• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஏழிசை - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 43

நாட்டாமை
Author
Joined
Nov 3, 2021
Messages
53
Reaction score
90
தன் கண் முன் தெரிந்த செய்தியை வெறித்துக் கொன்டிருந்தாள் உதித்தரா. அடுத்து என்ன செய்வது என வேகமாகக் கணக்கிட்டுக் கொண்டிருந்தது மனது. வீட்டைச் சுற்றிலும் பத்திரிக்கையாளர்கள். வெளியே செல்லவும் முடியாது. செல்லாமல் இருக்கவும் முடியாது. தான் பதில் சொல்லாமல் கடத்தும் ஒவ்வொரு நொடியும் ஊடகம் தன் கற்பனைக் குதிரையைப் பறக்க விடும் எனத் தெரியும். அதுவரை அணைத்து வைத்திருந்த அலை பேசியை ஆன் செய்தவள், அதை விக்னேஷிடம் கொடுத்து விட்டு வாசல் புறமாகச் சென்றாள்.
“மேம், எதுக்கும் சார்கிட்ட ஒரு வார்த்தை..”, தன்னைத் தடுத்த விக்னேஷை ஒரே பார்வையில் அடக்கியவள், மீண்டும் வாசலை நோக்கி நடந்தாள்.

அவள் வெளியே வந்தது தான் தாமதம் என்பது போல் அவளைத் தனக்குள் இழுத்துக் கொண்டிருந்தன கேமிராக்கள். அத்தனையும் லைவில் ஒளிபரப்பாகத் தொடங்கியது .

“மேம் எதுக்காக திடீர்ன்னு கன்னியாகுமரில கிருஷ்ணா குரூப்ஸ் இவ்ளோ இன்வெஸ்ட் பண்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” - தேர்ந்தெடுக்கப் பட்ட கேள்வி.

“இதை நீங்க பிரேக்கிங் நியூஸ் போட முன்னமே கேட்டு இருக்கலாம்.” - மிக நிதானமாய் வந்தது உதித்தராவின் பதில்.

“இன்வெஸ்ட்மென்ட் இருக்கறதால தான மேம் நாங்க நியூஸ் போடறோம். மக்களுக்கு உண்மைய சொல்ல வேண்டியது எங்க கடமை. நீங்க ப்ராபெரா பிரஸ் மீட் கொடுத்து இருந்தா இது நடந்தே இருக்காதே மேம். ” - கேள்வி கேட்க சொல்லியா கொடுக்க வேண்டும் நிருபர்களுக்கு. கேள்வி தாறுமாறாய் வந்தது.

“வீடு கட்டிட்டு தான் சார் பால் காய்ச்ச முடியும். உங்க அவசரத்துக்காக கட்டாத வீட்டுக்கு குடி போக முடியாதே.” - வார்த்தைகளை தேர்ந்தெடுப்பதில் கவனமாய் இருந்தாள் உதித்தரா.

“ஆனா கிருஷ்ணா குரூப்ஸ் இதுவரை இந்த மாதிரி பண்ணதே இல்லை மேம். எப்போவுமே ஓப்பனா பிரஸ் மீட் வச்சு அறிவிப்பாங்க. ” - அவள் வாயைப் பிடுங்கும் முயற்சி அது.

“அதே தான் நானும் சொல்றேன். இன்னும் நாங்க எங்க இன்வெஸ்ட்மென்டை முடிக்கவே இல்ல. எங்களுக்கு எங்க ப்ரொஜெக்ட்டை ஆரம்பிக்க இடம் தேவைப்பட்டது. அந்த இடம் இருந்தா தான் எங்களால ப்ரொஜெக்ட்டையே ஆரம்பிக்க முடியும். உங்களுக்கும் பிரஸ் மீட் கொடுக்க முடியும்”.

இடையே குறுக்கிட ஆரம்பித்த நிருபரை கையமர்த்தி தடுத்தவள் மீண்டும் தானே தொடர்ந்தாள்.

