• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கடல் புறா - இரண்டாம் பாகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 39

இரகசியத்தின் திறவுகோல்

குணதிசைச் சாளரத்தின் மூலம் சுள்ளென்று கன்னத்திலடித்த கதிரவன் கிரணங்களால் எழுதப்பட்டுக் கண் விழித்துக்கொண்ட கூலவாணிகன் சேந்தன் தனது பஞ்சணையில் இருமுறை புரண்டு படுத்துத் தன் கண்களையும் நன்றாகக் கலக்கிவிட்டுக் கொண்டான். பிறகு கூரையிலிருந்த சித்திரங்களை அராய்ந்து சில விநாடிகள் மிரண்டு விழித்தான். மறுபடியும் கண்களைப் பலமாகத் தேய்த்துக் கலக்கி விட்டுக்கொண்டு எதிரே சற்றுத் தூரத்திலிருந்த மரத்தின் மீது கடந்த பெரும் மெழுகு உருண்டையையும் பார்த்துத் திடீரெனப் பஞ்சணையில் துள்ளி உட்கார்ந்தான். மெழுகு உருண்டை இருந்த மஞ்சத்தில் மெழுகுக்கு அருகே ஒரு மதுக்குப்பியும் கண்ணமும் இருப்பதையும் கவனித்துப் பெரிதும் குழம்பினான். “இரவு நான் படுக்க முயலும் போது இளைய பல்லவர் இந்த மதுக்குப்பியையும், கிண்ணத்தையும் அனுப்பியது உண்மைதான். இருந்தாலும் நான் குடிக்க வில்லை. எப்படி குடிக்க முடியும்! எனக்கும்தான் பயங்கரப் பணியை இட்டிருந்தாரே படைத்தலைவர்!” என்று பஞ்சணையில் உட்கார்ந்தபடி, தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். அந்த மதுக்குப்பியும், கண்ணமும் வந்தது அவனுக்கு நன்றாக நினைவிருந்தது. பேழையிலிருந்த மெழுகை எடுத்து மதுக்குப்பியிருந்த மஞ்சத்தில் வைத்ததும் ஞாபகத்தில் இருந்தது. அத்துடன் மதுக்குப்பியை எடுக்காமல் தான் மெழுகை மட்டும் எடுத்துக் கொண்டு பலவர்மன் அறைக்குச் சென்றதும் திட்டமாக நினைப்பி லிருந்தது கூலவாணிகனுக்கு. அதுமட்டுமல்ல, சென்ற இரவில் நடந்தது அனைத்துமே அவன் புத்தியில் தெளி வாகத் தென்பட்டன.

நள்ளிரவில் தான் ஓசைப்படாமல் நடந்து பலவர்மன் அறையை நாடியது, கதவைத் தொட்டதும் கதவு திறந்து கொண்டது, பலவர்மன் ரத்த வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தது, தான் வெளியே ஓட முயன்றது, பிறகு ‘நில்’ என்ற சொல் தன்னைத் தடுத்தது ஆகிய ஓவ்வொரு நிகழ்ச்சியும் சந்தேகமறத் தெரிந்தது கூலவாணிகன் சேந்தனுக்கு. அந்தக் காலை நேரத்தில் கூட முதல் நாளிரவு அறையின் பயங்கரச் சூழ்நிலை அவன் கண் முன்பு எழுந்து அவனை நடுங்க வைத்தது. முதுகில் குருதி பாயக் கிடந்த பலவர்மனும் அவனால் கொலை செய்யப்பட்டவர்களின் சித்திரங்கள் பக்கச் சுவர்களிலிருந்து கோரவிழி விழித்த பயங்கரமும் கண்முன்பு எழுந்ததால், காலை நேரத்திலும் நடுங்கினான் சேந்தன். ‘நில்’ என்ற சொல்லைத் தொடர்ந்து வந்த பூரண கவசமணிந்த அமீர் தன்னை அறையை விட்டு ஓட விடாமல் தடுத்து, குப்புற விழுந்து கடந்த பலவர் மனைப் புரட்டிவிட்டுக் கழுத்திலிருந்த சாவிக்கு மெழுகு ஒற்றி எடுக்கக் கட்டளையிட்டதும் மெழுகு ஒற்றப்பட்டவுடன் சென்றுவிட்டதும் நன்றாகப் புத்தியில் நடமாடவே, அடுத்தபடி என்ன நடக்கிறதென்பதை அறியாமல் சேந்தன் திணறினான். ‘மெழுகு ஒற்றியபிறகு என்ன நடந்தது? நான் எப்படி இங்கே வந்தேன், என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்ட சேந்தன், அடடா? மெழுகில் சாவியின் அமைப்பு இருக்குமே! அதை யாராவது பார்த்துவிடப் போகிறார்கள்!” என்று கிலி பிடித்துச் சரேலெனப் பஞ்சணையை விட்டிறங்கி மஞ்சத்துக்காகப் பாய்ந்து அங்கிருந்த மெழுகு உருண்டையைக் கையிலெடுத்தான். மெழுகில் சாவியின் அமைப்பு ஏதுமில்லை. அது ஒற்றியெடுத்த மெழுகாகவே தெரியவில்லை சேந்தனுக்கு. அதனால் பெரும் குழப்பத்துக்குள்ளான சேந்தன், மதுக் கிண்ணத்தை எடுத்துப் பார்த்தான். அதன் அடியில் சிறிது மது தங்கிக் கிடந்தது. அதன் வாடையும் விபரீதமாயிருந்தது.

கூலவாணிகன் யைத்தியம் பிடிக்கும் நிலைக்கு வந்து தனது மண்டையை இருமுறை பட்டென்று கைகளால் தட்டிக் கொண்டான். “நான் உண்மையில் பலவர்மன் அறைக்குச் சென்றேனா அல்லது அத்தனையும் கனவா? நான் கட்டளையை நிறைவேற்றநினேனா? அல்லது மதுவைக் குடித்து மயங்கிப் பஞ்சணையில் உறங்கி விட்டேனா? தவிர மதுவில் மயக்க மருந்தன் வாடை அடிக்கிறதே? யார் போட்டிருப்பார்கள்? பலவர்மனுக்குத் தான் ஒற்றர்கள் அதிகமாயிற்றே! ஒருவேளை அவன்.. .?” என்று நினைத்துப் பார்த்து, “சே, சே! இருக்காது! இருக்காது என்ன? திட்டமாய் இல்லை. நான் குடிக்கவில்லை. குடித்தாலல்லவா மயக்க மருந்து என்னை வீழ்த்தி யிருக்கும்!” என்று பலபடி நினைத்துத் தண்டாடிய கூல வாணிகன் இது அத்தனைக்கும் விளக்கத்தை அமீரிட மாவது, படைத்தலைவனிடமாவதுதான் கேட்க வேண்டும் என்று தீர்மானித்துக் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு படைத் தலைவனிருக்குமிடத்தை நோக்கி நடந்தான். சேந்தன் மாடியின் இரு வாசல் அறைக்குள் கையும் மெழுகுமாக நுழைந்தபோது அமீரும் படைத் தலைவனும் மிக ரகசியமாக, எதையோ பேசிக்கொண் டிருந்தார்கள். அவர்களிருவரையும் மாறி மாறிப் பார்த் தான் சேந்தன் பல விநாடிகள். அவனது மருண்ட பார்வையைக் கண்ட படைத்தலைவன், “என்ன பார்க் கிறாய் சேந்தா? வா உள்ளே! மெழுகில் அமைப்பு எடுத்து விட்டால் அதை இங்கு கொண்டு வருவானேன்? நீயே வார்ப்படக்காரனிடம் கொடுத்திருக்கலாமே?” என்றான்.

சேந்தனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. “மெழுகில் அமைப்பு இல்லை.” என்றான் குழப்பத்துடன்.

இளையபல்லவன் இமைகள் மேல் எழுந்து கோபமும் கேள்வியும் கலந்த சாயையை முகத்தில் படரவிட்டன. “வெறும் மெழுகை என் கண்கள் பார்த்ததில்லை என்ற நினைப்பா உனக்கு!” கோபம் குரலிலும் ஒலிக்கக் கேட்டான் படைத்தலைவன்.

“இல்லை படைத்தலைவரே” என்றான் சேந்தனும் சற்றுக் கோபத்துடன்.

“பின் எதற்கு இந்த மெழுகைக் கொண்டு வந்தாய்?” படைத்தலைவன் கேள்வி முன்னைவிட உக்கிரமாக எழுந்தது.

“உங்களுக்குக் காட்டக் கொண்டு வந்தேன். அது மட்டுமல்ல...” என்று கோபம் தணியாமலே சொன்னான் சேந்தன்.

“வேறென்ன?”

“விளக்கமும் கேட்க வந்தேன்.

“என்னிடமா?”

“முதலில் உங்களிடந்தான் விளக்கம் கேட்க எண்ணி னேன். இப்பொழுது கருத்தை மாற்றிக்கொண்டு விட்டேன்.

“எப்படி மாற்றிக் கொண்டாய்?”

“அமீர்தான் பதில் சொல்ல வேண்டும் எனக்கு” என்று உக்கிரத்துடன் கூறிய கூலவாணிகன், அறைக்குள் வந்து கதவையும் சாத்திவிட்டு, “அமீர்! இப்பொழுது நாம் பேசலாம் தெளிவாக.” என்றும் அமீரை நோக்கிச் சொன்னான்.

அமீரின் பெருவிழிகள் வியப்பினால் இருமுறை உருண்டன. “என்ன பேச வேண்டும் நாம்?” என்று வினவி னான் அமீர் வியப்புக் குரலில் பலமாக ஒலிக்க.

“நான் சாவியில் ஒற்றி எடுத்த மெழுகு எங்கே?” என்று கேட்டான் கூலவாணிகன்.

“என்ன உளறுகிறாய் சேந்தா? ஏது சாவி? என்ன மெழுகு?” என்று மிதமிஞ்சிய ஆச்சரியத்துடன் மறுபடியும் வினவினான் அமீர்.

கூலவாணிகன் பொறுமை இழந்தான். “அமீர்! என்னிடம் விளையாடாதே, தேற்றிரவு சந்தித்தபோது “என்ன செய்தாய் என்னை?” என்று மிகுந்த சீற்றத்துடன் கேட்டான்.

அமீரின் கண்களிலிருந்த ஆச்சரியச் சாயை மூக மெங்கும் படர்ந்தது. “நேற்றிரவு உன்னைச் சந்தித்தேனா!” என்று கேட்டான் அமீர் கூலவாணிகனை உற்று நோக்கி.

“ஆம்.” கூலவாணிகன் குரல் உறுதியாயிருந்தது.

“எங்கு சந்தித்தேன்?”

“பலவர்மனின் அந்தரங்க அறையில்?”

“அக்ஷ்யமுனைக் கோட்டைத் தலைவன் அறை யிலா!”

“ஆம்.

“அங்கு எதற்காகச் சென்றாய் நீ?”

“படைத்தலைவர் கட்டளையை நிறைவேற்ற.

“அங்கு என்னைச் சந்தித்தாயா?”

“ஏன் உனக்கு நினைப்பில்லையா ?”

இதைக் கேட்ட அமீர் ஏளனம் தொனிக்க நகைத் தான். “நினைப்பா! இருக்கிறது இருக்கிறது! உனக்கும் எனக்கும் பலவர்மன் அவன் அறையில் விருந்து வைத் தானா?” என்று அமீரின் கேள்வியிலும் ஏளனம் மண்டிக் கடந்தது.

கூலவாணிகன் புத்தி மேலும் மேலும் குழம்பத் தொடங்கியது. தன் நிலையைப் பற்றியே பெரும் சந்தேகம் அடைந்தான் அவன். இருப்பினும் சமாளித்துக்கொண்டு, “பலவர்மன் விருந்து வைக்கும் நிலையில் இல்லை, உனக்கே தெரியும் அது?” என்று கூறினான் சேந்தன்.

“வேறு எப்படி இருந்தான் சேந்தா?”

“மஞ்சத்தில் குப்புற விழுந்து கடந்தான்.

“கொலை செய்யப்பட்டா?”

“இருக்கலாம்.

“ஏன் இருக்கலாம்?”

“அவன் முதுகில் குருதி மண்டிக் கிடந்தது.

“கொலை செய்யப்பட்டிருந்தால் ஒருவேளை அந்தக் கொலையை நான் செய்தேன் என்றுகூடச் சொல்லுவாய் போலிருக்கிறது?”

இப்படித் திரும்பத் திரும்பத் தன்னைக் கேவி செய்து ஏளனத்துடன் பேசிய அமீர்மீது எரிந்து விழுந்தான் சேந்தன். “வேறு யாரும் அங்கில்லை, பலவர்மன் குருதி பாயக் குப்புறக் கிடக்கிறான்.

இரண்டும் இரண்டும் நான்கு அல்லவா?” என்றான்.

இதைக் கேட்டதும் இடி.

இடியென நகைத்த அமீர், ஏன் சேந்தா? அந்தக் கொலையை நீ செய்திருக்கக் கூடாதா? நீயும்தானே அறையிலிருந்ததாகச் சொல் கிறாய்?” என்று சிரிப்புக்கிடையே கேட்கவும் செய்தான்.

நான் பிறகுதான் வந்தேன்” என்றான் சேந்தன் ஏற்றத்துடன்.

“அப்படிச் சொல்வது நீ.

இந்த நாட்டு நீதிபதிகள் ஒப்புக்கொள்ள வேண்டுமே?” என்றான் அமீர்.

“அமீர்! விளையாடாதே, கொலை செய்தது நானல்ல. உனக்கே தெரியும் அது. எனக்கு முன்பு நீதானிருந்தாய் அந்த அறையில்” என்று குழறினான் சேந்தன்.

“அதைச் சொல்ல வேண்டியது நீ அல்ல.” என்றான் அமீர்,

“வேறு யார்?” என்றான் சேந்தன்.

“படைத்தலைவர். பளிச்சென்று வந்தது அமீரின் பதில். மேலும் சொன்னான் அமீர், “கொலை செய்ததைப் பற்றி அஞ்சாதே சேந்தா! உன்னை நானும் படைத் தலைவரும் கைவிட மாட்டோம். போயும் போயும் யாரைக் கொலை செய்துவிட்டாய்? எதிரியைத்தானே?”

பரிதாபத்தை நாடும் பார்வையொன்றைக் கூல. வாணிகள் படைத்தலைவனை நோக்கி வீசினான். இதுவரை அவ்விருவர் பேச்சிலும் குறுக்கிடாமல் கேட்டு வந்த இளையபல்லவன் பஞ்சணையிலிருந்து மெல்ல எழுந்து கூலவாணிகன் அருகில் வந்து, “சேந்தா! என்ன இன்று காலையில் ஏதேதோ உளறுகிறாய்? யார் யாரைக் கொலை செய்தது? நேற்றிரவு முழுவதும் அமீர் இந்த மாளிகைப் பக்கமே வரவில்லையே? காட்டுப் பகுதியில் பூர்வகுடிகளின் நடமாட்டம் அதிகமாயிருக்கிறது. இரவு பூராவும் அங்கல்லவா காவலில் இருந்திருக்கிறான் அமீர். ஏதாவது கனவு கண்டாயா?” என்று கேட்டு, கூலவாணிகன் தோளிலும் கையை வைத்து, “என்ன ஆயிற்று நான் சொன்ன வேலை?” என்றும் விசாரித்தான்.

கூலவாணிகன் என்ன சொல்வதென்று அறியாமல் விழித்தான். மீண்டும் பழைய விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்து, “நான் சொல்வதெல்லாம் உண்மை. நம்புங்கள் படைத்தலைவரே, உங்கள் கட்டளைப்படி நான் பலவர்மன் அறைக்குள் நுழைந்ததும் உண்மை. அங்கு...“என்று தொடர்ந்ததை இடைமறித்த இளையபல்லவன், “பலவர்மன் கொல்லப்பட்டுக் குருதியுடன் குப்புறக் கிடந்தான். பிறகு அமீர் உன்னைச் சந்தித்தான். சரி சரி.” என்று கூறி, “நீ பலவர்மன் அறைக்குப் போகவே இல்லை, ஒன்று நீ குடித்திருக்க வேண்டும். அல்லது உறங்கி கனவு கண்டிருக்க வேண்டும்.

“படைத்தலைவன் இப்படிச் சேந்தனிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே வெளியில் தாரைகள் சப்தித்தன. குதிரைகள் வந்து நிற்கும் குளம்பு ஒலிகளும் கேட்டன். தாரைகள் ஊதப்பட்டதாலும், குதிரைகள் வந்து நின்ற தாலும், இளையபல்லவனும் அமீரும் அறைக்கதவைத் திறந்துகொண்டு மாடியின் வெளிப்புறம் செல்லவே, சேந்தனும் அவர்களைப் பின்தொடர்ந்து கைப்பிடியில் சாய்ந்து அவர்களுடன் தானும் மாளிகையின் வாசலில் நடப்பதைக் கவனித்தான். தாரைகள் ஊதியதைத் தொடர்ந்து, பலவர்மன், திடகாத்திரத்துடன் வெளி வந்ததும், புரவியில் அமர்ந்து மாளிகைத் தளத்தை நோக்கியதும், பிறகு மகிழ்ச்சியுடன் இளையபல்லவனை நோக்கி நகைத்துவிட்டுச் சென்றதும் கூலவாணிகனின் குழப்பத்தை உச்ச நிலைக்குக் கொண்டு போயின வென்றால், அந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து எழுந்த அமீரின் பேச்சு அவன் கோபத்தையும் குழப்பத்தையும் கிளறிவிட்டன.

“மாண்ட பலவர்மன் பிழைத்துவிட்டான் சேந்தா? இனி நீ என்மீது கொலைக்குற்றம் சாட்ட முடியாது” என்றான் அமீர் விஷமத்துடன்.

“எனக்கு ஏதும் புரியவில்லை. பலவர்மன் குப்புறக் கிடந்ததை எனது இரண்டு கண்களாலும் பார்த்தேன்” என்றான் கூலவாணிகன்.

“அப்படியானால் புரவியில் போவது பிணமா?” என்று அமீர் எள்ளி நகையாடினான்.

“விளையாடாதே என்னிடம் அமீர். இந்த மர்மத்தைச் சிக்கிரம் நான் உடைக்கிறேன்” என்று சீறினான் சேந்தன்.

இருவருக்கும் மேலும் வார்த்தை முற்றுமுன்பாக இளையபல்லவன் நடுவே புகுந்து, “போதும் சச்சரவு சேந்தா! நீ உன் பணியில் தோல்வியுற்றதால் பாதகமில்லை. அந்தப் பெட்டியைத் துறக்க நான் வேறு ஏற்பாடு செய்கிறேன். நீ போய் நீராடி உண்டு சற்று இளைப்பாறு. நிதானத்துக்கு வரலாம்.” என்று சொல்லி அவன் முதுகில் இருமுறை தட்டியும் கொடுத்தான். அதற்குப் பின் அங்கு நிற்கவும் இஷ்டப்படாத கூலவாணிகன் அமீரை ஒரு தரம் ச ம முறைத்து நோக்கிவிட்டு அறையை விட்டு விடுவிடுவென வெளியே நடந்தான்.

அவன் சென்றதும் ஏதும் நடவாதது போலத் தங்கள் பேச்சைத் தொடர்ந்த அமீரும் இளையபல்லவனும், கோட்டைப் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றி விவாதித் தார்கள். “அமீர்! இன்னும் இரண்டு நாள்களில் அமா வாசை வருகிறது. இதற்கு அடுத்த அமாவாசை அக்யமுனையின் கதியை நிர்ணயிக்கும். அக்ஷய முனையின் கதியை மட்டுமல்ல -- சோழ நாடு, கலிங்க நாடு, ஸ்ரீவிஜய நாடு ஆகிய மூன்று பேரரசுகளின் கதியையும் நிர்ணயிக்கும். அமாவாசைக்கு முன்தினம் பகட்பாரி ஸான் பகுதியிலிருந்து பதக்குகளின் தாக்குதலையும், கடற்பகுதியிலிருந்து சூளூக்களின் தாக்குதலையும், எதிர் பார்க்கிறேன். மேற்கு மலைத்தொடர் பகுதியை நீ கவனித்துக்கொண்டால் கடற்கரைப் பகுதியைக் கண்டியத் தேவன் கவனித்துக்கொள்வான். கோட்டையின் ௨ள் புறத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். அன்று பயங்கர விளைவுகள் நேரிடும் அமீர்! அவற்றைச் சமாளிக்க உன் வரையில் நீ தயாரா?” என்று வினவினான் இளைய பல்லவன்.

“நான் இன்றே தயார்.” என்றான் அமீர் இடையி லுள்ள குறுவாள்களைத் தடவிக் கொண்டே.

“கண்டியத்தேவன் தயாராக ஒரு மாதம் பிடிக்கும். என்று சுட்டிக் காட்டினான் இளையபல்லவன்.

புரிந்நுகொண்டதற்கு அடையாளமாகத் தலையை அசைத்த அமீர் “ஆம், ஆகும்” என்றான்.

“அதற்குள் கோட்டையையும் நான் வலுப்படுத்தி விடுவேன். மக்கள் விழிப்பு பெற்றிருக்கிறார்கள். அது நமக்குப் பெரும் பாதுகாப்பு” என்றான் இளையபல்லவன்.

“ஆம்.” என்று தலையை ஆட்டினான் அமீர்.

இளையபல்லவன் சிறிது நேரம் தீவிர யோசனையில் அழ்ந்துவிட்டுக் கவலையுடன் கேட்டான். “அந்த எழுத்து என்னவென்று புரிந்ததா அமீர்?” என்று.

“புரியவில்லை.

“நகல் சரியாக எடுத்தாயா?”

“அப்படியே எடுத்தேன்.

“கையெழுத்து?”

“யார் கையெழுத்தையும் இம்மி பிசகாமல் நான் போடவல்லவனென்பதைத் தென் கலிங்க அதிகாரிகளே உணர்ந்திருக்கிறார்கள்.

“அப்படியானால் அந்த வாசகத்தின் மொழி பெயர்ப்பு எப்பொழுது கிடைக்கும்?”

“இன்றிரவு.

“இளையபல்லவன் முகத்தில் கவலை பெரிதாகப் படர்ந்தது. “எச்சரிக்கையுடன் நடந்துகொள் அமீர்! முதலில் நாம் காணப்போகும் விஷயத்தைப் பொறுத் திருக்கிறது அடுத்த நடவடிக்கை! நகலைப் படிப்பவன்...“என்று ஏதோ சொல்லப்போன இளையபல்லவனை இடை மறித்த அமீர், “பேசமாட்டான், கவலை வேண் டாம்,” என்றான்.

“அத்தனை நம்பிக்கையானவனா!” என்று கேட் டான் இளையபல்லவன்.

“நம்பிக்கையானவன்தான், எதற்கும் அவன் படித்து விஷயத்தைச் சொன்னதும் நாவைத் துண்டித்துவிடுகிறேன்.

“சே! சே! வேண்டாம் அமீர்.

“அரபு நாட்டில் அப்படித்தான் பழக்கம்.

“அந்தப் பழக்கம் நமக்கு வேண்டாம். அவனைச் சில நாள்கள் காவவில் வைத்துவிடு.

“சரி, உங்களிஷ்டம்” என்று அலுப்புடன் பதில் சொன்ன அமீர் இளையபல்லவனிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியே சென்றான். அப்பொழுது சென்றவன் இரவில் தான் திரும்பி வந்தான். திரும்பி வந்தவன் முகத்தில் ஈயாடவில்லை. “படைத்தலைவரே!” என்றழைத்த அமீரின் நாவும் மேலே பேச முடியாமல் திணறியது. அப்போதுதான் பஞ்சணையில் யோசனையுடன் படுத்த இளையபல்லவன் அமீரின் முகத்தில் திகைப்பைக் கண்டதும், “என்ன அமீர்?” என்று துள்ளி எழுந்தான். பதிலெதுவும் சொல்லாத அமீர் கதவைத் தாழிட்டுவிட்டுப் பூனை போல் மெல்ல நடந்து விளக்கிருந்த இடம் நோக்கி நடந்தான்.

இளையபல்லவனும் அந்த விளக்கருகில் வந்ததும், இடைக் கச்சையிலிருந்து எடுத்த ஓர் ஓலையை அமீர் நீட்டினான் படைத்தலைவனிடம். அதை விளக்கொளியில் படித்த படைத்தலைவன் முகத்தில் பெரும் ஆச்சரிய ரேகை படர்ந்தது. அமீரின் பெருவிழிகள் முன்னைவிடப் பெரி தாகி முகத்திலிருந்து பிதுங்கிவிடுவன போல் காட்சியளித்தன.

இருவர் கண்களும் சந்தித்தன.

அந்தச் சந்திப்பில் வியப்பு, அதிர்ச்சி முதலிய பல உணர்ச்சிகள் பளிச்சிட்டன.

“இப்பொழுது புரிகிறது! புரிகிறது!” என்று இருமுறை சொல்லிக்கொண்ட படைத்தலைவன் ஓலையைத் தட்டிக் காட்டி, “இரகசியத்தின் திறவுகோல் இது! அப்பப்பா, எத்தனை பயங்கரமான திறவுகோல்! எத்தனை மர்மங் களை விளக்குகிறது!” என்று குரலில் பல உணர்ச்சிகள் அலைபாயக் கூறினான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 40

ஊதல், ஊதல், ஊதல், ஊதினால் சாதல், சாதல், சாதல்!

நல்ல இருளில் திடீரென வீசிவிட்ட விளக்கொளி போல, அக்ஷயமுனைக் கோட்டையின் பெரு ரகசிய மொன்றைப் பளீரென விளக்கிவிட்ட அந்த ஓலையை மீண்டும் மீண்டும் படித்த இளையபல்லவன் முகத்தில் பலப்பல உணர்ச்சிகள் பாய்ந்து சென்றன. “என்ன பயங்கர இரகசியம் இது, எத்தனை மர்மங்களை விளக்குகிறது?” என்று அவன் உதடுகள் மீண்டும் மீண்டும் முணு முணுத்தன. பல விநாடிகள் அத்தகைய முணுமுணுப் புடனும் தீவிர சிந்தனையுடனும் திரும்பத் திரும்ப அந்த அறையில் அங்குமிங்குமாக நடந்த இளையபல்லவன் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன்போல் அறையின் நடுவே நின்று இருமுறை தன் தலையை அசைத்துக் கொண்டதன்றி உறுதி நிரம்பிய கண்களை அமீரின் முகத்தின் மீதும் புரட்டி, “அமீர்! இப்பொழுது புரிகிறதல்லவா இந்தக் கோட்டை யின் நிலவரம் உனக்கு?” என்று வினவினான்.

அதுவரை அமீரின் முகத்திலிருந்த திகைப்பும் வியப்பும் மறைந்து அவை இருந்த இடத்தைக் குழப்பம் ஆக்கிரமித்துக் கொள்ளவே, “இந்தக் கோட்டையின் நிலவரத்தைப் பற்றி இதில் ஏதுமில்லையே!’” என்றான் குழப்பம் குரலிலும் தொனிக்க.

“நேர்முகமாக இல்லை அமீர். ஆனால் இதில் கண்ட இரகசியத்தைப் பலவர்மன் செய்கைகளுடன் இணைத்துப் பார், இந்நாட்டு மன்னனின் போக்குடன் இணைத்துப் பார்.” என்று கூறிய இளையபல்லவன் அமீரை மீண்டும் கூர்ந்து நோக்கி, “அமீர், ஸ்ரீவிஜயத்தின் உபதளபதியின் படமொன்றை நீ பலவர்மன் அறையில் பார்த்தா யல்லவா!” என்றும் வினவினான்.

ஆமாம், பார்த்தேன்.” என்றான் அமீர் மேலும் குழப்பம் அதிகரிக்க.

“அந்த உபதளபதி பலவர்மனால் இந்த அக்ஷய முனையில் கொல்லப்பட்டிருக்கிறான், “ என்று சுட்டிக் காட்டி அர்த்தபுஷ்டியுடன் அமீரைப் பார்த்தான் இளைய பல்லவன்.

“ஆமாம். படத்தின் கீமுள்ள குறிப்பு அதை மறை முகமாக உணர்த்துகிறது.” என்றான் அமீர்.

இளையபல்லவன் விழிகள் பெரிதும் பளிச்சிட்டன. “ஒரு பெரும் சாம்ராஜ்யத்தின் உபதளபதி கொல்லப் படுகிறான். அதைப்பற்றிச் சாம்ராஜ்யாதிபதி கவலைப் படாதிருக்கிறான். கொன்றவன் ஒரு கோட்டையின் தலைவன். இஷ்டப்படி சுதந்திரமாக உலாவுகறான். இது விசித்தரமாயில்லையா உனக்கு?” என்று கேட்டான் இளையபல்லவன்.

“ஆம், ஆம். விசித்திரமாயிருக்கிறது?” என்றான் அமீர்.

“அதுமட்டுமல்ல, கொள்ளையரையும் கடற்கரையில் வைத்து ஆதரிக்கிறான் ஒரு நாகரிக சாம்ராஜ்யத்தின் துறைமுகத் தலைவன் ஒருவன். அதைப்பற்றியும் கேள்வி கேட்பதில்லை சாம்ராஜ்யாதிபதி” என்று குறிப்பிட்டான் இளையபல்லவன்.

“கேட்பதாகத் தெரியவில்லை.” என்றான் அமீர்.

ஏன்? ஏன் கேட்கவில்லை?” என்று திடீரெனக் கேள்வியை வீசினான் இளையபல்லவன். அவன் குரல் மிக உஷ்ணத்துடன் ஒலித்தது.

“அதுதான் புரியவில்லை.” என்றான் அமீர்.

“எனக்குப் புரிகிறது. நன்றாகப் புரிகிறது. சாம்ராஜ் யாதிபதியான ஜெயவர்மன் பலவர்மனை எதுவும் கேட்க முடியாது. கேட்கும் நிலையில் இல்லை, அதை இந்த ஓலை தெளிவாக்குகிறது.” என்று இருமுறை ஓலையைத் தன் கையால் தட்டியும் வலியுறுத்தச் சொன்னான் இளைய பல்லவன்.

அமீரின் கூரிய புத்தியையும் ஏமாற்றிய அந்த ஓலை அப்பொழுதுதான் அமீரின் புத்தியிலும் உண்மையை மெள்ள மெள்ள வீசத் தொடங்கவே அமீரின் முகத்தில் பெரும் பிரமிப்பு விரிந்தது. “சரி, சரி, அதுதான் பலவர்மன் இங்கு தனியரசு செலுத்துகிறானா!” என்றும் கேட்டான் அமீர் பிரமிப்பு பூ்ர்ணமாகத் தொனித்த குரலில்.

