• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கடந்தகாலம் சருகானதே... நிகழ்காலம் வசந்தமானதே... - 28 (Pre - Final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
நிகழ்காலம் – 28

மொத்த குடும்பமும் தன்னை முட்டாளாக ஆக்கிவிட்டதை நினைத்து மனதிற்குள் வருந்தினாள். தந்தை செய்ததை சரியென்று வாதாட முடியவில்லை. தன் கணவன் சொல்வதுபோல, இருபக்கமும் இருக்கும் நியாயத்தை விசாரித்து முடிவெடுக்காமல் போனோமே என்ற எண்ணமே அவளைக் கொல்லாமல் கொன்றது.

மற்றொரு பக்கம், ‘உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு அப்படியொரு வார்த்தை சொல்லிட்டு போனேன், கடைசியில் இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லையேடா! கயல்விழி பக்கம் இருக்கும் நியாயத்தை யோசித்தேனே தவிர, உன் மனம் என்ன பாடுபடும்னு சிந்திக்காமல் இருந்துட்டேன்’ என்று மனதிற்குள் கௌதமிடம் மன்னிப்பு வேண்டினாள்.

அவர்கள் முதலில் சென்றது கௌதம் இருந்த வீட்டிற்குத் தான். ஆனந்தன் காரை நிறுத்துவிட்டு கீழே இறங்கிச் சென்று விசாரித்ததில், “அந்த தம்பி வீட்டை வித்துட்டுப் போயிருச்சுப்பா” என்றார் வாட்ச்மேன்.

அதைகேட்டு இரண்டு பெண்களும் பதட்டத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, “அவரோட கம்பெனிக்கு போய் பார்க்கலாம்” என்று வசந்த் யோசனை சொல்லவே, சரியென்று தலையசைத்து காரில் ஏறியமர்ந்தான் ஆனந்தன்.

அவனது நிறுவனத்தில் சென்று விசாரித்தபோதும், அதே பதில்தான் அங்கேயும் கிடைத்தது. கண்ணைக் காட்டிக் காட்டில் விட்டது போல இருக்கவே, “இதையெல்லாம் வித்துட்டு இவன் எங்கே போனான்” வாய்விட்டே புலம்பினாள் நிவேதா.

வசந்த் அவளை சமாதானம் செய்ய, “ஒரு மனுஷனை ஓரளவுக்குத்தான் நோகடிக்கணும். அது யாருக்குமே புரிவதில்லையே! அன்னைக்கு அவ்வளவு தூரம் சொன்னேன், அவன் பக்கம் இருக்கும் நியாயத்தைக் கேளுன்னு... அப்போ வருத்தபடாமல் இருந்துட்டு இப்போ வந்து புலம்பினாள் என்ன அர்த்தம்” என்று மனைவியை சாடியவன், சென்னையில் இருக்கும் நண்பர்களை அழைத்து டிடெக்டிவ் ஏஜென்சியின் விவரங்களை வாங்கினான்.

அத்தனைக்கு காரணம் அவளோட அவசரபுத்தி என்பது புரிந்ததால், கணவன் பேச்சை நினைத்துக் கோபபட அவளால் முடியவில்லை. கௌதமிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது மட்டுமே அவள் நெஞ்சினில் ஆழப்பதிந்து இருந்தது.

“இங்கே போனால் கண்டிப்பா கௌதம் இருக்கும் இடம் தெரிஞ்சிடும் என்று நினைக்கிறேன்” என்றவன் அவர்களை அழைத்துக்கொண்டு, அந்த ஏஜென்சி இருக்கும் இடத்திற்குச் சென்றான். அவன் காரை நிறுத்திவிட்டு உள்ளே செல்ல, மற்ற மூவரும் ஆனந்தனைப் பின்தொடர்ந்தனர்.

“இங்கே மதுமதியைப் பார்க்கணும்” என்று ரிசப்ஷனில் நின்ற பெண்ணிடம் கூற, “மேம் இப்போ இல்ல” அவளும் தன் மேலதிகாரிக்கு அழைத்து அனுமதிபெற்று அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு வேலையைத் தொடர்ந்தாள்.

