• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஓடிப்போலாமா? - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Niranjan ,anitha ellorum kilambittaingala sri appidiye enaku oru ticket podu ..oru varam veetai vitu thappichu pogalam pola irukku nice epi sri
நன்றி ஸ்ரீதேவி அக்கா
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,775
Reaction score
35,422
Location
Vellore
அத்தியாயம் – 3

அந்த தனியறைக்குள் அமர்ந்து நேரம் செல்வதை அறியாமல் பைலைப் பார்த்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.. அவன் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு நிமிரும் பொழுது நேரம் பத்து மணியைக் கடந்திருந்தது..

அவன் சோர்வாக சீட்டில் சாய்ந்து விழி மூட, ‘தரகரிடம் உன்னோட போட்டோ கொடுத்தும் கூட உனக்கு நல்ல இடத்தில் ஒரு பொண்ணு கிடைக்கல..’ என்று தாயின் புலம்பல் அவனின் காதில் ஒலித்தது..

‘இந்த அம்மாவுக்கு இதே வேலையாக போச்சு..’ என்று நினைத்தவன் காரின் சாவியை எடுத்துகொண்டு தன்னுடைய அறையைப் பூட்டிவிட்டு வீட்டிற்கு கிளம்பினான்..

அவன் காரில் ஏறியதும் அவனின் மனம் மாறிவிட, ‘இந்த பிரச்சனை எல்லாம் மறந்து கொஞ்ச நாளாவது நிம்மதியாக இருக்கணும்..’ என்ற முடிவுடன் காரை எடுத்தான்.. இரவு நேரத்து நிசப்தத்தை கலைத்து சீறிப்பாய்ந்து நிரஞ்சனின் கார்..!

இரவு வெகுநேரம் சென்றபிறகும் மகன் வீட்டிற்கு வாராமல் இருப்பதை கவனித்த மனோகரியின் மனதில் நெருடல் ஏற்பட்டது..

‘எவ்வளவு நேரம் ஆனாலும் வீட்டிற்கு வந்துவிடுவானே..? இன்று என்ன மணி பன்னிரண்டை கடந்த பின்னரும் வீட்டிற்கு வராமல் இன்னும் அலுவலகத்தில் என்ன செய்கிறான்..?’ என்ற சிந்தனையுடன் வாசலை நோக்கிச் சென்றார்..

அந்தநேரம் மனோகரியின் செல்லடித்திட, ‘அவனாகத்தான் இருக்கும்..’ என்ற எண்ணத்துடன் வேகமாக தன்னுடைய அறைக்குள் சென்று போனை எடுத்தார்..

“அம்மா..” என்றவனின் குரல்கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்ட மனோகரி, “ரஞ்சன் எங்கடா இருக்கிற..” என்று தவிப்புடன் கேட்டார்..

“அதை நான் அப்புறம் சொல்கிறேன்.. நீங்க சாப்பிட்டீங்களா..” தாயை விசாரித்தான் செல்லமகன் நிரஞ்சன்

“நான் எல்லாம் சாப்பிட்டேன்.. உன்னிடம் முக்கியமான விஷயம் பேசணும்டா..” – மனோகரி

“சொல்லுங்கம்மா..” என்றவன் காரில் ரயில்வே ஸ்டேஷன் சென்று கொண்டிருந்தான்..

“அந்தப்பொண்ணு வீட்டில் ஒரு மாசம் டைம் கேட்டிருக்காங்க ரஞ்சன்..” என்று சொல்ல, ‘அவங்க டைம் கேட்டது நல்லதா போச்சு..’ மனதிற்குள் நினைத்தவன்,

“டைம் கேட்டங்களா..? ஆமா அவங்களுக்கு அது எதற்கு வேண்டுமாம்..?” சிந்தனையுடன் ஒலித்தது நிரஞ்சனின் குரல்..

“உன்னைப்பற்றி விசாரிப்பாங்க என்று நினைக்கிறேன்..” என்றார் தாய்..

