• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கடந்தகாலம் சருகானதே... நிகழ்காலம் வசந்தமானதே... - 29 (Final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் டியர்ஸ்,

"கடந்தகாலம் சருகானதே... நிகழ்காலம் வசந்தமானதே..." - 29 இறுதிப் பதிவுடன் உங்களை சந்திக்க வந்திருப்பது நான் உங்கள் அனாமிகா 12. உங்களுடைய தொடர் ஆதரவினால் எனது மூணாவது கதையை வெற்றிகரமாக முடித்துவிட்டேன். இதுவரை கதையை வாசிக்காதவர்கள் வாசித்து உங்களின் கருத்தைப் பகிருங்கள்.

அத்தியாயம் – 29

வீட்டிற்கு வந்தவர்கள் எதிரியாக இருந்தாலும் வரவேற்பது தமிழரின் பண்பாடு என்ற காரணத்தால், “வாங்க” என்றழைத்தவன், ஆனந்தன் கையில் இருந்த சூர்கேசை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றான்.

மதுமதி குழந்தையை உறங்க வைத்துவிட்டு வெளியே வர, “அவங்களை குளிச்சிட்டு ரெஸ்ட் எடுக்க சொல்லு, மத்த விஷயத்தை அப்புறம் பேசலாம்” என்றவன் சென்றுவிட, அவர்களுக்கான அறையைக் காட்டினாள். அவர்கள் களைப்புத்தீர குளித்துவிட்டு, சிறிதுநேரம் படுத்து ஓய்வெடுத்தனர்.

அவர்களுக்கு சமைக்க மனைவிக்கு உதவி செய்தவனிடம், “என்மேல் கோபமா?” என்ற கேள்விக்கு உதட்டைப் பிதுக்கி மறுப்பாக தலையசைக்க, “அப்புறம் ஏன் அமைதியாகவே இருக்கீங்க?” என்றாள்.

“அவர்களைப் பார்த்தும் பழசு எல்லாமே நினைவு வந்துவிட்டது மது” என்ற கணவனை நெருங்கி இரு கரங்களால் வளைத்து நெற்றியில் அழுந்த முத்தமிட்டாள் மதுமதி.

அதை ஆழ்ந்து அனுபவித்த கௌதமிற்கு தாயின் நினைவு வந்துவிட, அதுவரை அலையடித்த மனது சட்டென்று அமைதியானது. அதன்பிறகு உணவைத் தயார் செய்து டைனிங் டேபிளில் எடுத்து வைக்க, நால்வரும் உறக்கம் கலைந்து எழுந்து வந்தனர்.

அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை கூட அந்த மௌனம் நீண்டது. வசந்தராஜ் – நிவேதா, ஆனந்தன் – கயல்விழி நால்வரும் ஹாலில் சென்று அமர்ந்தனர்

அவர்களுக்கு எதிரே சென்று அமர்ந்த கௌதம், “இப்போ சொல்லுங்க என்னை எதுக்காக தேடினீங்க?” கணவனின் அருகே சென்று மெளனமாக அமர்ந்தாள் மதுமதி.

வீட்டில் நடந்த அனைத்துப் பிரச்சனைகளையும் ஒன்றுவிடாமல் கூறிவிட்டு, “இவங்க உன்னிடம் மன்னிப்பு கேட்கணும்னு சொன்னாங்க, அதனால்தான் அவங்களைக் கூட்டிட்டு வந்தோம்” என்றான் ஆனந்தன்.

“இவங்க மன்னிப்பு கேட்டவுடன், நான் மன்னித்துவிட வேண்டுமா ஆனந்த்? நான் நல்லவன் என்பது இப்போ புரிந்து, யாருக்கு எந்த பிரயோஜனமும் இல்லடா” என்றவனின் பார்வை இரு பெண்களின் மீது படிந்து மீண்டது.