இப்போதைக்கு கிருஷ்ணா குரூப்ஸ் இடம் வாங்கி இருக்கு. அதுவும் ரொம்ப நியாயமான முறையில் தான. இதுல யாராவது நாங்க இட மோசடி செஞ்சதா நிரூபிக்க தயாரா இருந்தா அடுத்த கேள்வியை கேட்கலாம்

“மேம் கிருஷ்ணா குரூப்ஸ் வாங்கி இருக்கிற இடங்கள் எல்லாமே பேங்க்ல அடமானம் இருந்த இடங்கள்ன்னு எங்களுக்கு நியூஸ் வந்திருக்கு இது உண்மையா?”.

“பேங்க்ல அடமானம் இருந்து ஏலத்துக்கு வந்த இடங்களை கிருஷ்ணா குரூப்ஸ் வாங்கி இருக்கு இதுதான் உண்மை. அந்த இடங்களெல்லாம் தேதி முடிஞ்சு நியாயமான முறையில் ஏலத்துக்கு வந்த இடங்களை தான் கிருஷ்ணா குரூப்ஸ் வாங்கி இருக்கே தவிர நாங்க யாரு கிட்ட இருந்தும் எந்த நிலத்தையும் அபகரிக்கல. இதையும் ப்ரூவ் பண்ண கிருஷ்ணா குரூப்ஸ் தயாரா இருக்கு. இதுக்கு மேல இதைப்பற்றி நீங்க கேட்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
அதே போல நாங்க இட மோசடி செய்து இருக்கோம்னு பொய்யா வதந்தி பரப்பிய பத்திரிக்கைகள் மேல கூடிய சீக்கிரமே கிருஷ்ணா குரூப்ஸ் சார்பா மானநஷ்ட ஈடு வழக்கு தொடரவும் நாங்க முடிவெடுத்திருக்கோம். தாங்க் யூ” - என்று சொல்லி அவள் யாருக்காகவும் காத்திருக்காமல் உள்ளே சென்றுவிட மொத்த ஊடகமும் அடுத்த பிரேக்கிங் நியூஸ் தயாராகிக் கொண்டிருந்தது.


அந்த நிகழ்வுக்குப் பிறகு நாட்கள் அதன் போக்கில் கடந்து போக தொடங்கி இருந்தது. உதித்தரா கன்னியாகுமரியில் இருந்து கிளம்பி சென்னை வந்திருந்தாள் தன் சித்தப்பாவின் கட்டளையின் பேரில். அவரிடமிருந்து வரும் அத்தனையும் அவளுக்கு கட்டளை தான்.

‘கிருஷ்ணா க்ரூப்ஸ்’ தமிழகத்தின் மிகப்பெரிய தொழில் குழுமங்களுள் ஒன்று.
உதித்தராவின் தாத்தா வெங்கடேசன் தன் காதல் மனைவி கிருஷ்ணவேணியின் பெயரில் சின்னதாக ஒரு துணிக்கடையை ஆரம்பித்தார். நாட்கள் செல்ல செல்ல கிருஷ்ணா சில்க்ஸின் கிளைகள் தமிழகம் எங்கும் பரவத் துவங்கியது. கிருஷ்ணா சில்க்ஸ், கிருஷ்ணா பாத்திரக்கடை, கிருஷ்ணா நகை கடை , கிருஷ்ணா டிபார்ட்மெண்டல் ஸ்டோர், கிருஷ்ணா ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள், கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் என்று தமிழகத்தின் மிக முக்கிய தொழில்களில் எல்லாம் கால்பதிக்க துவங்கியது கிருஷ்ணா குரூப்ஸ். அவருக்குப்பின் அவரது மகன்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்ளத் துவங்கினார்கள்.