“நல்ல விசாரிக்கட்டும்.. யார் வேண்டாம் என்று சொன்னது..” என்றவனின் கார் ரயில் நிலையத்தில் நின்றது..

“சரிடா உனக்கு அந்த பெண்ணைப் பிடிச்சிருக்கா.. அவங்க இன்னும் உன்னோட போட்டோ கூட பார்க்கல..”

“நானும் இன்னும் அந்த பொண்ணோட போட்டோ பார்க்கல..” என்றவன் பிடிகொடுக்காமல் பேசினான்..

“டேய் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா..” தன் மகனை மிரட்டினார் மனோகரி..

“சொல்வதெல்லாம் பதிலாக தெரியலையாம்மா..” என்றவன் சலிப்புடன்

“சரிடா நீ எப்பொழுது வீட்டிற்கு வருவாய்..? வேலை எல்லாம் முடிந்ததா இல்லையா..?”

“வேலை முடிஞ்சதும்மா.. வீட்டிற்கு வரமாட்டேன்ம்மா..” என்றவன் டிக்கெட்டை எடுத்தான்..

“என்னடா சொல்ற ஒண்ணுமே புரியல..” என்றார்

“உங்களுக்கு புரியாதது நல்லதா போச்சு.. உங்களோட தொல்லை தாங்க முடியாமல் ஓடிபோறேன்.. ஆளை விடுங்க சாமி..” என்று அவரின் தலையில் குண்டை தூக்கி போட்டான் நிரஞ்சன்..

“டேய் ரஞ்சன் என்னடா சொல்ற..? பொண்ணு யாருடா..? நீ ஓடி எல்லாம் போகவேண்டாம்.. நீ விரும்பும் பெண்ணையே கல்யாணம் பண்ணி வைக்கிறேன் திரும்ப வந்துவிடுடா..” என்றவர் கவலையுடன்

அவரின் பேச்சில் அவனின் கோபம் தலைக்கேறியது..

“அம்மா நான் தனியாக ஓடிப்போறேன்.. எந்த பெண்ணையும் கூட்டிட்டு ஓடல.. என்னோட மானத்தை வாங்காமல் விடமாட்டீங்க போல..” என்று தலையில் அடித்துகொண்டான் மகன்..

அவன் சொன்னதைக் கேட்டு பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட மனோகரி, “இப்பொழுதுதான் மகனே போன உயிர் திரும்ப வந்திருக்கிறது.. ஆமா நீ எப்பொழுது திரும்பி வருவாய்..” என்று மகனிடம் கேட்டார்..

“எனக்கே வீட்டிற்கு போலாம் என்று தோன்றும் பொழுது வருவேன்..” அதற்குள் ரயில் வந்துவிட தோளில் ஒரு பேக்கை மாட்டிகொண்ட நிரஞ்சன் அவரின் பதிலுக்கு காத்திருக்காமல் போனை வைத்துவிட்டு ரயிலில் ஏறினான்..

‘தானாக கட்டாகிவிட்டது..’ என்று நினைத்த மனோகரி மீண்டும் அழைக்க, ‘நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளரின் நம்பர் சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது..’ என்று வரவே,

“இனிமேல் இவன் வரும் வரைக்கும் இவங்க அப்பாவை சாமாளிக்கணுமே..” என்று புலம்பிய வர தூங்க சென்றார்..

நிரஞ்சன் பெரிய செல்வாக்கான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். ரவிவர்மா – மனோகரி அவனின் பெற்றோர். உடன் பிறந்தவர்கள் என்று யாரும் இல்லை..

ஆறடி உயரமும், அடர்ந்த புருவம், அடுத்தவரின் மனதினைப் படிக்கும் கூர்மையான கண்கள், நேரான மூக்கு, அதன் கீழே அளவான மீசை, சிகரெட் கரை படியாத உதடுகள் கட்டுகொப்பான உடல் தோற்றத்தை உடையவன்..!