“அன்னைக்கு நான் அனுபவித்த வலிக்கு இவங்களால் பதில் சொல்ல முடியுமா? உலகத்திலேயே பெண்களோட கண்ணீர் மட்டும்தான் விலை மதிப்பு இல்லாதா? ஆண்களின் மனதை மட்டும் இரும்பில் படைத்தாரா கடவுள், இல்ல அழுகவே கூடாது என்ற வரம் வாங்கி வந்து பிறந்தோமா?” அவன் அடுக்கிய கேள்விகளுக்கு, அங்கிருக்கும் யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் இரு பெண்களையும் சாட்டை போல தாக்கிட, “கௌதம் உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் நான் பேசினேன்” என்று இடையில் புகுந்தாள் நிவேதா.

அதுவரை கோபமாகப் பேசிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்தவன், “என் முகத்திலேயே முழிக்கக்கூடாதுன்னு சொல்லிட்டு போனீயே? இப்போ எதுக்காக வந்தே?” என அவளிடம் எரிந்து விழுந்தான்.

சிறுவயதில் இருந்து அனைத்திற்கும் அவள் பணம் கொடுத்தது நினைவிற்கு வர, “எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுவதற்கு பெயர்தான் நட்பு. அங்கே வரவு – செலவு கணக்குக்கு இடமில்லே. சின்ன வயதில் இருந்தே என்னிடம் வாங்கும் பொருளுக்கு பணம் கொடுத்தே!” என்றவன் கண்களில் வலி அதிகரிக்க, மதுமதி அவன் விரல்களை மெளனமாக வருடிக் கொடுத்தாள்.

“உனக்கு நான் உயிர் நண்பன். உனக்கு செய்வதில் என்னைக்குமே நான் கணக்கு பார்த்தே இல்ல. என் அம்மா இழப்பிற்கு பிறகு, உன்னை நல்லா வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்தான் அதிகமாக இருந்தது. ஆனால் கடைசி வரை நீ என்னை நண்பனாகவே பார்க்கல, நீ ஏவிய வேலைகளை செய்யும் கூலியாளாக பார்த்தே என்ற உண்மை மருத்துவமனையில் பணத்தை எண்ணிக் கொடுத்தப்போ தான் புரிஞ்சிது” அவனின் மனதில் இருந்ததை அவளிடம் நேரடியாக கொட்ட, அதைகேட்டு அவளின் விழிகளில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

வசந்த் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்க, “எனக்கு நல்லது நினைத்திருந்தால், கயலிடம் நீ செய்வது தப்புன்னு சொல்லி புரிய வச்சிருப்பே. நாங்க என்னைக்கும் நண்பர்கள்தான், எங்களுக்குள் எந்த ஒளிவுமறைவும் இல்லன்னு உன் புருசனுக்கு புரிய வைத்திருப்பே...” என்று சொல்ல, அந்த வார்த்தைகள் அவளைக் கொல்லாமல் கொன்றது.

சட்டென்று நிமிர்ந்து நிவேதாவின் விழிகளை நேருக்கு சந்தித்து, “உன்னை என் தோழி சொல்லவே அருவருப்பாக இருக்கு. நீ சீரான உடல்நிலையில் வந்திருந்தால், கைநீட்டி நாலு அரை கொடுத்திருப்பேன். அந்தளவுக்கு உன்மேல் எனக்கு வெறுப்பு இருக்கு. இன்னைக்கு சொல்றேன் உன்னை மாதிரி துரோகி முகத்தில் என்னால் முழிக்க முடியாது” வெடுக்கென்று சொல்லிவிட, வசந்த் மார்பில் புதைந்து கதறி அழுதாள்.

அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று புரியாமல் வசந்த் விழிக்க, “கௌதம்” என்று கயல்விழி பேசத்தொடங்க, இப்போது மொத்த கோபமும் அவளின் பக்கம் திரும்பியது.

“மூணு வருஷம் கழித்து புதைத்த பிணத்தைத் தோண்டி மன்னிப்புக் கேட்க வந்தியா? நீ தேடிவந்த கௌதம் இப்போது உயிரோடு இல்ல” அவன் வெறுப்பை வெளிப்படையாக காட்டிவிட, அதை ஏற்க முடியாமல் கண்ணீரோடு மதுவைப் பார்த்தாள்.

