• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கடந்தகாலம் சருகானதே... நிகழ்காலம் வசந்தமானதே... - 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 22

வீட்டிற்கு வந்த மதுவின் மனமும் கௌதம் கேள்வியிலேயே நிலைத்தது. எவ்வளவு தூரம் தெளிவாக யோசித்தபோதும், அதற்கான பதில் மட்டும் கிடைக்கவில்லை. கௌதம் அருகில் இருக்கும்போது, அவள் மனதில் ஒரு தைரியம் வருவதை உணர்ந்தாள்.

அவன் விலகி செல்வதை நினைத்து மனம் வருந்தினாலும், நிதர்சனம் என்ற பெயரில் அதை ஆராயாமல் அப்படியே விட்டுவிடுவதை வழக்கமாக வைத்திருந்தாள்.

இருவரின் மனதிலும் இருக்கும் உணர்விற்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியாமலே, அவரவர் பாதைகளில் செல்ல துவங்கினர். இதோ இந்த நொடி ஒருவருக்கு மற்றொருவர் ஆறுதல் என்ற நிலையில், தன் படுக்கையில் சரிந்தவள் தன்னையும் அறியாமல் உறங்கிப் போனாள்.

இதே குழப்பத்துடன் குடித்துவிட்டு வெகுநேரம் கழித்து வீடு சென்ற கௌதம், தன்னையும் அறியாமல் படுக்கையில் விழுந்தான்.

அவன் மனம் முழுவதும் மதுமதியின் முகம் மட்டுமே நிறைந்திருக்க, “நமக்குள் இருப்பது என்ன உறவு மது! தினம் தினம் ஏதோவொரு விதத்தில் என் கண்ணுக்கு புதிதாக தெரியற” என்றவன் மன உணர்வுகளை வாய்விட்டே கூறினான்.

“உன்னோடு இருக்கும் நேரத்திற்காக மனசு ரொம்ப ஏங்குகிறது. உன்னிடம் என் மனசு எதையோ எதிர்பார்க்குது என்று மட்டும் புரியுது, ஆனால் அது என்னவென்று சத்தியமா புரியல” என்றவன் தன்னையும் அறியாமல் உறங்கிப் போனான்.

அடுத்தடுத்து வந்த நாட்கள் ரெக்கை கட்டி பறக்க, மித்ரன் பற்றிய மற்ற விவரங்களையும் சேகரித்துக்கொண்டு கௌதம் வீடு நோக்கிப் புறப்பட்டாள்.

அவன் வீட்டின் வாசலில் ஸ்கூட்டியை நிறுத்துவிட்டு உள்ளே நுழைய, “வாம்மா மது உட்காரு” என்ற முத்தையா அவளுக்கு காஃபி எடுத்துவர எண்ணி, சமையலறையின் பக்கம் திரும்பினார்.

அதற்குள் அவளது பார்வை வீட்டையே வலம் வர, “கௌதம் எங்கே?” என்றாள்.

சிறிதுநேர மௌனத்திற்கு பிறகு, “தம்பி நேற்று நைட் குடிச்சிட்டு வந்து நல்லா தூங்கிட்டு இருக்கும்மா. இப்போ கொஞ்சநாளாக தம்பி சிகரெட், அப்புறம் அந்த பொண்ணுங்க சகவாசம் எல்லாமே விட்டுடுச்சு. அதுக்கும் சேர்த்து இப்போவெல்லாம் அதிகம் குடிக்குது” என்று தன் மன வருத்தத்தை அவளிடம் கொட்டித் தீர்த்தார்.

ஆரம்பத்தில் இருந்தே அவன் மீது அதிக அக்கறையுள்ள மனிதர் என்று அறிந்திருந்த காரணத்தால், “நீங்க போய் அவனை எழுப்பிவிடுங்க” என கட்டளையிட்டு நேராக வெளியே சென்றவள், அங்கிருந்த அருகம்புல்லைப் பிடுங்கிக்கொண்டு சமையலறைக்கு விரைந்தாள்.

