• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஓ மை ஏஞ்சல்-- எபி 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vanisha

Moderator
SM Exclusive
Joined
Feb 6, 2018
Messages
992
Reaction score
114,246
Location
anywhre
வணக்கம் டியர்ஸ்,

omy.jpeg

அத்தியாயம் 24மரத்தடி பிள்ளையார் அருகே இருவர் நின்றிருக்கிறார்கள். அவரை கையெடுத்து கும்பிட்டு சூடத்தை ஏற்றி வைக்கிறாள் இவள். அவள் அருகே நின்றிருந்தவனோ, பாக்கேட்டில் இருந்து ஒரு குட்டி பாக்ஸை எடுக்கிறான்.

“கை நீட்டு ஏஞ்சல்”

இவளும் கையை நீட்டுகிறாள். இவள் விரலில் வெள்ளியில் செய்த கப்பிள் ரிங் ஒன்றைப் போட்டு விடுகிறான் அவன்.

அவள் கண் மலர பார்த்திருக்க,

“எனக்கும் போட்டு விடு தேவதா” என நீட்டினான்.

அவன் மோதிர விரலில் இவளும் அணிவித்து விட்டாள்.

“ஏஞ்சல்! என் கண்ண பாரு”

அவனை ஏறிட்டு நோக்கியவளைப் பார்த்து,

“ஐ லவ் யூ தேவதா” என்றான் அவன்.

அவனது முதல் ஐ லவ் யூவை மோதிரம் அணிவித்து, விநாயகரின் முன்னிலையில் சொன்னதில் இவளுக்கு கண்கள் உடைப்பெடுத்தது.

“ஐ லவ் யூ டூ சங்கத்தமிழா”

“உன் விநாயகருக்கு முன்ன நின்னு பரிசம் போட்டிருக்கேன்! இனி என்னைக்குமே நீ எனக்குத்தான்!”

மசமசவென ஏதேதோ காட்சி கோர்வைகள். கட்டிலில் வயிறு அனுமதித்த அளவு உருண்டாள், புரண்டாள் தேவதா. வாய் சங்கத்தமிழன் என முணுமுணுத்தது.

“ஏய்! தேவதா! எழுந்துக்கோ!” எனும் குரலிலும், கன்னத்தில் அழுத்தமாய் விழுந்த அடியிலும் விழித்துப் பார்த்தாள் பெண்.

“சங்கு!” என அவள் முணுமுணுக்க, இவன் அதிர்ந்து விழித்தான்.

“என்ன சொன்ன?”

“சங்கு! சங்கத்தமிழன்!!! யாரது மாதவன்? அன்னைக்கு நான் வரைஞ்ச படத்துல இருந்தவன் போலவே இருக்கான் இன்னிக்கு கனவுல வந்தவன்! அவன் பேருதான் சங்கத்தமிழனா? ப்ளீஸ் சொல்லுங்க! எனக்கு மண்டையே வெடிக்குது! தெரியனும்! அது யாருன்னு தெரியனும்! சொல்லுங்க” எனத் துடிதுடித்து அவன் சட்டையைப் பிடித்து உலுக்கியவளை ஆத்திரமாகப் பார்த்தான் இவன்.

“சொல்லாத! அவன் பேர சொல்லாத! பிடிக்கல! எனக்குப் பிடிக்கல! ஸ்டாப் இட்! வரையாதேன்னு சொல்லியும் என்னை மீறி வரைஞ்சிருக்க!! திமிர் பிடிச்சவடி நீ!! என் கிட்ட வந்ததும் அடங்கிட்டன்னு நெனைச்சேன்! ஆனா இல்ல! அடங்கல நீ! அடங்கல!” எனக் கத்தியவன் கண் மண் தெரியாத கோபத்தில் அவளைப் பிடித்துத் தூரத் தள்ளினான்.

அவனது ஆக்ரோஷமானத் தள்ளலில் தடுமாறி கட்டிலில் இருந்து தாறுமாறாக கீழே விழுந்தாள் தேவதா. பிள்ளை வயிறு தரையில் மோத,

“அம்மா!!!” எனக் கதறினாள் அவள்.

கால் நடுவே பனிக்குடம் உடைந்த நீரும் ரத்தமும் ஒருங்கே வெளியேற, பதறிப் போனான் மாதவன்.

“ஐயோ! தேவதா! அச்சோ! ரத்தம்! கடவுளே!!” எனப் பதறித் துடித்தவன், அவளை அப்படியே கைகளில் அள்ளிக் கொண்டான்.

“அம்மா!!! வலிக்குது! ரொம்ப வலிக்குது!” எனக் கண்ணீர் விட்டுக் கத்தினாள் தேவதா.

கை பயத்துடன் வயிற்றைப் பிடித்துக் கொண்டது. குழந்தை உள்ளே வேகமாய் அசைந்தது.

“பேபி! பேபி! என் பேபி!” எனக் கதறல் அடங்கவே இல்லை.

அந்த அர்த்த ராத்திரியில் அவளைக் காரில் அள்ளிப் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினான் மாதவன். அவனும் கூட மிகவும் பயந்து போயிருந்தான். ஆத்திரம் கண்ணை மறைத்ததில் அறிவிழந்திருந்தான்.

மருத்துவமனையை அடைந்த நொடி, அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு இவளை கொண்டு போய் விட்டார்கள். மாதவனின் சட்டையெல்லாம் ரத்தக்கறை. பயந்து போய் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டான்.

“ஏன்டா!! ஏன் உனக்கு இவ்ளோ கோபம் வருது! அவளுக்கு எதாச்சும் ஆனா உன்னால தாங்கிக்க முடியுமா? பிறகு ஏன்டா கைய நீட்டுற!!! ஏன் இப்படி முரடனா நடந்துக்கற!!!” எனக் கேட்டு நெற்றியிலே அறைந்து கொண்டான்.