நால்வரும் கேபினுக்குள் நுழைய, “வாங்க ஆனந்த்... இப்போ இந்த ஏஜென்சியை நிர்வாகம் செய்துட்டு இருப்பது நான்தான். என் பெயர் கதிரவன். உங்களுக்கு யாரைப் பற்றிய விவரம் வேணும்” என்று இயல்பாக பேசியபடி, தன் முன்னிருக்கும் இருக்கையைக் கைகாட்டினார்.

“இதை நிர்வாகம் செய்வது மதுமதி என்றுதானே சொன்னாங்க” வசந்த் குழப்பத்துடன் கேட்க, அவர் வாய்விட்டுச் சிரித்தார்.

அவர்களின் குழப்பமான முகம் கண்டு, “அவங்க கனடாவில் செட்டில் ஆகிட்டாங்க, வருடத்தில் ஒரு முறை வந்து பார்த்துட்டுப் போவாங்க. மத்தப்படி எல்லாமே இங்கே நான்தான்” என்று அவர் விளக்கம் கொடுக்க, சிறிதுநேரம் அங்கே மௌனம் நிலவியது.

“ம்ஹும் சொல்லுங்க! யாரைப்பற்றி உங்களுக்குத் தெரியணும்” என்று அவர் கேட்க, “கௌதம் பற்றி தெரியணும்” என்ற வசந்தராஜ் தங்களுக்கு தெரிந்த விவரங்களைக் கூற, ஆனந்தன் அடையாளத்திற்கு புகைப்படத்தையும் கொடுத்தான்.

அதை வாங்கிப் பார்த்த கதிரவன் முகம் பிரகாசமாக, “இவரைப் பற்றிய முழு விவரமும் தெரிந்தது மதுமதி தான். நாளைக்கு பிளைட்டிற்கு கிளம்பணும்னு சொல்லிட்டு இருந்தாங்க. நான் அட்ரஸ் கொடுக்கிறேன், நீங்க போய் அவங்களைப் பாருங்க” என்றார்.

அவர் சொன்னதைக்கேட்டு மனதில் இனம்புரியாத நிம்மதி படர, அவர் கொடுத்த முகவரியை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினர். நால்வரும் பதட்டத்துடன் அங்கே சென்று விசாரிக்க, “ரூம் நம்பர் 12டில் இருப்பாங்க பாருங்க” என்றனர்.

அவர்கள் சென்று கதவைத் தட்ட, சில நிமிடங்களில் கதவு திறந்தது. வாசலில் நின்றிருந்த நால்வரையும் பார்த்து முகம் மலர, “வாங்க... நிவேதா – கயல்விழி இப்படி திடீர்னு வந்து நின்று ஷாக் கொடுக்கிறீங்க?” என்றபடி வழியைவிட்டு விலகி நின்றாள்.

“மது நீயா?” என்று பெண்கள் இருவரும் அதிர்ச்சியுடன் கேட்க, “வேற யாரை எதிர்பார்த்து வந்தீங்க மேடம்” என்று முடிந்தவரை கேலியாகவே கேட்க, வசந்த்ராஜ் குழப்பத்துடன் தம்பியைப் பார்த்தான்.

“இவளோட கிளோஸ் பிரெண்ட் தான்” என்று விளக்கம் கொடுக்க, அவர்களை வரவேற்று உபசரித்த பிறகு, “இப்போ சொல்லுங்க என்ன விஷயம்?” நிதானமாக சோபாவில் அமர்ந்தபடி கேட்டாள்.

இதுவரை நடந்த அனைத்தையும் விவரமாக கூறிய நிவேதா, “உனக்குத்தான் அவனைப் பற்றி நல்லா தெரியும்னு சொன்னாங்க. பிளீஸ் ஒரே ஒரு முறை கௌதமை நான் பார்க்கணும். அவன் இருக்கும் இடத்திற்கு எங்களை அழைச்சிட்டு போ மது” என்று அவளின் கையைப் பிடித்து கெஞ்சியவளின் கண்ணில் கண்ணீர் அருவியாக கொட்டியது.