“ஆம் அமீர், சுயநலத்தையும் சுயபலத்தையும் தவிர வேறெதையும் வாழ்க்கையில் அறியாத வஞ்சகனான பலவர்மன், ஸ்ரீவிஜய சக்கரவர்த்தியின் பெரும் ரகசிய மொன்றைக் கையில் வைத்துக்கொண்டு அவனை அதைக் கொண்டே மிரட்டி அக்ஷயமுனைப் பக்கம் கால் வைக்காமல் அடித்திருக்கிறான். இந்த ஓலை என்றும் அவனுக்கு விஜயவர்மனிடமிருந்து பாதுகாப்பை அளிக்கும்.” என்றான் இளையபல்லவன்.

“அதுமட்டுமல்ல இளையபல்லவரே, வேறொருவரிட மிருந்தும், பாதுகாப்பளிக்கும், அந்த...” என்று ஏதோ சொல்லப்போன அமீரைத் தடைசெய்த இளைய பல்லவன், “அமீர்! அந்தப் பெயரைச் சொல்லாதே. இங்கு சுவர்களுக்கும் ரகசியத்தைக் கேட்கும் சக்தி உண்டு. பலவர்மன் ஒற்றர்கள் சதா நம்மீது கண் வைத்திருக்கிறார்கள். சொல்லி வந்த அந்த மனிதர் இதில் சம்பந்தப் பட்டிருப்பது நம்மிருவருக்கு மட்டும் தெரிந்திருக்கட்டும். வேறு யாருக்கும் தெரிய வேண்டாம்.” என்று எச்சரிக்கையும் செய்தான்.

சரியென்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டிய அமீரின் முகத்தில் தவிர சிந்தனை படர்ந்தது. இருவரும் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டதால் நீண்ட நேரம் அந்த அறையில் மெளனமே நிலவியது. அந்த அறையி லிருந்த விளக்குச் சுவர்கூட அந்த ரகசியத்தின் விளைவு களைப் புரிந்து கொண்டது போல் கடற்காற்றில் அலைந்து இரண்டு மூன்று முறை நடுங்கியது. காற்றும் பயந்து கொண்டு கிழக்கு வாயிற்படிக்கு மேலேயிருந்த துவாரங் களின் வழியாக மெள்ளவே அறையில் நுழைந்தது. அத்தகைய சூழ்நிலையில் தன் பஞ்சணையை நோக்கு நடந்து அதில் உட்கார்ந்துகொண்ட இளையபல்லவன் தலையை முழந்தாள்களை நோக்கித் தொங்கப் போட்டுக் கொண்டு பல நிமிஷங்கள் யோசனையில் ஆழ்ந்தான். கடைசியாக ஓரு முடிவுக்கு வந்து அமீரைக் கட்டே அழைத்து, “தலையைக் குனி” என்றான்.

அமீர் தலையைக் குனிய அவன் காதுக்கருகில் ஏதோ மடமடவென்று கூறினான் இளையபல்லவன். அந்தச் சொற்களைக் கேட்கக் கேட்க அமீரின் முகத்தில் இருந்த வியப்பு திகைப்பு எல்லாம் மறைந்து உற்சாகமும் குதூ கலமும் குடிகொள்ளத் தொடங்கின. இளையபல்லவன் பேசி முடித்ததும் நன்றாக நிமிர்ந்து நின்றுகொண்ட அமீர் ராட்சதச் சிரிப்பு சிரித்தான். “மிகவும் சரி, மிகவும் சரி” என்று கூறி இளையபல்லவனின் கருத்தை அமோதிக்கும் முறையில் தலையைப் பலமாகவும் ஆட்டினான். அத்துடன் இளையபல்லவனிடம் விடை பெற்றுக்கொண்ட அமீர் தன் மனத்திலிருந்து பெரும் சுமையொன்று இறங்கிவிட்டதற்கு அடையாளமாகப் பெரும் மகிழ்ச்சியுடன் மாடிப்படிகளில் இறங்கிச் சென்றான்.

நாள்கள் நான்கு ஒடின. அந்த நான்கு நாள்களில் நடந்த பல விஷயங்களின் காரணம் அக்ஷயமுனையிலிகுந்த பல பேருக்குப் புரியவில்லை. புரியாததால் அதைப்பற்றி நானாவிதமாக நகர மக்கள் பேசவும் முற்பட்டார்கள். அந்தப் பேச்சுகள் மஞ்சளழகியின் காதிலும் விழுந்ததால் அவள் பெரிதும் நிலைகுலைந்தாள். அடுத்த சில தினங் களில் இளையபல்லவன் வெறி பிடித்தவனைப் போல் நடந்துகொண்டதையும் கண்டபடி முன்னுக்குப் பின் முரணான உத்தரவுகளைப் பிறப்பித்ததையும் கண்ட நகர மக்கள் ஒருவேளை சோழர் படைத்தலைவன் மூளை குழம்பிவிட்டதோ என்றுகூட நினைத்தார்கள். மறுநாளி லிருந்து தனக்குக் காவலர் யாரும் தேவையில்லையென்று மாடியறைக் காவலரைக் கூடக் கடற்கரைக் குடிசைகளுக்கு அனுப்பிவிட்ட இளையபல்லவன், இனசரி இரவிலும் பகலிலும் குடியில் இறங்கி பலவரா்மன் மாளிகையில் பெரும் கொட்டம் அடித்துக் கொண்டிருந்தான். ஊருக்குள்ளும் தாறுமாறாகத் திரிந்தகொண்டு கண்ட சண்டைகளை விலைக்கு வாங்கிக்கொண்டான். குடிக்காமலிருந்த வேளைகளிலும் அவன் போக்கும் உத்தரவுகளும் விபரீதமாயிருந்தன. இரண்டு நாள்களுக்கெல்லாம் தலை நீட்டிய அமாவாசை இரவில் வெகு வேகமாகக் கடற்கரையை அடைந்த இளையபல்லவன் கொள்ளையரில் சிலரைக் கூட்டி அவர்கள் மரக்கலங்களில் இரண்டை உடனடி யாகப் பாய்விரித்துக் கடலில் செல்லும்படி உத்தர விட்டான். அந்த மரக்கலமொன்றில் தனது மாலுமி யொருவனையும் அனுப்பி விவரம் புரியாத பல உத்தரவுகளையும் பிறப்பித்தான். “இரண்டு மரக்கலங்களும் கடாரத்துக்கும் சொர்ணத் தீவுக்கும் இடையேயுள்ள கடலில் இன்றிலிருந்து ஒரு மாதம் சஞ்சரிக்கட்டும்” என்று அந்த மரக்கலத்தின் தலைவர்களுக்குக் கூறினான்.

“எதற்காகச் சஞ்சரிக்க வேண்டும்?” என்று வினவி னான் அந்தக் கொள்ளைக் கப்பல்களின் தலைவர்களில் ஒருவன்.

“காரணம் உனக்குத் தேவையில்லை. சொல்கிறபடி செய். என் மாலுமி உங்களுக்கு வழி காட்டுவான்.” என்றான் இளையபல்லவன்.

“ஒரு மாதம் சஞ்சரித்த பிறகு?” என்று வினவினான் இன்னொரு மரக்கலத் தலைவன்.

“இங்கு வந்துவிடலாம்” என்று இளையபல்லவன் கூறினான்.

“இடையே மரக்கலங்கள் ஏதாவது தென்பட்டால்?” மீண்டும் எழுந்தது கொள்ளைக்காரன் கேள்வி.

“முடிந்தால் தாக்கலாம்.

“ஏன் முடியாது?”

“உங்கள் மரக்கலங்களைவிடப் பலமான மரக் கலங்கள் அங்கு உலாவும்.

“எப்படித் தெரியும் உங்களுக்கு?”

“சோதிடம் தெரியும் எனக்கு” என்று சொல்லி நகைத்த இளையபல்லவன் தனது மாலுமியை அருகில் அழைத்து அவன் தோள்மீது கையைப் போட்டுக் கொண்டு சற்று தூரம் அவனை இழுத்துச் சென்றான். சோழர் படைத் தலைவனும், அகூதாவின் உபதலைவருமான இளைய பல்லவன் தன் தோள்மீது சரிசமமாகக் கையைப் போட்டுக் கொண்டதால் சங்கடமடைந்த மாலுமியை, “சங்கடப் படாதே, சாதாரணமாக நடந்துவா” என்ற கடுமையான உத்தரவு அவனைப் பயத்துடன் நடக்க வைத்தது. அப்படி நடந்து வந்த மாலுமியிடம், “இரு மரக்கலங்களும் நான் கூறிய கடற்பகுதியில் சஞ்சரிக்கட்டும். அங்கு இன்னும் இருபது நாள்களுக்குள் சிவந்த கொடியுடன் ஒரு பெரும் மரக்கலம் வரும்...” என்று சொல்லிக்கொண்டு போன இளையபல்லவனைப் பிரமிப்புடன் நோக்கிய மாலுமி, “அப்படியா?” என்று இடை மறித்துக் கேட்டான்.

“ஆம்” என்று கூறிய இளையபல்லவன், “அவன் மரக் கலத்துக்கு நீ மட்டும் சென்று இந்த ஒலையைக் கொடுத்து விடு” என்று தன் மடியில் இருந்த ஓலையொன்றை எடுத்து மாலுமியின் கச்சையில் ரகசியமாகச் செருகினான். அத்துடன் அவனைத் திரும்பவும் நீர்க்கரைக்கு அழைத்து வரும் இரு மரக்கலத் தலைவர்களையும் நோக்கு, “நீங்கள் சிறந்த மாலுமிகள் என்பது எனக்குத் தெரியும். இருப் பினும் என் மாலுமியையும் உங்களுடன் அனுப்புகிறேன். உயிருக்கோ மரக்கலத்துக்கோ எந்தவித ஆபத்தும் நேரிடா மல் பாதுகாத்து இவன் திரும்ப அழைத்து வருவான்” என்று உத்தரவிட்டுக் கோட்டையை நோக்கிச் சென்றுவிட்டான்.

மறுநாள் திடீரென இரு மரக்கலங்கள் பாய் விரித்துச் சென்றுவிட்டதை மக்கள் பார்த்தனர். மஞ்சளழகி பார்த்தாள், பலவர்மனும் பார்த்தான். அப்படி அந்த மரக்கலங்கள் சென்றது, இளையபல்லவன் உத்தரவால் என்பதைக் கேட்ட மக்கள் மலைத்தனர். மஞ்சளழகி பிரமித்தாள். பலவர்மன் மகிழ்ந்தான். சூளூக்களின் தாக்கு தலைக் கடற்பகுதியில் சமாளிக்கவே இளையபல்லவன் கொள்ளையர் கப்பல்களைப் பெரும் போர்க்கலங்களுடன் சக்கர வட்டமாக நிறுத்தியிருக்கிறான் எஎன்பதை எண்ணி யிருந்த மக்கள் அவன் வேண்டுமென்றே மரக்கலங்களைப் போகச் சொல்லி, துறைமுகத்தைப் பலவீனமாக்கிவிட்ட தைக் கண்டு மலைத்தனர். சூளூக்கள் அந்த நிலையில் தாக்கினால் ஏற்படக்கூடிய விளைவை எண்ணிப் பயமும் அடைந்தனர். மரக்கலங்கள் போனதும் பலவர்மன் பெரும் மகழ்ச்சி அடைந்தான். மரக்கலங்கள் போய்விட்டதை ஆட்சேபித்துக் குடிமக்கள் தலைவர் இருவர் ஆட்சேபித்த தற்கும், “இளையபல்லவர் உத்தரவை நான் தடுக்க முடியாது. இந்தக் கோட்டையின் பாதுகாப்பு அவர் கையில் அல்லவா இருக்கிறது!” என்று சமாதானம் கூறிவிட்டான். அடுத்த நான்கு நாள்களில் மற்றும் இரண்டு கொள்ளையர் மரக்கலங்கள் துறைமுகத்திலிருந்து மறைந்தன. பலவர்மன் மகழ்ச்சி கட்டுக்கடங்காததாயிற்று. அத்தனைக்கு அத்தனை மஞ்சளழகியின் வேதனை அதிகப்பட்டது. இளையபல்லவன் ஏற்றுக்கொண்ட வீண் சண்டை களையும் துறைமுகத்தைப் பலவீனப்படுத்த அவன் பிறப்பித்த உத்தரவுகளையும் பொறுக்கமாட்டாத அவள், அவனைச் சந்திக்கத் தீர்மானித்தாளானாலும் சந்திப்பது அத்தனை எளிதாயில்லை. கடைசியில் எதிர்பாராத விதமாகச் சந்தித்தபோது ஏற்பட்ட விளைவும் அவள் வேதனையைத் துடைக்கவில்லை.

அமாவாசை சென்று எட்டு நாள் கழித்து இளைய பல்லவனே அவளை நாடி வந்தான். அவள் அப்பொழுது மாளிகைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தாள். வசந்தகாலத்தின் மலர்கள் நந்தவனத்தில் பூத்துக் கிடந்த தால் எங்கும் நறுமணம் மண்டிக் கிடந்தது. சற்று முன்னே உதயமான வெண்மதியும் தன் கதிர்களை மரக்கிளைகளின் வழியாகத் தோட்டத்தில் பாய்ச்சியிருந்தான். அந்த மரங்களின் நிழலில் மெல்ல நடந்து சென்ற மஞ்சளழகி ஒரு மரத்தில் சாய்ந்து நின்று ஏக்கப் பெருமூச்சு விட்டாள். சிந்தனை வெள்ளம் அவள் சித்தத்தில் பெருவேகத்துடன் பிரவாகித்துக் கொண்டி ருந்தது. அந்த வேகத்தைத் தடை செய்த குரல் ஒன்று அவளைத் திடுக்கிட வைத்தது. “நிற்பது யார்? என் மனைவியா?” என்று கேள்வி வந்த திக்கை அவள் நோக்கினாள். இளையபல்லவன் அவளை நோக்கி நடந்து வந்தான். இம்முறை அவன் நடையில் தள்ளாட்ட மில்லை. மதி ஒளி பாய்ந்த முகமும் வெறி முகமாயில்லை. பழைய வீரமுகமாகவே காட்சியளித்தது. சுய நினைவுடன் வரும் அவனிடம் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளவும், அவனை முடியுமானால் நன்னெறிக்குத் திருப்பவும் மஞ்சளழகி, “இன்னும் மனைவியாகவில்லை” என்றாள் உஷ்ணத்துடன்.

அந்தச் சுடுசொற்கள் கூட அவள் வாயிலிருந்து இன்பமாகத்தான் உதிர்ந்தன. மரத்தில் சாய்ந்த உடலைச் சிறிது வளைத்துக் கொண்டாள் அவள். அதனால் நடன பாணி போலவே நின்ற மஞ்சளழகியைத் திடமாக நெருங்கிய படைத்தலைவன், “மனைவியாகாவிட்டா லென்ன, மனைவியாக வேண்டியவள்தானே?” என்று கூறி அவள் இடையில் தனது ஒரு கையையும் வைத்தான்.

அவள் அசையவில்லை. அவன் கையையும் அப்புறப் படுத்தவில்லை. “மனைவியாகுமுன் ஒரு பெண்ணைத் தொடுவது முறையல்ல.” என்றாள் அவள்.

அவன் மெல்ல நகைத்தான். “ஏற்கெனவே தொட்ட பெண்களைத் தொடுவதில் தவறில்லை. தவிர எங்கள் நாட்டில் காந்தர்வ மணம் என்பது ஒன்று உண்டு.” என்று கூறி அவளுக்குப் பக்கத்தில் அவனும் ஒருக்களித்துச் சாய்ந்தான்.

“அந்த மணத்துக்கு இருவரும் சம்மதப்பட வேண்டும்” என்று கூறினாள் மஞ்சளழகி. தன் உடலின் இடப்பக்கத்தில் மெல்லச் சாய்ந்த அவன் உடலைக் கையால்கூட நகர்த்தாமல்.

“ஏன் உனக்குச் சம்மதமில்லையா?”

“இல்லை.

“ஏன்?”

“உங்கள் போக்கு எனக்குப் பிடிக்கவில்லை.

“என்ன என் போக்கு?”

“அதிகமாகக் குடி க்கிறீர்கள்.

“சரி.

கொஞ்சம் குறைத்துக் கொள்கிறேன்.

“கூடாது.

அடியோடு மது அருந்தக்கூடாது.

“சரி, விட்டுவிடுகிறேன்.

“எப்பொழுது?”

“ஒரு மாதம் கழித்து.

“ஒரு மாதம் எதற்கு?”

“நல்ல பழக்கங்களைச் சிக்கிரம் விட்டுவிடலாம். கெட்ட பழக்கங்களை ஒழிக்கக் காலம் தேவை!”

“நாளை முதல் சிறிது சிறிதாகக் குறைக்கிறீர்களா?”

“குறைக்கிறேன். ஆனால் இதை ஊதிப் பார்.” என்று கூறி கச்சையில் இருந்த சிறு கடற் சிப்பியொன்றை எடுத்து மஞ்சளழகியிடம் நீட்டினான் இளையபல்லவன்,.

மஞ்சளழகி இளையபல்லவனை உற்றுநோக்க, “இதை ஏன் ஊத வேண்டும்?” என்று கேட்டாள்.

“இந்தக் கடற்சிப்பி ஓர் ஊதுகுழல். இதிலிருக்கும் துவாரங்களைப் பார் இது எழுப்பும் ஒலி புது முறையில் இருக்கிறது. இப்படி வாயில் வைத்துப் பலமாக ஊத வேண்டும்.” என்று கூறி அவள் வாயில் அந்தச் சிப்பியின் ஒரு பாகத்தை வைத்து அழுத்தவும் செய்தான்.

மஞ்சளழகி அதை வெடுக்கென்று அவன் கையி லிருந்து பிடுங்கிக் கொண்டாள். “எதற்காக இதை நான் ளத வேண்டும்? சொல்லுங்கள்” என்றாள்.

“பல மார்மங்களை இது விளக்கும்.

“இந்தச் சிப்பியா?”

“ஆம் “இப்பொழுது குடித்திருக்கிறீர்களா 7”

“இல்லை.

“பின் ஏன் உளறுகிறீர்கள்?”

“உளறலா அல்லவா என்பதை ஊதியபின்பு அறிந்து கொள்வாய்.

“சரியென்று அவள் உஊதப்போனாள். “சற்று இரு” என்று அவளைத் தடை செய்த இளையபல்லவன், மஞ்சளழக! இங்கு யாருமில்லை. சொல்வதைக் கவன மாய்க்கேள். என் செய்கை ஒன்றும் இன்னும் சில நாள் களுக்கு விளங்காது. ஆனால் செய்யப்படும் எதுவும் உன் நன்மைக்காகச் செய்யப்படுகிறதென்பதை நினைவில் வைத்துக்கொள். வருகிற அமாவாசையன்று பெரு நிகழ்ச்சிகள் இந்த அக்ஷ்யமுனையில் ஏற்படும். ஆனால் அவற்றைப் பார்க்க நீ இருக்கமாட்டாய். நீ வரும்போது சிறப்புடன் வருவாய். அமாவாசை இரவில் உனக்குக் கொடுக்கப்படும் மதுவைப் பூராவாக அருந்திவிடு” என்றான்.

அவள் ஏதோ சொல்ல முயன்றாள்.

“எதுவும் விளங்காது உனக்கு. ஆனால் சொல்கிறபடி செய். இப்போது ஊது. இந்த ஊதலைக் கேட்டு வருபவரிடம் சிப்பி இந்த மரத்தடியில் கிடந்ததாகக் கூறிவிடு. சரி ஊது, நான் வருகிறேன்.” என்று கூறிவிட்டுச் சென்றான் இளையபல்லவன்.

அவன் போன சில விநாடிகளுக்கெல்லாம் அந்தச் சிப்பியை வாயில் வைத்து இரு முறை ஊதினாள் அவள். இரு முறை கோட்டான்கள் பலமாக அலறும் சத்தம் அந்த நந்தவனத்தை ஊடுருவிச் சென்றது. அந்த ஒலியைத் தொடர்ந்து திடீரென மாளிகையின் கதவொன்று பலமாகத் திறந்தது. யாரோ வேகத்துடன் ஓடிவரும் ஓசையும் மஞ்சளழகியின் செவிகளில் விழுந்தது. கடற் சிப்பியின் ரகசியம் மெள்ள மெள்ள உதயமாயிற்று அவள் சிந்தையில். “இந்த ஊதல் ஊதல். இதை ஊதினால் சாதல், சாதல் சாதல்! உண்மை தெரிந்துவிட்டது எனக்கு” என்று சொல்லிக்கொண்டே மஞ்சளழக, “வருகிறது ஆபத்து! ஆனால் அதுதான் தெரிகிறதே அவருக்கு.” என்று தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டாள். அவள் எதிர்பார்த்த ஆபத்து அந்தச் சமயத்தில் மாளிகைத் தோட்டத்தின் கதவை ஓசைப்படாமல் திறந்துகொண்டு அடிமேலடி வைத்து அவளிருந்த தக்கை நோக்கி வந்தது, திகிலால் அவள் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 41

மரக்கலமல்ல...மனக்கலம்

குடற்சிப்பியைக் கச்சையிலிருந்து எடுத்துக் காட்டி அது ஓர் ஊதுகுழல் என்பதைப் புலப்படுத்தி, அதை ஊது விடும்படியும் உத்தரவிட்டு இளையபல்லவன் சென்ற இரவுக்குப் பிறகு மஞ்சளழகியின் நிலை பெரிதும் மாறு பட்டுவிடவே அவள் பழைய மஞ்சளழகியாயில்லாமல் புது மஞ்சளழகியாகி ஏதோ உணர்ச்சியற்ற ஒரு பதுமை உலாவுவது போல் உலவி வந்தாள். அவள் மாற்றத்தை அக்ஷயமுனை நகர மக்களும் கடற்கரைக் கொள்ளையரும், இளையபல்லவனைச் சேர்ந்த மாலுமிகளும் கண்டாலும் அதன் உண்மைக் காரணத்தை அறியாமல், இல்லாத காரணங்களையும் தாங்களாகவே கற்பித்துக்கொண்டு அவற்றைப் பட௫ரங்கமாகப் பேசவும் தலைப்பட்டார்கள். இளையபல்லவனிடம் அவளுக்கிருந்த காதலே அந்த மாற்றத்துக்குக் காரணமெனச் சிலர் நினைத்தார்கள். அந்தக் காதலும், இளையபல்லவன் குடி. வெறியாலும் பண்பற்ற நடத்தையாலும் வெறுப்பாக மாறியிருக்க வேண்டுமென்று இன்னும் சிலர் நினைத்தார்கள். பூர்வ குடிகளின் விரோதத்தால் தன் தந்தைக்கும் இளைய பல்லவனுக்கும் என்ன தீங்கு நேரிடுமோ என்ற திகில்தான் காரணமென்றும் மற்றும் சிலர் அபிப்பிராயப்பட்டார்கள். காரணம் எதுவாயினும் பழைய மஞ்சளழகி மாறிவிட்டாள் என்பது மட்டும் தெளிவாகத் தெரியவே அவளை அறிந்த, அவள் நடனத்தை வருஷா வருஷம் ரசித்த, அத்தனை மக்களும் அவள் நிலை பற்றி வருந்தவே செய்தார்கள்.

கொள்ளையரின் துணைவிகள் அவளைக் கடற் கரையிற் பார்த்தபோதெல்லாம் அவளது வெறித்த பார்வையையும், கேட்டதற்குத் தாமதித்து வந்த அவள் பதிலையும், சிலசமயங்களில் தடீர் எனத் தூக்கி வாரிப் போட்டது போல மிரண்ட அவள் விழிகளையும் கண்டு பெரிதும் பரிதாபப்பட்டார்கள். அதே கடற்கரையில் அலட்சிய நடை நடந்து கொள்ளையரைத் தட்டிக் கொடுத்தும், கொள்ளையர் மாதரைக் கேலி செய்தும், சுதந்திரப் பறவையாக விஷமக்களஞ்சியமாக விளங்கிய அந்தக் கட்டழகி மறைந்துவிட்டாள். யாரிடமும் அணுகாத, அணுகினாலும் உடனடியாகப் பேசாத, பேசினாலும் சட்டென்று கத்தரித்துக் கொண்டு கடற்கரை நீர் முனைக்குச் சென்றுவிடும் புத்தம்புது பதுமையைக் கண்ட கொள்ளையர் பெரிதும் வருந்தினார்கள். கொள்ளையர் மட்டுமென்ன, இளையபல்லவனது மரக் கலத்தை வெகு துரிதமாக மாற்றியமைத்துக் கொண்டிருந்த தொழில் வல்லுநரும் கண்டியத்தேவனும் இதர மாலுமிகளுங்கூட அவள் நிலை கண்டு வருத்தப்பட்டார்கள்.

கோட்டைக்குள்ளும் கடற்கரையிலும் பலப்பல கண்கள் பலப்பல உள்ளங்கள் தன்னைக் குறித்துப் பரிதாபப்படுவதைக் கூடக் கவனியாமல் மஞ்சளழகி நகரத்துக்குள்ளும் வெளியிலும் உலாவினாள். அவள் சித்தம் சதா புரியாத பல விஷயங்களாலும் கேள்வி களாலும் தினம் தினம் பீடிக்கப்பட்டதால் அவள் அவற்றை அலசி அவற்றுக்கு விடை கண்டுபிடிக்கவே முயன்று கொண்டிருந்தாளாகையால் சுற்றுலகத்தை அவள் அடியோடு மறந்தாள். கடற்சிப்பியைத் தன் வாயில் பொருத்தி இப்படி ஊத வேண்டும் என்று இளைய பல்லவன் காட்டியதையும், தான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் அவன் உத்தர விட்டதையும் எண்ணி எண்ணிக் குழம்பினாள் அவள். அந்தக் கடற்சிப்பியை ஊதியபிறகு அதன் மர்மம் பெரிதும் உடைந்துவிட்டதானாலும், அது உடைந்த விதத்தை மட்டும் அவளால் மறக்க முடியவே இல்லை. கடற் சிப்பியை ஊதினதும் திடீரென்று மாளிகைக்குள் கத வொன்று பெரும் சத்தத்துடன் திறந்ததும், சில விநாடி களுக்கெல்லாம் யாரோ ஓடிவரும் காலடியோசை கேட்டதும் ஏதோ சொப்பனத்தில் நடப்பது போல சதா அவள் ‘சித்தத்தில் வலம் வந்துகொண்டிருந்தன. அந்தக் காலடியோசை தனது தந்தையின் காலடியோசைதா னென்பது அவர் தோட்டத்துக்குள் வந்தபின்பு அறிந்ததும் தன் வியப்பு பன்மடங்காகி விட்டதன்றி அவர் காட்டிய கலவரமும் கேள்விகளைக் கேட்டுத் தன்னைத் திணறடித்து விட்டதையும் எண்ணிப் பார்த்த அவள் அவற்றுக் கெல்லாம் காரணம் தெரியாமல் தவித்தாள். கடற்சிப்பி ஊதப்பட்டதும், ஆந்தைகள் அலறும் சத்தம் எழுந்ததே விசித்திரமாயிருந்தது அவளுக்கு. அந்தச் சத்தத்தைக் கேட்டுத் தந்தை ஓடி வந்தது அதை விட விசித்திரமா யிருந்தது மஞ்சளழூக்கு. அப்படி ஓடி வந்த தந்தை கேட்ட கேள்விகள் அப்போது அவள் சித்தத்தில் எழுந்தன. மாளிகையிலிருந்து பலவர்மன் வேகமாகத் தோட்டத் துக்குள் வந்தவன், நேராக அந்த மரத்தை நாடி வந்தது அவள் மனக்கண்முன் நன்றாக எழுந்தது. அப்பப்பா அவர் முகத்தில்தான் எத்தனை கலவரம்? எத்தனைக் குழப்பம்! அப்படி பலவர்மன் நிலை குலைந்ததை அவள் கண்டதே இல்லை. முகத்தில் குழப்பம், இகல், சந்தேகம் ஆகிய பல உணர்ச்சிகள் கலந்து பாய நேராக மரத்தடியை நோக்கி வந்த பலவர்மன் அங்கிருந்தது தன் மகளென்பதை அறிந்தவுடன், “யார்? நீயா? நீ இங்கே எதற்காக வந்தாய்?” என்று கோபம் கொழுந்துவிட்டெரிய சொற்களைக் கொட்டினான்.

“ஏன்? நான் இங்கு வரக்கூடாதா?” என்று கேட்டாள் அவள்.

“வரலாம், வரலாம். இரவில் ஏன் வர வேண்டும்?” என்று குழறினான் பலவர்மன்.

“இரவில் நான் இங்கு வருவது வழக்கந்தானே, புதிதல்லவே?”

“புதிதல்ல, புதிதல்ல, இருப்பினும் இந்த மரத்தடி, இந்த மரம்...

“இந்த மரத்துக்கென்ன? நீண்ட நாளாக இருக்கிறது!”

“இருக்கிறது இருக்கிறது! இருந்தாலும் அதில் ஏன் சாய்ந்து கொண்டிருக்கிறாய்?”

“ஏன், சாயக்கூடாது?”

“சாயலாம்.

சரி சரி, இங்கு யார் வந்தார்கள்?”

“யாரும் வரவில்லையே!”

பலவர்மன் கோபம் கட்டுக் கடங்காததாயிற்று. “பொய்! பொய்! சுத்தப் பொய். ஆந்தை அலறிய சத்தம் என் காதில் விழுந்தது.” என்றான் பலவர்மன் சொற்களில் உஷ்ணம் ஊடுருவி நிற்க.

“பட்சியைச் சொல்கிறீர்களா? பட்சி வந்திருக்கலாம்,” என்றாள் அலட்சியத்துடன் மஞ்சளழகி.

“பட்சியல்ல, வந்தது மனிதன். ஆந்தைக் குரல் கேட்டது எனக்கு.” என்று சீறினான் பலவர்மன்.

“மனிதன் ஆந்தையா!” உள்ளத்திலே சஞ்சலமிருந் தாலும் வறட்டுச் சிரிப்பை உதடுகளில் வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்டு கேட்டாள் மஞ்சளழகி.

“விளையாடாதே! மனிதன் ஆந்தையல்ல.”

“அப்படியானால் ஏன் பதறுகிறீர்கள்?”

“இங்கு ஒருவன் வந்திருக்கிறான், அவன்...

“அவன் ஆந்தை போல் கூவுவானாக்கும்...

“ஆம்.

கூவுவான்.

“அவனை எனக்குத் தெரியும்.

“தெரியுமா? எங்கு போய்விட்டான்?”

“எங்கும் போகவில்லை. இங்குதான் இருக்கிறான்.

“எங்கே? எங்கே?” இப்படிக் கேட்டுக்கொண்டு சுற்று முற்றும் நோக்கினான் பலவர்மன்.

“இங்கே! இங்கே.” என்று அதுவரை மறைத்து வைத்திருந்த கடற்சிப்பியைக் காட்டினாள் மஞ்சளழகி.

அதை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்ட பலவர்மன் மிகுந்த சந்தேகத்துடன் மகளை நோக்கினான். “இதை நீதான் ஊதினாயா?” என்றும் கேட்டான்.

“ஆம்.” என்றாள் மஞ்சளழகி.

