• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஓடிப்போலாமா? - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
En ka nithila alugura?oruvela summi ma aasai Ellam aval niraivethalaiyo???
 




Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
அத்தியாயம் – 9

சுமிம்மா பாடலைப் பாடிவிட்டு மேடைவிட்டு கீழிறங்கி வர அவரின் அருகில் ஓடிச்சென்ற சங்கரி மற்றும் அனிதா இருவருமே, “சுமிம்மா பாட்டு சூப்பர்..” என்று அவரைக் கட்டியணைத்து முத்தமிட்டனர்..

“உங்களுக்கு பாட்டு பிடிச்சிருக்கா..” என்றவர் ஆர்வமாக கேட்க, “எங்களுக்கு எல்லாம் உங்களோட பாட்டு ரொம்ப பிடித்தது சுமிம்மா..” என்றான் மகேஷ்..

“ஆனால் ஏன் அந்த பாட்டு எடுத்தீங்க என்று புரியல..” என்றான் கௌசிக் சிந்தனையுடன்.. அவனின் முகம் பார்த்த சுமிம்மா புன்னகைக்க, அவரின் புன்னகை அவர்களுக்கு எல்லாம் புதிர் போட்டது...

“நீங்க எல்லோரும் என்னோட இருக்கீங்க இல்ல.. அதனால்தான் இந்த பாட்டு பாடினேன்..” என்றவரின் செல் சிணுங்கியது.. அதன் திரையைப் பார்த்தவர், “ஒரு நிமிஷம்..” என்றவர் நகர்ந்து நின்று போனைப் பேசினார்..

அதைக் கவனித்த சசிதரன், “இந்த இரண்டு நாளில் அம்மாவுக்கு அடிக்கடி போன் வருது..” என்று சொல்ல, “ம்ம் ஆமா சசி அண்ணா நானும் கவனித்தேன்..” என்றாள் கார்த்திகா..

அதற்க்கான காரணம் என்னவென்று யாரும் அறியாமல் இருந்தனர்.. அவர் போனைப் பேசிமுடித்துவிட்டு அப்படியே உடையை மாற்ற அறைக்கு சென்றார்.. அவர்களின் கவனம் எல்லாம் சுமிம்மா மீதே இருந்ததால் நிரஞ்சன், நித்திலா இருவரையும் அவர்கள் யாரும் தேடவில்லை..

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அவர்களின் நினைவே அவர்களுக்கு இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லோரின் கவனமும் சுமிம்மாவின் மீதே இருந்தது..

சிறிதுநேரத்தில் அவர் புடவையுடன் வருவதைப் பார்த்த வித்யா, “சுமிம்மா உங்களுக்கு எந்த ட்ரஸ் போட்டாலும் அழகாக இருக்கும்மா..” என்றவள் சொல்ல அவளின் குரல்கேட்டு மற்றவர்களும் திரும்பி அவர் வந்த திசை பார்த்து நின்றனர்..

அதற்குள் அடுத்த போட்டிக்கான அறிவிப்புகள் வரவே, “இப்பொழுது டான்ஸ் போட்டி நடக்குது.. இதை முடித்துவிட்டு வருகிறேன்..” என்றவர் முன்னே சென்றார்..

“அம்மா என்ன பாட்டு என்று சொல்லாமல் போறீங்க..” என்று கார்த்திகா ஆர்வத்துடன் கேட்க, “வெயிட் அண்ட் வாட்ச்..” என்றவர் புன்னகையுடன் முன்னே சென்றார்..

எல்லோரும் ஜோடி பாடலுக்கு ஆடி முடிந்ததும் சுமிம்மா ஆடுவதைப் பார்க்க எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தனர்.. அவர் எடுத்த பாடல் அவர்கள் எல்லோரின் மனதையும் கொள்ளையடித்து சென்றது..

“தேர் ஓடும் வீதியெங்கும் பூமாலை ஊர்வலங்கள்

வலிப நெஞ்சம் எல்லாம் வாருங்களே

வண்ணத்தின் கோலங்கள் பாருங்களே..

புது வண்ணத்தின் கோலங்கள் பாருங்களே..” என்று சுமிம்மா அந்த பாடலில் ஆடும் பூர்ணிமா பாக்யராஜிற்கு சரிசமமாக ஆடினார்..

விண்ணில் வந்து ஆடும் ஒளி மின்னல்களும் வாடும்..

