• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கடல் புறா - முதல் பாகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஆத்தியாயம் – 11

நீதி மண்டபம்

உணவுத் தட்டு சிறைக்குள் கொண்டு வரப்பட்ட போது மிகவும் அசட்டையாயிருந்த கருணாகர பல்லவன் அந்தத் தட்டின்மீது மூடப்பட்டிருந்த வெள்ளைச் சீலை யைக் கண்டதும் எச்சரிக்கை அடைந்துவிட்டதை ஆரம் பத்தில் கவனிக்காத கூலவாணிகன் சேந்தன், இளைய பல்லவன் மிகச் சாவதானமாக உணவருந்தியதைப் பற்றி முதலில் வெறுப்படைந்தானானாலும், ஒளித்து வைத்தத் துணியை எடுத்துக் காட்டியதும் மிதமிஞ்சியப் பிர மிப்புக்ேகே இலக்கானான். காவலர் உணவுத் தட்டை எடுத்துச் சென்றதும், “இங்கு வா. இந்தத் துணியைப் பார்” என்று அழைத்த இளையபல்லவன்மீது, “என்ன அந்தத் துணிக்கு?” என்று எரிந்து விழுந்த கூலவாணிகன், அந்தத் துணியிலிருந்தது என்னவென்பதை அறிந்ததும் வியப்பின் எல்லையை அடைந்தான். அப்படி ஏற்பட்ட எல்லை யில்லாத வியப்பின் விளைவாக, “இளையபல்லவரே! இது...” என்று ஏதோ குழறவும் முற்பட்டான்.

அந்தக் குழறலை ஒரே பார்வையாலும் “உஸ்! இரைந்து பேசாதே” என்ற மூன்று சொற்களாலும் தேக்கி விட்ட இளையபல்லவன், சேந்தனை அருகில் வர இழுத்து, அவன் காதுக்கருகில் குனிந்து, “சேந்தா! இது நம் விமோசனச் சீலை. இப்பொழுது புரிகிறதா உனக்கு?” என்று மிகவும் ரகசியமாகக் கேட்டான்.

அப்பொழுதும் பிரமிப்பின் பிடியில் சிக்கிக் கொண் டிருந்த கூலவாணிகன் சேந்தன், “புரிகிறது இளைய பல்லவரே! நன்றாகப் புரிகிறது. ஆனால்.. .?” என்று ஏதோ கேட்க முற்பட்டான்.

இளையபல்லவன் மீண்டும் அவன் காதிலே ரகசிய மாக ஓதத் தொடங்கி, “சேந்தா! இதில் சந்தேகத்துக்கு இடமில்லை. இதிலிருக்கும் கையொப்பம் அநபாயருடை யதுதான். அவன் நமக்கு அளிக்கும் அபயம்தான் இந்தச் சீலையில் கண்ட வரிகள்” என்று கூறினான்.

கூலவாணிகன், அந்தச் சீலையை வாங்கிக்கொண்டு, அந்த அறைச் சாளரத்தின் அருகில் சென்று அந்தச் சீலை யில் கூரிய மயிலிறகு நுனியால் மிக மெல்லியதாகத் தீட் டப்பட்டிருந்த நாலு வரிகளைக் கவனித்தான். “எதற்கும் அஞ்ச வேண்டாம். சமயத்தில் உதவி வரும். சந்தர்ப்பம் கிடைக்கும்போது பயன்படுத்திக் கொள்ளவும் அநபாயன்” என்ற வரிகள் மெல்லியதாக மிகத் தெளிவாகத் தீட்டப்பட்டிருந்தன. அந்த வரிகளை மீண்டும் மீண்டும் கூலவாணிகன் படிப்பதைக் கண்ட இளைய பல்லவன் சாளரத்தருகில் தானும் சென்று, அவனுக்குப் பக்கத்தில் நின்று அந்தச் லையை வாங்கித் தன் கச்சை யில் செருகிக்கொண்டான். தவிர, மறுபடியும் சிறையில் மஞ்சங்கள் இருந்த மத்திய இடத்திற்குச் செல்ல முயன்ற கூலவாணிகனைத் தடுத்து, “சேந்தா! இப்பொழுது மஞ்சத் துக்குச் செல்ல வேண்டாம். இப்படியே நாம் வெளியே நடமாடும் குதிரைக் காவலரை வேடிக்கை பார்ப்போம்” என்றும் கூறினான்.

என்னதான் அநபாயன் அனுப்பிய சீலை அபயம் தந்திருந்தாலும் ஆபத்திலிருந்து தப்பும் வரையில் நிச்சய மாக எதையும் சொல்ல முடியாதென்ற தீர்மானத்துட னிருந்த கூலவாணிகனுக்கு வேடிக்கை பார்க்க அது உசிதமான சமயமாகத் தெரியாததால், “வேடிக்கை பார்க்க இதுதான் சமயமா இளைய பல்லவரே?” என்று கசப்புடன் வினவினான்.

இளையபல்லவனின் இதழ்களில் சற்றே இளநகை படர்ந்தது. “வேறு சமயம் எப்பொழுது கிடைக்கும் சேந்தா? இந்தச் சிறைக்கூடத்திற்கு நம்மை மறுபடியும் அழைத்து வரப் போகிறார்களா?” என்று பதிலுக்கு இளைய பல்லவ னும் கேட்டான்.

“திரும்பவும் இங்கு வர முடியாதது தங்களுக்கு வருத்தமாயிருக்கிறதா?” என்றான் சேந்தன், குரலில் ஏளனம் தொனிக்க.

“இல்லை...இல்லை...வருத்தமில்லை” என்று நகைத் தான் இளைய பல்லவன்.

“அப்படியானால் நான் போகிறேன், மஞ்சத்துக்கு.

“என்ன அங்கே அவசரம்?”

“இங்கே என்ன வேலை?”

“ஏற்கெனவேதான் சொன்னேனே குதிரைக் காவலர் போவதை வேடிக்கை பார்க்கலாமென்று.

“வேடிக்கை எனக்குத் தேவையில்லை.

“ஆனால் பேச்சுத் தேவையல்லவா?”

“என்ன பேச்சு?”

“அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டாமா?”

இதைக் கேட்ட கூலவாணிகன், பல்லவனைச் சற்றே ஏறெடுத்து நோக்கினான். “சேந்தா! நான் சொல்வது புரிய வில்லையா உனக்கு? மஞ்சத்தில் உட்கார்ந்து நாம் பேச முடியாது. இங்குள்ள காவலர்களில் நண்பர்களு மிருக்கலாம், விரோதிகளுமிருக்கலாம். ஆகவே நாம் தனித்துப் பேசக்கூடிய இடம் இந்தச் சாளர வாயில்தான். இது பிரமுகர்கள் சிறையாதலால் விசாலமாயிருக்கிறது. இந்தச் சாளரத்துக்கும் இரும்புக் கதவும் கம்பிகளுமிருக்கும் இடத்துக்கும் இடையே பன்னிரண்டடிகளாவது இருக்கும்...” என்று சொல்லிக் கொண்டு போன இளைய பல்லவனை இடையே தடுத்த கூலவாணிகன், “ஆமாம் பிரபு! இருக்கும் இருக்கும்!” என்று சொல்லி அமோதித்துத் தலையையும் அசைத்தான்.

கூலவாணிகன் பேச்சின் குறுக்கே விழுந்ததால் ஒரு விநாடி பேச்சை நிறுத்திய கருணாகர பல்லவன், மேலும் பேசத் தொடர்ந்து, “ஆம் சேந்தா! பன்னிரண்டு அடி களுக்குக் குறைவில்லை. நாம் இந்தச் சாளரத்தின் மூலம் வெளியே பார்த்துக்கொண்டு மெள்ளப் பேசினால் கதவுக்கு அப்புறமுள்ள காவலர் காதில் விழாது. தவிர பேசுவதும் புரியாது. நாம் ஏதோ வெளிப்புறத்தை வேடிக்கை பார்ப்பதாகவே நினைப்பார்கள். ஆகவே அப் புறமோ இப்புறமோ அசையாமல், வெளிப்புறம் பார்த்தே பேசு” என்று விவரித்துவிட்டு, “சேந்தா! இந்தப் பாலூர் துறைமுகத்தின் கோட்டை பலமானது. இயற்கை அரண் களும் இதற்கிருக்கின்றன. ஆனால் ஊருக்குள் இருக்கும் ஜனத்தொகை எப்படி?” என்று விசாரித்தான்.

இந்தக் கேள்வியும், கேள்வியை ஓட்டிய விசாரணை யும் அனாவசியமாகப் பட்டதால், கூலவாணிகன் வெறுப் புடன் இதழ்களை மடித்து, பருமனான தன் சரீரத்தையும் ஒருமுறை நெளித்து, “எதற்கு இந்த ஆராய்ச்சி இப் பொழுது?” என்று வினவினான்.

“சொல், தேவையிருக்கிறது.” கருணாகர பல்லவன் குரலில் கண்டிப்பு இருந்தது.

“மூன்றிலொரு பாகம் கலிங்கத்தவர். மற்ற இரண்டு பாகங்களில் தமிழரும், வேங்கி நாட்டவரும் சரி பாதி” என்று வினவினான் கூலவாணிகன்.

“இங்குள்ள படை எப்படி?”

“அதுவும் கலப்படம்.

கலிங்கரும், தமிழரும் வேங்கி நட்டவரும் இருக்கிறார்கள்.

“வணிகர்?”

“பெரும்பாலும் தமிழர். வேங்கி நாட்டவர் யாருமில்லை. கலிங்கர் ஒரு சிலர்.

“அப்படியானால் கலிங்கத்தின் மிகப் பலவீனமான இடம் அந்த பாலூர்ப் பெருந்துறைதான்” என்றான் கருணாகர பல்லவன்.

கூலவாணிகன் வியப்பினால் விழித்தான். அந்த வியப்பின் விளைவாக ஓர் உண்மையும் சொன்னான் “இளைய பல்லவரே! இந்த ஊரில் தமிழ் வணிகர் பெரும் பாலோர் என்பதைப் பற்றிப் பெருமைப்பட வேண்டாம். படையினரில் பெரும்பாலும் கலிங்கர்தான். ஒரு சிலர் தான், தமிழர்” என்று.

, இளையபல்லவன் சற்று யோ௫த்துவிட்டு, “சேந்தா! ஒரு நாட்டின் சக்தி படைபலத்தை மட்டும் பொறுத்த தன்று. வாணிபத்தையும் பொறுத்தது. வணிகர் பெருகிய ஊரில் அவர்கள் சக்தி மிதமிஞ்சி நிற்கும். படையிலும் சில தமிழர் இருப்பதால், அவர்கள் உதவியும் தமிழ் வணி கருக்கு இருக்கும். இந்தக் கூட்டுறவுதான் பீமனுக்கு இந்த உளரில் பெரும் பலவீனம். இந்தக் கூட்டறவால்தான் அநபாயர் சிறையிலிருந்து தப்பியிருக்கிறார். சிறைக்குள் ளிருக்கும் நமக்கும் செய்தியனுப்பியிருக்கிறார். நமக்கு உணவு கொண்டு வந்த வீரனைக் கவனித்தாயா?” என்று கேட்டான.

“இல்லை. அவனுக்கென்ன?”

“என் உணவை மஞ்சத்தில் வைத்தான்.

“ஆம்.

“உடனே திரும்பிப் போகவில்லை.

“அப்படியா?”

“ஆம், சற்று நின்றான். உணவு மேலிருந்த லையை உற்றுப் பார்த்தான். பிறகே சென்றான்.

“பிரமிப்புத் தட்டிய விழிகளை இளைய பல்லவன் மீது இருப்பிய கூலவாணிகன், “இதை நான் கவனிக்க வில்லையே!’” என்றான்.

“மனத்தில் சாவுக் கலி பிடித்திருந்ததால் நீ எதையும் கவனிக்கவில்லை சேந்தா! அபாயத்திலிருப்பவன் மனத்தைத் தளரவிடக்கூடாது. மனத்தையும் கண்ணையும் காதையும் தட்டி வைத்துக்கொண்டு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்க வேண்டும். நீ சோர்வடைந்து கடந்தாய். ஆனால் நான் கவனித்தேன். கவனித்ததும் சீலைமீது கண்களை ஓட்டினேன். சீலை மிக மெல்லியதாகையால் மறுபுறமிருந்த எழுத்து கள் தெளிவாகத் தெரிந்தன. சலையை எடுத்து முடித்து வைத்துக்கொண்டேன்” என்ற இளைய பல்லவனை இடை. மறித்த கூலவாணிகன், “அதனால்தான் தைரியமாக உணவருந்தினீர்களா?” என்று கேட்டான்.

இளையபல்லவன் பதிலுக்கு நகைத்தான். “இல்லை சேந்தா! எப்படியும் நான் உணவருந்தியிருப்பேன். இறப்பு எப்பொழுது வருமென்று யாரும் நிச்சயமாய்ச் சொல்ல முடியாது. ஆகவே, உயிருடனிருக்கும் வரையில் துணி வுடன் வழக்கப்படி வாழ்வதே அறிவாளிகளுக்கு அழகு” என்று! கூறிய இளையபல்லவன், “அது இிடக்கட்டும் சேந்தா! இப்பொழுது நாம் கவனிக்க வேண்டியதெல் லாம், அநபாயர் உதவி எப்பொழுது வரும், எப்படி வரும், வந்தால் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை என்ன என்பதுதான். உன் விடுதியில் பீமன் தனக்கு எல்லாம் தெரிந்தமாதிரி நடித்தான். ஆனால் அவனுக்குத் தெரிந்த உண்மை சொற்பம் என்பதை நான் தெரிந்துகொண்டேன்” என்றும் குறிப்பிட்டான்.

“எப்படித் தெரிந்து கொண்டீர்கள்?”

“பீமன் வாயிலிருந்தே.” “பீமன் வாயிலிருந்தா!”

“பீமன் வாயிலிருந்துதான். தூதுப் புறா விடப்பட்ட தால் நான் பிரமுகர் வீதியிலிருந்த வீட்டிலிருந்ததை உஊடுத்ததாகச் சொன்னானல்லவா?”

“ஆம், சொன்னான்.”

“ஆனால் தூதுப் புறா எனக்காக விடப்படவில்லை யென்பதை அவன் உணரவில்லை, குணவர்மனுக்கு விடப்பட்டது அந்தப் புறா.

“அப்படித்தான் இருக்க வேண்டும். நீங்கள் வந்தது அநபாயருக்கு எப்படித் தெரியும்?”