“இது ஏது உனக்கு?” கடுமையுடன் எழுந்தது பலவர்மன் கேள்வி.

“இங்கு மரத்தடியில் கடந்தது” என்றாள் அவள்.

பலவர்மன் பெரும் சுமையை இறக்கியவன் போல் பெரு மூச்சு விட்டான். அத்துடன், “மடையன்! மடையன்! எத்தனை அஜாக்கிரதை! நல்லவேளை, இது இவள் கையில் கிடைத்ததே.” என்று சற்று இரைந்தே சொன்னான்.

“யார் போட்டுவிட்டது இதை?” என்று கேட்டாள் அவள்.

“இடும்பன்...” என்று வாய் தவறி அசப்பில் சொல்லி விட்ட பலவர்மன் சட்டென்று பேச்சை நிறத்திவிட்டு, “யாராயிருந்தால் உனக்கென்ன? வா உள்ளே!” என்று அவளைக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு மாளிகை நோக்கி நடந்தான். மனத்தில் பல யோசனைகள் அலைபாய அவனுடன் சென்றாள் அன்று மஞ்சளழகி. அந்த இரவின் நிகழ்ச்சிகள் அவள் மனத்தை விட்டு அகலவேயில்லை. நான்கு நாள்களுக்குப் பிறகு கடற் கரையில் உலாவிய போது கூட ஏதோ நாடகம் நடப்பது போல் அவள் மனக்கண்ணில் அந்தச் சம்பவம் எழுந்து உலாவிக் கொண்டிருந்தது! இடும்பன் பெயரை உச்சரித்ததி லிருந்து பல விஷயங்கள் அவளுக்கு வெட்ட வெளிச்ச மாயின. மெள்ள மெள்ளக் கொள்ளைகாரர்களை விசாரித்ததில் சூர இனத்தார் கடலோடுபவர்களால்தான் கடலாழத்தில் இருந்து ஏதோ புதுவிதக் கடற்சிப்பியை எடுத்து வருவது வழக்கமென்றும் அதில் ஊதல் செய்து ஊளதி, தங்கள் சகாக்களை அழைப்பது வழக்கமென்றும் அறிந்தாள் மஞ்சளழகி. என்ன காரணத்தாலோ கூளூக் களின் தலைவனான இடும்பன் தனது தந்தையை நந்த வனத்துக்கு அழைத்திருக்கிறானென்றும், போகும்போது தவறிக் கடற்சிப்பியைப் போட்டுவிட்டுப் போயிருக்க வேண்டுமென்றும் அனுமானித்தாள் அவள். ஆனால் அந்தச் சிப்பி இளையபல்லவனிடம் எப்படி அகப்பட்டது? அதை உளதும் முறை அவனுக்கு எப்படித் தெரிந்தது என்ற விஷயங்களை மட்டும் அவளால் ஊ௫க்க முடியவில்லை. இடும்பன் தானாகவே வந்து தந்தையைக் காண முயன் றானா அல்லது தந்தைதான் அவனை வரவழைத்தாரா? வரவழைத்தால் இளைய பல்லவன் நகரத்தைச் சுற்றி ஏற்படுத்தியிருக்கும் கடுங்காவலை மீறி அவன் எப்படி வர முடிந்தது? இப்படிப் பல கேள்விகளைக் கேட்டும் அவளுக்கு ஏதும் பதில் கிடைக்கவில்லை. ஒன்று மட்டும் அவளுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. அனைவரையும் மீறிய பெரும் மர்மம் அக்ஷ்யபமுனையை வளைத்துக் கொண்டிருக் கிறது. அதற்குப் பலவர்மன், இளையபல்லவன் அகிய இருவரில் ஒருவரோ இருவருமோ காரணம், என்பதுதான் அது.

அத்தகைய எண்ணங்களுடனும், எண்ணங்களால் ஏற்பட்ட கவலையுடனும் அடுத்த சில நாள்கள் அவள் மாளிகையில் அதிக நேரம் இருக்காமல் கோட்டைக் குள்ளும் கடற்கரையிலும் நடமாடிவந்தாள். கடற்கரையில் அவள் கவலையைத் தீர்க்க எழுந்த தெய்வப் பறவைபோல் எழுந்து கொண்டிருந்தது, இளையபல்லவன் கடல்புறா. கண்டியத்தேவன் மேற்பார்வையில் பிரதிதினம் தொழில் வல்லுநர் மிக மும்முரத்துடன், கப்பலை மாற்றியமைத்து வந்ததையும் அந்த மரக்கலத்தின் அமைப்பே புதுவிதமாக இருந்ததையும் கவனித்த மஞ்சளழகி தான் மனக் ச் ம கவலையை மாற்றிக் கொள்ளத் தினந்தோறும் நீண்ட நேரம் நீர்க்கரையின் முகப்பிலேயே கழித்து வந்தாள். வேலை நடந்துகொண்டிருந்த இடத்திற்குச் சற்றுத் தள்ளி நீர்க் கரையில் அமர்ந்த அக்ஷயமூனையின் அழகி அந்தக் கப்பலின் அழகைக் கண்டு வியந்தாள்.

கண்டியத்தேவன் கடற்புறாவுக்கு வெகு துரிதமாக உருக்கொடுத்துக் கொண்டிருந்தான். கரையில் நன்றாசு இழுக்கப்பட்டு, பாதி நீரிலும் பாது தரையிலுமாகச் சற்றே சாய்ந்திருந்த அந்தப் பெரும் மரக்கலத்தில் தளங்களின் பழைய பாய்மரங்கள் நீக்கப்பட்டு, பகிட்பாரிஸான் காட்டுப் பகுதியின் வயிரம் பாய்ந்த மரங்கள் பாய் கட்டப் பொருத்தப்பட்டபடியால் சில நாள்களுக்குள்ளாகவே இணையற்ற கம்பீரத்தை அடைந்தது அந்த மரக்கலம். சனத்து மரக்கலத்தின் நான்கு பாய்மரங்களுக்குப் பதில் அறு பாய்மரங்கள் அந்த மரக்கலத்தில் பொருத்தப்பட்டன. அவற்றில் மூன்று சிறியதாகவும் மூன்று பெரியதாகவும் இருந்ததையும் கண்ட மஞ்சளழகி அப்படியேன் பலபடி பாய்மரங்களை அமைக்கிறார்கள் என்பதை அறியாமல் குழம்பினாள். அதுமட்டுமல்ல, நடுவிலிருக்க வேண்டிய கப்பல் தலைவன் அறையைக் கப்பலின் முகப்பில் அமைத்துக் கொண்டிருப்பது அத்தனை உ௫தமா என்ற சந்தேகமும் அவளுக்கு எழுந்தது. அந்தச் சந்தேகத்தைக் கண்டியத்தேவனையே கேட்டாள் அவள்.

“முகப்பில் தலைவர் அறை இருப்பது உசதமா தேவரே!” என்ற அவள் கேள்விக்கு, “அக்ரமந்திரத்தை அமைப்பது இப்படித்தான்” என்று கண்டியத்தேவன் பதில் சொன்னான்.

“அப்படியானால் மரக்கலத் தலைவனும் முகப்பில் தானே இருக்கமுடியும்?” என்று வினவினாள் மஞ்சளழகி.

“ஆம்.” என்றான் தேவன்.

“போர் ஏற்படும்போது முகப்பில் இருப்பவருக்கு ஆபத்து ஏற்படுமே.” என்று அவள் கவலையுடன் கேட்டாள்.

“அக்ரமந்திரத்தல் முகப்பில் ஆபத்தில்லை.” என்றான் தேவன்.

“ஏன்?” என்று வினவினாள் அவள்.

“அறையின் அமைப்பு அப்படி. மரக்கலத்தின் அமைப்பும் அப்படி. எதிரிகள் ஆம்புகளையோ வேல் களையோ வீசும்போது முகப்பைத் தாழ்த்த இந்த போர்க் கப்பலில் வசதி உண்டு. அதற்காகவே இதன் முன்புறத்தைச் சற்றுத் தாழ்த்தியும் பின்புறத்தைச் சற்றுத் தூக்கியும் அமைக்கிறோம். அமைப்பே இப்படி. தவிர துடுப்புகள் துழாவும் போது பின்புறத் துடுப்புகளை ஆழத்தில் துழாவி, சுக்கானையும் அழுத்திப் பிடித்தால் மரக்கலம் முகப்பைச் சற்றுத் தாழ்த்தக்கொண்டு மீனைப் பிடிக்கச் செல்லும் மீன்கொத்தி போல் விர்ரென்று நீரைப் பிளந்து செல்லும். தூர இருந்து பார்ப்பவர்களுக்குக் கப்பல் மூழ்கிப் போய் விடுவது போலத் தோன்றும். ஆனால் அந்தச் சமயத்தில் தான் இந்த மரக்கலம் அபாயமானது. இதன் மீது வீசப்படும் ஆம்புகளும் வேல்களும் முகப்பு தாழ்ந்திருப்பதால் அக்ர மந்திரத்தைத் தொடாமல் பின்பக்கம் சென்றுவிடும். இங்கு இருந்து எய்யப்படும் ஆம்புகள், நேராக எதிரிக் கப்பலைத் தாக்கும்.” என்று விளக்கினான் தேவன்.

இப்படிச் சில நாள்கள் பல விஷயங்களைப் பற்றி விவாதித்த மஞ்சளழக பாரத நாட்டு மரக்கலக் கலையைப் பற்றியும் கடற்போர் முறைகளைப் பற்றியும் பல விஷயங் களை அறிந்துகொண்டாள். அவள் மரக்கலக் கலையில் காட்டிய சிரத்தையைப் பற்றிக் கண்டியத்தேவன் பெரிதும் ஆச்சரியப்பட்டான். மரக்கலத்தைப் பற்றிய பல விஷயங் களை அவள் ஏற்கெனவே அறித்திருந்ததும் அவனுக்கு வியப்பாயிருந்தது. மரக்கலத்தைக் கட்டும் பெரும் பொறுப்புச் சுமை மஞ்சளழகியின் சம்பாஷணையாலும் சிரத்தையாலும் பெரிதும் மட்டுப்பட்டது கண்டியத் தேவனுக்கு. அடிக்கடி அவளைத் தளத்துக்கு அழைத்துச் சென்று மரக்கலத்தைத் தான் அமைக்கும் முறைகளைக் காட்டினான். மரக்கலத்தின் பாய்மரங்களையும் மரக் கலத்தின் வளைந்த ஓரங்களில் படுத்துக்கிடந்த பெரும் விற்களையும், வேல் வீசும் யந்திரங்களையும், எரியம்பு வீசும் சாதனங்களையும், அவற்றை இயக்கும் முறைகளையும் விளக்கினான். கண்டியத்தேவன் திறமையைப் பெரிதும் பாராட்டினாள் மஞ்சளழகி. ஆனால் அந்தப் பாராட்டு தலை ஒப்பாத கண்டியத்தேவன், “என்னைப் பாராட்டிப் பயன் இல்லை மகாராணி! நீங்கள் பாராட்ட வேண்டி யவர் இளையபல்லவர்.” என்றான் ஒருநாள்.

“இளையபல்லவரா இந்த மரக்கலத்தை அமைக் கிறார்” என்று கேட்டாள் அவள்.

ஆம்.

“அவருக்கு என்ன தெரியும் இதில்?”

“அப்படித்தான் நானும் முதலில் நினைத்தேன். தரைப்படையை நடத்தும் தலைவருக்கு மரக்கலத்தின் மர்மங்கள் எப்படித் தெரியும் என்று. ஆனால் அவருக்குச் சகலமும் தெரிந்திருக்கறது. அவர் ஆலோசனைப்படியே இந்த மரக்கலத்தின் ஒவ்வோர் அணுவும் மாற்றி அமைக்கப் பட்டிருக்கிறது.

“மஞ்சளழகி பிரமித்தாள். அத்துடன் கேட்டாள், “இதை ஏன் புறாவைப்போல் அமைக்கிறீர்கள்?” என்று.

“இளையபல்லவர் உத்தரவு.

“சுயபுத்தயோடு உத்தரவு போடுகிறாரா அவர்?”

“முதலில் குடிவெறியில் ஏதோ சொல்கிறாரென்று நினைத்தேன். பிறகு யோசித்துப் பார்த்ததில் மிகுந்த நினைப்புடன் அவர் முடிவுகளைச் செய்வது புரிகிறது.

“இதற்கு என்ன பெயரிடப் போறீர்கள்?”

“கடல் புறா’ என்று.

“அதையும் இளையபல்லவர்தான் சொன்னாரா?”

“ஆம் “

“ஏன் அப்படிப் பெயரிட வேண்டும்?” நிச்சயமாகச் சொல்ல முடியாது.

ஊகம்தான்...

“என்று இழுத்தான் கண்டியத்தேவன்.

“ஊகத்தைத்தான் சொல்லுங்களேன்.” என்று கேட் டாள் மஞ்சளழக.

“அவரும் காஞ்சனாதேவியும் முதலில் பாலூர்ப் பெருந்துறையில் சந்தித்தார்கள்...” மென்று விழுங்கினான் தேவன்.

“ஆம் ஆம். அதைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். “மஞ்சளழகியின் குரலில் மகழ்ச்சியற்றிருந்தது.

“அவர்கள் வெளிநாட்டுப் பிரமுகர் வீதி மாளிகையி லிருந்தபோது தூதுப் புறா ஒன்றை அநபாயர் அனுப்பினார்.

“அநபாயரா?”

“ஆம்.

சோழமண்டலத்தின் இளவரசர்.

“உம்.

“அந்தத் தூதுப் புறா மர்மத்தை விளக்கியவர் இளைய பல்லவர்.

“அப்படியா?”

“ஆம்.

அந்தப் புறா மிக அழகாயிருக்கும்.

“ஊஹூம்?”

“அதைப்பற்றி, சென்ற ஒரு வருடத்தில் பலமுறை இளையபல்லவர் பேசியிருக்கிறார்?”

“என்ன பேசியிருக்கிறார்?”

“அந்தத் தூதுப் புறாவே அவர்கள் இருவரையும் இணைத்ததாக...

“சரி சொல்லும்...

“அந்த நினைப்பின் அடையாளமாக, கடாரத்துக் கட்டழகியின் நினைவாக, இந்தக் கடல் புறா சிருஷ்டிக்கப் படுகிறது என்பது என் ஊகம்.

“மஞ்சளழக கண்டியத்தேவனை எரித்துவிடுவது போல் பார்த்தாள். “போதும் உங்கள் ஊகம், நிறுத்துங்கள்” என்று இரைந்து கூவிவிட்டு வெகு வேகமாகத் தளத்தின் பலகைகளில் ஓடிப் பக்கவாட்டு நூலேணியில் வெகு அவசரமாக இறங்கி, துடியிடை துவள, உடலும் உணர்ச்சி களும் குலுங்கக் கோட்டையை நோக்கிப் பறந்தாள் அந்தப் பைங்கிளி.

மூச்சுத் தெறிக்க ஓடிய அவள், கோட்டை வாயிலில் யார்மீதோ திடீரென மோதிக்கொண்டாள். தலை நிமிர்ந்து நோக்கினாள். இளையபல்லவன் அவளை இறுக்கப் பிடித்திருந்தான்.

“விடுங்கள் என்னை” என்று திமிறினாள் அவள்.

அந்த இரும்புக் கரங்கள் அவளை அசையவிட வில்லை. “எங்கு ஓடுகிறாய் மஞ்சளழகி?”

“உங்கள் காதலியைக் கேளுங்கள்!”

“பதறாதே மஞ்சளழகி, யார் என் காதலி!” என்று கேட்டான் அவன்.. “அதோ இருக்கிறாள்” என்று கடல் புறாவைச் சுட்டிக் காட்டினாள் அவள்.

“மரக்கலமா?”

“மரக்கலமல்ல.

உங்கள் மனக்கலம் அது.

அதில் வீற்றிருக்கிறாள் உங்கள் காதலி.

அதுவே உங்கள் மனப் பெண்.

அதோ தெரிகிறதே கடல்புறா, கடல் கன்னி” என்று ஒரு கையைத் திமிறி அவன் மார்பில் அடித்தாள் மஞ்சளழகி.

அவளைப் பிடித்த பிடியை விடாமல் கடற் புறாவை நோக்கினான் இளையபல்லவன். கடற் புறாவின் முகப்பு மூக்கை அப்பொழுதுதான் பொருத்தத் துவங்கினான் கண்டியத்தேவன். அதன் அழகிய மூக்கு மஞ்சளழகியை நோக்கியது. மூக்குப் பலகைகளில் அணிகளை வைத்து தச்சர் இறுக்கினர். ஆணிகள் இறங்கிய சத்தம் மஞ்சளழகி யின் காதில் பெரிதாக ஒலித்தது. அந்த ஆணிகள் தன் இதயத்தில் இறங்குவதாகவே அவள் நினைத்தாள். உணர்ச்சி மிகுதியால் மூர்ச்சை போட்டு இளையபல்லவன் மார்பில் சாய்ந்துவிட்டாள். அவளைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு மாளிகையை நோக்கி நடந்தான் இளையபல்லவன். அவனை வரவேற்க வாயிவில் காத்திருந் தான் பலவர்மன் முகத்தில் வெற்றிக் குறியுடன். அந்தக் குறிக்குக் காரணம் முதலில் விளங்கவில்லை இளைய பல்லவனுக்கு. அன்று மாலை சேந்தன் சில விவரங்களை உளறிக் கொட்டியபோதுதான் இளையபல்லவன் கார ணத்தைப் புரிந்துகொண்டான். புரிந்து கொண்டதும் அமீரை வரவழைத்து, “அமீர்! நமது நடவடிக்கைக்குச் சமயம் நெருங்கிவிட்டது” என்று அறிவித்தான். அதை அதிவித்த இளையபல்லவன் குரல் வறண்டு இடந்தது. வறட்சிக்குக் காரணம் புரிந்தது அமீருக்கு. அடுத்த நடவடிக்கை அக்ஷ்யமுனைக் கோட்டையின் கதியை நிர்ணயிக்கும் என்பதை உணர்ந்துகொண்ட அமீர், “உத்தர விடுங்கள் படைத்தலைவரே” என்றான். உத்தரவுகள் மிகத் துரிதமாகவும் திட்டமாகவும் விளக்கமாகவும் வெளி வந்தன. “பயங்கரமான உத்தரவுகள்தான். ஆனால் வேறு வழியில்லை” என்று அமீர் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 42

பலப் பரீட்சை

மயக்கமுற்ற மஞ்சளழகியைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு வந்த இளையபல்லவனை மாளிகை வாயிலில் சந்தித்த பலவர்மன், “ஏன் தூக்கி வருகிறீர்கள் என் மகளை? இவளுக்கு என்ன நேர்ந்துவிட்டது?” என்று கவலையுடன் வினவிய சமயத்திலும் அவன் குரலில் மித மிஞ்சிய கவலைக்குப் பதில் ஓரளவு குதூகலமே ஊடுருவி நின்றதைக் கவனித்த இளையபல்லவன் அதைக் கவனித் தும் கவனிக்காதவன்போல், “கோட்டையின் உஷ்ணம், அதனால் மூர்ச்சையடைந்து விட்டாள்” என்று பதில் கூறினான்.

பலவர்மன் முகத்தில் கவலைக் குறியையே அதிக மாகக் காட்டி, “உங்கள் நாட்டைவிட இந்த நாட்டில் உஷ்ணம் அதிகம்” என்றான்.

“ஆம். ஆம். அப்படித்தான் தெரிகிறது” என்று பதில் சொன்ன இளையபல்லவன் மாளிகைக்குள் நுழைய முயன்றான்.

அவனுக்கு வழி விடாமலே நின்ற பலவர்மன், “இந்த அபரிமித உஷ்ணத்துக்குக் காரணம் தெரியுமா?” என்றும் வினவினான்.

“தெரியும். பூமத்தியரேகை இந்தத் தீவின் குறுக்கே டுகிறது” என்றான் இளையபல்லவன்.

"அது அத்தனை பெரிய காரணமல்ல.” “வேறு எது?”

பெட்பாரிலான்." எரிமலையா

"ஆம். அது உள்ளூர எப்பொழுதும் குமுறிக் கொண் டிருக்கிறது. அது எப்பொழுது வெடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது."

"எரிமலைகளின் தன்மையே அப்படித்தான்."

"அல்ல அல்ல. சில எரிமலைகள் வெடிப்பதற்குப் பூர்வாங்கமாகப் பெரும் ஜ்வாலைகளை இரண்டு நாள்கள் வீசும். பகிட்பாரிஸான் அத்தனை அவகாசம் கூடக் கொடுக்காது. திடீரெனச் சீறும். சீறினால் அதைச் சமாளிப்பது கஷ்டம். அக்ஷயமுனையும் அப்படித்தான்.”

"இந்தத் துறைமுகமா?”

“ஆம் இளையபல்லவரே! இதன் அரசியலும் எரி மலையைப் போன்றது. திடீரென மாறவல்லது. திடீரென இங்கு சம்பவங்கள் ஏற்படும். எதிர்பாராத மாற்றங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் இங்கு ஏற்பட்டிருக்கின்றன. இதுவும் ஓர் எரிமலை! இதன் உஷ்ணத்தையும் இதன் விவரம் அறியாதவர்கள் சகிக்க முடியாது.”

“பலவர்மன் மேலுக்குக் கவலையுடனும் உள்ளே உற்சாகத்துடனும் பேசிய பேச்சின் பொருள் இளைய பல்லவனுக்குப் புரிந்தாலும், காரணம் மட்டும் புரியாத தால், “உங்கள் துறைமுக உஷ்ணத்தின் முதல் பலியாக மகள் மூர்ச்சையாகி விட்டாள். உங்களையும் பாதிக்கப் போகிறது. எச்சரிக்கையாயிருங்கள்" என்று சொல்லிவிட்டு பலவர் மனை இடித்துத் தள்ளி வழி ஏற்படுத்திக்கொண்டு மாளிகைக்குள் சென்று மஞ்சளழகியின் அறைப் பஞ்சணையில் அவளைக் கிடத்தினான். பிறகு அவள் தோழி களை அழைத்து அவளை ஜாக்கிரதையாகக் கவனிக்கும் படி உத்தரவிட்டு மீண்டும் கடற்கரையை நோக்கிச் சென்றான். கடற்கரையில் கடற்புறா நிர்மாணிக்கப்பட்டு வந்த இடத்துக்கு வந்ததும் அதை நீண்ட நேரம் ஏறிட்டு நோக்கிய இளையபல்லவன் புறாவின் அழகிய மூக்கையும் பெரும் இறக்கைகளையும் கண்களிருக்க வேண்டிய இடத்திலிருந்த பெரும் துவாரங்களையும் பார்த்துப் பூர்ண திருப்திக்கு அடையாளமாகத் தலையை ஆட்டிக் கொண்டான். அதன் பக்கப்பகுதியில் தொங்கிக் கொண் டிருந்த நூலேணியின் வழியாக அந்தப் பெரும் மரக் கலத்தின் தளத்துக்கும் ஏறிச் சென்று அங்கு நடந்து கொண்டிருந்த வேலை முறையையும் கவனித்தான். அந்த மரக்கலத்தின் தளத்தில் பக்கப் பலகைகளுக்கு அருகில் மறைந்து கிடந்த போர்க்கலங்களையும் அவற்றைத் தூக்கி நிறுத்தவும், படுக்க வைக்கவும் பல கோணங்களில் சாய்க்கவும் அமைக்கப்பட்டிருந்த உருளைகள், இரும்புச் சலாகைகள், இவற்றையும் ஊன்றிப் பார்த்த இளையபல்லவன் இதழ்களில் திருப்தியின் புன்னகை யொன்று படர்ந்தது. அதையொட்டி முகத்திலும் பெருமிதச் சாயை விரிந்தது. மர

இளையபல்லவன் தளத்திலேறியதும், அவனை எதிர் கொண்ட கண்டியத்தேவனும், அவனைப் பின்பற்றித் தளத்தில் உலாவி, அவன் முகத்தில் விரிந்த பெருமிதச் சாயையைக் கண்டு உள்ளத்தில் உவகை கொண்டான். அத்துடன், “நன்றி இளையபல்லவரே!” என்றும் கூறினான்.

இளையபல்லவன் தன் கூரிய விழிகளை அவன் பக்கம் திருப்பி, “எதற்கு நன்றி தேவரே?” என்று வினவி னான்.

“உங்கள் முகத்தில் திருப்தியின் குறி தெரிகிறது?” தயக்கமின்றி வந்தது கண்டியத்தேவன் பதில்.

"உள்ளத்தில் திருப்தி ஏற்பட்டால் முகத்தில் தெரி யாதா என்று கேட்டான் இளையயல்லவன்.

"தெரிந்தது. அதற்குத்தான் நன்றி கூறினேன். "நன்றி எதற்கு?"

"தொழில் செய்பவனுக்கு, தன் தொழில் பிறருக்குத் திருப்தியளிக்கிறது என்பதைவிடப் பெரும் ஊதியமோ பரிசோ கிடையாது."

"உண்மை."

"அதிலிருக்கும் மகிழ்ச்சி வேறெதிலும் இல்லை." “ஆமாம்."

"என் வேலையைப் பற்றி நீங்கள் திருப்தியடைந்திருக் கிறீர்கள். பெருமையும் அடைந்திருக்கிறீர்கள். அது எனக்குப் பெரும் சன்மானமல்லவா?"

"ஆம்.”

“அதற்காகத்தான் நன்றி தெரிவித்தேன். ஆனால் இதில் முழு பெருமை என்னுடையதல்ல. உங்கள் கருத்துப் படி மாற்றியமைக்கிறேன். அவ்வளவுதான்.”

“கருத்துக்கு உருக்கொடுப்பது அத்தனை எளிதல்ல தேவரே. உமது முயற்சியில்லையேல் இத்தனைத் துரிதமாக இந்த மரக்கலம் தயாராகாது. அதுவும் இத்தனை அழகாகத் தயாராகாது...” என்று சிலாகித்த இளையபல்லவனை டைமறித்த கண்டியத்தேவன் சொன்னான்: “இதற்குள் சிலாகித்துவிடாதீர்கள் படைத்தலைவரே, இன்னும் ஐந்து நாள்கள் கழித்துப் பாருங்கள்.”

இளையபல்லவன் சரேலென இமைகளை வியப் புடன் தூக்கினான். “என்ன? இன்னும் ஐந்து நாள்கள் கழித்தா?” என்றும் வினவினான் குரலில் வியப்பின் ஒலி மண்டிக்கிடக்க.

ஆம். ஐந்தே நாள்கள்!" என்றான் கண்டியத்தேவன், 'அதற்குள்.. என்று கேட்டான் இளையபல்லவன்.

"மரக்கலம் தயாராகிவிடும்," என்றான் தேவன். இளையபல்லவன் பதில் திட்டமாகவும் மிக வேக மாகவும் வெளிவந்தது. 'கூடாது, கூடாது. இன்னும் பத்து நான்களுக்கு இது முடியக்கூடாது."

"ஏன் கூடாது கண்டியத்தேவன் ஆச்சரியத்துடன் கேட்டான்.

"மரக்கலத்தை மாற்றியமைக்க ஒரு மாதம் கேட்டிரே?"

"ஆம். கேட்டேன்." "இன்னும் ஒரு மாதம் ஆகவில்லையே." "பத்து நாள்களில் ஆகிவிடும்." "சரி, பத்து நாள்கள் எடுத்துக் கொள்ளும்.” "அத்தனை நாள்களுக்கு வேலை இல்லையே?”

“வேலையில்லாவிட்டால் கப்பலை அழகுபடுத்தும். ஏதாவது செய்யும். வேலை மட்டும் பத்து நாள்களுக்கு முன்பு, முடியக்கூடாது.”

"ஏன்?" "அமாவாசைக்கு எத்தனை நாள் இருக்கிறது?”

“இன்றுதான் பௌர்ணமி, இன்னும் பதினைந்து நாள்கள் இருக்கின்றன.”

"அதுவரையில் காலம் கடத்தலாம்.”

இளையபல்லவனின் இந்தக் கண்டிப்பான உத்தரவு களுக்குக் காரணம் தெரியாத கண்டியத்தேவன் வியப்பின் எல்லையைத் தொட்டான். 'தாமதத்துக்குத்தான் தார்க் கோல் போடுவார்கள். துரிதத்துக்குத் தடைபோடும் படைத் தலைவனை இதுவரையில் நான் கண்டதில்லை.' என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான் கண்டியத்தேவன். அப்படித் திட்டமாக உத்தரவிட்ட இனைய பல்லவன் மரக்கல வேலை முழுதும் முடிந்தபிறகு தனக்குச் சொல்ல வேண்டுமென்றும், தனக்குச் சொல்லாமல் திருக்குள் இழுத்து மிதக்கவிட வேண்டாமென்றும் ஆணை பிட்டு மீண்டும் கோட்டைக்குச் சென்றான். கோட்டைக் குள் சென்றவன் நேராக மாளிகைக்குச் செல்லாமல், அங்கிருந்த மதுக்கடையொன்றில் குடித்து விட்டு நகரத்தைச் சுற்றுவதிலும், பகிட்பாரிஸான் மலையும் காடும் அணைத்திருந்த கோட்டைச் சுவர்ப் பகுதியிலும் காலம் கழித்தான். ஏதோ அர்த்தமில்லாத பல பேச்சுக்களை அமீருடன் பேசிக் கொண்டிருந்தான். காவல் வேளையில் தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்று அமீர் பலபேர் எதிரில் கடிந்துகொண்டு பிடித்துத் தள்ளிய பின்புதான் இளையபல்லவன் மாளிகைக்கு வந்து மாடி யறையிலுள்ள தன் பஞ்சணையில் பொத்தென்று விழுந்தான். விழுந்தவன் அலுப்பால் கண்களையும் மூடி உறங்கினான். அப்படி உறங்கியவன், யாரோ பிடித்து உலுக்கவே கண் விழித்ததும் பஞ்சணையின் பக்கத்தில் நின்றிருந்த கூலவாணிகனைப் பார்த்ததும், பேராச்சரிய மடைந்தான். கூலவாணிகன் முகத்தில் கோபத்தின் குறி கொந்தளித்துக் கொண்டிருந்தது.

“ஏன் சேந்தா? ஏன் என்னை எழுப்புகிறாய்?” என்று வினவினான் இளையபல்லவன்.

“தீபம் வைத்து இப்பொழுது இரண்டு நாழிகைகள் ஆகிவிட்டன,” என்றான் சேந்தன் கோபத்துடன்.

“ஆகட்டும்,” என்றான் இளையபல்லவன்.

“உறக்கத்துக்கு இது சமயமல்ல.” என்றான் சேந்தன் "ஏன்?"

“மற்றவர்கள் விழித்திருக்கிறார்கள்.”

"யார் அந்த மற்றவர்"
"எதிரிகள்."
"பூர்வகுடிகளார்?"
"அவர்களை விடக் கொடியவன்."
"யார், பலவர்மனா?
'ஆம்." 'அவனால் நமக்கென்ன ஆபத்து." "நம்மைப்போல் உறங்காததுதான் ஆபத்து." "உறங்காமல் என்ன செய்கிறான்?”