கண்களில் அது பாட்டிற்கு கண்ணீர் வழிந்தது. நர்ஸ் ஒருவர் வந்து, அவனிடம் பாரத்தில் கையெழுத்து வாங்கிப் போனார். கொஞ்சம் தேறிக் கொண்டவன், உடனே தந்தைக்கு அழைத்து விட்டான்.

“ராஜா!!!”

“அம்மாவ கூப்டு சீக்கிரம் கிளம்பி வாங்கப்பா!” என்றவன் அழைப்பைத் துண்டித்து விட்டான்.

அங்கே அவசரப் பிரிவில் அவளுக்கு மயக்கம் வர ஊசிப் போட,

“சங்கு!!!!” என முணுமுணுத்துக் கொண்டே மயங்கிப் போனாள் தேவதா.

அவள் கண் விழித்த பொழுது வயிறு ஒட்டிக் கிடந்தது. கண்கள் அறையைச் சுற்றி அலைபாய, அவள் அருகே மாதவனின் அம்மா கலங்கியக் கண்களுடன் அமர்ந்திருந்தார்.

அவரைப் பார்த்து,

“பேபி? பேபி எங்க?” எனக் காய்ந்து போனத் தொண்டையைச் செறுமிக் கொண்டே கேட்டாள் இவள்.

அவளை நெருங்கி வந்து தன் வயிற்றோடுக் கட்டிக் கொண்டவர்,

“பாப்பா சாமி கிட்ட போய்டுச்சும்மா! உன்னை மட்டும்தான் காப்பாத்த முடிஞ்சது எங்களால!” என அழுது கொண்டே சொன்னார்.

“பேபியும் என்னை விட்டுப் போய்ருச்சா?” என்றவளின் குரலில் அப்படி ஒரு வலி.

“நானொரு சபிக்கப்பட்ட ஜென்மம் போல! அம்மா, அப்பா, என் ச..” எனச் சொல்ல வந்தவள், தொண்டையைச் செறுமி,

“இப்போ குழந்தை!!! இப்படி எல்லாரையும் முழுங்கிட்டேன்! நான் மட்டும் வாழ்ந்து என்ன பண்ணப் போறேன்! நானும் சாமிக்கிட்ட போய்டறேன்!” என்றவள் கையில் மாட்டி இருந்த ட்ரிப்சைப் பிடுங்கி எறிந்து விட்டு எழுந்து நிற்க முயல, தள்ளாடி கீழே மடங்கி விழுந்தாள்.

மாதவனின் அம்மா போட்ட கூச்சலில் உள்ளே ஓடி வந்தான் மாதவன். அவனோடு அவனது அப்பாவும். கீழே கிடந்தவளை அள்ளித் தூக்கிக் கட்டிலில் படுக்க வைத்தவனின் கண்களிலும் கண்ணீர்.

“நம்ம புள்ள நம்ம விட்டுப் போய்டுச்சி! போய்டுச்சு தேவதா! நீ கவலைப் படாதே! அது தெய்வமா இருந்து சீக்கிரம் நமக்கு இன்னோரு புள்ளய குடுக்கும்! நீ அழாதே” எனத் தேற்றினான்.

கண்களைத் துடைத்துக் கொண்டவள், அவனை ஆழ்ந்து பார்த்தாள்.

“என்னடி! என்ன செய்யுது? டாக்டர கூப்பிடவா?” எனப் பதறினான் இவன்.

“பேபிய பார்க்கனும்”

“இல்லல்ல! வேணாம்”

“ப்ளீஸ்” எனக் கை ஏந்தி கண்ணீர் வழிய கேட்க,

“கொண்டு வந்து காட்ட சொல்லுடா மாதவா! ஒரு தாயோட மனநிலயப் புரிஞ்சுக்கோ! அத்தனை மாசம் வயித்துல வச்சிருந்தா! அது முகத்தப் பார்க்கனும்னு இருக்காதா அவளுக்கு! போடா, போய் ஏற்பாடு பண்ணு!” என்றவரைக் கதறலுடன் கட்டிக் கொண்டாள் தேவதா.

அடுத்த சில நிமிடங்களில் துணியில் சுற்றி இருந்த குழந்தையின் உடல் இவளிடம் கொடுக்கப்பட்டது. லேசாய் நீலம் பூத்திருக்க, சில்லிட்டுக் கிடந்த அந்த குட்டி பேபியை கட்டிக் கொண்டாள் இவள். அதன் கன்னம், காது, புருவம், உதடு எனத் தொட்டுத் தடவியவள், துணியைப் பிரித்துப் பார்த்தாள். பெண் குழந்தை! இவள் கண்களில் கண்ணீர் விடாமல் வழிந்தது.

“பொண்ணா பொறந்து இந்த பூமியில வாழறதே பாவம்னு என்னை விட்டுப் போய்ட்டியா பேபி!!! கடவுள் காலடியிலயாச்சும் சந்தோஷமா இருடா! இந்தப் பாவிப்பயலுக நம்மள உருக்குலைச்சிடுவானுங்க! பூமி வேணாம்! வேணவே வேணாம்!” எனக் கிசுகிசுப்பாய் அதன் காதில் பேசியவள், கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
 
vanisha

Moderator
SM Exclusive
Joined
Feb 6, 2018
Messages
992
Reaction score
114,246
Location
anywhre
“அம்மாப்பொண்ணு! நீ இந்த அம்மாவோட பொண்ணு மட்டும்தான்! ஐ லவ் யூடா பேபி! குட் பாய்! ரெஸ்ட் இன் பீஸ்” என்றவள் கண்களைத் துடைத்துக் கொண்டு, குழந்தையைப் பக்கத்தில் கண்ணீர் மல்க நின்றிருந்த தாதியிடம் நீட்டினாள்.

பின் கண்களை இறுக மூடிக் கொண்டவள், போகும்படி சைகை செய்தாள். அருகில் வந்து அணைத்துக் கொண்ட மாதவனைத் தள்ளி விட்டவள், அப்படியே சரிந்து படுத்துக் கொண்டாள்.