“உண்மையில் அப்பொழுது நான் அங்இருந்தது அநபாயருக்குத் தெரியாது. ஆகையால் சந்தர்ப்பவசத்தால் என்னைப் பிடித்திருக்கறான் பீமன். துறைமுகத்திலிருந்து என்னைத் துரத்தி வந்தவர்கள் நான் வெளிநாட்டுப் பிரமுகர் வீதியில் மறைந்துவிட்டதாகச் சொல்லியிருக் கிறார்கள். அங்கு ஒற்றர்களை நிறுத்தினான் பீமன். தூதுப் புறா ஒன்று பறந்ததாகச் செய்தி கிடைத்ததும் அது எனக்காகத்தான் விடப்பட்டதாக நினைத்தான். அநபாயர் தப்பிவிட்டார். நான் ஒரு விடுதியில் மறைந்திருக்கிறேன். அங்கு விடப்படுகிறது ஒரு புறா. எல்லாவற்றையும் இணைத்துப் பார்த்து, அநபாயரின் முத்திரை மோதிரத்தை அனுப்பி என்னை வஞ்சகமாக அழைத்து வந்துவிட்டான்.

“இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த கூலவாணிகன், “ஆம். சொல்ல மறந்துவிட்டேன், உங்களிடம். பீமன் என் பெட்டியைச் சோதனை செய்தபோது உங்கள் ஒலையுடன் அநபாயர் எனக்களித்திருந்த முத்தரை மோதிரத்தையும் வைத்திருந்தேன். அதையும் அவன் எடுத்துக்கொண்டான்” என்றான்.

“நீ சொல்லத் தேவையில்லை சேந்தா! பெரும் ஒற்றர் களிடம் ராஜாங்கக் காரியங்களைச் சாதிக்க ராஜவம்ச முத்திரை மோதிரங்களைக் கொடுக்கும் பழக்கம் உண்டு என்பதை நானறிவேன். ஆகவே உன் மாளிகையில் நீ இருந்த கோலத்தைக் கண்டதும் உண்மையை ௨ஊ௫த்துக் கொண்டேன்” என்ற இளையபல்லவன், “ஆகவே சேந்தா! பீமனின் நடவடிக்கைகள் சந்தர்ப்பவசத்தாலேயே பயனடைந்திருக்கின்றன. பீமன் சிறந்த அறிவாளியாதலால் இந்த நிலைமையைத் தனக்கு அனுகூலமாகச் செய்துகொள்ளவே முயலுவான். ஆகவே உனக்கும் எனக்கும் இன்று விசாரணை இருக்காது” என்றான்.

இளையபல்லவன் சொற்களைக் கேட்ட கூலவாணி கன் மிதமிஞ்சிய பிரமிப்பை அடைந்தான். அத்துடன் தஇடீரென இளையபல்லவனை நோக்கியும் திரும்பினான். திடீரெனத் திரும்பி, “என்ன! என்ன சொல்கிறீர்கள்?” என்று வினவவும் செய்தான்.

“இன்று நமக்கு விசாரணை இருக்காது” உறுதியுடனும் திட்டவட்டமாகவும் வந்தது இளையபல்லவன் பதில்.

“ஏன்?” என்று மறுபடியும் வினவினான் கூல வாணிகன்.

“நீயும் நானும் முக்கியமல்ல பீமனுக்கு” என்று திட்டவட்டமாகக் கூறினான் இளையபல்லவன்.

“வேறு யார் முக்கியம்?”

“அநபாயர் முக்கியம்.

“உண்மைதான்.

“நம்மைக் கொல்வதால் பீமனுக்கு லாபம் இல்லை.

“ஏன்?”

“நம்மைக் கொன்றால் சிறந்த ஒரு வலையை இழப்பான் பீமன். புலி தப்பிவிடும்.

“நீங்கள் சொல்வது புரியவில்லை எனக்கு.

“நான் அநபாயனின் இணைபிரியாத் தோழன்” என்று சுட்டிக் காட்டிக்கொண்ட இளையபல்லவனது குரலில் பெருமிதம் மிதமிஞ்சி ஒலித்தது.

“உங்களை இரட்டையர் என்றுகூடச் சொல்வதுண்டு” என்று கூலவாணிகனும் ஒப்புக்கொண்டான்.

“ஆம் ஆம். அந்தப் பாக்கியம் எனக்குண்டு. ஆகவே என்னை அழித்தால் அநபாயரை இழுக்கும் காந்தத்தை இழப்பான் பீமன்.

“கூலவாணிகன் முகத்தில் தெளிவுக்குறி படர்ந்தது. “உண்மைதான் இளையபல்லவரே! உம்மை வைத்து அநபாயரை இழுக்கப் பார்ப்பான் பீமன்” என்றான்.

இளையபல்லவன் சில விநாடிகள் ஏதோ யோசித்தான். “பீமன் எண்ணம் அப்படித்தானிருக்கும். அநபாயரை அழித்துவிட்டால் வேங்கி நாட்டு அரியணையில் அமர வேண்டிய அரசனை அழித்ததாடிவிடும். பிறகு வேங்கி நாட்டில் அரியணையில் போட்டி இருக்காது. சாளுக்கிய விஜயாதித்தன் தாயாதி எதிர்ப்பைப் பற்றி அச்சப்பட அவசியமில்லை. நாடு திடமாகிவிடும் அவனுக்கு. திடமான வேங்கி நாடு கலிங்கத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே இருப்பதால் கலிங்கத்துக்கு அது பெரும் அரண் போலாகும். அத்தகைய நிலையை ஏற்படுத்த அநபாயர் சிக்கவேண்டும். அநபாயரைப் பாலூரில் சாதாரணமாகப் பிடித்துவிட முடியாதென்பதைப் பீமன் அறிந்திருக்கிறான். அந்த வேங்கையைப் பிடிக்க என்னைத் தூண்டுதலாக உபயோகப்படுத்துவான். அகவே’ விசாரணை இன்று கிடையாது. தவிர விமோசனமும் இந்தச் சிறையிலிருந்து இடைக்காது” என்றும் கூறினான்.

“அதென்ன அத்தனை திட்டமாகச் சொல்கிறீர்கள்2” என்று கேட்டான் கூலவாணிகன்.

“நாமிருப்பதால் இந்தச் சிறைக்கூடம் மிக ஜாக்கிரதை யாகக் கவனிக்கப்படும். அநபாயர் இங்குள்ள அவர் நண்பர்களை உபயோகப்படுத்தினால் உடனே சிறை செய்யப்படுவார்கள். இங்கிருந்து தப்ப ஏற்பாடு இருக்காது.

“எங்கிருந்து இருக்கும்? ஒருவேளை விசாரணை நடந்தால் நீதிமண்டபத்திலிருந்து...” என்று கேட்க முற்பட்ட கூலவாணிகனை இடைமறித்த இளைய பல்லவன், “அங் இருந்தும் இருக்காது சேந்தா! நீதி மண்டபம் நான்கு சுவர்களுக்குள் அடங்கியது. அது பலமாகவும் காக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து நாம் தப்ப முடியாது. வெளிப் புறத்தில்தான் நமக்கு விமோசனம்” என்றான்.

“வெளிப்புறத்திலென்றால்?”

“நமக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டால் நீதி மண்டபத்திலிருந்து கொலைக்களத்துக்குச் செல்லும் வழியில் காப்பாற்றப்படலாம். சிறைத் தண்டனை விதிக்கப் பட்டால் சிறைக்கு மீண்டும் வரும்போது வழியில் மீட்கப்படலாம். வேறு இடமில்லை” என்று திட்டமாக அறிவித்த இளைய பல்லவன், “சேந்தா! இது அனைத்தும் உனக்கு எதற்காகச் சொல்கிறேன் தெரியுமா?” என்று கேட்டான்.

“தெரியாது” என்று பதில் சொன்னான் கூலவாணிகன்.

“அநபாயர் குறிப்பிட்டிருப்பதுபோல் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நீ தீயாராயிருக்க வேண்டும். எதற்கும் என்னைக் கவனித்துக் கொண்டிரு. தவிர, சிறையி லிருக்கும் வரையில் சந்தேகத்துக்கு இடம் கொடாமல் நடந்துகொள். பழையபடி திகிலுடனும், வெறுப்புடனும் நடந்துகொள். மகழ்ச்சியிருந்தால் வெளிக்குக் காட்டாதே. நீதி மண்டபத்தைவிட்டுக் கிளம்பியதும் என்னையே கவனி. இனி நமக்குள் சம்பாஷணை எதுவும் கிடையாது” என்று முடிவாகச் சொல்லிய இளையபல்லவன், சாளரத்தை விட்டு மீண்டும் அறையின் நடுவுக்கு வந்து மஞ்சத்தில் சாய்ந்து கொண்டான்.

புத்தி பெரிதும் குழம்பிக் கிடந்ததால் என்ன செய்வ தென்பதை அறியாத கூலவாணிகன் ஏதேதோ யோசித்துக் கொண்டு பொழுதை ஓட்டினான். இளையபல்லவன் சொல்வதெல்லாம் நியாயமாகவும் காரணங்களை ஒட்டிய தாகவும் இருந்தாலும், கூலவாணிகன் மனத்தில் ப்ரண திருப்தியில்லை. பீமன் இன்றே நீதி மண்டபத்தில் சந்திப்ப தாகத்தானே சொல்லிப் போனான், வார்த்தை தவறும் வழக்கம் அவனுக்கில்லையே?” என்று எண்ணினான்.

ஆனால் விஷயங்கள் இளையபல்லவன் சொன்னது போலவே நடந்தன. அன்று மூழுவதும் மட்டுமல்ல, அதற்கு மறுநாளும்கூட விசாரணை எதுவும் நடைபெறவில்லை. இருவரும் சிறையிலேயே அடைந்து இடந்தார்கள். அந்த இரண்டு நாளும் இரண்டு யுகங்களாகக் கூலவாணிக னுக்குப் பட்டனவேயொழிய, இளையபல்லவனோ உண்ப தையும் உடுப்பதையும் சிறிதும் குறைத்துக் கொள்ளாமல் சகல செளகரியத்தையும் செய்துகொண்டான். மூன்றாவது நாள்தான் அவர்களிருவரையும் நீதிமண்டபத்திற்கு அழைத் துச் செல்லக் காவலர்கள் வந்தார்கள். அவர்களோடு உடனே புறப்பட மறுத்த இளையபல்லவன் தன் பதவிக் கும் வணிகப் பெருந்தகையின் அந்தஸ்துக்கும் தகுந்த ஆடைகள் அளிக்குமாறு கோரினான். அவர்கள் கொண்டு வந்த அடைகளைத் தானும் அணிந்து கூலவாணிகனையும் அணியச் சொல்லி காவலரைப் பின்தொடர்ந்தான்.

காவலர் ஒரு பெரிய மூடுவண்டியில் இருவரையும் ஏற்றி நீத மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்கள். நீதி மண்டபத்திற்குள் நுழைந்த கருணாகர பல்லவன் அந்த மண்டபத்தைச் சுற்றிலும் ஒருமுறை நோக்கினான். மண்டபம் பூராவும் ஜனங்கள் கூட்டம் மண்டிக் கடந்தது. காவல் மிகவும் பலமாக இருந்தது. ஜனங்களை இருபுறமும் ஈட்டிகளைக் கொண்டு அடக்கி வைத்த வீரர்களைத் தவிர யாரும் தப்ப முடியாதபடி அளவுக்குச் சற்று அதிகமாகவே காவல் இருந்தது அந்த நீதி மண்டபத்தில்.

மண்டபத்தைச் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு நீதி ஸ்தானத்துக்கு அருகே வந்ததும் அந்த ஸ்தானத்தின் மீது கண்களை உயர்த்திய கருணாகர பல்லவன் சில விநாடிகள் ஸ்தம்பித்து நின்றான். அந்த ஸ்தானத்தில் அமர்ந்திருந்தது பீமனல்ல. கொடுமையிலும், தந்திரத்திலும் எடுத்த காரியத் தைச். சாதஇப்பதிலும், பீமனைவிடக் கோடி. மடங்கு உயர்ந்த வனும் தனது பரம விரோதியுமான மனிதன் உட்கார்ந்தி ருப்பதைக் கண்ட கருணாகர பல்லவனது நெஞ்சில்கூடச் சிறிது அச்சம் உதயமாயிற்று. அதனால் சிறிது சலனப்பட்ட கருணாகர பல்லவனது கண்களை, நீதி ஸ்தானத்தில் அமர்ந்திருந்தவனின் இரு கண்கள் கூர்ந்து கவனிக்கவும் செய்தன. பிரேதத்தின் கண்களைப்போல் பயங்கரமா யிருந்த அந்தக் கண்களுக்குச் சமமாக வெளுத்துக் கடந்த மெல்லிய உதடுகளில் ஒரு சோரப் புன்னகை விரிந்தது. அந்தப் புன்னகையே தன் மரண தண்டனை என்பதைப் புரிந்நுகொண்டான் கருணாகர பல்லவன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் - 12

அநபாய குலோத்துங்கன்

பிரேதத்தின் கண்களைப்போல் ஒளியிழந்து கிடந்தா லும், ஓளியிழந்த காரணத்தினாலேயே பயங்கரமாகத் தெரிந்த நீதுபதியின் கண்கள் தன்னை ஊடுருவிப் பார்ப்ப தையும், அந்தப் பார்வையைத் தொடர்ந்து நீதிபதியுடைய வெளுத்த இதழிலே ஒரு புன்னகை விரிந்ததையும் கண்ட கருணாகர பல்லவனுக்குப் பல விஷயங்கள் குழப்பத்தை யளித்தாலும், தீர்ப்பு என்னவாயிருக்கும் என்பதில் மட்டும் எத்தகைய குழப்பமும் ஏற்படவில்லை. வட கலிங்கத்து மன்னனும் தனது ஜன்ம விரோதியான அனந்தவர்மன், தென்கலிங்கத்துக்கு எப்பொழுது வந்தான், என்ன காரணத்தை முன்னிட்டு வந்தான், பீமனோ அல்லது அவனது நீதிபதிகளோ அமர வேண்டிய இடத்தில் அவன் எதற்காக அமர்ந்திருக்கிறான் என்ற விவரங்கள் புரிய வில்லையே தவிர, விசாரணை ஒரு கேலிக்கூத்தாகவே இருக்குமென்பதிலோ தன் தலையைச் சீவும்படி தீர்ப்புக் கூறப்படும் என்பதிலோ லவலேசமும் சந்தேகமில்லா திருந்தது இளையபல்லவனுக்கு. அப்படி. மரணத்தை எதிர் நோக்கி நிற்கும் தருவாயில் அச்சம் காட்டுவதோ, எதிரிக்குத் தான் தாழ்ந்தவனென்று பொருள்பட இடங் கொடுப்பதோ தகுதியற்றது என்ற காரணத்தால், அனந்த வர்மனின் புன்முறுவலைப் புரிந்தகொண்டதற்கு அத் தாட்சியாகத் தானும் ஒரு பதில் புன்முறுவலைக் கோட்டி னான் கருணாகர பல்லவன். சோழ நாட்டின் மீதுள்ள பகை பெரும் பகையாக அனந்தவர்மனின் உள்ளத்தைச் சூழ்ந்து கொண்டிருந்ததால், தெளிவில்லாத உள்ளத்து டனும், துவேஷ புத்தியுடனுமே அன்று அவன் விசார ணையை நடத்தினான். ஆனால் அவனைப் பாராட்டி ஒன்று மட்டும் கூறலாம். துவேஷத்தில் துளிகூட வெளிக் குக் காட்டாமல் நீதியை மட்டுமே கவனிப்பவன் போல் விசாரணையை நடத்தினான் அவன். சிறைப்பட்டி ருந்தவர் களிடம் உண்மையாக அனுதாபம் கொண்டவன் போல் நடித்தான். மேலுக்கு எத்தனை கண்ணியமாக விசாரணை நடத்த முடியுமோ அத்தனை கண்ணியமாக நடத்தினான். நீதிக்கும் நேர்மைக்கும் புறம்பாக அன்று விதித்த தண்ட னைகள் அனைத்தையும் நீதியின் பெயராலும் நேர்மையின் பெயராலும் விதித்தான். அவன் நடத்திய விசாரணை களையும், விதித்த தண்டனைகளையும் கவனித்த கருணாகர பல்லவன், அந்த நீதி மண்டபத்தின் உயர்ந்த தூண்களை யும் பார்த்து, நீதிபதியையும் நோக்க, இங்கு தூண்கள்தான் உயர்ந்திருக்கன்றனவே யொழிய நீதி தாழ்ந்துதான் கிடக்கிறது’ என்று தனக்குள் பலமுறை சொல்லிக் கொண்டான்.

