• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஓடிப்போலாமா? - 12 (Final - 2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
Acho summi ma matum thaniya poitangala....miss u sumi ma ...seekram vanga ..Sandhya Ka seekram sumima via kootitu vanga
 




Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
அதன்பிறகு தன்னுடைய குடும்பத்தினரைப் பார்த்தவள் அவனை மறந்துவிட, சுமிம்மா எல்லோரின் வீட்டிலும் பேசி அவர்களை எல்லாம் சமாதானம் செய்து வைத்திருந்ததால் அவர்களின் வீட்டில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை..!

அவர்கள் எல்லோருமே அவரவர் குடும்பத்தை அறிமுகப்படுத்த நிரஞ்சன் அங்கிருந்து காரில் கிளம்பினான்.. கார்த்திகா, கௌசிக் நித்தி மூவரை அழைத்துக்கொண்டு சுமிம்மா வீட்டிற்கு சென்றார்..

அவர் வீட்டிற்கு செல்லும் கலையரசன் வெளியே சென்றிருக்க வீடே அமைதியாக இருக்க, “என்ன வீட்டில் யாரையும் காணோம்..” என்ற சுமிம்மா வீட்டின் உள்ளே செல்ல மாலதி சமையறையின் உள்ளிருந்து பேசியதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றார் சுமிம்மா..

“அம்மா போதும் நிறுத்து.. பொண்ணுங்க புகுந்த வீட்டில் கணவனோட சந்தோஷமாக வாழவேண்டும் என்று நினைக்கும் தாயைப் பார்த்திருக்கிறேன்.. நீயெல்லாம் என்ன ஜென்மம்.. உன்னோட மகன் மட்டும் சந்தோஷமாக இருக்கணும்..” என்றவள் தாயுடன் பேசிகொண்டிருக்க அப்பொழுது அங்கு வந்த சுமிம்மாவை அவள் கவனிக்க மறந்தாள்..

“எனக்கு என்னோட குடும்பம் முக்கியம்.. எனக்கு எங்க அத்தையும், என்னோட புருஷன் மட்டும் போதும்.. காதலிச்சு கல்யாணம் பண்ணிய உன்னோட பொண்ணு இறந்துட்டான்னு நினைச்சுக்கோ.. இனிமேல் எனக்கு போன் பண்ணாதே.. முதலில் போனை வை.. அவருக்கு நான் சாப்பாடு பண்ணனும்..” என்றவள் போனை வைத்துவிட்டு நிமிர்ந்தவள் அதிர்ந்தாள்..

அவளின் எதிரே சுமிம்மா நின்றிருக்க அவளின் பின்னோடு கார்த்திகா, நித்திலா, கௌசிக் மூவரும் நின்றிருக்க, “அத்தை வாங்க..” என்றவள் புன்னகையுடன் வரவேற்க, “யாரும்மா உன்னோட அம்மாவா..?” என்று கேட்டார் சுமிம்மா..

“அமாங்க அத்த.. அவங்களுக்கு புத்தி பேதலிச்சு போச்சு.. அவங்க மகன் நல்ல வாழ என்னை வாழாவெட்டியாக்க பார்த்தாங்க.. அதன் அவங்களே வேண்டாம் என்று தூக்கி எறிஞ்சிட்டேன்..” என்றாள் மருமகள் எரிச்சலுடன் சொல்ல, “எனக்கு புரியல மாலதி..” என்றவர் அவளை புரியாத பார்வை பார்த்தார்..

“என்னோட அண்ணியோட அண்ணாவுக்கு என்னை கட்டிவைக்க எங்கம்மா போட்ட பிளான் அத்தை இது.. நான் உங்களைவிட்டு பிரிஞ்சி போயிட்டா.. அப்புறம் நான் அவங்களோட பேச்சை கேட்டுதானே ஆகணும்.. அதனால அவங்க சொல்றது எல்லாம் கேட்டு நான் அவரை டைவர்ஸ் பண்ணிட்டு அவங்க கைகாட்டு மாப்பிள்ளையை கட்டிக்கொள்வேன் என்று எதிர்பார்த்திருக்காங்க..” என்று உண்மையை எல்லாம் சொல்விட்டாள் மாலதி..

