• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஒரு உதவியை நாம் ஒருவருக்கு செய்யாவிட்டால் அவர் தோல்வி அடைந்து விடமாட்டார்....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
குரு ஒருவர் தன் சீடர்கள் சிலருடன் பேசியபடி, ஆற்றின் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

திடீரென குரு கால் வழுக்கி, நிலைதடுமாறி ஆற்றில் விழப்போனார். அப்போது அருகிலிருந்த ஒரு சீடன், "சட்'டென்று குருவின் கையைப் பிடித்து இழுத்து, அவரை ஆற்றில் விழாமல் காப்பாற்றினான்.

அவன் அவரைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால், ஆற்றில் விழுந்த அவர், பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டிருப்பார்.

குருவும் மற்ற சீடர்களும் காப்பாற்றிய சீடனுக்கு, நன்றி தெரிவித்தனர்.இதனால் அந்த சீடனுக்குத் தற்பெருமை அதிகமாகி விட்டது.

பார்ப்பவர்களிடமெல்லாம், "ஆற்றில் விழ இருந்த குருவை நான்தான் காப்பாற்றினேன். இல்லாவிட்டால், இந்நேரம் குரு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருப்பார்' என்று கூறத் தொடங்கினான்.

இந்த விஷயம் குருவின் காதுக்கு எட்டியது. ஆனாலும் பொறுமையைக் கடைப்பிடித்தார்.

மறுநாள் குரு அதே சீடர்களை அழைத்துக் கொண்டு, அதே ஆற்றின் கரையோரம் நடந்து சென்றார்.

அன்று சம்பவம் நடந்த இடம் வந்ததும், முன்பு தன்னைக் காப்பாற்றிய சீடனிடம், ""என்னை ஆற்றில் தள்ளிவிடு!'' என்றார்.

அந்த சீடன் திகைத்தான்.

""ம்! தள்ளு!'' என்றார் குரு.

""அது... வேண்டாம் குருவே!'' என்றான் சீடன்.

""இது குருவின் உத்தரவு. கேட்டு நடப்பது உன் கடமை. ம்... என்னை ஆற்றில் தள்ளு!'' என்றார்.மிரண்டுபோன சீடன் அவரை ஆற்றில் தள்ளி விட்டான்.மற்ற சீடர்கள் என்ன நடக்கப்போகிறதோ? என்று திகிலுடன் பார்த்தனர்.

ஆற்றில் விழுந்த குரு, எந்தவித பதட்டமும் படாமல், அமைதியாக நீந்திச் சென்று மறுகரையைத் தொட்டுவிட்டுத் திரும்பி வந்தார்.

அதைப் பார்த்த சீடர்கள் அனைவரும் திகைத்தனர்.
குரு கரை மேலே ஏறி வந்தார்.தள்ளிவிட்ட சீடனைப் பார்த்தார்.

""இப்போதும் நீதான் என்னைக் காப்பாற்றினாயா?'' என்று கேட்டார்.

அந்த சீடன் தலைகுனிந்தான்.

""ஆபத்து நேரத்தில் ஒருவரைக் காப்பாற்றுவது, ஒருவருக்கு உதவுவது என்பது மனிதாபிமானமுள்ள செயல்.

ஆனால், அதை விளம்பரப்படுத்தி பெருமையடித்துக் கொள்வது அந்த மனிதாபிமான குணத்துக்கே இழுக்கைத் தேடித் தரும்.
அந்த மனிதன் ஒருநாளும் சான்றோனாக முடியாது!'' என்றார் குரு.

தற்பெருமை கொண்ட சீடன்,

குருவிடம் மன்னிப்புக் கேட்டு, தற்பெருமை எண்ணத்தைக் கைவிட்டான்..

ஒரு உதவியை நாம் ஒருவருக்கு செய்யாவிட்டால் அவர் தோல்வி அடைந்து விடமாட்டார்....

ஜன்னலாகிய நாம் கதவைத் திறக்காவிட்டால் அவருக்கு ஓர் கதவை யாராவது நிச்சயம் திறப்பார்கள்.....

வாழ்வின் பயன் தானும் பயனுற்று,பிறர்க்கும் பயனளிப்பதே......

அதைவிடுத்து இந்த தற்பெருமை வலையில் விழும்
மனிதனுடைய உண்மையான இயல்பின் வேர்களை
அத்தற்பெருமை வெட்டிவிடும்..

நாம் மலையாக இருப்பினும் மண்கும்பம் என உணர்வு
கொள்ள வேண்டும்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த சீடர் போலத்தான்
நம்ம நாட்டில் நிறையப்
பேர் இருக்காங்க,
ஈஸ்வரி டியர்
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
மிக அருமையான பதிவு சிஸ்டர் தக்க நேரத்தில் செய்யப்படும் உதவி சிறிது என்றாலும் காலம் உள்ளவரை நினைத்து பார்க்கப்படும்
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
மிக அருமையான பதிவு சிஸ்டர் தக்க நேரத்தில் செய்யப்படும் உதவி சிறிது என்றாலும் காலம் உள்ளவரை நினைத்து பார்க்கப்படும்
Crt dear
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top