சிலநொடி மெளனமாக கழிந்திட, “நீங்க இருவரும் நிம்மதியாக வாழ என்னவெல்லாம் செய்தான் தெரியுமா? அவனை ஒரு நிமிடத்தில் தூக்கி எறிந்து பேசிட்டீங்க இல்ல. நீங்க கொட்டிய வார்த்தைகளை இப்போ அள்ளிவிட முடியுமா?” என்றவள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் இருவரும் தலைக் குனிந்தனர்.

அத்துடன் ரோஹித் பற்றிய விவரங்கள் அனைத்தையும் கூறி, பெண்கள் இருவரின் முகமும் கலவரமானது. கௌதம் எந்தவொரு விஷயத்தையும் அவர்களிடம் பகிரவில்லை. தாங்கள் செய்திருப்பது எவ்வளவு பெரிய தவறு என்று நினைத்தபோது, அவர்களின் மனம் குற்ற உணர்வில் குறுகுறுத்தது.

இத்தனை வருடமாக மனதில் தேக்கி வைத்திருந்த கோபம் கரையுடைக்க, “இதெல்லாம் அவனோட நல்லதுக்கு செய்தானா? ஒரு மனுஷன் திருந்திவிட்டால், அவனை பேசியே நோகடிப்பீங்களா? அவன் மனசு என்னவாகும்னு நினைக்காத உங்களை என்ன செய்வதுன்னு எனக்கே தெரியல” வெளிப்படையாக கேட்டதும், கயல்விழி முகத்தை மூடிக்கொண்டு கதறினாள்.

நிவேதா கல்லாக சமைந்து அமர்ந்திருப்பதைப் பார்த்து மனம் இளகிவிட, “என்னோடு கிளம்பி வாங்க, கனடாவில் அவன் இருக்கும் இடத்தைக் காட்டுகிறேன்” என்றவள் கூறவே, அவள் கிளம்பும் ப்ளைட்டில் நால்வருக்கும் டிக்கெட் போடும் வேலைகளைக் கவனிக்க சென்றான் வசந்தராஜ்.

அந்த ஹோட்டலில் தங்களுக்கும் ரூம் போட்ட ஆனந்தன், கனடாவில் தற்போது விண்டர் சீசன் என்ற காரணத்தால், அங்கே அணிவதற்கு ஏற்ற உடைகளை எடுக்க, பெண்கள் இருவரையும் ஷாப்பிங் அழைத்துச் சென்றான். மறுநாள் சென்னை ஏர்போர்ட்டில் இருந்து ஐந்து பேரும் வேன்கூவர் செல்லும் பிளைட்டில் ஏறினர்.

அவர்களின் மனம் முழுவதும் கௌதமைச் சுற்றி மட்டுமே வலம் வந்தது. நீண்டநாள் கழித்து சந்தித்த மதுமதியை விசாரிப்பதைக் கூட மறந்து போகும் அளவிற்கு அவர்களின் மனநிலை இருந்தது. அதைப் பெரிதாக நினைக்காமல் பயணத்தின்போது, தனக்கு பிடித்த புத்தகத்தை வாசித்துக்கொண்டே அமைதியாக வந்தாள்.

மறுநாள் வேன்கூவர் இன்டர்நேஷனல் விமான நிலையம் சென்றடைந்ததும், அவர்களது செக்கிங் முடித்துக்கொண்டு வெளியே வந்தவள் பார்வையைச் சுழற்றினாள். அவளின் பின்னோடு வந்த நால்வரும் சிந்தனையுடன் நின்றிருக்க, “அம்மா” என்ற குரல்கேட்டு திரும்பினாள்.

இரண்டு வயது குழந்தை சிரித்தபடி மதுவை நோக்கி ஓடிவர, “என் செல்லம் வாங்கடி” என்றவள் இரண்டே எட்டில் ஓடிச்சென்று குழந்தையைத் தூக்கி முத்தமிட, குழந்தையும் சளைக்காமல் தாய்க்கு முத்தம் கொடுத்தது.