“நம்மைக் கண்காணித்து வருகிறான்," என்ற சேந்தன் குரல் கவலையுடன் ஒலித்தது.

“எப்படித் தெரியும் உனக்கு?” இளையபல்லவன் கேள்வி வியப்புடன் எழுந்தது.

சேந்தன் சுற்றுமுற்றும் பார்த்தான். பிறகு மெல்லச் சென்று அறைக் கதவைத் தாளிட்டு வந்தான். “நீங்கள் அவன் கழுத்துச்சாவியில் மெழுகை ஒற்றி எடுக்கக் கட்டளையிட்டீர்கள் அல்லவா?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.

“ஆம்,” என்றான் படைத்தலைவன்.

“அது பலவர்மனுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது,” என்று கூறிய சேந்தன் இளையபல்லவனை உற்றுநோக்கி னான். அவன் எதிர்பார்த்த ஆச்சரியமோ திகைப்போ இளையப்பல்லவன் முகத்தில் உதயமாகாதிருக்கவே, “ஏன் இது உங்களுக்கு முன்பே தெரியுமா?” என்று வினவினான். “எது?" புதிதாகக் கேட்பவன் போல் கேள்வியை வீசினான் இளையபல்லவன்,

"பலவர்மனுக்குத் தெரியுமென்பது.” “எனக்கெப்படித் தெரியும்?”


"பின் ஏன் பதற்றப்படாதிருக்கிறீர்கள் "ஏன் பதற்றப்பட வேண்டும்?" "நம் திட்டம் எதிரிக்குத் தெரிந்துவிட்டதே! "அந்தத் திட்டம் நிறைவேறவில்லையே?" "நிறைவேறியிருந்தால் நன்றாயிருக்கும்." "ஏன்?"

“அப்பொழுது நாலுபேர் பரிகாசத்துக்கு நான் இலக்காகியிருக்க மாட்டேன்.”

"யார் பரிகசித்தார்கள் உன்னை?”

“நீங்களும் அமீரும் முதலில். இப்பொழுது இந்தப் பலவர்மன்."

இதைக் கேட்டதும் இளையபல்லவன் விழிகள் திடீரெனப் பளிச்சிட்டன, “உன்னைப் பலவர்மன் பரிகசித் தானா!” என்றும் வினவினான் படைத்தலைவன் சந்தேகம் தொனித்த குரலில்.

படைத்தலைவனையும் உணர்ச்சி பெறச் செய்து விட்டதால் உள்ளூர மகிழ்ச்சியடைந்த சேந்தன், “ஆம் படைத்தலைவரே! பரிகசித்தான். முதலில் அல்ல கடைசியில்,” என்றான்.

“முதலில் என்ன கேட்டான்?" இதற்குள் இளைய பல்லவன் சாதாரண நிலையை அடைந்துவிட்டதால் கேள்வியும் சர்வ சகஜமாகவே எழுந்தது.

“நேற்றிரவு பலவர்மன் என் அறைக்குள் சர்வசகஜ வந்தான். பொக்கிஷத்தை நான் பாதுகாக்கும் முறையைப் பற்றிப் பெரிதும் பாராட்டினான். பிறகு...” இங்கு சற்றுத் தயங்கினான் சேந்தன். மாக

“பிறகு?” இளையபல்லவன் பஞ்சணையில் மீண்டும் சாய்ந்துகொண்டு கேட்டான். "திடீரெனத் தன் கழுத்துச் சங்கிலியிருந்த சாவியைக் காட்டினான்" என்று சேந்தன் பயத்துடன் சொன்னான்.

இளையபல்லவன் முகத்தில் ஆழ்ந்த சிந்தனை நிலவியது.

"உம்" என்ற சத்தம் மேற்கொண்டு விஷயங்களைச் சொல்லச் சேந்தனைத்தூண்டியது.

சேந்தன் சொன்னான்: “சாவியைக் காட்டி அது எப்படி இருக்கிறது என்று கேட்டான். நன்றாயிருக்கிறது என்று சொன்னேன். 'ஏற்கெனவே இதைப் பார்த்திருக் கிறாயா' என்று கேட்டான். சற்றுத் தயங்கினேன். பிறகு பார்த்திருப்பதாகச் சொன்னேன். எப்பொழுது என்று கேட்டான். அவனை யாரோ குத்திக் கொலை செய்ய முயன்றபோது பார்த்ததாகச் பார்த்ததாகச் சொன்னேன். அவன் பெரிதாக நகைத்தான்.என் கோபம் எல்லை மீறியது. அவன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை நான் கண்டதாகக் கூறினேன். அவன் முதுகைத் திறந்து காட்டினான். அதில் கத்திக் குத்தின் அடையாளம் ஏதுமில்லை. அப்படியானால் ரத்தம் எங்கிருந்து வந்தது என்று கேட்டேன். உன் களிமண் மண்டையிலிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று கூறி என் மண்டையிலும் இரண்டு தட்டுத் தட்டிவிட்டுச் சென்றான்...”

“அப்புறம்?” இளையபல்லவன் கேட்டான், குரலில் , சிறிது சாந்தியுடன்.

"அவன் வெளியில் நகைப்பது என் காதுக்கு விழுந்தது. யாரிடமோ எனக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று சொல்லிச் சென்றான். எனக்கு அவமானம் தாங்க முடியவில்லை,” என்றான்.

“சரி, தொலையட்டும்,” என்றான் இளையபல்லவன்.


எதுதொலையட்டும். என்னை அந்த அயோக்கியன் நகையாடியதா

" அவன் வேறு என்ன செய்ய முடியும்?” “என்ன செய்ய முடியுமா?"

"ஆமாம் சேந்தா. உயிருடனிருப்பவனைச் செத்து விட்டதாகச் சொன்னால் அவன் வேறு எப்படி நினைக்க முடியும்?

"அப்படியானால் நான் கண்ணால் பார்த்தது பொய்யா

இளையபல்லவன் சேந்தனை உற்றுப் பார்த்து நகைத் தான். “சேந்தா! பலவர்மன் சொன்னது ஒருவேளை...” என்று இழுத்தான் நகைப்புக்கிடையே.

“உண்மையாயிருக்கும் போல் தோன்றுகிறதா? இளையபல்லவரே, நான் பைத்தியமல்ல."

“எந்தப் பைத்தியம் தன்னைப் பைத்தியமென்று ஒப்புக்கொண்டது?"

இதைக் கேட்ட சேந்தன் இளையபல்லவனை எரித்து விடுபவன் போல் பார்த்துவிட்டு அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியே வெகு வேகமாகச் சென்றுவிட்டான். அதுவரை இளையபல்லவன் இதழிலிருந்த ஏளனச் சிரிப்பு மறைந்தது. அதன் இடத்தைத் தீவிர யோசனை ஆக்கிர மித்துக் கொண்டது. அறையின் மூலை மஞ்சத்திலிருந்த மதுக்குப்பியைக் கையிலெடுத்துக் கொண்ட இளைய பல்லவன் காவலரில் ஒருவனை அழைத்து அமீரை உடனே கூப்பிடும்படி உத்தரவிட்டான்.

இரவின் முதல் ஜாமம் முடியும் நேரத்தில் வந்த அமீரை நோக்கிய இளையபல்லவன், “அமீர்! பலவர்மன் நம்மைச் சந்தேகிக்கிறான்,” என்றான்.

“எதைப்பற்றி?" என்று அமீர் கேட்டான்.

ஓலைபற்றிச் சேந்தனை ஏதோ விசாரித்திருக் இறாள்.

பன்மை தெரிந்துவிட்டதா?

"இல்லை, இன்னும் இல்லை. ஆனால் பலவர்மனைப் போன்ற ஒரு வஞ்சகனுக்கு உண்மையை வகிப்பது கஷ்டம் அல்ல."

"ஆகவே.."

"இன்றிலிருந்து பதினான்காவது நாள் இரவு நட வடிக்கை தொடங்க வேண்டும்.”

"அன்றுடன் ஒன்றரை மாத காலம் ஓடிவிடுகிறது.”

"சரியாயிருக்கும்."

இருவர் கண்களும் சந்தித்தன. “அதற்குள் ” என்று கவலை மிகுந்த குரலில் கேட்டான் அமீர்.

"எல்லாம் தயாராகிவிடும்.”

“அன்றிரவு?”

“பலப்பரீட்சை நடக்கும். நமது பலம் அதிகமா பலவர்மன் பலம் அதிகமா என்பது புலப்பட்டுவிடும்.”

“புலப்பட்டுவிடும். ஆனால் அதனால் எத்தனை பேர் உயிர்.” என்று வருந்தினான் அமீர்.

“பெரும் சாதனைகளின் அஸ்திவாரமே தியாகம்” என்று ஆழ்ந்த மந்திரம் போல் ஒலித்த குரலில் கூறினான் இளையபல்லவன்.

இருவரும் நினைத்து நினைத்து ஓரளவு அச்சமும் பட்ட அந்த இரவு மெள்ள மெள்ள வந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 43

இனிப்பும் கசப்பும்

அக்ஷயமுனையில் இறுதியாக நடவடிக்கை தொடங்க வேண்டுமென்று இளையபல்லவன் அமீருடன் தட்டமிட்ட இரவுக்கும் அந்தத் தஇட்டப்படி நடவடிக்கை தொடங்கப்பட்ட இரவுக்கும் இடையே விரவிக்கிடந்த பதின்மூன்று நாள்களைப் படைத்தலைவன் பலவிதமாகக் கழித்தான். அவன் போக்கும் செய்கையும் உத்தரவுகளும் நாளுக்கு நாள் வித்தியாசப்பட்டு வந்தாலும் சில சமயங்களில் ஒன்றுக்கொன்று அடியோடு மூரண்பட்டிருந் தாலும் எந்த யோசனையுடன் எதை உத்தேசித்து அவன் நடந்துகொள்கிறான் என்பது, அக்ஷயமுனைவாகிகளுக்கு மட்டுமல்ல, பலவர்மனுக்கும் மஞ்சளழகிக்குங்கூடப் புரியாத புதிராயிருந்தது. சில சமயங்களில் அவன் உத்தரவு களைப் பிறப்பித்த போது பூரணமாக மது அருந்தியிருந்த தாலும் ஏதாவது யோசனையோ உத்தேசமோ அவனுக்கு இருக்கிறதா என்று சந்தேகங்கூடப் பலருக்கும் ஏற்படவே இத்தகைய குடிகாரனை நம்பியிருப்பது உசிதமா என்ற சந்தேகங்கூட அக்ஷ்யமுனை மக்கள் மனத்திலும் கடற் கரைக் கொள்ளைக்காரர் இதயத்திலும் எழுந்திருக்கவே செய்தது. அவன் இட்டது போன்ற உத்தரவுகளை வேறு யார் இட்டிருந்தாலும் அக்ஷயமுனை மக்களும் கொள் ளைக்காரரும் புறக்கணித்திருப்பார்கள். ஆனால் என்ன காரணத்தாலோ இளையபல்லவன் இட்ட உத்தரவுகளை அத்தனை அவநம்பிக்கையிலும் நிறைவேற்றுவதிலேயே முனைந்தார்கள். ஒவ்வொரு முறையும் அவன் உத்தர விட்டபோதும் அதை ஒப்புக்கொள்ளும்படி ஏதோ ஓர் இனம் புரியாத அபூர்வ சக்தி ஒன்று அவர்களை உந்தவே செய்தது. குடிவெறியில் உளறலுடன் உத்தரவுகள் வெளி வந்தபோது இடையிடையே திடீரெனக் கண்களில் தெரிந்த ஈட்டிப் பார்வைகள் உத்தரவை மீறுவது பெரும் அபாயம் என்பதை எச்சரிக்கை செய்தன. தடுமாறிய சமயங்களிலும் இடைஇடையே சுறீல் சுறீலென உதிர்ந்த சொற்கள் மேலுக்கு அர்த்தமற்றவைபோல் தெரிந்தாலும் உண்மை யில் பொருள் உள்ளவை என்பது புலனாயிற்று. ஆகவே, படைத்தலைவன் இடும் எந்த உத்தரவையும் தீவிரமாக எதிர்க்காமல் அக்ஷய முனைவாசிகள் நிறைவேற்றியே வந்தார்கள்.

படைத்தலைவன் அன்றாடம் பிறப்பித்து வந்த உத்தரவுகளையும் அவற்றை நகர மக்களும் மற்றோரும் முழு மூச்சுடன் நிறைவேற்றி வந்ததையும் ஒற்றர்கள் மூலமும் நேரிலும் அறிந்த பலவர்மன், “இந்தப் பைத்தியக்கார உத்தரவுகளை எதற்காக நிறைவேற்றுகிறார்கள்?’ என்று பலமுறை தன்னைத்தானே கேட்டுக்கொண்டு விடை காணாமல் தவித்தான். அமாவாசை தோன்றுவதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பே இளையபல்லவன் மரக்கலம் பூரணமாகப் பழுது பார்க்கப்பட்டுப் புது உருப்பெற்று அக்ஷயமுனையை விழுங்க வந்திருக்கும் அசுரப்பறவை போல் நின்றதைக் கண்டு பெரிதும் கலங்கிய பலவர்மன், அதை நீரில் மிதக்கவிட வேண்டாமென்று கரையில் இழுத்தது இழுத்தபடியே கிடக்கட்டுமென்று படைத் தலைவன் பிறப்பித்த உத்தரவைக் கேட்டு, பெரும் நிம்மதி யடைந்தானென்றாலும், அந்த உத்தரவை இளைய பல்லவன் சுயபுத்தியோடு பிறப்பித்தது மட்டும் பெரிய வியப்பையே கொடுத்தது அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவனுக்கு. அந்த உத்தரவைத் தன் முன்னிலையிலே பிறப்பிக்கப்பட்டது. விந்தையிலும் விந்தையாயிருந்தது அந்த வஞ்சகனுக்கு. இளையபல்லவனும் அமீரும் நடவடிக்கைக்குத் திட்டமிட்ட இரவிலிருந்து ஒன்பதாவது நாள் மாலையில் நடந்த நிகழ்ச்சி அது. அந்த நிகழ்ச்சி உண்மையில் பெரும் மகிழ்ச்சியையே பலவர்மனுக்கு அளித்தது.

அமாவாசை இருள் கவிய அடுத்து ஐந்து நாள்கள் இருந்த அந்த மாலை நேரத்தில் அக்ஷ்யமுனைக் கோட் டையை நோக்கி ஒரு கண்ணையும், கடலின் பெரும் நீர்ப்பரப்பை நோக்கி மற்றொரு கண்ணையும், காட்டிக் கொண்டு பெரும் இறக்கைகளுடனும், சற்றே மழுங்கிய பின்பகுதியின் காரணமாகப் பயங்கரத்துடன் அழகையும் இணைத்துக் கொண்டு நின்ற அந்தப் பெரும் மரக்கலத்தை நோக்கி இளையபல்லவன் நடந்து செல்வதை உப்பரிகை யிலிருந்து கவனித்த பலவர்மனும் அந்த மரக்கலத்தால் கவரப்பட்டவனாகி உப்பரிகையிலிருந்து இறங்கிக் காவல ரையும் அழைத்துக் கொள்ளாமல் தனது புரவியிலேறிக் கடற்கரையை நோக்கிச் சென்றான். கடற்கரையை நோக்கியிருந்த கோட்டை வாசலுக்கு வந்ததும் கொம்பு களை ஊத எடுத்த காவலரையும் வேண்டாம் என்று சைகை செய்து, புரவியிலிருந்து இறங்கி எந்த ஆடம்பர அறிவிப்புமின்றிக் கடற்கரை மணலில் நடந்து மரக்கலம் இருந்த இடத்தை நோக்கிச் சென்றான். அவன் செல்வதை, கடற்கரைக் கொள்ளையரும் நோக்கியதால் அவர்களில் சிலரும் அவனைத் தொடர்ந்து சென்றார்கள். பலவர்மன் முன் செல்ல, பின்னால் கொள்ளையர் தொடரச் சென்ற கூட்டம் மரக்கலமிருந்த இடத்துக்கு வந்ததும் மரக்கலத்தை நோக்கிக் கொண்டிருந்த இளையபல்லவன் நீண்ட நேரம் மட்டும் அவர்கள் யாரையும் கவனிக்காமல் மரக் கலத்தையே நோக்கிக் கொண்டு நின்றான். அவன் அப்படி மரக்கலத்தைப் பார்த்து மயங்கி நின்றதற்குக் காரணம் இருக்கறதென்பதைப் புரிந்துகொண்ட பலவர்மனும், “ஆம் ஆம்! மிகப் பலமான மரக்கலம், என்ன அழகு! எத்தனை கவர்ச்சி!” என்று வாய்விட்டுச் சிலாகித்தான்.

பலவர்மன் சிலாகித்த சொற்கள் காதில் விழுந்த பின்னும் சில நிமிஷங்கள் பேசாமலே நின்று கொண்டி ருந்த இளையபல்லவன் கடைசியில் பலவர்மனை நோக்கித் திரும்பி, “ஸரீவிஜய சாம்ராஜ்யத்தின் பிரதான கோட்டைத் தலைவருக்கு என் மரக்கலம் பிடித்திருப்பது பற்றி நான் பெரு மகழ்ச்சியடைகிறேன்.” என்றான்.

“ஸரீவிஜயத்தின், பிரதான கோட்டை இதுவல்ல.” என்று புன்முறுவலுடன் பதிலுரைத்தான் பலவர்மன்.

“யார் சொன்னது?” என்று வினவினான் இளைய பல்லவனும் குறுநகை கொண்டு.

நான்தான் சொல்கிறேன்.

ஸ்ரீவிஜய நகரத்தின் துறைமுகத்தை நீங்கள் பார்த்ததில்லை.

பார்த்திருந்தால் இதைப் பாராட்டமாட்டீர்கள்” என்றான் பலவர்மன்.

“அத்தனை பெரிதா தலைநகரக் கோட்டை?” என்று வினவினான் இளையபல்லவன்.

“ஆம்.

அதைவிடப் பலமான கோட்டையோ சிறந்த துறைமுகமோ ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தில் வேறெங்கும் கிடையாது” என்ற பலவர்மன் சொற்களில் பெருமையிருந்தது.

“ஆனால் அதன் பலமும் அழகும் பயனற்றதா யிருக்கிறதே!” என்று பெருமூச்சு விட்டான் இளைய பல்லவன்.

“ஏன்?” வியப்புடன் எழுந்தது பலவர்மன் கேள்வி.

“நீங்களே சொல்லியிருக்கிறீர்கள் சூளு இனத்தார் தான் ஸ்ரீவிஜயத்தின் கடல் பலம் என்று.

“ஆம் சொன்னேன்.

அதுதான் உண்மையுங்கூட.

“அந்தச் சூளூக்கள் இந்தத் தீவின் மேற்குப் பகுதியில் வசிக்கிறார்கள். அங்குள்ள துறைமுகங்களிலிருந்து அவர் கள் மரக்கலங்கள் ஓடுகின்றன. அவற்றுக்கு ஆதரவாகவும், அவற்றைப் பழுது பார்க்கவும் எதிரிக் கப்பல்கள் அதிகமாக வந்து மறைந்து நிற்கவும் இருப்பது இந்த அக்ஷ்ய முனைதான்.

“ஆம், ஆம் “

“அகையால் ஸ்ரீவிஜயத்தின் சார்பாக நடத்தப்படும் கடற்போரோ கடற்கொள்ளையோ இந்தத் துறைமூகத்தி லிருந்துதானே நடக்கிறது.

“கடற்கொள்ளையென்று அதற்குப் பெயரல்ல, தற்காப்புக்காக நடத்தப்படும் போர்.

“பெயரில் என்ன இருக்கிறது? நடப்பது எதுவாயிருந் தாலும் இங்கிருந்துதானே நடக்கிறது?”

“ஆம் “அத்தனை பாதுகாப்பை நீரில் அளிக்கும் இந்தத் துறைமுூகத்தைவிட ஸ்ரீவிஜய நகரத் துறைமுகம் எப்படிச் சிறந்ததாகும்?” இந்தக் கேள்வி ஓரளவு திருப்தியைத் தந்தாலும் பலவர்மன் அதை வெளிக்குக் காட்டாமல், “இருப்பினும் தலைநகரத் துறைமுகத்தின் முக்கியத்துவம் இதற்கு வருமா?” என்று கேட்டான்.

“முக்கியத்துவமென்பதும் அல்லாததும் உபயோ கத்தைப் பொறுத்திருக்கிறது. இது அத்தனை முக்கிய மென்று நினைக்காவிட்டால் நான் இங்கு வருவேனா?” என்று கூறிப் பெரிதாக நகைத்தான் இளையபல்லவன். அவன் இரிப்புக்குக் காரணம் தெரியாததால் பிரமிப்புடன் அவனைப் பார்த்த பலவர் மனை மீண்டும் நோக்கிச் சொன்னான் இளையபல்லவன். “பலவர்மரே! இந்தக் கோட்டை அத்தனை முக்கியமல்ல என்று நினைத்திருந் தால் நான் இங்கு வந்திருக்கவும் மாட்டேன். இத்தனை பெரிய இணையற்ற கப்பலை இந்த இடத்தில் நிர்மாணம் செய்திருக்கவும் மாட்டேன்.” என்று.

பலவர்மன் எதிரேயிருந்த மரக்கலத்தின் மீது சில விநாடிகள் கண்களை ஓட்டினான். “மரக்கலம் மிகவும் அழகாயிருக்கிறது இளையபல்லவரே/ ஆனால் இணை யற்றது என்று சொல்லும்படி. இதில் என்ன இருக்கிறது?” என்று வினவவும் செய்தான்.

இளையபல்லவன் கண்கள் பலவர்மன் முகத்தை விட்டு எதிரே நின்ற மரக்கலத்தின் மீது சஞ்சரித்தன. அதைப் பார்க்கப் பார்க்க அவன் கண்களில் பெருமை பெரிதாக விரித்து அந்தப் பெருமையின் சாயை முகத்தை யும் பூராவாக ஆக்ரமித்துக் கொண்டது. ஏதோ கனவில் பேசுவது போல் பேசினான் இளையபல்லவன். “பல வர்மரே! கப்பல்களைப் பற்றியோ கடற்போரைப் பற்றியோ நீண்ட நாள் வரை நான் ஏதும் அறியாதவன். சோழ நாட்டுத் தரைப்படைகளைப் பல சமயங்களில் நடத்தியிருக்கிறேன். பெரும் போர்களில் பங்கு கொண்டிருக்கிறேன். ஆனால் தென் கலிங்க மன்னன் பீமன் உதவியால் கடலோடும் வசதி பெற்றேன். அவன் தமிழர் களைத் துன்புறுத்தி, என்னையும் என் துணைவர்களையும் தெலைக்கத் திட்டமிட்டிருக்காவிட்டால் மரக்கலமேறும் பாக்கியமோ கடற் போர் பயிற்சி பெறும் வசதியோ எனக்குக் கடைத்திருக்காது. கடலோடிய பின் அகூதாவிட மிருந்து பலவிதப் போர் முறைகளைக் கற்றேன். நான் இஷ்டப்பட்டால் இந்தத் துறைமுகத்தை ஒரே இரவில் அழித்துவிடும் வல்லமை எனக்குண்டு. நான் அதைச் செய்யாததற்குப் பலத்த காரணங்கள் உண்டு. இந்தத் துறைமுகம் எனக்குப் பெரிதும் பயன்பட்டிருக்கிறது. என் மரக்கலத்தைப் புதிதாக அமைக்க இடம் கொடுத்திருக் கிறது. அப்படி இடம் கொடுத்ததால் நான் பெரும் பலம் பெற்றிருக்கிறேன். “ இந்த இடத்தில் பேச்சைச் சிறிது நிறுத்தினான் இளைய பல்லவன்.



பலவர்மன் ஏதும் விளங்காமல் இளையபல்லவனை நோக்கினான். பிறகு கேட்டான், “என்ன பெரும் பலம் அது?” என்று.

இளையபல்லவன் முகத்தில் கனவும் பெருமையும் கலந்து தாண்டவமாடின. “இதோ காட்டுகிறேன் பாருங்கள் பலவர்மரே!” என்று கனவில் பேசுபவன் போல் கூறிய இளையபல்லவன் பக்கத்திலிருந்த கண்டியத் தேவனை நோக்க, “கோட்டைத் தலைவர் கேட்டது காதில் விழுந்ததா தேவரே?” என்று வினவினான்.

“விழுந்தது.” சங்கடத்துடன் வெளிவந்தது கண்டியத் தேவன் பதில்.

“சரி, நமது பலத்தைப் புலப்படுத்துங்கள், உத்தரவிட்டான் இளையபல்லவன்.

என்று அந்த உத்தரவை நிறைவேற்றத்.

தயங்கினான்” கண்டியத்தேவன் “இப்போது என்ன அவசரம் அதற்கு?” என்றும் வினவினான்.

“கோட்டைத் தலைவர் விரும்புகிறார்” என்று சுட்டிக் காட்டினான் இளையபல்லவன்.

“அவர் விரும்பினால்?”

“அவர் கோட்டையின் உபதளபதி என்ற முறையில் அவர் விருப்பத்தை நிறைவேற்றுவது எனது கடமை அல்லவா?”

“இருப்பினும் மரக்கலத்தின் சக்தி, அதன் மர்மம்...

“பலவா்மருக்குத் தெரிந்தாலென்ன ? அவர் மகளையே எனக்கு மணம் செய்விக்கப் போகிறார், அவரிடமிருந்து ரகசியமெதற்கு நமக்கு ?”

இளையபல்லவனைத் தீய்த்து விடுபவன்போல் பார்த்தான் கண்டியத்தேவன். வஞ்சகனான பலவர்ம னுக்கு மரக்கலத்தின் ரகசியத்தைக் காட்டுவது எத்தனை அபாயம் என்பது அவனுக்குப் புரிந்திருந்தது. அதுவும் அத்தனை கொள்ளைக்காரர் முன்னிலையிலும் ரகச யத்தை விளக்கினால் அது ரகசியமாகுமா என்ற நினைப்பும் ஏற்படவே தேவன் கண்கள் நெருப்பைக் கக்கின. அவன் சிற்றத்தைக் கண்ட இளையபல்லவன் மெல்ல நகைத்து விட்டுச் சொன்னான் “தேவரே! மனிதன் மனிதனை நம்ப வேண்டும். நம்பாவிட்டால் உலகம் வாழ்வது கஷ்டம்.

“நம்பத்தகாத மனிதர்களும் உண்டு. வெளியிடக் கூடாத ரகசியங்களும் உண்டு.” என்றான் தேவன்.

“என் மாமன் நம்பத் தகுந்தவர். இதோ இருக்கும் எனது நண்பர்களும் நம்பத் தகுந்தவர்கள்.” என்றான் இளையபல்லவன்.

இதைக் கேட்ட பலவர்மனுக்கும் சரி, கொள்ளை யருக்கும் சரி, அவன் தங்களைப் பாராட்டுகிறானா அல்லது ஏளனம் செய்கிறானா என்பது புலப்படாததால் சற்று நேரம் ஏதும் பேசாமல் நின்றனர். இளையபல்லவன் அடுத்து இட்ட உத்தரவு அவர்களிடை நம்பிக்கையை விளைவித்தது. “ஆகட்டும் தேவரே! இந்த மரக்கலம் என்ன செய்ய முடியும் என்பதை அவர்களுக்குக் காட்டும்” என்றான். அவன் குரலிலிருந்த கடுமையைக் கண்ட கண்டியத்தேவன் அதற்குமேல் ஏதும் பேசாமல், மரக்கலத் தன் மீதிருந்த மாலுமிகளை நோக்க, “எல்லோரும் அவரவர் இருப்பிடம் செல்லுங்கள். யந்திரங்கள் சுழலட்டும்.” என்று இரைந்து கூவினான்.

பலவர்மனையும் கொள்ளையரையும் பிரமிக்க வைக்கும் சம்பவங்கள் அடுத்த விநாடிகளில் நிகழ்ந்தன. மாலுமிகள் சிலர் திடுதிடுவென அந்தக் கடற்புறாவின் தளத்தில் ஓடுவது அனைவர் காதிலும் விழுந்தது. “உம்! தள்ளுங்கள்! தள்ளுங்கள்!” என்று எச்சரித்துக்கொண்டே கண்டியத்தேவன் மரக்கலத்திலிருந்து பல அடிகள் பின் னுக்கு நகர்ந்தான். அவன் சைகையைத் தொடர்ந்து இளைய பல்லவனும் மற்றோரும் பின்னடைந்தனர். அடுத்த விநாடி கப்பல் தளத்திலிருந்து பெரும் மர உருளைகள் இருப்பப்பட்டதால் விபரீதமான பல சப்தங்கள் காதில் விழுந்தன. அந்தச் சப்தங்கள் காதில் விழுந்துகொண்டே யிருக்கையில் கடல் புறா தனது பெரும் இறகுகளை மெள்ளத் தூக்கியது. கடல் நீர்ப்பரப்பை நோக்கியிருந்த இறகு கரையில் நின்றவர் கண்களுக்குப் புலனாகா விட்டாலும் கரைப்பக்கமிருந்த இறகு புலனானதால் அதைக் கண்டவர் பிரமித்தனர். பக்கப் பகுதியிலிருந்து பெரிதாக எழுந்த அந்த இறகு அங்கிருந்த அனைவருக்கும் பந்தலிடுவது போல் அவர்களின் தலைகளின் மீது பரந்து நின்றது. இரும்பி அந்த இறகு மட்டும் திடீரெனக் கீழே இறக்கினால் தாங்கள் அனைவரும் அதன் இறகுக்கும் இறகு தாங்கியிருந்த பக்கப் பெரும் பலகைக்கும் இடையே அரைக்கப்படலாமென்பதைக் கொள்ளையரும் பலவர்ம னும் புரிந்துகொண்டதன்றி, இறகு விரிந்து எழுந்ததால் மேற்பகுதியில் தளமும் விரிந்துவிட்டதென்பதையும், அந்த இறகில் மட்டும் நூறு வீரர்களுக்கு மேல் நின்று சண்டையிடலாமென்றும் அறிந்து கொண்டார்கள்.

அந்த இறகின் எழுச்சியைத் தொடர்ந்து மற்றும் சில உருளைகள் சுழன்ற சத்தம் மீண்டும் கேட்டது. அடுத்த விநாடி பக்கப் பலகையில் சில பகுதிகள் சின்னஞ்சிறு கதவுகளாகத் திறந்ததன்றி அவை ஒவ்வொன்தநிலிருந்தும் பெரும் ஈட்டியொன்றும் வெளிவந்தது. மறுபடியும் ஈட்டிகள் திடீரென உள்ளடங்கின. அனைவரையும் மேலும் பின்னடையச் செய்து கண்டியத்தேவன் இறகுகளைப் பழையபடி இறக்க உத்தரவிட்டான். இறகுகள் இறங்க, பயங்கர ஈட்டிகள் மறைய, பழையபடி அழகு பெற்ற அந்தக் கடல் புறாவைப் பெரும் மலைப்புடன் பார்த்தான் பலவர்மன். எந்த உணர்ச்சியையும் காட்டாத அவன் வஞ்சக முகத்திலும் உணர்ச்சிகள் தாண்டவமாடின. “பயங்கரம்! பயங்கரம்!” என்ற சொற்களும் பயத்துடன் அவன் இதழ்களிலிருந்து உதிர்ந்தன.

