• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கடல் புறா - இரண்டாம் பாகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஆத்தியாயம் - 1

காவலனை நோக்கி வந்த காலன்

உதிக்கலாமா வேண்டாமா என்று உறுதியற்றுச் சலனப்படுவனபோல் ஆதவன் மிகுந்த சந்தேகத்துடன் நீர் மட்டத்துக்குமேல் மெள்ளத் தலையை நீட்டத் துவங்கிய அந்த அதிகாலை நேரத்தில்கூட அக்ஷய முனைக் இது ஆகின்ஹெட் என்று தற்காலத்தில் அழைக்கப்படுகிறது. வழா கடலோரம் கோபத்தின் வசப்பட்ட மனித புத்தியைப் போல் மிதமிஞ்சிய உஷ்ணத்தைக் கக்கிக் கொண்டிருந்தது. பூமத்திய ரேகை தன்னை இரண்டாகப் பிளந்து சரிபாதி உடலில் பாய்ந்து சென்றதால் சாதாரண காலத்திலேயே நல்ல உஷ்ணத்தைப் பெற்றிருந்த சுமத்ரா என்ற சொர்ண பூமித் தீவு, தனது வடக்குக் கோடியில் கடலில் தலை நீட்டிக் கொண்டு முப்புறமும் அலைகளைப் பார்த்துக் கொண் டிருந்த அக்ஷயமுனைக்கு, கோடைக்காலத்தின் அந்த காலையில் அளவுக்கதிகமாகவே உஷ்ணத்தை அளித் திருந்ததால், கரையிலிருந்த கடல் நாரைகள் தரையிலிருந்து பறந்து சென்று அலைப்பரப்பில் உட்கார்ந்து கொண்டன. இடையே பூமத்திய ரேகை ஓடுவதாலேயே அதிக உஷ்ணத்தைப் பெற்றிருந்த சொர்ணபூமியின் மேல் திசையில், பாரதத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையைப் போலவே வடக்குத் தெற்காக ஓடிக்கொண்டிருந்த பகிட் பாரிஸான் மலைத்தொடரில் சுமார் தொண்ணூறு எரிமலைகளிருந்தபடியால் தீவின் உஷ்ணம் அபரிமிதமாக இருந்ததன்றி, அந்த மலைத் தொடரின் துவக்கமும் அக்ஷ்ய முனையை ஓட்டியிருந்ததால், அன்றைய அதிகாலை யிலேயே காலை வைத்து நடக்க முடியாத அளவுக்குக் கடற்கரையோர மணல் பிராந்தியத்தில் சாதாரணமாகவே உஷ்ணம் மிதமிஞ்சியிருக்குமென்றால் அக்ஷய முனைக் கடலோர மணலின் தன்மை வேறு அந்தச் சூட்டைப் பன்முறை பெருக்கிக் கொண்டிருந்தது. மனிதனால் வரையறுக்க முடியாத ஏதோ ஒரு காலத்தில் பகிட் பாரிஸாரின் எரிமலைகள் பொங்கி வழிந்தோடிய காரணத்தால் பல இடங்களில் கந்தகமும் சொர்ணக் கனிகளும் சொர்ணத் தீவின் மண்ணில் பரவிக் கிடந்ததன்றி அந்த ரசாயன உலோகப் பொருள்கள் அணுமாத்திரமாக மணலில் கலந்து தணல் போன்ற உருவத்தை மட்டுமின்றி குணத்தையும் கடலோர மணலுக்கு அளித்திருந்ததால், மணல் நல்ல வெள்ளை நிறமாக இல்லாமல் சற்று செந்நிறமாகவே காட்சி யளித்த தல்லாமல், காலைத் தரையில் வைக்க முடியாத நிலைமை யையும் ஏற்படுத்தியிருந்தது. இத்தனை உஷ்ணத்தையும் கவ்விக் கரைத்துவிட இஷ்டப்பட்டன போல் அக்ஷய முனையை முப்புறத்திலும் பேரிரைச்சலுடன் தாக்கிய கடலலைகளை ஏளனம் செய்வதுபோல். தூரத்தே புகைந்து கொண்டு நின்ற எரிமலை அவ்வப்போது தன் தீ நாக்கை வெளியே நீட்டி நீட்டி உள்ளுக்கு இழுத்துக் கொண் டிருந்தது. வாழ்வில் மலைபோல் வரும் துன்பத்தின் ஊடே சுகமும் உண்டென்று குறிப்பிடுவது போல் அத்தனை உஷ்ணத்தையும் மீறி மலைப்பகுதியிலிருந்த காட்டி லிருந்து சில்லென்ற காற்றும் நீண்ட நேரத்திற்கு ஒருமுறை இரு விநாடிகள் வீசிவிட்டுச் சென்று கொண்டிருந்தது.

அந்த இன்பக் காற்று வீசிய நேரங்களில் மலைக் காட்டுப் பகுதியிலிருந்து கூட்டம் கூட்டமாகப் பறந்து வந்த பற்பல வர்ணப் பட்சிகள் கரையோரரத்திலும், நீர்மீதும் விதவிதமாகச் சஞ்சரிக்கத் தொடங்கியதால் அத்தனை உஷ்ணத்திலும் தாபத்திலும் அந்தக் கடலோரம் கண் கொள்ளாக் காட்சியாகவே இருந்தது. அந்தக் காட்சியை உச்ச நிலைக்குக் கொண்டு போகவோ என்னவோ பாராபடூ நதி பல களைகளாகப் பிரிந்து அந்த அக்ஷயமுனைக் கடலுக்குள் வெகு கம்பீரத்துடன் பாய்ந்து கொண்டிருந்தது.

பாராபடூ நதி அப்படிப் பல பிரிவுகளாகப் பாய்ந்ததால் அக்ஷ்யமுனைக்குப் பெரும் லாபமே இருந்தது. சொர்ண பூமியின் வடக்குப் பகுதியிலுள்ள ஐந்து துறைமுகங்களில் வடமேற்குப் பகுதியிலிருந்த அக்ஷய முனைத் துறைமுகத்தில் கடலாழம் அதிகமாயிருந்ததன்றி, பாராபடூவின் பிரிவுக் கால்களும் அழமாயிருந்தபடியால் கிட்டத்தட்ட அக்ஷயமுனை நகரத்துக்கு வெகு அருகில் மரக்கலங்கள் வர முடிந்தது. அப்படி வந்த மரக்கலங்களி லிருந்து வர்த்தகப் பொருள்களை இறக்க நதிப் பிரிவுகளுக்கு இடையிடையே இருந்த மணற் குன்றுகள் உதவின. அது மட்டுமல்ல, அக்ஷ்யமுனைத் துறைமுகப் பகுதியைச் சுற்றிலும் சற்று எட்ட சமுத்திரத்தில் சக்கர வட்டமாக அமைத்திருந்த சிறுசிறு தீவுகளும் அந்தத் துறைமுகத்துக்குப் பாதுகாப்பு அரண்களாக அமைந்திருந்தன. அக்ஷய மூனையின் நகரமும் கடலுக்கு எதிரே இருந்த மலைச் சரிவில் அமைந்திருந்ததால் அந்த மலைக்கோட்டையி லிருந்து தூரத்தில் வரும் மரக்கலங்களை அறிய முடிந்த தாகையால் வர்த்தகத்துக்கும் பாதுகாப்புக்கும் சிறந்த ஓர் இடமாக அக்ஷ்யமுனை பிரசித்தி பெற்றிருந்தது. அக்ஷ்ய முனைக் கோட்டைப் பகுதியும் அதிலிருந்த சிறந்த வீடுகளையும் கவனிப்போர்களுக்கு அக்ஷ்யமுனை நகரத்தில் செல்வத்துக்குக் குறைவில்லையென்பது தெரிய வரும். அப்படி வீடுகளைப் பார்த்து நிலையைப் புரிந்து கொள்ளாத மந்த புத்தியுள்ளவர்கள்கூடக் கோட்டைச் சுவருக்குப் பின்புறத்தில் மலை உச்சியை ஒட்டித் தெரிந்த பெரும் மாளிகையின் சொர்ண கலசத்தைப் பார்த்தால் உண்மையைப் புரிந்து கொள்வார்கள். நதியின் பல பிரிவு களுடன் மணற்பாதையொன்றும் கூச்சாகக் கடலுக்குள் நீண்ட தூரம் இயற்கையாகவே ஓடியதால் அக்ஷ்யமுனை என்ற பெயர் பெற்ற அந்தத் துறைமுகம் அக்ஷ்ய நகரத்துக்கு வெளியே கால் காத தூரத்திலிருந்ததென்றாலும் மலை உச்சிக்கருகிலிருந்த மாளிகைத் தலைவன் கண்களுக்குத் தென்படாமல் அந்தத் துறைமுகத்தில் எதுவும் நடக்க முடியாத முறையிலேயே அக்ஷ்யமுனை அமைந்திருந்தது.

கோட்டைக்கும் கடலுக்கும் இடையே இருந்த மணற் பிரதேசம் பார்வைக்கு அத்தனை செல்வச் செழிப்புள்ள மலம வுதலலவையமம் ௭ம் தாகப் புலப்படாமல் மூங்கில் வீடுகளின் கூட்டங்களால் நிரப்பப்பட்டி ருந்தாலும், அந்த மூங்கில் வீடுகளில் மறைந்து கிடந்த செல்வம் கோட்டைக்குள்ளிருந்த பெரும் வீடு களிலும் இருப்பது சந்தேகம் என்பதை அக்ஷய நகரத்தார் அறிந்திருந்ததன்றி, அந்த மூங்கில் குடில்களைச் சிறிதளவு கூட நெருங்காமல் எச்சரிக்கையாகவே இருந்தார்கள். அந்த மூங்கில் வீடுகள் கூட்டம் கூட்டமாக அந்தத் துறை முகத்தின் பல பகுதிகளிலும் பிரிந்து காணப்பட்டதற்கும் காரண மிருந்தது. சொர்ணபூமியிலும், சாவகத்திலும், பொற்கிரிஸே யிலும், பாலியிலும் காணப்பட்ட பலதரப் பட்ட-சாதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றிப் பாரத நாட்டிலிருந்தும் அப்பிரிக்க, அரபு நாடுகளிலிருந்தும் பல வகுப்பினரும் அங்குக் கூட்டம் கூட்டமாக வசித்து வந்தார்கள். அப்படி. வசித்து வந்த அவர்கள் அனை வருமே கடலோடும் பொதுத் தொழிலைச் செய்து வந்தாலும் வசிப்பதில் மட்டும் பிரிவினையைக் காட்டித் தனித் தனிக் கூட்டமாக மூங்கில் வீடுகளை அமைத்திருந்தார்கள். அத்தகைய அந்தப் பிரிவினர் எல்லோருமே மாலுமிகளாத லாலும், எந்த நாட்டுப் பற்றுமில்லாதவர்களாதலாலும், அக்ஷயமுனைப் பகுதியிலும், அக்கம் பக்கத்திலும் வரும் மரக்கலங்களை மடக்குவதையே தொழிலாகக் கொண் டிருந்ததாலும், அக்ஷய நகரத்தில் ‘தங்குவதற்குச் செலுத்திய பங்கு போக மீதிப் பங்கு அந்தக் குடிசைவாசிகளிடம் மிதமிஞ்சி இருக்கவே குடிசையில் வாழ்ந்தாலும் பணத் துக்கு எக்குறையும் இல்லாதவர்களாகவே அவர்கள் காலங் கழித்து வந்தார்கள். அப்படி மிஞ்சிய பணத்தையும் நகைகளையும் கவர நகரத்துக்குள் பல வசதிகளை அந்த மாலுமிகளுக்கு அக்ஷ்ய நகரத்தின் காவலன் செய்து கொடுத்திருந்தானாகையால், அந்தக் குடிசைகளின் ண ஆெடட் மலம். எந்தா செல்வம் ஒரேயடியாகத் தன் கைக்கு வரும் என்ற நிச்சயத்துடனேயே இருந்தான். அதன் காரணமாகவே அவர்களைத் தன் வீரர்களைக் கொண்டு எந்தவித இம்சையும் செய்யாமல் நிம்மதியும் சந்துஷ்டியும் மிக்க நிலைமையிலேயே வைத்திருந்தான்.

அவன் அவர்களை இம்சை செய்யாமலும் சுமுக மாகவும் வைத்திருந்ததற்கு முக்கியமான காரணம் வேறு ஒன்றும் உண்டு. அந்தக் குடிசையிலிருந்த மாலுமிகள் கடற்போரில் மட்டுமின்றி நிலப் போரிலும் நிகரற்றவர் களாகையால் அவர்கள் ஒன்று சேர்ந்து நகரத்தின் மீது பாய்ந்தால் நகரத்தை அரைவிநாடி. தன்னால் காப்பாற்ற முடியாதென்பதை அவன் சந்தேகமற உணர்ந்து கொண் டிருந்தான். அதன் விளைவாகக் கூடியவரையில் அந்தக் குடிசைவாசிகளிடம் மிக அன்பாக இருந்த அக்ஷய நகரத்தின் காவலன் அடிக்கடி அவர்களிடை ஏதாவதொரு சண்டையைக் கிளப்பிவிட்டு இரண்டொருவரைப் பலி கொடுத்து ஆட்சியை அங்கு ஸ்திரப்படுத்திக் கொண் டிருந்தான். தன்னையும் மீறி அவர்களிடை ஒற்றுமை ஏற்படும் சமயங்களில் கடலில் ஏதோ பெரும் பொக்கிஷக் கப்பல்கள் வருவதாகத் தனக்குச் செய்தி வந்திருப்பதாக அசை காட்டி அந்த வேட்டைக்கு அவர்களை விரட்டி விடுவான். அத்தகைய செய்தியை அவன் மிகுந்த நாசூக்காகப் பரப்பிய அடுத்த சில நாழிகைகளில் பல மரக்கலங்கள் பாய் விரித்துக் கடலில் ஒடும். அப்படி ஓடும் கப்பல்களிடம் வேறு கப்பல்கள் அகப்பட்டால் அக் யத்தின் காவலனுக்கும் லாபம். அவர்களுக்கும் லாபம். இல்லையேல் குடிசைவாழ் மாலுமிகளுக்குத்தான் நஷ்டம். அக்ஷய நகரத்தின் காவலனுக்கு எந்தவித நஷ்டமுமில்லை. அவர்கள் மரக்கலத்தை மடக்காமல் திரும்பி வந்த மடமைக்காக அவர்களைத் தூஷிப்பான். அதிகக் கவடு சூதில்லாத அந்த மாலுமிக் கூட்டமும் அதை ஒப்புக் கொள்ளும். இப்படிப் பலவிதமாகக் கபட நாடகம் ஆடிவந்த அக்ஷயத்தின் காவலன் ஒன்று மட்டும் உணர்ந்திருந்தான். என்றாவது ஒருநாள் மூர்க்கத்தனமில்லாத புத்திசாலியான மரக்கலத் தலைவன் எவனாவது ஒருவன் அந்த அக்ஷயத்துக்கு வந்து சேர்ந்தால் தன்பாடு பெரும் துண்டாட்டமென்பதை அறிந்திருந்தானாகையால், கூடிய வரை அத்தகைய மரக்கலத் தலைவர்களை அந்தப் பகுதியில் அனுமதிக்காமல், முரட்டுக் கொள்ளைக்காரர் களுக்கு மட்டுமே அந்த அக்ஷயமுனையில் இடம் கொடுத்திருந்தான். அப்படி அவன் எச்சரிக்கையையும் மீறி அக்ஷ்ய மூனைக்குள் நுழைந்துவிட்ட இருபெரும் மரக்கலத் தலைவர்கள் துர்மரணமடைந்தார்கள். என்ன காரணத் தாலோ அவர்கள் மரக்கலமும் தீப்பிடித்து எரிந்து போயிற்று. அப்படி எரிந்தது பெரும் துற்சகுனமென்று அக்ஷயத்தின் காவலன் பெரிதும் வருந்தினான். அதற்குப் பிராயச்சித்தமாக அந்த நகரத் தேவதைக்கு விழா நடத்தி பிரசித்தியான வாஜாங் நடனத்தையும் செய்து கடற்கரை மாலுமிகளை திருப்தி செய்து விட்டான்.

இத்தகைய விழாக்களாலும் குடிமக்களின் குண விசேஷத்தாலும் வங்கக் கடல் பிராந்தியத்தில் மட்டுமின்றி தூரக்கிழக்குத் தீவுகளின் பிராந்தியம் முழுவதிலுமே உ வாஜாங் அல்லது வாயாங் என்பது சொர்ண பூமியிலும் சாவகத்திலும் ஆடப்பட்டு வந்த சிறந்த நடனம். அக்ஷயமுனை பெரும் பிரசித்தி அடைந்திருந்தது. அந்த முனையில் மற்ற சாதிகளோடு தமிழர்களும் இருந்தார் களானாலும், அவர்கள் மிகச் சொல்பமாக இருந்தபடியால் அக்ஷயமுனைத் தலைவனின் இருத்தரமங்களைச் சரியாக அறிந்திருந்தாலும் ஏதும் செய்ய முடியாத துர்பாக்கிய நிலையிலேயே வாழ்ந்து வந்தார்கள். அக்ஷயமுனைத் துறைமுகத்தில் அவர்களுக்கு இருந்த வீடுகள் சுமார் பத்து. மரக்கலம் ஒன்றே ஓன்று. அதுவும் பெரும் மரக்கலமல்ல. மற்ற வகுப்பினரின் மரக்கலங்களுக்கு இடையில் அது நிற்கும்போது ஏதோ சாதாரணப் படகு ஒன்று நிற்பது போலவே இருக்கும். என்ன காரணத்தாலோ தமிழகத்தின் மாலுமிகள் அந்த அகஷ்பமுனையை அடையாமலே சென்றார்கள்.

தமிழகத்தின் மரக்கலங்கள்கூட அந்த வழியில் வராமல் பாலூரிலிருந்து பொற்கிரிஸேயிலிருந்த தலைத் தக்கோலத்துக்குப் போய் அங்கிருந்து தெற்கே ஸ்ரீவிஜயத் துறைமுகத்துக்குச் சென்றுகொண்டிருந்தன. சூளு என்ற கடற் கொள்ளைக்காரர்களிடத்திலுள்ள பயத்தில் தமிழ் மாலுமிகள் இப்படி ஊர் சுற்றிப் போய்க் கொண்டிருந்ததாகச் சரித்திர ஆசிரியர்கள் சிலர் சொல்லுகிறார்கள். ஆனால் சூளூக்கள் மட்டுமல்ல அந்தக் கொள்ளைக்காரர்கள் பல நாட்டவரும் அந்தக் கொள்ளை யில் பங்கெடுத்துக் கொண்டுதானிருந்தார்கள். கொள்ளையடித்தவர் யாராயிருந்தாலும், காரணம் யாதாய் இருந்தாலும், அக்ஷ்யமுனைத் தலைவனுக்கு மட்டும் தமிழகத்தின் கப்பல்கள் அக்ஷயமுனையிலிருந்து விலகிச் சென்றது பெரும் மன நிம்மதியை அளித்திருந்தது. தமிழர்களை அறவே வெறுத்தான் அக்ஷ்யத்தின் காவலன். அவர்கள் நுண்ணறிவைக் கண்டு அவன் ஓரளவு அஞ்சவும் செய்தான். அதிக நுண்ணறிவு படைத்தவர் களுக்கும் தன் சுரண்டல் கொள்கைக்கும் சரிப்பட்டு வராது என்பதை அறிந்திருந்தானாகையால் அக்ஷயத்தின் தலைவனுக்குத் தமிழர் எண்ணிக்கைக் குறைவாகவும் பலவீனமாகவும் இருந்தது பெரும் திருப்தியை அளித்தது. அப்படி அவர்களில் ஓரிருவர் தங்கள் அறிவைக். காட்ட முற்பட்டால் அவர்களை அப்புறப்படுத்த வேண்டிய முயற்சிகளையும் எடுத்தான் அவன். இத்தகைய பயங்கரக் கொலைகாரனுக்கு அஞ்சியே தமிழர்கள் அங்கு காலம் கழித்து வந்தார்கள்.

அக்ஷ்யமுனைத் தலைவனின் ககொடூரத்துக்குச் சாட்சி சொல்லுவதைப்போல் சுட்டெரித்த அந்தக் கோடை கால காலை நேரத்தின் கொடுமையைப் பிளக்க மூயன்றது ஒரு பெருங் காற்று. திடீரென எழுந்த அந்தப் பெரும் காற்று இரண்டொரு நாழிகை விடாமலே அடித்ததால் கடற்கரைக் குடிசையில் உள்ள மக்கள் இடீரென வெளியே வந்து ஆகாயத்தைக் கவனித்தார்கள். அக்ஷ்யமுனையில் திடீரென வரும் கோடை மழைக்கு இத்தகைய பூர்வாங்கக் காற்று வீசுவது உண்டு. ஆனால் அன்று காலை எழுந்த காற்று வழக்கமான பெரும் காற்றாகவுமில்லை. மழை பொழியும் மேகங்களைக் கொண்டு வரவுமில்லை. பலத்த கொள்ளைக்கும் எண்ணற்ற கொலைகளுக்கும் காரண பூதனான அக்ஷய முனைத் தலைவனுக்கும் பெரும் காலன் ஒருவனைக் கொண்டு வந்தது. அந்தக் காலனைத் தாங்கி வந்த பெரும் மரக்கலமொன்று தூரத்தே கடலில் வெகு வேகமாக உந்தப்பட்டுக் கரையை நோக்கி அதிவேகத்துடன் விரைந்தது. அந்தக் கப்பலின் மேல்தளத்தில் பெரும் பாய்மரத் தூணில் சாய்ந்து நின்ற அந்தக் காலனும் எதிரே தெரிந்த அக்ஷ்யமுனைத் தோற்றத்தைக் கண்டு பேருவகை கொண்டதற்கு அறிகுறியாகப் புன்முறுவலொன்றைத் தன் இதழ்களில் தவழவிட்டான். அடுத்த விநாடி அவன் அரச தோரணையில் தன் கையை அசைக்கவே, மரக்கலத் தளத்தின் மூலையிலிருந்து இரு கொம்புகள் பலமாக அக்யமுனைத் துறைமுகத்தை நோக்கி ஊதப்பட்டன. அந்த ஊதலைக் கேட்ட துறைமுக மக்கள் நடுங்கினர். கரையில் கப்பலைப் பார்க்க குழுமியவர் மீண்டும் குடிசையை நோக்கி ஓடினர். மலைச் சரிவிலிருந்த நகரத்தின் கோட்டைக் கதவும் திடீரென மிகுந்த வேகத் துடன் சாத்தப்பட்டது, அக்ஷய நகரக் கோட்டையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டன. அத்தனை மக்களும் கண்டு நடுங்கிய அந்த அசுரக் கப்பல் எதையும் லட்சியம் செய்யாமல் துரிதமாகத் துறைமுகத்தில் நுழைந்துவிட்டது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 2

துணிவின் எல்லை

அக்ஷ்யமுனைக் கோட்டையின் துரிதமான பாது காப்பு ஏற்பாடுகளையும், கோட்டைக்கு முன்பாக மணல் வெளியில் கட்டப்பட்டிருந்த மூங்கில் குடிசைகளை நோக்கி விரைந்த மாலுமிக் கூட்டத்தின் குடும்பங்களையும், தனது மரக்கலப் பாய்மரத் தூணில் சாய்ந்த வண்ணமே கவனித்த அந்த அசுரக் கப்பலின் தலைவன் இதழ்களில் புன்முறுவலொன்று பெரிதாக விரிந்தது. அதைச் சேர்ந்து விரிந்த அவன் கண்களும், ஒருமுறை நாலாப்புறத்திலும் சுழன்று அந்தத் துறைமுகத்தின் தன்மையையும் பாது காப்புப் பலத்தையும் நிதானமாக அளவெடுத்தன. தன் மரக்கலம் செல்லும் நீர் வழியைச் சுற்றிலும் ஐந்தாறு பெரும் மரக்கலங்கள் நிற்பதையும் அந்த மரக்கலங்களில், போர்க் கலங்களும் பொருத்தப்பட்டிருந்ததையும் கவனித்த அவன், வலுவுள்ள சிறு கடற்படையின் அரணுக்குள் தான் நுழை வதைப் புரிந்துகொண்டான்.

அதைத் தவிர அக்ஷயமுனைத் துறைமுகத்தை வளைத்தன போல் சக்கரவட்டமாகத் தூரத்தே தெரிந்த சிறுசிறு தீவுகளிலிருந்தும் புகை வந்துகொண்டிருந்ததால் அந்த இடங்களிலும் சின்னஞ்சிறு காவற்படைகளிருப் பதையும் அவன் புரிந்துகொண்டான். போதாக்குறைக்கு, சற்று எட்டத் தெரிந்த மலைச்சரிவிலிருந்த கோட்டை பலமான மதில்களை உடையதாகவும், வேலெறியும் பெரும் விற்கூடங்களையும் மற்றும் பல போர்ச் சாதனங்களை மல். வெச்வலல். எழத உடையதாகவும் காட்சி அளித்ததையும் கவனித்தான் அவன். தவிர அந்தக் கோட்டை மதிலின் தளமும் விசாலமாக இருக்க வேண்டுமென்பதைப் பாதுகாப்பை முன்னிட்டுத் திடீரென உலாவிய வீரர்கள் வரிசையி லிருந்தும் ஊ௫த்துக் கொண்டான் அந்த அசுரக்கப்பலின் தலைவன். இத்தகைய பெரும் பாதுகாப்புகளையும், இயற்கை யரண்களையும் உள்ள துறைமுகமும் கோட்டை யும் பரம அயோக்கியன் ஒருவன் கையில் இல்லாமல் சொந்த நாட்டு நலனை மதிக்கும் ஒரு தஇயாகியின் கையில் இருந்தால் அந்த நாடு நிரந்தரப் பாதுகாப்பை அடைந்த நாடாக இருக்குமே என்று அவன் முதலில் எண்ணினாலும், அப்படிப்பட்ட நாட்டுப் பற்றுடையவன் கையில் அந்தத் துறைமுகம் மட்டுமிருந்தால் தன் எண்ணங்களும் திட்டங் களும் தவிடு பொடியாகி விடுமே என்பதை நினைத்து அக்ஷயமுனையின் அன்றைய நிலையைப் பார்த்துப் பெரிதும் திருப்தியடைந்தவனாய்ப் பெருமூச்சு ஒன்றும் விட்டான். இத்தனை பாதுகாப்பிருந்தும் பெரும் கொள்ளைக்காரர்கள் துறைமுகத்தின் முகப்பிலிருந்தும் தனது கப்பலின் கொம்புகள் ஊதியதும் அவர்கள் பயந்து பறந்தோடுவதைக் கண்டு அவன் ஆச்சரியம் சிறிதும் கொள்ளவேயில்லை. அப்படி அவர்கள் ஓடுவதற்குத் தன் வீரமும், கப்பலின் திறமையும் காரணமல்லவெனப்த ை அவன் சந்தேகமற உணர்ந்தே யிருந்தானாகையால் கப்பலைத் துறைமுகத்துக்குள் நன்றாகக் கொண்டுவந்து நங்கூரம் பாய்ச்ச முற்படு முன்பாக, தன் கையால் சமிக்ஞை செய்து, கப்பலின் பின்புறக் கோடியிலிருந்த இரு மாலுமி களை அருகே வரவழைத்தான்.