அத்துடன் தகப்பன் செய்த சேட்டைகளை மழலை மொழியில் விவரிக்க, “அப்படியா செய்தாரு!” என்று அவளும் குழந்தையோடு ஐக்கியமாகிவிட்டாள்.

அந்த காட்சியைப் பார்க்க அவர்களுக்கு இரண்டு கண்கள் போதவில்லை. அந்த குழந்தையின் மழலை மொழி மனதை மயக்கிட, தங்களுக்குள் புன்னகைத்துக்கொண்டு நால்வரும் நின்றிருந்தனர்.

“என் பொண்டாட்டிகிட்ட போட்டு கொடுக்கிறீயா? நீ வீட்டுக்கு வா உனக்கு இருக்கு” தன் மகனைச் செல்லமாக மிரட்டியபடி வந்த ஆடவனைக் கண்டு, ‘கௌதம்’ என்றனர் அதிர்ச்சியுடன்.

இரண்டே எட்டில் மனைவியை நெருங்கிய கௌதம், “அப்புறம் இந்தியா பயணம் எப்படி இருந்தது. உன்னோட ஏஜென்சி வேலை எல்லாமே நல்லபடியாக நடக்குதா?” என்றவன் அக்கறையுடன் விசாரிக்க, அவள் கணவனைப் பொய்யாக முறைத்தாள்.

“என்னை இந்தியா அனுப்பிட்டு அப்பாவும், மகனும் செம லூட்டி அடிக்கிறீங்க இல்ல. ஒரு வாரமாக போனவள் என்ன ஆனான்னு ஒரு போன் பண்ணல, இப்போ மட்டும் என்ன தனியாக அக்கறை” என்ற மனைவியைப் பார்த்து குறும்புடன் புன்னகைத்தான்.

தன்னிடம் தாவிய வந்த மகனைத் தூக்கி முத்தமிட்டு, “நாங்க அப்படித்தான் லூட்டி அடிப்போம் இல்லடா குட்டி... நாங்க போன் போட்டபோது நீ பிஸியாக இருந்தே, அதனால்தான் கண்டுக்காமல் விட்டுட்டோம்” அவன் சிரித்தபடி விளக்கம் கொடுக்க, மகனும் ஒப்புதலாக தலையாட்டினான்.

“ஒரே வாரத்தில் என் மகனை உங்கப்பக்கம் இழுத்துட்டீங்க இல்ல” என்றவள் பொய் கோபத்துடன் அடிக்க, அத்தனை அடிகளையும் வாங்கிக்கொண்டு வாய்விட்டுச் சிரித்தான் கௌதம்.

“அம்மா அப்பா அடி...” என்று விரல்நீட்டி எச்சரிக்க, அவளுக்கு நிஜமாகவே கோபம் வந்தது.

“என் புருஷனை நான் அடிக்கிறேன், நீ என்னடா என்னையே மிரட்டுற” என்று குழந்தையின் விரலைப் பிடித்து பொய்யாக கடித்தவள்,கணவனின் தோளில் சலுகையாக சாய்ந்து கொண்டாள். தங்களோடு வந்த நால்வரையும் மறந்து, தங்களுக்கான தனி உலகில் மூவரும் மூழ்கியிருந்தனர்.

வெகுநேரம் பயணம் செய்ததில் அவள் முகம் களைப்பாக இருக்க, “நம்ம சண்டையை வீட்டில் போய் கண்டினியூ பண்ணலாம்” என்றவன் குழந்தையை மனைவியிடம் கொடுத்துவிட்டு ட்ராலியை தள்ள, அப்போதுதான் மற்றவர்களின் ஞாபகமே வந்தது.

“உன்னைப் பார்த்தும் எல்லாமே மறந்துட்டேன்” என்று உதட்டைக் கடித்துக்கொண்டு திரும்பிப் பார்க்க, நால்வரும் அதிர்ச்சியில் சிலையாகி உறைந்து நின்றிருந்தனர்.