அவள் வீட்டில் நடந்த அனைத்தும் மனதில் படமாக ஓட, “ஆயிரம்தான் உன்னைக் கல்யாணம் பண்ணல என்று சொன்னாலும், என் மனசாட்சிக்கு தெரியும் இல்ல. அன்னைக்கு எவ்வளவு வலியுடன் உன்னைத் தேடி வந்தேன்னு உனக்கு தெரியுமா?” என்றவனின் விழிகள் கலங்குவதற்கு தயாராக, சட்டென்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.

“என் பக்கம் இருக்கும் நியாயத்தைக் கேட்காமல், என்னை உயிரோடு கொன்னுட்ட கயல்விழி. உங்க கூட்டுக் குடும்பத்திற்கு, என்னை மாதிரி பொறுக்கி ஒத்து வர மாட்டான் என்பதை உங்கப்பா நல்லா புரிய வச்சிட்டார்” என்றவன் அவளைக் கையெடுத்து கும்பிட்டான்.

பிறகு, “இனிமேலாவது இரு தரப்பு நியாயத்தை கேட்டு எது சரி, எது தவறு என்று யோசித்து முடிவெடு” என்றவன் கூற, தன் தவறை உணர்ந்து அழுதவளை ஆனந்தன் சமாதானம் செய்தான்.

“நான் கெட்டவன் தான், உங்க இருவரையும் தவறான எண்ணத்துடன் ஒரு பார்வை பார்த்து இருப்பேனா? இரண்டு பேருக்கும் நல்லதுதானே நினைத்தேன், அதுதான் என்னை வார்த்தைகளால் கொன்னுட்டீங்க இல்ல” என்ற கேள்விக்கு இரு பெண்களாலும் பதில்சொல்ல முடியவில்லை.

மதுவின் கரங்களோடு தன் கரத்தினைக் கோர்த்துக்கொண்டு அவர்களின் மீது பார்வையைப் படரவிட்டு, “பாலை வனத்தில் சுடும் மணலில் நடந்தபோது சோலையாக தெரிந்த நீங்க இருவரும் நெருங்கிய பிறகுதான், அது வெறும் கானல் நீரென்று புரிஞ்சிகிட்டேன்” என்றான்.

இரு பெண்களும் கூனிக்குறுகி அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது மனம் வலிக்க, “என்னோட வாழ்க்கையில் நீங்க நிலையாக இருப்பீங்க என்று நினைச்சேன், ஆனால் நாங்க கத்தோடு ஓடிடும் சருகுகள் தான்னு புரிய வச்சிட்டீங்க! என்னோட கடந்தகாலம் சருகாகிடுச்சு. இனி அதனால் எந்த பிரயோஜனமும் இல்ல” என்றவனின் பார்வை மனையாளின் மீது கனிவுடன் படிந்தது.

மதுவின் தோளில் கைபோட்டு அரவணைத்து, “காற்று வேகமாக வீசினால் காய்ந்த சருகுகள் பறந்தோடும், ஆனால் மரம் அங்கேயே அசையாமல் நிற்கும். என் பக்கம் இருக்கும் நியாயத்தைப் புரிஞ்சிகிட்டு என் வாழ்க்கையை வசந்தமாக மாற்றினாள்” என்றவன் அவளின் முகத்தை மறைத்த முடியைக் காதோரம் ஒதுக்கினான்.

சட்டென்று அவர்களின் பக்கம் திரும்பி, “உங்க இருவருக்கும் பயந்து என் சொத்துக்களை வித்துட்டு வரல. என் மதுவை நல்லா பார்த்துக்கணும்னு ஆசைப்பட்டேன். கடைசிவரை உங்க முகத்திலேயே முழிக்கக்கூடாது என்பது இன்னொரு வலுவான காரணம்னு சொல்லலாம்” என்றான்.

அவனது பேச்சிலிருந்தே மதுமதி அவன் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானவள் என்று உணர்ந்து, “எங்களை மன்னிச்சிடுங்க” இரு பெண்களும் அவனிடம் கண்ணீரோடு மன்றாடினார்.