அவரது மூத்த மகன் பாலகிருஷ்ணன் இன்று கிருஷ்ணர் கல்வி நிலையங்களின் பொறுப்பு முழுவதும் அவரிடம் தான் உள்ளது. கிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ், கிருஷ்ணா மெடிக்கல் காலேஜ், கிருஷ்ணா ஸ்கூல்ஸ் என்று கல்வி நிறுவனங்கள் முழுவதும் அவர் வசம்தான். மிகச் சிறந்த நிர்வாகி அவர் அதனாலேயே கல்வி நிறுவனங்களில் அவர் யாரையும் தலையிட விடுவதில்லை கல்வி தற்போது வியாபாரம் ஆகிவிட்டது. ஆனால் தங்கள் நிறுவனங்களில் அதன் தரத்தையும் குறையாமல் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர். இன்று வரை அரசாங்க விதிமுறைகளை பின்பற்றி கல்வி கட்டணங்களை வசூலிக்கிறார். கிருஷ்ணா அறக்கட்டளையில் இருந்து வரும் பணம் அவரின் மற்ற தேவைகளுக்கு உதவுவதால் டொனேஷன் என்ற விஷயத்தை பற்றி அவர் யோசித்ததே இல்லை.

அடுத்தவர் ராதாகிருஷ்ணன் முழுக்க முழுக்க வியாபாரத்தில் ஊறித் திளைத்தவர். ‘நம்ம தேவைக்கு கொடுக்கணும்னா கொடுத்து தானே ஆகணும்’ , ‘இரக்கத்தில் வியாபாரம் பண்ணக்கூடாது. வியாபாரத்தில் இரக்கமும் காட்டக் கூடாது’ என்பதே அவரது கொள்கை. அதனாலேயே மற்ற அனைத்து நிர்வாகங்களும் மெல்ல மெல்ல அவர் வசமானது. மிகச் சிறந்த ராஜ தந்திரி அவர். ஆனாலும் அவர் நிறுவனங்களின் பெயர் அவருக்கு மிகவும் முக்கியம். தேவையான இடங்களில் வேலை ஆக வேண்டுமென லஞ்சம் கொடுத்தாலும் தன் வேலையின் தரம் குறையாமல் பார்த்துக் கொள்வார்.

பாலகிருஷ்ணன் - வித்யா தம்பதிகளின் மூத்த மகள் தான் உதித்தரா பாலகிருஷ்ணன். அவளுக்கு அடுத்ததாய் ஒரு தம்பி நந்தன். இப்போது கிருஷ்ணா குரூப்ஸில் நிர்வாகப் பிரிவில் பயிற்சியில் இருக்கிறான்.

ராதா கிருஷ்ணன் - ஸ்ரீ தேவி தம்பதிகளுக்கோ இரட்டையர்கள். மகன் கபிலன் , மகள் பாரதி இருவரும் இப்போது தான் பத்தாம் வகுப்பில் இருந்தனர்.

என்ன தான் உதித்தரா பாலகிருஷ்ணனின் மகளாக இருந்தாலும் அவன் முழுக்க முழுக்க ராதாகிருஷ்ணனின் வளர்ப்பு. திருமணமாகி 12 ஆண்டுகள் வரை குழந்தை இல்லாமல் இருந்தனர் ராதாகிருஷ்ணன் தம்பதியர். எனவே அவரது கவனம் முழுக்க முழுக்க உதித்தராவிலேயே இருந்தது. அந்த காலகட்டத்தில் அவளும் தன் சித்தப்பாவுடனே ஒட்டிக்கொண்டாள். வியாபாரத்தின் அத்தனை நுணுக்கங்களையும் அவளுக்கு கற்றுக் கொடுத்தது ராதாகிருஷ்ணன் தான் எனவே தன் சித்தப்பா சொல்வது மட்டுமே அவளுக்கு வேதம். அவர் என்ன சொன்னாலும் சரியாக இருக்கும் என்பது அவளது அசைக்க முடியாத நம்பிக்கை.

