• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஒரு அட்டைப் படத்தை வைத்து அந்த புத்தகத்தை கணிக்க கூடாது

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
ஒரு வயதான முதிய பெண்மணி அவருடைய செக்கை பேங்க் கேஷியரிடம் கொடுத்து, "எனக்கு ஐநூறு ரூபாய் பணம் எடுக்க வேண்டும்" என்றார்.

உடனே அந்த பேங்க் கேஷியர் பெண் அந்த முதிய பெண்ணிடம், "ஐயாயிரம் ரூபாய்க்கு கீழே தொகை எடுக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் *** கார்டை பயன்படுத்தி எடுங்கள்" என்றாள். உடனே அந்த முதியவள், ஏனென்று கேட்க,

அந்த பெண் கேஷியர் சற்று எரிச்சலுடன், "இது தான் பேங்க் சட்டம். வேற எந்த விஷயமும் இல்லைனா இடத்தை காலி பண்ணுங்க, உங்களுக்கு பின்னால் நிறைய பேர் வெயிட் பண்றங்க" என்றாள் சற்றே கடுமையுடன்..

அந்த முதிய பெண்மணி இப்பொழுது அமைதியாக தனது செக்கை மீண்டும் அந்த கேஷியர் பெண்ணிடம் கொடுத்து, "தயவு செய்து என் அக்கவுண்ட்டில் உள்ள பணம் முழுவதும் எனக்கு திரும்ப கொடுத்து விடுங்கள்" என்றார். அந்த கேஷியர் பெண் அந்த முதியவள் அக்கவுண்டிலுள்ள பண நிலுவையைப் பார்த்து அதிர்ச்சியானாள்.

அவள் தனது தலையை ஆட்டிக் கொண்டு அந்த முதியவளிடம், "என்னை மன்னித்து கொள்ளுங்கள் பாட்டி.. உங்கள் கணக்கில் மூன்றரை கோடி ரூபாய் உள்ளது. எங்கள் வங்கியில் இப்பொழுது அவ்வளவு பணம் இல்லை. எனவே தாங்கள் தயவுசெயுது நாளை சிறிது நேரம் ஒதுக்கி வர இயலுமா?" என்று மிகப் பணிவோடு பவ்யமாக கேட்டாள். உடனே அந்த முதிய பெண்மணி

"இப்பொழுது நான் எவ்வளவு பணம் எனது அக்கவுண்டில் எடுக்க இயலும்..?" என்று கேட்டார். உடனே அந்த பெண், "மூன்று லட்சம் வரை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்" என்றாள். உடனே அந்த முதியவள் அந்த பெண்ணிடம் மூன்று லட்சம் ரூபாய் தனக்கு வேண்டுமென்று கூற, அந்த பெண்ணும் மூன்று லட்சம் ரூபாய் வேகமாக மிக பணிவுடன் கொடுத்தாள். அந்த முதியவள் இப்பொழுது ஐநூறு ரூபாயை அவளது கைப்பையில் வைத்துவிட்டு மீதம் இருந்த 2,99,500 ரூபாயை மீண்டும் அவளது அக்கவுண்டில் டெபாசிட் செய்ய சொன்னார். அந்த கேஷியர் பெண் இப்பொழுது வாயடைத்து நின்றாள்.

சட்டங்கள் தளர்க்கப்படாதவையாக இருந்தாலும், நாம் மனிதர்களின் சில சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து போகலாம். ஒருவருடைய தோற்றத்தையோ, உடையையோ வைத்து ஒருவரை எடை போடக் கூடாது. மாறாக அனைவரையும் மரியாதையாக நடத்த வேண்டும்.

ஒரு அட்டைப் படத்தை வைத்து அந்த புத்தகத்தை கணிக்க கூடாது. -பகிரப்பட்டது...

Paithathil pidithathu
 




shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
உண்மை தான் தோற்றத்தையும், உடையையும், பார்க்கக்கூடாது. அதோடு வெளிநாடுகளில் நிறத்தையும் பார்க்கின்றார்கள். வெள்ளையர்கள் தான் நிறத்தைப் பார்க்கின்றார்கள் இதில் எங்களவர்களே எங்களை வேற்றுக்கிரகவாசியாகவும், பட்டிக்காடாகவும் பார்ப்பார்கள் அப்போ கோபமும் சிரிப்பும் சேர்ந்து வரும். எங்க திருந்தப் போகின்றார்கள் இப்படியானவர்கள்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உண்மைதான், ஈஸ்வரி டியர்
நம்ம பணத்தை நாம் பெறுவதற்கு
இந்த பேங்கில் என்னென்ன
கொடுமைகள் செய்றாங்க-ன்னு
அதை அனுபவிச்சவங்களுக்குத்தான்
தெரியும், ஈஸ்வரி டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அந்த முதிய பெண்மணி மாதிரி
நாலு பேர் செய்தால்தான்
பேங்க்கில் இந்த மாதிரி
அட்டூழியம் செய்யறவங்க
கொஞ்சமாவது திருந்துவாங்க,
ஈஸ்வரி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top