அன்று நீதிமண்டபத்தில் ஏராளமான தமிழர் சிறைப் பட்டு நின்றிருந்ததால் கருணாகர பல்லவன் கடைசி யிலேயே விசாரிக்கப்பட்டான். நடுப்பகல் வந்தபின்பே அவன் வழக்கு விசாரணைக்கு வந்தது. இத்தனை நேரம் கழித்து விசாரிக்க எதற்காக ஊருக்கு முன்பு தன்னை அழைத்து வந்தார்களென்று எண்ணிப் பார்த்த கருணாகர பல்லவன், கலிங்க விரோதிகள் எப்படி நடத்தப்படுவார்கள் என்பதைத் தனக்கு உணர்த்தவே அனந்தவர்மன் தன் விசாரணையைத் தாமதித்திருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டான். சிறிது நேரத்திற்கெல்லாம் உயிரிழக்கப் போகிறவனையும் கடைசி வரையில் துன்புறுத்தவே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதென்பதை அறிந்த இளையபல்லவன், அனந்தவர்மனுடைய குரூரத்தின் எல்லையைப் புரிந்தகொண்டான். இத்தகைய பல படிப் பினைகள் இளையபல்லவனுக்கு ஏற்படுவதற்கு முன்பாக, அவனுக்குக் கொடுக்க வேண்டிய மட்டுமரியாதைகள் எதையும் குறைக்கவில்லை வடகலிங்கத்து மன்னன். தன்னெ திரில் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட இளைய பல்லவனை நோக்கி இளநகை புரிந்த அனந்தவர்மன், அவனுக்குப் பின்னாலிருந்த கூலவாணிகளனைச் சில விநாடிகளே நோக்கிவிட்டு மீண்டும் இளையபல்லவன் மீது கண்களை நிலைக்கவிட்டான். அந்தப் பிரேதக் கண்களின் பார்வை அளித்த சங்கடத்திலிருந்து விடுவித்துக் கொள்ள அப்புற மும் இப்புறமும் பார்த்த இளைய பல்லவன் மீது மீண்டு மொரு புன்முறுவலை வீசிய அனந்தவர்மன், எதிரேயிருந்த காவலரைப் பார்த்து, “இளைய பல்லவருக்கு ஓர் ஆசனம் எடுத்துப் போடுங்கள். வெளிநாட்டுத் தூதர்கள் மரியா தைக்கு உரியவர்கள்” என்று கூறினான்.

அப்படிக் கூறிய அனந்தவர்மனின் குரலில் மிகுந்த நிதானமிருந்ததையும்,. குரலும் பலவீனமாகவே வெளி வந்ததையும், அப்படிப் பலவீனமாக வந்த குரலிலும் ஒரு கடூரமும் கம்பீரமும் விரவி இருந்ததையும் கருணாகர பல்லவன் கவனித்தான். தனக்குச் செய்யப்படும் அத்தனை மரியாதையும் காவுக்கு அனுப்பப்படும் ஆட்டுக்குப் பூசாரி செய்யும் மரியாதைப் போன்றது என்பதையும் சந்தேகமற உணர்ந்துகொண்ட கருணாகர பல்லவன், அடுத்து நடப்பவை என்னவென்பதைக் கவனிக்கலானான். அனந்த வர்மனின் உத்தரவுப்படி பெரிய அசனமொன்று கருணாகர பல்லவனுக்கு அளிக்கப்பட்டதும் விசாரணை களைத் தொடங்கிய அனந்தவர்மன், முதன் முதலாக, வேவு பார்க்கும் குற்றங்கள் சாட்டப்பட்ட பல தமிழ் வணிகர்களையும் இதர பிரமுகர்களையும் தன் முன்பு கொண்டுவர உத்தரவிட்டான்.

சோழ நாட்டுத் இருமந்திர ஒலைக்காரன் போல் கலிங்கத்திலிருந்து நீதி நிர்வாக ஸ்தானீகன் களைப் படிக்க, அனந்தவர்மன் கேள்விகளைக் கேட்டுத் தண்டனைகளை விதித்துக்கொண்டே போனான். குற்றச் சாட்டுகளெல்லாம் கிட்டத்தட்ட வேவு பார்ப்பது சம்பந்த மாக ஒரே மாதிரியாக இருந்ததையும், முக்கியமானவர்க் கெல்லாம் மரண தண்டனையும் மற்றவர்களுக்கெல்லாம் நீண்ட கால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டதையும் கண்ட கருணாகர பல்லவனுக்கு, அனந்தவர்மன் தமிழர் களிடம் விரோதத்தை வேண்டுமென்றே சம்பாதிக்க முயலு வதாகத் தோன்றியது. பலமான சோழப் பேரரசைத் தேக்கி நிறுத்தும் வழி இதுவல்லவென்பது இளைய பல்லவனுக்குத் தெரிந்திருந்ததால், மன்னன் சாட்டும் வஞ்சத்தால் கலிங்கத்து மக்கள் எத்தனை பேர் அழிவார்கள் என்று எண்ணி அவர்கள் நிலை குறித்து ஏங்கினான். ஆனால் அப்படி எந்த ஏக்கத்துக்கும் இலக்காகாத அனந்தவர்மன், இஷ்டப்படி தண்டனை விதித்துக் கொண்டே போனான்.

மற்றவர்களை விடுவிடு என்று விசாரித்துக் கொண்டு போன அனந்தவர்மன் கூலவாணிகளனை விசாரிக்கும் சமயம் வந்ததும் சிறிது நிதானித்து, ஒருமுறை இளைய பல்லவனை நோக்கிவிட்டுக் கூலவாணிகனையும் நோக்கி னான். அதைத் தொடர்ந்து அந்தப் பிரேதக். கண்களில் சில விநாடிகளில் சிந்தனை படர்ந்தது. கடைசியாக ஏதோ முடிவுக்கு வந்ததற்கு அறிகுறியாகத் தன் தலையை ஒரு முறை அசைத்துவிட்டு, இளையபல்லவனை எழுந்து நிற்க ஆக்ஞாபித்தான். விசாரணையின் விளைவைப் பற்றி முன்னமே அறிந்துகொண்டிருந்த இளைய பல்லவன், மிகக் கம்பீரமாக எழுந்து, பாலூர்ப் பெருந்துறையின் அந்தப் பிரும்மாண்டமான மண்டபத்தில் நின்று, ஆடுகளை நோக்கும் பெரும் புலிபோல் தன் கண்களை ஒருமுறை நாற்புறமும் துழாவவிட்டான். பிறகு நீதிஸ்தா னத்திலிருந்த பகைவன்மீது ஈட்டிகளைப் போலப் பளிச் சிட்ட தன் கண்களை நாட்டினான்.

இரண்டு ஜோடிக்’ கண்களும் மீண்டுமொருமுறை கலந்தன. இரண்டிலுமிருந்த பகைமை அவற்றின் கொடு மையை அதிகப்படுத்திக் காட்டியது. அந்தப் பகைமை உள்ளூர இருந்தாலும் அமுதம் சொட்டும் குரலில் விசாரணையைத் தொடங்கிய அனந்தவர்மன், “இளைய பல்லவரே! நாமிருவரும் ஒருவரையொருவர் முன்பே அறிவோம்” என்றான்.

“நன்றாக அறிவோம்” என்ற இளைய பல்லவன் குரலில் இகழ்ச்சியொலி மண்டிக் கடந்தது.

“நீதி அதிகாரி, குற்றவாளி என்ற இவ்வித உறவில் நாம் முன்பு சந்திக்கவில்லை” என்று சுட்டிக் காட்டினான் அனந்தவர்மன்.

“அப்பொழுதும்கூட கலிங்கத்துக்குத் தூாதனாகத்தான் வந்தேன். அப்பொழுது அரசியல் கருத்து வேறுபாடு களிருந்தும் சிறை செய்யப்படவில்லை. அப்பொழுதைக்கு இப்பொழுது கலிங்கம் பெரிதும் முன்னேறியிருக்கிறது.” என்று சர்வ சாதாரணமாகப் பேசிய கருணாகர பல்லவன், மெல்ல நகைக்கவும் செய்தான்.

அனந்தவர்மன் உதடுகளிலும் மீண்டும்” புன்னகை விரிந்தது. “கலிங்கம் முன்னேறவில்லை. நீங்கள்தான் முன்னேறியிருக்கிறீர்கள்.

“விளங்கவில்லை எனக்கு.

“அன்று நீங்கள் வட கலிங்கத்துக்குத் தூதராக மட்டும் வந்தீர்கள். தூதருக்கான மரியாதை காட்டப்பட்டது. இன்று ஒற்றராக முன்னேறியிருக்கிறீர்கள். அன்று வட கலிங்கத்துக்கு வந்தபொழுது கருத்து வேறுபாடு காட்டினீர்கள். ஆனால் கலிங்கத்தின் காவலனை அவமதிக்கவில்லை. இன்று கருத்து ஒற்றுமை ஏற்படுத்திச் சமாதான ஓலை யுடன் வந்தீர்கள், ஆனால் சுங்கச் சாவடியிலேயே தென் கலிங்க மன்னனை. அவமதித்தீர்கள். எந்தத் துறையில் நோக்கினும் தங்கள் தற்சமய விஜயம் பெரும் முன் னேற்றம்” என்று விளக்கினான் அனந்தவர்மன்.

பழைய விரோதத்தை மறக்காமலும், ஆனால் அதற்கும் தற்சமய விசாரணைக்கும் எந்தவிதச் சம்பந்தமு மில்லை என்பதைச் சுட்டிக் காட்டும் முறையிலும் அனந்த வர்மன் பேசியதைக் கேட்ட கருணாகர பல்லவன், அவனது புத்தி கூர்மையைப் பெரிதும் வியந்தான். குற்றங் களைக் கோவையாக ஜோடிப்பதிலும், நீதியைத் தவிர வேறெதுவும் கலிங்கத்தில் நடவாததுபோல் வெளி உலகத் துக்குக் காட்டுவதிலும் அனந்தவர்மனுக்கு இணை அனந்த வர்மனே என்பதைப் புரிந்துகொண்ட இளையபல்லவன், வெகு எச்சரிக்கையுடன் பதில்களைச் சொன்னான். “முன்னேற்றம் எனக்கு மட்டும் ஏற்படவில்லை மன்னவா! கலிங்கத்துக்கும் ஏற்பட்டுத்தானிருக்கிறது. தென் கலிங்கம் வட கலிங்கத்தோடு இணைந்து எத்தனை நாளாகிறது?”

“இணைந்ததாக யார் சொன்னது?” சர்வ சாதாரண மாக எழுந்தது அனந்தவர்மன் கேள்வி.

“இணையாவிட்டால் தென் கலிங்க மன்னர் உட்கார வேண்டிய இடத்தில் வட கலிங்க மன்னர் எப்படி உட்கார முடியும்?”

இதற்கு உடனே பதில் சொல்லாமல் ஏதோ யோசித்த அனந்தவர்மன் சில விநாடிகள் கழித்து, “ஆமாம்! நீங்கள் அறியக் காரணமில்லை. பேரரசன் கரவேலன் காலத்தில் ஒன்றாயிருந்த கலிங்கம் பிற்காலத்தில் இரண்டாகப் பிரிந்தது உண்மைதான். ஆனால் தென் கலிங்கம், வட கலிங்கத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது. தவிர, சமீபத்தில் வட கலிங்கத்துக்கும், தென் கலிங்கத்துக்கும் ஓர் ஒப்பந் தமும் ஏற்பட்டிருக்கிறது ஒரு காரணத்தால்...” என்று விவரித்த அனந்தவர்மன், இளைய பல்லவனைக் கூர்ந்து நோக்கினான்.

“என்ன காரணம்?” என்று கேட்டான் இளைய பல்லவன்.

அதுவரையில் பளிச்சிடாத அனந்தவர்மனின் கண் கள் பளிச்சிட்டன. உணர்ச்சியில்லாத குரலில் உணர்ச்சி ஊடுருவிச் சென்றது. குருதியி’ல வ்ெலளுாதத்த உதடுகளி லும் குருதி பாய்ந்தது. “சோழப் பேரரசின் பேராசை, விஸ் தரிப்புக் கொள்கை” என்று இரைந்தான் அனந்தவர்மன்.

சோழ நாட்டிலும் அவனுக்குள்ள வெறுப்பை பூர்ண மாக உணர்ந்துகொண்டான் கருணாகர பல்லவன். இருப்பினும் தான் உணர்ச்சி வசப்படாமல் சொன்னான் “காரணம் அது, ஒப்பந்தம் எது?” என்று கேட்டான்.

“சோழப் பேரரசு தாக்கினால் தென் கலிங்கத்தை வட கலிங்கம் காப்பாற்றும். ஆகவே வட கலிங்கத்தின் உரிமை யைத் தென் கலிங்கம் ஏற்றிருக்கிறது. அதன் பாதுகாப்பு நீதி நிர்வாகம் எதிலும் வட கலிங்கம் தலையிடலாம். அந்த ஓப். பந்தத்தின் விளைவாகத்தான் இந்த ஸ்தானத்தில் நான் அமர்ந்துருக்கிறேன்” என்றான் அனந்தவர்மன், சட்டப்படி தனக்கு விசாரணை செய்யும் உரிமை உண்டென்று காட்ட.

இதைக் கேட்ட இளையபல்லவன் நகைத்தான். உங்கள் உரிமையைப் புரிந்துகொண்டேன். தென் கலிங்கத் திற்கு என் அனுதாபங்கள் இருக்கட்டும்” என்றான் சரிப் போடு சிரிப்பாக.

அனந்தவர்மன் கண்களில் கோபம் துளிர்த்தது. “அனுதாபம் எதற்கு?” என்று கேட்டான்.