“நான்தான் அத்தை உங்களை புரிஞ்சிக்கவே இல்ல.. நீங்க இல்லாட்டி ஒண்ணுமே பண்ண முடியாது என்று இந்த பத்து நாளில் நான் நல்ல உணர்ந்துவிட்டேன்.. என்னை மன்னிச்சிருங்க அத்தை..” என்றவள் அவரிடம் மன்னிப்பு கேட்டாள்..

ஒரு புன்னகையுடன் அவளின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட சுமிம்மா, “மாமியார் எல்லாம் மருமகள் என்ற நிலையைத் தாண்டிதான் வருகிறோம்.. ஆனால் சிலர் அதை மறந்துவிட்டு இருக்கிறாங்க.. நான் அப்படி இல்ல.. என்னோட அத்தை என்னை ரொம்ப நல்ல பார்த்துகிட்டாங்க.. அதனால் நான் உன்னை நல்ல பார்த்துக்கொள்வேன்..” என்றவர் அவளை மன்னித்தார்..

அதன்பிறகு அந்த வீடே கல்யாண பரபரப்புடன் செயல்பட நித்தியோ நிரஞ்சன் வாங்கித்தந்த தலையாட்டி பொம்மையுடன் அமர்ந்திருக்க அவளின் அறைக்குள் நுழைந்த சுமிம்மா, “என்னடி நித்தி உனக்கு ஏற்பாடு எல்லாம் பிடிச்சிருக்கா..” என்று அவளின் விருப்பத்தைக் கேட்டார்..

“அம்மா எப்பொழுது இதெல்லாம் பிளான் பண்ணீங்க..” என்றவள் புன்னகையுடன் கேட்க, “நான் உன்னோட அம்மா.. அது ஞாபகம் இருக்கா உனக்கு..” என்றவர் குறும்புடன் கேட்டார்..

“நீ அம்மா இல்ல.. சரியான கேடி பயப்புள்ள.. என்னவோ பிளான் பண்ணிருக்கிற.. அது என்னவென்று தான் தெரியல..” என்றவளும் விளையாட்டாக சொல்ல, “யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க..” என்றவர் பாடிக்கொண்டே அவளின் அறையைவிட்டு வெளியே சென்றார்..

அடுத்த நாளே பட்டாளம எல்லாம் ஒன்று கூடிவிட நிரஞ்சன் நித்திலாவைப் பெண்கேட்டு வந்ததைப் பார்த்து, “நீங்களா மாப்பிள்ளை..” என்று அதிர்ச்சியுடன் கேட்ட அனிதா, “சுமிம்மா..” என்று கத்தினாள்..

அவரோ அமைதியின் மறுஉருவமாக வந்து நிற்க, “சத்தியமா நீங்க கொடுக்கும் ஒவ்வொரு ஷாக்கையும் என்னால தாங்க முடியல சுமிம்மா..” என்றவள் சொல்ல, “மாப்பிள்ளை முன்னாடி டேன்ஸ் வேற..” என்று சுமிம்மாவைக் கலாய்த்தாள் வித்யா..

“ஐயோ சொல்லாதடி எனக்கு வெக்க வெக்கமாக வருது..” என்றவர் புன்னகையுடன் சொல்ல, “செய்யறது எல்லாம் கிரிமினல் வேலை.. இதில் உங்களுக்கு வெக்கம் வேற வருதோ..” என்று கேட்டான் சசிதரன்.. “நான் டேன்ஸ் ஆடும் பொழுது நிரஞ்சன் அங்கே இல்ல..” என்றவர் சொல்ல எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர்..

நிச்சயதார்த்தம் முடிந்த பதினைந்து நாளில் கன்னியாகுமரியில் இருக்கும் பெரிய மண்டபத்தில் நிரஞ்சன் – நித்திலாவின் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது.. குறிப்பிட்ட நல்லநாளில் ஊரறிய நித்திலாவின் கழுத்தில் தாலி கட்டி அவளை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்டான் நிரஞ்சன்..!

அவர்களின் திருமணத்தை மனநிறைவுடன் பார்த்தார் சுமிம்மா.. மகன் – மருமகளின் மனம் மாற்றம், நித்தியின் திருமணம் எல்லாம் அவருக்கு ஒரு நிறைவைத் தந்துவிட ஆனந்தத்தில் அவரின் கண்கள் இரண்டும் கலங்கியது..

திருமணம் முடிந்து அவர்களின் பட்டாளம் எல்லாம் பிரிய மனமின்றி அங்கிருந்து கிளம்பிச் செல்ல மண்டபத்தின் வாசலுக்கு செல்ல மணமக்களும் வாசல்வரை சென்றனர்..