அன்று காலை போதையில் உறங்கி கொண்டிருந்தவன் காதில் கதவு தட்டப்படும் ஓசை கேட்கவே, “இன்னும் கொஞ்சநேரம் தூங்கறேன் டிஸ்டப் பண்ணாதீங்க” என்றவன் கத்திட, அதைக் காதில் வாங்காமல் அவரும் விடாமல் தட்டினர்.

சட்டென்று கோபத்தில் எழுந்த கௌதம் சென்று கதவைத் திறக்க, “உங்களைப் பார்க்க மதுமதி வந்திருக்கிறா” என்றவர் மெல்ல கீழே இறங்கிச் செல்ல, அவனது தூக்கம் முற்றிலுமாக கலைந்தது.

‘இந்த நேரத்தில் வந்திருக்கிற, என்ன விஷயம்னு தெரியல’ என்றவன் பதறியடித்துக் கொண்டு கீழே செல்ல, அவனுக்காக அருகம்புல் ஜூஸுடன் ஹாலில் காத்திருந்தால் மதுமதி.

“உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே?” என்ற கேள்வியுடன் எதிரே அமர்ந்தவனின் விழிகள் சிவந்திருக்க, அவனைக் கொலைவெறியுடன் நோக்கினாள்.

அந்த பார்வையில் இருந்த கேள்வியை உணர்ந்து, “கொஞ்சம் குழப்பமாக இருந்தது, அதனால் தான் குடித்தேன்” அவன் தவறு செய்துவிட்ட குழந்தைபோல தலையைக் குனிந்தபடி கூற, அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே சட்டென்று நிமிர்ந்து பார்த்தான்.

“இந்த ஜூஸை அப்படியே குடி” என்று அவள் நீட்டிட, “இன்னும் பிரஸ் பண்ணல!” என்று விளக்கம் கொடுத்தான்.

“உனக்கு பத்து நிமிஷம் டைம், அதுக்குள் ரெப்ரெஷ் ஆகிட்டு வந்து இதை குடி” என்று அவள் தன்னிலையிலேயே நிற்க, வேறு வழியில்லாமல் எழுந்து அறைக்குச் சென்றவன் குளித்து உடைமாற்றிகொண்டு கீழே இறங்கி வந்தான்.

அங்கிருந்த ஹாலில் அமர்ந்து டி.வி பார்த்த மதுமதி, “அண்ணா அவனிடம் அந்த அருகம்புல் ஜூஸை எடுத்து கொடுங்க” என்று சொன்னதும், அதைக்கேட்டு அவன் முகம் விளக்கெண்ணை குடித்தது போலானது.

“எனக்கு இதெல்லாம் குடித்து பழக்கம் இல்ல மது!” என்றவன் கெஞ்சிட, சட்டென்று எழுந்தவள் இரண்டே எட்டில் அவனை நெருங்கினாள்.

“மத்த கண்ட கருமத்தையும் குடிக்க முடியுது, இதை உன்னால் குடிக்க முடியவில்லையா? எனக்கெல்லாம் தெரியாது, இப்போ நீ அதை குடிக்கிற” என்று அவள் மார்பின் குறுக்கே கையைக் கட்டிக்கொண்டு கற்சிலைபோல நிற்க, கௌதம் பிடிவாதம் செய்யும் மழலைப் போல முறுக்கிக்கொண்டு நின்றான்.

சிறிதுநேரம் அமைதியில் கழியவே, “என்னை எதுக்குடி இப்படி சித்ரவதை செய்யற?” என்றபடி முத்தையா கையில் இருந்த ஜூஸை வாங்கி முழு மூச்சாக குடித்தவனுக்கு குமட்டிக்கொண்டு வந்தது.