“சோழ அக்கம் இங்கு ஏற்படவில்லை. தென் கலிங்கம்முறை தவறி நடக்காவிட்டால் ஏற்படவும் ஏற்படாது. ஆனால் வடகலிங்கத்தின் ஆதிக்கம் இப்பொழுதே ஏற்பட்டுவிட்டது. அது கடக்க, அதிக்கத்திற்கு உட்படுவ தென்றால் யார் ஆக்கத்திற்கு உட்பட்டாலென்ன?” என்று வினவினான் இளைய பல்லவன், இளநகை புரிந்து.

“சோழர் வேறு இனம், கலிங்கம் வேறு இனம்.

“மாந்தர் அனைவரும் ஒரே இனம் என்று தமிழர்கள் நினைக்கிறார்கள். தவிர இன்னொரு நாட்டவரின் ஆதிக் கத்தைவிட ஓர் இனம் தன் இனத்தின்மீதே நடத்தும் அக்கம் மிகக் கொடுமையானது. சரித்திரம் இதற்குச் சான்று.

“இதைக் கேட்ட அனந்தவர்மன் தனது ஆசனத்தில் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான். “சரித்திரம் இதுவரை காணாத புதிய சான்றுகளைக் கலிங்கம் அளிக்கும். இன் னொருவன் ஆதிக்கத்தைவிட இனத்தவன் ஆதிக்கம் மேம் பட்டது என்பதைக் கலிங்கம் உலகுக்கு புகட்டும். உங்களைப் போன்ற ஒற்றர்களால் நிரப்பப்பட்ட பாலூர்ப் பெருந்துறையை, வாணிபத்திலும் செல்வத்திலும் சிறந்த ஊராக மாற்ற நாம் முயலுவோம். அந்த முயற்சியின் முதல்படி இங்குள்ள தமிழ் ஒற்றர்களை விலக்குவது” என்று உஷ்ணத்துடன் சொற்களை உதிர்த்தான் அனந்த வர்மன்.

இளையபல்லவன் கண்களில் வீரச் சுடர் படர்ந்தது. பெயர் சொல்லியே வட கலிங்க மன்னனை அழைத்தான். “அனந்தவர்மரே! தென் கலிங்கத்துக்குத் தாங்கள் செய்யும் பாசாங்கால் தீமை விளைவிக்கிறீர்கள். தமிழர்களிடம் உமக்குள்ள நீண்டநாள் பகையைத் தீர்த்துக்கொள்ளத் தென் கலிங்கத்தையும் அதன் பெரிய துறைமுகமான இந்தப் பாலூர்ப் பெருந்துறைப் பட்டணத்தையும் கருவி களாக உபயோகப்படுத்திக் கொள்கிறீர்கள். இங்கு இது வரை நடந்த விசாரணையைக் கவனித்தேன். விசாரணை நடக்கவில்லை. வஞ்சம் தீர்த்துக் கொள்ளப்பட்டது. இது தென்கலிங்கத்துக்கு நன்மை பயக்காது. சோழர்களை அனா வசியமாக எழுப்புவது உறங்கும் புலியை எழுப்புவதாகும். அதன் பாய்ச்சலை வீணாக விலைக்கு வாங்கிக் கொள்ளாதீர்கள்” என்று பேசிய கருணாகர பல்லவன், மண்டபத்தில் சுற்றிலும் நின்ற மக்களை நோக்கித் தன் கையை ஒருமுறை நீட்டி, அனந்தவர்மனை நோக்க, “இந்த மக்களையெல்லாம் வீணாகப் பலி கொடுக்க வேண்டாம். நான் இன்று கொண்டு வந்திருப்பது சமாதான ஓலை. நீட்டுவது சமாதானத்தின் கரம். பற்றிக் கொள்ளுங்கள். ஒன்றி வாழலாம்” என்று இடிபோல் சொற்களை எதிர்த்தான்.

அனந்தவர்மன் முகத்தில் உணர்ச்சிகள் மங்கின. பழையபடி. கல்லாகிவிட்டது அவன் முகம். மண்டபத்தி விருந்த தென்கலிங்க மக்களிடம் காணப்பட்ட சலசலப்பை அவன் பிரேதக் கண்கள் கவனித்தன. உதடுகள் முன்னை விடச் சற்று அதிகமாக வெளுத்தன. சொற்கள் நிதானமாக, அழுத்தமாக உதிர்ந்தன. “இளைய பல்லவரே! நீர் இப் பொழுது பேசிய பேச்சுகள் சமாதானத்தை அளிப்பதற்கு அறிகுறியல்ல. சோழர்கள் பராக்கிரமத்தைக் குறிப்பிட்டு அச்சுறுத்துகிறீர்கள். அச்சுறுத்தலுக்குக் கலிங்கம் இடங் கொடாது. அச்சத்துக்குப் பணிந்து அடிமையாகாது. பெரிய வரலாற்றில் இடம் பெறும் மக்களின் பழக்கமும் அதுவல்ல, இத்தகைய பயமுறுத்தல்கள் உங்கள் சமாதான ஓலையின் போலித்தனத்தை நிரூபிக்கின்றன. உங்கள் ஓலையையும் படித்துப் பார்த்தோம். சமாதானத்துக்குச் சுங்கமாகக் கலிங்கத்தின் துறைமுகங்களைக் கேட்கிறது சோழ நாடு. துறைமூகங்களை இழந்தால் கலிங்கம் வாணிபத்தை இழக்கும். வாணிபத்தை இழக்கும் நாடு செல்வத்தை இழக்கும். செல்வத்தை இழக்கும் நாட்டில் வறுமை, அறியாமை, துன்பங்கள் தாண்டவமாடும். இதற்குக் கலிங்க மக்கள் சம்மதிக்கமாட்டார்கள்” என்று சொன்ன அனந்தவர்மனின் குரலை ஆமோதித்துப் பாலூர்ப் பெருந்துறை மக்களின் குரல்கள் பல, “சம்மதிக்க மாட்டோம்.” “இவன் போலி.” “கொல்லுங்கள் தமிழர் களை” என்று எழுந்து மண்டபத்தின் சுவர்களில் தாக்கி எதிரொலி செய்தன.

சோழர்கள் கலிங்கத்தின் துறைமுகங்களைக் கேட்டது சொர்ண பூமியிடம் வர்த்தகம் நடத்தவேயொழிய, அரசியல் ஆதிக்க அசையால் அல்ல என்பதைக் கருணாகர பல்லவன் உணர்ந்தே இருந்தான். ஆனால் சாட்சியங்கள் அன்று அவனுக்கு எதிராகவும், பலமாகவுமிருந்தன. தான் எதைச் சொன்னாலும் நம்பாத அளவுக்கு அனந்தவர்மன் வழக்கை ஜோடித்து மக்களின் வெறியைக் கிளப்பி விட்ட தைக் கண்ட கருணாகர பல்லவன், கோபம் உச்ச நிலையை எட்டியதால், சிவந்த கண்களுடனும், சற்றே துடித்த உதடுகளுடனும் இரைந்து பதில் சொன்னான், “அனந்தவர்மரே! நீங்கள் சொல்வதில் தினையளவும் உண்மையில்லை என்பதை உங்கள் மனம் அறியும். சோழர் களுக்கு ஆதிக்க நோக்கமிருக்கும் பட்சத்தில் இராஜேந்திர சோழதேவர் கங்கை கொண்ட காலத்திலேயே இடையி லிருந்த இந்தக் கலிங்கத்தை அடிமைப்படுத்தியிருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை. சுதந்திரமாகவே இருக்கவிட்டார். ஏன்? ஆதிக்க ஆசை இல்லை. கலிங் கத்தை அடக்கச் சோழ நாட்டுக்கு இன்றும் பலமிருக்கிறது. பலத்தை உபயோ௫க்கவில்லை. ஏன்? ஆஇக்க அசை யில்லை. இத்தனை அத்தாட்சிகளிலிருந்தும் உமது மக்க எளிடையே வெறியைக் கிளறிவிட்டு தமிழர்கள் தலைகளைத் துண்டித்தும், தண்டித்தும் பல வழிகளில் கொடுமை செய்தும் போருக்கு அடிகோலுகிறீர். இன்று உங்களை எச்சரிக்கிறேன். வீணான விரோதத்தை வலுவில் சம்பாதிக் காதீர்கள். சம்பாதித்தால் லாபமில்லை. உங்களுக்குப் பெருநாசம்” என்று சீற்றத்துடன் கூறினான்.

இதைக் கேட்ட மண்டபத்திலிருந்த கலிங்க மக்கள் ஒருமுறை நடுங்கினார்கள்.

கருணாகர பல்லவனின் ஆவேசம் அவர்களைக் கிடுகிடுக்க வைத்தது.

புலியைத் தட்டி எழுப்பினால் இப்படித்தானிருக்குமோ என்றுகூட நினைத் தூர்கள்.

அந்த நடுக்கமே அவர்களை மீண்டும் கூச்சலிடச் செய்தது.

“அவனைக் கொல்லுங்கள்!”

“கொண்டுபோங்கள் - கொலைக் களத்துக்கு” என்ற கூச்சல்கள் எழுந்தன.

அந்தக் கூச்சலை ஊடுருவிச் செல்லும் முறையில் அனந்தவர்மன் தீர்ப்புக் கூறினான் “போலிச் சமாதான ஓலையைக் காட்டி இங்கு வேவு பார்க்க வந்த குற்றத்திற்காகவும், சுங்கச்சாவடி யில் தென் கலிங்கத்து மன்னனை அவதூறாகப் பேசியதற் காகவும், தென் கலிங்க வீரர்களில் சிலரைக் கொன்றதற் காகவும், உனக்கு மரணதண்டனை விதிக்கிறேன். இந்தக் கூலவாணிகனுக்கு விசாரணை தேவையில்லை. நீண்ட நாளாக அவன் ஒற்றனென்பதற்கு அத்தாட்சிகள் நிரம்ப இருக்கின்றன. ஆகவே அவனுக்கு மரணதண்டனை விதிக்கிறேன். நீங்களிருவரும் இங்கிருந்து நேராகக் கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு எந்தக் கலிங்க மக்களுக்கு எதிராகச் சதி செய்தீர்களோ அந்தக் கலிங்க மக்களின் முன்பாக உங்கள் தலைகள் சீவப்படும்.

“கொலைவாளின் கூர்மையைப் பழிக்கும் குரலில் இந்தத் தீர்ப்பைக் கூறி, கருணாகர பல்லவனைத் தன் பிரேதக் கண்களால் நோக்கிய அனந்தவர்மன், “அநபாயச் சோழன் தப்பிவிட்டானென்று நினைக்க வேண்டாம். சிக்கிரம் அவனையும் இங்கு கொண்டு வருவேன்” என்றும் சீறிச் சொற்களை உதிர்த்தான். அந்தச் சொற்களை உதிர்த்த உதடுகள் இடீரென வெளுத்தன. அசைவற்று நின்றன. “நீ கொண்டு வரத் தேவையில்லை அனந்தவர்மா! நானே வந்துவிட்டேன்” என்ற கணீரென்ற சொற்கள் அந்த நீதி மண்டபத்தை ஊடுருவிச் சென்று திடீரென பயங்கர அமைதியை நிலைநாட்டின. அனந்தவர்மன் கண்கள் வாயிலை அச்சத்துடன் நோக்கின. வாயிலை மறித்துக் கொண்டு தன்னந்தனியே நின்றிருந்தான், பிற்காலத்தில் குலோத்துங்கன் என்ற பெயருடன் சோழ அரியணையில் அமரவிருந்த அநபாய சோழன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் - 13

அபாயத்தை மறைத்த அழகு

யாரும் தப்ப முடியாத பாலூர்ப் பெருந்துறைச் சிறையிலிருந்து எந்த அநபாயன் தப்பினானோ, எந்த அநபாயனை மீண்டும் சிறைப்பிடிக்க பாலூரின் படைப் பிரிவுகள் அந்தச் சிறு நகரத்தை நான்கு நாள்களுக்கு மேல் சல்லடைப் போட்டுச் சலித்தும் பயனற்று அலுத்துவிட்ட னவோ, எந்த அநபாயனை நீதி மண்டபத்துக்குக் கொண்டு வருவேன் என அனந்தவர்மன் அகந்தையுடன் கூறினானோ, அந்த அநபாயனுடைய குரல், “நீ கொண்டு வரத் தேவை யில்லை அனந்தவர்மா! இதோ நானே வந்துவிட்டேன் /” என்று நீதி மண்டபத்தை ஊடுருவிச் சென்றதும், மித மிஞ்சிய திக்பிரமைக்கு உள்ளாகி நீதி மண்டபத்தின் வாயிலை நோக்கிய பாலூர்ப் பெருமக்கள், அந்த வாயிலை அடைத்துக் கொண்டு நின்ற வாலிபன் தோற்றத்தையும் அவன் முகத்தில் மலர்ந்து கடந்த மந்தகாசத்தையும் கண்ட தும் விவரிக்கவொண்ணா வியப்பையும் அடைந்தார்கள்.

சிங்கத்தின் வாய்க்குள் தானாகத் தலையை விடுபவன் போல், ஆயுதம் தாங்கிய கலிங்க வீரர்கள் நிரம்பியிருந்த அந்த நீதி மண்டபத்துக்குள் மிகத் துணிவுடன் நுழைந்த அந்த வாலிபச் சோழனின் கண்கள் மிக அலட்சியமாக அந்த மண்டபத்தை ஒருமுறை அளவெடுத்ததையும், பிறகு அனந்தவர்மனின் மேல் நிலைத்ததையும். கண்ட மண்ட பத்திலிருந்த மக்களும் வீரரும், அந்த வாள்கண்கள் ஆக்ஞை யிட சிருஷ்டிக்கப்பட்டனவேயொழிய அச்சத்துக்காகச் சிருஷ்டிக்கப்படவில்லை என்பதைப் புரிந்து கொண்டார் கள். உயரத்திலும், பருமனிலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட கருணாகர பல்லவன் போலவே இருந்த அநபாயனுக்கு, இளையபல்லவனின் கன்னத்திலிருந்த வெட்டுக்காயத் தழும்பு இல்லாதிருந்ததால், அவன் முகம் குழந்தையின் முகம் போலவே இருந்ததையும், அந்தக் குழந்தை முகத்திலும் பருவ வயதுக்கான சிறு மீசை துளிர் விட்டி ருந்ததையும், அதன் விளைவாக வதனத்தில் வீரக் களை பூரணமாகப் பொலிவு பெற்றுத் துலங்கியதையும் கண்ட மக்கள், நல்ல நெஞ்சுரமுள்ள ஒரு வாலிபன் முன்பு தாங்களிருப்பதை உணர்ந்தார்கள். அநபாய சோழனின் இடைக் கச்சையிலிருந்தது தொங்கிய நீண்ட வாள்கூட உருவப்படவில்லையென்பதையும் எந்த ஆயுதத்தையும் கையிலெடுக்காமலே அநபாயன் அந்த வாயிற்படியில் நின்றதையும் கண்ட அனைவரும், ‘துணிவுக்கும் ஓர் எல்லையிருக்க வேண்டாமா?” என்று சற்று அவனைக் கடிந்து கொள்ளவும் செய்தார்கள்.

