• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஓடிப்போலாமா? - 11 (Final - 1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் ஹாய் நட்பூஸ்,

ஓடிப்போலாமா அடுத்த யூடியுடன் வந்துவிட்டேன்.. இந்த பதிவு கொஞ்சம் கனமான பதிவாக இருக்கும்.. ஃபைனல் எபி அடுத்த பார்ட் நாளை தருகிறேன்.. இந்த பதிவில் சுமிம்மா பற்றி நிறைய விஷயம் சொல்லியிருப்பேன்.. சுமிம்மா ஏன் இப்படி இருக்காங்க..? ஏன் என்ன காரணம்..? இந்த கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லியிருக்கேன்.. அடுத்த பதிவில் நிரஞ்சன் - நித்திலா இருவருக்கும் திருமணம்.. எல்லோரும் மறக்காமல் வந்து கலந்துக்கொள்ள வேண்டும்.. நாளை உங்களை எல்லாம் சந்திக்க வருகிறேன் பாய் பிரிண்ட்ஸ்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 11

எல்லோரும் இணைந்து ஒன்றாக சாப்பிட்டு முடித்துவிட்டு கிளம்பும் நேரத்தில், “எல்லோரும் சீக்கிரம் கிளம்புங்க.. நம்ம இன்னைக்கு கன்னியாகுமரி போகணும்..” என்றார் சுமிம்மா..

“என்ன சுமிம்மா அதுக்குள் ஊருக்கு போகணுமா..?” என்று அனிதா சிணுங்க, “எனக்கு ஊருக்குப் போற ஐடியாவே இல்ல..” என்றாள் கார்த்திகா..

“எல்லோரும் ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கோங்க.. நாளைக்கு நம்ம சங்கரிக்கு ரிசல்ட்.. பாவம் அவங்க வீட்டில் எல்லாம் தேடுவாங்க.. அதனால் எல்லோரும் இன்னைக்கு நைட் கிளம்பறோம்..” என்றனர்

அவரின் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்த கௌசிக், “அம்மா நான் சென்னை.. அதனால் உங்களோட வர முடியாது..” என்றவன் வருத்ததுடன் சொல்ல, “நான் தருமபுரி மா..” என்றாள் கார்த்திகா..

“அதெல்லாம் எனக்கு தெரியாது.. நீங்களும் எங்களோட கன்னியாகுமரி வாங்க.. என்னோட பொண்ணுக்கு திருமண ஏற்பாடு பண்ணிருக்கேன்.. திருமணம் முடிந்ததும் எல்லோரும் கிளம்புங்க..” என்றார் சுமிம்மா..

அன்று முழுவதும் கல்லணை, ஸ்ரீரங்கம் கோவில் எல்லாம் சுற்றிவிட்டு இரவு ரயிலுக்கு எல்லோரும் கன்னியாகுமரி ரயிலில் கிளம்பினர்..

யாருக்கும் யாரையும் விட்டு பிரியமனம் வராமல் எல்லோரும் ஏதோவொரு சிந்தனையில் அமைதியாக வர அதையெல்லாம் கவனித்த நித்திலாவின் பார்வை நிரஞ்சனின் மீது படிந்தது.. அவளும் அவளையே பார்க்க அவனின் நினைவுகள் அன்றைய நாளை நோக்கி பயணித்தது..

சுமிம்மாவின் பாடலை கேட்ட நித்திலா தன்னுடைய அழுகையை அடக்க முடியாமல் ஓட அவளின் பின்னாடி சென்ற நிரஞ்சன், “நிதி எங்கே போற.. ஏய் ஓடாதே நில்லு நித்தி..” என்றவன் அவளை துரத்திக்கொண்டு ஓடினான்..

அவளோ அழுகையை அடைக்க முடியாமல் அங்கிருந்த மரத்தின் மீது முகம் புதைத்து நின்று அழுக அவளின் பின்னோடு ஓடிவந்த நிரஞ்சன், “நித்தி எதுக்கு இப்பொழுது ஓடிவந்த..” என்று கேட்க அவளோ அழுதுகொண்டே இருந்தாள்..

“நித்தி உன்னைத்தான் கேட்கிறேன்.. அந்த பாட்டைக் கேட்டதும் நீ ஏன் ஓடிவந்த.. அந்த பாட்டுக்கும் உனக்கு என்ன சம்மந்தம் சொல்லுடி..” என்றவன் அவளை தன்பக்கம் திருப்பினான்..

அவள் கதறி அழுக, “ஏய் நிதி அழுகாதே..” என்றவன் கத்த அவளின் அழுகை நின்றுவிட திருதிருவென விழித்தவளை பார்த்து அவனுக்கு பாவமாக இருந்தாலும் கூட, “முதலில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடி..” என்றான்..