“உங்களுக்கு மன்னிப்பே கிடையாது” என கௌதம் திட்டவட்டமாகக் கூறிவிட, வசந்த் அவனிடம் மனம் திறந்து மன்னிப்பு கேட்டான்.

“உங்கமேல் எனக்கு எந்த கோபமும் இல்ல. அதுக்கு காரணம் அன்னைக்கு அந்த சூழலில் நான் இருந்திருந்தாலும் அப்படித்தான் பேசி இருப்பேன்” என்றான் நிதானத்துடன்.

கடைசியாக ஆனந்தனின் மீது பார்வையைப் பதித்து, “இன்னைக்கு வரை என்பக்கம் இருக்கும் நியாயத்தைப் புரிஞ்சிக்கிற, உன்னை மாதிரி ஒரு நண்பன் கிடைப்பது வரம். உன் மூலமாக எனக்கு அந்த வரம் கிடைச்சிருக்குடா” இருக்கையைவிட்டு எழுந்து சென்று அவனை ஆரத்தழுவிக் கொண்டான்.

“என்னைப் பொறுத்தவரை எந்தவொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கம் இருக்கு. நீ கெட்டவனாக காட்ட முயற்சி செய்தாலும், அது உண்மை இல்லன்னு மதுவை கரம்பிடித்த போதே புரிஞ்சிகிட்டேன். அவங்க மனைவியாக கிடைக்க நீதான் கொடுத்து வச்சிருக்கணும்” என்றவன் கௌதமைவிட்டு விலகி அறைக்குச் சென்றான்.

அதற்குள் நிவேதா – கயல்விழி இருவரும் ஓரளவு மனதைத் தேற்றிக்கொண்டு நிமிர, ஆனந்தன் கையில் ஒரு கிப்ட்டுடன் கௌதமை நெருங்கினான்.

கணவனும், மனைவியும் தங்களுக்குள் பார்வையைப் பரிமாறிக் கொள்ள, “இது என்னது?” என்று ஆர்வத்துடன் விசாரித்தாள் மது.

“உங்க இருவருக்கும் கல்யாணமான விஷயம் எனக்கு எப்பவோ தெரியும். கயல்விழி மீது நீ வைத்திருந்தது கோபம்தானே தவிர காதல் இல்லன்னு நல்லா புரிஞ்சிகிட்டேன். என்னைக்காவது ஒருநாள் உன்னை சந்திக்கும்போது இதை உனக்கு பரிசாக கொடுக்கணும்னு நினைச்சேன்” என்றவன் விளக்கம் கொடுத்துவிட்டு இருவரையும் ஜோடியாக நிற்க வைத்து, அதை அவர்களின் கையில் கொடுத்தான்.

அதை வாங்கி கீழே வைக்க போக, “முதலில் பிரிச்சுப் பாருங்க!” என்றான் ஆனந்த் புன்னகையுடன். அதற்குமேல் மறுக்க முடியாது என்ற காரணத்தால், இருவரும் சேர்ந்து பார்சலைப் பிரித்துப் பார்த்தனர்.

அதில் கௌதம் – மதுமதியிடம் கல்லூரியில் பிரப்போஸ் செய்தபோது எடுத்த புகைப்படம் பெரிது செய்யப்பட்டு இருக்க கண்டு, “இந்த பிக்சர்...” என்றவனின் கண்ணில் காதல் பெருக்கெடுக்க, அவனது கரங்கள் மெல்ல புகைப்படத்தை வருடியது.

கல்லூரியின் கடைசி நாளன்று எடுக்கபட்ட புகைப்படத்தில் கௌதம் – மதுமதி இருவரும் ஜோடியாக நின்றிருக்க, “இதைப் பார்க்கும்போது ஜோடிப்பொருத்தம் நல்லா இருக்குன்னு நினைப்பேன்” ஆனந்தன் குறிப்பை உணர்த்திவிட்டு, நண்பனைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டினான்.

