• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கடல் புறா - முதல் பாகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் – 1

இளைய பல்லவன்

“காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த களப் போர் பாடத் திறமினோ” என்று ‘கலிங்கத்துப் பரணி’யில், பரணிக்கோர் புலவரான செயங்கொண்டார் தமிழக மகளிரை அறைகூவி அழைத்து, மகளிர் தத்தம் கணவருடன் நடத்திய கலவிப் போரையும் கழற்சென்னியான முதலாம் குலோத்துங்கன் கலிங்கத்தின்மீது நடத்திய ஆயுதப் போரையும் சிலேடை கோத்துப் பாடியது பல வருஷங் களுக்குப் பின்புதானென்றாலும், அந்தப் போருக்கு வித்திடுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே காரணமாயிருந்த கலிங்கத்தின் பாலூர்ப் பெருந்துறை, சித்திரா பெளர்ணமியின் அந்திமாலை நேரத்தில் இயற்கை வனப்பின் எல்லையை எட்டிக் கொண்டிருந்தாலும், இயற்கை வனப்புடன் இணையும் எத்தனை எத்தனையோ செயற்கைக் கஷ்டங்களையும் சுட்டிக்காட்டிக் கொண்டுதானிருந்தது.

மாலைக் கதிரவன் தன் மஞ்சள் நிறக் கதிர்களை எதிரேயிருந்த வங்கக். கடலின் நீலநிற அலைகளின்மீது பாய்ச்சி, மயில்துத்தத்தை தங்கமாக அடிக்கும் ரசவாதியைப்போல, அலைகளின் நிறத்தைப் பொன்னிறமாக மாற்றிக்கொண்டிருந்தாலும், அந்த மாற்றமும் ரசவாதி அகன்றவுடன் மறைந்துவிடும் மாயாஜாலத்தைப்போலவே, ஆதவன் மறைய அகன்று அகன்று சிருஷ்டியின் அநித்தியத்தை நிரூபித்துக்கொண்டிருந்தது.அத்தகிரியில் தோன்றி மைஞ்சூரை, பூரணை, பிராணிஹிதை, பேன கங்கை, வேணு கங்கை, இந்திரவதி ஆகிய ஆறு உபநதிகளையும் சேர்த்தணைத்துக் கொண்டதால் பிரும்மாண்டமாகப் பெருகத் தொண்ணூறு காத தூரம் ஓடிவந்த களைப்பைப் போக்கிக்கொள்ள பாலூர்ப் பெருந்துறைக் கருல் கடற் கணவனுடன் வேகமாக மோதிக் கலந்துவிட்ட புண்ய நதியான கோதாவரியின் வண்டல் கலந்த செந்நிற நீரும் ஆதவனுக்குத் துணை செய்து நீலக்கடலின் நிறத்தை சங்கமப் பகுதியில் சிறிது தங்கமாக மாற்றியதென்றாலும், மாலை நேரக் காற்றால் திரும்பத் திரும்ப எழுந்த பெரும் அலைகள் கோதாவரியின் பொன்னிற நீருக்கும், பழைய மயில் துத்தத்தின் நிறத்தையே அளித்துப் ‘பிற்காலத்தில் இந்தக் கலிங்கத்தின் பொன்னும் மணியும் சூறையாடப் படும், நிலைப்பது மதிப்பற்ற மயில்துத்தம் தான்’ என்பதை அறிவுறுத்திக் கொண்டிருந்தன. சில வருஷங்களுக்குள்ளாகவே கலிங்க நாடு நிலைகுலைந்து கலங்கிப் போய் விடும் என்பதை முன்கூட்டி அறிவிக்க விரும்பியதுபோல் ஓரத்தே அடிக்கடி கலங்கிப் பொன்னிறம் பெற்ற வங்கக் கடல்நீரை வானிலிருந்து கவனித்த இரண்டொரு வெண்ணிற மேகங்களுக்கும் அந்திச்சூரியன் தனது பொன்னிறத்தைப் பூசத்தான் முயன்றான். ஆனால் அந்த மாயையிலிருந்து தப்ப முயன்றனபோல் மேகத் துண்டுகள் இழக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன.

கோதாவரியின் முகத்துவாரத்தை அடுத்தாற்போல் பிரும்மாண்டமாக எழுந்த பெரும் கோட்டை மதில்களுக்குப் பின்னாலிருந்த அரண்மனை உப்பரிகை உச்சியில் தெரிந்த கலிங்கத்தின் பெருங்கொடி தனக்கு நிகரில்லையெனக் காற்றில் பட படத்துக் கொண்டிருந்தாலும், எதிரே கடலில் நங்கூரம் பாய்ச்சி நின்ற பல நாட்டுக் கப்பல்களின் கொடிகள், அலைகளால் உந்தப்பட்ட நாவாய்கள் முன்னும் பின்னும் ஆடியதன் விளைவாக, தங்கள் கொடி மரங்களுடன் முன்னால் முன்னால் சாய்ந்து சக்கரம் உனக்குத் தண் டனை இருக்கிறது. ஆணவம் வேண்டாம்’ என எச்சரித்துக் கொண்டிருந்தன. அந்த நாவாய்களிலிருந்து கரையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த வணிகப் படகுகளின் துடுப்புகள் சரேல் சரேலென்று துழாவப்பட்டதாலும் கரையோரம் வந்து இழுக்கப்பட்ட படகுகளாலும், படக லிருந்து குதித்த வணிகர்களாலும், கரையோரத்திலும் சற்றுத் தள்ளியும் இருந்த கட்டுமரங்களில் மீன் பிடிக்க மீனவர் வீசிய வலைகள் பலமாகப் பல இடங்களில் இழுக்கப்பட்டதாலும், அந்தப் பெருந்துறையின் கரையோர நீர் பெரிதும் குழம்பியும் கலங்கியும் இருந்தது.

தமிழர்கள் அதிகமாகக் குடியேறியதால், தமிழகத்தில் சாதாரணமாக வைக்கப்படும் ஊர்ப் பெயரைப் போல கலிங்கத்தின் அந்தப் பெருந்துறைக்குப் பாலூர் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பெயரைப் “பாலூரா” என்று கிரேக்க வணிகர்களும், அராபியரும், சினத்தாரும் அழைத்தார்களாதலால் சரித்திரத்தில் பாலூரா என்றே அந்தத் துறைமுகத்தின் பெயர் நிலைத்து விட்டது. இருப்பினும், பர்லுக்கும் அந்த ஊருக்கும் சம்பந்தமில்லையென்பதைச் சுட்டிக் காட்ட இஷ்டப் பட்டவன்போல் சித்திரா பெளர்ணமி தினத்தின் அந்த மாலை நேரத்தில் கதிரவன் மறையும் சிறிது நேரத்திற்கு முன்பாகவே தன் பால் நிறத்தை வெளிக்குக் காட்டாமல் ஏதோ பெருங்கோபத்துடன் விழிப்பவன்போல் சிவந்த பந்தாக முழுச் சந்திரனும் மெள்ள வானவெளியில் தோன்றினான்.

தங்க சூரியன் மறைய முற்பட்டுத் ‘தங்கமஇ தலை விடப் பன்மடங்கு அதிகமாகக் கண்ணையும் இதயத்தையும் கவர்ந்தது. அத்துடன் அந்தத் துறைமுகத்தே வேதனையும் கூச்சலுங்கூடக் கலந்துதான் கிடந்தது. அந்த மாலைநேரத்தில் நகரத்துக்குள்ளிருந்து திடீரென வானத் தில் கூட்டமாகப் பறந்து வந்து எதையோ மறந்து வைத்து விட்டனபோல் வெகு வேகமாகக் கூட்டமாகவே திரும்பிய புள்ளினங்கள் பாடிச் சென்ற இசை காதுக்கு மிக இன்ப மாக இருந்ததென்னமோ உண்மைதான். ஆனால், துறை முகக் கரையில், இழுக்கப்பட்ட படகுகளிலிருந்து பெரும் பொதிகளை இறக்கி மூட்டைகளைத் தோள்மேல் சுமந்து சுங்கக் கொட்டடிக்குச் சென்றுகொண்டிருந்த ஊழியர் கூட்டம் சுமைகளை ஏற்றிக்கொள்ளப் போட்ட சத்தமும் சுமந்து சென்றபோது போட்ட முனகலும், இன்பமான இந்தத் துறைமுகத்தில், மாந்தர் துன்ப மூச்சு விடும் காலம் அதிக தூரத்திலில்லையென்பதை அறிவுறுத்தின. அத்துடன் கடற் கரையின் அலை ஓரத்திலிருந்து சற்று தூரத்தேயிருந்த சுங்கச் சாவடிகளை நோக்கிப் போடப்பட்டிருந்த ஓரே ஒரு பெரும் கப்பிச் சாலையில் தென்கலிங்கத்தின் பெரும் மாடு கள் இழுத்துச் சென்ற நானா தேசத்துப் பொதி மூட்டை களும் பெட்டிகளும் கர்ண கடூரமான சத்தத்தை விளை வித்தன. வண்டிகளில் ஏற்றப்பட்ட பெரும் சுமையைத் தாளாத மாடுகள் விட்ட பெருமூச்சையும், ஆயாசத்தையும் தலைதூக்கிப் பார்த்த கரையோரக் கடல் நாரைகள், குவா குவா” என்று தங்கள் நீண்ட அலகுகளை விரித்துப் பரிக சித்துப் பிறர் துன்பப்படுவதைப் பார்த்து மகிழ உலகத்தில் ஜீவராசிகள் என்றும் உண்டு என்பதை நிரூபித்தன.

இப்படி இன்பத்தையும், துன்பத்தையும் கலந்து புகட்டிக் கொண்டிருந்த பாலூர்ப் பெருந்துறை, மேல் நாட்டாரும் கீழ் நாட்டாரும், தூரக் கீழ்த்திசை நாடுகளுக்குச் செல்வ தற்கு ஒன்றுகூடும் ஒரே துறைமுகமாதலால், அந்தப் பெருந் துறையில் யவனரும், சீனரும், அராபியரும், தமிழரும், ஆந்திரரும், வடநாட்டாரும் கலந்து காணப்பட்டது என் றும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததல்லாமல், நல் லெண்ணம் மட்டும் இருந்தால் உலகம் ஒன்று கூடுவது சாத்தியம் என்பதை வலியுறுத்திக் கொண்டும் இருந்தது. இந்தக் கதை துவங்கும் 1063அவது வருடத்துச் சித்திரா பெளர்ணமியன்று வழக்கத்துக்ககுகமாகவே, பல நாட்டு மரக்கலங்கள் அங்கு கூடியிருந்ததால் பலதரப்பட்ட வெளி நாட்டவர் கூட்டம் அன்று துறைமுகத்தில் ஏராளமாக, சிறு உலகம் ஒன்றே அங்கு சிருஷ்டியாகிவிட்டது போன்ற பிரமையை அளித்தது. தட்டை முகமும் மஞ்சள் நிறமும் உள்ள குள்ளச் சீனரும், ஆஜானு பாகுவாய் உஷ்ண பூமி யின் விளைவாகக் கன்னிச் சிவந்தச் சிவப்புடன் காணப் பட்ட் யவனரும் மொட்டையடித்துத் தலைக்குத் துணி கட்டி, தொள தொளத்த உடைகளுடன் உடைகள் நாலா பக்கமும் காற்றில் அலைய நடந்த சிவந்த மேனியும், தடகாத்திர தேகமும் உள்ள அராபியரும் அதிக உயரமோ அதிகக் குள்ளமோ இல்லாத தமிழகத்தாரும் உயர்ந்தும் கனத்தும் பயங்கரமாக விளங்கிய நீக்ரோவரும் கலந்து நின்ற காட்சி, நவதானியங்கள் கலந்த மங்கலப் பாலிகை போல் அந்தப் பெருந்துறையை விளங்க வைத்தாலும், அந்தப் பாலிகைகளை உடைக்க விரும்பிய அமங்கலத் தூதர்கள்போல் கூட்டங்களை விலக்க முற்பட்ட கலிங்கத் தின் சுங்கக் காவல் வீரர்கள், ‘உம் இப்படி வா! அந்தப் புறம் போகாதே’ என்று ஆணையிட்டு, சுங்கத்திலிருந்து யாரும் தப்ப முடியாதபடி கட்டுப்பாடு செய்து பொதி தூக்கும் ஊழியர்களை விரட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த விரட்டலுக்குப் பணியாத ஊழியர்களை மென்னி யைப் பிடித்துச் சுங்கச் சாவடிகளின் பக்கம் தள்ளவும் செய்தார்கள்.

இப்படிக் காவலரின் கெடுபிடியால் நடந்து கொண் டிருந்த சுங்கச் சோதனையையும், சுங்கச் சாவடிகளின் பக்கம் போய்க்கொண்டிருந்த சுமை தாங்கிய ஊழியரை யும், பெரும் சாட்டைகளைப் பக்கங்களில் சொடேர் சொடேரெனச் சொடுக்கி நீக்ரோவரை விரட்டிக் கொண்டி ருந்த அராபியர்களையும், அமைதியாக ஓரே ஒழுங்குடன் ஏதோ படைக்கு அணிவகுப்பவர்போல் சென்று கொண்டி ருந்த யவன வணிகரின் கூட்டத்தையும் கவனித்துக் கொண்டே கரைக்கு வந்து படகிலிருந்து தானும் இறங்கித் தன் குதிரையையும் இறக்கிய ஒரு வாலிபன், சற்று நேரம் அலைப் பகுதியிலேயே புரவியுடன் நின்று கடல் பிராந்தி யத்தையும் எதிரேயிருந்த பாலூர் நகரத்தின் பெரும் கோட்டையையும் நீண்ட நேரம் தன் கண்களால் துழாவி னான்.

அந்த வாலிபன் அந்தப் பெருந்துறைக் கரையில் கால் வைத்ததுமே கலிங்கத்துப் போரின் வித்து விதைக்கப் பட்டுவிட்டது என்பதற்குச் சாட்சி சொல்ல இஷ்டப் பட்டனபோல் கடலின் அலைகள் முன்னை விடப் பெரிதாக இரைச்சல் போட்டன. கதிரவன் மறைந்துவிட்ட தால் நகருக்குள் ஏற்பட்ட பெரும் விளக்குகளும் தீக்கண் களை விழித்து வந்திருப்பவன் யாரெனப் பார்க்கவும் தொடங்கின. அந்த விளக்குகளின் தீ விழிகளில் நாமும் பங்கு கொள்வது பிசகென நினைத்த சந்திரனும் தனது தங்க நிறத்தை மாற்றிக்கொண்டு வெண்ணிறம் பெற்றான். கரையில் திடமாகக் காலூன்றி நின்ற அந்த வாலிப னுக்கு வயது இருபத்தொன்றுக்கு மேலிருக்கக் காரண மில்லை. ஆயினும் அவன் கண்களில் விரிந்த ஆராய்ச்சி அவன் முதிர்ந்த அனுபவத்தைத் தெரியப்படுத்தியது. அவன் கன்னத்தில் சற்றே கீரியதுபோல் இருந்த ஒரு வடு அவன் வதனத்தின் அழகைக் குறைப்பதற்குப் பதில் அதற்கு ஒரு வீரக் களையையும் இணையற்ற கம்பீரத்தை யுமே அளித்தது. ‘காக பக்ஷகம்’ என்று புராணங்களில் சொல்லப்படுவது போல் காக்கையின் இறகுகளைப்போல் தலையில் விரிந்து கன்னங்களையும் தடவித் தொடங்கிய சுருண்ட அவன் குழல்கள் மட்டுமின்றி அகன்ற நெற்றியும், அதிக வளைவு என்று சொல்ல முடியாதபடி சிறிதே வளைந்து திடீரென பக்கங்களில் கத்திகளைப்போல கூர்மையுடன் இறங்கிப் புருவங்களும், நன்றாகச் சிவந்து சற்றுத் தடித்தே இருந்த வாயிதழ்களும் அந்த இளைஞன் வீரத்துக்கும் உறுஇக்கும் பெரும் சான்றுகளாயிருந்தன. அங்கியில் மறைந்த இடம் போக மீது இடங்களில் வெட்டுக் காயங்களுடன் காட்சியளித்த அவன் நீளமான கரங்களும் தழும்பேறியிருந்த விரல்களும் இளைய பருவத்திலேயே அவன் பெரும் போர்களைக் கண்டவன் என்பதை வலியுறுத்தின. சற்றுக் குறுகிக் காணப்பட்ட அவன் இடையை அடுத்துக் கச்சையிலிருந்து பக்கப் பகுதியில் தொங்கிய வாள் அதிக நீளமில்லையென்றும் உறையின் பரிமாணத்திலிருந்து அதன் அகலம் மிகுதியென ஊகிக்க முடிந்தது. அவன் கச்சையில் வயிற்றுக்கு எதிரில் செருகப் பட்ட சிறு வாளின் பிடியிலிருந்த விலை உயர்ந்த கற்கள் இளைஞன் அப்படியொன்றும் ஏழையில்லையென்பதை விளக்கின. அவன் அங்கியின் முகப்புகளிலிருந்த தங்கச் சரிகை வேலைப்பாடும் இளைஞன் நல்ல பசையுள்ள குடும்பத்தில் பிறந்தவன் என்பதை நிரூபித்தன. உறுதியுடன் மணலில் புதைந்து நின்ற அவன் கால்களின் பெருவிர லொன்று மணலில் பதிந்து பதிந்து குழி செய்துகொண் டிருந்தது. அதைக்கண்ட கடல் நண்டுகள், கலிங்கத்துக்கு இப்பொழுதே இந்த இளைஞன் குழி தோண்டுகிறானோ என்று பயந்தனபோல் தங்கள் மணல் வளைகளை நோக்கி ஓடி மறைந்தன.

குதிரையின் கழுத்தில், ஒரு கையைப் மோட்டுக் கொண்டு நின்ற வண்ணம் கடற்கரைப் பிராந்தியத்தைக் கண்களால் அளவெடுத்த அந்த வாலிபன் கடலின் லாவண்ணியத்தையும், கோதாவரியின் கம்பீரத் தோற்றத் தையும், வெண்மதி அள்ளிச் சொரிந்த வனப்பையும், பல நாட்டுக் கலங்களில் வந்து சுங்கச்சாவடிக்குச் சென்று கொண்டிருந்த வணிகப். பொருள்களையும் பார்த்துப் பார்த்துப் பிரமை பிடித்து நின்றான். இத்தனை வாணிப மும் இயற்கை வனப்பும் பொருந்திய இந்தத் துறை முகத்தை, இந்த மாணிக்கத்தை, இழக்க எதற்காகத் தென்க லிங்கத்து மன்னன் பீமனும், வடகலிங்கத்து மன்னன் அனந்தவர்மனும் முயல்கிறார்கள்?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்ட அந்த இளைஞன் நீண்ட பெருமூச் சொன்றை விட்டுவிட்டு, தன் புரவியை இழுத்துக்கொண்டு மெள்ள மெள்ளச் சுங்கச்சாவடியை நோக்கி நடக்கலானான்.

அவன் திடமாகவும், சந்தேகமின்றி யாரையும் தகவல் கேட்காமலும் நடந்ததிலிருந்து அவன் பாலூர்ப் பெருந் துறைக்குப் புதியவனல்லவென்பதை ஊகித்துக் கொண் டார்களாதலாலும், அவன் இடையில் தொங்கிய வாளும் ஓரளவு பயங்கரமாயிருந்ததாலும் முகத்திலிருந்த களையும் சற்று எச்சரிக்கை செய்தாலும், சுங்கக் காவலர்கூட அவனை எந்தக் கேள்வியும் கேட்காமலும் தடை செய்யா மலும் விலக வழி விட்டார்கள். பல நாட்டவரின் கூட்டத் தோடு கூட்டமாகவும் சில சமயம் சனரோடும், சில சமயம் யவனரோடும், சில சமயம் அராபியரோடும் தோளுடன் தோள் உராய்ந்து சென்ற அந்த வாலிபன் சுங்கச் சாவடிக்கு வெளியிலேயே குதிரையை தநிறுத்திவிட்டுத் தான் மட்டும் சாவடிக்குள் நுழைந்தான்.

பெரும் மண்டபமாகச் சுமார் நூறு தூண்களுடன் பல பகுதிகளாகப் பிரித்துப் பிரித்துத் தடைகள் வைத்துக் கட்டப்பட்டிருந்த அந்தச் சுங்கச்சாவடியில் சுங்கம் வாங்கும் அதிகாரிகள் ஆங்காங்கு நின்று பிரபயாணிகளின் சரக்குகளுக்கு மதிப்பீடு செய்தும், சுங்கப்பணம் வாங்கியும், சுங்க முத்துரை பதிப்பித்தும் ஊழியம் புரிந்ததால் ஏற் பட்ட ஒலியும், சுங்க மதிப்பீட்டை எதிர்த்து வணிகர்கள் போட்ட கூச்சலும் காதைத் துளைத்துக் கொண்டிருந்தன. அத்துடன் வசூலிக்கப்பட்ட தங்கப் பணங்கள் பாறை களின் மீது தட்டப்பட்டதாலும், சரக்குடைய வெண்கல-- இரும்புக் குடங்கள் திடீரென இறக்கப்பட்டதாலும் ஏற்பட்ட உலோக ஒலிகள் மனிதர்களின் பேச்சொலிக்கு ஆதார சுருதி கூட்டின. படகில் வந்த இளைஞன் உள்ளே நுழைந்ததும் அந்தச் சுங்கக் கூட்டத்தையும் அங்கு வசூலிக் கப்பட்ட பெரும் சுங்கத் தொகைகளையும் பார்த்துக் கொண்டே வணிகரல்லாத பிரயாணிகள் சோதிக்கப்படும் இடத்துக்குச் சென்று தன் இடையிலிருந்த பட்டுப் பையை எடுத்து சுங்க அதிகாரியிடம் அளித்துவிட்டு விரலில் இருந்த ஒரு முத்திரை மோதிரத்தையும் காட்டினான். அந்த மோதிரத்தைக் கண்ட மாத்திரத்தில் மின்னலால் தாக்குண் டவன்போல் பேரதிர்ச்சியும் குழப்பமும் திகிலும் அடைந்த சுங்க அதிகாரி சிலவிநாடிகள் ஸ்தம்பித்து நின்றான். பிறகு அந்த இளைஞன் கொடுத்த பையைச் சோதிக்காமல் திருப்பி அவனிடம் கொடுத்துவிட்டு, “சற்று இப்படி வாருங்கள்” என்று கையால் சைகை காட்டிக் கொண்டே தன்னிடத்தில் வேறொருவனை இருக்கச் செய்து சாவடியின் கோடியிலிருந்த அறையை நோக்கி நடந்தான். வந்த இளைஞனும் மீண்டும் இடையில் பையைச் செருகிக் கொண்டு, பதிலேதும் பேசாமலும், முகத்தில் எத்தகைய வியப்பும் காட்டாமலும் சுங்க அதிகாரியைத் தொடர்ந்தான்.

அக்கம் பக்கத்தில் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொண்டே கோடியிலிருந்த தனியிடமொன்றை அடைந்த, சுங்க அதிகாரி, இளைஞன் அருகில் வந்ததும், “நீங்கள் அணிந்துள்ள மோதிரத்தின் மதிப்புத் தெரியுமா உங்க ளுக்கு?” என்று பயத்துடன் வினவினான்.

அவன் சொற்களின் உண்மைக் கருத்தைப் புரிந்து கொண்டாலும், புரியாதது போல் நடித்த இளைஞன், “தெரியும், ஆயிரம் பொற்கழஞ்சுகள். அதற்குச் சுங்கம் உண்டானால் விதியுங்கள்” என்று கூறி சுங்க அதிகாரி யைக் கூர்ந்து நோக்கினான்.

சுங்க அதிகாரியின் விழிகளில் கோபமே அதிகரித்தது. “விலையைச் சொல்லவில்லை. வேறு மதிப்பைச் சொன் னேன்” என்றான் சுங்க அதிகாரி கோபம் குரலில் உஷ்ணத் துடன் ஒலிக்க.

“வேறு எந்த மதிப்பைக் குறிப்பிடுகிறீர்கள்?” என்று மீண்டும் வினவினான் இளைஞன்.

“இதைச் சிலர்தான் அணிய முடியும்” என்று சுட்டிக் காட்டினான் சுங்க அதிகாரி.

“ஆம்.

“இது பல்லவ ராஜ சின்னம்.

“அதனாலென்ன?”

“இதைப் பல்லவ ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அணியலாம்.

“அதையும் நானறிவேன்.

“இதைக் கேட்டதும் சுங்க அதிகாரியின் முகத்தில் ஈயாடவில்லை. “அப்படியானால் தாங்க.......” என்று திணறினான்.

“கருணாகர பல்லவன்.” ஏதோ ஒரு சாதாரண விஷயத்தை அறிவிப்பவன்போல் தன் பெயரை அறிவித்தான் அந்த இளைஞன்.

சுங்க அதிகாரிக்குக் கொஞ்ச நஞ்சமிருந்த தைரியமும் போய்விட்டது. அவன் இதயத்தில் விவரிக்க இயலாத பல உணர்ச்சிகள் மோதின. “இளைய பல்லவரா?” என்று மிதமிஞ்சிய வியப்பும் இகைப்பும் கலந்த குரலில் வினவினான் சுங்க அதிகாரி.

“ஆம்’ என்பதற்கு அறிகுறியாகத் தலையை ஆட்டிய கருணாகர பல்லவன், “இனி நான் போகலாமல்லவா?” என்று வினவிக்கொண்டே மெல்லத் திரும்பினான்.

“நில்லுங்கள்” என்ற அதிகாரியின் குரலைக் கேட்டுத் இரும்பிய இளைய பல்லவனை அருகில் இழுத்த அதிகாரி, “நீங்கள் போக வேண்டிய இடம் எது?” என்று பயத்துடன் வினவினான்.

“கோடிக்கரை கூலவாணிகன் மாளிகை.

“அது நகரத்துக்குள் அல்லவா இருக்கிறது?”

ஆம்.

“அப்படியானால் இப்பொழுது போக வேண்டாம். அடுத்தாற்போலுள்ள என் இல்லத்தில் தங்கியிருங்கள். நள்ளிரவுக்குப் பின் போகலாம்” என்று மன்றாடினான் சுங்க அதிகாரி.

“இப்பொழுது ஏன் போகக் கூடாது?” என்று சற்று நிதானத்தை இழந்து கேட்டுவிட்டு மீண்டும் போகத் துவங்கிய கருணாகர பல்லவன் கையைப் பிடித்து நிறுத்திய சுங்க அதிகாரி கலவரத்துடன் சொன்னான் “பிடிவாதம் வேண்டாம். சொல்வதைக் கேளுங்கள். ஊருக்குள் சென்றால் நீங்கள் உயிருடன் மீள முடியாது” என்று.

கருணாகர பல்லவன் விழிகளில் வியப்பு மலர்ந்தது. ஆனால் காரணத்தை அதிகாரி மெள்ள மெள்ள விவரிக் கத் தொடங்கியவுடன் அந்த வியப்பு கோபமாக மாறத் தொடங்கவே, தான் இருக்குமிடம் கலிங்கத்தின் சுங்கச் சாவடியென்பதையும், சுற்றுமுற்றும் வீரர்கள் நடமாட்டம் இருக்கிறது என்பதையுங்கூட கவனிக்காமல், “அத்தனைத் துணிவா இந்தக் கலிங்க பீமனுக்கு?” என்று ஆத்திரத்தால் சற்று இரைந்தும் கூவிவிட்டான் கருணாகர பல்லவன். அந்தக் கூச்சல் அதிகாரியின் காதில் மட்டும் விழுந்தி ருந்தால் இந்தக் கதையின் போக்கும், கருணாகர பல்லவன் வாழ்க்கையின் போக்கும் வேறு திசையில் இிரும்பியிருக்கும். ஆனால் விதி யாரை விட்டது? அவன் கூவியது சற்று தூரத்தேயிருந்த இரு வீரர்களின் காதிலும் விழுந்தது. உடனே நிகழ்ந்தது பிரளயம்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் - 2

அசைந்த திரை! அஞ்சன விழிகள்!

பரீலூர்ப் பெருந்துறையின் பிரும்மாண்டமான அந்தச் சுங்க மண்டபத்தில், பல நாட்டு வணிகரும் மற்றோரும் வாதிட்டதால் விளைந்த கூச்சலையும் மீறிக் காவலர் காதில் விழும்படியாகக் கலிங்கத்து மன்னனை நிந்தித்துக் கருணாகர பல்லவன் கூவிவிட்டதையும், அந்த நிந்தனை காதில் விழுந்ததும் வாள்களின் மேல் கைகளை வைத்த வண்ணம் காவலர் இருவர் அவனை அணுகத் தொடங்கி விட்டதையும் கண்ட சுங்க அதிகாரி அடியோடு நிலை குலைந்து திகைத்துப் போய்விட்டானென்றாலும், அதற்குக் காரணமான இளையபல்லவன் மட்டும், தன்னை எதிர் நோக்கி வரும் ஆபத்தைப்பற்றிச் சிறிதும் சிந்தியாமலும், கோபம் தலைக்கேறி நின்றதால் விளைவைப் பற்றி அறவே கவலைப்படாமலும், உறையிலிருந்த தன் வாளை வெகு வேகமாக உருவினான். சாதாரணமாக நிதானத்தை இழக்காதவனும் திடபுத்தியுள்ளவனுமான கருணாகர பல்லவன் அன்று நிதானத்தை அறவே இழந்து உணர்ச்சி களின் வசப்பட்டு வாளை உருவியதற்குக் காரணம் இருக்கத் தான் செய்தது. சுங்க அதிகாரி கூறிய விவரங்கள் அப் பொழுதும் அவன் புத்தியில் வலம் வந்து வந்து இளமை யின் வேகத்தால் ஏற்பட்ட அவன் உணர்ச்சிகளை மேலும் மேலும் கொந்தளிக்கவே செய்தன. அந்தக் கொந்தளிப்பின் விளைவு அவன் வீரவதனத்தில் இரத்தக் குழம்பைப் பாய்ச்சிச் செக்கச் செவேலென அடித்திருந்ததாலும், அவன் அணிந்திருந்த அங்கி பழுப்பு நிறம் வாய்ந்திருந்ததாலும், சுங்கச் சாவடியின் பல இடங்களில் சுடர்விட்டுப் பழுப்புக் கட்டைகளுடனும் சிவப்பு ஜ்வாலைகளுடனும் நின்ற தப்பந்தங்களைப் போலவே கருணாகர பல்லவனும் அந்தப் பெரும் மண்டபத்தில் நின்றான். பிற்காலத்தில் கலிங்கத் இன் பல பகுதிகளைக் கொளுத்திவிட்ட அந்த இளைய பல்லவனுக்கு மட்டும் வாய்ப்பு இருந்திருந்தால், அந்தப் பெரும்பணி சித்திரா பெளர்ணமியின் அந்த இரவிலேயே நடந்திருக்கும். அத்தனை கோபத்தைக் களறி உணர்ச்சி களைக் கொந்தளிக்கச் செய்துவிட்ட செய்திகளைக் கருணாகர பல்லவனின் செவிகளில் பாயச்சியிருந்தான் சுங்க அதிகாரி. இளையபல்லவனின் இயற்கைக் குணத்தை மட்டும் சுங்க அதிகாரி முன்கூட்டி உணர்ந்திருந்ததால், தன்னந்தனியே வந்திருக்கும் ஓர் (இளைஞன் ஆபத்தை விளைவிக்கக் கூடிய செயல்களில் அத்துமீறி இறங்க மாட்டான் என்ற அசட்டு நம்பிக்கை மட்டும் அவனுக்கு இருந்திராவிட்டால், கலிங்கத்தில் ஊழியம் புரிந்தாலும் தமிழனாகப் பிறக்கும் பாக்கியத்தைச் செய்திராவிட்டால், அவன் வாயைத் திறந்தே இருக்க மாட்டான். ஆனால் பல்லவ முத்திரையுடன் கூடிய மோதிரத்தை இளைய பல்லவன் கரத்தில் பார்த்தவுடன் தமிழக அரச குடும்பத் தைச் சேர்ந்த ஒருவனை நாசமாக விடக்கூடாது, எப்படி யும் காப்பாற்றியே தீரவேண்டும் என்ற நல்லெண்ணத் திலேயே அவன் இளையபல்லவனைத் தனியாக அழைத் துச் சென்று, பாலூரில் உள்ள நிலையை மெள்ள மெள்ள விவரித்தான். அவன் தன்னை முதன் முதலில் யாரென விசாரித்தபோது சற்றும் வியப்பெய்தாமல் கேள்விகளுக்குப் பதில் சொன்ன இளைய பல்லவன், சுங்க அதிகாரி தன்னைத் தனிமையில் வரும்படி சைகை காட்டி அழைத்துச் சென்றதும் சற்று வியப்பே எய்தினான். தனி இடத்தை அடைந்ததும், தன்னை ஊருக்குள் செல்ல வேண்டாமென்று அவன் தடுக்கவே அந்த வியப்புப் பன்மடங்கு அதிகமாகியதால், அகல விரிந்த கண்களைச் சுங்க அதிகாரியின்மீது நிலைக்கவிட்டான் கருணாகர பல்லவன். இளைய பல்லவன் முகத்திலும் கண்களிலும் விரிந்த வியப்பின் சாயையைக் கவனிக்கத் தவறாத சுங்க அதிகாரி, சற்று வெறுப்புடன் இதழ்களை மடித்து, “இளையபல்லவர் வியப்படைய வேண்டிய நேரமல்ல இது” என்று சற்றுக் கண்டிப்புத் தொனித்த குரலில் மெல்லக் கூறினான்.

இளைய பல்லவனின் இமைகள் சற்றே உயர்ந்தன. கூர் விழிகள் சுங்க அதிகாரியை நன்றாக ஊடுருவிப் பார்த்தன. பிறகு அவன் இதழ்களிலிருந்து உதிர்ந்த சொற்களில் ஏளன மும் தொனித்தன. “வியப்பை விதைத்தவர் தாங்கள். விதைத்தபின் விளைவை எப்படித் தடுக்க முடியும்?” என்று ஏதோ தத்துவ வினாவை விடுப்பவன் போல் கேட்டான் கருணாகர பல்லவன்.

பல்லவனின் அந்தப் பதில் மிகவும் விசித்திரமாயிருந்த தால் சுங்க அதிகாரியின் முகத்திலும் வியப்புக்குறி லேசாகப் படரவே, அவனும் திருப்பிக் கேட்டான், “என்ன! வியப்புக்கு வித்திட்டவன் நானா?” என்று.

“சந்தேகமென்ன! தாங்கள்தானே இங்கு தனிமையில் வரும்படி. என்னை அழைத்தீர்கள்?” என்று வினவினான் கருணாகர பல்லவன்.

“ஆமாம். அதில் வியப்புக்கு இடமெங்கே இருக்கிறது?” என்று வினவினான் சுங்க அதிகாரி.

“பூம்புகாரிலிருந்து மரக்கலத்தில் வருகிறேன், அதுவும் அரசாங்க அலுவலாகப் பாலூர்ப் பெருந்துறையில் இறங்குகிறேன். சுங்கச்சாவடியில் சோதனைக்கு இடமில்லாமல் செல்ல என் முத்திரை மோதிரத்தையும் காட்டுகிறேன். உடனே தாங்கள் என்னைச் செல்ல அனுமதித்திருக்க வேண்டும். அதுதான் நியாயமாக நடக்கக் கூடியது. ஆனால் அனுமதிக்கவில்லை. தனிமையில் பேச அழைக்கிறீர்கள். மற்றச் சுங்க அதிகாரிகளுக்கு எட்டாக் கையாக இருக்கும் இந்த இடத்துக்கு அழைத்து வருகிறீர்கள். அது மட்டுமல்ல, ஊருக்குள் செல்ல விரும்பும் என்னைத் தடையும் செய்கிறீர்கள். இத்தனைக்கும் வியப்படையாமல் எந்த மனிதனால் இருக்க முடியும்” என்று கேட்டான் கரணாகர பல்லவன், சற்றே இகழ்ச்சியுடன் இளநகை கூட்டி.

சுங்க அதிகாரி தன் இதழ்களையும் சிறிது ஒருபுறம் இழுத்துத் தனக்கும் இகழ்ச்சி முறுவல் கூட்ட முடியும் என்பதை நிரூபித்தான். பேச்சிலும் தான் இளைய பல்லவ னுக்குச் சோடையில்லையென்பதைக் காட்டத் தொடங்க, “நீங்கள் சொல்லுவதிலும் பொருளிருக்கிறது. வியப்புக்கும் இடமிருக்கத்தான் செய்கிறது” என்று கூறி ‘வியப்புக்கும்” என்ற சொல்லில் கடைசி “உம்மை’ச் சற்று அழுத்தியும் உச்சரித்தான்.

