• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கடந்தகாலம் சருகானதே... நிகழ்காலம் வசந்தமானதே... - 27

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
நிகழ்காலம் – 27

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு....

அதிகாலைப்பொழுது அழகாக புலர்ந்தது. சூரியனின் வெளிச்சம் அறையெங்கும் பரவியதில் உறக்கம் கலைந்து கண்விழித்தாள் கயல்விழி. கடிகாரத்தில் மணியைப் பார்த்துவிட்டு, ‘இதுக்குமேல் தூங்கினால் சரிவராது’ என்று எழுந்து செல்ல நினைக்க, அவளை இழுத்து அணைத்துக்கொண்டு உறக்கத்தைத் தொடர்ந்தான் ஆனந்தன்.

“அம்மா – அத்தை எல்லோரும் எழுந்திருப்பாங்க. இன்னைக்கு வசந்த் அத்தான் வேற வரேன்னு சொன்னதால், சாப்பாடு எல்லாம் ரெடி பண்ணனும் விடுங்க” என்று கணவனிடம் கெஞ்சிட, அதைக் காதில் வாங்காமல் அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்.

“நீ போய் அவங்களை வேலை செய்யவிடாமல் வம்பு வளர்த்துட்டு இருப்பே, எனக்கு கம்பெனி கொடுத்து தூங்கும் வழியைப் பாரு” விழி திறக்காமல் மிரட்டிய ஆனந்தனை நிறைவுடன் நோக்கினாள்.

பெற்றவர்களின் மிரட்டலுக்கு பயந்து தன்னை திருமணம் செய்திருந்தாலும், அவளது மனதைப் புரிந்துக்கொண்டு வாழ தொடங்கிய பிறகு அவள் மீது உள்ள கோபத்தை மறந்தே போனான். இதோ இன்று இருவரும் சேர்ந்து தொழிலை நிர்வாகம் செய்கின்றனர்.

அந்த சமயத்தில் தீர யோசித்து எடுத்த முடிவு தன் வாழ்க்கையை செழுமையாக மாற்றும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. அத்துடன் கணவனின் வழிகாட்டுதலால், அவளிடம் நிறைய குணங்கள் மாறிப் போயின.

ஆரம்பத்தில் இருந்ததைப் போல எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்யாமல் முடிந்தவரை தீர விசாரித்து நிதானமாக முடிவெடுக்க கற்றுக்கொண்டாள்.

தனக்குள் நிகழ்ந்த மாற்றத்தை எண்ணி அவள் வியக்க, “இவ்வளவு தூரம் மாறினாலும், கௌதம் விஷயத்தில் நீ எடுத்த முடிவு தவறுதான். அவன் மனசு கடைசிவரை உன்னை மன்னிக்க போவதில்லை” அவளின் எண்ணவோட்டத்தைப் படித்தவன், அவளைவிட்டு விலகி குளியலறைக்குள் சென்று மறைந்தான்.

ஒருநாளில் ஒரு முறையாவது கணவனின் வாயிலிருந்து கௌதம் பெயர் வந்தே தீரும். அது ஏன் என்ற கேள்வி நெஞ்சினில் எழுந்தாலும், அதை வெளிப்படையாக கேட்டு நிம்மதியைக் கெடுக்க விரும்பாமல் முடிந்தவரை பொறுத்துக்கொண்டு கடந்து செல்ல முயன்றாள்.

இந்த மூன்று ஆண்டுகளில் இருவரும் சந்தோசமாக வாழ்க்கையில் கௌதம் குறுக்கே வரவில்லை என்பது பெரிய கேள்வியை உருவாக்கியது. அத்துடன் இதுவரை அவனைப் பற்றிய எந்த விவரமும் அவள் காதுகளுக்கு வராமல் பார்த்து கொண்டான் ஆனந்தன்.

சிலநேரங்களில், “நீங்க இன்னும் கௌதம்கூட பேசிட்டு இருக்கீங்களா?” என்று அவள் கேட்பதும் உண்டு.

“நம்ம திருமணத்திற்கு முதல்நாள் பார்த்ததுதான் கடைசி” என்ற பதிலோடு எழுந்து சென்றுவிடுவான்.

ஆக மொத்தத்தில் இருவரின் வாழ்க்கையும் தெளிந்த நீரோடை போல சென்றது. அதற்குள் ஆனந்தன் குளித்துவிட்டு வெளியே வர, தன் உடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்று மறைந்தாள்.

