• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஓடிப்போலாமா? - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,805
Reaction score
35,512
Location
Vellore
கார்த்திகாவா? உனக்கு வேற பேரே கிடைக்கலையா, ஸ்ரீ குட்டி ?
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
கார்த்திகாவா? உனக்கு வேற பேரே கிடைக்கலையா, ஸ்ரீ குட்டி ?
கிடைக்கல அக்கா.. நன்றி யுவா அக்கா..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
அத்தியாயம் – 6

எல்லோரும் இறங்கி நிற்பதைக் கண்ட சுமிம்மாவின் மனம் கனத்து போகவே, “என்னப்பா எல்லோரும் இறங்கிட்டீங்க..?” என்றவரின் பார்வை அந்த புதியவனின் மீது படிந்தது..

அவரின் பார்வையின் பொருளறிந்த நிரஞ்சனோ, “அவரும் நம்மை மாதிரிதான் அம்மா..” என்றவன் விளக்கம் கொடுக்க அவரின் முகத்தில் ஒரு தெளிவு வந்தது..

“அம்மா இங்கே பாருங்க.. நம்ம எல்லோரும் ஒரே நேரத்தில் ஊரில் இருந்து வந்திருக்கோம்.. நம்ம எல்லோருமே ஒவ்வொரு காரணத்திற்காக வீட்டைவிட்டு வந்திருந்தாலும் இவங்களுக்கு நம்ம தான் பாதுக்காப்பு..” நிரஞ்சன் புரிதலுடன் பதில் கொடுத்தான்..

அவனைப் பார்த்து புன்னகைத்த சுமிம்மா, “சரிப்பா இப்போ என்ன செய்யலாம்..” என்று அவர்களிடமே கேட்டார்..

“அதை நீங்கதான் அம்மா சொல்லணும்..” என்றாள் அனிதா..

“இல்லம்மா அவங்க பசங்க.. எங்கே சுற்றி பார்க்க வந்திருக்காங்களோ..” என்றவர் ஏதோ சொல்ல வருவதற்கு முன்னே கைநீட்டித் தடுத்தான் நிரஞ்சன்,

“முதலில் எல்லாருமே தனி.. இப்போ எல்லோரும் ஒன்றிணைந்து இருக்கிறோம்.. அப்போ அதோட தலைமை பொறுப்பை நீங்கதானே ஏற்றுக்கொள்ள வேண்டும்..” என்றான்..

பெண்கள் ஐவரும் அவனின் பேச்சிற்கு செவிசாய்த்து அமைதியாக நின்றிருக்க, ‘மொத்தம் ஐந்து பொண்ணுங்களைப் பாதுக்காப்பாக பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு..” என்றவருக்கும் அவன் சொல்வது சரியென தோன்றியது..

“சரி இப்போ நம்ம ஹோட்டலில் ரூம் போடலாம்.. நீங்க பசங்க தனியாக ரூம் எடுத்துகோங்க.. நாங்க லேடிஸ் தனியாக ரூம் எடுத்துத் தங்கிக் கொள்கிறோம்..” என்றவர்,

“இங்கே எந்த இடம் ரொம்ப பேமஸ் தம்பி..” என்றவர் நிரஞ்சனிடம் கேட்க, “இங்கே திருமூர்த்தி மலை, ஆழியார் டேம் அப்புறம் ஆனைமலை மாசாணியம்மன் கோவில்..” என்றான்..

“அப்போ நம்ம கோவிலுக்கு போலாம் அம்மா..” என்ற வித்யாவை எல்லோரும் சேர்ந்து முறைக்க, “நான் என்ன இப்போ தப்பாக பேசிட்டேன்..” அவள் பாவமாகக் கேட்டாள்..