“வியப்புக்கும் என்றால் வேறு உணர்ச்சிக்கும் இட மிருக்கிறது என்கிறீரா?” என்று வினவினான் இளைய பல்லவன்.

“ஆம். தங்கள் நிலையில் நானிருந்திருந்தால் வியப்புக்கு இடமளிக்க மாட்டேன்.

“வேறு எதற்கு இடமளிப்பீர்!”

“எச்சரிக்கைக்கு.

“எதைப் பற்றி எச்சரிக்கை?”

“தங்கள் உயிரைப்பற்றி!”

இதைக் கேட்டதும் இளையபல்லவன் அதிர்ச்சி யடைந்து விடுவானென்று சுங்க அதிகாரி எதிர்பார்த் திருந்ததால் அவன் ஏமாந்தே போனான். கருணாகரனின் விழிகளில் மேலும் வியப்பின் சாயையே படர்ந்தது. அந்த வியப்பு குரலிலும் தொனிக்கக் கேட்டான், “அரசாங்க அலுவலாக வந்திருக்கிறேன். இதோ இந்தப் பையில் சோழ மன்னனின் ஆக்ஞா பத்திரம் இருக்கிறது. நான் அரசாங்கத் தூதன். என்னைக் காப்பாற்றுவது கலிங்கத்து மன்னனின் கடமை. அப்படியிருக்க என் உயிருக்கு என்ன அபத்து நேரிட முடியும்?” என்று.

“முதலில் உயிருக்கு அபத்து நேரிடாது” என்று பணிவு டன் ஒப்புக்கொண்ட சுங்க அதிகாரியின் குரலில் ஏளனம் ஒலித்தது.

“பின்னால் ஏற்படுமா?” இளைய பல்லவன் சற்று நிதானத்தைக் கைவிட்டுக் கேட்டான், இந்தக் கேள்வியை.

“ஆமாம். முதலில் சிறையில்தான் தள்ளுவார்கள். பிறகு சமயம் பார்த்து...” என்று வாசகத்தை முடிக்காமல் விட்ட சுங்க அதிகாரி, கழுத்தில் தன் கையை வைத்துச் சரேலென்று குறுக்கே இழுத்து முடிவு என்னவென்பதை அடையாளத்தால் காட்டினான்.

இளையபல்லவன் முகத்திலிருந்த வியப்புடன் மெள்ள மெள்ளக் கோபமும் கலந்துகொள்ளவே, “இளைய பல்லவ னான என்னையுமா சிறையில் தள்ளுவார்கள்?” என்று சற்றுச் சீற்றத்துடனேயே கேட்டான்.

“தங்களைத்தான் முக்கியமாகத் தள்ளுவார்கள்!” என்று பதில் சொன்னான் சுங்க அதிகாரி.

“வீர ராஜேந்திர சோழதேவரின் ஆக்ஞா பத்திரத்தை வைத்திருக்கும் என்னையா?” -- இம்முறை கேள்வியில் கோபம் பூர்ணமாக ஒலித்தது.

“அந்த ஆக்ஞா பத்திரம்தான் தங்களுக்கு எமன்?”

“என்ன உளறுகிறீர்? கலிங்கத்துக்கு அமைதியை அளிக்கும் சாஸனம் அது.

“ஆனால் அந்தச் சாஸனம் கலிங்கத்தின் துறைமுகங் களைச் சோழர்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டு வரும் நோக்கமுடையது.

“இதைக் கேட்டதும் கருணாகர பல்லவன் திக்பிரமை பிடித்து நின்றான். மிகவும் ரகசியமாகத் தன்னிடம் வீர ராஜேந்திர சோழதேவர் அளித்த ஆக்ஞா பத்திரத்தில் அடங்கிய விவரங்கள், கலிங்கத்தின் ஒரு மூலையிலுள்ள பாலூர் துறைமுகத்தின் சாதாரண ஒரு சுங்க அதிகாரிக்குத் தெரிந்திருப்பதை அறிந்ததும், மீண்டும் சொல்ல வொண்ணா வியப்பின் வசப்பட்டுக் கையைக்கூட அசைக் காமல் நிலைத்து நின்றுவிட்ட இளைய பல்லவனை நோக்கிய சுங்க அதிகாரி, “மீண்டும் வியப்பையே அடை கிறீர்கள் இளையபல்லவரே. அதற்கு நேரமில்லை. எச்சரிக் கைக்குத்தான் நேரம் என ஆரம்பத்திலேயே சொன்னேன்,” என்று ஏளனத்துடன் கூறிவிட்டு, பிறகு குரலைத் தணித்துக் கொண்டு மேலும் சொன்னான் “இளைய பல்லவரே! கலிங்கத்தின் நிலை தாங்கள் எண்ணி வந்ததுபோல் இல்லை. வீர ராஜேந்திர சோழதேவர் கலிங்கத்துடன் சமாதானத்தை விரும்பலாம். ஆனால் தென் கலிங்கத்து மன்னன் பீமனோ, வட கலிங்கத்து மன்னன் அனந்தவர் மனோ சோழநாட்டுடன் சமாதானத்தை விரும்பவில்லை. சென்ற அண்டில் கூடல் சங்கமத்திலும், அதற்கு முன்பு கொப்பத்திலும் நடந்த போர்களைக் கலிங்கத்து மன்னர் கள் இன்னும் மறக்கவில்லை. படைகளை அணிவகுப் பதிலும் நடத்துவதிலும் இணையற்றவரென்று பாரதம் புகழும் மேலைச் சாளுக்கிய சோமேச்வர மாமன்னரையே முறியடித்த சோழ மன்னர்களின் பெரும் பலத்தைக் தங்கை பத்திர ஆகிய இரு நதிகளும் கலந்து தங்கபத்தர நதியாகும் டம். கண்டும் சோழ சாம்ராஜ்யம் மேற்கொண்டு விரிவடைந்து கொண்டே கலிங்கத்தின் வாசலுக்கும் வந்துவிட்டதைப் பார்த்தும் கலிங்கம் திலடைந்திருக்கிறது. வேங்கி நாட்டில் சதா உலவும் கலிங்கத்தின் ஒற்றர்கள், கலிங்கத்தின் துறை முகங்களின் ஆதிக்கத்தை வீர இராஜேந்திர சோழ தேவர் விரும்புவதாகவும், அந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளக் கலிங்கத்தின்மீது படையெடுக்கவும் அவர் தயாரென்றும் செய்தி கொண்டு வந்திருப்பதாகப் பாலூரில் பெரும் வதந்தி சில நாள்களாக உலவுகிறது. இந்த வதந்தி யின் விளைவோ என்னவோ எனக்குத் தெரியாது-- பாலூரிலுள்ள தமிழ்ப் பெருவணிகர்கள் பலரும், படை வீரர்கள் சிலரும் சிறைகளில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

“இதற்குமேல் சுங்க அதிகாரி பேசவில்லை. இளைய பல்லவன் என்ன சொல்லப் போகிறானென்பதைக் கவனிக்கச் சற்றே தன் பேச்சை நிறுத்தனான். இளைய பல்லவனின் முகத்தில் சிந்தனையின் சாயை தீவிரமாகப் படர்ந்தது. அவனும் சில விநாடிகள் பேசாமலே நின்று கொண்டு, சுங்க அதிகாரி விவரித்துச் சொன்ன விஷயங் களை மீண்டும் மீண்டும் அல௫ப் பார்த்தான். “முதலாம் ராஜேந்திர சோழ தேவர் கங்கை கொள்ளப் பெரும் படையனுப்பிய காலத்துக்கு முன்பிருந்தே சோழ நாட் டுடன் பகைமையும் சாளுக்கியர்களுடன் தோழமையும் பாராட்டிய கலிங்க நாடு, திடீரெனத் தம்முடன் சமா தானத்துக்கு இசையும் என்று வீர ராஜேந்திர சோழ தேவர் எப்படி. எண்ணினார்? கொப்பத்தில் ராஜாதி ராஜனாலும், இளவரசன் இரண்டாவது ராஜேந்திரனாலும், கூடல் சங்கமத்தில் இரண்டாவது ராஜேந்திரனாலும், அவர் மகன் ராஜ மகேந்திரனாலும் சாளுக்கியர்கள் அடைந்த பெரும் தோல்விகளுக்குப் பிறகு கலிங்கம் கலங்குவது இயற்கைதானே?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்ட கருணாகர பல்லவன், ‘இருப்பினும், போர்களை விடச் சமாதானம் சிறந்ததல்லவா? சில துறை முகங் களைக் கலிங்கம்விட்டுக் கொடுத்தால்தான் என்ன? போர் களை நிறுத்தலாம். மக்கள் மாளமாட்டார்கள்” என்றும் மனத்திற்குள் சொல்லிக்கொண்டான்.

அவன் மனத்திலோடிய எண்ணங்களைச் சுங்க அதிகாரி புரிந்துகொண்டிருக்க வேண்டும். ஆகவே அவன், “இளைய பல்லவரே! கலிங்கத்தின் துறைமுகங்களை, அதுவும் முக்கியமாக இந்தப் பாலூர்ப் பெருந்துறையை, சோழ மன்னர் விரும்பும் காரணம் கலிங்க மன்னர்களுக்கு நன்றாகத் தெரியும்” என்றான்.

“என்ன காரணம்?” என்று வினவினான் இளைய பல்லவன்.

“புகாரும், புதுவையும், சோழகுலவல்லியும், கொற் கையும், தமிழகத்தின் பெரும் துறைமுகங்கள்தான். ஆனால் அவற்றைவிடச் சிறந்தது இந்தப் பாலூர்த் துறைமுகம்” என்று சுட்டிக் காட்டினான் சுங்க அதிகாரி.

“எப்படி!”

சுங்க அதிகாரி மிகுந்த அமைதியுடன் சொன்னான் “இது சொர்ண பூமியின் திறவுகோல்.” என்று.

கருணாகர பல்லவன் புரிந்துகொண்டும் புரிந்து கொள்ளாதவன்போல் கேட்டான், “சொர்ணபூமியின் துறவுகோலா?” என்று.

“ஆம் இளையபல்லவரே! வைரமும் வைடூரியமும் பதிக்கப் பெற்ற மணிக்கதவுகள் உள்ள கடாரரத்துக்கும், தங்கம் மண்ணிலே கொழித்துக் கிடக்கும் சொர்ணத் தீவுக்கும் இந்தப் பாலூர்ப் பெருந்துறைதான் திறவுகோல். இந்தத் துறைமுகத்திலிருந்துதான் வசதியான காற்று தென்கிழக்கு நோக்கி அடிக்கிறது. புகாரிலிருந்தும், புதுவையி லிருந்தும்கூடச் செல்லலாம். ஆனால் அந்தப் பிராந்தியங் களில் சில சமயங்களில் அடிக்கும் பெரும் காற்றுகள் கப்பல்களைத் தசை மாறச் செய்திருக்கின்றன. மூழ்கிய கப்பல்களின் எண்ணிக்கையும் அதிகம். ஆனால் பாலூர்ப் பெருந்துறையிலிருந்து தென்கழக்கில் சென்றால் எந்த ஆபத்துமில்லை. ஆகவே இந்தப் பாலூர்ப் பெருந்துறையை உடைய நாடு, தென்கிழக்கு நாடுகளின் வாணிபத்தின் முழுப் பலனை அடையும் கடாரத்தை வெற்றி கொண்டு மரகதத் தோரணத்தையும் அபரண வாயிலையும் கொண்டு வந்தும் முதலாம் ராஜேந்திரரின் கடற்படை இங்கிருந்து தான் கிளம்பியது. இதையெல்லாம் கலிங்கர்கள் அறிவார் கள். ஆகவே உயிரைக் கொடுத்தாலும் வாணிபம் கொழிக் கும் இந்தப் பெருந்துறையைக் கொடுக்க மாட்டார்கள்!” என்று பதில் சொன்னான் சுங்க அதிகாரி.

“ஆகவே...

“உங்களுக்கு ஆபத்து ஊருக்குள் காத்திருக்கிறது. நீங்கள் வருவது மட்டுமல்ல, வரும் அலுவல் மட்டுமல்ல, இந்தப் பெருந்துறையில்தான் இறங்குவீர்கள் என்பதும் தென்கலிங்க மன்னருக்குத் தெரிந்திருக்கிறது.

“அப்படியா!”

“ஆமாம் இளையபல்லவரே! ஆக, நீங்கள் ஊருக்குள் போவதானால் மாற்று உடையில் போக வேண்டும். அதுவும் நள்ளிரவில் போக வேண்டும்.

“அத்தனை எச்சரிக்கை தேவையா?”

“அவசியம் தேவை. ஊர் முழுதும் படை நடமாட்ட மிருக்கிறது. தமிழர்கள் பலரைச் சந்தேகத்தின்மேல் சிறை செய்திருக்கிறார்கள் என்று முன்பே சொன்னேனல்லவா? அது மட்டுமல்ல...” குரலை மிகவும் தாழ்த்தினான் சுங்க அதிகாரி.

கருணாகரன் முகத்தில் மெள்ள மெள்ளக் கோபம் துளிர்த்தது. “இன்னும் என்ன தேவை, தமிழர்களை அவமதிக்க?” என்று சீறினான்.

“தேவையானது நடந்திருக்கிறது. தமிழர்கள் வீதியில் நடமாடினாலும் கண்காணிப்பு இருக்கிறது.” என்றான் சுங்க அதிகாரி,

“என்ன அக்கிரமம்! சாதாரண மக்களையெல்லாம் ஒற்றர்களாக எண்ணுகிறானா பீமன்?” என்று ஏறிய இளையபல்லவனின் குரலில் அதிகக் கொந்தளிப்பு தெரிந்தது.

அந்தக் கொந்தளிப்பைக் கவனிக்காத சுங்க அதிகாரி மேலும் தன் சாமர்த்தியத்தைக் காட்டி, “அது மட்டுமல்ல...“என்று ஆரம்பித்தான்.

“எது மட்டுமல்ல?” என்று மீண்டும் சிறினான் இளையபல்லவன்.

“இரவில் தமிழர் யாரும் ஊரில் நடமாட அனுமதிக்கப் படுவதில்லை.

அது மட்டுமல்ல...

“இந்த “அது மட்டுமல்ல’ பெரும் கசப்பாயிருந்ததால் முகத்தைச் சுளித்தான் கருணாகர பல்லவன். “ஒவ்வொன் றாகச் சொல்ல வேண்டாம், முழுவதையும் ஒரே அடி யாகச் சொல்லித் தொலையும்!” என்று எரிந்தும் விழுந்தான். அந்த முகச் சுளிப்பையும் எரிச்சலையும் கொந்தளிப் பாக அடிக்கப் பெரும் கொள்ளியை இளைய பல்லவனின் உணர்ச்சிகளில் செருகினான் சுங்க அதிகாரி. “அது மட்டு மல்ல இளைய பல்லவரே! சோழ வம்ச இளவலும் நேற்றுச் சிறை செய்யப்பட்டிருக்கறார்” என்று அக்கம் பக்கம் பார்த்து மிக மெதுவான குரலில் கூறினான்.

“யாரது?” எரிமலை குமுறும் குரலில் எழுந்தது இளையபல்லவனின் கேள்வி.

“ஆம்மங்காதேவியின் மகன்! ராஜராஜ நரேந்திரன் செல்வன்!” என்றான் சுங்க அதிகாரி.

எரிமலை திடீரென வெடித்தது. “அத்தனை துணிவா கலிங்கத்துப் பீமனுக்கு?” என்று கோபம் கொந்தளிக்கக் குரலில் கனல் பொறிகள் இதறக் கூவினான் கருணாகர பல்லவன். அதைக் கேட்டுத் திகைத்துப்போன சுங்க அதிகாரி, சுயநிலை அடையுமுன்பாக, வாள் தாங்கிய காவல் வீரரிருவர் இளையபல்லவனை அணுகிவிட்டதால், மேற்கொண்டு என்ன செய்வது என்பதை அறியாமல் தத்தளித்தான் சுங்க அதிகாரி. நிதானத்தைத் தான் இழந்து விட்டதால் நிலைமை மீறிவிட்டதை உணர்ந்த கருணாகர பல்லவன் மின்னல் வேகத்தில் தன் வாளை உருவிக் காவல் வீரர் இருவரின் வாள்களையும் சரேலெனத் தடுத்தான். அதே நேரத்தில், கச்சையில் வயிற்றுக்கு நேரேயிருந்த தன் குறுவாளை எடுத்து ஒரு காவலன் வயிற்றில் பாய்ச்சிக் கொண்டே அகலமான தன் பெருவாளை மற்றொரு வீரன் கழுத்தில் பாய்ச்சினான்.

மின்னல் வேகத்தில் நிகழ்ந்துவிட்ட அந்த விபரீதத் தாலும் காவலரிருவர் திடீரெனத் தரையில் சாய்ந்துவிட்ட தாலும், அடுத்த வினாடி. அந்தப் பெரும் சுங்க மண்டபம் அமளி துமளிப்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் -இரு காவல் வீரரை வானுலகுக்கு அனுப்பிய கருணாகர பல்லவனைச் சூழ மற்றும் சில வீரர் விரைந்தாலும், அவர்கள் சூழ்வதற்கு முன்பே வணிகர்களிடம் அச்சம் ஏற்பட்டு அவர்கள் சரக்குகளைக் காப்பாற்றப் பெரும் கோஷத்தைக் இளப்பி அங்குமிங்கும். ஓடி.யதால் காவலர், வணிகர், அடிமைகள் இவர்கள் கலந்துபோய்விட்டதாலும், இந்தக் குழப்பத்தில் ஓரிரு பந்தங்களும் தளைகளிலிருந்து கீழே விழுந்துவிட்டதாலும், நிலைமையை நன்றாகப் பயன் படுத்திக் கொண்ட கருணாகரன் திடீரென வர்த்தர்களுக் இடையே பதுங்கி மறைந்து ஓரமாக ஒதுங்கி ஒதுங்கி வெளியே வந்து தன் புரவியை அவிழ்த்து ஏறப் போன வனை, கையைப் பிடித்துத் தடுத்த சுங்க அதிகாரி, “வேண்டாம், புரவியை நான் பார்த்துக்கொள்கிறேன். இப்படி வாருங்கள்” என்று சுங்கச் சாவடியின் மறைவிட மொன்றுக்கு அழைத்துச் சென்று, “இந்தாருங்கள், இந்த மேலங்கியால் உங்களை நன்றாக மறைத்துக் கொள்ளுங்கள். இது அராபியர் உடை, தலையிலிருந்து கால் வரைக்கும் மறைக்கும். அதோ போகும் அராபிய வணிகர் கூட்டத் துடன் கலந்து ஊருக்குள் நுழையுங்கள். கூலவாணிகன் விடுதிக்குப் பிறகு செல்லலாம். ஊருக்குள் நுழையுங்கள். நுழைந்ததும் வெளிநாட்டு வணிகர் தங்கும் பெரும் வீதிக்குள் சென்றால் அங்கு தங்க இடமும் இருக்கிறது. தமிழரை அந்த இடத்தில் யாரும் தேடவும் மாட்டார்கள். அங்கு இருங்கள். பிறகு சந்திக்கிறேன்” என்று கூறிவிட்டு, அராபியர் அங்கியொன்றையும் அளித்துவிட்டுப் பழைய படி. சுங்கச் சாவடியிருந்த கட்டடத்துக்குள் நுழைந்தான். சுங்க அதிகாரியின் சொற்களை நன்றாக மனத்தில் பதித்துக் கொண்ட கருணாகர பல்லவன், அடுத்த விநாடி. அங்கு நிற்காமல் பாலூர்ப் பெருந்துறையின் கோட்டை வாயிலுக்குச் செல்லும் அராபியர் கூட்டங்களுடன் கலந்து சென்றான். கோட்டைக் காவலர் ஒவ்வொருவரையும் தனிப்படப் பரிசோதனை செய்தே உள்ளே அனுமதித்தார்கள். கருணாகர பல்லவன் வாயிலை அணுகியதும் திடீரெனத் தலை கவிழ்ந்து, ஏற்கெனவே சோதனை செய்யப்பட்ட அராபிய வணிகன் ஒருவனது மூட்டையை எடுத்துக் கொண்டு அவனைத் தொடர முற்பட்டான். காவலன் முதலில் அவனைப் போக அனுமதித்துவிட்டா லும், கால்புறத்தில் சற்றே தூக்கியிருந்த அவன் மேலங்கி யிலிருந்து தலை நீட்டிய வாளின் நுனியைப் பார்த்ததும், “ஏய்! வா! இப்படி!” என்று அழைத்தான்.

கருணாகர பல்லவன் திடீரென அங்கியைக் கழற்றிக் காவலன் முகத்தில் எறிந்ததன்றி, அடுத்த விநாடி தன்னைச் சூழ்ந்நுகொண்ட நாலைந்து காவலரைத் தன் வாள் வீச்சினால் விலக்கிக்கொண்டு ஒரிருவரை வெட்டிப் போட்டுவிட்டு, அந்தப் பெரும் துறைமுக நகரின் வீதிகளில் எங்கு போகிறோம் என்பதை அறியாமல் ஓடினான். அவனைத் தொடர்ந்து பத்துப் பதினைந்து காவலரும் விரைந்தனர்.

பாலெனக் காய்ந்து கொண்டிருந்த அந்த வெண்ணில வில் பாலூர்ப் பெருநகரத்தின் நடுப்பகுதி வெள்ளை வேளேரென்றும், வீடுகளின் தாழ்வாரங்களில் நிழலடித்தும் பக்கப் பகுதிகள் கரேலென்று இருட்டாகவும் தெரிந்ததால், அந்த நகரம் இருளும், ஒளியும், நன்மையும் தீமையும் கலந்த மனித இதயம்போல் காட்சியளித்தது. வீரர்கள் கண்களில் படாமல் இருள் அடித்த பகுதிகளிலேயே ஓடினாலும், வீரர்கள் அவன் காலடி. ஒலியைக் கொண்டே அவனைத் துரத்திச் சென்றார்கள். எந்த வினாடியிலும் தான் அகப் பட்டுக் கொள்ளலாம் என்பதைக் கண்டதும் என்ன செய்வதென்பதை அறியாமல் திடீரெனப் பக்கத்திலிருந்த மாளிகைத் தாழ்வாரத்தில் பதுங்கினான். பிறகு மெள்ள மெள்ள இருளடித்துக் கடந்த மாடிக் கூரைப் பகுதி மீது தொற்றி ஏறவும் தொடங்கினான்.

அந்தப் பல அடுக்கு மாளிகையின் சுவர்களில் நீண்டி ருந்த கைப்பிடிகளைப் பிடித்த வண்ணம் அபாய நிலை யில் நடந்து நடந்து தொற்றி ஏறி, இரண்டாவது அடுக்கின் தாழ்வரையை அடைந்த இளையபல்லவன், &ீழே கருமை யுடன் தெரிந்த அதல பாதாளத்தையும், தான் பிடித்திருந்த மெல்லிய தாழ்வரைச் சுவரையும் பார்த்து, பிடி சிறிது பிசகினாலும் மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்து கொண்டான். இருப்பினும் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து ஒரு மூலைக்கு வந்ததும், அடுத்து ஒரு சாளர மிருப்பதைக் கண்டு, அந்தச் சாளரத்தை எட்டிப் பிடித்து வெகு லாகவமாகத் தன் உடலை அதில் சாய்த்து ஓசைப் படாமல் அங்கிருந்த அறைக்குள் குதித்தான்.

அறையில் யாருமில்லாதது பெரும் ஆறுதலாயிருந்தது இளைய பல்லவனுக்கு. அறையிலிருந்த சிறு விளக்குகூட மங்கலான ஒளியைத்தான் பரப்பியது. அந்த மங்கலான ஒளியிலிருந்தும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எண்ணிய கருணாகர பல்லவன், அந்த அறையின் ஓரத்தில் ஒரு திரை யிருந்ததைக் கவனித்து, அடிமேலடி வைத்து, ஓசைப் படா மல் அதை அணுகு, அதற்குப் பின்னால் ஒளிந்துகொண் டான். எதிர்பாராத விதமாக யாராவது அறைக்குள் வந்தால் தன்னைக் காத்துக்கொள்ள, வாளை உறையில் போடாமல் கையில் பிடித்தவண்ணம் அசையாமல் திரை மறைவில் நின்றான்.

“சில நிமிடங்களுக்கெல்லாம் அந்த அறைக்குள் ஓர் உருவம் நுழையத்தான் செய்தது. ஆனால் அதைக் கண்ட தும் இவன் வீரமெல்லாம் எங்கோ பறந்தது. வாள் பிடித்த அவன் கை வெலவெலத்தது. உறுதியான அவன் கால் களும் உதறத் தொடங்கின. அந்த உருவம் நுழைந்த சில வினாடிகளுக்குள்ளேயே பெருத்த சங்கடத்தில் சிக்கித் தணறினான் அந்த மாவீரன். அவன் உணர்ச்சிகளை அப்படி ஆட்டிவைக்க உள்ளே நுழைந்தது ஒரு பெண் உருவம். ஏதோ பஞ்சின்மேல் நடப்பதுபோல் மெல்லடி வைத்து அறையில் நுழைந்தது அந்த மோகன பிம்பம். அதுவும் முன்னாடை களைந்து மறு ஆடை உடுக்க வந்தது. அறைக்குள் நுழைந்ததும் கதவைத் தாழிட்டு முன்னா டையை மெள்ள மெள்ளக் களையவும் முற்பட்டாள் அந்த மோகனாங்கி. நெறியினின்று சிறிதும் பிறழாத குலத்தில் வந்த இளைய பல்லவன் தன் கண்களை இறுக மூடிக் கொண்டான். பயத்தால் திரைச்சீலையைச் சிறிது இறுக்கி யும் பிடித்தான். அப்படி அவன் பிடித்ததால் அசைந்த அந்தத் தஇரைச்சலையை அந்த ஏந்துழையின் அஞ்சன விழிகள் இடீரென ஏறெடுத்து நோக்கின.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஆத்தியாயம் – 3

எத்தனை படைக்கலங்கள்

கணக்கற்ற போர் முனைகளிலும் ஆபத்தான எத்த னையோ இதர சூழ்நிலைகளிலும் அச்சத்துக்கு அறவே இடம் கொடாத கருணாகர பல்லவன் அன்று அந்த மாளிகைத் தளத்தின் மேலறையில் பஞ்சென நடந்து வந்த அஞ்சன விழியாளொருத்தி அறைக்கதவைத் தாளிட்டதும் பெரும் திகில் வசப்பட்டு, தான் ஒளிந்திருந்த இரைச் சீலையை இடது கையால் இறுகப் பிடித்துக்கொண்ட தல்லாமல், எல்லை மீறிய அச்சத்தின் விளைவாகக் கண்களையும் மூடிக்கொண்டு விட்டானாதலால், அடுத்து நடந்தது என்ன என்பதை அறியச் சிறிதும் சக்தியற்ற வனானான். ஊனக் கண்கள் மூடிவிடும்போது திறக்கும் சுபாவமுள்ள அவன் மனக்கண்கள் மட்டும் நன்றாக மலர்ந்து புதுப் புதுக் கற்பனைகளைக் களப்பிவிட்டதால், ‘நான் இருப்பதை அறிந்தவுடன் இந்த அழக கதறுவாள். மாளிகைக் காவலர் வருவார்கள். ஆகவே மேலும் சண்டைதான்’ என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்ட கருணாகர பல்லவன், அவள் கூச்சலை எதிர்பார்த்து இருந்த இடத்திலேயே அசைவற்று நின்றான். அடையைக் களைய முற்பட்ட அந்த ஆரணங்கு விளைவித்த தர்ம சங்கடமான இந்த நிலையிலிருந்து தப்பிவிடச் சக்கரம் காவலர் வந்து சண்டை துவங்கிவிட்டால்கூட மிகவும் நல்லது என நினைத்து நின்ற இளைய பல்லவன், வினாடி கள் பல அகியும் அறையில் கூச்சல் ஏதும் இல்லாததை எண்ணிப் பார்த்து வியப்பின் வசப்பட்டுக் கண்களைத் திறக்கலாமா வேண்டாமா என்று தத்தளித்து நின்ற சமயத் தல், “வா வெளியே!” என்று அதிகாரம் ததும்பி நின்ற சொற்களிரண்டு அவன் இரண்டு கண்களையும் சரே லெனத் திறந்துவிட்டாலும், இதய உறுதியை மட்டும் மேலும் குலைக்கவே செய்தன. அண் மகனொருவன் அறையில் மறைந்திருக்கறானென்பதை அறிந்ததால் அந்த ஏந்திழை கதறுவாள் என்று எதிர்பார்த்ததற்கு முற்றும் மாறாக, அவள் வெகு நிதானமாகவும் அச்சமில்லாமலும் அதிகாரத்துடன் தன்னை வெளியே வரும்படி அழைத்த தைக் கேட்டவுடன் வியப்பின் எல்லையை எய்திய இளையபல்லவன், குனிந்த தலையை நிமிர்த்தித் திரைச்சீலைக்கு மேல் எட்டிப் பார்த்துக் கண்களை அகல விரித்தான். அவன் எதிரே விரிந்தது ஒரு மோகன உலகம்.

அறை விளக்கின் பொன்னிற வெளிச்சத்துடன் அறைக்கு வெளியேயிருந்து சாளரத்தின் மூலம் பாய்ந்து வந்த வெண்மதியில் வெள்ளிக் கரணங்களும் கலந்து கொண்டதால் பொன்னும் வெள்ளியும் இணைந்த ஒரு மாய உலகம் அந்த அறையில் சிருஷ்டிக்கப் பட்டி ருந்ததை யும், மயக்கம் தரும் அந்த இரு ஒளிகளின் இணைப்பிலே புதிதாக உதயமான மாய தேவதைபோல் இதயத்தைக் கலங்க வைக்கும் எழிலுடன் அந்தப் பெண் கையிலொரு வாளையும் ஏந்தி நின்றுகொண்டிருந்ததையும் கண்ட கருணாகர பல்லவன், தானிருக்கும் இடத்தையும் சூழ்நிலை யையும் அறவே மறந்தான். அவன் மனக்கண்களிலிருந்து பாலூர்ப் பெருந்துறை மறைந்தது, சுங்கச்சாவடி மறைந்தது, துரத்தி வந்த காவலர் மறைந்தனர், நிலைத்து நின்றது, எதிரே வாளேந்திப் போர்க்கோலத்துடன் தோற்றமளித்த அத்த மோகன பிம்பம் ஒன்றுதான். விளக்கின் பொன் னொளியும் வெண்மதியின் வெண்ணொரளியும் கலந்து அவள்மீது பாய்ந்த போதிலும் கலப். படத்தைவிட அசல் சிறந்தது என்பதை அறிவுறுத்த முற்பட்டதுபோல் எக்கலப்புமற்ற சொர்ணமென அவள் மேனி சற்றே மஞ்சளோடிப் பளிச்சிட்டதைக் கண்ட இளைய பல்லவன், இப்படியும் ஒரு நிறம் சிருஷ்டியிலிருக்கிறதா என்று வியந்தான். அவள் சேலை இடையில் நன்றாக இழுத்துச் சுற்றப்பட்டிருந்தாலும் மடிப்புகள் நன்றாக அமையாமல் ஆங்காங்கு அலங்கோலமாகத் தொங்கியதால் பழைய அடையைக் களைய முற்பட்டதுமே திரைக்குப் பின்னால் தானிருப்பதை அவள் அறிந்திருக்க வேண்டுமென்றும் சேலையைச் சரேலென்று எடுத்து அவசர அவசரமாகச் சுற்றிக் கொண்டிருக்க வேண்டுமென்றும் ஊ௫த்துக் கொண்டானானாலும், அப்படி அலங்கோலமாகச் சேலையை அவள் சுற்றிக்கொண்டிருந்ததே. அவளுக்கு எத்தனை அழகாயிருந்தது என்பதை எண்ணிப் பார்த்த அந்தப் பல்லவ வாலிபன் “அடுக்கடுக்காகக் கொசுவிப் பட்டை களை ஒட்டிப் புனையப்படும் ஆடையில் இருப்பதைவிட, அலங்கோல ஆடையில் பெண்களின் அழகு எத்தனை வூகரத்தைப் பெறுகிறது! அப்படியிருக்கப் பெண்கள் எதற்காக அடை புனைவதற்கு அத்தனை சிரமப்பட வேண்டும்?” என்று தன்னையே கேட்டுக்கொண்டான்.

அடை, சிறிது அலங்கோலப்பட்டிருந்த போதிலும் கழுத்துக்கருகில் அது நன்றாகச் சுற்றி வளைக்கப்பட்டி ருந்ததையும், கழுத்தைச் சுற்றி வந்த மேலாடை நன்றாக இழுத்தும் இடுப்பில் செருகப்பட்டதால் கழுத்தும் அதற்குக் ழே இரண்டங்குலமே கண்களுக்குப் புலனானதையும் கண்ட கருணாகர பல்லவன், நெறிமிகுந்த ஒரு பெண்ணிடம் தான் சிக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். அப்படி உணர்ந்தும்கூட, புஷ்பத்திலிருந்து மீள இஷ்டப்படாத வண்டுகளைப்போல் அவன் கண்கள் புஷ்பத்தினும் மிருது வாகத் தோன்றிய அவளை வட்டமிட்டன. மேலாடை நன்றாக இழுத்துச் சுற்றப்பட்டிருந்த காரணத்தாலேயே மறைவிலும் நிறைவு பெற்றுத் தெரிந்த அழகு, இளைய பல்லவனின் உடலைக் கல்லாகச் சமைத்துவிட்டதென்றா லும், அவன் இதயத்துக்கு மட்டும் புரவி வேகத்தைக் கொடுத்து ஓடச் செய்தது.

வினாடிகள் இரண்டொன்று ஓடியும், நேராக அந்த அழகியைப் பார்க்கச் சக்தியற்றதால் மார்பை வளைத்து ஓடிய சேலையையும், அந்தச் சேலையிலிருந்து இடைவெளி - கொடுத்து பளிச்செனத் தெரிந்த இடைப் பிரதேசத்தையும் பார்த்த கருணாகர பல்லவன் வாளை ஏந்தி நின்ற அவள் கையையும் பார்த்து, இத்தனை மெலிந்து குழைந்து கடக்கும் இந்த இடையை உடையவளுக்கு இத்தனை உறுதியான கை எங்கிருந்து வந்தது என்று எண்ணிப் பார்த்தான். அத்துடன் வாளைப் பிடித்து நீண்டு பூவின் இதழ்கள் போலிருந்த அவள் விரல்களையும் கண்ட அவன், “மென்மைக்கும் கடினத்துக்கும் இயற்கை ஏதோ சம்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது, இல்லையேல் இந்தப் பூவிரல்கள் ஏ இத்தனை திடமாக வாளைப் பிடிக்க முடியுமா? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். கண்ணைச் சரேலென்று தூக்கிய இளைய பல்லவன் அந்தப் பெண்ணின் முகத்தை இரண்டொரு விநாடிகளே அராய்ந்தானென்றாலும், அந்த இரண்டு விநாடிகளிலும் எத்தனையோ துன்பத்தை அனுபவிக்கவே செய்தான். அதிகப்படியான இன்பமும் துன்பந்தான் என்பதை அன்று உணர்ந்தான் அந்தப் பல்லவ வாலிபன்.