அநபாயன் வரவு கருணாகர பல்லவனுக்குக்கூட பெரும் அதிர்ச்சியைத் தந்ததென்றாலும், அநபாயன் அப்படி உதவி ஏதுமில்லாமல் தன்னந்தனியாக அந்த நீதி மண்டபத்துக்கு வந்தது சரியல்ல என்ற நினைப்பே அவன் சிந்தையில் அந்தச் சில விநாடிகளில் ஓங்கி நின்றபடி யால், அடுத்தபடி அநபாயனுக்கு என்ன தீங்கு நேருமோ என்ற இஒலுக்கே ஆரம்ப அதிர்ச்சி இடம் கொடுத்தது. வாளும், வேலும் தாங்கிய நூறு கலிங்க வீரர்களுக்கு மேலிருந்த அந்த மண்டபத்திலிருந்து அநபாயன் தப்புவதும் அத்தனை எளிதல்ல என்று தோன்றியது இளைய பல்லவ னுக்கு. அந்த இடத்தில் அநபாயனை எதிர்பார்க்கவும் இல்லை அவன். சிறையில் உணவுச்சலைச் செய்தியைப் படித்ததும், ஒன்று சிறையிலிருந்து நீதி மண்டபத்துக்குப் போகும்போது மீட்கப்படுவோம். அல்லது நீதிமண்டபத்தி லிருந்து கொலைக்களத்துக்குப் போகும் வழியில் மீட்கப் படுவோம்’ என்று திட்டமாக நம்பியதன்றி, கூலவாணிக னுக்கும் அதை எடுத்து ஓதியிருந்த இளையபல்லவன், தன் கணக்குத் தப்புக்கணக்காகி விட்டதையும், எந்த நீதி மண்டபத்தை அநபாயன் அணுக முடியாதென்று அவன் நினைத்தானோ அந்த நீதி மண்டபத்துக்கே அநபாயன் வந்துவிட்டதையும் எண்ணிப் பார்த்து, எந்தத் துணிவுடன் இவர் இங்கு வந்தார்?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு விடையேதும் தெரியாமல் விழித்தான்.

கருணாகரபல்லவனது எண்ணங்களும் நீதி மண்ட பத்தில் குழுமியிருந்த மற்றவர் எண்ணங்களும் இவ்விதம் வியப்பிலும் குழப்பத்திலும் ஈடுபட்டிருந்த சில விநாடிகள், நீதி ஸ்தானத்தில் அமர்ந்திருந்த அனந்தவர்மனுக்குப் பெரும் திகலையும் சங்கடத்தையும் அளித்ததால் அவனது உணர்ச்சிகள் கொந்தளித்து நின்றன. கொந்தளித்த உணர்ச்சி அலைகள் மோதும்போது முகமும் உதடுகளும் திடீரெனச் சிவந்தும், பின்வாங்கியபோது திடீரென வெளுத்தும் இரண்டு மூன்று முறைகள் மாறிமாறி பயங்கரத்துக்கும் பயத்துக்கும் அவன் மனம் இலக்காஇயிருந்ததைக் குறிப் பிட்டன. கருணாகர பல்லவனை விடுவிக்க அநபாயன் கண்டிப்பாய் முயலுவான் என்பதை அனந்தவர்மன் அறிந்திருந்தாலும், அந்த முயற்சியை நீதிமண்டபத்துக்குள் வைத்துக்கொள்வான் என்பதை அவன் சிறிதும் எதிர் பார்க்காததால், கணீரென அநபாயனின் குரல் நீதி மண்ட பத்தில் ஊடுருவிச் சென்றதும் அவன் சில வினாடிகள் சிலையென உட்கார்ந்துவிட்டான். பிறகு மெள்ளச் சமாளித்துக்கொண்டு, வீரர்கள் பக்கம் கண்களைச் செலுத்தினான். அந்தப் பார்வையின் பொருளைப் புரிந்து கொண்டு வீரர்கள் வாயிற்படியை நோக்கிக் காலடி எடுத்து வைக்கவும் முற்பட்டனர். மீண்டும் அதிகாரத் துடன் எழுந்த அநபாயனின் குரல் அந்த கால்களைக் கற்சிலைகளாக அடித்தன.

வீரர்கள் அசையுமுன்பாகவே, “இந்த மண்டபத்து லிருப்பவர்கள் யார் அசைந்தாலும் சரி, இருப். பிடத்தை விட்டு ஓர் அடி எடுத்து வைத்தாலும் சரி, அனந்தவர்மன் அடுத்த விநாடி. பிணமாக விடுவான். கலிங்கத்துக்கு வேறு மன்னனைத் தேட வேண்டியிருக்கும்!” என்ற அநபாயனின் அதிகாரக் குரல் மறுபடியும் அந்த மண்டபத்தை ஊடுரு விச் சென்றது. அந்தக் குரலிலிருந்த திடத்தைக் கண்ட மக்கள் ஒருமுறை நடுங்கினர், அசைந்த வீரர் அசைவற்று நின்றனர். தான் மரண தண்டனை விதிக்க வேண்டிய நீதி மண்டபத்தில் தனக்கே மரண தண்டனை விதிக்க அநபாயன் முற்பட்டதைக் கண்டு ஒரு விநாடி நடுங்கிய அனந்த வர்மன், வாயிற்படியில் மறுபடியும் தன் பிரேதக் கண் களை ஒட்டி அங்கு அநபாயன் ஆயுதமெதையும் உருவிப் பிடிக்காமல் வெற்றுக் கையுடனே நின்றதையும், அவனுக் குத் துணையாக யாருமில்லாததையும் கண்டு சற்றுத் தைரியம் கொண்டு, “வீணாக மிரட்டுகிறான். அஞ்சாதீர் கள்! நெருங்கிப் பிடியுங்கள் அவனை!” என்று கூவினான்.

மறுவிநாடி, பிரேதக் கண்கள் உள்ளடங்கின. அச்சத் தால் உதடுகள் மீண்டும் வெளுத்தன. திடீரென எழுந்த அநபாயனின் சிரிப்பொலி அந்தப் பெரும் நீதி மண்டபத் தின் சுவர்களில் தாக்கிப் பலவிதமாக எதிரொலி செய்ததால் தன்னை நோக்கி நூற்றுக்கணக்கான பேர்கள் நகைப்பது போன்ற பிரமை ஏற்பட்டது அனந்தவர்மனுக்கு. அநபாய னைச் சிறைச் செய்ய உத்தரவிட்டதும், கண்ணிமைக்கும் நேரத்தில் அவனுக்குப் பின்னால் நின்றிருந்த ஓர் உருவம் தன்னை நோக்க, நாணில் ஊன்றி இழுக்கப்பட்ட பெரும் கணையும் வில்லுமாகக் காட்சியளித்ததைப் பார்த்த அனந்தவர்மன், உண்மையைப் புரிந்துகொண்டான். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட அந்த நிகழ்ச்சியால் நிலைமை புரியாதவர்களுக்கும் புரிய வைக்க அநபாயன் மீண்டும் பேசினான் “புரிகிறதா அனந்தவர்மா? முன்னேற் பாடின்றி இந்த மண்டபத்துக்கு வர நான் முட்டாளல்ல. இதோ. தொடுக்கப்பட்டிருக்கும் ஆம்பு நேராக உன் இதயத்துக்குக் குறி வைக்கப்பட்டிருக்கிறது. கணையின் நுனி நல்ல எஃகால் செய்யப்பட்டு விஷம் ‘தோய்க்கப்பட் டிருக்கிறது. ஆம்புக்கு வாயுவேகம் கொடுக்க அதன் அடிப் பாகத்தில் புறாவின் இறகுகள் பொருத்தப்பட்டி ருக்கின்றன. இது எய்யப்பட்டால் உன் கதி என்னவாகுமென்பதை நான் சொல்லத் தேவையில்லை?” என்ற சொற்கள் அவன் முதலில் வெளியிட்ட சிரிப்பைத் தொடர்ந்து கடுமையாக வெளிவந்தன.

அன்று அச்சரியப்படுவதற்காகவே தாங்கள் அந்த நீதி மண்டபம் வந்ததாக மக்கள் நினைத்தார்கள். நாண் கயிற்றைக் காதுவரையில் இழுத்து ஆம்பைக் குறி வைத்து வில்லைத் தாங்கி நின்ற உருவத்தைக் கண்டதும், மண்ட பத்திலிருந்த வீரர்களும் மற்றவர்களும் அப்படியே வியப்பில் அழ்ந்தார்களானாலும், அந்த வியப்பு மற்ற எல்லோரையும்விட இளைய பல்லவனையே அதிகமாக ஆட்கொண்டது. வில்லேந்தி நின்றது நாணிழுக்கப்பட்ட வில்லைவிட வளைந்த புருவங்களையுடைய கடாரத்தின் இளவரசி காஞ்சனாதேவி. அவளது மலர்க்கரங்கள் வில்லேந்தி நின்ற உறுதியைக் கண்டு பெரிதும் வியப்பெய்தி னான் கருணாகர பல்லவன். அவன் உணர்ச்சிகளை அந்தக் சமயத்தில் தொட்டது காஞ்சனாதேவியின் இணை யற்ற அழகினால் ஏற்பட்ட அசையா, அவள் வில்லைப் பிடித்து நின்று. காட்டிய தைரியத்தைக் கண்டு ஏற்பட்ட ஆச்சரியமா, அல்லது இத்தகைய அபாயமான பணியில் அவள் ஈடுபட்டுவிட்டாளே என்பதால் ஏற்பட்ட அச்சமா என்பது அவனுக்கே விளங்கவில்லை.

வில்லைப் பிடித்த இடது கரத்தின் விரல்கள் மடிந்து கிடந்த அழகும், நாணில் பொருந்தியிருந்த ஆம்பையும் நாணின் அந்தப் பகுதியையும் பிடித்து இழுத்துக் கொண்டு காதுக்கருகில் இருந்த கட்டை விரலும் ஆட்காட்டி விரலும் ஏதோ காதுக்குச் சேதி சொல்வது போலிருந்த கம்பீரமும், அவள் மலர்க்கண்கள் தன்னைக்கூட நோக்காமல் வாளின் நுனியையும்’ அனந்தவர்மன் மார்பையும் இணைத்துப் பார்த்துக் கொண்டிருந்த திடமும், மார்புக்குக் குறுக்கே வருடிச் சென்ற நாண் கயிற்றின் கோலமும், இளைய பல்லவன் இதயத்தைப் பலபடி அலைக்கழித்தன. ஆம்பெய்ய வந்த அந்தச் சமயத்திலும் அவள் கொண்டையைத் தூக்கி மிக இன்பமாக முடிந்திருந்ததையும், அந்தக் கொண் டையை அலங்காமல் நிறுத்த ஓர் ஆபரணம் அதைச் சுற்றி ஓடியதையும் கவனித்த கருணாகர பல்லவன், அவள் வாளெடுத்துச் சுழற்றினாலும் அந்தக் கொண்டை மயிர் அவிழ்ந்து விழுந்து அவளுக்குச் சங்கடம் விளைவிக்கா தென்பதைப் புரிந்தகொண்டான். முதல் நாளிரவு கட்டியதுபோல் அவள் சேலையை அன்று கட்டாமல், கால்களுக்கிடையே சுருட்டி வளைத்துக் கட்டியிருந்ததன்றி, இடையிலும் சல்லடத்தை வைத்துப் பிணைத்திருந்தாளா கையால் அவள் எத்தனை நேரம் வேண்டுமானாலும் எத்த கைய இடுக்கண்ணுமின்றிப் போராட முடியும் என்பதை யும் உணர்ந்துகொண்டான் இளையபல்லவன். அவள் இடையிலிருந்த நீண்ட வாளும் அவள் போர்ச் சன்னத் தைத் தெரியப்படுத்தியது. இருப்பினும் அவளிடம் முதல் நாளே ஏற்பட்டுவிட்ட விவரிக்க இயலாத ஓர் அன்பினால் அவள் நிலை பற்றி அச்சமே கொண்ட கருணாகர பல்லவன், சில விநாடிகள் மலைத்தே நின்றான். அந்த மலைப்பு மண்டபத்திலிருந்த மற்ற மக்களுக்கும் இருந்தது. ஆனால் அவர்களது மலைப்பின் காரணம் வேறு, அஸ்தி வாரம் வேறு. ஒரு பெண் இத்தனை அபாயத்தில் பிரவேசிக்கிறாளே என்பதால் ஏற்பட்ட மலைப்பு அது. “அதுவும் எத்தனை அழகான பெண்! என்ன இளமை!” என்ற எண்ணங்களால் ஏற்பட்ட பரிதாபம் கலந்த மலைப்பு அது.

அந்த மலைப்பு அனந்தவர்மனுக்கும் ஏற்படத்தான் செய்தது. அத்தனை அழகிய துணிவுள்ள பெண் யாரா யிருக்கக்கூடும் என்று ஒரு கணம் எண்ணிப் பார்த்ததன்றி, “கேவலம் ஓர் இளம் பெண்ணுக்கு விற்பயிற்சி எத்தனை இருக்க மூடியும்? என்ற எண்ணமும் அனந்தவர்மனுக்கு ஏற்படவே, அவன் கண்களில் விபரீத ஓஒளியொன்றும் சுடர்விட்டது. அதன் காரணத்தை அநபாயன் புரிந்து கொண்டுவிட்டானென்பது அவனுடைய அடுத்த வார்த்தை களில் வெளியாயிற்று. “அனந்தவரா்மா! இளம்பெண் என்ப தால் வாளின் குறி தவறுமென்று நினைக்காதே. இணை யிலா விற் பயிற்சியும், வாள் பயிற்சியும் உடையவள் காஞ்சனாதேவி. கடாரத்தின் மன்னர் குணவர்மனுக்குப் பிள்ளையில்லாததால் பெண்ணையே பிள்ளையாக வளர்த் திருக்கிறார். உடனே உன் வீரர்களை ஆயுதங்களைக் &ழே எறியச் சொல். இல்லையேல் இந்த விநாடியே அந்த வாள் உன் மார்பை நோக்கிப் பறக்கும். சக்கரம் உத்தர விடு!” என்று ஈட்டியின் முனையைவிடக் கூர்மையாகத் தொனித்த சொற்களை உதிர்த்தான் அநபாயன்.

