• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கடந்தகாலம் சருகானதே... நிகழ்காலம் வசந்தமானதே... - 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 23

இப்போது கயல்விழி இயல்பாக பேச வந்தால் கூட அதைக் கண்டுகொள்ளாமல் செல்லும் ஆனந்தனை அனைவரும் கேள்வியாக நோக்கினர். அவன் விலகி செல்வதை ஏற்க முடியாமல் மகள் வருந்துவதைக் கவனித்த சிவக்குமார், ‘அவங்களாகவே ஒரு முடிவிற்கு வரட்டும்’ என்று விட்டுவிட்டார்.

சில நாட்களாகவே ஆனந்தன் கயலோடு பேசாமல் விலகிச் செல்வதைக் கவனித்த நரசிம்மனுக்கு எதுவும் புரியவில்லை. பெரிய பேரனை வம்பிழுக்கும் நாட்களில் கூட, இருவரும் ஒன்றிணைந்து வலம் வருவது வழக்கம்.

வீட்டினர் முன்பு கயல்விழியிடம் கேட்டதற்கு, “உங்க பேரன் வீம்பு பிடித்துகொண்டு நின்றால், அதுக்கு நான் என்ன தாத்தா செய்யறது? இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ என்று சொன்னீங்க, அதைப் பற்றி ஆனந்தன் அத்தானிடம் பேசியதில் இருந்தே இப்படித்தான் இருக்காரு” என மொத்த பழியையும் தூக்கி அவன் தலையில் போட்டுவிட்டு, விறுவிறுவென்று அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அவள் சொன்னதைக் கேட்டபடி மாடியிலிருந்து கீழே வந்த ஆனந்தனுக்கு கோபம் வந்துவிட, “ஒரே பேத்தி என்று செல்லம் கொடுத்து கெடுத்து வெச்சிருக்கீங்க. யார் நமக்கு நல்லது நினைக்கிற, பக்கத்தில் இருந்தே யாரெல்லாம் துரோகம் பண்றாங்க எதுவுமே புரிவதில்லை” என்று தலையில் அடித்துக்கொண்டு விலகி சென்றவனை வேற்றுகிரகவாசியை போல பார்த்தனர்.

காலைநேரம் திண்ணையில் ஓய்வாக அமர்ந்த நரசிம்மன் மனம் சிந்தனையில் ஆழ்ந்திட, “நான் சிந்திப்பது சரிதானா? இந்த காலத்து பிள்ளைகள் மனதில் என்ன இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடிவதே இல்லை” என்றபடி தாடையைத் தடவிட, அதைக் கேட்டபடி அங்கே வந்தார் சகுந்தலா.

“உங்க பேத்தி காலையிலேயே உங்களைப் புலம்ப விட்டுவிட்டாளா?” அவர் புன்னகையுடன் கேட்க, “ஆமா சகுந்தலா!” என்றார்.

மெல்ல அருகே வந்த மனைவியின் முகம் பார்த்தவர், “மூன்று பேரப்பிள்ளைகள் வாழ்க்கையும் இப்படி சிக்கலில் வந்து நிற்கும்னு நினைக்கவே இல்ல!” என்றவரின் மன வருத்தம் புரியவே செய்தது.

தங்களுடைய பிள்ளைகளுக்கு அடுத்தடுத்து திருமணம் செய்துவைத்து, மூவரும் சந்தோசமாக வாழ்ந்து பெற்றெடுத்த பேரபிள்ளைகளின் மீது அன்பைப் பொழிந்தார் பெரியவர். எந்த நேரத்தில் கண்டிப்பு காட்ட வேண்டும், எப்போது அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று சரியாக அவர்களை வழிநடத்தினர்.

அனைத்தும் சரியாக சென்று கொண்டிருந்த சமயத்தில் தான், அவர்களின் வாழ்க்கைக்குள் அதிரடியாக நுழைந்தான். அவனது வரவிற்கு பிறகு அனைத்துமே தலைகீழாக மாறிப் போனது.