நீருண்ட மேகத்தைவிடக் கறுத்து அடர்த்தியாகத் தலைமீதிருந்த அவள் குழல் பின்னி விடப்படாததாலும், வாரி எடுத்து முடியப்பட்டிருந்தாலும் ஒவ்வோரிடத்திலும் பிய்ந்து தொங்கி நுதலிலும் கன்னத்திலும் சில இழைகள் பதிந்து கடந்ததுகூட அவள் முகத்துக்கு இணையற்ற அழகையே கொடுத்தது. விசாலமான அவள் லலாடப் பிரதேசம் மயிரிழைகளால் அங்காங்கு மறைக்கப்பட்டிருந் தாலும் இடையிடையே அவள் தங்கச் சருமம் பாளம் பாளமாகத் தோன்றி மேகத் திரையைக் ஒழிக்க முயலும் சந்திரக் கிரணங்களைப் போலப் பளிச்சிட்டன. நுதலைக் கண்களிலிருந்து தடுத்து நின்ற வளைந்த கரிய புருவங் களுக்குக் கீழிருந்த இரு கண்களும் கரிய இமைகளுக் கடையே கூர்வேல்களெனப் பிரகாசித்துக் கொண்டிருந்த தையும், விகசிக்க அப்பொழுதுதான் முற்பட்ட புஷ்ப மொட்டு போன்ற நாசி மிக எடுப்பாக அமைந்து அவள் முகத்துக்கு இணையற்ற கம்பீரத்தைக் கொடுத்ததையும், பக்கங்களில் வழவழத்து இயற்கை மஞ்சளும், கோபத்தால் ஏற்பட்ட சிவப்புமாகக் கலந்து தங்க அரளியும் செவ்வலரி யும் சேர்ந்தது போலப் பிரமையளித்த அவள் அழகிய கன்னங்கள், இதழ்கள் பதிவதற்காகவே சிருஷ்டிக்கப்பட்ட மலர்ப் படுக்கைகள் போலிருந்ததையும் கவனித்த இளைய பல்லவன், அவள் செவ்விய இதழ்களைக் கவனித்ததும் அவை உவமைக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டிருப்பதை உணர்ந்து கொண்டான். கோபத்தால் அவள் வாயிதழ் களைச் சற்றே கூட்டியிருந்ததால், மலர இஷ்டப்படாத புஷ்பம்போல் அவள் இதழ்களின் சேர்க்கை காணப் பட்டது. அவற்றில் காணப்பட்ட நீரோட்டம், ‘அமுதம் என்பது இருந்தால் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று பொருள் கூறுவது போலிருந்தது. அந்த உதடுகளி லேயே நீண்ட நேரம் இளைய பல்லவனின் கண்கள் நிலைத்தன. கண்களென்ன, அவன் இதயமும் அந்தக் கனியிதழ்களை விட்டு அகல இஷ்டப்படாதது போலவும், அந்த இதழ்களிடம் ஓடிவிட அசைப்படுவது போலவும் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது.

இப்படி எண்ணங்களும், இதயமும் ஒருங்கே மயங்க மலைத்து நின்று, திரைச்சலைக்கு மேலிருந்தே கண்களால் எதிரே இருந்த மோகன பிம்பத்தை எடை போட்டுக் கொண்டிருந்த இளைய பல்லவன், “வா வெளியே!” என்று இரண்டாம் முறை எழுந்த அதிகாரக் குரலின் காரணமாகக் கனவுலகத்திலிருந்து நனவுலகத்துக்கு வந்தவன், மெள்ளச் சமாளித்துக் கொண்டு, இடது கை பற்றிய சலையை விடுத்து திரை மறைவிலிருந்து வெளியே வந்தான். வலது கையில் வாளை அருவிப் பிடித்த வண்ணம் வந்த அந்த வாலிபனை அந்த ஏந்திழையும் எவ்விதப் படபடப்புமின்றி ஆராய்ந்தாள். ஆடவன் ஒருவன் தனது அறையில் ஒளிந்து கொண்டிருக்கறானென்பதை அறிந்தும் கூச்சல் போடா மலும், அந்த அறையிலிருந்த ஒரு வாளை உருவிப் பிடித்துக் கொண்டு தன்னை மிரட்டி வெளியில் அவள் அழைத்த தையும் கண்ட கருணாகரபல்லவன், அச்சத்தை சொப்ப னத்திலும் காணாத வீராங்கனை ஒருத்தியிடம் தான் சிக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தான். அப்பொழுதுதான் அந்த அறையைச் சுற்றிக் கவனித்த இளைய பல்லவன், சுவர்களில் பல இடங்களில் பலவிதமான வாள்கள் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்ததன்றி, அந்தப் பெண் வாளைப் பிடித்துக் கொண்டிருந்த முறையையும் பார்த்து, அவளுக்கு ஓரளவு வாள் பயிற்சி இருக்க வேண்டுமென்றும் ஊகித்துக் கொண்டான்.

அறையைச் சுற்றி அவன் கண்கள் சுழன்றதையும் தன் கைவாளின்மீது அவை கடைசியாக நிலைத்ததையும் கவனித்த அந்த அழகி, அவன் உள்ளத்தே ஓடிய எண்ணங் களைப் புரிந்தகொண்டவள் போல், “ஆம், எனக்கு வாளைப் பிடிக்கத் தெரியும். அவசியமானால் சுழற்றவும் முடியும். ஆகவே உன் கையிலுள்ள வாளைக் &ழே எறிந்து விடு! எதிர்ப்பு பயனளிக்காது.” என்றாள் திடமான குரலில்.

அவள் பேச்சும், பேச்சில் கண்ட துணிவும், கருணாகர பல்லவனுக்கு மென்மேலும் பிரமிப்பை அளித்தாலும் அவள் சொற்படி வாளைக் &ழே எறிய இஷ்டப்படாமல், “மன்னிக்க வேண்டும். இந்த வாள் என் ஆயுள் துணைவன். பல வருடங்களாக நாங்கள் இணைபிரியாதிருக்கிறோம். ஆகவே இப்பொழுது இதைப் புறக்கணிப்பதற்கில்லை. தவிர...” என்று பதில் சொல்ல முயன்று மென்று விழுங்கி இழுத்தான்.

அவள் வண்டுவிழிகள் வியப்பினால் மலர்ந்தன. “தவிர, உம், சொல் மேலே!” என்று மலர் அதரங்கள் உத்தரவிட்டன.

அவள் அஞ்சன விழிகளை ஒருமுறை கருணாகர பல்லவனின் விழிகள் நன்றாக ஏறெடுத்துப் பார்த்தன. “வீரர்கள் தோல்வியுறும் போதுதான் வாளைக் ழே எறிவார்கள்” என்று சுட்டிக் காட்டினான் துணிவுடன்.

அவள் இதழ்கள் இகழ்ச்சியால் சற்றே மடிந்தன. அப்படி அவை கடைசியில் மடிநீததால் கன்னங்களில் விழுந்த குழிகளும் அவளுக்குப் புதுவிதமான அழகை அளித்ததைக் கருணாகர பல்லவன் கவனித்தான். அவன் தன்னைப் பல இடங்களிலும் கவனிப்பதைக் கண்டதால் மிகுந்த சங்கடமும் சீற்றமும் அடைந்த அந்த அழக, “நீ அண்மகனானதால் என்னிடம் தோற்கமாட்டாய். சற்று விளையாடிப் பார்க்கலாம் என்று மனப்பால் குடிக் கறாயா?” என்று இகழ்ச்சியும் கோபமும் தொனித்த குரலில் வினவினாள்.

கருணாகர பல்லவன் இளநகை புரிந்தான். “அப்படி நான் நிச்சயமாகச் சொல்லவில்லையே.

“எதை நிச்சயமாகச் சொல்லவில்லை?” மீண்டும் ஏற்றத்துடன் எழுந்தது அவள் கேள்வி,

“உங்களிடம் தோற்கமாட்டேன் என்பதை.

“பெண்ணென்பதால் என்னைப் பார்த்து நகைக் கிறாயா?”

“இல்லை, இல்லை. நகைப்புக்கு இடமில்லை.

“வேறெதற்கு இடமிருக்கிறது?”

“பிரமிப்பிற்கு.

“அந்த வாலிப வீரன் தன் அழகைப் பற்றிக் குறிப்பிடு கிறானென்பதைச் சந்தேகமற உணர்ந்துகொண்ட அந்தப் பெண், ஒரு விநாடி தன் காற் பெருவிரலால் நிலத்தைக் சீறி இடையைச் சிறிது நெளித்துச் சற்றே சங்கடப் பட்டா லும், அடுத்த விநாடி அதை உதறிவிட்டு, “நீ சீக்கிரம் அந்த வாளைக் ழே எறியாவிட்டால் உன் பிரமிப்பு இன்னும் அதிகமாகும்!” என்று கூறிவிட்டுக் கோபம் துளிர்த்த புன்முறுவலொன்றையும் உதடுகளில் படர விட்டாள்.

“இப்பொழுதிருப்பதைவிட அதிக பிரமிப்பு எப்படி ஏற்பட முடியும்?” என்று விஷமத்துடன் வினவினான் கருணாகர பல்லவன்.

“ஏற்பட வழியிருக்கிறது” என்றாள் அவளும் இகழ்ச்சியுடன்.

“என்ன வழி?”

பதிலுக்கு, “இதோ பார்!” என்று கூறிய அந்தப் பெண் என்ன செய்ய உத்தேசிக்கிறாள் என்பதை அவன் ௨௭கிக்கு முன்பாகவே அவள் கைவாள் திடீரெனச் சுழன்று இளைய பல்லவனது வாளை மின்னல் வேகத்தில் விர்ரென்று ஒருமுறை சுழற்றிடவே, திக்பிரமையடைந்த அந்த வீரன் எல்லையில்லாப் பிரமிப்புடன் அந்தப் பெண்ணைக் கூர்ந்தி நோக்கினான். இன்னும் ஒரு விநாடி. தான் அசந்த ருந்தால் அவள் வாள் சுழன்ற வேகத்தில் தன் வாள் அந்த அறையின் மூலைக்குச் சென்றிருக்குமென்பதை உணர்ந்து கொண்ட அந்தப் பல்லவ வீரன், இத்தனை லாகவமாக வாளைச் சுழற்ற்க்கூடிய பெண்களும் இந்த நாட்டி லிருக்கிறார்களா என்று எண்ணிப் பார்த்து, மிதமிஞ்சிய வியப்புக்கு உள்ளாகி அந்த வியப்பின் குறிகள் முகமெங்கும் படரவும் நின்றான்.

பிரமிப்புக்கு உள்ளானது அவன் மட்டுமல்ல, அந்தப் பெண்ணின் கண்களும் பிரமிப்பைக் கொட்டின. அதை யும் கருணாகரபல்லவன் கவனிக்கத்தான் செய்தான். ஆனால், அவள் பிரமிப்படைய வேண்டிய கரரணமென்ன வென்பதைப் புரிந்துகொள்ள முடியாததால் கேட்டான் “நீங்கள் என்ன அதிசயத்தைக் கண்டுவிட்டீர்கள்?” என்று.

“இதுவரை காணாத அதிசயத்தை இன்று கண்டேன்!” என்றாள் அவள். இதைச் சொன்ன அவள் குரலில் கோபமில்லை, இகழ்ச்சியுமில்லை. வியப்பும் பிரமிப்புமே மிதமிஞ்சி ஒலித்தன.

“என்ன அப்பேர்ப்பட்ட அதிசயம்?” என்று மீண்டும் வினவினான் கருணாகர பல்லவன்.

“என் வாள் சுழன்று, எதிரியின் வாள் பறக்காதது இதுதான் முதல் தடவை” என்றாள் அந்த அழகி.

“நான் எதிரியா?” என்று கேட்டான் கருணாகர பல்லவன்.

“இல்லையா?” என்று பதிலுக்குக் கேட்டாள் அந்தப் பெண்.

“இல்லை.

“அப்படியானால் கள்வனாயிருக்க வேண்டும்.

“கள்வனுமல்ல.

“அப்படியானால் தமிழனா?”

இந்தக் கேள்வி மேலும் பிரமிப்பையே அளித்தது இளைய பல்லவனுக்கு. “கள்வனாயிராவிட்டால் தமிழனா யிருக்க வேண்டுமா?” என்று வினவினான் ஆச்சரியத் துடன்.

“அவள் நிதானமாகப் பதில் சொன்னாள். “நீ நாணய மாக வாயில் வழியாக வரவில்லை. சாளரத்தின் மூலம் உள்ளே குதஇித்திருக்கறாய். தவிர, திரைமறைவில் இருந்திருக்கிறாய். ஒளிபவன் கள்வனாயிருக்க வேண்டும். இல்லையேல் தமிழனாயிருக்க வேண்டும். தமிழர்களைத்தான் சில நாள்களாகக் கலிங்க அதிகாரிகள் சிறைக்குள் தள்ளி வருகிறார்கள்” என்று சுட்டிக் காட்டினாள் அந்தப் பெண். அத்துடன் அவள் மீண்டும் அவனை ஏற இறங்கப் பார்த்து, “ஆமாம், நான் தப்புதான் செய்துவிட்டேன். நீ திருடனல்ல, தமிழன்தான். திருடனுக்கு இத்தகைய வாள் தேவை யில்லை. பொருளை எடுத்துக்கொண்டு ஒடுபவனுக்கு வாள் ஒரு வீண் சுமை. அப்படியே ஆயுதம் தேவையானா லும் தூங்கும்போது கொல்ல ஒரு குறுவாள் போதும். இத்தகைய பெரிய, அகலமான வாள் தேவையில்லை. தவிர உன் வாளில் ரத்தக் கறையும் இருக்கிறது. ஒருவேளை சற்றுமுன் கலிங்க வீரர்கள் துரத்தி வந்தது உன்னைத் தானோ?” என்று சந்தேகமும் குரலில் ஒலிக்கக் கேட்டாள்.

அவள் ஊகத்தைக் கண்டு பெரிதும் வியந்தான் கருணாகர பல்லவன். ‘அழகுடன் புத்தி இணைவது அபூர்வம்! அத்தகைய அபூர்வம் இதோ இருக்கிறது” என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்ட அந்த வாலிபன் அவள் கேட்டதற்குப் பதில் சொல்ல முற்பட்டு, “ஆம். என்னைத்தான் துரத்தி வந்தார்கள்” என்றான்.

“துரத்து வந்தார்கள், சேதமும் பட்டிருக்கறார்கள்,” என்றாள் அவள், அந்த வாலிபன் வாளில் கொய்த்திருந்த குருதியைக் கண்டு.

“எனக்கு ஓரளவு போரிடத் தெரியும்” என்று சங்கோஜத்துடன் கூறினான் இளையபல்லவன்.

“இதில் அடக்கம் வேண்டாம். நீ திறமையுடன் போரிடக் கூடியவன்.

எனக்குத் தெரியும்.

“எப்படித் தெரியும்?”

“நான் வாள் சுழற்றிய முறை எங்கள் நாட்டின். தனிப் பயிற்சி. அதை உபயோகித்தால் எதிரி கையிலிருக்கும் வாள் உடனே பறக்க வேண்டும். ஆனால் உன் வாள் இடமாக நின்றுவிட்டது. இந்த முயற்சியில் நான் தோல்வியடைவது இதுவே முதல் முறை. இன்னொரு முறை முயன்றால் கண்டிப்பாய் வெற்றியடைவேன்!”

இளைய பல்லவன் நகைத்தான். “என்னிடம் வாள் போரில் வெற்றியடைய முடியாது பெண்ணே. ஆனால், வேல் போரில் வெற்றியடையலாம்?” என்று கூறவும் செய்தான்!

“வேல் போரா?” ஏதும் புரியாமல் வினவிய அவள் விழிகள் இளைய பல்லவன் முகத்தில் நிலைத்தன.

“ஆம் பெண்ணே! கருணாகர பல்லவனை வாள் போரில் வென்றவர்கள் இதுவரை இல்லை. ஆனால் அதோ. உன் முகத்திலிருக்கும் அந்தக் கூர்வேல்கள்! அவற்றின் சக்தி வேறு. உன்னிடம்தான் எத்தனை படைக் கலங்கள்! ஆர்க்கும். நூபுரங்கள், பேரி, வெற்கண், வெம் புருவம், போர் வில், முரசுபோல் ஒலிக்கும் காலாபரணம், வேல் கண்கள், போர் வில்லென வளைந்த புருவங்கள் எத்தனைப் போர்க் கருவிகள், இவற்றை வெற்றி கொள்ள என்னால் முடியாது, முடியாது!” என்றான்.

அவன் சரச வார்த்தைகளை அவள் கவனிக்கவில்லை. உவமைகளின் இன்சொற்களைக் கவனிக்கவில்லை. அவள் காதில் ஒலித்ததெல்லாம், “கருணாகர பல்லவன்’ என்ற இரண்டே சொற்கள்தான். “எந்தக் கருணாகர பல்லவர்? இளைய பல்லவரா!” என்று பிரமிப்புடன் கேட்டாள் அந்த அழகி.

அவள் பிரமிக்க வேண்டிய காரணம் இளைய பல்ல னுக்குப் புரியவில்லை. “ஆம்” என்று பதில் சொன்னான் குழப்பத்துடன். அவள் கேட்ட அடுத்த கேள்வி, அவன் பிரமிப்பை ௨ச்ச நிலைக்குக் கொண்டு போயிற்று.

“எந்த இளைய பல்லவர்? அநபாயச் சோழர் நண்பரா?”

“ஆம்.

“இதைக் கேட்டதும் மிகுந்த குழப்பத்துக்கு உள்ளான அவள் முகத்தில் அடக்கத்தின் சாயை அதிக வேகமாகப் படர்ந்தது. கண்கள் நிலத்தை நோக்க, “அடடா! உங்களை இத்தனை நேரம் ஏக வசனத்தில் மரியாதையின்றிப் பேசிவிட்டேனே!” என்றாள் அவள்.

அவள் திடீர் மாற்றத்துக்கு அப்பொழுதும் கார ணத்தை அறியாத கருணாகர பல்லவன், “அதனால் பாதக மில்லை. என்னை உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான்.

“பார்த்ததில்லையே தவிர, உங்களை நாடித்தானே இங்கு வந்திருக்கிறோம்?” என்றாள் அவள்.

“வந்திருக்கறோமென்றால் இன்னொருவர் யார்?” என்று வினவினான்.

“என் தந்தை?”

“யார் உன் தந்தை?”

அவள் மெள்ள மெள்ளப் பெயரை உச்சரித்தாள். அந்த உச்சரிப்பு அவனை ஓர் உலுக்கு உலுக்கியது. மித மிஞ்சிய பிரமிப்பால், “யார்? யார்? இன்னொரு முறை சொல்!” என்று சற்று இரைந்து கூவிக்கொண்டு அந்தப் பெண்ணை இரண்டே அடிகளில் நெருங்கினான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 4

பயங்கர ஓலை!

அறை விளக்கின் மங்கலான தங்க ஒளியிலும் மங்காத தங்கமெனத் திகழ்ந்த தேக லாவண்யத்துடன் தேவதை போல் நின்று அந்த எழிலரசியைக் கண்டதும் அரை மயக்கத்துக்குள்ளான இளைய பல்லவன், அவள் பேசப் பேசச் சுயநிலையை அடைந்தானானாலும், அவள் தந்தையின் பெயரை உச்சரித்ததுமே பெரும் அதிர்ச்சியை யும் விவரிக்க இயலாத வியப்பையுமடைந்தவனாய், என்ன செய்கறோமென்பதை அறியாமல், “யார்! யார்! இன் னொருமுறை சொல்!” என்று கூவிக்கொண்டு தனக்கும் அவளுக்குமிருந்ந இடைவெளியை இரண்டே வினாடி களில் கடந்து, அவள் இரு கைகளையும் தன் கைகளால் இறுகப் பிடித்தக்கொண்டதன்றி அவளைக் கூர்ந்து நோக்க வும் செய்தான். எதிர்பாராத விதமாக அந்த வாலிபன் திடீரெனத் தன் கையைப் பிடித்ததைக் கண்டு அவள் அஞ்சவுமில்லை. திமிறிக் கைகளை விடுவித்துக் கொள்ளவு மில்லை. அவள் விழிகள் நன்றாக உயர்ந்து மிகுந்த கோபத் துடன் அவன் விழிகளுடன் விநாடி. நேரம் உறவாடின. பவள இதழ்கள் முதலில் வெறுப்புடன் மடிந்து, பிறகு சற்றே விரிந்து சொற்களை உதிர்த்தன. “என் தந்தை பின் பெயரை இன்னொரு முறை கேட்க என் அருகே வர அவசியமில்லை. கைகளைப் பற்றி நெறிக்கவும் தேவை யில்லை!” என்றாள் அந்த அழக, சொல் ஒவ்வொன்றிலும் அனல் வீச.

கனலை வாரித் தெளித்த, வெறுப்பை அள்ளி வீசிய அந்தச் சொற்களுக்குக்கூட கருணாகர பல்லவனைச் சுயநிலைக்குக் கொண்டு வரும் சக்தி இல்லை. அந்த ஆரம்ப இரவின் சம்பவங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அவன் சிந்தனையில் வலம் வந்ததால், அந்த இரவு தன்னைக் குழப்புவதற்கும் தன்னைத் திரும்பத் திரும்ப வியப்பின் வசப்படுத்துவதற்குமே ஏற்பட்டதோ என்ற நினைப்பிலேயே அவன் மனம் ஆழ்ந்து கிடந்தது. ‘வீரராஜேந்திர சோழ தேவர் அளித்த சமாதானப் பத்திரத் துடன் கலிங்கம் வந்தேன். சுங்கச் சாவடியிலே சண்டை மூண்டது. வீரர்களுக்குத் தப்பி ஓர் அறையில் குதிக்கிறேன். யாரைக் காணவும், காக்கவும் மன்னர் உத்தரவிட்டாரோ, அவர் மகள் வாள் முனையில் என்னை வரவேற்கிறாள். இந்த விந்தைகள் ‘கதைகளில் நிகழ்வதுண்டு. வாழ்க்கையில் விளைவதுண்டா?” என்று திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்து, பிடித்த கைகளை விடுவிக்காமலே சில விநாடிகள் மெளனமாக நின்றுவிட்ட கருணாகர பல்லவனை அவள் சொற்கள் மீண்டும் தாக்கின. “தமிழர் பண்பாடு விசித்திர மாயிருக்கிறது இளைய பல்லவரே! முன்பின் அறியாத பெண்களின் கைகளைப் பிடிக்கும் படிப். பினைதான் தமிழக வாலிபர்களுக்குக் கற்பிக்கப் படுகிறதோ?” என்று சுடச்சுட அவள் சொற்களை உதிர்த்ததன்றிச் சற்றே திமிறவும் செய்தாள்.

அப்படி அவள் சொற்களைச் சுடச்சுட உதிர்த்தாலும், கைகளைத் திமிறியதாலும் ஓரளவு சுயநிலையை அடைந் ததன் விளைவாகத் திடீரென அவள் கைகளை விட்டு விட்டு இளைய பல்லவன், “மன்னிக்க வேண்டும்! உணர்ச்சி வேகத்தில் முறை தவறி நடந்துவிட்டேன்.” என்று குழம்பிக் குழம்பிச் சொற்களை உதிர்த்த வண்ணம் அவளிடமிருந்தும் திடீரெனத் திரும்பி, கையில் அப் பொழுதும் உருவிப் பிடித்திருந்த வாளை உறையில் போட் டுக் கொண்டு, தன்னை நிதானத்துக்குக் கொண்டுவரச் சாளரத்துக்காகச் சென்று வெளியே தலை நீட்டி, கீழிருந்த வீதியைக் கவனித்தான். வீதியில் அப்பொழுதும் வீரர்கள் நடமாட்டம் இருந்தது. தன்னைத் துரத்தி வந்த காவலாட் களுடன் குதிரை வீரர்களும் சேர்ந்துகொண்டு விட்டதை யும், எதிரும், புதிருமாக வீடுகளின் கதவுகளைத் தட்டி வீரர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்ததையும் கண்ட அந்த வாலிபன், சோதனை தொடர்ந்து நடந்தால் தான் பிடிபட அதிக நேரமாகாது எனத் தீர்மானித்துக் கொண்டு, மீண்டும் அறையின் உட்புறத்தை நோக்கத் திரும்பினான். அந்தச் சமயத்திலும் அந்த அழகி இருந்த இடத்தைவிட்டு அசையாமலும் கையில் உருவிப் பிடித்த வாளைச் சுவரின் அணியில் மாட்டாமலும் நின்றிருப்பதைக் கண்டதும் மெள்ளப் புன்முறுவல் செய்த இளைய பல்லவன், “இன்னும் வாள் தேவையா? என்னை யாரென்றுதான் தாங்கள் புரிந்துகொண்டு விட்டீர்களே?” என்றான், நிலைமையைச் சற்றுச் சீர்திருத்த முயன்று.

அவள் கருவிழிகள் அவனை மறுபடியும் நன்றாக ஏற இறங்கப் பார்த்தன. “புரிந்துகொண்டதால்தான் வாள் தேவையாயிருக்கிறது” என்றாள் அவள் இதழ்களில் இகழ்ச்சி நகைகூட்டி.

“என்ன, புரிந்தகொண்டதால் வாள் தேவையாயிருக் கிறதா!” சற்று அச்சரியத்துடனேயே வினவினான் கருணாகர பல்லவன்.

“ஆம்.

“நான் கருணாகர பல்லவன் என்பதை அறிந்த பின்புமா இந்த வாளின் உதவி தேவை?”

“பெயரைக் கேட்டதும் தேவையில்லை என்றுதான் ‘ எண்ணினேன். ஆனால்...!” என்று சொல்லி வாசகத்தை முடிக்காமல் விட்ட அந்த அழக, சிறிது சங்கடத்துக்கும் உள்ளானதைக் கவனித்த இளைய பல்லவன், “ஆனால் என்ன? தைரியமாகச் சொல்லுங்கள்” என்று வினவினான்.

பெண்மையின் சங்கடத்தின் விளைவாக நிலத்தில் தாழ்த்திய விழிகளை அங்கிருந்து அகற்றாமலே அவள் பதில் சொன்னாள் “கருணாகர பல்லவர் என்ற பெயரைக் கேட்டதும் சற்றுத் துணிவுதான் கொண்டேன். தமிழகத் இன் பெரும் வீரர் இருக்கும்போது, பெண்களுக்கு எந்த ஆபத்தும் நேரிடக் காரணமில்லையென்று நினைத்தேன். ஆனால் முன்பின்னறியாத பெண்ணின் கையைப் பற்றும் பண்பாடு இளைய பல்லவருக்கு உண்டு என்பதை அறிந்த பின்புதான், எதற்கும் வாள் கையிலிருப்பது நல்லது எனத் தீர்மானித்தேன்.

“அவள் வார்த்தைகள் உதிர உதிர அவளை விடப் பன்மடங்கு சங்கடத்தையும் வெட்கத்தையும் அடைந்த கருணாகர பல்லவன், “செய்தது தவறுதான். ஆனால் நினைத்துச் செய்த தவறல்ல. இந்த ஊரில் நான் கால் வைத்த விநாடி முதல் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள் தூண்டிய உணர்ச்சி வேகத்தில் நடந்த தவறு” என்று தட்டுத் தடுமாறிச் சமாதானம் சொன்னான்.

பல வீரர்களிடம் தன்னந்தனியே போரிட்டுப் பாலூர்க் கோட்டைக் காவலையும் மீறி வந்திருக்கும் அந்த வாலிப வீரன் தன்னெதிரில் குழந்தைபோல் நிற்பதையும் தட்டுத் தடுமாறிச் சமாதானம் சொல்வதையும் கண்ட அவள் இதயத்தில் அவனைப்பற்றி ஏற்பட்ட ஆரம்ப சந்தேகம் மறைந்து அனுதாபம் உதயமானாலும், அதை வெளிக்குக் காட்டாமல் கடுமையாகவே பேச முற்பட்ட அந்த அழக, உணர்ச்சிகளை ‘அடக்குவதுதான் வீரர்களுக்கு அழகு. இல்லையா? இளைய பல்லவரே?” என்று வினவினாள்.

“உணர்ச்சிகளை அடக்கத்தான் வேண்டும். ஆனால் இரண்டு சமயங்களில் உணர்ச்சிகளை அடக்குவது வீரர் களுக்கு அழகுமல்ல, விவேகமுமல்ல” என்றான் இளைய பல்லவன்.

“எந்தச் சமயங்கள் அவை?” என்று கேட்டாள் அவள் வியப்புடன்.

“ஒன்று, போரிடும் சமயம். அந்தச் சமயத்தில் வீர உணர்ச்சிக்கு இடம் கொடுக்காதவன் வெற்றியடையவ இல்லை. அடுத்தது...” திடீரென்று பேச்சை நிறுத்தினான் இளையபல்லவன், “அடுத்தது காதல்” என்று சொல்ல முற்பட்டவன் தன் யுக்தியையும் தத்துவத்தையும் அளவுக்கு மீறிக் காட்டினால் மேலும் அந்தப் பெண்ணின் இகழ்ச்சிக் கும் கோபத்துக்கும் இலக்காக நேரிடும் என்ற எண்ணத் தால் சம்பாஷணையை வேறு திசையில் மாற்றி, “எதற்கு வீண் விவாதம்? உங்களை எதிர்பாராத விதமாகச் சந்தித்தேன். உங்கள் தந்தையின் பெயரைக் கேட்டதும் அதிர்ச்சி யடைந்தேன். அதனால் உணர்ச்சிப் பெருக்கெடுக்கவே உங்கள் கைகளைப் பிடித்துவிட்டேன். தவறுக்கு வருந்து கிறேன் அரசகுமாரி! வருந்தி மன்னிப்புக் கேட்பவர்களுக்கு மன்னிப்பளிப்பது மன்னர் குலத்தார் பண்பாடு. அந்தப் பண்பாட்டிலிருந்து தாங்கள் பிறழ்வது முறையாகாது” என்றான் ஏதோ தத்துவத்தை எடுத்துச் சொல்பவன் போல.

வீரர்கள் உணர்ச்சிகளை’ இழக்கக்கூடிய இரண்டா வது சம்பவத்தைக் குறிப்பிடப் போய், சரேலென அந்த வாலிபன் பேச்சை மாற்றியதை அந்த அழக கவனிக்கத் தவறவில்லை. அவன் என்ன சொல்ல முயன்றான் என்பதையும் அவன் அடைந்த சங்கடத்திலிருந்தே அவள் புரிந்து கொண்டாளாதலால், அவள் முகத்தில் அதுவரை விரிந்து கடந்த கோபச்சாயை அகன்று வெட்கம் கலந்த சிரிப்பின் சாயை மெள்ளப் படர்ந்தது. சிவந்த புஷ்பம் போல் மெள்ளமென்ள விக௫த்த இதழ்களில் மகிழ்ச்சியைத் தோற்றுவித்த இளநகை விரிந்தது. அந்த மங்கையின் செங்கமல விழிகளும் மகிழ்ச்சியால் துள்ளி விளையாட முற்பட்டன. அந்தக் கருமணிகளில் பிரதிபலித்த அறை விளக்கின் பொன்னிற ஓளி அந்த விழிகளுக்குப் பெரும் விஷமத்தைக் கற்பித்தன. “இளைய பல்லவர் வாள் வீச்சில் வல்லவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பேச்சி லும் வல்லவர் என்று இன்றுதான் அறிந்தேன்” என்றாள் அந்த அழக ‘களுக் ‘கென்று சிரிப்பை உதிரவிட்டு. உதிர விட்ட அந்தச் சிரிப்பைத் தொடர்ந்து கையிலிருந்த வாளையும் பக்கத்திலிருந்த மஞ்சத்தின்மீது எறிந்தாள்.

அவள் முகத்தில் கோபம் அகன்றதையும், அவள் இதழ்கள் மகழ்ச்சி நகை கூட்டியதையும் கண்ட இளைய பல்லவனின் மனமும் பெரிதும் சாந்தப்பட்டதால் அவன் நிதானமாகப் பேச முற்பட்டு, “என் நிலைமை உங்களுக்குப் புரிந்திருக்கிறது, அரசகுமாரி. கோட்டைக் காவலரிட மிருந்து தப்பிக் கடாரத்தின் இளவரசர் தங்கியிருக்கும் மாளிகைக்குள் வந்து குதிப்பேனென்பதை நாம் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? அதுவும் அவர் அழகிய மகளின் வாள் முனையில் நிற்பேனென்பதைத்தான் நான் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? அப்படி. எதிர்பாராத காரணத்தால்தான் நான் சற்றுத் தவறாக நடந்துவிட்டேன். உண்மையில் உங்கள் தந்தை இன்னார் என்று நீங்கள் தெரிவித்ததும் தக்பிரமையே அடைந்தேன்” என்றான்.

அரசகுமாரி ஒரு விநாடி யோத்துவிட்டுக் கேட்டாள். “தக்பிரமை அடைய அதில் என்ன இருக்கிறது? என் தந்தையின் பெயர் குணவர்மன் என்றேன். கடாரத்தின் இளவரசர் ஒருவருக்குத்தான் அந்தப் பெயர் இருக்க வேண்டுமா?”

“இருக்க வேண்டிய அளவசியமில்லை. ஆனால் இத்தகைய பெரும் மாளிகைகள்பாலூரில் மூன்று வீதி களில்தான் உண்டு. ராஜவீது, வணிகர் வீதி, வெளிநாட்டுப் பிரமுகர்கள் தங்கும் வீதி அகிய இம்மூன்று வீதிகளைத் தவிர இந்தக் கோட்டைக்குள் பெரும் மாளிகைகள் எங்கும் கிடையாது. “வர்மர்” என்ற பிற்பகுதியடைய பெயர்கள் கலிங்க அரச பரம்பரைக்கு உண்டு. கடலுக்கப்பாலுள்ள உங்கள் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தின் சைலேந்திர பரம் பரைக்கும் உண்டு. ஆகையால் கலிங்கத்தின் பீமவர்மன், அனந்தவர்மன் என்ற பெயர்களையும், சொர்ணம் கொழிக் கும் தீவுகளை ஆளும் சைலேந்திர பரம்பரையில் சூடா மணிவர்மன் ஸ்ரீமார விஜயதுங்கவர்மன் என்ற பெயர் களையும் கேட்கிறோம். அரசியலில் பழக்கமுடையவர் களுக்கு உங்கள் தந்தை யாரென்பதை நிர்ணயிப்பது கஷ்ட மல்ல. நீங்கள் தங்கியிருப்பது வெளிநாட்டுப் பிரமுகர் தங்கும் வீதி. உங்கள் தந்தையின் பெயர் குணவர்மர். இரண்டையும் இணைத்துப் பாருங்கள்” என்று விளக்கி னான் கருணாகர பல்லவன்.

அதனால் அவர் கடாரத்தின் இளவரசராயிருக்க கே்நுவ்மன்று தீர்மானித்துவிட்டீர்களா!?” என்று கேட்டாள் அரசகுமாரி.

“அதனால் மட்டுமல்ல, அரசகுமாரி. நீங்கள் என்னை வரவேற்ற தோரணை, வாளைப் பிடித்த முறை, இவற்றி லிருந்து நீங்கள் ஏதோ ஓர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் களென்று தீர்மானித்தேன். உங்கள் தந்த பெயரைக் கேட்டதும் என் கற்பனை நிச்சயப்பட்டது” என்றான் இளைய பல்லவன்.

இதற்கு அரசகுமாரி பதிலேதும் சொல்லவில்லை. சற்று நேரம் மெளனமே சாதித்தாள். பிறகு, “என்ன விசித்திரமான இரவு இது, இளைய பல்லவரே! உங்கள் உதவியை நாடி நாங்கள் கலிங்கம் வருகிறோம். எங்களை நாடி நீங்களும் வருகிறீர்கள். இப்படி எதிர்பாராத வித மாகத் தஇடீரென இந்த இரவில் இந்த அறையில் சந்திக் கிறோம். அதுமட்டுமல்ல, ஒருவரையொருவர் சந்திக்க வந்த நாமிருவரும் பெரும் ஆபத்திலும் சிக்கியிருக்கறோம்” என்று மெள்ளச் சொன்னாள்.

கருணாகரபல்லவனின் புருவங்கள் சந்தேகம் கேட்பன போல் சற்றே எழுந்தன. “நான் அபத்திலிருப்பது உனக்குத் தெரியும், அரசகுமாரி. ஆனால் உங்களுக்கு என்ன ஆபத்து இருக்க முடியும்? மாறு பெயரிலேதானே இங்கு வச௫ிக்கிறீர்கள்?” என்று கேட்டான் அவன்.

“ஆம், மாறு பெயரில்தான் இங்கு வசிக்கிறோம். ஆனால் இந்த ஊர் அதிகாரிகளுக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டிருக்க வேண்டும், இளைய பல்லவரே! இரண்டு நாள்களாக இந்த மாளிகையின்மீது கண்காணிப்பு பலமாக இருக்கிறது” என்று பதில் சொன்னாள் அவள்.

இதைக் கேட்டதும், தீவிர சிந்தனையில் ஆழ்ந்து விட்ட கருணாகரன் நீண்ட நேரம் பேசாமலே அறையில் அங்குமிங்கும் உலாவினான். பிறகு சட்டென்று அறை நடுவே நின்று அவளை நோக்க, “நீங்கள் இங்கு வந்து எத்தனை நாள்களாகின்ற்ன?” என்று வினவினான்.

“இட்டத்தட்ட பதினைந்து நாள்களாகின்றன.