அனந்தவர்மன், அநபாயனையும் பார்த்து, வில்லேந்தி நின்ற காஞ்சனாதேவியையும் பார்த்தான். அநபாயன் உத்தரவிட்ட நிலையிலும் அவன் இதழ்களில் தவழ்ந்த புன்னகை பயங்கரமாயிருந்ததென்றால், அதைவிட அச்சத்தை அளித்தது வில்லேந்திய ஏந்திழையின் கண் களில் கண்ட. உறுதி. அந்த நிலையில் என்ன செய்வ தென்பதை அறியாமல் விழித்த அனந்தவர்மனை நோக்கிய அநபாயன், “விழித்துப் பயனில்லை அனந்தவர்மா! உத்தரவிடு. காலம் கடத்தினால் துணை வருமென்று கனவு காணாதே. இந்த மண்டபத்தைச் சுற்றிலும் பீமன் நிறுத்திய ஐம்பது வீரர்களையும் வெட்டிவிட்டோம். கலிங்கத்தின் படையில் பணி செய்யும் தமிழகத்தின் வீரரில் நூறு பேர்கள் இந்த மண்டபத்தைச் சூழ்ந்திருக்கிறார்கள். முன் னேற்பாடில்லாமல் நான் வந்திருப்பதாக மனப்பால் குடிக்காதே. உன் நன்மையை முன்னிட்டுக் கூறுகிறேன். உத்தரவிடு!” என்று கூற்றினும் கொடிய’ சொற்களைக் கொட்டினான்.

அடுத்த விநாடி, பலதரப்பட்ட ஒலிகளால் பாலூர் நீதமண்டபம் பயங்கரமாக அதிர்ந்தது. அந்த நீதி மண்டபம் அநபாயனின் சொற்களால் அதிர்ந்ததா, அனந்தவர்மன் கத்தினானே, “ஏன் நிற்கிறீர்கள்? எறியுங்கள் ஆயுதங்களை!” என்ற அந்தக் கூச்சலால் அதிர்ந்ததா, வேல்களும் வாள்களும், ‘இணாங் கிணாங்” என்று எறியப் பட்டனவே, அந்த ஒலியால் அதிர்ந்ததா என்று அறியக் கூடாத நிலை ஏற்பட்டது. ஆயுதங்களின் வீழ்ச்சியே கலிங்கத்தின் வீழ்ச்சியோ என்று எண்ணுமளவுக்கு எதிரொலி கிளப்பிய அந்த நீதி மண்டபத்தில், அந்த எதிரொலியைக் இழித்துக்கொண்டு கிளம்பிய அநபாய னின் குரல் திட்டமான உத்தரவுகளைக் கிடுகிடுவென்று பிறப்பிக்கத் தொடங்கியது. “காஞ்சனா தேவி! அனந்தவர் மன் மார்புக்குறியை விட்டுக் கணையை அகற்றாமல் நில்லுங்கள். கருணாகரா! ஏன் மலைத்து நிற்கிறாய்? கலிங்க வீரர்கள் எறிந்த ஆயுதங்களைத் திரட்டி அவர்கள் கைகளுக்கு எட்டாதபடி மண்டபத்தின் ஒரு மூலையில் கொண்டு போய் வை. பிறகு நீ மட்டும் புறப்பட்டு என் அருகில் வா. தண்டனை விதிக்கப்பட்ட தமிழர்களே! ஒவ் வொருவராகச் சீக்கிரம் வெளியே செல்லுங்கள். குழப்ப மில்லாமல் எங்களை நதெறித்துத் தள்ளாமல் செல்லுங்கள். சேந்தா! நீயும் மற்றத் தமிழர்களுடன் சென்றுவிடு. வெளியே சென்றதும் தலைமறைந்துவிடு. பிறகு, சந்திப் போம். கலிங்க வீரர்களே! நின்ற இடத்தில் அசையாமல் நில்லுங்கள். அனந்தவர்மா! எந்தக் காரணத்தை முன் னிட்டும் நீதி ஸ்தானத்திலிருந்து அசையாதே!” என்று விடுவிடுவென்று ஆணைகளைப் பிறப்பித்தான் அநபாயன்.

அவன் அணைப்படி காரியங்கள் வெகு துரிதமாக நடந்தன. கூலவாணிகன் சேந்தன் காட்டிய வழியைப் பின்பற்றி, தண்டனையிடப்பட்ட மற்றத் தமிழர் தாங்கள் நிதானத்துடனும் குழப்பமில்லாமலும் நடந்துகொள்ள முடியும் என்பதைக் காட்டினார்கள். அவர்கள்’ வெளியேறியதும் கருணாகர பல்லவன் வீரர்களின் ஆபுதங்களை யெல்லாம் திரட்டி ஒரு மூலையில் வைத்துவிட்டுத் தனக்கு மட்டும் ஒரு வாளைக் கையில் எடுத்துக் கொண்டான். கலிங்க வீரர் அநபாயன் சொன்னபடி சிலையென நின்றனர். தன் கண் முன்பாகவே தான் இட்ட நீதி குலைந்து சிதறிப் போவதையும் தண்டனையடைந்த தமிழர் சுதந்திரத்துடன் ஓடிவிட்டதையும் பார்த்த அனந்தவர்மன் மனம் உடைந்து கண்களில் முன்னைவிடப் பிரேதக் களை அதிகமாகச் சொட்ட ஆசனத்தில் உட்கார்ந்திருந்தான். அந்த நிலையில் அவனிடம் விடை பெற்ற அநபாயன் சொன்னான் “அனந்தவர்மா, வருகிறேன். பின்னால் ஒரு காலத்தில் நாம் முடியுமானால் போர்க்களத்தில் சந்திப்போம். ஒர் எச்ச ரிக்கை மட்டும் செய்கிறேன், உனக்கும் பீமனுக்கும். தமிழ் மக்களை இப்பொழுது துன்புறுத்துவது போல் இனி மேலும் துன்புறுத்தாதே. அப்படித் துன்புறுத்தியதாகத் தெரிந்தால் வெகு சிக்கிரம் பழிக்குப் பழி வாங்கியே தீருவேன்!” என்று கூறிவிட்டுக் காஞ்சனாதேவியை நோக்கி, “இளவரசி! நானும், கருணாகரனும் கதவுக்கு அப்புறம் சென்றதும் நீங்கள் மெள்ளப் பின்னடைந்து வாருங்கள்” என்று உத்தரவிட்டான்.

அப்படியே பின்புறமாகவே வெளியே நகர்ந்த மூவரும் வாயிற்படியைத் தாண்டியதும் சரேலென அந்த நீதி மண்டபத்தின் பெரும் கதவுகளை. அநபாயன் சாத்திய தன்றி, தான் கொண்டு வந்திருந்த ஒரு பெரும் பூட்டையும் சாவியையும் இளையபல்லவனிடம் கொடுத்து, “கருணாகரா! இந்த நீதி மண்டபத்தைப் பூட்டிவிடு. நாம் சிறையிலிருந்தது போல் அனந்தவர்மனும் நீதி மண்டபத்தில் சில நாழிகை கள் சிறையிருக்கட்டும்” என்று கூறி நகைத்தான். அந்த நகைப்பில் கலந்துகொண்ட கருணாகர பல்லவனின் கரங்கள் வெகுவேகமாக வேலை செய்தன. நீதி மண்டபத் தைப் பூட்டிச் சாவியைத் தூரத்தில் எறிந்த கருணாகர பல்லவனையும், வில்லை மீண்டும் தோளில் மாட்டிக் கொண்டு கணையை ஆம்பறாத் தாணியில் அடைத்து விட்ட அஞ்சன விழியாளையும் புரவிகளில் ஏறச் சொல்லித் தானும் ஒரு புரவிமீது பாய்ந்து, “உம் சீக்கிரம்!” என்று எச்சரிக்கை செய்து, கலிங்கத்தின் தமிழ் வீரர்கள் பின்தொடர அந்தப் பாலூர் நகர வீதிகளில் புழுதி மண் பறக்கச் சென்றான், துணிவில் இணையற்றவன் என்று பெயர் வாங்கிய அநபாயச் சோழன்.

கருணாகர பல்லவன் மனம் எங்கோ பறந்துகொண்டிருந்தது. பக்கத்தில் வந்த அஞ்சன விழியாளை அடிக்கடி. பார்த்துக்கொண்டு எங்கே போகிறோமென்பதைக் கவனிக் காமலே புரவியில் அமர்ந்து சென்றான். அவன் கவனித்த தெல்லாம் காஞ்சனாதேவி திடமாய்ப் புரவியில் அமர்ந்தி ரந்ததையும், புரவியின் ஓட்டம் அசைத்துக் கொடுத்த அங்கலாவண்யங்களையும்தான். அவனும் அநபாயனும் அப்பொழுதிருந்ததோ அபாய நிலை. அந்த அபாயத்தை யும் அவன் மனத்திலிருந்து மறைத்தது அவள் அபார அழகு. அது காரணமாகப் போகுமிடத்தைக் கவனிக்காமல் மிக வேகமாகப் போய்க் கொண்டிருந்த புரவியைத் இடீரென நிறுத்த வேண்டிய நிலை வந்த பிறகே அவன் சுரணை அடைந்தான். அப்பொழுதுதான் பல தெருக் களைத் தாண்டித் தாங்கள் வந்துவிட்டதையும் நகரத்தின் தெற்குக் கோடியில் கோதாவரியின் ஓரமாக இருந்த கூட்டமான குடிசைகளுக்கருகில் புரவிகள் நிற்பதையும் உணர்ந்தான் இளையபல்லவன். மற்றவர்களோடு புரவியி லிருந்து ழே குதித்த இளைய பல்லவன் அநபாயனை நோக்கி, “அநபாயரே! இங்கு மறைவதற்கு இடம் ஏது மில்லையே. இங்கு ஏன் வந்தோம்” என்று விசாரித்தான்.

“கருணாகரா! நாம் மறைய வேண்டிய இடம் வேறு, அந்த இடத்துக்கு இரவில்தான் செல்ல முடியும். அதுவரை இங்குதான் தங்க வேண்டும்” என்று கூறிய அநபாயன் மற்ற குதிரை வீரர்களைப் பார்த்து, “வீரர்களே! உங்கள் உதவிக்கு நன்றி, நீங்கள் மீண்டும் உங்கள் இருப்பிடம் செல்லுங்கள். வேண்டுமானால் மறுபடியும் வழக்கப்படி. செய்தி அனுப்புகிறேன்” என்று அவர்களுக்கு உத்தரவிட்டு அவர்களை அனுப்பிய பின்பு, “வா கருணாகரா! தேவி, வாருங்கள்” என்று இருவரையும் அழைத்துக்கொண்டு பக்கத்திலிருந்த ஒரு தோப்புக்குள் நுழைந்து அங்கிருந்த குடிசைகளில் ஒன்றை நாடிச் சென்றான். குடிசையை அடைந்ததும் கருணாகர பல்லவனையும் காஞ்சனாதேவி “யையும் உள்ளே நுழையச் சொன்ன அநபாயன் மட்டும் குடிசைக்கு வெளியே சிறிது நேரம் ஏதோ யோசித்துக் கொண்டு நின்றான். பிறகு உள்ளே வந்து, “நாம் இரவு வரை இங்குதான் இருக்கும்படியிருக்கும்” என்றான்.

“பிறகு?” என்று. கேட்டான் கருணாகர பல்லவன், “இந்த ஊரை விட்டுத் தப்பிச் செல்லும் வழி தேட வேண்டும்” என்று பதில் சொன்னான் அநபாயன்.

“இனிமேல்தான் வழி தேட வேண்டுமா?” என்று இளையபல்லவன் மட்டும் வினவினான்.

“ஆம். வழி தேடுவதற்கு ஒருவரை நியமித்திருக்கிறேன். அவர் வருவார் இன்றிரவு” என்று பதிலிறுத்தான் அநபாயன்.

இரவு அவர் வந்தார். வந்தவரோ வினோதமாயிருந் தார். தப்புவதற்கு அவர் சொன்ன திட்டம் அதைவிட வினோதமாயிருந்தது. ஆனால் அந்த இரவுக்கும் பிற்பகலுக் கும் இடையே இருந்த அரை ஜாம நேரம் ஆனந்த மாயிருந்தது இளையபல்லவனுக்கு. அபாயத்தை மறைக்கும் ஆற்றல் அழகுக்கு உண்டு என்பதை அவன் புரிந்து கொண்டான். அதைப் புரிய வைத்தாள் அவன் கூட இருந்த அஞ்சன விழியாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 14

அழைப்பு

பாலூர்’ பெருந்துறையின் நீதி மண்டபத்திற்குள் பட்டப் பகலில் நுழைந்து தன்னையும் மற்றத் தமிழரையும் சிறைமீட்ட அநபாயச் சோழனின் அபரிமிதத் துணிவை எண்ணி எண்ணி வியந்தும் அந்த அமானுஷ்யமான சாதனையை அவன் எப்படிச் செய்ய முடிந்தது என்பதன் மர்மத்தை அறிய முடியாததால் குழம்பியும், அநபாய னுடன். வந்த கடாரத்துக் கட்டழகி வில்லைப் பிடித்து நின்ற அழகையும், அழகெலாம் அசைய அசைய அவள் புரவியில் வந்த விந்தையையும் நினைத்ததால் ஆனந்தத் துக்கு அடிமைப்பட்டும், பலவித உணர்ச்சிகளுக்கு இலக் காகி ஏதும் பேசாமல் நகரத்தின் தெற்குக் கோடியில் கோதாவரியின் கரையருகே இருந்த குடிசைக் கூட்டத்துக்கு வந்து சற்றுச் சுரணையடைந்த இளையபல்லவன் அங்கு மறைந்து தங்க இடமேதும் இல்லாததைக் கண்டு, “இங்கு எதற்காக வந்தோம்?” என்று ஆச்சரியப்பட்டு அதைப்பற்றி மாத்திரம் இரண்டொரு கேள்விகள் அநபாயனைக் கேட்டான். அந்தக் கேள்விகளுக்கு, “மறைய வேண்டிய இடத்துக்கு இரவில்தான் செல்ல முடியும்” என்று அநபாயன் பதில் சொன்ன பிறகு குடிசைகளுக்கு அப்பா லிருந்த தோப்புக்குள் தன்னையும், காஞ்சனா தேவியையும் அழைத்துச் சென்று ஒரு தனிக் குடிசையில் தங்களைத் தங்க வைத்ததும், தப்புவதற்கு வழி சொல்ல இரவில் ஒருவர் வருவார் என்று கூறியதும் மிகமிக விந்தையா யிருந்தது இளைய பல்லவனுக்கு. அது தவிர, குடிசைக்குள் நுழையு முன்பாக அகாயத்தை நோக்கிக் கண்களை உயர்த்தி அநபாயன் அராய்ந்ததற்கும் காரணம் புரியாத கருணாகர பல்லவன் குடிசைக்குள் அநபாயன் நுழைந்ததும் முகத்தில் பல சிந்தனைகள் பாய்ந்தோட அவற்றால் சலனப்பட்ட கண்களுடன் அவனை ஏறெடுத்து நோக்கினான்.

கருணாகர பல்லவனின் கண்களில் தோய்ந்து கிடந்த சிந்தனைக் கடலின் ஆழத்தைப் புரிந்துகொண்ட அநபாய சோழன் சற்றே புன்முறுவல் செய்ததன்றி, “கருணாகரா! உன் உள்ளம் குழம்பிக் கஇடக்கிறதை உன் கண்கள் காட்டு கின்றன. அப்படியென்ன குழப்பம் உனக்கு?” என்று கேட்கவும் செய்தான்.