அதை நினைத்துப் பெருமூச்சுடன், “வசந்த், ஆனந்த், கயல்விழி மூவரையும் நம்ப முடியல. பெரியவன் கயல்விழியை விரும்பினான், இப்போ ஆறு மாதமாக இந்தப்பக்கம் வருவதே இல்ல” என்று இடைவெளிவிட்ட கணவனை சிந்தனையோடு நோக்கினார் சகுந்தலா.

“அவளை பழைய வாழ்க்கையில் இருந்து மீட்டெடுத்த ஆனந்தன் இப்போது எதுக்காக வெறுக்கிறான் என்றும் புரியல. அத்தோடு கயல்விழிக்கு நாம் விருப்பபடி திருமணம் செய்ய நினைத்தாலும், அதை தடுக்க அவன் வருவானே” என்று வழக்கம்போல மனைவியிடம் புலம்பினார்.

“மூவரின் வாழ்க்கையும் இப்படி சின்னாபின்னமாகி கிடக்கிறது. அதைப்பற்றி சிந்திக்காமல் எப்படி இவ்வளவு சாதாரணமாக கடந்து வராங்க என்று சத்தியமாக புரியல சகுந்தலா” என்றவர் சொல்லும்போது அவரின் கண்ணோரம் கண்ணீர் நிறைந்தது.

தன்னுடைய கணவனைக் கம்பீரமாக பார்த்த சகுந்தலா, “என்னங்க இது சின்னப்பிள்ளை போல கண்ணைக் கசக்கிட்டு இருக்கீங்க” அதட்டியபடி தன்னுடைய முந்தானையால், அவரது கண்ணீரைத் துடைத்துவிட்டார்.

“நீங்க எல்லோரும் நினைக்கிற மாதிரி கயல் அவனை வேண்டான்னு உதறிட்டு வரல. அந்த விபத்தைக் காரணம் காட்டி, நம்மதான் அவளை பிரிச்சுக் கூட்டிட்டு வந்து இருக்கோம். இப்போ கண்மூடித்தனமான வெறுப்பையும் வளரவிட்டு, நாளைக்கே இது எல்லாம் பொய் என்று தெரிந்தால்..” என்ற பெரியவரால் அதுக்குமேல் யோசிக்க முடியவில்லை.

அவரது பார்வை சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பேத்தியின் புகைப்படத்தில் நிலைக்க, “சீக்கிரமே இந்த பிள்ளைகளோட வாழ்க்கை சரியாகிடணும்” என்றவர் அங்கிருந்து எழுந்து சென்றார்.

அன்றிரவு வேலைகளை முடித்துவிட்டு ஆனந்தனும், கயல்விழியும் வீடு திரும்பும் வழியில், இருவருக்கும் நடுவே பலத்த அமைதி நிலவியது.

சிலநாட்களாக அவன் ஏன் விலகி செல்கிறான் என்று தெரிந்ததால், “என் விருப்பத்தை வெளிப்படையாக சொன்ன பிறகும், நீங்க எதுக்காக இவ்வளவு தூரம் விலகி போறீங்க” என்ற கேள்வியில் நிஜமாகவே அவளை முறைத்தான்.

பிறகு, “நீ பேசுவது சரின்னு உனக்கு தோணுதா? நீ இந்த வீட்டு கயல்விழி இல்ல. கௌதமின் பொண்டாட்டி” அவன் அழுத்தம் திருத்தமாக கூறவே, அவளுக்கு சுள்ளென்று கோபம் வந்தது.

“அந்த நிவேதா தான் அவனோட பொண்டாட்டி, என்னை வேண்டாம்னு தான் விபத்தைக் காரணம் காட்டி கழுத்தில் இருந்த தாலியைக் கூட அத்துடுட்டு அனுப்பி வச்சிருக்கான், அவளோடு சந்தோசமாக வாழும் அவனை என் புருஷன்னு சொல்லாதே!” அவள் கடுமையாக எச்சரிக்க, அதைக்கேட்டு ஆனந்தனின் பொறுமை காற்றில் பறந்தது.