“உங்களைத் துறைமுகத்தில் யார் சந்தித்தது?”

“யாரோ கோட்டைக்கரைக் கூலவாணிகளாரம்.

“அவன்தான் இந்த மாளிகையை அமர்த்திக் கொடுத்தானா?”

“ஆமாம்.

“அவன் இங்கு நாளைக் காலையில் வருவானா?”

“தெரியாது!”

“தெரியாதா?”

“பத்து நாள்களாக அவன் இந்தப் பக்கமே நாட வில்லை.”

இந்தப் பதிலைக் கேட்டதும் சில விநாடிகள் அசை வற்று நின்றுவிட்ட கருணாகர பல்லவன், மேலே ஏதோ பேச முற்படுமுன் அந்த அறைக் கதவு பலமாகத் தட்டப் பட்டது. “காஞ்சனா, காஞ்சனா, உனக்காக எத்தனை நேரம் காத்திருப்பது? ஆடை புனைய இத்தனை நேரமா?” என்று அடுத்தடுத்துக் கேட்கப்பட்ட கேள்விகளின் காரண மாகச் சட்டென்று அரசகுமாரி கதவைத் இறக்கவே, உள்ளே நுழைந்த சைலேந்திர குலத் தோன்றலான குணவர்மன் அந்த அறை அளித்த காட்சியைக் கண்டு, வாயிற்படியைத் தாண்டி வைத்த ஒரு கால் அப்படியே இருக்க, உள்ளே முழுவதும் நுழையாமலும், ஏதும் புரியாமலும் தன் கண்களை அறையிலிருந்த இருவர் மீதும் மாறிமாறி நிலைக்க விட்டான்.

அந்த நிலைமை அங்கிருந்த மூவருக்குமே பெரும் சங்கடத்தை விளைவித்தது. அடையைச் சரியாகப் புனை யாமல் அரைகுறையாகச் சுற்றிக்கொண்டு தன் புதல்வி நிற்பதையும், அவளை விழுங்கி விடுபவன்போல் ஒரு வாலிப வீரன் கண்களை அவள்மீது செலுத்திக் கொண் டிருப்பதையும் கண்ட குணவர்மனுக்கு, என்ன பேசுவது, என்ன செய்வது என்று தெரியாததால், சற்றே குழம்பினான். அரைகுறையாகச் சுற்றப்பட்ட ஆடையுடன் தான் நிற்பதைத் தந்தை கண்டு மலைத்ததைக் கவனித்த அரச குமாரி, நாணம் உணர்ச்சிகளைக் கெளவிக் கொள்ளவே குழப்ப மிகுதியால் தரையில் கண்களை ஓட்டினாள். மற்ற இருவரைவிடக் கருணாகர பல்லவனின் நிலை அதிக சங்கடமாயிருந்த போதிலும் அரசகுமாரியின் பெயர் ‘காஞ்சனாதேவி’ என்பதை அவள் தந்தையின் அழைப்பி லிருந்து அறிந்துகொண்ட காரணத்தால், அவன், ‘காஞ்சனா தேவி! என்ன அழகான பெயர்!” என்று தனக்குள்ளேயே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டதன்றி, ‘இவள் அழகுக்குப் பெயர் விளக்கம் கூறுகிறது. இவளும் சொர்ண விக்ரகம் போலத்தானே இருக்கிறாள்” என்று’ விவரித்து மனத்தை மகழ்ச்சி வெள்ளத்தில் அழ்த்திக் கொண்டிருந்தான்.

இப்படி மூவரும் மூன்றுவித மார்க்கத்தில் சிந்தனை களை ஒட்டியதால் ஏற்பட்ட மெளனத்தை, சங்கடத்தி லிருந்து முதலில் தன்னை மீட்டுக்கொண்ட காஞ்சனா தேவியே கலைக்கத் தொடங்கி, “அடை புனையத்தான் அறைக்கு வந்தேன்...” என்று இழுத்தாள்.

“அப்படியானால் ஏன் புனையவில்லை?” என்று எழுந்தது குணவர்மன’ி கனேள்வ ி, சற்றுக் கோபத்துடன்.

“அதற்குள் இவர் வந்துவிட்டார்” என்றாள் காஞ் சனாதேவி, இளைய பல்லவளைக் கையால் சுட்டிக்காட்டி.

குணவர்மனின் குழப்பமும் கோபமும் அதிகமாக் கொண்டிருந்தன. தன் பெண் பாதி அடை உடுக்கும் போது ஊர் பேர் தெரியாத ஆடவன் ஒருவன் அறைக்குள் வந்ததை நினைத்தபோதே கோபம் அவன் முகத்தில் தாண்டவமாடியது. அதைப்பற்றித் தன் பெண் வெட்க மில்லாமல் பேசுகிறாளே என்பதை நினைக்க அந்தக் கோபம் எல்லையைத் தொட்டது. ஆனால் திடீரென ஏற்பட்ட அந்தச் சூழ்நிலையில் சிறிது குழப்பத்துக்கும் உள்ளான குணவர்மன், “இவர் வந்துவிட்டாரா!” என்று முதலில் சிறிது வியப்பைக் காட்டி, பிறகு, “இவர் யார்? முன்பே தெரியுமா உனக்கு?” என்று புதல்வியைக் கேட்டான்.

“தெரியாது. சற்று முன்புதான் அறிந்தேன்” என்றாள் காஞ்சனாதேவி.

“அப்படியா!” என்று எழுந்தது குணவர்மனின் இரண் டாவது கேள்வி. அவன் குரலில் ஒலித்தது இகழ்ச்சியா கோபமா என்பது விளங்கவில்லை காஞ்சனா தேவிக்கு. இருந்த போதிலும் மறுபடியும் சொன்னாள், “அறிந்ததும் வியப்படைந்தேன்.” என்று.

“எப்படி வந்தார் இவர்?” என்று குணவர்மன் விசாரித்தான்.

“சாளரத்தின் வழியாக.

“வீரர்கள் வரச் சரியான வழிதான் இது!”

“தவறாக எண்ணுகிறீர்கள், தந்தையே. இவர் கலிங் கத்தின் வீரர்களால் துரத்தப்பட்டார். தப்பி வந்து அறைக் குள் குதித்தார்.

“வீரர்களுக்குப் பயந்து பெண்ணிடம் சரணாகதியா? சிறந்த வீரன்தான். சந்தேகமில்லை.

“தந்தை திரும்பத் திரும்ப இடக்காகவும் இகழ்ச்சியா கவும் பேசியதால் சற்றுக் கோபமடைந்த காஞ்சனாதேவி, “யோசித்துப் பேசுங்கள், தந்தையே! இவரை யாரென்று நீங்கள் அறியாமல் பேசு$கறீர்கள்!” என்று எச்சரித்தாள்.

“அந்த வாய்ப்பு உனக்குத்தான் முதலில் கடைத் திருக்கிறது” என்றான் குணவர்மன்.

அவன் சொற்களில் கண்ட இகழ்ச்சியின் விளை வாகச் சிறி எழுந்த காஞ்சனாதேவி, “அந்த வாய்ப்பை உங்களுக்கும் அளிக்கிறேன், தந்தையே! பெற்றுக்கொள்ளுங்கள். யாரை நாடி நீங்கள் கலிங்கம் வந்திருக்கிறீர்களோ, யார் துணை கொண்டு சோழவேந்தன் உதவியை நாடக் கடல் கடந்து இங்கு வந்து தங்கியிருக்கிறீர்களோ! அந்த இளைய பல்லவர்தான் உங்கள் முன்பு நிற்கிறார்?” என்று கூறிவிட்டு அந்த அறையை விட்டுச் செல்லச் சரேலெனத் திரும்பினாள்.

“நில்லுங்கள், அரசகுமாரி!” என்று அவளைத் தடுத்த கருணாகர பல்லவன், “சைலேந்திர மன்னரே! விதியின் விசித்திரக் கயிறுகள் விபரீத நிலையில் இந்த மாளிகையில் நம்மைப் பிணைத்திருக்கின்றன. விரிவாகப் பேச இது சமயமல்ல. ஆனால் இதை மட்டும் படியுங்கள்” என்று தன் கச்சையிலிருந்த பையை எடுத்துப் பிரித்து, அதற்குள்ளிருந்த ஓர் ஓலையை எடுத்துக் குணவர்மனிடம் நீட்டினான். அந்த ஓலையை விளக்கின் அருகில் கொண்டு சென்று படிக்கத் துவங்கிய குணவர்மனின் முகத்தில் பெரும் வியப்பும் திகைப்பும் மெல்ல மெல்லப் படரலாயின. சில விநாடிகள் ஓலையைக் கையில் பிடித்த வண்ணமே நின்று விட்ட குணவர்மன் அந்த ஓலையைத் தனது மகளிடம் நீட்டினான். ஓலையில் கண்ட வரிகளில் ஓடிய ஏந்திழை யின் கண்கள் மெள்ள எழுந்து இளைய பல்லவனை நோக்கன. “இந்த ஓலையில் கண்டிருப்பது உண்மை யானால்...இதில் கண்டிருப்பது மட்டும் நடந்துவிட்டால்...“என்று ஏதோ சொல்ல முயன்று, பெரும் திகிலால் பேச முடியாமல் சொற்களை விழுங்கினாள் காஞ்சனாதேவி.

அவளைத் தொடர்ந்து பேசிய குணவர்மனின் குரல் மிகவும் தனமாக ஒலித்தது. “ஓலையில் கண்டிருப்பது நடந்தால் எங்கள் குலம் ஒழிந்தது! சைலேந்திரர் பேரரசு முறிந்தது! சொர்ண பூமியே அழிந்தது!”

“என்ன பயங்கர ஓலை! என்ன பயங்கரத் திட்டம்!” என்று காஞ்சனா தேவியும் பெருமூச்செறிந்தாள். அறை விளக்கின் சுடர்கூட லேசாக நடுங்கியது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஆத்தியாயம் – 5

சமரின் முரசொலி !

கச்சையில் செருகியிருந்த சுருக்குப் பட்டுப் பையி லிருந்து கருணாகர பல்லவன் எடுத்துக் கொடுத்த ஓலை யைப் படித்த மாத்திரத்தில் பெரும் பிரமிப்புக்கும் திகைப்புக்கும் உள்ளான தந்தையும் மகளும் நீண்ட நேரம் ஏதும் பேசாமல் உள்ளத்தில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் எழுந்தோட ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே நின்றிருந்தார்கள். ஓலையைக் கண்டதால் அந்த இருவர் உள்ளத்திலும் ஏற்பட்ட தலையும் குழப்பத்தையும் நன்கு அறிந்துகொண்ட கருணரகரபல்லவன், அவர்கள் உணர்ச்சி களின் கொந்தளிப்பு தானாகவே அடங்கட்டும் என்ற நினைப்பால் ஏதும் பேசாமல் அவர்கள் மெளனத்தில் தானும் பங்கு கொண்டானாகையால், அந்த அறையில் பயங்கரமான அமைதியே நிலவிக் கடந்தது. சதா அலை மோதும் மனித வாழ்க்கையில் அமைதிக்கோ மெளனத். துக்கோ எத்தனை நேரம்தான் இடமிருக்க முடியும் ஆகவே. பல நிமிஷங்கள் உணர்ச்சி வசப்பட்டு நின்ற தந்தையும் மகளும் கடைசியாக விளக்கடியிலிருந்து திரும்பி, ஏதேதோ சந்தேகங்கள் பாய்ந்து நின்ற தங்கள் கண்களை இளைய பல்லவன்மீது செலுத்தினார்கள். குணவர்மனின் கண்களை ஒரு வினாடியே சந்தித்த இளைய பல்லவனின் கண்கள் காஞ்சனா தேவியின் அஞ்சன விழிகளை மட்டும் நீண்ட நேரம் கவர்ந்து நின்றதன்றி, அத்தனைக் குழப்பத்திலும் சந்தேகத்திலும் சஞ்சலத்திலும் கூட அந்த விழிகளின் ஒளி சிறிதும் குன்றாதிருந்ததை அவன் மனம் எண்ணிப் பார்த்து எல்லையற்ற மகழ்ச்சி யையும் வியப்பையும் அடைந்தது. குழப்பத்தன் விளை வாகப் பெரும் குருதி பாய்ந்து சிவந்து நின்ற வழவழத்த அவள் கபோலங்களின் அழகையும் காணத் தவறாத கருணாகர பல்லவன் ‘தகைப்பிலும் குழப்பத்திலும் முகம் விகாரப்படுவது இயற்கை. ஆனால் இயற்கையின் அந்த நியதியையும் மீறும் இவள் அழகு எத்தனை இறந்தது? என்று தனக்குள்ளேயே ஆச்சரியப்பட்டுக் கொண்டான். தான் கொண்டுவந்த ஓலை அளித்த பயங்கரச் செய்தியைக் கேட்ட பின்பு சற்றே துவண்ட தேகத்தின் விளைவாக அவள் நுண்ணிய இடை ஒரு பக்கம் சாய்ந்து வளைந்த தால் அவள் நின்ற நிலையில் எத்தனை ஓய்யாரம் ஏற்பட்டது என்பதையும் கவனித்த கருணாகர பல்லவன், “வாளேந்திய வீராங்கனையின் நிமிர்ந்த உருவத்துக்கும், இடை வளைந்து நிற்கும் இந்த மோகன பிம்பத்திற்கும் எத்தனை வித்தியாசம்! ஒவ்வொரு மாற்றமும் இவளுக்கு எத்தனை விதவிதமான அழகை அள்ளிச் சொரிகிறது!” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

காஞ்சனாதேவி அந்தப் பார்வை ஆம்புகளால் பெரிதும் அவஸ்தைப்பட்டுச் சற்றே நெளிந்தாளானாலும், தந்தை பக்கத்திலிருந்ததால் அந்த வாலிபன் பார்வையை அவரும் கவனித்துவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தின் விளைவாக மேலும் தாமதம் செய்யாமல் பேச்சைத் துவங்கி, “இந்த ஓலை உங்களிடம் எப்படிக் கிடைத்தது?” என்று மெள்ள வினவினாள்.

கருணாகர பல்லவனின் கண்கள் காஞ்சனா தேவி யின் பக்கத்திலிருந்த குணவர்மனை ஒருமுறை ஏறெடுத்து நோக்கிவிட்டுப் பிறகு காஞ்சனாதேவியைச் சற்று உற்றுப் பார்த்தன. “தேவி! இந்த ஓலையைச் சோழ சாம்ராஜ் யாதிபதி வீரராசேந்திரரே என்னிடம் நேரிடையாகக் கொடுத்தார். உங்களிருவரையும் எப்படியும் கண்டு பிடித்துக் காப்பாற்றிச் சோழ நாடு அழைத்து வரும் படியும் உத்தரவிட்டார். ஓலையில் கண்டிருந்த விஷயத் தைக் கவனித்தீர்களா இல்லையா?” என்று பாதி விளக்க மும் பாதி கேள்வியும் தொனித்த சொற்களும் அவன் உதடுகளிலிருந்து உதிர்ந்தன.

இதற்குக் காஞ்சனாதேவி பதிலேதும் சொல்லாவிட் டாலும் திகில் நிரம்பிய குரலில் குணவர்மனே சொன் னான் “நன்றாகக் கவனித்தோம் இளைய பல்லவரே! என்னையும் கலிங்கத்தைத் தாண்டுமுன்பு கொன்று விடும்படி. இந்த ஓலையில் உத்தரவிருக்கிறது.

“உங்களுக்கு உங்கள் நாட்டில் நிரம்ப விரோதிகள் இருக்க வேண்டும் குணவர்மரே!” என்று கூறிய இளைய பல்லவன் சற்று நிதானித்துவிட்டு, “ஆமாம், உங்கள் உயிருக்கே உலை வைக்க முயலும் இத்தனைக் கொடிய விரோதிகள் உங்களுக்கு ஏற்பட என்ன காரணம்.” என்றும் விசாரித்தான்.

குணவர்மன் முகத்தில் அதுவரை இருந்த குழப்பமும் இடலும் சரேலென மறைந்து அவற்றின் இடத்தைக் கம்பீரத் தின் சாயை ஆக்ரமித்துக் கொண்டது. அந்தக் கம்பீரம் குரலிலும் தாண்டவமாடப் பேச முற்பட்ட குணவர்மன், “விரோதிகள் என்று பன்மையில் பேச வேண்டாம் இளையபல்லவரே! என் நாட்டு மக்கள் அனைவரும் என்னை நேசிக்கிறார்கள். அந்த நேசம்தான் என் வாழ்வின் நாசத்தில் வந்து முடிந்தது. எனக்கு விரோதிகள் இல்லை. இருப்பது ஒரே ஒரு விரோதிதான். அவன் பெயர்தான் இந்த ஓலையில் கையொப்பமாகப் பெொறிக்கப்பட்டி ருக்கிறது” என்று உணர்ச்சி பொங்கப் பதில் சொன்னான்.

அதுவரை கோழை. போலிருந்த குணவர்மன் தஇடீரென நிமிர்ந்து நின்றதையும் அரச தோரணையில் பேச முற்பட்டதையும் கண்ட கருணாகர பல்லவன், கடாரத்து இளவரசனிடம் பெருமதிப்புக் கொண்டதன்றி அனுதாபத்துடனும் பேசத் தொடங்கி, “அந்த ஓலையில் கையொப்ப மிட்டிருப்பவனா!” என்று வினவினான்.

“ஆம், அவனேதான் ஜெயவர்மன் ஒருவர்தான் என் நாட்டில் எனக்கு விரோதி.” என்றான் குணவர்மன், வருத்தம் தோய்ந்த குரலில்.

“யாரிந்த ஜெயவர்மன்?” என்றான் கருணாகர பல்லவன், விஷயத்தைத் தெளிவாக அறிந்துகொள்ளும் நோக்கத்துடன்.

“என் மாற்றாந்தாயின் மகன்.

“அதாவது...

“என் சகோதரன்!”

“அப்படியானால் உங்கள் தந்தைக்கு மனைவியர் இருவரா?”

“ஆம்.

“கடாரத்தின் மன்னர் உங்கள் சகோதரரா?”

கடாரத்தின் மன்னன் என ஜெயவர்மனை இளைய பல்லவன் குறிப்பிட்டதை ரசிக்காத குணவர்மனின் முகம் லேசாகச் சுளித்தது.

“தற்சமயம் அவன்தான் அரசாள்றான்” என்று வெறுப்புடன் பதில் சொன்னான் குணவர்மன்.” --- “மன்னரை “அவன்’ என்று சொல்கிறீர்களே?” என்று கேட்டான் இளையபல்லவன்.

“எனக்கு நான்கு வயது சிறியவன் அவன்.

“இருந்தாலும் அரியணையில் அமர்ந்திருக்கும் மன்ன ரல்லவா?”

“உண்மைதான்.

ஆனால் சைலேந்திரர்களின் அரி யணையில்.

அமரவேண்டியவன் அவனல்ல, நான்தான்.

“விந்தையாயிருக்கிறதே!”

“விந்தையேதுமில்லை இளையபல்லவரே! என் தாய் தான் என் தந்தையின் பட்டமகிஷி. நான்தான் முடி சூட என் தந்தையால் தேர்ந்தெடுக்கப்பட்ட இளவரசன். கடாரத்தில் நான் தற்சமயம் இளவரசனாயிருப்பதற்கும் தந்தை இருக்கும்போது இடைத்த பதவிதான் காரணம்.

“அப்படியா.” என்ற கருணாகர பல்லவனின் எண் ணங்கள் கடார மன்னர்களின் குழம்பிய அரச பரம்பரைச் சிக்கல்களில் புகுந்தது. கடாரத்தின் சைலேந்திர மன்னர்கள் சில காலம் விரோதம் பாராட்டியதையும், இளையபல்லவன் நன்கு அறிந்தான். சமீபத்தில் கடாரத்திலும் சொர்ணத் தீவிலும், சாரவகத்திலும் அரசியல் குழப்பங்கள் அதிகமாகி விட்டதையும் கருணாகர பல்லவன் உணர்த்திருந்தானா னாலும் இத்தகைய ஓர் அரியணைப் போட்டி நடக்கிற தென்பதை அறிய வாய்ப்பில்லாதிருந்ததாகையால், குண வார்மன் குறிப்பிட்ட விஷயங்களைப் பூரணமாகக் கிர௫க்கச் சக்தியற்றவனானான். ஆகவே சில நிமிடங்கள் யோசித்த பிறகு, “குணவர்மரே! உங்கள் குடும்பக் கதையில் கலகமும் போட்டியும், ஏன் கொலை முயற்சியும்கூடக் கலந் திருக்கிறது. அவற்றை விவரித்துச் சொன்னால்தான் நான் உள்ள நிலைமையைச் சரிவர உணர முடியும்” என்றான்.

சைலேந்திர ராஜா பரம்பரைச் சிக்கலை அறிந்து கொள்ளக் கருணாகர பல்லவன் அவலுடன் இருந்தானா னாலும் அந்த ஆவலை உடனே பூர்த்தி செய்யக் குணவர் மன் முனையவில்லை. “இளையபல்லவரே! கடாரத்தின் கதை மகத்தானது. அதை நிதானமாகத்தான் சொல்ல வேண்டும். நீங்கள் எங்களைச் சந்தித்த முறையின் விசித்தரத்தை எண்ணிப் பார்க்கும் போது ஏதோ நல்லதொரு விதிதான் நம்மைப் பிணைத்திருக்கிறதென்று சொர்ணத் தீவு என்பது சுமித்திராவின் பழைய பெயர். சொர்ண பூமி யென்பது தெற்கு பர்மா, மலேயா, சுமாத்ரா முதலியவற்றின் பொதுப் பெயர். நினைக்கிறேன். இரவு ஆரம்பித்து ஐந்து நாழிகைகள்தான் ஆகியிருக்கின்றன. சற்று முன்பு நீங்கள் பட்ட அவதிக்குப் பின்பு உங்களுக்கும் சற்று அமைதி தேவை. ஆகவே நீராடி விட்டு வாருங்கள். உணவு அருந்தியபிறகு பேசுவோம். விளக்கமாக விஷயத்தைக் கேட்டபின்பு அடுத்தபடி. என்ன செய்தால் இந்தப் பாலூர்ப் பெருந்துறையிலிருந்து தப்ப முடியும் என்பதை நிர்ணயிப்போம்.” என்று கூறிய குணவர்மன் தன் மகளை நோக்க, “காஞ்சனா! இளைய பல்லவரை நீராடும் இடத்திற்கு அழைத்துச் செல். ஏவலாட்களை விட்டு அவருக்குச் சகல வசதிகளையும் செய்து கொடு” என்று சொல்லிக் கொண்டு போனவன், வாயிற்படிக்கருகில் திடீரெனத் திரும்பிய, இளைய பல்லவனை ஏற இறங்கப் பார்த்து, “இவரும் நானும் கிட்டத்தட்ட ஓரே உயரப் பருமன்தான். ஆகவே என் உடைகளில் சிலவற்றை இவர் அணிந்து கொள்ளலாம்” என்றும் மகளுக்கு உணர்த்திவிட்டு அறையிலிருந்து வெளியே நடந்தான்.

அவன் சென்றதும் கருணாகர பல்லவனை நோக்கப் புன்முறுவல் செய்தாள் காஞ்சனாதேவி. “ஏன், வரலாமே இளையவல்லவரே ! தந்தை உத்திரவிட்டு விட்டார். பணிப் பெண் காத்திருக்கிறேன்” என்று விஷமமாகப் பேசவும் பேசினாள்.

பதிலுக்குக் கருணாகர பல்லவன் சற்று இரைந்தே நகைத்தான். அவன் சிரிப்பின் காரணத்தை அறியாத காஞ்சனாதேவி, “ஏன் நகைக்கிறீர்கள்” என்று வினவினாள்.

“உங்களைப் பணிப் பெண்ணாகப் பெற்றால் என் கதி என்ன அகும் என்று நினைத்தேன். சிரிப்பு வந்தது” என்றான் கருணாகர பல்லவன்.

“ஏன் என்ன ஆகும்? நான் பணிப் பெண்ணாக வந்தால் பணிவிடைகளில் குறைவிருக்குமா?”

“இருக்காது இருக்காது. இந்த அறைக்குள் வந்ததும் அதைப் புரிந்துகொண்டேன்.

“என்ன புரிந்தகொண்டீர்கள்? “

“வாள் முனையில் பணிவிடைகள் கிடைக்கு மென் பதை.

“இதைக் கேட்டதும் காஞ்சனாதேவியும் கலகலவென நகைத்தாள். “பேச்சில் வல்லவர் என்று நான் முன்னம் சொன்னதே சரியாகிவிட்டது. சரி சரி, வாருங்கள்” என்று சற்றுப் பொய் அதட்டலும் போட்டு அவனை அந்த அறையைவிட்டு அழைத்துச் சென்றாள் அரசகுமாரி.

குணவர்மனுக்குக் கோடிக்கரைக் கூலவாணிகன் அமர்த்தியிருந்த மாளிகை மிகப் பெரிதாகவே இருந்ததைக் கவனித்த இளையபல்லவன், அதன் அமைப்பைப் பார்த் துக் கொண்டே அரசகுமாரியைப் பின்தொடர்ந்தான். அந்த அறைகள் இருந்த முறையும், பெருங். கதவுகள் இரும்புத் தாழ்ப்பாள்களுடன் பொருத்தப்பட்டிருப்பதையும் கண்ட அந்த வாலிப வீரன் அவசியமானபோது அந்த மாளிகை சிறு கோட்டையாகவும் மாறக்கூடும் என்று தீர்மானித் தான். ஒருவேளை அந்த வீடு கலிங்கத்தின் காவல் வீரர்களால் முற்றுகையிடப்பட்டாலும் பத்துப் பதினைந்து வீரரும் அவசியமான உணவுமிருந்தால் எதிரிகளை ஒரு வாரத்துக்கு மேல் எதிர்த்து நிற்க முடியும் என்றும் தட்டம் போட்டான் கருணாகர பல்லவன். இப்படி எதிரிகளைச் சமாளிக்கும் வழியையும், பாலூர்ப் பெருந்துறையிலிருந்து குணவர்மனையும் காஞ்சனாதேவியையும் தப்ப வைத்து அழைத்துச் செல்லும் மார்க்கத்தையுமே திரும்பத் திரும்ப மனத்தில் எண்ணிக்கொண்டு அரசகுமாரியைப் பின் தொடர்ந்த இளையபல்லவன், பணியாட்களின் உதவியால் நீராட்டத்தை முடித்துக்கொண்டு குணவர்மனது உடை களை அணிந்துகொண்டதும் போஜன அறைக்குள் நுழைந்தான். அவன் நுழைந்தபோது அந்த அறையில் குணவர்மன் இல்லை. காஞ்சனாதேவி மட்டுமே அவனை எதிர்கொண்டாள். முன்பு அறையின் மங்கலான வெளிச் சத்தில் பார்த்ததைவிடப் பன்மடங்கு அழகுற துலங்கினாள் காஞ்சனாதேவி, அரைகுறை ஆடையுடனும், அபரண மில்லாமலும் அப்பொழுது அவளைப் பார்த்த கருணா கரனுக்கு, குறைவற்ற ஆடைகளுடனும் அணிமணிகளுட னும் அவள் நின்றிருந்த தோற்றம் பெரும் பிரமிப்பை அளித்தது. சேலையை மிக அழகாக அணிந்ததால் இடையி லிருந்த பட்டை கால்களுக்கிடையில் அழகாக ஓடிப் பாதங்களின் மேற்புறங்களைத் தடவ, இறுக்கிக் கட்டப் பட்ட இடை சற்று இருந்தும் இல்லை போல் தோற்ற மளிக்க நின்றிருந்தாள் காஞ்சனாதேவி. அவள் முகத் தாமரை மந்தகாசத்தால் விரிந்து கிடந்தது. ரவிக்கைக்கு மேலே தெரிந்த வெளேரென்ற சருமத்தில் நவரத்தினங்கள் பதிந்த சிறிது ஆபரணமொன்று பலப்பல நிறங்களை விளக் கொளியில் கிளப்பி, இரட்டை வண்ணச் சேலையின் வர்ண ஜாலங்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்தது. இளைய பல்லவனைக் கண்டதும் அவள் முகத்தில் வெட்கம் விரிந்தது. ஆனால் அரச தோரணை மாறாத தால், கம்பீரமும் வெட்கமும் இணைந்து முகத்தின் பொலி வைப் பன்மடங்கு உயர்த்தியதைப் புரிந்துகொண்டான், அந்த வாலிப வீரன்..

அவனை வரவேற்ற காஞ்சனாதேவிகூட நீராட்டத் தாலும் புதுஉடை புனைந்ததாலும் இளைய பல்லவனது தோற்றத்தில் ஏற்பட்ட அற்புத மாற்றத்தைக் கண்டு பெரிதும் வியந்தாள். துவட்டிய பின்பும் அவன் சுருட்டை மயிர்கள் நீரை ஓரிரு இடங்களில் மணிகள்போல் சொட்டிக் கொண்டிருந்ததையும், அப்படிச் சொட்டிய நீரும் அவன் முகத்துக்குப் பெரும் கம்பீரத்தை அளித்ததை யும், “அழகாக இருந்த இளமீசை அவன் வீரத்துக்குச் சான்று கூறியதையும் காஞ்சனாதேவி கவனித்தாள். குணவர்மனின் அரச உடை அவனுக்கு எத்தனைப் பொருத்தமாக இருந்தது என்பதையும், கன்னத்திலிருந்த காயத்தின் றல் வடுகூட அவனுக்கு இணையற்ற அழகை அளித்ததையும், அவன் கைகள் முழந்தாளைத் தொடும் அளவுக்கு நீண்டு கிடந்ததையும் கண்ட காஞ்சனாதேவி தான் பாரதத்தின் சிறந்த வீரன் ஒருவனுக்கு முன்பு நிற்பதை அறிந்தாள். அறிந்ததன் விளைவோ, என்னவோ, “வீரரே! வருக வருக!” என்று அழைப்பும் விடுத்தாள்.

அவள் அப்படி அழைத்ததால் புன்முறுவல் கொண்ட கருணாகர பல்லவன், “ஏது, வரவேற்பு பலமாயிருக்கிறது?” என்று கேட்டுக்கொண்டே அவளை அணுகி வந்தான்.

“விருந்தினர்களை வரவேற்பதும் உபசரிப்பதும் எங்கள் நாட்டுப் பழக்கம்” என்று கூறிய காஞ்சனாதேவி, “இதோ தந்தையும் வந்துவிடுவார்” என்று குணவர்மன் வராத தற்கு மன்னிப்புக் கேட்கும் பாவனையில் வார்த்தைகளை உதிர்த்தாள். குணவர்மன் வரவைப்பற்றிக் கருணாகர பல்லவன் கவலைப்படவில்லை. காஞ்சனா தேவியுடன் தனித்திருப்பதே அவனுக்குப் பெருமகழ்ச்சியைக் கொடுத்த தால், “வரட்டும். நிதானமாக வரட்டும். எனக்கொன்றும் அவசரமில்லை” என்றான்.

அந்த வாலிபனின் சொற்களில் புதைந்து கடந்த எண் ணத்தைப் புரிந்தகொண்டாலும் புரிந்தகொள்ளாதது போலவே நடித்தாள் காஞ்சனாதேவி. “உங்களைக் காக்க வைக்க இஷ்டமில்லை. இருப்பினும் தந்தை நீராடச் சற்று அதிக நேரமாகும். என்ன செய்வது?” என்று உள்ள எண் ணத்துக்கும் உதட்டுச் சொற்களுக்கும் சம்பந்தமில்லாமல் பேசினாள் காஞ்சனாதேவி. அத்தகைய சம்பாஷணை எத்தனை நேரம் நடந்தாலும் அந்த இருவருக்கும் திருப்தி யாகவே இருந்திருக்கும். ஆனால் அந்தத் திருப்திக்கு இடைஞ்சலாகச் சீக்கிரமே உள்ளே நுழைந்த குணவர்மன், உணவருந்தலாம் வாருங்கள்” என்று அழைத்தான்.

தங்கக் கலங்களில் பலப்பல விதமான உணவுகளும் கனிகளும் பரிமாறப்பட்ட போதிலும் மூவரும் அதிகமாக உண்ணவேயில்லை, மூவர் புத்தியிலும் அலைமோதிக் கொண்டிருந்த எண்ணங்கள் பசியைப் பெரிதும் தடை செய்திருந்தனவாகையால், அரை நாழிகைக்குள் உண வருந்திய ஆம்மூவரும் கைகழுவிவிட்டுப் பணியாட்கள் கொடுத்த பட்டுத் துணிகளில் கைகளைத் துடைத்துக் கொண்டு மாளிகையின் மாடியறையொன்றை அடைந்தனர். அந்த அறையிலிருந்த விசாலத்தையும் அதிலிருந்த மஞ்சங்களையும் பார்த்த கருணாகர பல்லவன் அவர் களுக்குத் தகுந்த ஏற்பாடுகளையே கோடிக்கரைக் கூல வாணிகள் செய்திருக்கிறானென்பதை உணர்ந்து அவனைப் பெரிதும் மனத்திற்குள் பாராட்டிக் கொண்டும், அந்த அறையைத் தன் கண்களால் அளவெடுத்துக் கொண்டும் மஞ்சமொன்றில் உட்கார்ந்ததன்றி, மற்ற இருவரையும் உட்காரும்படியும் சைகை காட்டினான். அவன் சைகைப்படி. காஞ்சனாதேவி எதிரேயிருந்த மஞ்சமொன்றில் அமர்ந் தாளானாலும், குணவர்மன் உட்காராமல் சற்று எட்ட விலகி அவ்விருவரையும் சிறிது நேரம் பார்த்துக் கொண்டு ஏதும் பேசாமல் மெளனமாக நின்றான். கடைசியில் மெளனத்தைக் கலைத்துக் கொண்டு, “இளைய பல்லவரே! நான் கேட்பதற்கு மன்னிக்க வேண்டும். நீங்கள் இளைய பல்லவர் என்பதற்கு நீங்கள் கூறிய வார்த்தையைவிட வேறு சான்றுகள் இல்லை. ஆகவே தாங்கள்தான் இளைய பல்லவர் என்பதற்கு ஏதாவதொரு ஆதாரம் இருந்தால் நாம் பேசலாம்” என்று கூறினான்.

குணவர்மனின் நிலைமையைப் பூரணமாக அறிந்து கொண்டதால் அவன் காட்டிய எச்சரிக்கையைக் கண்டு சிறிதும் கோபம் கொள்ளாத இளைய பல்லவன், தன் கையை நீட்டி, பல்லவ ராஜ முத்திரையுடன் கூடிய மோதிரத்தைக் காட்டி, “இது போதுமா குணவர்மரே?” என்று வினவினான்.

குணவர்மன் திருப்தியுடன் தலையை அசைத்தான். “போதும் இளைய பல்லவரே, போதும். நான் சந்தேகப் படுவதைப் பற்றிக் கோபம் வேண்டாம். நான் அடைந் துள்ள தொல்லைகள், ஏமாற்றங்கள் என்னை அவநரம்பிக் கையுள்ளவனாக அடித்திருக்கின்றன. மன்னித்துவிடுங்கள். இனி நாம் மனம் விட்டுப் பேசுவோம்” என்ற குணவர்மன், “இளைய பல்லவரே! சிறிது நேரத்தில் ஸ்ரீவிஜய சாம்ராஜ் யத்தின் அதாவது சைலேந்திரர்கள் பேரரசின் -- நீங்கள் பொதுவாக அழைக்கும் கடாரத்தின் --விந்தைக் கதையைச் சொல்கிறேன். அதற்குமுன்பு நீங்கள் சொல்லுங்கள் உங்கள் கதையை. நீங்கள் எதற்கு இந்தப் பாலூர் வந்தீர்கள்?” என்று மெல்லக் கேட்கவும் செய்தான்.

கருணாகர பல்லவனின் கூரிய கண்கள் குணவர் மனை உஊடுருவிப் பார்த்தன. “நான் சொல்வதற்கு அதிகம் எதுவுமில்லை குணவர்மரே! பூம்புகாரின் சுங்கக் காவல ரிடம் உங்கள் நாட்டு ஒற்றன் ஒருவன் பிடிபட்டான். அவனிடம் உங்களைக் கொல்லப் பணித்த அந்த ஓலையிருந்தது. ஆகவே உங்களை எப்படியும் காப்பாற்றிப் புகாருக்கு அழைத்து வரும்படி வீரராஜேந்திர சோழ தேவர் எனக்குப் பணித்தார். நிலமார்க்கமாக வந்தால் நாளாகுமென்பதால் கடல் மார்க்கமாகச் செல்லவும் ஆணையிட்டார். ஆகவே புரவியுடன் மரக்கலத்திலே வந்து இந்தத் துறைமுகத்தில் இறங்கினேன். அங்குதான் சில விபரீத விவரங்களைக் கேள்விப்பட்டேன். அதுவும் ஒரு சுங்க அதிகாரி மூலமாக” என்று பேசிச் சற்று நிறுத்தினான் இளையபல்லவன்.