பணத்திற்கு பஞ்சம் இல்லை.. குணத்திற்கு குறை இல்லை.. கைக்குள் அடக்கிவிட முடியாத திறமை..! பணத்திலோ இல்லை படிப்பிலோ அவனுக்கு எந்த குறையும் இல்லை.. ஆனால் நிறத்தில் மட்டும் பேரும் பிழை செய்தான் இறைவன்..!

கருமை நிறமுடைய கண்ணன் அவன்.. ஆனால் அவனின் நிறம் பிடிக்காத பெண்கள் அவனை ஒதுக்கினர்.. இருபத்தி ஏழு வருடம் ஆன அவனுக்கு இன்னும் பெண் மட்டும் அமையவில்லை..

அவனுக்கு பிடித்த பெண்களுக்கு அவனை பிடிப்பதில்லை.. ஏனோ வர வர பெண்களை சுத்தமாக வெறுத்துவிட்டான் நிரஞ்சன்.. அவனின் மனதில் எந்த பெண் இடம் பிடிக்க காத்திருக்கிறாளோ../!

*****​

இரவு பொழுது மெல்ல நகர்ந்து செல்ல அதுவரை நடந்த பிரச்சனையை மறக்க நினைத்த அனிதா தந்தையின் தோளில் சாய்ந்திருந்திருந்தாள்.. அவர்களின் குடும்பம் கூட்டு குடும்பம்..!

அனிதா வீட்டின் செல்லம்.. இப்பொழுது கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கிறாள்.. தினமும் வீட்டில் எழும் ஏதோவொரு பிரச்சனை ஏற்பட அதில் மனம் பாதிக்கப்பட்டாள்..

திடீரென நிமிர்ந்து தந்தையின் முகம் பார்த்தவள், “அப்பா நான் ஓடிப்போறேன்..” என்றாள் மகள்..

“அனிதா என்னம்மா சொல்ற..” திடுக்கிட்டார் கணேசன்..

“அப்பா ப்ளீஸ்.. இந்த ஒரு வாரம் நான் எங்காவது ஓடிப்போகிறேனே..” என்றவள் மெல்லியகுரலில்..

“என்ன பேசி பழகற.. பல்லை தட்டிவிடுவேன்..” மகளை மிரட்டினார்..

“நீங்க என்ன சொன்னாலும் சரி நான் ஓடி போகத்தான் போறேன்..” என்றவள் பிடிவாதமாக

“பாப்பா என்னடா குழந்தை மாதிரி அடம்பிடிக்கிற..”

“..............” அவள் மெளனமாக இருந்தாள்

“எங்களோட இருக்க உனக்கு பிடிக்கலையா..?” என்று தவிப்புடன் ஒலித்தது அவரின் குரல்..

“அதெல்லாம் இல்லப்பா..” என்றவள் மெல்லியகுரலில்

“அப்புறம்..” காரணம் கேட்டார்..

“..............” அவள் மீண்டும் மௌனம் சாதித்தாள்..

“இங்கே பாரு பாப்பா.. நீ நினைக்கிற மாதிரி இந்த உலகம் இல்ல..” என்றவர் எடுத்து சொல்ல,

“புரியுதுப்பா.. ஒரு கூட்டுக்குள் அடைஞ்ச மாதிரி ஒரு ஃபீல்..” என்றாள் அவள்

“சரிடா அப்போ நீ போய் பாரு.. நம்ம குடும்பத்தில் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தோம் என்று தெரியும்..” என்றவர் அவள் டூர் செல்ல அனுமதித்தார்..

“தேங்க்ஸ்பா..” என்றவள் எழுந்து கிளம்ப அந்த நடுராத்திரி நேரத்தில் அவளை வழியனுப்ப ரயில் நிலையம் வந்தார்..

ரயில் வந்த பின்னரும் அவளின் தோழிகள் வராமல் இருக்க, “பாப்பா நீ தனியாக போக போறீயா..” என்று கேட்டார்..