“அவள தனியா விடுடா! கொஞ்சம் தேறி வரட்டும்!” என மாதவன் அம்மா விரட்ட, முறைத்துக் கொண்டே வெளியேப் போனான் அவன்.

படுத்திருந்தவள் கண்கள் மட்டும் கண்ணீர் சொரிவதை நிறுத்தவேயில்லை. அடுத்த நாளே ஜன்னி கண்டு விட, மீண்டும் அவளை மீட்டெடுக்க சில வாரங்கள் ஆனது. மீண்டு வந்தவள், அமைதியாகவே இருந்தாள். யாரிடமும் பேசவில்லை. மாதவனின் தாய்தான் மருத்துவமனையில் இருந்து அவளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டார். அவளின் அத்தையை இவன் வர வேண்டாம் என நிறுத்தி வைத்திருந்தான்.

அன்று அப்பாவும் மகனும் ஏதோ வேலை என வெளியே போயிருக்க, சற்றுத் தேறி இருந்த இவளருகே வந்து அமர்ந்தார் மாதவனின் அம்மா.

“தேவதா”

ஒன்றும் பேசாமல் அவரை ஏறிட்டுப் பார்த்தாள் இவள்.

கையைப் பிசைந்தவர்,

“உன் கிட்ட சிலது சொல்லனும்மா! எப்போ பாரு காவலுக்கு இருக்கறது போல அப்பாவும் மகனும் சுத்தி சுத்தி வரவும் ஒன்னும் பேச முடியல என்னால! இப்போ கூட கிட்டக்கத்தான் எங்கயோ போயிருக்காங்க! அதுக்குள்ள உன் கிட்ட பேசிடனும்” என்றார்.

அமைதியாக அவரை நோக்கினாள் பெண்.

“இவன விட்டுப் போயிடுமா! இப்போவே குத்துயிரா இருக்க நீ! முகம் கருத்து, இளைச்சு, கண்ணுல டொக்கு விழுந்துன்னு! இன்னும் கொஞ்ச நாள் இவன் கூட இருந்தா உருத் தெரியாம ஆகிடுவ போலிருக்கு! பொண்ணுக்கு பொண்ணா என்னால இங்க நடக்கற அநியாயத்த தாங்கிக்கவே முடியலை! ஆனா இவங்க ரெண்டு பேரையும் மீறி என்னால ஒன்னும் செய்ய முடியல! புருஷன்தான் சரியில்லைன்னு புள்ளைக்காக வாழ்ந்தேன். ஆனா இவனும் அப்படியே அவங்கப்பன் மாதிரி மாறிட்டானே! எப்படிலாம் வளத்தேன் இவன! ஆனா விதை ஒன்னு போட்டா சுரை ஒன்னா முளைக்கும்னு காட்டிட்டானே!!!” எனக் கண்ணீர் வழிய பேசினார் அவர்.

எழுந்து போய் கதவைத் திறந்து எட்டிப் பார்த்து விட்டு வந்தவர், கண்ணைத் துடைத்துக் கொண்டு மீண்டும் ஆரம்பித்தார்.

“இவன் சின்ன வயசுல யார் கூடவும் ரொம்ப பழக மாட்டான்மா! பெத்தவங்க சரியில்லாத குடும்பத்துல இருந்து வர குழந்தைங்க எப்படி இருக்கும்!!! அதுக்கு இவன் ஓர் எடுத்துக்காட்டு! அப்பான்னு ஒருத்தர் வீட்டுல இல்லாம, எந்நேரமும் அம்மாவோட கண்ணீர மட்டும் பார்த்து வளந்தவன். அவனுக்குள்ளாகவே ஒடுங்கித்தான் இருந்தான். இவன் படிச்ச ஸ்கூல்ல இவன விட பரிதாபமா ஒருத்தன் இருந்தான்! அவன்தான் உன்னோட சங்கத்தமிழன்” என அவர் நிறுத்த, கீற்றாய் புன்னகை அவள் இதழ்களில்.

“மை சங்கு!!!” என இவள் முணுமுணுத்தது அவருக்குக் கேட்கவில்லை.

அவளது கன்னத்தில் வழிந்த கண்ணீர் மட்டும்தான் அவருக்குத் தெரிந்தது.

“ஞாபகம் வரலன்னு அழாதம்மா! இவங்க அப்பாவும் இவனும் பேசிட்டு இருந்தத வச்சும், எனக்குத் தெரிஞ்ச விஷயங்கள வச்சும் உனக்கு எல்லாம் சொல்லறேன்” என்றார் அவர்.

“என் கிட்ட அடிக்கடி தமிழ பத்திப் பேசுவான். எப்படி அவன எல்லாம் ஒதுக்கி வைக்கறாங்க! இவன் எப்படிலாம் அவன நல்லா பார்த்துக்கறான்! எப்பவும் தமிழ பத்தித்தான் பேச்சு! அவன் மேல இவனுக்கு வந்தது நட்புல்லம்மா! ஆதிக்க உணர்வு! நமக்கும் கீழ இவன் இருக்கான்! என்னை நம்பித்தான் இவன் இருக்கான்! நான் இல்லைனா இவனுக்கு யாரும் இல்லைங்கற எண்ணம். அவனுக்காக எல்லாம் செய்வான். அவனுக்காக மத்த பிள்ளைங்க கிட்ட சண்டைக்குப் போவான்! தமிழ் இவனுக்கொரு நாய்க்குட்டி மாதிரின்னு வையேன்! இவன் சொல்லறதெல்லாம் அவன் செய்வான். இவனுக்கு அடங்கி இருப்பான்! அதுல என் மகனுக்கு ஒரு சந்தோஷம். இப்படியே போய்ட்டு இருந்த உறவுல கொஞ்சம் கொஞ்சமா மாற்றம் வந்தது! தமிழ் அவங்க பெத்தவங்க கவனிப்பால, சரியாக ஆரம்பிச்சான். நல்லா படிக்க ஆரம்பிச்சான். அவன மட்டும் இல்ல இவனையும் பார்த்துக்க ஆரம்பிச்சான். அந்த மாற்றத்த இவனால ஏத்துக்கவே முடியல” எனப் பெருமூச்சு விட்டார் அவர்.