பெண்மை தாகத்தாலே அது போதையாடி ஆடும்..

புதுப்பாடல் பாடி ஒரு பொன்மாலை சூடி

அன்போடு கூடி நம் ஆனந்தம் தேடி

துன்பங்கள் மறந்திங்கே துணையாகலாம்..

தென்றல் மங்கைபோலே எங்கும் வாழ்வோமே

என்றும் ஆண்மை நெஞ்சங்களை ஆள்வோமே

ஓ...ஓ....ஓ...” என்றவர் தன்னை மறந்து அந்த பாடலுக்கு தகுந்த முக பாவனைகளை வெளிபடுத்திய வண்ணம் துள்ளிக்குதித்து ஆடினார்.. அங்கிருந்த முதுமை பட்டாளத்தின் பார்வை எல்லாம் அவரின் மீதே இருந்தது..

“கோடை நிலா வானில் ஒளி ஓவியங்கள் போடும்

மங்கை என்னும் பேரால் நம் எண்ணங்களில் ஆடும்

சொந்தங்களாக புது சந்தங்கள் ஆகி

பொன்னுஞ்சல் ஆடி நம் போவேமே நாளும்

எல்லோரும் ஒன்றாகி கலந்தாடுவோம்..

காலம் எல்லாம் மகிழ்தாடி இணைவோமே.

கள்ளம் இல்ல உள்ளத்தோடு வாழ்வோமே..” என்றவர் பாடிய பாடலின் வரிகளைக்கேட்டு இளநெஞ்சங்கள் தங்களை மறந்து நின்றனர்.. அந்த பாடலின் வரிகள் சொன்ன செய்தியில் உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கிட அவர்கள் எல்லோரும் சிலையென நின்றனர்..

அவர் ஆடிமுடித்து வந்ததுமே, “சுமிம்மா இன்று என்னவோ உங்களோட பாட்டு, டான்ஸ் எல்லாமே சூப்பராக இருக்கு..” என்றவர்கள் எல்லோருமே அவரை சுற்றி ஆடினார்..

“எல்லோரும் என்னை நடுவில் நிற்க வைத்து கும்மி அடிக்கிறீங்களா..” என்றவர் அவர்களை மிரட்டினாலும் அவர்களின் முகம் மலர்ந்து மகிழ்ச்சியில் பொங்கியது..

அந்த போட்டியில் கலந்துகொண்ட அனைவரும் வந்து சுமிம்மாவை பாராட்டவே செய்தனர்.. அதற்குள் போட்டியின் முடிவு பற்றி அறிவிப்புடன் வந்தனர் கமிட்டி மெம்பர்ஸ்..

“இந்த போட்டி கலந்துகொண்ட அனைவருமே திறமைசாலிகள் என்றாலும் பரிசை பெற போகும அந்த அதிர்ஷ்டசாலி சுமித்ரா..” என்று அறிவித்தனர்..

அதுமட்டுமின்றி, “சுமித்ரா அம்மா அவங்களோட வயதையோ இல்லை யாராவது நம்மை பற்றி தவறாக பேசுவாங்களோ என்ற எண்ணம் எல்லாம் இல்லாமல் இயல்பாக ஆடி பாடியதே அவர் இந்த பரிசை பெற தகுதியானவர் என்று நாங்கள் முடிவு செய்தோம்..” அவரைத் தேர்ந்து எடுத்தற்கான காரணத்தையும் கூறினார்..

“முதுமை என்பது உடலுக்கு மட்டுமே தவிர மனதிற்கு இல்லை என்ற பழமொழிக்கு சிறந்த எடுத்துக்காட்டு சுமித்ரா அம்மாதான்..” என்று அங்கிருந்த கமிட்டி மெம்பர்கள் கூறினார்.. அடுத்த நொடியே கைதட்டல் சத்தம் அந்த மலைகளில் பட்டு எதிரொலித்தது..

அதற்குள் நிரஞ்சனும், நித்திலாவும் வந்துவிட, “நீங்க இருவரும் எங்கே போனீங்க..” என்று அனிதா சந்தேகம் கேட்க, “நான் கடைக்கு போயிருந்தேன் அனிதா..” என்றான் நிரஞ்சன்..

