• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஒரு குட்டிக் கதை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

AniRaje

மண்டலாதிபதி
Joined
Dec 8, 2018
Messages
336
Reaction score
800
Location
Universe
ஒரு குட்டிக் கதை


"ஏங்க சாப்பிட வாங்க... எப்பபாரு வேலை வேலைனு. வேலை பார்க்கிறதே சாப்பிடத்தான்." கீழிருந்து சத்தமாக அழைத்தாள் பவி.

"வரேன் பவி. நானே உங்கிட்ட ஒண்ணு பேசனும். சாப்பாடை எடுத்துவை சப்பிட்டுகிட்டே பேசலாம்" என்றபடி கீழே வந்தான் ரவி.

பவி, தனக்கும் ரவிக்கும் சாப்பாடை எடுத்து பரிமாறி அவனருகில் அமர்ந்தாள்.

"என்ன பவி, பசங்க சாப்பிட்டாச்சா?"

"ஆச்சு! அதெல்லாம் ஆச்சு. நாம தான் இன்னும் சாப்பிடலை"

"என்னங்க, அதிசயமா இருக்கு. உங்க ஆபீஸ் கோட்டையிலிருந்து வெளியே வந்துட்டீங்க? எப்பவும் மேல தானே மதிய சாப்பாட்டை எடுத்து வர சொல்லுவீங்க?"

"ஏன் உன்கூட நான் சாப்பிடக் கூடாதா?"

"நம்பிட்டேன். நம்பிட்டேன்"

"நான் ஒண்ணு சொல்லுவேன், அதைக் கேட்டு நீ கோபப்படக்கூடாது."

"என்ன பீடிகை பலமா இருக்கு? சொல்லுங்க அதையும் கேட்போம்"

"ஆமாம் இன்னைக்கு உங்க மகளிர் குழுவில் என்ன நடந்துச்சு"

"ஏன் கேட்குறீங்க? புதுசா இருக்கே. நீங்க இப்படியெல்லாம் கேள்வி கேட்க மாட்டீங்களே!"

"இல்லம்மா, நீ நியாயம் நேர்மைனு தான் எப்பவும் இருப்ப. அது எனக்குப் புரியும். ஆனால் அது மத்தவங்களுக்கு புரியாதுல"

"சொல்லுங்க. என் நியாயம் யாருக்கு புரியலைனு பார்க்கலாம்..."

"இல்லை... இதை பார்த்துட்டு நீ அவங்க கிட்ட கேட்க கூடாது. கேட்கமாட்ட்டேனு சொல்லு. அப்ப தான் சொல்லுவேன்"

"யாருகிட்ட கேட்க கூடாது?"

"உனக்கு, நிறைய வேலை இருக்கு பவி. இந்த மாதிரி சின்ன சின்ன தேவையில்லாத விசயத்தில் உன் நேரத்தை வெட்டியா செலவிடாதே. உன் வேலையை நீ பாரும்மா. உன் கதையை எழுதி முடி”

“சரி ரவி, சொல்லவந்ததை நேரடியாகச் சொல்லுங்க. சுடு சோறு ஆறிடுச்சு. பசிக்குது. சீக்கிரமா சொல்லுங்க”

“பவி, இந்தா இதை படி. அப்படியேக் கேளு” என்று ரவி, தன் கைப்பேசியை பவியிடம் கொடுத்தான்.

பவி, வாங்கிப் படித்தாள். அதிலிருந்த ஒலிப்பதிவைக் கேட்டாள். கேட்டவுடன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.

“பவி, உனக்கு கோபம் வரவில்லையா?”

“நான் ஏன் ரவி கோபப்படனும்? சின்னப்புள்ள தனமா இருக்கு. இதுக்கு யாராவது கோபப்படுவாங்களா?” என்று சொல்லிவிட்டு அமைதியாக சாப்பிட ஆரம்பித்துவிட்டாள்.

இப்போது பவியை தவிப்போடு பார்ப்பது ரவியின் முறை ஆகிற்று.

“சாப்பிடுங்கப்பா. சோறு முக்கியம்” என்று ரவியைப் பார்த்துக் கண்ணடித்துக் கூறினாள் பவி.

“சும்மா விளையாடாதம்மா. நீ என்ன பண்ணினனு நான் கேட்க மாட்டேன். நீ சரியாத்தான் செய்திருப்பனு எனக்கு தெரியும். ஆனால் இது உனக்கு தேவையானு நீயே முடிவு பண்ணிக்கோ பவி” என்று கவலையுடன் சொன்னான் ரவி.

“சும்மா சொல்லாதீங்க ரவி. இப்ப இங்க எங்கிட்ட சொல்லுறதை உங்களிடம் பள்ளிக்கூட குழந்தைங்க மாதிரி என்னைப் பற்றி குறைகூறி தனிச்செய்தி போட்ட அந்த அறிவாளிகிட்ட சொல்லியிருக்க வேண்டியது தானே?” என்றாள் பவி.