“அவங்க.. அவங்க..” என்றவளுக்கு அதற்கு மேல் சொல்ல முடியாமல் போக, “சுமிம்மா உன்னோட அம்மாதானே..?” என்று தன்னுடைய சந்தேகத்தைக் கேட்க இல்லையே தலையசைத்த நித்திலா, “என்னோட அம்மா அவங்க இல்ல..” என்றாள்..

அவள் சொன்னதைக்கேட்டு அதிர்ந்த நிரஞ்சன், “என்னடி சொல்ற..?” என்றவன் கேட்க, “நான் அவங்களோட வளர்ப்பு மகள்..” என்றாள் நித்திலா அழுகையூடே..

“நிதி பிளீஸ் அழுகாதே..” என்றவன் அவளை அணைத்துக்கொள்ள, “அப்பா இறந்தும் என்னை ஆசரமத்தில் சேர்த்துட்டாங்க.. அங்கிருந்து என்னை வீடுக்கு கூட்டிட்டு போனாங்க சுமிம்மா.. என்னை படிக்க வெச்சாங்க..” என்றவள் அவனின் மார்பில் சாய்த்து அழுதாள்..

“உனக்கு நல்ல குடும்பம் கிடைச்சிருக்கு நிதி.. அப்புறம் எதற்கு அழுகிற..” என்றவனுக்கு அந்த சந்தேகம் எழுந்ததும், “அப்புறம் எதற்கு நீங்க ஓடிவந்தீங்க..” என்று கேட்க அன்று வீட்டில் நடந்த விஷயத்தை அவனிடம் கூறினாள்..

காலைபொழுதில் வீடு அமைதியாக இருப்பதற்கு பதிலாக கலையரசன் ஊரே கேட்கும் அளவிற்கு கத்திக் கொண்டிருந்த சத்தம்கேட்டு அவள் ஹாலுக்கு வந்து பார்க்கும் பொழுது மாலதி, சுமித்ரா இருவரும் ஹாலில் நின்றிருந்தனர்..

அண்ணியின் முகத்தில் அவ்வளவு சந்தோஷமாக இருக்க சுமிம்மா இறுகிப்போய் நின்றிருக்க, “நாங்க தனிக்குடித்தனம் போக வேண்டாம் என்று சொல்ல நீங்க யாரு..?” என்றவன் கேட்ட அண்ணனை விநோதமாகப் பார்த்தாள் நித்தி..

“நான் தனிக்குடித்தனம் போகவேண்டாம் என்று சொல்லல.. இப்பொழுது தனிக்குடித்தனம் எதுக்கு என்றுதான் கேட்கிறேன்..” என்றவர் பேச்சைத் தொடங்கும் முன்னே இடைமறித்தாள் மாலதி..

“நான் என்னோட வீட்டில் இருக்கும் யாரிடமும் பேசக்கூடாது.. நான் இவங்க சொன்ன வேலை எல்லாம் செய்துவிட்டு அப்படியே பெட்டி பாம்பாக அமைதியாக இருக்கணுமா..?” என்று எகிறினாள்..

“உன்னோட அம்மா நல்லது சொல்லிக் கொடுக்காமல் உன்னை வளர்த்தி வெச்சிருக்காங்க.. அது உனக்கு புரியல.. இந்த இலட்சனத்தில் தனிக்குடித்தனம் போகணுமோ..” என்றவர் மகனின் பக்கம் திரும்பி, “டேய் அவள் சுயநலமாக இருக்கிற..” என்றவர் மகனுக்கு உண்மையை உணர்த்த நினைத்தார்..

“அம்மா போதும் நிறுத்துங்க.. அவள் சுயநலமாக இருப்பது எனக்கு தவறாக தெரியல.. அப்போ அவளோட குடும்பத்தை யார் பார்த்துக்குவாங்க.. அதனால் நாங்க இவங்க அம்மா வீட்டிற்கு பக்கத்தில் வீடு பார்த்து தனி குடித்தனம் போறோம்..” என்றான் மகன்..

“அவளோட குணம் தெரியாமல் நீ என்னடா பேசற.. அவளை கெடுப்பதே அவளோட அம்மாதான்.. அவளுக்கு எந்த வேலையும் செய்ய தெரியாது.. உனக்கு ஒருநாள் சமையல் செய்து போட கூட அவளால் முடியாது..” என்றவர் மருமகளை பற்றி சொல்ல,

“பாருங்க உங்க அம்மா என்னை எப்படி மட்டம் தட்றாங்க.. ஏன் நான் சமைத்து நீங்க சாப்பிடவே இல்ல.. நான்தான் இங்கே மூன்று நேரமும் சமைக்கிறேன்.. உங்கம்மா என்னை வேலை வாங்கிட்டு எப்படி பேசறாங்க பாருங்க..” என்றவள் கலையரசனை ஏற்றிவிட்டாள்..

