• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கடந்தகாலம் சருகானதே... நிகழ்காலம் வசந்தமானதே... - 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் டியர்ஸ்,

"கடந்தகாலம் சருகானதே... நிகழ்காலம் வசந்தமானதே" அடுத்த பதிவுடன் உங்களை சந்திக்க வந்திருப்பது அனாமிகா 12. இந்த பதிவைப் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை மறக்காமல் பகிருங்கள்.

கடந்தகாலம் – 10

அவனது கரங்கள் அவளின் இடையோடு அழுத்தமாக பதிந்திட, ‘இவன் நிவேதாவிற்கு சொந்தமானவன்’ என்று கயல்விழியின் மனம் சொல்ல, சட்டென்று அவனைவிட்டு விலகி அமர்ந்தவளின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.

திடீரென்று வானில் மின்னல் வெட்டிட, சடசடவென்று மழைத்துளி மண்ணை நனைத்தது. சட்டென்று அவளைவிட்டு விலகிய கௌதம் வெளிப்புறம் வேடிக்கைப் பார்த்தான்.

மண் வாசனை நாசியைத் துளைத்திட, தன் உணர்வுகளைக் கட்டுபடுத்த போராடியவனால் அது முடியாமல் போனது. ஒற்றை முத்தத்திற்கு அவனது மனம் அவளிடம் பித்தாகி நின்றது.

அவள் வேண்டும் என்று அவன் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் கூச்சலிட, தன்னருகே அமர்ந்திருந்த கயல்விழியைப் பார்வையால் வருடினான். மீண்டும் அவளை இழுத்து அணைத்து முத்தமிட, அவன் இதழ்களைப் பிரித்துதான் தாமதம்.

அடுத்த நொடியே, தன் கைப்பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அவனது வலது உள்ளங்கையில் அழுத்தமாக கிழித்து, “என்னை பார்த்தால் சுகத்துக்கு அலையற பொண்ணு மாதிரி தெரியுதா? இன்னொரு முறை தப்பான எண்ணத்துடன் பக்கத்தில் வந்தே, உன் உசிரு உடலில் இருக்காது” ஆவேசத்துடன் கூறியவள் காரைவிட்டு இறங்கிச் செல்ல நினைத்தாள்.

தன் உடலில் இருந்து இரத்தம் வெளியேறுவதை வேடிக்கைப் பார்த்த கௌதம், “ஸாரி! நானே உன்னை கொண்டுபோய் விடுகிறேன்” என அவளைத் தடுத்துவிட்டு காரை எடுத்தான்.

அவன் கையில் இரத்த கசிவு அதிகமாக இருப்பதைக் கண்டு கர்சீப்பால் காட்டிவிட அருகே செல்ல, “உன்னோட அக்கறை எனக்கு தேவையில்லை” கௌதம் காரை லேடிஸ் ஹாஸ்டல் முன்பு நிறுத்திட, அவள் கீழே இறங்கியது அவன் கார் அங்கிருந்து கிளம்பியது.

கௌதம் கொடுத்த இதழ் முத்தத்தை காமத்தின் வெளிப்பாடாகப் பார்த்தவள், ‘இன்னொரு முறை அவனை நெருங்க விடக்கூடாது’ என்ற முடிவுடன் ஹாஸ்டல் ரூமிற்குச் சென்றாள்.

இவளுக்காக உறங்காமல் காத்திருந்த நிவேதாவின் முகம் பார்த்தும், “நான் வரும் வழியில் மழை வந்துடுச்சு. அதுதான் கௌதம் கொண்டு வந்து விட்டுட்டுப் போனான்” அவள் எங்கோ பார்த்தபடி கூறிவிட்டு, குளியலறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

சிறிதுநேரம் கழித்து வெளியே வந்த கயல்விழியிடம், “குட் நைட்” என்று கூறிவிட்டு தன்னிடத்தில் சென்று படுத்துக் கொண்டாள். அவளுக்கு உறக்கம் வராத காரணத்தால், ஜன்னலின் அருகே அமர்ந்து வெளிப்புறம் வேடிக்கைப் பார்த்தாள்.

தன் வீட்டின் முன்பு காரை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தான். அவன் ஒருவனுக்கு அவ்வளவு பெரிய பங்களாவை விலைக்கு வாங்கினான். அவன் நிவேதாவை தன்னோடு இருக்க சொல்லி அழைத்தபோது, “கொஞ்சநாள் போகட்டும் கௌதம்” என்று நாசுக்காக கூறிவிட்டாள்.