“நீ எதையுமே தீர விசாரிக்கவே மாட்டியா? எல்லோரும் திரும்ப திரும்ப சொல்வதால் ஒரு பொய் என்னைக்கும் உண்மையாகாது” அவன் தன் விவாதத்தை முன் வைக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் கொலைவெறி தாண்டவமாடியது.

“என் குடும்பம் சொன்னால், அது உண்மையாக மட்டும்தான் இருக்க முடியும். எல்லோரும் அந்த கௌதம் மாதிரி நேரத்திற்கு தகுந்த மாதிரி மாறும் பச்சோந்தி இனம் இல்ல” அவளும் எரிந்து விழுக, தன்னையும் அறியாமல் ஓங்கி ஒரு அறை விட்டான் ஆனந்தன்.

அவள் கன்னத்தைப் பிடித்தபடி திகைத்து விழிக்க, “இன்னொரு முறை அவனை தரக்குறைவாக பேசின, நான் மனுசனாக இருக்க மாட்டேன்” என்று எச்சரித்துவிட்டு காரை எடுத்தான்.

கௌதமிற்கு ஆதரவாக பேசியதும் கண்கள் இரண்டும் கலங்கிட, “என்னைவிட உனக்கு அவன் ரொம்ப முக்கியமாக போயிட்டான் இல்ல” என்றாள்.

“ஆமா! அவன் தப்பானவன் என்றாலும், மனசளவில் ரொம்பவே நல்லவன். கெட்டவன் என்று நினைக்கும் அவனுக்கு இருக்கும் நல்ல குணங்கள், நம்மளைச் சுற்றி இருக்கும் யாருக்கும் இல்லையே! இங்கிருக்கும் அனைவரின் மனதிலும் அவனைப் பழி தீர்க்கணும் என்ற வக்கிர புத்திதானே இருக்கு” என்ற ஆனந்தன் சாலையின் மீது கவனத்தைப் பதித்தான்.

அவன் இவ்வளவு தூரம் யாருக்காக பேசுகிறான் என்று புரிந்துகொள்ளாமல், “உன் கண்ணுக்கு அவன் மட்டும்தான் உத்தமன் என்றால் அதுக்கு நாங்க என்ன செய்யறது? கௌதம் முன்னாடி நான் நல்ல வாழ்ந்து காட்டணும், இன்னைக்கே நல்ல யோசித்து நாளைக்கு காலையில் ஒரு முடிவைச் சொல்லு!” என்றவள் பேச்சு அத்தோடு முடிந்தது என்பதுபோல வெளிப்புறம் வேடிக்கைப் பார்க்க தொடங்கிவிட, இங்கே அவனுக்கு தலையே வெடித்தது.

வீட்டின் முன்பக்க தோட்டத்தில் அனைவரும் தங்களுக்குள் பேசி சிரித்தவண்ணம் இருக்க, “இன்னைக்கு வயல் வேலை எல்லாம் எப்படி போச்சு” என்று நரசிம்மன் விசாரிக்க, “அது எல்லாம் நல்லபடி நடந்தது அப்பா” என்றனர் மகன்கள்.

“நம்ம தென்னமர தோப்பில் இருக்கும் மரங்களில் இளநீர் எல்லாம் பிடுங்க சொல்லிட்டேன் மாமா, இப்போ வெயில் காலம் என்ற காரணத்தால் நல்ல விலைக்கு போதும்னு நினைக்கிறேன்” என்று சிவக்குமார் சொல்ல, “நல்லது மாப்பிள்ளை” என்றார்.

ஆண்கள் பேசுவதைக் காதில் வாங்காமல், மறுநாள் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று சகுந்தலா சொல்லி கொண்டிருந்தார். வீட்டின் முன்பு கார் வந்து நிற்கும் சத்தம்கேட்டு அனைவரும் சட்டென்று நிமிர்ந்து பார்த்தனர்.

ஆனந்தன் – கயல்விழி இருவரும் ஜோடியாக வந்து இறங்குவதைக் கண்டு, “என்னப்பா இப்போதான் வேலை முடிந்ததா?” என்று கேட்க, அவர்களும் ஒப்புதலாக தலையசைத்தனர்.