“இங்கே நடக்கும் போட்டியை கவனிக்காமல் கடைக்கு எதுக்கு அண்ணா போனீங்க..” என்று குழப்பத்துடன் சங்கரி கேட்க, “இருங்க இருங்க நானே சொல்றேன்..” என்றவன் சுமிம்மாவின் முன்னே ஒரு பார்சலை நீட்டினான்..

அவரின் முகத்தில் மலரும் புன்னகையைப் பார்க்கவே நித்தி நின்றிருக்க அவளின் விழியிரண்டும் கலங்கிச் சிவந்திருந்தது.. ஆனாலும் அதையும் மீறி அவளின் முகத்தில் ஒரு தெளிவு இருப்பதை கண்டுகொண்டார் சுமிம்மா..

அதேபோல நிரஞ்சனின் முகத்தில் ஆண் என்ற கம்பீரத்தை தாண்டிய ஒரு வசீகரமான புன்னகை அவனின் இதழில் தவழ்ந்ததைக் குறித்துக் கொண்டார்..

அவர் அந்த பார்சலை வாங்கி பிரித்து பார்க்க அதில் பச்சை நிறத்தில் பட்டுப்புடவை இருப்பதைப் பார்த்த சுமிம்மா, “எனக்கு ரொம்ப பிடிச்ச கலர் தம்பி..” என்றவரின் கைகள் தானாகவே அந்த புடவையை வருடியது..

“விலை ரொம்ப அதிகம் போல தெரியுது..” என்று சசிதரன் சொல்லவே, “அதெல்லாம் இல்ல..” என்றவன் சுமிம்மாவின் மீது பார்வையைத் திருப்பினான்..

“சுமிம்மா உங்களுக்கு இந்த புடவை பிடிச்சிருக்கா..” என்றவன் எதிர்பார்ப்புடன் கேட்க, “எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தம்பி..” என்றவர் புன்னகையுடன் கூறினார்..

“சுமிம்மா நீங்கதான் வின் பண்ணுவீங்க என்று தெரிந்தே நான் போய் பட்டுப்புடவை எடுத்துட்டு வந்தேன்.. இந்த புடவை கட்டிட்டு போய்தான் நீங்க பரிசு வாங்கணும்..” என்ற நிரஞ்சனின் பார்வை நித்தியின் பக்கம திரும்பியது..

அதைக் கவனித்த கௌசிக், “இவங்க இருவருக்குள் ஏதே இருக்கிற மாதிரியே இருக்குங்க..” என்றவன் கார்த்திகாவிடம் சொல்ல, “அது என்னவோ இருக்கட்டும்.. நீ உன்னோட வேலையைப் பாரு..” என்றாள்..

“சுமிம்மா உங்களுக்கு மடிசார் கட்டிபார்க்கணும்..” என்ற வித்யா அவரை அழைத்துச்சென்று மடிசார் கட்டிவிட்டு சுமிம்மாவை மாமியாக்கிவிட்டாள்..

அவரை மடிசாரில் பார்த்த எல்லோருமே, “ஐயர் வீட்டு பொம்மனாட்டிகள் எல்லோரும் தோத்தாங்க போகங்க..” என்று சொல்ல, “மாமிக்கு எந்த ஊரு..” என்று கேட்டான் நிரஞ்சன்..

“சித்தரகுளம்டா அம்பி..” என்றவர் கெத்தாக பதில் சொல்ல, “சுமிம்மா இப்போ சூப்பர் மாமி ஆகிட்டாங்கோ..” என்று அனிதா குறும்புடன் கண்சிமிட்டினாள்..

“அடியே அனிதா என்னிடம் நீ நல்ல வாங்க போற..” என்றவர் சொல்ல, “சுமிம்மா நிஜமாவே நீங்க ஐயர் ஆத்து பொண்ணுன்னா நம்பிருவாங்க..” என்றாள் வித்யா.. ஆளுக்கு ஒரு கமெண்ட்ஸ் கொடுக்க சுமிம்மாவின் முகம் பூ போல மலர்ந்தது..

சுமிம்மாவின் மகிழ்ச்சியை ஒரு புன்னகையுடன் பார்த்தவள், ‘எல்லோரும் மனதிற்குள் ஆயிரம் கவலையை வெச்சிட்டு பொம்மை மாறி இருக்காங்க.. நீங்கதான்மா புன்னகையை மட்டும் மனசில் வெச்சிட்டு கவலையைக் காற்றில் பறக்கவிட்ட ஒரே ஆள்..” என்று நினைத்தாள் நித்திலா..

