• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கடல் புறா - முதல் பாகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் - 31

வெற்றியின் வழி

பாலூர் சிறு வணிகர் வீதியிலிருந்த தன் விடுதியை அணுகியதும், அதுவரையிலிருந்த ஆபத்து நீங்கிவிட்டதென நினைத்து முக்காட்டை நீக்கிவிடலாமென முதலில் யோசனை சொன்ன அமீர், தன் விடுதிக்கு எதிரே அரசாங்க வீரர்களின் இரு புரவிகள் நிற்பதையும் அந்தப் புரவிகளில் வந்த இருவர் தன் வீட்டுக் கதவருகில் சென்ற தன்றி அவர்களில் ஒருவன் பெரும் சாவியொன்றைக் கதவின் துவாரத்தில் நுழைத்துப் பூட்டைத் திறக்க மூயன்ற தையும் சுண்டு சற்றே எச்சரிக்கை அடைந்து, “பொறுங்கள் அநபாயரே! புரவியை இந்தப் பக்கத்தில் நிழலுக்காக ஒதுக் குங்கள்” என்று கூறித் தானும் தன் புரவியை அநபாயன் புரவியுடன் சற்றுப் பக்கவாட்டில் நகரவிட்டான். புரவிகள் இரண்டும் நகர்ந்து தனது விடுதியின் பக்கத்து விடுதித் தாழ்வாரம், அடித்த நிழலில் ஒதுங்கியதும் தன் கூரிய விழிகளால் தன் வீட்டு முகப்பில் நடக்கும் காரியங்களை அமீர் கவணனிக்கலானான். கவனிக்கக் கவனிக்க அவன் முகத்தில் ஆச்சரியக்குறி படருவதை அந்த இருளில் முழுதும் கவனிக்க முடியாவிட்டாலும் அமீர் திடீரெனக் கிளப்பிய, “ஹும்” என்ற ஒலியால் அவன் புத்தியில் பேராச்சரியம் குடிகொண்டிருக்கிறதென்பதை ஊ௫த்துக் கொண்ட அநபாயன், “எதைக் கண்டு ஆச்சரியப்படுகிறாய் அமீர்?” என்று வினவினான்.

“அதோ அவர்களைக் கவனியுங்கள்” என்றான் அமீர் மேலும் ஆச்சரியம் ததும்பிய குரலில்.

அமீர் விடுதி முகப்பில் பெரும் தாழ்வாரம் இருந்த போதிலும் கிருஷ்ணபக்ஷத்தின் அந்த மூன்றாம் நாளிர, வில் பிற்பகுதிச் சந்திரன் நன்றாகக் காய்ந்துகொண் டிருந்ததால் தாழ்வாரத்தில் இருட்டைச் சற்று மந்தப் படுத்தியே இருந்ததன் விளைவாக அநபாயன், அமீர் விடுதிக் கதவுக்கெதிரே நடந்த நாடகத்தை நன்றாகப் பார்க்க முடிந்தது. அமீரின் இல்லக் கதவை நோக்கி மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து சென்ற இருவரும் தஙகளைப் போலவே முக்காடிட்டு இருந்ததையும் மிகுந்த எச்சரிக்கையுடன் அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டே அவர்கள் ‘கதவை நோக்கி நகர்ந்ததையும் அமீர் எச்சரிக்கை செய்யுமுன்பாகவே நோக்கிவிட்ட அநபாயனின் புலிக் கண்கள் அவர்களிலொருவன் பெரும் சாவியொன்றை எடுத்துப் பூட்டில் பொருத்தினதும் சிறிது ஆச்சரியப்பட்டே போனான். கதவோடு கதவாகப் பூட்டை இணைக்கும் வழக்கம் பாரதத்தில் கடையாதென்பதையும், நாதாங்கி போட்டுத் தனிப்பூட்டும் தாழும் இடும் வழக்கமே ‘உண்டென்பதையும் உணர்ந்திருந்த அநபாயன் அமீர் வீட்டுக் கதவிலேயே பூட்டு பொருத்தப்பட்டிருப்பதை அன்றுதான் கவனித்தானாகையால், சிறிது ஆச்சரியமே அடைந்தான். அப்படிப் பூட்டியிருந்தாலும் அந்தப் பூட்டைத் திறக்க அவர்களுக்குச் சாவி ஏது என்பதும் அவனுக்கு விளங்காததால் அமீரின் பக்கம் திரும்பி, “அமீர், உன் விடுதியில் சில நாட்களாகவே வி௫த்திரங்கள் பல நடக்கின்றன என்றான்.

இதைக் கேட்ட அமீரும் அநபாயன் பக்கம் இரும்பி, ஆம் அநபாயரே! இதோ வந்திருக்கும் மனிதர்களும் விசித்தரமானவர்கள்” என்றான்.

“என்ன விசித்திரமாயிருக்கிறது அவர்களிடம்?” என்று அநபாயன் வினவினான்.

“வந்திருப்பவர்கள் கலிங்க வீரர்களல்ல’” என்றான் அமீர் திட்டமாக.

“வேறு யார்?” அநபாயனின் குரலில் மேலும் ஆச்சரியம் ஒலித்தது.

“அதுதான் புரியவில்லை. புரவிகள் கலிங்க வீரர் புரவிகளேயொழிய வந்திருப்பவர்கள் கலிங்க வீரர் அல்ல. ஆனால் என் வீட்டுப் பூட்டின் மர்மத்தைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் “ என்று அமீர் விளக்கினான்.

“என்ன மர்மமிருக்கிறது உன் விடுதியின் பூட்டில்?” என்று வினவினான் அநபாயன் மீண்டும்.

“அதோ பாருங்கள், அந்த மனிதன் பூட்டில் சாவியைச் சொருகனானேயொழிய முழுவதும் திருப்ப வில்லை” என்று சுட்டிக் காட்டினான் அமீர்.

உண்மையில் சாவியைப் பூட்டுக்குள் கொடுத்த மனிதன் அதை வலதுபுறம் பூராவாகத் திருப்பவில்லை. அதற்கு மாறாகப் பூட்டும் பாவனையில் இடதுபுறமே அரைவாடத் திருப்பித் திருப்பு, பழைய நிலைக்குக் கொண்டு வந்தான். இதைக் கண்ட அநபாயன் கேட்டான், “பூட்டைத் துறக்கும் வழி இதுவா அமீர்?” என்று.

“இல்லை அநபாயரே! பூட்டைத் திறக்க அவன் முயலவில்லை. ஏனென்றால் அது பூட்டல்ல” என்றான் அமீர்.

“பூட்டல்லவா!” அநபாயனின்’ ஆச்சரியம் பன்மடங்கு அதிகமாகியது.

“இல்லை அநபாயரே! அது பூட்டல்ல. கதவில் இரண்டு துவாரங்கள் இருக்கின்றன. ஒன்றுதான் பூட்டு. மற்றொன்று தாழைத் திறக்க, உள்ளிருக்கும் அடிமைகளை அழைக்கும் சிறு மணி. அந்தத் துவாரத்தில் சாவியைக் கொடுத்து மும்முறை திருப்பினால் உள்ளிருக்கும் மெல்லிய சலாகை நகர்ந்து பக்கத்துச் சுவரிலிருக்கும் மணிமீது தட்டும். அடிமைகள் கதவைத் திறக்க அது கட்டளை. இந்தச் சூட்சுமத்தை இவன் எப்படியோ அறிந்திருக்கிறான்” என்று மளமளவென்று விளக்கிய அமீர், “புரவியை விட்டு இறங்கி இந்த நிழலிலேயே வாருங்கள். இவன் யாரென்று பார்க்கலாம்” என்று கூறிவிட்டுத் தானும் புரவியிலிருந்து இறங்கிப் பக்கத்திலிருந்த தாழ்வார இருளில் பதுங்கிப் பதுங்கித் தன் வீட்டு முகப்பை அடைந்தான். அநபாயனும் அமீரின் வழியைப் பின்பற்றி, மெள்ள நடந்து வந்து பூட்டில் சாவியைக் கொடுத்து நின்றவன்மீது அமீர் பாய்ந் ததும் மற்றவன் கழுத்தைப் பின்னாலிருந்த வண்ணம் இறுகப் பிடித்து, “பேசாதே! வாயைத் திறந்தால் கழுத்தை நெறித்துவிடுவேன்!” என்று எச்சரித்தான்.

அநபாயன் கையில் சிக்கிக் கொண்டவனிடமிருந்து பதிலேதும் வரவில்லை. கழுத்து இறுகப் பிடிக்கப்பட் டிருந்ததால், “ஹும்...ஹும்...” என்ற மூச்சுத் திணறும் சப்தமே வெளிவந்தது. ஆனால் அமீரின் நிலை வேறு விதமாயிருந்தது. சாவியைப் பூட்டி அடிமைகளை வர வழைக்க முற்பட்டவன்மீது பின்னாலிருந்து அமீர் மிகுந்த எச்சரிக்கையுடன்தான் தாவினான். அவன் யார் மீது தாவினானோ அந்த மனிதனும் அமீரைப்போல். அப்படி அதிக உயரமோ பருமனோ உள்ளவனும் அல்ல. ஆனால் அவன்மீது பாய்ந்த மறுவினாடி. அமீர் தரையில் புரண்டு கொண்டிருந்தான். அமீரின் ராட்சத உருவத்தைத் இரும்பிப் பாராமலே கையின் வேகத்தினால் தரையில் உருள் வைத்த மனிதனை ஏறெடுத்து நோக்கிய அநபாயன் முகத்தில் வியப்பின் குறி பெரிதும் படர்ந்தது. அந்த இரவே தனக்கு அடுத்தடுத்து வியப்பை அளிப்பதற்காக ஏற் பட்டதோ என்பதை நினைத்து நினைத்துப் பரவசப்பட்ட அநபாயன், தான் பிடித்திருந்த கழுத்தை விடுதலை செய்தான். மண்ணில் உருண்ட அமீர்கூடத் திடீரெனப் பரம சந்துஷ்டியுடன் எழுந்திருந்து தன்னை வீழ்த்திய வனுக்குத் தலை வணங்க, “இந்த நிசியில் நீங்கள் வரு வீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அப்பப்பா! எப்படி ஏமாற்றிவிட்டீர்கள்!” என்று மிகவும் பணிவும் வியப்பும் கலந்த குரலில் கூறினான்.

“இரவிலும் சரி, பகலிலும் சரி, எனக்கு இரு கண்கள் பின்புறம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா அமீர்?” என்று கூறிய சீனக் கடலோடி, அமைதி நிரம்பிய அந்த் இரவில் பயங்கரமாக ஆனால் மிக மெதுவாக நகைத்தான்.

“அது தெரியும் குருநாதரே! ஆனால் வந்திருப்பது நீங்கள் என்பது எனக்கெப்படித் தெரியும்” என்று வினவினான் அமீர்.

“பூட்டில் சாவியை நான் இடதுபுறம் இருப்பியதை நீ பார்த்திருக்க வேண்டுமே?” என்று கேட்டான் சீனக் கடலோடி.

“பார்த்தேன்.

“இத்தகைய பூட்டுகள் சனாவைத் தவிர வேறு இடங்களில் ஏது?”

“கிடையாது.

“இந்த எச்சரிக்கை முறையும் நான் சொல்லிக் கொடுத்ததுதானே உனக்கு?”

“ஆமாம்.

“.. “அப்படியிருக்க,’ மீதியை நீ ஊக௫த்துக்கொள்ள வேண்டியதுதானே?” என்று விளக்கிய சீனக் கடலோடி, “உள்ளே வா அமீர்! நாம் பேச வேண்டிய விஷயங்கள் நிரம்ப இருக்கின்றன” என்று கூறிக்கொண்டு மீண்டும் இருமுறை சாவியைத் திருப்பவே கதவு திறக்கப்பட்டது. கதவு திறந்ததும் ஏதோ தான்தான் அந்த வீட்டுக்கு எசமானன் போல் உள்ளே தாராளமாக நடந்த சீனக் கடலோடி. முதல் இரண்டு கட்டுகளையும் கடந்து முதல் நாள் தான் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப் பட்ட மூன்றாம் கட்டின் பெரும் அறைக்கு வந்து சேர்ந்தான். வந்ததும் அடிமைகளை அழைத்து விளக்கைக் கொளுத்துமாறு உத்தரவிட்ட அந்தச் சனக் கொள்ளைக் காரன் எந்தவிதக் கவலையுமில்லாத வதனத்துடன் அங் கிருந்த ஆசனமொன்றில் சாய்ந்துகொண்டு, “அநபாயரே! அமருங்கள். நாம் யோடிக்க வேண்டியது நிரம்ப இருக்கிறது” என்றான்.

மூன்றாம் ஜாமம் துவங்கிவிட்ட அந்த இரவு நேரத்தில் அவன் சொல்லக்கூடிய அப்பேர்ப்பட்ட தலை போகும்படியான காரியம் என்னவாக இருக்கும் என்பதை அறியாத அநபாயன் ஏதும் பேசாமல் அங்கிருந்த ஆசனத் தில் அமர, சீனக் கடலோடிக்குச் சற்றுப் பின்னடைந்தி ரந்த ஆசனத்தில் அவனுடன் வந்தவனும் மிகப் பணி வுடன் உட்கார்ந்துகொண்டான். அறையில் அப்பொழுதும் தரங்கா விளக்கொன்று மெல்லியதாக எரிந்து கொண்டி ருந்தாலும் அது போதாதென்ற காரணத்தால் சீனக் கடலோடியின் உத்தரவைத் தொடர்ந்து அடிமைகளிரு வரைப் பெருவிளக்குகள் இரண்டைக் கொண்டு வரக் கட்டளையிட்ட அமீர் அந்த விளக்குகள் வந்து உள்ளே பேரொளி பரவியதும், “மேற்கொண்டு என்ன தேவை குருநாதரே, சிறிது அரபு நாட்டு மது கொண்டு வரட்டுமா?” என்று மிகப் பணிவுடன் வினவினான்.

மிகப் பெரும் அபாயத்தை விளக்கும் குறியையோ வேறெவ்வித உணர்ச்சியையோ பிரதிபலிக்காமல் மிகுந்த அமைதியுடன் இருந்த முகத்தை இருமுறை அப்படியும் இப்படியும் ஆட்டி மது தேவையில்லையென்பதை உணர்த் திய சீனக் கடலோடி, “மது இருக்கட்டும் அமீர், நாம் வந்த காரியத்தை முதலில் கவனிப்போம்” என்றான்.

“என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள். எந்த உத்தரவுக்கும் பணியச் சித்தமாயிருக்கிறேன்” அமீரின் கேள்வியில் பயமும் பக்தியும் சொட்டியது.

“முதலில் வாசலிலுள்ள புரவிகளின் மீதிருக்கும் சிலைகளை எடுத்து மறைத்துவிடு. அவற்றில் கலிங்கச் சின்னங்கள் இருக்கின்றன” என்றான் சீனக் கடலோடி.

“சரி” என்றான் அமீர்.

“பிறகு குதிரைகளை உன் கொட்டடியில் கட்டி விடு” என்றும் உத்தரவிட்டான் அகூதா.

“புரிகிறது” என்றான் அமீர்.

அமீருக்கு மட்டுமல்ல. அநபாயனுக்கும் விஷயம் தெளிவாகப் புரிந்தது. ஆனால் ‘ஏதும் புரியாதவன்போல் கேட்டான், “ஏது இந்தப் புரவிகள் உங்களுக்கு” என்று.

“இங்கு அவசரமாக வரத் தேவையிருந்தது. வரும் வழியில் கலிங்க வீரர் இருவர் மறித்து மல்லுக்கு வந்தார் கள்...” என்ற அகூதா வாசகத்தை முடிக்காமலே விட்டான்.

“அவர்களைக் குத்துப் போட்டீர்களா?” அமீர் பயத் துடன் வினவினான்.

வீரர்களைக் குத்தனானா அல்லது கட்டிப் போட் டானா என்பதை அகூதா சொல்லவில்லை. அது அத்தனை பிரமாத விஷயமல்லவென்பதற்காக அசட்டை யுடன் கையை ஆட்டிவிட்டு, “எப்படியிருந்தாலும் அவர் களால் நமக்குத் தொல்லையில்லை. நாம் கவனிக்க வேண்டியது நமக்கு முன்னுள்ள அபாயம்” என்றான்.

அநபாயன் விழிகள் மெள்ள எழுந்து சீனக் கட லோடியை நோக்கின. “புதிதாக என்ன அபாயம் நேரிட்டு விட்டது!” என்று வினவினான்.

“நான் இரண்டு மரக்கலங்களைக் கொண்டு வந்திருக் கிறேன் “. என்றான் அகூதா எதையோ வற்புறுத்தும் நோக்கத்துடன்.

“அப்படியா!” என்றான் அநபாயன்.

“இதோ இருக்கும் இந்த ‘ஒற்தமை எனது இன்னொரு மரக்கலத்தை நடத்துபவன்.” என்றான் அகூதா, தன் பின்னால் உட்கார்ந்திருந்த அந்த இன்னொரு ஈனனைச் சுட்டிக் காட்டி.

தட்டை முகத்தில் எந்தவித உணர்ச்சியுமில்லாமல் சிலையென உட்கார்ந்திருந்த அந்தச் சனனை நோக்கிய அநபாயன், “புரிந்து கொண்டேன்” என்பதற்கு அறிகுறி யாகத் தலையை மட்டும் அசைத்தான்.

அடுத்தபடி பெரும் வெடியொன்றை எடுத்து வீச னான் அகூதா.

“இவன் நடத்தும் மரக்கலம் இன்றிரவு கலிங்கத்தின் அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டது” என்ற அகூதா, பளிச்சிட்ட தனது இரு விழிகளை அநபாயன் மீது நாட்டினான்.

அநபாயன் கண்களில். ஒரு வினாடி கவலையின் சாயை தோன்றி மின்னல் வேகத்தில் மறைந்தது. அதைக் கவனிக்கத் தவறாத சீனக் கடலோடி, அநபாயன் அத் தனை அபாயத்திலும் உணர்ச்சிகளைப் பெரும் கட்டுக்குள் வைத்திருப்பதை எண்ணிப் பெரிதும் வியந்து, ‘இவன் அளப்பிறந்தவன்தான். சந்தேகமில்லை’ என்று தனக் குள்ளேயே சொல்லியும் கொண்டான். மனத்தில் ஓடிய எண்ணங்களைச் சிறிதும் வெளிக்கு மட்டும் காட்டாத அகூதா அமீரை நோக்கித் திரும்பி, “சோதனை வியப் பில்லையா! உனக்கு?” என்று வினவினான்.

“இதில் வியப்பென்ன இருக்கிறது? வெளிநாட்டு மரக் கலங்களின் சரக்குகளைச் சோதனை செய்வது சுங்க அதிகாரிகளின் வழக்கம்தானே?” என்றான் மீர், அப்பொழுதும் நிலைமையைச், சரியாகப் புரிந்து கொள்ளாமல்.

“வழக்கம்தான். ஆனால் இன்றிரவு இந்த மரக்கலம் மட்டுமே சோதனை செய்யப்பட்டிருக்கிறது” என்று அகூதா சற்று அழுத்திச் சொன்னான்.

“அப்படியா?” இம்முறை அமீரின் குரலில் கவலை நிரம்பி நின்றது.

“ஆம்” என்றான் அகூதா.

“ஏன்?” மீண்டும் வினவிய அமீரின் குரலில் நடுக்கமும் - தொனித்தது.

இம்முறை அகூதா பதில் சொல்லு முன்பு அநபாயன் பதில் கூறினான்.

“அந்த மரக்கலம் புகார் செல்கிறது.

“சினக் கடலோடியின் சிறு கண்கள் ஆச்சரியத்தால் அளவுக்கு அதிகமாக விகசித்தன. “எப்படித் தெரியும் உங்களுக்கு?” என்று வியப்புடன் வினவினான் சீனக் கடலோடி.

“நேற்றுவரை புகார் செல்லும் மரக்கலம் எதுவும் துறைமுகத்துக்கு வரவில்லை. நீங்கள் இரண்டு மரக்கலங் களைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். எங்களைத் தப்புவிக்க ஒரு மரக்கலத்தை உபயோகிக்க நீங்கள் தீர்மானித் இருக்கலாம். நானாயிருந்தால் அப்படித்தான் செய்வேன். அபாயம் நிரம்பிக் கிடந்ததால் இரண்டு மரக்கலங்களில் ஒன்றைத்தான் நான் பலி கொடுப்பேன்” என்று விவரித் தான் அநபாயன்.

“இருக்கலாம். ஆனால் என் எண்ணம் சுங்கக் காவலருக்கு எப்படித் தெரியும்?” என்று வினவினான் அகூதா.

“புகாருக்குச் செல்லும் சரக்குகளை அந்த மரக்கலத் தில் ஏற்ற நீங்கள் அனுமதித்திருக்கலாம்” என்ற அநபாயன் மேலும் சொன்னான் “நன்றாகக் கவனியுங்கள். இரண்டு அரசாங்கங்களைச் சேர்ந்தவர்கள், இரண்டு அரச குடும்பங் கனில் அரியணையேறத் தகுதியுள்ளவர்கள் பீமன் கைகளி விருந்து தமுவியிருக்கிறார்கள். நழுவிப் பாலூரில் மறைந் துறைகிறார்கள். அவர்கள் தப்பிச் செல்லும் வழி கடல் வழி ஒன்றுதான். அவர்கள் செல்லக்கூடிய துறைமுகம் புகார் ஒன்றுதான். எந்த மரக்கலம் புகாருக்குச் செல்லுமோ அதில்தான் அவர்கள் தப்பப் பார்ப்பார்கள். அகவே இன்றிரவிலேயே போலி வியாபாரிகளை விட்டுப் புகாருக்கு ஏதாவது மரக்கலம் போகிறதா என்று பார்த் திருக்கிறான் பீமன். இரவு பகலாகக் கப்பலில் சரக்கு ஏற்றுவது பாலூரில் சகஜம். ஆகவே புகாருக்குச் செல்லும் ஏதாவது ஒரு மரக்கலத்தில் போலிச் சரக்கை ஏற்ற ஏற்பாடு செய்திருக்கிறான். உங்கள் உபதலைவர்தானே இவர்? இவரிடம் வந்து போலி வியாபாரிகள் சரக்கைக் கொடுத்திருக்கிறார்கள். இவர் ஏற்றிக் கொண்டிருக்கிறார். அடுத்த ஜாமத்தில் நாங்கள் அந்த மரக்கலத்தில் இருக் கிறோமோ என்று சோதனை நடந்திருக்கிறது...