இளையபல்லவன் இதழ்களில் இளநகை விரிந்தது. “பலவர்மரே! இந்தப் பறவையும் இந்தக் கோட்டையைப் போலத்தான். அழகும் பயங்கரமும் நிறைந்தது. இந்த மரக்கலத்தைப் போரில் வெல்வது எளிதல்ல. இதன் சூட்சுமத்தில் ஒரு பகுதியைத்தான் உமக்குக் காட்டியிருக் கிறேன், இது முழுதும் தயாராகட்டும். மீதியைக் காட்டு கிறேன்.” என்றான் படைத்தலைவன் குரலில் மகழ்ச்சி ததும்ப.

“முழுதும் தயாராகிவிட்டது படைத்தலைவரே திடீரெனக் குறுக்கே புகுந்தது கண்டியத்தேவனின் குரல்.

இளையபல்லவன் அவனை ஓரே விநாடி நோக்கி னான். “நல்லது நல்லது தேவரே! இத்தனை ௫க்கிரம் மரக்கலத்தை அமைத்துவிடுவீர் என்று நான் எதிர்பார்க்க வில்லை” என்றும் சொன்னான். ஏதோ விளங்காத ஒலி படைத்த குரலில்.

“முடிந்துவிட்டது படைத்தலைவரே, இன்றே கடலோடவும் போர் புரியவும் இந்த மரக்கலத்தால் முடியும். உங்கள் உத்தரவுக்குத்தான் காத்திருக்கிறேன்,” என்றான் கண்டியத்தேவன்.

“எதற்கு உத்தரவு?” என்று வினவினான் படைத் தலைவன்.

“நீரில் மரக்கலத்தை மிதக்கவிட.” என்றான் தேவன்.

இதைக் கேட்ட பலவர்மன் முகத்தில் திடீரெனப் பயத்தின் சாயை படர்ந்தது. அதைக் கணநேரத்தில் கவனித்த இளையபல்லவன் இதருப்திக்கு அடையாளமாகப் பெருமூச்சு விட்டான். பிறகு கூறினான், “சில நாள்கள் போகட்டும் தேவரே.” என்று.

“மிதக்கவிடவா!” தேவன் குரலில் வியப்பு ஒலித்தது.

ஆம்.

“தண்ணீரிலிருந்தால்தான் மரக்கலத்துக்குச் சக்தி உண்டு.

“தெரியும்.

“கரையில் கடக்கும் மரக்கலம் கரையிலிருக்கும் முதலையைப் போன்றது. சக்தியற்றது.”

“அதுவும் தெரியும்.

“தெரிந்துமா...!” மேற்கொண்டு பேசவில்லை தேவன். அவன் முகத்தில் வெறப்பு அதிகமாக மண்டிக் கிடந்தது.

“ஆம், தெரிந்துதான் சொல்கிறேன். இன்னும் சில இனங்கள் இது கரையில் இருக்கட்டும். நீரில் இருந்தால் இது துறைமுகத்தைத் தடுத்து நிற்கும். மற்ற மரக்கலங்கள் துறைமுகத்தில் நுழைய முடியாது.” என்றான் இளைய பல்லவன்.

அவன் உத்தரவு மேலும் மேலும் பிரமிப்பையே அளித்தது கண்டியத்தேவனுக்கு. ‘மற்ற மரக்கலங்களைத் தடை செய்வதுதானே போர்க்கலத்தின் தொழில்! அதை ஏன் தடுக்கிறார் இவர்? அதுவும் அபாயம் எதிர்நோக்க யிருக்கும் இந்த நிலையில்?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான் கண்டியத்தேவன். கண்டியத் தேவனுக்குக் கசப்பாயிருந்த அந்த உத்தரவு, இனிப்பாயிருந்தது பலவர்மனுக்கு. அவனுக்கு மேலும் கரும்பாயிருக்கும் வார்த்தைகளைச் சொன்னான் இளைய பல்லவன். “தேவரே! வேறு எந்த மரக்கலம் துறைமுகத்தில் நுழைந்தாலும் நீங்கள் தடை செய்ய வேண்டாம். தடை செய்ய நமக்கு என்ன உரிமையிருக்கிறது? தடை செய்ய வேண்டியவர் இவர்!” என்று பலவர்மனைக் காட்டி விட்டுக் கோட்டையை நோக்கி நடக்கத் துவங்கினான் இளைய பல்லவன்.

அவன் போகும் திக்கைச் சில விநாடிகள் பார்த்து விட்டுக் கடல்புறாவையும் நோக்கிவிட்டு மனத்திலிருந்து இறங்கிய சுமையுடன் மாளிகை அறைக்குத் திரும்பி ஆசனத்தில் பொத்தென்று விழுந்தான் பலவர்மன். அப்பொழுது இரவு மூன்டு தீபங்கள் எரிந்துகொண்டிருந்தன. தப்பினேன் இன்று, நல்லவேளை, இளைய பல்லவன் முட்டாள்தனமாக உத்தரவை இட்டான். இல்லையேல் நாளை இரவு வரவேண்டிய இடும்பன் எப்படி வருவான்? அந்த அசுரப் பறவையை யார் தாண்டி வர முடியும்? அப்பப்பா! சோழ நாட்டு மரக்கல வித்தையில்தான் எத்தனை மா்மங்கள்! இப்பொழுது புரிகிறது. ஏன் சோழர்களுக்குக் கடாரம் பணிந்ததென்று” என்று தனக்குள்ளேயே பலமுறை சொல்லிக்கொண்டான். அப்படிச் சொல்லிக்கொண்டே, அந்த நினைப்பிலேயே கண்களை மூடினான். மூடியவன் தூக்கத்திலும் பேசினான். “உத்தரவு நல்லது. கண்டியத்தேவனுக்குக் கசப்பு எனக்கு இனிப்பு.” என்று முணுமணுத்தான். அப்படி முணுமுணுத் தவன் யாரோ தன்னை உலுக்குவதை உணர்ந்து கண் விழித்தான். அவன் கண்களுக்கெதிரே மஞ்சளழ நின்றிருந் தாள். அவள் நிலையைக் கண்டு பலவர்மன் அதிர்ச்சியடைந்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 44

அக்ரமந்திரம் மூடுமந்திரம்

உறங்கிக் கடந்த தன்னைத் தொட்டு உலுக்கி எழுப்பிய மஞ்சளழகியின் நிலை கண்டு பலவர்மன் பேரதுர்ச்சியடைந்தானென்றால் அதற்குக் காரணம் இருக்கத்தான் செய்தது. முகத்தில் குறுவேர்வை துளிர்த்துக் கிடக்க, அடர்ந்த கருங்கூந்தல் சற்றே பிரிந்து அலைந்து கடக்க, ஆடையும் சீர்கெட்டுக் கடக்கப் பெருமூச்சு வாங்க நின்ற தன் வளர்ப்பு மகளைக் கண்ட பலவர்மன், “என்னம்மா? என்ன நேர்ந்துவிட்டது உனக்கு? ஏனிந்த அலங்கோலம்?” என்று வினவினான்.

“படைத்தலைவரைக் கேளுங்கள், முதலில் அவரை ஓர் அறையில் அடைத்து வையுங்கள்.” என்று பெருமூச்சு வாங்க, பேச்சில் சீற்றம் மிதமிஞ்சித் தொனிக்கச் சொன்னாள் மஞ்சளழகி.

“யார், இளையபல்லவனையா?” என்று கேட்டுக் கொண்டே உறக்கத்தின் மிச்சத்தை உதறிவிட்டு எழுந்து மகளை அணுகிக் கேட்டான் பலவர்மன்.

“ஆம்.” என்றாள் மஞ்சளழகி பெருமூச்சுக்கிடையே.

“ஏன்? என்ன செய்தான் அவன்?” என்று கவலை யுடன் கேட்டான் பலவர்மன்.

“சற்று முன்பு என் அறைக்கு வந்தார்...” என்று தயங்கினாள் மஞ்சளழகி.

“சொல்லம்மா...அன்பும் ஒலித்தன.

பலவர்மன் குரலில் ஆதரவும் “வந்தவர் குடித்திருந்தார்...

“அதுதான் தெரிந்த விஷயமாயிற்றே.

“இன்றைய குடி மிகவும் அதிகமாயிருந்தது.

“எப்பொழுதும் அத்துமீறித்தான் குடிக்கிறான்.

“அத்துமீறிய குடியிலும் ஒரளவு நிதானமிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

இன்று அடியோடு மோசம்.

“சரி, குடித்துவிட்டு வந்தான்.

அப்புறம்...

“ஏதேதோ உளறினார்.

“என்ன உளறினான்?”

“உங்களை என் விரோதி என்று சொன்னார்.

“பலவர்மன் மார்பு திக்கு திக்கென்று அடித்துக் கொண்டது.

“சொல் மேலே என்ன சொன்னான்?” என்று வினவினான் கலவரத்துடன்.

“தான்தான் என்னைக் காப்பாற்ற முடியும் என்று சொன்னார்.

“அதற்கு என்ன செய்வதாக உத்தேசமாம்?”

“இன்று முதல் நானிருக்கும் அறை அபாயமாம்...

“மஞ்சளழகி பெரும் சங்கடத்துக்குள்ளானாள்.

மேலே சொல்ல முடியாமல் தலை குனிந்தாள்.

பலவர்மன் முகத்தில் ஈயாடவில்லை.

“அப்புறம் என்ன சொன்னான்?” என்று கேட்டான் அச்சத்துடன்.

“நாளைக்கு எனது அறை அதிக அபாயமென்றும், ஆகவே ஆகவே” என்று ஏதோ சொல்ல முயன்று முடியாமல் தவித்தாள் மஞ்சளழகி.

“பாதகமில்லை, சொல்! எதுவாயிருந்தாலும் சொல்!” பயம் உச்சஸ்தாயிக்குச் செல்லக் கேட்டான் பதற்றத்துடன் பலவர்மன்,.

மஞ்சளழகி நிலத்தை நோக்கிக்கொண்டு, “ஆகவே தனது அறைக்கு அழைத்தார்...” என்றாள். இதைச் சொன்னதும் கண்களைத் தூக்கிப் பலவர்மனைப் பார்க் கவும் செய்தாள்.

நியாயமாக இதைக் கேட்டதும் கொதித்தெழ வேண்டிய பலவர்மன் முகத்தில் ஏதோ பெரும் ஆயாசம் தீர்ந்ததற்கு அறிகுறியாக சாந்தி படர்ந்தது. ஆனால் குரலில் மட்டும் அவன் கொதிப்பைக் காட்டி, “அப்படியா சொன்னான் அயோக்கியன்! அவனை ஒழித்துக் கட்டி விடுகிறேன். கொஞ்சம் பொறு” என்றான்.

மஞ்சளழகி விழிகளில் சீற்றம் நிரம்பி நின்றது. “பொறுக்கிற விஷயமா இது?” என்று வினவினாள்.

“இல்லையம்மா, கொஞ்சம் அவகாசம் கொடு” என்றான் பலவர்மன்.

“நல்ல லட்சணம், இன்னோர் ஆடவன் தனது அறைக்கு என்னை அழைக்கிறான். குடிவெறியில் என் தலைமயிரையும் ஆடையையும் அலங்கோலப்படுத்து கிறான். தந்தை பொறுக்கச் சொல்கிறார்! நல்ல விந்தை இது! நீர் ஒரு தந்தையா?” என்று சுடும் சொற்களைக் கொட்டினாள் அந்தக் கட்டழகி.

அவள் பதற்றம்கூட அவனை அசையச் செய்ய வில்லை. “ஆம்மா! இளையபல்லவன் மிகவும் வஞ்சகன், அவனைத் திடீர் என்று எதிர்த்துக்கொள்வது அபாயம். மெள்ளத்தான் அவனைச் சமாளிக்க வேண்டும்” என்றான் பலவர்மன் சற்று நிதானப்பட்டு.

“அவரிடம் பயப்படுகிறீர்களா?” என்று கேட்டாள் மஞ்சளழக குரலில் வெறுப்புடன்.

ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத் தான், பலவர்மன். “ஆம், பயப்படுகிறேன் அந்தப் படைத் தலைவனிடம், விவரமறிந்தால் நீயும் பயப்படுவாய்! பெரும் தந்தரக்காரனிடம் நாம் சிக்கிக்கொண்டிருக்கிறோம்! நாமென்ன, இந்த அக்ஷயமுனையும் சிக்கிக் கொண் டிருக்கிறது! மிகுந்த எச்சரிக்கையுடன் நாம் நடந்து கொள்ளாவிட்டால்...இந்த அக்ஷ்யமுனையைப் பிடித்த நல்ல காலம் இவனுக்குக் குடிப்பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இவனை அஉறவாடித்தான் கெடுக்க வேண்டும். நீயும் அவனுடன் உறவாடு. அதாவது உறவாடுவது போல் பாசாங்கு செய். அவன் குடிவெறியில் வாயைக் கிளறு. சில உண்மைகளும் கிடைக்கும்.” என்றான்.

மஞ்சளழகி தன் கறுத்த புருவங்களைச் சற்றே உயர்த்தினாள். கோபத்தாலும், வியப்பாலும், “என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கேட்கவும் செய்தாள்.

“அவனுடன் நட்பாயிருப்பது போல் பாசாங்கு செய்.” என்றான் பலவர்மன்.

“பாசாங்கு செய்வது அவசியமல்ல தந்தையே. அவரிடம் என் மனத்தைப் பறி கொடுத்திருக்கிறேன்.

‘“ என்றாள் மஞ்சளழகி.

“அதுதான் தெரியுமே எனக்கு.

“ஆம் ஆம்.

நீங்கள்தானே அவரை எனக்கு மணாளனாக்கவும் இந்த அக்ஷ்யமுனைக்கு உபதளபதியாக்கவும் தீர்மானித்தீர்கள்.

“அதையெல்லாம் நீ நம்புகிறாயா?” மஞ்சளழகி மேலும் வியப்பைக் காட்டினாள்.

“அப்படியானால் நீங்கள் திட்டமிட்டது...” என்று இழுத் தாள் வியப்புடன்.

“திட்டமிட்டதெல்லாம் இளைய பல்லவனை ஒழிக்க! ஆனால் ஓவ்வொரு திட்டத்தையும் அவன் உடைத்து விட்டான். உன்னை மணம் செய்ய ஒப்பமாட்டான் என்று நினைத்தேன், ஒப்பினான். ஸ்ரீவிஜயத்தின் உபதளபதியாக மாட்டானென்று நம்பினேன், அந்த நம்பிக்கையில் மண்ணைப் போட்டு அக்ஷயமுனையைத் தன் வசப் படுத்திக் கொண்டான். அக்ஷ்யமுனை மக்கள், கொள்ளைக் காரர் அனைவருக்கும் எனது பொக்கிஷத்தைத் திறந்து விட்டு மயக்கியிருக்கிறான். அவன் என்ன குடித்தாலும், என்ன அக்ர/மங்களைச் செய்தாலும் பூர்வகுடி களிடமிருந்து அவன்தான் தங்களைக் காப்பாற்ற முடியுமென்று மக்கள் நினைக்கிறார்கள். அந்த நம்பிக்கையை உடைக்க வேண்டும்...” என்று சொல்லிய பலவர்மன், பேச்சை நிறுத்தி மகளைப் பார்த்தான்.

“எப்படி உடைப்பது?” என்று கேட்டாள் மஞ்சளழகி.

“உன் உதவி வேண்டும் அதற்கு?”

“நான் என்ன செய்ய முடியும்?”

“மெள்ள அவன் மனத்தை மாற்றி பகிட்பாரிஸான் காட்டுப் பகுதியிலிருக்கும் அமீரின் காவலை அகற்றிவிடு.

“நான் சொன்னால் அவர் செய்வாரா?”

“செய்வதும் செய்யாததும் உன் கையிலிருக்கிறது!”

“என் கையிலா?”

“ஆம்?”

“என்னிடம் என்ன சாதனங்கள் இருக்கின்றன?”

“பல இருக்கின்றன. உன் விழிகள், புருவங்கள்...” என்று மேலும் அடுக்கப் போனவனை, “நில்லுங்கள், வெட்க மில்லை உங்களுக்கு?” என்று சீறித் தடுத்த மஞ்சளழகி அவனைச் சுட்டுவிடுவது போல் பார்த்தாள்.

பலவர்மனின் வஞ்சக விழிகள் அவளை அன்புட னும் அனுதாபத்துடனும் பார்த்தன. “மகளே! உன் அழகு இணையற்றது. அதற்குப் படியாத அண் மகன் இருக்க முடியாது. அவனுடன் சகஜமாகப் பேசிக் காட்டுப் பகுதியில் உள்ள காவலைச் சிறிது தளர்த்திவிடு. அப்புறம் நடப்பதைப் பார்! இளையபல்லவனுக்குப் பலவர்மன் இளைத்தவனல்லவென்பது தெரியவரும். உனக்கு அவ னால் எந்தத் தீங்கும் நேரிடாது மகளே! என் ஒற்றர்கள் சதா அவனைக் கண்காணித்து வருகிறார்கள். அவன் அறை வாயிலில் காவல் புரியும் அவனைச் சேர்ந்த கள்வரில் ஒருவனை நம் வசம் இழுத்திருக்கிறேன். சிறிதும் அஞ்சாதே! பலவர்மன் கரம் நீளமானது.எங்கும் எட்டக் கூடியது. உன்மேல் அத்துமீறிக் கையை வைத்தால் இளைய பல்லவன் அதே விநாடி பிணமாகிவிடுவான். பயப்படாதே! சொன்னபடி செய். இன்னும் ஐந்தே நாள்களில் இந்த அக்ஷ்யமுனை பழைய நிலையை அடையும். நீயும் பழையபடி இதன் மகாராணி போல் சஞ்சரிப்பாய்” என்று சொன்னான் பலவர்மன்.

அவன் சொற்களைக் கேட்ட மஞ்சளழகியின் முகத்தில் புதிய ஒளி ஒன்று பிறந்தது. “சரி தந்தையே” என்று கூறிவிட்டுத் தலையைக் கோதிக்கொண்டு அடையைச் சிர்ப்படுத்தக் கொண்டு தன் அறையை நாடினாள் மஞ்சளழகி,

அறைக் கதவைத் துறந்து மிக வேகமாக அதை மூடித் தாழிட்டாள். அவள் தாழிட்டுத் திரும்பியதும் அந்த அறையின் மூலையிருந்த திரைச்சீலையை விலக்கிக் கொண்டு இளையபல்லவன் வெளிவந்தான். அடுத்த கணம் அவன் அணைப்பிலிருந்தாள் மஞ்சளழக. சலனப்படாத அறை விளக்கு பிணைந்து நின்ற அந்த இருவர் மீதும் தனது பொன்னொளியை வீசியது. அந்தப் பொன்னொளியில் மஞ்சளழகியின் பொன்னிறக் கன்னங்கள் பத்தரை மாற்றுத் தங்கத்தையும் பழிக்கும்படியாகப் பிரகாசித்தன. அந்தக் கன்னங்களைத் தடவிக் கொடுத்த இளையபல்லவன் அவள் தலை மயிரையும் கோதிவிட்டான். அவள் தனது தலையை நிமிர்த்தி, கண்களை உயர்த்தி இளைய பல்லவனை நோக்கினாள். அந்தக் கண்களில் காதலும் இருந்தது. அச்சமும் இருந்தது. காதலைவிட அச்சமும் வியப்பும் அதிகமாயிருந்தன என்று சொன்னாலும் மிகை யாகாது.அத்தகைய உணர்ச்சிகளுடன் சொன்னாள் அவள், “நீங்கள் சொன்னது சரிதான், “ என்று.

“என்ன சொன்னார் தந்தை!” என்று புன்முறுவ லுடன் வினவினான் இளையபல்லவன்.

“உங்களை மயக்கச் சொன்னார்?” என்று அவளும் இன்பப் புன்முறுவலை இதழ்களில் தவழவிட்டாள்.

“பைத்தியக்காரர்” என்றான் இளையபல்லவன்.

“ஏனப்படிச் சொல்கிறீர்கள்? ““என்னை மயக்கும்படி சொன்னாரே யோரயும் போயும்.

“சொன்னாலென்ன ?”

“ஏற்கெனவே மயங்கிக் கஇடப்பவனை மயக்க வேண்டிய தேவை என்ன இருக்கறது?”

“உம்! மயங்கிக் கிடக்கிறீர்களாக்கும் நீங்கள்?”

“ஆம்.

“இந்தப் பொய் என்னிடம் வேண்டாம்.

“பொய்யென்று உனக்கெப்படித் தெரியும்?”

“உங்கள் கடல் புறாவைப் பார்த்தேன்.

“அதில் எழுதியிருக்கறதா உன்னிடம் நான் மயங்க வில்லையென்று?”

“திட்டமாக எழுதவில்லை.

“மறைமுகமாக எழுதியிருக்கிறதாக்கும்?”

“ஆம்.

“என்ன எழுதியிருக்கிறது?”

“அதன் பக்கப் பலகையில் கடல் புறா என்ற பெயர் தெரியப் பெரும் களிஞ்சல்களும் சிப்பிகளும் புதைக்கப்பட்டிருக்கின்றன.

“அதனாலென்ன!”

“கடல் புறாவா அது? காஞ்சனைப் புறாவா?” இதைக் கேட்ட மஞ்சளழகி பெரூமூச்செறிந்தாள். பொறாமைப் புயல் மெள்ள அவள் இதயத்தில் வீசுவதை அவன் உணர்ந்தான். உணர்ந்ததால் அவளை வலியத் தழுவினான். “மஞ்சளழகி! உன்னை ஏமாற்ற நான் விரும்பவில்லை. என் மனம் பாலூர்ப் பெருந்துறையிலிருக்கையில் காஞ்சனா தேவியிடம் லயித்தது உண்மை. இங்கு வந்தபின் உன்னிடமும் சிக்கிக்கொண்டது. மனம் ஒன்றுதான். எனக்கு அது சிக்கு இருக்கும் சிறைகள் இரண்டு. அது எப்பக்கம் இழுபடுமோ தெரியாது. எந்தப் பக்கம் இழு பட்டாலும், எந்தப் பக்கத்தில் அதன் ஆசை நிறைவேறி னாலும், அதில் பூர்த்தியிருக்காதென்பது மட்டும் உண்மை. ஆனால் மஞ்சளழகி, இப்போது என் மனம் காதலில் சிக்கவில்லை. இந்த அக்ஷயமுனையின் நலத்தில், உன் க்ஷேமத்தில் சிக்கியிருக்கறது. ஆகவே சொல், உன் தந்தை என்ன சொன்னார் என்று?” என அந்தத் தழுவலிலேயே வினவவும் செய்தான்.

அவன் மார்பில் தலையைப் புதைத்த வண்ணம் மஞ்சளழக தனக்கும் தன் தந்தைக்கும் நடந்த சம்பா ஷணையை விவரித்தாள். இளையபல்லவன், “மஞ்சளழகி! நீ என்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கை இணையற்றது. அந்த நம்பிக்கைக்கும் உன் காதலுக்கும் நானும் பாத்திர மாக வேண்டும். ஆகவே, உன்னை நம்பிச் சொல்கிறேன். உன் தந்தை யாரென்பது எனக்குத் தெரியும்” என்று மெதுவாகக் கூறினான்.

அதைக் கேட்டதும் துடித்து மஞ்சத்திலிருந்து எழுந்த மஞ்சளழக, “யார்? யார் என். தந்தை?” என்று குரல் நடுங்க வினவினாள். அந்த எழில் உடலின் இடையைப் பிடித்துக் கைகளால் இழுத்து மீண்டும் அருகே அமர்த்திக்கொண்ட இளையபல்லவன், “அவசரப்படாதே மஞ்சளழக, இன்னும் ஐந்து நாள் அவகாசம் கொடு, சொல்கிறேன்.” என்றான்.

“ஐந்து நாளா?”

“ஆம். அமாவாசை இரவுவரை அவகாசம் வேண்டும்.

“அன்று என்ன நடக்கும்?”

“அக்ஷ்யமுனையின் கதி நிர்ணயிக்கப்படும்.

“ஏன்? இன்றே சொன்னாலென்ன?”

“சில அசெளகரியங்கள் இருக்கின்றன.

“என்ன அசெளகரியம்?”

“பிறகு தெரியும் உனக்கு.

“இதுதான் நீங்கள் என்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கையா?”

“நம்பிக்கைக் குறைவாலல்ல நான் எச்சரிக்கையா யிருப்பது. உன் நலனை முன்னிட்டுத்தானிருக்கிறேன்.

“விளங்கச் சொல்லுங்களேன்?” மஞ்சளழகி கெஞ்சினாள்.

இளையபல்லவன் சிறிது யோசித்தான். “நாளைக் காலையில் கடல் புறாவைப் பார்க்க வா மஞ்சளழகி. அங்கு பேசுவோம். நடக்கப்போவதை ஓரளவு சொல்கிறேன்” என்றான் படைத் தலைவன்.

“கடல்புறாவைப் பார்க்க நான் வரவில்லை. அதன் அழகை நீங்களே பார்த்துப் பார்த்து மகிழ்ச்சியடையுங்கள்.

“அழகைப் பார்க்க வரச்சொல்லவில்லை மஞ்சளழக, அதன் தளத்தில்தான் நாம் ரகசியமாகப் பேச முடியும். அந்த விசித்திரக் கப்பலை நீயும் பார்க்கலாம்.

மஞ்சளழக துக்கத்துடன் தலையை ஆட்டினாள். “நாளை மாலை மரக்கலத்துக்கு வா, மஞ்சளழகி, உன் தந்தையின் இஷ்டப்படி, நாளைக் காலையில் பகிட்பாரி ஸான் மலையிலுள்ள காவலைக் குறைத்துவிடுகிறேன்” என்று கூறிவிட்டு இளையபல்லவன் வெளியேறினான்.

மஞ்சளழகி அன்றிரவு உறங்கவில்லை. புரியாத எத்தனையோ விஷயங்கள் அவள் மனத்தையும் வாட்டி வதைத்தன. மறுநாள் மாலை இளையபல்லவன் சொற்படி. மஞ்சளழக கடல்புறா இருக்குமிடம் சென்று கண்டியத் தேவன் உதவியுடன் அதன் தளத்தில் ஏறி அக்ரமந்திரத்தில் நுழைந்தாள். அன்றைய மாலைக்குப் பிறகு மஞ்சளழக காணப்படவேயில்லை. அவள் எங்கு மறைந்து போனாள் என்பது யாருக்கும் தெரியவில்லை. அக்ரமந்திரத்தில் நுழைந்த அவள் எப்படி மறைந்தாள் என்பது பெரும் மூடுமந்திரமாய் இருந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 45

பேய்த் திட்டம்

அக்ஷயமுனைக் கோட்டைக்குள்ளும் கோட் டைக்குப் புறம்பேயிருந்த கடற்கரைப் பகுதியிலும் சுதந்திரப் பறவையாக உலவிச் சிரித்து விளையாடி. வந்த மஞ்சளழகி திடீரென இரண்டு மூன்று நாள்கள் எந்த இடத்திலும் தென்படாதிருக்கவே நகர மக்கள் முதலில் அவளுக்கு ஏதேனும் உடல்நலக் குறைவோ என்று அச்ச முற்றார்கள். ஆனால் பலவர்மன் மாளிகைக் காவலரில் சிலர் அப்படியேதுமில்லையென்றும் மாளிகையிலேயே மஞ்சளழக காணப்படவில்லையென்றும் அரசல் புரசலாக விஷயத்தை வெளியிட்டுவிடவே, அவள் ஏன் மறைந்தாள்? எப்படி மறைந்தாள்? எங்கு போனாள்? என்ன அனாள் என்பதைப் பற்றி இல்லாத பொல்லாத வதந்திகள் பலவும் நகரத்துக்குள்ளும் புறம்பேயும் உலாவலாயின. இரண்டு நாள்களுக்கு முன்பு கடல் புறாவை நோக்கிச் சென்று அதன் தளத்திலேறியதைப் பார்த்த கொள்ளையர் துணைவிகள் அவளை இளயைபல்லவன்தான் எங்கோ மறைத்து விட்டானென்று பேசிக்கொண்டார்கள். இளையபல்லவனையும் மஞ்சளழகியையும் நெருங்கிய நிலையில் கடற்கரையில் ஏற்கெனவே பார்த்துள்ள கொள்ளையர் துணை மாதர், அவன் அறையில் கள்ளக் காதலின் முடிவையே எண்ணினாலும் அவளை இளையபல்லவன் எங்குதான் மறைத்திருக்க முடியும் என்று பரஸ்பரம் கேட்டுக் கொண்டனர்..

இந்த வதந்தி ஊருக்குள் பரவியும் அதை நகர மக்கள் மட்டும் நம்பவில்லை. மஞ்சளழகியைத் திருமணம் செய்து கொடுக்கவே பலவர்மன் சர்வசித்தமாயிருக்க, மஞ்சளழகியைச் சோழர் படைத்தலைவன் கள்ளத்தனமாக மறைக்க வேண்டிய அவசியமில்லையென்று நகரமக்கள் வாதாடினர். தவிர, கடல் புறாவைச் சேர்ந்த மாலுமிகள் ஓரிருவரை விசாரித்ததில், மஞ்சளழக மாலையில் கடல் புறாவின் தளத்துக்கு வந்ததும் மரக்கலத் தலைவனுக்கான முகப்பு அறையில் (அக்ரமந்திரத்தில் ) நுழைந்ததும் உண்மையே என்றாலும் இரவு சற்று ஏறியதுமே அவளை இளையபல்லவன் கோட்டைக்கு அழைத்துச் சென்று விட்டதாகவும் செய்தி கிடைக்கவே, “மஞ்சளழகி மறைந் திருந்தால் மாளிகைக்கு வந்த பின்புதான் மறைந்திருக்க வேண்டும்.” என்று நகர காவலர் முடிவுக்கு வந்தனர். இப்படியாக வதந்திகள் பல கிளம்பினாலும் அந்த வதந்திகள் சுட்டிக் காட்டியது இருவரைத்தான். ஒருவன் இளையபல்லவன், மற்றவன் பலவர்மன். ஒருவன் ஃயிர்க் காதலன், இன்னொருவன் உயிரைவிட அவளை அதிகமாக நேசித்த தந்தை. அந்த இருவரும் அவளுக்கு எந்தவிதத் தீங்கையும் விளைவிக்க மாட்டார்களென்றும், அப்படி யானால் என்ன செய்திருக்கிறார்களென்றும் பலப்பல விதமாகப் பேச்சுகளும் கேள்விகளும் அக்ஷ்யமுனையில் எழுந்தன. இத்தனை பேச்சுகளிலும் மற்றது எது தெரிந் தாலும் தெரியாவிட்டாலும் ஒன்று நிச்சயமாகத் தெரிந்தது. மக்கள் அவளைப் பற்றிப் பெருங் கவலை கொண்டிருந் தார்கள் என்பதுதான் அது.