வந்த மாலுமிகள் இருவர் முகத்திலும் ஈயாடவில்லை. அக்ஷயமுனைக்கு வந்ததில் தங்கள் தலைவன் அழம் தெரியாமல் காலிட்டுக் கொண்டிருக்கிறான் என்ற நினைப்பாலும், கப்பல் யாருடையது என்று தெரிந்த மாத்திரத்தில் அக்ஷய முனைக் கொள்ளைக்காரரும் காவலனும் அதைச் சல நிமிஷங்களில் அழித்துவிடுவார் களென்பதும், கப்பலைச் சேர்ந்தவர்கள் உடல்களிலிருந்து உயிர்கள் பயங்கர முறையில் நீக்கப்பட்டுச் சடலங்கள் கழுகுகள் கொத்த மலைப் பாறைகளில் வைக்கப் படுமென் பதையும் அறிந்திருந்த அவர்கள் முகங்களில் பெரும் கிலி பரவியிருந்தது. அந்தக் கிலியைக் கண்ட கப்பலின் தலைவன் சற்றுப் பெரிதாகவே நகைத்து, “அமீர்! கண்டியத் தேவரே! உங்கள் உள்ளங்களிலும் அச்சமிருக்கிறதென்பதை இன்றுதான் புரிந்துகொண்டேன். உங்கள் முகங்களைப் பார்த்தால் தூக்கு மேடைக்குச் செல்லும் பயங் கொள்ளி களைப் பார்க்கத் தேவையில்லை” என்றான்.

அக்ஷயமுனையின் பயங்கரத்தை அறிந்திருந்தும் அப்படி அநாயாசமாக நகைத்த தங்கள் தலைவனை ஏறெடுத்து நோக்கிய அந்த இரு மாலுமிகளில் அமீரே துணிவுடன் சொன்னான், “துணிவு அறிவை அடிப்படை யாகக் கொண்டதாக இருக்க வேண்டும், இளைய பல்லவரே” என்று.

அந்தச் சொற்களையும், அதில் தொனித்த ஹெறுப்பை யும் கவனித்த இளையபல்லவன் நகைப்பைச் சற்று நிறுத்திக் கொண்டானானாலும் புன்முறுவலை மட்டும் உதடுகளி லிருந்து விலக்காமலே மீண்டும் அமீரை உற்று நோக்கி விட்டு, “அறிவை மனிதன் அளவுக்கதிகமாக உபயோகப் படுத்தும்போது துணிவு விலகிவிடுகிறது. எதற்கும் அளவு வேண்டும்” என்று ஏளனம் சொட்டும் குரலில் கூறினான்.

இதைக் கேட்ட அமீரின் பெரு உடல் ஒருமுறை அசைந்தது. ராக்ஷச விழிகள் விரிந்தன. இதழ்களிலும் ஏளன நகையொன்று விரிந்தது. “அறிவு அதிகம் கூடாது ம ஞு என்கிறீர்களா? அறிவாளியான நீங்களே இதைச் சொல்வது வியப்பாயிருக்கிறது எனக்கு” என்றான் அமீர்.

“அறிவுக்கு அளவு வேண்டுமென்று கூறவில்லை அமீர், அதை உபயோகப்படுத்துவதில் அளவு வேண்டு மென்று கூறினேன். அதியுக்தி ஆபத்து என்பது வடமொழிப் பழமொழி. எதிலும் அதிகப்படியைக் கைவிட வேண்டு மென்று வடமொழி சுலோகமும் இருக்கிறது” என்று இளையபல்லவன் தனது வடமொழி வல்லமையைக் காட்டினான்.

மொழி வளத்திலோ அதன் அஆராய்ச்சியிலோ சிரத்தை காட்டாத அமீர், இப்பொழுது எந்த அளவில் அறிவைக் காட்ட வேண்டுமென்று அபிப்பிராயப்படுகிறீர்கள்?” என்று விசாரித்தான்.

“அச்சத்தைத் தவிர்க்கும் அளவுக்கு.” மிகவும் நிதானமாக வந்தது இளையபல்லவன் பதில். அவன் குரலிலும் தோரணையிலும் உதித்த நிதானத்தைக் கண்டு அமீர் மட்டுமல்ல கலிங்கத்தின் சுங்க அதிகாரியாயிருந்த கண்டியத்தேவன் கூட வியப்படைந்தான். கலிங்கத்தின் பாலூர்ப் பெருந்துறையில் கால் வைத்த முதல் நாளன்று சுங்கச் சாவடியில் தான் பீமனைப் பற்றிக் கூறியதுமே வெகுண்டு முன் கோபத்துடன் இரைந்து பலத்த ஆபத்துக் குள்ளான இளையபல்லவன் ஒரு வருட காலத்துக்குள் அடைந்துவிட்ட நிதானத்தை எண்ணி ஆச்சரியப் பட்டான். அமீர் அதற்காக மட்டும் ஆச்சரியப்படவில்லை. தனது குருநாதரான அகூதாவின் குணங்களில் சிறந்த வற்றை ஒரே வருட காலத்தில் கைக்கொண்டுவிட்ட இளையபல்லவனின் அபாரத் திறமையைப் பற்றி எண்ணியதோடு மனிதர்களைத் திறமைசாலிகளாக அடிக்க அகூதாவுக்கு இருந்த வல்லமையையும் எண்ணி வியப்படைந்தான்.

ச ய கிறிஸ்துவுக்குப் பிறகு ஏற்பட்ட சகாப்தத்தின் /063ஆவது வருஷத்தில் கலிங்கத்தின் பாலூர்ப் பெருந் துறையில் வந்திறங்கிய இளைய பல்லவனுக்கும், சரியாக ஒரு வருஷம் கழித்துப் பெரும் மரக்கலத்தின் தலைவனாய் இணையற்ற துணிவுடன் சொர்ணபூமியின் அக்ஷ்யமுனைத் துறைமுகத்தில் நுழைந்து நங்கூரம் பாய்ச்ச முற்பட்ட இளைய பல்லவனுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கத்தான் செய்தது. ஒரு வருடத்துக்கு முன்னால் அவன் முகத்து லிருந்த துடிப்பும் முன்கோாபமும் மறைந்து அவற்றின் இடத்தைப் பெரும் நிதானமொன்று ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. முகத்தில் பெரும் சாந்தமும் எல்லையற்ற நிதானமும் தெரிந்தாலும் உள்ளம் சதா ஊசி முனையில் மிகுந்த எச்சரிக்கையுடனிருப்பதைப் பளிச்சு பளிச்சென்று ஜொலித்த ஈட்டி விழிகள் நிரூபித்தன. அந்த ஒரு வருடத்தில் தனக்கேற்பட்ட நிதானத்தைப் பற்றி இளையபல்லவனே ஆச்சரியப்பட்டான். அத்தனை நிதானத்துக்கும் தனக் கேற்பட்ட கப்பலோட்டும் திறமைக்கும் சீனக் கொள்ளைக் காரனான அகூதா அளித்த பயிற்சியே காரணமென்பதை அவனும் அடிக்கடி தன்னுள் சொல்லிக் கொண்டிருந்தான். அந்த ஒரு வருடத்தில் அவன் அடைந்த அனுபவங்கள் பலதரப்பட்டவை.

ஒரு வருடமாகத் தான் உயிரோடு இருப்பதே பெரும் பிரம்மப்பிரயத்தனம் என்று நினைத்தான் அவன். பாலூர்ப் பெருந்துறையில் காஞ்சனாதேவியையும், அநபாயரையும் காப்பாற்றத் தான் தன்னைப் பலி கொடுக்கத் தீர்மானித்துத் தன்னந்தனியே பீமனையும் அவன் வீரர் கூட்டத்தையும் எதிர்த்து நின்றதை நினைத்துப் பார்த்த இளையபல்லவன், அந்தப் போரில் தான் மடியப் பல தடவை வழியிருந்தும், எப்படியோ தப்பிவிட்டதை எண்ணிப் பார்த்தான். பீமன் எறிந்த வேலினால் ஏற்பட்ட காயத்தின் இரத்தப் போக்கி 2ம் நத வன்வைலல். வழசார் னாலும் கட்டுக் கடங்காத வெறி பிடித்த அரபுப் புரவிகள் தன்னைத் தள்ளி அவற்றின் குளம்புகள் இரண்டு மண்டையில் தாக்கியதாலும் தான் மரணவேதனையுடன் மூர்ச்சையாகித் தரையில் விழுந்ததையும் சிந்தித்தான். “அதிலேயே நான் மரணமடைந்திருக்கலாம். அப்படி மரணமடையாவிட்டாலும், பீமனின் வீரர்கள் வாள் பாய்ச்சி என்னைக் கொன்றிருக்கலாம் கொல்லவில்லை. நான் மரணமடைந்து விட்டதாக நினைத்து அவர்கள் போயிருக்க வேண்டும். இல்லையேல்...’ என்று நினைத்துப் புன்முறுவல் கொண்டான்.

அப்படி நிலத்தில் குளம்படி பட்டு வீழ்ந்தபிறகு நடந்த காரியங்கள் ஏதோ சொப்பனம்போல் அவன் நினைப்பில் இருந்து கொண்டிருந்தன. குளம்படி பட்டு மூர்ச்சையான தான் இரண்டு விநாடிகளுக்கெல்லாம் மூர்ச்சை தெளிந்து எழுந்ததும், தள்ளாடித் தள்ளாடிக் குறுக்கே வந்த ஒரு வெறி பிடித்த புரவிமீது சிரமப்பட்டுத் தாவிப் படுத்துக் கொண்டதும், அந்தப் புரவி தெய்வச் செயலாக நீர்க் கரையை நோக்கி விரைந்ததும், லேசாக நினைப்பிலிருந்தது அந்த வாலிப வீரனுக்கு, அதற்குப்பின் தான் பல நாள்கள் ஸ்மரணையற்றிருந்ததையும் அந்தப் பல நாள்களில் தன்னைத் தாங்கிய அகூதாவின் பெரும் கப்பல் அலை கடலில் பாய் விரித்து ஓடிக்கொண்டிருந்ததையும் அமீர் சொல்லக் கேட்டிருந்தான் இளையபல்லவன். “இளைய பல்லவரே! அகூதாதான் உங்களைக் காத்த தெய்வம். நான் ஓட்டி வந்த வண்டிக்கு ஒருவேளை ஆபத்து நேர்ந்து தப்ப முடியாவிட்டால் நம்மை வேறு வழியில் தப்புவிக்கவும் ஏற்பாடு செய்திருந்தார் என் குருநாதர். இதற்காக, கோதாவரி சங்கமத்திலிருந்து பல அடிகள் தள்ளி ஒரு தனிப்படகையும் தன் மாலுமிகள் சிலரையும் நிறுத்தித் தானும் நின்று போரின் நிலையைக் கவனித்துக் கொண் மசக்கை வலையை கொண்டிருந்தார். நீங்கள் போரில் மூர்ச்சையாகி விழுந்ததும் முரட்டுப் புரவி மீது படுத்ததும் அது கரை நோக்கி வந்ததும் எதையும் கவனிக்கத் தவறாத அவர் விழிகள் கவனித்தன. ஆகவே எங்கள் வண்டி மடக்கப்பட்டு காஞ்சனாதேவியும் அநபாயரும் தப்பியதும் எங்களைத் தன் படகுக்கு வரும்படி சைகை செய்தார். நாங்கள் ஓடினோம். அதற்குள் உங்களைத் தாங்கிய புரவியும் நீர்க்கரை வந்து திடீரெனத் ‘இரும்பியது. நீங்கள் புரவியிலிருந்து உருண்டு விழுந்தீர்கள். அகூதா உங்களை இரு கைகளால் தாங்கிக் கொண்டார். எங்களைத் துரத்திய வீரர்களைச் சன மாலுமிகள் வெட்டிப் போட்டனர். வெகு துரிதமாகப் படகில் உங்களையும் எங்களையும் ஏற்றிக் கொண்டு அகூதா தன் மரக்கலத்துக்கு வந்து சேர்ந்தார். மரக்கலம் நங்கூரமெடுத்துப் பாய் விரித்தது. பிறகு பல நாள்கள் நீங்கள் காய்ச்சல் வசப் பட்டீர்கள். ஏதேதோ பிதற்றினீர்கள் “ என்று அமீர் ஒரு வருஷத்துக்குமுன் அகூதாவின் கப்பலில் விளக்கிச் சொன்னது அன்றும் நினைப்பில் எழுந்தது இளைய பல்லவனுக்கு. என்னென்ன பிதற்றினோம்! ’ என்று எண்ணிப் பார்த்த அவன் முகத்தில் அப்பொழுதும் மந்தகாசம் விரிந்தது. பிதற்றியதை அமீர் ஜாடை மாடையாகத்தான் சொன்னானென்றாலும் மீதியைப் புரிந்துகொள்வதில் எந்தவிதக் கஷ்டமும் ஏற்படவில்லை அந்த வாலிபனுக்கு. “ஏதோ சாளரத்துக்குள் குதித்ததைச் சொன்னீர்கள். ஆடை...ஆடை...என்றீர்கள். பிறகு கோதாவரியில் நீராடு நீராடு என்றீர்கள். ஆடை உலர்கிறது என்றீர்கள்” என இப்படிப் பிதற்றலை விவரித்தான் அமீர். ஆனால் அமீர் முழுவதையும் சொல்லவில்லையென் பதைப் புரிந்துகொண்ட இளையபல்லவன், காரணத்தை உணர்ந்து பெருமகழ்ச்சி கொண்டான். வெளிநாட்டுப் பிரமுகர் வீதியின் மாளிகைச் சாளரத்தில் ஏறிக் குதித்த போது தன்னெதிரே ஆடை புனைய வந்த பூங்கோதையும், கோதாவரியில் நீரில் திளைந்துவிட்டு மறைவில் ஆடை உலர்த்திய மோகனவல்லியும், கோதாவரிக் கரைக் குடிசையில் தன்னருகே நின்று நிரந்தரமாகத் தன்னை அடிமையாக்கிக் கொண்ட அந்தக் கட்டழகிக் கள்ளியும் ஒருத்தியே யென்றாலும் அவள் பல உருவங்களில் தன் மனத்தே எழுந்திருக்க வேண்டுமென்றும், சுரவேகத்தில் அவற்றைத் தான் விளக்கி வர்ணித்திருக்க வேண்டு மென்றும் விஷமியான அமீர் விஷயத்தை மூழுதும் சொல்லாமல் மறைக்கிறானென்பதையும் எண்ணிய அவன் இதயத்தில் மகழ்ச்சி நிரம்பி நின்றது.

இந்தச் சம்பவங்களும், அதையடுத்துத் தான் அகூதாவின் கப்பலில் காய்ச்சலாக இருந்து பிழைத்தபின் அகூதா தனக்குக் கப்பலோட்டவும் கப்பல் போர் புரியவும் அளித்த பயிற்சியும், நிதானத்தின் அவசியத்தை அவன் திரும்பத் திரும்ப வலியுறுத்தித் தன்னைப் பதனிட்ட திறமையையும் அந்தச் சமயத்தில் எண்ணிய இளைய பல்லவன், இத்தனை பயிற்சியுடைய தான் அக்ஷயமுனைத் தளத்தை எண்ணி அச்சப்ப அவசியமில்லையென்று நினைத்தான். சென்ற ஒரு வருட காலத்தில் சொர்ண பூமி வட்டாரங்களிலும் சீனக் கடல் வட்டாரங்களிலும் அகூதா செய்த பெரும் போர்களில் பங்கெடுத்துக் கொண்டு யாருக்கும் கஇடைத்தற்கரிய பயிற்சியைப் பெற்றிருந்த இளையபல்லவன், எத்தனை எத்தனையோ அமானுஷ்ய மான காரியங்களை அகூதா செய்திருப்பதை எண்ணிப் பார்த்தான். அகூதா அத்தகைய பெரும் சாதனைகளைச் சாதிக்க முடியுமானால் தான் மட்டும் ஏன் சாதிக்க முடியாது என்று நினைத்தும் பார்த்தான். செய்ய முடியும் என்ற உறுதி அவனுக்குப் பரிப்ரூணமாக இருந்ததற்கு அவன் முகத்தில் காணப்பட்ட நிதானமே சான்றாக நின்றது. தன் கப்பலின் கொம்புகள் ஊதப்பட்டதும் அக்ஷயமுனைக் கடற்பகுதியில் திரண்டிருந்த மாலுமிக் கூட்டங்களும் அவர்கள் குடும்பங்களும் ஓடியதும், கோட்டைக் கதவு பலமாகச் சாத்தப்பட்டதும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்பட்டதையும் பார்த்த இளையபல்லவன், அகூதாவின் கொம்புகளுக்கு இருந்த பலத்தை எண்ணி மகழ்ச்சி யடைந்தது மட்டுமல்ல, பெருமிதமும் அடைந்தான்.

அந்தப் பெருமிதம் அவன் முகத்தில் தாண்டவமாடி யதையும், அதன் விளைவாக, சற்றே விரிந்த வதனத்தின் கன்னத்திலிருந்த வெட்டுத் தழும்பும் நுதல் உச்சியிலிருந்த குதிரைக் குளம்புகளின் வட்டத் தழும்பும் சற்றே குறுக அவன் முகத்துக்குப் பெரும் கம்பீரத்தை அளித்ததையும் கண்ட அமீர், “இளையபல்லவரே! அந்த மக்கள் ஓடியதால், நமது அபாயம் நீங்கிவிடவில்லை” என்று சுட்டிக் காட்டினான் ஏளனத்துடன்.

“அது தெரியும் எனக்கு” என்றான் இளையபல்லவன்.

“அவர்கள் ஒடுவது நமது மரக்கலத்தைக் கண்டு அல்ல” என்று மீண்டும் குறிப்பிட்டான் அமீர், “பின் எதைக் கண்டு?”

“கொம்புகளைக் கண்டு.

அவற்றின் பெரும் அலறலைக் கேட்டு.

“அதுவும் தெரியும் எனக்கு.

“அகூதாவின் கப்பலிலிருந்துதான் இத்தகைய கொம்புகள் ஊதப்படுவது வழக்கம்,”

ஆம்.

“இது அகூதாவின் கப்பலென்று அஞ்சி மாலுமிகள் ஓடுகிறார்கள். அவர் பெயரைக் கேட்டாலே இந்தக் கடல் பிராந்தியத்தில் சிம்ம சொப்பனம்.

“சென்ற ஒரு வருடக் காலத்தில் அதை நானும் பார்த்திருக்கிறேன்.

“இது அகூதாவின் கப்பல் இல்லை என்று தெரிந்ததும் மாலுமிகள் படகுகளில் வந்து மரக்கலத்தை வளைத்துக் கொள்வார்கள்...அல்லது...

“அல்லது?”

“நாம் இறங்கிச் சென்றால் நம்மை வெட்டிப் போடுவார்கள்.

“அப்படியா?”

ஆம்.

“அதைச் சோதிப்போம்” என்று மிகுந்த நிதானத் துடன் சொன்னான் இளையபல்லவன்.

அந்தச் சோதனை பெரும் அபாயமானது என்பதை உணர்ந்த அமீரும் கண்டியத்தேவனும் திடுக்கிட்டார்கள். அதைவிடத் திடுக்கிடும்படியான செய்தியொன்றையும அடுத்துச் சொன்னான் இளையபல்லவன். “சோதிப்போம் என்பதால் சோதனையில் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்று சற்று அழுத்தியும் சொற்களை உதிர்த்தான்.

“நீங்கள் சொல்வது புரியவில்லை” என்றான் கண்டி யத்தேவன்.

“இந்தச் சோதனை என் உயிர் சோதனை. இதுதான் என் திட்டம். கவனமாய்க் கேளுங்கள்” என்று திட்டத்தை விளக்கிய இளையபல்லவன் அந்தப் பயங்கரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளிலும் துரிதமாக இறங்கினான். அன்றுடன் இளையபல்லவன் ஆயுள் முடிந்துவிட்ட தென்றே நினைத்தார்கள் அமீரும், கண்டியத்தேவனும். அது மட்டுமல்ல, அவன் ஆயுள் முடிந்த சில நாழிகைகளில் தங்கள் ஆயுளும் முடியும் என்பதையும் திண்ணமாக நம்பினார்கள். அதனால் அவர்கள் முகத்தில் ஏற்பட்ட கிலியையோ தன் திட்டத்தின் பலாபலன்களையோ லட்சியம் செய்யாத இளையபல்லவன், “உம்! நங்கூரம் பாய்ச்சுங்கள். நான் கரைக்குச் செல்லப் படகு ஒன்று இறக்குங்கள்” என்று இரைந்து கூவினான். அந்த உத்தர வைக் கேட்ட அமீரும் கண்டியத்தேவனும் பேயறைந்தது போல அசைவற்று நின்றார்கள். துணிவுக்கும் எல்லை யுண்டு என்று நினைத்த அவர்கள் துணிவின் எல்லையை யும் மீறி அபாய அலுவலில் இறங்கிய இளையபல்லவனின் கதியை எண்ணி எண்ணிப் பெரும் கலவரத்துக்கும் உள்ளானார்கள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 3

பிரதிக்ஞை

அகூதா அளித்த பெரும் கொம்புகள் பயங்கர மாகவே ஊதப்பட்டதால் அகூதாவே வந்துவிட்டானென்ற எண்ணத்தாலும் அந்தப் பெரும் கொள்ளைக்காரனிடம் உள்ள அச்சத்தாலுமே அக்ஷயமுனைக் கடலோடிகளும் கோட்டை வீரரும் பதுங்கிப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்கிறார்களென்ற உண்மையை விளக்கியும், வந்திருப்பது யார் என்று தெரிந்த மாத்திரத்தில் ஏற்படக்கூடிய பயங்கர விளைவை விவரித்துச் சொல்லியுங்கூட இளையபல்லவன் எதையும் லட்சியம் செய்யாமல் தன் திட்டத்தை விடாப் பிடியாகப் பிடித்துக்கொண்டதையும் மரக்கலத்தை நங்கூரம் பாய்ச்சவும், கரைக்குச் செல்லப் படகொன்றை இறக்கவும் அவன் உத்தரவிட்டதையும் கண்ட கண்டியத் தேவனும், அமீரும் பிரமிப்பின் எல்லையை மட்டுமின்றி, அவனது அளவற்ற துணிவைக் கண்டு பெரும் கலவரத்தை அடையவே செய்தார்கள். அந்தக் கலவரத்தில் ஆழ்ந்தும் விட்டதால் கண்டியத்தேவன் அடியோடு ஊமையாகி விட்டாலும் அமீர் மட்டும் கடைசி முறையாகச் சற்றுக் கடுமையாகவே எச்சரிக்கத் தொடங்க, “இளையபல்லவர் தமது திட்டத்தின் பலாபலன்களை நன்கு உணர்ந் திருக்கிறாரென்று நினைக்கிறேன்” என்றான்.

அமீர் சம்பாஷணையைத் துவங்குமுன்பே நங்கூரம் நீருக்குள் இறக்கப்பட்டதால் திடீரெனத் தேங்கிவிட்ட கப்பலின் ஆட்டத்தில் சிறிது அசைந்த இளையபல்லவன் அமீரின்மீது தன் ஈட்டி விழிகளை நாட்டிச் சொன்னான், “பூரணமாக உணர்ந்திருக்கிறேன் அமீர்” என்று.

“தட்டம் அபாயமானது” என்று வலியுறுத்தினான் மீண்டும் அமீர்.

ஆனால் அவசியமானது” என்று சுட்டிக் காட்டினான் இளையபல்லவன், முகத்தில் எந்தவித உணர்ச்சியும் பரவ விடாமல்.

“என்ன அவசியம் நேர்ந்திருக்கிறது இப்போது?” என்று கேட்டான் அமீர்.

இளையபல்லவன் இரு விநாடிகளில் ஏதோ யோசித்துவிட்டு, “அமீர்! இந்தக் கப்பல் நமக்கு ஏன் கொடுக்கப்பட்டது.

“அமீரின் பெருவிழிகள் நன்றாக மலர்ந்து தலைவனை ஏறெடுத்து நோக்கின. “நமக்கு என்று சொல்வது பொருந்தாது தலைவரே! தங்களுக்கு என்று சொல்வது தான் தகும். பாலித் தீவின் கிழக்குப் பகுதியை அகூதா தாக்கியபோது தாங்கள் காட்டிய அபாரத் துணிவுக்கும், போர்த்திறனுக்கும் தோல்வியுற இருந்த சந்தர்ப்பத்தை வெற்றிச் சந்தர்ப்பமாக மாற்றிய உங்கள் நுண்ணறிவுக்கும், என் குருநாதர் அளித்த பரிசு இந்தக் கப்பல். இது உங்கள் சொந்த மரக்கலம்...” என்று சொல்லிக்கொண்டு போன வனைக் கைநீட்டித் தடுத்த இளையபல்லவன், “அதைக் கேட்கவில்லை அமீர், இந்தக் கப்பலை அகூதாவிடமிருந்து எதற்கு வாங்கினேன், தெரியுமா?” என்று கேட்டான்.

“தெரியும், சொந்த நாடு செல்ல” என்றான் அமீர்.

“இல்லை, அமீர் இல்லை. சொந்த நாடு செல்ல அல்ல, சொந்த நாடு செல்ல நாம் அக்ஷயமுனைக்கு வரவேண்டிய அவசியமே இல்லை” என்று திட்டமாக அறிவித்தான் இளையபல்லவன்.

இதைக் கேட்ட மாத்திரத்தில் அமீர் சிறிதும் வியப் படையவில்லையென்றாலும் கண்டியத்தேவன் மட்டும் பிரமிப்புக்குள்ளாகி, “என்ன! சொந்த நாடு செல்ல அல்லவா?” என்று வார்த்தைகளை உதிர்த்தான்.

“அல்ல”. உறுதியுடன் வந்தது இளையாபல்லவன் பதில்.

“பின் எதற்கு இந்த மரக்கலம்? ஏன் அக்ஷ்யமுனை வந்தோம்?” ஏமாற்றமும் திகிலும் நிரம்பி நின்றன கண்டியத் தேவன் கேள்வியில்,.

“நாட்டுப் பணிக்காக இந்த மரக்கலத்தைப் பெற்றேன். நாட்டுப் பணியை முன்னிட்டே இங்கு வந்தேன்” என்றான் இளையபல்லவன்.

“நாட்டுப் பணிக்கு இங்கு வருவானேன்?” என்று வினவினான் கண்டியத்தேவன்.

“இதுதான் அதற்குச் சரியான இடம்.

“கொள்ளைக்காரர் இருக்கும் இந்த அக்ஷய முனையா!”

ஆம்

“ஏன்”

“நாமும் கொள்ளையடிக்கலாம்.

“சோழர் படைத்தலைவருக்கு அந்த ஆசை வேறு இருக்கிறதா?”

“அது மட்டுமல்ல...

“அடுத்த சேவை எது?”

“எதிரிகளின் கப்பல்களைக் கொளுத்தவும் கொளுத்தலாம்.”