“தன் விளக்கத்தை இந்த இடத்தில் சற்றே நிறுத்திய அநபாயனை வியப்புத் ததும்பிய கண்களுடன் நோக்கிய அகூதாவின் அடிமை, “உண்மை! முக்காலும் உண்மை. வியாபாரிகள்தான் முதலில் சரக்கைக் கொண்டு வந்தார்கள். எனது கப்பல் புகார் செல்லவேண்டுமென எசமான் உத்தரவிட்டதால் ஏற்றிக்கொண்டேன்” என்றான்.

அகூதா பக்தி நிரம்பிய கண்களை அநபாயன்மீது திருப்பினான். “அநபாயரே! உமது அறிவு கூரியது. அந்த அறிவுதான் இப்பொழுது ஏற்பட்டுள்ள புதுச் சிக்கலையும் அவிழ்க்க வேண்டும்” என்று கூறிய அகூதா, “இனி இவன் நடத்தும் மரக்கலத்தின்மீது சிங்கப் படகுகளின் பார்வை இருக்கும். அதுமட்டுமல்ல, கடலோரமெங்கும் காவலிடப் பட்டிருக்கிறது. கடலுக்குச் செல்லும் கீழ்க்கோட்டை வாசலிலும் காவல் இரட்டிக்கப்பட்டி ருக்கிறது. இப்பொழு துள்ள நிலை இது. நாளை நிலை இன்னும் கடுமையா யிருக்கும்.” என்றும் சுட்டிக் காட்டினான்.

இதைக் கேட்டதும் மிகத் தெளிவான அமீரின் பார்வையிலும் குழப்பம் தெரிந்தது. அநபாயன் விழிகள் மட்டும் நிர்மலமாயிருந்தன. சற்று யோசனையால் அவன் நுதல் மட்டும் சிறிது சுருங்கி வரிக்கோடுகள் மூன்று குறுக்கே பாய்ந்து சென்றன. பல வினாடிகள் தலை தாழ்த்தி மெளனமாகவே இருந்த அநபாயன் கடைசியாகத் தலை நிமிர்ந்தான். “அகூதா! நிலைமை அபாயமானது தான். ஆனால் அபாயந்தான் வீரர்களின் போர்த்திறழமை யையும் சிந்தனைத் தெளிவையும் அளக்கும் கருவி. காலையில் இதற்கு ஒரு வழி கண்டுபிடிப்போம். எப்படியும் நாளை இரவு பாலூரை விட்டுப் புறப்பட்டு விடுவோம்” என்று திட்டமாக அறிவித்துவிட்டு அமீரை நோக்கத் திரும்பிய அநபாயன், “அமீர், குணவர்மர் எப்பொழுது இங்கு வரமுடியும்?” என்று வினவினான்.

“இன்றிரவு நான்காம் ஜாமத்தில் வருவார்” என்றான் அமீர்.

“எங்கு தங்க வைத்திருக்கிறாய் அவரை?”

“குதிரைச்சாலை விடுதியில்.

“என்ன! இப்பொழுது சென்றோமே அங்கேயா?”

“ஆம். குதிரைச்சாலை பீமன் அரண்மனைக்கு அருகில் இருக்கிறதல்லவா? அகவே யாரும் அங்கு அவரைத் தேடமாட்டார்கள்.

“அவரை அனுப்பச் சொல்லிக் குதிரைச்சாலைத் தலைவரிடம் நீ சொல்லவில்லையே.

“பணியாட்களைப் பற்றிச் சொன்னேனே?”

“கடாரத்தின் இளவரசன் பணியாளா!”

“மண்டலாதிபதிகளும் பணியாட்களாக வேஷம் போடும் அவயம் நேரிடத்தானே செய்கிறது.

“மற்ற அத்தனை பேர் மேலும் கலிங்கவீரர் கண் ணோட்டமிருக்கக் குணவர்மனைப் பற்றி மாத்திரம் தங்களுக்கோ கலிங்க வீரர்களுக்கோ எந்தவிதத் தகவலும் கிடைக்காத மா்மத்தைப் புரிந்தகொண்ட அநபாயன் சாதாரண சமயமாயிருந்தால் அமீரின் சாமர்த்தியத்தைப் பற்றிப் பெரிதும் பாராட்டியிருப்பான். ஆனால் ஆபத்து நிறைந்த அந்தச் சமயத்தில் அவன் மனம் அத்தகைய பாராட்டுதல்களை அள்ளி வீசும் நிலையில் இல்லை. ஆகவே, “சரி அமீர்! எல்லோரையும் காலையில் இந்த அறையில் திரட்டிவை. என் திட்டத்தை அதற்குள் முடிவு செய்கிறேன்” என்று கூறிவிட்டு அமீரிடமும் அகூதா விடமும் விடை பெற்றுக்கொண்டு தன் அறைக்குச் சென்றான். அநபாயன் வார்த்தைகளைக் கேட்ட அகூதா வின் முகத்தில் நம்பிக்கையேதும் துளிர்விடவில்லை. பீமனுடைய பெரும் காவலை உடைக்கும்படியான அப்படியென்ன பெரும் திட்டத்தைக் காலைக்குள் அநபாயன் வகுக்க முடியும் என்று எண்ணினான் அந்தச் சீனக் கடலோடி. ஆனால் காலையில் அவர்கள் கூடிய சில நிமிடங்களில் அவன் சந்தேகம் பறந்தது. அநபாயன் திட்டம் அத்தனை கச்சிதமாக இருந்தது. அமீரின் விடுதியி லிருந்து கஇளம்பி மரக்கலம் பாலூர்த் துறையிலிருந்து பாய் விரித்துப் பறக்கும் வரையில் ஒவ்வோர் எதிர்ப்பையும் சமாளிக்கத் தக்கதும் சந்தேகத்தக்கு இடம் கொடாதது மான பெரும் திட்டத்தை அநபாயன் வகுத்திருந்தான். “அபாயமான திட்டம்தான்! ஆனால் நூற்றுக்குத் தொண் ணூறு வெற்றி கிடைக்கும். வெற்றிக்கு இது வழிதான்...“என்பதை அகூதாவே ஒப்புக்கொண்டான். அந்தத் திட்டத் தைப் படிப்படியாக அனைவர் முன்னிலையிலும் விவரிக்கத் தொடங்கினான் அநபாய குலோத்துங்கன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 32

முதல் பலி

கிருஷ்ணபக்ஷத்து நான்காம் நாள் காலைப் பொழுது தனது ஆயுளில் ஐந்து நாழிகைகளை ஓட்டிக்கொண்ட சமயத்தில் அமீரின் இல்லத்தில் மூன்றாம் கட்டின் அந்தரங்க அறையில் தனது வெற்றித் திட்டத்தை விவரிக்க முற்பட்ட அநபாயன் பேச்சைத் துவங்கு முன்பாக எதிரே அமர்ந்துருந்தவர்களின் முகங்களைச் சில விநாடிகள் உற்றுநோக்கினான். பொழுது விடிந்ததும். எதிரேயிருந்த முகங்களில் கவலை மட்டும் விடியாதிருப்பதைக் கண்ட சோழர்குல இளவல் அவர்கள் கவலையின் வேகத்தை உணர்ந்தேயிருந்தான். கடந்த மூன்று நாள்களாகப் பாலூரில் நடந்த நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட அனை ‘வரும் அந்த அறையில் கூடியிருந்ததைக் கவனித்த அந பாயன் கலிங்கத்தின் எதிரிகளை ஒரே அறையில் ஒழிக்கப் பீமனுக்கு, அதைவிடச் சிறந்த சந்தர்ப்பம் கிடைப்பது அரிது என்ற நினைப்பால் தன் கடை இதழில் சிறிது புன்முறுவலையும் தவழவிட்டான். குதிரைச்சாலைத் தலைவனான அரபு நாட்டான் பாதுகாப்பில் அமீரால் வைக்கப்பட்டிருந்த குணவர்மனும் அமீரின் இல்லப் பாது காப்பிலிருந்த காஞ்சனாதேவியும் அக்கம் பக்கத்திலமர்ந் திருந்ததன்றி மீண்டும் மீண்டும் ஒருவரை யொருவர் பிரிய இஷ்டப்படாததுபோல் இருவர் கைகளும் ஒன்றையொன்று பற்றிக் இடந்ததையும் அவர்களை விட்டுச் சற்றே விலகி உட்கார்ந்திருந்த இளையபல்லவன் காஞ்சனாதேவி மீது கூட கண்களைச் செலுத்தாமல் தன்னையே நோக்கக் கொண்டிருந்ததையும் பீமனுடைய கடுமையான காவலை உடைக்கக்கூடிய என்ன விந்தைத் திட்டத்தைத்தான் சொல்லிவிட முடியும் என்ற எண்ணத்தால் இனக் ‘கொள்ளைக்காரனான அகூதா தனது முகத்தில் ஓரளவு அவநம்பிக்கையுடன் அமர்ந்திருந்ததையும், தன்னிட்ம் அளவுக்கு மீறிய நம்பிக்கை உடைய அமீர் மட்டும் முகத்தில் எந்தவிதச் சந்தேகத்யோ, கவலையையோ காட்டாமல் உத்தரவு எந்தத் திக்கில் பிறப்பிக்கப்படும் என்பதை எதிர்பார்க்கும் தூதன்போல் தன் வாயையே கவனித்துக் கொண்டிருந்ததையும் தனது புலிக் கண்களால் அளவெடுத்துக் கொண்ட அநபாயன், அவர்கள் மனங் களில் ஓடிய பல்வகை எண்ணங்களை எடை போட்ட தால் திட்டத்தை மெல்ல மெல்லவே விவரிக்கத் தொடங் கினான். திட்டத்தைத் திடீரென்று சொல்லாமல் அதற்குப் பூர்வ பீடிகையொன்றும் போட்டுக்கொண்டு பேச ஆரம்பித்து, “பெளர்ணமி கழித்த நான்காம் நாள் இது. கடந்த மூன்று நாள்களில் பாலூரில் நடந்த நிகழ்ச்சி களை நீங்கள் அறிவீர்கள். இரண்டு அரசாங்கங்களின் தற்போதைய உறவு, பிற்காலத்தின் நலன் அனைத்தும் அந்த நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்டி ருக்கின்றன. இதோ அமர்ந்திருக்கும் கடாரத்தின் மன்னர் --இவர் இளவரசரா மன்னரா என்று தீர்மானிக்க முடியாத நிலையில் அந்த அரசாங்கம் இருக்கிறது--ஆகவே மன்னரென்றே அழைக் கிறேன். இவரும் இவரது மகள் இளவரசி காஞ்சனா தேவியும் கடாரத்தின் தளையை அவிழ்க்கச் சோழ நாட்டு உதவி நாடி வந்திருக்கிறார்கள். ஆகவே இவர்களைக் காப்பது சோழ நாட்டின் இளவரசன் என்ற முறையில் என் பொறுப்பாகிறது. பாலூர்ப் பெருந்துறையில் மூன்றி லொரு பங்குள்ள தமிழ்ப் பெருமக்களின் நலனைப் பாதுகாப்பதும் சோழ மன்னர் வீரராஜேந்திர சோழ தேவனின் பிரதிநிதி என்ற முறையில் என் கடமையாகிறது. இந்த இரண்டு கடமைகளையும் நிறைவேற்ற இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று கலிங்கத்தின் படைகளிலும், ண மற்றத் துறைகளிலுள்ள தமிழ் மக்களைத் தரட்டிப் பாலூரை ரத்தக் களறியாக்குவது. இரண்டாவது எந்த ரத்தக் களறியும் ஏற்படாமல் தந்திரத்தால் நாலைந்து பேரின் வீரத்தாலும் துணிவாலும் தப்பிச் செல்வது. முதல் வழி பயங்கரமானது. நாம் அப்புறம் சென்றதும் இந்த உளரிலுள்ள தமிழ் மக்களை உருத்தெரியாமல் அடிப்பது, போர் வெறி பிடித்திருக்கும் பீமனுக்கும் அனந்தவர்மனுக் கும் சோழர்களுடன் போர் தொடங்க ஒரு காரணத்தை அளிப்பது. இந்த முறையைச் சோழர் குல இளவரசனான நான் அனுமதிக்க முடியாது. நாடுகளின் வேறுபாடுகளைத் தீர்க்கக் கடைசி பக்ஷமாகத்தான் இருக்க வேண்டும். தவிர நாம் பாலூர் விட்டு நகர்ந்ததும் பெரும் படைகளைக் கொண்டு தமிழர்களையும் பழி வாங்க, பீமனைத் தூண்டும் வழி சிறந்த வழி அல்ல. ஓர் இளவரசன் காட்டக்கூடிய வழியும் அதுவல்ல. போரைக் கண்டு சோழநாடு அஞ்ச வில்லை. ஆனால் அனாவசியமாகப் போரில் நாட்டை இறக்குவதற்கும் அது இஷ்டப்படவில்லை. இன்று உங்க ளுக்கு ஒரு ரகசியம் சொல்லுகிறேன். அதோ உட்கார்ந் திருக்கும் எங்கள் படைத்தலைவரைப் போலவே நானும் இங்கு சோழ மன்னரால்தான் அனுப்பப்பட்டேன். ஆனால் சில வாரங்கள் முன்னதாக அனுப்பப்பட்டேன். எதற்கு?...” என்று பேசிக்கொண்டு போன அநபாயன் சற்றுப் பேச்சை நிறுத்தினான்.

அந்த அறையில் குழுமியிருந்த யாரும் பதில் சொல்லும் நிலையில் இல்லாததைக் கண்டு அநபாயன் தானே மேற்கொண்டு காரணத்தைச் சொன்னான். “தென் கலிங்கத்துப் பீமனும் வடகலிங்கத்து அனந்தவர்மனும் பரஸ்பர இணைப்பு ஏற்படுத்திக் கொண்டார்களா என்பதை அறிய அனுப்பினார். அது மட்டுமல்ல, இந்த இணைப்பு இருந்த போதிலும் தென் கலிங்கத்துப் பாலூரில் வாழும் தமிழர் நிலை நல்ல முறையிலிருக்கிறதா? சோழ நாட்டிடம் தீரா விரோதமுள்ள அனந்தவர்மன் போதனை யால் பீமன் தமிழர்களின் விரோதியாகி விட்டானா என்பதை உணரவும் அனுப்பினார். அத்துடன் கடாரத்து மன்னர் சோழநாடு வருவதாகவும் செய்தி வந்தது. அப்படி வந்தால் அவரைப் பாலூரில் வரவேற்றுப் பத்திரமாகச் சோழநாடு அழைத்து வரும்படி. சோழ மன்னர் பணித்தார். இத்தனை அலுவல்களையும் ஏற்று வந்தேன். வந்தபின் இங்கு நிலைமை கடுமையாயிற்று. சோழ நாட்டுக்கு இங்குள்ள நிலை பற்றிச் செய்திகூட என்னால் அனுப்ப முடியவில்லை. ஆகவே இளையபல்லவரையும் சமாதான ஓலையுடன் அனுப்பியிருக்கிறார். நாங்கள் இருவரும் வந்த பணியில் ஒன்று பலனற்று விட்டது. நிரந்தர சமாதானம் சாத்தியமில்லை. தமிழர் நிலை கேவலமாயிருக்கிறது. இந்தச் சமயத்தில் இங்கு போரைப் புகுத்துவதால் ஆரம்பத்தில் தமிழர் சேதம் பெருவாரியாயிருக்கும். இங்குள்ள தமிழர் சமூகம் பெரும் படைகளால் அழிக்கப்படாலும் படலாம். அகையால் அதைத் தவிர்க்க இஷ்டப்படுகிறேன். அதற்கு ஒரே வழிதான்.. நமது தலைகளைப் பணயம் வைத்துத் தப்புவதைத் தவிர வேறு வழியில்லை. அத்தகைய ஆபத் தான மார்க்கத்தைத்தான் நாம் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. நமது சிக்கலில் சம்பந்தப்படாதவர்களும் சிலர் இருக்கிறார்கள். ஆனால் நமக்கு உதவ முன்வந்தருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுதுகூட இந்த ஆபத்தை ஏற்க. இஷ்டப்படாவிட்டால் விலகலாம். அவர்களை நமக்காகவோ சோழ நாட்டுக்காகவோ, தியாகம் செய்யச் சொல்ல நமக்கு உரிமையில்லை...” என்ற அநபாயன், அகூதா, அவன் அடிமை, அமீர் இவர்களை ஒருமுறை கூர்ந்து நோக்கினான,

இதைக்கேட்ட அமீரின் முகத்தில் சங்கடம் தெரிந்தது. அகூதாவின் அடிமை முகம் கல்லாயிருந்தது. அகூதாவின் சிறு விழிகள் அச்சரியத்துடன் அந்த வீர புருஷனின் கண்களோடு கலந்தன. “நாங்கள் பின்வாங்கினால் தங்கள் விடுதலைத் திட்டம்’ நிறைவேறுவது சாத்தியமா?” என்று மெள்ளச் சொற்களையும் உதிர்த்தான் அகூதா.

“நீங்கள் பின்வாங்கினால் நான் இன்றிரவு கடைப் பிடிக்க இருக்கும் தட்டம் நிறைவேறாது. வேறு திட்டத் தைத்தான் யோசிக்க வேண்டும். ஆனால் உங்களைப் பேராபத்தில் சக்கவைக்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று கேட்டான் அநபாயன்.

“நாங்கள் மரக்கலங்களில் இருக்கப் போகிறோம். நீங்கள் வந்ததும் பாய் விரித்து ஓடப் போகிறோம். இதில் ஆபத்து என்ன இருக்கிறது?” என்று வினவினான் அகூதா.

“நீங்கள் மரக்கலங்களில் இருக்கலாம். ஆனால் உங்கள் படகுகளில் இரண்டு. கரையருகே இருக்க வேண்டும். கரையிலும் காவலிருப்பதாக நீங்கள் சொல்லுவதால், உங்கள் படகுகளிலிருக்கும் மாலுமிகள் எந்த நேரத்திலும் சிறை செய்யப்படலாம் ‘அல்லது எங்களால் கடற்கரையில் கலவரம் ஏற்பட்டால் வெட்டப்பட்டாலும் படலாம். அப்படி வெட்டப்பட்டு ரகளை நிகழ்ந்தால் உடனே பாலூர் அரசாங்க ஆயுதப் படகுகள் உங்கள் மரக்கலங் களை வளைத்துக் கொள்ளும், தீப்பந்தங்களை எறிந்து உங்கள் மரக்கலப் பாய்களைக்கொளுத்த அவற்றுக்கு எத்தனை நேரம் பிடிக்கும்? ‘“ என்று வினவினான் அநபாயன்.

இதைக் கேட்ட அந்தச் சனக் கடலோடி அநாயாச மாகச் சிரித்தான். “அநபாயரே! நீங்கள் சொல்லும் அபாயத்தை முன்பே நான் யோத்தேன். நீங்கள் உணர்ந் இருக்கிறீர்களா என்பதற்காகத்தான் கேட்டேன். அபாய மில்லாத வாழ்க்கையில் சுகம் எங்கிருக்கிறது? உங்களைப் போன்ற ஒரு வீர புருஷனுக்கு உதவ என் இரண்டு மரக் கலங்களல்ல, உயிரையே பலி கொடுக்கத்’ தயாராயிருக்கறேன். ஆனால் உன் உயிரைப் பலி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பலி கொடுப்பது சாத்தியமும் இல்லை. இதைவிடப் பெருத்த’ அபாயங்களே என்னை அழிக்க முடியவில்லை” என்று சொற்களை உதிர்த்தான் அகூதா அந்தப் பெரு நகைப்புக்கிடையே.

எதற்கும் அஞ்சாத அகூதாவின் துணிவைக் கண்டு அநபாயனே ஆச்சரியப்பட்டான். அத்துடன் நன்றியும் தொனிக்கும் குரலில் சொன்னான், “சீனக் கடல் வீரரே! உங்கள் உதவியைத் தமிழகம் என்றும் மறக்காது” என்று.