தன் கையில் இருந்த காயத்தைப் பார்த்த கௌதம் காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் நுழைந்தான். அவனது கல்லூரி புகைப்படங்கள் அனைத்தும் ஹாலில் இருந்த சுவற்றை அலங்கரித்தது. வெகுநாட்களுக்கு பிறகு குடிக்காமல் நிதானத்துடன் வீடு வந்தவனைப் பார்த்து முத்தையா மனம் நிம்மதியடைந்தது.

படுக்கையறைக்குள் நுழைந்தவன் நேராக குளியலறைக்கு சென்று தண்ணீரைத் திறந்துவிட்டு, அதற்கடியில் மௌனமாய் நின்றான். பிறகு உடையை மாற்றிவிட்டு கையிலிருந்த காயத்திற்கு மருந்து போட்டுவிட்டு, கயல்விழி சொன்ன விஷயத்தை நிதானமாக சிந்தித்தான்.

ஆரம்பத்தில் பெண்களோடு சேர்ந்து ஆட்டம் போட்டாலும், பிறகு அது முடியாமல் போனது. பெண்களைத் தீண்டும்போது உணர்வுகள் எழவில்லை. ஒருவிதமான இயந்திரத்தன்மையுடன் கூடுவதை மனம் வெறுத்தது.

தனக்குள் நிகழும் மாற்றத்தை நிவேதாவிடம் சொன்னதற்கு, அவள் பதில் சொல்லாமல் சிரித்தபடியே சென்றுவிட்டாள்.

ஆனால் இன்று தான் செய்த மடத்தனத்தை நினைத்ததும், ‘ஒரு முத்தத்திற்கு இவ்வளவு வெறுப்பை வெளிபடுத்தும் இவளோடு காலம் முழுவதும் வாழ நினைப்பது சரியா?’ என்ற கேள்வி அவன் நிம்மதியைக் குழைத்தது.

ஒருவாரம் நன்றாக சிந்தித்த கயல்விழிக்கு ஒரு விஷயம் மட்டும் தெள்ளத்தெளிவாக புரிந்தது. கௌதம் – நிவேதா இருவரும் வாழ்க்கையில் இணையும்போது, அதுக்கு இடையூறாக தன் காதல் வரக்கூடாது என்று முடிவெடுத்தாள்.

அவனைவிட்டு விலகுவது அவ்வளவு பெரிய விஷயமாகவும் தோன்றவில்லை. அந்தநொடி தனக்கு வந்திருப்பது உண்மையான காதல் தானா என்ற கேள்விகூட அவள் நெஞ்சில் எழுந்தது. அவர்களின் குலதெய்வ கோவிலில் தேர் திருவிழாவிற்கு ஆனந்தன் – கயல்விழி இருவரையும் வர சொல்லிவிட்டனர்.

இந்த வேலையை ரிஸைன் செய்துவிட்டு, அங்கேயே சென்று விடலாம் என்ற முடிவிற்கு வந்தாள். அதை அன்றே செயல்படுத்திய கயல்விழி, ஹாஸ்டல் ரூமில் இருக்கும் பொருட்களை எல்லாம் எடுத்து வைக்க தொடங்கினாள்.

நிவேதா பதில் பேசாமல் அமைதியாக இருக்க, “என்ன யோசனை?” என்றாள்.

அவளது குரல்கேட்டு சட்டென்று நடப்பிற்கு வந்தவள், “கௌதமை விரும்பறேன்னு நினைச்சேன்” இயல்பான புன்னகையுடன்.

அவளைத் தீர்க்கமாக நோக்கிவிட்டு, “நான் சொல்லாமல் நீயே எப்படி முடிவுக்கு வரலாம்” என்று எதிர்கேள்வி கேட்க, அதுக்குமேல் பேசாமல் மௌனமாகிவிட்டாள்.

“சரிடி! இனி உன் இஷ்டம். எனக்கு இங்கே கொஞ்சம் வேலையிருக்கு, அதை முடிச்சிட்டு வந்துவிடுகிறேன்” அங்கிருந்து சிட்டாகப் பறந்துவிட்டாள்.