அவர்களின் முகம் களைத்துப் போய் இருப்பதைக் கண்டு, “சரி போய் குளிச்சிட்டு வாங்க. எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடலாம்” என்று நரசிம்மன் சொல்ல, அதுதான் சமயமென்று இளையவர்கள் இருவரும் சிட்டாகப் பறந்துவிட்டனர்.

சிறிதுநேரத்தில் குளித்துவிட்டு வந்த பிள்ளைகளுக்கு சாப்பாடு பரிமாறிட, அவர்களும் பெரியவர்களோடு கலகலப்பாக உணவை முடித்துக்கொண்டு அறைக்குச் சென்றுவிட, மற்றவர்களும் உறங்குவதற்கு எழுந்து சென்றனர்.

தன்னுடைய அறையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த கயல்விழியின் கருவிழிகள் அங்குமிங்கும் சுழன்றது. அடர்ந்த காடு போல ஒரு இடத்தில், நடுவே பெரிய மண்சாலை இருந்தது. அன்றிரவு நல்ல மழை பொழிந்து இருந்ததால், நீர் எது ரோடு என்று தெரியாமல் இருந்தது.

அப்போது அந்த வழியாக பைக்கில் ஒருவன் வர, ‘லிப்ட்’ என்று கையைக் காட்டுகிறாள். அதைக் கவனிக்காமல் சென்றவனை அவள் எரிச்சலோடு பார்க்க, திடீரென்று அந்த வண்டி மட்டும் ஒரு ஓரமாய் கிடக்கிறது.

தன் கண் எதிரே சென்றவனைக் காணவில்லை என்றவுடன் அவள் இரண்டடி எடுத்து வைக்க, “மீனு அங்கே போகாதே” என்ற கணவனின் குரல் அவளைத் தடுக்க, சட்டென்று திரும்பிப் பார்க்கிறாள்.

அங்கே மார்பின் குறுக்கே கையைக் கட்டிக்கொண்டு அவளது கணவனான ஆனந்தனைப் பார்த்து குழப்பத்துடன். “இல்லங்க அவனுக்கு என்னாச்சுன்னு பார்க்க...” என்றவள் முடிக்காமல் பாதியில் நிறுத்திட, அவளது அனுமதியின்றி கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறான்.

அவளின் பின்னோடு அந்த நிழல் உருவம் தொடர்வது போன்றொரு பிரம்மையை உருவாக்கிட, “அம்மா” என வீரிட்டு எழுந்து அமர்ந்தவளின் பார்வை, அவளையும் அறியாமல் கடிகாரத்தின் மீது படிய, மணி விடியற்காலை ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

அவள் நெற்றியில் வியர்வை பூக்க, பக்கத்தில் இருந்த ஜன்னலின் கதவைத் திறந்தாள். சில்லென்ற காற்று வந்து உடலைத் தழுவிச் செல்ல, ‘என்ன ஒரு கனவு!’ என்று பெருமூச்சு விட்டு, பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து பருகினாள்.

மீண்டும் படுக்கையில் படுத்த கயல்விழிக்கு தூக்கம் வர மறுத்தது. அந்த கனவில் வந்தவனின் முகம் சரியாக தெரியவில்லை. ஆனால், யாருக்கோ ஆபத்து என்று மட்டும் புரிந்தது, யாருக்கென்று தான் தெரியாமல் குழம்பித் தவித்தாள்.

சட்டென்று படுக்கையைவிட்டு எழுந்தவள் குளியலறைக்குள் சென்று மறைந்தாள். அவள் குளித்துவிட்டு தலையைத் துவட்டியபடி வெளியே வர, “இன்னும் தூங்கிட்டுதான் இருக்கிறாயா?” என்ற தாயின் குரல்கேட்டு, சடாரென்று கதவைத் திறந்தாள்.

கிட்டத்தட்ட எட்டு மணிவரை நன்றாக தூங்கும் மகள் இன்று ஏழு மணிக்குள் எழுந்து குளித்து இருப்பதைக் கண்டு, “என்னம்மா இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டே?” என்றவர் நெற்றி மற்றும் கழுத்தில் கைவைத்து பார்க்க, அது சில்லென்று இருந்தது.