அதனாலேயே அவர் கிளம்பி வரச் சொன்னதும் மறுக்க முடியாமல் சென்னை திரும்பி விட்டாள் உதித்தரா. ஊடகம் இந்த விஷயத்தை பெரிது படுத்த துவங்கியதுமே அதை அப்படியே நிறுத்தவும் சொல்லிவிட்டார். எனவே கன்னியாகுமரி வேலைகளை சற்று தள்ளி வைத்துவிட்டு தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருந்தாள். என்னதான் பகல் பொழுதுகளில் தன் வேலைகளில் தன்னை தொலைத்து இருந்தாலும் இரவில் வந்து கழுத்து இறுக்கும் அந்த கைகளை மட்டும் மறக்க முடியவில்லை அவளால். கண்ணை மூடி தூங்க முயற்சிக்கும் போதெல்லாம் அந்த கைகளின் இறுக்கம் இன்னும் கழுத்தில் ஒட்டிக் கொண்டிருப்பது போலவே தோன்றியது அவளுக்கு. கனவுகளில் பல முறை அந்த கையும், கோப விழிகளும் வந்து போயின.
அதனாலேயே அவன் மீதான கோபம் நீரு பூத்த நெருப்பு போல் அவளுக்குள் இருந்து கொண்டே இருந்தது. தன்னை இப்படி புலம்ப வைத்தவனை உறங்க முடியாமல் செய்ய வேண்டும் என்று அவளுக்குள் ஓடத் தொடங்க தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள் உதித்தரா.

அத்தனை இலகுவாக மீண்டும் அவனை நோக்கி ஒரு காயை நகர்த்த அவளுக்கு விருப்பமில்லை. அவனை கட்டி வைத்து அடிக்க வேண்டும். எந்த புறமும் நகர முடியாமல் அடிக்க வேண்டும், என்பதே அவளின் ஆசையாக இருந்தது எனவே சரியான நேரத்துக்காக காத்துக்கொண்டிருக்க தொடங்கினாள்.

ஆனால் அகரனோ உதித்தரா என்று ஒருத்தி தன் உலகத்திலேயே இல்லை என்பது போல தன் கட்சிப் பணிகளில் மூழ்கிவிட்டான். அவனை பொறுத்தவரை இப்போது அந்த நிலத்தில் எந்த வேலையும் நடக்கவில்லை. தாங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் அதன் பிறகு யாராலும் எதுவும் செய்யவும் முடியாது. இப்போதைக்கு அதிகாரமும் ஆட்சியும் அவனுக்கு முக்கியமாய் பட்டது. அவன் நினைத்தது போலவே அந்த வருட தேர்தலில் அவனுக்கு சீட்டும் கிடைத்து விட மற்ற அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டு தேர்தலில் கவனம் செலுத்தத் தொடங்கினான். இந்த வெற்றி மட்டுமே அவனுக்கு இப்போது மிக முக்கியமான தேவை. இந்த வெற்றி கிடைத்தால் மற்ற அனைத்தையும் அவனே நடத்திக் கொள்வான். எனவே முழுக்க முழுக்க அவனது மொத்த கவனமும் தேர்தலிலேயே இருந்தது. உதித்தரா காத்திருந்த நேரமும் வந்தது..
 




Anamika 43

நாட்டாமை
Author
Joined
Nov 3, 2021
Messages
53
Reaction score
90
வணக்கங்கள் மக்களே,

கொஞ்சும் ஏழிசையின் அடுத்த பதிவுடன் வந்து விட்டேன் உங்கள் அனாமிகா.. மூன்றாவது அலை கொஞ்சம் வேலைய காட்டிடுச்சு மக்களே.. எனவே இந்த தாமதத்தை மன்னனித்துக் கொள்ளுங்கள்.. கூடிய சீக்கிரமே அடுத்த பதிவோட வர்றேன்.. எழுத்துப் பிழை இருந்தால் மன்னிச்சுக்கோங்க மக்களே… அவசரத்துல டைப் பண்ண பதிவு…

எல்லாத்தையும் மன்னிச்சுட்டு கதையோட நிறை, குறைகளையும் சொல்லுங்க மக்களே..
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
என்ன பிளான்லா இருக்காலோ தெரியலையே🙄🙄🙄, பண்றது காவாலி தனம் இத தட்டி கேட்டதுக்கு அவன் மேல காண்டு😒😒😒😏😏😏

அகரா பார்த்து இருந்துகோ டா😐😐😐

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top