அவள் சென்றபிறகு அனைத்தையும் எடுத்துகொண்டு கிளம்பிய கயல்விழியின் மனம், ‘அவளை வசதியாக வாழ வைக்கத்தானே, அந்த ஃபீல்டுக்குச் சென்றான். அடுக்கடுக்காக அவன் தவறு செய்தாலும், நிவேதா அவனைத் தவறானவன்னு சொல்லவே இல்லை’ என நினைத்தாள்.

“இருவருக்கும் இடையில் காதல் இல்லாமல் இந்த அண்டர்ஸ்டாண்டிங் வருவது ரொம்ப கஷ்டம்” என்று முடிவிற்கு வந்தவள் ஆனந்தனின் வரவை எதிர்பார்த்து ஹாஸ்டலிற்கு வெளியே காத்திருந்தாள்.

அப்போது அவளைக் கடந்து சென்ற கார் ஒன்று சடர்ன் பிரேக் போட்டு நிற்க, அதன் உள்ளே அமர்ந்திருந்தவனது இரு விழிகளும் அவளின் அழகினை அள்ளிப் பருகியது.

அவன் பார்வை கழுத்தைவிட்டு கீழே இறங்கிட, ‘ஐயோ கொல்றாலே! இதுக்குமேல் இவள் இல்லாமல் முடியாதுடா சாமி, இன்னைக்கு என் இளமைப் பசிக்கு இவள்தான் உணவு’ என்ற முடிவிற்கு வந்தவன், தன்னுடைய ஆட்களுக்கு போன் போட்டு வர சொல்கிறான்.

அவளது புகைப்படத்தை எடுத்து வாட்ஸ்ஆப் செய்துவிட்டு, ‘நான் போய் மெத்தையை ரெடி பண்ணி வைக்கிறேன் ஸ்வீட்டி’ என்று மனதில் அவளோடு பேசியபடி, அவன் கூலிங் கிளாஸை மாட்டிகொண்டு காரில் கடந்து சென்றான்.

அந்த சமயம் அந்தபக்கம் ஒரு வேலையாக வந்த மதுமதியின் பார்வை இயல்பாக ஹாஸ்டல் வாசலில் நின்றிருந்த கயல்விழியின் மீது படிந்தது.

அவளைப் பார்த்தும் அடையாளம் கண்டு கொண்டு, ‘இன்னும் நிவேதாவுடன் நட்பாக இருகிறாங்க போல!’ என நினைத்தபடி பார்வையைச் சுழற்றினாள்.

அவளுக்கு ஒரு முக்கியமான போன் வரவே, அந்த வழியாக வந்த ஒரு ஆமினி வேன் கயல்விழியின் முகத்தில் மயக்கமருந்து உள்ள துணியை வைத்து அழுத்த, அதை சுவாசித்தவள் மயக்கமடைந்தாள்.

அவளை அப்படியே காரில் தூக்கிப் போட்டுகொண்டு செல்லும் காட்சியைப் பார்த்ததும், “அடப்பாவிகளா?!” என்று அதிர்ந்தபடி ஹாஸ்டலுக்குச் சென்றாள்.

அங்கிருந்த ஆட்களிடம் விசாரித்து நிவேதாவின் செல்போன் நம்பர் வாங்கி அவளுக்கு அழைக்க, அவள் செல்லை சுவிச் ஆப் செய்து வைத்திருந்தாள்.

***

அவனின் வரவிற்காக நிவேதா ரெஸ்டாரண்ட்டில் காத்திருக்க, கொஞ்ச நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தான் கௌதம். இருவரும் உணவை ஆர்டர் கொடுத்துவிட்டு நிமிர, அவளின் பார்வையில் இருப்பது என்னவென்று அவன் மனம் தீவிரமாக சிந்தித்தது.

“கௌதம் இதுவரை நான் சொன்னதை நீ கேட்கவே இல்ல, இந்த விஷயத்தை எப்படி எடுத்துக்க போறேன்னு எனக்கும் தெரியல” நிவேதா பீடிகையுடன் தொடங்க, அவளைக் கேள்வியாக நோக்கினான்.

“இனிமேல் உனக்கு இந்த ஃபீல்டு வேண்டாம் கௌதம். இதுக்குள் இருக்கும் வரை உனக்கொரு நல்ல வாழ்க்கை அமையாது. அதே மாதிரி உனக்கென்று ஒரு தொழிலை உருவாக்கிட்டு இதைவிட்டு வெளியே வா” என்று பொறுமையாக கூறினாள்.