அவளின் முகம் கண்ணாடி போல அவள் மனதில் நினைத்ததை நிரஞ்சனுக்கு படம்பிடித்து காட்டிட, “அவங்க அப்படித்தான் நிதி..” என்றவன் புன்னகைக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள் நித்திலா..

அவளின் பார்வையில் வெளிப்பட்ட காதலை உணர்ந்தவன், “அடியேய் உன்னோட பார்வை சரியில்ல.. நம்ம வந்திருக்கும் ஊரின் கிளைமேட்டும் சரியில்ல..” என்றவன் அவளிடம் எச்சரித்தான்..

அவள் உடனே தன்னுடைய பார்வையை மாற்றிக்கொள்ள, “ம்ம் இப்போ நீ ரொம்ப குட் கேர்ள்..” என்றவனின் உதட்டில் புன்னகை அரும்பியது.. இருவரின் இடையே காதல் மெல்ல மெல்ல மலர்ந்தாலும் அதில் ஒரு புரிதல் இருப்பதை இருவரும் உணர்ந்தே இருந்தனர்..

மேடை ஏறி பரிசை வாங்கிவிட்டு வந்த சுமிம்மா, “காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது.. வாசக்கதவ ராஜலட்சுமி தடுக்கிற வேலை இது..” என்றவர் குதுகலத்துடன் பாடிட, “அம்மாவிற்கு பாட்டை பாரு..” என்ற சிறியவர்கள் கண்களில் பொறமை இல்லை..

“டேய் பசங்களா.. கையில் ஒரு லட்சம் இருக்கு.. வாங்க நம்ம வேற ஊருக்கு போலாம்..” என்றவர் சொல்ல, “ஊர் சுத்திப் பார்க்கணும்..” என்ற சங்கரியைப் பார்த்தவர், “இன்னைக்கு முழுக்க சுத்திப் பார்க்கலாம்..” என்றார்..

“எங்களுக்கு பார்ட்டி..” என்று கேட்ட மகேஷ் முகம் பார்த்தவர், “திருச்சியில் போய் பெரிய பார்ட்டி தருகிறேன் குட்டி பையா..” என்றார்.. எல்லோரும் அன்று முழுவதும் ஊரைச் சுற்றிவிட்டு இரவு தங்களின் பயணத்தைத் தொடங்கினர்..

அந்த இரவு நேரத்தில் எல்லோரும் களைப்பில் உறங்கிவிட அனிதா மட்டும் வெளியே வேடிக்கைப் பார்த்துகொண்டே வருவதைக் கவனித்த மகேஷ், “அனிதா..” என்று மெல்லிய குரலில் அழைத்தான்..

அவள் வேகமாகத் திரும்பிப் பார்க்க, “இதில் இளையராஜா சாங்ஸ் இருக்கு.. நீ ஹெட்செட் மாட்டே கேளு..” என்றவன் அவனின் செல்லை அவளிடம் கொடுத்தான்..

அவளோ அவனைப் புரியாத பார்வை பார்க்க, “நீதானே நேற்று உன்னோட ஆசையை சொன்ன..” என்றவன் புன்னகைக்க, “தேங்க்ஸ் மகி..” என்றவள் அவனின் கையில் இருந்த செல்லை வாங்கி அனிதா ஹெட்செட்டை மாட்டி பாடலை ஒலிக்கவிட்டாள்..

“தில் தில் தில் மனதில் ஒரு தல் தல் தல் காதல்..

சில் சில் இளநெஞ்சில் சல் சல் சல் ஒரு ஊஞ்சல்..” என்ற இளையராஜாயின் பாடலைக் கேட்ட அனிதா திரும்பி மகேஷ் முகம் பார்க்க அவனோ குறும்புடன் கண்சிமிட்டு சிரித்தான்..

அந்த புன்னகை அவளுக்குள் மற்றதை விதைக்க அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டு அந்த பாடலில் மூழ்கிவிட அந்த பயணம் அவளுக்கு மறக்க முடியாத பயணமாக மாறியது.. அதேபோல மகேஷ் மனமும் நிறைந்தது..

அடுத்த நாள் காலைபொழுது திருச்சியில் அழகாக விடிந்தது.. அடுத்து திருச்சி என்ன ஆக போகுதோ..???
Sema i love sumi amma??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top