தை மயக்கமாவேற இருந்திச்சி எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல .... உடம்புல இருந்த ரத்தத்தலாம் துடச்சு விட்டு என்துணியை கிழிச்சி கட்டு போட்டு விட்டேன்.

என்ன பண்றது எப்படி அந்த குழந்தையை காப்பாத்துறதுனு தெரியாம குழந்தைய தூக்கிட்டு கால் போன போக்கில் நடந்தப்ப தான் அந்த ஆசிரமத்தை பார்த்தேன் .அப்போது இருந்த நிலமைல ஒரு குழந்தையை வளர்க்கிற அளவுக்கு என்கிட்ட வசதி இல்லை அதுவும் குழந்தைக்கு உடனே மறுந்துபோடணுமே , அந்த ஆசிரமத்தில் இருந்தா மருந்தும் போட்டு குழந்தைய நல்லாவும் பார்த்துப்பாங்கனு உள்ள போய் அங்கிருந்த அம்மாகிட்ட அந்த குழந்தையை விட்டுவிட்டு வந்தேன்.

அவங்க கிட்ட குழந்தை எப்படி கிடைச்சதுன்னு எல்லாம் சொல்லிட்டேன். அத கேட்டு அந்த அம்மா வருத்தப்பட்டு இனிமே அவங்களே குழந்தைய பார்த்துகிறேன் சொல்லிட்டாங்க .

குழந்தைய விட்ட உடனே நான் இங்கவந்து அந்த குழந்தையை யார்னா தேடுறாங்களானு பார்க்க வந்தப்ப தான் அந்த குழந்தையோட அம்மாவ பத்தி தெரிஞ்சது... என போன அத்தியாயத்தில் அந்த கான்ஸ்டபிள் சொல்லியதை அச்சுபிசகாமல் இவர்களிடம் சொன்னார்.

அதெல்லாம் தெரிஞ்சதுக்கு அப்புறம் ஏனோ அந்த குழந்தையை திரும்ப கொண்டு வருவதற்கு எனக்கு விருப்பம் இல்லை தம்பி.

அதுக்கப்புறம் ஒரு ஏழு வருஷத்துக்கு அப்புறம்தான் அந்த குழந்தையை பார்ப்பதற்காக போயிருந்தேன் . மத்த குழந்தைங்க மாதிரி இல்லாம ரொம்ப அமைதியா இருந்துச்சு.அந்த குழந்தையை பார்க்கும்போது அவனை நான் எப்படி எடுத்துட்டுவந்தேன்... உடம்பில் இருந்த காயங்களுடன் னு நினைச்சி அவனை பார்த்தபோது அவன் உடம்புல அந்த தழும்புகள் இன்னும் அப்படியே இருந்தது. அந்த துக்கத்தில் அந்த குழந்தை கிட்ட எல்லாத்தையுமே நான் சொல்லிட்டேன் .

அந்த வயசுல அதுக்கு எதுவும் புரியாம என்னையே உத்து உத்து பார்த்துச்சி. அப்புறம்தான் குழந்தைகிட்ட இப்படியெல்லாம் சொல்கிறோமே இனிமே இந்த குழந்தையை கிட்ட இப்டிலாம் சொல்லகூடாது னு கொஞ்சம் கொஞ்சமா பார்க்கிறத நிறுத்திட்டேன்.

ஆனாலும் வருஷம் வருஷம் நான் இங்கு வரும் போது அவனும் என் கூட இருக்குற மாதிரியே இருக்கும் தம்பி என கண்கள் கலங்க கூறினார் .

அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த முகிலிடம் நெருங்கிய அரசு , 25 வருஷத்துக்கு முன்னாடி தொலைஞ்சது திரும்ப கிடைக்குமா கேட்டியே கிடைக்க தான் போகுது என்றவன் அவரிடம் பெரியவரே அந்த ஆசிரமம் பெயர் எதுவும் ஞாபகம் இருக்கா.

அவர் , அது தம்பி என்னமோ நிழல்னு வரும் தம்பி ....ஆங் " இறைவனின் நிழல்" அதான் தம்பி அதோட பேரு .

சரிங்க பெரியவரே ரொம்ப நேரம் ஆயிடுச்சு நாங்க கிளம்புறோம் என்று அவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினர் .

தங்களது பைக்கின் அருகில் வந்தவுடன் முகில் , பாஸ் நம்ப இப்போ எங்க போக போறோம் .

அரசு, அதான் அந்த பெரியவர் சொன்னாரே " இறைவனின் நிழல் " .


....................................................


" காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை அம்மா ....அன்பென்றாலே அம்மா... என் தாய்போல் ஆகிடுமா " - என ஓடிக் கொண்டிருந்த பாடலுக்கு ஏற்ப ஒரு கையில் தாளம் போட்டுக் கொண்டே காரை ஓட்டி வந்த அவன் ஒரு வீட்டின் முன்பு அதை நிறுத்தி இறங்கிச் சென்று கதவை திறந்தான் .

அன்றொரு நாள் நாம் பார்த்த அதே வீடு . பார்வையில் பட்ட 3 கதவுகளில் மூன்றாவதாய் இருந்த கதவை திறந்து அறையை திருப்தியாய் பார்த்தவன் நிச்சயமா அம்மாவிற்கு இந்த இடம் பிடிக்கும் ...சரி சரி நாம போய் அம்மாவை கூட்டிட்டு வருவோம் என வெளியே வந்தவன் , காரின் பின்பக்கம் சென்று மயங்கிக் கிடந்த அப்பெண்ணிடம்... அம்மா நம்ப வீடு வந்துருச்சு எழுந்திருங்க மா என உலுக்கியவன் .

அப்பெண் எழாமல் இருக்க , " ஓகே மை டியர் மாதா " நீங்க நல்லா தூங்கிட்டிங்களா சரி நானே உங்களை கூட்டிட்டு போறேன் என அப்பெண்ணை தன் கைகளில் அள்ளிக் கொண்டு வந்தவன் அவ்வறையில் இருந்த மெத்தையில் அவரை படுக்க வைத்தான் .

சிறிது நேரம் அமைதியாய் இருந்தவன் ....மா எனக்கு ரொம்ப பசிக்குது உங்களுக்கும் ரொம்ப பசிக்கும்ல நான் போய் உங்களுக்கு சாப்பிட ஏதாவது சமைச்சு வைக்கிறேன் . நீங்க தூங்கி எழுந்து எனக்கு ஊட்டிவிடனும் நான் உங்களுக்கு ஊட்டிவிடுவேன் ஓகே வா " மை டியர் மாதா " என படுத்திருப்பவளிடம் சொன்னவன் அங்கிருந்து நகர்ந்து சென்றான் .


------------------------------------------------
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
??யாருடா antha அம்மா.... "அவன் " அம்மா வா?:oops::rolleyes:அவங்களையும் கொல்லபோறானா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top