“அந்த போட்டோவை நல்லா கவனித்துப் பாரு, உண்மை என்னவென்று உனக்கே புரியும். உங்க விழிகளில் தெரியும் காதலை உணராமலே இருந்திருக்கீங்க” கயல்விழியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவனைப் பின்தொடர்ந்து வசந்தராஜ் – நிவேதா இருவரும் செல்ல நினைக்க, “வசந்த் தேங்க்ஸ்!” கௌதம் திடீரென்று கூற, “எதுக்கு?” என்ற கேள்வியுடன் திரும்பிப் பார்த்தான்.

“என்மேல் கோபம் இருந்தாலும், நிவேதா மீது உண்மையான அன்பை வெளிப்படுத்துகிறாயே அதுக்காக சொன்னேன்” என்றவன் சிரித்தபடி விளக்கம் கொடுக்க, அந்த வாக்கியமே மனைவியின் மனதிற்கு ஆறுதலைத் தரும் என்று உணர்ந்தான் வசந்த்.

அந்த இரு புகைப்படங்களையும் ஹாலில் மாட்டிவிட்டு அறைக்குச் சென்றனர் கௌதமும், மதுமதியும். மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்திட, இரு ஜோடிகளும் இந்தியா செல்வதற்கு தயாராகி நின்றனர்.

மூன்று ஆண்டுகளாக கயல்விழிக்கு குழந்தை இல்லை என்ற உண்மை தெரியவர, “உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாக நடக்கும்” என்று ஆனந்தனுக்கு தைரியம் கூறி, அவர்களை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தனர்.

மறுநிமிடமே, “நிலா!” அவளை இழுத்து அணைத்து, பளிங்கு முகத்தில் இடைவிடாமல் இதழ்பதித்தான். அந்த முத்தங்கள் அவனின் சந்தோசத்தை வெளிபடுத்திட, அவனிடம் முகத்தைக் கொடுத்து விழி மூடி மயங்கினாள் மதுமதி.

அவளுக்கு முத்தமிடுவதை நிறுத்திவிட்டு, “நான் கொடுக்கிறேன் என்பதால் வாங்கிட்டே இருக்கிற, எனக்கு திருப்பிக் கொடுக்கணும் என்ற எண்ணமே இல்லையா?” கிண்டலாகக் கேட்டவனை இமைக்காமல் நோக்கினாள்.

“மூன்று வருடமாக மனதில் தேக்கி வைத்திருந்த பாரம் இருங்கிடுச்சு” முன்னிரவு சுவரில் மாட்டபட்ட புகைப்படத்தின் மீது பார்வையைப் படரவிட்டான்.

தன் கணவனின் பார்வை சென்ற திக்கை நோக்கிய மதுமதி, “ஆனந்த் சொன்னதுபோலவே இருவரின் விழிகளிலும் காதல் இருந்திருக்கிறது. அப்போதே, உங்க கைவளைவில் பாதுகாப்பை உணர்ந்து இருக்கேன்” என்று மயக்கத்துடன் மன்னவனின் தோளில் சாய்ந்தால்.

“அப்போவே உன்னை காதலிச்சிருக்கேன், அது எனக்கே புரியல” கௌதம் குறும்புடன் கூற, அவளும் அதை மெளனமாக ஒப்புக் கொண்ட பெண்ணின் இடையோடு கோர்த்திருந்த கரத்தின் இறுக்கம் கூடியது.

“அவங்களை மன்னிச்சிருக்கலாமே கௌதம்!” மது அவனிடம் கேட்க,

“நேற்று என்னைத் தவறாக நினைத்து விலகியவர்கள், இன்னைக்கு உண்மைப் புரிந்து மன்னிப்பு கேட்கிறாங்க. நாளைக்கு நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அப்போது மீண்டும் தவறு செய்வாங்க!” என்று இடைவெளிவிட அவனைக் கேள்வியாக நோக்கினாள்.