“ “மிகச் சிறந்த பணிதான்” என்ற கண்டியத்தேவன் குரலில் ஏளனமிருந்தது. ஆனால் அதை ஒப்புக்கொண்டு பதில் கூறிய இளையபல்லவன் குரலிலோ முகத்திலோ ஏளனமுமில்லை, இகழ்ச்சிக் குறியுமில்லை. எதிரில் பற்பல வித சிந்தனைகளுடன் நின்றிருந்த அமீரையும் கண்டியத் தேவனையும் தன் கண்களால் சில விநாடிகள் ஆராய்ந்து விட்டு, “முன்பே உங்களிருவரிடம் நான் என் குறிக் கோளைத் தெரிவித்திருக்க வேண்டும் ‘‘ என்று ஏதோ சொல்ல ஆரம்பித்துச் சற்றே தாமதித்த இளையபல்லவன், “அமீர்! தவிர யோசனைக்குப் பின்பே நான் இந்த முடிவுக்கு வந்தேன். அதுவும் நமது எதிரிகள் நிலத்தில் மட்டுமின்றி நீர்ப்பரப்பிலும் நமக்குச் சென்ற வருடத்தில் விளை வித்துள்ள அநீதிகள் அனந்தம். தென் கலிங்கத்தின் அநீதியிலும் கொடுமையிலும் தமிழர்கள் வாடுஒறார்கள். சோழ நாட்டுக் கப்பல்களுக்கும் பாலூர் பெருந்துறையில் பீமன் இடம் கொடாதது மட்டுமல்ல, கலிங்கத்தின் மரக்கலங்களைக் கொண்டு ஸ்ரீவிஜயத்தின் நீர் வழிகளிலும் தமிழர் கப்பல்களுக்குப் பெரும் இடைஞ்சல் விளைவித்து வருகிறான். அகூதாவின் கப்பலையே கடாரத்துக்கருகில் கலிங்கத்தின் மரக்கலம் ஒன்று மடக்கியதை நாம் பார்க்க வில்லையா?” என்றான்.

மெள்ள மெள்ள இளையபல்லவனின் நிலை அமீருக்குப் புரியலாயிற்று. “ஆம், ஆம். பார்த்தோம்” என்றான் பதிலுக்கு.

“கலிங்கத்தின் மரக்கலங்கள் தமிழகத்தின் இரண்டு மூன்று சிறு கப்பல்களை நாசம் செய்ததாகவும், தமிழ் மாலுமிகளைச் சிறைப் பிடித்ததாகவும் செய்தி கிடைக்க வில்லையா?” என்று மீண்டும் கேட்டான் இளைய பல்லவன்.

“ஆம். அந்தச் செய்தி பாலித் தீவில் இருக்கையில் கிடைத்தது” என்றான் கண்டியத்தேவன்.

இளையபல்லவன் இருமுறை தளத்தில் உலாவி விட்டு அந்த இருவர் எதிரிலும் நின்றான். “அன்று தீர்மானித்தேன். கலிங்கத்தின் கடற்படைப் பலத்தை க. என்னால் முடிந்த வரையில் முறிப்பதென்று. முறிப்பது மட்டுமல்ல, ராஜராஜ சோழர் காலத்திலும், ராஜேந்திர சோழ தேவர் காலத்திலுமிருந்த தமிழர்களின் கடலாதிக் கத்தை மீண்டும் நிலை நிறுத்துவதென்றும் அன்றே பிரதிக்ஞை செய்தேன். அந்தப் பிரதிக்ஞையை நிறை வேற்றவே இந்த அக்ஷ்யமுனை வந்தேன். இங்கு நமது கப்பலை நல்ல பலமுள்ளதாகச் செய்து பழுதும் பார்ப்போம். புதுப் புது விதப் போர்க்கலங்களை இதில் பொருத்து வோம்! பிறகு கடலோடுவோம்! கடலோடி, கலிங்கக் கப்பல்களை மறிப்பதற்கும், பிடிப்பதற்கும், அழிப்பதற்கும் கடலில் முகத்தை நீட்டிக் கொண்டிருக்கும் இந்த அக்ஷய முனையைத் தவிர வேறு சிறந்த இடம் கிடைப்பது கஷ்டம்” என்று விளக்கவும் செய்தான் சோழர்களின் படைத் தலைவன்.

“தங்கள் திட்டத்துக்குத் தேவையான மாலுமிகள் இல்லையே” என்றான் அமீர்.

“இப்பொழுது ஐம்பது பேர் நம் மரக்கலத்தில் இருக்கிறார்கள்?” என்றான் இளையபல்லவன்.

“இன்னும் நூறு பேர் வேண்டும்” என்றான் அமீர்.

“அதோ கடற்கரைக் குடிசைகளிலிருக்கும் கொள் ளைக்காரர்களிலிருந்து பொறுக்கிக் கொள்வோம்” என்று பதில் கூறினான் இளைய பல்லவன்.

இந்தச் சமயத்தில் குறுக்கிட்ட கண்டியத்தேவன், “இளையபல்லவரே! அவர்கள் கொள்ளைக்காரர்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்” என்றான் இடை மறித்து.

“இருந்தாலென்ன?” என்று வினவினான் இளைய பல்லவன்.

“கொள்ளையடிப்பார்கள்.

“கலிங்கத்தின் கப்பல்களைத்தானே?”

“ஆம். கொள்ளையில் பங்கும் கேட்பார்கள்!”

“கலிங்கத்தன் பொருளில்தானே?”

திருப்பித் இருப்பிச் சட்டென்று இளையபல்லவன் சொன்ன பதில்களைக் கேட்ட கண்டியத்தேவன் பெரும் பிரமிப்புக்குள்ளானான். பிரமிப்பின் குறி மட்டுமல்ல, பெரும் இகழ்ச்சிக் குறியும் அவன் முகத்தில் பரவலாயிற்று. “இதை வீரராஜேந்திரர் ஓப்புக்கொள்வாரா?” என்றும் வினவினான் அவன், வெறுப்பு குரலிலும் தொனிக்க. இளையபல்லவன் முகத்தில் கிலேசத்தின் சாயை லேசாக ஒரு விநாடி படர்ந்து பிறகு நீங்கியது. “வீர ராஜேந்திரர் தர்மவான். நல்லெண்ணமுள்ளவர். ஆனால் பாவம் அவர் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை. கலிங்கத்துடன் சமாதானத்தை நாடி, சமாதான ஓலை கொடுத்துத்தான் என்னைப் பாலூர்ப் பெருந்துறைக்கு அனுப்பினார். ஆனால் அங்கு கிடைத்தது போர். கடற் பிராந்தியத்தில் அமைதியான வர்த்தகத்தை விரும்புகிறார். ஆனால் இங்கு நடப்பது தமிழக மரக்கலங்களின் அழிவு. இன்னும் சில நாள்கள் கலிங்கத்தின் அட்டூழியங்களை நடக்க அனுமதித்தால் ராஜராஜரும் ராஜேந்திரரும் ஏற்படுத்திய தமிழர் கடலாதிக்கம் மறைந்துவிடும். கலிங்கமும் இந்து ஸ்ரீவிஜஐயமும்தான் தலையெடுக்கும். சோழ சாம்ராஜ்யத்தைக் கண்டு நடுங்கிய இந்த இரு நாடுகளுக்கும் துணிவு அபரிமிதமாகும். அதை ஒடுக்கவே நான் திட்டமிட்டிருக்கிறேன். இன்று என் கையில் இருப்பது ஒரு கப்பல். இன்னும் சில நாள்களில் பல மரக்கலங்கள் இங்கு நம் ஆதிக்கத்தில் நிற்கும். அதற்கு அஸ்திவாரம் போடவும், அக்ஷய முனைத் தலைவனை ஆசை காட்டி நம் வலையில் இழுக்கவும் இங்கு வந்தேன். நீங்கள் கப்பலைப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரமிக்கும்படியான செய்தியுடன் திரும்புகிறேன்.” என்று கூறிய இளைய பல்லவன் விடுவிடு என்று கப்பலின் மேல் தளப் படிகளி லிருந்து இறங்கத் தன் அறைக்குச் சென்று ஒரு நாழிகை கழித்துத் திரும்பி வந்தான். அப்படி வந்தவன் மிகப் படாடோபமாகப் புது உடை அணிந்திருப்பதை அமீரும் கண்டியத்தேவனும் கவனித்தார்கள். அவன் கச்சையி லிருந்து அழகிய சிறு பையொன்று தொங்கிக் கொண் டிருந்ததையும் கவனித்தார்கள். அந்தப் பையில் இருந்தது என்ன என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது மட்டுமின்றி, அதனால் பெரும் பலன் உண்டென்பதையும் அவர்கள் அறிந்தே இருந்தார்கள்.

கண்டியத்தேவனை விட அமீர் நிலைமையை வெகு திட்டமாக அறிந்திருந்தான். கொள்ளைக்காரர் சுபாவம் விசாரிக்காமல் யாரையும் ஒழித்துவிடுவது என்பதை அறிந்திருந்ததால் இளையபல்லவனின் திட்டத்தைக் கேட்கவோ சர்ச்சை செய்யவோ யாரும் தயாராயிருக்க மாட்டார்களென்பதை அவன் புரிந்து கொண்டிருந்தா னாகையால், “இளையபல்லவரே! கரைக்கு நீர் போக வேண்டாம். கோட்டைத் தலைவனோடு பேசவேண்டு மென்றால் நான் போய் வருகிறேன்” என்றான்.

“என்னைவிட நீ சிறந்தவனா?”

“உங்களைவிடக் கொள்ளைக்காரர் சுபாவத்தை நான் நன்றாக அறிந்தவன். உங்களுக்கு முன்பே நான் அகூதாவின் சீடன்.

“கொள்ளை அதிபரின் பிரதம சீடருக்கு வணக்கம். இருப்பினும் இதை நானே செய்து முடிக்க இஷ்டப் படுகிறேன். ‘“ என்று சொல்லிச் சிரித்துக்கொண்டே நூலேணி வழியாக மரக்கலத்திலிருந்து இளையபல்லவன் படகில் இறங்கவே படகு கரையை நோக்கி விரைந்தது. அமீரும் கண்டியத்தேவனும் மரக்கலத்திலிருந்தே சுரையில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

படகு கரையை அடைந்ததும் இளையபல்லவன் மிகுந்த நிதானத்துடன் கரையில் இறங்கி, சாவதானமாக மணலில் நடந்து கோட்டையை நோக்கித் தன்னந்தனியே சென்றான். தன்னந்தனியே ஒரு மனிதன் வந்ததால் பயத்தை இழந்த குடிசை மக்கள் பெரும் கூச்சலுடன் கூட்டமாக அவனை நோக்கி ஓடி வந்தார்கள். அந்தக் கணமே அவன் ஆயுள் ‘முடிந்துவிடுமென்று நினைத்துக் கப்பலில் நெஞ்சு திடுக்கிட நின்ற அமீரும் கண்டியத் தேவனும் பெரும் ஆச்சரியத்துக்குள்ளானார்கள். இளைய பல்லவன் ஏதோ சொன்னதைக் கேட்டதும் மந்திரத்தால் கட்டுப்பட்டவர்கள் போல் கொள்ளைக்காரர் அவனைத் தொடர்ந்து செல்வதை இருவரும் கவனித்துப் பிரமிப்புக் குள்ளானார்கள். அந்தப் பிரமிப்பு அடுத்த அரை நாழிகையில் விலகியது. அவர்கள் எதிர்பார்த்தது நடந்தே விட்டது. கோட்டை மதில்களிலிருந்து பறந்து வந்த பெரும் விஷ ஆம்பு இளையபல்லவன் இதயத்தில் வெகு வேகமாகப் பாய்ந்தது. அதைக்கண்ட கொள்ளைக்காரர் பெரும் கூக்குர லிட்டார்கள்.

அமீரும் கண்டியத்தேவனும் இளையபல்லவன் கதியை நினைத்து மனம் உடைந்து நின்றார்கள். கலிங்கத்தை அழிக்க அவன் செய்த பிரதிக்ஞை, அவன் ஆயுளை அத்தனை அற்ப ஆயுளாகவா அடிக்க வேண்டும் என்று ஏங்கவும் செய்தார்கள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 4

சொப்பனமா!

அக்ஷயமுனைக் கோட்டைத் தளத்திலிருந்து அதி துரிதமாக வீசப்பட்ட விஷ ஆம்பு இளையபல்லவனின் மார்பில் தைத்ததும் அது அவன் உயிரைக் குடித்து விட்டதாகவே எண்ணித் துடிதுடித்த அமீரும் கண்டியத் தேவனும் அடுத்த விநாடி வியப்பின் எல்லை வசப்பட்டுத் தங்கள் கண்களையே நம்பாமல் ஏதோ இந்திர ஜாலத்தைப் பார்ப்பது போல் கரையைப் பார்த்து வாயைப் பிளந்து கொண்டு கப்பல் தளத்தில் நின்றார்கள். சென்ற ஒரு வருடத்தில் அகூதாவிடம் இளையபல்லவன் மரக்கலப் போர்க் கலையை மட்டும்தான் கற்றானா அல்லது மந்திரமும் கற்றானா என்ற எண்ண அலையில் புரண்ட அவர்கள், அவனது ஆயுள் அற்ப ஆயுளாக அடிக்கும் சக்தி உலகில் இல்லையென்று தங்களுக்குள்ளேயே சொல்லிக் கொண்டார்கள். விஷ ஆம்பிலிருந்தும் தப்பி, கோட் டையை நோக்கி அலட்சியமாக மேலும் நடந்த படைத் தலைவனின் துணிவு பயங்கரத் துணிவாகவேபட்டது, அவ்விருவரின் பதைபதைத்த உள்ளங்களுக்கு.

ஆனால் கோட்டைக்குள் செல்லத் தீர்மானித்த விநாடியிலிருந்து இளையபல்லவன் மட்டும் பின்னேற் படும் அபாயங்களை முன்கூட்டியே யோசித்துவிட்டா னாகையால் சிறிதளவும் அச்சமில்லாத இதயத்தினனாய், நிதானம் லவலேசமும் கலங்காதவனாய், தனது பயணத் துக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து கொண்ட பின்பே கப்பலை விட்டுக் கிளம்பினான். அவன் கப்பலின் மேல்தளத்திலிருந்தபோது மார்பைப் பாதி திறந்து காட்டிய அரை அங்கியை அணிந்திருந்தாலும் தனது அறைக்குப் போய்ப் பிரயாணச் சித்தனாய் வந்தபோது கழுத்திலிருந்து மூழந்தாள்வரை தொங்கிய உடலைப் பூரணமாக மறைத்து நின்ற ராஜரீக உடையையே அணிந்திருந்தான். அதுவும் தன் வசமிருந்த உடைகளில் பெரும் சரிகை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட மிகவும் படாடோபமான உடையையே பொறுக்கி அணிந்திருந்தான். அந்த உடையின் கச்சையும், விலையுயர்ந்த மணிகளும் முத்துகளும் பதிப்பிக்கப் பெற்றிருந்ததன்றி, கச்சையில் செருகப்பட்டிருந்த சிறு வாளின் பிடியிலும் ரத்தினங்கள் இழைக்கப்பட்டிருந்தன. அந்தக் கோலத்திலிருந்த ஒரே பழைய ஆம்சம் அவன் வாள் ஒன்றுதான். சென்ற ஒரு வருட காலத்தில் பல போர்களைக் கண்டிருந்த அந்த வாளை மட்டும் மாற்றாமல் மற்ற சகலத்தையுமே மாற்றிக்கொண்டு பெரும் தோரணையுட னேயே அவன் கப்பல் தளத்திலிருந்து கீழிருந்த படகில் இறங்கினான். எப்பொழுதும் அதிக படாடோபத்தை விரும்பாத கருணாகர பல்லவன் அன்று படாடோபத்தின் சின்னமாய் விளங்கியதைக் கண்டு பிரமிப்பும் வியப்பும் கொண்டதல்லாமல் எதிர் நோக்கியிருந்த ஆபத்தை முன்னிட்டு, கலவரமும் அடைந்த அமீரும் கண்டியத் தேவனும் அவன் போவதைக் கண்டு அசைவற்று நின்று கொண்டிருந்தார்கள்.

அவர்கள் கலவரத்தையோ, எதிர்நோக்கியிருந்த ஆபத்தையோ, சிறிதளவும் பொருட்படுத்தாமல், கப்பலின் நாலேணி மூலம் படகிலிறங்கி அதில் இருந்த இரு மாலுமி களையும் படகைக் கரையை நோக்கிச் செலுத்துமாறு உத்தரவிட்டான் இளையபல்லவன். படகு சென்று கொண்டே இருக்கையில் மீண்டுமொருமுறை அந்தத் துறைமுகத்தின் அமைப்பையும், கோட்டையின் அமைப் பையும் நன்றாகக் கவனித்தான், அதன் பெரும் பாதுகாப்புகளையும் பலத்தையும் அவன் ஏற்கெனவே எடை போட்டிருந்தானாகையால் படகில் சென்ற _ ஆ சமயத்தில் அவன் கண்ணுக்குத் தெரிந்ததெல்லாம் இன்ப மான காட்சிகள்தான். அவனது மரக்கலம் துறை முகத்துக்குள் வந்து நங்கூரம் பாய்ச்சிப் படகில் இறங்கு வதற்குச் சுமார் இரண்டு நாழிகைகளுக்கு மேல் பிடித் தருந்தபடியால் அதிகாலையிலிருந்த பெரும் உஷ்ணம் முன்னைவிடப் பன்மடங்கு அதிகமாகி, எங்கும் பெரும் ஒளியையும் பெரும் திகைப்பையும் ஏற்படுத்தியிருந்ததால், கடலலைகள் தரையருகில் வருமுன்பாக மடிந்து மடிந்து ஏற்படுத்திய பெரும் திரைகள் பிரமாதமான ஒலியைப் பெற்றுக் கண்ணைப் பறித்தன. அத்துடன் படகிலிருந்த வண்ணம் பக்கத்து நீரில் கைவைத்த இளையபல்லவன் அதுவும் லேசாக உஷ்ணப்பட்டிருந்ததைக் கண்டு “இத்தகைய உஷ்ணத்திலும் பலமான ஜீவராசிகள் வளரு இன்றனவே! ’ என்று ஆச்சரியத்துடன் தனக்குள் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில் பலமான வாளை மீன் ஒன்று அலை மட்டத்தில் துள்ளியெழுந்து மீண்டும் நீரில் மூழ்கியதைக் கவனித்தான். அதைத் தவிர அத்தனை கடலோசையையும் பிளந்துகொண்டு பகிட்பாரிஸான் மலைக்காட்டுப் பகுதியிலிருந்து துஷ்ட மிருகங்களின் கர்ஜனைகளும் கேட்பதைக் காதில் வாங்கிய இளைய பல்லவன், “உஷ்ணம் உயிரைக் குடிப்பதில்லை உயிரை அளிக்கவே செய்கிறது, உயிரை அளிப்பது மட்டுமல்ல, உடலைத் திடமாகவும் அடிக்கிறது” என்று சொல்லிக் கொண்டவன் அதற்கு அத்தாட்சி கடலிலும் மலையிலும் மட்டுமில்லாது கடற்கரையிலும் கிடப்பதைக் கண்டான்.

தனது படகு தன்னந்தனியாக வருவதைக் கண்டதும் கடற்கரைக் குடிசை வட்டாரங்களில் நடவடிக்கை துரிதமாக ஏற்பட்டதையும், மூடிய குடிசைக் கதவுகள் துறக்கப்பட்டதையும் அவற்றிலிருந்து திடகாத்திரமான தலைகள் எட்டிப் பார்த்ததையும் கண்ட இளையபல்லவன், நல்ல பலத்தை இந்த அக்ஷ்யமுனை உஷ்ணம் கொடுக்கத் தான் செய்கிறது. நல்லவேளை அதிக தைரியத்தை மட்டும் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் நாம் தப்புவது பெரும் மிர்லமுதலல்ல மவையயம் ஒத மல் கஷ்டம்’ என்று தனக்குள் எண்ணமிட்டுச் சிறிது புன் முறுவலும் கொண்டான். எதிரே பிரிவு பிரிவாக இருந்த குடிசைகளில் வசித்திருந்த கொள்ளைக்காரரின் உரத்தை அவன் ஓரளவு எடை யபோட்டுவிட்டதால் சிறிதும் லட்சியம் செய்யாமலே படகில் உட்கார்ந்து படகுக்கும் நாவாய்க்குமிடையிலிருந்த தூரத்தைக் கடந்ததன்றி, படகு கரையை அடைந்ததும் அந்த அலட்சியத்துடனேயே கரையில் குதித்து, “படகைத் திருப்பி மரக்கலத்துக்குக் கொண்டு செல்லுங்கள்” என்று தனது வீரர் இருவருக்கும் கட்டளையிட்டுத் தான் மட்டும் தனியாகக் கோட்டையை நோக்கி நடக்கலானான். அப்படி நடந்த சமயத்தில் அவன் எதையும் கவனிக்காதவன்போல், நடந்துகொண்டாலும் அவன் கண்கள் எதிர்நோக்கு வந்த ஆபத்தின் ஒவ்வோர் அசைவையும் கவனித்துக் கொண்டுதானிருந்தன.

அக்ஷ்யமுனைத் துறைமுகத்துக்குள் கப்பல் நுழைந் ததும் ஊதப்பட்ட கொம்புகளால் அதை அகூதாவின் கப்பலென்று நினைத்து ஓடி ஒளிந்த அக்ஷ்யமூனைக் கடலோரக் குடிசை வாசிகள் தூரத்தில் தங்கள் குடிசை களிலிருந்து கப்பலில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கவனிக்கத் தவறவில்லையாகையால், கப்பல் நங்கூரம் பாய்ச்சியதையும் அதன் தளத்திலிருந்து அகூதாவின் தோற்றத்துக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத ஒரு வாலிபன் படகிலிறங்கியதையும் பார்த்ததும், தாங்கள் வீண் கலவரப் பட்டுவிட்டதை உணர்ந்துகொண்டார்கள். அத்துடன் அந்த மரக்கலத்தின் வாலிபத் தலைவன் தன்னந்தனியே படகில் கரை நோக்கி வந்ததும், அவர்களுக்குக் கொஞ்ச நஞ்சமிருந்த சந்தேகமும் அச்சமும் நீங்கிவிடவே அவர்கள் குடிசைகளை விட்டு வெளிவந்தனர். தனித்தனியான குடிசைக் கூட்டங்களிலிருந்து திடுதிடுவென்று வெளிப் போந்த அந்த நானாவிதத் தோற்றமுள்ள பல நாட்டுக் கொள்ளைக்காரர்கள் திடீரெனப் பெருங் கூச்சலிட்டு, கத்திகள், பெரும் ஈட்டிகள், பின் புறத்திலிருந்து மண்டை யில் தாக்கக்கூடிய வயிரம் பாய்ந்த மரக் கட்டைகள் முதலிய ஆயுதங்களுடன் கரையை நோக்கி விரைந்து வந்தார்கள். வந்தது அவர்கள் மட்டுமல்லாமல் அந்தக் குடிசையிவிருந்த பல நாட்டுப் பெண்களும் அவர்களுடன் ஓடி வந்தார்கள். மனிதக் கதம்பம்போல் பல வர்ணங் களுடன் தூரத்தே வந்த அந்தக் கூட்டத்தைக் கவனித்தும் அதைப்பற்றிச் சிறிதளவும் சிந்திக்காதவன் போல் மணலில் அவர்களை நோக்கி நடந்தான் இளையபல்லவன்.

அந்தக் கொள்ளைக்காரர்கள் பலப்பல பிரிவுகளாக இருந்த குடிசைகளிலிருந்து தனித்தனிக் கூட்டங்களாகப் பிரிந்து கிளம்பினாலும் சற்று தூரத்தில் ஒன்று சேர்ந்து விட்டதன்றி, நானாவிதக் கூச்சலுடனும், கேலிச் சரிப் புடனும் வெகு வேகமாக இளையபல்லவனை அணுகி னார்கள். அப்படி அணுகிய அந்த மனித அலை, இளைய பல்லவனை நெருங்கியதும் நல்ல மலைப் பகுதியைத் தாக்கும் கடலலை போலச் சிறிது உடைந்து பின் வாங்கியது. அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் முன் பகுதியிலிருந்த வர்கள் தங்கள் கூட்டத்தைப் பார்த்தும், ஆயுதங்களைப் பார்த்தும், சிறிதும் லட்சியம் செய்யாமல் வரும் அந்த வாலிபனின் துணிவைக் கண்டு சிறிது தயங்கினார்கள். அந்தத் தயக்கத்தின் விளைவாகக் கூட்டமும் சிறிது திடீரெனத் தேங்கியது. முன்வரிசை தேங்கியதால் பின் வரிசைகள் சிறிது சலனப்பட்டன. அத்தனையையும் கவனிக்கத் தவறாத கருணாகர பல்லவன், அவர்களை ஒருமுறை தன் கூரிய கண்களால் அளவெடுத்தான்.

கூட்டத்தில் பல நாட்டுச் சாதிகளிருப்பதையும், ஆனால் நெறி மருந்துக்குக்கூட அவர்களிடமில்லாததையும் அவர்கள் முகபாவத்திலிருந்தே அறிந்த சோழநாட்டுப் படைத்தலைவன் கூட்டத்தின் உட்புறத்திலிருந்த பல நாட்டுப் பெண்கள் மீதும் கண்களை ஓட்டி அவர்களில் பெரும்பாலோர் பிற நாடுகளிலிருந்தும் பிற நாட்டுக் கப். பல்களிலிருந்தும் கவரப்பட்டு வந்தவர்களென்பதையும், கற்புக்கும் அவர்களுக்கும் அதிக சம்பந்தமிருக்க முடியா தென்றும் தீர்மானித்துக் கொண்டான். அத்தனை பெண் முகங்களிலும் சில தூய முகங்களிருப்பதையும் கண்டு, “உலகத்தில் எங்கும் எப்பொழுதும் தூய்மைக்கும் இடமிருக் கிறது” என்று சொல்லிக் கொண்டான். முன்னணியில் தன் எதிரே ஆயுதங்களைப் பிடித்துக்கொண்டு நின்ற கொள் ளைக்காரர்கள் குறை எதுவாயிருந்தாலும் அச்சம் அந்தக் குறைகளில் ஒன்றல்ல என்பதைத் திட்டமாக உணர்ந்து கொண்டான் சோழர்களின் படைத்தலைவன். அந்த முகங்களில் தன்னைக் கண்டதால் சற்றுக் குழப்ப மிருந்ததேயொழிய அச்சத்தின் சாயை கிறிதுமில்லாததைக் கவனித்து, தான் சிறிது நிதானம் பிசகினாலும் தன் உயிர் செல்லாக் காசு பெறாதென்பதையும் தீர்மானித்துக் கொண்டான். கொம்புகள் ஊதப்பட்டதும் அவர்கள் ஓடி ஒளிந்து கொண்டதற்குக் காரணம் அச்சமேயென்றாலும் பெரும் படைகளே கேட்டு அஞ்சிய அகூதாவின் கொம்பு களின் சப்தத்தை அந்தக் கொள்ளைக்காரர்கள் செவி மடுத்துப் பயப்பட்டது பெரும் அச்சத்தின் அறிகுறியாகாது என்பதையும் புரிந்துகொண்டான்.

கொள்ளைக்காரர்களின் பலாபலத்தை இப்படி எடை போட்டுக் கொண்ட இளையபல்லவன், அவர்கள் தன்னை அணுகியதும் அவர்களைக் கூர்ந்து ஒருமுறை நோக்கினான். பிறகு அவர்கள் கைகளிலிருந்த பலவித ஆயுதங்களை நோக்கினான். “தனி மனிதனைக் கொல்ல எதற்கு இத்தனை ஆயுதங்கள்?” “ என்று படைத்தலைவன் ஒருவன் தன் வீரர்களைக் கேட்கும் அதிகாரத் தொனியில் அந்தக் கொள்ளைக் கூட்டத்தை நோக்கிக் கேட்டான்.