“ஐயோ இல்லப்பா பிரிண்ட்ஸ் எல்லாம் கம்பார்ட்மெண்டில் ஏறிட்டாங்க அப்பா..” என்றவள் புன்னகையுடன்

“என்னிடம் பொய் சொல்றீயா..” என்றவர் அவளை சந்தேகமாக பார்த்தார்..

அவர் அசடுவழிய சிரித்திட அவளின் தலையைக் கலைத்துவிட்டு சிரித்த கணேசன், “ம்ம் என்னிடம் அனுமதி வாங்க இவ்வளவு போய் சொல்லிருக்கிற..” என்று இடது புருவம் உயர்த்தினார்..

“ஸாரிப்பா..” என்றாள் மகள் சன்னக்குரலில்..

“சரிடா பார்த்து பத்திரமாக ஊரைச்சுற்றி பார்த்துவிட்டு வா..” என்றவர் அவளிடம் வேறு எதுவும் கேட்கவே இல்லை..

அவர் அவளின் மீது முழு நம்பிக்கை வைத்திருக்க, ‘அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும்..’ என்று நினைத்தவளின் முகத்தில் ஒரு தெளிவு பிறந்திட அவரின் முகம் மலர்ந்தது..

“வீட்டில் உனக்கு என்ன பிரச்சனை என்று தெரியல பாப்பா.. ஆனால் நீ திரும்பி வருவதற்குள் அப்பா எல்லாம் சரி பண்ணி வைக்கிறேன்..” என்றவர் உறுதியுடன்

“வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லப்பா..” என்றாள் மகள் வேகமாக

“அப்புறம் எதுக்கு இப்பொழுது ஓடிப்போகிறாய்..” என்று கேட்டார்..

“காதலிச்சு ஓடி போகும் பொழுது போக வழி தெரியாமல் திணறக்கூடாது இல்ல அதுக்கான ஒரு ஒத்திகை..” குறும்புடன் கண்சிமிட்டினாள்..

“ஓ அதுக்குதான் மேடம் ஓடி போறீங்களோ..?” அவள் பதில் சொல்லவில்லை..

“சரிம்மா நீ ஓடிப்போ.. நான் தேடி வந்து உன்னை உதைக்கிறேன்..” என்றவரும் கேலியாக..

“ஓ தேடி வந்து உதைக்கும் அளவுக்கு உங்களுக்கு தைரியம் வந்துருச்சா..?” என்று தந்தையை மிரட்டினாள் மகள்..

அவள் இடையில் கையூன்றி நின்ற தோரணையைப் பார்த்தவர், “ஏன் எனக்கு தைரியம் இல்லையா என்ன..?” என்று கேட்டார் கணேசன்..

“அது நிறைய இருக்கு என்ன மண்டையில களிமண் மட்டும் கொஞ்சம் கம்மிய இருக்கு போல..” தனியாக புலம்பினாள் மகள்

“என்னது..?!” அதிர்ந்தார்

“ஆமாப்பா.. இல்லாட்டி ஓடிப்போறேன் என்று சொல்லும் மகளை ரயில் ஏற்றிவிட இங்கே வந்து நிற்கும் பொழுதே தெரியல உங்களுக்கு நட்டு கொஞ்சம் லூசு ஆகிருச்சு என்று தெரியலையப்பா..” என்றவள் குறும்புன்னகையுடன் ..

“எனக்கு மெண்டல் ஆகிருச்சா.. நீ ஊருக்கு போயிட்டு வா.. அந்த பட்டிக்காட்டான்னு உன்னை கல்யாணம் பண்ணி வைக்கிறேன்..” என்று மிரட்டினார்..

“அப்பா பட்டிகாட்டான் எல்லாம் வேண்டாம்..”

“அவன் வேண்டாமா அப்போ யார் வேண்டும்..?”

“மகேஷ் பாபு மாதிரி ஒரு மாப்பிள்ளை பார்த்து வைங்கப்பா..” என்று தன்னுடைய கனவை சந்தடி சாக்கில் கூறிய மகளை முறைத்தார் கணேசன்..