“மன்னிப்பு என்ற வார்த்தைதான் அனைத்திற்கும் ஆரம்பம். அவங்க இருவரையும் பார்க்க பாவமாக இருந்தாலும், சாரி என்ற ஒரு வார்த்தையால் நான் அனுபவித்த வலி இல்லன்னு ஆகிடாது” அருகில் இருந்த நிலைக்கண்ணாடியில் தெரிந்த மனைவியின் முகம் பார்த்தபடி கூறினான்.

சட்டென்று அவனிடம் இருந்து விலகிய மது, “மன்னிக்கல என்றாலும் நடந்ததை மறக்க முயற்சி பண்ணுங்க” என்றவளை சட்டென்று நிமிர்ந்து பார்க்க, அவள் வேண்டுமென்றே உதட்டை சுளித்துப் பழிப்பு காட்டினாள்.

அவனின் விழிகளில் தன் பார்வையைக் கலக்கவிட்டு, “நீ தீண்டிய முதல் பெண் நான்தானே?!” என்றவளை திகைப்புடன் ஏறிட்டான்.

இதுநாள்வரை இந்த உண்மையை மனையாளிடம் அவன் சொன்னதே கிடையாது என்பதால், ‘இதை எப்படி கண்டுபிடித்தால்?’ என்ற எண்ணத்துடன் நின்றிருந்த கௌதம் உதடுகளில் புன்னகை அரும்பியது.

அவன் கண்ணில் வந்து போன மின்னலைக் கண்டு, “படத்தில் மட்டும்தானே ஆன்ட்டி ஹீரோ... நிஜத்தில் இந்த கௌதமிற்கு இருப்பது ஹீரோதானே?” அவன் இதழ்களில் வளைத்து ஆசையும், ஆர்வமும் போட்டிபோட கேட்டாள்.

இதுக்குமேல் இவளிடம் மறைக்க முடியாது என நினைத்து, “இந்த பெண்களைத் தொட்டு நடிப்பது சலனத்தை ஏற்படுத்தியது. அதைக் கட்டுக்குள் கொண்டுவர, இந்த மாதிரி பெண்களோடு நெருங்கி பழகியிருக்கேன். அவர்களிடம் எல்லை மீறியதே கிடையாது” அவன் உண்மையைக் கூற, மதுவின் விழிவீச்சில் அவன் மனம் கள்ளுண்ட வண்டாக மயங்கியது.

“அப்படியே நான் நெருங்கிட நினைத்தாலும், என்மனம் அதற்கு அனுமதிக்காது. இந்த உண்மை உனக்கு எப்படி தெரியும்” என்றவன் மனையாளை கேள்வியாக நோக்கிட, தன் கணவனின் காலரைப் பிடித்து அருகே இழுத்தாள்.

“ஒரு பெண்ணைக் கழுத்துக் கீழே பார்ப்பவனை காமுகன் என்று சொல்றோம், அப்படி பார்த்தால் உன் கண்ணில் கண்ணியம் மட்டும் இருக்கும். நீ முதலில் காதலைச் சொன்ன என்னிடமே, உன் மனமும் சிறைபட்டுப் போயிடுச்சு. என்னைத் தவிர எந்த பெண்ணும் உன்னை நெருங்கவிடாமல், என் மீதான காதல் உன்னை வழிநடத்தி இருக்கு இல்ல” என்றவளின் விழிகளில் மையலைத் தேக்கி கேட்க, “ம்ம்ம்” என்றான்.

தன்னவளின் இடையோடு கரம்கொடுத்து இழுத்து அணைத்து, “என்னை நீ மட்டும்தான் புரிஞ்சி வச்சிருக்கிற மது” என்று அவளின் மூக்குடன் உரசி, கன்னத்தில் இதழ் பதித்தான்.

அவனது பார்வையில் தேடலைக் கண்டு, “உங்க பையன் எழுந்துட்டான்” முகம் சிவக்க கூறி விலக நினைக்க, அவனது பிடி உடும்பு பிடியாக இருந்தது

“அவ்வளவு சீக்கிரம் என்னிடமிருந்து தப்பிக்க முடியாது செல்லம்” அவளின் செவ்விதழில் தன் இதழைப் பதிக்க, அவளின் கரங்கள் அவனின் தோளில் மாலையாகக் கோர்த்தது.