அவன் தோரணையையும் கேள்வியில் தொனித்த அதிகாரத்தையும் கண்ட கொள்ளைக்காரர்கள் ஒரு விநாடி மிரண்டனர். பிறகு அவர்களில் ஒரு தமிழன், யார்?” என்று பதில் கேள்வியொன்றை வீசினான்.

உங்களில் ஒருவன்” என்றான் இளையபல்லவன் தீர்க்கமான, நிதானமான குரவில்.

“உங்களில் ஒருவனா? ஆச்சரியத்துடன் அந்தக் கொள்ளைக்காரன் மறுமுறையும் கேட்டான்.

அடுத்த விநாடி அந்த முன்னணிக் கொள்ளைக் காரனுக்குப் பின்னாலிருந்து, “பொய்! பொய்! அவன் உடையைப் பார்” என்று பல குரல்கள் எழுந்தன. இதை யடுத்து அர்த்தமில்லாத கூச்சலும் மிரட்டலும் அந்தக் கொள்ளைக்காரர்களிடமிருந்தும் அங்கிருந்த பெண்களிட மிருந்தும் களம்பின. “அவனைக் கொல்லுங்கள், கொல் லுங்கள்!” என பலமான கூச்சல்கள் கடலலைகளையும் அடக்கும் வகையில் எழுந்தன. அத்தனைக்கும் அசை யாமல் நின்ற இடத்திலேயே நின்றான் இளையபல்லவன். அவனது கூரிய விழிகளில் ஏளன ஓளி மண்டிக் கிடந்தது. அந்தக் கூக்குரலைக் கேட்டு அவன் கை அவன் பெருவாளையோ, கச்சையிலிருந்த சிறு வாளையோ கூட நோக்கிச் செல்லாததைக் கண்ட கொள்ளைக்காரார் குழப்படைந்தனர். அடுத்தவிநாடி பேசாமலே அவர்களை நோக்கி இரண்டடி முன்னெடுத்து வைத்தான் இளைய பல்லவன். சிங்கத்தைக் கண்டு பின் வாங்கும் ஆட்டு மந்தை போல அந்தக் கொள்ளைக்கூட்டம் பின்வாங்கியது. “குலைக்கிற நாய்கள் கடிப்பதில்லை” என்று சீற்றத்துடன் கூவிய இளையபல்லவன் சட்டென்று நின்றான். அந்த கூட்டமும் நின்றது. கூச்சலும் மந்திரத்தில் கட்டுப்பட்டது போல் நின்றது.

சென்ற ஒரு வருடத்தில் அகூதாவிடமிருந்து மனோ தத்துவ சாத்திரத்தை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தான் அந்த வாலிப வீரன். “பெரும் கூட்டங்களை ஆயுத பலத்தால் சமாளிக்க முடியாது. ‘புத்தபலத்தாலும் உறுதி யாலும் சாமர்த்தியத்தாலுமே சமாளிக்க மூடியும்” என்று அகூதா பலமுறை கூறியிருப்பதை அந்தச் சமயத்தில் நினைத்துக்கொண்ட இளையபல்லவன் அந்தக் கொள் ளைக்காரர்களில் முதலில் பேசிய தமிழனை அருகே அழைத்து, “இவர்களுக்குச் சொல் நான் அகூதாவின் உபதலைவன் என்று. அகூதாவை விட்டு விலகிவிட்டேன் என்பதையும் தெரிவி!” என்று உத்தரவிட்டான்.

அந்தப் பிராந்தியத்தில் அதிகமாகப் பரவியிருந்த “காவி பாஷையில் அதை மொழி பெயர்த்தான் அந்தத் தமிழன். பதிலும் காவி பாஷையிலேயே வந்தது. “இங்கு ஏன் வந்தான்?” என்று மீண்டும் பல குரல்கள் கிளம்பின. அதையும் மொழிபெயர்த்தான் தமிழன்.

“உங்களுடன் வக்க. உங்கள் உதவியைப் பெற. உங்களுக்கு அளவற்ற செல்வத்தையும் அளிக்க. உங்க ளுக்குத் தெரியுமா பெரும் பொருளை ஏற்றிக்கொண்டு கலிங்கத்துக் கப்பலொன்று செல்லப்போகிறதென்ற!” என்று வினவினான் படைத்தலைவன்.

இது மொழிபெயர்க்கப்பட்டதும் அந்தக் கூட்டத்தின் பயங்கரக் கூச்சலுக்குப் பதில் களிவெறிக் கூச்சல் எழுந்தது. பொன்னை எதிர்பார்த்ததால் ஏற்பட்ட வெறி அவர்கள் எதிர்ப்பை நிமிட நேரத்தில் நட்பாக மாற்றவே அவர்களில் சிலர் அவனைக் கட்டிக் கொண்டார்கள், அவன் இஷ்டப் பட்டிருந்தால், அவனைத் தூக்கிக்கொண்டும் கோட் டைக்குச் சென்றிருப்பார்கள். இளையபல்லவன் அதை அனுமதிக்காமல் அவர்களை விலக்கிக்கொண்டு, முன்னே நடந்தான். அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டும், ஆடிப் பாடிக் கொண்டும் அவனைப் பின் தொடர்ந்து சென்றார்கள்.

வானைப் பிளந்த அவர்கள் களிவெறிக் கூச்சல் திடீரென நின்றது. கோட்டை மீதிருந்து வீசப்பட்ட விஷ ஆம்பு அவன் மார்பில் பாய்ந்ததும் கூச்சல் ஸ்தம்பித்தது. பயத்தின் மூச்சுக்காற்று மட்டும் ‘ஹா’ என்ற சப்தத்துடன் எழுந்தது. அடுத்த விநாடி அதுவே ஆச்சரியத்துக்கு அடிகோலியது. விஷ ஆம்பு மார்பில் தைத்திருக்க, கண்ணிமைக்கும் நேரம் நின்ற கருணாகர பல்லவன் தள்ளாடித் திடீரென விழுவானென்று அவனைப் பிடிக்கப் போன இரு கள்வரும் அவன் உதடுகளிலிருந்து உதிர்த்த தடீர்ச் சிரிப்பைக் கேட்டுத் திகைத்தனர். அடுத்த விநாடி அந்த ஆம்பை மார்பிலிருந்து பிடுங்கி அலட்சியமாக அவன் எறிந்துவிட்டு மேலே நடக்க முற்பட்டதையும் ஆம்பு தைத்த இடத்தில் சிறிது ரத்தம்கூட வராததையும் கண்டு பெரும் பயமும் வியப்பும் அடைந்தனர் கள்வர். அதன் விளை வாகச் சிலர் அவனைத் தொடர்ந்தனர், சிலர் கைகளை ஆகாசத்தில் ஆட்டி மேற்கொண்டு ஆம்பு வீச வேண்டா மென்று கோட்டைக் காவலருக்கு எச்சரித்தார்கள். அத்துடன் ஏதோ மந்திரத்தால் வசப்பட்டவர்கள் போல் தேவபுருஷனைத் தொடரும் மானிடப் பிறவிகளென இளையபல்லவனைத் தொடர்ந்து சென்றார்கள்.

அவர்கள் செய்த சைகைகளாலும் அவர்கள் கூட்ட மாக இளையபல்லவனைத் தொடர்ந்து வந்ததாலும் பாயமேதுமில்லை என்பதைப் புரிந்தகொண்ட கோட் டைக்காவலர் மேற்கொண்டு ஆம்புகளை வீசாமல் கோட்டைக் கதவுகளையும் திறந்தார்கள்.

அங்கிருந்த கோட்டைக் காவலரின் தலைவனை நோக்கிய கருணாகர பல்லவன் கோட்டைத்தலைவனை அவசரமாகப் பார்க்க வேண்டுமென்று கேட்டான்.

காவலர் தலைவன் சில விநாடிகள் இளையபல்லவனை ஏற இறங்கப் பார்த்தான்.

அவன் உடையின் உயர்வையும் தோரணையின் கம்பீரத்தையும் கண்டு, ‘சரி பின்னால் வா’ என்பதற் கறிகுறியாகச் சைகை செய்துவிட்டு முன்னால் நடந்தான். கொள்ளையர் புடை சூழக் காவலர் தலைவனைப் பின்பற்றி அந்த மலைச் சரிவின் சில வீதிகளைத் தாண்டி உச்சியிலிருந்த மாளிகைக்கு வந்த இளையபல்லவன் கடைசியாக அந்த மாளிகையின் பெரும் அறையொன்றில் உட்கார வைக்கப்பட்டான். விநாடிகள் சில ஓடின. தீவிர சிந்தனையில் ஆழ்ந்து அந்த அறையைச் சுற்றுமுற்றும் பார்த்த இளையபல்லவன் பயங்கரமான ஒரு மனிதனின் இருப்பிடத்திற்குத் தான் வந்திருப்பதை உணர்ந்து கொண்டான். அத்தகைய மனிதனைத் தான் சரிபடுத்த வேண்டுமானால் தன் சாமர்த்தியத்தில் பெரும்பகுதியை உபயோகிக்க வேண்டியிருக்குமென்பதையும் புரிந்து கொண்டான்.

இப்படி அவன் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்த சமயத்தில் தூரத்தே இருந்த சிறு கதவு ஒன்று திறக்கப்பட்டு, கோட்டைத் தலைவன் உள்ளே நுழைந்தான்.

அவளைக் கண்டதும் இளையபல்லவனின் சிந்த னைகள் எங்கெங்கோ பறந்தன. விவரிக்க இயலாத பெரும் திகைப்பு அவன் இதயத்தைச் சூழ்ந்து கொண்டது. தான் இருப்பது உண்மையில் அக்ஷயமுனைதானா என்பது பற்றிப் பெரும் சந்தேகம் துளிர்த்தது அவன் இதயத்தில். தான் காண்பது சொப்பனமா என்று கூடச் சிந்தித்தான் அவன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 5

அந்தரங்க அறையில்...

காண்பது கனவா அல்லது எதிரில் வந்திருப்பது உண்மைத் தோற்றம்தானா? இருப்பது சொர்ண பூமியின் அக்ஷயமுனையா அல்லது கலிங்கத்தின் பாலூர்ப் பெருந் துறையா?” என்ற சந்தேகம் இளையபல்லவன் இதயத்தில் எழுந்து அவன் சித்தத்தை எல்லையற்ற பிரமிப்புக்கும் குழப்பத்துக்கும் உள்ளாக்கியதென்றால், அதற்குக் காரணம் இருக்கத்தான் செய்தது. அத்தனை ஏமாற்றத்தையும் சந்தேகத்தையும் அளித்தான் கோடியிலிருந்த கத வொன்றைத் திறந்துகொண்டு அறைக்குள் நுழைந்த அந்தக் கோட்டைத் தலைவன். இளையபல்லவன் கற்பனை செய்த கோலத்துக்கு முற்றும் மாறாக அவன் தோற்றமிருந்ததன்றி, சொப்பனத்திலும் நினைக்க முடியாத மற்றொருவன் சாயலும் கோட்டைத் தலைவனுக்கு இருக்கவே சில விநாடிகள் ஸ்தம்பித்தே போனான் சோழர் படைத் தலைவன்.

அக்ஷயமுனையைப் பற்றிக் &ழ்த்தசையெங்கும் பரவிக் கிடந்த பயங்கர வரலாற்றை வைத்து, அதன் வாசிகளையும் கோட்டையின் தலைவனையும் எடை போட்டிருந்த இளையபல்லவன், தலைவன் அறைக்குள் தான் தனித்திருந்த சில நிமிடங்களில் வெளிநாடுகளில் உலாவிக் இடந்த வதந்தியில் தவறேதுமில்லை என்றே எண்ணினான். அந்த அறை ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் ஒரு மூலையிலிருந்த சாதாரணத் துறைமுகக் காவலனின் அறைபோலில்லாமல் பெரும் சாம்ராஜ்யாதிபதியின் அந்தரங்க அறை போலிருந்ததையும், அதன் தூண்கள் கூடத் தங்கத் தகடுகளால் மூடப்பட்டி ரந்ததையும், சுவர் களில் ஆங்காங்கு இருந்த சிறு வெள்ளிப் பட்டயங்களில் எழுப்பப்பட்ட பல செய்திகள் எந்த மனிதனது உரத்தையும் வீரத்தையும் உலுக்கிவிடும் தன்மை பெற்றிருந்ததையும் பார்த்த இளையபல்லவன், பெரும் கொள்ளைக்காரனும் இதயமற்ற கொலைகாரனுமான ஒரு பரம அயோக்கி யனின் இருப்பிடத்துக்குத் தான் வந்துவிட்டதைச் சந்தேக மறப் புரிந்து கொண்டான். அக்ஷயமுனைக்கு வந்து பெரும் மரக்கலத் தலைவர்களாக விளங்கி, பெரும் தனத்தைக் கொண்டு வந்தவர்கள் திடீர் திடீரென மறைந்துவிட்டதற்கு அனுதாபம் தெரிவிக்கும் முறையில் சுவர்களில் காணப் பட்ட வெள்ளிப் பட்டயங்களில் வாசகங்களிருந்தன. அந்தப் பட்டயங்களின் தலையில் மாண்ட அந்த மாலுமிகள் சின்னஞ்சிறு தலைகளும் சித்திரங்களாகத் தீட்டப்பட்டிருந்தன.

அந்தப் பட்டயங்களை அந்த அறையில் அக்ஷய முனைத் தலைவன் பதித்திருந்ததன் காரணத்தைப் பற்றி எத்தகைய சந்தேகமும் ஏற்படவில்லை இளையபல்லவ னுக்கு. அவற்றிலிருந்த தலைகளின் சித்திரங்கள் தன்னைப் போல் வரும் புது மரக்கலத் தலைவர்களை அச்சுறுத்து வதற்கேயென்பதையும் பட்டயங்களில் அனுதாபம்போல் எழுதப்பட்டிருந்த வாசகங்களில் பலத்த எச்சரிக்கையும் அடங்கியிருப்பதையும் கவனித்த இளையபல்லவன், கோட்டைத் தலைவன் பெரும் கொலைகாரன் என்பது மட்டுமின்றி, சாமர்த்தியமான கொலைகாரனுங்கூட என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். தவிர, கோட்டைத் தலைவன் கொலையையே ஒரு கலையாக மாற்றிக் கொண்டு அதன் சக்தியிலேயே வளர்ச்சியடைந்திருக்கிறானென்பதையும் அறிந்து கொண்டானாகையால், பெரும் ராட்சதன் ஒருவனைத் தான் சந்திக்க நேரிடுமென்ற எண்ணத்துடனேயே அந்த அறையில் காத்திருந்தான். ஆனால் தன் நினைப்புக்கு நேர்மாறாக, நல்ல உயரமுள்ள ஒற்றைநாடியாகச் சிவந்த சரீரத்துடன் ராஜகளை பொருந்திய ஒரு மனிதன் முகத்தில் புன்முறுவல் தவழ உள்ளே நுழைந்ததும், பெரும் பிரமிப்புக்கு்ள்ளான இளைய பல்லவன் சற்று அவனைக் கவனித்ததும் உள்ளே துள்ளி யெழுந்த பல உணர்ச்சிகளுக்கு இலக்கானாலும் ஆச னத்தை மட்டும் விட்டு எழுந்திருக்கவில்லை. இதே நிலை ஒரு வருடத்துக்கு முன்பிருந்தால் துள்ளி எழுந்திருப் பான், சொற்களைப் படபடவெனப் பொரிந்தும் தள்ளியிருப்பான். ஆனால் பெரும் நிதானத்தை அடைந்துவிட்ட படைத்தலைவன் அந்த நேரத்தில் ஆசனத்தை விட்டு எழுந்திருக்கவுமில்லை, தனது படபடப்பைக் காட்டவு மில்லை. அவன் புருவங்களின் சலனங்களில் மட்டுமே அந்த வியப்பு தெரிந்தது. அறைக்குள் நுழைந்தவன் காஞ்சனாதேவியின் தந்தையான குணவர்மனேயென ஆரம்பப் பார்வையில் தீர்மானித்து விட்ட இளைய பல்லவன் அத்தகைய அதிர்ச்சியும் பிரமிப்பும் அடைந்த இல் ஆச்சரியமென்ன இருக்கிறது?

அறைக்குள் நுழைந்த கோட்டைத் தலைவன் அசல் குணவர்மனைப் போலவே தோற்றத்திலிருந்ததன்றி அவன் நடையும் கடாரத்தின் அதிபனை நூற்றுக்கு நூறு ஒத்திருந்தது. அதே விசால வதனம், அதே ராஜ தோரணை, சுருண்ட தோளில் தொங்கிய அதே தலைமுடி. நீண்ட மெல்லிய கைகள்! வித்தியாசம் எதுவுமே இல்லை குணவர்மனுக்கும் கோட்டைத் தலைவனுக்கும்! இப்படிக் குணவர்மனை உரித்து வைத்தது போல் அறைக் கோடிக் கதவின் மூலம் நுழைந்த கோட்டைத் தலைவனைக் கண்டு சில விநாடிகள் பிரமித்து ஸ்தம்பித்துவிட்ட இளைய பல்லவன் கூடிய சீக்கிரம் சுயநிலையை அடைந்து நன்றாக எதிரே வந்தவனை அளவெடுக்க ஆரம்பித்தான். குணவர்மனும் கோட்டைத் தலைவனும் பார்வைக்கு இரட்டையர் போல் இருந்தாலும் சில முக்கிய வித்தியாசங்கள் இருவருக்கும் இருப்பதைச் சில விநாடிகளின் ஆராய்ச்சி களுக்குபின் அறிய முடிந்தது இளையபல்லவனால். முகத்தில் அதே ராஜ தோரணைதான். இருந்தாலும் பலத்த கடுமை இருந்தது அதில். கண்கள் அதே கருமை நிறம், விசாலம் இருந்தாலும் குணவர்மன் கண்களிலிருந்த ஏக்கம், துறவு மனப்பான்மை இரண்டும் கோட்டைத் தலைவன் கண்களில் இல்லை. அவற்றுக்குப் பதில் பெரும் குரூரமும் வஞ்சகமும் கலந்திருந்தன. இளையபல்லவனைக் கண்டதும் அவன் இதழ்களில் விரிந்த புன்னகை முதல் தோற்றத்துக்கு இன்பமாகத் தோன்றினாலும் அதில் பொய்யும் வஞ்சகமும் புதைந்து நின்றன. வந்ததும் அவன் பேசிய இரண்டொரு சொற்களும் அவன் பரம அயோக்கியனென்பதை நிரூபித்தன.

பேசிய சொற்கள் மரியாதை நிரம்பியவைதான். காதுக்குக் குளிர்ச்சியாகவும் இருந்தன. இருப்பினும் மனிதனுடைய குணத்துக்குச் சொல்லப்படும் வடமொழி சுலோகமே இளையபல்லவன் நினைப்புக்கு வந்தது.

பங்கஜத்தைப்போல் விரிந்து வரவேற்கும் முகம், சந்தனத்தைப்போல் குளிர்ந்திருக்கும் சொற்கள், வஞ்சகம் நிறைந்த நெஞ்சம், இம் மூன்றும் அயோக்கியனுடைய லக்ஷணங்கள் என்ற கவிதையை ஒரு முறைக்கு இரண்டு முறையாகத் தனக்குள் சொல்லிக்கொண்ட இளைய பல்லவன் கோட்டைத் தலைவனுக்கும் அந்தச் சுலோகத் துக்கும் பொருத்தம் நூற்றுக்கு நாறு என்று தீர்மானித்துக் கொண்டாலும், அந்த எண்ணங்களை அணுவளவும் முகத்தில் காட்டாமல், கோட்டைத் தலைவன் உள்ளே, நுழைந்ததும் ஏற்பட்ட திகைப்பை இரண்டொரு விநாடி களில் சமாளித்துக் கொண்டு புன்முறுவல் செய்தான்.

அத்தனை துரிதமாக இளையபல்லவன் தன் ஆரம்பத் திகைப்பையும் எண்ணங்களையும் மறைத்தும் கூட அவன் உணர்ச்சிகளை நொடிப்பொழுதில் கவனித்து விட்ட கோட்டைத் தலைவன், இன்பப் புன்முறுவல் தவழ்ந்த இதழ்களுடன் அறைக்கோடியிலிருந்து நடுவிடத்துக்கு வந்து பெரும் அதிர்வெடியொன்றை எடுத்துப் படைத்தலைவன் மீது வீச முற்பட்டு, “அக்ஷயமுனைக்கு இளையபல்லவன் வருகை நல்வரவாகட்டும்.” என்று சர்வசாதாரணமாக வரவேற்புக் கூறி எதிரேயிருந்த நவரத்தினங்கள் இழைக்கப் பெற்ற ஆசனத்தில் அமர்ந்து கொண்டான்.

அக்ஷயமுனையின் தலைவன் பேசிய மொழி சொர்ண பூமியின் காவி பாஷையாயில்லாமல் தூய்மை யான தமிழாயிருந்தது பற்றி மட்டுமின்றித் தன் பெயரையும் அவன் அறிந்து கொண்டிருப்பது பற்றிப் பேராச்சரிய மடைந்தான் இளையபல்லவன். இந்த அறைக்கு வரும்வரை நான் பெயரை யாருக்கும் சொல்லாதிருக்க இவனுக்கு எப்படி என் பெயர் தெரிந்தது!” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாலும் அதைப்பற்றி வெளிப்படையாக எந்த உணர்ச்சியையும் காட்டாமல், “எனக்கு இரட்டைப் பாக்கியம் ஏற்பட்டிருக்கிறது.” என்று பதில் கூறி வணக்கத்துக்கு அறிகுறியாகத் தலையையும் தாழ்த்தனான் இளையபல்லவன்.

“எனக்கும் அப்படித்தான்” என்றான் கோட்டைத் தலைவன் இதழ்களிலிருந்த புன்முறுவல் முகத்திலும் படர.

சிறிது சிந்தனைக்குப்பின் கேட்டான் இளைய பல்லவன், “உங்களுக்குமா?”

“ஆம்.” மிகுந்த அடக்கத்துடனும் அந்த அடக்கத் திலும் ஒரு பயங்கரம் புதைந்து கிடந்த குரலில் வெளி வந்தது கோட்டைத் தலைவனின் பதில்.

“தங்களைக் கண்டது என் பாக்கியம். தாங்கள் என் மொழியைப் பேசுவது என் பாக்கியம் என்பதை இரட்டைப் பாக்கியமாகக் கருதினேன் நான்.” என்று குறிப்பிட்டான் இளையபல்லவன்.

“அரச வம்சத்தில் பிறந்து கொள்ளைக்காரராகத் திரும்பிய இளையபல்லவரை நான் அறிய நேரிட்டது ஒரு பாக்கியம். இரண்டவதாக எங்கள் காவி மொழியை அவர் அறிந்திருப்பது மற்றொரு பாக்கியம். ஆக இரட்டை பாக்கியம் எனக்கு உண்டு. இல்லை, இல்லை, மூன்று வகை பாக்கியம்...” என்று திருத்தக் கொண்டான் கோட்டைத் தலைவன்.

“மூன்றா!”

“ஆம், நானே இளையபல்லவர் பிரசித்தியைக் கேட்டு அவரைப் பார்க்க விரும்பினேன். அவராக என்னைத் தேடி வந்தது மூன்றாவது பாக்கியமல்லவா?” இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாத இளையபல்லவனை நோக்கிய கோட்டைத் தலைவன் தன் கைகளைக் கோத்து மடியில் வைத்துக்கொண்டு, “நமக்குள் முன்பே மறைமுகத் தொடர்பிருப்பதும் என் பாக்கியத்தை அதிகப்படுத்துகின்றது.” என்று சொன்னான்.

அவன் எதைக் குறிக்கிறானென்பதைப் புரிந்து கொண்ட இளையபல்லவன், “ஆம். ஒருவிதத் தொடர்பு இருக்கத்தான் செய்கிறது” என்றான்.

“என் சகோதரனுக்குத் தாங்கள் செய்த உதவிக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன், “ என்றான் கோட்டைத் தலைவன். அவன் குணவர்மனைக் குறிக்கிறா ட ஹெ னென்பதைச் சந்தேகமறத் தெரிந்துகொண்டாலும் இருவரின் முக ஜாடையிலிருந்து அவர்களுக்குள் நெருங்கிய உறவு உண்டு என்பதை அறிந்திருந்தாலும், அவர்கள் எப்படிச் சகோதரர்களாக முடியும் என்பதை எண்ணிச் சற்று சிந்தனையில் அழ்ந்தான்.

யார் எண்ணத்தையும் ஊடுருவிப் பார்க்கும் திறனுள்ள கோட்டைத் தலைவனுக்கு இளையபல்லவன் இதயத்தில் எழுந்த சந்தேகமும் புரிந்திருக்க வேண்டும். ஆகவே அவன் சொன்னான் “குணவர்மர் என் சொந்தச் சகோதரர் அல்ல. ஒன்றுவிட்ட சகோதரர்தான். இருப் பினும், அவர் சொந்தச் சகோதரரான ஸ்ரீவிஜய சாம்ராஜ் யாதிபதி ஜெயவர்மருக்கும் அவருக்குமுள்ள சாயலைவிட, எனக்கும் குணவர்மருக்குமுள்ள சாயலில் அதிக ஒற்றுமையிருக்கும். ஆகவே நீங்கள் ஆரம்பத்தில் என்னைக் கண்டு திடுக்கிட்டதில் அச்சரியமில்லை.

“கோட்டைத்தலைவன், தான் அக்ஷ்யமுனையில் கால் வைத்த சில விநாடிகளுக்குள்ளேயே தன்னைப் பற்றிய ஜாதகம் அத்தனையும் கணித்துவிட்டதைக் கண்டு மீண்டும் வியப்பெய்தி உணர்ச்சிகளை அடக்க முடியாத நிலையை எய்திவிட்ட இளையபல்லவன் வியப்பின் குறி முகமெங்கும் படர, கோட்டைத்தலைவனை நோக்கி, “உங்களுக்குச் சோதிடம் தெரியுமா?” என்று வினவினான்.

“தெரியாது.” அடக்கத்துடன் வந்தது கோட்டைத் தலைவனின் பதில்.

“மனோதத்துவ சாத்திரம்?”

“அது என்னவென்பதே எனக்குத் தெரியாது.

நான் எதையும் அதிகமாகப் படித்ததில்லை.

“உங்களுக்குப் படிப்பு அவசியமில்லை.

“ஏன்?”

“சிலருடைய அறிவின் பலன் சாத்திரங்கள்.

மற்றவர் களுக்குச் சாத்திரங்கள் அறிவைப் புகட்டுகின்றன. படிக்காமல் இயற்கையிலேயே சாத்திரக் கல்வியின் பயனைப் பெறுபவர்களும் உண்டு.