அதில் திருப்தியடைந்த தாயின் முகத்தைப் பார்த்து, “இன்னைக்கு காலையில் கண்ட கனவே சரியில்ல அம்மா” என்று சொல்லும்போது, ஒன்றன் பின் ஒன்றாக வீட்டின் முன்பு கார் வந்து நிற்கும் சத்தம்கேட்டு வேகமாக ஜன்னலின் அருகே சென்று எட்டிப் பார்த்தாள் கயல்விழி.

முதல் காரில் இருந்து இறங்கிய ரோஹித்தைப் பார்த்தும், ‘இவன் எதுக்காக இங்கே வந்திருக்கிறான்?’ என்ற கேள்வியுடன், அவனுடன் வந்திருப்பவர்களின் மீதும் கவனத்தைத் திருப்பினாள்.

தியாகராஜன் மகனின் தோளில் கைப்போட்டு முன்னே செல்ல, மற்றவர்களின் கையில் இருந்த தாம்பூலத் தட்டு அவளை வெகுவாக குழப்பிவிட்டது.

“அம்மா நீங்க கீழே போய் என்ன நடக்குதுன்னு பாருங்க” என்று தாயை அனுப்பிவிட்டு, கண்ணாடி முன்பு நின்று வேகமாக தலைவாரி பின்னலிட்டு போட்டு வைத்துக்கொண்டு ஆனந்தனைத் தேடிச் சென்றாள்.

அங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் குழப்பத்தில் நின்றிருந்தவனைப் பார்த்து, “இது உன் வேலைதானா?” என்று கேட்ட கயல்விழியை அடிக்க ஏதாவது கிடைக்கிறதா என்று பார்வையால் தேடினான்.

“நான் சும்மா விளையாட்டுக்கு கேட்டேன்” என்றவள் அவனை இழுத்துக்கொண்டு கீழே செல்ல, மொத்த குடும்பமும் அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்று புரியாமல் ஒருவரையொருவர் பார்த்தபடி குழப்பத்துடன் நின்றிருந்தனர்.

“நான் தியாகராஜன், இது என்னோட ஒரே மகன் ரோஹித்” என்றவர் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள, சோபாவைக் கைகாட்டி அமர சொன்னார் நரசிம்மன்.

ரோஹித் பார்வை தன்னவளைத் தேடி அலைபாய, அவனை முறைத்தபடி ஹாலில் வந்து நின்றவளைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டி சிரித்தவனைக் கொல்லும் அளவுக்கு கோபம் வந்தபோது மெளனமாக நின்றிருந்தாள்.

“என் பையனுக்கு உங்க பேத்தி கயல்விழியை முறைப்படி பெண்கேட்டு வந்திருக்கிறோம்” என்றவர் நேரடியாக விஷயத்திற்கு வர, சிவக்குமார் – ராதிகா இருவரும் தங்களுக்குள் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர்.

“எங்க பொண்ணுக்கு” என்று சிவக்குமார் தடுமாற்றத்துடன் தொடங்கும்போதே, “அப்பா” என்ற அழைப்புடன் இடையில் புகுந்த மகளை கேள்வியாக நோக்கினார்.

அங்கிருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “எனக்கு ஆனந்தன் அத்தானைத் தான் பிடிச்சிருக்கு, அவரைத் தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறேன். நீங்க எல்லோரும் தயவுசெய்து கிளம்புங்க” என்று படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டு விறுவிறுவென்று மாடியேறிச் சென்றாள்.

ஆனந்தனின் பெற்றோர் திகைப்புடன் மகனை நோக்கிட, ‘என் விருப்பத்தைக் கேட்காமல், இவளாக ஒரு முடிவெடுத்து அதை இத்தனை பேர் முன்னால் போட்டு உடைத்துவிட்டாளே!’ என்று மனதிற்குள் புலம்பியபோதும், அவனும் ஒப்புதலாக தலையாட்டி வைத்தான்.