இத்துடன் அகூதாவுடன் சம்பாஷணையை முடித்துக் கொண்ட அநபாயன் அமீரை நோக்கிவிட்டு மற்றவர்களை யும் நோக்கிச் சொன்னான் “முடிந்தால். அமீரை இந்த அபாயத்திலிருந்து விலக்கலாம். ஆனால் என் மனோ பாவத்தை முன்கூட்டி அறிந்த அமீர் அதற்கு வழி யில்லாமற் செய்துவிட்டான். நமக்காக அரண்மனைக்குப் பின்புறத்திலுள்ள குதிரைச்சாலை விடுதியில் அதன் தலைவன் பராமரிப்பிலேயே குணவர்மரையும், பணிப் பெண்களையும், அவர் பணியாட்களையும் தங்கவைத்துக் காப்பாற்றியிருக்கிறான். இங்கு நாம் தங்கியிருப்பது பீமனுக்குத் தெரிந்தாலும் அமீரின் தலை அவன் தோள் களில் பத்திரமாக உட்கார்ந்திருக்க முடியாது. தவிர அமீ ரில்லாமல் நாம் தப்பவும் முடியாது. நான் வகுத்திருக்கும் திட்டத்துக்கு அமீரும் அகூதாவும் இரு சக்கரங்கள். அச்சு சோழ நாட்டின் படைத்தலைவன். இவற்றில் ஏதாவ தொன்று கழன்றாலும் முறிந்தாலும் ஆபத்துதான்” இப்படிச் சொல்லிவிட்டுக் காஞ்சனாதேவியின் கருவிழி களைச் சந்தித்த அநபாயன், “தேவி! உங்களை விட்டு விட்டதாக நினைக்க வேண்டாம். உங்கள் வீரக்கலங் களுக்கும் முக்கிய பணி இருக்கிறது” என்று சொல்லி, “இதோ நன்றாகக் கவனியுங்கள்” என்று கூறி மற்றவர்கள் மீது ஒருமுறை தன் ஈட்டி விழிகளை உலாவ விட்டு எதிரே இருந்த வண்ணச் சுவரில் ‘கையிலிருந்த சுண்ணாம்புக் கட்டியால் வெள்ளைக் கோடுகள் சிலவற்றை இழுக்கவும், சில குறிகளைப் போடவும் முற்பட்டான். அடிக்கடி நின்று நின்று முடிக்கப்பட்ட அந்தச் சித்திரத்தைச் சில விநாடிகள் உற்று நோக்கிவிட்டுச் சற்று எட்ட” உட்கார்ந்திருந்த இளைய பல்லவனையும் உற்று நோக்கினான் அநபாயன்.

அதுவரை கவலை மூடிக்கிடந்த இளையபல்லவன் வதனம் பனித்திரை கிழிந்த வானம்போல் திடீரென ஒளி பெற்றது. கண்களில் சரேலெனப் பளிச்சிட்ட வீராவேசம் முகத்திலும் கனவேகத்தில் பரவியது. துவண்ட உடவில் சுரணை பலமாக ஓடியதற்கான அறிகுறிகளும் தென் பட்டன. “நல்லது! நல்லது!” என்று அவன் நாவும் உற்சாகத்துடன் சொற்களைக் கொட்டின.

அநபாயன் வரைந்த கோடுகளிலிருந்து அவன் என்ன புரிந்நுகொண்டான் என்பது காஞ்சனாதேவிக்குப் புரியாத தால் அவள் சற்றுக் கோபத்துடன் அநபாயனைப் பார்த்து, “இளைய பல்லவருக்கும் தங்களுக்கும் உயிர், நினைப்பு இரண்டும் ஒன்றாயிருப்பதால் அவர் புரிந்துகொண்டார் திட்டத்தை. ஆனால் எங்களுக்குப் புரியவில்லை” என்றாள்.

அந்தப் பெண்ணின் ஆத்திரத்துக்குக் காரணம் அநபாயனுக்குத் தெள்ளென விளங்கியது. தாங்கள் காதல் கொள்பவனுடைய எண்ணம், உணர்ச்சி, எல்லாம் தங்க ளுடன் ஒன்ற வேண்டுமேயொழிய வேறொருவனிடம் ஒன்றுவதை விரும்பாத பெண் மனப்பான்மையே அவள் சீற்றத்துக்குக் காரணமென்பதால் குறுநகை கொண்ட அந்தப் பிற்கால குலோத்துங்கன், “கோபம் வேண்டாம். எங்கள் நீண்ட நாள் பழக்கத்தால் கருணாகரன் என் யோசனையைப் புரிந்துகொண்டான். இன்னும் சில காலம் உங்களுடன் பழகினால் அவன் என்னைப் புரிந்துகொள்ள இஷ்டமும் படமாட்டான்” என்று பேசிவிட்டு, “கவனி யுங்கள் காஞ்சனாதேவி! அமீர் இதுவரையில் கொண்டு வந்துள்ள செய்திகளும் சரி. இன்று அகூதா கொண்டு வந்திருக்கும் செய்தியும் சரி, ஒரு விஷயத்தை ஊர்ஜிதப் படுத்துகன்றன. பீமன் கடல் வழியையும் தடை செய்து விட்டான் என்பதுதான் அது...கடலை நாம் அடையக் கூடிய வழிகள் இரண்டு. ஒன்று கோதாவரி மார்க்கம். இரண்டாவது இழக்குக் கோட்டை வாசலின் நிலவழி. பாலூரின் தெற்குத் தோப்பிலுள்ள அமீரின் குடிசைக்கு அப்பாலுள்ள கோதாவரித் துறையில் படகுகளை நிறுத்தி அவற்றில் ஏறிச் சங்கமத்தைத் தாண்டி மரக்கலங்களை அடைந்துவிடலாமென முதலில் யோசித்தேன். அது இப்பொழுது சாத்தியமல்ல. முதல் காரணம் இது சித்திரை மாதம். பெளர்ணமி போய் இன்று நான்காவது நாள். இந்த மாதத்துக்கு கோதாவரியுடன் கடலின் பேரலைகள் பனைமர உயரத்துக்கு மோதுகின்றன. அந்த இடத்தை அணுக வேண்டாமென அரசாங்கப் படகுகளுக்கே உத்தரவு உண்டு. அப்படியே அந்த அபாயத்தை எதிர்த்து வெண்மதி களம்புமுன் மரக்கலங்களை அடையலா மென்றால் இடையே சுங்கச்சாவடி இருக்கறது. சுங்கச் சாவடியில் நமது படகுகள் தேக்கப் பட்டு வெண்மதி கிளம்பிவிட்டால் அலைகள் உக்கிரம் மிக அதிகமாகிவிடும். அப்புறம் கோதாவரி கடல் சங்கம எல்லைக்குள் போவதை விட பீமன் கையால் வெட்டுண்டு போவது மிகவும் செளகரியமானது. ஆகையால் அந்த வழி பயனில்லை. பயனுள்ள ஒரே வழி கீழ்க்கோட்டை வாசல் ஒன்றுதான். அந்த வழியைத்தான் அமீர் குறிப்பிட்டான். அந்த வழியைத்தான் நானும் தேர்ந்தெடுக்கிறேன். அமீரின் நீர்க்குடங்கள் அவற்றுக்குப் பெரிதும் உதவுகின்றன. அந்தக் குடங்களும் நாமும் செல்லவேண்டிய முறையை அகூதா ஏற்கனவே சுட்டிக் காட்டியிருக்கிறார். அவர் சுட்டிக் காட்டிய வீரர்கள் திட்டம்தான் சிறந்தது. நீர்க்குடங்களில் ஒளிந்து காஞ்சனாதேவி, அவர் பணிப் பெண்கள் இருவர், குணவர்மர் வரலாம், அமீர் வண்டி ஓட்டலாம். நானும் இளைய பல்லவனும் வண்டியின் பின்புறம் இருப்போம் இதெல்லாம் முன்னால் நாம் ஒப்புக்கொண்ட ஏற்பாடுகள். ஆனால் வண்டி கடலோரத்தை அடைவதில் சில கஷ்டங் கள் இருக்கின்றன. இதோ பாருங்கள்” என்று கூறிவிட்டுத் தன் ஆள்காட்டி விரலால் சுவரிலிருந்த ஒரு பெரும் புள்ளியைச் சுட்டிக் காட்டினான்.

அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சம்பாஷணைகளில். இளையபல்லவன் கலந்து கொள்ளவில்லை. திட்டம் ‘வெகு தெளிவாகப் புரிந்திருந்தது அவனுக்கு. அநபாயன் அந்தப் புள்ளியைத் தொட்டுக் காட்டியதும் தலையை மட்டுமே அசைத்தான் சோழர் படைத்தலைவன், ஆனால் காஞ்சனா தேவி தன் அஞ்சன விழிகளை அந்தப் புள்ளியின்மீது நிலைக்கவிட்டு, “அந்த இடம் நாம் இப்பொழுதிருக்கும் அமீரின் வீடுதான்” என்றாள்.

“இல்லை. அமீரின் வீட்டுக் கொல்லைப்புறம் இது. வீட்டுக்கு இதோ இரு குறிகள் போட்டிருக்கிறேன்” என்று திருத்தச் சொன்ன அநபாயன், “இன்றிரவு சரியாக ஐந்தா வது நாழிகை துவங்கியதும் நீங்களும் உங்கள் தந்தையும் பணிப்பெண்களும் நீர்க்குடங்களில் பதுங்குவீர்கள். அமீரின் பெருவண்டி பன்னிரண்டு பெரும் குடங்களை ஏற்றிக்கொள்ளக் கூடியவை. அறு குடங்களில் நீர் இருக்காது. நீங்களிருப்பீர்கள். இன்று மாலைக்குச் சற்று முன்பாகவே அகூதாவின் கப்பல்களுக்கு நீர் சேகரிக்கும் படலம் துவங்கும். இரண்டு மரக்கலங்களிலிருந்தும் அகூதா வின் மாலுமிகளும் அடிமைகளும் நீர்க்குடங்களை உளருக்குள் கொண்டுவந்து வண்டிகளில் கொண்டு போய்க் கொண்டிருப்பார்கள்...” என்றான் அநபாயன்.

“மிகவும் சரி. அப்பொழுதுதான் இந்த வண்டி வரும் போது சந்தேகம் இருக்காது. மற்ற வண்டிகளைப் போலவே இதையும் நினைப்பார்கள்” என்று அகூதா இடைமறித்துக் கூறினான்.

“ஆம் சனத் தலைவரே! அப்பொழுதுதான் சந்தேகம் ஏற்படாது. நாம் கூடியவரையில் தைரியத்துடன் இந்த வீட்டின் கொல்லைப்புறத்தை விட்டுக் களம்பலாம். அமீர் வண்டியோட்டுவதால் யாருக்கும் சந்தேகமும் ஏற்படக் காரணமில்லை. அப்படிச் சந்தேகம் ஏற்பட்டால் மூன்று இடங்களில் ஏற்படலாம்” என்ற அநபாயன், அந்த இடங்களைத் தன் விரலால் சுட்டிக் காட்டி, “முதல் இடம் கீழ்க்கோட்டை வாயில், இரண்டாவது இடம் அதை அடுத்துக் கடலலைகள் மோதும் கரைக்குச் செல்லும் பாதை, மூன்றாவது இடம் கடலோரம். இந்த மூன்று இடத்தில் எந்த இடத்தில் தடை நேர்ந்தாலும் ஒரு பலி நிச்சயம்” என்று விளக்கினான்.

இதைக் கேட்டதும் அந்த அறையில் சில விநாடிகள் நிசப்தம் சூழ்ந்தது. “திட்டத்தின் வெற்றிக்குப் பலி வேண்டுமா? பலி யாரைக் கொடுப்பது?” என்ற கேள்விகள் அங்கிருந்த முகங்களில் எழுந்து தாண்டவமாடின. ஒரு முகத்தில். மட்டும் கேள்வி தாண்டவமாடவில்லை. பதில் மட்டும் தாண்டவமாடியது. வெகுஅலட்சியமாக ஆசனத்தி லிருந்து எழுந்து பதிலை உதிர்த்த இளையபல்லவன் குரல் அந்த அறையை கணீரென்று ஊடுருவியது. “பலி இதோ இருக்கிறது. அதுவும் முதல் பலி” என்று தன் மார்பில் கையை வைத்துக் காட்டிய அவன் நுதலில் வீரக்களை சுடர் விட்டது. இதழ்களில் வீர நகையொன்றும் தவழ்ந்தது. அதுமட்டுமல்ல, “பலி கொடுப்பதானால் கொடுக்கும் இடம் அதோ” என்று தன் விரலையும் சுவரிலிருந்த கோடு களை நோக்கிச் சுட்டிக் காட்டினான் இளையபல்லவன். அத்துடன் அநபாயனை நோக்க, “இதைவிடப் பெரும் பாக்கியம் எந்த வீரனுக்கும் கிடைப்பது அரிது. இந்தப் பலியெனும் பாக்கியத்தை எனக்களியுங்கள் இளவரசே” என்று அபாரத் துணிவும் தியாக வேட்கையும் நிரம்பிய சொற்களை உதிர்த்தான் சோழர்களின் படைத்தலைவன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 33

கை சொன்ன கதை

அமீர் வீட்டு அந்தரங்க அறையின் வண்ணச் சுவரிலே சுண்ணக்கட்டி கொண்டு கோடுகள். தீட்டப் பட்டதுமே திட்டத்தின் விவரங்களைத் திண்ணமாகப் புரிந்துகொண்ட இளையபல்லவன், கிழக்குக் கோட்டை வாயிலைக் குறிப்பிட்டு, முதல். பலியை இந்த இடத்தில் கொடுக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டியதன்றி, தன் ஆசனத்திலிருந்து எழுந்து நின்று அந்த நரபலியாகத் தன்னை ஏற்க வேண்டுமென்று கேட்டதும் அந்த அறை யில் பயங்கர மெளனமே ஒரு விநாடி நிலவியது.

அடுத்த விநாடி எழுந்த கேள்வியும் அங்கிருந்த ஆண் மக்களிடமிருந்து எழவில்லை. “கூடாது! கூடாது! யாரும் பலியாகக் கூடாது!” என்று காஞ்சனாதேவியின் கிள்ளைக் குரலே அந்த அறையில் ஊடுருவிச் சென்றது. பலி கொடுக்க வேண்டிய இடத்தைச் சுவரில் விரலால் சுட்டிக் காட்டி நின்ற அநபாயன் தன் ஈட்டி விழிகளை அந்தக் கடாரத்து இளவரசியின் பங்கஜ முகத்தின்மீது மிகவும் பரிதாபத்துடன் திருப்பினான். அவள் நிலைமீறி உணர்ச்சி பொங்கச் சொற்களை வெளியிட்டதன் காரணம் அவனுக்கு நன்றாகப் புரிந்தேயிருந்தது. இங்கு கடாரத்து இளவரசி பேசவில்லை. அவள் காதல் பேசுகிறது’ என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்ட. அநபாயன், “இந்தப் பலி கொடுத்தால் மற்றவர்கள் பிழைக்கலாம் தேவி. இல்லை யேல் இன்னும் ஒரேநாளில் நா. மனைவரும் கலிங்கத்தின் வாள்களுக்குப். பலியாவோம்” என்றான்.

“வாழ்ந்தால் கூடிவாழ்வது. வீழ்ந்தால் கூடி வீழ்வது என்ற தத்துவம் உயரியதல்லவா?” என்று கேட்டாள் காஞ்சனாதேவி பளிச்சென்று.

இம்முறை அதபாயனுக்குப் பதில் இளையபல்லவனே பதில் கூறினான். காஞ்சனாதேவி இருந்த பக்கம் தஇரும்பிக் கூடப் பாராமல் எதிரே சுவரிலிருந்த கோடுகளிலேயே கண்களை நாட்டிக்கொண்டு, “தனி மனிதர்களுக்கு அந்தத் தத்துவம் சரி தேவி, நாடுகளுக்கல்ல!” என்று பதில் கூறினான் இளையபல்லவன்.

“இங்கு பலியாகப் போவது தனி மனிதரா, நாடா?” என்று கூறினாள் காஞ்சனாதேவி.

“தனி மனிதர் பாலியானால் நாடுகள் பலியாகா, இல்லையேல் இரண்டும் பலியாகும்” என்றான் இளைய பல்லவன்,

“நீங்கள் சொல்வது புரியவில்லை” காஞ்சனா தேவியின் குரலில் வருத்தம் துளிர்த்து நின்றது.

“புரியச் சொல்கிறேன், கேளுங்கள்” என்று துவக்கிய இளையபல்லவன், மற்றவர்களுக்கு முன்னால், தனக்கும் காஞ்சனாதேவிக்கும் சென்ற இரண்டு நாள்களுக்குள் வளர்ந்துவிட்ட காதலை வெளிப்படுத்த இஷ்டப்படாமல் அவளைக் “கேளுங்கள்” என்று மரியாதையாகவே அழைத்தான். மேற்கொண்டு அநபாயன் திட்டத்தை அவன் விவரித்தபோதும் அவளைச் சற்று மரியாதையாகவே விளித்து விஷயங்களை விளக்கலானான். “தேவி! இன்று இந்த அறையில் நாம் விவாதிக்கிறோம் நமது விடுதலை பற்றி. ஆனால் நமது விடுதலையில் பிணைந்திருப்பது நமது உயிர்கள் மட்டுமல்ல, கடாரம், சோழ நாடு இவற்றின் நலன்களும் கலந்திருக்கன்றன, நாம் அனைவரும் இந்த இடத்தில் பலியானால் நாடுகளின் நலன்களும் பலியாகும். உதாரணமாக உங்கள் தந்தையும் நீங்களும் பலியானால் கடாரத்தை ஜெயவர்மன் கையிலிருந்து மீட்பது யார்? குணவர்மன் வேண்டுகோளின்றி ஏன், வற்புறுத்தலின்றி சோழநாடு கடாரத்தின்மீது மரக்கலங்களை ஏவுமா? அநபாயர் பலியானால் சோழநாடு கலிங்கத்துடன் மோதா திருக்குமா? அது மோதுவது இருக்கட்டும். இங்குள்ள தமிழர் வாளாவிருப்பார்களா? அடுத்த விநாடி ரத்தக் களரி ஏற்படும் தேவி! நீங்கள் நினைப்பதுபோல் கூடி வீழும் தத்துவம் நாம் இன்றுள்ள நிலைக்குப் பயன் படாது. தவிர, திட்டத்தில் அநபாயர் எதிர்பார்ப்பது போல் அப்படிப் பலி கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை” என்றான் இளையபல்லவன்.

“பலிக்கு அவசியமில்லையா!” காஞ்சனாதேவியின் குரலில் சற்று நம்பிக்கை தொனித்தது. “அவசியமில்லை. ஆனால் ஏற்படாது என்று திட்ட மாகச் சொல்ல முடியாது. அதோ அந்தக் கோடுகளையும் புள்ளிகளையும் கவனியுங்கள்” என்று திட்டத்தை விளக்க முற்பட்ட இளையபல்லவன், “மேற்குக் கோடியிலிருக்கும் புள்ளிதான் இந்த வீட்டின் கொல்லைப்புறம். அதற்கு அடுத்து, குறுக்கும். நெடுக்குமாக இழுக்கப்பட்டுள்ள கோடுகள் இந்தக் கொல்லைப்புறத்தை அடுத்த சிறு தோப்பைக் குறிக்கின்றன. தோப்புக்கு அடுத்தபடி பட்டையாக இழுக்கப்பட்டுள்ள மூன்று கோடுகளும் மூன்று பெருவீஇகள். அந்த வீதிகளைக் கடக்கும் வரையில் அதிக ஆபத்தில்லை. ஏனென்றால் முதல் சோதனை அந்த முப்பெரும் வீதிகளைத் தாண்டி, கடல் முகப்பிலிருக்கும் கிழக்குக் கோட்டை வாசலில்தான் நடக்கும். அங்கு நமது வண்டி மட்டும் இருந்தால் மாடுகளை வேகமாக முடுக்கி நீர்க்கரையை அடைய முயலலாம். ஆனால் வண்டிகள் பல நீர்க்கரைக்குச் செல்லும். அப்படிச் செல்லும் வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்திப் பரிசோதிக்கப் படும். அந்தப் பரிசோதனையில் நீர்க்குடங்களை வீரர்கள் அதிகமாகத் தட்டிப் பார்க்காமல் விட்டுவிட்டால் தப்பி விடலாம். பலிக்கு அவசியமிருக்காது. அப்படியில்லையேல், சோதனையில் சிறிது சந்தேகம் ஏற்பட்டாலும், வண்டியின் பின்புறம் உட்கார்ந்திருக்கும் நானோ அநபாயரோ &€ழே குதித்து வீரர்களை மறித்து வண்டி வேகமாக நீர்க்கரைக் குச் செல்ல அவகாசம் கொடுக்க வேண்டும். அப்படி அவ காசம் கொடுக்கும்போது வீரர்களைத் தடுத்து நிற்பவ னுக்குத் தப்ப அவகாசமிருக்காது. போரிட்டு மடிய வேண்டியதுதான்...” என்று சொல்லிக்கொண்டு போன இளையபல்லவனை இடைமறித்த காஞ்சனாதேவி, “ஏன் மடிய வேண்டும்? இந்த ஊருக்கு வந்த புதிதில் அதே கோட்டை வாசலிலிருந்து நீங்கள் தப்பவில்லையா?” என்று வினவினாள்.

இளையபல்லவன் இம்முறை அவளைத் திரும்பி நோக்கினான்...அவன் கடை இதழ்களில். புன்முறுவ லொன்றும் தவழ்ந்து நின்றது. “அந்த நிலைமை வேறு, இன்று நிலைமை வேறு தேவி, அன்று நிகழ்ந்த சம்பவம் திடீரென்று நிகழ்ந்தது. இன்றிருப்பதுபோல் அத்தனைக் காவல் எச்சரிக்கையும் இல்லை. அன்று தப்புவதற்கும் அடைக்கலம் புகுவதற்கும் இடமொன்று கிடைத்தது...“என்று அர்த்த பாவத்துடன் அந்த அஞ்சன விழியாளைப் பார்த்த இளையபல்லவன் அநபரயனை நோக்கிக் கேட் டான் “கிழக்குக் கோட்டை வாசலில் வீரர்களை நான் சில நிமிடங்கள் தடுக்கலாம். அதற்குள் நீர்க்கரைக்கு வண்டி போய்விட முடியுமா? நீர்க்கரைக்கும் கோட்டை வாசலுக்கு மூள்ள பாதை நீண்டதாயிற்றே.