“அப்படி. நான் பலன் பெற்றவனுமில்லை. என்னை வீணாகப் புகழ வேண்டாம். நான் சொன்ன விஷயங் களைப் பற்றி வியப்படையவும் வேண்டாம்.” என்று கூறிய கோட்டைத் தலைவன், இளையபல்லவனை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு, மிக நிதானமான குரலில் மேலும் சொன்னான் “இதில் ஊகத்துக்கோ கூரிய அறிவுக்கோ அவசியமில்லை. ஸ்ரீவிஜயத்தின் மன்னர் தமது சகோ தரனின் நன்மையில் கருத்துள்ளவர் என்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. ஆகவே குண வர்மர் பாலூர்ப் பெருந்துறையில் கால் வைத்த நாள் முதலாக நடக்கும் விஷயங்ளைக் கவனிக்க ஜெயவர்மர் ஏற்பாடு செய்ததில் ஆச்சரியமில்லையல்லவா தவிர, தென் கலிங்கத்து மன்னன் பீமன் எங்கள் சக்கரவர்த்தியின் நண்பர். ஆகவே ஸ்ரீவிஜயம் வரும் வர்த்தகக் கப்பல்களில் கலிங்கத்தின் முத்திரை ஓலைகள் அடிக்கடி வருகின்றன. நீங்கள் குணவர்மரையும் இளவரசியையும் தப்புவித்த செய்திகள், பாலூர்ப் பெருந்துறை நீதி மண்டபத்திலும் கடற்கரையிலும் நடந்த விந்தைகள் அனைத்தும் இங்கு தெரியும். ஸ்ரீவிஐயத்தின் மக்கள் உங்களையும் அநபாயரை யும் பற்றிக் கதை கதையாகப் பேசுகிறார்கள். பிரசித்தி நல்லதுதான், சில சமயங்களில் அதில் ஆபத்தும் கலந்திருக்கிறது...

“இப்படி விஷயங்களைச் சர்வசாதாரணமாக விளக்கிய கோட்டைத் தலைவனைச் இல விநாடிகள் நோக்கிய இளையபல்லவன் தன் ஆசனத்தில் நன்றாகச் சாய்ந்துகொண்டான். “என்னைப் பற்றித் தங்களுக்கு இன்னும் என்ன தெரியும்?” என்று வினவினான்.

“முதலில் நீங்கள் பாலூர்ப் பெருந்துறை கடற்கரைப் போரில் மாண்டுவிட்டதாகச் செய்து கிடைத்தது. ஆறு மாதங்களுக்குப் பிறகு யாரோ ஓர் இளையபல்லவன் அகூதாவின் உப தலைவனாயிருப்பதாகவும், கடற்போரில் குருவான அகூதாவையே மிஞ்சியவனென்றும் கேள்விப் பட்டோம். பிறகு ஊகம் பிரமாதமா? இரண்டும் இரண்டும் நான்காகி விட்டது. அகூதாவின் உப தலைவர் என்னைப் பார்க்க விரும்புவதாகக் காவலர் தலைவன் சொன்னான். வந்திருப்பது யாரென்று தெரிந்தது. அரச வம்சத்தில் சேர்ந்த ஒருவரை சாதாரணமாக வரவேற்கக் கூடாதென்று உங்களை என் அந்தரங்க அறைக்கே வரவழைத்தேன். இதற்கு முன்பு இங்கு வந்திருப்பவர்கள் வெகு சிலர்தான்...“என்று கோட்டைத் தலைவன் பேச்சைச் சட்டென்று நிறுத்தினான்.

“அப்படியா?” இளையபல்லவன் குரலில் சந்தேகம் தொனித்தது.

“அந்தச் சிலரும் துர்ப்பாக்கியம் செய்தவர்கள்,” என்றான் துயரத்துடன் கோட்டைத் தலைவன்.

“ஏன்?” இளையபல்லவன் குரலில் மேலும் சந்தேகம் தொனித்தது.

“இங்கு வந்தபின் அவர்கள் காணப்படவில்லை.

“அப்படியா?”

“ஏதோ விபத்துக்குள்ளானார்கள்.

“என்ன விபத்தோ?”

“என்ன விபத்தோ தெரியாது. அவர்கள் சடலங்கள் மட்டும் கோட்டைக்கு வெளியே கிடந்தன. சடலங்களுக்கு இருபது அடிகள் தள்ளித் தலைகள் கிடந்தன.

“பயங்கரம்!”

“பயங்கர விளைவுகள் இங்கு அதிகமில்லை. எப்பொழுதாவது ஒருமூறை நடக்கும். அந்தச் சிலரும் தங்களைப் போலவே கடற்போரில் பிரசித்தி பெற்றவர்கள்.

“அப்படியா?”

ஆம்.

“பிரசித்தியில் அத்தனை ஆபத்தா?”

“ஆம் இளையபல்லவரே! சந்தேகமிருந்தால் திரும்பிப் பாருங்கள்.” என்ற கோட்டைத் தலைவன் இதழ்களில் பயங்கரப் புன்னகை அரும்பியது. இளைய பல்லவன் திரும்பி நோக்கினான். பின்புறத்தில் உருவிய வாள்களை ஏந்திய இரு வீரர்கள் நின்றிருந்தார்கள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 6

உருண்டது நான்கு, புரண்டது?

பிரசித்தயால் விளைவது ஆபத்தே என்ற தத்து வத்தைச் சுட்டிக்காட்டியதன்றி அதற்குத் தக்க சான்று தரும் முறையில், “சந்தேகமிருந்தால் திரும்பிப் பாருங்கள்’ என்று சர்வ சகஜமாகக் கூறிய கோட்டைத் தலைவன் சொற் களைத் தொடர்ந்து தனது ஆசனத்திற்குப் பின்புறம் தலை திரும்பிப் பார்த்த இளையபல்லவன், அங்கு உருவிய வாள்களுடன் நின்றிருந்த இரு வீரர்களைக் கண்டதும் அவர்களை ஒரு முறை ஏற இறங்க நோக்கிவிட்டு மீண்டும் ஆசனத்தில் திரும்பி எதிரேயிருந்த கோட்டைத் தலை வனை மிக இன்பமான புன்முறுவல் படர்ந்த வதனத் துடனும், அந்தப் புன்முறுவலை விஷமச் சிரிப்பாக உதிர்த்த கண்களுடனும் நோக்கினான்.

அத்தகைய மந்தகாச வதனத்தையும், ஆபத்தைக் கண்டும் இளையபல்லவன் பார்வை மூலமே உணர்த்திய அலட்சியத்தைக் கண்ட கோட்டைத் தலைவன் பெரும் வியப்புக்குள்ளானான். அந்தத் தனது அந்தரங்க அறையில் வந்த சில பிரசித்தி பெற்ற கொள்ளைக்காரர்கள் மறைந்து மடிந்த விவரங்களை எடுத்துச் சொல்லி, படிப்படியாக அச்சத்தை உயர்த்தக்கொண்டே போய், அவற்றுக்குச் சிகரம் வைத்தது போல் லேசான சமிக்ஞையினாலேயே உருவிய வாள்களுடன் காவலரை வரவழைத்துக் காட்டியும் அதைப்பற்றி லவலேசமும் கவலைப்படாமல் தன்னைப் பார்த்து வாய்விட்டு நகைக்காவிட்டாலும் கண்களின் பார்வையால் நகைத்த படைத் தலைவன் மீது ஆச்சரியம் ததும்பும் விழிகளை நிலைக்கவிட்டான் அக்ஷயமுனைக் கோட்டையின் தலைவன். அந்த ஆச் சரியத்துடன் சிறிது சிந்தனையும் அவன் த்தத்தில் எழுத்ததற்கு அறிகுறியாகப் புருவங்கள் சிறிது மேலே ஏற மூன்று வரிக்கோடுகள் பக்தர்களின் கீற்றுச் சந்தனம் போல் அவன் முகத்தில் விழுந்தன. இம்முறை இளையபல்லவன் பிரமிப்பு பன்முறை அதிகமாயிற்று, இதே மூன்று கோடுகளை அவன் பாலூர்ப் பெருந்துறையின் வெளி நாட்டுப் பிரமுகர் வீதியிலிருந்த மாளிகையில் முதல் நாள் இரவு கண்டிருந்தான். அந்த மூன்று வரிகள் முகத்தில் உதயமானதும் அந்த அயோக்கியன் எப்படி சாட்சாத் குணவர்மன் போலவே காட்சியளித்தான் என்பதை நினைத்து விவரிக்க இயலாத அச்சரியத்தின் வசப்பட்டான் இளைய பல்லவன். அதிலிருந்து ஒரு முக்கிய உண்மையும் வெளியாயிற்று சோழர் படை உபதலைவனுக்கு. “குண வா்மனுக்கு அந்த மூன்று வரிக்கோடுகள் கவலை உழுது விட்ட சின்னங்கள். ஆனால் படாடோபத்திலும் கொள்ளைக்காரர் கொண்டு குவித்த பணத்திலும் காலங் கழிக்கும் இவனுக்கென்ன கவலையிருக்க முடியும்?” என்று எண்ணிப் பார்த்த இளையபல்லவன், சாந்திக்கும் பணத்துக்கும் படாடோபத்துக்கும் சம்பந்தமில்லை. சாந்தியை அளிக்கும் ஆம்சமே. வேறு.” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். தவிர அதுவரை தன் எண்ணங் களையோ, குறைகளையோ காட்டாமல் சமாளித்துக் கொண்ட கோட்டைத் தலைவன், அபாயத்தின் முனை யிலும் தான் அலட்சியம் காட்டியதைப் பார்த்து வெளிக்கு வியப்பையும் உள்ளுக்குள் கவலையையும் எய்திவிட்டதை நினைத்த இளையபல்லவன், ‘மேலுக்கு மிகவும் துணிவுள்ள வனாகத் தெரியும் இவன் துணிவு உண்மையானதல்ல, ர ஓ லட புழு வஞ்சகத்தின் துணை கொண்டது. ஆகவே வயிரம் பாயாது, என்று உள்ளத்தே தீர்மானித்துக் கொண்டான். இப்படிக் கோட்டைத் தலைவனின் பலாபலத்தை எடை போட்டு விட்ட இளையபல்லவன் நன்றாகத் தனது அசனத்தில் சாய்ந்துகொண்டு கால்களையும் சாவதானமாக நீட்டிக் கொண்டான்.

தனது அந்தரங்க அறைக்கு இளைப்பாறவே வந்தவன் போல் இளையபல்லவன் ஆசுவாசப்படுத்திக் கொள் வதைக் கண்ட கோட்டைத் தலைவன் அவன் நிதானத் தையும் நெஞ்சுரத்தையும் கண்டு மேலும் மேலும் வியப் புக்கும், இத்தகையவன் அக்ஷயமுனையில் காலூன்றினால் தனக்கு ஏற்படக்கூடிய பலவீனத்தை நினைத்துக் கவலைக்கும் உள்ளானாலும் அந்த உணர்ச்சிகளை வெகு சிக்கிரம் மறைத்துக் கொண்டான். கொள்ளைக்காரர்களின் பணத்தாசையும் சில்லறை இன்பங்களில் அவர்களுக் கிருந்த வெறியுமே தன் சக்தியென்பதையும், அறிவாளி எவனை விட்டாலும் பல திசைகளில் தனக்கு ஆபத்து உண்டென்பதையும் உணர்ந்ததாலேயே ஏற்கெனவே பல அறிவாளிகளை அவன் தீர்த்துக் கட்டியிருந்தான். அவர்கள் பிரதாபங்களையும் தலைகளையும் பட்டயங்களில் வரைந்து அந்தரங்க அறையில் பதித்திருந்ததற்குக் காரணம், அந்த அறைக்கு வருபவர்கள் ஆரம்பத்திலேயே நடுக்கம் கொள்ளட்டும் என்பதுதான். அப்படி ஏற்கெனவே பலர் நடுங்கியும் இருக்கிறார்கள். படங்களைப் பார்த்தும் தான் ஆபத்தைச் சுட்டிக் காட்டியும், இரு வீரர் வாள் பிடித்து நின்றும் அசையாத துணிவு கொண்ட ஒருவன் தனது கோட்டைக்கு வந்துவிட்டான் என்ற நினைப்பு மட்டு மின்றி, அவன் பெரும் அறிவாளியும் ராஜதந்திரியுங்கூட என்ற எண்ணமும் கோட்டைத் தலைவனுக்குப் பெரும் கவலையை அளித்தன. அத்தகையவனை ஒழிப்ப தானாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டுமென்பதையும் உணர்ந்துகொண்ட கோட்டைத் தலைவன், உள்ளூர இருந்த உணர்ச்சிகளை மறைத்து இளையபல்லவனை நோக்கி மகஒழ்ச்சிப் புன்முறுவலும் கொண்டான். அத்துடன் பாராட்டவும் முற்பட்டு, “உங்கள் துணிவைப் பற்றி ஏற்கெனவே கேள்விப்பட்டி ருக்கிறேன். ஆனால் இன்று என் கோட்டையில் தேரில் கண்டேன் என்றான்.

வாள் வீரர் இருவரை அவன் வரவழைத்தது தன்னை வெட்டிப் போட, அல்லது சிறையில் தள்ள என்பதை உணர்ந்திருந்த இளையபல்லவன், கோட்டைத் தலைவன் திடீரெனத் தன் துணிவைப் பாராட்ட மூற்பட்டதில் ஆழ்ந்த கருத்து ஏதோ இருக்க வேண்டுமென்ற எச்சரிக்கை யுடனேயே பதிலும் சொன்னான் “உங்கள் பாராட்டு தலுக்கு நன்றி. ஆனால் துணிவு எதையும் நான் காட்ட வில்லையே.

“கோட்டைத் தலைவன் இதழ்களில் இருந்த புன் முறுவல் மேலும் விகசித்தது. “என்ன! துணிவைக் காட்ட வில்லையா?” என்று வினவினான் குரலில் வியப்பு ஒலிக்க.

“இல்லை.” என்றான் இளையபல்லவன் சகஜமாக.

“இந்தச் சுவரிலுள்ள பட்டயங்களைப் படிக்க வில்லையா?” என்று மறுமுறை வினவினான் கோட்டைத் தலைவன்.

“படித்தேன்.” இந்தப் பதிலும் சம்பிரதாய முறையில் நிதானமாக வந்தது.

“இவை மாண்டவர்கள் பட்டயங்கள்.

“ஆம்.

அவற்றிலேயே குறிப்புகளிருக்கின்றன.

“இந்த அறைக்கு வந்ததும் மறைந்தவர்கள்.? “அதை நீங்களே கூறினீர்கள்.

“அவர்களை நான் ஏன் கொன்றிருக்கக் கூடாது?”

“கொன்றிருக்கலாம்!”

“கொன்றிருக்கலாமா! அதிலும் சந்தேகமா?”

“ஆம். அவசியமிருந்தால் கொன்றிருப்பீர்கள். அவசிய மில்லாவிட்டால் ஏன் கொல்ல வேண்டும்?”

இளையபல்லவனின் இந்தக் கடைசிக் கேள்வியும், அது வெளியிடப்பட்ட போதிருந்த தொனியும் முக பாவமும் கோட்டைத் தலைவனை ஓர் உலுக்கு உலுக்கின. தான் கொலை செய்ததைக் கிட்டத்தட்டச் சரியென்று இளையபல்லவன் ஓப்புக்கொள்வதைக் கவனித்த கோட்டைத் தலைவன் இயத்தில், ‘நம்மைவிட இவன் பெரிய கொலைகாரனோ?’ என்ற சந்தேகம் உதயமாயிற்று. இருப்பினும் அதை வெளிக்குக் காட்டாமல், “கொலையை ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று வினவினான்.

ஆம்.

“நீங்களும் கொலை செய்வீர்களா?”

“எவ்வளவோ பேரைக் கொன்றிருக்கிறேன்.

“அவசியத்தாலா?”

“அவசியமில்லாமல் நான் எதையும் செய்வதில்லை. உதாரணமாக...” என்று மெள்ள இழுத்தான் இளைய பல்லவன் கண்களைச் சற்றுக் ழே தாழ்த்திய வண்ணம்.

தாழ்த்திய கண்களை அந்தக் கண்களுடன் கலக்க முயன்ற கோட்டைத் தலைவனின் வஞ்சகக் கண்கள் தோல்வியடைந்தன. கண்களைத் தன் மடியை நோக்கி நன்றாகத் தாழ்த்திக் கொண்டான் இளையபல்லவன். ஏதோ உதாரணம் சொல்ல முயன்று நிறுத்தக்கொண்ட இளையபல்லவன் குரலிலிருந்த ஏளனமும் கோட்டைத் தலைவனைப் பெரிதும் திகைக்க வைத்தது. “ஏதோ சொல்ல முற்பட்டு நிறுத்திவிட்டீர்கள், “ என்றான் கோட்டைத் தலைவன்.

“உதாரணம் சொல்ல முற்பட்டேன்.” என்றான் இளையபல்லவன்.

“சொல்லுங்கள்.” என்றான் கோட்டைத் தலைவன்.

திடீரென்று அந்த அறையே சுழல்வது போலிருந்தது கோட்டைத் தலைவனுக்கு. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்துவிட்ட அந்தத் துணிகரச் செயல் எதற்கும் சலனப் படாத அவன் புத்தியைப் பெரிதும் குழப்பியதன்றி இணையற்ற பீதியையும் விளைவித்தது. அத்தனையும் ஏதோ ஜால வித்தைபோல் நிகழ்ந்தது. “சொல்லுங்கள்” என்று தன் வாயிலிருந்து வார்த்தை உதிருமுன்பாக இளைய பல்லவன் கச்சையில் இருந்த குறுவாள் இமை கொட்டு வதற்குள் தன்னை நோக்கிப் பறந்துவிட்டதையும், அப்படிப் பறந்த குறுவாள், தன் கழுத்தின் வலப்புறத்துக் கருகில் உராய்ந்து சருமத்தை இம்மியும் தொடாமல் கழுத்தை மறைத்த அங்கியை மட்டும் பிரித்து ஆசனத்தில் வைத்துத் தன் கழுத்தை அப்படியோ இப்படியோ அசையாமல் தடுத்துவிட்டதையும் கண்டு, சிந்திக்கவும் சக்தியில்லாமல் பிரமை பிடித்து ஆசனத்தில் அப்படியே சாய்ந்துவிட்டான் கோட்டைத் தலைவன்.

அறைக்குள் வகையாகத் தங்களிடம் சிக்கியிருப் பவன் தங்கள் தலைவன்மீது குறுவாளைத் திடீரென எடுத்து வீசுவானென்பதைச் சொப்பனத்திலும் எதிர் பார்க்காத வாள் பிடித்த வீரரும் கையிலிருந்த வாள்களை உபயோ௫க்கவும் அஞ்சி சில விநாடிகள் அசைவற்று நின்றனர். முதல் கலவரம் நீங்கியதும் வாள்களை உருவப்போன அந்த வீரர்களை, கோட்டைத் தலைவனின் சுரம் செய்த சமிக்ஞை தடுத்தது.

அந்தச் சமிக்ஞையைக் கண்ட இளையபல்லவன் கோட்டைத் தலைவனை நோக்க, “தலைவரே! நீங்கள் தீரம் மிகுந்த அறிவாளிதான்.” என்று பாராட்டினான்.

“எந்த விதத்தில் அறிவாளி?” தான் குறுவாளை வீசிக் கழுத்தை அசைய முடியாமல் ஆசனத்தில் புதைத்ததும் அடைந்த பிரமிப்பை வெகு சீக்கிரம் விலக்கிக் கொண்டு தனக்குக் கேள்வி போடத்துவங்கிய கோட்டைத் தலைவன் நிதானத்தைக் கண்டு பெரும் வியப்பெய்திய இளைய பல்லவன் மிகுந்த அபாயமான ஒரு மனிதனுடன் தான் உறவாட வேண்டுமென்பதைப் புரிந்து கொண்டானாகை யால், “வாள்களை உபயோகப்படுத்த வேண்டாமென வீரார்களுக்குச் சமிக்ஞை செய்தது அறிவாளியின் செய்கை.” என்றான் இளையபல்லவன் உணர்ச்சி ஏதும் காட்டாமலே.

“உங்களை அவர்கள் கொல்லாமல் தடுத்தது அறிவின் அத்தாட்சியா!” கோட்டைத் தலைவன் கேள்வியில் ஏளனமிருந்தது.

“இல்லை, உங்களை நான் கொல்லாமல் தடுத்தது” என்றான் இளையபல்லவன்.

“புரியவில்லை எனக்கு.

“புரியச் சொல்கிறேன் கேளுங்கள், கோட்டைத் தலைவரே! என் கச்சையின் குறுவாள் மட்டுமல்ல, இதோ இடையில் தொங்கும் நீண்ட வாளும் வேகத்துடன் வினை விளைக்க வல்லது. இஷ்டப்பட்டிருந்தால் குறுவாளை உங்கள் கழுத்தின் நடுப்பகுதியை நோக்கி வீசி உங்கள் ஆயுளை நான் முடித்திருக்கலாம். என் உறுதியை உங்க ளுக்குக் காட்டவும் உங்கள் அந்தரங்க அறைகூட உங்க ளுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்கவுமே குறுவாளை உங்கள் கழுத்தின் இடது பக்கத்துக்காக வீசி அங்கியை ஆசனத்தில் புதைத்தேன். உங்கள் வீரர்கள் வாள்களை ஓங்கியிருந்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் என் நீண்ட வாள் உங்கள் ஊட்டியில் பாய்ந்திருக்கும். உங்களுக்கு அது புரிந்திருக்கிறது. மனிதர்களையும் அவர்கள் திறமையையும் ஆராயும் சக்தி உங்களுக் இருக்கிறது. இதையெல்லாம் அறிந்துதான் உங்கள் நட்பையும் உதவியையும் நாடி நான் அக்ஷயமுனை வந்தேன். நீங்கள் என்னையோ நான் உங்களையோ கொல்லும் நிலையில் இல்லை.” என்று சர்வசாதாரணமாக ஏதோ கதை சொல்பவன் போல் விளக்கிய இளைய பல்லவன் திடீரென ஆசனத்திலிருந்து எழுந்து கோட்டைத் தலைவன் கழுத்தை அசையவொட்டாமல் செய்திருந்த குறுவாளை எடுத்துத் தன் கச்சையில் மீண்டும் செருகிக் கொண்டான். அது மட்டுமின்றி, “ஏன் இவர்களை அனுப்பி விடலாமே.” என்று வீரர்களைக் கையால் சுட்டியும் காட்டினான்.

இளையபல்லவனின் செயல்களும் பேச்சும் பெரும் விந்தையாயிருந்தன கோட்டைத்தலைவனுக்கு. அத்தகைய ஒரு விசித்திர மனிதனை அவன் அதுவரை கண்டதில்லை. அந்த மனிதனால் தன்னைத் தாழ்த்தவோ உயர்த்தவோ நிச்சயமாய் முடியும் என்று தீர்மானித்துக் கொண்ட கோட்டைத் தலைவன், தன் வீரர்களைக் கொண்டு அந்த அறையிலேயே அவனை ஒழித்துவிடலாமா என்று மீண்டும் சிந்தித்தான். ஆனால் அதனால் விளையக்கூடிய ஆபத்தை எண்ணி, [இவனை ஒழிப்பதானால் அதற்கு இடம் இந்தக் கோட்டையல்ல, சமயமும் இதுவல்ல’ என்று தீர்மானித்துக் கொண்டு இளையபல்லவன் கூறியபடி அறையை விட்டுச் செல்லுமாறு வீரர்களுக்குப் பணித்தான்.

வீரர்கள் சென்றதும் கோட்டைத் தலைவனுக்கு நேர் எதிரில் வந்து நின்றுகொண்ட இளையபல்லவன், “தலைவரே! நான் பயங்கர விரோதி என்பதை உங்களுக்கு நிரூபித்தாகிவிட்டது. சிறந்த நண்பன் என்பதை நிரூபிக்கிறேன். உங்கள் கையிரண்டையும் ஏந்துங்கள்.” என்று உத்தரவிடும் தோரணையில் கூறினான்.

அதன்படி கையேந்திய கோட்டைத் தலைவனின் கைகளில் இளைய பல்லவன் கச்சையிலிருந்த பட்டுப் பையிலிருந்து கொட்டப்பட்ட நான்கு பொருள்கள் உருண்டன. உருண்ட அந்தப் பொருள்களைப் பார்த்த கோட்டைத் தலைவனின் கண்கள் அவற்றைப் பார்த்துக் கொண்டே இருந்தன. அறையில் அதுவரை நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் அவன் சித்தத்திலிருந்து மறைந்தன. கண்களில் விவரிக்க இயலாத வியப்பும் வெறியும் படர்ந்தன. அந்த வியப்பும் வெறியும் கலந்த கண்கள் பயபக்தியுடன் இளைய பல்லவளையும் ஏறெடுத்து நோக்கின. உருண்டவை நான்கு, அவற்றில் புரண்டது பெருங்கதை.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 7

அசைந்த சிலை

கச்சையிலிருந்த பட்டுப் பையை எடுத்து அவிழ்த்துக் கண நேரத்தில் தனது கையில் இளையபல்லவன் உருட்டி விட்ட நான்கு பெரும் நல்முத்துகளையும், விழித்த விழிகள் நிலைத்தபடியே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் அக்ஷ்யமுனைக் கோட்டையின் தலைவன். இயற்கை யாகவே மிகப் பெரியதாக இருந்த அந்த நல்முத்துகள் மீது வடக்குச் சாளரத்தின் வழியாகப் பாய்ந்த காலைக் கதிரவனின் இருகதிர்கள் அந்த முத்துகளை ஏதோ பெரும் உயிர் வாய்ந்த பிம்பங்களைப்போல் ஜொலிக்க வைத்திருந்தன. அவற்றின் இயற்கையமைப்பில், கதிரவன் கதிர்கள் அற்றின் மீது பாய்ந்து கிளம்பிய ஜாஜ்வல்யத்தில் அடியோடு லயித்துவிட்ட கோட்டைத் தலைவன், தனது கரங்களில் அக்ஷ்யமுனைக் கோட்டையையே விலைக்கு வாங்கக்கூடிய பெரும் செல்வம் உருண்டு கிடப்பதை உணர்ந்தான். அவற்றைப் பர்த்ததுமே அவற்றின் மதிப்பை மட்டுமின்றி, அவை சம்பந்தமாகக் கீழ்த்திசைப் பிராந்தி யங்களில் உலாவிய கதைகளையும் நினைத்துப் பார்த்த கோட்டைத் தலைவன், அவற்றைக் கொண்டு வந்த இளைய பல்லவன் அமானுஷ்யமான பிறவியாகத்தானிருக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான். அந்த நான்கு இணையற்ற முத்துகள் பாலித்தீவின் சிற்றரசனுக்குச் சொந்தமாயிருந்ததாகவும், அவற்றைப் பல நாட்டு மன்னர்கள் பல தலைமுறைகளாகக் கைப்பற்ற முயன்றும் பலிக்கவில்லையென்றும், பாலி மன்னர்கள் அவற்றை எங்கே மறைத்து வைத்திருந்தார்களென்பதும் அவன் கேட்டறிந்த விஷயம். அகவே இத்தகைய முத்துகள் இளைய பல்லவன் கையில் கிட்டியது பெரும் விந்தையென நினைத்த அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவன், ‘யாருக்கும் கிடைக்காத இந்த முத்துகள் இவனுக்கு எப்படிக் கிடைத்தன?’ என்று சந்தேகத்துடன் தன்னையே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டான். அத்துடன் அந்த மாபெரும் செல்வத்தைத் தன்னுடையதாக்கிக் கொள்ள வேண்டுமென்ற ஆசையால் வெறிமிகுந்த பார்வையொன் றையும் அவற்றின் மீது உலாவவிட்டான்.