அரைமணி நேரத்தில் அவள் குளித்து தயாராகி கீழே வரும்போது விசாலம் நொடிக்கு ஒரு முறை வாசலைப் பார்த்துக்கொண்டே இருக்க, சங்கரன் பதட்டத்துடன் ஹாலில் நடந்து கொண்டிருந்தார்.

“கடைசியாக தாத்தா – பாட்டி இறப்பிற்கு கூட வராமல் இருந்துவிட்டானே, இத்தனை வருடமாக இல்லாமல் நேற்று அவன் பேசியபோது குரலில் ஒருவிதமான மாற்றம் தெரிந்தது” என்று தம்பியிடம் கூற, அவரும் அமைதியாக உள்வாங்கிக் கொண்டார்.

“உங்க மகன் குரல் மாற்றத்தை மட்டும் சொல்றீங்க, வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால் தான் வீட்டுக்கு வரவே இல்ல. இப்போ அவ ஐந்து மாதம் கர்ப்பமாக இருக்கிறான்னு சொன்னதையும் சேர்த்து சொல்லுங்க” என்று சிடுசிடுக்க, சிவகுமார் – ராதிகா இருவரும் கோவிலுக்குச் சென்று பூஜையை முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தனர்.

அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே சமையலறைக்குச் சென்ற ராதிகா, “அவனோட விருப்பபடி கல்யாணம் பண்ணிட்டான், அதுக்கு சத்தம்போட்டு என்ன ஆகப்போகிறது. அந்த பொண்ணு கர்ப்பமாக இருக்குன்னு நினைத்து சந்தோசப்படுங்க” என்றவரின் பார்வை தன் மகளின் மீது படிந்து மீண்டது.

மூன்று ஆண்டுகளில் ஏறாத கோவில் இல்லை ஏற்றாத தீபமில்லை. ஆனால் கயல்விழிக்கு ஒரு குழந்தை மட்டும் பிறக்கவில்லை. அறிவியல் எவ்வளவோ தூரம் வளர்ந்திருந்தபோது, “கொஞ்சநாள் காத்திருங்க! எல்லாம் நல்லதாவே நடக்கும்” என்ற பதிலை மட்டுமே கேட்டு சலித்துப் போனது.

சிவகுமார் மருமகனோடு அமர்ந்து பேச, மற்ற மூன்று பெண்களும் இணைந்து சமையலை முடித்துவிட்டு வெளியேறினர். அதற்குள் கார் வரும் சத்தம் கேட்ட விசாலம், “தமயந்தி அந்த ஆரத்தி தட்டு எடுத்துட்டு வா” என்று கட்டளையிட்டு வாசலுக்கு விரைந்தார்.

அவரின் பின்னோடு மொத்த குடும்பமும் வெளியே செல்ல, வசந்தராஜ் – நிவேதா இருவரும் ஜோடியாக காரிலிருந்து இறங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் சிலையாகி நின்றாள் கயல்விழி. அவளது கண்ணில் தெரிந்த திகைப்பைப் பார்த்து, “கௌதம் பக்கம் இருக்கும் நியாயத்தைக் கேட்டிருக்கணும் என்று மனசு சொல்லுதா?” என்று மனைவியின் காதோரம் கேலியாக வினாவினான்.

அதற்குள் ஆரத்தி எடுத்து அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் செல்ல, அங்கிருந்து அனைவரையும் வசந்தராஜ் – நிவேதாவிற்கு அறிமுகம் செய்து வைத்தான்.

கடைசியாக, “இது என் சித்தப்பா பையன் ஆனந்தன், இது அவனோட மனைவி கயல்விழி. எனக்கு அத்தை பொண்ணு” என்று அறிமுகம் செய்து வைக்க, “நீ” என்றவளுக்கு பேச வார்த்தை வரவில்லை.

“நான் ஆனந்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் நிவேதா” என்று அவள் உண்மையைப் போட்டு உடைக்க, அந்த நிதர்சனத்தை ஏற்க முடியாமல் மயங்கிச் சரிந்தாள்.

“வேதா” என்றபடி வசந்த் அவளைத் தாங்கிக் கொள்ள, மற்றவர்கள் அதிர்ச்சியுடன் நின்றிருக்க, தமயந்தி பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்ததில் மயக்கம் தெளிந்தது.