அவன் ஓரளவு தன்னை சமாளித்துக்கொண்டு நிமிர, “இனிமேல் குடிச்சிட்டு வந்தால், மறுநாள் காலை இவனுக்கு நீங்க அருகம்புல் ஜூஸ் கொடுங்க முத்தையா அண்ணா. அதை குடிக்க மாட்டேன்னு சொன்னால், எனக்கு போன் போடுங்க” என்று கௌதம் மீது பார்வையைப் பதித்தபடி கூறினாள்.

“இதெல்லாம் ரொம்ப ஓவர்” என்றவன் சென்று ஹாலில் இருந்த சோபாவில் அமர, “நீ குடிக்கும் விஷ்கியைவிட இது ஒன்னும் மோசமில்லை” என்று வாதாடியபடி அவனின் எதிரே சென்று அமர்ந்தாள்.

“இனிமேல் நான் குடிக்கக்கூடாது என்ற முடிவே பண்ணிட்டே இல்ல” என்றவன் அழுத்தமாக கேட்க, “ஆமா” என்றாள் தீர்மானமாக.

“இந்த கன்றாவியைக் குடிப்பதற்கு நான் குடிக்காமல் இருப்பதே மேல்... ராட்சசி நினைத்ததை சாதிச்சிட்டே இல்ல” என்றவன் கோபத்தில் முகத்தைத் திருப்பிட, அவனது செய்கையைக் கண்டு அவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

“இப்படி முகத்தை வைக்காதேடா பாக்க சகிக்கல” அவள் வேண்டுமென்ற அவனை வம்பிற்கு இழுக்க, சட்டென்று நிமிர்ந்து அவளைப் பொய்யாக முறைத்தான்.

“அவ்வளவு கஷ்டப்பட்டு நீ என் முகத்தைப் பார்க்க வேண்டாம், நீ முதலில் வந்த விஷயத்தை சொல்லவிட்டு இங்கிருந்து கிளம்பு” என்றவன் குரலில் கோபம் இல்லை என்று உணர்ந்து, சோபாவில் ஆசுவாசமாக அமர்ந்தாள்.

தன் கையோடு கொண்டு வந்திருந்த பைலை அவன் முன்பு வைத்துவிட்டு, “அந்த டிரைவரை நிஜமாவே கொன்னுட்டியா கௌதம்” அவள் ஆழ்ந்த குரலில் சந்தேகத்தைக் கேட்க, அவளை அதே அழுத்தத்துடன் ஏறிட்டான்.

அவனது பார்வையில் இருந்த ஏதோவொன்று அவளை சிந்திக்க வைக்க, “அப்போ அவனை பயமுறுத்தி உன்னோட கட்டுப்பாட்டில் வச்சிருக்கிற இல்ல” என்ற கேள்விக்கும் அவன் மௌனத்தை மட்டுமே பதிலாக தந்தான்.

அவன் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியாமல் போக, “எஸ் உன்னோட சந்தேகம் சரிதான். அன்னைக்கு அவன் டார்கெட் வைத்தது உனக்குதான். அத்தோடு கடைசி நேரத்தில் கயல்விழியையும் தூக்க பிளான் போட்டு இருக்கிறான்” என்று சுவிங்கத்தை மென்றபடி கூறினாள்.

தன் மனைவியை எதுக்காக டார்கெட் வைத்தான் என்று கௌதம் தீவிரமாக சிந்தித்தான். கடந்த காலத்துடன் நிகழ்காலத்தை கூட்டிக் கழித்து பார்த்ததில், இரண்டுக்கும் இடையே நிறைய தொடர்பு இருப்பதுபோல தோன்றியது.

தான் சேகரித்த தகவல்களை ஒன்றுவிடாமல் அவள் வரிசையாக சொல்ல, அவள் கையோடு எடுத்து வந்த பைலைப் புரட்டினான் கௌதம். அந்த கோப்பில் அவன் அதுவரைத் தேடியவனின் சரித்திரமே இருந்தது.