அவன் பார்வையையும், முகத்தில் ஓடிய சிந்தனைக் குறிகளையும் விடாமல் பார்த்துக் கொண்டு நின்ற இளைய பல்லவன், சற்றுத் தைரியத்துடன் கோட்டைத் தலைவனை முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு, “தலைவரே! எனது நட்பில் லாபமிருப்பதைப் புரிந்து கொண்டீரல்லவா?” என்று வினவினான் ஏளனம் கலந்த இளநகையுடன்.

கோட்டைத் தலைவன் தலை தூக்கி அவனைப் பார்த்தாலும் அவன் கண்கள் எதிரேயிருப்பவனை ஆராயும் சக்தியை இழந்திருந்தனவாகையால் இளைய பல்லவனின் இதழ்களில் தவழ்ந்த இளநகையையோ ஏளனத்தையோ அவை கவனிக்கவில்லை. ஏதோ சொப்பனத்திலிருப்பவன் குரலில் கேட்டான் கோட்டைத் தலைவன், “உமது நட்பில் என்ன பலன் இருக்கிறது? “ என்று.

“உமது கைகளிலிருப்பதே போதிய பலனல்லவா?” என்று மெல்ல வினவினான் இளையபல்லவன்,

இளையபல்லவன் கேள்வியில் எத்தகைய பதற்றமோ இகழ்ச்சியோ இல்லாவிட்டாலும், அதைக் கேட்ட கோட்டைத் தலைவன் ஏதோ விஷக்கடி பட்டவன் போல் துள்ளி ஆசனத்தில் உட்கார்ந்தான். “என்ன? இன்னொரு முறை சொல்லுங்கள்?” என்று வினவினான் அவரச அவசரமாக.

“உங்கள் கையிலிருப்பதே போதிய பலனல்லவா என்றேன்!” என்று கேள்வியை மீண்டும் திருப்பிச் சொன்னான் இளையபல்லவன்.

“அப்படியானால்.. .?” மென்று சிரமப்பட்டு மீதி வார்த்தைகளை விழுங்கினான் கோட்டைத் தலைவன்.

“முத்துகள் உங்களுக்கு நான் அளிக்கும் பரிசு.” சாதாரண தானமளிப்பவன் போல் பதில் சொன்னான் இளையபல்லவன்.

“உண்மையாகவா?”

ஆம்.

“நான்குமா!”

ஆம்.

- “இவற்றின் மதிப்பு உமக்குத் தெரியுமா?”

“முத்துகள் கொழிக்கும், முத்துகள் எடுக்கும் தமிழகத்தில் பிறந்தவன் நான். “இவை அத்தகைய சாதாரண முத்துகள் அல்ல.

இன்று நேற்று எடுக்கப்பட்டவை அல்ல.”

“நெடுநாட்களுக்கு முன் எடுக்கப்பட்டதானாலும் தமிழகத்தின் முத்துகள் இவை.

“எப்படித் தெரியும் உமக்கு?”

“இவற்றின் வெண்மையிலிருந்து கதிரவன் கதிர் களோ, விளக்கின் சுடரொளியோ படும்போது வைரங்கள் போல் மாறுவதிலிருந்து.

“இதைக் கேட்டதும் மீண்டும் தனது கைகளை நோக்கினான் கோட்டைத் தலைவன். கதிரவன் ஒளியில் அந்த முத்துகளின் பிரகாசம் ஆயிரம் மடங்கு உயர்ந் இருந்தது. உண்மைதான் உண்மைதான்” என்று தனக்குத் தானே பைத்தியக்காரன் போல் சொல்லிக்கொண்ட கோட்டைத் தலைவன், “இந்த முத்துகள் பாலித் தீவிலிருந்தன?” என்றான் இளையபல்லவனை நோக்கி.

“ஆம்” என்பதற்கு அறிகுறியாக தலையசைத்தான் இளைய பல்லவன்.

“இவை எப்படி உமக்குக் இடைத்தன ?”

“பாலி மன்னர் கொடுத்தார்.

“தாமாகவா?”

“ஆம்.

“இதை நான் நம்பவில்லை.” கோட்டைத் தலைவன் முத்துகளைக் கைகளில் இறுகப் பிடித்த வண்ணம் ஆசனத்திலிருந்து எழுந்து இளையபல்லவனை நன்றாக ஏறிட்டு நோக்கிவிட்டுச் சொன்னான் “இந்த முத்துகளைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.

“நீங்கள் முத்துகளை ஆராய்ந்தபோதே புரிந்து கொண்டேன்.” என்று இளையபல்லவன் ஆமோதித்தான்.

“இவை பாலி அரசர்களின் குடும்ப தனம்,” என்று சுட்டிக் காட்டினான் கோட்டைத் தலைவன்.

“ஆம்”.

“இவற்றை அவரிடமிருந்து விலைக்கு வாங்கப் பல அரசர்கள் முனைந்தார்கள்.

“அப்படித்தான் கேள்வி.

“ஆனால் பாலி மன்னர்கள் கொடுக்கவில்லை.

“அதுவும் கேள்வி உண்டு.

“உமக்கு மட்டும் ஏன் கொடுத்தார்கள்?”

“இப்பொழுது பாலியிலுள்ள மன்னருக்கு யாரும் செய்ய முடியாத உதவியைச் செய்தேன்.

“கோட்டைத் தலைவன் முகத்தில் கேள்விக்குறி பலமாக எழுந்து நின்றது. “கொள்ளைக்காரன் என்ன உதவியைச் செய்ய முடியும் அரசருக்கு?”

“மற்றவர்கள் செய்யமுடியாத உதவியைக் கொள் ளைக்காரன் செய்ய முடியும். கொள்ளைக்காரன் செய்ய முடியாத உதவியை மற்ற யாரும் செய்ய முடியாது.” என்று புதிர் போட்ட இளையபல்லவன் மெல்ல நகைக்கவும் செய்தான்.

“அத்தகைய பெரும் உதவிதான் என்ன?” என்று கேட்ட கோட்டைத் தலைவனின் குரலில் சந்தேகம் துளிர்த்தது.

இளையபல்லவன் அந்தச் சந்தேகத்தைக் கவனித் தானானாலும் கவளனிக்காதவன் போல், “தலைவரே! / உமது இந்தக் கோட்டை பாழாக்கப்படாமலும் உமது குடும்பப் பெண்கள் கற்பழிக்கப்படாமலும் பாதுகாக்க என்ன கொடுப்பீர்கள்?” என்று கேட்டான்.

“எதையும் கொடுப்பேன்.” விநாடி நேரத்தில் எழுந்தது கோட்டைத் தலைவன் பதில்.

“அப்படிக் கொடுக்கப்பட்ட முத்துகள் இவை.” என்று விடையிறுத்த இளையபல்லவன் ஒரு விநாடி ஏதோ சிந்தித்துவிட்டு, “தலைவரே! பாலித்தீவு அகூதாவின் கொள்ளைக் கூட்டத்தால் தாக்கப்பட்டதை அறிவீர் களல்லவா?” என்று வினவினான்.

“ஆம் அறிவேன்.” என்றான் கோட்டைத் தலைவன்.

“அந்தத் தாக்குதலை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தவன் நான். அதற்காக அகூதா தமது பெரும் போர்க் கப்பல்களில் ஒன்றை எனக்கு வெகுமானமாகக் கொடுத்தார். அகூதாவின் கொள்ளைக்காரர்கள் பாலித் தலைநகரில் புகுந்து கொள்ளையடித்துச் சூறையாடிப் பெண்களை நாசம் செய்ய முற்பட்டார்கள். என்னிட மிருந்த வீரர்களைக் கொண்டு அந்த பாதகச் செயல்களை நிறுத்தனேன். கொள்ளைக் கூட்டம் சூழ்ந்திருந்த அரண் மனைக்குள் புகுந்து மன்னரையும் அவர் குடும்பத்தையும் காப்பாற்றினேன். அவருக்கும் அகூதாவுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தத்தையும் முடித்து, கொள்ளைக்காரரைக் கட்டுப்பாட்டுடன் பாலியிலிருந்து வெளியேற்றினேன். தமது குடும்பத்தையும் நகரத்தையும் சீரழிவதிலிருந்து காப்பாற்றியதற்காகப் பாலி மன்னர் இந்த முத்துகளைப் பரிசாக அளித்தார்.” என்று இளையபல்லவன் முத்துகள் தனது கைக்கு வந்த வரலாற்றை விவரித்தான்.

அவன் பேச்சைக் கேட்கக் கேட்கப் பெரும் வியப்பா யிருந்தது கோட்டைத் தலைவனுக்கு. “நகரங்களைச் சூறை யாடலிலிருந்து காப்பாற்றுவதும், மன்னர் குடும்பத்தையும், பெண்களையும் மானபங்கத்திலிருந்து காப்பதும் கொள் ளைக்காரன் செய்கையாக இல்லையே?” என்று உள்ளுக்குள் எண்ணமிட்ட கோட்டைத் தலைவன், “நீர் கொள்ளைக்காரரா, அரசாங்கக் கடற்படைத் தளபதியா?” என்று வெளிப்படையாகக் கேட்கவும் செய்தான்.

“இரண்டுமாக இருக்க உத்தேசிக்கிறேன், “ என்று இளையபல்லவன் பதில் கூறினான்.

இதைக் கேட்டதும் வியப்புடன் விழிகளை உயர்த்திய கோட்டைத் தலைவன், “அதெப்படி முடியும் இளைய பல்லவரே! அரசாங்கங்களின் கடற்படை, சில கட்டுப்பாடு களுக்கும் நீதி வரம்புகளுக்கும் உட்பட்டது. கொள்ளைப் படை அத்தகைய வரம்புகளுக்கு உட்படாதது.” என்று விளக்கினான்.

“இரண்டிலுமிருக்கிற நல்ல ஆம்சங்களை எடுத்துக் கொள்கிறேன். கொள்ளைக்காரர், கட்டுப்பாடுடைய மாலுமிகளைவிடத் துணிவுள்ளவர்கள், உயிரைப் பணயம் வைத்து எந்த அளவிலும் ஈடபடக்கூடியவர்கள். கட்டுப் பாடுடைய கடற்படை கண்டபடி எல்லோர் மரக்கலங் களையும் தாக்க முடியாது. சில நெறிகளுக்கும் உத்தரவு களுக்கும் அந்தந்த அரசாங்க உடன் படிக்கைகளுக்கும் உட்பட்டது. கொள்ளைக்காரர்களுக்குள்ள துணிவையும் அரசாங்கக் கடற்படையின் கட்டுப்பாட்டையும் நெறி யையும் இணைக்க நான் முயற்சிக்கிறேன்.” என்று கூறினான் இளையபல்லவன்.

“இரண்டையும் இணைக்க முடியுமா?”

“மூடியும்.”

“இணைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?”

“சிறு கடற்படையைச் சொந்தமாக நிறுவப் போகிறேன்.”

“நிறுவி?”.

சற்று யோசித்த இளையபல்லவன் நிதானமும், உறுதியும் தொனித்த குரவில், “கலிங்கத்தின் கடலாதிக் கத்தை உடைக்கப் ே கிறேன்.” என்று கூறினான். கூறிவிட்டுச் சில விநாடிகள் கோட்டைத் தலைவனைக் கூர்ந்து நோக்கவும் செய்தான்.

கோட்டைத் தலைவன் சில விநாடிகள் யோசித்துக் கொண்டு அறையில் அங்குமிங்கும் உலாவினான். பிறகு நின்று கேட்டான், “கலிங்கத்தின் மீது அத்தனை ஹெறுப்பா உங்களுக்கு?” என்று.

ஆம்.

என்று திட்டமாகக் கூறினான் இளைய பல்லவன்

“ஏன்?”

“கலிங்கத்தின் கடலாதிக்கம் சோழநாட்டுக் கடல் வாணிபத்துக்குப் பெரும் ஆபத்து. இப்பொழுது கடலில் உலவும் தமிழ் வணிகரின் உயிர்களுக்கே உலை வைக்கிறது கலிங்கம். இதை ஒடுக்க வேண்டும்.

“கொள்ளைக்காரருக்கு நாடு, நீத, அபிமானம் என்பது உண்டா?”

“சாதாரணமாகக் கிடையாது.

ஆனால் அவையும் உண்டு என்பதற்கு நான் அத்தாட்சியாக இருக்க விரும்புகிறேன்.

“மறுபடியும் சில வினாடிகள் மெளனம் சாதித்த கோட்டைத் தலைவன், “நான் உமக்கு உதவுவேனென்று எதிர்பார்க்கிறீரா?” என்று வினவினான்.

“எதுர்பார்த்துத்தான் இங்கு வந்தேன்.

“நான் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யாதுபதியின் சேவகன், அவர் கோட்டையின் தளபதி.

“அது தெரியும் எனக்கு.

“ஸ்ரீவிஜயத்தின் சக்கரவர்த்தி கலிங்கத்துடன் நட்பு கொண்டவர்.

“அதுவும் நீங்கள் ஏற்கெனவே சொல்லி இருக்கிறீர்கள்.

“அப்படியிருக்க நான் உங்களுக்கு உதவுவது ராஜத் துரோகமாகாதா!”

“ஆகும்...

ஆனால்...” என்று இழுத்த இளைய பல்லவன் குரலில் விபரீத தொனி துளிர்த்தது.

அதைக் கோட்டைத் தலைவனும் கவனித்தான். ஆகவே, “ஆனால் என்ன?” என்று சிற்றத்துடன் வினவினான்.

“ஆனால் நீங்கள் எந்தப் பக்கம் நியாயமிருக்கிறது என்பதை அறிந்து நடப்பவர் என்பதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இந்த அறைக்கு வந்ததும் அதைப் புரிந்துகொண்டேன்.” என்ற இளையபல்லவன் எதிரே யிருந்த பட்டயங்களில் ஒன்றைச் சுட்டிக்காட்டி, “அந்தப் பட்டயத்திலிருப்பவர் பெயர் ஸ்ரீவிஜயத்தின் உபதளபதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவரையும் கொலை செய்திருக்கிறீர்கள். ஆகவே நீங்கள் அவரவர்களுக்குத் தகுதி யாகவும் சமய சந்தர்ப்பங்களை முன்னிட்டும் முடிவு களைச் செய்வீர்கள் என்பதை உணர்ந்தேன்” என்று கூறினான்.

இதைக் கூறியபோது இளைய பல்லவன் குரலிலிருந்த ஏளனத்தைக் கோட்டைத் தலைவன் கவனிக்கத் தவறவில்லை. சுயநலத்துக்குத் தான் எதையும் செய்ய வல்லவன், யார் பக்கமும் சேர வல்லவன் என்பதை இளையபல்லவன் புரிந்துகொண்டு விட்டானென்பதை உணர்ந்துகொண்ட கோட்டைத் தலைவன் உள்ளத்தில் பெரும் சீற்றம் உருவெடுத்தது. எந்த அயோக்கியனும், தனது அயோக்கியத்தனத்தைப் பிறன் உணர்த்த விரும்புவ தில்லை. ஆகவே தன் அத்மாவையே உற்றுப் பார்த்துத் தன் குணவிசேஷங்களை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் இளையபல்லவன் அலசிவிட்டதும் அதில் ஆக்ரோஷ மடைந்த கோட்டைத் தலைவன், “உமக்கு உதவ நான் மறுத்தால்?” என்று இரைந்து அந்த அறையே கிடுகிடுக்கும் படியாகக் கூவினான்.

அந்தக் கூச்சலை இளையபல்லவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அறைகூட அவன் நினைப்பிலிருந்து நீங்கியது. அவன் கண்கள் அந்த அறையின் ஒரு மூலையை நோக்கி நிலைத்தவை நிலைத்தபடி நின்றன. அங்கிருந்தது ஒரு சிலை. அது மெள்ள அசையவும் செய்தது. ஏதோ பிரமை பிடித்தவன் போல் அதைப் பார்த்துக்கொண்டே நின்றான் இளையபல்லவன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் – 8

மஞ்சளழகி

“உமக்கு நான் உதவ மறுத்தால்?” என்ற கோட்டைத் தலைவனின் அக்ரோஷக் கூச்சலைக்கூட அறிவில் புகவொட்டாமல் தடுத்துத் தன்னைப் பெரும் பிரமைக்கு உள்ளாக்கிக் கொண்டு அறைக் கதவுக்கருஇல் சிறிதும் அசையாமல் சலையென நின்ற சித்தினிப் பெண்ணை இமை கொட்டாமல் பார்த்து நின்ற இளையபல்லவன், அந்த அழகுச்சிலை அசையவும் ஆரம்பித்தபின் அதன் நடை ஓஒய்யாரத்திலும் மனத்தைப் பறி கொடுத்தான். அதுவரையில் தான் வாழ்வில் கண்ட எந்தச் சாதியையும், அந்த வடிவழக சேர்ந்தவளல்லவென்பதைப் பார்த்த மாத்திரத்தில் புரிந்நுகொண்டாலும், அவள் எந்தச் சாதி, எந்த நாட்டவள் என்று தீர்மானிக்க முடியாத அளவுக்கு அவள் உடலழகு இடத்துக்கு இடம் மாறுபட்டிருந்ததைக் கவனித்த’ இளையபல்லவன் எங்கோ கானகத்தில் புகுந்தவன் என்றும் காணாத ஒரு புத்தம் புது மலரைக் கண்டு விட்டால் எந்த நிலையை அடைவானோ அந்த நிலையை அடைந்திருந்தான். அவள் முகத்தில் லேசாகச் சீனப் பெண்களுக்கு உள்ள களை இருந்ததேயொழிய, நல்ல கூர்மையாயிருந்த நாசியும், அடர்த்தியாக வளர்ந்திருந்த புருவங்களும் அவள் சீனத்துப் பைங்கிளி அல்லவென்பதை அறிவுறுத்தின. அவள் சரீரச் சருமத்தில் ஓடியிருந்த லேசான மஞ்சள் நிறமும் சீனத்து மாதர் உடலிலுள்ள மஞ்சளைப் போலில்லாமல் மஞ்சள் பூசக் குளித்த பின்னுள்ள உடல் வண்ணத்தை அடைந்திருந்ததால், ஏதோ பக்குவப்பட்ட தங்கம்போல் பளிச்சிட்டது. நன்றாக எழுந்து வளைந்திருந்த அவள் கன்னக் கதுப்புகளும் இக அகலமில்லாவிட்டாலும் மிக வசீகரமாகத் தெரிந்த நுதல் பிரதேசமும், உருண்டு தொங்கிய கைகளும், புத்தொளி யொன்றை இயற்கையாகவே பெற்றிருந்ததையும், தெரிந்தும் தெரியாமலுமிருந்த அந்த ஒளியும் அவளைச் சொர்ண தேவதையைப் போல அடித்திருந்ததையும் கவனித்த இளையபல்லவன் மனத்தை விட்டு அகற்ற முடியாத பெரும் விபரீத அழகுக்கு முன்பாகத் தான் நிற்பதை அறிந்து கொண்டான். அத்தனை அழகையும் தோற்கடிக்கும் படியாக அவனை உற்று நோக்கிய விழிகளில்கூட இனங்களிரண்டு கலந்து கடந்தன. அவள் கருவிழிகளைச் சுற்றியிருந்த இடம் அசல் வெளுப்பாயில்லாமல் சற்று செவ்வரி படர்ந்திருந்ததால் சாவகத்தின் குரூரமான பகத் இனத்தாரின் விழிகளைப் போல் அவை இருந்தாலும், விழிகளில் குரூரத்துக்குப் பதில் சாந்தமும் விஷமமும் நிலவிக் கிடந்தன. அவள் பார்வையிலிருந்து குணத்தைப் பற்றி எதுவும் சொல்ல முடியாதிருந்தது. வெறுத்த பார்வையல்ல, வஞ்சகப் பார்வையுமல்ல. இருந்தாலும் பார்ப்பவர்களுக்குச் சந்தேகம் தொனிக்கும் பார்வையை அந்த விழிகள் உதிர்த்தன.

காட்டுப் புஷ்பம் போலவே அவள் அவயவங்கள் செழித்துக் கடந்தன. திண்மையான கழுத்தும், சிற்றி டைக்குக் கீழே முன்னும் பின்னுமிருந்த வளர்ச்சியும் இன்ப இச்சை நிறைந்த உள்ளத்துக்கு வெளிச் சான்றுகளாகக் காட்சியளித்தன. உறுதியாக நிலத்தில் ஊன்றிய அவள் கால்கள் மிகுந்த. அழகு படைத்து, கட்டை விரலிலிருந்து மேல் நோக்கு நோக்கினால், சிறிதாகத் துவங்கப் பெரிதாகக் கடலுக்கு அருகே விரியும் அழகுள்ள நதியையும் தோற் கடிக்கும் வண்ணம் அமைந்திருந்தன.

இத்தனை அழகுகளைத் தாங்கு, நல்லவளா, பொல் லாதவளா, சீனத்துப் பெண்ணா, வேறு நாட்டவளா என்று எதையும் ஊகிக்க முடியாத பெரும் புதிராகவும் அசைவற்றும் தின்ற அந்த அழகுச்சிலை அசைய முற்பட்டுத் தன்னை நோக்கி தடக்கத் துவங்கியதும், அவள் தேகத்தின் எழிலிடங்கள் மெல்ல ஆடியும் துள்ளியும் புரண்டும் கூட வந்து இளையபல்லவன் சித்தத்தை எங்கோ இழுத்துக் கொண்டு சென்றன. தலையில் இருந்த அவள் சுருண்ட மயிரில் பல இழைகள் பிரிந்து தொங்கித் தோளில் புரண்டதும், முழுப் பின்னல் மார்பில் தவழ்ந்ததும் சில இழைகள் கன்னத்தைத் தொட்டதும் பெரும் இம்சையை இளையபல்லவன் இதயத்தில் விளைவித்தன. அந்த உணர்ச்சிகள் அவன் சித்தத்தை ஒரு வருடத்துக்கு முன்பாகப் பாலூர்ப் பெருந்துறைக்கு இழுத்துச் சென்றன. வெளிநாட்டுப் பிரமுகர் வீதியின் மாளிகை அறையில் குதிக்க வைத்தது.

அங்கு தான் திரை மறைவிலிருந்த காட்சியும், அடை புனைய வந்த காஞ்சனாதேவியின் தெய்வீக அழகும், அவன் இதயக் கண் முன்னால் தாண்டவமாடின. அன்று தான் ஒளிந்திருந்த திரை அசைந்ததும் அவள் அஞ்சன விழிகள் திடீரென எழுந்து தானிருந்த இடத்தை நோக்கிய வீர தோக்கையும் கண்டான் அவன். இன்று எதிரேயிருந்த கண்களிலிருந்து பயமற்ற, ஆனால் வீரம் என்று சொல்ல முடியாத பேரழகுக் கண்களையும் பார்த்தான். அங்கு அசைந்தது திரை. சீறின அஞ்சன விழிகள். இங்கு அசைந்தது ஒரு சிலை, மயக்கின அழகுக் கண்கள், என்று தனக்குள் எண்ணமிட்ட இளையபல்லவன் இரண்டு அழகிகளுக்கும் உள்ள ஏற்றத் தாழ்வையும் எடை போட முற்பட்டுத் தோல்வியே அடைந்தான். இரண்டும் வெவ்வேறு அழகாயிருந்ததையும், ஒன்றுக்கொன்று சளைக் காததாயிருந்ததையும் அறிந்து கொண்ட இளையபல்லவன் ஒன்று மட்டும் தீர்மானமாகப் புரிந்தகொண்டான். “காஞ்சனாதேவியின் அழகு தூய்மையான ஒற்றை நாட்டு அழகு. அக்ஷயக்கோட்டைச் சித்தினியின் அழகில் எத்தனையோ உயர்விருந்தும் அதில் இரண்டு நாடுகளோ இனங்களோ கலந்திருக்க வேண்டும்” என்று உறுதி செய்து கொண்ட இளையபல்லவன், “எந்த இனம் கலந்தாலும் விவகாரங்களைக் கலக்காமல் அந்த இனங்களின் அழகு களை மட்டும் இணைத்து எதற்காக அண்டவன் இந்த அற்புதத்தைச் சிருஷ்டித்தான்?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். அதில் ஒரு முடிவுக்கும் வந்தான். “இது அழகுதான். ஆனால் அஞ்சத்தக்க அழகு,’ என்று முடிவுசெய்த இளையபல்லவன் எதிரேயிருந்த கோட்டைத் தலைவன்மீது தன் கண்களைத் திருப்பினான். ஆனால் கோட்டைத் தலைவன் அவன் கண்களுக்குப் புலப்படவில்லை.

இளையபல்லவன் சிந்தனையைப் பலவிதங்களில் புரட்டிக்கொண்டே அசைந்து அசைந்து நடந்து வந்த அந்தப் பேரழகி அவன் அராய்ச்சி முடிவதற்குள் கோட்டைத் தலைவனுக்கும் இளையபல்லவனுக்கும் இடையே வந்துவிட்டதல்லாமல், கோட்டைத் தலைவ னுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு இளையபல்லவனை நோக்கித் திரும்பியும் நின்றதால், சோழர் படைத் தலைவன் தன் கண்களைத் தூக்கியபோது எதிரே அவள் எழில் அவனை நோக்கிற்று. சிருங்கார ரஸமடங்கிய பெரும் கவியின் ஏட்டுப் பிரதிகளைச் சுவையுடன் பார்க்கும் ரஸிகனின் பார்வையுடன் அவளை நோக்கிய இளைய பல்லவன், தன் சித்தத்தை அடியோடு சீரழிக்கும் நோக்கத்துடன் இயற்கை வளர்த்துவிட்ட பெரும் புஷ்பங் களைத் தாங்கிய ஒரு பூவுடற் செல்வி தன் விழிகளுக் கெதிரெ நிற்பதைக் கண்டான். சிறிது சலனமும் அடைந் தான். சலனம் என்ன? சங்கடமும் அடைந்தான்.

அவளை அப்படி நோக்குவதும், சலனத்துக்கு உட்படுவதும் காஞ்சனாதேவியிடம் தான் கொண்டுள்ள காதலுக்குப் பெரும் இழுக்கு என்று நினைத்துச் சிந்தனையை வேறு திக்கில் இழுக்க முயன்ற இளைய பல்லவன் எப்படிச் சிந்தனை தன் வசமில்லை என்பதை அந்தச் சில விநாடிகளில் புரிந்துகொண்டான். புத்தியின் புறத்தோற்றமான கண்ணெனும் வாயில் வழியாக அவள் எழில் தன் சித்தத்துக்குள் நுழைந்து வேறு நினைப்புக்கே அங்கு இடமில்லாமல் செய்து விட்டதைப் புரிந்துகொண்ட இளையபல்லவன் செய்வதறியாமல் இணறினான். இந்தச் சமயத்தில் கோட்டைத் தலைவனாவது உதவிக்கு வந்திருக் கலாம். ஆனால் என்ன காரணத்தாலோ கோட்டைத் தலைவன் ஆக்ரோஷக் கூச்சல் திடீரென அடங்கியது. “உனக்கு உதவ மறுத்தால்?” என்று அவன் ஆரம்பத்தில் இட்ட கூச்சலுக்குப் பின் அவன் எதுவுமே பேசவில்லை. இளையபல்லவன் கண்கள் சென்ற திக்கையும், அவன் பிரமையையும் கவனித்த கோட்டைத் தலைவன் முகத்தி லிருந்த ஆக்ரோஷம் திடீரென மறைந்து வதனத்தை மந்தகாசம் ஆட்கொண்டது. அந்த மந்தகாசத்தின் ஊடே வஞ்சகப் பார்வையொன்றும் புகுந்தது. அவன் முகத்தில் திடீரென ஏதேதோ எண்ணங்கள் புகுந்து மறைந்து கொண்டதற்கான அறிகுறிகள் ஒரு விநாடி தெரிந்தன. பிறகு அவன் ஏதோ முடிவுக்கு வந்துவிட்டதையும் அந்த முடிவில் அவனுக்குப் பெரும் திருப்தியும் இருந்ததும் மந்தகாசத்தில் விரிந்து கிடந்தது.