“என் கிட்ட வந்து அழுதான்! தமிழ் என்னை விட நல்லா படிக்கறான்! என்னை விட பெருசாகிட்டே வரான்! இப்போலாம் அழாம சிரிச்ச முகமா இருக்கான். நெறைய ப்ரேண்ட்ஸ் சேர்த்துட்டான்! எனக்கு அது பிடிக்கலனு! எவ்ளோ ப்ரேண்ட்ஸ் இருந்தாலும் உன்னை அவன் விடலையே! நீதான் அவனுக்கு ஸ்பெஷல்னு எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு சமாதானம் பண்ணேன்! தமிழ மிஞ்சனும்னு இவனும் போட்டிப் போட்டுப் படிச்சான். படிப்புல கிட்ட வர முடிஞ்ச இவனுக்கு, பணத்துல கிட்ட வர முடிஞ்ச இவனுக்குத் தோற்றத்துல கிட்ட நிக்க முடியல! இவன் என்னை மாதிரி நிறமும், முக அமைப்பும்! சொத்துக்காகத்தானே என்னைக் கட்டினாரு இவனோட அப்பா! என்னைப் போலவே வந்து பொறந்துட்டான் என் மகன்! பொண்ணுங்க சட்டுன்னு இவன மாதிரி ஆளுங்கள விரும்பிட மாட்டாங்க! ஆனா தமிழுக்கு அவ்ளோ க்ரேஸ்! அதெல்லாம் இவன் மனச ரொம்ப பாதிச்சிருக்கு! நான் கூட வேற ஸ்கூல் மாத்தி விட்டுடறேன்! இல்ல ஊட்டில ஹாஸ்டல் சேர்த்து விட்டுடறேன்னு சொன்னேன்! தமிழ விட்டு வர முடியாதுன்னு சொல்லிட்டான்! இவன் தமிழ் மேல வச்சிருந்த நட்ப நான் எப்படி சொல்ல!!! அன்பும் ஆத்திரமும், நட்பும் வன்மமும், பாசமும் பழி வெறியும், விருப்பும் வெறுப்பும் கலந்த ஓர் உறவுன்னு சொல்லலாம். அவன விட்டு வரவும் முடியல! அவனோட சேர்ந்து இருக்கவும் முடியல! ஒரு கட்டத்துல அவன பத்தி ஒன்னும் என் கிட்ட சொல்லறது இல்ல! வெறுப்ப விருப்பு வென்றுடுச்சின்னு நெனைச்சேன். ஆனா உள்ளுக்குள்ள நீறு பூத்த நெருப்பா இருந்துட்டேத்தான் இருக்குன்னு நான் தெரிஞ்சுக்காம இருந்துட்டேன்டாம்மா”

சற்று நேரம் அமைதி அவரிடம். சிறு வயது மாதவனை நினைத்துப் பார்த்தார் போல!

“அப்படியே போய்ட்டு இருந்தப்பத்தான் அவங்க வாழ்க்கைல நீ வந்த!”

நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்ட தேவதா, கசங்கிய முகத்துடன் கேட்க ஆரம்பித்தாள்.

“இவனுங்க ரெண்டு பேர் இருக்கற இடத்துலலாம் உன்னை மாதவன் பார்த்திருக்கான். தமிழ் இதை கவனிக்கல! ஏன்னா அவன அப்படித்தான் அடிக்கடி பொண்ணுங்க பார்க்கும்! அதுலாம் அவனுக்குப் பழகிப் போயிருச்சு! ஆனா என் மகன் கவனிச்சிருக்கான் உன்னை. நீ தமிழ பார்த்தத, இவன் இவன பார்த்ததா நெனைச்சிக்கிட்டான். உன்னை முதல் பார்வையிலேயே அவனுக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு! ஆனாலும் ஒரு தயக்கம் உன் கிட்ட வந்து பேச! தமிழ் கூட இருக்கறப்போ யாரா இருந்தாலும் ஒரு இன்செக்கியூர் ஃபீல் வரத்தான் செய்யும்! அது என் மகனுக்கு ரொம்பவே இருந்தது. ஆனாலும் உன்னைப் பார்க்கறத விட முடியல. உன் அழகு அவனைக் கட்டி இழுத்துருக்கு! மனசுல உனக்காக காதல் கோட்டைலாம் கட்டி வச்சிட்டான். தயக்கத்த உதறிட்டு உன்னைப் பார்த்துப் பேச நினைச்சப்பத்தான் நீ தமிழ இடிச்சிட்டு அவனப் பார்த்து சங்குன்னு என்னமோ சொல்லிட்டுப் போனீயாம்! என்னோட ஆளுக்கு தமிழோட பேர்லாம் தெரிஞ்சிருக்கேன்னு இவனுக்குள்ள ஒரு கோபம். அவனுக்குள்ள இருந்த நீறுப் பூத்த நெருப்ப நீ ஊதி பெருசாக்க ஆரம்பிச்ச!”

மீண்டும் எழுந்து போய் கதவு வெளியே பார்த்து விட்டு வந்தவர் மறுபடி கதையைத் தொடர்ந்தார்.