“நீ ஏதோ சொல்லி, உன் நியாயத்தை சமாளிக்க முடியாமல், அதை என் கிட்ட வந்து குறை சொல்லுறவங்க கிட்ட நானும், ‘என் பவியபத்தி எனக்கு தெரியும். உங்கள் வேலையை பார்த்துக்கிட்டு போங்க’னு சொல்ல ஒரு நிமிடம் போதும் பவி.”

“அப்புறம் ஐயா ஏன் அதை பண்ணலை? பண்ணியிருக்கலாம்ல?”

“பண்ணியிருப்பேன். ஆனால் ஏதோ மன அழுத்தத்தில் அவங்க எங்கிட்ட சொல்லிட்டாங்க. நானும் நீ செய்தது தான் சரினு சொன்னால் பாவம் அவங்க ஏமாந்து போய்டுவாங்க. அதான்”

“அப்படியா? உங்களுக்கு ரொம்ப குசும்பு ரவி. என்ன தெனாவெட்டு அவங்களுக்கு இருக்கும்? எவ்வளவு தைரியம் இருந்தா, ஒரு மகளிர் குழுவில் நடந்த பேச்சை, ஒரு ஆண், அதுவும் நீங்க என் கணவர். உங்களிடம் என்னைப் பற்றி கோள்மூட்டீ… உங்க போண்டாட்டி பண்ணுவதை கேள்வி கேள் அப்படிங்கிற மாதிரி சொல்லியிருப்பாங்க அவங்க? சின்னத்தன்மா இல்லை? இவங்க இன்னும் வளரவே இல்லை போல. இன்னும் பள்ளிக்கூடத்தில் படிக்கிற மாதிரி கம்ப்ளென்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க? இவங்களை எப்படி வச்சுச் செய்யுறதுனு யோசிச்சுகிட்டு இருக்கேன் ரவி.”

“விடு பவி. ப்ளீஸ் இதை பெரிசு பண்ணாத. எனக்கு உன்னை பத்தி தெரியும். விடும்மா. என் கிட்டவே இப்படி உன்னைப் பத்தி தைரியமா சொல்லுறவங்க, மத்தவங்ககிட்ட என்னவெல்லாம் உன்னைப் பத்தி தப்பு தப்பா சொல்லியிருக்க மாட்டாங்க? தேவையில்லாமல் ஏன் உன் பெயரை நீயே வாயக் குடுத்துக் கெடுத்துக்கிற?”

“என்னை தெரியாதவங்க என்னைப் பற்றி என்ன நினைத்தால் எனக்கு என்ன? என்னைத் தெரிந்தவங்க இப்படி என்ன சொன்னாலும் நம்ப மாட்டாங்க. அப்புறம் நான் ஏன் கவலை படனும்? சொல்லுங்க ரவி?”

“நீ சொல்லுறதும் சரிதான். நான் பேசாம கேட்கவில்லைனா… உன் மாமியார் மாமனார்கிட்ட போய் இருப்பாங்களோ பவி?”

“சும்மா காமெடி பண்ணாதீங்க ரவி. அத்தை மாமாவிற்கு என்னைப் பத்தி நல்லா தெரியும். இந்த மாதிரி எத்தனை புள்ளபூச்சியைப் பார்த்திருப்போம். நீங்க என்னை புரிஞ்சுகிட்டு என்னை ஒண்ணும் சொல்லலை. இதே விசயம் வேற வீட்டில் நடந்தால் அந்த பொண்ணு பாவம்ல்ல…”

“சரி. எதுக்கு மன்னிக்கிறேனோ இல்லையோ. ரொம்ப நாளாச்சு. நீங்களும் நானும் மதியம் இப்படி பேசிக்கிட்டு தனியா சாப்பிட்டு. அதுக்கு அவங்க தான் காரணம். அதுக்காக அவங்களை ஒன்னும் சொல்லாம விட்டுடுறேன். ஆனால் கண்டிப்பா இதை கதையா எழுதத் தான் போறேன்.”

“ஓய். என்ன வேணா பண்ணு… இப்ப என் தட்டுல அந்த குழம்ப ஊத்து பவி.” என்று சொல்லிச் சிரித்தான் ரவி.

அடுத்தவருக்கு ஒரு தப்பு நடக்கும் போது அதை எனக்கென என்று கடந்து போகாமல் நல்லதை நினைப்பவர்களுக்கு அடுத்தவர் செய்யும் கெடுதல் கூட நன்மையில் தான் முடியும்போல. ரவியும், பவியும் அந்த கோள்மூட்டியின் உதவியால் இன்று சந்தோசமாக பேசி, சிரித்து மகிழ்ந்து சேர்ந்து உண்டார்கள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top