அவள் பார்வை சென்ற திக்கை நோக்கிய கௌதம் முகம் கோபத்தில் சிவக்க, “இதுக்குதான் இந்தியா போனாயா?” என்று அவளைக் கடிந்துக்கொண்டு, தன் குழந்தையை வெடுக்கென்று வாங்கிக்கொண்டு முன்னே சென்றான்.

அவனது கோபத்தை எப்படி குறைப்பது என்று தெரியாமல் அவள் குழம்பிப்போய் நின்றிருக்க, “கௌதம் தான் உன்னோட கணவனா?” என்று ஆனந்தன் புன்னகையுடன் கேட்க, மேலும் கீழும் தலையசைத்து ஒப்புக் கொண்டாள்.

“இதை ஏன் நீங்க முன்னாடியே சொல்லல” என்று வசந்த் அவளிடம் கேட்க, “நீங்க கேட்கல... நானும் சொல்லல” பட்டென்று அவள் கொடுத்த விளக்கத்தில், ஆண்கள் இருவரும் தங்களுக்குள் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர்.

நிவேதா – கயல்விழி இருவரும் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருக்க, “சீக்கிரம் இவங்களை அழைச்சிட்டு வாங்க. உங்களுக்கு கார் புக் பண்ணிருக்கேன், மத்ததை எல்லாம் வீட்டில் போய் பேசிக்கலாம்” என்ற மதுமதி வேகமாக அங்கிருந்து சென்றாள்.

ஒரு குழந்தை வீரிட்டு அழுகும் சத்தத்தில் தன்னிலைக்கு மீண்ட இரு பெண்களையும் அழைத்துக்கொண்டு மதுமதியைப் பின்தொடர்ந்தனர் வசந்தும், ஆனந்தும்!

கௌதம் – மதுமதி திருமணம் செய்த விஷயம்கேட்டு, ‘இது எப்படி நிகழ்ந்தது?’ என்ற சிந்தனையில் இருக்க, ஆனந்தன் மனம் மட்டும் மகிழ்ச்சியில் திளைத்தது.

சற்றுமுன் கண்முன்னே நடந்த காட்சி மனத்திரையில் படமாக விரிய, ‘அவனோட நல்ல மனசுக்கு ஆண்டவன் நல்லவொரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறான்’ என்று நினைத்து கடவுளுக்கு நன்றி சொன்னான்.

பார்க்கிங்கில் அவளுக்காக காத்திருந்த கௌதமைப் பார்த்து, “அவங்களை நான் தேடித் போகல. உன்னைத் தேடிக்கொண்டு அவங்கதான் நம்ம ஏஜென்சி வரை வந்தாங்க. நிவேதா கையைப் பிடித்து கெஞ்சுவதைப் பார்க்கவே பாவமாக இருந்துச்சு. அதனாலதான் என்னோடு கூட்டிட்டு வந்தேன்” அவள் தவறு செய்துவிட்ட குழந்தைபோல விளக்கம் கொடுக்க, கதவைத் திறந்து ஏறினான்.

மறுபக்கம் கதவைத்திறந்து குழந்தையைக் கையில் எடுத்து அந்த இடத்தில் அமர்ந்ததும், “கௌதம் சாரி” என்ற மனையாளின் விழிகள் கலங்கிட, அதுக்குமேல் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.

அவளைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன், “மது! திடீர்னு அவங்களைப் பார்த்தும் கோபம் வந்துவிட்டது. உன்மேல் எந்த தவறும் இருக்காது என்று எனக்கு நல்லாவே தெரியும். இதுக்கெல்லாம் போய் கலங்குவாங்களா?” என்று அவளை சமாதானம் செய்ய, அவனது மகனோ தாயின் கண்ணீரைத் துடைத்துவிட்டு சிரித்தான்.

அதில் கவலை மறந்து மதுவும் சிரித்துவிட, கௌதம் காரை எடுத்தான். இந்த மூன்று ஆண்டுகளில் எவ்வளவு மாற்றம் வந்திருந்தபோதும், மதுவின் மீது அவன் கொண்ட காதலில் எள்ளளவும் மாற்றம் வரயில்லை.