என்னை வெட்டிப் போட்டு வீரர்கள் தொடர்ந்தால் என்ன செய்வீர்கள்?”

அதபாயன் கண்கள் இளையபல்லவன் கண்களுடன் சில விநாடிகள் கலந்தன. “அதையும் யோசித்தேன் கருணாகரா! நம்முடைய வண்டிக் காளைகள் என்ன தான் முடுக்கப்பட்டாலும் கோட்டை வாசலிலிருந்து நீர்க் கரையை அடைய நிமிடங்கள் பல ஆகும். உன்னைச் சுற்றிக்கொண்டே கலிங்கத்து வீரர்கள் வண்டி போகும் இசையையும் எண்ணத்தையும் புரிந்தகொண்டால் கண்டிப் பாக வண்டியைத் துரத்தி மடக்கப் பார்ப்பார்கள். ஆனால் மடக்க முடியாது” என்று திட்டமாகத் தெரிவித்த அநபாயன், காஞ்சனாதேவியை நோக்கி, “தேவி! இந்த இடத்தில்தான் உங்கள் சேவை தேவையாயிருக்கும்” என்றான்.

“என்ன சேவை அநபாயரே?” என்று கேட்டாள் காஞ்சனாதேவி.

“உங்கள் நாட்டில் பெரு வில் மட்டும் உண்டு. எங்கள் நாட்டில் உண்டை வில் என்ற சிறு வில் உண்டு” என்றான் அநபாயன்.

சோழர்குல இளவல் எதற்காக இதைச் சொல்றான் என்பதைப் புரிந்துகொள்ளாத காஞ்சனாதேவி குழப்பத் துடன் கேட்டாள் “உண்டை வில்லா?” என்று.

“ஆம் தேவி! உண்டை வில். உங்கள் பெரு வில் நீர்க் குடத்தில் பிடிக்காது. ஆனால் தமிழகத்தில் சிறுவர்கள் சிறு விற்களில் களிமண் உருண்டைகளை வைத்து மரக் கனி களை அடிப்பது உண்டு. சாதாரண வில் போன்றதுதான் அது. ஆனால் நாண் நல்ல சருமத்தைச் சுருட்டிச் செய்யப் படுவதால் பெரு வில்லின் வேகமுடையது. அந்த வில்மூலம் நன்றாக இழுத்து எய்யப்படும். ஆம்பு ஆகாயத்தில் நீண்ட தூரம் செல்லும்.

“எதற்கு அது இப்பொழுது?”

“ஒருவேளை நமது வண்டி தேக்கப்பட்டு, கருணாகரன் கீழே குதித்து வீரர்களைத் தடுத்து நின்றால் அமீர் தமது வண்டியைக் கடும் வேகத்தில் துரத்துவான். அந்த வண்டி அப்படிப் பறந்து ஐம்பதடி தூரம் சென்றதும் நீங்கள் நீர்க்குடத்தின் மறைவிலிருந்தே உண்டை வில் மூலம் எரியம்பு ஒன்றை ஆகாயத்தில் அனுப்ப வேண்டும். அதற்கான வசதிகள் உண்டை வில், நீண்ட துணி சுற்றி எண்ணெய் தோய்த்த ஆம்பு, இவை உங்களுடன் நீர்க் குடத்தில் வைக்கப்படும். உங்கள் குடத்துக்குப் பக்கத்தில் - வண்டியில் வெளிச்சத்துக்காகத் தீப்பந்தம் ஓன்றும் செருகப்பட்டிருக்கும். ஆம்பை மட்டும் வெளிநீட்டிப் பற்றவைத்துக் குடத்திற்குள் கொண்டு போய் உண்டை வில்லில் நாணிழுத்து ஆகாயத்தில் பறக்கவிடுங்கள்.

“இதை எதற்காகச் சொல்லுகிறான் அநபாயன் என்று மற்றவர்களுக்குப் புரியாவிட்டாலும் அமீருக்கு மட்டும் மிகத் தெளிவாகப் புரிந்தது. “ஆகாயத்தைப் பார்த்திருங்கள் அடையாளத்துக்கு” என்று அநபாயன் குதிரைச் சாலைத் தலைவனுக்குக் கூறியதன் நோக்கம் அப்பொழுதுதான் புரியவே, அமீர் பயமும் பக்தியும் ஆச்சரியமும் கலந்த பார்வையொன்றை அநபாயன்மீது செலுத்தினான்.

“ஆகாயத்தில் எரியம்பு போனதும் அரபு நாட்டான் முரட்டுப் புரவிகள் இருபதையும் அவிழ்த்துக் குறுக்கே விரட்டிவிடுவான். தாறுமாறாகப் பாய்ந்து செல்லும் அந்தப் புரவிகளைத் தாண்டி வண்டியை மடக்க ஆயிரம் கலிங்கத்து வீரர்களாலும் முடியாது. ஆகாகா! எப்பேர்ப் பட்ட திட்டம்! எத்தனை கூரிய அறிவு இவருக்கு! படிப்படியாக ஒவ்வொரு தடையையும் சமாளிக்க ஏற்பாடு செய்திருக்கிறாரே’ என்று நினைத்து நினைத்து வியப்பில் ஆழ்ந்த அமீரின் உள்ளத்தில் கவலையும் புகுந்துகொண்டது. ‘அரபுப் புரவிகளின் வேகம், தாறுமாறான பாய்ச்சல், பழக்கப்படாததால் கடிக்கும் சுபாவம், இத்தனையும் மீறிக் கலிங்க வீரர் வரமுடியாது. ஆனால் அதேபோல் அந்தப் புரவிகள் நம் வண்டி மீதும் பாய்ந்தால்!” என்று எண்ணி னான். அடுத்த வினாடி விளைவைப் பற்றி எண்ணவும் பயந்தான். விளைவு விபரீதமாகும். நீர்க்குடங்கள் உடையும். மாடுகள் மிரளும். வண்டியே புரவிகளால் கவிழ்க்கப்பட்டாலும் படலாம். அப்படிக் கவிழ்க்கப் பட்டால் யார் வண்டிச்சக்கரத்தில் அகப்படுவார்கள்? யார் புரவிகளின் கால்களில் சிக்குவார்கள்? சொல்ல முடியாத பயங்கரம்!” என்று நினைத்த அமீர் திகிலின் சொரூபமாக விளங்கினான்.

அவன் திலின் காரணத்தைப் புரிந்துகொண்ட அநபாயன், “நீ “நினைக்கும் கஷ்டமும் இருக்கிறது அமீர். ஆனால் வண்டியை வேகமாகச் செலுத்த உனக்கருக்கும் சாமர்த்தியத்தில்தான் நான் அந்த அபாயத்திலிருந்து மீள நம்பிக்கை வைத்திருக்கிறேன்” என்றான்.

அமீரும் அநபாயனும் பரிமாறிக்கொண்ட சொற் களையும் எண்ணங்களையும் புரிந்தகொள்ள முடியாத தால் அந்தத் திட்டத்தைப் பற்றிய விவரங்களையும் மற்ற வர்களுக்குத் தெரிவித்தான் அநபாயன். அகாயத்தில் எரியம்பு பறந்ததும் மூர்க்கத்தனமுள்ள இருபது அரபுப் புரவிகள் தாறுமாறாக ஓடிக் கிழக்கு வாசல் வீரர்களைத் தேக்கும் அவற்றைத் தாண்டுவது பெரும் படைக்கும் சுலபத்தில் முடியாது, அந்தக் குழப்பத்தில் கடைக்கும் இடைக்காலத்தை நாம் நீர்க்கரையை அடையப் பயன் படுத்திக் கொள்வோம். நீர்க்கரையில் சனத் தலைவரின் படகுகள் தயாராயிருக்கும். வண்டி நின்றதும் குடங்களில் உள்ளவர்கள் தரையில் குதித்துப். படகுகளுக்கு ஓட வேண்டும். தொடரும் வீரர்களை நானும் அமீரும் தடுத்து நிற்போம். தேவியும் குணவர்மரும் மற்றோரும் படகுகளில் ஏறியதும் நாங்களும் ஓடி ஏறிக்கொள்வோம். பிறகு படகுகள் புகார் செல்லும் மரக்கலத்தை நோக்கி விரையும். படகு அணுகியதும் அந்த மரக்கலம் பாய் விரித்தோடத் தயாராயிருக்கும். இதுதான் திட்டம். இடையே பல இடுக்கண்கள் நேரலாம். அவ்வப்பொழுது அவற்றை நமது யுக்தி கொண்டு முடிந்த வரை சமாளிக்க வேண்டும். மனித யுக்தி இவ்வளவுதான். மற்றபடி நாம் தப்புவதும் அல்லாத தும் ஆண்டவனின் கரங்களில் இருக்கின்றன” என்று சொல்லித் தலையைக் குனிந்துகொண்ட அநபாயன் சில விநாடிகள் அண்டவனை நினைத்தான்.

அறையிலே மெளனம் நிரம்பி நின்றது. “இனி நாம் கலையலாம். இன்றிரவு ஐந்தாவது நாழிகை புறப்படச் சித்தமாயிருங்கள்” என்று உத்தரவிட்ட அநபாயன் அனைவருக்கும் சிரம் தாழ்த்தினான். அன்று முழுதும் குணவர்மன் ஒரு நிலையில் இல்லை. “எதற்காகச் சோழ நாடு வந்தோம்? சாவதாயிருந்தால் கடாரத்திலேயே செத் இருக்கலாமே!” என்று அன்று அடிக்கடி, சொல்லிக் கொண்டிருந்தார். காஞ்சனாதேவி துக்கத்தின் சிகரமாக விளங்கி னாள். அன்று பகல் உணவுகூட அருந்த மறுத்தாள். பணிப் பெண்களை வெறுத்தாள். அறைக்கு வெளியே இருக்கக் கட்டளையிட்டாள். பஞ்சணையில் படுத்துப் புரண்டு கொண்டிருந்தாள். இளைய பல்லவனுக்கு நேர இருந்த கதி அவளை ஓர் உலுக்கு உலுக்கியிருந்தது. அவள் வேதனை யைச் ச௫க்க இஷ்டப்படாது போல் பொழுது வேகமாக ஓடி. விளக்கு வைக்கும் நேரமும் வந்தது. காஞ்சனா தேவியின் அறையிலும் ஒரு விளக்கு எரியத்தான் செய்தது. அந்தச் சுடர் போல தன் வாழ்க்கை. விளக்கு எரியுமா அணையுமா என்பதை நினைத்து அவள் விளக்கின் சுடரை நோக்கிக் கொண்டிருந்த சமயத்தில்தான் இளைய பல்லவன் அவள் அறைக்குள் நுழைந்தான்.

அவன் தனியாக நுழையவில்லை. கையிலே ஒன்றும் தவழ்ந்து நின்றது.

அதைக் கண்டதும், பொலபொலவெனக் கண்ணீரை உகுத்தாள் அவள். அது அனந்தக் கண்ணீரா, சோகக் கண்ணீரா, பெரும் விந்தையைக் கண்டதால் ஏற்பட்ட கண்ணீரா! இதயத்தில் வேதனை விளைந்ததால் ஏற்பட்ட கண்ணீரா! அவளுக்கே புலப்படவில்லை. அவன் கையையே வெறித்து நோக்கினாள் அவள்.

அவன் கை சொன்ன கதைதான். என்ன?
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் - 34

வீட்டுப் புறா! காட்டுப் புறா! கடல் புறா!

அறை விளக்கின் சுடரிலிருந்து அஞ்சன விழிகளை இளைய பல்லவனின் கையை நோக்கித் திருப்பிய காஞ்சனாதேவி தனது கண்களிலிருந்து திடீரெனப் பொலபொலவென அதிர்ந்து கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீருக்குக் காரணம் கற்பிக்க முடியாமல் திண்டாடி னாள். அது வாழ்க்கையின் சோதனையளித்த வேதனைக் கண்ணீரா அல்லது இதயத்தின் மஒழ்ச்சி நிரம்பி வழிந்த இன்பக் கண்ணீரா என்பதை அவள் சொந்த உணர்ச்சி களே கண்டுபிடித்துச் சொல்ல முடியாத குழப்ப நிலையில் இருந்தாள் அவள். இளைய பல்லவனின் இடது கையிலே தவழ்ந்து நின்ற வெண்மையான அந்தப் பெரும் காட்டுப் புறாவும் அதன் முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டி ருந்த அந்த வாலிப வீரனின் வலது கரமும் சொன்னவை பழங்கதைதான். ஆனால் அவற்றில் எத்தனை புதுமை களைக் கண்டாள் கடாரத்தின் அந்தக் கட்டழகி, “இவர் கையிலே இன்று தவழும் இந்தக் காட்டுப் புறா மூன்று நாள்களுக்கு முந்திய இரவில் எத்தனை வேகமாக சாளரத் துக்குள் பறந்து வந்தது! அதை எத்தனை லாகவமாகப் பிடித்தார் இவர்! பிடித்ததும் எத்தனை நேரம் உற்றுப் பார்த்தார். உற்று மட்டுமா பார்த்தார். இறக்கைகளைத் தூக்கித் தூக்கி விரல்களால் என்னென்ன சோதனைகள் செய்தார்! செய்தவர் அடுத்தடுத்து என்னை ஏன் பார்த்தார்?” என்று தன் மனத்துக்குள்ளே கேள்விகளைத் திரும்பத் திரும்ப வீசிக்கொண்ட காஞ்சனாதேவி, ஒரு புருஷன் ஒரு பெண்ணை எத்தனை சீக்கிரம் வசியம் செய்துவிட முடியும் என்பதையும் நினைத்து உள்ளூர வியந்தாள். அந்த வியப்பில், வியப்பில் விளைந்த காதலில், காதலில் விளைந்த தாபத்தில் அவள் மேற்கொண்டும் அந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தொகுத்து நினைந்து நினைந்து உருகினாள். அதே இரவில் அந்தக் காட்டுப் புறா சிறகடித்து இளையபல்லவன் அறையை நோக்கி ஓடியது. அதைத் தான் துரத்தியது, புறா இளைய பல்லவனை மூக்கால் கொத்தியது, புறாவை எடுத்து அவன் தன்னிடம் அளித்தது, ஆகிய அத்தனை காட்சிகளும் அவள் சிந்தனை யில் வலம் வந்தன. “புறாவைத்தான் அவர் கொடுத்தார்! நான் அதை ஏன் வாங்கி மார்பில் அணைத்துக்கொண் டேன்? புறா மீது அசையா?” என்று அவள் தன்னைக் கேட்டுக்கொண்டு உள்ளூர வெட்கவும் செய்தாள். அந்த இன்ப நிகழ்ச்சிகளெல்லாம், அவள் இதயத்தில் வேதனை யையும் காதலையும் கலந்து பிரவ௫க்கச் செய்தன. அடுத்து அன்று இரவு நேர இருந்த பயங்கரப் பயணம், அதில் இளைய பல்லவனுக்கு நேர இருந்த பயங்கர முடிவு இவை யிரண்டும் அவள் இதயத்தில் வேதனை வெள்ளத்தைக் கிளப்பிவிட்டன. இத்தனையையும் இதயம் தாங்க முடியுமா? முடியாததால் பொங்கிப் பொலபொலவென உதிர்ந்தன அவள் கண்களிலிருந்து நீர்த் துளிகள்.

பஞ்சணையில் உட்கார்ந்திருந்த அந்தப். பருவ அஞ்சுகத்தின் பங்கஜ விழிகளிலிருந்து, நெஞ்சமுருகியதால் வழிந்த கண்ணீரைக் கருணாகர பல்லவனும் கவனிக்கத் தான் செய்தான். அந்தக் கண்ணீருக்குக் காரணமும் அவ னுக்குப் புரிந்தேயிருந்தது. அநபாயனுக்காகத் தூது வந்த பறவைத் இவின் அந்தக் காட்டுப்புறா, எதிரே பஞ்சணை யிலிருந்த நாட்டுப்புறாவுக்குப் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுவிட்டதையும், அந்த நினைப்புகளும் அன்றிரவு நிகழ இருக்கும் நிகழ்ச்சியில் தான் ஏற்கப்போகும் பங்குமாக இணைந்து அவள் இதயத்தை ஒரு கலக்கு கலக்கி விட்டிருப்பதையும் புரிந்துகொண்ட கருணாகர பல்லவன், காஞ்சனாதேவிக்கு ஆறுதல் சொல்லவும் உற்சாகப்படுத்த வும் கட்டிலை நோக்கி மெள்ள நடந்தான். இரண்டு அடிகள் எடுத்து வைத்ததுமே வீரனுக்கு வேண்டிய உறுதி தன் நடையிலில்லாததை அவன் புரிந்து கொண்டான். தன்னுடைய இரும்பு இதயங்கூடப் பஞ்சணையில் உட் கார்ந்து விளக்குச் சுடரில் சொர்ண பிம்பமென ஜொலித்த அந்தப் பைங்கிளியின் துக்க நிலையைக் கண்டதும் தளர்ந்து விட்டதைக் கண்டு வியப்பின் வசப்பட்டான் ருத்திரனிடமே கைவரிசையைக் காட்டும் துணிவு கொண்ட காமனுக்குத் தன்னைப் பலவீனப்படுத்துவது ஒரு பெரிய விஷயமல்ல என்பதையும் அறிந்து கொண்டான். அந்த உணர்ச்சியுடன் காஞ்சனாதேவியை அணுகிய இளைய பல்லவன், அவளது அழகிய தோளின் மேல் தனது வலது கரத்தை வைத்தான்.

அவள் உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் பிரவகித்தன. அவள் இதயத்தை முதலில் நெகிழச் செய்தது நிளைப்பு. இப்பொழுது நெகிழச் செய்தது தோளில் தவழ்ந்த கை, முதுகுப் புறமும் இறங்கிக் கொடுத்த அணைப்பு. ஒன்று சிந்தனை, இன்னொன்று ஸ்பரிசம். இரண்டில் எது வேக முடையது என்பதை அந்த இருவராலும் உணர முடிய வில்லை. வலது கையை அவளது முதுகில் ஆறுதலாகத் தவழவிட்டு அவள் பூவுடலை அணைத்த வண்ணம் அவள் பக்கத்தில் அமர்ந்த இளையபல்லவன், இடது கையிலிருந்த புறாவை, “இந்தா காஞ்சனா! இதைப் பிடி!” என்று சொல்லி மடியில் செயலற்றுக் கடந்த அவள் கைகளில் பொருத்தினான். அவள் இரண்டு கைகளும் புறாவைப் பற்றிக்கொண்டன. அப்படிப் பற்றி நின்ற அந்தச் சமயத் திலும் இடது கையால் அவள் கையையும் வலது கையால் அவள் முதுகையும் ஆறுதலாகத் தடவிக் கொடுத்தான் இளையபல்லவன். அன்பின் அந்தச் செயலிலும் இன்பமும் வேதனையும் கலந்தே பாய்ந்தன அவள் உடலில். வாழ்க்கையே இரண்டும் கலந்ததுதான் என்பதை அவள் அந்த நேரத்தில் சந்தேகத்துக்கு இடமின்றிப் புரிந்துகொண்டாள். அப்படிப் புரிந்நகொண்டதால் ஓரளவு சாந்தியும் பெற்றாள். அந்த சாந்திக்கு மேலும் உறுதியளிக்க நினைத்த இளைய பல்லவன் தன் இடது கையினால் அவள் முகத்தைத் திருப்பி வலது கையால் அவள் கண்களையும் வழவழத்த கன்னங்களையும் துடைத்தான்.

அத்தனீனக்கும் அவள் ஏதும் பேசாமல் சிலையென உட்கார்ந்திருநகாள். சிந்தனை அலைகளில் புரண்டு கொண்டிருந்த அவள் சித்தம் பேசும் சக்தியை அறவே இழக்கச் செய்திருந்தது. அவள் நிலையைப் புரிந்து கொண்ட இளையபல்லவன் தானே மீண்டும் பேசமுற்பட்டு, “காஞ்சனா! நெஞ்சத்தை நெகிழவிடும் சமயமல்ல இது. துணிவுடன் இதயத்தை இரும்பாக்கக் கொள்ள வேண்டிய நேரத்தை அடைந்துவிட்டோம்” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி காதுக்கருகில் உதடுகளைக் கொண்டு சென்று வார்த்தைகளை உதிர்த்தான். அப்படிக் காதுக்கருகில் அவன் பேசியபோது உதடுகளில் அவள் காதின் நுனிகளும் லேசாகப் பட்டனவாதலால் அவள் மேலும் உணர்ச்சி களுக்கே அடிமையானாள். அவற்றிலிருந்து விடுவித்துக் கொள்ள இஷ்டப்படாததாலோ என்னவோ சரேலெனப் பஞ்சணையிலிருந்து எழுந்திருந்து சாளரத்தை நோக்கச் சென்று அதனருகே நின்று ஒரு புறமாகச் சாய்ந்தும் கொண்டாள்.