சட்டென்று எழுந்து அமர்ந்த நிவேதாவிற்கு ஒருநிமிடம் என்ன நடக்கிறது எனப் புரியாமல் போக, “நீ அவனோடு நல்லா வாழனும் என்ற எண்ணத்தில் தானே, கௌதமை வார்த்தையால் வெறுக்கடித்துவிட்டு விலகி போனேன். அது எல்லாமே வீணாகப் போயிடுச்சா?” என்றவளின் விழிகளில் கண்ணீர் அருவியாக கொட்டியது.

மற்றவர்கள் காரணம் புரியாமல் திகைத்துப்போய் நின்றிருக்க, “என் கழுத்தில் இருந்த தாலியை கௌதம் அறுத்துவிட்டு, உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு சந்தோசமாக வாழ்வதாக சொன்னாங்க” என்று திக்கித்திணறி உண்மையைக் கூற, சட்டென்று எழுந்து நின்றவள் பளாரென்று கயலின் கன்னத்தில் அறைந்தாள்.

அவளைத் தடுக்க வந்த அனைவரையும் உக்கிரமாக நோக்கியவள், “யார் சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா? கொஞ்சமாவது யோசித்து முடிவெடுக்கவே மாட்டியா? ஐயோ அன்னைக்கு விபத்தில் கோமாவிற்கு போன நான் எட்டு மாசத்திற்கு பிறகுதான் கண்விழித்தேன். நீங்க இருவரும் சந்தோசமாக இருக்கணும்னு, அவனை வார்த்தையால் நோகடித்துவிட்டு விலகி போனேனே” என்ற நிவேதா நடந்த அனைத்தையும் கூறினாள்.

அதைகேட்டு அதிர்ச்சியில் சிலையாகி நின்ற கயல்விழி அருகே வந்த வசந்தராஜ், “கௌதம் அப்படியொரு காரியத்தைப் பண்ணவே இல்ல, அவனைப் பழிவாங்க வேண்டும் என்ற வெறியில் தான், நிவேதாவிடம் பொய்யான காரணத்தைக் கூறி அவளை கல்யாணம் செய்தேன்” என்ற கூற, அது அவளின் தலையில் இடியாக இறங்கியது.

அவன் சொன்ன வாக்கியம் அவளை உயிரோடு கொல்ல, “மற்றவர்களோடு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தடுமாறி தவறான வழிக்குச் சென்ற கௌதம்கூட நம்பலாம்” என்று இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்.

வசந்தராஜ் பதில் சொல்ல முடியாமல் குற்றவாளிபோல நின்றிருக்க, “உங்க மனதிற்குள் இப்படியொரு வக்கிர புத்தியா? உங்களோடு மூன்று வருடம் வாழ்ந்ததை நினைக்கவே அருவருப்பாக இருக்கு வசந்த்.” சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து கேள்வி கேட்டவள், அவனின் மார்பில் புதைந்து கதறி அழுதாள். தன் காதல் பொய்யாக போனதே என்ற வலி அவளைத் தாக்கியது.

மற்றொரு பக்கம் யார் சொல்வது உண்மை, யார் சொல்வது பொய் என்று புரியாமல் கயல்விழி குழப்பத்தில் நின்றிருந்தாள். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அவளுக்கே புரியவில்லை.

அவர்கள் சொல்வதைக் கேட்டு உலகமே தட்டலமாலையாக சுழல, “எல்லோரும் என்ன சொல்றீங்க? அன்னைக்கு விபத்து நடந்தபிறகு என்னதான் நடந்துச்சு. அப்போ நான் நினைத்த மாதிரி கௌதம் தப்பானவன் இல்லையா?” கயல்விழி கண்ணீரோடு கேட்டாள்.

ஆனந்தனின் பார்வை மாமனாரின் பக்கம் திரும்ப, “அவ கேட்கிறா இல்ல சொல்லுங்க மாமா!” அவன் எடுத்துக் கொடுக்க, மற்றவர்களை விலக்கிவிட்டு நேராக தன் தந்தையின் எதிரே சென்று நின்றாள்.

தன் மகளின் பார்வையை சந்திக்க முடியாமல் சிவக்குமார் பார்வையைத் திருப்பிட, “அன்னைக்கு என்ன நடந்தது என்று சொல்லுங்க” என்று கோபத்துடன் கேட்டாள்.