அவ்வளவு பெரிய துரோகத்தை சந்தித்தது துவண்டுபோய் வந்தவனின் வாழ்க்கையை மாற்றியமைத்தாள் மதுமதி. தன்னவளின் கரம் கோர்த்து அதில் இதழ் பதித்து நிமிர்ந்தவனின் தோளில் சாய்ந்தாள்.

அன்று அனுபவித்த வலியை இன்று உணர்வது போன்றொரு எண்ணம் எழுந்து அவனது மனதை ஆட்டிப் படைக்க, “அன்னைக்கு நீ இல்லாமல் போயிருந்தால், என் வாழ்க்கை என்னவாகி இருக்குமோ தெரியல” என்ற கணவனின் வார்த்தைகளில் வலியை உணர்ந்தாள்.

“அந்த நாளை நினைத்து வருத்தப்பட ஒண்ணுமே இல்லங்க. நீங்களே நல்லா யோசிங்க... அந்த நாள் நம்ம வாழ்க்கையில் வராமல் போயிருந்தால், என் காதலை நான் உணராமலே போயிருப்பேன்” என்ற நிதர்சனத்தை அவன் மனமும் ஏற்றுக் கொண்டது.

“இன்பம் – துன்பம் இரண்டும் கலந்தது வாழ்க்கை என்றாலும், நான் அனுபவித்த வலியை சொல்ல வார்த்தையே இல்ல. என்னை மாதிரி ஒருவனுக்கு இப்படியொரு வாழ்க்கை அமையுமா என்பது கேள்வி குறிதான்” என்றவனை அவள் பொய்யாக முறைத்துவிட்டு சீரான வேகத்தில் காரை செலுத்தினான்.

அதுவரை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மகன் வீரிட்டு அழுகவே, கௌதம் வீட்டின் முன்பு காரை நிறுத்தி இறங்கினான். மதுமதி குழந்தையை சமாதானம் செய்தபடி உள்ளே சென்றுவிட, பின்னோடு அடுத்த கார் வந்து நின்றது.
 




Last edited by a moderator:

Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
Oh.... Madhu and Gowtham ku marriage aagi baby iruka.... 🤗😍

Magilchi.... 😊

Eppavum avanga happy ah irukattum....

Mudhalla avanga dhan jodi nu nenachiruken....

Aana aprom... 🙄

Sari adhulam mudindha vishayam....

Gowtham and Madhu baby kooda eppavum sandhoshama irukattum.... 🥰😍

Madhu unmayave avar vaazhvin vasantham dhan.... ❤

Lovely epi dr.... 😊
 




Last edited:

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
Super da
 




Last edited:

VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
தாய் அவள் சேர்த்த புண்ணியங்களே,
திசை மாறி போன உன் பாதையிலே,
தேவதையாக வந்தாள் பெண் நிலா - உன்
தவறுகளுக்கு மன்னிப்பே தண்டனையாய்,
தவப்புதல்வனே வெகுமதியாய் -இனி
தன்னிலை மாறாமல் நன்றியுடன் இரு கௌதமா!!!


ஆத்தர் ஜி! பெண்கள் பாவம் அவ்வளவு தூரம் அவனைத் தேடி வந்திருக்காங்க; உங்க ஹீரோ ரொம்ப தான் பிஹு பண்ணறான்;🤨🤨🤨🤨🤨
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
வாவ் இப்ப பேபி கூட இருக்கா, சூப்பர் சூப்பர்🤩🤩🤩🤩

கெளதம் ஓட நல்ல மனசுக்கு நல்லாவே வாழ்க்கை அமைந்து இருக்கு🥰🥰🥰

இப்பவாது மன்னிப்பு கேட்டு அப்படியே ஓடி போருங்க 🙄🙄🙄🙄
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
கியூட் பேபி அதுவும் கௌதமோட சூப்பர் 🥰🥰🥰😍😍😍😍

கௌதம் கோபம் நியாயமானது😌😌😌
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top