புறாவைப் பிடித்த இடதுகை மார்பில் புதைந்து கிடந்ததால் புறாவின் பட்டு மேனியும் அவள் மார்பில் ஒரு புறத்தில் பட்டுக் கொண்டிருந்தது. அப்படியும் இப்படி யும் திரும்பிய அதன் தலையும் மூக்கும் அங்கும் இங்கும் பட்டு வேதனையையும் அளித்துக் கொண்டிருந்தது. சாள ரத்துக்கு வெளியே தொங்கிய பூங்கொடி அவள் இதய வெப்பத்தைப் போக்க மெல்லக் காற்றில் ஆடி ஆடி ஆல வட்டம் போட்டும் அவள் வெப்பம் மட்டும் மாறவில்லை. அதை அதிகப்படுத்த இளைய பல்லவனும் பஞ்சணையை விட்டு எழுந்து அவளிருந்த இடத்துக்கு வந்து அவளுக்குப் பின்புறம் நின்று ஒரு கையைச் சாளரத்தின் மீதும் இன்னொரு கையை அவள் சிற்றிடையிலும் உலாவ விட்டான். அத்துடன் அவள் கன்னத்தை நோக்கித் தலை யைத் தாழ்த்தி, “காஞ்சனா, நேரம் ஓடுகிறது. ஐந்தாவது நாழிகை நாம் நமது பயணத்தைத் தொடங்க வேண்டும்” என்று மெள்ளச் சொன்னான்.

அந்தப் பயண விவரங்கள் தெரிந்த விஷயந்தான். திரும்பத் இரும்பச் சொல்லப்பட்டதுங்கூட. ஆனால் திரும்பத் திரும்பச் சொன்னாலும் சலிக்காத விஷயங்கள் உலகத்திலிருக்கின்றன அல்லவா? சிலவற்றை மறப்பதாலும் சிலவற்றைத் திரும்பத் திரும்ப நினைப்பதாலுமே மனித னுக்குத் துணிவும் திருப்தியும் ஏற்படுகிறது. இதை உணர்ந்து தானோ என்னமோ இளையபல்லவன் அந்த ஐந்தாவது நாழிகையை அவளுக்கு நினைப்பூட்டினான். ஆனால் அவள் நினைப்பு வேறாயிருந்தது. அந்த ஐந்தாவது நாழிகை புறப்பாடு தாங்களிருவரும் பிரியும் இறுதிப் புறப்பாடாக வுமிருக்கலாம் என்பதையே எண்ணி காஞ்சனாதேவி பதிலுக்குப் பெருமூச்செறிந்தாள். அந்தப் பெருமூச்சின் பொருளைப் புரிந்துகொண்ட இளையபல்லவன் சொன் னான் “தேவி! பயப்படாதே. நாம் அத்தனை சுலபத்தில் பிரியமாட்டோம்” என்று.

அதைச் சொன்ன இளைய பல்லவனின் குரலிலிருந்த உறுதியைக் கண்ட காஞ்சனாதேவி அது உண்மை உறுதியா அல்லது தனக்குத் தைரியம் சொல்ல ஏற்பட்ட போலி உறுதியா என்பதை நிர்ணயிக்கமாட்டாமல், “அதென்ன அத்தனை நிச்சயமாகச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

“நிச்சயம் எதிலிருக்கிறது தேவி? பிரிவோம் என்பதில் மட்டும் இருக்கறதா?” என்று வினவினான் இளைய பல்லவன் காதல் கரைபுரண்ட குரலில்.

“உள்ள அபாயம் பிரிவைத்தான் காட்டுறது” என்றாள் அவள் மெதுவாக.

“அந்த அபாயத்திலிருந்து நான் பலமுறை தப்ப வில்லையா? ஏன், நீதி மண்டபத்தில் மரணக் கூண்டி லிருந்து தப்பி வரவில்லையா? அப்பொழுதில்லாத புது அபாயம் இப்பொழுது எங்கிருந்து வந்துவிட்டது” என்றான் இளையபல்லவன்.

தர்க்க ரீதியில் அவன் பேச்சு சரியாகத்தானிருந்தது. ஆனால் உணர்ச்சிகளின் பீதிக்கு அது பதில் சொல்ல முடியவில்லை. ஆகவே காஞ்சனாதேவி சொன்னாள் “என் மனத்திலென்னவோ சஞ்சலம் குடிகொண்டிருக்கிறது. வேதனை அட்கொண்டிருக்கிறது என் இதயத்தை” என்று.

வேதனையின் காரணத்தை அவன் புரிந்துகொண் டிருந்தான். தன்னிடத்தில் அவளுக்குள்ள காதல், தன் உயிரைப்பற்றி அவளுக்குள்ள பயம் இரண்டுமே வேதனைக் குக் காரணம் என்பதைப் புரிந்துகொண்ட இளைய பல்லவன், “தேவி! எனக்கு நன்றாகப் புரிகிறது. காதலின் தன்மையும் வன்மையும் அப்படிப்பட்டது” என்றான்.

“காதலின் தன்மையா?” காஞ்சனாதேவியின் இந்தக் கேள்வியில் அமுதம் கலந்திருந்தது.

“ஆம். தேவி! காதலென்பதை விஷயம் என்று வட மொழியில் அழைக்கிறார்கள்” என்று விளக்க முற்பட்டான் அவன்.

“அப்படியா?” அத்தனை வேதனையிலும் கேலி யிருந்தது அவள் குரலில்.

“ஆம் தேவி! விஷயம் என்று சொல்கிறார்கள். அது மட்டுமல்ல. விஷயத்துக்கும் விஷத்துக்கும் ஓர் எழுத்துத் தான் வித்தியாசமென்றும் சொல்லவறார்கள்.

“ஆம். ஓர் எழுத்துத்தானே வித்தியாசம்.

“ஆனால் விளைவில் பெரும் வித்தியாசமிருக்கறது.

“எப்படி?”

“சாப்பிட்டால்தான் விஷம் மனிதனைக் கொல்லும். விஷயத்தை நினைத்தாலே போதும், மனிதன் உடல் உருகப் போடூறான். வேதனைப்பட்டு இறப்பவர்களும் உண்டு. அத்தனை பயங்கரம் காதலின் நிளைப்பு.

“இதை எனக்கு எதற்காகச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டு அவனை நோக்கத் திரும்பினாள் காஞ்சனாதேவி,

அவள் தோள்களை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு அவன் சொன்னான் “தேவி! நீ என்னை நினைந்து நினைந்து உருகக்கூடாது” என்று.

அவள் கண்களை வெட்கத்தால் நிலத்தில் தாழ்த்திக் கொண்டாள். “ஏன்?” என்று. பவள இதழ்களிலிருந்து உதிர்ந்த சொல்லும் வெட்கத்தைப் பூசிக்கொண்டே வெளி வந்தது.

இளையபல்லவன் தனது குரலில் அன்பும் காதலும் கலந்தோடச் சொன்னான் “நாம் ஒருவேளை இன்று பிரிந்தாலும் மீண்டும் கூடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்படிக் கூடும்போது உன் நிலை என் மனத்தைப் பிளக்கக் கூடாது. நீ சிந்தனையால் சிதைந்து உடல் உருக்குலைந்து போயிருந்தால் என் மனம் வெடித்து விடும். நான் உன்னைச் சந்திக்கும்போது இந்த எழில் உடலின் கவர்ச்சி, அஞ்சன விழிகளின் தீட்சண்யம், கபோலங்களின் பளபளப்பு அத்தனையும் மாறாதிருக்க வேண்டும். இன்று போலவே நீ அன்றுமிருக்க வேண்டும். புரிகிறதா?”

புரிந்தது அவளுக்கு. புரிந்ததால் அவனை நன்றாக நிமிர்ந்து நோக்கினாள். “நான் வாளை வீசுவேன். போரிடுவேன். இருப்பினும் நான் பெண், பேதை என் மனம் உறதி கொள்ள மறுக்கிறது” என்றாள் அவள்.

“தேவி! மனத்தை உறுதிப்படுத்திக்கொள். உனக்குத் தைரியம் சொல்லவும், என்னை நினைப்பில் வைத்துக் கொள்ள அடையாளமாக இந்தப் புறாவை உனக்குக் கொடுக்கவும் வந்தேன். அதற்காகவே அமீரிடமிருந்து இதை வாங்கினேன். அடுத்த சில நாழிகைகளின் நிகழ்ச்சி களைப் பற்றி நாம் எதுவும் சொல்ல முடியாது. நாம் பிரிந்தாலும் பிரியலாம், பிரியாவிட்டாலும் இல்லை. நான் மட்டுமென்ன, வண்டி சரியாக வளைக்கப்பட்டால் நீ கூட மாளலாம். அப்படிச் சாவதானால் வீரர்கள் குலத்தில் பிறந்தவர்களென்று உறுதியுடன் போரிட்டு மடிவோம். பிழைத்தால் வீரர் குலத்தின் மக்களாகச் சந்திப்போம்” என்று உறுதியும் வீரமும் நிரம்பிய சொற்களை உதிர்த்த இளையபல்லவன் அவள் முகவாய்க் கட்டையைத் தூக்கி அவள் கண்களை அழ்ந்து நோக்க, “தேவி! நாம் பிரிவதா னாலும் மீண்டும் கூடு மட்டும் நினைவுச் சின்னமாக இந்தப் புறாவைக் கொடுத்திருக்கிறேன்” என்றான்.

பதிலுக்கு அத்தனை துன்பத்திலும் அவள் இளநகை புரிந்தாள். “உங்களை நினைத்திருக்கக் காட்டுப் புறாவைக் கொடுத்தீர்கள். உங்களுக்கு நான் என்ன தரட்டும்?” என்று கேட்டாள் அவள்.

“எதுவும் வேண்டாம் தேவி. நான் எங்கு இருந்தாலும் புறாவின் நினைப்பு எனகிகருக்கும். இங்கு வந்ததும் வீட்டுப் புறா ஒன்றைக் கண்டேன். பிறகு காட்டுப் புறா ஒன்று கைக்கு வந்தது. இனி கடற் புறாவொன்றும் கப்பலில் பறக்கும்!” என்றான் இளையபல்லவன், ஆபத் தான நினைப்புகளை அவள் இதயத்திலிருந்து அகற்ற.

அவள் தனது கண்களை அகல விரித்தாள். “கடல் புறாவா!” என்றும் அச்சரியம் குரலில் ததும்ப வினவினாள்.

“ஆம் தேவி! இன்று நீ சீனத்துக் கப்பலில் கடல்மீது பறந்து கொண்டிருப்பாயே?” என்றான் விஷமத்துடன் அந்த வாலிபன். அவள் உள்ள வேதனை அவன் அரவணைப்பில் மறைந்தது. அவள் இதழ்களிலும் விஷமம் தாண்டவ மாடியது. “வீட்டுப்புறா இருந்த இடத்தில் ஒரு வாலிபன் சாளரத்தின் மூலம் குதித்துத் திரையில் மறைந்து வேடிக்கை பார்த்தார். காட்டுப் புறாவைக் கையிலேந்தி இறக்கைகளை நீக்கி விரல்களால் துருவித் துருவிச் செய்திச் சுருளை எடுத்தார். கடல் புறாவை என்ன செய்யப் போகிறார் அவர்?” என்று கேட்டாள் அவள்.

அவன் கைகள் அவளைச் சுற்றிச் சென்றன. விழிகள் அவள் விழிகளைக் கூர்ந்து நோக்க. “ஏன் கடல் புறாவுக்கு மட்டும் இறக்கைகள் இல்லையா?” என்று கேட்டான். அந்தச் சொற்கள் அளித்த ஆனந்தம், குரல் ஒலி கிளப்பிய வேட்கை இரண்டும் அவளை எங்கோ கொண்டு சென்றன. சொல்லிலும் செயலிலும் இணையற்ற கருணாகர பல்லவனின் காதலியாகத் தான் திகழ நேர்ந்ததைப் பெரும் பாக்கியமாக மதித்த அவள் இதயம் மீண்டும் உறுதி கொண்டதன்றி, ஒருவேளை கிழக்குக் கோட்டை வாசலில் வண்டி தடுக்கப்படாவிட்டால் கடற் கரையோரத்தில் அவனும் தானும் அக்கம் பக்கத்தில் நின்று போரிடலாம் என்ற நினைப்பும் அவளுக்கு மிகுந்த தைரியத்தை ஊட்டியது. துணிவு துளிர்த்ததன் விளைவாக அவனை ஏறெடுத்து நோக்கிய காஞ்சனாதேவி, “கடற் புறாவை நீங்கள். சோதிக்கும் காலம் அதிக தூரத்தில் இல்லை. அது சிறகடித்து எதிரிகளை வீழ்த்தும் காட்சியை இன்றிரவு எட்டு நாழிகைக்குள் கடற்கரையில் பார்க்கப் போறீர்கள்” என்றாள்.

அவன் பதில் சொல்லவில்லை. சற்று மெளனமாக நின்றான். கடைசியாகப் பிரியாவிடை பெற்ற அவன், “வருகிறேன் தேவி! நாழிகைகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. வண்டியும் சித்தமாகிவிடும். நானும் சித்தமா கிறேன்” என்று சொல்லி அவள் கைகளை மெல்ல நெறித்து விட்டுச் சென்றான்.

வண்டி புறப்படும் நேரம் வந்தது. நீர்க்குடங்களுடன் வண்டி தயாராக நின்றது. அதில் ஏற நின்றிருந்தவர்களை நோக்கி அநபாயன் சொன்னான் “நமது பயங்கரப் பயணம் துவங்குகிறது. எச்சரிக்கையுடன் இருங்கள்.அவரவர் பணியை அந்தந்தச் சமயத்தில் செய்யுங்கள். எதற்கும் அஞ்ச வேண்டாம். கடமையை நாம் செய்வோம், பலன் ஆண்டவன் கரங்களிலிருக்கிறது.

“இதைச் சொன்ன அவன் சிரம் தாழ்த்தி அண்ட வனைச் சல விநாடிகள் நினைத்தான். பிறகு அனைவரை யும் வண்டியிலேறி அவரவர் இடங்களை அடைய உத்தர விட்டான். அவரவர் அமர்ந்ததும் அவனும் அமர, பெரும் காளைகள் பூட்டப்பட்ட அந்த வண்டியும் இடுதிடுவென சக்கரங்கள் சப்திக்க, பாலூரின் வீதிகளில் புரண் டோடியது.

அப்படிப் புரண்டோடி ஆறாவது நாழிகையில் கிழக்குக் கோட்டை வாசலை வண்டி எட்டியதும் தூர இருந்த நிலையை நோக்கிய அமீரின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. பெரும் பயம் புத்தியைச் சூழ்ந்து கொண்டது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் – 35

சோதனை

கலிங்கத்தின் பெரும் சாதிக் காளைகள் இரண்டு பூட்டப்பட்ட தனது வண்டியை அரை நடையாகவும் அரை ஒட்டமாகவும், மிகுந்த எச்சரிக்கையுடன் விட்டுக் கொண்டு வந்த அமீர், நான்காம் பிறைச்சந்திரன் உதயமா வதற்கு முந்திய ஆறாவது நாழிகையின் துவக்கத்தில் கிழக்குக் கோட்டை வாசலின் ஆரம்பப் பகுதியை அணுகி யதுமே கண்களை உயர்த்திச் சற்று தூரத்தே எதிரேயிருந்த நிலைமையை நோக்கி அச்சத்தால் இதயம் படபடக்கச் சில விநாடிகள் இணறியே போனான். சிறு வணிகர் வீதியி லிருந்த இல்லத்தை விட்டுப் புறப்படும் முன்பே வண்டி யின் ஏற்பாட்டைப் பலத்த முன் யோசனையுடன் செய்து முடித்திருந்த அந்த அரபு வர்த்தகனின் சிந்தனையின் ஒரு பகுதி, அச்சத்துக்கு ஏதும் இடமில்லையென வற்புறுத்தி னாலும், இன்னொரு பகுதி கண்ணுக்கெதிரேயிருந்த ஆபத்தை விளக்கி அச்சத்தின் அவசியத்தை வலியுறுத்தலாயிற்று. வாணிபப் பொதிகளை ஏற்றிச் செல்வதற்வதற்கா கவே நிர்மாணிக்கப்பட்டிருந்த அந்தப் பார வண்டியில் அசையக்கூட இடமில்லாத வண்ணம் பன்னிரண்டு நீர்க் ‘ குடங்களைத் தஇணித்திருந்த அமீர் அவற்றின் ஆறடி உயரத் தளவுக்குப் பக்கக் கழிகளைச் செருகியதன்றி, அவற்றுக்குப் பாதுகாப்பளிக்கும் பாவனையில் ஏராளமாக வைக் கோலையும் வாழை இலைச் சருகுகளையும் திணித்து அவை கழுத்தளவுவரை மறையும்படி செய்திருந்ததாலும், அவற்றில் ஆறு குடங்களில் காஞ்சனாதேவி, குணவர்மன் இவர்களைத் தவிர கூலவாணிகன், சுங்க அதிகாரி, காஞ்சனாதேவியின் பணிப்பெண்கள் இருவர் ஆகியோரை ஒரு குடம் விட்டு இன்னொரு குடமாகப் பதுங்க வைத் தருந்ததாலும் அவர்களைப் பதுங்க வைத்த குடங்களின் கழுத்துக்குக் கழே இரண்டொரு பெரும் துவாரங்களைச் செய்து மூச்சு விடவும் ஏற்பாடு செய்திருந்ததாலும், அச்சத் துக்கு எந்தவிதக் காரணமும் இல்லை. நீர் நிரம்பியிருந்த குடங்களைத் தவிர்த்து மனிதர்கள் பதுங்கியிருந்த குடங் களில் மூச்சுக் காற்றுக்காகத் துளைத்திருந்த துவாரங்கள் வைக்கோலின் மறைவிலும் வாழைச் சருகுகளின் மறை விலுமிருந்தபடியால் அவை இருப்பது யார் கண்ணுக்கும் புலப்படாமல் செய்திருந்தான் அமீர். கிழக்குக் கோட்டை வாசலைத் தாண்டிக் காஞ்சனரதேவி உண்டைவில் மூலம் எரியம்பு வீச நேர்ந்தால் அவள் இருந்த நீர்க்குடத்தின் மூடியை விலக்கும் நோக்கத்துடன் அவள் பதுங்கியிருந்த குடத்தை மட்டும் முன்னணியில் தன் சாட்டைக் கைக்குப் பக்கத்தில் வைத்திருந்தான் அவன். இரவில் செல்லும் இத் தகைய வண்டிகளில் வெளிச்சத்துக்கு இருபுறமும் பந்தங் கள் செருகுவது வழக்கமானாலும், வண்டியில் அதிக வெளிச்சமிருக்கக் கூடாது என்ற எண்ணத்தால் ஒரே ஒரு பந்தத்தை மட்டும் சாட்டை பிடித்திருந்த தனது வலது கைக்கு அருகேயிருந்த பெரும் கழியில் கட்டியிருந்தான். அப்படிப் பிணைத்திருந்த அந்தப் பந்தத்தில் துணியும் அவன் அதிகம் சுற்றாமல் மெல்லிய பந்தமாகவே அதை எரியவிட்டிருந்ததால் அது மிகக் குறைவான ஒளியையே வண்டியில் வீசியிருந்ததன் விளைவாக ஒரு குடத்துக்கும் இன்னொரு குடத்துக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லா திருந்ததோடு அந்தப் பந்தம் வண்டியின் முகப்பில் அமீரின் சாட்டைக் கரத்துக்குப் பக்கத்திலிருந்த காரணத் தால் காஞ்சனாதேவி சரேலென எரியம்பைக் கொளுத்தும் வண்ணம் அவளிருந்த குடத்துக்கு வெகு அருகாமையிலும் அமைந்து கிடந்தது. இது தவிர குடங்களைக் கழுத்து வரையில் மறைத்த பெரும் வாழைச் சருகுகளைச் சின்னஞ் சிறு விசிறிகள் போல் பிரித்து ஆங்காங்கு வைத்திருந்ததால் அவை அந்தந்த இடங்களில் பந்தத்தின் வெளிச்சத்தைத் தடை செய்து குடங்களின்மீது பட்டை பட்டையாக இருட்டைப் பாய்ச்சியிருந்தது. இப்படிப் பல வழியிலும் மறைக்கப்பட்ட குடங்களின் மூடப்பட்ட வாய்கள் கூடச் சட்டென்று பார்வைக்குப் புலனாகாமலே இருந்தன. இத்தனை முன்னேற்பாடுகளைச் செய்த அமீர் இவற்றை யும் மீறிச் சோதனை நடந்தால் தான் நடத்த வேண்டிய வேலையை எண்ணித் தன் வயிற்றுப் பகுதியிலிருந்த கச்சையில் வரிசையாகப் பல குறுவாள்களையும் செருடக் கொண்டிருந்தான்.