“ஆமா கௌதம் தப்பானவன் இல்ல. ஒரு கேடு கெட்டவனை என் மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்ள முடியல. அதனால்தான் எல்லா பாவத்தையும் செய்தேன். அதை உன்னிடம் சொல்லிவிடுவேன் என்றவர்களையும், நான் இறந்துவிடுவேன் என்று சொல்லி பணிய வைத்தேன்” என்று அவர் ஆக்ரோஷமாக கத்திட, அங்கிருந்த அனைவரும் மெளனமாக நின்றிருந்தனர்.

தன்னுடைய தந்தையின் மற்றொரு கோரமான முகம் கண்டு அவள் அதிர்ச்சியில் நின்றிருக்க, அவரது மனம் அந்த நாளை நோக்கி பயணித்தது.

திடீரென்று ஒருநாள் கயல்விழிக்கு விபத்து என்று வசந்த் போன் போட, மொத்த குடும்பமும் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தது.

இதுநாள்வரை மகளின் வாழ்க்கை என்று பொறுத்துப் போன சிவக்குமார் கோபம் எல்லைக் கடக்க, “உன்னை நம்பி வந்த என் மகளை இப்படி கொண்டு வந்து படுக்க வச்சிட்டியே? உன்னை மாதிரி ஒழுக்கம் கெட்டவனுக்கு எதுக்குடா குடும்பம். எனக்கு என் பொண்ணு உயிருடன் வேணும்” என்றபடி அவனை சரம்வாரியாக அடிக்க, அதை வாங்கிக்கொண்டு ஜடம்போல நின்றான்.

அப்போதுதான் விஷயம் கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு வந்த ஆனந்தன், தன் மாமா அவனைத் தாக்கும் காட்சியைக் கண்டு பதறியபடி ஓடினான்.

“மாமா அவனை விடுங்க! இருவருக்குள் என்ன பிரச்சனை என்று தெரியாமல் அவனை மட்டும் எதுக்காகக் குற்றவாளி ஆக்குறீங்க?” என்று அவரிடம் சண்டைக்குப் போனான்.

“இவன் நல்லவன் மாதிரி பேசற?! என்னோட மகள் வாழ்க்கையைக் குழிதோண்டி புதைக்க வந்த பாவி!” என்றபோது கயல்விழியை ஸ்ரேக்ச்சரில் படுக்க வைத்து தள்ளிக்கொண்டு வெளியே வந்தனர்.

அவளது முகத்தை சிலநொடிகள் இமைக்காமல் நோக்கிய கௌதமைப் பார்த்து, “என் மகளுக்கு நான் வேற நல்ல பையனைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன், இனிமேல் நீ அவ வாழ்க்கையில் நீ குறுக்கிடவே கூடாது” விரல்நீட்டி எச்சரிக்க, ஆனந்தனுக்கு இந்த விஷயம் அதிர்ச்சியைக் கொடுத்தது.

இவ்வளவு பெரிய குடும்பத்தின் குட்டி இளவரசி என்றாலே, அது கயல்விழிதான். அன்றைய நிலையில் சிவக்குமார் பக்கம் இருக்கும் நியாயத்தை மட்டுமே யோசித்த குடும்பத்தினருக்கு, அவளது வாழ்க்கையைக் கேள்விக்குறியாக மாற்றுகிறோம் என்ற விஷயம் மட்டும் புரியவே இல்லை.

அன்று அவளுக்கு சிகிட்சை முடிந்த கையோடு, அவளைத் தங்களோடு அழைத்து வந்தனர். தன் மகளை இப்படி படுக்க வைத்துவிட்ட ஆதங்கத்தில், “அவன் கட்டிய தாலி என் மகள் கழுத்தில் இருக்கக்கூடாது” என்று அதை அறுத்து ஏறிய சென்ற மாமாவைத் தடுத்தான் ஆனந்தன்.

“மாமா அவன் உயிரோடு இருக்கும்போது, இவ கழுத்தில் கிடக்கும் தாலியை அறுத்து எறிவது எந்த விதத்தில் சரின்னு நினைக்கிறீங்க?” அவரிடம் எகிறினான்.

அதைக்கேட்டு ராதிகா வேதனையுடன் கணவனைப் பார்க்க, “யாரைக் கேட்டு அவன் தாலி கட்டினான்? திடீர்னு வந்து என் மகளோட கழுத்தில் தாலி கட்டி இழுத்துட்டுப் போனான். அவளோட மன அமைதிக்காக நம்ம எல்லோரும் அமைதியாகத்தானே இருந்தோம். இன்னைக்கு என் மகள் இப்படியிருக்க யார் காரணம்?” என்று அவனிடம் எரிந்து விழுந்தார்.