தன்மீதான அவளின் அக்கறை நெஞ்சினை நெகிழ வைக்க, “திடீர்னு இதை சொல்ல காரணம் என்னவென்று சொல்லிவிடு நிவி. இதுவரை எத்தனையோ முறை நீ சொல்லி, நான் அதை கேட்கல. இன்று சொல்வதற்கு ஏதோவொரு காரணம் இருக்கும்னு உள்மனசு சிந்திக்குது” என்றான் புன்னகையுடன்.

அதற்குள் ஆர்டர் கொடுத்த உணவு வந்துவிட, “இந்த ஃபீல்டில் நிரந்தரமாக காலடிப் பதித்தவர்கள் ஒருசிலர் தான். இந்த வானில் இன்றைய நட்சத்திரமாக இருக்கும் நீ, நாளைக்கே காணாமல் போகவும் வாய்ப்பு இருக்கு. நீ வழிதவறி போவதைப் பார்த்துட்டு என்னால் அமைதியாக இருக்க முடியல” என்றாள்.

அவளை நிதானமாக ஏறிட்ட கௌதம், “அதுதான் ஏன்? அந்த காரணத்தை சொல்லு. அது நியாயமானதாக இருந்தால், கண்டிப்பாக இதை விட்டுவிடுகிறேன்” என்று அவளின் வாயில் இருந்து உண்மையை வரவழைக்க நினைத்தான்.

தான் உண்ட சப்பாத்தியை விழுங்கிய நிவேதா, “நிஜமாகத்தான் சொல்றீயா?” என்றவளின் சந்தேகப் பார்வையை சந்தித்தவன், அதை நம்ப வைக்க மேலும் கீழுமாக தலையசைத்து ஒப்புக் கொண்டான்.

“கயல்விழி அவ உன்னை உயிருக்கு உயிராக விரும்புகிறாள், நீ இப்படி இருப்பது அவளை மனதளவில் ரொம்ப பாதிக்குது. அதுதான் சொல்றேன், இதை எல்லாம் இப்படியே விட்டுட்டு வந்துவிடு!” என்றவள் இடைவெளிவிட, அவளை இமைக்காமல் நோக்கினான்.

“நீ இப்படி வழிதவறி போயிடுவியோ என்ற பயத்தில் தான், உன்னை ஆரம்பத்திலேயே கண்டிச்சேன். ஆனால் நீ என் பேச்சைக் கேட்காமல், இதுக்குள் நுழைஞ்சிட்டே. இங்கே யாருக்கும் திருமண பந்தம் சரியாக அமையாது, இங்கே உனக்கு நல்லவொரு வாழ்க்கை காத்துட்டு இருக்குடா” என்றவளின் கனிவான பேச்சில், அவன் உதடுகளில் புன்னகை அரும்பியது.

இத்தனை வருடங்களில் நிவேதாவின் இந்த குணம் மட்டும் மாறவே இல்லை. மற்றவர்கள்போல இதை நீ செய்த ஆகணும் என்று ஆர்டர் போடாமல், அதில் இருக்கும் நன்மைத் தீமையைத் தெளிவாக ஆராய்ந்து அவனுக்கு புரியும் படி நிதானமாகக் கூறுவாள்.

அதனாலோ எவ்வவோ அவள் சொன்னால், அதில் தன்மீதான அக்கறை மட்டும் இருக்கிறது என்று உணர்ந்து செயல்படுவான் கௌதம். இன்று இவள் சொன்ன விஷயத்தை நேற்றே யோசித்துவிட்டவன், தன்னுடைய முடிவை அவளிடம் கூறினாள்.

“ரொம்ப சந்தோசமாக இருக்குடா, சீக்கிரமே பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணு. கண்டிப்பாக அதில் நீ நல்லா வருவே” மனமார வாழ்த்திட, அவளோடு இணைந்து சாப்பிட தொடங்கினான்.

வெகுநாட்களுக்கு பிறகு மனம் லேசாக இருக்க, “ஆமா சம்பாரித்த பணத்தை பத்திரமாக வைத்திருக்கிறாயா? இல்ல இந்த மாதிரி பொண்ணுங்களுக்கே செலவழிச்சு தீர்த்துவிட்டாயா?” அவள் வேண்டுமென்றே அவனை வம்பிற்கு இழுத்தாள்.