அந்தக் கேள்வி பெரும் விசித்திரமாயிருந்தது இளைய பல்லவனுக்கு. பிற்காலத்தில் சரித்திரம் சொன்னாலும் நம்பத்தகாத அளவுக்குக் காரியங்களை அன்று சாதித்து, தன் மனத்தை மட்டுமின்றி, அனந்தவர்மன் இன்னும் ஆயிரக்கணக்கான பாலூர்ப் பெருமக்கள் முதலிய பலர் புத்தியையும் குழப்பிவிட்ட அநபாயன், அன்று செய்த தெல்லாம் சகஜமாக நடக்கக்கூடிய பணிபோல் பாவித் துப் பேசியதைக் கண்ட இளையபல்லவன் மிதமிஞ்சிய வியப்படைந்ததன்றி, “எனக்கு மட்டுமல்ல’ குழப்பம் அநபாயரே! உங்கள் இன்றைய செய்கை கலிங்கத்தையே குழப்பியிருக்கும். எல்லோருக்கும் பிரமிப்பையும் அளித் “இருக்கும்” என்றும் கூறினான்.

‘அநபாயனின் உதடுகளில் விரிந்த புன்னகை, புலியின் கண்களைப் போல் பளிச்சிட்ட அவன் விழிகளிலும் துள்ளி விளையாடியது. அந்தப் புன்னகையைத் தொடர்ந்து வந்த பேச்சிலும் ஓர் அலட்சியம் இருக்கத்தான் செய்தது. “இதில் குழப்பத்திற்கோ பிரமிப்பிற்கோ என்ன.. இருக்கிறது கருணாகரா? நமது மக்கள் அநீதமாக வதைக்கப்படுகிறார்கள். அவர்களைக் காப்பது எனது கடமை. என் அருயிர்த் தோழனைத் தீர்த்துக் கட்ட அனந்தவர்மனும் பீமனும் ஏற்பாடு செய்தார்கள். அந்த ஏற்பாட்டைக் குலைப் பது என் கடமை. சோழர்கள் உதவி நாடிக் கடாரத்தின் மன்னனும் இளவரசியும் இந்தத் துறைமுகத்தில் இறங்கி னார்கள். அவர்களைச் சோழ நாடு செல்லாமல் தடை செய்யவும் ஏற்பாடு நடந்தது. அந்த ஏற்பாட்டை உடைப் பது என் கடமை. இந்தக் கடமைகளைத்தான் செய்தேன். இதில் குழப்பத்திற்கு இடமில்லை. தவிர, கடமைகள் இன்னும் பூர்த்தியாகவுமில்லை” என்றான் அநபாயன், ஏதோ சாதாரண விஷயத்தைச் சொல்லுபவன் போல்.

கருணாகர பல்லவன் கண்கள் அநபாயனை நன்றாக ஆராய்ந்தன. குடிசையின் கூரையைத் தொட்டுவிடுவது போன்ற உயரத்துடனும், மந்தகாசம் தவழும் முகத்துடனும் நின்றிருந்த அவன் கம்பீரம் இளையபல்லவனின் இதயத் தில் பெருமிதத்தை விளைவித்ததென்றால், பெரிய காரியங் களைச் சாதித்த அவன் அவற்றைக் கடமையெனச் சாதா ரணமாகக் கூறியது அந்தப் பெருமிதத்தை ஆயிரம் மடங்கு உயர்த்தவே, இத்தனை சிறந்த கர்ம வீரனைப் பெற்ற தமிழ்த்தாய் சிறப்புடையவள்’ என்று தாய்நாட்டையும் வாழ்த்தினான் கருணாகர பல்லவன். அப்படி இதயத்துக்குள் வாழ்த்தக்கொண்டு சொன்னான். “கடமைகளை நிறைவேற்றுவது காவலன் கடமைதான். ஆனால் அதை நிறைவேற்றிய முறைதான் குழப்பத்தைத் தருகிறது” என்று.

“குழப்பமென்ன அதில்!” அநபாயன் கேள்வி அனாயாசமாக எழுந்தது.

“பட்டப்பகலில் நீதி மண்டபத்திற்கு வந்தீர்கள்.

“விசாரணை பட்டப்பகலில்தானே நடந்தது?”

“உண்மை.

ஆனால் நீதி மண்டபத்திற்குள் உங்களை நான் எதிர்பார்க்கவில்லை.

“வேறு எங்கு எதிர்பார்த்தாய்?”

“சிறையிலிருந்து நீதி மண்டபம் செல்லும்போது அல்லது நீதி மண்டபத்திலிருந்து கொலைக்களம் போகும் போது.

“ஏன் அப்படி?”

“சிறையில் காவல் அதிகம். அங்கிருந்து எங்களை மீட்க முடியாது.

நீதி மண்டபத்திலும் காவல் அதிகம். அங்கிருந்தும் எங்களை மீட்க முடியாது. ஆகவே வெளியில் தான் மீட்பீர்கள் என்று நினைத்தேன்.

“இதற்குப் பதில் சொல்லு முன்பு மெள்ள நகைத்தான் அநபாயன். அவன் நகைப்பைக் கண்ட இளையபல்லவன் சற்றுக் கோபத்துடனேயே கேட்டான் “ஏன் நகைக் கிறீர்கள் அநபாயரே?”

மீண்டும் நகைத்த அநபாயன், “கருணாகரா! கலிங்க மன்னர் இருவரும் இப்படியே நடந்துகொண்டு, சோழ நாடு கலிங்கத்தை ஒரு நாள் வெற்றி கொள்ள நேர்ந்தால், உன்னைத்தான் நான் கலிங்கத்தின் அரசபீடத்தில் உட்கார வைப்பேன்” என்று பதில் கூறினான்.

“ஏன் அத்தனை பெரிய பதவி எனக்கு?”

“உன் கருத்து கலிங்க மன்னர்கள் கருத்தை ஓத்திருக் இறது. ஆகவே கலிங்கத்தை அள்வதற்கு அவர்களுக்கு அடுத்தபடி நீதான் தகுதி!”

“அப்படியா?” இளையபல்லவன் குரலில் கோபம் மண்டிக் கிடந்தது.

அந்தக் கோபத்தை அதிகரிக்க இஷ்டப்பட்டவன் போல் மீண்டும் சொன்னான் அநபாயன் “நீ நினைத்தது போல்தான் பீமனும் நினைத்தான், அனந்தவர்மனும் நினைத்தான்.

“அப்படி நினைப்பதுதானே இயல்பு?” இளைய பல்லவன் குரலில் உக்கிரம் ஏறிக் கொண்டிருந்தது.

அதைக் கவனிக்காமலே விளக்க முற்பட்ட அநபாயன், “இயல்பு அதுதான் கருணாகரா, அந்த இயல்பை உணர்ந்து அதை மீறி நடந்ததால்தான் உங்களை மீட்க முடிந்தது. காவலிருக்குமிடத்தில் அசிரத்தையிருப்பது இயல்பு. அந்த அசிரத்தையை தான் பயன்படுத்திக் கொண்டேன். நான்கு சுவர்கள் தங்களுக்குப் பெரும் பாதுகாப்பு என்று நினைப்பது மனித இயல்பு. ஆகவே சிறைக் கூடத்திலும் நீதிக் கூடத்திலும் நான் துணிவுடன் நுழையமாட்டேன் என்று அனந்தவர்மனும் பீமனும் நினைத்தார்கள். ஆகை யால் சிறைச்சாலையில் சிரத்தையற்று இருந்தார்கள். அங்கிருந்து நான் தப்பினேன். நீதி மண்டபத்தில் அசிரத்தையா யிருந்தார்கள். அங்கிருந்து உன்னைத் தப்புவித்தேன். பாலூர்ப் பெருந்துறையின் மக்கள் தொகையில் மூன்றி லொரு பங்கு தமிழர்கள். அவர்களில் பெரும்பாலோர் வணிகர்கள். சிலர் படைப்பிரிவிலுமிருக்கிறார்கள். சிலர் சுங்கச் சாவடியிலிருக்கிறார்கள். தமிழர்களைத் தவிர சில வேங்கி நாட்டாரும் படையில் சேர்ந்திருக்கிறார்கள். இந்தக் கோதாவரிக்கு அக்கறையிலிருக்கும் வேங்கி நாட்டு அரியணையில் இன்று விஜயாதித்தன் அமர்ந்திருக்கலாம். ஆனால் அதில் அமர வேண்டியவன் நானாகையால் இங்குள்ள வேங்கி நாட்டவரில் பலர் என்னிடம் பக்தி கொண்டவர்கள். ஆகவே பாலூரில் கலிங்க மன்னர்களை ஆதரிப்பவர்களை விட என்னை ஆதரிப்பவர்கள் தொகை அதிகம். ஜனத்தொகையில் மூன்றிலிரண்டு பங்கான வேங்கி நாட்டவரையும் தமிழரையும் ஒதுக்கிவிட்டால் மற்றவர் சிறுபான்மை. தவிர என்றாவது ஒருநாள் வேங்கி நாட்டை என் வசப்படுத்த வேண்டுமானால் இங்குள்ள வேங்கி நாட்டவர், தமிழர் அகிய இருபாலர் உதவியும் எனக்குத் தேவையாயிருக்கும். அதனால்தான் அடிக்கடி சோழ நாட்டிலிருந்து இங்கு வருகிறேன். இங்கு வந்து போதிய பக்கபலத்தையும் திரட்டியிருக்கிறேன். இந்த அரசாங்கத்தின் ஒவ்வோர் இடத்திலும் என்னைச் சேர்ந்த வர்கள் இருக்கிறார்கள். சிலர் வணிகர், சிலர் படை வீரர், சிலர் மாலுமிகள். ஆனால் எல்லோரும் என் ஒற்றர்கள், பணத்தாலல்ல. என்னிடம் பக்தியால் கட்டுப்பட்டவர்கள். ஆகையால்தான் அவசியமான வீரர்களைத் திரட்டிக் கொண்டு உங்களை விடுவிக்க முடிந்தது...” என்று சொல்லிக் கொண்டு போனவனை இடைமநித்துக் கேட்டான் இளையபல்லவன், “அப்படியானால் நீது மண்டபத்தைச் சுற்றிக் காவல் அதிகமில்லையா?”

“இருந்தது. ஆனால் இருந்தவர் கலிங்கப் படையி லுள்ள வேங்கி, தமிழ்நாட்டு வீரர்கள். அவர்களைக் காவலுக்கு அனுப்ப முன்னதாக ஏற்பாடு செய்தேன்” என்றான் அநபாயன் பதிலுக்கு.

“காவலரை அனுப்ப நீங்கள் ஏற்பாடு செய்தீர்களா” இளையபல்லவன் வியப்புடன் வினவினான். “காவலரை அனுப்பும் அதிகாரம் படைத்தவர், சேனாதிபதியைப்போல் அத்தனை அதிகாரம் படைத்த வரல்ல. இருப்பினும் ஒரு தமிழர் அந்த வேலை பார்க் கிறார்” என்று சுட்டிக் காட்டினான் அநபாயன்.

பாலூர்ப் பெருந்துறை உண்மையில் அநபாயச் சோழன் பாசறை என்பதை அறிந்துகொண்ட கருணாகர பல்லவன், அநபாயன் சிறையிலிருந்து தப்ப முடிந்ததற்கும் தூதுப் புறா மூலம் செய்தியனுப்ப முடி ந்ததற்கும் காரணங் களைப் புரிந்தகொண்டான். நீதி மண்டபத்தைச் சுற்றி நின்ற காவலரே தாங்கள் தப்புவதற்கு உதவியாயிருந்ததால் தான், தங்களைப் படையினர் யாரும் பின்தொடரவில்லை என்பதையும் உணர்ந்து கொண்டான். இத்தனை வசதிகளி ருந்தாலும் அனந்தவர்மனும் பீமனும் கலிங்க வீரர்களைக் கொண்டு தங்களைப் பிடிக்கக் கண்டிப்பாய் முயல்வார் களென்பதையும், அடுத்த சில நாழிகைகளில் பாலூர் நகரம் பூராவும் பீமனுடைய வீரர்களால் சோதனையிடப் படுமென்பதையும் சந்தேகமற அறிந்தானாகையால் அநபாயனை நோக்கிக் கேட்டான் “நமக்கு இங்கு என்ன துணையிருந்தாலும் கலிங்க அரசாங்கத்தின் பலம் நம்மைச் சும்மா விடுமா?”

“விடாது கருணாகரா! விடாது. அவசியமானால் பாலூருக்கு வடக்கேயுள்ள கலிங்கர் படைப் பிரிவும் இங்கே வரவழைக்கப்படும். அகையால்தான் இந்தத் தோப்புக்கு உங்களை அழைத்து வந்தேன். இங்கு உங்களை யாரும் தேடமாட்டார்கள். இங்கு இருப்பவர்களெல்லாம் தமிழகத்துப் பரதவர். இங்கு சோதனைக்கு வீரர்கள் வந்தால் உங்களை ஓளித்து வைக்கும் சக்தி இவர்களுக் இருக்கிறது. இன்றிரவு எப்படியும் இந்தப் பாலூரை விட்டுக் களம்பிவிடத் தர்மானித்திருக்கிறேன். அதற்கு வழி கண்டு பிடிக்க ஒருவரை நியமித்திருக்கிறேன். அவர் வருவார்” என்றான்.

“யாரவர்?” என்று கேட்டான் கருணாகர பல்லவன்.

“வெளி நாட்டவர். உனக்குத் தெரியாது அவரை. வந்த பின் அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அவர் வந்த பின்தான் நாம் வேறிடத்திற்குச் செல்ல வேண்டும்.”

எது அந்த இடம்?”

“அதையும் அவரே சொல்லுவார்.

“அதைப்பற்றி மேலும் ஏதோ கேட்க முயன்ற கருணா கரனை, “பொறு கருணாகரா!” என்று ஒரே வார்த்தையில் பேச முடியாமல் அடித்த அநபாயன், ஏதேதோ யோசனை களில் நீண்ட நேரம் அழ்ந்தான். பிறகு எதையோ திடீரென நினைத்துக்கொண்டு எழுந்து, “கருணாகரா! இன்னும் சில நாழிகைகளில் மாலை நெருங்கும். அதற்குள் நான் ஒரு முக்கிய அலுவலைக் கவனித்துக்கொண்டு வருகிறேன்” என்று சொல்லி, குடிசையை விட்டுப் புறப்பட்டு, அந்த அடர்த்தியான தோப்புக்குள் புகுந்து சில விநாடிகளில் மறைந்தான்.