“அப்போ சார் மத்தவங்க கண்பார்வைக்கு நல்லவன். மத்தபடி அவன் கைவரிசையை காட்டாத இடமே இல்ல” என்றவன் பார்வை அந்த பெண்ணின் புகைப்படம் மீது பதிந்தது.

“இவ என்னோட கம்பெனியில் வொர்க் பண்ணின பொண்ணு. இவங்களுக்கு இடையே தொடர்பு இருந்தது, அதை தெரிந்து மித்ரனை விசாரிக்க அவனைப் பின்தொடர்ந்தபோது தான் கயல்விழி கடத்தபட்டது”என்றவள் கௌதம் மீது அழுத்தத்துடன் பார்வையைப் படரவிட்டாள்.

ரேஷ்மா பற்றி அவன் விசாரிக்க, “ரெண்டு பேரும் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்காங்க. அதுமட்டும் இல்ல! அவன் இப்போ அவனோட சொந்த ஊருக்குப் போறான். அப்புறம் ஏதோவொரு பெண்ணை நிச்சயம் செய்வதாகவும் நியூஸ் கிடைச்சுது. அந்த பொண்ணு பெரிய குடும்பத்தை சேர்ந்தவள் என்றும் சொன்னாங்க” என்றாள்.

அவள் சொல்வதை வைத்து பார்க்கும்போது, சிட்டியில் அனைத்து தவறையும் செய்துவிட்டான். அத்தனை விஷயத்தையும் மறைத்து கிராமத்தில் இருக்கும் பெண்ணை மணக்க போகிறான் என்று மட்டும் தெளிவாக புரிந்தது.

மித்ரன் என்றழைக்கப்படும் ரோஹித் பற்றிய உண்மையறிந்தும், ‘இவனால் எதுவும் செய்ய முடியாது’ என்று முழு மனதாக நம்பினான்.

அவன் பெண் பார்க்க செல்வது தன் மனைவி என்று தெரிந்தும், “குட்... நம்ம நினைக்கிற மாதிரி பணக்காரங்களைப் பார்த்தும், பணத்தோடு பணம் சேர்ந்தால் நல்லது என்று நினைக்கும் ரகம் இவங்க கிடையாது” என கௌதம் இலகுவாக சொன்னதைக் கேட்டு அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது!

அவனுடைய மனதில் கோபத்திற்கான சாயலைத் தேடிப் பார்த்துவிட்டு, “நீ என்ன சொல்றன்னு எனக்கு சத்தியமாக புரியலடா” அவள் குழப்பத்துடன் கூற, அவனின் இதழ்களில் புன்னகை அரும்பியது.

“அவன் நினைக்கிற மாதிரி அவ்வளவு சீக்கிரம் அவங்க வீட்டிற்குள் நுழைய முடியாது. இந்த காலத்து பசங்களுக்கு கூட்டுக் குடும்பத்தின் வலிமை தெரியாமல் இருக்கலாம். அவங்களுக்கு கண்டிப்பாக தெரியும்” என்று அந்த பைலை மூடிவைத்துவிட்டு விறுவிறுவென்று மாடியேறிச் சென்றான்.

கௌதம் செயலில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியாமல் மதுமதி தலைவலியுடன் அமர்ந்திருக்க, “இந்தம்மா மசாலா டீ” என்றபடி அங்கே வந்தார் முத்தையா.

அவரின் கையில் இருந்த கப்பை வாங்கி பருகிவிட்டு, “இவனை என்னால் புரிஞ்சிக்கவே முடியல. நிவேதா இறப்பிற்கு பிறகு எல்லாமே தலைகீழாக மாறிப் போச்சு” என்று இடைவெளிவிட, அவரின் மனக்கண்ணில் அந்த நாளின் நினைவுகள் வந்து போனது.