“என்ன விபரீதச் செய்தகள் இளைய பல்லவரே?” என்று வினவினான் குணவர்மன், குரலில் கவலையொலி துலங்க.

“முதலில் தமிழர்கள் சிறை செய்யப்படுவதாகக் கேள்விப் பட்டேன். அது மட்டுமல்ல, வேங்கி நாட்டு மன்னன் ராஜ ராறேந்திரனுக்கும், சோழர் குலச் செல்வி அங்கம்மா தேவிக்கும் அவதரித்த, ராஜேந்திரன் என நாங்கள் அழைக்கும், அநபாய சோழர் இங்கு சிறைப்பட் டிருப்பதாகவும் அறிந்தேன்” என்றான் இளைய பல்லவன்.

“என்ன. அநபாயச் சோழரா? தங்கள் நண்பரா? இத்தனைத் துணிவா, கலிங்க மன்னனுக்கு!” என்று தந்தை மகள் இருவரும் ஏகோபித்துக் கேட்டார்கள்.

கருணாகர பல்லவன் இளமுறுவல் செய்துவிட்டு, “நீங்கள் சொன்ன அந்த வார்த்தைகளைச் சொன்னதால் தான் என்னை வீரர்கள் துரத்தினார்கள். அவர்களிடமிருந்து தப்பித்தான் உங்கள் அறையில் குதித்தேன்” என்றான்.

“அப்படியா?” என்றான் குணவர்மன்.

“ஆமாம், குணவர்மரே! ஏற்கெனவே சிதைந்து கிடக் கும் சோழ, கலிங்க உறவைச் சீர்படுத்தவும், அமைதியைத் தென்னகத்தில் நிலைக்கச் செய்யவும், சமாதான அக்ஞா பத்திரமொன்றையும் வீரராஜேந்திரர் கொடுத்திருக்கிறார். அதுவும் இனி செல்லாது. இரண்டு நாட்டுக்கும் மேலும் பகையும் போரும்தான் என நினைக்கறேன். சமாதானத் தூதனாக வந்தேன். இனி சமரின் தூதனாகத் இிரும்பப் போடறேன். சமரின் முரசொலி இப்பொழுதே என் காதில் கேட்கிறது” என்றான் இளையபல்லவன்.

குணவர்மன் பதிலேதும் சொல்லாமல் அவனை வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றான். “இதிலும் வித் திரமிருக்கிறது இளைய பல்லவரே! கலிங்கத்தின் பகை கடாரத்துக்கு நன்மை பயக்கிறது” என்று சற்று குதூகலத் துடனேயே கூறிய குணவர்மன், “இப்பொழுது கேளும் இளையபல்லவரே, கடாரத்தின் விந்தைக் கதையைச் சொல்லுகிறேன். சீருடன் இருக்க வேண்டிய ஒரு சாம்ராஜ்யம் சீரழியும் பாதையில் இறங்கிச் செல்லும் சோகக் கதையைச் சொல்லுகிறேன். அதன் கதைதான் என் கதையும்” என்று தனது கதையை விவரிக்கத் தொடங்கினான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 6

ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம்

புரீஜைய சாம்ராஜ்யத்தின் மாபெருங் கதையே தன் கதையென முகவுரை துவங்கி அந்தக் கதையை விவரிக் கவும் முற்பட்ட குணவர்மன், கதையை உடனடியாக எடுத்துச் சொல்ல முடியாமல் மயங்கியும் தயங்கியும் நின்று நிலை தடுமாறி அறையில் அப்படியும் இப்படியும் சில விநாடிகள் உலவி, தனக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டான். துவங்கிய கதையைச் சொல்லவும் முடியா மல், மெல்லவும் மாட்டாமல் அவன் திணறித் திண்டாடு வதைக் கண்ட இளையபல்லவன் அவனை ஏதும் கேட்கா மல், கவலை தோய்ந்த அவன் வதனத்தையும், அத்தனை கவலையிலும் தளராமல் திடமாகவும், கம்பீரமாகவும் நின்ற அவன் சரீரத்தையும் கண்களால் அளவெடுத்தான். குணவர்மன் கிட்டத்தட்டத் தன் உயரமே இருப்பதையும், அவனுக்கு வயது நாற்பத்தைந்துக்கு மேலிருக்க முடியா தென்றாலும், தலையிலிருந்து பாய்ந்த கேசத்தின் சில பகுதிகளும், முகத்தின் குறுக்கே கவலை உழுதுவிட்டி ருந்த இரண்டொரு கோடுகளும், அவன் தோற்றத்துக்குப் பத்து வயதைக் கூட்டியே சொல்லும் நிலைமையில் வைத் திருந்ததையும், கவனித்த கருணாகர பல்லவன், “இவன் வாழ்க்கையில் பெரிதும் அல்லல்பட்டிருக்க வேண்டும் ‘ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். இத்தனை கவலையிலும் அவன் உதடுகளில் காஞ்சனாதேவியின் உதடுகளிலிருந்த உறுதியும் துடிப்புமிருந்ததைப் பார்த்த பல்லவ வீரன் கடாரத்தின் இளவரசன் எந்த அசந்தர்ப்ப நிலையிலும் துன்பத்திலும் மனத்தை மட்டும் தளரவிடாத இரும்புத் திடம் வாய்ந்தவன் என்பதைப் புரிந்துகொண்டான். அத்தனை திடமும் உறுதியுமிருந்தாலும், அவன் முகத்திலோ கைகளிலோ வடுக்கள் ஏதுமே இல்லாததை யும் கவனித்து அரசியல் தொல்லைதான் இவனுக்கு அதிகமே தவிர வாளைச் சுழற்றும் வேலை இவனுக் இருக்கக் காரணமில்லை. இவன் போர்களில் அதிகமாக ஈடுபடாதவன்” என்று தனக்குள்ளேயே முடிவு கட்டிக் கொண்டதன்றி, “அப்படியிருக்க இவன் பெண்ணுக்கு மட்டும் திறமையான வாள்பயிற்சியை எதற்காக அளித் இருக்கிறான்?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வும் செய்தான்.

மிதமிஞ்சிய கவலையாலும், ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத் தைப் பற்றிய நினைப்பாலும் எண்ணங்கள் உள்ளத்தில் எழுந்து அலைமோதிக் கொண்டடி ருந்த அந்த நிலையில்கூட குணவர்மனின் கண்கள், இளைய பல்லவனது விழிகள் பாய்ந்த இடங்களையும், அப்படிப் பாய்ந்தததின் விளை வாக முகத்தில் உலவிய எண்ணங்களையும் கவனிக்கத் தவறாததால், அவன் இதழ்களில் வருத்தம் கலந்த புன்முறு வலொன்று தவழ்ந்தது. அதற்குக் காரணம் சொல்ல அவன் முனைந்தபோது அவன் சொற்களிலும் அந்த வருத்தம் பிரதிபலித்தே நின்றது. “இளைய பல்லவர் நினைப்பதில் தவறில்லை. நான் வாள்போரில் அதிகமாக ஈடுபடாதவன் தான். அதற்குக் காரணமிருக்கிறது” என்று குணவர்மன் மெள்ள மெள்ளச் சொற்களை உதிர்த்தான்.

வாள்போரில் திறனிருந்தாலும் இல்லாவிட்டாலும், முகபாவத்திலிருந்தே பிறர் உணர்ச்சிகளை ஊடுருவிப் பார்க்கும் சக்தி கடாரத்தின் இளவரசனுக்கு மிதமிஞ்சி இருந்ததைக் கவனித்த கருணாகர பல்லவன், பெரு வியப்பை அடைந்தானானாலும் அதை வெளிக்குக் காட் டாமல், “கடாரத்தின் இளவரசர் மீது எந்தக் குறையையும் கற்பிக்கும் நோக்கம் எனக்கில்லை” என்று ஏதோ சமா தானம் சொல்ல மூயன்றவனை இடையிடையே தடுத்த குணவர்மன், “இளைய பல்லவரே! இதற்குச் சமாதானம் ஏதும் தேவையில்லை. தமிழகத்தின் இணையற்ற வீரனெ னப் பெயரெடுத்த உமது கண்கள், மற்றவர்களிடத்திலும் வீரத்தின் அடையாளங்களை எதிர்பார்ப்பது நியாயம் தானே? அந்தக் குறிக்கோளேதும் தென்படாதபோது, “இவன் வீரன்தானா?’ என்ற சந்தேகமே உமக்கு ஏற்படு வதும் இயற்கைதான். ஆனால் இதிலும் என் வாழ்க்கையில் சில மர்மங்கள் கலந்திருக்கின்றன.” என்றான்.

‘அரசனாயிருப்பவன் வாள்போர் பயிலாததற்கும் இவன் வாழ்க்கை மர்மங்களுக்கும் என்ன சம்பந்தமிருக்க மூடியும். ஒருவேளை இவன் கோழையாயிருப்பானோ? கோழைத்தனத்தை மறைப்பதற்குக் காரணங்களைக் கண்டு பிடிக்கிறானோ?” என்று சிந்தனை வசப்பட்ட கருணாகர பல்லவன் மீண்டும் தன் கண்களால் குணவர்மனது முகத்தை ஆராய்ந்தான். கவலை தோய்ந்து கடந்த அந்தச் சந்தர்ப் பத்திலும், ஈட்டிகள்போல் ஜொலித்த குணவர். மனின் கண் களைக் கண்டதும், ‘சேச்சே! நாம் நினைத்தது தவறு. இத்த கைய கண்களை உடையவன் ஒருகாலும் கோழையா யிருக்க முடியாது, என்ற முடிவுக்கு வந்த இளைய பல்லவன் மேற்கொண்டு ஏதும் பேசாமல் குணவர்மனது கதையைக் கேட்க ஆயத்தமானான். குணவர்மனது அந்தச் சில நிமிஷங்களில் தன் தயக்கத்தை உதறிக்கொண்டு, இளைய பல்லவனை நோக்க, “இளைய பல்லவரே! நான் கடாரத்தின் இளவரசனாயிருக்கும் காரணம் தெரியுமா உமக்கு?” என்று ஒரு கேள்வியை வீசினான்.

“தெரியாது குணவர்மரே! தாங்கள் சொல்லித்தான் தங்களைப் பற்றிய விவரம் எதையும் நானறிய முடியும். சில நாழிகைகளுக்கு முன்புதானே நாம் சந்தித்திருக்கறோம்!” என்று கருணாகர பல்லவன் பதில் கூறினான்.

“உண்மைதான் இளைய பல்லவரே” என்று சொல்லித் தலையையும் அசைத்து அமோதித்த குணவர்மன், “நான் கடாரத்தின் இளவரசனாயிருப்பதற்கு என் அசை காரண மல்ல. உண்மையில், கடாரத்தின் ஆட்சி பீடத்தையும் அந்த ஆட்சிபீடம் அளிக்கும் அதிகாரத்தையும், அந்தஸ்தையும், செல்வாக்கையும் அனைத்தையும் வெறுக்கிறேன். கடாரத் தின் இளவரசுப் பதவி என் தந்தையால் என்மீது சுமத்தப் பட்டது. என் இஷ்டத்திற்கு விரோதமாக.” என்று பதில் கூறிய குணவர்மன், “இதைக் கேட்க உங்களுக்கு விசித்திர மாயிருக்கலாம் இளைய பல்லவரே!! ஆனால் உண்மை அதுதான். ஆட்சிபீடத்தை நான் வெறுக்கவே செய்கிறேன். ஆனால் அது என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டி ருக்கிறது. இது உலக விசித்திரம். வேண்டாதவனிடம் பதவி ஒட்டிக் கொள்கிறது. வேண்டுபவனை வெட்டி விலக்கித் தள்ளுகிறது” என்றான்.

குணவர்மன் சொன்னது பெரும் விசத்திரமாயிருந்தது இளையபல்லவனுக்கு. “ஆட்சியில் வெறுப்பிருந்தால் சோழ நாட்டின் உதவியை ஏன் நாடுகறீர்கள்? கடாரத்தின் மீது படையெடுத்து, ஜெயவர்மனை முறியடித்து ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை என்னிடம் ஒப்படைக்க வேண்டும், என்று சோழப் பேரரசர் வீரராஜேந்திரருக்கு நீங்கள் ஓலையே அனுப்பியிருந்தீர்களே?” என்று வினவினான் இளைய பல்லவன்.

இந்தக் கேள்வியால் சிறிதும் கலங்காத குணவர்மன் திடமாகவே பதில் சொன்னான், “ஒலை அனுப்பியிருந் தேன், இளைய பல்லவரே! அரச பதவியை நாடித்தான் இங்கும் வந்திருக்கிறேன். முடிந்தால் ஜெயவர்மனை விரட்டி அரசபீடத்தில் உட்காரவும் உத்தேசம்தான். ஆனால் இத்தனையிலும், பற்று சிறிதுமில்லாமலே ஈடு பட்டிருக்கிறேன். இவையனைத்திலும் கடமை சம்பந்தப் பட்டிருக்கிறது. எந்த சைலேந்திர வம்சத்தில் நான் பிறந்ேதேனோ அந்த சைலேந்திர வம்சத்தைப் பற்றிய கடமை அது. ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் மக்களுக்கு நான் செலுத்த வேண்டிய கடமை அது. கடமைதான் என்னை இங்கு இழுத்து வந்திருக்கிறது இளையபல்லவரே! ஆசை அல்ல?” அத்துடன் மேலும் பேசத் துவங்கிய குணவர்மன், “இளைய பல்லவரே! இதைத்தான் நான் ஆரம்பத்திலேயே சொன்னேன். ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் கதைதான் என் கதை என்று. கேளும் அந்தக் கதையை.” என்று கூறி, இளைய பல்லவனை விட்டுத் திரும்பி அந்த அறையின் கிழக்குப் பகுதியிலிருந்த பெரும் சாளரத்தைத் திறந்து வெளியே நீண்ட நேரம் நோக்கிக் கொண்டு பேசாமலே நின்றான். பல நிமிஷங்கள் கழித்துத் திரும்பிய குணவர் மனின் கண்கள் ஏதோ கனவுலகத்தில் சஞ்சரிப்பன போல் காணப்பட்டன. அதுவரை கவலை மண்டிக்கிடந்த வதனத்தில் சாந்தியும் பெருமையும்’ நிலவிக் கடந்தன. அந்தக் கனவுக் கண்களால் இளைய பல்லவளையும் தனது புதல்வியையும் மாறிமாறிப் பார்த்துவிட்டுத் தன் ஒரு கையை உயர்த்தி, சாளரத்தை நோக்கி நீட்டி, “இளைய பல்லவரே! இந்தச் சாளரத்துக்கு வெளியே நீர் கண்களைச் செலுத்தினால், நீலக் கடல்தான் உமது கண்களுக்குத் தெரியும். ஆனால் என் கண்களுக்குத் தெரிவது அதுமட்டு மல்ல. அந்தக் கடலுக்கப்பாலுள்ள சைலேந்திரர்களின் மாபெரும் அரசான ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் தோன்றுகிறது. பலப்பல தீவுகள் தோன்றுகின்றன. கடாரம் தோன்றுகிறது. சொர்ணத் தீவும், சாவகமும், பாலியும் தோன்றுகின்றன. அந்தத் தீவுகளில் தனம் தினம் வந்து குவியும் வணிகப் பொருள்களும் தோன்றுகின்றன. அத்தனை வணிகப் பொருள்கள் அங்கு ஏன் வந்து குவிகின்றன? காரணம் இருக்கிறது. இளையபல்லவரே! பலமான காரணம் இருக் கிறது. உலகத்தில் சகல நாட்டினரும் விரும்பும் தங்கம் அந்தத். தீவுகளில் இருக்கின்றது. அதனால்தான் பழைய கிரேக்க மாலுமிகள் அவற்றை இரிஸே தங்கம் தீவு என்றும், சொர்ணத் தீவு என்றும் சொர்ண பூமியென்றும் பலபடிப் பெயரிட்டு அழைத்தார்கள். அந்தத் தீவுகளில் உள்ள மண்ணில் பொன் கலந்திருக்கிறது. மண்ணை நீரில் போட்டால் தங்கம் பிரியும் அளவிற்குப் பொன் மண் ணுடன் இணைந்து கிடக்கிறது. அவ்வளவு தங்கம் உலகத் தன் எந்த நாட்டு மண்ணிலும் கிடையாது. மற்றவர்கள் தங்கள் நாட்டை ஆசையால் பொன்னாடு என்று அழைக்கிறார்கள். ஆனால் எங்கள் நாடு உண்மையிலேயே பொன்னாடு. பொன் ஏராளமாக விளையும் பூமி அது. அதன் பொன்னை வாரிச் செல்லவே உலக வணிகர்கள் அங்கு வருகிறார்கள்.” என்று பேச்சைச் சற்று நிறுத்த இளைய பல்லவனை உற்றுப் பார்த்தான்.

இளையபல்லவன் முகத்தில் வியப்புதான் மிஞ்சிக் கிடந்தது. சொர்ணபூமியின் பொன்னை நினைத்து உண் டான வியப்பல்ல. சொந்த நாட்டைப் பற்றிப் பேச முற்பட்டதும் குணவர்மனுக்கு உண்டான அவேசத்தைக் கண்டதால் ஏற்பட்ட வியப்பு அது. அந்த வியப்பைக் கவனித்த பின்பும் குணவர்மன் அவேசத்தைக் கைவிடா மலே சொன்னான் “இந்தத் தீவுகள் உங்கள் பாரத நாட்டு டன் ஒட்டியிருந்த காலமொன்று உண்டென்று பூதத்துவ சாஸ்திரிகள் சொல்லுகிறார்கள். இளைய பல்லவரே, பாரதத்தின் கடற்கரையோரமாகப் போய்த் தெற்கே திரும்பினால் கிழக்கு நாடு பாரதத்தின் நிலப் பரப்புடன் தொடர்பு கொண்டே செல்கிறது. அந்த நிலப்பரப்பைக் கடாரத்துக்குக் கீழேதான், கடல் குறுக்கிட்டு உடைக்கிறது. அப்படிக் கடல் உடைத்துப் பிரிந்த இடங்கள் தீவுகளாகச் சொர்ணத் இவு சுமாத்ரா என்றும், சாவகத் தீவு என்றும், பாலித் தீவு என்றும் வெவ்வேறு விதமான பெயர்களைப் பெற்றுத் திகழ்கின்றன. ஆனால். இந்தத் தீவுகளின், கலா சாரங்கள் பொதுப்படையானவை. பழைய காலத்தில் இவை ஒன்றுபட்டிருந்ததைக் குறிக்கின்றன. அதுமட்டு மல்ல, பாரதத்துக்கும் அவற்றுக்கும் யுகாந்தரமாக இருந்து வரும் தொடர்பையும் குறிக்கின்றன. அங்குள்ள சைவமும் வைணவமும் பெளத்தமும் பாரத நாடு அளித்தவை. அங்குள்ள சிற்பமும், சித்திரமும், கோயிலும், குளமும், இலக்கியமும் எல்லாமே இந்த நாடு அளித்தவைதான். காட்டுமிராண்டிகளே அதியில் நிரம்பிக் கடந்த சொர்ண பூமி, பெளத்த, சைவ, வைணவத் துறவிகளின் வருகையால் நாகரிகத்தையும் பல நாடுகளும் கண்டு வியக்கும் தன்மை யையும் அடைந்தது. அப்படி ஏற்பட்ட நாகரிகத்தின் விளைவாகத்தான் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் சொர்ணத்தீவில் எழுந்தது.

“இந்த இடத்தில் கதையைச் சற்றே நிறுத்திய குணவர் மன், “இனி மிக்க கவனமாகக் கேளுங்கள் இளையபல்லவரே!” என்று எச்சரித்துக் கொண்டும், அறையில் அங்கு மிங்கும் கனவில். நடப்பவன்போல், உலாவிக் கொண்டும் கதையைச் சொல்லிக் கொண்டு போனான், “சுமார் முந் நாறு ஆண்டுகளுக்கு முன்னால் சாவகத் தீவின் மத்தியி லிருந்த சிற்றரசில் ஸஞ்சயன் என்ற அரசன் தோன்றினான். அவன் சைவ சமயத்தவன். அவன் ஆட்சியில் அந்தச் சிற்றரசு பேரரசாக விரிந்தது. ஸஞ்சயன் பெரும்படை திரட்டி, பொன் பெரிதும் விளையும் சொர்ணத்தீவைத் தன்வசப்படுத்திக் கொண்டான். அதற்கு ஸ்ரீவிஜயம் என்ற பெயரையும் சூட்டினான். அவன் காலத்திலும் அவனுக் குப் பின் வந்த ஆறு மன்னர்களின் காலத்திலும், ஸ்ரீவிஜயம் சொர்ணத் தீவையும் சாவகத்தையும் இன்னும் பல தீவு களையும் கொண்ட பெரும் சாம்ராஜ்யமாக விரிந்தது. அதில் சைவம் பெரிதும் தழைத்தது. ஸஞ்சயன் ஸ்தாபித்த ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் மதத்தை அதிகமாக வற்புறுத்தாது இருந்திருக்குமானால், அந்தச் சாம்ராஜ்யம் இன்னும் நிலைத்திருக்கும். ஆனால் ஸஞ்சய வம்சத்தின் ஆட்சி சைவ ஆட்சியாக இருந்தது. ஆகவே மஹாயன பெளத்தம் களைத்த சாவகத்தில் அதற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. அதை எதிர்த்த ஒரு சிறு அரச பரம் பரைதான் சைலேந்திர அரச பரம்பரை. இந்தப் பரம்பரையின் அதிகர்த்தாவான பானு வர்மனும் ஸஞ்சயன் உதித்த அதே சாவகத்தின் நடுவிடத் தில் தோன்றினான். சைலேந்திரர்கள் வம்சம் முதல் மூன்று தலைமுறைகளிலேயே பெரிதும் வலுவுற்றது. ஆறாவது தலைமூறையில் ஸ்ரீவிஜய மன்னன் பிகாதனுக்கும், சைலேந் திர ராஜகுமாரி பிரமோதவர்த்தினிக்கும் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்துடன் ஸஞ்சயன் பரம்பரை ஆட்சியும் முடிந்தது. பிகாதனுக்குப் பிறகு அவன் மைத் துனனும், சைலேந்திர வம்ச ராஜபுத்திரனுமான பால புத்திரன் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் அரியணையில் ஏறினான். சைலேந்திரர்கள் காலத்தில் ஸ்ரீவிஜயம் கிழக்குத் தவுகளையெல்லாம் கொண்ட பெரும் சாம்ராஜ்யமாூச் சீரும் சிறப்பும் பெற்றது. பாலபுத்திரனுக்குப் பிறகு மூன்று தலைமுறைகளில் அதன் புகழ் உலகெங்கும் பரவியது. பட்டு நெய்யும் சீனாவுக்கும் முத்துக் குளிக்கும் தமிழ கத்துக்கும் இடையே இருந்ததன் விளைவாக, அதன் வாணிபமும் வாணிபத்தைக் கட்டுப்படுத்துவதில் ‘அதற்கு இருந்த சக்தியும் பெரிதும் வளர்ந்தது. இந்தக் காலத்தில் தான் சூளாமணிவர்மனும் அவனுக்குப் பிறகு ஸ்ரீமார விஜயதுங்கவர்மனும் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யப் பேரரசர்களாய் விளங்கினார்கள். பின்னவர் காலத்தில்தான் சோழர்களுக் கும் ஸ்ரீவிஜயத்துக்கும் நட்பு வலுப்பட்டு, நாகப்பட்டிணத் தில் புத்த விஹாரமான சூளாமணி விஹாரத்தைக் கட்ட ராஜேந்திரசோழ தேவர் ஸ்ரீ விஜயப் பேரரசருக்கு நில தானமும் கொடுத்தார். இந்த நட்பு நீண்டிருந்தால் தமிழ கத்திற்கும் ஸ்ரீவிஜயத்திற்கும் போர் நிகழ்ந்திராது. ஆனால் வர்த்தகப் போட்டி போரில் வந்து முடிந்தது.

“இந்தச் சமயத்தில் குறுக்கே புகுந்து ஒரு கேள்வியைக் கேட்டான் இளைய பல்லவன், “வர்த்தகப் போட்டியா?” என்று.

“ஆமாம்” என்பதைச் சுட்டிக்காட்டும் பாவனையில் தலையை. அசைத்த குணவர்மன் மேலும் சொன்னான் “ஆமாம் இளைய பல்லவரே! ஸ்ரீமார விஜயதுங்கவர்ம னுக்குப் பிறகு அரச பதவிக்கு வந்த ஸங்க்ரம விஜயதுங்க வர்மன் பாரதத்திலிருந்து வரும் பொருள்களுக்குப் பலமான சுங்க வரிகளை விதித்தார். இதனால் வெகுண்ட ராஜேந்திர சோழ தேவர் ஸ்ரீவிஜயத்தை நோக்கித் தமது கடற்படையை ஏவினார். எந்தக் கடலைத் தாண்டிப் பெருவாரியான தமிழர் படை வர முடியாதென்ற தைரியத் தால் ஸங்க்ரம விஜயதுங்கர் சுங்க வரிகளை விதித்தாரோ, அந்தக் கடலைத் தாண்டித் தமிழர் பெரும் படை வந்தது. கடாரத்தையும், ஸ்ரீவிஐயத்தையும் சூறையாடியது. ஸங்க்ரம விஜயதுங்கவர்மனையும் சிறை பிடித்துச் சென்றது. பிறகு ராஜேந்திர சோழதேவரின் கருணையால் ஸங்க்ரம விஜய துங்கவர்மன் விடுதலையடைந்தார். அவர் காலமுதல் ஸ்ரீவிஜயம் வலிமை குன்றியது. என் தந்தையின் காலத்தில் அரியணைப் போட்டிச் சண்டையும் கிளம்பியது. என் சகோதரன் அரசைப் பறித்துக்கொள்ள விரும்பினான். அதன். விளைவாக, என்னைச் சொர்ணத் தீவிலிருந்து கடாரத்துக்கு அனுப்பி அங்கு என்னை இளவரசனாக்கி னார் என் தந்த. எனக்கு அதில் இஷ்டமில்லை.

“ஏன்?” என்று குறுக்கட்டான் இளையபல்லவன். “சிறு வயதிலேயே நான் பெளத்த மதகுரு ஒருவரிடம் பாடம் பயின்றேன். அவருடைய சீடர்களிடம் பழகினேன். இருபது வயதுவரை பெளத்த விஹாரங்களிலும், பெளத்தத் துறவிகளுடனும் காலம் கழித்தேன். ஆகவே, இக வாழ்க்கை யில் மனம் செல்லவில்லை. புத்தத் துறவியாவதிலேயே மனம் சென்றது. இதைக் கவனித்த என் தந்தை எனக்குப் பலவந்தமாகத் இருமணம் செய்வித்தார். அதன் பலன்தான் இவள்” என்று காஞ்சனாதேவியைக் காட்டினான் குணவர்மன்.

இளையபல்லவன் காஞ்சனாதேவியை நோக்கப் புன்முறுவல் செய்தான். கட்டாய விவாகத்தின் கனி, காதல் விவாகத்தில் கிடைக்கும் கனிக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல” என்று எண்ணினான்.

குணவர்மன் மேலும் சொன்னான் “இவளுக்கு வயது வருமுன்பே இவள் தாய் இறந்துவிட்டாள். மீண்டும் என் மனம் துறவற வாழ்வை நாடியது. இகவாழ்வை வெறுத்தது. ஆனால் நாளுக்கு நாள் ஏற்பட்ட மாறுதல்கள் என் மனத்தை மாற்றவே செய்தன. ஜெயவர்மன் ஆட்சி ஸ்ரீவிஜயத் துக்குப் பெரும் சாபக்கேடாக முடிந்தது. மக்கள் துன்புறுத் தப்பட்டார்கள். சாதாரணக் குற்றங்களுக்குப் பெரும் தண்டனைகள் விதிக்கப்பட்டன. ஜெயவர்மனுக்குப் புத்தி சொல்ல முற்பட்ட மந்திரிகளின் தலைகள் துண்டிக்கப் பட்டன. ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் மெள்ள மெள்ளச் சீரழியத் தொடங்கியது. அக்கம் பக்கத்து அரசாங்கங்களின் விரோத மும் வந்து சம்பவித்தது. இப்படியே போனால் மக்கள் தவிப்பார்கள், நாடு அழிந்துவிடும் என்ற முடிவுக்கு வந்தேன். ஆகவே கடாரத்தைத் தன் வசம் ஒப்புவிக்கும்படி ஜெயவர்மன் அனுப்பிய ஓலையைத் திருப்பியனுப்பினேன். முடிந்தால் ஜெயவர்மன் கடாரத்தை அழித்திருப்பான். ஆனால் மக்களின் பெருவாரியான ஆதரவு எனக்கிருப்ப தைக் கண்டு அஞ்சியிருக்கிறான். அவன் அச்சம் குலையு முன்பு சோழர் உதவியை நாடி சைலேந்திரர் ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்தவும், என் நாட்டு மக்களின் துன்பத்தைப் போக்கவும், இந்நாடு வந்திருக்கிறேன். துறவு மனப்பான்மை இருந்தும் அரசுக்காக அயல்நாடு வந்து உதவி நாடும் விபரீத நிலை எனக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுதான் கதை இளைய பல்லவரே! ஆனால் கதை போகிற போக்கைப் பார்த்தீரா?”

கருணாகர பல்லவன் அந்த நீண்ட கதையைக் கேட்ட தால், துயிலிலிருந்து எழுபவன் போல் எழுந்தான். “ஏன் கதை போகிற போக்குக்கு என்ன?” என்று கேட்டான்.

“சோழநாடு செல்ல கலிங்கம் வந்தேன். ஆனால் இங்கு என் அதிர்ஷ்டம் என்னைத் தொடர்ந்து வந்திருக்கிறது. இங்கு கலிங்கத்தக்கும் சோழ நாட்டுக்கும் போர் ஏற்படும் போலிருக்கிறது”. என்றான் குணவர்மன்.

“ஆம், அப்படித்தான் தெரிகிறது” என்றான் இளைய பல்லவன்.

“உங்களைப் பற்றியும் அநபாய சோழரைப் பற்றியும் எங்கள் நாட்டில் கதைகள் உலாவுகன்றன இளைய பல்லவரே! உங்கள் இருவரில் ஒருவர் வந்து என் படை களுக்குத் தலைமை வகித்தாலே ஜெயவர்மனை வெற்றி கொள்ள முடியுமென்று மக்கள் நினைக்கிறார்கள். என் மந்திரிகளும் அப்படித்தான் சொன்னார்கள். ஆனால் இங்குள்ள நிலையைப் பாரும். இங்கு நீர் துரத்தப்பட்டு நானிருக்கும் மாளிகையில். பதுங்கியிருக்கிறீர். அநபாயர் ஏற்கெனவே சிறைப்பட்டிருக்கிறார். என். அதிர்ஷ்டத்தைப் பற்றி என்ன நினைக்கறீர்?” என்றான் குணவர்மன், துன்பப் புன்முறுவல் கோட்டி.

குணவர்மனின் அதிர்ஷ்டம் நன்றாக விளங்கியது இளைய பல்லவனுக்கு. ‘இவன் அதிர்ஷ்டம்தான் என்னை யும் அநபாயரையும் இந்த நிலைக்குக் கொண்டு வந்தி ருக்கிறது” என்று மனத்திற்குள் சபித்த இளைய பல்லவனை மட்டுமின்றிக் குணவர்மனையும், ஏன் காஞ்சனா தேவியை யும்கூட வியப்பில் அழுத்த வல்ல விசித்திர சம்பவ மொன்று திடீரென அந்த அறையில் நிகழ்ந்தது. அந்த நிகழ்ச்சியின் காரணமும் திறந்திருந்த சாளரத்தின் மூலமாக வெகு வேகமாக உள்ளே வந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஆத்தியாயம் - 7

காட்டுப் புறாவும், வீட்டுப் புறாவும்

கலிங்கத்திற்குத் தென் கிழக்கிலும் தமிழகத்துக்கு நேர் கிழக்கிலும் வங்கக் கடலுக்கு அக்கரையில் விரிந்த ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் பெரும் சரித்திரத்தையும், துன்பமும் துரதுர்ஷ்டமும் - கலந்த அதன். சோகக் கதையையும் குணவர்மன் சொல்லி முடித்ததும் முடிக்காததுமாக, அவன் துயரத்தைத் துடைக்க வந்த தேவதூதன்போல் சாளரத்தின் மார்க்கமாக ஏதோ புயலால் உந்தப்பட்டது போல் வெகுவேகமாகச் சிறகடித்துக் கொண்டு வெண்புறா ஒன்று உள்ளே வந்து, சற்று அப்பாலிருந்த ஒரு மஞ்சத்தின் முகப்பில் உட்கார்ந்து அறையிலிருந்த மூவரையும் இரண்டு மூன்று முறை தலையை அசைத்து அசைத்து உற்றுப் பார்த்தது. வீடுகளில் புறாக்கள் வளர்க்கப்படுவதோ, தப்பிய ஒரிரு புறாக்கள் எதிர் இல்லங்களுக்குப் பறந்து சென்றுவிடுவதோ அப்படியொன்றும் வியக்கத்தக்க விஷய மல்லவென்றாலும், உள்ளே வந்த புறாவின் அபரிமித வளர்ச்சியும், அதன் கால்களுக்கிருந்த அளவுக்கதிகப்பட்ட நீளமும், மிகப் பெரிய அலகும் சாதாரணமாக அது கலிங்கத்திலோ தமிழகத்திலோ காணப்படும் புறாவல்ல வென்பதை நொடிப் பொழுதில் உணர்ந்து கொண்ட இளைய பல்லவனே மற்ற இருவரும் வியப்பிலிருந்து மீளுமுன்பாகத் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு சரேலென்று எழுந்து சென்று அந்தப் பெரும் புறாவைத் தன் இரு கைகளாலும் பிடித்து எடுத்தான். அப்படி. அவன் எடுத்துப் பிடித்துத் தடவிக் கொடுத்த போதும் அது எந்த வித சத்தத்தையும் கிளப்பாமல் திரும்பத் திரும்ப விழித்த தைக் கண்ட காஞ்சனாதேவி, மஞ்சத்திலிருந்து எழுந்து அவனிடம் வந்து, “அதோ, அந்தப் புறாவை இப்படி என்னிடம் கொஞ்சம் கொடுங்கள்” என்று கொஞ்சும் சொற்களைக் கொண்டு கெஞ்சினாள்.

ஆனால் இளைய பல்லவன் அவளுக்குப் பதிலேதும் சொல்லாமலும், அவள் கேட்டபடி புறாவைக் கொடுக்கா மலும் அந்தப் புறாவைத் திரும்பத் திரும்ப உற்றுப் பார்த்து விட்டுத் திடீரென சாளரத்தை நோக்கிச் சென்று வெளியே எட்டி. நீண்ட நேரம் எதிர்சாரியிலிருந்த மாளிகைகளில் கண்களை ஓட்டினான். தப்பிச் சாளரத்துக்குள் ஓடிவந்து விட்ட புறாவைக் கண்டு முதலில் வியப்புக்குள்ளான குணவர்மனும். காஞ்சனாதேவியும் இளைய பல்வனின் அந்தப் புறா ஆராய்ச்சியையும், சாளரத்திடம் ஓடி. வெளியே பார்த்து அவன் நடத்திய சோதனையையும் கண்டு அவற்றுக்குக் காரணம் புரியாதவர்களாய் அவனே வந்து விவரிக்கட்டுமென்று பேசாமலே நின்றுகொண்டிருந்தனர். நீண்ட நேரம் வெளியே யாரையோ பார்க்க முயன்றும் முடியாமையால், ஏமாற்றப் பெருமூச்சு விட்டுக் கொண்டு மீண்டும் அறையின் நடுவுக்கு வந்த இளைய பல்லவன் கடாரத்தின் அரசகுமாரியை நோக்க, “காஞ்சனாதேவி! அதோ அந்த மூலையிலுள்ள தீபத்தைச் சற்று அருகில் கொண்டு வாருங்கள். இந்தப் புறாவைப் பரிசோதித்துப் பார்ப்போம்” என்று கூறினான்.