“வித்யா இன்னும் கொஞ்சநாளில் நானே காசி ராமேஸ்வரம் போகணும் என்ற முடிவில் இருக்கேன்.. அப்போ வந்து இந்த கோவிலைப் பார்த்துக் கொள்கிறேன்.. என்னை ஆளைவிடு..” என்றவர் அவளைவிட பாவமாக..

அவர் சொன்ன விதத்தில் எல்லோருக்கும் சிரிப்பு வந்துவிட, “சரிம்மா இப்போ எங்கே போகலாம்..” – நித்திலா

“முதலில் ரூமிற்கு போய் குளிப்போம்.. அப்புறம் ஆழியார் டேம்.. திருமூர்த்திமலை போக லேட் ஆகும்..” என்றவர் வரிசையாக பட்டியலிட்டார்..

பிறகு அவர் நிரஞ்சனின் பக்கம் திரும்பி, “நீதான் இனிமேல் பொருளாளர்.. நம்ம சுற்றிப்பார்க்கும் இடத்தில் எல்லாம் ஆகும் செலவை கணக்கு எழுதி வை.. நம்ம லாஸ்ட் நாள் கணக்கு பார்த்துக்கலாம்..” என்றவர் சொல்ல,

‘அம்மா ஒரு பக்க பிசினஸ்மேனிடம் இப்படியொரு வேலையை ஒப்படைக்கிறீங்களே..’ அவன் மனதிற்குள் புலம்பினான்..

“என்னப்பா ரொம்ப அமைதியாக இருக்கிற..” என்று கேட்டார் சுமிம்மா

“அண்ணா எனக்காக ஓகே சொல்லுங்க.. ப்ளீஸ்..” சங்கரி சிணுங்க, “சரிம்மா..” என்றான் நிரஞ்சன்..

“நீங்க மூவரும் தனி ரூம் எடுத்து தங்கிகொங்க.. நாங்க எல்லோரும் ஒரு ரூமில் தங்கிக்கொள்கிறோம்..” என்றார் சுமிம்மா

எல்லோரும் அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்றனர்.. எல்லோருக்கும் சேர்த்து இரண்டு ரூம் எடுத்தான் நிரஞ்சன்..

அவன் கொண்டுவந்து சாவியைக் கொடுக்க, அந்த அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்ற நித்தி அறையில் இருந்த ஜன்னல் மற்றும் பாத்ரூம் எல்லாம் சுற்றி பார்த்தாள்.. அது மட்டும் இன்றி ஜன்னல் திரையை நன்றாக உதறிவிட்டு நீக்கி வைத்தாள்..

அவளின் செயலைக் கவனித்த அனிதா, “என்ன தேடுறீங்க..” என்று கேட்டாள்..

“கேமரா..” என்ற நித்தி, “பொண்ணுங்க நல்ல எல்லோரும் இங்கே இருக்க போறோம்.. நமக்கு நம்மதான் பாதுக்காப்பு.. அதன் அறையில் ஏதாவது கேமரா இருக்கான்னு பார்த்தேன்..” என்றாள்..

அவளின் செயல் மற்றவருக்கு ஆச்சர்யத்தை தந்தாலும் கூட சுமிம்மாவின் முகம் மலரவே செய்தது.. அதேபோல நிரஞ்சன் கதவை திறந்து உள்ளே சென்றது அவனின் செல் அடித்தது..

அவன் செல்லின் திரையைப் பார்த்துவிட்டு போனை எடுத்து, “ஹலோ” என்றவன் சொல்ல, “ரஞ்சன்..” என்றார் மனோகரி...

“என்னம்மா விஷயம்..” என்றவன் பதட்டத்துடன் கேட்க, “நிரஞ்சன் இப்பொழுதுதான் பொண்ணு வீட்டில் இருந்து அந்த பொண்ணோட அண்ணன் வந்துவிட்டு போனார்..” என்றவர் திருமணப் பேச்சை எடுத்தார்..