ஒரு வாக்கியத்தில் மானத்தை வாங்கிவிட்ட கயல்விழி மீது கோபம் வந்தபோதும், “ஸாரி சொந்தத்துக்குள் மாப்பிள்ளை எடுப்பீங்க என்று தெரியாமல் வந்துவிட்டோம். நீங்க எதுவும் தவறாக நினைக்காதீங்க” என்ற தியாகராஜன் மகனை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.

அவன் வீட்டைவிட்டு வெளியேறும்போது ரோஹித் செல்லிற்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வர, ‘யார்?’ என்ற கேள்வியுடன் எடுத்து, “ஹலோ!” என்றான்.

“உனக்கு எத்தனை முறை அடிபட்டாலும் புத்தியே வராதா ரோஹித்?” என்ற குரலை எங்கோ கேட்ட ஞாபகம் வரவே, நெற்றியைத் தட்டி யோசித்தபடி காரின் கதவைத் திறந்து ஏறினான்.

“நீ யாரென்று சொல்லவே இல்ல?” அவன் அடுத்த கேள்வியைத் தொடுக்க, “கௌதம்” என்றான் நிதானமாக.

இத்தனை வருடமாக இல்லாமல் திடீரென்று எங்கிருந்து வந்தான் என்ற குழப்பத்துடன், “நீ எதுக்காக போன் பண்ணியிருக்கிற?” என்றான்.

“சின்ன வயதில் இருந்தே உனக்கும், எனக்கும் ஏழாம் பொருத்தம். எந்தநேரமும் அடிதடி, சண்டை என்று நாட்கள் நகர்ந்தது. உன்னைவிட்டு விலகி வந்தபிறகும் எதுக்குடா தேவையில்லாமல் என் வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்திற?” அடுத்த கேள்வியில் முற்றிலுமாகவே குழம்பிப் போய் நின்றான் ரோஹித்.

அவனை நிதானமாக சிந்திக்க வைக்கவே, “கயல்விழியைக் கடத்தல், என்னைக் கொல்ல திட்டமிட்டது. நீ செய்த தவறுகள் அனைத்தையும் ஆதாரத்துடன் நிரூபிக்க காத்துட்டு இருக்கேன், அப்புறம் கயல்விழி வீட்டுக்கு பெண்கேட்டு போனீயே, முகம் முழுக்க கரியை பூசி அனுப்பிட்டாங்களா?” என்றவன் நக்கலாக வினாவிட, மறுபக்கம் அதைக் கேட்டுக் கொண்டிருந்த ரோஹித் முகம் கோபத்தில் சிவந்தது.

‘தனக்கு கீழே வேலை செய்தவளின் பிள்ளையிடம் தோற்று போனோமே’ என்ற எண்ணம் எழுத்து அவனை ஆட்டிப்படைக்க, “உன்னால் முடிந்ததை செய்டா. என்னை உள்ளே தூக்கி வைக்க எந்த கொம்பனாலும் முடியாது” என்று கர்வத்துடன் சவால்விட்டு அழைப்பைத் துண்டித்துக் காரை எடுத்தான்.

இனியும் தாமதிக்க வேண்டாமென்று, நல்ல நாள் பார்த்து ஊரறிய இருவர்க்கும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். கயல்விழியிடம் உண்மையைச் சொல்லவும் முடியாமல், நடக்கும் திருமண வேலைகளைத் தடுக்கவும் முடியாமல் தவித்தான் ஆனந்தன்.
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,095
Reaction score
3,132
Location
Salem
கயல்.... 😡🙄
அறிவு னு ஒன்னு இருக்கே அது உனக்கு இருக்கா.... 🤔

ஆனந்தன் கேரக்டர் புடிச்சிருக்கு.... 😊

அன்னைக்கு என்னாச்சு....
கயல் என்ன உளறாங்க....
ஏன் அப்டி நம்ம கெளதம் சொன்னாரு....
🤔

ரோஹித்.... 🤭
மொக்க வாங்கனிங்களா..... 😜

ஆனா அவரே வில்லங்கம் புடிச்சவரு.... 🙄

கெளதம் - ரோஹித் எத்தனை வருஷம் கழிச்சு பேசிக்கிட்டாங்க ல.... 😯

இப்போ என்ன ஆகும்....🤔

அடுத்த எபி க்கு வைட்டிங் டியர்.... ❤
 




Last edited:

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,491
Reaction score
44,949
Location
India
adei ennada intha kayalu loosu mathiri pesittu irukka???????
 




VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
கயல்.... 😡🙄
அறிவு னு ஒன்னு இருக்கே அது உனக்கு இருக்கா.... 🤔

ஆனந்தன் கேரக்டர் புடிச்சிருக்கு.... 😊

அன்னைக்கு என்னாச்சு....
கயல் என்ன உளறாங்க....
ஏன் அப்டி நம்ம கெளதம் சொன்னாரு....
🤔

ரோஹித்.... 🤭
மொக்க வாங்கனிங்களா..... 😜

ஆனா அவரே வில்லங்கம் புடிச்சவரு.... 🙄

கெளதம் - ரோஹித் எத்தனை வருஷம் கழிச்சு பேசிக்கிட்டாங்க ல.... 😯

இப்போ என்ன ஆகும்....🤔

அடுத்த எபி க்கு வைட்டிங் டியர்.... ❤
கௌதம்-ரோஹித் பார்க்கும் போது மின்னலே படம் மாதவன்-அப்பாஸ் நியாபகம் வருதா:cool::cool:
கயல் நிஜமாவே குழப்பங்களின் அரசி தான். தானும் குழம்பி போய், மற்றவங்களையும் நல்லாவே குழப்புறா🤦‍♀️🤦‍♀️
 




Last edited by a moderator:

VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
குடும்பத்தார் செய்த சதியில்,
குழம்பி நிற்கிறாள் கயல்விழி - அதில்
குளிர்காய பார்கிறான் கயவன் மித்ரன்!

குற்றவுணர்சியில் தவிக்கிறான் ஆனந்தன்,
குறையேதும் கூறிடத் தான் முடியுமோ- நண்பன்
குணத்தில் தான் என்று குமுறுகிறான்.


கயல் நிலையில்லாமல் முடிவெடுக்கும் போதும், கௌதம் அவளுக்கு தாலி கட்டியது நன்கு யோசித்த பிறகு தான் என்று தோன்றுகிறது. தக்க சமயத்தில் வந்து உறவை புதுப்பிப்பான் என்று இன்னும் என் உள்மனசு சொல்கிறது🙇‍♀️🙇‍♀️
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,095
Reaction score
3,132
Location
Salem
கௌதம்-ரோஹித் பார்க்கும் போது மின்னலே படம் மாதவன்-அப்பாஸ் நியாபகம் வருதா:cool::cool:
கயல் நிஜமாவே குழப்பங்களின் அரசி தான். தானும் குழம்பி போய், மற்றவங்களையும் நல்லாவே குழப்புறா🤦‍♀️🤦‍♀️
Appadiya dear..... 🤩🤩
Ama dr kayal apadi dhan panvanga.... 🙄
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
இந்த கயலா எப்படி தான் வீட்டில் வெச்சி இருக்கங்களோ,, முடியல😒😒😒😒

ஆனந்தன் பாவம் தான், சூழ்நிலை கைதி😔😔😔😔

சின்ன வயசு கெளதம் & இப்ப இருக்கற கெளதம் ரெண்டு பேரும் ஒன்னுனு தெரியல போலவே அந்த பக்கி பயலுக்கு🤭🤭🤭🤭

இப்ப என்ன செய்ய போறானோ😱😱😱😱
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,787
Reaction score
6,729
Location
Germany
இந்த கயலுக்கு அறிவே இல்லை.🤬🤬🤬🤬

நிவேதாகூட கௌதம் வாழ்றான்னு சொல்லிதான் பிரிச்சு கூட்டிட்டு வந்திருக்காங்க போல🧐🧐🧐

பல்பு வாங்கியும் இந்த ரோஹித் அடங்காம இருக்கானே😡😡😡

கல்யாணத்த பற்றி கௌதமுக்கு தெரியும் போது🥺🥺🥺
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top