அரசகுமாரியின் அஞ்சன. விழிகள் அச்சரியத்தால் மலர்ந்தன. “இன்னும் சோதுப்பதற்கு என்ன இருக்கிறது அதில்? இத்தனை நேரந்தான் துருவித் துருவிப் பார்த்தீர் களே” என்று அவள் சொற்கள் இனிமையுடன் உதிர்ந்தன. சாதாரண சமயமாக இருந்தால் அந்த இனிமையில் இளையபல்லவன் இதயத்தைப் பறிகொடுத்திருப்பான். ஆனால் அவன் இதயமும் சித்தமும் அந்தப் புறாவிடமே லயித்திருந்ததால் அந்த இனிமையைக்கூட கவனிக்காத வனாய், “அரசகுமாரி! இந்தப் புறாவை அத்தனை எளிதில் சோதித்துவிட முடியாது. சற்று அந்த விளக்கை எடுத்து வாருங்கள். நம் மூவர் கதியையும் இந்தப் புறாவே ஒருவேளை நிர்ணயிக்கக்கூடும்.” என்றான்.

இதைக் கேட்ட அரசகுமாரி மட்டுமின்றி அதுவரை சோகத்தின் பிம்பமாயிருந்த குணவர்மன்கூட வியப்புக் குள்ளானதால் அவனும் கேட்டான் “இதென்ன வி௫த் திரம் இளையபல்லவரே? இந்தப் புறாவா நமது கதியை நிர்ணயிக்க முடியும்? என் நாட்டின் பெரும்படைகளே அதை நிர்ணயிக்க முடியும்?”

இளையபல்லவனின் இடது கை புறாவைப் பிடித்திருந்தது. வலது கை அதை மெல்லத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தது. அத்துடன் குணவர்மன் கூறியதைக் கேட்டதும், அவன் இதழ்கள் இளநகை புரிந்தன. “அண்டவன் படைப்பில் எது அதிக பலமுள்ளது. எது சொற்பப் பலமுள்ளது என்பதை மனிதன் நிர்ணயிக்க முடியாது குணவர்மரே. மனிதனுக்குச் சிறு அலுவலைப் புரிவதற்கும் பெரும் ஆயுதங்கள் தேவை. ஆண்டவன் இஷ்டத்துக்கு வளைந்து கொடுக்கச் சிறு துரும்பும் போதும். உமது படைகள் சாதிக்க முடியாததை இந்த அற்பப் பறவை சாதித்தாலும் சாதிக்கும்” என்ற கருணாகர பல்லவன், “குணவர்மரே! உமது நாட்டில் புறாக்கள் இருக் இன்றனவா?” என்று ஏதோ சந்தேகம் கேட்பவன்போல் கேள்வியொன்றையும் விடுத்தான்.

இந்தக் கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாத குணவர்மன் தன் மகளின் முகத்தை ஒருமுறை பார்த்துவிடடு, பிறகு கருணாகர பல்லவனை நோக்க, “புறாக்கள் இருக்கின்றன. அதற்கென்ன?” என்று வினவினான்.

“பெரும் புறாக்கள்?” என்று மீண்டும் அழுத்திக் கேட்டான் இளையபல்லவன்.

“இருக்கின்றன. சாவகத் தீவின் அடர்த்தியான காடு களில் இருக்கின்றன” என்றான் குணவர்மன்.

இந்தப் பதிலைக் கேட்டதும் குணவர்மனை நோக்கி இரண்டடி எடுத்து வைத்த கருணாகர பல்லவன், “இருக்க லாம் குணவர்மரே! ஆனால் இத்தனைப் பெரிய புறாவை நீங்கள் சாவகத்தின் காடுகளில் பார்த்திருக்க ‘முடியாது. உங்கள் நாட்டு வணிகர்கள் எங்கள் புகார் நகருக்குப் பெரும் புறாக்களையும் நானாவிதக் கஇள்ளைகளையும், சாவகத்தின் காடுகளிலிருந்து கொண்டுவந்து அரண்மனை களிலும் வணிகர் மாளிகைகளிலும் விற்கிறார்கள். நான் பார்த்திருக்கிறேன் அந்தப் புறாக்களை. விளையாட்டுக்கும் உணவுக்கும் உங்கள் நாட்டுப் புறாக்கள் பயன்படுகின்றன. ஆனால் அறிவுச் செயல்களுக்கு அவை உதவுவதில்லை. இப்பொழுது கவனியுங்கள் இந்தப் புறாவை” என்று அவரிடம் தன் இடது கையைத் தூக்கி அதிலிருந்து புறா வைக் காட்டி, “கிட்டத்தட்ட வல்லூரின் அளவுக்கு இந்தப் புறா வளர்ந்திருக்கிறது. இந்தச் சாதிப் புறாக்கள் உலகி லேயே அபூர்வமானவை. ஓரே ஒரு இடத்தில்தான் இருக் இன்றன” என்றான்.

“எந்த இடம் அது?” விஷயத்தைத் தெரிந்து கொள் வதற்காகக் கேட்டான் குணவர்மன்.

“பாரத நாட்டுக்கு மேல் திசையில் எரித்திரியக் கடல் இருக்கறது.

“ஆமாம்.

“அதன் மூலம் அரபு நாடுகளுக்குச் செல்லும் வழியில் இடையே கடலில் இருக்கிறது பறவைத் தீவு எனும் ஒரு தீவு.

“அப்படியா?”

“ஆமாம் குணவர்மரே! அந்தப் பறவைத் தீவில்தான் இத்தகைய பெரும் புறாக்கள் இடைக்கின்றன. அந்தத் தவை எந்த மரக்கலமும்’ அணுகுவதில்லை. அணுகும் கப்பல்களைக் கூட்டம் கூட்டமாக வரும் பறவைகள் அழித்துவிடும். ஆனால் தூரமாகப் பறந்து தனித்துவரும் சில புறாக்கள் வணிகர் கைகளில் சிக்குகின்றன. முக்கிய மாக யவன வணிகர்கள்தான் இவற்றைப் பிடித்துக் கொண்டு வருகிறார்கள்.

அவற்றை எங்கள் நாட்டு யவன வீரர்கள் வாங்குகிறார்கள்.

“வாங்கி?”

“தூது செல்லப் பழக்குகறார்கள்.

“இதைக் கேட்டதும் குணவர்மனுக்கும், காஞ்சனா தேவிக்கும் உண்மை மெள்ள மெள்ளப் புரியலாயிற்று. “அப்படியானால் இதுவும் தூதுப் புறாவா?” என்று ஏக காலத்தில் அச்சரியத்துடன் கேட்டார்கள்.

“ஆம்” என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்த கருணாகர பல்லவன், “சந்தேகமில்லை குணவர்மரே! இந்தப் புறாவைப் பார்த்ததுமே இது தூதுப் புறாவென்ப தைத் தெரிந்துகொண்டேன். இதன் பரிமாணமும் அலகும் நடத்தையும் அதைச் சந்தேகமற நிரூபித்தன” என்று வாய்விட்டுச் சொன்னான்.

“நடத்தையா?” என்று வியப்புடன் வினவினாள் காஞ்சனாதேவி.

“ஆம் அரசகுமாரி! ஆண்டவன் சிருஷ்டிக்கும் ஓவ் வொரு ஜீவராசிக்கும் நடத்தை உண்டு. மற்ற ஜீவராசிகள் பிறக்கும்போது உள்ள நடத்தையைவிட்டு மாறுவதில்லை. மனிதன்தான் மாறுகிறான். உதாரணமாக இதோ பாருங் கள்” என்று கூறிவிட்டுக் கையிலிருந்த புறாவைப் பறக்க விட்டான். அந்தப் புறா எந்த இடத்துக்கும் செல்லாமல் சிறகடித்து மீண்டும் முதலில் உட்கார்ந்திருந்த மஞ்சத்தின் முகப்பிலேயே வந்து உட்கார்ந்தது.

“பார்த்தீர்களா அரசகுமாரி! முதலில் உட்கார்ந்த இடத்தைவிட்டு நகர்கிறதா இந்தப் பறவை? நகராது அரச குமாரி, நகராது. இதன் உடலில் எங்கோ மறைந்திருக்கும் செய்தி எடுக்கப்படும் வரையில் இது இந்த அறையை விட்டு வெளியே பறந்தும் செல்லாது. அவ்வளவு திறமை யுடன் யவனர்கள் அவற்றைப் பழக்குகிறார்கள்” என்று விளக்கினான் கருணாகர பல்லவன்.

“அப்படியானால் செய்தியை எடுத்துப் பாருங்களேன்” என்றாள் காஞ்சனாதேவி.

‘இளையபல்லவன் மெள்ளப் புன்னகை செய்துவிட்டுச் சொன்னான் “செய்தியை எடுப்பது அத்தனை எளிதல்ல அரசகுமாரி” என்று.

“ஏன் எளிதல்ல? புறாவின் -காலில்தானே கட்டு வார்கள் செய்தி ஓலையை?”

கருணாகரபல்லவன் உடனே பதிலேதும் சொல்லா மல், புறா உட்கார்ந்திருந்த மஞ்சத்திடம் சென்று, புறா வைப் பிடித்துக்கொண்டு வந்து, “இந்தாருங்கள் அரச குமாரி! நீங்களே சோதித்துச் செய்தியை எடுத்துக் கொடுங்கள்” என்று அந்த வெண் புறாவை அவளிடம் கொடுத்தான்.

காஞ்சனாதேவியின் அழகிய கரங்கள் அந்தப் புறாவை ஆசையுடன் பற்றின. அவள் அஞ்சன விழிகள் அதன் பட்டுக் கால்களை ஆராய்ந்தன. அந்த வெண்புறாவின் வழ வழத்த உடலைப் பலபடி திருப்பித் திருப்பிப் பார்த்தாள் அவள். கால்களிலோ அதன் உடலிலோ செய்திச் சுருள் ஏதுமில்லாததைக் கண்ட காஞ்சனா தேவியை நோக்கி மெல்ல நகைத்தான் கருணாகர பல்லவன்.

“எதற்கு நகைக்கிறீர்கள்??” என்று கோபத்துடன் கேட்டாள் அவள்.

“செய்தி கிடைக்கவில்லை போலிருக்கிறதே!”

“ஆமாம்.

இருந்தாலல்லவா கிடைக்கும்?”

“கால்களைப் பரிசோதித்தீர்களா?”

“ஆம், பரிசோதித்தேன்.

“கால்களில் ஓலையைக் கட்டி அனுப்பும் முறை பண்டையக் கால முறை அரசகுமாரி.

“உடலையும் பார்த்தேன்.

“அங்கும் இடைக்கவில்லையாக்கும்.

“இடைக்கவில்லை.

“உங்களுக்குக் இடைக்காது அரசகுமாரி.

“ஏன்

“இது அந்தப்புர ஸ்திரீகள் வளர்க்கும் மாடப் புறா வல்ல. படைவீரர் வளர்க்கும் தூதுப் புறா. அதை அராயும் பொறுப்பைப் படைவீரர்களுக்கு விட்டுவிடுவது நல்லது.

“தங்களைச் சொல்லிக் கொள்ளுகிறீர்களாக்கும்?” என்றாள் காஞ்சனாதேவி கோபம் தொனிக்க.

“கோபம் வேண்டாம் தேவி. இப்படிக் கொடுங்கள் அந்தப் புறாவை. தூர இருக்கும் அந்த விளக்கைச் சற்று அருகில் கொண்டு வாருங்கள்” என்று கூறிய கருணாகர பல்லவன், காஞ்சனாதேவியின் கைகளிலிருந்து புறாவை வாங்கிக் கொண்டான். அதற்கு மேல் ஏதும் பேச இஷ்டப் படாததாலும், தூதுச் செய்தி ஏதாவது இருந்தால் அதை அறிந்துகொள்ள வேண்டுமென்ற அவலாலும் தூரத்தே யிருந்த கலிங்க நாட்டு மணிவிளக்கைத் தூக்கி வந்து கருணாகர பல்லவனுக்கு அருகே நின்று ஒளியைப் புறாவின் மீது நிலைக்க விட்டாள் காஞ்சனாதேவி.

புறாவின் உடலைக் கையிலிருந்து விடுவித்துக் கால் களை மட்டும் பிடித்துக்கொண்டு அதை உயரத் தூக்கிய இளையபல்லவன் அதன் பெரும் இறக்கைகளைக் கூர்ந்து நீண்ட நேரம் கவனித்தான். பிறகு முன்னும் பின்னும் நீண்டு கடந்த இறக்கைகளை ஒவ்வொன்றாகத் தூக்கித் தூக்கித் தன் விரல்களால் தடவினான். அந்தப் பட்சியை அவன் மிகவும் ஜாக்கிரதையாகத் தடவித் தடவி அதற்கு எதும் சிரமமில்லாமல் சோதிப்பதையும், அவன் விரல் படும் இடங்களில் அந்தப் பறவையும், நீண்ட நாள் அவனு டன் பழக்கப்பட்டதுபோல் இறக்கைகளைத் தூக்கித் தூக்கிக் காட்டியதையும் கண்ட காஞ்சனாதேவி பெரிதும் ஆச்சரியத்தில் அழ்ந்தாள். “தூதுப் புறா சோதனையிலிருந்து சகல போர்த் தந்திரங்களையும் அறிந்திருப்பதால்தான் இவர் புகழ் கடாரம் வரையில் பரவியிருக்கிறது” என்று சொல்லிக் கொண்டாள் அவள். அத்துடன் ஒரு விஷயம் ஆச்சரியமாகவுமிருந்தது கடாரத்தின் இளவரசிக்கு, “இத்தனை மெல்லிய பறவையின் இறகில் செய்து ஓலையை எப்படி அடியோடு மறைக்க முடியும்?” என்றும் தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள் அவள்.

குணவர்மன் மனத்தில் ஏதேதோ எண்ணங்கள் எழுந்து அலைமோதிக் கொண்டிருந்தன. ‘உண்மையில் இது தூதுப் புறாதானா? இல்லை, இளையபல்லவன் இல்லாத தைக் கற்பனை செய்கிறானா? தூதுப் புறாவாயிருந்தால் இது எந்தவிதத் தூதைக் கொண்டு வந்திருக்க முடியும்? இதில் ஏதாவது நமக்கு விடிமோட்சமுண்டா?’ என்று ஏதேதோ யோசித்துக் கொண்டும் அடிக்கடி புறாவையும் கருணாகர பல்லவனையும் பார்த்துக்கொண்டும் நின்றான்.

கருணாகர பல்லவன் குணவர்மனையோ, அருகே பிம்பம்போல் நின்ற காஞ்சனாதேவியையோ ஏறெடுத்தும் பார்க்காமல், தன் சோதனையிலேயே முனைந்தான். புறாவின் ஒரு புறத்து இறக்கைகளை விரல்களால் தடவித் தடவிச் சோதித்த பிறகு, மற்றொரு பக்கத்துக்காக அதைத் திருப்பி அந்தப் பகுதிகளையும் சோதித்தான். அந்தப் பகுதியின் இறக்கைகளுக்குள்ளும் அவன் விரல்கள் நீண்ட நேரம் துழாவிக் கொண்டிருந்த சமயத்தில் ஏதோ ஓரிடத்தில் அவன் விரல் பட்டதும் அந்தப் புறா “கூ..கூ..” என்று திடீரெனச் சத்தமிட்டது. அந்த இடத்தில் வைத்த அள்காட்டி விரலை அகற்றாமல் விளக்குக்காக நன்றாகப் புறாவை உயரத் தூக்கிய இளையபல்லவன், வேலினும் கூரிய தன் விழிகளை இறக்கையின் அந்தப் பகுதியில் ஓட்டி, மற்றும் இரண்டு விரல்களை இறக்கையின் அந்தப் பகுதியில் புகவிட்டு, இறக்கையும் உடலும் இணைந்த இடத்திலிருந்து சின்னஞ்சிறு பட்டுத் துணியொன்றை வெளியே எடுத்தான்.

அந்தப் பட்டுத் துணியின் பரிமாணத்தைப் பார்த்துக் காஞ்சனாதேவி மட்டுமல்ல, குணவர்மனும் ஆச்சரியத்தின் எல்லையை எய்தினான். தென்னை ஈர்க்கின் கனமும் அரைச் சுண்டுவிரல் அகலத்துக்குமாகச் சுற்றப்பட்டிருந்த அந்தப்பட்டுத் துணி எத்தனை நீளமிருக்கும், அதில் செய்தி யைத்தான் எப்படி எழுத முடியும் என்று நினைத்துப் பார்க்க முடியாத அந்த ஸ்ரீவிஜய பெருமக்கள் இருவரும் வியப்பு முகங்களில் நன்றாகப் பிரதிபலிக்கக் கருணாகர பல்லவனை உற்று நோக்கினார்கள். அவர்கள் முகங்களில் படர்ந்த அச்சரிய ரேகையைக் கவனித்த கருணாகர பல்லவன் உதடுகளில் லேசாகப் புன்முறுவல் காட்டி, “உங்களுக்கு இது ‘ஆச்சரியமாகத்தானிருக்கும். ஆனால் தமிழகத்திலிருக்கும் எங்களுக்கு அது அதிசயமல்ல?” என்று கூறி, நன்றாக இறுக்கிச் சுருட்டப்பட்டிருந்த அந்தப் பட்டு சுருளை தன் விரல்களால் மெல்ல மெல்லப் பிரித்தான். சுருள் பிரியப் பிரிய அந்தப் பட்டுத் துணி நீண்டது. கிட்டத் தட்ட ஓர் அடிக்கு மேல் நீண்டு, பஞ்சினும் மெல்லிய தாய்க் காணப்பட்ட அந்தப் பட்டில் செய்தியொன்று பொறிக்கப்பட்டதற்கு அடையாளமாக எழுத்துகள் சிவப்பாகத் தெரிந்தன. வெண்பட்டில் சிவப்பாகத் தெரிந்த அந்த எழுத்துகள் கலிங்கத்தின் விளக்கொளியில் பெரும் நெருப்புத் தண்டங்களைப்போல் பளபளத்தன.

“அச்சரியம் அச்சரியம்!” என்று வாய்விட்டே சொன் னான் குணவர்மன். அந்தப் பட்டுச் லை விரிந்த விந்தை யைக் கண்டு.

“உங்களுக்கு இது ஆச்சரியம்தான் குணவர்மரே” என்றான் இளைய பல்லவன்.

“இத்தனை மெல்லிய பட்டுத் துணி இருக்கக் கூடு மென்று நான் கேள்விப்பட்டதுகூட இல்லை” என்றான் குணவர்மன்.

“நீங்கள் கேள்விப்படாதிருக்கலாம். ஆனால் ரோமா புரியும் மற்ற மேல்நாடுகளும் கேள்விப்பட்டிருக்கின்றன. சினத்துப் பட்டுக்கு அடுத்தபடியாக எங்கள் மெல்லிய பஞ்சு உடைகளும் பட்டு உடைகளும்தான் ரோம சாம் ராஜ்யத்தில் வாங்கப்படுகின்றன. இறக்கைக்குள் அடையக் கூடிய இந்தச் சிறு பட்டுத் துணியைப்பற்றி ஆச்சரியப்பட வேண்டாம். அரசகுமாரி உடுக்கக்கூடிய பெரும் சேலை ஒரு கைக்குள் அடங்கும்படியான ஆடைகளையும் எங்கள் நெசவாளர்கள் தயாரிக்கிறார்கள்.

“அப்படியா!” என்று வினவினாள் காஞ்சனாதேவி,

“ஆம் அரசகுமாரி! ஒருவேளை இந்தக் கலிங்கத்து லிருந்து நாம் தப்பிச் சோழ நாடு சென்றால், அத்தகைய பட்டாடை ஒன்று இந்த அடிமையின் பரிசாகத் தங்க ளுக்கு அளிக்கப்படும்” என்று பதில் சொன்ன கருணாகர பல்லவன், “அதிருக்கட்டும் அரசகுமாரி, இந்தச் செய்தியை முதலில் படிப்போம். விளக்கை இன்னும் சற்று அருகில் காட்டுங்கள்” என்று கூறவே அரசகுமாரி விளக்கை அவன ரகில் காட்டினாள்.

மெள்ள மெள்ள விரித்துப் பிடித்த அந்தச் சின்னஞ் சிறு பட்டுத் துணியில் காணப்பட்டவை நாலைந்து வரிகளென்றாலும், அவற்றில் அவர்கள் விமோசனத்துக் கான செய்தியே விரிந்து கிடந்தது. அந்த நாலைந்து வரிகளைப் படித்துக்கொண்டே போன இளைய பல்லவ னின் முகம் திடீரெனப் புத்தொளி பெற்றது. அவன் கண் களில் எல்லையற்ற மகழ்ச்சி தாண்டவம் அடியது. “நினைத்தேன்! நினைத்தேன் அப்பொழுதே!”. என்று இரைந்து கூவிக்கொண்டு திடீரென்று மஞ்சத்தை விட்டு எழுந்தான் கருணாகர பல்லவன்.

அவன் மகழ்ச்சிக்கும் பேச்சுக்கும் காரணம் புரிந்து கொள்ளமுடியாத தந்தையும் மகளும் ஒருவரையொருவர் சில விநாடிகள் பார்த்துக் கொண்டனர். கடைசியில் குணவர்மனே கேட்டான் “என்ன நினைத்தீர்கள் இளைய பல்லவரே?” என்று.

“புலியைச் சிறையிலடைப்பது கஷ்டமென்று.

“எந்தப் புலியை?”

“இந்தப் புலியைத்தான்” என்று குணவர்மனிடம் அந்தப் பட்டுத் துணியை நீட்டினான் இளைய பல்லவன். அந்தப் பட்டுத் துணிமீது ஏக காலத்தில் கண்களை ஓட்டிய குணவர்மனின் முகத்திலும், காஞ்சனாதேவியின் முகத்திலும் பிரமிப்பு மட்டுமின்றி ஏதோ புதையலைத் திடீரென்று பிடித்துவிட்டது போன்ற நம்பிக்கையொளியும் சுடர் விட்டது.

“கடாரத்தின் மன்னருக்குப் பயம் வேண்டாம். மூன்று நாள்கள் அங்கேயே இருங்கள். பல காரியங்கள் நடக்கும். இடையூறு செய்ய வேண்டாம் -- அநபாயன்” என்று கண்டிருந்தது.

அந்த ஓலையைத் திரும்பத் திரும்பப் படித்த குணவர்மன், “இளைய பல்லவரே! இந்தக் கையெழுத்து அதபாயரதுதானா?” என்று சந்தேகத்துடன் வினவினான்.

“ஆம், அவருடையதுதான்.

“அப்படியானால் அவர் தப்பியிருக்க வேண்டும்.

“தப்பித்தான் இருக்க வேண்டும்.

“கலிங்கத்தின் சிறையிலிருந்து தப்புவது அவ்வளவு எளிதா?”

“எளிதல்ல குணவர்மா! ஆனால் அநபாயரின் திறழமை எல்லையற்றது. அவரை எந்த இடத்திலும் அடைத்து வைப்பது கஷ்டம்.

“ஏதோ எனக்கும் அதிர்ஷ்டமிருப்பதாகத் தெரிகிறது இளைய பல்லவரே. எப்படியாவது அநபாயர் வந்து நம்மை விடுவித்து, சோழநாடு அழைத்துச் சென்றால் நான் வந்த காரியம் கைகூடும்” என்று கூறி ஆயாசம் தீர்ந்ததற்கு அறிகுறியாகப் பெருமூச்சு விட்டான் குணவர்மன்.

“முதலில் இங்கிருந்து தப்பும் மார்க்கத்தைப் பார்ப் போம் குணவர்மரே! இப்பொழுது நாம் செய்ய வேண்டிய தெல்லாம் மூன்று நாள்கள் காத்திருப்பதுதான் “ என்று விளக்கினான் கருணாகர பல்லவன்.

அதற்கு மேல் பேசுவதற்கு ஏதுமில்லாததால், “சரி இளைய பல்லவரே இரவும் ஏறிக்கொண்டிருக்கிறது. நீங்கள் படுக்கச் செல்லுங்கள். காஞ்சனா! இவருக்கு எந்த அறை யைக் கொடுக்கலாம்?” என்று வினவினான்.

“எந்த அறைக்குள் ஏறிக் குதித்தாரோ அந்த அறை யையே கொடுக்கலாம்!” என்றாள் காஞ்சனாதேவி.

“சரி அப்படியே செய். பணிப் பெண்களை விட்டு வேண்டிய வசதிகளைச் செய்து கொடு” என்று குணவர் மன் கூறியதும்” தன்னுடன் வரும்படி இளைய பல்லவ -னுக்குச் சைகை செய்த காஞ்சனாதேவி அறையை விட்டு வெளியேறத் திரும்பினாள். கருணாகர பல்லவன் தூதுப் புறாவை மீண்டும் கையில் பிடித்துக் கொண்டு அவளைத் தொடர்ந்தான்.

மீண்டும் அந்தப் பழைய மாடியறையை அடைந்ததும், “உள்ளே செல்லுங்கள்” என்று கூறிய காஞ்சனாதேவி வாயிற்படிக்கு வெளியிலேயே நின்றாள்.

“ஏன்? நீங்கள்?” என்று மெள்ள இழுத்தான் இளைய பல்லவன்.

“ஊஹும் நீங்கள் மட்டும் போங்கள்.

“நான் வேண்டுமானால்.

“என்ன சொல்கிறீர்கள்?”

“திரைக்குப் பின்னால் ஒளிந்து கொள்ூறேல்.

“அதைக் கேட்ட காஞ்சனாதேவி கலகலவென நகைத் தாள். “இளைய பல்லவருக்கு ஏற்கெனவே இத்தகைய பழக்கம் பலம் போலிருக்கிறது” என்றும் சொன்னாள் சிரிப்புக்கிடையே.

இளையபல்லவன் கையிலிருந்த பறவைத் தீவின் காட்டுப் புறா, இருமுறை சிறகடித்தது. கடாரத்தின் வீட்டுப் புறா ஒருமுறை நெளிந்தது. இரண்டு புறாக்களை யும் மாறி மாறிப் பார்த்த கருணாகர பல்லவனின் மனம் புத்தம் புதிய கனவுலகத்தில் பறந்துகொண்டி ருந்தது. அவன் கண்கள் மிகுந்த தைரியத்துடன் எதிரே இருந்த வீட்டுப் புறாவின்மீது நிலைக்கவும் செய்தன.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 8

அபாய அறிவிப்பு!.

அந்த இரவில், அறை ஜாமத்திற்கு முன்பு, எந்த முன்னறிவிப்புமின்றிச் சாளரத்தின் மூலம் இடீரென வந்து குதித்துத் திரை மறைவில் பதுங்கிய இளையபல்லவன், சில நாழிகைக்குள்ளாகவே தன்னுடன் நீண்ட நாள் பழக்க முள்ளவன் போல் நடந்துகொள்ளத் துவங்கிவிட்டதையும் படுக்கச் செல்லும் அந்த நேரத்திலும் இடக்கு வார்த்தைகள் பேச முற்பட்டதையும் கண்ட காஞ்சனாதேவிக்கு, அவன் மீது எல்லையற்ற கோபம் சுடர்விடுவதே இயற்கையென் றாலும் அந்த இயற்கைக்கு இதயம் இடம் கொடாமல், உள்ளம் பூராவும் மகழ்ச்சி வெள்ளம் பாயவே, அவள் அறை நாதாங்கியைப் பிடித்த வண்ணம் இடை சிறிது நெளிய மிக ஒய்யாரமாக நின்றாள். தவி இளைய பல்லவன், அவன் கையிலிருந்த காட்டுப் புறாவையும் நோக்கித் தன்னையும் நோக்குவதைக் கண்டதும் சிறிது புன்முறுவலும் கோட்டினாள் கடாரத்தின் இளவரசி. இளைய பல்லவன் அவள் நின்ற அழகையும், உள்ளே ஓடிய எண் ணங்களின் விளைவாக அவள் உதடுகளில் தோன்றிய புன்னகையையும் கவனித்ததன்றி, அவள் கழுத்தில் வளைய வந்து மார்பில் தொங்கிய நவரத்தின மாலையை ‘யும் பார்த்து அவள் புன்னகையின் ஒளிக்கு முன்பு அந்த நவரத்தின மாலையின் ஒளி எத்தனை சர்வ சாதாரண மானது என்பதை நினைத்து வியந்தான். எத்தனையோ பளபளப்பான கற்களை உலகத்தில் அண்டவன் சிருஷ்டித் திருந்தும், அவற்றுக்குப் பின்பு தொக்கி நிற்க உணர்ச்சி யாகிற ஒளியை மட்டும் சிருஷ்டிக்காத காரணத்தினா லேயே ஒரு பெண்ணின் இளநகை முன்பு. இரத்தின வைடூரியங்களும் ஒளியிழந்து விடுகின்றன என்பதை எண்ணி ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். காஞ்சனா தேவியின் கண்களும் உதடுகளும், உணர்ச்சிகளின் விளைவாகப் பேசும் பேச்சுகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் நவரத்தின மாலையின் வைடூரியங்கள் எத்தனை மெளனத்தையும், சங்கடத்தையும் அடைந்திருக்கின்றன என்பதையும் இளையபல்லவன் அலசிப் பார்த்து, ‘விளக்கில் இவை பளிச்சுப் பளிச்சென்று மின்னுவதற்கும் அந்தச் சங்கடம் தான் காரணமாயிருக்க வேண்டும்’ என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான். செயற்கைக் கற்கள் சிறிதளவும் ஈடு கொடுக்க முடியாத இயற்கை லாவண்யங்களுடன் திகழ்ந்த காஞ்சனாதேவிக்கு ஆபரணங்கள் அனாவசியம் என்றே முடிவுக்கு வந்த கருணாகர பல்லவன், சொர்ணச் சாயை யுடனும் பட்டு போல் மென்மையுடனும் விளங்கிய அவள் கழுத்தையும், கன்னங்களையும் ஒருமுறை தடவிப் பார்த்துத் தன் இடது கையிலிருந்த வெண்புறாவின் முதுகை இமல்வத் தடவிக் கொடுத்தான்.

அவன் கண்கள் பாய்ந்த இடங்களைக் கவனித்த காஞ்சனாதேவி அவன் புறாவின் முதுகைத் தடவியதும் தன் கபோலங்களையே அவன் வருடிவிட்டது போல் பெரிதும் சங்கடத்துக்குள்ளாகி, தலையைச் சரேலென்று மறுபுறம் திருப்பிக் கொண்டாள். அப்படித் திருப்பியதால் தன் பார்வைக்கு நேரெதிரில் வந்துவிட்ட அவள் வலது கன்னத்தில் வெட்கத்தின் குருதி பாய்ந்து அதைச் செக்கச் செவேலென்று அடித்துவிட்டதைக் கண்ட இளையபல்லவ னும், தான் வரம்பு மீறிவிட்டதை உணர்ந்து, பேச்சினால் உணர்ச்சிகளுக்குத் தளைபோட முற்பட்டு, “காஞ்சனா தேவி!” என்று ஒருமுறை அழைத்தான்.

அவளிடமிருந்து ஒரு “ஹூமம் “காரந்தான் பதிலாக வந்தது.

“நான்...” சிறிது தடுமாறியே பேசினான் அந்த வீரன்.

“ஹூம்” அப்பொழுதும் அதே சத்தம்தான் வந்தது அவளிடமிருந்தது. அந்தச் சத்தத்தில் சங்கடத்துடன் ஓரளவு கடுமையும் கலந்திருந்தது.

“விளையாட்டாகப் பேசிவிட்டேன்” என்று மறுபடி யும் பேச்சைத் துவங்கி, முடிக்க முடியாமல் திணறினான் இளையபல்லவன்.

“ஹும்!”

“மன்னிப்புக் கேட்கிறேன்.

“ஹும்! ஹூம்.

“இந்த ஹும்முக்கு மேல் வார்த்தைகளே வராதா உங்களுக்கு?” இம்முறை இளையபல்லவன் சொற்களில் சிறிது தைரியமும் தொனித்தது.

சரேலெனத் திரும்பிய காஞ்சனாதேவியின் கண்களில் மிகுந்த கம்பீரமும் மிதமிஞ்சிய கடுமையும் கலந்திருந்தன. உரிமையற்ற ஆடவன் அதிக உரிமை கொண்டாட முயலும்போது கற்புக்கரசிகளின் இதயத்தில் ஏற்படும் உக்கிரம் அந்தக் கண்களில் இருந்தது. “வார்த்தைகள் வரும் இளைய பல்லவரே! நிரம்ப வரும், வரம்புக்குள் சம்பாஷ ணையும் செய்கையும் இருக்கும் பட்சத்தில்” என்ற அவள் சொற்களிலும் அந்தக் கடுமை நன்றாகப் புலனாயிற்று. இப்படிப் பேசிய அந்த அழகி, அதுவரையிருந்த சங்கடத் தையும் சலனத்தையும் உதறிக்கொண்டு நெளிந்த நிலை யிலேயே சிறிது நிமிர்ந்து கம்பீரத்துடன் நின்றாள்.

ஆளும் தோரணையில் நின்ற அந்த அரணங்கைக் கவனித்த இளையபல்லவனின் விழிகள், அவள் விழிகளி லிருந்து தப்பவே முயன்றன. பத்து வாள்கள் வீசப்பட்டா லும் அவற்றை உறுதியுடன் நோக்கவல்ல அவன் கண்கள் அந்தப் பெண்ணின் பார்வைக்கு முன்னால் உறுதி குலைந்து நிலை தடுமாறின. அவன் பேசிய சொற்களும் அப்படி உறுதி குலைந்து தழுதழுத்தே வெளிவந்தன. “புரிகிறது அரசகுமாரி! தவறு புரிகிறது!” என்ற சொற் களைத் தட்டுத் தடுமாறியே உதிர்த்தான் இளையபல்லவன்.

சில வினாடிகள் முன்பு தன்னை அலசிய கண்கள் நிலைகுலைந்து, பெண்களின் கண்களைப்போல் நிலத்தை நோக்குவதைக் கண்டாள் கடாரத்துக் கட்டழகி. புறாவைப் பிடித்திருந்த இடது கையும் அதன் முதுகைத் தடவிய வலது கையும் சற்றே நடுங்குவதையும் பார்த்த அந்தப் பேரழகியின் முகத்திலிருந்த கோபம் மெள்ள மெள்ள அகன்றது. “இவர் மிகுந்த பண்பாடுள்ளவர். அதனால்தான் தவறை அணர்ந்ததும் நடுங்குகிறார். பாவம்! எதற்காக இத்தனைக் கடுமையை இவரிடம் காட்டினேன்! ’ என்று தனக்குள் எண்ணமிட்டாள் காஞ்சனாதேவி. அத்துடன், ‘அண்களின் சலனத்துக்குப் பாதி பெண்கள்தானே காரணம்? பெண்கள் கொடுக்கும் இடத்தால்தானே அண்கள் வரம்பு மீறுகறார்கள்? இவர் திரை மறைவி லிருக்கறேனென்று சொன்னதும் நான் நகைத்தது மட்டும் சரியா? பெண்மைக்கு அழகா?’ என்று தன்னையும் கண்டித்துக் கொண்ட காஞ்சனாதேவி, பேச்சை வேறு இசையில் மாற்றி, “இரண்டாம் ஜாமம் துவங்கிவிட்டது இளைய பல்லவரே!” என்றாள்.

“ஆம், அரசகுமாரி! ஊரும் மெள்ள மெள்ள அடங்கி வருகிறது. கப்பல் துறையிலும் கூச்சல் அதிகமாகக் காணோம். வீதியிலும் ஜனநடமாட்டம் குறைந்துவிட்டது” என்று சம்பாஷணையில் கலந்துகொண்டான் கருணாகர பல்லவன், சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,

“வீதியில் மட்டுமல்ல, வீட்டிலும் சத்தத்தைக் காணோரம்.

“ஆமாம், உறங்கும் நேரம் வந்துவிட்டது! உங்கள் பணிப்பெண்கள் காத்திருப்பார்கள், செல்லுங்கள்.

“நீங்களும் உறங்குங்கள். அதோ மஞ்சமிருக்கிறது. விடி விளக்கும் அறை மூலையிலிருக்கிறது. வேறெதாவது தேவை யானால் சொல்லுங்கள்” என்று கேட்டாள் காஞ்சனா தேவி.