“கௌதம் பழையபடி மாறனும் என்றால், நிவேதா தான் மீண்டு வரணும்” என தெளிவாக இருந்த மதுமதியை அவர் குழப்பிவிட்டு செல்ல, அவரைக் கேள்வியாக நோக்கினாள்.

“நான் படித்து என்ன பிரயோஜனம். இங்கே யாரு என்ன சொல்றாங்க என்று எதுவும் புரியல. இந்த தொழிலில் நமக்கு இன்னும் பயிற்சி வேண்டுமோ?!” என்றவள் வடிவேலுவைப் போல கூற, தன்னுடைய உடையை மாறிவிட்டு கீழிறங்கி வந்தான்.

அவர் சொன்னதை தீவிரமாக சிந்தித்தபோது, ‘ஒருவேளை நிவேதா இறக்கவில்லையா?’ என்ற கேள்வி நெஞ்சினில் எழுந்தது.

அவளின் முகத்தில் தோன்றி மறையும் உணர்வுகளை உன்னிப்பாக படித்தவன், “நீ நினைக்கிற மாதிரி நிவி இறக்கவில்லை மது” என்றவன் காரின் சாவியை எடுத்துக்கொண்டு முன்னே செல்ல, ‘இதை இவன் என்னிடம் சொல்லவே இல்லையே!’ என்ற எண்ணத்துடன் மதுமதி அவனைப் பின்தொடர்ந்து சென்றாள்.

அவன் மதுவை அழைத்துச் சென்ற இடம், சென்னையில் மிகப்பெரிய மருத்துவமனை. அவன் நேராக நிவேதாவின் அறையை நோக்கிச் செல்ல, மதுமதியும் சிந்தனையோடு அவனைப் பின்தொடர்ந்தாள்.

அவன் அறையின் கதவைத் திறந்து உள்ளே நுழைய, ‘இப்போதுதானே டாக்டர் வந்து போனாரு’ என்ற எண்ணத்துடன் சட்டென்று திரும்பிப் பார்த்தான் வசந்தராஜ்.

‘கயல்விழியின் மற்றொரு முறை பையன்!’ என்ற அதிர்ச்சியுடன் அவனை நோக்கிய மதுமதியின் குழப்பம் அதிகரித்தது.

“இவங்க மதுமதி!” என்று அவனுக்கு அறிமுகப்படுத்திவிட்டு, “நம்ம நிவேதாவை உயிராக நேசிக்கும் வசந்தராஜ்.இவளுக்கு அடிபட்ட நாளில் இருந்து பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டு இருக்கிறார்” என்று அவனையும் அறிமுகம் செய்து வைத்தான்.

“நம்ம நிவி வேலை செய்யும் இடத்தில் இவர்தான் பிராஜெக்ட் மேனேஜர்” என்றவன் கொடுத்த விளக்கத்தில் இருந்தே, தனக்கு தேவையான விவரங்களைத் தேடி கோர்த்த மதுமதியின் பார்வை அவன் மீது அழுத்தத்துடன் படிந்தது.

இதை எதையும் உணராமல் படுக்கையில் விழிமூடி கிடந்தவளைப் பார்க்கவே பரிதமாக இருந்தது. நிவேதாவின் புன்னகை முகம் நினைவு வர, ‘உன்னை இப்படியொரு நிலையில் சந்திப்பேன் என்று நினைக்கவே இல்ல’ என்ற எண்ணத்துடன் அவளை நெருங்கிய மதுமதி, மெல்ல அவளின் தலையை வருடிவிட்டு கலங்கிய விழிகளை நாசுக்காக துடைத்தாள்.

“இப்போ ஏதாவது இம்ப்ரூமென்ட் தெரிகிறதா?” என்று கௌதம் அவனிடம் விசாரித்தபடி, நிவேதாவின் அருகே சேரை இழுத்துப்போட்டு அமர்ந்தான் கௌதம்.