“ஒரு நாள் காண்டீன்ல நீ மஞ்ச சுடிதார்ல அழகா வந்து தேவதை மாதிரி உக்காந்திருந்தியாம்! அப்போத்தான் தமிழ் நீதான் அவனோட ஆள்னு அறிமுகப்படுத்தினானாம். தமிழுக்காக கவிதை எழுதி, படம் வரைஞ்ச பொண்ணு நீதான்னு தெரிய வந்தது அன்னைக்குத்தானாம். இவன் உடைஞ்சி போய்ட்டான்! இத்தனை நாள் நீ அவனத்தான் பார்க்கறன்னு ஆகாச கோட்டைக் கட்டி இருந்தவனுக்கு அது பொய்ன்னு தெரிய வந்ததும் தாங்கிக்கவே முடியல! ஆனாலும் வெளிய காட்டிக்கல! தமிழ் கிட்ட கோபத்துல நக்கலா பேசிட்டாலும், கடைசில நல்லவன் மாதிரி பேசிட்டு அந்த இடத்த விட்டே வந்துட்டானாம்! இதை என் கிட்டத்தான் சொல்லி அழுதான்! அவ தேவதை மாதிரி இருப்பாம்மா! பேரு கூட தேவதாதான்! ஓரக்கண்ணால பார்த்து பார்த்தே என் மனசுல ஒக்காந்துட்டாம்மா! சும்மா பார்த்ததுக்கே என்னடா தெய்வீகக் காதலான்னு நீங்க நெனைக்கலாம்! படங்கள்ல ஹீரோக்கு நண்பனா வருவாங்கல்ல சில கேரேக்டர்ஸ், சின்னி ஜெயந்த, சார்லி இப்படி!!! இவங்களுக்கும் ஒரு மனசு இருக்கும்மா! அதுக்குள்ளயும் மென்மையான உணர்வுகள் இருக்கும்! ஹீரோவா தூக்கிக்காட்ட, இவங்கள இறக்கிக் காட்டுவாங்க! தமிழ் என்னை இறக்கிக் காட்டனது இல்லைனாலும் பொண்ணுங்களுக்கு என்னைப் பார்த்தா சின்னி ஜெயந்த் போலத்தான் தோணும். மனசு வெறுத்துப் போகும்! யாராச்சும் நம்மள கண் கொண்டு பார்க்க மாட்டாங்களான்னு மனசுக்குள்ள ஏக்கமா இருக்கும்! அப்படி இருந்தப்போத்தான் இவ ஓரக்கண்ணால பார்க்க ஆரம்பிச்சா! என்னைப் பார்க்கறப்போ அந்த முகத்துல ஒரு வெட்கப் புன்னகை தன்னால வந்து உட்கார்ந்துக்கும்! அப்படியே சொக்கிப் போய்டுவேன் நானு! ஆனா, ஆனா அந்தப் பார்வை எனக்கானது இல்ல! அந்தப் புன்னகை எனக்கானது இல்லம்மா! இல்லவே இல்ல! என் கிட்ட இருந்து அவள பறிச்சுக்கிட்டான் என் நண்பன்! அப்படின்னு கதறினான்! நான் இவன கண்டிச்சேன்! அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் லவ் பண்ணுறாங்க! நீ தப்பா புரிஞ்சுக்கிட்டு அவங்கள தப்பு சொல்லாதே! விலகிடு! உனக்குன்னு ஒருத்தி பிறந்திருப்பான்னு! அதுக்குப் பிறகு என் கிட்ட உன்னைப் பத்தி எதையும் சொல்லறது இல்லை இவன்.”

அவருக்கு தண்ணீரை ஊற்றிக் கொடுத்தவள்,

“குடிச்சிட்டுப் பேசுங்க” என்றாள்.

அவருக்கும் தேவையாய் இருந்தது போல. வாங்கி ஒரே மடக்கில் குடித்து விட்டு கிளாசை மேசை மேல் வைத்தார்.

“ஒன்னு மட்டும் உறுதிமா! தமிழோட ஆளுன்னு தெரிஞ்சு என் மகன் உன்னைக் காதலிக்கல! உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சதும்தான் நீ அவனோட ஆளுன்னே தெரிஞ்சுக்கிட்டான்! நீங்க ஒருத்தர ஒருத்த மனசார விரும்பறீங்கன்னு தெரிஞ்சதும் விலகி இருக்கனும்! ஆனா அங்கத்தான் மாதவன் சறுக்கிட்டான்”

“அதுக்குப் பிறகு ஒரு நாள் அப்பாவும் மகனும் பேசிட்டு இருந்தத நான் ஏதேச்சையா கேட்டுட்டேன். நம்ம மகனா இப்படின்னு நான் ஆடிப் போய் நின்ன நாள் அது! உன்னை வேணாம்னு ஒதுங்கிப் போக எவ்வளவோ முயன்றிருக்கான். ஆனா நீயும் தமிழும் அந்நியோன்யமா பழகறத பார்த்து அவனுக்கு அப்படி ஓர் ஏக்கம்! இந்த அன்பு, காதல், முத்தம் எல்லாம் தேவதா எனக்குக் குடுக்க வேண்டியது! அது எப்படி தமிழுக்குக் கிடைக்கலாம்னு ஒரு கிறுக்குத்தனமான எண்ணம். காதல் வந்துட்டா, கிறுக்குத்தனமும் கோட்டித்தனமும் கூடவே வந்துடும் போல! அதோட நீங்க கடவுள் சிலைக்கு முன்னாடி நின்னு மோதிரம் வேற மாத்திக்கிட்டீங்க! தமிழ் உன்னைப் பத்தி இவன் கிட்ட தனிமைல பேசும் போது என்னோட பொண்டாட்டின்னுதான் சொல்வானாம். அந்த வார்த்தைய அறவே வெறுத்தான் இவன். அடிக்கடி ஒளிஞ்சு நின்னு நீங்க ரெண்டு பேரும் பேசறதையும் இளைஞ்சுக்கறதையும் பார்த்து வன்மத்த வளர்த்திட்டே இருந்திருக்கான். அப்பாவும் மகனும் நீ மஞ்சுவோட சொந்தம்னு கண்டுப்புடிச்சதுல நிம்மதியாகிப் போனாங்க! உனக்கு யாருமே இல்லை! மஞ்சுவ வச்சி எப்படியும் மடக்கிடலாம்னு ப்ளான் போட்டாங்க! நீ மடங்கலைனாலும் கூட, இவன் உன்னை விடறதா இல்லை! எனக்கு அவ வேணும்ப்பான்னு அப்படி ஓர் அழுகை! அவரைப் பார்த்தாலே முகத்தத் திருப்பற மகன்காரன் தேடி வந்து அப்பான்னு கூப்பிடவும் மனுஷனுக்கு அப்படி ஒரு சந்தோஷம். அவனுக்காக எதையும் செய்ய முன்னுக்கு வந்தாரு. அதோட அவர கை நீட்டி அடிச்ச தேவராஜோட மக நீ! உன்னை உன் காதலன் கிட்ட இருந்து பிரிச்சு மகன் கிட்ட குடுத்து, நீ துடிக்கறத பார்க்கனும்னு ஒரு குரூரம்! அதே குரூரம் அப்படியே மாதவன் கிட்டயும் இருக்குன்னு எனக்குத் தெரிய வந்தது, தமிழ ஆள் வச்சு லாரில அடிச்சுத் தூக்கிப் போட்டதுலத்தான்”