மக்களும் கொள்ளை மாதரும் மாலுமிகளும் நகரக் காவலரும் கவலை கொண்டு தவித்தாலும் அவளைப் பற்றிப் பலவர்மனோ இளையபல்லவனோ, கவலை ஏதும் காட்டவில்லை. இளையபல்லவன் கவலை காட்டாததன் காரணம் மக்களுக்குப் புரிந்திருந்தது. அடுத்த இரண்டு மூன்று நாள்களில் இளையபல்லவன் மிதமிஞ்சிக்குடித்தான்.

நகரத்துக்கு மிக அபாயம் விளைவிக்கவல்ல உத்தரவுகளைப் பிறப்பித்தான்.

ஆகவே, அவன் நிலை குலைந்தவன், கவலைப்படக் காரணமில்லையென்பதை மக்கள் புரிந்நுகொண்டனர்!

பலவர்மன் அப்படியில்லை. அடுத்த நாள்களில் மிகுந்த நிதானத்தையும் ஆழ்ந்த சிந்தனையையும் காட்டினான். அப்பேர்ப்பட்டவன் ஏன் கவலைப்படவில்லை? இந்தக் கேள்வியைத் தான் பலரும் கேட்டார்கள். சிலர் ஊர் நிலையைப் பற்றி விசாரிப்பது போல் மஞ்சளழகியைப் பற்றியும் விசாரித்தார்கள். அந்த விசாரணையைச் சேந்தனே துவங்கினான் பலவர்மனிடம். பொக்கிஷத்தைப் பார்வையிட வந்த சமயத்தில் பெட்டிகளைத் திறக்கப் பலவர்மன் உத்தரவிட்டும் அதை நிறைவேற்றாமலே கேட்டான் சேந்தன், “கோட்டைத் தலைவரே! ஊரில் நடக்கும் விஷயம் உமக்குத் தெரியுமா?” என்று.

“என்ன விஷயம் வணிகரே?” என்று வினவினான் பலவர்மன் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல்.

“காட்டுப் பகுதியில் படைத்தலைவர் காவலைக் குறைத்துவிட்டார்...” என்று மென்று விழுங்கினான் சேந்தன்.

“அது அவர் இஷ்டம்.” என்றான் பலவர்மன்.

“உங்களுக்கும் அதற்கும்.

சம்பந்தமில்லையா?” என்று வியப்புடன் வினவினான் வணிகன்.

“இல்லை.” சாதாரணமாக வந்தது பலவர்மன் பதில்.

“நீங்கள் கோட்டையின் தலைவரல்லவா?”

“ஆமாம்.

“பாதுகாப்பு உமது பொறுப்பல்லவா?”

“அந்தப் பொறுப்பைப் படைத்தலைவரிடம் ஒப்படைத்து விட்டேன்.

அவர்...

“உமது தளபதியாக்கும்.

“ஆம், “

“அகையால் அவர் எந்த உத்தரவை இட்டாலும் தலையிடமாட்டீர்?”

“ஏன் தலையிட வேண்டும்?”

“உங்கள் தலை இப்பொழுதிருக்குமிடத்தில் இருக்க.

சேந்தன் எரிச்சலைக் காட்டினான்.

“வேறு எங்கு போய்விடும்?” என்று வினவினான் பலவர்மன்.

“போகுமிடம் தெரியாது, போய்விடும் என்பது மட்டும் தெரியும்.” என்றான் சேந்தன்.

“ஏனோ?”

“காட்டுப் பகுதியில் காவல், சாஸ்திரத்துக்குத்தான் இருக்கிறது. அமீர் ஏழெட்டுப் பேர்களுடன் நிற்கிறான். பூர்வகுடிகள் ‘பூ’ என்று ஊதினால் அந்த ஏழெட்டுப் பேரும் பறந்துவிடுவார்கள். பூர்வகுடிகள் உள்ளே நுழைந்தால் இங்கு பல தலைகள் நிலத்தில் உருளும். உமது தலை மட்டுமென்ன, இரும்பா? கத்தியால் வெட்டினால் உருளாதா?”

“உருளும்.

“அதைத் தடுக்க முயலக்கூடாதா?”

“என்ன செய்ய வேண்டும் அதற்கு?” - “மஞ்சளழகியைச் சிறிது வெளியே காட்டுங்கள்.

“எதற்கு?”

“இளையபல்லவர் சுயநிலை அடைய. மஞ்சளழகி மறைந்து விட்டதால்தான் படைத்தலைவர் மதி குலைந்து விட்டதாக மக்கள் நினைக்கிறார்கள். மஞ்சளழகியைக் கண்டால் இளையபல்லவரின் குடி சற்றுத் தேக்கப்படும். மதியும் சரிப்படும். மதி சரிப்பட்டால் இப்படிக் கண்டபடி உத்தரவுகளைப் பிறப்பித்துக் காவலைக் கலைக்க மாட்டார்.

“பலவர்மன் சற்று யோசித்தான்.

பிறகு சொன்னான் “வணிகரே! / உமது யோசனையில் அர்த்தமிருக்கிறது” என்று.

“மகழ்ச்சி.” என்றான் சேந்தன்.

“உமக்கு மூளையும் இருக்கிறது.” என்றான் பலவர்மன்.

“அது இப்பொழுதுதான் புரிந்ததாக்கும்! ’” என்று கேட்டான் சேந்தன் விஷமமாக.

பலவர்மன் அந்த விஷமத்துக்குப் பதிலாக விஷத் தைக் கக்கினான். “வணிகரே, மூளையை அதிகமாக உபயோகப்படுத்த வேண்டாம். உபயோகப்படுத்தி உமக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தில் தலையிடாதிரும். அப்பொழுதுதான் உமது மூளையும் அதை உள்ளடக்கி யிருக்கும் தலையும் மிஞ்சும். இல்லையேல்...” என்று வாசகத்தை முடிக்காமலே சென்றுவிட்டான் அக்ஷய முனைக் கோட்டையின் தலைவன்.

அவன் பேச்சை எண்ணி எண்ணிக் குமுறினான் சேந்தன். ‘எத்தனை திமிர் இந்தக் கோட்டைத் தலைவ னுக்கு?” என்று உள்ளுக்குள்ளேயே கருவிக் கொண்டு, அவனைப் பழி வாங்கும் நோக்கத்துடன் இளையபல்லவன் கூறுவதை விடத் துரிதமாகவே பலவர்மன் பொக்கிஷத்தை மக்களுக்கு அள்ளி வாரிவிடத் தொடங்கினான். ஆனால் அந்தப் பணத்தையும் லட்சியம் செய்யும் நிலையில் மக்கள் இல்லை. மூன்று நாள் கழித்து மஞ்சளழகியின் மறைவைக் கூட மறந்துவிடும் நிலை அந்த நகரத்தில் ஏற்பட்டது. மூன்றாம் நாள் இரவிவிருந்தே பகிட்பாரிஸான் காட்டுப் பகுதியில் தொலைதூரத்திலிருந்து பூர்வகுடிகளின் பெரும் டமார ஓசைகள் கேட்கத் துவங்கின. காட்டுப் புறத்தில் எங்கோ தூரத்தில் தீப வெளிச்சமும், அடிக்கடி தெரியத் தொடங்கியது. சிலசமயம் நள்ளிரவையொட்டி ஓரிரு தீபங்கள் கோட்டை மதிலிலிருந்து சற்றுத் தள்ளி இருந்த காட்டு ஓரங்களிலும் தெரியத் தொடங்கின.

இதையெல்லாம் கவனித்த நகர மக்கள் பெரும் கிலியடைந்தனர். காட்டுப் பகுதியில் தூரத்தே கேட்ட டமார ஒலிகளும், அடிக்கடி சுடர்விட்ட தீப ஒளிகளும் பதக்குகளின் தாக்குதலுக்குப் பூர்வாங்கமென்பதை நகர மக்கள் அறிந்தேயிருந்தனர். அடுத்த இரண்டு நாள்களில் அமாவாசையும் நெருங்க இருந்ததால், பூர்வகுடிகள் கண்டிப்பாய் நகரத்தைத் தாக்கப் போகிறார்கள் என்ற உணர்வு ஏற்படவே, நகர மக்கள் பீதியும் கொதிப்பும் அடைந்தனர். முன்பெல்லாம் இல்லாத தைரியம் தங்களுக்கு இளையபல்லவனால் ஏற்பட்டும், இளைய பல்லவன் முயற்சியால் ஆயுதப் பயிற்சி நன்றாகத் தங்களுக்கு அளிக்கப்பட்டும் ஏன் தங்களைப் பாது காப்புக்கு படைத்தலைவனோ, அமீரோ அணிவகுத்து நிறுத்தவில்லையென்பது அவர்களுக்குப் புரியாததால் பெரும் கொதுப்படைந்தனர். கொதிப்படைந்த மக்களின் தலைவர் இருவர் அதுபற்றி அமீரை விசாரித்தனர். அமீரிடமிருந்து சரியான பதில் ஏதும் வரவில்லை. உங்களை உபயோகப்படுத்தும் சமயம் படைத்தலைவ ருக்குத் தெரியும்” என்று திட்டமாகச் சொல்லி மேலே ஏதும் பேச மறுத்துவிட்டான் அமீர்.

அவனிடம் எதையும் அறியமுடியாத நகர மக்கள் விளக்கம் பெற இளையபல்லவனை அணுகினார்கள்.

இரு தலைவர்களும் சென்றபோது கையில் மதுக்குப்பியுடன் காட்சியளித்தான் இளையபல்லவன். அவர்களைப் பார்த்ததும் பஞ்சணையில் எழுந்து உட்கார்ந்து, “தெரியும் நீங்கள் வந்திருக்கும் காரியம். இதைப் பிடுங்கிக்கொண்டு போகப் போகிறீர்கள்.” என்று மதுக் குப்பியைக் காட்டினான்.

அவனிருந்த நிலை அவர்களுக்கு வெறுப்பைத் தந்தது. இத்தகைய குடிகாரனை நம்பி, பூர்வகுடிகளையும் விரோ தித்துக்கொண்டு விட்டோமே என்று தங்களையே அவர்கள் நொந்துகொண்டார்கள். இருப்பினும் தலை வரில் ஒருவன் “படைத் தலைவரே!” என்று துவங்கினான்.

“படை, ஏது? தலைவர் ஏது?” வெறிச்சரிப்பு அறையை உ௭டுருவியது.

“அக்ஷயமுனை ஆபத்திலிருக்கிறது...

‘ னொருவன் ஆரம்பித்தான்.

என்று இன் “இருக்கட்டும்.” என்று இளையபல்லவன் குப்பியின் வாயுடன் தன் வாயைப் பொருத்தி எடுத்தான்.

“பூர்வகுடிகள்...” என்று இழுத்தான் முதலாமவன்.

“பூர்வகுடிகள், ஆம். அவர்கள்தான் பூர்வகுடிகள். நீங்கள் பின்னால் வந்தவர்கள். அவர்கள் ஊஎரை அவர் களிடம் விட்டுவிடுங்கள். ஓடிப் போய்விடுங்கள்.” என்று தட்டுத் தடுமாறி உளறினான் இளையபல்லவன்.

இரு தலைவரும் மிகுந்த வெறுப்புடன் அவனை நோக்கிவிட்டு அறையிலிருந்து அகன்றனர். மறுநாள் நிலை இன்னும் மோசமாயிற்று. கொள்ளைக்காரர் போர்க் கலங்கள் எல்லாம் இளையபல்லவன் உத்தரவுப்படி எங்கெங்கோ போய்விடவே துறைமுகத்திலும் காவல் இல்லை. காவல் செய்யக் கூடிய கடல் புறாவோ கரையில் இழுபட்டுக் கடந்தது. எந்தத் இக்கிலும் சரியான காவல் இல்லாததால் சரியான ஆடையில்லாத பிச்சைக்காரியைப் போல் மிகப் பரிதாபமாகக் காணப்பட்டது அக்ஷ்யமுனை.

காவலை இழந்த துறைமுகத்தில் இரவில் சூளூ இனத்தாரின் படகுகள் நடமாடத் தொடங்கின. அவற்றை ஏதும் செய்ய வேண்டாமென இளையபல்லவன் உத்தர விட்டி ருந்ததால் அவற்றினருகே கடல்புறாவின் மாலுமி களோ படகுகளோ செல்லவில்லை. இதைக் கண்டும் மக்கள் அஞ்சினர். அக்ஷயமுனைக் கோட்டையை எந்தவிதக் கஷ்டமுமின்றி அள் சேதமின்றி, கைப்பற்ற அதைவிடச் சிறந்த சமயம் ஏதும் கடையாதென்பதை அறிந்த மக்கள் கலங்கினர். அதைக்கண்டு ஓரளவு பலவர்மனும் கலங்கினான். அவன் கலக்கத்துக்குக் காரணம் வேறு. அந்தக் காரணத்தைத் தன் மாளிகைத் தோட்டத்தில் அமாவாசைக்கு முதல் நாளிரவு வில் வலனைச் சந்தித்த அதே மரத்தடியில் கூறினான் பலவர்மன்.

அன்றும் அந்தையின் அலறல் கேட்டு, தோட்டத் துக்குச் சென்ற பலவா்மன் வில்வலனைக் கண்டதும் காட்ட வேண்டிய மகழ்ச்சிக்குப் பதில் அச்சத்தையே காட்டினான். “பலவர்மா! நாம் அந்தப் படைத் தலைவனைப் பழிவாங்கும் சமயம் நெருங்கிவிட்டது. “என்று குதூகலத்துடன் துவங்கிய வில்வலனைக் கவலையுடனும் அச்சத்துடனும் நோக்கிய பலவர்மன், “வில்வலா! இளையபல்லவன் போக்கு எனக்கு எதுவும் பிடிபடவில்லை.” என்றான்.

“என்ன அவன் போக்கு?” என்று வினவினான் வில்வலன்.

“அவனே இந்த நகரத்தின் காவலைப் பலப்படுத்தி னான்.

“ஆம்.

“அவனே இப்பொழுது அதைப் பலவீனப்படுத்தி யிருக்கிறான்.

“நமக்கு நல்லதுதானே?”

“நல்லதுதான் - உண்மையாயிருந்தால்...

“உண்மையாயிருக்காதென்று சந்தேகமா?”

“ஆம்.

“அவன் குடிப்பதாகச் சொல்கிறார்களே?”

“அதிகமாகக் குடிக்கிறான்.” “குடிகாரன் உத்தரவுகள் எப்படி இருக்கும்?”

“எப்படியிருக்க வேண்டுமோ அப்படித்தான் இருக் கின்றன. ஆனால் அத்தகைய குடிகாரன் உத்தரவை மற்றவர்கள் ஏன் நிறைவேற்றுகிறார்கள்?” வில்வலன் சற்று யோசித்தான். “ஆம், அதை நாம் யோசிக்கத்தான் வேண்டும். இதில் ஏதாவது சூதிருக் குமோ?” என்று வில்வலனும் கவலையுடன் கேட்டான்.

“இருக்கலாம். இருந்தால் நாம் அதற்கு இடம் கொடுக்கக்கூடாது.” என்று பலவர்மன் கூறினான் வில்வலனை உற்று நோக்கி. “அதற்கு என்ன செய்ய வேண்டும்?”

“இளையபல்லவன் கோட்டையின் காவற் படை யையோ மக்கள் படையையோ நடத்தாதிருக்கச் செய்ய வேண்டும்.

“எப்படிச் செய்வது?”

“அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.

நாளை இரவு நீ தாக்குதலைத் துவங்கிவிடு!”

“இளையபல்லவன்?”

“என் அறையிலிருப்பான் - பிணமாக.” என்று கூறிய பலவர்மன் அந்தக் காரிருளில் மெள்ள நகைத்தான்.

அந்தப் பயங்கரச் சிரிப்பு மெல்ல இருந்தாலும் பேய்ச் சிரிப்பாக இருந்தது. அந்த விநாடியில் பேயும் வகுக்க அஞ்சும் கொடிய திட்டத்தை வகுத்துவிட்டான் பலவர்மன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 46

புது வாழ்வு

மாளிகைத் தோட்டத்தின் மரத்து நிழலில் வில் வலனைச் சந்தித்து, மறுநாளிரவு நகரத்தின்மீது தாக்கு தலைத் துவங்கிவிடும்படி உத்தரவிட்டு, இளையபல்லவன் உயிரையும், அதே அமாவாசை இரவில் ஒழித்துக் கட்டத் திட்டமிட்டு, மீண்டும் தன் அறையை நாடிய பின்பும் பலவர்மன் சிந்தையில் ஏதோ விவரிக்க இயலாத சந்தேக மூம் பயமும் ஊடுருவி நின்றன. காட்டுப் பகுதியில் கோட்டைக் காவலைப் பலவீனப்படுத்தியும் கடற் பகுதியில் காவலே இல்லாமலே அடித்தும் இளைய பல்லவன் தன் திட்டங்களுக்கு அனுகூலமாகவே சகலவிதத் திலும் காரியங்களைச் செய்திருந்தும், அந்தக் காரியங் களைக் கண்டு தன் மனம் மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக ஏன் பயத்தின் வசப்படுகிறது என்று தன்னைத்தானே பலமுறை கேட்டுக்கொண்டான் பலவர்மன். தன் மஞ்சத்தில் உட்கார்ந்த வண்ணமே நகரக் காவலையும் பாதுகாப்பையும் குலைத்து இளையபல்லவன் இட்ட விபரீதமான உத்தரவுகள் குடி வெறியில் இடப்பட்ட உத்தரவுகளாகையால் அவை விபரீதமாயிருந்ததில் வியப்பு ஏதுமில்லையென்நாலும், அந்த உத்தரவுகளையும் போரில் வல்ல அமீரும், கண்டியத்தேவனும் எதற்காகச் சரமேல் ஏற்று நிறைவேற்றுகிறார்கள் என்பது மட்டும் பலவர்மனுக்குச் சிறிதும் புரியவேயில்லை. போர்களின் சரித் தரத்தைப் பார்க்கும்போது படைத்தலைவர்கள் தவறான உத்தரவுகளைப் பிறப்பித்த சமயங்களில் எல்லாம் கரன். வழழக உபதலைவர்களும், வீரர்களும் புரட்சி செய்திருப்பதே வழக்கமாயிருந்திருக்க, இளையபல்லவன் விஷயத்தில் மட்டும் அந்தச் சரித்திரம் மாறுபடக் காரணமென்ன வென்று பலமுறை யோசித்த பலவர்மன், விடையேதும் காணாமல் தவித்தான். இளையபல்லவன் எந்த முட்டாள் தனமான உத்தரவைப் பிறப்பித்தாலும் அதை மற்றவர்கள் நிறைவேற்றுவது அவனிடத்திலுள்ள பயத்தினாலா, பக்தி யினாலா என்பதை அலசிப் பார்த்தும் ஏதும் புலப்படாமற் போகவே மீண்டும் மீண்டும் சஞ்சலத்துக்கு உள்ளாகி அன்றிரவைத் தூங்காமலே கழித்தான் பலவர்மன். அப்படிப் பல கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும், சஞ்சலத்துக்கும் இலக்கானதால் மறுநாள் விடிந்த அமாவாசைப் பொழுது பலவர்மனுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதற்குப் பதில் பெரும் மலைப்பையே கொடுத்தது.

பெரும் விளைவுகளை ஏற்படுத்தவல்ல இரவுக்குப் பூர்வாங்கமாக முளைத்த அந்த அமாவாசை தினத்தின் காலைப் பொழுதில் மாளிகையின் மாடிக்குச் சென்று அக்ஷயமுனைக் கோட்டையையும் காட்டுப் பகுதியையும் கடற் பகுதியையும் கண்களால் அளவெடுத்த பலவர்மன் நகரத்துக்குள்ளே இருந்த அமைதியைக் கண்டு அசந்து போனான். அந்தக் காலை நேரத்தில் காட்டுப் பகுதிக்குள் ஆகாயத்தை நோக்கி எழுந்து சென்ற புகைமண்டலம் வில்வலனின் வீரர்கள் நகரத்துக்கு அதிக தூரத்தில் இல்லை என்பதைப் புலப்படுத்தியது. கடற்பகுதியில் தரையில் பாதி இழுபட்டுக் கடந்த கடற்புறாவைத் தவிர மருந்துக்குக் கூட மரக்கலமொன்று இல்லாததும், எந்த விநாடியிலும் சூளூக்கள் துறைமுகத்துக்குள் நுழைந்து விடலாமென்பதை நிரூபித்தது. இந்த நிலையில் நகர மக்கள் ஏதும் நடக்காதது போல் தங்கள் தினசரி அலுவல்களைக் கவனித்து நடமாடிக் கொண்டிருந்தனர். நகரத்துக்குள்ளிருந்த நிலை, யாரும் எந்த நிகழ்ச்சியையும் சமீபத்தில் எதிர்பார்க்க வில்லை யென்பதைக் கண்டு ஓரளவு மகழ்ச்சி அடைந் தாலும், அந்த மகழ்ச்சி மீண்டும் மீண்டும் மனத்திலிருந்து அறுபட்டுப் போவதற்குக் காரணம் அறியாமல் தவித்தான். அத்தனைத் தவிப்பிலும் இருந்தது அவனுக்கு - தன்னை விட இளையபல்லவனைப் பெரிதாக மதித்து அவனிடம் தங்களை ஒப்படைத்துக்கொண்ட அக்ஷயமுனைக் கோட்டை மக்களுக்கு அன்றிரவு தான் சரியான பாடம் கற்பிக்கப் போவதையும், மறுநாள் முதல் தன்னிடம் அக்ஷ்ய முளை மீண்டும் அடிமைப்பட்டுக் கடக்கப் போவதையும் நினைத்த பலவர்மன் உள்ளே எழுந்த திருப்திக்கு அறிகுறியாகச் சிறிது புன்முறுவலையும் தனது இதழ்களில் தவழவிட்டுக் கொண்டான். அப்படிப் புன்முறுவல் கொண்ட சமயத்தில், “கோட்டைத் தலைவர் காலையில் மகழ்ச்சியுடனிருப்பது எனக்கும் மகழ்ச்சி அளிக்கிறது” என்று தனக்குப் பின்னாலிருந்து எழுந்த சொற்களைக் கேட்டுத் திகைத்துத் இரும்பிய பலவர்மன் தன்னை மிகவும் நெருங்கிய வண்ணம் இளையபல்லவன் நிற்பதைக் கண்டதும் திகைப்பை மின்னல் வேகத்தில் மறைத்துக் கொண்டு ஆச்சரியச் சாயையை முகத்தில் படரவிட்டுக் கொண்டான். “நீங்களும் காலையில் எழுந்துவிட்டீர்களா?” என்று ஏதோ கேட்க வேண்டும் என்பதற்காகக் கேட்கவும் செய்தான் பலவர்மன்.

“ஆம், எழுந்துவிட்டேன். நேற்று பூராவும் சரியான உறக்கமில்லை.” என்று கூறிய இளையபல்லவன் பலவர்மன் முகத்தைக் கூர்ந்து நோக்கினான்.

உணர்ச்சிகளை லேசில் வெளிக்குக் காட்டாத பலவர்மன் முகத்தில் திகைப்பின் குறி வெளிப்படையாகத் தெரிந்தது. “என்ன நேற்றிரவு உறக்கமில்லையா?” என்ற கேள்வி கவலையைக் காட்டும் மூறையில் கேட்கப் பட்டாலும் உண்மையில் முகத்தில் தெரிந்த கிலி குரலிலும் பிரதிபலித்தது.

“ஆம். அடியோடு உறக்கமில்லை.” என்றான் இளைய பல்லவன்.

காரணம்?” கவலையுடனேயே எழுந்தது இந்தக் கேள்வியும்.

“வர வர ௨ரில் அமைதி குறைந்து வருகிறது” என்று சுட்டிக் காட்டினான் இளையபல்லவன்.

“அமைதி குறைந்து வருகிறதா?”

“ஆம்.

“எப்படி?”

“மக்கள் சதா இரவிலும் போர்ப்பயிற்சி செய் கிறார்கள்.

“இந்தப் பெரும் பொய்யைக் கேட்டு மலைத்த பலவர்மன், “அப்படியேதுமில்லையே. போர்ப்பயிற்சி, அணிவகுப்பு இவற்றைத்தான் நீங்களே நிறுத்திவிட்டீர் களே?” என்று கூறினான்.

“நான் நிறுத்தினால் யார் கேட்கிறார்கள்?”

“எல்லோரும்தான் கேட்டஒறார்கள்.

“அப்படியானால் நேற்றிரவு பூராவும் டமார சத்தம் அடிக்கடி கேட்டதே?”

“காட்டுப் பகுதியிலிருந்து கேட்டி ருக்கும்.

“காட்டுப் பகுதயில் டமாரமடிக்க யாரிருக் கிறார்கள்?” இந்தக் கேள்வியைக் கேட்டதும் மேலும் அசந்து போனான் பலவர்மன்.

தினம் மிதமீறிக் குடிப்பதால் உண்மையாகவே இளையபல்லவன் ஏதுமறியாமல் இருக் கறானா, அல்லது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறானா என்பதை அறியாத பலவர்மன், “காட்டுப்பகுதியில் பூர்வகுடிகள் நடமாட்டம் அதிக மிருப்பது தெரியாதா உங்களுக்கு?” என்று வினவினான்.

“எனக்கெப்படித் தெரியும்?” சர்வ சாதாரணமாகக் கேட்டான் இளையபல்லவன்.

“நகரப் பாதுகாப்பின் பொறுப்பை ஏற்றுள்ள படைத் தலைவர் நீர்.

உமக்குத் தெரியாமல் வேறு யாருக்குத் தெரியும்?”

“காட்டுப் பகுதியானால் அமீருக்குத்தான் தெரியும்.

கடற்பகுதியானால் கண்டியத்தேவரைக் கேட்க வேண்டும்.

“இரண்டிலும் உமக்குச் சம்பந்தமில்லையா?”

“இல்லை.

“ஏன் “என் உபதலைவர்களை நான் நம்புகிறேன்.

“மேற்பார்வை உமது பொறுப்பல்லவா?”

“என் உபதலைவர்களுக்கு மேற்பார்வை அவசிய மில்லை.

“அப்படியானால் அடிக்கடி கண்ட உத்தரவுகளை ஏன் பிறப்பிக்கிறீர்கள்?”

“அவசியமென்று தோன்றினால் பிறப்பிப்பேன்.

“காவலைக் காட்டுப் பகுதியில் குறைப்பது அவசியம்!”

“குறைத்தது யார்?”

“நீங்கள்தான்.

“வேண்டுமானால் மீண்டும் பலப்படுத்திவிடு கிறேன்.” என்ற இளையபல்லவன் திடீரெனப் பலவர்மன் போக்கில் ஏற்பட்ட மாறுதலைக் கண்டு உள்ளூர மகழ்ச்சி யடைந்தான்.

“வேண்டாம், வேண்டாம்.

காவலைப் பலப்படுத்த வேண்டாம்.

“உங்கள் கருத்தை அறிந்துதான் காவலைக் குறைத் தேன். அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவரின் இதய மறிந்து நடக்கும் அத்தனை புத்தகூட அவருடைய உபதளபதிக்கு இருக்காதென்று நினைத்தீர்களா?” என்று கேட்ட இளையபல்லவன், அந்த உபதளபதி தான்தான் என்பதைச் சுட்டிக்காட்டத் தன் மார்பில் கையால் தட்டிக் கொள்ளவும் செய்தான்.

பலவர்மனின் பிரமிப்பு உச்சிக்குப் போய்க் கொண் டிருந்தது. தன் இதயமறிந்து உத்தரவுகளைப் பிறப்பிப்ப தாகச் சொன்ன இளையபல்லவன் மதியிழந்து உளறு கறானா அல்லது தன்னைப்பார்த்து நகைக்கிறானா என்பது விளங்கவில்லை அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவனுக்கு. அந்தச் சமயத்தில் இளையபல்லவன் புத்தி பெரும் நிதானத்திலிருந்ததைப் புரிந்துகொண்ட பல வர்மன், அன்று பகல் பூராவும் இளையபல்லவனை அதே தெளிந்த புத்தியுடன் உலாவவிடுவது அபாயமென்ற முடிவுக்கு வந்து “நேற்றிரவு பூராவும் உறக்கமில்லையென்றீர் களே, ஏன்?” என்று பேச்சை மாற்றினான்.

“நேற்றிரவு சரியான மது கிடைக்கவில்லை”, என்று காரணம் கூறினான் இளையபல்லவன்.

“அப்படியா?” ஆம்.

“எனக்குச் சொல்லியனுப்பியிருந்தால் நான் அனுப்பி யிருப்பேனே?”

“இப்பொழுதுதான் அனுப்புங்களேன். பகலிலாவது சிறிது உறங்குகிறேன். கண்ணெரிச்சலும் தலைவலியும் அதிகமாயிருக்கிறது” என்றான் இளையபல்லவன்.

அவசியம் அனுப்புவதாகச் சொல்லிப்போன பல வர்மன் சிறந்த மது வகையறாக்களை அடுத்த சில நிமிஷங்களுக்குள் அனுப்பி வைத்தான். அந்த மதுவில் பெரும்பாகத்தை அருந்திவிட்டுப் பஞ்சணையில் படுத்த இளையபல்லவன் ௨ச்சிவேளை கட்டிய பொழுதுகூட எழுந்திருக்கவேயில்லை. இளையபல்லவனையும் இளைய பல்லவன் அறைக்கு வந்து போவோர்களையும் கண் காணிக்கப் பலவர்மன் நியமித்திருந்த ஒற்றர்கள் மிகவும் மகிழ்ச்சி தரும் செய்திகளையே அவனுக்குக் கொண்டு சென்றனர். உச்சி வேளை வரையில் உறங்கிய இளைய பல்லவனை எழுப்ப முயன்ற அமீரும் கண்டியத்தேவனும் எப்படி நடத்தப்பட்டார்களென்பதைக் கேள்விப்பட்ட பலவர்மன் பெரும் பூரிப்படைந்தான். அந்தச் செய்தியைக் கொண்டு வந்த ஒற்றனை ஒரு முறைக்கு இருமுறையாக அதைப் பற்றி விசாரிக்கவும் செய்தான்.

“உண்மையாக அப்படியா நடத்தினான் இளைய பல்லவன் அமீரையும் கண்டியத்தேவனையும்?” என்று விசாரித்தான் பலவர்மன்.

வணங்கி நின்ற ஒற்றன் சொன்னான், “ஆம் பிரபு! அப்படித்தான் நடத்தினார் படைத்தலைவர்” என்று.

“அமீரைக்கூடவா?’” என்று வியப்புக் குரலிலும் மண்ட விசாரித்தான் பலவர்மன்.