“அம்மா..” என்றவன் பல்லைக் கடிக்க மற்ற இருவரும் அவனைக் கேள்வியாக பார்க்க, “நீங்க போய் குளிங்க.. நான் அம்மாவிடம் பேசிவிட்டு வருகிறேன்..” என்றவன் புன்னகையுடன்..

சசிதரன் அவனைப் பார்த்து புன்னகைத்துவிட்டு குளிக்க செல்ல, “என்னம்மா இங்கே நிம்மதியாக இருக்கலாம் என்று வந்தால் நீங்க அதுக்கும் விட மாட்டீங்களா..” என்றவன் கடுப்புடன்

“அதெல்லாம் எடுக்கு தெரியாது.. பொண்ணு ரொம்ப அழகாக இருக்கிறாள்..” என்றவர் தொடர, “அப்போ நீயே அவளைக் கட்டிக்கோ..” என்றவன் போனைக் கட் செய்தான்..

அவன் போனை வைத்த மறுநொடியே நிரஞ்சனின் வாட்ஸ் ஆப்பிற்கு ஒரு மெசேஜ் வந்தது.. அதிலிருந்த போட்டோவைப் பார்த்தவனின் முகம் செந்தணலாக மாறியது..

அவனின் அருகில் அமர்ந்திருந்த மகேஷ், “அண்ணா நீங்க முதலில் போட்டோ பாருங்க.. ஏதாவது தீர்வு கிடக்கும்..” என்றவன் சொல்லிவிட்டு நகர்ந்தான்..

தாயின் தொந்தரவு தாங்க முடியாமல் போட்டோவை டவுன்லோட் செய்து பார்த்தவனின் விழிகள் இரண்டும் வியப்பில் விரிந்தது.. அந்த போட்டோவில் இருந்த பெண் நித்திலா..!

‘இவள் இப்போ இங்கேதானே இருக்கிற..’ என்றவன் உடனே தாய்க்கு போன் செய்தான்..

“அம்மா இந்த பொண்ணு..” என்றவன் இழுத்தான்..

“தாசில்தாரின் மகள் பெயர் நித்திலா. வயசு 23. இப்பொழுது பிரைவேட் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறாள்..” என்றவர் விவரத்தை ஒப்பித்தார்.

“அம்மா எனக்கு இந்த பெண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு.. இவங்க வீட்டில் பேசி முடித்துவிடுங்கள்..” என்றவன் தாய்க்கு கட்டளையிட்டான்..

“நானும் அதே முடிவில் தான் இருந்தேன்.. ஆனால் அவங்க அம்மாவும், பொண்ணும் வெளியூர் போயிருப்பதாக சொன்னாங்க..” என்றார் மனோகரி..

“சரிம்மா நான் அப்புறம் பேசுகிறேன்..” என்று போனை வைத்துவிட்டு, ‘இவள் இங்கே இருக்கிற.. அப்போ இவளோட அம்மா யாராக இருக்கும்..?’ என்ற சந்தேகம் அவனின் மனதில் எழுந்தது..

அதன்பிறகு எல்லோரும் குளித்துவிட்டு ஆழியார் டேம் சுற்றிப்பார்க்க கிளம்பினர்.. ஹோட்டலை விட்டு வழியில் ஒரு பெண்ணின் முடியைப் பார்த்த சங்கரி, “அம்மா..” என்றழைத்தாள்..

“அந்த அக்காவைப் பாருங்க..” என்றாள் சங்கரி..

அந்த ஹோட்டலின் பூங்காவில் அமர்ந்திருந்த அந்த பெண்ணிற்கு கூந்தல் நீளமாக இருந்தது..

“அந்த பெண்ணிற்கு முடி அதிகமாக இருக்கும்மா..” என்று அந்த திசையைப் பார்த்துக்கொண்டே கூறினாள் வித்யா..

“எனக்கும் முடி அதிகமாக கொட்டுது.. வா நம்ம போய் அவளிடம் டிப்ஸ் கேட்டுவிட்டு வருவோம்..” என்றவர் சங்கரியை உடன் அழைத்துச் சென்றார்..