“இது ஒரு விபத்து மாமா... இதுக்கும் இவங்க வாழ்க்கைக்கும் என்ன சம்மதம்?” என்று அவன் கேள்வி கேட்க,

“அவன் கட்டிய தாலி, என் மகள் கழுத்தை சுத்தின பாம்பு மாதிரி, அது இல்லாமல் இருப்பதுதான் எல்லோருக்கும் நல்லது” என்றவர் கண்ணிமைக்கும் நொடியில் அதை அறுத்து வீசிவிட்டார்.

“அவ கண்விழித்ததும் நான் அடைந்ததை எல்லாம் சொல்லுவேன்” என்று அவன் ஆதங்கத்துடன் கூற,

“இங்கே பாரு! இது என் மகள் வாழ்க்கை, இதில் நீ தலையிடாதே, என்னையும் மீறி அவளிடம் நீ உண்மையைச் சொன்னால், உன் அத்தையை நீ வெள்ளைப் புடவையுடந்தான் பார்க்கணும்” என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

அனைவரின் மீதும் அன்பைப் பொழியும் அத்தையைப் பார்த்தவன், அந்த விஷயத்தை ஏற்றுக் கொள்ள முயன்றான். அங்கே நடந்த பிரச்சனையை மூடி மறைத்தோடு நில்லாமல் கண்விழித்த கயல்விழியிடம், “நிவேதா என்ற பெண்ணைத் திருமணம் பண்ணிகிட்டான், உங்க பெண் எனக்கு தேவையில்லன்னு சொல்லி, உன் கழுத்தில் கிடந்த தாலியை கழட்டி வீசியதும் அவன்தான்” சிவக்குமார் பழியைத் தூக்கி கௌதம் மீது போட, அவள் விழிகள் கோபத்தில் சிவந்தது.

அத்துடன் அவன் திருமணம் செய்த புகைப்படத்தைக் காட்டி, “இதுக்குமேலும் எங்களை நம்ப மாட்டியா?” என்று நரசிம்மன் கேட்க, அதை வாங்கிப் பார்த்துவிட்டு கல்லாக சமைந்து நின்றாள்.

அடுத்தடுத்த நாட்களில் ஓரளவு தன் மனதைத் தேற்றிக்கொண்டு, அவர்களின் பழைய கயல்விழியாக வலம் வர தொடங்கினாள். அவளை நம்ப வைக்க ஒரே ஆள் ஆனந்தன் தான் என்ற காரணத்தால், “நீதான் அவ மனசை மாத்தணும்” என்று பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தனர்,

தன் குடும்பத்தினரைத் தாண்டி அவளுக்கு எதுவும் செய்ய முடியாத காரணத்தால், முடிந்தவரை அவளை தன் நிழலில் வைத்துக் கொள்ள முயன்றான். அவள் கணவனை வெறுத்து ஒதுக்கியதும், அவளுக்கு மற்றொரு திருமணம் செய்ய வீட்டினர் பிளான் போட்டனர்.

அதைக் கவனித்த ஆனந்தன் வேண்டுமென்றே கயல்விழியின் கவனத்தை தொழில் பக்கம் திருப்பிவிட்டு, அவளுக்கு பக்கபலமாக தானும் திருமணம் செய்ய மாட்டேன் என்று சத்தியாக்கிரகம் செய்தான்.

அவளுக்கு எவ்வளவு பெரிய பாவம் என்று அவர்களுக்கு அப்போது புரியவில்லை, காரணம் கயலின் மீது அவர்கள் வைத்திருந்த கண்மூடித்தனமான பாசம்!

அவர் உண்மையை சொல்லி முடித்ததும், “உங்க பேச்சைக்கேட்டு என்னவெல்லாம் பேசிட்டேன்” என்று சரிந்து அமர்ந்து கதறி அழுதவளை இழுத்து அணைத்து ஆறுதல் படுத்தினான் ஆனந்தன்.

மற்றவர்கள் எல்லோரும் கற்சிலைபோல நின்றிருக்க, “வாழ்க்கையில் நம்ம இருவரும் சேர வேண்டும் என்பது விதி. அதனால் நடந்ததை மறந்து நிதர்சனத்தை ஏற்றுகொள்ள முடிவு பண்ணு” கடைசியாக அவனிடம் ஒரு முறை மன்னிப்பாவது கேளுடி! அது உன் மனசுக்கு ஆறுதல் தரும்” என்று கணவன் கூறியதைக் கேட்டு விழிகளைத் துடைத்துக்கொண்டு எழுந்து நின்றாள்.