உடல் தூக்கிப் போட்டது இவளுக்கு! குழந்தையைப் பிரசவித்து கண் முழித்த நொடி எல்லாமும் ஞாபகம் வந்திருந்தது இவளுக்கு! கண் முன்னே தூக்கி எறியப்பட்ட சங்கத்தமிழன் இறந்து விட்டதாய்தான் எண்ணினாள். அவ்வளவு பெரிய லாரியில் அடிப்பட்ட யாரும் கண்டிப்பாய் உயிர் பிழைத்திருக்க முடியாது எனும் சோகத்தில் இருந்தாள். அம்னீசியா ஏற்பட்ட இடைவெளியில் நடந்தது எல்லாம் இன்னும் முழுதாய் இவளுக்கு ஞாபகத்துக்கு வந்திருக்கவில்லை. அங்கே இங்கே கொஞ்சம் கொஞ்சமாய் காட்சிகளாய் வந்து போயின. மாதவன் வலுக்கட்டாயமாய் இவளுடன் வாழ்ந்தது, அடித்தது, குழந்தை உண்டானது என நினைவுகள் மெல்லத்தான் வர ஆரம்பித்திருந்தன.

சங்கத்தமிழனும் இல்லாமல் சொந்தமென யாரும் இல்லாமல் இந்த உலகத்தில் வாழ வேண்டாமென முடிவெடுத்திருந்தாள். பிரசவித்த பிறகு உடலில் ஏற்படும் ஹோர்மோன் மாற்றங்கள் வேறு அவளை அலைக்கழித்தன. பால் கட்டிப் போயிருந்த மார்பகம், இறந்த குழந்தையை எண்ணி ஏங்க வைத்து இன்னும் அவளை கோழையாக்கியது! ஏதேதோ எண்ணிக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தவளை,

“ஆனா அந்தப் புள்ளைக்கு ஆயுசு கெட்டி!!! பொழச்சிக்கிட்டான்” எனும் வார்த்தைகள் மின்சார அதிர்வாய் தாக்கியது.

“என்ன சொன்னீங்க!!! என்ன!!! மறுபடி சொல்லுங்க!!” எனப் படபடத்தவளைப் பார்த்த மாதவனின் தாய்.

“சங்கத்தமிழன் பொழச்சிக்கிட்டான் கண்ணு” என்றார்.

அந்த நேரம் வெளியே காலடி ஓசைக் கேட்க,

“இப்போ படுத்துக்க! ஒன்னும் பேசாதே! கண்ணு முழிச்சிருந்தா உன்னோட முக மாற்றத்த வச்சே என்னமோ சரியில்லைன்னு கண்டுப்புடிச்சிடுவான் என் மகன்” எனப் பதறினார்.

இவளும் கண் மூடி படுத்துக் கொண்டாள். உள்ளே வந்த மாதவன், தேவதாவின் அருகே வந்து அவளது நெற்றியில் இதழ் ஒற்றி எடுத்தான். அசையாமல் படுத்திருந்தாள் அவள்.

நர்ஸ் வந்து அவளைப் பரிசோதித்து விட்டு மருந்து கொடுத்து விட்டுப் போக, உறக்கம் வந்து தழுவிக் கொண்டது. மீண்டும் விழித்து எழுந்தவளுக்கு எல்லாமே ஞாபகத்துக்கு வந்திருந்தது. அம்னீசியாவுக்கு முன் அவள் வாழ்ந்த வாழ்க்கை, அம்னீசியாவுக்குப் பின் வாழ்ந்த வாழ்க்கை என ஒன்று விடாமல் நினைவுக்கு வந்திருந்தது. திட்டம் போட்டுத் தன் வாழ்க்கையை சூறையாடி விட்ட மாதவன் மேல் கட்டுக்கடங்காத கோபம் எழுந்தது. அவனது முந்தைய பேச்சில் சங்கத்தமிழனுக்கு மனநிலைப் பாதிக்கப்பட்டிருக்கிறது என உணர்ந்து கொண்டாள். மனது விண்டு வலித்தது. இப்பொழுது எப்படி இருக்கிறான், என்ன செய்கிறான், நலமாய் இருந்திருந்தால் கண்டிப்பாய் தன்னைத் தேடி வந்திருப்பானே எனப் பல சிந்தனைகள் முட்டி மோத, தலை வலிக்க ஆரம்பித்தது.

தூக்கமும் கலைந்து போயிருந்தது. அறையின் மெல்லிய வெளிச்சத்தில் கடிகாரம் விடிகாலை மணி மூன்று எனக் காட்டியது. அவள் பக்கத்தில் ஒரு சோபாவில் படுத்திருந்தார் மாதவனின் தாய். மாதவனைக் காணவில்லை. சில நிமிடங்களில் கதவு திறக்கப் பட தூங்குவது போல நடித்தாள் இவள். அவள் அருகே வந்து நின்ற மாதவன், அவள் கன்னம் தடவி,

“லவ் யூ டார்லிங்! நாளைக்கு நம்ம வீட்டுக்குப் போயிடலாம்! இந்த துன்பத்த எல்லாம் மறக்கற மாதிரி உன்னை ராணி மாதிரி பார்த்துக்கறேன்!” என மெல்லியக் குரலில் பேசினான்.