அப்பொழுது கார் வந்து நிற்க, “இந்த கார் எதற்கு..?” என்று மகேஷ் புரியாமல் கேட்க, “எல்லோரும நகருங்க நகருங்க..” என்று வேகமாக தன்னுடைய பேக்குடன் வெளியே வந்தார் சுமிம்மா..

அவர் சுடிதாரில் தலையில் ஒரு தொப்பியுடன் வந்து நிற்பதைப் பார்த்து, “அத்தை எங்க கிளம்பீட்டிங்க..” என்று நிரஞ்சன் அவரைக் கேள்வி கேட்டான்..

“நிரஞ்சன் உனக்கு ஒரு பரிசாக என்னோட மகளை கொடுத்துவிட்டேன்..” என்றவர் மகளின் பக்கம் திரும்பி, உன்னோட காதலுக்கு இவர்தான் பரிசு.. இவரோட நீ நிறைய நாள் வாழனும்..” என்று மகளிடம் அவர் சொல்ல, “அம்மா நீங்க எங்களோட இருங்க..” என்றான் கலையரசன்..

“உனக்கு அந்த தகுதி இல்ல..” என்று ஒரு வரியில் பேச்சிற்கு முற்றுபுள்ளி வைக்க, “அத்தை நீங்க எங்கேயும் போக வேண்டாம்..” என்று நிரஞ்சன் அவரைத்தடுக்க, “மாப்பிள்ளை நீங்க நல்லவர்.. முதலில் உங்களோட வாழ்க்கையை வாழ பாருங்க.. என்னோட கடமை எல்லாம் முடிந்தது.. நான் கிளம்பறேன்...” என்றார் சுமிம்மா..

“நான் இங்கிருந்து கிளம்புகிறேன்.. இந்த அம்மாவை யாராவது பார்க்கணும் என்றால் தேடி வாங்க..” என்றவர் தன்னுடைய பேக்கை எல்லாம் எடுத்து காரில் வைத்தார்..

அவரிடம் இருந்து இப்படியொரு அதிர்ச்சியை யாரும் எதிர்பார்க்கவே இல்லை.. அனைவரும் திகைத்து நிற்க, “அம்மா நீங்க போக வேண்டாம்..” என்று நித்தி அவரைத்தடுக்க நினைத்தாள்..

“கங்கைகேது கட்டுப்பாடு.. மங்கை நானும் கங்கை என்று பாட்டுப்பாடு..

காற்றுக்கேது கடிவாளம்.. கன்னிப்பொண்ணும் காற்றே என்று ஆட்டம் போடு..” என்றவர் நிரஞ்சன் – நித்திலா, சசிதரன் – வித்யா, மகேஷ் – அனிதா, கௌசிக் – கார்த்திகா, கடைக்குட்டி சங்கரி எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு காரில் ஏறியமர கார் மெல்ல கிளம்பியது..

‘அவர் எங்கே செல்கிறார்..’ என்று தெரியாமல் எல்லோரும் குழப்பத்துடன் நின்றிருக்க, “நான் மீண்டும் வருவேன்..” என்றவர் அவர்களுக்கு நிம்மதியை பரிசாக கொடுத்துவிட்டு, “பாய் பிள்ளைகளா..” என்று அவர்களிடம் இருந்து விடைபெற்றுச் சென்றார்..
Sumi amma enga poranga kasi ka ????
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Shruthi subbu

இணை அமைச்சர்
Joined
Jul 5, 2021
Messages
938
Reaction score
887
Location
Bangalore
Sema entertaining ana story pa....... Pala youngsters 👍 avangaluku tough kondukura maathiri sumima.....😎 Sumima character sema 👍real life la antha maathiri meet panna mudiyuma nu theriyala but meet pannanum nu thonuthu.... 😍😍

🕊ஆசைகளை மனதில் சுமந்து..
தன் கூட்டை விடு பறந்து வந்த பறவைகள்...
அவைகளை பூர்த்தியாக்கி தங்களின் துணைகளுடன் கூட்டை சென்றடைய......
அந்த பறவைகளை பாத்துகப்பாய் கூட்டில் சேர்த்து... தன் வழி நோக்கி பயணிக்கிறது தாய் பறவை......🕊
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top