“நான் கௌதமைப் பார்த்து மன்னிப்பு கேட்கணும்” என்று ஆனந்தனிடம் அவள் கூற, “கண்டிப்பாக கூட்டிட்டுப் போறேன்” என்றான்.

பெற்றவர்கள் தங்களுக்குள் பார்வையைப் பரிமாறிக் கொள்ள, “என்னை மன்னிச்சிடு” என்று நிவேதாவிடம் வசந்த் மன்னிப்பு கேட்க, அவளின் உதடுகளில் கசந்த புன்னகை தோன்றி மறைந்தது.

“இனி உங்களை மன்னித்து எதுவும் மாற போவதில்லை. இது என் தலைவிதி என்று நினைச்சிக்கிறேன். கடைசியாக ஒரு முறை கௌதமை நேரில் பார்க்கணும்” என்று அவள் விருப்பத்தைக் கூற, அவனும் அழைத்துச் செல்வதாக வாக்குறுதி கொடுத்தான்.

வசந்தராஜ் – நிவேதா, ஆனந்தன் – கயல்விழி நால்வரும் கௌதமை சந்திக்க சென்னை கிளம்பிச் சென்றனர்.
 




Last edited by a moderator:

Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
3 years aagiducha....

Kayal kum arivu ila....
Avanga appa kum arivu ila....😡
Vasanth.... 🙄

Nive idhala dhan apadi pesanangala.... 😔

Enna sonnalum avara hurt pannadhu pannadhu dhaana.... 😔

Sorry sonna sari aagiduma....

Avar sonna madhiriye kayal feel panranga...

Aanandh koda nalla irundha sari....

Gowtham ipo enna panitu iruparu.... 🤔

Madhu....
 




Last edited:

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Thevaiya ithu? Annaikke yosichu iruntha
 




Last edited:

VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
கயல்விழி வீட்டாரின் நாடகத்தில் சூழ்நிலை கைதியானாள்;
கட்டியவளிடம் விட்டுக்கொடுக்காமல் போனது உன் தவறு கௌதமா!

நிவேதா உன் நிம்மதிக்காக நெஞ்சை கல்லாக்கி கொண்டாள்;
நிழலாய் வந்த தோழியின் நிஜமான குணம் மறந்தது உன் தவறு கௌதமா!

ஆனந்தன் அனைத்தும் அறிந்து உன் பக்கம் நின்றான்;
ஆத்திரத்தில் அனைத்தையும் மறைத்து விலகியது உன் தவறு கௌதமா!

நீயே கதி என நெருங்கி வந்த உறவுகளின் மகிமை தெரியாமல்,
தீய வழியில் விலகி சென்று உருவங்களில் மயங்கியது உன் தவறு கௌதமா!

அன்புள்ள சொந்தங்கள் அனைத்தும் பெற்றும்,
அதை உணராமல் கண்மூடிக்கொண்டு,
அனாதை என்று புலம்பியது உன் தவறு கௌதமா!

மன்னிக்க முடியா பல குற்றங்கள் செய்த பின்னும்
மனைவியாக தாரகை மதுமதி உன் வாழ்வில் - இனியாவது
மனிதர்களின் மகத்துவம் உணர்ந்து,
மனநிறைவோடு மகிழ்ச்சியாக வாழு கௌதமா!!!
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
கயல்க்கு குழந்தை இல்லையா😔😔😔

நிவி என்ன தான் நீ செய்து இருந்தாலும், உன்ன இப்ப பிடிக்கல🙄🙄🙄🙄🙄

ப்பா என்ன ஒரு சுயநலம், இதுள்ள ஒரே ஒரு நன்மை தான் கெளதம்க்கு மது கிடைச்சிருக்க🤩🤩🤩🤩

அவன் தான் அங்க இல்லையே😒😒😒
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,785
Reaction score
6,722
Location
Germany
கண்கெட்ட பின் சூரியநமஸ்காரமா 😡😡😡

கயல் ஆனந்தன் அவ்ளோ சொல்லியும் நம்பல 😡😡😡. நிவேதா வசந்த் சொன்பத கண்ணை மூடிட்டு நம்பிட்டா 😠😠😠

எனக்கு கோவம் கோவமா வருது ஆத்தரே 😡😡😡
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top