இவள் அசையவே இல்லை. குனிந்து அவள் இதழ்களில் மெல்லிய முத்தமிட்டவன்,

“உன்னை ரொம்பத் தேடுதுடி!!! நம்ம கல்யாணமாகி வந்ததில இருந்து இப்படி உன்னை விட்டுட்டு தனிச்சு இருந்தது இல்லைல! அதான் போல! வீட்டுக்குப் போனதும் மறுபடியும் உன்னைக் கைக்குள்ளயே வச்சிப்பேன்! மை ஸ்வீட் தேவதா” என்றான்.

இவள் மெல்ல அசைய, அமைதியாகிப் போனான் மாதவன். அவள் மீண்டும் அசந்து தூங்குவது போல தெரியவும்தான் அறையை விட்டு மெல்ல வெளியேறினான்.

சற்று நேரத்தில் அறையின் வெளியே பேச்சுச் சத்தம் கேட்டது. அந்த இரவு நேரத்தில் மருத்துவமனைக்கே உரிய சிற்சில சத்தங்கள் மட்டும் இருக்க, முழுதாக மூடாமல் இருந்த கதவின் வழி வெளியே தகப்பனும் மகனும் பேசிக் கொள்வது சன்னமாகக் கேட்டது இவளுக்கு.

“ஏன்டா தம்பி இப்படி தூங்காம உலாத்திட்டு இருக்க! உனக்குன்னு ஒரு ரூம் கேட்டு வாங்கிருக்கேன்தானே! அங்க நிம்மதியா தூங்காம இங்க வந்து காவக் காக்கற!” என ஆதங்கப்பட்டார் அவன் அப்பா.

“அவள விட்டுட்டு இருக்க முடியலப்பா”

“என்னடா நீ!!! என் மகன் மாதிரியா பேசற! ஆசைத் தீர வச்சி வாழ்ந்துட்ட! இன்னும் என்னடா இவள பிடிச்சிட்டுத் தொங்கற!! வேணா சாமி! விட்டுடு! அத்து விட்டுடு! அப்பா ஒரு நல்ல பொண்ணா, உனக்கு அடங்கி, அன்பா இருக்கற பொண்ணா கட்டி வைக்கறேன்! பழசெல்லாம் ஞாபகம் வந்திடுமோன்னு இவ கூட பயந்து பயந்து நீ வாழ்றது போதும்! உனக்கென்னடா குறைச்சல்! சொத்தில்லையா இல்ல ஆம்பளத்தனம் இல்லையா!! இவ வேணாம்டா!”

“அப்பா!! என்னையும் உங்கள மாதிரி நெனைக்காதீங்க! எனக்கு இவ மட்டும்தான் காதலி, பொண்டாட்டி எல்லாமே! இவ இல்லைனா வேற எவளும் என் வாழ்க்கைல இல்ல! என் நண்பனின் காதலியா இருந்தப்பவே என்னால இவள விட்டுட முடியல! இப்போ உடலாலயும் மனசாலயும் அவ கூட நெருங்கி வாழ்ந்திருக்கேன்பா! விட மாட்டேன்! என்னை விட்டு அவ போகனும்னா பொணமாத்தான் போகனும்!”

“பைத்தியம் மாதிரி பேசாதடா! அவளுக்கு வேற அந்த பரதேசி பேரு, முகம்லாம் கொஞ்சம் கொஞ்சமா ஞாபகத்துக்கு வருதுன்னு சொல்ற! முழுசா எல்லாம் நினைப்புல வந்துட்டா, எவ்ளோ காலம் உன் கூட அடைச்சி வைப்ப! பொண்டாட்டினா நமக்கு சுகம் குடுக்கறவடா! இவள கண்ணு முழிச்சு காவ காத்து நீதான் உன் சுகத்த எல்லாம் இழக்கப் போற! அப்போவே சொன்னேன்! கல்யாணம் வேணா! கடத்திட்டு வரேன்! வச்சிருந்து முடிக்க வேண்டியத முடிச்சுட்டு தூக்கிப் போட்டுடுன்னு!”

“ப்பா! ப்ளீஸ்! அப்படிலாம் பேசாதீங்க! அவ உங்க மருமக! என் பொண்டாட்டி!”

“என்னை எதிர்த்தாலும், அடிச்சாலும், கடிச்சாலும் என் கூட மட்டும்தான் அவ இருக்கனும்பா! அவ நினைவுத் திரும்பி என்னை என்ன டார்ச்சர் பண்ணாலும் தாங்கிப்பேன்! ஆனா அவ அவன் கூட கை கோர்க்கறத மட்டும் என்னால தாங்கிக்கவே முடியாது! அவ வேற ஒருத்தன காதலிச்சிருந்தா கூட சட்டுன்னு அவன தூக்கிருப்பேன்! இவள காதலிச்சான்னு அந்த உமேஷ உலகத்த விட்டு அனுப்பலியா! அது போல! ஆனா என்னோட நண்பன காதலிச்சிட்டா! விட்டுக் குடுத்துடலாம்னு எவ்ளவோ முயற்சி பண்ணேன்! ஆனா முடியலையேப்பா! சரி அந்த சங்குவோட சந்தோசமா இருந்துட்டு போகட்டும்னு மனச தேத்திட்டு காலேஜ் வருவேன்! ஆனா அவங்க ரெண்டு பேரும் கண்ணால காதலா பேசிக்கறத பார்த்து அப்படி ஒரு கோபம் வந்திடும்! மனசு மீண்டும் தேவதா வேணும்னு முருங்கை மரத்துல ஏறி நின்னுக்கும்! நான் என்னப்பா செய்யட்டும்! எவ்ளோ அவள எடுத்துகிட்டாலும் இன்னும் பத்தலப்பா! என்னைக்கும் பத்தவே பத்தாது! ஏன்னா இது காதல்பா! நாளுக்கொரு பொண்டாட்டி தேடற உங்களுக்கு அது புரியாது!”