“அமீர்தான் முதலில் வந்தார்.

அவர்தான் மிகவும் கேவலப்படுத்தப்பட்டார்” என்றான் ஒற்றன்.

“எப்பொழுது வந்தான் அமீர்?”

“உச்சி வேளைக்குச் சற்று முன்பு.

“வந்து என்ன கேட்டான்?”

“அது தெரியாது.

உள்ளே சென்றார்.

ஒரு விநாடிக் கெல்லாம் போ வெளியே” என்ற இளையபல்லவன் வெறிக் கூச்சல் கேட்டது. அமீரைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளிக் கொண்டு அறைக்கு வெளியே வந்தார் இளையபல்லவர்.

“பிறகு?”

“காட்டுப் பகுதியில் பூர்வகுடிகள் நெருங்குகிறார்கள் என்று ஆத்திரத்துடன் கூவினார் அமீர்.

உம்.

“நெருங்கினால் நெருங்கட்டும், போய்விடு.

நெருங்கினால் இந்த ஊர் போகும். இந்த ஊர் உன் பாட்டன் வீட்டுச் சொத்தா என்று இளையபல்லவர் கூவிவிட்டு உள்ளே சென்று பஞ்சணையில் விழுந்தார்.

“பிறகு?”

“அமீர் இளையபல்லவரைச் சபித்துக்கொண்டே சென்றார்.

“என்ன சபித்தார்?”

“எப்படியாவது ஒழியட்டும்.

நான் போகிறேன் - நாளையே இந்த நகரத்தைவிட்டு என்று இரைந்துவிட்டுச் சென்றார்.

“பலவர்மன் ஆனந்தத்தின் வசப்பட்டான். “கண்டி௰யத் தேவன் அடுத்தபடி வந்தானா?” என்று விசாரித்தான் அந்த ஆனந்தம் குரலிலும் பரிமளிக்க.

“ஆம் வந்தார். அவருக்கும் கிட்டத்தட்ட அதே கதிதான்” என்றான் ஒற்றன், “கிட்டத்தட்ட என்றால்?”

“இவரைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளவில்லை. அவராகவே ஓடிவிட்டார்.

ஒற்றனின் இந்தப் பதிலால் ஏற்பட்ட ஆனந்தத்தின் உஎடே ஆழ்ந்த சிந்தனையிலும் இறங்கினான் பலவர்மன். தனக்கு அனுகூலமாகவே சகல காரியங்களும் நடந்து வருவது அவனுக்குப் பெரும் ஆனந்தத்தை அளித்தாலும் எதற்கும் தான் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வந்தான். அன்று பகல் பூராவும் இளையபல்லவனை மட்டுமின்றி அமீரையும் கண்டியத் தேவனையும்கூடக் கண்காணிக்க வேண்டிய அவசியத்தை யும் உணர்ந்தான் பலவர்மன். அவர்கள்மீதும் தனது ஒற்றர்களை ஏவினான். அன்று பகல் பூராவும் ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தி அவன் ஆறுதலை அதிகரிக்கவே செய்தது. காட்டுப் பகுதியில் அன்று மாலை வரையில் அமீர் காவலை அதிகப்படுத்தவில்லையென்பதை அறிந் தான் பலவரிமன். அத்துடன் கடற்புறாவின் நிலையிலும் எந்த மாறுதலும் இல்லையென்பதையும் ஒற்றர் மூலமும் தானே நேரில் சென்றும் கண்டறிந்ததால் ஓரளவு நிம்மதி யையும் அடைந்தான்.

இளையபல்லவனும் அன்றையப் பொழுதை மன நிம்மதியுடன் கழித்தான். உச்சிவேளை தாண்டி நீண்ட நேரம் கழித்து எழுந்திருந்த இளையபல்லவன் கீழே நீராடுமிடம் சென்று ஊழியர்களைக் கொண்டு நன்றாக மங்களஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தான். தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு, மீண்டும் தன் அறை சென்று நிதானமாய் அறுசுவை உண்டியருந்தினான். பிறகு மறுபடியும் லேசாக மதுவருந்திவிட்டுப் படுத்து உறங்கி னான். இதையெல்லாம் ஒற்றர் மூலம் அறிந்த பலவர்மன், “நல்ல சுகவாசி இவன். இப்பேர்ப்பட்டவன் எப்படிப் படைத்தலைவனானான்? அதுவும் சோழ நாட்டுப் படைத்தலைவர்களில் சிறந்தவன் என்று எப்படிப் பெயர் வாங்கினான்? சுகசாலிக்கும் உழைப்புக்கும் சம்பந்தம் சிறிதும் இருக்க முடியாதே’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, ‘எப்படியிருந்தாலென்ன? இன்று பகல் மட்டும்தானே இவனுக்கு ஆயுள் இருக்கிறது’, என்று நினைத்துச் சந்துஷ்டியடைந்தான். அன்று மாலை வரையில் இளையபல்லவன் அறையைவிட்டு அகல வில்லை யென்பதையும் அவனை உச்சிவேளைக்குப் பிறகு யாரும் சந்திக்கவில்லையென்பதையும் உணர்ந்த பல வர்மன் அன்றிரவு தான் தீட்டியிருந்த பயங்கரத் திட்டத்தை நிறைவேற்றும் வேலையில் முனைந்தான். தன்னிடம் புது மது வகையறாக்கள் வந்திருப்பதாகவும், தனது அறையி லேயே உணவருந்த வேண்டுமென்றும் இளைய பல்லவ னுக்கு அன்று மாலையில் அழைப்பு விடுத்தான் பல வர்மன். அந்த அழைப்பைத் தங்கு தடையில்லாமல் இளையபல்லவன் ஏற்றுவிட்டான் என்பதை வந்து சொன்ன ஒற்றனுக்கு வெகுமதியாக ஒரு பணமுடிப்பும் அளித்தான்.

அமாவாசை இரவு மெள்ள மெள்ள நுழையத் தொடங்கியது. மாலைப் பொழுதையும் இரவு நெருங்கு வதையும் போஜ மன்னன் சபையில் வர்ணித்த காளிதாசன், ‘சநைசநை அனங்க! (இரவு மெள்ள மெள்ள அணுகியது. பருவப்பெண்களை மன்மதனும் மெள்ள மெள்ள அணுகினான் ) என்று வர்ணித்தான். அக்ஷ்யமுனைக் கோட்டை யின் அந்த அமாவாசை இரவில் நகருக்குள் புகுந்தது சிங்கார ரசமல்ல, அணுகியவன் அனங்கனான மன்மதனு மல்ல. கொடிய போர்ப் பிசாசு புகுந்தது அந்த நகருக் குள்ளே. அது புகப்போவதற்குப் பூர்வாங்க முரசொலிகள் காட்டுக்குள் வெகு அருகில் சப்தித்தன. அந்தச் சத்தத்தைப் பற்றி அறவே கவலைப்படாமல் பலவர்மனின் அந்தரங்க அறையை நாடிச் சென்றான் இளையபல்லவன்.

பலவர்மன் அறையில் ஒரு பெரும் அரசனுக்கு வேண்டிய விருந்து இளையபல்லவன் கண்ணெதிரே காட்சியளித்தது. அந்த அறுசுவை உண்டிக்கு அருகே காணப்பட்ட விதவிதமான மதுக்குப்பிகளும் கலயங்களும் பொற்கிண்ணங்களும் அங்கிருந்த மங்கலான விளக் கொளியில் பலப்பல வர்ண ஜாலங்களைக் களப்பிக் கொண் டிருந்தன. அறை மூலையிலும் உணவு மஞ்சத்துக்கு இருபுறங்களிலுமிருந்த தீபங்களின் சுடர்கள் வேண்டு மென்றே இழுத்து விடப்பட்டன போல மிகவும் எழிலுடன் எரிந்து அந்த அறைக்குப் பெரும் சோபையைக் கொடுத்தன. அறையில் நுழைந்த இளையபல்லவன் அந்த ஏற்பாடு களைக் கண்டு சிறிது வியப்பைக் காட்டினான். அவனை மூக மலர்ச்சியுடன் வரவேற்ற பலவர்மன், “வரவேண்டும் வரவேண்டும். நாம் இருவரும் சேர்ந்து உணவருந்தி நாளாகிறது.” என்றான்.

“நான் வந்தது உணவருந்த அல்ல.” என்ற இளைய பல்லவன் பதில் சட்டென்று அதிர்ச்சியைத் தந்தது பலவர்மனுக்கு. அந்தக் குரலிலிருந்த விபரீத ஓலி அவனுக்குத் திகிலை அளித்தது.

“வேறெதற்கு வந்தீர்கள்?” என்று கேட்டான் அவன்.

“மது அருந்த!” வெறியுடன் கூறினான் இளைய பல்லவன்.

பலவர்மன் முகத்தில் சாந்தியின் சாயை படர்ந்தது. “மது இல்லாமல் உங்களை அழைப்பேனா? சிறிது உணவு அருந்திவிட்டுப் பிறகு மது அருந்தலாம்.” என்று உபசரித்த வண்ணம் இளையபல்லவனைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்று ஆசனத்தில் அமர்த்தித் தானும் அமர்ந்தான். அங்கு உணவு பரிமாற வந்த ஊழியனை வெளியே போகச் சொன்ன பலவர்மன் தன் கைகளா லேயே இளையபல்லவனுக்கு உணவும் மதுவையும் கொடுத்தான். உணவைச் சிறிதே உண்ட இளையபல்லவன் மதுவை மெள்ள மெள்ள உறிஞ்சத் தொடங்கியதன்றி உறிஞ்ச உறிஞ்ச அதிலேயே அதிக அவலையும் காட்டினான். “இத்தனை சிறந்த மது இருப்பதை ஏன் முன்னமே சொல்லி அனுப்பவில்லை? நான் என் அறையில் குடிக்காமல் வந்திருப்பேன். கொஞ்சம் அருந்தியதும் மயக்கம் வரு கிறதே” என்று கூறி அடுத்து இரண்டு கண்ணங்களைக் காலி செய்ததும் தலை துவண்டு மஞ்சத்தில் சாய்ந்தான்.

அடுத்த விநாடி பலவர்மன் சரசரவென்று எழுந்து இளையபல்லவனை இரண்டு மூன்று முறை அசைத்துப் பார்த்தான். இளையபல்லவன் அசையவுமில்லை, கண் களைத் திறக்கவுமில்லை. பலவர்மன் மெள்ள தன் அங்கியிலிருந்து சிறு சிமிழ் ஒன்றை எடுத்து அதிலிருந்த மஞ்சள் நிறப் பொடியை எதிரே இருந்த கண்ணத்தின் மதுவில் கலக்கினான். பிறகு மெள்ள இளையபல்லவன் கண்களைச் சிறிது நீர் கொண்டு துடைத்தான். “இளைய பல்லவரே! இதையும் அருந்துங்கள் இந்தாருங்கள்” என்று அந்தக் கோப்பையை இளையபல்லவன் கையில் கொடுத் தான். இளையபல்லவன் மெள்ளக் கண்ணைத் திறந்து மிரள மிரள விழித்தான். பிறகு மதுக் கண்ணத்தை எடுத்துக் கொண்டு தள்ளாடித் தள்ளாடி நடந்து அறைக்கதவை நோக்கி நடந்தான். அறைக் கதவை நோக்கி, பலவர்மனுக்கு முதுகைக் காட்டிய வண்ணம் விஷம் நிரம்பிய அந்த மதுக்கண்ணத்தை வாயருகே கொண்டு சென்றான். அறையைத் தாழிட முயன்றான். அடுத்த விநாடி மதுவற்ற மதுக்கண்ணம் மேலே பறந்தது. கூரையில் ‘கிளாங்’ என்று தட்டி ஒலியெழுப்பி அறை மூலையில் விழுந்தது. இளையபல்லவன் உடல் அந்தத் தாழிட்ட கதவின் மீது சாய்ந்தது, துவண்டது, தொப்பென்று கீழே சுருண்டு விழுந்தது. பலவர்மன் அறை மூலைக்கு ஓடிக் கண்ணத்தை எடுத்துப் பார்த்தான். அதிலிருந்த மதுவில் ஒரு துளிகூட மீதியில்லை. அந்த மூலையிலிருந்த அறைக் கதவை நோக்கினான். அதன் கீழே கிடந்தது இளைய பல்லவன் சடலம் - ஆடாமல் அசையாமல். முகத்தில் வெற்றிக்குறி உலாவக் கதவிடம் சென்று இளையபல்லவன் உடலை இருமூறை காலால் உதைத்துப் பார்த்தான் பலவர்மன். அங்கங்கள் உயிரின்றிச் செயலிழந்து கடந்தன. அங்கிருந்து அறை நடுவே வந்த பலவர்மன் மதுக்கண்ணமொன்றைக் கையிலெடுத்துக் கொண்டு, “ஒழிந்தான் என் விரோதி! இந்த இரவு மூதல் அக்ஷயமுனைக்குப் புதுவாழ்வு துவங்குகிறது, என்று இரைந்து கூவி வாயில் கண்ணத்தை வைத்து மதுவை உறிஞ்சினான். அதேசமயத்தில் வெளியே காட்டுப். பகுதியில் பூர்வகுடிகளின் பலத்த கூச்சல் எழுந்தது. சில விநாடிகள் மதுக்கண்ணத்துடன் ஆசனத்தில் அமர்ந்த பலவர்மன் வெளியே கேட்ட கூச்சலைக் கேட்டு மிகுந்த திருப்தியுடன், “பூர்வகுடிகள் நெருங்கி விட்டார்கள். சண்டையை, இல்லை இல்லை, இந்த நகர மக்களின் அழிவை நான் மாடிக்குச் சென்று பார்க்கிறேன்” என்று இரைந்து கூறிக்கொண்டு ஆசனத்தை விட்டு எழுந்திருக்க மூயன்ற பலவர்மன் அடுத்த விநாடி பேரதிர்ச்சியுற்றான். “ஆசனத்தை விட்டு அகலாதே” என்ற இளையபல்லவன் குரல் அந்த அறையைப் பயங்கரமாக ஊடுருவிச் சென்றது. கதவிருந்த இடத்தை நடுக்கத்துடன் நோக்கினான் பலவர்மன். நீண்ட கத்தியை உருவிப் பிடித்த வண்ணம் கதவில் சாய்ந்துகொண்டு அலட்சியப் புன்முறுவலுடன் நின்றான் இளையபல்லவன். “உண்மையையே கூறினாய் பலவர்மா! இன்றுமுதல் அக்ஷயமுனைக்குப் புதுவாழ்வு தான்” என்ற சொற்களும் இளையபல்லவன் வாயிலிருந்து இகழ்ச்சியுடன் உதிர்ந்தன.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 47

சுயநலச் சதுரங்கம்

இமை நொடிக்கு முன்பாக இடது கையால் அறைக் கதவைத் தாழிட்டு, வலது கையால் வாளை உருவிப் பிடித்த வண்ணம் கதவின்மீது வெகு அலட்சியமாகச் சாய்ந்து நின்று இளநகை கோட்டிய இளையபல்லவனைக் கண்ட தும் இடிந்துபோய் ஏதும் பேசமாட்டாமல் பல விநாடிகள் உட்கார்ந்துவிட்ட பலவர்மன், உணர்ச்சிகளின் பெருக்கால் தன் நிதானத்தையெல்லாம் அடியோடு காற்றில் பறக்க விட்டு, “அயோக்கியன்! அயோக்கியன்! நீ பரம அயோக் கயன்!” என்று அந்த அறையே அதிரும் படியாக இரைந்து கூவினான்.

எந்த நிலையிலும் நிதானத்தைக் கைவிடாத பல, வர்மன் நிலைகுலைந்து அப்படி இரைந்து கூவியதைக் கண்டு இளநகையை உதடுகளில் விரிவடையச் செய்து கொண்ட இளையபல்லவன், “கோட்டைத் தலைவர் கோபத்துக்குக் காரணமிருக்கிறது. இருப்பினும் மன்னிக்க வேண்டும்” என்று அந்த இளநகையைத் தொடர்ந்து சொற்களையும் உதிர விட்டான்.

அக்ஷ்யமுனைக் கோட்டைத் தலைவன் மட்டும் சுய நிலையில் இருந்திருந்தால் படைத்தலைவனின் பதிலில் ஊடுருவிச் சென்ற ஏளன ஒலியைக் கவனித்திருப்பான். ஆனால் அந்தச் சமயத்தில் அவன் இருந்த அவல நிலையில் எதையும் கவனிக்கும் சக்தியை இழந்துவிட்டதால், “மன்னிப்பதாவது! உன்னைக் கொலை செய்ய வேண்டும்,” என்று மீண்டும் கூவினான் பலவர்மன்.

“தங்கள் நினைப்பு சிறந்ததுதான். ஆனால் அதை நிறைவேற்ற அடியவனால் முடியவில்லை. இன்னும் கொஞ்சநாள் உயிரை வைத்திருக்க உத்தேசிக்கிறேன்” என்ற இளையபல்லவன் சற்று இரைந்தே நகைத்தான்.

அந்தச் சிரிப்பு பலவர்மனுக்கு ஒரளவு நிதானத்தை அளித்தது. கொந்தளித்தெழுந்த உணர்ச்சிகளை வெகு சீக்கிரம் அடக்கிக்கொண்ட பலவர்மனும் மெளனப் புன்முறுவலொன்றை உதடுகளில் தவழவிட்டுக்கொண்டே சொன்னான், “சோழ நாட்டுப் படைத்தலைவரே, நமது உத்தேசப்படி காரியம் நடப்பதில்லை. உயிரை வைத்திருக்க நீர் உத்தேசிக்கிறீர். ஆனால் வாழ்வில் உத்தேசம் வேறு, விளைவது வேறு.” என்று.

“உண்மை.” என்று சர்வ சாதாரணமாக ஒப்புக் கொண்டான் இளையபல்லவன்.

எது உண்மை?” என்று சற்றே சந்தேகத்துடன் கேள்வியை வீசினான் பலவர்மன்.

“உத்தேசம் வேறு, விளைவது வேறு என்பது.

“அதை உணர்ந்து கொள்வதுதான் விவேகம்.

“அந்த விவேகம் தங்களுக்கும் இத்தனை நேரம் உண்டாயிருக்க வேண்டும்.” இந்தப் பதிலைச் சொல்லி இளையபல்லவன் பலவர்மனை ஏளனத்துடன் நோக்கினான்.

“எனக்கா! விவேகமா?” என்று கேட்டான் பலவர்மன் ஆச்சரியம் குரலில் பூரணமாகத் தொனிக்க. அந்த ஆச்சரியத்தின் ஊடே சற்றுப் பயமும் ஊடுருவி நின்றது.

“நீங்கள் ஆச்சரியப்படுவதில் காரணமிருக்கிறது. உங்களுக்கும் விவேகத்துக்கும் அதிக சம்பந்தமிருப்பதாகத் தெரியவில்லை.” என்று சர்வசாதாரணமாகக் கூறினான் இளையபல்லவன்.

இதைக் கேட்டும் பலவர்மன் கோபத்தையோ, வேறு எந்தவித உணர்ச்சிகளையோ காட்டாமலே கேட்டான். “எனக்கு விவேகமில்லையென்பதை எப்பொழுது கண்டு பிடித்தீர் படைத்தலைவரே?”

“கண்டுபிடித்துப் பல நாள்களாயின. ‘“ என்றான் இளையபல்லவன்.

பலவர்மனின் உதடுகளில் இகழ்ச்சிப் புன்முறுவல் படர்ந்தது. “பல நாள்களாக எதையும் கண்டுபிடிக்கும் நிலையில் படைத்தலைவர் இல்லையே.” என்று விஷமத் துடன் கூறவும் செய்தான் அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவன்.

இளையபல்லவன் மெல்லச் சிரித்துவிட்டுச் சொன் னான், “இங்கு விவேகக் குறைவு இருக்கிறது.” என்று.

இந்தப் பதில் பலவர்மன் நிதானத்தை உடைக்கவே அவன் அதுவரை கடைப்பிடித்த நிதானத்தைக் கைவிட்டு இளையபல்லவனைச் சொந்தப் பெயர் கொண்டு அழைத்து “கருணாகரா! குடிகாரன் விவேகத்தைப் பற்றி விளக்கம் கூறுவது விசித்தரமாக இல்லை உனக்கு?” என்றான்.

இளையபல்லவன் இதழ்களில் இருந்த இளநகை சரேலென மறைந்து அவன் முகத்தில் சாந்தமும் உறுதியும் நிலவின. அவன் பேசியபோது குரல் நிதானத்துடனும் கடுமையுடனும் ஒலித்தது. “பலவர்மா! எவன் குடிகாரன் எவன் குடிகாரனில்லை என்பதை உணரும் விவேகம் மட்டும் உனக்கிருந்திருந்தால் நீ தற்சமயம் -இருக்கும் நிலையில் இருந்திருக்கமாட்டாய்.” என்று இளைய பல்லவன் வாயிலிருந்து உதிர்ந்த சொற்களைக் கேட்டதும், மெள்ள உண்மை உதயமாகவே ஆசனத்திலிருந்து எழுந் திருக்க முயன்றான் பலவர்மன். “அப்படியே உட்கார்! இருக்குமிடத்தைவிட்டு அசைந்தால் இந்தக் கணத்தில் நீ பிணமாகிவிடுவாய். உன்னை இந்த அறையில் சந்தித்த முதல்நாள் குறுவாள் வீசி உன் கழுத்து அங்கியை உன் ஆசனத்துடன் வைத்துவிட்டேனே நினைப்பிருக்கிறதா பலவர்மா? அதே குறுவாள் இதோ இன்றும் என் இடைக் கச்சையிலிருக்கிறது. இன்று அதை வீசினால் குறி உன் கழுத்து அங்கியின் பக்கப் பகுதிக்கு இருக்காது. உன் கழுத்துக்கே இருக்கும்.” என்று எச்சரித்து இடைக் கச்சையைத் தட்டிக் காட்டிய இளையபல்லவன் மேலும் சொன்னான் “பலவர்மா, நீ அறிவாளி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அறிவு மட்டும் விவேகத்தை அளிப்ப தில்லை. தர்மம் இணையும்போதுதான் அறிவு சரியான துறையில் வளர்ச்சியடைகிறது. அறிவின் தெளிந்த ஒளி தான் விவேகம். அதர்மம், அநீதி இந்தச் செயல்களை உடையவன் அந்த ஒளியைப் பெறுவதில்லை. பெரும் வஞ்சகச் செயல்களை விவேகத்தின் விளைவு என்று சிலர் எடை போடுவார்கள். அந்தச் சிலரில் நீ ஒருவன். இந்த அறையில் உன்னை முதல் நாள் சந்தித்தபோதே நீ பெரிய வஞ்சகன் என்பதைப் புரிந்துகொண்டேன். ஆகவே உன்னை வஞ்சகத்தாலேயே வெற்றி கொள்ளத் தீர்மானித் தேன்...

“இந்தச் சமயத்தில் இளையபல்லவனை இடைமறித்து “கருணாகரா...” என்று ஏதோ சொல்ல முயன்ற பலவர் மனைக் கையால் சைகையாலே தடுத்த இளையபல்லவன், “பலவர்மா! சொல்வதை முழுவதும் கேட்டுக்கொள் பிறகு சந்தேகமிருந்தால் விளக்கம் தருகிறேன். இங்கு வருமுன்பே உன் பிரக்கியாதியை அறிந்துதான் வந்தேன். இங்கிருந்த கொள்ளையர் கூட்டத்தையும் பூர்வகுடிகளையும் பாதி அச்சுறுத்தியும், பாதி உறவாடியும் அவர்களை நிலத்திலும் நீரிலும் கொள்ளையடிக்கச் செய்து அதில் நீ பங்கு பெற்று வந்ததையும், உன் பெயரைக் கேட்டாலே இந்தப் பக்கம் பூராவும் நடுங்கி வந்ததையும் அறிந்தேன். நாட்டுப்பற்றின் பெயரால் நீ கலிங்கத்துடன் சேர்ந்துகொண்டு பிற நாட்டுக் கப்பல்களைக் கொள்ளையடித்ததையும் அறிந்தேன். வங்கக் கடலின் நடுவே, சோழ நாட்டுக்கும் கடாரத்துக்கும் இடையே மூக்கை நீட்டிக் கொண்டிருக்கும் சொர்ணத் தீவின் வடமுனையான. இந்த அக்ஷயமுனைத் தளம் உடைக்கப் படாவிட்டால், சோழநாட்டுக் கப்பல்கள் பயமின்றிக் கடாரம் செல்ல முடியாதென்பதைத் தீர்மா னித்தேன்...” என்று பேச்சை சற்றே நிறுத்தினான்.

“சொல் பதரே! கொள்ளைக்காரா!” என்று உணர்ச்சி களின் மிகுதியால் இரைந்து கத்தினான் பலவர்மன்.

இளையபல்லவன் அந்தக் கத்தலைச் சட்டை செய்யாமலே மேலும் சொன்னான் “பலவர்மா! அந்தத் தீர்மானத்தின் விளைவாகவே இங்கு வந்தேன். இந்த அக்ஷயமுனைத் தளத்தின் பலத்தை உடைக்கவும் இதை எனக்கு அனுகூலமான தளமாக்கிக் கொள்ளவும் முடிவு செய்தே இந்த இடத்துக்கு வந்து சேர்ந்தேன். வந்து உன்னை இந்த அறையில் முதல்நாள் சந்தித்ததும் முக்கியமான ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டேன். உனக்கு நாட்டுப் பற்றோ, மக்கள் பற்றோ எதுவும் கிடையாது. நீ பெரும் வஞ்சகன். முதல் தரமான சுயநலக்காரன்! பணப்பேய் பிடித்தவன் என்பதைச் சந்தேகமறத் தெரிந்து கொண்டேன். நீ கொலை செய்த கொள்ளைத் தலைவர் படங்களையும் பட்டயங்களையும் பார்த்தேன். நீ எத்தனை கொடியவன் என்பதையும் புரிந்துகொண்டேன். அது மட்டுமல்ல! ஸ்ரீவிஐயத்துின் உபதளபதியை மாள அடித்து அவர் சித்தரத்தையும் பட்டயத்தையும் நீ இங்கு பகிரங்கமாக மாட்டியிருப்பதிலிருந்து மற்றொரு உண்மையும் புரிந்தது எனக்கு. அந்த உண்மை என்ன தெரியுமா பலவர்மா?”

“என்ன என்ன?” பலவர்மன் கிலியுடன் கேட்டான்.

“பதீவிஜய மன்னனான ஜெயவர்மன் எதற்கோ உன்னிடம் அச்சப்படுகிறான் என்ற உண்மையைத்தான் குறிப்பிடுகிறேன்.

“எப்படித் தெரியும் உனக்கு?”

“உபதளபதியை நீ கொன்றும் உன்னை இந்தக் கோட்டைத் தலைவனாக வைத்திருப்பதிலிருந்தே தெரிந்து கொண்டேன்.

உபதளபதியைக் கொன்றவனை, அதுவும் கொன்றதைப் பறைசாற்றிக் கொண்டிருப்பவனை, கொலை காரனென்று பிரசித்தியடைந்திருப்பவனை, சொர்ண பூமியின் இந்த முக்கியமான துறைமுகத்தின் அதிபதியாக இந்தச் சாம்ராஜ்யாதிபதி ஏன் வைத்திருக்க வேண்டும்? ஏன் அத்தகைய மனிதனை விசாரணைக்குக் கொண்டு வரவில்லை? உறவினன் என்பதால் விசாரணைக்குக் கொண்டு வராவிட்டாலும் சாம்ராஜ்ய நன்மையை முன்னிட்டுப் பதவியிலிருந்தாவது ஏன் அகற்றவில்லை? இதையெல்லாம் பரிசீலித்துப் பார்த்தேன். முதலில் விடை கிடைக்கவில்லை. பிறகு கிடைத்தது...

“எப்படிக் கிடைத்தது?”

“நீ அளித்தாய் விடையை.

“நானா?” அச்சரியமும் பயமும் கலந்து ஒலித்தது பலவர்மன் குரலில்.

“ஆம்! நீதான் பலவர்மா?’” என்று திட்டமாகச் சொன்ன இளையபல்லவன் தன் விளக்கத்தை மேலும் தொடர்ந்து,. “மஞ்சளழகியை என்னை மயக்கும்படி குரண்டியதிலிருந்து விடை கிடைத்தது எனக்கு. சொந்தப் பெண் அல்லாவிட்டாலும் வளர்ப்புப் பெண்ணைக்கூட மனித இதயமூள்ள, பண்புள்ள, மானமூள்ள எவனும் பிறனுடன் உறவாட விடமாட்டான். ஆனால் நீ உறவாட விட்டாய். அதிலிருந்து உன்மீதிருந்த சந்தேகம் அதிகமாயிற்று எனக்கு. ஆகவே உன்னை அருகிலிருந்து கவனிக்கத் திட்டமிட்டேன். அருகிலிருந்து கவனிக்க வேண்டுமானால் உன்னிடமுள்ள சந்தேகத்தை நீக்க வேண்டும். நீ என்னை அதிகமாகச் சட்டை செய்யாத அளவுக்கு நான் மாற வேண்டும். அப்படி மாறினேன். அதற்காக் குடிகாரனா னேன். குடித்தது உண்மை பலவர்மா! ஆனால் மிதமிஞ்சிக் குடிக்கவில்லை. எனது நாட்டில் புலாலுக்குப் பிறகு நான் அருந்தும் அளவே மது அருந்தி வந்தேன். அதிகப்படி அருந்திவிட்டதாக நடித்தேன். மெள்ள மெள்ள என் வலையில் நீ விழுந்தாய். முதலில் மக்களுக்குப் போர்ப் பயிற்சி அளித்தேன். நீ பயந்தாய். பிறகு காவலைக் குறைத்தேன். நீ மகிழ்ந்தாய். ஆனால் நீ பூணமாக என்னை உணர முடியவில்லை. நான் எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையும், உனக்கு என் குடியில் பூரண நம்பிக்கையும் நிதானமிழந்த என் தன்மையால் பூரண அவிவேகமும் உண்டாக்குவதற்காகவே எடுக்கப்பட்டன. நீ அந்த நம்பிக்கையில் ஆழ்ந்தாய். நம்பிக்கையல்ல, படுகுழியில் ஆழ்ந்தாய் பலவர்மா! குடியில் நான் மதியிழந்து கடந்ததாக நீ நினைத்து, பூர்வகுடிகளுடன் தொடர்பு கொண்டு என்னை ஒழிக்கவும் அக்ஷ்யமுனையை ஒடுக்கப் பழைய ஸ்துதிக்குக் கொண்டு வரவும் திட்டமிட்டதெல்லாம் ஒவ்வோர் அணுவும் எனக்குத் தெரியும்” என்றான்.

“என்ன திட்டம்! என்ன தெரியும் உனக்கு?” என்று சீறினான் பலவர்மன். அவன் குரலில் சீற்றமிருந்தது. முகம் பேயறைந்து கிடந்தது.