இளையபல்லவனின் அழகு ஆராய்ச்சியைக் கோட்டைத் தலைவன் மிகுந்த நிதானத்துடன் பார்த்துக் கொண்டே நின்றான். அந்தப் பெண்ணின் அழகுக்கடலில் இளையபல்லவன் அமிழ்ந்து போவதைக் கண்டு அக மகிழ்ந்து போனதற்கு அறிகுறியாக அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவனின் அதரங்கள் மெல்லப் புன் முறுவல் கோட்டின. அந்த அனந்தப் புன்முறுவல், அவன் இளையபல்லவனை வலியப் பிணைக்கவல்ல பல திட்டங்களை வகுத்து விட்டதற்கான சாந்தியையும் அவன் மனத்தில் நிரப்பியது. ஆகவே அந்த அழகி தங்களிரு வருக்கும் இடையே வந்து தனக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நின்றதைப்பற்றி அவன் சிறிதும் லட்சியம் செய்யாமல் இரண்டடி பின் சென்று பழையபடி தன் ஆசனத்தில் உட்கார்ந்துகொண்டு, அவர்களிருவர் பேச்சின் போக்கைக் கவனிக்க முற்பட்டான்.

இளைய பல்லவனுக்கு முன் வந்து திடமாகவும், ஆனால் பெரும் ஒய்யாரத்துடனும் இடையில் ஒரு கையை முட்டுக் கொடுத்து நின்ற அந்த அழகுச் சிலை தன் செவ்விய அதரங்களைப் பிரித்து, “நீங்கள் மகா வீரர் என்பதைப் புரிந்து கொண்டேன்.” என்ற சொற்களை உதிர்த்ததன்றி, தன் தலையையும் ஒருபுறம் வணக்கத்துக்கு அறிகுறியாக ஒருக்களித்தாள்.

அதரத்தின் அபரிமிதச் சிவப்பு, தான் சற்று முன்பு கோட்டைத் தலைவனுக்குப் பரிசளித்த முத்துகளை விடச் சிறந்த நான்கு பற்கள், வீணையின் நாதம் போல் உதிர்ந்த சொற்கள் எல்லாம் இளையபல்லவன் இதயத்தைக் கொள்ளை கொண்டன. அந்த அழகுச் சிலைக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தான் அவன், பிறகு மெள்ள ஒற்றைச்சொல்லை வெளியிட்டான், “நன்றி” என்று.

அவள் மெல்ல நகைத்துவிட்டுப் பதில் சொன்னாள் “உங்களுக்கு அடக்கமும் இருக்கிறது.” என்று.

“நன்றி.” இரண்டாம் முறையும் இளையபல்லவன் அதே பல்லவியைப் பாடினான்.

அவளது பெரும் புருவங்கள் நெற்றியை நோக்கி வியப்புக்கு அறிகுறியாக எழுந்தன. “வெட்கமும் இருக்கிறது உங்களுக்கு.” என்றாள் அவள் மறுபடியும் நகைத்து.

அவள் நகைப்பு பெரும் இன்பமாகத்தானிருந்தது, இளையபல்லவனுக்கு. இருந்தாலும், திரும்பத் திரும்ப அவள் தன் குணாதிசயங்களை விவரித்ததால் பொறுக்காத அவன் தன் கைவரிசையையும் காட்டத் தொடங்கி, “சில சமயங்களில் அந்தக் குணம் ஆண்களுக்கும் தேவையா யிருக்கிறது.” என்றான் மெதுவாக.

அவன் பதிவில் புதைந்து கடந்த பொருளை நொடிப் பொழுதில் புரிந்தகொண்டாள் அவள். பெண்கள் சில சமயங்களில் காட்டும் நாணக்குறைவைக் குத்திக் காட்டவே அவன் அப்படிப் பதில் சொல்லியிருக்கிறா னென்பதை அறிந்துகொண்ட அவள், “உங்களுக்கு விஷமமும் இருக்கிறது” என்றாள் நான்காம் முறையாக.

“என்ன!” வியப்புடன் கேட்டான் இளையபல்லவன்.

“நீங்கள் மாவீரர் என்றேன் - அடக்கத்தைக் காட்டினீர்கள். உங்களுக்கு அடக்கமிருக்கிறதென்றேன் வெட்கத்தைக் காட்டினீர்கள் வெட்கமிருக்கிறதேன்றேன் என்னைக் குத்திக் காட்டி உங்களுக்கு விஷமமும் உண்டு என்பதை நிரூபித்தீர்கள். அடக்கம், வெட்கம், விஷமம் ஆகிய குணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றாள் அவள் உள்ளத்தைத் திறந்து காட்டி.

“ஏன்?” அவளுக்குப் பதில் சொல்லத் தெரியாததால் ஏதோ கேட்க வேண்டும் என்பதற்காக அந்த ஒற்றைச் சொல்லை உதிர்த்தான் இளையபல்லவன்.

“அடக்கம் வீரத்துக்கு அடையாளம். வெட்கம் பண்பாட்டுக்கு அடையாளம். விஷமம் ரசிகத் தன்மைக்கு அடையாளம்.” என்று அவள் பதில் சொல்லி அவனைப் பயமின்றி ஏறெடுத்துப் பார்த்தாள்.

இத்தனை சம்பாஷணைக்குப் பிறகும் இளைய பல்லவன் ஒரு நிலையை அடையாமலே தத்தளித்தான். இருப்பினும் சமாளித்துக்கொண்டு, “மனோதத்துவத்தை நீங்கள் நன்கு அறிந்து கொண்டிருக்கிறீர்கள், “ என்று கூறினான்.

பதிலுக்கு அவள் அடக்கத்தைக் காட்டவுமில்லை, நன்றி கூறவுமில்லை. “ஆம் ‘‘ என்று சர்வசாதாரணமாக ஒப்புக்கொண்டாள். அந்த “ஆம்’ அந்தப் பாராட்டுதல் தனக்குத் தகும் என்பதை ஒப்புக்கொள்வதுபோல் இருந்தது. இதனால் வியப்புடன் அவளை ஏறெடுத்துப் பார்த்த இளையபல்லவனை நோக்கி அவள் நகைத்துவிட்டு, “உங்கள் பாராட்டுதலை நான் ஒப்புக்கொண்டது உங்களுக்கு வியப்பாயிருக்கலாம். ஆனால் நீங்கள் சொன்னதில் தவறேதுமில்லை. எனக்கு மனோதத்துவம் தெரியாதிருந்தால் இந் அக்ஷயமுனையில் நான் ஒருநாள் ஜீவித்திருக்க முடியுமா? கொள்ளையர் நடுவில் பயமின்றி உலாவ முடியுமா?” என்றாள்.

“கொள்ளையர் நடுவில் உலாவுவீர்களா!” மிகுந்த ஆச்சரியத்துடன் எழுந்தது இளையபல்லவன் கேள்வி. “கற்பையோ ஒழுக்கத்தையோ இம்மியளவும் மதிக்காத கொள்ளையர் கூட்டத்தில் இத்தகைய ஒரு பெண் சிக்கினால்.. .?’ நினைக்கவும் பயந்தான் இளைய பல்லவன்.

அவன் முகபாவத்தை அந்த அழகி கவனித்தாள். நகைத்துவிட்டுச் சொன்னாள், “உங்கள் வியப்புக்குக் காரணமிருக்கிறது. என்னுடன் பழகிய பலரும் உங்களைப் போல் வியப்படைந்திருக்கிறார்கள்...ஆனால் இதில் எனக்கு வியப்பில்லை. கொள்ளைக்காரரிடம் எனக்கு அச்சமில்லை. அவர்களுக்குத்தான் என்னிடம் அச்சமிருக் கிறது. நான் இஷ்டப்பட்டால் அவர்கள் என்னைச் சுற்றி வளைக்கலாம். இல்லையேல் தொலை தூரத்தில் நிற்க வேண்டும்” என்ற அவள் சரேலெனப் பின்னடைந்து, தன் தந்தையும் இளைய பல்லவனும் ஒருவரையொருவர் நேரில் பார்த்துக்கொள்ள இடம் விட்டுத் தன் இடது கையைக் கோட்டைத் தலைவனை நோக்கிச் சுட்டிக்காட்டி, வலது கையைத் தன் மார்பின் மீது வைத்து, “இதோ இருக்கும் என் தந்தை கோட்டையின் தலைவராயிருக்கலாம். கொள்ளைக் காரர்களின் தலைவர் இவரல்ல, நான்தான்!” என்றாள்.

ஏதோ நாட்டிய முத்திரைபோல் மார்பில் வைக்கப் பட்ட இந்தக் கையும், அபிநய பாவங்கள் முகத்தில் துளிர்த்த அழகுக் குறிகளும் இளையபல்லவனைக் கவர்ந்ததன்றி அவள் சொற்களில் தொனித்த எல்லையற்ற துணிவும் அவனுக்கு வியப்பையே அளித்தன. உடல் முமுவதும் மயக்கந்தரும் மஞ்சள் நிறமோடிய அந்த மஞ்சளழகியை நன்றாக ஏறெடுத்து நோக்கிய இளைய பல்லவன் வணக்கத்துக்கு அறிகுறியாகத் தலை தாழ்த்தி, “அப்படியானல் நான் வந்த அலுவல் சுலபமாகிறது?” என்றான்.

“எந்த அலுவல்?” என்று கேட்டாள் அவள் “சில முக்கிய கோரிக்கைகளுடன் தங்கள் தந்தை யிடம் வந்தேன்.

“என்ன சொன்னார்.

“இன்னும் சரியான பதில் இல்லை.”

“உங்களைப் போன்ற கொள்ளைக்காரருக்கு...மன்னிக்க வேண்டும்...வீரருக்கு என் தந்தை எதையும் மறுக்க மாட்டாரே!”

“மறுக்கவில்லைதான். இருந்தாலும்...

“யோசிக்கிறார். அது சகஜம்தானே? ஒரு நாள் அவருக்கு அவகாசம் கொடுங்கள். இன்றிரவு நிகழ்ச்சி முடியட்டும்.” என்ற அவள் திடீரெனத் தன் தந்தையின் பக்கம் திரும்பி, “ஏனப்பா! இன்றைய இரவு நிகழ்ச்சிக்கு இவரையும்...” என்று தொடங்கினாள்.

அடுத்த விநாடி அறை அதிர்ந்தது. “போ உள்ளே, உன்னை யார் வரச் சொன்னது இங்கே?” என்று கூவினான் கோட்டைத் தலைவன். அவன் உணர்ச்சிகளைத் திடீரென அத்தனை தூரம் உலுக்கிவிடக்கூடிய அந்த நிகழ்ச்சி எதுவாயிருக்கும்? ஏதும் புரியாமல் கோட்டைத் தலை வனை நோக்கினான் சோழர் படைத் தலைவன். கோட்டைத் தலைவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 9

முன்னேற்பாடு

அன்றைய இரவு நிகழ்ச்சிக்குத் தன்னையும் அழைக்க வேண்டுமென அந்த அழகுச்சிலை கூற முற்பட்டு வார்த்தையை மூடிக்கா முன்னமே, “உன்னை யார் வரச் சொன்னது இங்கே? போ உள்ளே!” என்று அக்ஷ்யமுனைக் கோட்டைத் தலைவன் அந்த அறையே அதிரும்படியாகக் கூவியதைக் கேட்டதும் சற்றுக் குழம்பவே செய்தான் இளையபல்லவன். எண்ணங்களைச் ிறிதும் புறத்தே காட்டாத ஆழ்ந்த உள்ளம் படைத்த அந்தக் இராதகனே, கட்டுப்பட்ட தன் உணர்ச்சிகளைக் காற்றில் உதறிவிட்டுக் கூவும்படியான அந்த நிகழ்ச்சி யாதாயிருக்கும் என்று யோித்து எதுவும் புரியாததால் கோட்டைத் தலைவனை நோக்கிக் கண்களைத் திருப்பிய இளையபல்லவன், அவன் முகத்தில் கோபம் மிதமிஞ்சித் தாண்டவமாடிக் கொண் டிருப்பதையும், சுடும் கண்களை அவன் தன் மகள் மீது திருப்பியிருப்பதையும் கண்டான். தந்தையின் அந்த உக்கராகாரக் கோபத்துக்கு இலக்கான அந்த அழகியின் நிலை எப்படியிருக்கிறதென்பதைப் பார்க்க அவள்மீது திரும்பிய படைத்தலைவனின் கூரிய கண்கள் மறுகணம் பெரு வியப்பைக் கக்கின. தந்தையின் கூச்சலால் இம்மி யளவும் உணர்ச்சிவசப்படாத அந்த மஞ்சளழக, கோட்டைத் தலைவனை நோக்கி மெளனமாகவே மந்த காசமே செய்தாள். தந்தையின் கூச்சலைக் கேட்டதும் அவள் தலை அவனை நோக்கித் தஇடீரெனத் திரும்பியதில், குழல் அசைந்து மயிரிழைகள் தோளின் இருபுறங்களிலும் விழுந்தன. மருண்ட அவள் செவ்வரி விழிகள் சற்றே துரும்பின. அவ்வளவுதான். மற்றபடி வேறெவ்வித மாறு தலும் அவளிடம் காணப்படவில்லை. ஏற்பட்ட இறு மாறுதல்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்தன வாகையால், அவை மாறுதல்களாகவே இளையபல்லவ னின் கூரிய விழிகளுக்கு மட்டுமென்ன அறிவுக்குக்கூடப் புலப்படவில்லை. இடுப்பில் முட்டுக் கொடுத்த கையைக் கூட எடுக்காமல், இருந்த இடத்தை விட்டு அசையாமல், அஞ்சாமல் சிரித்துக்கொண்டே நின்ற அவள் கண்கள் கோட்டைத் தலைவன் மீதே பல விநாடிகள் நிலைத்தன.

அந்தக் கண்களில் ஏதோ பெரும் சக்தி இருக்க வேண்டுமென்பதைச் சில விநாடிகளுக்குள் புரிந்து கொண்ட இளையபல்லவனின் வியப்பு பன்மடங்கு விரியலாயிற்று. மஞ்சளழகியின் கண்கள், கோட்டைத் தலைவன்மீது நிலைத்த ஒவ்வொரு விநாடியிலும் அவன் முகத்தில் மாறுதல் ஏற்பட்டு வந்ததையும், ஆரம்பத்தில் அதில் விரவிக் இடந்த கோபமும் சிறிது சிறிதாக மறைந்து விட்டதையும் கண்ட இளையபல்லவன். அந்தப் பெண் அந்த அறையில் மட்டுமல்லாமல் அக்ஷய மூனையிலேயே ஒரு பெரும் சக்தியென்பதையும், தன் திட்டங்கள் நிறைவேற அவள் உதவி மிகவும் அவசியமென்பதையும் சந்தேகமற அறிந்துகொண்டான். புலியைப் பழக்குபவனுடைய கண்களைப் பார்க்க முடியாமல் அஞ்சி ஒடுங்கும் புலியைப் போல அந்தத் துஷ்டன் மெள்ள மெள்ள ஒடுங்கி விட்டதையும் கண்ட இளைய பல்லவன், வியப்பு நிரம்பி வழிந்தோடிய விழிகளை மஞ்சளழகிமீது நிலைக்க விட்டான்.

தந்தையைத் தன் பார்வையாலேயே அடக்கிவிட்ட மஞ்சளழக மெள்ள இளையபல்லவனை நோக்கத் திரும்பி முகத்திலிருந்த மந்தகாசத்துடன் சிறிது வருத்தத்தின் குறியையும் கலந்துகொண்டு, “வீரரே! மன்னிக்க வேண்டும். தந்தை சில சமயங்களில் இப்படித் தான் நிதானத்தை இழந்துவிடுகிறார். உட்காருங்கள், நிதானமாகப் பேசு வோம்.” என்று கூறி, அவனை எதிரேயிருந்த மஞ்சத்தில் மீண்டும் அமரச் சொல்லி, தந்தையின் பக்கத்துலே இருந்த ஆசனத்தில் தானும் உட்கார்ந்து கொண்டாள். அதிக ஒடுக்கத்தைக் காட்டாமலும், அபரிமிதமான ஆடம்பர மின்றியும், அடக்கமும், கம்பீரமும் கலந்த பெரும் ராணி போல் மஞ்சத்திலமர்ந்து மடியில் கைகளைக் கோத்துத் தவழ வைத்துக் கொண்ட மஞ்சளழகி தந்தையை நோக்க, “அப்பா! இதற்கு ஏன் இவ்வளவு கூச்சல்? உங்களுக்கு இஷ்டமில்லாவிட்டால் நிகழ்ச்சிக்கு இவரை அழைக்க வேண்டாம். அவ்வளவுதானே?” என்றாள். அவள் பேசிய போது சாதாரணமாகவே இன்ப நாதமாயிருந்த அவள் குரல் மிகவும் குழைந்து கிடந்தது. வீணைத் தந்தியைச் சுண்டி விட்டவுடன் மறு கரத்தின் விரல்கள் இழைக்கும் மேக நாதம் போல். அவள் குரல் எத்தகைய கடுமையான இதயத்தையும் கரைக்கும் தன்மையை எய்திவிட்டதைக் கவனித்த இளையபல்லவன், “இவள் தந்தையைக் கண்டு அஞ்சாதவள் மட்டுமல்ல, அவனைச் சுண்டு விரலில் வைத்து இஷ்டப்படி சுற்றவும் வல்லவள், என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். அவன் ஊகம் சரியென்பதைக் கோட்டைத் தலைவனின் அடுத்த வார்த்தைகள் நிரூபித் தன. “அதற்காகச் சொல்லவில்லை...” என்று பலவீனமான குரலில் பதில் சொல்ல ஆரம்பித்தான் கோட்டைத் தலைவன்.

“எதற்காகச் சொல்லவில்லை!” என்று ஏதும் புரியாத குழந்தைபோல் மஞ்சளழகி அவனைக் கேட்டாள்.

கோட்டைத் தலைவன் இம்முறை தைரியமாகத் தலைநிமிர்ந்து அவளை நோக்கினான். அவள் விழிகள் உதிர்த்த அந்தக் குழந்தைப் பார்வை இடையில் ஏற்பட்ட அவனுடைய அச்சத்தைத் தவிர்த்திருக்க வேண்டும். அவன் முகத்தில் மெள்ள மெள்ளப் பழைய களை படர்ந்து ஆழமும் வஞ்சகமும் நிறைந்த முன்னைய நோக்கு கண்களிலும் நிலவியது. அந்த வஞ்சகப் பார்வையிலும் பாசம் சிறிது பரவி நின்றது. சொற்களிலும் அந்தப் பாசம் தொனிக்கச் சொன்னான் கோட்டைத் தலைவன், “நான் இரைந்தது உன் மனத்தைப் புண்படுத்த அல்ல மகளே!” என்று.

மஞ்சளழகியும் கொஞ்சிய வண்ணமே, “என் மனத்தை நீங்கள் ஒருநாளும் புண்படுத்த மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியாதா?” என்று பதில் சொன்னாள்.

அடுத்தபடி இளையபல்லவன் எதிரே கல்லுப் பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருக்கிறான் என்பதைப் பற்றிச் சற்றும் நினைக்காமல் தந்தையும் மகளும் ஒருவருக் கொருவரே பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

“இன்றிரவு நிகழ்ச்சி சாமான்யமானதா?” என்று பெண்ணின் கையை எடுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டு செல்லமும் கவலையும் கலந்த குரலில் கேட்டான் கோட்டைத் தலைவன்.

“இல்லை.” என்று மஞ்சளழகி பதில் கூறினாள்.

“அக்ஷயமுனையின் பிரத்யேக நிகழ்ச்சி இது.” என்றான் கோட்டைத் தலைவன்.

“ஆமாம்.” என்றாள் அவள்.

“சித்ரா பெளர்ணமியன்று பிரதி வருஷம் நடக்கிறது.

“ஆமாம்.

“நீ இல்லாவிட்டால் நிகழ்ச்சி இல்லை.

“ஆமாம்.

“நிகழ்ச்சிகள் இல்லாவிட்டால் முடிவுகள் இல்லை.

“உண்மை.

“முடிவுகளில்லாவிட்டால்.. .?”

“நீங்களில்லை, நானில்லை, இக்கோட்டையுமில்லை.

“இத்தனையும் தெரிந்தா இந்தப் புது மனிதரை இன்றைய இரவு நிகழ்ச்சிக்கு அழைக்க விரும்புகிறாய்?”

இந்தக் கடைசிக் கேள்வியைக் கோட்டைத் தலைவன் வீசியபோதுதான் இளையபல்லவனொருவன் எதிரே யிருக்கிறான் என்ற உணர்வடைந்த மஞ்சளழக அவனை ஏறெடுத்து நோக்கினாள். அப்படி நோக்கிய அந்தக் கண்களில் சிறிது குழப்பம் இருந்ததை இளையபல்லவன் கவனித்தான். அந்த இருவர் சம்பாஷணையையும் கேட்க ஏதோ பெரு மர்மங்களடங்கிய ஒரு பிரதேசத்துக்குத் தான் வந்துவிட்ட உணர்ச்சி ஏற்பட்டதால், சித்தத்தில் ஏதேதோ எண்ணங்கள் எழுந்து சுழல, இளையபல்லவனும் ஓரளவு குழப்பமே அடைந்திருந்தான். அந்த இரவு நிகழ்ச்சியைப் பற்றித் தந்தையும் மகளும் பேசி முடித்த பிறகு நிலைமை தெளிவாவதற்குப் பதில் மர்மம் முன்னைவிட வலுத்து விட்டதைக் கவனித்த இளையபல்லவனின் இதயத்தில் அந்த நிகழ்ச்சி எதுவாயிருக்கும் என்பதை அறிய ஏற்பட்ட ஆவலுடன், அதில் எப்படியும் கலந்து கொண்டு விடுவது என்ற உறுதியும் ஏற்பட்டது. அவன் இதயத்திலோடிய எண்ணங்களைப் புரிந்தகொண்டதாலோ என்னவோ, மஞ்சளழகியின் கண்களிலிருந்து குழப்பம் மறைந்து இதழ் களில் புன்னகை அரும்பியது. உள்ளத்தே ஊடுருவிச் சென்ற சங்கடமான உணர்ச்சிகளைச் சமாளித்துக் கொள்ளச் சற்று வாய்விட்டுச் சிரிக்கவும் செய்தாள் அவள்.

மேலும் மெளனமாயிருப்பதால் பலன் இல்லை என்பதை உணர்ந்துகொண்ட இளையபல்லவன் கேட் டான், “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று.

“உங்கள் நிலையை எண்ணிச் சிரித்தேன்.” என்றாள் அவள், வேடிக்கையாக.

“ஏன்? என் நிலைக்கு என்ன?”

“நீங்களும் தந்தையும் ஏதோ பேசிக்கொண்டிருந் தர்கள். குறுக்கே நான் வந்து குளறிவிட்டேன்.” என்றாள் அவள்.

‘இரவு நிகழ்ச்சியைப் பற்றிய பிரஸ்தாபத்தை ஒதுக்கி விட அவள் தீர்மானித்திருக்கிறாளென்பதையும், அதை முன்னிட்டே அதற்கு முற்பட்ட பகுதிக்குச் சம்பாஷ ணையை இழுத்துச் செல்கிறாளென்பதையும் அறிந்து கொண்ட இளையபல்லவனும் அவள் வழியே போகத் தொடங்கு, “உங்கள் குறுக்கீடு எனக்குத் தடையாயில்லை, உதவிதான்.” என்றான்.

“எப்படி. உதவி?” என்று கேட்டாள் அவள், “உங்கள் தந்தையிடம் சில உதவிகளை நாடி வந்ததாகத் தெரிவித்தேன்...

“ஆம், சொன்னீர்கள்.

“பதிலில்லை என்றும் கூறினேன்.

“ஆம், அதையும் தெரிவித்தீர்கள்.

“தந்தை உதவுவார், உங்களைப் போன்ற வீரருக்கு எதையும் மறுக்க மாட்டார் என்று நீங்கள்தான் உறுதி கூறினீர்கள்...

“உண்மைதான், கூறினேன்.

“இதைவிடப் பெரிய உதவி என்ன வேண்டும்? உங்கள் குறுக்கீடு எனக்கு நன்மை விளைவித்திருக்கிறது. அது மட்டுமல்ல.

“பின்னும் என்ன?”

இளையபல்லவனின் விழிகள் திடமாக எழுந்து அவளை நோக்கின. “சிருஷ்டியின் சிறந்த அழகையும் நான் ஹெ வாழ்வில் கண்டேன்.” என்று மெள்ளச் சொற்களை உதுர்த்தன உதடுகள். அவள் ஏதோ பதில் சொல்ல முயன்று பவள இதழ்களைத் திறந்தாள். அவளைப் பேசாமல் சைகையினாலேயே தடுத்த இளையபல்லவன் மேலும் பேசத் தொடங்கி, “உங்களைப் பாராட்டவோ, இல்லா ததைச் சொல்லி முகஸ்துதி செய்து உங்கள் தந்தையிடம் நான் கோரியதைப் பெறவோ பேசப்படும் வீண் வார்த்தை களல்ல இவை, உண்மையைத்தான் சொன்னேன். உங்களைப் பாராட்டாமலும், உங்கள் தந்தையிடம் கெஞ்சாமலும் நான் கோரிவந்த உதவியைப் பெற என்னால் முடியும். இது தற்புகழ்ச்சியென்று நினைக்க வேண்டாம். இந்த அகஷயமுனைக் கோட்டையைப் பற்றியும் உங்கள் தந்தையைப் பற்றியும் பூரணமாகத் தகவல்களறிந்தே இங்கு நான் வந்திருக்கிறேன். உங்கள் தந்தை இஷ்டப்பட்டால் என்னையும் என் மரக்கலத்தையும் என் மாலுமிகளையும் இன்றே அழித்து விட முடியும். ஆனால் கதை அத்துடன் முடியாது. என்னை அழிப்பது சுலபமல்ல. அப்படியே அழிப்பதாக வைத்துக் கொண்டாலும் பயங்கர விளைவுகள் ஏற்படும். ஒன்று மட்டும் நினைவு இருக்கட்டும். சரியான முன்னேற்பாடுகள் இல்லாமல் நான் சிங்கத்தின் வாய்க்குள் தலையிடுபவன் அல்ல...

“இந்த இடத்தில் சற்று நிதானித்த இளையபல்லவன், கோட்டைத் தலைவனை உற்றுப் பார்த்துவிட்டு, மஞ்சளழகியை நோக்கிக் கேட்டான், “இந்த அக்ஷயமுனைத் துறையில் தனியாக இறங்கிச் செல்ல வேண்டாமென்று என் மாலுமிகள் தடுத்தார்கள். அதையும் மீறித்தான் நான் இறங்கினேன், தெரியுமா உங்களுக்கு?” என்று.