“ஹி.. ஹி.. ஹி.. அப்பா மை ட்ரிம் பாய்ப்பா.. அவனோட ஒரே ஒரு டூயட் மட்டும் ஆடினால் போதும்..” என்றவளின் விழிகள் கனவில் மிதப்பதைக் கண்டவர்

“அதெல்லாம் கனவில் மட்டும்தான் நடக்கும்..” என்றவளை நக்கல் செய்ய, “நிஜத்தில் நடக்காதா..” என்று விளக்கம் கேட்டாள் மகள்..

அவர் பதில் சொல்லாமல் அவளை முறைக்க, “அனிதா உனக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதானா..?” என்று புலம்பிய மகளை பார்த்தார்..

“அடியேய் உன்னை நல்ல பெத்து பொன்னின்னு பெயர் வெச்சேன்.. இப்படி அரலூசா ஆகும்முன்னு தெரியாம போச்சே..” என்றவர் தனியாக புலம்பிட,

“அப்பா நான் லூசு என்று முடிவே பண்ணீட்டீங்களா..?”

“இதில் என்ன சந்தேகம் இதெல்லாம் கீழ்ப்பக்கம் போக வேண்டிய கேஸுன்னு தெரிஞ்சிருச்சு.,.” என்றவர் திடீரென எதையோ யோசித்தார்..

அவர் திடீரென தீவிரமாக யோசிக்க, “அப்பா என்ன யோசிக்கிறீங்க..” அவரின் கவனத்தைக் கலைத்தாள் மகள்..

“கீழ்பாக்கம் ஹவுஸ்புல் என்று நேற்றுதான் பேப்பரில் படித்தேன்..” அவர் சீரியஸாக சொல்ல, “அப்பா..” என்று கத்தினாள் அனிதா..

“என்னம்மா..” அக்கறையுடன் கேட்க, “யெப்பா கணேசா என்னை ஆளைவிடு..” என்று கையெடுத்து கும்பிட அவர் வாய்விட்டு சிரித்தார்..

“நான் ஒருவாரம் ஊர் சுற்றிவிட்டு வந்து உன்னை காமாட்சி கிட்ட மாட்டிவிடல..” என்றவள் சபதம் எடுத்தாள்..

“என்னிடமே சபதமா..? அதை நானும் பார்க்கிறேன்..” என்றவரின் குரல் கம்பீரமாக ஒலித்தது..

அதற்குள் ரயில் வந்துவிட, ‘நல்ல பெத்து பொன்னின்னு பெயர் வெச்சாராம்.. நான் என்ன பெயரை மாத்தியா வெச்சிகிட்டேன்..’ அவள் மனதிற்குள் புலம்பினாள்..

அவள் ரயில் ஏறும் வரையில் மகளைப் பார்த்துக்கொண்டே இருந்தவர், “போன் பண்ணுமா..” என்றார்..

“சரிப்பா..” என்றவள் புன்னகைக்க ரயில் மெல்ல வேகமெடுத்தது.. அவரும் வீட்டை நோக்கிச் சென்றார்..

இந்த பயணத்தில் யார் யாரோடு கைகோர்க்க போறாங்களோ..?!
செம்ம ஸ்ரீ, அய்யோடா இந்த கதையில எல்லாருமே ஓடிபோறாங்கப்பா? நானும் அவங்களோட ஓடி போய்தான் கதையை படிக்கணும் போல??
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
செம்ம ஸ்ரீ, அய்யோடா இந்த கதையில எல்லாருமே ஓடிபோறாங்கப்பா? நானும் அவங்களோட ஓடி போய்தான் கதையை படிக்கணும் போல??
நன்றி யுவா அக்கா
ஆமாக்கா அவங்களோட ஓடி போங்க..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Ada Niranjan,Anitha um sumi ma Kuda sernthu odurangala...super super
நன்றி கனி டியர்...:love::whistle:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top