“தினமும் எல்லாம் கிடையாதுடி! அந்த மாதிரி மனதடுமாற்றம் வரும்போது, அப்புறம் அவுட் டோர் சூட்டிங் செல்லும்போது மட்டும் இந்த மாதிரி இருப்பேன். மத்தபடி கௌதம் பக்கா ஜென்டில்மேன்” என அவன் காலரைத் தூக்கிவிட்டான்.

“நீ போடும் வேஷத்தை ஊர்காரங்க வேண்டுமானால் நம்பலாம், ஆனால் என்னை நீ ஏமாற்ற முடியாது” என்று அவனின் தலையில் செல்லமாகக் கொட்டினாள். இருவரும் கலகலப்பாக பேசி சிரித்தபடி உணவை முடித்துக்கொண்டு, நிவேதாவை அவளது ஹாஸ்டல் முன்பு இறக்கிவிட்டான்.

அந்த இடம் வழக்கத்திருக்கு மாறாக பரபரப்புடன் இருக்க கண்டு, “என்ன பிரச்சனை என்று தெரியலையே” என்றபடி அவள் காரில் இருந்து கீழே இறங்க, ஏற்கனவே கயல்விழியைக் கடத்திச் சென்றவர்கள் யாரென்று தெரியாமல் நின்றிருந்த மதுமதி நிவேதாவைப் பார்த்தாள்.

“உன்னோட போனை சுவிட்ச் ஆப் செய்ய நேரம் காலம் இல்லையா?” என்று எடுத்த எடுப்பில் எரிந்து விழுந்த மதுவைப் பார்த்து, அவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.

வெகுநாட்களுக்கு பிறகு அவளைப் பார்த்த சந்தோஷத்தில், “ஹே மது! எப்படி இருக்கிற?” என்று விசாரிக்க, அப்போதுதான் அவன் அங்கிருப்பதைக் கவனித்தாள் மதுமதி.

“இப்போ இந்த கேள்வி ரொம்ப முக்கியம் பாரு” என்று அவனிடம் அடிக்குரலில் சீறிவிட்டு,தன் கண்ணால் கண்டதை அவனிடம் அப்படியே விவரிக்க, கயல்விழியின் நிலையை நினைத்து நிவேதாவின் மனம் பதறியது.

“அவனோட கார் நம்பர் கொடுத்து விசாரிக்க சொல்லி இருக்கேன், இப்போதே போனால்தான் அவளைக் காப்பாற்ற முடியும்” என்றபடி மறுப்பக்கம் கதவைத் திறந்து காரில் ஏறினாள் மதுமதி.

“நிவி நீ பத்திரமாக இரு!” என்ற கௌதம் காரை எடுத்துக் கிளம்பிட, கயல்விழியைஎப்படி கண்டுபிடிப்பது என்று ஒன்றுமே புரியவில்லை.

இதற்கிடையே மது இதுநாள்வரை எங்கே இருந்தால், சரியாக அந்த சமயம் எப்படி அங்கே வந்தாள் என்ற எந்த கேள்விக்கும் பதில் தெரியவில்லை. அவள் வழிதோறும் யாருக்கோ அழைக்க, அவர்கள் மூலமாக தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாள்.

கயல்விழியின் செல்போனை ட்ரெஸ் செய்ததில், அவள் இப்போது அந்தே சிக்னலில் இருப்பதாக தகவல் கிடைக்க, “இங்கே தான் காட்டுது” என்றபடி பார்வையைச் சுழற்றினாள் மதுமதி.

அப்போது சிக்னல் விழுக அந்த கார் செல்வதைக் கண்டு, “அதை பாலோ பண்ணு கௌதம்” அடையாளம் காட்டிவிட, சீரான வேகத்தில் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.

ஒரு திருப்பத்தில் அந்த காரை வளைத்துப் பிடிக்க, அதிலிருந்து நால்வர் வேகமாக கீழே இறங்கினர். தன் கடத்தப்பட்ட விஷயம் அறியாமல் கயல்விழி காருக்குள் மயங்கிக் கிடந்தாள்.

மதுமதி காரைவிட்டு இறங்கி, “நீ இவங்களைக் கவனி! நான் கயலைப் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு காரின் அருகே செல்ல, மற்ற நால்வரையும் போட்டு புரட்டி எடுத்தான் கௌதம்.