“அது துணிவைக் காட்டுகிறது. முன்னேற்பாட்டைக் காட்டவில்லை.” என்றாள் மஞ்சளழகி இகழ்ச்சியுடன்.

“கடற்கரைக் கொள்ளைக்காரர்கள் என்னை வெட்டிப் போட வந்தார்கள். கலிங்கத்துக் கப்பல் தங்கத்துடன் வருகிறது. கொள்ளையடிக்கலாம் என்றேன். அவர்கள் என் பக்கம் சேர்ந்து கொண்டார்கள்.” என்று சுட்டிக் காட்டினான் படைத் தலைவன்.

“அது தந்திரத்தைக் காட்டுகிறது. முன்னேற்பாட்டை அல்ல.” என்றாள் மஞ்சளழகி மீண்டும், இதழில் அரும்பி நின்ற இகழ்ச்சி குரலிலும் ஒலிபாய.

அடுத்த அஸ்திரத்தை மிகப் பலமாக வீசினான் இளையபல்லவன் “கோட்டைத் தளத்திலிருந்து வீசப் பட்ட விஷ ஆம்பு என் மார்பில் தைத்தும் நான் இறக்காமல் அதைப் பிடுங்கி எறிந்துவிட்டு இங்கே வந்திருக்கிறேன், அது எதைக் காட்டுகிறது? மந்திரத்தையா?”

இளையபல்லவனுக்கு ஏதும் பதில் சொல்ல முடியாமல் விழித்தாள் மஞ்சளழகி,.

திடீரெனத் தன் அங்கியை விலக்கி மார்பைத் திறந்து காட்டிய இளையபல்லவன், “இது எதைக் காட்டுகிறது தேவி, மந்திரத்தையா, மூன்னேற்பாட்டையா?” என்றான் இகழ்ச்சி குரலில் பூணமாகத் தொனிக்க.

மஞ்சளழகி மட்டுமல்ல, அவள் தந்தையும் படைத் தலைவன் மார்பைக் கண்டு பிரமித்தான். விஷ ஆம்பு அவனைக் கொல்லாத மர்மம் அவர்களுக்குத் தெள் ளெனப் புரிந்தது. அவன் மார்பை அணைத்து நின்ற யவனர் இரும்புக் கவசத்தை இமை கொட்டாமல் அவ்விருவரும் பார்த்தார்கள். அவன் அங்கிக்குள் மறைந்து கடைந்த அந்த இரும்புக் கவசமே அவன் உயிரைக் காத்தது என்பதைப் புரிந்துகொண்ட தந்தையும் மகளும்அவன் தீர்க்காலோச னளையையும் முன்னேற்பாட்டையும் கண்டு வியப்பின் எல்லையை எய்தி, அந்த வியப்பு மூகங்களிலும் படர இளையபல்லவனை ஏறெடுத்து நோக்கினார்கள்.

உணர்ச்சிகளைப் பெரிதும் கட்டுப்படுத்தக்கூடிய அவ்விருவரையுமே மலைக்க வைத்தது பற்றி மகிழ்வெய்திய சோழர் படைத் தலைவன் மஞ்சளழகியை நோக்கு, “தேவி! வாழ்வில் பேராபத்துகளில் சிக்கி அனுபவப்பட்டவன் நான். ஆகையால் எப்பொழுதும் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்கிறேன். இந்தக் கவசம் போட்டுக் கொண்டு வந்த முன்னெச்சரிக்கையைப் பற்றி நீங்கள் வியப்படைய வேண்டாம். இன்னொரு முன்னேற்பாடு செய்திருக்கிறேன். அதைக் கேட்டால் நீங்கள் திகைத்துப் போவீர்கள். அது மட்டுமல்ல, இளையபல்லவன் அத்தனை முட்டாளல்ல என்பதையும் புரிந்துகொள்வீர்கள்.” என்றான்.

“அதையும் சொல்லுங்கள்.” என்று அவள் கேட்டாள் அச்சம் குரலில் லேசாகத் தொனிக்க.

இப்படி வாருங்கள்.” என்று அவளை அந்த அறையில் ஒரு மூலைக்கு அழைத்துச் சென்று சில வார்த் தைகள்தான் சொன்னான் இளையபல்லவன். அவன் சொன்ன வார்த்தைகள் அவள் முகத்தில் மிதமிஞ்சிய கிலியைப் பரவ விட்டன.

“வேண்டாம், வேண்டாம். அது மட்டும் வேண்டாம்” என்று கதறினாள் மஞ்சளழகி.

“இன்றிரவு நிகழ்ச்சிக்கு?” இகழ்ச்சியுடன் எழுந்தது இளையபல்லவன் கேள்வி, “அவசியம் வாருங்கள்.

அவசியம் வாருங்கள்.” என்று திகில் நிரம்பிய சொற்களை மிகுந்த பலவீனத்துடன் உதிர்த்தாள் மஞ்சளழகி.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் - 10

அகூதாவின் சபதம்

அறை மூலைக்கு மஞ்சளழகியை அழைத்துச்சென்று மர்மமாக அவளிடம் இளையபல்லவன் ஏதோ சில வார்த்தைகள் சொன்னதும், அந்தச் சில வார்த்தைகளைக் கேட்டவுடன், “வேண்டாம், வேண்டாம் அது மட்டும் வேண்டாம்” என அவள் கதறியதன்றி, தன் சம்பந்த மில்லாமலே இளையபல்லவனை அன்றைய இரவு நிகழ்ச்சிக்கு அழைத்துவிட்டதும் பெரும் விந்தையாக மட்டுமல்ல, கோபத்தையும் அச்சத்தையும் ஒருங்கே விளைவிப்பதாகவுமிருந்தது அக்ஷ்யமுனைக் கோட்டைத் தலைவனுக்கு. ஏதோ பெரும் விபரீத வார்த்தைகளைச் சொல்லி எதற்கும் அஞ்சாத தன் மகளுக்கே சோழர் படைத் தலைவன்’ பெரும் அச்சத்தை விளைவித்து விட்டா னென்பதை மட்டும் உணர்ந்துகொண்ட கோட்டைக் காவலன், அவன் என்ன சொல்லியிருப்பான் என்பதை நினைத்துக் குழம்பி, மலைத்து, தகைத்து, அந்த அறையின் மூலையையே நோக்கிக் கொண்டிருந்தான்.

அறையின் மூலையிலிருந்த நிலை அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவனின் துணிவுக்கோ, மஞ்சளழகியின் இடசித்தத்துக்கோ அத்தாட்சியாக அமையாமல் இளைய பல்லவனின் இறுமாப்புக்கே சாட்சி காட்டும் முறையில் அமைந்து கடந்தது. நன்றாக நிமிர்ந்து, மஞ்சளழகியின் இலையும் திகிலால் விளைந்த உடலின் நடுக்கத்தையும் தயை தாட்சண்யமில்லாமல் பார்த்துக்கொண்டும், ட ஹெ இதயத்தில் என்றுமில்லாத குரூரத்தை முகத்தில் காட்டி னாலும் அதில் ஓரளவு நிதானத்தையும் கலந்து கொண்டும் நின்றிருந்தான் இளையபல்லவன். அவனெதிரே அத்தனை திகிலுடன் நின்ற நிலையிலும் அழகு முன்னைவிட அதிகமாகப் பரிமளிக்க ஓய்யாரமாகவேயிருந்த மஞ்சளழகி யின் தலை மட்டும் ஒருபுறம் லேசாக சாய்ந்து கடந்தது. அந்த அறை மூலைக்கு வந்ததும் இளையபல்லவன் பார்த்த பார்வை அவள் கண்கள் முன்பாக அப்பொழுதும் எழுந்து நின்றது. அவன் சொன்ன சொற்கள் மெளனம் நிலவிய அந்த விநாடியிலும் அவள் காதுகளிலே ஒலித்து உணர்ச்சி களில் புகுந்து சித்தத்தில் சம்மட்டிகளைக் கொண்டு அடித்துக் கொண்டேயிருந்தன. சில விநாடிகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சிதான் அதுவென்றாலும், திரும்பத் திரும்ப அது நடப்பது போன்ற பிரமையே ஏற்பட்டது அந்த அழகுச் சிலைக்கு.

அறை மூலைக்கு அழைத்து வந்ததும் இளைய பல்லவன் பார்த்த நிதானமும், ஆழமும் பரிதாபமும் கலந்த பார்வையை அவன் தன்மீது ஒருமுறைக்கு இருமுறையாக வீசிய காட்சியும் அவள் கண்முன் மீண்டும் எழுந்தன. அடுத்தபடி ஏற்பட்ட அவன் உதடுகளின் அசைவையும், அவள் தனது மனக்கண்முன் மீண்டும் கண்டாள். இளைய பல்லவனின் உதடுகள் லேசாகத்தான் அசைந்தன. குரலும் மெதுவாகத்தானிருந்தது. ஆனால் மிகுந்த உறுதியுடன் வெளிவந்தன அவன் சொற்கள். “இந்த அறை மூலைக்கு உங்களை அழைத்து வந்ததற்குக் காரணமிருக்கிறது தேவி!” என்று சாதாரணமாகத்தான் ஆரம்பித்தான் இளைய பல்லவன்,

ஆனால் அந்தக் குரலில் இருந்த ஒரு விபரீதத் தொனி அடுத்து வரும் சம்பாஷணை அத்தனை ரசமாயிருக்காது என்பதை நிரூபிக்கவே, மஞ்சளழகி சற்று சிந்தனையுட னேயே கேட்டாள், “என்ன காரணம் வீரரே?” என்று.

வார்த்தையை அளந்து பேசுவது போல் பேசினான் இளையபல்லவன். “நீங்கள் தந்தையை விடப் புத்திசாலி என்பதுதான் காரணம்.” என்றான் அவன்.

அவன் தன்னைப் பாராட்டுகிறானா அல்லது தன்னைப் பார்த்து நகைக்கிறானா என்பதை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. எதற்கும் கேட்டு வைத்தாள் அவள், “பாராட்டவா என்னை இங்கு அழைத்து வந்தீர்கள்” என்று.

“இல்லை. பாராட்ட அல்ல. உண்மையைச் சொல்ல. உங்கள் தந்தையின் நிதானம் தைரியம் எல்லாம் மேலுக்குத் தான். உண்மையான தைரியமும், நிதானமும், உள்ள ஆபத்தைப் புரிந்துகொள்ளும் சக்தியும் உங்களுக்குத்தான் இருக்கிறது. ஆகவே, உங்களிடம் விஷயத்தைச் சொல்லவே இங்கு அழைத்து வந்தேன்.” என்றான் இளைய பல்லவன்.

“என்ன! எங்களுக்கு ஆபத்தா! வியப்புடன் கேட்டாள் மஞ்சளழகி.

“ஆம்...

“யாரிடமிருந்து ஆபத்து?”

“என்னிடமிருந்து.

“உங்களை என் தந்த சிறை செய்துவிட்டால்? ஏன் கொன்றே விட்டால்?”

“சிறை செய்தாலே ஆபத்து, கொன்றுவிட்டால் ஆபத்து பன்மடங்கு அதிகம். இருப்பதைவிட இறந்தபின் நான் அபாய மனிதன்.

“இறந்தபின் நீங்கள் என்ன செய்ய முடியும்?”

இளையபல்லவன் விழிகள் அவளை நோக்கி நகைத்தன. “இந்த அக்ஷ்யமுனைக் கோட்டையை அழித்து விட முடியும். இங்குள்ள அனைவரையும் கொன்றுவிட முடியும். புல் பூண்டு கூட இல்லாமல் இந்த இடத்தைப் பொசுக்கிவிட முடியும்” என்ற இளையபல்லவனின் குரலில் திடீரென மீண்டும் விபரீதத் தொனி தெரிந்தது.

“பிசாசாக வந்து இத்தனையையும் செய்வீர்களா?” என்று நகைக்க முற்பட்ட மஞ்சளழக, இளைய பல்லவனின் கண்களில் திடீரென்று பளிச்சிட்ட ஒரு பார்வையைக் கண்டு தன்னைச் சட்டென்று அடக்கிக் கொண்டாள். நகைப்பு உதடுகளில் உறைந்தது. முகத்தில் கிலி படர்ந்தது. அந்தக் கிலியை இளையபல்லவனின் அடுத்த சொற்கள் உச்சஸ்தாயிக்குக் கொண்டு போயின.

எங்கிருந்தோ, வெளி உலகத்தில் இருந்து பேசுவது போல் ரகசியமும் ஆழமும் பயங்கரமும் தொனித்த குரலில் பேசினான் இளையபல்லவன், “ஆம். மஞ்சளழகி.” என்று அவன் ஆரம்பித்ததும், ஏதோ சொல்ல முற்பட்ட அந்தப் பெண்ணை, “தடுக்காதீர்கள். உங்கள் தங்கநிற எழில் என்னை பிரமிக்க வைத்திருக்கிறது. உங்களை இனி நான் மஞ்சளழகி என்றுதான் அழைப்பேன். ஆனால் இத்தனை பிரமிக்கத்தக்க அழகு என் அழிவினால் சீரழிந்துவிடுமே என்ற ஏக்கமே என்னை அஆட்கொண்டிருக்கிறது. தற்சமயம்,” என்ற இளையபல்லவன் மேலும் அதே விபராீதத் தொனியில் பேசினான் “ஆம், மஞ்சளழக, உங்கள் அழகு குலைந்துவிடும். அது மட்டுமல்ல, உங்களைப்போல் இந்தக் கோட்டையிலுள்ள பல பெண்கள் சீரழிக்கப்படுவார்கள். இங்குள்ள கொள்ளைக்காரர்களும், அதோ இன்று நவரத்தினங்கள் இழைத்த ஆசனத்தில் உட்கார்ந்திருக்கும் உங்கள் தந்தையும் கொசுக்களைப்போல் நசுக்கப்படு வார்கள். இந்தக் கோட்டையும் கொத்தளங்களும் கொளுத்தப்படும். இத்தனையும் என் ஒருவன் மரணத்தால் ஏற்படும். என் மரணம் இந்த நகரத்தையே மாய்த்துவிடும். சந்தேகம் வேண்டாம். பிசாசாக வந்து இத்தனையும் சாதிப்பேனா என்றல்லவா கேட்டீர்கள்? ஆம், பிசாசாக வருவேன். நாசம் செய்ய அல்ல. நாசத்தை வேடிக்கை பார்க்க. ஆனால் இதை நாசம் செய்ய வருவது என்னை விடப் பெரும் பிசாசு. உயிருள்ள ஒரு பிசாசு வரும் இங்கே. அது வருவதற்கு ஏற்பாடு செய்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். என் முன்னேற்பாட்டைப் பற்றி என்ன நினைக் கறீர்கள்?” என்று பேசிக்கொண்டு போன இளைய பல்லவன் சிறிது பேச்சை நிறுத்தி, மஞ்சளழகியைக் கூர்ந்து நோக்கினான்.

அவள் பிரமை பிடித்து ஏதும் புரியாமல் குழம்பி நின்றிருந்தாள். இவன் வீண் பெருமையடித்துக்கொள்ளும் கையாலாகாதவனா? செய்கையால் முடியாததைச் சொற்களைக் கொண்டு சரிக்கட்டி நம்மை அச்சுறுத்தப் பார்க்கிறானா என்ற சந்தேகம் அவள் சித்தத்தில் ஒரு விநாடிதான் எழுந்தது. அடுத்த விநாடி அந்தச் சந்தேகம் மறைந்தது. மறையவைத்தது இளையபல்லவனின் குரூரப் பார்வையொன்று. அவன் இதழ்களில் அந்தத் தருணத்தில் தவழ்ந்த இளநகையிலும், உதடுகள் உதிர்த்த சொற்களிலும் அந்தக் குரூரம் இருந்தது. இளநகையைத் தொடர்ந்து அவன் உதடுகளைத் திறந்து சொன்னான், “மஞ்சளழகி! நான் சொனவை வீண் வார்த்தைகளல்ல. நான் செய்துள்ள முன்னேற்பாடும் பொய்யல்ல. இத்தனை நேரம் நான் குறிப்பிட்ட நாசம் நடந்தே தீரும். ஏன் தெரியுமா?” என்று.

“ஏன்?” தனமாக எழுந்தது மஞ்சளழகியின் கேள்வி.

“வரப்போவது யார் தெரியுமா?”

“தெரியும்.

பிசாசு.

“பிசாசல்ல.

“ஹும்!”

“பிசாசை விடக் கொடியது!”

“பிசாசை விடக் கொடியதா ?”

“ஆம். அகூதா!”

எத்தனை பெரிய வெடியை அவன் எடுத்து வீசியிருந் தாலும், அதே விநாடியில் அந்த அறையில் ஆயிரம் பிசாசுகள் தாண்டவமாடியிருந்தாலும் அளிக்க முடியாத அதிர்ச்சியை இளையபல்லவன் பதில் அளித்தது அவளுக்கு. அவள் ஏதோ பேச வாய் திறந்தாள். வாயைத் துறந்தாளே தவிர சொற்கள் வெளிவரவில்லை. வாய் அடைத்து நின்று விட்டது.

அவள் உணர்ச்சி வெள்ளத்தையும் உள்ளத்தே துளிர்த்து களைத்துவிட்ட கிலியையும் இன்னும் அதிகமாக வளர்த்தன இளையபல்லவனின் அடுத்த சொற்கள். “மஞ்சளழகி! இந்தக் கோட்டைக்கு வருவதை அகூதாவே தடுத்தார். நான்தான் கேட்கவில்லை. கலிங்கத்திலிருந்து கடாரம் செல்லும் மரக்கலங்கள் இடையே புகுந்து தடுக்க இதைவிட நல்ல இடமில்லையென்ற காரணத்தால் நான் இந்த இடத்துக்கு வருவதாகத் திட்டமிட்டேன். பிடி வாதமும் பிடித்தேன். அதற்குமேல் அகூதா ஏதும் பேசவில்லை. ‘என்ன உதவி உங்களுக்குத் தேவை?” என்று மட்டும் கேட்டார். எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், இக்கோட்டையின் மீது பழி வாங்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டேன். அகூதாவின் கண்களில் புதிய ஒளி ஒன்று பிறந்தது. அப்பொழுது நாங்கள் இருவரும் நடுக் கடலில் அவருடைய மரக்கலத்தின் தளத்தில் நின்று கொண்டிருந்ததோம். வானமும் மேக மூட்டத்தால் கறுத்துக் கிடந்தது. ஒரு கையை முஷ்டியாகப் பிடித்து உயரத் தூக்கி வானத்தை நோக்கிச் சபதம் செய்தார் அகூதா, “இன்னும் மூன்று வார காலத்தில் நான் அக்ஷ்யமுனை வருகிறேன் உங்களைச் சந்திக்க. நீங்கள் அங்கு இருந்தால் அக்ஷயமுனை பிழைக்கும். இல்லையேல் அக்ஷ்யமுனை இல்லை. தரையோடு தரையாக்கி விடுகிறேன் அந்தக் கோட்டையை. ஆடவர், பெண்டிர் அனைவரையும் என் வீரர்களிடம் ஒப்படைத்து விடுகிறேன் என்று கூறிப் பேய்ச் சிரிப்பு சிரித்தார் அவர். எதற்கும் அஞ்சாத எனக்கே அந்தச் சிரிப்பு அச்சம் தந்தது. இன்று நினைத்தாலும் என் உள்ளம் நடுங்குகிறது. ஆகவே தேவி! திட்டமாய்த் தெரிந்து கொள்ளுங்கள். என் உடலில் ஊசி முனையளவு தொடப் பட்டாலும் இன்னும் இரண்டே வாரங்களில் அக்ஷய மூனை அழிந்துவிடும். நான் அகூதாவை விட்டுக் கிளம்பி ஒரு வாரம் ஆகறது” என்றான் இளையபல்லவன்.

“ஆம். ஆம்” என்றாள் மஞ்சளழக நடுக்கத்துடன்.

“அகூதாவின் கடற்படை இன்னும் பதினைந்தே நாள்களில் இந்தத் துறைமுகத்தில் பிரவேசிக்கும் “. என்று மற்றுமொருமுறை வலியுறுத்திச் சொன்னான் இளைய பல்லவன்.

“ஆம். ஆம்.

“அகூதாவின் வீரர்கள் இறங்குவார்கள். தடுக்க நானில்லாவிட்டால் அடுத்து நடப்பதை...உங்கள் கயை...தங்கத்தைப் பழிக்கும் இந்த அழகுத் தேகத்தின் நிலையை...நான் சொல்ல வேண்டுமா ?...

“இந்தச் சமயத்தில்தான், “வேண்டாம், வேண்டாம்,” என்று கதறினாள் மஞ்சளழகி. இதை அடுத்துத்தான் இளையபல்லவனை அன்றைய இரவு நிகழ்ச்சிக்கு வரவும் வேண்டினாள்.

இந்தச் சம்பாஷணையும் இளையபல்லவன் முகமும் இரும்பத் திரும்பச் சித்தத்தில் வலம் வந்ததால் பிரமை பிடித்து நின்றாள் மஞ்சளழகி. அவள் எத்தனை நேரம் நின்றிருந்தாளோ அவளுக்கே தெரியாது. இளைய பல்லவன் மெள்ளத் தன் கையைப் பிடித்த பின்புதான் அவளுக்குச் சுரணை வந்தது. “பயப்பட வேண்டாம். நான்தானிருக்கிறேனே!” என்று அவள் செவிகளில் கூறியது செவி மூலம் உள்ளத்துக்கும் அமுதம் வார்ப்பதாகத் தோன்றியது அவளுக்கு.

அதனால் மீண்டும் உணர்ச்சிகள் மெல்ல மெல்ல அவள் வசப்படலாயின. கடைசியாகச் சொன்ன வார்த்தை களை அவன் அன்பொமுகச் சொன்னான். உண்மையில் இனிமை தரும் இதயத்தைப் பெற்றிருந்த இளையபல்லவன் அவசியமானால் அதே இதயத்தை இரும்பாகவும் ஆக்கிக் கொள்ள வல்லவன் என்பதை உணர்ந்து கொண்டாளாகை யால் அவன் இழுத்த இழுப்புக்கு இசையலானாள். அவளை மெல்லக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு மீண்டும் கோட்டைத் தலைவனிருந்த இடத்துக்குச் சென்ற இளையபல்லவன், அவளை அவள் ஆசனத்திலமர்த்தி விட்டுத் தானும் எதிரே உட்கார்ந்தான்.

கோட்டைத் தலைவனின் உணர்ச்சிகள் விவரணத் துக்கு உட்பட்டதாயில்லை. ஏதேதோ எண்ணங்கள் அவன் சிந்தனையில் எழுந்து உலாவிக் கொண்டிருந்தன. அந்தக் குழப்பத்தின் விளைவாக, அன்னியனொருவன் தன் மகளைக் கையைப் பிடித்து இழுத்து வந்ததையும் அவன் கவனிக்காமல், இளையபல்லவன் எதிரேயிருந்த ஆசனத் தில் அமர்ந்ததும், “இவளிடம் என்ன சொன்னீர்கள்?” என்று குழப்பத்துடனேயே கேட்டான்.

“என் முன்னேற்பாட்டைச் சொன்னேன்.” என்றான் இளையபல்லவன்.

“அதைக் கேட்டு ஏன் கதறினாள்?”

“முன்னேற்பாட்டின் விளைவை எண்ணி.

“என்ன விளைவு?”

“மகளையே கேளுங்கள்.

“கோட்டைத்தலைவன் மகளை நோக்கித் தன் கண் களைத் திருப்பினான். அவள் கண்கள் அவன் கண்களைத் தைரியமாகச் சந்தித்தன. ஆனால் அந்தத் தைரியம் அவள் வார்த்தைகளில் தொனிக்கவில்லை. அச்சமும் தைரியமும் மாறி மாறி ஒலித்த சொற்களில் நிறுத்தி நிறுத்தி, அவள் இளையபல்லவன் சொன்னதை விவரித்தாள். அந்த விவரணத்தைக் கேட்டதும், இடிந்து பல விநாடிகள் ஆசனத்தில் சாய்ந்துவிட்டான் கோட்டைத் தலைவன். அகூதா கொள்ளைக்காரனாயிருந்தாலும் சொன்ன சொல்லை நிறைவேற்றத் தவறாதவன் என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. இளையபல்லவன் மீது கையை வைத்தால் அகூதா வாங்கக்கூடிய, பழியின் பயங்கரத்தை யும் அவன் உணர்ந்திருந்தான். அத்தகைய பயங்கரத்தைப் பின்னணிப் பாதுகாப்பாகக் கொண்டு, தன் கோட்டைக் குள் நுழைந்து, தன் அந்தரங்க அறையில் தன்னையே மிரட்டும் இளையபல்லவனின் துணிவை எண்ணி ஒரு கணம் வியந்தான். மறுகணம் பயந்தான். அவன் பயத்துக்குக் காரணமும் இருந்தது. தன் கதி இருதலைக் கொள்ளி என்பதை அறிந்து தவித்தான். அந்தத் தவிப்பை வெளிக்காட்டிய கண்களை மகள்மீது. திருப்பிய கோட்டைத் தலைவன், “மகளே! இன்று நாம் நல்ல முகத்தில் விழிக்கவில்லை” என்றான்.

“ஏன்?” என்று அவள் கேட்டாள்.

“இவரை நாம் தொடவும் முடியாது. முன்னேற்பாடு அத்தனை கடுமையானது” என்று இளையபல்லவனைச் சுட்டிக் காட்டினான்.

மஞ்சளழகி பதில் சொல்லவில்லை. ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் ஆட்டினாள்.

“இவரை எப்படியும் நாம் காக்க வேண்டும்” என்றான் கோட்டைத் தலைவன்.

“ஆம், ஆம்.” பயத்துடன் பதில் சொன்னாள் மஞ்சளழகி.

“இரவு நிகழ்ச்சிக்கும் இவரை அழைத்துவிட்டாய்...

“ஆம்.

“இதை அடுத்து, கோட்டைத் தலைவன் கேட்டான், “இரவு நிகழ்ச்சிக்கு அந்த நால்வரும் வருவார்களே, புரியவில்லையா உனக்கு?” என்று.

மஞ்சளழக புரிந்துகொண்டாள். அச்சம் துளிர்த்த கண்களைத் தந்தை மீது நாட்டினாள். “ஆம், புரிகிறது தந்தையே! அந்த நால்வரும் வரத்தான் வருவார்கள். இவரை அழைத்தாலும் ஆபத்து, அழைக்காவிட்டாலும் ஆபத்து. ஐயோ, இதென்ன சங்கடம்” என்று குரல் தழுதழுக்கக் கூறினாள் அவள். அத்துடன் தனது இரு கரங்களையும் குவித்து இளையபல்லவனை வணங்கு, “வேண்டாம், இரவு நிகழ்ச்சிக்கு மட்டும் நீங்கள் வர வேண்டாம்.” என்று மன்றாடினாள்.

இம்முறை குழம்பியவன் இளையபல்லவன். “யார் அந்த நால்வர்? அவர்கள் வந்தாலென்ன?” என்று குழம்பினான். அதை மெள்ள விவரிக்கத் தொடங்கினாள் மஞ்சளழகி.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top