இந்த ஏற்பாடுகளைச் செய்து முடிக்கும் முன்பாகவே அநபாயனுக்கும் இளைய பல்லவனுக்கும் தனது அடிமை களின் வேடங்களை அணிவித்த அமீர் அவர்கள் இருவரை யும் முக்காடுகளை நன்றாக இழுத்து முகங்களை மறைத்துக் கொள்ளுமாறு வாள்கள் வெளியில் தெரியாத வண்ணம் அரபு நாட்டுப் பெரு அங்கிகளின் மடிப்புகளில் பதுக்கிப் பிடித்துக் கொள்ளுமாறும் எச்சரிக்கை செய்துவிட்டு, அவர்களிருவரையும் வண்டியின் பின்புறத்தில் உட்கார வைத்த பின்பே வண்டியை ஓட்ட முற்பட்டான். இந்த ஏற்பாடுகள் பரிபூரண திருப்தியையே ஆரம்பத்தில் அளித் இருந்தன அமீருக்கு. தன் வாணிபத்தை முதல் நாளே மற்றொரு வாணிகனுக்கு விற்று அவனிடமிருந்த விலைப் பொருளைப் பொற்காசுகளாகப் பெற்றுக்கொண்ட அமீர், அந்தப் பொற்காசுகளைத் தான் வழக்கமாக வைக்கும் பெட்டியில் வைத்துக்கூடக் கொண்டு வரவில்லை. நீர்க் குடங்களின் வண்டியில் பணப்பெட்டி தென்பட்டால் கேள்விக்கு இடமாகுமென்று கருதிய அமீர் பொற்காசு களை ஐந்தாறு துணிப்பைகளில் கட்டி நீர்க் குடங்களுக்கு இடையிடையே இருந்த இடங்களில் வைத்து மேலே வைக்கோலைத் தூவி மறைத்திருந்தான். இப்படி ஒவ்வொரு காரியத்தையும் அணு அணுவாகக் கவனித்து ஆபத்தை எத்தனை தூரம் தவிர்க்க முடியுமோ அத்தனை தூரம் தவிர்த்து சந்தேகத்தை எவ்வளவு தூரம் விலக்க முடியுமோ அவ்வளவு தூரம் விலக்கியிருந்தான் அந்த அரபு நாட்டுச் சிறுவணிகன். அது மட்டுமின்றிச் சீனக் கப்பலுக்குத் தன் வீட்டிலிருந்தே நீர்க்குடங்கள் செல்வதை வலியுறுத்தும் பொருட்டுப் பகல்முதலே சனக்கப்பல்களிரண்டி லிருந்தும் பல நீர்க்கடங்களை வரவழைத்துத் தனது வண்டிகள் இரண்டொன்றிலும் நீர் நிரம்பிய குடங்களை அந்தக் கப்பல்களுக்கு இரண்டு மூன்று முறை அனுப்பியும் இருந்தான். அப்படி. அனுப்பிய ஒவ்வொரு வண்டியையும் கோதாவரிக்கரைக் குடிசைக்கு அனுப்பி சங்கமக் கலங்கலற்றிருந்த தெள்ளிய கோதாவரி நீரை அங்கிருந்தே நிரப்பிப் பிறகு வண்டிகளைத் தன் வீட்டுக்குக் கொண்டு வந்து வீட்டிலிருந்தே வண்டிகளைக் கடற்கரைக்கு அனுப்பி வைத்தான். அப்படி அனுப்பிய ஒவ்வொரு வண்டியிலும் வண்டியோட்டுபவனைத் தவிர பின்புறத்தில் இரு அடிமைகளையும் உட்கார வைத்து அனுப்பினான். கடைசியாக வரும் தனது வண்டியை யாரும் சந்தேகஇக்கக் கூடாதென்பதற்காக முன்கூட்டியே இத்தகைய எச்சரிக்கையுடன் ஏற்பாடுகளைச் செய்த அமீர், தனது வண்டிகள் பலவற்றின் சோதனை ஏற்கெனவே நடந்துவிட்டதையும் உணர்ந்திருந்தானாகையால் எப்படியும் இந்த வண்டிக்கு அதிகச் சோதனையிருக்காதென்ற துணிவுடனேயே வீட்டை விட்டுக் கிளம்பினான். அப்படித் துணிவைத் துணை கொண்டு கிழக்குக் கோட்டை வாசலைத் தூரத்திலிருந்து பார்த்த அமீரின் துணிவைப் பயம் எனும் ஆம்பு தடீ ரெனத் துளைத்தது. தூரத்தில் தெரிந்த காட்சியைக் கண்டதும் அவன் இதயம் பெரிதும் படபடக்கத் துவங்கியது.

சந்திரன் உதயமாக இன்னும் இரண்டு நாழிகைகள் இருந்ததால் இருள் சூழ்ந்து கிடந்த கடல் பிரதேசத்துக்கு வெளிச்சம் காட்டும் தூதன் போல் பெரும் பந்தங்களுடன் ஜாஜ்வல்லியமாகக் காட்சியளித்தது கிழக்குக் கோட்டை வாசல். கோட்டை வாயிலின் பக்கச் சுவர்களில் பொருத்தப் பட்டிருந்த பெரும் பந்தங்கள் மட்டுமின்றி யவன நாட்டு வெண்கலப் பெருவிளக்குகளும் தங்கள் தீ நாக்குகளைப் பெரிதாக நீட்டி ரத்த வெறி பிடித்த ராட்சதர்களைப் போல் காட்சியளித்தன. சாதாரணமாகப் பத்துப் பன்னி ரண்டு வீரர்களுக்கு மேல் காவலிருக்காத அந்தக் கோட்டை வாசலில் காவல் நான்கு பங்கு அதிகமாயிருந்ததால் காவல் வீரர்களின் புரவிகள் அணிவகுப்பட்டு ஒன்றை யொன்று பயங்கரமாய் உராய்ந்துகொண்டு நின்றன. வெறும் வாள்களையே ஏந்தி நிற்கும் காவல் வீரர்கள் மட்டுமின்றிப் பெரிய ஈட்டிகளைத் தாங்கிக்கொண்டு இருபது குதிரை வீரர்கள் கிழக்குக் கோட்டை வாசலின் கடலின் வழியை மறித்து நின்றுகொண்டிருந்தனர். சுமார் நாற்பதடி அகலமிருந்த.. அந்தக் கிழக்குக் கோட்டை வாசலின் இருபுறங்களிலும் புரவி வீரர்கள் இரட்டை வரிசையாக நிற்க வைக்கப் பட்டிருந்ததால் இடையே ஒரு சமயத்தில் ஒரு வண்டி மட்டுமே செல்ல மார்க்கமிருந்தது.

இந்த ஏற்பாடுகளைத் தூரத்தில் இருந்தே கவனித்த அமீர், காவலின் அமைப்பிலிருந்த முறையை நோக்கி தாங்கள் எத்தனை சாமர்த்தியமாக நடந்துகொண்டாலும் தப்புவது பிரம்மப்பிரயத்தனமென்ற தீர்மானத்துக்கு வந்த தால் அவன் அஞ்சா நெஞ்சமும் அஞ்சவே செய்தது. ஆகவே அவன் தலையை திருப்பாமலே சாட்டையைப் பின்புற நீர்க்குடமொன்றில் திருப்பித் தட்டி, “சற்றுக் கோட்டை வாசலைப் பாருங்கள்” என்றான். அந்தச் சொற்கள் காதில் விழுந்ததும் ஏக காலத்தில் இளைய பல்லவனும் அநபாயனும் சற்றுத் திரும்பிக் கோட்டை வாசலைக் கவனித்தார்களானாலும் அநபாயன் மட்டுமே அமீருக்குப் பதில் சொல்லத் துவங்கி, “ஆம், காவல் கடுமையாகத்தானிருக்கிறது” என்று முணுமுணுத்தான்.

“வண்டி கோட்டை வாசலை நெருங்கியதும் நாற் புறமும் சூழப்படும்.

முன்னும் பின்னும் பக்கங்களிலும் காவல் நெருக்கமாக இருக்கிறது” என்று முன்னே வைத்த கண்ணைப் பின்புறம் திருப்பாமலே மெள்ள விளக்கினான் அமீர்.

“ஆம். சோதனை முடிந்து அவர்கள் வழி விட்டாலும் நாம் கோட்டை வாயிலைக் கடந்து நீர்க்கரைக்குச் செல்லும் பாதையிலிறங்குவது கஷ்டம். அந்தப் பாதை யையும் அடைத்து நிற்கிறது படை” என்றான் அநபாயன்.

“சோதனையின்போதே சந்தேகம் வந்தால் என்ன செய்வது?” என்று மீண்டும் வினவினான் அமீர்.

“சோதனையின் போதும் காளைகளை அடியோடு நிறுத்தாதே. தாரைப் பாய்ச்சிக் காளைகளை அசைய விட்டு அவை பழக்கப்படாத முரட்டுக் காளைகளெனப் பாசாங்கு செய்துகொண்டிரு. வீரர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால் காளைகளை ஒரே முடுக்காக முடுக்கிப் பாய்ச்சிலில் செல்லவிடு” என்றான் அநபாயன்.

“எதிரே சுவர்போல் மறைந்திருக்கும் குதிரை வீரா் வரிசையை என்ன செய்வது?” என்றான் அமீர் அச்சத்துடன்.

“வண்டியின் வேகம் வரிசையைப் பிளந்துவிடும். பிளவு கூடுவதற்குள் வண்டி பாதையில் இறங்கிவிடும். அடுத்த பொறுப்பு படைத் தலைவருடையது” என்று திட்டமாக அறிவித்தான் அநபாயன்.

மேற்கொண்டு எதுவும் பேசாமல் காளையை முடுக்கிய அமீர், உள்ளே அச்சமிருந்தாலும், வெளியே மிகுந்த அலட்சியத்துடன் வண்டியின் முகப்பில் சாட்டை யும் கையுமாக அமர்ந்திருந்தான். ஜல்ஜல் என்று கழுத்துச் சலங்கைகள் சப்இக்க, கிழக்குக் கோட்டை வாசலின் சோத னைத் தளையை அடைந்துவிட்ட அமீரின் வண்டிக்கு முன்பாக சுமார் பத்து வண்டிகள் நின்றிருந்தனவாகையால் அமீரின் வண்டி முன்பிருந்த வண்டிகள் நகர நகர மெது வாகவே நகர வேண்டியதாயிற்று. கோட்டை வாசலில் அன்று காவல் மட்டும் பலமல்ல, காவல் முறையிலும் புதுமையிருந்ததை கவனித்த அமீரின் சஞ்சலம் பன்மடங்கு அதிகமாயிருந்தது. சாதாரணமாக வரும் வண்டிகளை நான்கு வீரர்கள் மடக்குவார்கள், சுற்றி வந்து சோதனை செய்வார்கள். பிறகு போகலாம் என்று அனுமதிப்பார்கள். அந்த அனுமதி கிடைத்ததும் கடல் தநீர்க்கரைக்குச் செல்லும் பாதையில் வண்டிகள் உருண்டோடும். இன்று அந்த முறை கையாளப்படவில்லை. வாயிலுக்குக் குறுக்கே பெரும் கயிறுகளைக் கொண்ட தளையிருந்தது. அந்தத் தளை நீக்கப்பட்டு ஒவ்வொரு வண்டியாகக் கோட்டை வாயிலுக்குள் அனுமதிக்கப்பட்டது. பிறகு தளை போடப் பட்டு, தளைக்கும் நீர்ப்பாதைக்கும் இடையே இருந்த உட்புறத்தில் சோதனை நடந்தது. அதன்பிறகு “வழி விடு என்று ஒரு வீரன் கூவியதும் நீர்க்கரைப் பாதையை அடைத்து நின்ற குதிரைப்படை வழி விட்டது. பிறகு வண்டி, பாதையில் சென்றது. இப்படி. வண்டிகள் சென்று கொண்டிருந்த முறையைக் கண்ட அமீர், “இனி அஞ்சிப் பயனில்லை, தலைக்குமேல் ஓடிய வெள்ளம் சாண் ஓடினால் என்ன முழம் ஓடினால் என்ன’ என்ற முடிவுக்கு வந்தான்.

முன் வண்டிகள் மெள்ள மெள்ள நகர்ந்தன. தளைக் கயிறுகள் நீக்கப்பட்டு நீக்கப்பட்டு மீண்டும் கட்டப் பட்டன. ‘வழி விடு’ என்று வீரர்கள் போட்ட கூச்சல் மீண்டும் மீண்டும் கேட்டது. முன்னிருந்த ஒவ்வொரு வண்டியும் செல்லச் செல்ல அமீர் வண்டிச் சக்கரங்கள் மெள்ள உருண்டனவே தவிர, அவன் இதயம் மட்டும் வேகத்தைக் குறைக்காமல் அதிகமாக ஓடத் துவங்கியது. முன் வண்டி சட்டென்று நின்ற சமயத்தில் மட்டும் இதயம் ஒரு விநாடி நின்றுவிட்டது போன்ற பிரமையும் அமீருக்கு அவ்வப்பொழுது ஏற்பட்டது. காவல் வீரர்கள் அமர்ந் திருந்த குதிரைகளின் கனைப்பும், அவை காலைத் தூக்கிச் சிலசமயம் தரையில் தட்டி அசைத்ததால் ஏற்பட்ட குளம்படிச் சத்தங்களும் அமீரின் இதயத்தையே தாக்கிக் கொண்டிருந்தன. அவ்வப்பொழுது பந்தங்களுக்குக் காவ லாளிகள் எண்ணெய் விட்டதால் ஏற்பட்ட ‘சொய்’ என்ற சத்தம் அமீரின் இதயத்தையே பந்தமாகவும் எண்ணத் தையே எண்ணெயாகவும் மாற்றி எரியவிட்டதால் அமீரின் உள்ளம் மட்டுமின்றி உடலும் வேகமாக எரியத் தொடங்கியது.

முன் வண்டிகள் மீண்டும் மீண்டும் நகர்ந்தன. அமீரின் வண்டிச் சக்கரங்கள் உருண்டு உருண்டு நின்றன. பின்னா லும் வண்டிகள் வந்துகொண்டிருந்தன. சில சமயங்களில் வெகு அருகில் வந்துவிட்ட பின் வண்டிமாடுகள் அமீர் வண்டியின் பின்புறத்தில் நீண்டு கிடந்த வைக்கோலை இழுத்துத் தின்னவும் தொடங்கின. அப்படி வைக்கோல் இழுக்கப்பட்ட சத்தம்கூடப் பயங்கரமாகத் தெரிந்தது, அந்தச் சூழ்நிலையில் அமீருக்கு. கடைசியாக எழுந்தது வீரர்களின் எச்சரிக்கை ஓலி. “உம் உள்ளே வா!” என்றான் புரவியில் அமர்ந்தருந்த காவல் வீரன் ஒருவன். அந்த அணையைத் தொடர்ந்து கயிறுத் தளை அவிழ்க் கப்பட்டதும் உள்ளே வண்டியை ஓட்டினான் அமீர். பின்னால் மீண்டும் தளை பூட்டப்பட்டதைக் கவனித் தான். முன்னால் கடலுக்குச் செல்லும் பாதையைச் சுவர் போல் மறித்து நின்ற புரவிக் காவற்படையையும் பார்த் தான். தனக்கு வெகு அருகில் பக்கவாட்டில் வாளை உருவிப் பிடித்த வண்ணம் இரு புரவிக் காவலர் எந்த விநாடியிலும் தன் இதயத்தில் வாளைப் பாய்ச்சிவிடக் கூடிய வகையில் நின்றுவிட்டதையும் கவனித்தான். உள்ள நிலையை ஒரு விநாடியில் எடைபோட்ட அமீர் சாட்டை யால் கையை நெற்றிக்காக இருமுறை உயர்த்தி எதிரே யிருந்த வீரர் தலைவனை இருமுறை வணங்கினான். அவனிடம் தனக்குள்ள பரிச்சயத்தைக் காட்டப் புன்முறுவ லொன்றையும் முகத்தில் படரவிட்டுக் கொண்டான்.

அவன் புன்முறுவலை எதிரேயிருந்த காவலர் தலை வனும் கவனித்தானானாலும் அவன் இதழ்களில் பதிலுக்குப் புன்முறுவலேதும் விளையவில்லை. முக்கால் முகத்தைக் கவசத்தால் மூடியிருந்த அந்த வீரன் அமீரைக் கூர்ந்து ஒருமுறை நோக்கியபின்பு, தன் புரவியை நடத்திக் கொண்டு இருமூறை வண்டியை வலம் வந்தான். தீன் வாளின் நுனியால் இரண்டொரு குடங்களைத் தட்டவும் செய்தான். குடங்களிரண்டும் நீர் நிரம்பியிருந்ததால் ‘தட்தட்’ என்று ஏற்பட்ட சத்தம் பெரும் அமுதமாக அமீரின் இதயத்தில் பாய்ந்தது. அதற்குமேல் அபாயம் நீங்கி விட்டதாக நினைத்த அமீர் சற்றுத் தைரியத்துடன் பெருமூச்சும் விட்டான். ஆனால் நீர்க்குடங்களின் சப்தங் களைக் கேட்ட காவலர் தலைவன் திருப்தியடைந்ததாகத் தெரியவில்லை. மீண்டும் ஒருமுறை வண்டியைச் சுற்றி வந்தான். இம்முறை பின்புறம் வந்ததும் அங்கு உட்கார்ந் திருந்த இரு அடிமைகளையும் நோக்கிவிட்டு, அவ்விருவரில் ஒருவரை, “யார் நீ?” என்று கேட்டு அடுத்தவிநாடி என்ன நடக்குமென்று மற்றவர்கள் யோசிக்குமுன்பே தன் வாளின் நுனியால் ஒருவனது முக்காட்டைச் சரேலெனத் தூக்கி னான். இளையபல்லவன் ஈட்டி விழிகள் காவலன் கண் களுடன் திடீரெனக் கலந்தன. கலந்த கண்கள் அதிர்ச்சி யடைந்தன. அந்த இருவரும் ஒருவரையொருவர் அந்த இடத்தில் எதிர்பார்க்கவேயில்லை.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் - 36

சாதனை

பாரலூர்ப் பெருந்துறையின் கீழ்க்கோட்டை வாசல் காவலர் தலைவன் உடையில் மறைந்து புரவிமேல் ஆரோ கணித்து ராட்சத சொரூபமாய் விளங்கிய மன்னன் பீமவுடைய பெரு விழிகளைக் கண்டதால் கருணாகர “ பல்லவனும், நீர்க்குடங்கள் நிரம்பிய பின்புற வண்டியில் அடிமை வேடத்தில் இளையபல்லவன் காட்சியளித்ததால் தென் கலிங்கத்து பீமனும் திகைப்பின் எல்லையை ஒரே சமயத்தில் அடைந்தார்களானாலும், அந்தத் திகைப்பு பீமனைவிட கருணாகர பல்லவனுக்கே அதிகமாய் இருந்தது. தன் கைவசமிருந்து பறந்துவிட்ட பறவைகள் தப்பும் ஒரே மார்க்கம் கிழக்குக் கோட்டை வாசல்தான் என்பதைச் சந்தேகமறத் தீர்மானித்துக் கொண்டதாலும், அப்படித் தப்புவதானால் அவர்கள் சந்திரன் உதயமாகு முன்புள்ள இருட்டிலேயே தப்ப வேண்டுமென்பதையும் உஎடித்துக் கொண்டதாலும், காவலரையும் நம்பாமல் எதிரிகள் எப்படி. வருவார்களென்பதை எதிர்பார்த்த வண்ணம் காவலர் தலைவன் உடையணிந்து தானே வண்டிகளை எட்டு நாழிகைகள் வரை பரிசோதிப்பதென முடிவு கட்டிக் காவல் புரிந்த தென்கலிங்கத்துக் காவலனுக்கு இளையபல்லவனைக் கண்டதும் அதிர்ச்சி ஏற்பட்டாலும் முன்கூட்டி எதிர்பார்த்த காரணத்தால் அதிர்ச்சி சற்று குறைவாக இருந்தது.

ஆனால் தங்களைப் பிடிக்க பீமன் காவலன் உடை யணிந்து காவல் புரியவும் முனைவானென்பதைச் சற்றும் எதிர்பாராத இளையபல்லவன் அவனைத் தன் எதிரே கண்டதும் அளவுக்கு மீறிய வியப்பும் அதிர்ச்சியுமே அடைந்தான். அதுமட்டுமல்ல. இரண்டு தடவை வண்டி யைச் சுற்றி வரும்வரை பீமனை அமீர் எப்படி அடை யாளம் கண்டுகொள்ளாமல் இருந்தான் என்பதும் சட்டென்று புரியாது போகவே அதிர்ச்சி சற்று எல்லை கடந்ததாகவே இருந்தது. ஆனால் அடுத்த வினாடி பீமன் தலையில் யவனர்களின் உலோகக் கவசத்தை அணிந் திருந்ததையும் அதன் முகப்பு மூடியை முகத்தை முக்கால் வாசி மறைக்கும்படி. இழுத்துத் தாழ்த்தியிருந்ததால் நேர்ப் பார்வைக்கு முகத்தின் கீழ்ப்பாகம் மட்டுமே தெரியுமாத லால் யாரும் பீமனைச் சட்டென்று புரிந்துகொள்ள முடியாதென்பதையும் உணர்ந்துகொண்ட இளைய பல்லவன், ஆபத்தான அந்தச் சமயத்திலும், அதிர்ச்சி மனத்தைக் கவ்விய அந்த நேரத்திலும், தென் கலிங்கத்து மன்னன் திறனை மனத்துக்குள் பாராட்டவே செய்தான். பீமன் புரவிமேலிருந்து தன்னைக் இழ்ப்புறம் கவனித்த தாலும் தானும் திடீரெனத் தலையைத் தூக்கியதாலுமே பீமனை யாரெனத் தான் புரிந்துகொள்ள முடிந்ததென் பதைச் சந்தேகமற உணர்ந்த இளையபல்லவன் சரேலெனத் தன் வாளை வெகு வேகமாக உறையிலிருந்து உருவினான். அந்தச் சமயத்தில் மட்டும் பீமன் ஆணவத்துக்கு இடங் கொடுக்காமல் நடந்துகொண்டிருந்தால் அடுத்த நாள் உதயத்தை அந்த வண்டியிலிருந்த யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆனால் இரத்தத்தில் இயற்கையாக ஊறிவிட்ட மமதை பீமனைப் பலமாக நகைக்கச் செய்தது. முதலில் நகைத் தவன் அத்துடன் நிற்காமல் காவல் பலத்தால் ஏற்பட்ட துணிவாலும், அசட்டையாலும் உடனே நடவடிக்கை துவங்காமல், “அடிமை வேடத்தில் படைத் தலைவரா?” என்று இரைந்து கூறி இடிஇடியென இன்னொரு முறையும் நகைத்தான். மூன்றாம் முறை அவன் நகைக்கவில்லை. காளைகள் கனவேகத்தில் தஇடீரென எதிரேயிருந்த குதிரைப் படை வரிசையை நோக்கிப் பாய்ந்தன. அடுத்த விநாடி அந்தக் கோட்டை வாயிலைப் பெரும் குழப்பம் சூழ்ந்துகொண்டது.