அவனைப் பழிவெறியுடன் நோக்கிய வசந்தராஜ், “ம்ம் நம்ம பேசுவது காதில் விழுகுது! சில நேரங்களில் விரல் லேசாக அசையுது. சீக்கிரமே பழைய நிலைக்கு வர வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க” என்றவன் வார்த்தைகளில் இருந்த ஏதோவொன்று அவளைக் குழப்பியது.

சட்டென்று நிமிர்ந்து அவன் முகம் பார்க்கும்போது தான் அவனது பார்வையில் தோன்றிய வித்தியாசத்தை உணர்ந்தாள். நிவேதாவைப் பார்க்கும்போது காதல் வழியும் விழிகளில், கௌதமைப் பார்க்கும் போது வன்மம் மட்டும் வெளிப்படுவதை உணர்ந்து சுதாரித்தாள்.

“கௌதம் மீது உங்களுக்கு என்ன ஸார் கோபம்” அவள் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் விசாரிக்க, கௌதம் சட்டென்று நிமிர்ந்து மதுவைக் கேள்வியாக நோக்கினான்.

அந்த சின்ன இடைவெளியைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, “இவர் மீது எனக்கு என்ன கோபம்?!” அவனும் இயல்பாக பதில் கொடுக்கவே, அதை மதுமதியின் மனம் ஏற்க மறுத்தது.

அதுக்குமேல் எதுவும் கேட்காமல் அவள் அமைதியாகிவிட, ‘என் கயல்விழியைப் பிரித்ததோடு நில்லாமல், இப்போது நிவேதாவை இந்த நிலைக்கு ஆளாக்கிய உன்னை அணுஅணுவாக சித்ரவதை செய்வேன். என் நிம்மதியைப் பறித்த உன்னை சும்மா விடுவேன் என்று கனவிலும் நினைக்காதே’ என்றவன் மனதில் நினைக்க, அவனையே சிந்தனையோடு நோக்கிய மதுவின் விழிகளில் இருந்து எதுவும் தப்பவில்லை.

இதை அறியாமல் நிவேதாவின் கையைப் பிடித்துகொண்டு அமர்ந்திருக்கும் கௌதமைப் பார்த்து, ‘எல்லோருக்கும் நல்லது நினைக்கும், உன்னை வதைக்க இங்கே ஒரு கும்பலே இருக்குன்னு புரியாமல் இருக்கிறாயே’ என்று நினைத்தாள்.

தனக்கு அலுவலகத்திற்கு நேரமாவதை உணர்ந்து, “அவளை பத்திரமாக பார்த்துக்கோங்க வசந்த். நாங்க இருவரும் கிளம்பறோம்” என அறையைவிட்டு வெளியேறிய கௌதம், மருத்துவரிடம் சென்று நிவேதாவின் உடல்நிலையைப் பற்றி விசாரித்தான்.

“சீக்கிரமே அவங்களுக்கு நினைவு திரும்பிவிடும்” என்று அவர் உறுதியாக கூறியபோது, “அதே நம்பிக்கையுடன் தான் நானும் இருக்கேன் டாக்டர்” என்று அவரிடம் விடைபெற்று வெளியே வரும்போது, அவன் முகத்தில் இருந்த நிம்மதியைக் கண்டு அவளது முகமும் மலர்ந்தது.
 




Last edited by a moderator:

Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
நிவி க்கு சீக்கரம் சரி ஆகிடும்....🤗

வசந்த்.... 🤦‍♀️

அவருக்கு நிவி மேல எவ்ளோ பாசம் னு தெரியுமா....🤨😔
கயல் கூட பேசி இவருக்கும் மூளை வேலை செய்யறதில்ல போல....😏

எல்லாருக்கும் கெளதம் தக்காளி தொக்கா போய்ட்டாரா....☹😡
அவர hurt பண்ண, பழிவாங்க னு மது சொன்ன மாதிரி ஒரு கூட்டமே இருக்கு.... 😔