இளையபல்லவனின் சொற்கள் தீப்பொறிகளென உதிர்ந்தன. “அந்தையின் அலறல் தெரியும்...” என்று மெள்ள இழுத்தான் படைத்தலைவன்.

பலவர்மன் மூச்சுப் பெரிதாக வந்தது. முகத்தில் பயத்தின் வியர்வைத் துளிகள் உண்டாயின. “ஆந்தையின்...அலறலா?...அதற்கென்ன...?” என்று குளறினான் பலவர்மன்,

அந்தக் குரலைக் கண்டதும் வெறுப்புமிகுந்த பார்வை யொன்றைப் பலவர்மன் மீது வீசினான் இளையபல்லவன். “வஞ்சகனாயிருப்பவன் கோழையாகத்தான் இருப்பா னென மனோதத்துவ சாத்திரம் சொல்வது எத்தனை உண்மை உன் விஷயத்தில்?” என்று வெறுத்து அலுத்துக் கொண்ட படைத்தலைவன், “இடும்பன் உன்னை வர வழைக்க ஊதிய கடற்சிப்பியை மாளிகைத் தோட்டத்தின் மரத்து நிழலிலேயே தவறவிட்டுச் சென்றான். அதை நான் எடுத்து மஞ்சளழகியிடம் கொடுத்தேன்” என்றான்.

பலவர்மன் புத்தியில் உண்மை மெள்ள மெள்ள உதயமாகத் தொடங்கியது. தன் மாளிகையிலிருந்து கொண்டே தன் ஒவ்வொரு நடவடிக்கையையும் இளைய பல்லவன் கவனித்திருப்பதை உணர்ந்த பலவர்மன், “அன்றிரவு நீ குடித்து மயங்கி உறங்கிவிட்டதாகவும் காவலரையும் உறங்கச் சொல்லிவிட்டதாகவும் கேள்விப் பட்டேனே.” என்றான் குரல் தழுதழுக்க,

“காவலரை உறங்கச் சொன்னேன், நானும் கண் மூடினேன் - உனது ஒற்றன் வந்து என்னை அசக்கிப் பார்த்துச் செல்லும் வரை. பிறகு நான் என்ன செய்கிருப் பேன்” என்று கேட்ட இளையபல்லவன் நகைத்தான்.

இளையபல்லவன் என்ன செய்திருப்பானென்பதைப் புரிந்துகொண்ட பலவர்மன் நடுங்கினான். இடும்பனும் நானும் பேசியதையெல்லாம் கேட்டிருக்கிறான் இளைய பல்லவன் என்பது தெளிவாகத் தெரிந்தது அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவனுக்கு. அப்படியிருந்தும் இடும்பன் மஞ்சளழகியைத் தூக்கிச் செல்வதற்கு எப்படி. அனுமதித் தான் இளையபல்லவன் என்பது புரியாததால் பிரமித்து விழித்தான் பலவர்மன். அவன் பிரமிப் பிலிருந்தே உள்ளத்தி லோடும் எண்ணங்களைப் புரிந்துகொண்ட இளைய பல்லவன் சொன்னான். “மஞ்சளழகியை அபகரித்துச் செல்ல நீ இடும்பனுக்கு உத்தரவிட்டதற்கு ஆதரவளித்தது நான்தான். அவன் தூக்கிச் சென்றால் செல்லும்படி மஞ்சளழகிக்குக் கூறியதும் நான்தான்!”

பலவர்மனின் பிரமிப்பு உச்சஸ்தாயியை அடைந்தது. “மஞ்சளழகிக்கு இது தெரியுமா முன்பே?” என்று வினவினான். “தெரியும். முதலில் அவள் நம்பவில்லை. பிறகு உன்னிடம் அவளை அனுப்பினேன்.

“எதற்கு?”

“உன் உண்மைச் சொரூபத்தை விளக்க.

“என்ன சொரூபத்தை விளக்கினாய்?”

“உனக்கு அவளிடம் எந்த அக்கறையுமில்லை யென்பதை விளக்கினேன். இந்த நாட்டின் அரசியல் சதுரங்கத்தில் நானும் அவளும் காய்கள் என்பதை அவள் ஒருநாள் கடற்கரையில் என்னிடம் சொன்னாள். அரசியல் சதுரங்கம் ஏதும் அக்ஷ்யமுனையில் இல்லை. ஓர் அயோக் கியனின் சுயநலச் சதுரங்கம் தானிருக்கிறது என்று விளக்கி னேன். அதை நேரில் உணர அவளையே அனுப்பினேன். நான் அவளிடம் முறை தவறி நடப்பதாகவும், என் அறைக்கு அவளை அழைப்பதாகவும் கூறச் செய்தேன். அவள் உன்னிடம் வந்தாள். நான் சொல்லச் சொன்னதைச் சொன்னாள். உன்னைப்பற்றி நான் கூறியதையெல்லாம் சரியென்று உணர்ந்து மீண்டும் என்னிடம் வந்தாள். அடுத்துச் செய்ய வேண்டியதையும் கூறினேன். அவள் இணங்கினாள்.

பலவர்மன் தலை சுழன்றது. இருப்பினும் ஒரு நம்பிக்கை மட்டும் இருந்தது அவனுக்கு. அந்தச் சமயத் திலும் காட்டுப்பகுதியில் கேட்டுக் கொண்டிருந்த பூர்வ குடிகளின் இரைச்சலும் டமார ஓலிகளும் அவனுக்குப் பெரும் நம்பிக்கையை ஊட்டின. எப்படியும் அக்ஷ்யமுனை பொழுது விடிவதற்குள் தன் வசமாகிவிடு மாகையால், இளையபல்லவனை ஒழித்துக் கட்டிவிடலாமென நினைத்தான். அடுத்த விநாடி இளையபல்லவன் பெரிதாக நகைத்தான்.

“எதற்காக நகைக்கிறாய்? ‘“ என்று இரைந்தான் பல்வர்மன்.

“உன் மனக்கோட்டையை நினைத்து நகைக்கிறேன் “ என்றான் இளையபல்லவன்.

“என்ன மனக்கோட்டையைச் சொல்கிறாய்?” என்று மீண்டும் சீறினான் பலவர்மன்.

“விடிவதற்குள் இந்தக் கோட்டை உன் வசமாகி விடுமென்ற மனக்கோட்டையைச் சொல்லுகிறேன் பலவர்மா!” என்றான் இளையபல்லவன்.

பலவர்மன் முகத்தில் ஈயாடவில்லை. இளைய பல்லவன் அவனருகில் சென்று, “நம்மிருவர் பேச்சில் நேரம் ஓடிவிட்டது பலவர்மா! மாடிக்கு வா! உண்மையைப் புரிந்துகொள்” என்று கூறி அவன் கையைப் பிடித்துச் சரசரவென்று இழுத்துக்கொண்டு கதவைத் திறந்து மாடிக்கு அவனை அழைத்துச் சென்றான். அவர்களிரு வரும் மாடியை அடைந்த சமயத்தில் காட்டுப் பகுதியை அடுத்திருந்த மதில் சுவரிலிருந்து பெரும் கொம்பு ஒன்று பலமாக அலறியது.

அதைக் கேட்டதும் தனது அறைக்குச் சென்று மின்னல் வேகத்தில் மற்றொரு கொம்புடன் ஓடிவந்த இளையபல்லவன் அந்தக் கொம்பை வாயில் வைத்துப் பலமாக ஊதினான். மதில் சவரிலிருந்து வந்த கொம்புச் சத்தமும் மாளிகை மாடியிலிருந்து கிளம்பிய கொம் பொலியும் மாறி மாறி மூன்று முறை அக்ஷயமுனை நகரத்தை ஊடுருவிச் சென்றதும் பிரமிக்கத்தக்க நிகழ்ச் சிகள் தொடர்ந்தது.

“நன்றாகப் பார் பலவர்மா! உன் சுயநலச் சதுரங் கத்தின் காய்கள் சிதறுவதைப் பார். மக்கள் பலத்தைப் பார். உன் கதியைப் பார்” என்ற இளையபல்லவன் குரல் தொலை தூரத்திலிருந்து ஒலிப்பதுபோல் கேட்டது பலவர்மனுக்கு. அதிர்ச்சியால் பலவர்மனின் தலையும் சுழன்றது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 48

தர்மம் நிரந்தரம்

மாளிகையின் மாடித்தளத்திலிருந்து சோழர் படைத் தலைவன் காட்டிய காட்சியைக் கண்டதால் பேரதிர்ச்சி யுற்று, தலைசுழன்று மயக்கமுற்ற பலவர்மன் மீண்டும் கண்விழித்தபோது தனது அந்தரங்க அறையின் மஞ்சத்தி லேயே தான் சாய்ந்து கிடப்பதை உணர்ந்து நாற்புறமும் பார்த்துப் பார்த்துச் சில விநாடிகள் மிரள மிரள விழித்தான். அந்தச் சமயத்திலும் இளையபல்லவன் வாளை உருவிப் பிடித்த வண்ணம் தாழிட்ட கதவுக்கருகில் நின்றி ரப்பதைக் கண்டதும் தான் கண்டது ஒருவேளை கனவோ அல்லது சித்தப் பிரமைதான் அத்தகைய காட்சிகளைத் தன் கண்களின் முன்பாக உலாவ விட்டதோ என்று எண்ணி ஏதும் விளங்காததால் விளக்கத்துக்கு இளைய பல்லவனையே எதிர்நோக்கினான். கதவுக்கருகில் நின்று கொண்டிருந்த இளையபல்லவனின் அங்கியின் மேல் பாகம் சொட்டச் சொட்ட நனைந்து குருதிபோல் சிவந்து கிடப்பதைக் கண்டதும் ஒரளவு சுரணை வரப்பெற்று இளைய பல்லவன் கையாண்ட தந்திரத்தையும் புரிந்து கொண்ட பலவர்மன் தான் எத்தனையோ எச்சரிக்கை யுடன் நடந்துகொண்ட போதிலும் தன்னை அந்தச் சோழநாட்டவன் ஏமாற்றிவிட்டதை எண்ணிப் பார்த்துப் பெரும் கோபத்தையும் அடைந்தான்.

பலவர்மன் கண்கள் பதிந்த இடத்தையும் அவன் முகத்தில் உண்டான குழப்பம், கோபம் முதலான குறிகளையும் கண்ட படைத்தலைவன் தனது முகத்தில் உணர்ச்சி எதையும் காட்டாமலே சொன்னான் “பலவர்மா! உனக்கு விவேகம் அதிகமில்லையென்று சொன்னேனே. அது உண்மையென்பதை இப்பொழு தேனும் புரிந்நதுகொண்டாயா?”

உணர்ச்சியற்ற வறண்ட குரலில் உதிர்த்த அந்தச் சொற்களைக் கேட்ட பலவர்மன் கோபத்தின் வசப்பட்டு, “புரிந்துகொள்வதற்கு என்ன இருக்கிறது!” என்று சீறி விழுந்தான். மூளை பெரிதும் குழம்பி நின்ற அந்த நிலையிலும்.

“விவேகமிருந்தால் விவேகத்தின் கண்கள் உனக்குப் பல விஷயங்களைப் புரிய வைத்திருக்கும் பலவர்மா/ உதாரணமாக நான் உன்னுடன் உணவருந்தும்போது உணவருந்த மட்டும் நான் வரவில்லையென்பதைப் புரிந்து கொண்டிருப்பாய்” என்றான் இளையபல்லவன்.

“எப்படி?” சீற்றத்துடன் எழுந்தது இந்த ஒற்றைச் சொல்லும் பலவர்மன் வாயிலிருந்து.

“உன்னுடன் உணவருந்த வந்தபோது இடைக் கச்சையில் வாளைக் கட்டியிருந்தேன். குறுவாளையும் செருகியிருந்தேன். உணவருந்த வருபவன் ஆயுதபாணியாக ஏன் வரவேண்டும் என்பதை நீ யோசித்திருக்க வேண்டும். அப்படித்தான் வந்தாலும் உணவருந்தும் சமயத்தில் வாளைக் கழற்றி அப்புறம் வைப்பது வீரர்கள் வழக்க மில்லையா? அப்படிக் கழற்றாததையாவது நீ கவனித்திருக் கலாம்! அதைத்தான் கவனிக்கவில்லை, நான் இருமுறை மது அருந்தியபின் பூர்ணமாக நிதானமிழந்து விட்டேனா என்பதை நிதானித்துச் சோதித்தும் பார்த்திருக்கலாம். அதைப் பார்க்காவிட்டாலும், விஷத்தை நீ கண்ணத்தில் கலந்த போதாவது என் முகத்தை விட்டு ஏன் கண்களை எடுத்திருக்கக் கூடாது. கொஞ்சம் இதையெல்லாம் புரிந்து கொண்டு ஒரு விநாடிக்கு முன் மது மயக்கத்திலிருப்பவன் விஷக்கிண்ணத்தைத் தூக்கிக்கொண்டு நடப்பதைப் பார்த்த பின்பு ஏதோ எதிர்பாராத விபரீதம் நடந்துவிட்டது என்பதையாவது உணர்ந்து கொண்டிருக்கலாம். எதையும் நீ உணரவில்லை. இந்த இரவு அக்ஷயமுனை, எப்படியும் உன் கைவசமாகிவிடும், உன் திட்டங்கள் தடையின்றி நிறை வேறிவிடும் என்ற மனக்கோட்டையில், மனக்கோட்டை! விளைவித்த மனப்பிராந்தியில் மனிதர்கள் நடவடிக்கையில் கவனிக்க வேண்டிய பல சிறு விஷயங்களை நீ கவனிக்க வில்லை. அதன் விளைவுதான் உன்னுடைய இந்த நிலை” என்றான் இளையபல்லவன்.

“மாடியில் நான் கண்டது...கண்டது...” என்று குழறினான் பலவர்மன் நடுங்கும் குரலில்.

“நீ கண்டது, உன் திட்டங்களின் குலைவு. நீ கண்டது சூழ்ச்சின் வீழ்ச்சி. அறத்தின் எழுச்சி. இடும்பனையும், வில்வலனையும் கொண்டு மக்களையும், என்னையும் பழிவாங்கி விடலாமென மிகுந்த ரகசியத்துடன் திட்ட மிட்டாய் பலவர்மா! அந்த இரகசியத்தை உடைக்க நானொருவன் இருக்கிறேன் என்பதை மட்டும் நீ எண்ணிப் பார்க்கவில்லை. இடும்பனையும் சூளூக்களையும் கடற் புறத்திலும், வில்வலனையும் பதக்குகளையும் காட்டுப் புறத்திலும் இன்றைய இரவில் இந்த அமாவாசை இரவில் தாக்க ஏற்பாடு செய்தாய். அந்தத் திட்டம் எனக்குத் தெரியாதென்று நினைத்தாய். அந்த அறிவீனத்திலேயே உன்னை இருத்த நான் தீர்மானித்தேன். ஆகவே கடற் புறாவின் அமைப்பை மாற்ற நான் ஏற்கெனவே செய்த தட்டத்தை எல்லோர் எதிரிலும் பறைசாற்றினேன். மாற்றியமைக்க ஒரு மாதம் ஆகட்டும் என்று கண்டியத் தேவனிடமும் சொன்னேன். அத்தனை விஷயங்களும் உன் காதுக்கு எட்டும் என்பது எனக்குத் தெரியும். அது மட்டுமா? நகரத்திலும் காவலைக் குறைத்தேன். அஜாக் கிரதையை மேலுக்குக் காட்டும்படி அமீருக்குக் கட்டளை யிட்டேன். நாங்கள் எச்சரிக்கை இழந்துவிட்டதாக நீ நினைத்தாய். ஏற்பாடுகளை மந்தப்படுத்திவிட்டதாக நீ மகிழ்ந்தாய். நினைக்கட்டும், மகிழட்டும் என்று அனுமதித் தேன். ஆனால் அமீருக்குப் பயங்கரமான உத்தரவுகளைத் தவிர ரகசியமான உத்தரவுகளும் இருந்தன. மக்களையும் வீரர்களையும் இரு கூறுகளாகப் பிரித்தோம். இருவிதமாக அவர்களைச் சண்டைக்குத் தயார் செய்தோம். திடீரெனப் போர் ஏற்பாடுகளை நிறுத்தியது அவர்களுக்கும் முதலில் பிரமையளித்தது. ஆனால் ரகசிய உத்தரவுகள் அனுப்பப்பட்டன. அது அனுப்பப்பட்ட முறை வாய் வாயிலாக உபதலைவர்களுக்கு மட்டும் அனுப்பினேன். ஒவ்வோர் உபதலைவனும் மேலுக்கு அலட்சியமாகவும் உள்ளுக்குள் எச்சரிக்கையுடனும் நடந்து கொண்டான். காட்டுப் பகுதியைப் பார்த்தாயா பலவர்மா? மறைக்கப்பட்ட விற்கள் திடீரெனக் கோட்டைத் தளத்திலிருந்து மந்திரத் தால் எழுப்பப்பட்டவை போல் எழுந்து ஆம்பு மழை பொழிந்ததைக் கவனித்தாயா?” என்று வினவினான் இளைய பல்லவன்.

பலவர்மன் மனமுடைந்து இளையபல்லவனை ஏறிட்டு நோக்கினான். “அந்த விற்கள்? யந்திர விற்கள்...“என்று ஏதோ கேட்டான்.

“ஆம் பலவர்மா. அவை யந்திர விற்கள்தான். அவற்றை எழுப்பவும் படுக்க வைக்கவும் கீழே மர உருளை வண்டிகள் இருந்தன. அவை சிதறிக் கிடப்பதைப் பார்த்த உன் ஒற்றர்கள் அவை பயனற்றவை என்று எண்ணினார்கள். அவைகளை இயக்கும் வீரர்கள் அங்கில்லாத தையும் கண்டதும் காவல் அடியோடு அற்றுவிட்டது என்று எண்ணினார்கள். ஆனால் கொம்பு ஒன்று பலமாக ஊதப்பட்டதும் காவலர் கோட்டை மதிலுக்கு விரைய அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. சண்டை துவங்க அமீர் கொம்பு ஊதியதும், நான் பதிலுக்கு இங்கிருந்து கொம்பு ஊதுவதாக எங்களுக்குள் ஏற்பாடு இருந்தது. முதல் கொம்பு வீரர்களை மதில்மேல் ஏற்றும், மக்களை ஊர்ப் பாதுகாப்புக்குத் துரிதப்படுத்தும். இரண்டாவது கொம்பு ஊதப்பட்டது போர் துவங்கத் தயாராகும் உத்தரவைக் குறித்தது. மூன்றாவது கொம்பு போர் துவங்கிவிட்டதைக் குறிப்பது. இதையெல்லாம் நீ பார்த்தாய், கேட்டாய் பலவர்மா! மதிலிலிருந்து எரியம்புகள் சீறிச் சென்றதைப் பார்த்தாயல்லவா? காடு எரிந்ததைக் கவனித்தாயல்லவா?”

“பார்த்தேன், கவனித்தேன்.

“சாதாரண ஆம்பு மழை காட்டுப் பகுதியின் மறைவி லிருந்து வெளிவந்த பூர்வகுடிகளைக் கொல்ல. தீயம்பு மழை அவர்களுக்கு மீண்டும் காடு புகலிடமளிக்காதிருக்கக் காட்டை முடிந்த வரையில் கொளுத்திவிட.

“இந்தப் பயங்கர ஏற்பாடுகளைக் கேட்ட பலவர்மன் திகைத்தான். காட்டுக்கும் மதில் சுவருக்கும் இடையிலிருந்த மரங்களை அமீர் வெட்டி அதை வெறும் பொட்டல் வெளியாக அடித்த காரணத்தைச் சந்தேகமறப் புரிந்து கொண்டான் பலவர்மன். அந்த இடைவெளி உண்மையில் பதக்குகளின் மயானவெளி என்பதைப் புரிந்துகொண்டு நடுங்கினான். அந்த நடுக்கத்தை அதிகப்படுத்தக் காட்டுப் பகுதியிலிருந்து பலர் வீறிட்டு அலறும் சத்தம் அந்த அறைக்குள்ளும் பயங்கரமாகப் புகுந்தது. “இடும்பனின் கப். பல்கள்...” என்று ஈனசுரத்தில் கேட்டான் பலவர்மன்.

“கொளுத்தப்பட்டதைக் கடற்பகுதியில் நீ காண வில்லையா?” என்று சர்வ சாதாரணமாக வினவினான் இளையபல்லவன்.

பலவர்மன் இடிந்து ஆசனத்தில் சாய்ந்தான். கண்டேன். ஆனால்...” என்று ஏதோ சொல்ல முற்பட்டான்.

“கடற்புறாதான் நீரில் மிதக்கவில்லையே, சூளூக் களின் கப்பல்களை யார் கொளுத்தியது என்றுதானே கேட்கிறாய் பலவா்மா?” என்று இடிந்து உட்கார்ந்து விட்ட பலவர்மனின் கேள்வியைத் தானே வெளியிட்ட கருணாகர பல்லவன், “கடற்புறாவின் சக்தியை உனக்குக் காட்டினேன் பலவர்மா! ஆனால் முழுதும் காட்டவில்லை. நின்ற நிலையிலேயே கப்பல்களுடன் போரிடும் சாதனங்கள் கடற்புறாவில் இருக்கின்றன. அபாயம் வரும்போது சாதுவும் துஷ்டனாகிறான் பலவர்மா. அது போல்தான் கடற்புறாவும். புறா சாதுவான பட்சி, ஆனால் அவசியம் நேரிடும் போது கழுகைவிடக் கொடிய முறையில் தாக்கும் வன்மை கடற்புறாவில் இருக்கிறது. நாளைக் காலையில் உனக்குக் காட்டுகிறேன்” என்று கூறினான்.

படைத் தலைவன் சொல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வாளென பலவர்மன் இதயத்தைத் துளைத்தது. அவன் கோபம் எல்லை கடந்தது. “காலை வரை ஏன் காத்திருக்க வேண்டும்?” என்று கேட்டான் பிரமை தட்டிய குரலில்.

“இன்றிரவு கடற்கரையில் யாரும் உலாவ முடியாது.

“ஏன்? ஏன்?”

“கடற்புறாவின் எரியம்புகள் கடற்கரைப் பகுதிகளில் யாரையும் அணுகவொட்டா.

“கொள்ளை மாதர்கள்...

“இரவின் ஆரம்பத்திலேயே நகருக்குள் அழைத்து வரப்பட்டார்கள்.

“எனக்குத் தெரியாதே.

“நீ முக்கிய அலுவலாக இருந்தாய் பலவர்மா. ஒற்றர் களைச் சந்திக்கக்கூட உனக்கு அவகாசமில்லை. அவகாச மிருந்தாலும் பயனில்லை.

“என்ன சொல்லுகிறாய்?”

“என்னைக் கொல்லும் முக்கிய பணியில் ஈடு பட்டிருந்ததால் மற்ற விஷயங்களை மறந்தாய். உன்னை இங்கு ஒற்றர் யாராவது சந்திக்க வந்தால் சிறை செய்து விடும்படி என் வீரர்களுக்கு உத்தரவிட்டிருந்தேன்.

“உன் வீரர்களா?”

“ஆம். என்னை இந்த அறைக்குள் வரவழைத்ததும் இந்த மாளிகையை என் வீரர்கள் வசப்படுத்திக் கொண்டார்கள். இப்பொழுது மாளிகை என் வசமிருக்கிறது.

“பலவர்மனின் திகைப்பு எல்லைமீறிப் போய்க் கொண்டிருந்தது. மஞ்சத்தில் சாய்ந்து மிரள மிரள விழித்தான். “அப்படியானால் நான் கண்டது, கண்டது...“என்று இழுத்த பலவர்மன் சொற்களை, “கனவல்ல”, என்று இடை புகுந்து வெட்டினான் இளையபல்லவன்.

அடுத்த சில நிமிடங்கள் அந்த அறையில் நிலவியது மெளனமா அல்லவா என்பதைக்கூட நிர்ணயிக்க முடிய வில்லை பலவர்மனால். அறையிவிருந்த இருவருக்கிடையே மெளனம் நிலவத்தான் செய்தது. ஆனால் காட்டுப் பகுதி யிலிருந்தும், கடற்பகுதியிலிருந்தும் களம். பிக் கொண்டிருந்த பயங்கரச் கூச்சல்கள் அந்த அறையிலும் போர் நிலை யையே புகுத்தியது. துறைமுகத்தில் எரிந்த சூளூக்களின் கப். ப்ல்கள் படீல் படீலென வெடிக்கும் சத்தம் அறைக்குள் காதைப் பிளந்தது. கப்பலிலிருந்து தப்பிக் கரையில் ஓடி வந்த சூளூ வீரர்கள் கடற்புறாவின் ஆம்புகளால் தாக்குண்டு அலறிய சத்தமும் பயங்கரத்தை விளைவித்தது. காட்டுப்பகுதி கடற்பகுதியைவிட மாளிகைக்கு அருகாமை யிலிருந்தபடி.

யால் அங்கிருந்து வந்த பயங்கரக் கூச்சல்களும் அறையைத் திமிலோகப்படுத்தியது. நகரத்துக்குள் மக்கள் இரைச்சலும் அலறலும் போர்க் கோஷங்களும் பலமாக எழுந்தன. அந்தக் கோஷங்கள் அறையிலும் எதிரொலி செய்தன..

அந்த ஒலிகள் காதில் விழவிழ நடுங்கிய பலவர்மன் மஞ்சத்தில் சாய்ந்த வண்ணம் பிரேதம்போல் நீண்ட நேரம் கிடந்தான். நேரம் போவதை உணரும் சக்தியைக்கூட அவன் அந்தச் சமயத்தில் இழந்திருந்தான். “பயங்கரம்! பயங்கரம்!” என்ற சொற்கள் அடிக்கடி அவன் வாயிலிருந்து எழுந்தன. அந்தச் சொற்களைக் கேட்ட இளையபல்லவன் முகத்தில் கடுமையான சாயை பூர்ணமாகப் படர்ந்தது. “இந்தச் சொற்களை உன்னிடம் அகப்பட்டுக் கொண்ட வர்கள் எத்தனை முறை சொல்லியிருப்பார்கள் பலவர்மா?’” என்று முகத்தின் கடுமை சொற்களிலும் உறையக் கேட்டான் படைத்தலைவன்.

பதிலுக்கு ஏதோ முனகினான் பலவர்மன். “அதர்மத் துக்கு ஆரம்ப வெற்றிதான் பலவர்மா. தர்மம் நிதானமாகத் தான் அலுவலைத் தொடங்குகிறது. ஆனால் அந்த நிதான அலுவல் நிரந்தர சாதனைகளைத் தருகிறது. இதை உலகம் புரிந்துகொள்வதில்லை. புரிந்தகொண்டால் எத்தனை நல்ல உலகமாக இருக்கும் இது! எத்தனை செழிப்பும் வளர்ச்சியும் சாந்தியும் இதில் நிலவும்? ஆனால், உலவுவது வஞ்சகம், பேராசை, பணத்தாசை...” என்று மேலும் ஏதோ சொல்லப்போன இளையபல்லவனை, “யார் பணம் கேட்டது?” என்று இடைமறித்து வினவினான் பலவர்மன்.

இளையபல்லவன் இதயம் ஒருமாத காலத்துக்கு முன்பு ஓடியதற்கு அறிகுறியாகக் கனவுச் சாயை கண்களில் படர்ந்தது. “பணம் நீ கேட்கவில்லை பலவர்மா! ஆனால் அந்த ஆசை உன் ரத்தத்தில் ஓடுகிறது. உன்னைக் ம ஷு கெடுத்ததே அந்த அசைதான். இதே அறையில் நான்கு பெரு முத்துகளை உன்னிடம் காட்டினேனே நினை விருக்கிறதா உனக்கு? அதைக் கண்டுதானே என்னை இங்கு தங்க நீ அனுமதித்தாய்? அது உன் ஆரம்பப் பிசகு பலவர்மா! அதுதான் உன் பலவீனத்தின் ஒரு சக்கரம். இன்னொரு சக்கரம் அதிகாரம். பணம், அதிகாரம் இந்த இரண்டு ஆசைகளின் மீது ஒடுவதுதான் அதர்மம். அவை இல்லையேல் உலகஒல் முக்கால்வாசி அதர்மம் இல்லை, முக்கால்வாசி ஏமாற்றமும் இல்லை. பட்டுகளையும், மூத்து வைர வைடூரிய மாலைகளையும் காட்டியிராவிட்டால் கொள்ளையரை நான் வசப்படுத்தியிருக்க முடியாது. என் பணப்பெட்டிகளை என் மரக்கலத்திலிருந்து உன் மாளிகைக்கு நான் கொண்டுவராவிட்டால் மக்களையும் வசீகரித்திருக்க முடியாது. இந்த அக்ஷ்யமுனை நகரத்தை நான் காத்திருக்க முடியாது. பணம் சில சமயங்களில் நல்லதும் செய்கிறது பார்த்தாயா பலவர்மா?” என்று கேட்டான் இளையபல்லவன்.

பலவர்மன் பதிலேதும் சொல்லாமலே நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தான். நேரம் குதிரை வேகத்தில் ஓடி, விடியும் நேரமும் வரத் துவங்கியது.

பலவர்மன் மனத்தில் ஏதோ ஒரு யோசனை உதய மாகியது. “கருணாகரா! நீ என்னை வென்றுவிட்டாய். ஆனால் இப்பொழுது சற்று விட்டுக்கொடு. உனக்கு இணை யிலாப் பரிசு தருகிறேன்” என்று பேச்சைத் துவக்கினான்.

“என்ன பரிசு பலவர்மா?” என்று கேட்டான் இளைய பல்லவன்.

“மஞ்சளழகி! அவளை இப்பொழுதும் உன் மனைவி யாக்க மூடியும் என்னால்?” என்று அசை காட்டிப் பேசினான் பலவர்மன்.

பதிலுக்கு இரைந்து நகைத்தான் இளையபல்லவன். ஏதும் புரியாத பலவர்மன் கேட்டான், “எதற்கு நகைக்கிறாய் கருணாகரா?” என்று.

“மஞ்சளழகி என்னிடம்தான் இருக்கிறாள்.” என்றான் இளையபல்லவன் நகைப்புக்கு இடையே.

“இல்லை, இல்லை. பொய்.” என்று கத்தினான் பலவர்மன்.

“உண்மை.

“இருப்பினும்...

“இருப்பினுமென்ன?”

பலவர்மன் கண்கள் விஷத்தைக் கக்கின. “அவளைப் பற்றிய மர்மம் ஒன்றிருக்கிறது. அதன்...” அதன் என்ற பலவர்மன் வாசகத்தை மூடிக்கவில்லை. இளையபல்லவ னிருந்த இடத்தை நோக்கிக் கொண்டேயிருந்தான். அவன் கண்களில் வெறி தாண்டவமாடியது. இல்லை, இல்லை. அது இல்லை. அதுவாக இருக்க முடியாது” என்று கூவிக்கொண்டே ஆசனத்தைவிட்டு எழுந்து புலிபோல் இளையபல்லவன் மீது பாய்ந்துவிட்டான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top