“உங்களுக்கு இஷ்டம் என்றால் நீங்க இங்கே இருங்கம்மா இல்ல வீட்டைவிட்டு வெளியே போங்க.. இவளை வீணாக தொல்லை செய்யாதீங்க..” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்றான்..

அவன் பேசியதை எல்லாம் கேட்ட சுமிம்மா சிலையென நின்றிருக்க நித்திலா அவரின் அருகில் சென்று, “அம்மா..” என்று தோளைத் தொட்டாள்..

“நித்தி என்னைப் பார்த்து உங்க அண்ணா என்ன சொல்றான் பாரு.. நான் வீட்டைவிட்டு வெளியே போகணுமாம்.. மூன்று நேரமும் யாருக்கு என்ன வேண்டும் என்று அடுப்படியில் எல்லா வேலையும் முடித்து வைத்துவிட்டு டைமிற்கு ஆபீஸ் போறேன்..” என்ற குரல் கரகரப்புடன் ஒலித்தது..

“சும்மா உட்கார்ந்து சாப்பாடு போட்டு தின்றுவிட்டு வெட்டியாக அவங்க அம்மாகூட பேசிட்டு இருக்கும் இவளை நான் வேலை வாங்கிறேன் என்று உங்க அண்ணா தனிக்குடித்தனம் போகிறானாம்.. நல்லதுக்கு காலமே இல்ல..” என்றவர் தன்னுடைய வேலையைக் கவனிக்க சென்றார்..

அப்பொழுதுதான் நித்தி, ‘அம்மாவோட மனசில் எத்தனை ஆசை இருக்கும்..? அதையெல்லாம் நம்ம நிறைவேற்றி வைக்கணும்..’ என்று நினைத்த நித்தி அதற்கு மறுநாள் வீட்டைவிட்டு ஓடிச்செல்ல நினைத்தாள்..

அந்த நேரத்தில் மனதளவில் கயப்பட்டிருந்த சுமிம்மா அவளுடன் வீட்டைவிட்டு கிளம்பினார்.. இருவரும் வீட்டைவிட்டு ஓடிவர தாய் செய்யும் ஒவ்வொரு சேட்டையை ரசித்து மகிழ்ந்தாள் மகள்..!

தாய் ஒரு குழந்தையாக மாறிவிட தன்னுடைய அன்னைக்கு தானே தாயாக மாறினாள் நித்திலா.. தன்னுடைய தாயின் ஆசைகளை நிறைவேற்ற நினைத்த நித்தியின் உண்மையான ஆசைகள் இந்த பயணத்தில் நிறைவேறியது என்பது அவள் மட்டுமே அறிந்த உண்மை..!

அவள் சொல்லி முடித்ததும், “உங்க அண்ணா என்ன லூசா..?” என்று கேட்டதும் அவளுக்கு சிரிப்பு வந்துவிட, “எனக்கே அந்த சந்தேகம் இருக்கு..” என்றவள் சொல்லி முடிக்க, “இந்நேரம் வரை அழுதது நீதானா..?” என்றவன் அவளின் நெற்றியில் முட்டி சிரித்தான்..

“உன்னோட அம்மா மாதிரி யாரும் இருக்க மாட்டாங்க.. யார் உண்மை சொன்னாங்க யார் ஏமாத்திட்டு இருந்தாங்க என்று உன்னோட அண்ணனுக்கு இந்நேரம் உண்மை புரிந்திருக்கும்” என்றவன் சொல்ல நித்தி அமைதியாக இருந்தாள்..

“நிதி..” என்றவன் அழைக்க அவள் நிமிர்ந்து அவனின் முகம் பார்க்க, “உனக்கு நான் இருக்கேன்.. சுமிம்மா இருக்காங்க.. மற்ற விஷயம் எதுப்பற்றியும் நீ இனிமேல் யோசிக்காதே..” என்று அவளை சமாதானம் செய்தான்..

அவள் நிமிர்ந்து நிரஞ்சனின் முகம் பார்த்தவள், “என்னோட அம்மா இப்படி செய்வது உங்களுக்கு கஷ்டமாக இல்லையா..?” என்று கேட்க, “எனக்கு அவங்க மேல கோபம் இல்ல.. நிஜத்தை சொல்லணும் என்றால் நானும் இதையெல்லாம் ரசித்தேன்..” என்றான்..