அவன் முத்தமிட்டு விலகியதும், “அன்னைக்கு ஸ்டேஜில் பாடிய பாடல்கூட எனக்காகத்தான் என்று இப்போது தோன்றுது” என்றவளின் கன்னத்தில் கோலமிட்டு, “காதலை உணராமல் காதலிக்கு பாட்டு டெடிகேட் பண்ணிருக்கேன்” என்றவன் சிரிப்புடன் இரு கரங்களில் மனைவியை ஏந்திக்கொண்டு அறைக்குச் சென்றான்.

இவ்வுலகில் தவறு செய்யாதவர்கள் யாரும் கிடையாது, தவறு செய்கின்றவன் என்ற போர்வையில் மறைந்திருக்குள் மறையும் நல்லவர்களும் உண்டு. கௌதமின் கடந்த காலம் இரு பெண்களால் சருகானபோதும், நிகழ்காலம் வசந்தமாக மாற காரணமாக இருந்தாள் நிலாப்பெண்.

காதல் என்ற ஒரு வார்த்தை வாழ்க்கையை மாற்றிப் போடும் அளவிற்கு வலிமையானது. அவன் மனதிற்குள் இருந்த காதலை உணர்ந்த பெண்ணவள், அவனது வாழ்க்கைப் பாதையை மாற்றிவிட்டாள். இனி என்றும் அவர்கள் வாழ்க்கையில் வசந்தம் மட்டுமே!
 




Last edited by a moderator:

Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
டைட்டில் விளக்கம் நைஸ் 😍👌

கெளதம் நல்லா பேசனாரு.... 😌
அவர் கோபம் அவரோட வலி.... 😔

சரி அவங்க பண்ண தப்ப மன்னிக்கல னாலும் மறந்துடுவோம்.... 😌

கெளதம் நல்லவர் தானா....

ஆனந்த் ரொம்ப நல்ல கேரக்டர்.... 😊

நிவே - வசந்த், ஆனந்த் - கயல் ஹாப்பி ஆஹ் இருக்கட்டும்.... ❤

அந்த 1st டைம் ப்ரொபோஸ் சீன் இங்க mention பண்ணது குட் feel.... 😍

கெளதம் அண்ட் மது அவங்க பேபி கூட எப்பவும் ஹாப்பி ஆஹ் இருக்கட்டும்.... 🥰😍🤗

நைஸ் ஸ்டோரி டியர்.... ❤

@Anamika 12 போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.... 🤝🥰
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
டைட்டில் விளக்கம் நைஸ் 😍👌

கெளதம் நல்லா பேசனாரு.... 😌
அவர் கோபம் அவரோட வலி.... 😔

சரி அவங்க பண்ண தப்ப மன்னிக்கல னாலும் மறந்துடுவோம்.... 😌

ஆனந்த் ரொம்ப நல்ல கேரக்டர்.... 😊

நிவே - வசந்த், ஆனந்த் - கயல் ஹாப்பி ஆஹ் இருக்கட்டும்.... ❤

அந்த 1st டைம் ப்ரொபோஸ் சீன் இங்க mention பண்ணது குட் feel.... 😍

கெளதம் அண்ட் மது அவங்க பேபி கூட எப்பவும் ஹாப்பி ஆஹ் இருக்கட்டும்.... 🥰😍🤗

நைஸ் ஸ்டோரி டியர்.... ❤

@Anamika 12 போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.... 🤝🥰
நன்றி பிரியா... சாரி கதையை முடிக்க முடியாமல் போயிடுமோ என்ற கவலையில் யாருக்கும் reply பண்ணல....
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
நன்றி பிரியா... சாரி கதையை முடிக்க முடியாமல் போயிடுமோ என்ற கவலையில் யாருக்கும் reply பண்ணல....
இட்ஸ் ஓகே டியர்.... 🥰😉❤
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Super ma @Anamika 12

College scene la ye ivan madhuva kannula minnaloda thana parthan first scene la ye?

Ini yeppovum ivanga kaalam vasanthamagattum
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top