அதெல்லாம் பார்த்த அனிதா, “இந்த அம்மாவுக்கு முடி கொட்டுதாம்..” என்றவள் வாய்விட்டுச் சிரித்தாள்..

வித்யா முறைத்த முறையில், ‘இந்த அக்கா என்னை ரொம்ப முறைக்குது.. அப்படி நான் என்ன பண்ணினேன்..’ அவளின் சிரிப்பு உதட்டில் உறைந்தது..

சசிதரன், மகேஷ் இருவரும் அங்கே நடப்பதை வேடிக்கைப் பார்க்க நித்திலாவோ சுவாரசியமாக அவர்கள் இவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்..

நிரஞ்சனின் பார்வை தன்னவள் என்ற உரிமையுடன் அவளைத் தழுவியது.. நீலநிற சுடிதாரில் கடல் தேவதை போல நின்றவளின் உதட்டில் மலர்ந்திருந்த புன்னகையில் அவனின் உள்ளம் அவளிடம் பறிபோனது..

“ஏன் நீ அவங்களுடன் செல்லல..” என்றவனின் குரல் வெகு அருகில் கேட்க திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க அவளின் அருகில் நின்றிருந்தான் நிரஞ்சன்..

ஆனால் எல்லோரின் கண்களுக்கும் அவன் இடைவெளி விட்டு நிற்பது போலவே தெரியும்..

‘என்ன..’ என்பது போல அவன் இடதுபுருவம் உயர்த்திட, “எனக்கு எந்த டிப்ஸும் தேவையில்ல..” என்றவள் அவனை முறைத்தாள்..

“நீ கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிற..” என்றான் நிரஞ்சன்..

“நான் எப்படி இருந்தால் உங்களுக்கு என்ன..? நீங்க உங்களோட வேலையை மட்டும் பாருங்க..” என்றவள் பொரிந்து தள்ளிவிட்டு அவனைவிட்டு விலகி நின்றாள்..

“இந்த அப்ரோச் ரொம்ப பிடிச்சிருக்கு..” என்றவன் அவளை சீண்டிவிட, “உனக்கு என்னடா ஆச்சு..” என்றவள் கடுப்புடன் கேட்டாள்..

“அண்ணாவை யாரோ நல்ல மந்திரிச்சு விட்டுடாங்க..” என்ற மகேஷ் குறும்புடன் புன்னகைத்தான்..

அவன் இயல்பாக சொல்ல நிரஞ்சனின் பார்வையோ அவளின் மீது விசமத்துடன் படிய அவளுக்கு அப்படியே பற்றிகொண்டு வந்தது..

“கொன்றுவிடுவேன்.. சக்கிரதை..” என்றவள் அவனைவிட்டு விலகிச் சென்றாள்..

நித்திலாவைப் பார்த்தும் அவனின் மனதில் ஏற்பட்ட சலனத்தின் அர்த்தம் அவனுக்கு புரிந்துவிட, ‘நல்லாவே பேசற நிதி டார்லிங்..’ என்று மனதிற்குள் புன்னகைத்தான்..

அந்த பெண்ணின் அருகில் சென்ற சுமிம்மா, “ஒரு நிமிஷம்டா செல்லம்.. ஒரிஜினல் முடியா என்று செக் பண்ணிக்கலாம்..” என்றவர் அவளின் முடியைப் பிடித்து இழுத்தார்..

“ஐயோ அம்மா..” என்று அலறியவள் நிமிர்ந்து பார்க்க, “ஸாரிம்மா.. நிஜமுடியா என்ற சந்தேகம் அதன் இழுத்து பார்த்தேன்..” என்றவர் புன்னகைத்தார்..

“நிஜமான முடித்தான்.. ஜவுரி முடி என்று நினைச்சீங்களோ..” என்றவள் கையில் இருந்த பார்சலைப் பார்த்தார் சுமிம்மா.

