• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஐந்து பவுண்டா ???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
எப்பவும் இரண்டு பவுண்டுக்கு விக்கிற முருங்கை கீரை இந்த வாரம் ஐந்து பவுண்டு என்றதும் ஆஆஆஎன்று ஆனேன். வேறு வழியில்லையே இரும்பு சத்து வேண்டும் என்றால் எவ்வளவு விலைக்குவிற்றாலும் வாங்க தானே வேண்டும்.

எப்பவும் வாங்கி ஒரு நாள் குளிர்சாதனப்பெட்டியில வைச்சு அடுத்த நாள் எடுத்த முக்காள்வாசிக்குமேல் இலைகள் அந்த ஈர்க்கில் இருந்து உதிர்ந்து விடும் மீதி இருக்குறதை ஈசியாக உருவி விடலாம்( நான் சோம்பேறி என்பதை இப்படியும் சொல்லலாம்)

அப்போ சாம்பாருக்கு தேவையானதை எடுத்து ஒரு செய்தி தாளில் மடிச்சு மறுபடியும்குளிர்சாதனப்பெட்டியில வைச்சுட்டு மீதியை அன்றைக்கு சமைப்பேன்.

குளிர்சாதனப்பெட்டியில் வைத்தது நல்ல இருந்தா இரண்டு நாள் கழித்து சாம்பார் இல்லையென்றாகுப்பை தொட்டி. என்ன வெறும் இரண்டு பவுண்டு தானே அதிலும் முக்கால்வாசி சமைச்சுட்டோம்அதனால வீணா போனாலும் பரவாயில்லை. சமைச்ச பொருளை தான் வீணாக்க கூடாது என்கிற சிறந்தகொள்கையின் இருப்பிடம் இல்ல நாமா...

‘உங்க மைண்ட் வாய்ஸ் சமைக்கிறதுக்கு முன்ன அப்ப வீணாகலாமா?... பொறுப்பில்லை என்பதை கூட இப்படி சொல்லலாம் போல ம்க்கும்...’

ஆனால் இன்னைக்கு ஐந்து பவுண்டு கொடுத்து வாங்கியதால். எங்கே வீணாகிவிடுமோ என்கிறபயத்தில் மொத்தத்தையும் உருவி மொத்தத்தையும் இன்றே சமைத்துவிட்டேன். இதுல என்னவிந்தை என்றால் அந்த ஈர்க்கை கூட வீணாக்காமல் மொத்தத்தையும் சமைச்சுட்டேன். Because it’s cost five pounds.

முதல் பிரசவத்துல என்னோட கை கால் எல்லாம் வீங்கி போயி இருந்தது அதனால தினமும் எனக்குபார்லி தண்ணி, சிறுகீரை தண்டு ரசம், முருங்கை ஈர்க்கு ரசம் என்று என் மாமியார் செய்துகொடுப்பாங்க. முருங்கை மரத்தில் இருக்கிற அத்தனையும் உடம்புக்கு நல்லது என்று பார்த்துபார்த்து சமைப்பாங்க என் மாமியார்.

இன்றைக்கு அதுயெல்லாம் நியாபகத்துக்கு வந்துவிட்டது. அதனால ஒரு பாத்திரத்தில் முருங்கைஈர்க்கை பொடியாக நறுக்கி சிறிது மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைத்தேன். பிறகுவடிகட்டி எடுத்த தண்ணீரை பருப்புடன் சேர்த்து ரசம் வைத்தேன். இப்ப ரசம் ரெடி.

முருங்கை ஈர்க்கு ரசம் உடலில் அதிகமாக நீர் சேர்ந்து இருந்தால் அந்த நீரை வடிய வைக்க இந்தரசம் ஒரு சிம்பல் ரெமிடி.

சரி வெந்த இந்த ஈர்க்கை என்ன செய்யலாம் என்று என் சிறு மூளையை தட்டிய போது ட்டடயிங்ட்ட்டட்டாயிங் துவயல் என்று ஐடியா வந்தது. ஒரு இரண்டு ஸ்பூன் உளுத்தம்பருப்பையும் ஐந்துகாய்ந்த மிளகாய் ்அல்லது வரமிளகாயை வருத்து கொஞ்சம் இஞ்சி, தேங்காய் துருவல், புளி உப்புசேர்த்து அரைச்சேன் சுவையான சத்தான துவயல் ரெடி...

ஆஆஆ என்று ஆரம்பிச்ச நான் இப்ப வாவ் என்று ஆகிட்டேன். சமைச்சு முடிச்சதும். Now feeling it’s worth for five pounds.

‘என் மைண்ட் வாய்ஸ் லாக்டவுன் என்பதாலா நாம ரொம்ப productive ஆகிட்டோமோ...’

‘என் புருஷ் மைண்ட் வாய்ஸ் பாண்டியன்... நீங்க வித்துட்டீங்க .... எங்களை மாட்டிவிட்டீங்களேபாஸ்’

ஒரு சிறு தகவல்:

Bodyshop - Moringa Body Butter எதுல தயாரிக்கிறாங்க தெரியுமா ?? முருங்கை பூவில் இருந்துதான். அந்த டப்பாவின் மூடியை கூர்ந்து பார்த்தால் தெரியும் முரூங்கை பூ... வீணாக போவதைவிவரமாக டப்பாவில் போட்டு காசு பார்கிறார்கள்.
 




Attachments

Last edited:

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,805
Reaction score
35,513
Location
Vellore
அச்சோ, இங்கே மரத்தில இருந்து தான் பறிச்சு முருங்ககீரை கடையணும்... அப்படி மத்தவங்க கிட்ட போய் கீரை பறிச்சுக்கவான்னு கேக்கவே சின்ன தயக்கம்... அதிகமா‌ விலைக்கு கிடைக்காது...
நீங்க சொல்றதை பார்த்தா நானெல்லாம் ரொம்ப மோசம்... சும்மா கிடைக்கிறதை பறிச்சு சமைக்க யோசிக்கிறேன் ????
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அச்சோ, இங்கே மரத்தில இருந்து தான் பறிச்சு முருங்ககீரை கடையணும்... அப்படி மத்தவங்க கிட்ட போய் கீரை பறிச்சுக்கவான்னு கேக்கவே சின்ன தயக்கம்... அதிகமா‌ விலைக்கு கிடைக்காது...
நீங்க சொல்றதை பார்த்தா நானெல்லாம் ரொம்ப மோசம்... சும்மா கிடைக்கிறதை பறிச்சு சமைக்க யோசிக்கிறேன் ????
கூட இருக்கும் போது அதனுடைய அருமை தெரியாது தூரமாக போனால் தான் புரியும்... ??
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
அடடா ?????????
Fridge la vecha easy ahh uruviralama!
Ivlo naala idhu teriyama 1 mani nerama ukkandhu keerai uruvittu irundhuruken! Inime follow pannikiren thnks for the tips akka?
Newspaper la suthivecha paper iram aagidadha!????
Rasam nd thuvail or ultimate!??????????
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அடடா ?????????
Fridge la vecha easy ahh uruviralama!
Ivlo naala idhu teriyama 1 mani nerama ukkandhu keerai uruvittu irundhuruken! Inime follow pannikiren thnks for the tips akka?
Newspaper la suthivecha paper iram aagidadha!????
Rasam nd thuvail or ultimate!??????????
Athai oru plastic cover la podanum boss ?? appadiye vacha Iram agi azhikidum ?
Keeraiya tight aah oru polythene cover la pottu vacha uthirinthidum.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top