“சரிடா சரி! உடனே டென்ஷன் ஆகாதே! விடு! பார்த்துக்கலாம்! இவள இங்க கொண்டு வர எல்லாம் பண்ணலியா! இங்கயே நிறுத்தி வைக்கவும் எதாச்சும் பண்ணலாம்! நீ கவலைப்படாதே!”

“இவ வேணும்னு எவ்வளவோ செஞ்சேன்பா! மாதவன்னு மென்மையா அவ கூப்புடற ஒத்தை வார்த்தைக்காக இன்னும் என்ன வேணா செய்வேன்! அந்த டைம்ல இவளே தமிழ விட்டுப் போகனும்னுதான் அவ ஃபேஸ்புக் ஐடிய ஆள் வச்சு ஹேக் பண்ணி பலான போட்டோ போட்டு வாட்சாப்ல மிரட்டனேன்! அப்பவும் பயப்படலியே உங்க மருமக! அடுத்த முயற்சியா தமிழ் மனநிலை சரியில்லாதவன்ற ப்ரூஃப் அனுப்பனேன்! அதுக்கும் அசரலையே! இன்னும்ல அவன ஒட்டிக்கிட்டா! சேதாரம் அதிகமில்லாம பிரிக்க நினைச்சா, கொஞ்சம் கொஞ்சமா ரெண்டு பேரும் என்னை மிருகமால்ல மாத்த ஆரம்பிச்சாங்க! இவன் உயிர மட்டும் விட்டு வச்சு உணர்வோட விளையாடி கிறுக்குப் புடிக்க வைக்கனும்னுதானே அவன் அம்மாவ உங்க ஹெல்ப்ல ஆஸ்பத்திரிலயே ஆள் வச்சி போட்டுத் தள்ளினேன்! பைத்தியம் மாதிரி கத்திக் கதறனவன, காப்பாத்தி கொண்டு வந்துட்டாளே இவ! வேற வழியே இல்லாமத்தானே அவன, என் நண்பன கொல்ல முடிவெடுத்தேன்! இவ விலகி போய்ருந்தா இப்படி நான் இறங்கிருக்க மாட்டேன்பா! உள்ளுக்குள்ள அந்த சங்கத்தமிழன் மேல பொறாமை, ஆற்றாமை, வெறுப்புலாம் இருந்தாலும், அவன் எனக்கு நண்பன்பா! அவன கொல்ல முடிவெடுத்துட்டு நான் எப்படிலாம் துடிச்சேன்!!!ஆனாலும் கடவுள் என் பக்கம்தான்பா! என்னை குற்ற உணர்ச்சில தள்ளாம அவன் பொழச்சி பைத்தியக்காரனாகி அம்மணமா திரிஞ்சிட்டு இருக்கான்! இவளோ அவனையே மறந்து என் கிட்ட என் மனைவியா வந்து சேர்ந்துட்டா! என்னோட லவ் அவ்ளோ ஸ்ட்ராங்குப்பா! அதான் எனக்கேத்த மாதிரி எல்லாமே நடந்துச்சு!”

அவன் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு ரத்தக் கண்ணீரே வந்தது! சங்கு, சங்கு என மனம் ஆர்ப்பரித்தது. கழுத்தில் இருந்த தாலி தீயெனத் தகித்தது. மனதாலும் உடலாலும் ஒருத்தனை சுமந்திருந்தவளுக்கு சுயநினைவே இல்லாத போது கட்டப்பட்ட தாலி கழுத்தை நெறித்தது. கண்களில் பொலபொலவெனக் கண்ணீர் வழிந்தது. தனக்காக, தான் வேண்டும் என்பதற்காக, சங்கத்தமிழனுக்கு இழைக்கப்பட்டத் துரோகத்தையும் வஞ்சத்தையும் எண்ணி எண்ணி மனது அதிர்ந்து அடங்கியது. சத்தம் வராமல் இருக்க, வாயை இரு கை கொண்டு இறுக மூடிக் கொண்டு கண்ணீர் உகுத்தாள் பெண்.

“அழ மாட்டேன்! அழவே மாட்டேன் இனி! இது அழறதுக்கான நேரமில்ல! அழ வைக்கறதுக்கான நேரம்னு எனக்குள்ள சபதமெடுத்திருக்கேன் சங்கு!!!!” எனத் தன் மடியில் சுருண்டிருந்த சங்கத்தமிழனைப் பார்த்துச் சொன்னாள் தேவதா.(இவள் மை ஏஞ்சல்!!!)
 
Vaishanika

மண்டலாதிபதி
Joined
Aug 21, 2020
Messages
484
Reaction score
1,668
Location
Kovai
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடங்கொய்யாலே எடுபட்டபய 😡😡😡😡😡😡😡😡 எத்தனை பேரைக் கொன்னிருக்கான்.
இந்த சைக்கோ கைல கிடைச்சா நடுரோட்டுல கல்லைக் கொண்டு எறிஞ்சே சாகடிக்கனும். அப்பன்னு பேரை வச்சுகிட்டு 🤮🤮🤮🤮🤮🤮🤮🤮 பொண்ணுங்கன்னா அவ்வளவு இளப்பமாடா நாதாரி நாயே😤😤😤😤😤.
இவனுக்கு சோத்துல வெசத்தை வச்சி சாவடிக்காம வச்சிருக்குற உன்ற பொண்டாட்டிய மொதல்ல உதைக்கோனும்.
 
Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,617
Reaction score
6,946
Location
Salem

Nirmala vandhachu 😍 😍 😍
Surprise
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top