சிரிப்பினால் விளைந்த விபரீதங்கள் பல புராணங் களில் அத்தாட்சி அவற்றுக்கு நிரம்ப உண்டு. அன்று திரெளபதி சிரித்ததால் விளைந்தது மகாபாரதம். இன்று பீமன் சிரித்ததால் விளைந்தது வேறொரு விபரீதம். கலிங்கத்தின் பிற்கால அவலநிலைக்கு அன்றே அடிகோலியது பீமன் சிரிப்பு. எந்த விநாடியிலும் தாங்கள் வளைக்கப் படலாமென்பதை அறிந்து இந்திரியங்களை ஊசி முனை யில் நிறுத்தக்கொண்டிருந்த அமீர் பின்னால் திடீரென ஏற்பட்ட சிரிப்பைக் கேட்டதும் தன் இடையிலிருந்த குறுவாள்களை மின்னல் வேகத்தில் எடுத்து விர்விர்ரென்று எதிரே வழிமறித்து நின்ற குதிரை வீரர்கள் மீது வீசிவிட்டு அதேசமயத்தில் சாட்டையையும் பளீர் பளீரெனக் காளைகளின் முதுகில் வெகு வேகமாகத் தாக்கினான்.

எண்ணிக்கையின் அதிகத்தாலும், காவலை யாரும் பிளக்க முடியாதென்ற சித்தத்தாலும் பலத்த எச்சரிக்கை யிலும் சிறிது அசிரத்தையைக் கலந்துகொண்ட குதிரை வீரர் வரிசை, கண்ணிமைக்கும் வேகத்தில் அமீர் வீசிய குறுவாள்களால் சட்டென்று பிளவு கொடுத்தது. புரவிகளி லிருந்து சட்டென்று நிலத்தில் மூன்று வீரர்கள் விழு வதற்கும் குறுவாளால் தாக்கப்பட்ட புரவியொன்று வீரிட்டுக் குறுக்கே ஓடி, வரிசையைக் கலைப்பதற்கும் வண்டிக் காளைகள் திடீரென வாயு வேகத்தில் பறப்பதற்கும் அவகாசம் சரியாக இருக்கவே எதிர்வரிசை மின்னல் வேகத்தில் பிளந்தது.

அப்படிப் புரவிகள் வரிசை பிளந்த அதே விநாடியில், “மடக்குங்கள் வண்டியை” என்று பிரம்மாண்டமாக எழுந்த பீமன் கூச்சல் அந்தக் கோட்டைப் பிரதேசத்தில் பலமாக எதிரொலி செய்யவே இருபது முப்பது வீரர்கள் வாள்களுடனும், ஈட்டிகளுடனும் வண்டியின் பின்புறம் கனவேகத்தில் நெருங்கினார்கள். வேல்கள் வண்டியை நோக்கிப் பறந்தன. ஆனால் வண்டி, வேல்களைவிட வேக மாகப் பாதையில் பறந்தது. காளைகளைவிடப் புரவிகள் வேகம் வாய்ந்தவைதான். காவல் செய்த புரவிப் படைக்குச் சுதந்திரம் இருந்தால். அவை அந்தக் காளைமாட்டு நீர்க் குட வண்டியைத் துரத்தி கணநேரத்தில் மடக்கியிருக்க முடியும். ஆனால் முடியாத ஒரு பெருந்தடை அவர்களுக்கு எதிரே நின்றது. சோழ நாட்டு வீரம் எப்படியிருக்கும் என்பதை அங்கே அன்று கலிங்க வீரர்கள் கண்டார்கள். அமீர் மூன்று புரவி வீரர்களைத் திடீரெனத் தன் குறுவாள்களுக்கும் பலி கொடுத்துக் குதிரையொன்றின் வயிற்றிலும் கத்தி எரிந்து குழப்பத்தை விளைவித்துப் புரவிப் படையைப் பிளந்து ஊடுருவியதும் வண்டி கோட்டை வாசலின் உயரத்திலிருந்து கனவேகமாகச் சரிவுப் பாதையில் பாய்ந்தது. கோட்டை வாசலின் முகப்பி லிருந்து கடற்கரை மணலில் இறங்கிய அந்தப் பாதையின் ஆரம்பம் வந்ததும் சரேலெனக் &ழே குதித்த இளைய பல்லவன் தன் வாளை உருவிக்கொண்டு எதிரே வந்த புரவிப்படையைத் தேக்கினான்.

அமீர் விளைத்த குழப்பத்தின் விளைவாக அணி வகுத்து வரமுடியாமல் தாறுமாறாக வந்த புரவிப் படை யின் முகப்பில் வந்த வீரனொருவன் புரவியின் வயிற்றில் கண்ணிமைக்கும் நேரத்தில் தன் வாளைப் பாய்ச்சி இழுத்த கருணாகர பல்லவன் மல்லாந்து அந்தக் குதிரையிலிருந்து விழுந்த வீரனின் கழுத்திலும் கத்தியைப் பாய்ச்சிவிட்டு அவன் கையிலிருந்த வேலை எடுத்து எதிரே வந்த நாலைந்து புரவி வீரர்களில் ஒருவன்மீது வீசினான். வேலை நேராக மார்பில் தாங்கி மாண்டு விழுந்த அந்த வீரனின் குதிரைமீது ஒரே தாவாகத் தாவி ஏறிய சோழர் படைத் தலைவன் குதிரையைக் கன வேகத்துடன் அப்புறமும் இப்புறமும் திருப்பியும் தன் நீண்ட வாளை மின்னல் வேகத்தில் சுழற்றியும் வண்டியைப் பின்பற்ற முயன்ற புரவி வீரர்களைத் தேக்கினான்.

அமீரின் வண்டி திடீரென முன்னோக்கிப் பாய்ந்து சென்றுவிட்டதாலும், தன் ஆணைப்படி காவல் வீரர்கள் வண்டியைத் தொடர முற்பட்டதாலும் பின்னால் தங்க நேர்ந்த பீமன் தன் கண்ணெதிரே நடந்து கொண்டிருந்த வீர ஜாலத்தைக் கண்டு நம்ப முடியாமல் வியப்பின் வசப் பட்டு, குதிரையில் அசையாமல் சில விநாடிகள் உட்கார்ந்து விட்டான். அமீரின் வண்டி திடீரெனப் பாய்ந்த வேகம், புரவிப் படை வரிசையில் மூன்று வீரர்கள் திடீரென உருண்டு மாண்டது, வரிசை பிளந்து வண்டி யோடியது, இத்தனையும் பீமனுக்கு வியப்பை அளித்த தென்றால், இளையபல்லவன் வண்டியிலிருந்து குதித்துக் குதிரையொன்றை மாய்த்துத் தன் வீரர்களைக் கோட்டை வாசல் முகப்பிலேயே தேக்கியதன்றி, தன் காவல் வீரனொருவனின் புரவிமீதும் தாவி வாளைச் சுழற்றிக் குதிரையைத் திருப்பி வளைந்து வளைந்து போரிடவும் முற்பட்டது ஆச்சரியத்தின் எல்லையையும் தாண்டி அவனைக் கொண்டு சென்றது. அதன் வசப்பட்ட பீமன் அவசியமான நாழிகைக்கு அதிகமாகவே தன் வீரர்கள் தேக்கப்பட்டு விட்டதைக்கூட நினைத்துப் பார்க்கச் சக்தியற்றவனாய் இளையபல்லவனின் துணிவை நினைத்து மலைத்து நின்றான்.

அந்த நினைப்பும், நினைப்பினால் ஏற்பட்ட மலைப்பும் சில விநாடிகள்தான் நின்றன. ஆனால் அந்த விநாடிக்குள் நிகழ்ந்த விபரீதம் கணக்கிட முடியாது. புரவிமேல் ஆரோ கணித்து வாளை வீசிக்கொண்டு கால ருத்திரன் போல் சுழன்ற இளையபல்லவன் நாலைந்து வீரர்களை மாய்த்து விட்டதன்றி, தனது புரவியைக் கோட்டை வாயிலின் குறுக்கே வடக்கும் தெற்குமாக ஓடவிட்டு, புரவிப் படையினர் யாரும் அருகே வர முடியாதபடி தடுத்து நின்றான். அப்படி நின்ற சமயத்தில் தற்காலிகமாகத் தனக்கு ஏற்பட்ட வெற்றியைக் கண்டு பெருமிதமும் அந்த வெற்றியின் விளைவாக அநபாயன் காஞ்சனாதேவி முதலியோர் தப்பிவிட முடியும் என்ற நினைப்பால் மன அறுதலும் கொண்டான் இளையபல்லவன். அந்த மன அறுதலுடன் தன் நிலையும் புரிந்தே இருந்தது அவனுக்கு. எதிரே வரிசை வரிசையாக வந்து கொண்டிருந்த வீரர் களுக்குத் தான் பலியாக அதிக நேரமாகாது என்பதை உணர்ந்துகொண்ட கருணாகர பல்லவன், அந்த உணர்ச்சி யின் விளைவாகச் சற்றும் கலவரப்படாமல் மிகுந்த வேகத்துடனும் ஆனால் நிதானத்துடனும் போரிட்டான். தன் உள்ளத்தைக் கவர்ந்து நின்ற காஞ்சனாதேவியும் அநபாயனும் தப்புவதற்கும், தான் முதல் பலியாவதானால், எதிரிகளைப் பெரும் பலிகொடுத்தே சாவதென்ற முடி வுடன் மிக உக்கிரமாகப் போரில் இறங்கிய இளைய பல்லவன், எதிர்நோக்கி வந்த புரவி வீரர்களின் நால்வர் வாள்களைத் தன் வாளால் மிக வேகமாகத் தடுத்தான். அப்படித் தடுத்தும் திடீரெனக் குதிரையை. முன் செலுத்தி இரண்டொருவர் மார்புகளில் வாளைப் பாய்ச்சி இழுத்தும் பலி கொடுத்து மெள்ள மெள்ளப் பின்னடைந்தான்.

எதிரேயிருந்த வீரர்கள் மீண்டும் மீண்டும் பலியான தால் அவர்கள் பிரிந்து பக்கவாட்டிலும் வரத் தொடங்கி னார்கள். “உம்! சூழ்ந்து கொள்ளுங்கள் அவனை” என்று தூரத்திலிருந்து கூவிய பீமனின் உத்தரவைத் தொடர்ந்து நாற்புறத்திலும் வீரர் நெருங்க முற்படவே, தன் காலம் நெருங்கிவிட்டதென்ற மூடிவுக்கு வந்தான் இளைய பல்லவன். அவன் வாளைச் சுழற்றிச் சுழற்றிக் குதிரை யையும் சுழற்றிப் போரிடப் போரிட எதிரிகளும் அவனை நாற்புறமும் சூழ்ந்தார்கள்.. அதே சமயத்தில் பீமன் உத்தரவுப்படி மற்றொரு பிரிவு அவனைப் பக்கவாட்டில் தாண்டி அமீரின் வண்டியையும் மிக வேகமாகத் துரத்தியது. அடுத்த விநாடி தன் கழுத்திலிருந்த கொம்பை எடுத்துப் பீமன் மும்முறை ஊதினான்.

அந்த ஊதலால் கடற்கரைப் பிராந்தியமே இட்ரென உயிர்பெற்றுத் துடித்தது. அந்தக் கொம்பின் ஒலியால் தூரத்தே சுங்கச் சாவடியிலிருந்த வீரர்கள் பலர் சண்டை நடக்கும் இடத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள். வாள்களின் ஓஒலியினால், இளையபல்லவனின் - வாளால் மாண்ட குதிரைகளின் ஓலத்தாலும் அந்தக் கடற்கரை மிகப் பயங்கரமாக எதிரொலி செய்தது. எதிர்பாராத சண்டை ஏற்பட்டதால் படகிலிருந்து மூட்டைகளைத் தூக்கச் சுங்கச் சாவடிக்குச் சென்றுகொண்டிருந்த பணியாட்கள் மூட்டைகளைக் கிழே போட்டுக் கலவரப்பட்டு ஓடினார்கள்.

இந்தக் குழப்பத்தில் இளையபல்லவன் நிலை விநா டிக்கு விநாடி அபாயமாகிக் கொண்டிருந்தது. வெகு வேக மாக வாளைச் சுழற்றிப் போரிட்ட போதிலும் எதிரிகளின் வாள்கள் விளைவித்த காயங்கள் பலவற்றால் அவன் உட லில் குருதி புறப்பட்டு உடையை நனைத்திருந்தது. அவன் புரவியும் காவல் வீரனொருவனின் வேல் வீச்சால் மாண்டு விடவே அது சாயுமுன்பு நிலத்தில் குதத்த இளைய பல்லவன் நிலத்தில் நின்றபடியே போரிட்டான். அந்த நிலையில் நான்கு புரவிகள் அவனை நோக்கிப் பாய்ந்து வந்தன. அவற்றிடம் துவைபடாதிருக்கப் பின்னோக்கிச் சில அடிகள் ஒடி மீண்டும் போரிடத் திரும்பினான் இளையபல்லவன். அதே விநாடியில் பின்புறத்திலிருந்தும் பெருத்த அபாயம் வந்தது அவனுக்கு. குதிரை வீரர்கள் இளையபல்லவனையும் தாண்டி வண்டியைத் தொடர்ந்த தால் அமீர் காஞ்சனாதேவி பதுங்கியிருந்த நீர்க்குடத்தின் மூடியை நீக்கிவிடவே அநபாயன் உத்தரவுப்படி எரியம்பை ஆகாயத்தில் வீசினாள் காஞ்சனாதேவி, ஆக்னேயாஸ்திரம் போல் வானவீதியில் இருளைக் கிழித்துக்கொண்டு சென்ற அந்த எரியம்பின் மர்மம் அறியாத குதிரை வீரர்கள் திடீரெனப் பேராபத்தில் சிக்கினார்கள். எரியம்பின் அடை யாளத்தைக் கண்டதும் குதிரைச்சாலைத் தலைவன் முன்னேற்பாட்டின்படி தயாராக வைத்திருந்த முரட்டு அரபுப் புரவிகளின் தளைகளைப் பல ஆட்களைக் கொண்டு ஒரே சமயத்தில் தரித்துவிடவே, கஇுழக்குக் கோட்டை வாசலுக்கு அடியிலிருந்த கடற்கரை மணலில் இருபது வெறி பிடித்த புரவிகள் வாயு வேகத்தில் தாறு மாறாகப் பறக்கத் தொடங்கியதால் பயங்கரமான பெரும் குழப்பம் அந்தப் பிராந்தியத்தில் ஏற்படவே செய்தது.

அசாயத்தியமான வேகத்துடனும், திடீர் திடீரென கால்களைத் தரையில் உதைத்து மணலைக் குளப்பிக் கொண்டும் பயங்கரமான விதவிதமான கனைப்புகளுடன் அந்த உயர்ந்த சாதி அரபுப் புரவிகள் குறுக்கே ஓடியதால் வண்டியைத் துரத்திய புரவி வீரர்கள் தடுக்கப்பட்டனர். பழக்கப்படுத்தப்படாத அந்த அரபுப் புரவிகள் மிகுந்த வேகத்துடன் அப்புறமும் இப்புறமும் ஆம்புகள்போல் பாய்ந்து பாய்ந்து திரிந்தன. சில புரவிகள் குதிரை வீரர் களின் குதிரைகளையும் தாண்டி எழும்பியதால் அவற்றில் அரோகணித்திருந்தவர்கள்’ மணலில் புரண்டார்கள். மணலில் புரண்ட சிலர் சில புரவிகளின் குளம்புகளில் சிக்குண்டு கதறினார்கள். அந்தப் பயங்கரப் புரவிகள் பழக்கப்பட்ட படைப் புரவிகளை உதைத்தன, கடித்தன. திடீர் திடீரெனத் திரும்பித் திரும்பி ஓடின. மீண்டும் திரும்பித் திரும்பிப் பாய்ந்து வந்தன. சுதந்திரமாகத் தாங்கள் திரிந்த அரபுப் பாலைவன ராஜ்யத்தை இங்கு ஸ்தாபித்தன.

புரவி வீரர்களுடன் போரிட்டுக் கொண்டு பின்னுக்கு நகர்ந்த இளையபல்லவன் ஒருமுறை பின்னுக்குக் கண்ணை ஒட்டி அங்கு நிகழ்ந்த பயங்கரத்தைக் கண்டான். கண்டு வியந்தானா! அஞ்சினானா! அவனுக்கே புரிய வில்லை அவன் உணர்ச்சி! புரவிகள் இருபதை விட்டுப் பின்தொடரும் படையை எப்படி மடக்க முடியும் என்று ஆரம்பத்தில் சந்தேகத்த இளையபல்லவன்,. அந்தப் புரவிகளின் வேகத்தாலும் முரட்டுத்தனத்தாலும் நிகழ்ந்த சேதத்தைக் கண்டு வியக்கவே செய்தான். அந்த வியப்பில் ஒரு வருத்தமும் எழுந்தது அவன் உள்ளத்தில். தானும் மெள்ளப் போரிட்டுக் கொண்டு பின்னால் வந்துவிட்டாலும் தான் தப்பும் மார்க்கத்தை அந்தப் புரவி கள் அடியோடு அடைத்துவிட்டதை எண்ணி வருந்தினான். பின்னால் சென்றால் அரபுப் புரவிகள் மிதித்துவிடும். முன்னால் சென்றால் வீரர்கள் அழித்துவிடுவார்கள். எப்படியும் மரணம் நிச்சயம் என்ற முடிவுக்கு வந்த இளையபல்லவனின் இதயத்தில் சந்துஷ்டியும் நிலவியது. “எப்படியும் அநபாயனும் காஞ்சனாதேவியும் தப்பிவிட்டார்கள். இது பெரும் சாதனை. என் சாதனை” என்று தன்னைப் பாராட்டிக் கொண்டு மரணத்தை வரவேற்க வெறியுடன் போரிட முற்பட்டு, தன் வாளை வெகு வேகமாகச் சுழற்றி முன்னேறி, சுற்றிலும் சூழ்ந்து வந்த வீரர் கூட்டத்தில் புகுந்தான். அந்தத் தருணத்தில் மரணமும் அவனை வரவேற்க முற்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பின்புறம் மூரட்டு அரபு நாட்டுப் புரவிகள் நான்கு அவனை நோக்க ஏன் பாய்ந்து வர வேண்டும்?

அவை மட்டுமா பாய்ந்து வந்தன? இல்லை, இல்லை.

பீமன் சற்றுத் தூரத்திலிருந்து இம்மி பிசகாமல் குறிவைத்து எறிந்த வேலொன்றும் அவன் கழுத்தை நோக்கிப் பறந்து வந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் - 37

பிரிவா, முடிவா?

தூரத்தே புரண்டு புரண்டு வந்து தரையில் மோதிய கடலலைகளைவிடப் பெரும் கனைப்புகளுடனும் வேகத் துடனும் தன்னைப் பின்புறத்தில் மோதப் பாய்ந்து வந்த முரட்டு அரபுப் புரவிகளைப் பார்க்கச் சற்றுக் கண்ணைப் பின்புறம் திருப்பிய இளையபல்லவன், முன்புற எச்சரிக் கையை இழந்தது அரை வினாடியே என்றாலும், அந்த அரை விநாடிக்குள் வெகு லாகவமாக குறிவைத்துப் பீமன் எறிந்த பெரும் வேல் அவன் கழுத்தை மின்னல் போல் தடவி உராய்ந்து தோலையும் ஓரளவு உரித்துச் சென்றதால் மற்றக் காயங்களைவிட அந்தக் காயத்திலிருந்து குருதி பலமாகப் பிரவாடக்கத் தொடங்கியது. வேலெறிவதில் குறி தவறாதவன் எனப் பிரசித்தமுடைய தென் கலிங்கத்துப் பீமனின் வேல் அன்றும் குறி தவறாமல் இளையபல்லவன் கழுத்தை ஊடுருவத்தான் வந்ததென்றாலும், சோழர் படைத் தலைவன் தலைவிதியும் கலிங்கத்தின் பிற்காலக் கதியும் அவன் உயிரை மயிரிழையில் காக்கவே செய்தன. இளையபல்லவன் போராட்டத்திலேயே இருந்திருந்தால் அந்த வேலே அவனை மாய்த்திருக்கும். ஆனால் இடீரெனப். பின்புறத்தில் புரவிகளின் சத்தத்தைக் கேட்டுத் திரும்பி விட்டதாலும், மீண்டும் அவன் கழுத்தைத் திருப்பி எதிரி களை நோக்கு முன்பு வெகு வேகத்துடன் புரவியொன்றும் அவனை முட்டியதால் அவன் உடல் சிறிது நகர்ந்துவிட்ட தாலும் பீமனின் வேல் அவன் உயிரை உறிஞ்ச சக்தியற்ற தாயிற்று. இருப்பிலும் அவன் வேலைவிட்ப் பயங்கரமாகப் பாய்ந்து வந்தன பின்புறத்தில் அரபுப் புரவிகள். எதிரிகள் மீண்டும் அவனைச் சுற்றி வளைத்துத் தாக்கினார்கள்.