இப்போலாம் அவர பார்த்தா பாவம் அஹ் இருக்கு டியர்....😞

மது ஆச்சும் அவர் மேல அக்கறை பட இருக்காங்களே.... 😌

மது சொன்னதை கேட்ட அப்பறோம் மும் சாதாரணமா பேசறாரு.... 🤔

நைஸ் எபி டியர்.... ❤
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
yenda vasantha unakku enna prachana???? yethukkaga goutham mela ivlo kovam??
athoda en kayalvizhiya pirichutenga nu vera solran?? apdina ivan kayal ah virumbinana?
 




VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
நிவி க்கு சீக்கரம் சரி ஆகிடும்....🤗

வசந்த்.... 🤦‍♀️

அவருக்கு நிவி மேல எவ்ளோ பாசம் னு தெரியுமா....🤨😔
கயல் கூட பேசி இவருக்கும் மூளை வேலை செய்யறதில்ல போல....😏

எல்லாருக்கும் கெளதம் தக்காளி தொக்கா போய்ட்டாரா....☹😡
அவர hurt பண்ண, பழிவாங்க னு மது சொன்ன மாதிரி ஒரு கூட்டமே இருக்கு.... 😔

இப்போலாம் அவர பார்த்தா பாவம் அஹ் இருக்கு டியர்....😞

மது ஆச்சும் அவர் மேல அக்கறை பட இருக்காங்களே.... 😌

மது சொன்னதை கேட்ட அப்பறோம் மும் சாதாரணமா பேசறாரு.... 🤔

நைஸ் எபி டியர்.... ❤
கௌதம் தக்காளி தொக்கா! :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அந்த தக்காளியை கொண்டு போய் உங்க சூரியா கிட்ட கொடுங்க ஜி! அவன் மஹாவுக்கு தக்காளி பஜ்ஜி செய்து தருவான்:p:p:p
 




VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
yenda vasantha unakku enna prachana???? yethukkaga goutham mela ivlo kovam??
athoda en kayalvizhiya pirichutenga nu vera solran?? apdina ivan kayal ah virumbinana?
அதான் எனக்கும் புரியல சகி மா! வசந்த் உள்ள ஒண்ணு வெச்சுகிட்டு வெளிய ஒன்ணு பேசுறான். ஆனாலும் இந்த ஆத்தர் ரொம்ப குழப்புறாங்க:rolleyes::rolleyes::rolleyes:
 




Last edited by a moderator:

VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
அங்கத்தில் அசுத்தமானவன், அகம் பரிசுத்தமாகவும்,
அந்தரங்கத்தில் அழுக்கு படைத்தவன், அப்பாவியாகவும்,
அர்த்தம்கொள்ள முடியவில்லை அவர்கள் எண்ணோட்டத்தை,
அந்தமே இல்லை மனதின் ஏக்கங்களுக்குமே!


வஞ்சகமாய் பார்க்கிறான்;
வாஞ்சையாய் பேசுகிறான்;
வசந்த் விவகாரமானவனே!


ஆனானப்பட்ட துப்பறிவாளர் மதுமதிக்கே நிவேதா உயிரோட இருக்கறது தெரியல. நான் ஒரு சாதாரண வாசகி தானே.உங்க ட்விஸ்ட் புரியாம ஏமார்ந்து போயிட்டேன்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ஆனா நிவி உயிரோட இருக்கா.மீ ரொம்ப ஹாப்பி🤗🤗
 




Last edited by a moderator:

Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
கௌதம் தக்காளி தொக்கா! :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அந்த தக்காளியை கொண்டு போய் உங்க சூரியா கிட்ட கொடுங்க ஜி! அவன் மஹாவுக்கு தக்காளி பஜ்ஜி செய்து தருவான்:p:p:p
funny-divertido.gif
Apadingareenga.... 🤭🤭
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top