அதற்குள் தகவல் கிடைத்து போலீஸ் அந்த இடத்திற்கு வந்துவிட, “கயல்விழியைக் கடத்தியது யாரென்று எனக்கு தெரியணும் சார்” என்று கூற, அவர்களும் சரியென்று தலையசைத்து அவர்களை இழுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.

அவர்கள் ஜீப் கிளம்பியதும், “அவளுக்கு ஒன்னும் இல்லையே” என்றபடி அவன் அருகே வந்தான்.

“அவங்க கொடுத்த மயக்க மருந்தை சுவாசித்து இருப்பதால், அது தெளிய கொஞ்சநேரம் ஆகலாம். சரி இவளைத் தூக்கிட்டு வா, நம்ம வீட்டுக்குப் போகலாம்” என கட்டளையிட, அவளைப் பூப்போலதூக்கி காரின் பின் சீட்டில் கிடத்தினான்.

மதுமதி பின்னோடு ஏறிக்கொள்ள, “கொஞ்சநேரத்தில் என்னவெல்லாம் நடந்திடுச்சு! ஆமா நீ எப்படி அங்கே வந்தே?” என்றான்.

அதுவரை தான் வந்த வேலையை மறந்திருந்தவள், ‘இந்த பிரச்சனையில் அவனைக் கண்காணிக்க மறந்துட்டேன். இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறானோ தெரியல’ என்று மனதில் புலம்பிட, அதற்குள் பலமுறை அவளின் பெயர் சொல்லி அழைத்தான் கௌதம்.

அவன் குரல்கேட்டு தன்னிலைக்கு மீண்டவள், “இந்தபக்கம் ஒரு வேலையாக வந்தேன், அப்போது இந்த சம்பவம் நடந்தது” என்பத்தோடு அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட, கௌதமின் செல்போன் சிணுங்கியது.
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,092
Reaction score
3,130
Location
Salem
Me first dear.... 😍❤
 




Last edited:

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,929
Location
India
ada nasama poravene yevan da avan??? annaiku book shop la parthane avana ithu???

kayal ah kadathinavanukum madhukum munnadiye arimugam irukka??

college la ivanga kuda padichavana????
 




VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
நிவேதாவின் சிநேகத்தில் மட்டும் தான்,
நிதானமாக சிந்திப்பானா இவன்?
நிதர்சனம் அறிந்து சித்தம் தெளிவானா?
நிம்மதியான வாழ்க்கை பெறுவானா?


மதுமதி பின்தொடர்ந்து வந்தது கயல்விழியை கடத்திச் சென்ற கயவனையா? அது ரோஹித்தா இல்லை கயல்விழியின் முறைப் பையன்களில் ஒருவனா; இல்லை அதற்கும் ஒரு Twist வைத்து இருக்கீறா ஆத்தரே:devilish::devilish::devilish:
 




VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
Madhu yar ah pathi yosikaranga.... 🤔
செல்லகுட்டி! உங்க வெள்ளந்தி மனசுக்கு இந்த யோசனை ரொம்ப அதிகம்😘😘
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,092
Reaction score
3,130
Location
Salem
செல்லகுட்டி! உங்க வெள்ளந்தி மனசுக்கு இந்த யோசனை ரொம்ப அதிகம்😘😘
அப்படியா டியர்....😂🤭

நீங்க என்ன வெள்ளந்தி மனசு னு சொல்லும்போது..... 🙈🙈

உங்கள் அன்பிற்கு நன்றிகள்.... 😍😘🥰
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
கயலை கடத்தி போனவனும் மது தேடறவனும் ஒருத்தனே வா????

அவன் ஒரு வேளை ரோஹித் ஆ????

கெளதம் முன்னாடி எபிசோடில் எல்லாம் டெய்லி அப்படி தான் போலனு காட்டிடு, இப்ப அப்படி இல்லனு அவனே சொல்றது, புரியல ரைட்டர் ஜீ????

இந்த இடம் கொஞ்சம் முரண் பாடா இருக்கு, இல்ல எனக்கு தான் புரியலையா🤔🤔🤔🤔
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
ஹீரோ action ஹீரோவாகிட்டாரா? இந்த புது வில்லன் அந்த குதிரைக்கார கோவாலு தானா? 😇😇😇 இந்த கயல்விழி மயக்கம் தெளிஞ்சதும் கௌதம் கூட சண்டை தான போடப்போகுது? 🙄
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top