மனித வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் அபாயமே பெரும் உதவியாக மாறத்தான் செய்கிறது. இளையபல்லவன் அந்தச் சமயத்திலிருந்த அபாயநிலையில் பின்னால் வந்த புரவிகள் விளைவித்த அபாயம் ஒரளவு நன்மையே விளை வித்தது. கலிங்க வீரர்களுக்கும் இளையபல்லவனுக்கும் எந்தவித வித்தியாசத்தையும் எட்டாத அந்த முரட்டுப் புரவிகள் இளைய பல்லவனை மட்டுமின்றி அவனைச் சூழ்ந்து வந்த கலிங்க வீரர்மீதும் பாய்ந்ததால் வீரர் படை அவனைச் சூழ முடியாமல் பின்னடையவே நாற்புறத்தி லும் சுழன்று போரிட அவசியமில்லாமல் எதிரிகளை நேர் முகமாகவே வாளால் தடுத்தும் வீழ்த்தியும் போரிட்டான் சோழர் படைத் தலைவன். அந்தப் போரும் சில விநாடிகளே நிகழ்ந்தன. புரவிகளின் பாய்ச்சலுக்கும் கடிக்கும் உதைக்கும் அஞ்சிய கலிங்கக் காவல் வீரர்கள் சில அடிகள் பின்வாங்கியது இளைய பல்லவனுக்கு ஓரளவு செளகரிய மாயிருந்தாலும் அவன் அந்தச் சமயத்தில் மரண வேதனை யைப் பரிபூரணமாக அனுபவித்தான். புரவிகள் அவனைச் சில சமயம் உராய்ந்து சென்றபோது, ஏற்கெனவே பல காயங்களிலிருந்து ரத்தம் பெருகியதால் சோகப்பட்டி ருந்த அவன் உடல் தள்ளாடியது. புரவிகள் கடல் மணலைப் பின்புறக் காலால் வாரி வாரியடித்ததால் மணலிலிருந்த சிறுசிறு கற்கள் சுள்சுள்ளென்று அவன் தேகத்தில் பல இடங்களிலும் தாக்கின. வீசப்பட்ட மணல் அங்கியணிந்த பாகங்களைப் பாதிக்காவிட்டாலும் குருதி பாய்ந்த கழுத் இன் பின்புறத்திலும் சதை பிய்ந்த பக்கப் பகுதிகளிலும் தூக்கி, பதிந்து, மிகுந்த எரிச்சலையும் சொல்லவொண்ணா வேதனையையும் விளைவித்தன. திடீர் திடீரெனக் இடைத்த இரண்டொரு உதைகள் அயராத அவன் கால் களையும் அயர வைத்தன. இத்தனையையும் சமாளித்துக் கொண்டு எதிரிகளைத் தேக்கி நின்ற இளைய பல்லவன், காவல் வீரர்களில் சிலர் மாண்டுவிட்டாலும் அவருக்குப் பின்புறத்திலிருந்து மீண்டும் இருபது முப்பது புரவிப் படை வீரர்கள் உதவிக்கு வருவதைக் கவனித்தான். துவண்ட தன் கால்களையும் சற்றே மயக்கம் வந்துகொண்டிருந்த தனது நிலையையும் எண்ணினான். தனக்கு முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறதென்பதைச் சந்தேகமற உணர்ந்தான்.

மரண உணர்ச்சி மனிதனுக்கு எப்பொழுதும் எதிர் பாராத பலத்தையும் வேகத்தையும் அளிக்கும் தன்மை வாய்ந்ததால், மரணத்தை எதிர்நோக்கி நின்ற அந்தக் சமயத்தில் இளையபல்லவனுக்கு இணையற்ற பலத்தையும் அளித்தது. அதைத்தவிர அந்தச்சமயத்தில் புரவி வீரர் அணி முகப்பில் தன் எதிரே ராட்சதன்போல் வந்துவிட்ட பீமன், “வெட்டிப் போடுங்கள் அவனை, உங்களில் நால்வர் சுங்கச் சாவடிப் பக்கம் போய்ச் சங்கமக் கரையோரமாகப் போய் அந்த வண்டியைத் தடை செய்யுங்கள்” என்று உத்தரவிட்டதையும் அந்த உத்தரவைத் தொடர்ந்து அவனுக்குப் பின்புறமிருந்த வீரர் சிலர் புரவிகளின் இடைஹஷூ இல்லாத பக்கமாகச் சுங்கச் சாவடியை நோக்கி விரைந்ததையும் கவனித்த இளையபல்லவன், வெகு சிக்கிரம் அமீரின் வண்டியையும் ஆபத்து சூழ்ந்துவிடும் என்பதை உணர்ந்து கொண்டானாகையால் வாளால் எதிரிகளைத் தாக்கிக்கொண்டு பின்புறம் திரும்பி வண்டியை நோக்கினான். அடுத்த வினாடி பின்புறம் பாய்ந்த முரட்டுப் புரவியொன்று மோதித் தள்ள அவன் நிலத்தில் உருண்டான். அவன் தலையில் இருமுறை இரு குளம்புகள் சட்சட்டென்று தாக்கின. அத்துடன் அவன் நினைவிழந்தான். வேறுபல புரவிகள் அவன்மீது பாய்ந்து சென்றன.

புரவிகளின் அந்தத் தாக்குதலில் அந்த வீரனின் உடல் மணலில் புரண்டதைக் கண்ட பீமன், இனி அவனைக் கவனிக்கத் தேவையில்லையென்ற காரணத்தாலும், தாறு மாறாகப் படையைத் தேக்கும் புரவிகளோடு போரிடுவது அவசியமில்லை என்ற காரணத்தாலும், வண்டியை மடக்க ஏற்பாடு செய்து அநபாயன் முதலியவர்களைப் பிடிப்பதே அடுத்தபடி செய்ய வேண்டிய வேலை என்ற உத்தேசத் தாலும் தன் வீரர்களைப் பக்கவாட்டில் திரும்பச் சொல்லி அவர்களுடன் சுங்கச் சாவடிப் பாதையில் வெகு துரித மாகச் சென்றான். அப்படிச் சென்று கொண்டிருந்த சமயத் தில் அமீரின் வண்டி எங்கிருக்கிறதென்பதைக் கவனிக்க நீர்க் கரையருகே கண்களை ஓட்டினான். புரவிகள் எழுப்பிய மணல் தூசியும் இடையே போடப்பட்ட கப்பிச் சாலையிலிருந்து கிளம்பிய செம்மண் தூசியும் கடற்கரைப் பிராந்தியத்தில் மண்டிக் கிடந்ததால் வண்டி இருந்த இடம் கண்ணுக்குத் தெரியவில்லை கலிங்கத்து அதிபனுக்கு. அந்தத் தூசி மட்டும் மறைக்கவில்லை அமீரின் வண்டியை. அந்த வண்டிக்கு முன் ஓடிய வண்டிகளும் கிழக்குக் கோட்டை வாசலில் நிகழ்ந்த சண்டையால்பயந்த பணி யாட்கள் தாறுமாறாக ஓடியதும் கடற்கரையில் கலவரத் தைத் தடுப்பதற்காகவே நிறுத்தப்பட்டி ருந்த சுங்கக் காவல் வீரர் நீர்க்கரையை அடைக்க விரைந்ததால் ஏற்பட்ட கூட்டமும்கூட வண்டி கண்ணுக்குப் புலப்படாததற்குக் காரணமாயின. புலப்படாத அந்த வண்டியைத் தேக்கும் காரணத்துடன் வெகு வேகமாகச் சுங்கச் சாவடியை அடைந்த பீமன், அங்குள்ள காவல் வீரர்களை நீர்க்குடம் ஏற்றிச் செல்லும் சகல வண்டிகளையும் மறிக்குமாறு உத்தர விட்டான். அத்துடன் எந்த மரக்கலத்தையும் நங்கூரம் எடுக்க அனுமஇக்க வேண்டாமென்று காவல் படகுகளின் மாலுமிகளுக்கும் உத்தரவிட்டான். இந்த உத்தரவுகளின் விளைவாகக் காவல் வீரர்கள் வேகமாக நீர்க்கரை எல்லை முழுவதையும் வளைக்க முற்பட்டனர். பந்தங்களை ஏந்திய படகுகளில் பல, கோதாவரி சங்கம நீரில் படர்ந்து சென்று எங்கும் பரவத் தொடங்கின.

நாலைந்து வண்டிகளின் மறைவில் தனது வண்டியை ஓட்டினாலும் பின்புறமே பார்த்து வந்த அமீர், இளைய பல்லவனின் நிலையைக் கவனித்தான். புரவிகளின் அட்டகாசத்தைக் சுவனித்தான். பீமன் சுங்கச் சாவடியை நோக்கி விரைந்ததையும் கவனித்தான். அடுத்த சில நிமி டங்கள் சங்கம நீரில் படகுகள் படர்ந்து சென்றதையும் பந்தங்கள் பல அலைமோதிய கரையை நோக்கி ஊர் வதையும் பார்த்தான். தாங்கள் நன்றாக வளைக்கப் பட்டதை உணர்ந்து கொண்டதால் அதுவரை வண்டிக்குப் பின் சென்றவன் சுவடு மாற்றி மற்ற வண்டிகளைத் தாண்டிச் செல்லத் தனது காளைகளை முடுக்கினான்.

வேகமாகச் சென்ற அந்த வண்டியின் பின்புறம் அமர்ந்திருந்த அநபாயனும், அத்தனையையும் கவனிக்கவே செய்தான். அவன் முகம் உணர்ச்சியேதுமற்றுக் கல்லாயிருந்தது. இளையபல்லவன் கதியை முழுவதும் நிர்ணயிக்க முடியாவிட்டாலும், ஓரளவு ஊ௫க்க முடிந்த அவன் இதயத்தின் நிலை எதுவோ சொல்ல முடியாது. ஆனால் முகத்தின் நிலையில் எந்த மாறுதலுமில்லை. வெறித்துச் சில வினாடிகள் கோட்டை வாசல் பிராந்தியத்தில் தன் கண்ணுக்கெதிரே விளைந்த காட்சியை நோக்கினான். பிறகு ஏதும் நடக்காதது போல, “இனி மறைவுக்கு அவசிய மில்லை அமீர். வெகு சீக்கிரம் நாம் காவலரால் சூழப்படுவோம். ஆகவே இவர்களைக் குடங்களிலிருந்து எழுந் திருக்கச் சொல். அளுக்கொரு வாளையும் கொடு” என்றான் அநபாயன் வறண்ட குரலில்.

அமீருக்கு நிலைமை புரிந்திருந்தது. வண்டி நீர்க்கரையை அணுகுவதற்குச் சில அடிகளே இருந்தன. தூர நீர்க் கரையில் பெரும் பந்தமேதுமில்லாமல் மினுக்மினுக்கென்று சிறு விளக்குகளுடன் ஒரு படகு நின்றிருந்ததையும் கவனித் தான். அந்தப் படகைத்தான் தாங்கள் அணுக வேண்டு மென்பதையும், அதை அணுகுமுன்பு சற்றுத் தூரத்தில் வந்துகொண்டிருந்த சுங்கக் காவலர் அதை அணுகி விடுவார்களென்பதையும் உணர்ந்து கொண்டானாதலால், “அநபாயரே சிறிது தாமதியுங்கள். நீர்க்கரையை அடையும் தருணத்தில் அதைச் செய்வோம்” என்று கேட்டுக் கொண்டான். அமீரின் தாமதத்துக்குக் காரணம் அநபாயனுக்குப் புரியாவிட்டாலும், அவன் அதை ஆட்சேபிக்காமல் அடுத்து நேரவேண்டிய சண்டைக்குத் தயாராக நினைவை முடுக்கக் கொண்டு உட்கார்ந்திருந்தான். நீர்க்கரையை அநேகமாக வண்டி நெருங்கிய தருணத்தில் காவலரும் நெருங்கி வந்தனர். வந்தது காவலர் மட்டுமல்ல, அங்கு நின்றிருந்த படகிலிருந்து நான்கு மாலுமிகளும் கரையில் குதித்து வண்டியை எதிர் கொண்டனர். அதேசமயத்தில், “அநபாயரே! வாள்களை எடுத்து இவர்களுக்குக் கொடுங் கள். காஞ்சனாதேவி! வெளியே வாருங்கள். உங்கள் தந்தை யாரும் வெளிவந்து அந்த மாலுமிகளுக்குப் பக்கத்தில் குதிக்கட்டும்” என்றான்.

அடுத்த விநாடி நீர்க்குடங்கள் வண்டியிலிருந்து உருண்டன. அவற்றைத் தொடர்ந்து வண்டியிலிருந்தவர்கள் மணலில் குதித்துக் கரையை நோக்கி விரைந்தார்கள். கட்டின காளைகளை அப்படியே விட்டுவிட்டுக் குதித்த வர்களுக்கு வைக்கோல் மறைவிலிருந்த வாள்களையும் எடுத்தளித்துவிட்டு, வைக்கோல் மறைவிலிருந்த தனது குறுவாள்களையும் கைக்கொண்ட அமீரும், அவர்களைத் தொடர்ந்தான். அவர்களில் முன்சென்ற குணவர்மனும் பணிப்பெண்களுமே படகை அடைய முடிந்தது. மற்றவர் காவலரால் சூழப்பட்டார்கள். சூழ்ந்த காவலர் பதின்மரே யென்பதையும் மற்றவர் சற்றுத் தூரத்திலேயே வருகிறார்க ளென்பதையும் கவனித்த அநபாயன் தன் வாளைக் கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு மூன்று பேர் மேல் பாய்ச்சி இழுத்தான். அவன் வாளுக்கு இரையா? விழுந்த வர்களை அடுத்து வந்த மற்ற இருவரா்களின் வாள்கள் காஞ்சனாதேவியின் வாளின் சுழற்றலுக்குப் பலியாகி ஆகாயத்தில் பறந்தன. போரிட்டுக் கொண்டே அந்த அபூர் வத்தைக் கவனித்த அநபாயன், எதிரிகளின் கைகளிலிருந்த வாள்களை ஒரு சுழற்றில் அவள் எப்படி நீக்கிப் பறக்க வைக்க முடிந்தது என்பதை அறிய முடியாமல் வியப்பின் வசப்பட்டான்.

காஞ்சனாதேவி குழந்தைகளைச் சமாளிப்பது போல் நாலைந்து வீரர்களின் வாள்களைச் சமாளித்துக் கொண் டிருந்தாள். கையில் உறுதியுடன் பிடிக்கப்பட்டி ருந்தாலும், அச்சில் சுழலும் சக்கரம்போல் அவள் வாள் அநாயாச மாகச் சுழலுவதையும், வாள் சுழற்சிக்குத் தக்கபடி. அவள் மணிக்கட்டு அநாயாசமாக அசைந்ததையும் கவனித்த அமீர் கூடப் பிரமித்துப் போனான். அப்படிப் போரிட்ட சமயத்திலும் ஆடை சிறிதும் அலங்காமலும் அங்கலாவண் யங்களில் அதிர்ச்சி ஏதுமில்லாமலும் அவள் போரிட்டதை யும், போரிட்டுக் கொண்டே அவள் பின்னடைந்த சமயத் திலும் அவள் நடையில் அழகுடன் நிதானமுமிருந்ததையும் கவனித்த அமீர், “இது எப்படி சாத்தியம்” என்று வாயைப் பிளந்துகொண்டே வண்டியிலிருந்து கொண்டுவந்த குறு வாள்களைப் பட்பட்டென்று எறிந்து எதிரிகளில் நாலைந்து பேரை விண்ணுலகு அனுப்பினான்.

முதலில் குணவர்மனையும் பணிப்பெண்களையும் கடலை நோக்கிப் போகச் சொல்லி அவர்களுக்குப் பாது காப்பளித்துக் கொண்டே போரிட்டான் அநபாயன். காஞ்சனாதேவி, அமீர், அநபாயன் மூவரும் மெள்ளப் படகை நோக்கி நகர்ந்தார்கள். அந்த மூவராலும் முடிக்கப் பட்ட சுங்கக் காவலர் பதின்மரைத் தொடர்ந்து மேலும் மேலும் சாரிசாரியாக வீரர்கள் வரவே காஞ்சனாதேவி யையும், அநபாயனையும் படகுக்கு விரையச் சொன்ன அமீர், தான் மட்டும் நின்று தூரத்திலிருந்தே இரு குறுவாள் களை வீசினான். சில அடிகளில் வந்து கொண்டிருந்த வீரர் இருவரும் புரவிகளும் மாண்டு விழவே அவர்கள் வேகம் சற்றே தடைப்பட்ட இடை நேரத்தில் அமீர் மாலுமிகளை நோக்கி, “படகு நகரட்டும்” என்று உத்தர விடவே படகு நகர்ந்தது அமீரில்லாமலே. அமீர் கரையில் தங்கிவிட்டதையும், அவனை வீரர்கள் அணுகி வந்து கொண்டிருப்பதையும் ஊர்ந்த படகிலிருந்து கவனித்த அநபாயன், தன் நிலையையும் மறந்து, “அமீர் அமீர்” என்று வாய்விட்டுக் கூவினான்.

காஞ்சனாதேவியின் அஞ்சன விழிகள் கரையைக் கவனித்தன. அமீர் வெகு வேகமாக நீர்க்கரையில் வேறு புறம் ஓடிவந்த வண்டிகளின் மறைவில் மறைந்து விட்டதை அவள் பார்த்தாள். அவனைத் தொடர்ந்து சுங்க அதிகாரி யும் கூலவாணிகனும் ஓடுவதும் அவள் கண்ணுக்குத் தெரிந்தது. “அவர்கள் எங்கு ஓடுகிறார்கள்.” என்று கவலை யுடன் கேட்டாள் காஞ்சனாதேவி.

“தெரியாது” என்றான் அதபாயன்.

“அவர் கதி?” மீண்டும் எழுந்தது அவள் குரல்.

அதுவரை தைரியமாயிருந்த காஞ்சனாதேவி விம்மி னாள். கண்களில் நீர் சுரந்து கரைக்குத் திரையிட்டது. அந்தத் தரையிலும் ஒரு முரட்டுப் புரவி வெகு வேகமாக நீர்க்கரையை நோக்கி ஓடிவருவது தெரிந்தது அவளுக்கு, அந்தக் காட்சியும் சிக்கிரம் இருளில் மறைந்தது. கண்ணுக் குத் தெரிந்ததெல்லாம் சொப்பனமோ என்று கூட அவள் நினைத்தாள். சொப்பனத்தைக் கலைத்தது படகு மாலுமி யொருவனின் குரல். “கப்பல் வந்துவிட்டது” என்று கூறினான் மாலுமி.

அதைத் தொடர்ந்து, “நூலேணியில் ஏறுங்கள் காஞ்சனாதேவி!” என்றது அநபாயன் குரல்,

ஏதோ கனவில் ஏறுவதுபோல் நூலேணியின் மூலம் மரக்கலத்தில் ஏறினாள் அவள். ஏற்கெனவே நங்கூரம் நீக்கப்பட்ட அந்த மரக்கலம் அவளுக்காகவே அத்தனை நேரம் தாமதித்ததைப்போல் அவள் ஏறியதும் நகரவும் தொடங்கியது. அவள் பாலூர் கிழக்கு வாசலை நோக்கி மீண்டும் விம்மினாள். எதிரே அப்பொழுதும் கடற்கரை யில் வீரர்கள் நடமாட்டமும் குழப்பமும் கூச்சலும், பந்தங்களின் அசைவும் இருந்தன. அந்தத் தூரத்திலும் முரட்டுப் புரவிகளின் கனைப்புக் கேட்டது அவள் காது களுக்கு, காவற் படகுகள் பல எங்கும் சங்கமப் பகுஇயில் விரைந்து கொண்டிருந்தன. கப்பல் செல்ல முற்பட்டு விட்டதைக் கண்ட காவற் படகுகளின் எரியம்புகள் அந்தக் கப்பலின்மீது சரமாரியாக வரத் தொடங்கின. அவளைச் சுற்றிலும் பறந்தன. அவற்றைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் கடற்கரையைப் பார்த்துக் கொண்டே நின்றாள் கடாரத்தின் இளவரசி.

“எங்கே அவர்? என்ன ஆனார்?” என்று அவள் தன்னைத்தானே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டாள். “கடல் புறா பறந்து போகிறதே? வாருங்கள் வாருங்கள்” என்று கடற்கரையை நோக்கிக் கையை நீட்டிக் கதறினாள். அவள் கதறலுக்கு யாரும் பதில் சொல்லவில்லை. பெரிதாக எழுந்து மரக்கலத்தைத் தள்ளிச் சென்ற அலைகள்கூட அவளுக்கு ஆதரவு சொல்ல மறுத்து, பேய்ச் சிரிப்புச் சிரிப்ப துபோல் பயங்கரமாகச் சப்திக்கவே செய்தன. காற்றுக் கடவுள்கூட அவளிடம் கருணை இழந்திருக்க வேண்டும். அந்த மரக்கலத்தில் செல்ல இஷ்டமில்லாத அந்தக் கடாரத்து இளவரசியைக் கனவேகத்தில் கடத்திக் கொண்டு பாய்களில் மும்முர,மாகப் பாய்ந்து மரக்கலத் தைக் கடலில் வேகமாகச் செலுத்தினான் காற்றுக் கடவுள். மரக்கலம் ஓடியது. அத்துடன் தன் வாழ்க்கையும் எங்கோ ஓடுவதாக அவள் எண்ணினாள். கரையைப் பிரிந்து கப்பல் வேகத்துடன் சென்றது. காதலனைப் பிரிந்த அவள் வேதனையுடன் சென்றாள். பிரிவுக் கனலில் அவள் வெந்து கொண்டிருந்தாள். “இது பிரிவா? முடிவா?” என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு ஏங்கினாள். துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டதால், மேலும் மேலும் விம்மினாள். அந்த விம்மலுக்குச் சரியாக அவள் மார்பகம் போலவே கடலின் அலைகளும் எழுந்து எழுந்து தாழ்ந்தன. கப்பல் மட்டும் எதையும் லட்சியம் செய்யாமல் ஓடிக்கொண்டிருந்தது.

முதல் பாகம் முற்றும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top