“வேறெதுவும் தேவையில்லை, அரசகுமாரி. மஞ்சம் கூடத் தேவையில்லை. என்னால் தரையிலும் படுத்து உறங்க முடியும். ஆனால் இன்றிரவு உறக்கம் பிடிப்பது கஷ்டம்” என்று பதில் கூறினான் கருணாகர பல்லவன்.

அவன் பதிலைக் கேட்டதும் ஒருமுறை மிரண்டு விழித்தாள் அவள். இளையபல்லவன் மீண்டும் பழைய பல்லவியைப் பாடவும், பழைய ஆராய்ச்சியைத் தொடங்க வும் முற்பட்டுவிட்டானோ என்ற திகைப்பால், “ஏன் உறக்கம் பிடிக்காது இளைபல்லவரே!” என்று தைரியமாகக் கேட்கவும் செய்தாள்.

அவள் விழித்ததையும், விழிப்பிலிருந்த திகைப்பையும் கருணாகர பல்லவன் கவனிக்கவே செய்தான். அவற்றின் பொருளும் அவனுக்குப் புரிந்துதானிருந்தது. ஆகவே அவ ளுக்குத் தைரியத்தை ஊட்டச் சொன்னான், “அரசகுமாரி! காரணம். நீங்கள் நினைப்பதல்ல. சித்தத்தில் சிக்கல்கள் பல சூழ்ந்திருக்கின்றன.

“என்ன சிக்கல்கள்!”

“அரசியல் சிக்கல்கள். உங்கள் நிலை, என் நிலை, அநபாயர் நிலை.

“ஆம், ஆம். எல்லோர் நிலையும் அபாய நிலைதான். “சாதாரண அபாய நிலையல்ல, அரசகுமாரி. நமது உயிர்களை மட்டும் பாதிக்கக்கூடிய நிலையல்ல. பெரிய அரசுகளைப் பாதிக்கக் கூடியது!”

“பெரிய அரசுகளையா?”

“ஆம், சோழநாடு, வேங்கிநாடு, கலிங்கநாடு, கடாரம் இத்தனையையும் பாதிக்கக்கூடிய சிக்கல்கள் இந்த ஒரே நகரத்தில் பாலூர்ப் பெருந்துறையில் ஏற்பட்டி ருக்கின்றன.

“புரிகிறது இளையபல்லவரே!”

“என்ன புரிகிறது, அரசகுமாரி? உங்களுக்குப் புரிவ தெல்லாம் இந்தப் பாலூர்ப் பெருந்துறையில் நமக்கிருக்கும் ஆபத்துதான். ஆனால் சந்தர்ப்பங்கள் எப்படி அமைந் திருக்கின்றன பாருங்கள். சாதாரணக் காலத்தில் நீங்கள் கலிங்கம் வந்திருந்தால் இங்கிருந்து சோழநாட்டுக்கு எவ்விதத் தடையுமின்றிப் பயணம் செய்திருக்கலாம். சோழ நாட்டுடன் கலிங்கம் போரிட ஏற்பாடு செய்யும் சமயத்தில் வந்திருக்கிறீர்கள். அதுவும் நான் கலிங்கத்தில் கால் வைத்த இந்த இனத்தில் நிலைமை மிகவும் முற்றிவிட்டது. கலிங் கத்துக்கும் எனக்கும் போதாத ஆம்சங்கள் பலவற்றைச் சூழ்நிலை சுட்டிக் காட்டுகிறது. என் மனத்தில் ஏதேதோ எண்ணங்கள் எழுந்து மோதுகின்றன. கலிங்கத்தால் நான் அழிவேனா அல்லது என்னால் கலிங்கம் அழியுமா என்பதுகூடப் புரியவில்லை எனக்கு. காலம்தான் இதற்குப் பதில் சொல்லும்” என்று ஏதோ தீர்க்கதரிசி போல் பேசினான் கருணாகர பல்லவன்.

பாலூர்ப் பெருந்துறையில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அத்தனை தூரம் கற்பனை தேவையில்லை என்று நினைத்த கடாரத்து இளவரசி, “இளையபல்லவர் மதிப்பீடு அளவுக்கு மீறியிருக்கிறது. போர்கள் அத்தனை சீக்கிரமாக ஏற்படுமா?” என்றாள்.

கருணாகர பல்லவன் துன்பப் புன்முறுவலொன்றை இதழ்களில் படரவிட்டான். “அரசகுமாரி! தமிழகத்தை நீங்கள் அறியமாட்டீர்கள். தமிழர்கள் எந்த நஷ்டத்தையும் பொறுப்பார்கள். மான நஷ்டத்தை மட்டும் பொறுக்க மாட்டார்கள். ராஜராஜ சோழரும், ராஜேந்திர சோழரும் ஏன், இன்று அரியணை எறியிருக்கும் வீரராஜேந்திர சோழ தேவர்கூட ராஜ்ய விஸ்தரிப்புக்காகப் போர்களில் இறங்க வில்லை. அக்கம் பக்கத்து நாடுகள் கடைபிடித்த கொள்கை கள், தமிழருக்கு விளைவித்த அநீதிகள்,. இவற்றாலேயே போரில் இறங்கினார்கள். சோழர் படைகள் என்றும் போருக்குச் சித்தமானவை. மிகப் பலமானவை. ஆனால் சின்னஞ்சிறிய ஆட்டுக்குட்டி போன்ற கலிங்கம், புலியுடன் விளையாடத் துவங்கியிருக்கிறது. இரண்டு நாடுகளுக்கு மிடையே போரை எதிர்பார்க்கிறேன். கலிங்கத்துப் பீமன் தமிழர்கள் பலரைச் சிறையில் தள்ளியிருப்பதே போர் நிகழப் போதிய காரணம். தவிர, அநபாயரையும் சிறை செய்தானென்றால் கேட்க வேண்டியதில்லை. அந்த ஒரு குற்றத்துக்கு இந்த நாட்டை நானே கொளுத்திவிடுவேன்! என்றோ ஒருநாள் இந்த நாடு என் கையால் நாசமடையும்?” என்று உணர்ச்சி பொங்கக் கூறினான் கருணாகர பல்லவன்.

அவன் உணர்ச்சி ஆவேசத்தைக் கண்டு அரசகுமாரி அசந்து போனாள். சற்று முன்பு காதல் விஷயத்தில் அதைரியத்துடன் உலாவிய கண்கள், போரை எண்ணும் போது உணர்ச்சி வேகத்தில் சுழல்வதை எண்ணி வியந்தாள் அவள். தீர்க்ககரிசிபோல் அன்று அவள் பேசிய பேச்சு அவளுக்கு விசித்திரமாயிருந்தது. ‘கலிங்கத்தின் நிலை சரியில்லைதான். ஆனால் அநபாயர் தப்பிவிட்டார். இனி இவரும் நாங்களும்கூடத் தப்பலாம். அதற்கு உதவத்தான் கோடிக்கரைக் கூலவாணிகன் இருக்கிறான். அநபாயரும் தூதுப் புறா மூலம் தைரியம் சொல்லி ஓலை அனுப்பியிருக்கிறார். எல்லோரும் தப்பிச் சோழ நாடு சென்று விட்டால் இரண்டு நாடுகளுக்கும் பேச்சு வார்த்தை யிலேயே சமரசம் ஏற்படலாம்’ என்று நினைத்தாள் அவள்.

காலம், கருணாகர பல்லவன் வார்த்தைகளைத்தான் சரியென நிரூபித்தது. பிற்காலத்தில் தொண்டைமான் என்ற சிறப்புப் பெயர் பெற்றுப் பெரும் படைகளுடன் கலிங்கத்தின்மீது படையெடுத்து அழிக்கவிருந்த இளைய பல்லவன் அப்படியொரு காலம் வரும் என்பதை அந்த இரவில் நினைக்காவிட்டாலும், தமிழர்களுக்குக் கலிங்கம் இழைத்த அநீதிகளை எண்ணி அவன் இதயம் கொந்தளித்தது. அந்தக் கொந்தளிப்பின் விளைவாக உணர்ச்சி வசப் பட்டுப் பேசிவிட்ட கருணாகர பல்லவன் மெள்ள மெள்ளச் சுயநிலை திரும்பி, “அரசகுமாரி! உணர்ச்சி வசத்தால் ஏதேதோ பேசிவிட்டேன். நீங்கள் உறங்கச் செல்லுங்கள்.” என்று முடிவாகக் கூறினான்.

மேற்கொண்டு ஏதும் பேசாமல் திரும்பிய காஞ்சனா தேவியை, “அரசகுமாரி!” என்று மீண்டும் அழைத்துத் தடுத்த கருணாகர பல்லவன், “இதைப் பிடியுங்கள்!” என்று தூதுப் புறாவை அவளிடம் நீட்டினான்.

அதை ஆசையுடன் வாங்கி மார்பில் அணைத்துக் கொண்டாள் அரசகுமாரி. ஒரு கையால் அதைத் தடவிக் கொடுத்துக் கொண்டும் சொன்னாள், “அப்பா! சனேத்துப் பட்டைவிட எத்தனை மென்மை? எத்தனை வழவழப்பு!” என்று.

“ஆம் அரசகுமாரி.” என்றான் இளையபல்லவன் புன்முறுவலுடன்.

“அழகில் இணையற்றது.

“அறிவிலும் இணையற்றது.

“தூது செல்லும். அவ்வளவுதானே?”

“அது மட்டுமல்ல அரசகுமாரி. பழகினால் பல அலு வல்களைச் செய்யும். செய்தி தீட்டிய பட்டுத் துணியை இறக்கைகளில் மறைத்து அனுப்புவது மட்டுமல்ல, ஒரு முறை சைகை காட்டிக் குறிப்பினால் அறிவித்தால் மூக்க னாலும் ஓலைகளை எடுத்துச் செல்லும். உட்காரச் சொல்லும் இடங்களில் உட்காரும். மறையச் சொன்னால் மறையும். வேவும் பார்க்கும்.

“அரசகுமாரி வியப்பு மிதமிஞ்சியது. “வேவு பார்க்குமா!” என்று கேட்டாள் அவள் வியப்புக் குரலிலும் ஒலிக்க.

“பார்க்கும்.

“பார்த்து எப்படி வந்து சொல்லும்?”

“எதிரிகள் நடமாட்டம் சமீபத்தில் இருந்தால் சிறகைப் பலமுறை அடித்துக் கொள்ளும். நின்ற இடத்தில் நிற்காது. அங்கும் இங்கும் தத்தி அவஸ்தைப்படும். நாம் செயலற்று இருந்தால் கையை அலகால் கொத்திக் காயப்படுத்தவும் செய்யும். புகாரின் யவனர்கள் இப்படியெல்லாம் இப்புறாக் களைப் பழக்குகிறார்கள்.

“ஆச்சரியத்துக்கு்ள்ளான அரசகுமாரி அதற்குமேல் ஏதும் சந்தேகம் கேட்காமல், “வருகிறேன் இளைய பல்லவரே! இரவில் ஏதாவது அபாயம் நேர்ந்தால் புறாவை அனுப்புகிறேன்” என்று சொல்லி நகைத்து விட்டுச் செல்லத் தொடங்கினாள்.

“நீங்கள் அனுப்பத் தேவையில்லை. அதுவே இந்த அறைக்கு வரும்” என்று கூறிய கருணாகர பல்லவன். அரச குமாரி கண்ணுக்கு மறைந்தவுடன் அறைக்குள் திரும்பி மேலங்கி முதலியவற்றைக் களைந்து, பஞ்சணையில் படுத்தான். இலவம் பஞ்சாலும் சீனத்துப் பட்டாலும் தயாரிக்கப்பட்ட அந்தப் பஞ்சனை மிக மெதுவாக இருந்தாலும் கலிங்கத்தில் காலடி, வைத்த வினாடி முதல் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் உள்ளத்தில் பெரும் அலைகளாக எழுந்து மோதிக் கொண்டிருந்ததால் உறக்கம் பிடிக்காமலே நீண்ட நேரம் படுத்துக் கடந்தான் அந்த வாலிபன். புதீவிஜய சாம்ராஜ்யத்தின் சரித்திரமும் காஞ்சனாதேவி யின் இணையற்ற அழகும் திரும்பத் தஇரும்ப அவன் மனக் கண்களுக்கு முன்னால் எழுந்து உலாவின. தன்னால் முடியுமானால் அவசியம் ஜெயவர்மனைக் கொன்று ப்தீவிஜயத்தில் குணவர்மனுக்கு முடிசூட்டுவதென்ற முடிவுக்கு வந்த இளைய பல்லவன், தன் சொப்பனத்தை எண்ணித் தானே நகைத்துக் கொண்டான். ஸ்ரீவிஜயம் எங்கே, நான் எங்கே? ஸ்ரீவிஜயத்துக்குச் செல்லப் பெரும் கடற்படை வேண்டும். கடற்படை இருந்தாலும் அதைச் செலுத்தத் திறன் வேண்டாமா? மரக்கலம் செலுத்தியே பழக்கமில்லை எனக்கு. மனக்கோட்டை மட்டும் பலமா யிருக்கிறது!” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, சரி, சற்று நிம்மதியாக உறங்குவோம்.” என்று கண்களை மூடினான்.

ஆனால் அன்றிரவு அத்தனை சுலபத்தில் அவனுக்கு நிம்மதியளிப்பதாகக் காணோம். சுமார் அடுத்த அரை ஜாமம்தான் அவன் படுத்திருந்தான். திடீரென வீதியில் தடதடவெனப் புரவிகள் வரும் சத்தம் கேட்கவே சட் டென்று எழுந்து சாளரத்துக்கு வெளியே தலையை நீட்டிப் பார்த்தான். சுமார் நான்கு புரவிகள் எதிரேயிருந்த மாளிகைத் தாழ்வாரத்து வெளிக்கூரையின் இருட்டடித்த இடத்தில் நகர்ந்து நின்றன. அந்தப் புரவிகளில் ஒன்றி லிருந்து குதித்த போர்க் கவசமணிந்த வீரனொருவன் வீதியில் இருமுறை அங்குமிங்கும் உலாவினான். பிறகு இடீரென்று குறுக்கே நடந்து மாளிகையின் &ழ்க்கதவை லேசாக மும்முறை தட்டவும் செய்தான். அவன் தட்டுவ தற்கும் இரண்டறைகளுக்கு அப்பாலிருந்த தன் பள்ளி யறையிலிருந்து காஞ்சனாதேவி. ஓடி வருவதற்கும் சரியா யிருந்ததைக் கவனித்தான் இளைய பல்லவன். அது மட்டு மல்ல, காஞ்சனாதேவிக்கு முன்பாக பறவைத் தீவின் அந்தப் பெரும் புறா சிறகடித்துப் பறந்து வந்து அவன் மார்மேல் உட்கார்ந்து அவன் மார்பை மும்முறை அலகால் குத்தவும் செய்தது. அந்தப் புறாவைத் துரத்தி வந்த காஞ்சனாதேவியின் கண்கள் அச்சத்துடன் எழுந்து கரணாகர பல்லவனின் கண்களுடன் கலந்தன.

“ஆம், தேவி. ஏதோ அபாயம்தான் வந்திருக்கிறது. இதைப் பிடியுங்கள்” என்று புறாவைப் பிடித்து அவளிடம் கொடுத்த இளையபல்லவன் தன் மேலங்கியை மிகத் துரித மாக அணிந்து இடையில் வாளையும் எடுத்துக் கட்டிக் கொண்டு திடுதிடுவென்று அறைக்கு வெளியே நின்றான்.

“சற்று நிதானியுங்கள். தந்தையை எழுப்புகறேன்” என்று தடுத்தாள் காஞ்சனாதேவி.

“யாரையும் எழுப்ப வேண்டாம். நீங்கள் அறைக்குச் சென்று தாழிட்டுப் படுத்துக் கொள்ளுங்கள். என் குரலோ உங்கள் தந்த குரலோ கேட்டாலொழியக் கதவைத் திறக்க வேண்டாம்” என்று எச்சரிக்கை செய்த கருணாகர பல்லவன் கண வேகமாகப் படிகளில் இறங்கிக் கழ்த்தளத் துக்குச் சென்றான்.

அவன் இ&ழ்த்தளத்தின் வாயிற்படியை அடைவதற்கும் கவசமணிந்த வீரன் உள்ளே நுழைவதற்கும் சரியாயிருந்தது. அந்த இரவில் மென்மேலும் பல விந்தைகள் காத்திருந்தன, இளைய பல்லவனுக்கு. எதிரே வெகு வேகமாகப் படிகளில் இறங்கி வந்த இளைய பல்லவனைக் கண்டதும் கவச மணிந்த வீரன் தலை தாழ்த்தி வணங்கினான். எதிரி எதற் காகத் தலை வணங்குகிறான் என்பதை எண்ணிப் பார்த்து, ஏதும் புரியாமல் வியப்பில் அழ்ந்த இளைய பல்லவனை, வந்த வீரனின் பேச்சு இன்னும் அதிக ஆச்சரியத்தில் அமிழ்த்தியது.

“இந்த மாளிகையில் கருணாகர பல்லவர் தங்கியிருப்ப தாகக் கேள்விப்பட்டோம்...” என்று துவங்கினான் வீரன்.

கருணாகர பல்லவன் அந்த வீரனைக் கூர்ந்து நோக்க, யார் நீங்கள்?” என்று கேட்டான், சந்தேகம் தொனித்த குரலில்.

“கருணாகர பல்லவரின் நண்பரொருவர் அனுப்பி னார்” என்று பதில் கூறினான் அந்த வீரன்.

“யாரந்த நண்பர்?”

“அதைக் கருணாகர பல்லவரிடம்தான் சொல்ல முடியும். மற்றவர்களிடம் சொல்ல உத்தரவில்லை” திட்டமாக அறிவித்தான் அந்த வீரன்,’ ‘!

“நான்தான் இளையபல்லவன்.

“அடையாளம்?”

“இதோ பார்” இடது கையிலிருந்த முத்திரை மோதிரத் தைக் காட்டினான் இளையபல்லவன்.

அதைக் கவனித்ததும் மீண்டுமொருமுறை தலை வணங்கிய அந்த வீரன், “தாங்கள் என்னை நம்பி என்னு டன் வர இதைக் காட்ட உத்தரவாயிருக்கிறது.” என்று கூறி, தன் கச்சையிலிருந்து மற்றொரு மோதிரத்தை எடுத்துப் பதிலுக்குக் காட்டினான்.

அந்த மோதிரத்தைக் கையில் வாங்கிய கருணாகர பல்லவனின் கண்களில் வியப்பின் எல்லை தெரிந்தது. மிகுந்த பயபக்தியுடன் கண்களில் அந்த மோதிரத்தை ஒற்றிக்கொண்டான். அவன் முகத்தில் ஒரு விநாடி குழப்பம் தெரிந்தது. ‘புறா பொய் சொல்லுமா? அதன் அபாய அறிவிப்பு பொய்யா? வந்திருப்பவர்கள் நண்பர்களானால் அது ஏன் சிறகடித்து ஓடி. வந்தது? என் மார்பை ஏன் குத்தியது?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். மீண்டும் மோதிரத்தை நன்றாக ஆராய்ந்தான். ‘சந்தேகமி ல்லை... புறா தவறுதான் செய்திருக்கறது. இந்த முத்திரை மோதிரத்தின் ஆணையை மீற முடியாது. வந்திருப்பவர்கள் விரோதிகளாயிருக்க முடியாது. நண்பர்களைத் தவிர வேறு யார் இந்த மோதிரத்தைக் கொண்டு வர முடியும்?” என்று தன்னைக் கடைசியில் திடப்படுத்திக் கொண்ட கருணாகர பல்லவன், “இந்த மோதிரத்துக்குடையவர் எங்கிருக்கிறார்?” என்று கேட்டான்.

“பதில் சொல்ல உத்தரவில்லை, இளைய பல்லவரே” என்றான் வீரன்.

கருணாகர பல்லவன் மேற்கொண்டு அவனுடன் விவாதிக்காமல் பணிப்பெண் ஒருத்தியை அழைத்து, “நான் வெளியே செல்கிறேன். சீக்கிரம் திரும்பி விடுவேனென்று உன் தலைவியிடம் சொல்” என்று காஞ்சனா தேவிக்குச் செய்தி அனுப்பிவிட்டு, கவசமணிந்த வீரனை நோக்கு, “சரி, புறப்படுங்கள்” என்று கூறி அவனைத் தொடர்ந்து சென்றான்.

இளைய பல்லவனுடன் வீதிக்கு வந்த அந்த வீரன் எதிர்த் தாழ்வரை நிழலில் மறைந்திருந்த மற்றப் புரவி வீரரை வெளியே வரும்படி அழைத்தான். அவர்களிலொரு வனது புரவியில் கருணாகர பல்லவனை ஏறச் சொல்லி மற்ற வீரர்கள் பின் தொடரத் தன் புரவியைச் செலுத்தினான்.

புரவியில் ஆரோகணித்துச் சென்ற கருணாகர பல்லவன், தன்னை அழைத்துச் செல்லும் வீரர் இரண்டு மூன்று வீதிகளைக் கடந்து வணிகர் பெரு வீதிக்குள் புகுவதைக் கண்டதும், சரி சரி, இவர்கள் கோடிக்கரைக் கூலவாணிகன் விடுதிக்கு அழைத்துச் செல்கிறார்கள். புறாதான் தவறு செய்துவிட்டது. நண்பர்களை விரோதி களாக நினைத்துவிட்டது” என்று நிச்சயப்படுத்திக் கொண்டான். அந்த நிச்சயத்தால் வெகு அலட்சியமாகப் புரவியை நடத்திக்கொண்டு வீரர்களுடன் சென்றான்.

இரண்டு மூன்று வீதிகளைக் கடந்து வணிகர் பெரு வீதியின் கோடியிலிருந்த பெரிய மாளிகையொன்றின் முன்பு வந்ததும் வீரர்கள் இளைய பல்லவனை இறங்கச் சொன்னார்கள்.

புரவியிலிருந்து இறங்கியதும் கோடிக்கரைக் கூல வாணிகனின் அந்த மாளிகைக்குள் சர்வசகஜமாக நுழைந் தான் இளையபல்லவன். மூன்றாம் ஜாமம் நெருங்கிக் கொண்டிருந்த அந்த வேளையிலும் கூலவாணிகனின் மாளிகைக் கூடத்தில் பெருவிளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. கூடத்தின் நடுவில் பெரும் கூட்டமொன்று உட்கார்ந்திருந்தது.

அதன் நடுவிலிருந்து எழுந்த கூலவாணிகனைக் கண்ட கருணாகர பல்லவன் பெரும் வியப்புக்கு மட்டு மல்ல, அதிர்ச்சிக்கும் சீற்றத்துக்கும் உள்ளானான்.

புறாவின் அபாய அறிவிப்பில் பிசசல்லை என்பதை உணர்ந்தான். அவன் கை, மின்னல் வேகத்தில் வாளை நாடிச் சென்றது. மீண்டும் ஸ்தம்பித்தான் அவன். உறையில் வாள் இல்லை. பேரிடி போன்ற சிரிப்பொலி யொன்று அவன் பின்புறத்திலிருந்து எழுந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 9

வலைக்குள் வந்த சிங்கம்

பாலூர்ப் பெருந்துறையில் பெருவணிகர் வீதிக்குள் நுழைந்த சமயத்திலோ, கூலவாணிகனின் மாளிகைக் கூடத் துக்குள் வந்த விநாடியிலோ எந்தவிதச் சந்தேகத்திற்கும் இடங்கொடாத இளையபல்லவன் அந்தக் கூடத்தில் உட்கார்ந்திருந்த பெருங் கூட்டத்தின் நடுவிலிருந்து கூல வாணிகன் எழுந்த தோரணையைக் கண்டதுமே ஏதோ விபரீதம் நேர்ந்திருக்கிறதென்ற தீர்மானத்துக்குள்ளானா னென்றால், கூலவாணிகனின் முகத்திலிருந்த தலையும் அவனிருந்த கோலத்தையும், கண்டதும் அபாரமான அதிர்ச்சிக்கும் சீற்றத்துக்கும் இடங்கொடுத்தான். தாறு மாறாகக் கழிக்கப்பட்டிருந்த உடைகளுடனும், முகத்தில் மிதமிஞ்சிய திகிலுடனும், கயிறுகளால் பிணைக்கப்பட்ட கைகளுடனும் எழுந்து நின்ற கூலவாணிகளையும் அவனைச் சுற்றிலும் வணிகர் உடையிலிருந்த கலிங்கவீரர் கூட்டத்தையும் பார்த்த கருணாகர பல்லவன், உண்மை யைக் கண்ணிமைக்கும் நேரத்தில் புரிந்துகொண்டு வாளை உருவ, கச்சையை நோக்கிக் கையைக் கொண்டுபோன சமயத்தில், தன் வாளும் மிகத் தந்திரமாகப் பின்புறத்தி லிருந்து உருவப்பட்டுவிட்டதையும், அந்த வாளை உருவி யவன் வெளியிட்ட பேய்ச் சிரிப்பு அந்தக் கூட்டத்தையே இடித்து விடுவதுபோல் ஒலித்ததையும் கவனித்து, ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றான். மறுகணம், தன்னை நோக்கி அப்படி நகைத்தவனைப் பார்க்கப் பின்புறம் திரும்பினான். அப்பொழுதுதான் சிரிப்பைச் சற்று அடக்கிக் கொண்ட கலிங்க மன்னன் பீமன், முகத்தில் பரவிய கேலிப் புன்னகையுடன் அவனெதிரே காட்சியளித்தான்.

எதை எதிர்பார்த்தாலும், கலிங்கத்து மன்னன் தலை நகரைவிட்டுப் பாலூர்ப் பெருந்துறைக்கு வருவானென்ப தைக் கனவிலும் எதிர்பார்க்காத கருணாகர பல்லவன், தன் அதிர்ச்சியையும் சீற்றத்தையும் சிறிதளவு உதறிவிட்டுச் சற்று வியப்பு மண்டிய வதனத்துடனேயே மன்னனை ஏறெடுத்து நோக்கினான். சோழ நாட்டு விஸ்தரிப்பு வெள்ளத்தில் எதிர்நீச்சல் போடும் உறுதி கலிங்கத்து மன்னன் முகத்திலிருந்ததையும், சில வருடங்களுக்கு முன்பு தான் சந்தித்த போதில்லாத சதைப் பிடிப்பும் அவனுக் குண்டாகி, பெயருக்குத் தகுந்தபடி உயரம் பருமனுடன் அவன் அசல் பீமனாகவே விளங்கியதையும் கண்ட கருணாகர பல்லவன், பலமும் யுக்தயும் நிறைந்த பெரு விரோதியின் முன்பு தானிருப்பதை உணர்ந்தான். கலிங் கத்து மன்னன் அந்தச் சமயத்தில் ராஜாீகத்துக்கான உடை யேதும் அணியாமல் சயனத்துக்குச் செல்லும் சாதாரண உடையே அணிந்திருந்ததையும், தன்னிடமிருந்து லாகவமாக உருவிவிட்ட தன் வாளைத் தவிர வேறு வாள் ஏதும் இல்லாமல் அவன் மிக அசட்டையாக நின்றிருந்ததையும் கவனித்த கருணாகர பல்லவன், அவன் நெஞ்சுரத்தைப் பெரிதும் வியந்தான். தன் வீரர்களோடு ஒரு வீரனாகப் பழகும் கலிங்கத்துப் பீமனின் வீரர்களை அவனிடமிருந்து எந்தவிதத்திலும் பிரிப்பதோ அவர்களில் யாரையும் தன் உதவிக்கு இணைப்பதோ முடியாத காரியமென்பதும் வெட்ட வெளிச்சமாயிற்று இளைய பல்லவனுக்கு. உதடு களும் கன்னங்களும் தடித்து நின்றதால் ஓரளவு பயங்கர மாகத் தெரிந்த பீமனது முகத்தில் பளிச்சிட்ட கண்கள் தன்னை ஊடுருவிப் பார்ப்பதையும் புரிந்நகொண்ட இளையபல்லவன் தன்னைத் திடப்படுத்திக்கொள்ள பீமனிடமிருந்து திரும்பிக் கூலவாணிகளனின் கூட்டத்தையும் அங்கு குழுமியிருந்த கலிங்கத்து வீரரையும் கவனித்தான்.

அரண்மனையையும் தோற்கடிக்கும் சிறப்பு வாய்ந்த கோடிக்கரைக் கூலவாணிகன் சேந்தனின் பெருமாளிகைக் கூடம் சுமார் ஆயிரம் பேருக்கு ஒரே காலத்தில் விருந்தளிக் கக்கூடிய அளவுக்கு விசாலமாயிருந்தது. அங்காங்கு ஒவ்வொரு மூலையிலுமிருந்த திண்டு திவாசுகளும் கணக் கெழுதும் பெட்டிகளும், விதவிதமான சரக்கு மூட்டை களும் பலதரப்பட்ட வியாபாரம் அங்கு நடப்பதை உணர்த்தின. அந்த மாளிகைக் கூடத்தின் மேற்கூரையில் பலநாட்டு ஓவியங்களால் தீட்டப்பட்ட வண்ணச் ௫த்திரங் கள், கூலவாணிகனின் செல்வச் சிறப்புக்கு அத்தாட்சியாய் விளங்கின. இத்தனைச் செல்வச் சிறப்பிருந்தும், வர்த்தக விஸ்தரிப்பிருந்தும், அரசியலில் சிக்கிய ஒரே காரணத்தால் கூலவாணிகன் அன்று துன்புறுத்தப்பட்டு, கைகள் பிணைக்கப்பட்டு நின்ற பரிதாபக் கோலத்தைக் கண்ட கருணாகர பல்லவன், கூலவாணிகன் சேந்தனிடம் பெரும் அனுதாபமே கொண்டான். பீமன் கையில் வகையாய்ச் சிக்கிவிட்ட தனக்கும் கூலவாணிகனுக்கும் என்ன கதி இடைக்குமென்பதைச் சந்தேகத்துக்கடமின்றிப் புரிந்து கொண்ட இளையபல்லவன், மேற்கொண்டு நடப்பது நடக்கட்டுமென்று பீமனை நோக்கி. மீண்டும் திரும்பி, “கலிங்கத்து மன்னரை இங்கு நான் எதிர்பார்க்கவில்லை” என்று சம்பாஷணையில் மெள்ள இறங்கினான்.

பீமனுடைய பெரும் மீசையும் கருத்த பெரிய புருவங் களும் ஆச்சரியத்துக்கு அறிகுறியாக ஒருமுறை எழுந்து தாழ்ந்தன. “தாங்கள் எதிர்பார்க்காத சம்பவங்கள் பல நிகழ்ந்திருக்கன்றன இந்த இரவில்!” என்று பதிலுக்குச் சொற்களை உதிர்த்த அவன் உதடுகளில் புன்முறுவ லொன்றும் படர்ந்தது.

மன்னன் பதிலிலிருந்து அவன் தன்னைப்பற்றிய பல விவரங்களை அறிந்திருக்கிறானென்பதை இளையபல்லவன் உணர்ந்து கொண்டானேயொழிய, அந்த விவரங்கள் என்னவாயிருக்கக் கூடும் என்பதை அறியாததால் அவற் றைப் பற்றித் தெரிந்துகொள்ளும் நோக்கத்துடன், “உண்மை தான்! நள்ளிரவில் வணிகர் விடுதிக்கு மன்னர் வருவது நான் எதிர்பார்க்காத சம்பவம்தான். இத்தகைய விஜயத் துக்குக் கலிங்கத்தின் சம்பிரதாயம் இடம் கொடுக்கிறதா?” என்று வினவினான்.

பீமன் முகத்தில் அலோசனை படர்ந்தது. ஏதோ யோசித்துவிட்டுச் சொன்னான். “சம்பிரதாயம் இடம் கொடாதுதான். ஆனால் எல்லாம் வணிகர் செய்யும் வாணிபத்தைப் பொறுத்தது.

“பீமன் செய்த போலிச் சிந்தனையும், அவன் கூறிய சொற்களின் பொருளும் புரிந்துதானிருந்தது இளைய பல்லவனுக்கு. இருப்பினும் புரியாதவன்போல், “நீங்கள் சொல்வது விளங்கவில்லை” என்று பதில் கூறினான்.

“வாணிபத்தில் பலவிதமுண்டு” என்று சுட்டிக்காட்டி மெள்ள நகைத்தான் பீமன்.

“மன்னருக்கு வாணிபத்திலும் நல்ல பரிச்சயமுண்டு போலிருக்கிறது?” என்று இளைய பல்லவன் பதிலுக்கு இகழ்ச்சி நகை புரிந்தான்.

நிராயுதபாணியாகக் கலிங்கத்து வீரர்கள் மத்தியில் சிறைப்பட்டு நின்ற சமயத்திலும் இளையபல்லவன் இகழ்ச்சி நகை புரிந்ததையும், சர்வசகஜமாகப் பேசத் துவங்கிவிட்டதையும் கண்ட பீமன், அவன் நெஞ்சுரத்தைப் பெரிதும் வியந்தான். அந்த வியப்பு குரலிலும் ஓரளவு தொனிக்கப் பேச முற்பட்டு, “வாணிபத்திலும் பரிச்சயம் தேவையாயிருக்கறது, இளைய பல்லவரே! காரணம் தெரியுமா?” என்று வினவினான்.

“தெரியாது” என்றான் இளையபல்லவன்.

“இதில் கஷ்டமேதுமில்லை.

வாணிபத்தில் பலவகை யுண்டென்று முன்னமே தான் குறிப்பிடவில்லையோ?”

“ஆம். குறிப்பிட்டீர்கள் “

“பொருள்களில் செய்யும் வாணிபம் ஒருவகை.

“ஓகோ?”

“அரசியலில் வாணிபம் மற்றொரு வகை”

“அப்படியா!”

“அரசியலை வாணிபத்திலும், வாணிபத்தில் அரசிய லையும் கலப்பதால் பல தொல்லைகள் உண்டாகின்றன” என்று கூறிய பீமன், புன்முறுவல் செய்தான்.

இளையபல்லவன் இதற்கு ஏதும் பதில் சொல்லாது போகவே, சற்றுப் பெரிதாகவே நகைத்த கலிங்கத்து மன்னன், “ஏன் பதிலில்லை, இளைய பல்லவரே! வணிகர் கள் அரசியலில் கலக்கும்போது மன்னரும் வாணிபத்தில் கலக்கத்தானே வேண்டியிருக்கிறது? இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் சம்பிரதாயத்தை மட்டும் கவனிக்க முடியுமா? முடியாது முடியாது. வாணிபத்திலும் சோழ நாட்டிலிருந்து வரும் வணிகரிடமும் நாம் சிறிது சுவனத்தைச் செலுத்தத் தான் வேண்டியிருக்கிறது. செலுத்துவதில் பலனுருக்கிறது” என்றும் கூறினான்.

“என்ன பலன்?” இளையபல்லவன் சற்று நிதானத்தை இழந்து இரைந்தே கேட்டான் இந்தக் கேள்வியை.

நிதானத்தைச் சிறிதும் இழக்காமலே பதில் சொன் னான் பீமன். “அநபாயச் சோழரின் இணைபிரியாத தோழரான இளைய பல்லவரின் சந்திப்பு எனக்குக் கடைத்திருப்பதே பெரும் பலனல்லவா?” கடட ச்சி ட

“இதற்குத் தாங்கள் இத்தகைய முயற்சி எடுத்திருக்க வேண்டியதில்லை” என்று சற்றுக் கோபத்துடன் கூறினான் இளையபல்லவன்.

“அப்படியா!” என்று கேட்ட பீமனின் முகத்தில் ஆச்சரிய ரேகை படர்ந்தது.

“ஆம் மன்னவா! தங்களைக் காணவே நான் கலிங்கம் வந்தேன். இத்தனை வீரர்களை அனுப்பிப் பவனி நடத்தா விட்டாலும் தங்களை நாடிக் கண்டிப்பாய் வந்திருப்பேன்” என்றான் இளையபல்லவன்.

“ஆம், ஆம், மறந்துவிட்டேன்” என்றான் பீமன்.

“எதை மறந்துவிட்டீர்கள்? “.

பீமன் சொன்ன பதில் ஒருவிநாடி பேரதிர்ச்சியைக் கொடுத்தாலும் அடுத்த விநாடி அந்த அதிர்ச்சி மறைந்தது இளையபல்லவனிடமிருந்து. “ஆம்! ஆம். மறந்துவிட்டேன். வீரராஜேந்திர சோழதேவரிடமிருந்து நீங்கள் சமாதான ஓலை கொண்டு வந்திருப்பதை மறந்துவிட்டேன்” என்று பீமனின் பதிலைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த இளைய பல்லவன், “இந்த விவரம்தான் சுங்க அதிகாரிக்கே தெரிந் இருந்ததே. மன்னனுக்குத் தெரிவதில் வியப்பென்ன?” என்று தன்னைத்தானே சமாதாளப்படுத்திக் கொண்டான். அத்துடன் சற்றுக் கோபத்துடன் கேட்கவும் செய்தான். “நான் சமாதான ஓலை கொண்டு வந்ததை அறிந்துமா என்னைச் சிறைப்படுத்தினீர்கள்?” என்று.