அவள் அவனையே இமைக்காமல் பார்க்க, “பேபி என்னோட கேள்விக்கு நீ இன்னும் பதிலே சொல்லல..” என்றவன் அவளின் கன்னத்தை வருட, “எனக்கு அம்மா ஆல்ரெடி மாப்பிள்ளை பார்த்துட்டாங்க..” என்றவள் தலையைக்குனிந்து கொண்டாள்..

“மாப்பிள்ளை நல்ல இருக்கிறேனா..?” என்றவன் குறும்புடன் கண்சிமிட்ட, “நீங்க என்ன சொல்றீங்க..” அவள் புரியாமல் கேட்க, “நான்தான் உனக்கு பார்த்த மாப்பிள்ளை.. ஊருக்குப் போனதும் என்னோட அம்மா, அப்பா வந்து உன்னோட வீட்டில் சம்மந்தம் பேசுவாங்க..” என்றவன் புன்னகைத்தான்..

“நிஜமாவா..” என்றவள் நம்பாமல் கேட்க, “நிஜமா வா போலாம்.. நம்மள எல்லோரும் தேடுவாங்க..” என்று அவளை அழைத்துச் சென்றான்.. அந்த நினைவில் இருந்து நித்திலா வெளியே வர சுமிம்மாவின் செல் அடித்தது..

“ஹலோ..” என்று சுமிம்மா சொல்ல, “அம்மா நான் கலையரசன் பேசறேன்..” என்றவன் சொல்ல, “நீ எதுக்கு போன் பண்ணின..” என்றவர் கேட்க மற்றவர்களின் கவனம் எல்லாம் அவரின் பக்கம் திரும்பியது..

“அம்மா நான் பேசியது தவறுதான்.. அதற்காக என்னை மன்னிச்சிருங்க.. நீங்க எங்கிருந்தாலும் வீட்டிற்கு வந்திருங்க அம்மா..” என்றவன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க, “நான் அங்கேதான் வருகிறேன்..” என்றார் சுமிம்மா..

“அம்மா நான் மாப்பிள்ளை வீட்டில் பேசிட்டேன்.. அவங்களுக்கு நம்ம நித்தியை ரொம்ப பிடிச்சிருக்காம்..” என்றவன் சொல்ல, “ம்ம் தெரியும்..” என்றவர் சொல்ல, “அம்மா என்னோட பேசுங்க அம்மா..” என்றவன் குரல் தாழ்ந்து வந்தது..

“நான் உன்னோட பழைய அம்மா சுமித்ரா இல்லப்பா.. நான் சுமித்ரா.. இப்பொழுது நான் வர காரணமே என்னோட மகளின் திருமணம் மட்டும்தான்.. அது முடிந்தும் நான் அங்கிருந்து கிளம்பிருவேன்.. என்னை தடுக்க உனக்கு எந்த உரிமையும் இல்ல..” என்றவர் அவனின் பதிலை எதிர்ப்பார்க்காமல் போனை வைத்தார்..

அவர்கள் பேசுவதைக் கவனித்த சசிதரன், “அம்மா நீங்க ஏன் வீட்டைவிட்டு வந்தீங்க.. உங்களோட மகள் எங்கே இருக்காங்க..?” என்று கேட்டான்..

சுமிம்மா அமைதியாக இருக்க, “அம்மா பிளீஸ் நீங்க சிரித்துதான் நாங்க பார்த்திருக்கோம்.. இப்போ ஏதோ சரியில்லாத மாதிரி தெரியுது..” என்றாள் வித்யா..

“விளையாட வேண்டிய வயதில வேலையைத் தேடி ஓடினேன்.. வாழ வேண்டிய வயதில கட்டிய கணவனை இழந்து விதவையாக நின்றேன்..” என்றவர் தன்னுடைய மனதில் மறைந்திருந்த சோகத்தை கூறினார்..

அதைகேட்ட எல்லோரின் மனமும் கனக்க, “எனக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும்.. என்னோட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேண்டும் என்று இரண்டு குழந்தையைத் தத்துகேடுத்து வளர்த்தேன்..” என்றவர் வருத்ததுடன் கூறினார்..

“அம்மா அண்ணாவும் உங்களோட மகன் இல்லையா..?” என்று அதிர்ச்சியுடன் நித்திலா கேட்க, “என்னக்கா இதுக்கு எல்லாம் அதிர்ச்சி ஆகறீங்க..?” என்று கேட்டாள் அனிதா..

அவளை அணைத்துக்கொண்ட சுமிம்மா, “உன்னை மாதிரியே அவனையும் ஒரு ஆசரமத்தில் தத்துக்கு எடுத்தேன் நித்தி..” என்றவர் சொல்ல, “என்னது நித்திலா உங்களோட மகளா..?” மற்றவர்கள் அதிர நிரஞ்சன் மட்டும் மெளனமாக புன்னகைத்தான்..
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top