“சரிம்மா நீ எங்க போற..” என்று அவளிடம் பேச்சு கொடுக்க, “இப்பொழுது பசிக்குது.. சாப்பிட பிரியாணி கடைக்கு போகிறேன்..” என்றாள்..

“நீ மட்டுமா..?” என்றவர் சந்தேகம் கேட்க, “வேற யார் வரணும்..” என்று அவரிடமே கேட்டாள் அந்தப்பெண்

“அப்போ நீங்களும் வீட்டைவிட்டு ஓடிவந்துட்டீங்களா” என்று குஷியுடன் கேட்டாள் சங்கரி..

“ம்ம் ஆமா..” என்றவளின் முகம் மலர, “அப்போ நானும் உங்களோட சேர்த்துக்கலாமா..?” என்று தயக்கம் இல்லாமல் கேட்டாள்..

“அதுக்கு நீங்க முதலில் உங்களோட பெயரை சொல்லணும்..” என்றவளின் அருகில் வந்த அனிதா..

“நான் கார்த்திகா.. காலேஜ் முதல் வருடம் படிக்கிறேன்..” என்றவள் புன்னகையுடன்..

அவளின் கையிலிருந்த பையைப் பார்த்த வித்யா, “ஆமா இந்த பை எதுக்கு கார்த்திகா..” புரியாமல் கேட்டாள் வித்யா..

“பழனி பஞ்சாமிர்தம், இருட்டுக்கடை அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, மணப்பாறை முறுக்கு எல்லாம் இருக்கு..” என்றவள் வேகமாக

“அப்போ நீ சரியான சாப்பாட்டு ராமிதான்..” அவளைக் கிண்டலடித்தாள் அனிதா

“அதெல்லாம் இல்ல.. ஓவ்வொரு ஊரில் இருக்கும் பேமஸ் உணவு சாப்பிட பிடிக்கும்..” என்றவள் சொல்ல, “அப்போ அதுக்குதான் ஓடி வந்தாயா..” என்று கேட்டாள் நித்திலா

“இல்ல என்னோட பாட்டி இறந்துட்டாங்க.. அவங்க இல்லாமல் வீட்டில் இருக்கவே பிடிக்கல.. அதன் வீட்டில் இருந்து கிளம்பி வந்துவிட்டேன்..” என்றவள் வருத்ததுடன் கூறினாள்..

“ஸாரி கார்த்தி..” என்று அனிதா மன்னிப்பு கேட்க, “ஆனால் எனக்கு ஊர் சுற்ற ரொம்ப பிடிக்கும்..” என்றவள் புன்னகையுடன்..

“இது எல்லாம் நீங்க சாப்பிட வாங்கிட்டு வந்ததுதானே..” என்றவளிடம் கேட்டாள் சங்கரி..

“இல்லடா நான் எல்லாம் சாப்பிடுவேன்.. ஆனால் அதில் ஒரு லிமிட் எப்பொழுதும் வெச்சிருப்பேன்.. இது என்னோட பாலிசி..” என்றவள் புன்னகையுடன்..

அவள் இப்படி கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லி சுமிம்மாவின் மனதில் சீக்கிரம் இடம்பிடிக்க, “சரி இனிமேல் நீயும் எங்களில் ஒருத்தி..” என்றவர் எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தார்..

அதன்பிறகு எல்லோரும் ஆழியாரை சுற்றிப்பார்க்க சென்றனர்.. அவர்கள் சென்ற நேரமோ என்னவோ ஆழியாரில் தண்ணியே இல்லை..

அங்கிருந்து வரும் பொழுது சுமிம்மா செய்த வேலையில் எல்லோருமே வாய்விட்டுச் சிரித்தனர்.. அப்படி என்ன செய்தார்..???
????? elarum vanthutangala sis ila inum irukangala
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top