பீமன் முகத்தில் வருத்தக் குறி தோன்றியது. “சிறைப் படுத்திக் கொண்டு வருவது உசிதமில்லைதான். ஆனால் சமாதானத் தூதர்கள் இறங்கும் துறைமுகச் சுங்கச் சாவடியில் அந்நாட்டு மன்னர்களைத் தூஷிப்பதும், வீரர் துரத்த ஓடுவதும், மாளிகையில் பதுங்குவதும் உசிதமா என்பதை எண்ணிப் பாருங்கள்!” என்று வருத்தத்துடன். கூறுபவன் போல் பாசாங்கு செய்த பீமன் உண்மையில் தன்னைப் பார்த்து நகைக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டான் இளையபல்லவன். தவிர தான் பாலூர்ப் பெருந்துறையில் காலெடுத்து வைத்த விநாடியிலிருந்து தன் நடவடிக்கைகள் பலவற்றையும் கலிங்க மன்னன் தெரிந்து கொண்டிருப்பதை உணர்ந்த கருணாகர பல்லவன், தன் இருப்பிடத்தை அவன் எப்படிக் கண்டுபிடித்தானென்பதை மட்டும் புரிந்துகொள்ள முடியாமல் சிந்தை குழம்பினான். சுங்கச் சாவடி நிகழ்ச்சியைக் காவல் வீரர்களிடமிருந்து அறிந்திருக்கலாம். ஊருக்குள் ஏற்பட்ட சண்டை நிகழ்ச்சி யையும், துரத்திய வீரர்கள் சொல்லியிருப்பார்கள். ஆனால் குணவர்மன் தங்கியிருந்த மாளிகையில் ஒளிந்ததை இவன் எப்படி. அறிந்தான்?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்ட இளைய பல்லவன். பதிலேதும் கிடைக்காமல் பீமனை நோக்கினான்.

கருணாகர பல்லவனது எண்ணத்தில் சுழன்ற ஒவ்வொன்றையும் புரிந்துகொண்ட பீமன் சொன்னான் “இளையபல்லவரே! ஆபத்திலிருப்பவன் புத்தி எப்பொழு தும் சுறுசுறுப்புடன் வேலை செய்கிறது. கலிங்க நாடு ஆபத்திலிருக்கிறது. ஆகவே அதன் மன்னன் விழிப்புட னிருக்கிறான். கலிங்கத்தின் துறைமுகங்களைக் கைப்பற்றிக் கொண்டு சோழ நாடு அளிக்க விரும்பும் போலிச் சமா தானத்தைத் தென்கலிங்கமும் ஏற்காது, வடகலிங்கமும் ஏற்காது. ஆகவே சோழர் போர் தொடுப்பார்கள். அத்தகைய நிலையில் சோழ நாட்டிலிருந்து படைகள் வந்திறங்க இருக்கும் கலிங்கத்தின் முதல் துறைமுகமான பாலூர்ப் பெருந்துறையில் நாங்கள் சர்வ எச்சரிக்கையுட னிருப்பது இயற்கைதானே? அதன் விளைவாகத்தான் இங்கிருக்கும் தமிழ் ஒற்றர்களையும், இங்கு வரும் சோழ நாட்டுப் படைத் தலைவர்களையும் கண்காணிப்புச் செய்கிறோம். நீங்கள் பாலூர்ப் பெருந்துறையில் கால் வைத்த விநாடி முதல், கலிங்கத்தின் ஒற்றர்கள் உங்களைக் கவனித்து வருகிறார்கள். நீங்கள் வெளிநாட்டுப் பிரமுகர் வீதியில் மறைந்ததும் அந்த வீதி முழுதும் ஒற்றர் பார்வைக்குள் அகப்பட்டது. தவிர...

“இப்படிச் சம்பாஷணையை அரைகுறையாக விட்ட பீமன் மீண்டும் இளநகை கொண்டான். அந்த இளநகை யில் பெரும் பொருள் சிக்கியிருப்பதை உணர்ந்த இளைய பல்லவன், “ஏன் பேச்சைப் பாதியில் நிறுத்திவிட்டீர்கள்? எதையோ சொல்ல வந்தீர்களே?” என்று கேட்டான்.

சொல்ல வந்ததைச் சொன்னான் பீமன். அதைக் கேட்டதும் மீண்டும் திகைப்பும் அதிர்ச்சியும் சூழ்ந்து கொண்டன இளையபல்லவனின் சித்தத்தை.

“ஆம் ஆம். பேச்சைப் பாதியில்தான் நிறுத்திவிட்டேன். நான் சொல்ல வந்தது” என்ற பீமனை இடை மறித்த இளையபல்லவன், “நீங்கள் சொல்ல வந்தது?” என்று வினவினான்.

“ஒற்றர்கள் கண்பார்வையிலிருக்கும் தெருவில், புறா மூலம் தூது விடுவது அத்தனை சரியல்ல என்று நினைக்கிறேன்” என்றான் பீமன்.

இதைக் கேட்டதும் சில விநாடிகள் ஸ்தம்பித்து நின்று விட்டான் இளைய பல்லவன். அவன் திகைப்பைக் கண்ட கலிங்கத்துப் பீமனது முகத்தில் இகழ்ச்சிப் புன்முறுவல் பெரிதாகப் படர்ந்தது. “நீங்கள் மறைந்த வீதியைப் பற்றிச் செய்தி கிடைத்ததும் அதே வீதியைக் கண்காணிக்க ஒற்றர் களை ஏவினேன். தூதுப்புறா அந்த வீதியில் ஒரு மாளி கையை நோக்கிப் பறந்ததாகச் செய்தி கிடைத்ததும் மற்றதை ஊ௫த்துக்’ கொண்டேன். இதற்குப் பிரமாத ஆராய்ச்சி தேவையில்லை. இளைய பல்லவரே” என்றும் விளக்கினான்.

இளையபல்லவனின் சித்தம் குழப்பத்தில் ஆழ்ந்து கடந்தது. குழப்பம் நிரம்பிய வதனத்துடனேயே பீமனை ஏறெடுத்து நோக்கிய இளையபல்லவன், “புரிந்தது மன்னவா! தங்கள் ஒற்றர் கண்காணிப்புத் திறன் புரிந்தது. இனி என்னை என்ன செய்வதாக உத்தேசம்?” என்று வினவினான்.

“மூன்றாவது ஜாமம் நெருங்குகிறது” என்று பதில் சொன்னான் பீமன்.

“ஆம்” என்றான் இளையபல்லவன்.

“காலை வரை எந்தத் தண்டனையும் தங்களுக்கு விதிப்பதற்கில்லை.

“ ஏன்?”

“நீதி மண்டபத்தில் விசாரிக்காமல் தண்டனையிடும் வழக்கம் கலிங்கத்தில் கிடையாது.

“நீதிக்கு மதிப்புக் கொடுக்கிறீர்களா?”

“பெருமதுப்புக் கொடுக்கிறோம். பரம விரோதி களையும் தீர விசாரித்தே தண்டனை கொடுக்கிறோம். ஆகவே தாங்கள் இன்றிரவு நிம்மதியாக உறங்கலாம்” என்று கூறிய பீமன் சரேலெனத் தன் வீரர்களை நோக்கத் திரும்பி, “கலிங்கத்தின் வலைக்குள் தானாக வந்த இந்தப் பல்லவச் சிங்கத்தையும், வேவு பார்க்கும் அந்தக் கூல வாணிகனையும் சிறையில் அடையுங்கள்!” என்று ஆணை யிட்டு, “வருகிறேன் இளையபல்லவரே! நாளை நீதி மண்ட பத்தில் சந்திப்போம்” என்று அந்த வாலிப வீரனிடம் விடையும் பெற்றுக்கொண்டு வாயிலை நோக்கி நடந்தான்.

மன்னன் ஆணைப்படி கலிங்கத்தின் வீரர்கள் கூல வாணிகனையும் இளைய பல்லவனையும் புரவிகளில் ஏற்றிச் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றார்கள். பாலூர்ப் பெருந்துறையின் சிறைச்சாலை பெருவணிகர் வீதிக்கு இரண்டு வீதிகள் தள்ளியே இருந்தபடியால் வெகு சிக்கிரம் அவர்கள் சிறைக்கு வந்தார்கள். பெரு மதில் களால் சூழப்பட்டு, பல வாயில்களையுடைய அந்தச் சிறைக் கூடத்தை ஏறிட்டுப் பார்த்த கருணாகர பல்லவன் அதிலிருந்து தப்புவது யாருக்கும் நடவாத காரியமென்ப தைப் புரிந்துகொண்டான். தவிர, அவனும் கூலவாணிக னும் சேர்த்தே தள்ளப்பட்ட சிறையின் பெரிய அறையைச் சுற்றிலுமிருந்த வலுவான இரும்புச் சட்டங்கள் சிறையி லிருந்து எமனும் தப்ப முடியாதென்பதை நிரூபித்தன வாகையால் ‘விஷயம் நாளையுடன் முடிந்துவிடும்” என்ற முடிவுக்கே வந்தான் இளையபல்லவன். ஆனால் விஷயம் அத்தனை எளிதில் மூடிவதாயில்லை. முடிவதற்குச் சரித்திரமும் இடம் கொடுக்கவில்லை. மறுநாள்காலை அவன் அருந்துவதற்குக் கொண்டுவரப்பட்ட அதிசய உணவும் இடம் கொடுக்கவில்லை. உணவைக் கண்டு கூல வாணிகன் அதை வெறுப்புடன் நோக்கினான். ஆனால் இளைய பல்லவன் விழிகளில் வெறுப்பு இல்லை, விருப்பே படர்ந்து நின்றது. சில ஜாமங்களில் உயிர் துறக்கப் போகும் இளையபல்லவன் உணவைக் கண்டதும் விருப்பம் காட்டியது பெரும் வெறுப்பாயிருந்தது கூலவாணிகனுக்கு. “இறக்கப் போகிறவனுக்கு இவ்வளவு விருப்பமா உணவில்? சே! இவன் ஒரு மனிதனா” என்று அலுத்துக் கொண்டான். ஆனால் இளைய பல்லவன் விருப்பத்துக்குக் காரணமா யிருந்தது உணவு மட்டுமல்ல என்பதைக் கூலவாணிகன் புரிந்து கொள்ளவில்லை.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் - 10

விமோசனச் சீலை

சிந்து நேரத்துக்கெல்லாம் சிறைக் காவலர் தொடரப் பாலூர் நீதி மண்டபம் சென்று, சம்பிரதாய விசாரணைக்கு இலக்காகி ஊரின் ஒரு மூலையிலிருந்த கொலைக்களத்தில் தலையிழக்கவிருந்த கருணாகர பல்லவன், அதைப்பற்றித் துனையளவும் சிந்திக்காமல் அன்று காலை கொண்டு வரப்பட்ட உணவுத் தட்டின் மேலிருந்த துணியை அகற்றி, மிக ஜாக்கிரதையாக மடித்து வைத்து உணவைச் சுவைத்துச் சுவைத்து உண்ணத் தொடங்கியதைக் கண்ட கூலவாணிகன் அவனை மிதமிஞ்சிய வெறுப்புடனேயே நோக்கினான். அந்த வெறுப்பு அப்பொழுது துவங்கிய தல்ல. முதல் நாள் மூன்றாம் ஜாமத்தில் சிறையில் தள்ளப் பட்டதும் சிறையிலிருந்த மஞ்சத்தைத் தட்டிவிட்டுக் கருணாகர பல்லவன் படுக்க ஏற்பாடு செய்தவுடனேயே ஏற்பட்ட வெறுப்பு அது. சிறையில் இருவரையும் காவலர் தள்ளியதும், காவலரில் ஒருவன் கூலவாணிகனின் கைக் கட்டுகளை அவிழ்த்துவிட்டதன்றி, அந்தச் சிறை, பிரமுகர் கள் தங்கும் சிறையென்பதையும், ஏதாவது தேவையாயிருந்தால் சொல்லலாமென்று பணிவுடன் கேட்டான். கூலவாணிகன் அதற்கேதும் பதில் சொல்லாவிட்டாலும் கருணாகர பல்லவன் மட்டும், அப்பொழுது தேவையேது மில்லையென்றும், ஏதாவது வேண்டும் பட்சத்தில் குரல் கொடுப்பதாகவும் கூறியதைக் கேட்டதுமே கசப் படைந் தான் கூலவாணிகன். ஆகவே சிறைக் காவலர் சிறையைப் பூட்டிச் சென்றதும் கருணாகர பல்லவனை நோக்கி வினவினான். “ஏன்? தங்களுக்கு இந்த இடத்தில் செளகரி யம் ஏதாவது தேவையாயிருக்கிறதா?”

கருணாகர பல்லவன் ஒருமுறை சிறையைச் சுற்றிக் கவனித்தான். ராஜபிரமுகர்கள் தங்குவதற்கு வேண்டிய சகல செளகரியங்களும் அங்கிருப்பதையும், மஞ்சங்களில் கூடப் பஞ்சணைகள் இருப்பதையும் பார்த்து, “எனக்குத் தேவையேதுமில்லை. உனக்கு?” என்று வினவினான்.

சிறையிலும் செளகரியம் தேடும் இளையபல்லவனை ஹெறுப்புடன் நோக்கிய கூலவாணிகன், தனக்கு ஏதும் தேவையில்லையென்பதைத் தலையை ஆட்டிய தோரணை யாலேயே தெரிவித்துவிட்டு, கிழிந்த தன் ஆடைகளைச் சிறிது சரிசெய்து கொண்டதன்றி, கயிறுகள் கட்டியிருந்த தால் நைந்து போயிருந்த மணிக்கட்டுகளையும் கவனித்துக் கொண்டான். அவற்றைக் கவனித்த கருணாகர பல்லவனும் கூலவாணிகனை நோக்கி, “சேந்தா! கலிங்க வீரர்கள் உன்னை மிகவும் துன்புறுத்தியிருக்கிறார்கள் போலிருக்கிறதே?” என்று அனுதாபத்துடன் வினவினான்.

“சோழநாட்டு ஒற்றனிடமிருந்து உண்மையை வர வழைக்க வேறு என்ன செய்வார்களென்று நினைக்கறீர் கள்?” என்று வினவினான் கூலவாணிகன், பதிலுக்கு.

“உன்மீது இவர்களுக்கு எத்தனை நாள்களாகச் சந்தேகம்?” என்று மீண்டும் வினவினான் கருணாகர பல்லவன்.

“இங்கு வரப்போவதாக நீங்கள் எனக்கு ஓலை யனுப்பியது எப்பொழுது?”

“பத்து நாள்களுக்கு மேலாகிறது.

“அந்தப் பத்து நாள்களாக என் மாளிகைமீது கலிங்கத் தின் ஒற்றர்கள் கண் வைத்திருக்கறார்கள்.

“தமிழ் வணிகர்களையும் பிரமுகர்களையும் சிறையில் பிடித்து அடைத்து வைக்கும் வேலை எத்தனை நாள்களாக நடக்கிறது.

“மூன்று நாள்களாக.

“அதாவது மன்னன் பீமன் பாலூர் வந்த நாளாக.

“பீமன் வந்து மூன்று நாள்களாகின்றனவா?”

“ஆம். மிக ரகசியமாக வந்தான். இல்லாவிடில் நான் எச்சரிக்கையடைந்திருப்பேன். மன்னன் வருவதற்கு அறிகுறி யாகத் தாரைகள் ஊதப்படவில்லை. சங்கங்கள் சப்திக்க வில்லை. முதலில் ஊருக்குள் வரவேண்டிய குதிரைப் படைகளும் வரவில்லை. பீமன் வந்தது, நேற்று வரை யாருக்குமே தெரியாது. திடீரென நேற்று, மாளிகையில் என்னை வீரர்களுடன் வந்து பீமனே சிறைப்படுத்தித் துன்புறுத்திய பின்புதான் எனக்கே தெரியும்.”

“பீமன் வந்து மூன்று நாள்களாயின என்று சொன் னாயே சேந்தா, அதெப்படித் தெரியும் உனக்கு?”

“பீமனே சொன்னான், ‘நான் வந்து மூன்று நாள்களாக உன்னைக் கவனித்து வருகிறேன்” என்று.

“இளையபல்லவன் சிறிது நேரம் சிறையில் அப்படியும் இப்படியும் உலாவியபடி சிந்தனையில் ஆழ்ந்தான். திடீரென்று மெளனத்தைக் கலைத்துக் கொண்டு, “நான் வந்திருப்பதை எப்படியறிந்தான் பீமன்?” என்று வின வினான் சேந்தனை நோக்கி,

“அது என் குற்றம் இளைய பல்லவரே! தாங்கள் அனுப்பிய ஓலையை என் பணப்பெட்டியில் ரகசிய அறையில் வைத்திருந்தேன். அந்த அறையைத் திறக்கும் முறை எனக்குத்தான் தெரியும் என்று மனப்பால் குடித் திருந்தேன். ஆனால் சோதனையின்போது நிமிட நேரத்தில் பீமன் அந்தக் கள்ள அறையைத் திறந்தான். பீமன் இந்தப் பிறவியில்தான் மன்னன். சென்ற பிறவியில் பெட்டி திறக்கும். திருடனாயிருந்திருக்க வேண்டும்” என்று அலுத்துக்கொண்டு கூறினான் சேந்தன்.

இளையபல்லவன் முகத்தில் கவலைக்குறி படர்ந்தது. “அந்த ஓலையில் கடாரத்தின் மன்னன் குணவர்மனைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேனே?” என்றான், குரலிலும் கவலை பாய.

“ஆம், குறிப்பிட்டிருந்தீர்கள்” என்றான் சேந்தன்.

“அப்படியானால் குணவர்மன் பாலூரில் இருப்பது பீமனுக்குத் தெரியும்?”

“தெரிந்திருக்க வேண்டும்.

“அவனிருக்குமிடம்?”

“அதுவும் தெரிந்திருக்க வேண்டும்.

“அப்படியானால், சோழநாட்டின் உதவியை நாடி வந்திருக்கும் குணவர்மனை ஏன் பீமன் சிறைப்படுத்த வில்லை?”

“அதுதான் எனக்கும் புரியவில்லை.

“குணவர்மனையும் காஞ்சனாதேவியையும் சிறைப் படுத்தாமல் விட்டு வைப்பதற்கு அழ்ந்த அரசியல் காரணங்கள் இருக்கவேண்டும் என்று இளையபல்லவன் முடிவுக்கு வந்திருந்தானானாலும், அந்தக் காரணங்கள் என்னவாயிருக்கக் கூடும் என்பது புரியவில்லை அவனுக்கு. அவர்களுக்கும் தன்னைப்போல் பேராபத்துக் காத்திருக் கிறது என்பதை மட்டுமே புரிந்துகொண்ட இளைய பல்லவன், பீமனிடம் அகப்பட்டால் காஞ்சனாதேவியின் கதி என்னவாகுமோ என்பதை நினைத்துத் இல் கொண்டான். அந்தத் திகிலுடன் அநபாயனைப் பற்றிய எண்ண மும் கலந்துகொள்ளவே பல விவரங்கள் விளங்காமல் குழம்பிய இளையபல்லவன், அவற்றைப் பற்றிச் சேந்த னிடமே விளக்கம் கேட்க முற்பட்டு, “சேந்தா!” என்று அவனை விளித்தான்.

அப்பொழுதும் மனவேதனைப் பட்டுக் கொண்டிருந்த சேந்தன் பதிலுக்கு, “ஹும்” கொட்டினான்.

அநபாயச் சோழரையும் பீமன் சிறைப்படுத்தினா னாமே. தெரியுமா உனக்கு?” என்று வினவினான் கருணாகர பல்லவன்.

“தெரியும்” என்றான் கூலவாணிகன் பெருமூச்சு விட்டு.

“அவரையும் இந்தச் சிறையில்தானே அடைத்திருப்பார்கள்?”

“இதில்தான் அடைத்திருக்க வேண்டும்.

இந்த ஊரில் வேறு சிறை கிடையாது.

“இந்தச் சிறையைப் பார்த்தாயா சேந்தா!” என்று ஆச்சரியத்துடன் கேட்ட இளைய பல்லவன், சிறையையும் சாளரத்தின் மூலம் தெரிந்த சாளரத்தின் வெளிப்புறத் தையும் சுட்டிக் காட்டினான்.

அவன் சிறையை ஆராய்ந்ததால் வெறுப்புக் கொண்ட கூலவாணிகன், “இப்பொழுதே அராய்ந்துவிடுங்கள் சிறை யின் அமைப்பை. நாளை நடுப்பகலுக்குப் பின்பு நமது கண்கள் எதையும் ஆராய முடியாது” என்றான்.

அவன் சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளா மலே பேசிக்கொண்டு போனான் கருணாகர பல்லவன். “இந்தச் சிறையின் அமைப்பை நன்றாகப் பார் சேந்தா! சுற்றிலும் பெரிய இரும்புச் சட்டங்கள், சிறையின் ஓவ் வொரு கூடத்திலும் ஏராளமான வீரர்கள். சாளரத்துக்கு வெளியேயும் பார். அதோ தெரியும் உயர்ந்த மதில் பெரும் கோட்டையின் மதில்களைப் போலிருக்கிறது. அவற்றை எவனும் தாண்டிக் கடக்க முடியாது. தவிர, சிறையின் அறைகளுக்கும் அந்த மதில்களுக்கும் இடையேயுள்ள வெளிப்பகுதி குதிரை வீரர்களால் காக்கப்பட்டிருக்கிறது.

“இப்படிப் பேசிக்கொண்டு போன இளையபல்லவனை இடைமறித்த கூல்வாணிகன், “இந்தச் சிறையிலிருந்து யாரும் தப்பமுடியாது என்பதற்குக் காரணம் கூறுகிறீர் களா?” என்று இகழ்ச்சியுடன் கேட்டான்.

இளையபல்லவனின் கண்கள் கூலவாணிகன் முகத் தில் நன்றாகப் பதிந்தன. குரலை மிகவும் தாழ்த்திக் கொண்டு சொன்னான் இளையபல்லவன், “சேந்தா, இந்தச் சிறையிலிருந்து போரிட்டு யாரும் தப்ப முடியாது.

“வெட்ட வெளிச்சமாகத் தெரிந்த அந்த உண்மையைத் தெரிவிக்க அத்தனை ரகசியமென்னவென்பதை அறியாத கூலவாணிகன், “அது தெரிந்த விஷயம்தானே?” என்றான்.

“ஆனால்...” என்று கூறி அப்புறமும் இப்புறமும் கவனித்தான் இளையபல்லவன்.

“ஆனால்?”

“இதிலிருந்து அநபாயர் தப்பியிருக்கிறார்.

“கூலவாணிகனின் முகத்தில் வியப்புக்குறி படர்ந்தது. “ஆமாம், மறந்துவிட்டேன். எப்படித் தப்பினார்?” என்று கேட்டான், வியப்புக் குரலிலும் ஒலிக்க.

“அதுதான் எனக்கும் புரியவில்லை. இதிலிருந்து அவர் போரிட்டுத் தப்பியிருக்க முடியாது.

“வேறெப்படித் தப்பியிருக்க முடியும்!”

“தந்திரத்தால் தப்பியிருக்க வேண்டும்.

“என்ன தந்திரமாயிருக்கும்?”

“எனக்குப் புரியவில்லை. ஆனால் யாரோ நண்பர்கள் உதவி அவருக்கு இருந்திருக்க வேண்டும்.

“ஆம்.

ஆம், உண்மை.

“அது மட்டுமல்ல சேந்தா! அந்த நண்பர்கள் எண்ணிக்கையும் கணிசமாயிருக்க வேண்டும்.

“அதெப்படித் தெரிகிறது?”

“சிறையிலிருந்து தப்பிய பின்பு இன்னும் அவர் பாலூர்ப் பெருந்துறையில் சுதந்திரமாக உலாவுகறார். அது மட்டுமல்ல, புறா மூலம் குணவர்மனுக்குத் தூதும் அனுப்பியிருக்கிறார். அநபாயருக்கு இவ்வூரில் பக்கபலம் நிரம்ப இருக்கிறது, சந்தேகமில்லை.

“இதைக் கேட்டதும் வியப்புக்குள்ளான கூலவாணிகன், “என்ன தூதுப் புறாவா! செய்தியா?” என்று ஆச்சரி யத்துடன் வினவினான். சிறிது நேரத்துக்கு முன் பீமனும் இளையபல்லவனும் புறாவைப் பற்றிப் பேசிக்கொண்ட தைக் கூலவாணிகனும் கேட்டுக் கொண்டுதான் இருந்தானெனினும் அப்போதிருந்த குழப்பமான மனநிலையில் அவன் அதைச் சரியாக மனத்தில் வாங்கவில்லை.

இளையபல்லவன், “ஆம் சேந்தா! குணவர்மனுக்குப் புறா மூலம் தூது வந்தது. அதில் அநபாயரே கையொப்ப மிட்டிருந்தார்” என்றான்.

“அநபாயரே கையொப்பமிட்டிருந்தாரா?”

“ஆம் சேந்தா!”

“என்ன கண்டிருந்தது ஓலையில்?”

“குணவர்மனை மூன்று நாள்கள் பொறுத்திருக்கும்படி கண்டிருந்தது. மூன்று நாள்கள் அந்த மாளிகையில் எது நடந்தாலும் கவனிக்க வேண்டியதில்லை யென்றும் எழுதியிருந்தது.

“இம்முறை கூலவாணிகன் தீவிர சிந்தனையில் ஆழ்ந் தான் “மூன்று நாள்கள்! மூன்று நாள்கள்!” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டான்.

கூலவாணிகனின் வருத்தத்தையும் பெருமூச்சையும் கவனித்த இளையபல்லவன் கேட்டான் “மூன்று நாள் களுக்கென்ன சேந்தா?”

“மூன்று நாள்கள் இந்தப் பாலூர்ப் பெருந்துறையில் அநபாயர் இருக்கப்போகிறார் என்பது தெளிவாக வில்லையா?” என்று வினவினான் சேந்தன்.

ஆம்.

“அப்படியானால் அந்த மூன்று நாள்களில் ஒவ்வொரு வினாடியும் அவர் உயிர் ஆபத்திலிருக்கிறது.

“ஆபத்துக்கு அஞ்சும் சுபாவம் அநபாயருக்குக் கிடையாதென்பது உனக்குத் தெரியாதா?”

“தெரியும். அதனால்தான் நான் அஞ்சுகிறேன்.

“நீ அஞ்சுவானேன்?”

“சோழநாட்டு நலனில் அக்கறையுள்ள யாரும் அஞ்சு வார்கள்.

“என்ன அச்சம் அதில்?”

கூலவாணிகன் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் இளைய பல்லவனை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றான். பிறகு சொன்னான் “நான் வணிகன் மட்டுமல்ல, இளைய பல்லவரே!”

“ஆம்.” என்று தலைஅசைத்தான் இளையபல்லவன், கூலவாணிகன் எதைச் சொல்ல உத்தேசிக்கிறான் என்பதை அறியாமல்.

“நினைவு தெரிந்த நாளாக ஒற்றன் வேலையும் செய்கிறேன்.

“ஆம், சேந்தா.

“அகவே சோழநாட்டு அரசியல் நிலை, படைத் தலைவர்களைவிட எனக்கு நன்றாகத் தெரியும்.

“ஓகோ!”

“நீங்கள் பெரும் வீரர், இணையற்ற படைத்தலைவர். ஆனால் உங்களுக்கு மக்கள் மனம் தெரியாது. அவர் களுடன் சதா உலவிப் பழகும் நான்தான் அறிவேன்.

“சரி, சேந்தா.

“சோழநாட்டு மக்கள் என்ன விரும்புகிறார்கள் தெரியுமா, படைத் தலைவரே?”

“சொல்.

“அநபாயரை அரியணையில் எதிர்பார்க்கிறார்கள்.

“திடீரெனக் கூலவாணிகன் வீசிய அந்தச் சொல் சரத் தால் தாக்குண்டவனைப் போல் சில விநாடிகள் அசை வற்று நின்றுவிட்டான் இளையபல்லவன். பிறகு கூலவாணி கனை நோக்கி, சேந்தா, வீரராஜேந்திர சோழதேவர் இப்பொழுதுதானே அரியணையில் ஏறியிருக்கிறார்” என்று வினவினான்.

ஆம், இளையபல்லவரே” என்றான் கூலவாணிகன்.

“அப்படியிருக்க அநபாயர் எப்படி அரியணை ஏற முடியும்?”

“மக்கள் அவரை விரும்புகிறார்கள்.

“வீரராஜேந்திரரிடம் பக்தியில்லையா மக்களுக்கு?”

“இருக்கிறது. அவர் வீரத்தில் இருக்கிறது. ஆனால்...?”

“ஆனால், என்ன சேந்தா?”

“அக்கம்பக்கத்து நாடுகள் விஷயத்தில் அவர் கடைப் பிடிக்கும் கொள்கையை மக்கள் ஏற்கவில்லை. உதாரண மாக, வேங்கியில் சாளுக்கிய விஜயாதித்தனை அரசாள விட்டி ருப்பது பிடிக்கவில்லை. அங்கு அரசாள வேண்டி யவர் ஆம்மாங்காதேவியின் புதல்வரல்லவா?”

“ஆம். ஆனால், இப்பொழுது சாளுக்கியர்களுடன் போர் தொடுப்பதில் கஷ்டங்களிருக்கின்றன.

“கஷ்டங்களை மக்கள் கவனிப்பதில்லை இளைய பல்லவரே, நீதியைத்தான் கவனிக்கிறார்கள். நீதி நிலைத் இருந்தால் அநபாயர் வேங்கியின் அரியணையில் அமர்ந் தருக்க வேண்டும். அமர்ந்திருக்கத் தகுதியுள்ளவர் என்று மக்கள் நினைக்கிறார்கள். அநபாயர் போர் வீரர் மட்டு மல்ல. ராஜதந்திரத்திலும் வல்லவர். வீர ராஜேந்திரருக்கு ராஜதந்திரம் அத்தனை போதாது என்பது மக்கள் நம்பிக்கை.

“சேந்தன் கூறியது அத்தனையும் சரியென்பது தெரிந்தே இருந்தது இளைய பல்லவனுக்கு. வீரராஜேந்திரனுக்குப் பிறகு எப்படியும் அநபாயன் சோழ அரியணையில் மட்டு மின்றி வேங்கி அரியணையிலும் அமரக்கூடும் என்ற நம்பிக்கையுமிருந்தது. இருப்பினும், அதற்குக் கால மிருக்கிறது என்று நினைத்த இளையபல்லவன் பதிலேதும் சொல்லவில்லை. கூலவாணிகன் சேந்தனே மேற்கொண்டு பேசினான். “நான் அஞ்சியதற்குக் காரணம் தெரிகிறதா உங்களுக்கு? அநபாயர் நமது நாட்டின் உயிர். அவர் இந்த உளரிலிருக்கும் மூன்று நாள்களும் அவர் உயிர் ஆபத்திலிருக்கிறது.

“அதை ஆமோதித்த இளையபல்லவன், “அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை சேந்தா. நாளைக்கு நமது உயிர் எமலோகத்தை நாடிச் சிட்டாய்ப் பறக்கும்!” என்று கூறியபின்பே, அநபாயனைப் பற்றிய நினைப்பி லிருந்து சிறையின் சூழ்நிலைக்கு வந்த கூலவாணிகன், அடுத்த நாள் தன் தலை போய்விடுமென்பதை நினைத்து நடுங்கினான். இளையபல்லவன் மட்டும் அந்த நினைப்பை அறவே உதறிவிட்டு, மஞ்சத்திலிருந்து பஞ்சணையை நன்றாகத் தட்டிவிட்டு, “அப்பாடா” என்று படுத்தான். அவன் அப்படி அனந்தமாகப் படுத்தது கூலவாணி கனுக்குப் பெரும் வெறுப்பாயிருக்கவே, “ஏன், பஞ்சணை சுகமாயிருக்கிறதோ?” என்று வினவினான்.

“ஆமாம், சேந்தா! கலப்படமில்லாத இலவம் பஞ்சு என்றான் இளையபல்லவன்.

“நன்றாக உறங்குங்கள்” என்று இகழ்ச்சியுடன் கூறிய கூலவாணிகன், அடுத்த சில வினாடிகளில் அயர்ந்து போனான். இளையபல்லவன் சில வினாடிகளிலேயே கண்களை மூடி நன்றாகத் தூங்க முற்பட்டதைக் கண்டு “நாளை உயிர் போக இருக்க எப்படித் தூக்கம் வருகிறது இவருக்கு?” என்று சொல்லிக்கொண்டு மிதமிஞ்சிய வெறுப்புடன் உறங்காமலே அன்றிரவைக் கழித்தான் கூலவாணிகன்.

மறுநாள் காலைப்பொழுது விடிந்து நீண்ட நேரமட்டும் நன்றாகத் தூங்கு, இளையபல்லவன், உணவைத் தட்டுகளில் கொண்டு வந்த காவலர் எழுப்பிய பின்பே எழுந்திருந்து பெருங்கிண்ணங்களிலிருந்த நீரால் பல்துலக்கி முகம் கழுவினான்.

உணவைத் தட்டுகளில் வைத்துக் காவலர் சென்றதும், “இரவு நன்றாகத் தூரங்கினீர்களா?” என்று இகழ்ச்சியுடன் கேட்டான் சேந்தன்.

“ஆம், உறங்கினேன்.

“எப்படி.

உறக்கம் பிடித்தது?”

“ஏன்? பிடிக்காமலென்ன?”

“இன்று நாம் வெட்டப்படுவோம்.

“அகவே இன்றிரவு உறங்க முடியாதல்லவா? அதற்கா கத்தான் நேற்றிரவே போதிய அளவு தூங்கிவிட்டேன்” என்று கூறி நகைத்த இளையபல்லவன், உணவின் எதிரில் சில வினாடிகளில் உட்கார்ந்தான். கூலவாணிகன் உணவுத் தட்டினருகில்கூட வராமல் இளையபல்லவனை வெறுப் புடன் பார்த்துக்கொண்டு நின்றான். சில வினாடிகள் உணவுத் தட்டை உற்றுப் பார்த்த இளையபல்லவன், தஇடீரென அதன்மேல் மூடப்பட்டிருந்த துணியை எடுத்து மடித்து ஒருபுறம் வைத்துவிட்டு உணவருந்துவதில் முனைந் தான். அவன் மிகுந்த விருப்பத்துடன் உணவைச் சுவைத்து அருந்துவதைக் கண்ட கூலவாணிகனின் வெறுப்பு பன்மடங்காகியது.

“ஏன் சேந்தா, நீ சாப்பிடவில்லை?” என்று வினவி னான் இளையபல்லவன்.

“தேவையில்லை எனக்கு” என்று கூறிய கூலவாணிகன் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டான்.

உணவை நிதானமாகச் சுவைத்து உண்ட பின்பு தட்டு களை எடுத்துச் செல்ல வீரர்களைப் பணித்த கருணாகர பல்லவன் அதன்மேல் மூடியிருந்த துணியை மட்டும் தன் மஞ்சத்தில் ஒளித்தான். வீரர்கள் தட்டுகளை எடுத்துச் சென்றதும் கூலவாணிகனை அழைத்த கருணாகர பல்லவன், “சேந்தா, இதைப் பார்!” என்று தான் ஒளித்து வைத்திருந்த துணியை எடுத்து அவனிடம் காட்டினான்.

“என்ன அந்தத் துணிக்கு?” என்று எரிந்து விழுந்தான் கூலவாணிகன்.

“அருகில் வா!” என்றான் இளையபல்லவன்.

அருகில் நெருங்கியதும், இளையபல்லவன் காட்டிய அந்தத் துணியைக் கண்டு பிரமித்த கூலவாணிகன், “இது” என்று எதோ குழறினான்.

“உஸ்..இரைந்து பேசாதே!” என்று அவன் வாயைப் பொத்திய இளையபல்லவன், “இது நம் விமோசனத்தின் சீலை. இதைக் கேள்.” என்று கூறி, அவன் காதில் மிகவும் ரகசியமாக ஏதேதோ ஓதினான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top