அநபாயன் போக்கு ஒவ்வொன்றும் விசித்திரமா யிருந்தது இளையபல்லவனுக்கு. எதிரிகள் நாட்டில் வந்து அநபாயன் இஷ்டப்படித் திரிவதும் திடீரெனத் தோன்று வதும் மறைவதும் பெரும் வியப்பாயிருந்தது அவனுக்கு. “பெரிய சாம்ராஜ்யத்தின் அரியணையில் இவரல்லவா அமர வேண்டும்?” என்று எண்ணினான். வீரராஜேந்திர ரக்குப் பதில், அநபாயர் மட்டும் சோழ அரியணையில் இருந்தால், தமிழர் பாலூரில் படுத்தப்பட்ட பாட்டுக்குக் கலிங்கம் படு தூளாக்கப்படும் என்பதை உணர்ந்தான். அத்தகைய ஒரு வசதி சோழ நாட்டுக்கு இல்லாததைக் குறித்துச் சிறிது வருந்தவும் செய்தான். வீரராஜேந்திரர் மகாவீரரானாலும் அவர் சமாதானத்தையே விரும்புபவர் என்பதையும், பிறர் வீணாகப் போரிட வந்த காரணத்தா லேயே அவர் பெரும் போர்களில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடினாரென்பதையும் உணர்ந்திருந்த இளையபல்லவன், போர் விருப்பமுள்ள அநபாயன் அரியணையில் இருந் திருந்தால் சோழ சாம்ராஜ்யம் எத்தனை விரிவடையும் என்று சிறிது பேராசையும் கொண்டான். இருப்பினும் அந்த எண்ணத்தை அடுத்த விநாடி அறுத்தெறிந்தான். “சேச்சே! போரில் விளைவது நாசம். அது உதவவே உதவாது” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

இப்படி எண்ணச் சூழலில் புதைந்து கடந்த இருத யத்தை உடைத்தன அந்தக் குடிசையின் ஒரு மூலையி லிருந்து எழுந்த, “அப்பா என்ன யோசனை! என்ன யோசனை!” என்று ஏளனச் சொற்கள்.

குயில் பேசத் துவங்கியது போல் எழுந்த குரலால் நனவுலகத்துக்கு வந்த கருணாகர பல்லவன், அப்பொழுதுதான் ‘காஞ்சனா தேவியும் தானும் தனிமையிலிருப்பதை’ உணர்ந்து குடிசை யின் மூலைக்குக் கண்களைத் திருப்பினான். வில்லையும் ஆம்பறாத் தூணியையும் இடைக் கத்தியையும் கழற்றி ஒரு மூலையில் வைத்துவிட்டு செவ்விய இதழ்களில் தவழ்ந்த இளநகையுடனும் முழந்தாள்களைக் கைகளால் சுற்றிக் கட்டிக் கொண்டாலும் மறையாத மன்மதாகாரத்துடனும் காட்சியளித்த காஞ்சனாதேவியைக் கண்ட கருணாகர பல்லவன் ஒரு விநாடி மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டான். பிறகு மெள்ளச் சொன்னான் “மன்னிக்க வேண்டும், நீங்களிருப்பதை மறந்துவிட்டேன்” என்று.

“மறந்துவிட நியாயமிருக்கறது” என்று சொல்லி நகைத்தாள் காஞ்சனாதேவி.

“நியாயமில்லை காஞ்சனாதேவி” என்று இளைய பல்லவனின் குரல் தன்னைத்தானே கண்டித்துக் கொள்வது போலிருந்தது.

“ஏன் நியாயமில்லை?”

“உயிரைக் காப்பாற்றியவர்களை மறப்பது நன்றி கொன்ற செய்கையல்லவா?”

“யார் உயிரைக் காப்பாற்றியது?”

“நீங்கள்தான் என் உயிரைக் காப்பாற்றினீர்கள் /”

“இல்லை இல்லை.

அநபாயர் காப்பாற்றினார்.

“சரி...

நீங்கள் துணை செய்தீர்கள்.

“அது துணை செய்ததாகாது.

“எப்படி அகுமோ?”

“சொற்படி நடந்ததாகும். அநபாயர் செயல் புரிபவர். நாம் கருவிகள். அவரிஷ்டப்படி இயங்குகிறோம். கருவி களைப் பாராட்டுபவர் உலகத்தில் உண்டா?”

அநபாய சோழனைப் பற்றி அவள் கொண்டிருந்த மதிப்பு கருணாகரனுக்கும் இருக்கத்தான் செய்தது. இருந்த போதிலும் அது அவள் வாயால் வந்தது சற்றுப் பொறா மையாகவே இருந்தது இளைய பல்லவனுக்கு. “உண்மை! உண்மை!” என்று அவன் சொன்ன பதிலைக் கேட்ட காஞ்சனாதேவி, அவன் குரலில் உற்சாகமில்லாததைக் கவனித்து அதன் காரணத்தையும் உணர்ந்து சற்று லேசாக நகைக்கவும் செய்தாள்.

அந்த நகைப்பொலி எத்தனையோ இன்பமாகத் தானிருந்தது. இருப்பினும் அநபாயனை அவள் பாராட்டி யதன் காரணமாக அந்த இன்பத்தை அனுபவிக்கச் சக்தி யில்லாதிருந்தது அவன் மனம். ஆகவே மேற்கொண்டு பதிலேதும் சொல்லாமல் தரையில் உட்கார்ந்து நிலத்தில் கண்களை ஓட்டினான். அந்த மெளனம் அளவுக்கு மீறி நிலைத்தது. குடிசையில் அந்த எழிலரசியுடன் தனிமையி லிருந்த சங்கடமும், தன்னைவிட அவள் அநபாயனைச் சிறப்பாக எண்ணிவிட்டாளோ என்ற இதய ஏக்கமும் இளைய பல்லவனைப் பல திசைகளில் இழுத்துக் கொண் டிருந்தாலும் மேலுக்குக் கல்லுப் பிள்ளையாரைப் போல் உட்கார்ந்திருந்தான் அவன்.

அவன் நிலையைப் புரிந்துகொண்ட காஞ்சனாதேவி யின் நிலையும் பெரிதும் சங்கடத்தில்தானிருந்தது. முதல் நாள் அறையில் ஏறிக் குதித்த சமயத்திலே அவனிடம் ஏற்பட்ட ஒரு நல்லெண்ணம் சென்ற இரண்டு நாள்களில் அன்பு என்று சொல்லும் அளவுக்குப் போய்க்கொண் டிருந்ததை அவள் உணர்ந்தாள். அது வெறும் அன்போடு நிற்காமல் உணர்ச்சிகள் அதை அதிகமாக முற்றவிட்டுக் கொண்டிருந்ததை நினைக்க நினைக்க அவள் மதிவதனம் அந்தச் சமயத்தில் வெட்கத்தால் செம்பருத்தியின் நிறத்தை அடைந்தது. அந்த உணர்ச்சிகளிலிருந்து தன்னை விடுவித் துக்கொள்ளப் பேச்சைத் துவக்கிய காஞ்சனாதேவி, “நீங்கள் என்ன பெண்ணா?” என்று மெல்லக் கேட்டாள்.

தலையைக் குனிந்தவாறே அவனும் கேட்டான்.

“ஏன்?“

பின் எதற்காகத் தலையைக் குனிந்துகொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள்?”

“யோசனையிலிருக்கிறேன்.

“யாரைப்பற்றி யோசனை?”

இதற்குப் பதில சொல்லவில்லை அவன். ‘உன்னைப் பற்றித்தான் யோசனை!” என்று எப்படிச் சொல்லுவான்? அவன் பதில் சொல்ல முடியாதபடி கேள்வி கேட்டதை அவளும் உணர்ந்து கொண்டாளாதலால், அவள் மேற் கொண்டு கேள்வியும் கேட்கவில்லை, பதிலையும் எதிர் பார்க்கவில்லை. சிறிது நேரம் மெளனமாகவே உட்கார்ந் திருந்தாள். பிறகு எழுந்து குடிசையை விட்டு வெளியே சென்றாள். அவள் காலடி ஓசையைக் கேட்டதும் தலை தூக்கிய கருணாகர பல்லவன் பிரமிப்பில் ஆழ்ந்தான். அவன் கண்களுக்கெதிரே செக்கச் செவேலென்று வழ வழத்துமிருந்த ஆடுசதைகளுடன் இரண்டு கால்கள் நடந்து சென்றன. அவற்றின் கணைக்கால்களில் ஆபரணம் ஏது மில்லாதிருந்ததாலேயே அவற்றின் அழகும் பாதங்களின் அழகும் பன்மடங்கு விகசித்துக் கிடந்ததைக் கண்டன அவன் கண்கள். இளையபல்லவன் காஞ்சனா தேவி போகும் திக்கை நோக்கிச் சென்றான்.

அவள் நடந்த வேகம் அவள் பின்னழகைப் பல மடங்கு அதிகமாக எடுத்துக் காட்டியதைக் கண்ட கருணாகரபல்லவன் மனம் நிலைகுலையத் தொடங்கியது. அந்த மோகன உருவத்தாள் கோதாவரியின் பிரவாகம் அலை மோதிக் கொண்டிருந்த இடத்தை அடைந்ததும் தன் கொண்டை ஆபரணத்தைக் கழற்றிக் கழே போட்டு, குழலைப் பிரித்துவிட்டாள். பிறகு. கோதாவரியின் புண்ணிய நீரில் இறங்கினாள்.

ஏதோ மந்திரத்தால் இயக்கப்பட்டவன் போல் நடந்து கோதாவரியின் கரையை அடைந்த கருணாகர பல்லவன் நதியில் கழுத்து மட்டும் ஆழ்ந்து இடந்த அந்த நீர் மோகினியை நோக்கினான். கோதாவரிக்குள்ளிருந்து அப் பொழுதுதான் முளைத்தெழுந்த தாமரையைப் போல் தெரிந்த காஞ்சனாதேவியின் சொர்ணவதனத்தை இருட்டுக்கு முன்பு மிகச் செம்மையுடன் மிளிரும் அந்தி வேளை யின் செவ்விய கிரணங்கள் வருடிக்கொண்டிருந்தன.

சுமார் ஒரு நாழிகைக்குப் பிறகு அவள் அற்றிலிருந்து எழுந்து வெளியே வந்தாள். அவள் வெளிவந்த கோலத்தை மலைத்துப் பார்த்துக் கொண்டிருந்த இளைய பல்லவ னுக்கு அருகில் வந்த காஞ்சனாதேவி, “இளைய பல்லவரே! புரவி சவாரி செய்தபோது உடலெல்லாம் புழுதியாகி விட்டது. ஆகவே நீராடினேன். சற்று அப்புறம் இருங்கள். சேலையை உலர்த்திக்கொண்டு வருகிறேன்” என்று கூறி விட்டு ஒரு புதரின் மறைவுக்குச் சென்றாள்.

காற்று பலமாயிருந்ததால் அரை நாழிகைக்குள் நன்றாக உலர்ந்துவிட்ட சேலையைக் கட்டிக் கொண்டும் குழலை எடுத்துச் சொருக்குப் போட்டுக் கொண்டும், புதரி லிருந்து வெளிவந்த காஞ்சனாதேவி கரையில் கிடந்த சல்லடத்தையும் கொண்டை ஆபரணத்தையும் எடுத்துக் கொண்டு, “வாருங்கள்” என்று அவனை அழைத்துவிட்டு, “தோப்புக்குள் முன்னால் நடந்தாள்.

தோப்பில் இருள் நன்றாகக் கவ்விவிட்டது. ஆங்காங் இருந்த குடிசைகளில் தெரிந்த சிறு விளக்குகளின் அடை யாளத்தைக் கொண்டு அவ்விருவரும் நடந்து சென்றார் கள். தோப்பிலிருந்து புஷ்பச் செடிகள் நானாவித புஷ்பங் களை மலரவிட்டு வாசனையை எங்கும் படரவிட்டுக் கொண்டிருந்தன. பக்கத்துச் செடியிலிருந்த புஷ்பக் கொத்து ஒன்றைக் கையில் ஒடித்து எடுத்துக்கொண்ட இளைய பல்லவன் குடிசை வாயிலுக்கு வந்ததும் காஞ்சனாதேவியை நோக்கினான்.

“சற்று இருங்கள். விளக்கை ஏற்றுகறேன்” என்று உள்ளேயிருந்து வந்தது. அவள் குரல்.

அதைக் கேட்டு வாயிலிலேயே நின்றவன் அடுத்த விநாடி குடிசைக்குள் விளக்கொளி வீசவே உள்ளே நுழைந் தான். விளக்குக்கு அருகே நின்று அதைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்த காஞ்சனாதேவி விளக்கை மட்டுமல்ல, அவன் உணர்ச்சிகளையும் தாண்டினாள். அதன் விளை வாகத் துணிவுடன் அணுகி அவள் குழலில் தன் கையி லிருந்த மலர்க்கொத்தைச் செருகினான் இளைய பல்லவன். சிரித்துக்கொண்டு அவள் அவனை நோக்கத் திரும்பினாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 15

கண்கள் பெற்ற பயன்

காஞ்சனாதேவியின் பூவிதழ்களில் கொஞ்சித் தவழ்ந்த புன்னகையையும், அஞ்சன விழிகள் அள்ளி வீசிய மிதமிஞ்சிய அழைப்பையும் கண்ட கருணாகர பல்லவ னின் மனத்தில் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச கட்டுப்பாடும் அரைகுறையாகத் திறந்திருந்த குடிசை வாயிலிலிருந்து வந்த கோதாவரியின் காற்றில் பறந்து போய்விடவே. அவன் உணர்ச்சிகள் அந்தக் கோதாவரியின் வெள்ளம் போலவே கட்டுக்கடங்காமல் பிரவாகிக்கத் தொடங்கியதால் அந்தப் பூவையின் குழலில் பூங்கொத்தைச் செருகிய வலது கை, புங்கொத்துப் பதிந்த இடத்திலேயே தங்கி விரல்களால் குழலைப் பிரித்தும், உள்நுழைந்தும் ஏதோ விஷமம் செய்து கொண்டிருந்தது. வில்லொத்த அவள் புருவத்தின் அடியில் விரிந்த மலரொத்த அவள் விழிகளில் மலர்ந்த மெல்லியல் பார்வையில் வசப்பட்டு நின்ற அவன் விழிகள், ஏதோ புதுமையைக் கண்டுவிட்டனபோல் சிறிது நேரம் அவற் றுடன் உறவாடினாலும், வேறு புதுமைகளையும் காண இஷ்டப்பட்டு, இந்தக் கண்களிலிருந்து அகன்று அவள் கன்னத்தை அடுத்திருந்த கழுத்தின் பின்புறத்திலும் மாறி மாறிப் பதிந்தன. தூண்டிவிட்ட விளக்கிலிருந்து எழுந்த பொன்னிற ஒளி, வெட்கத்தால் சிவந்து கடந்த அவள் கன்னத்தில் பாய்ந்து அதன் மென்மையையும் வழவழப்பை யும் அநேக ஆயிரம் மடங்கு அதிகமாக எடுத்துக் காட்டிக் கொண்டிருந்ததைக் கண்ட இளைய பல்லவன், “விளக்குத் தான் இவளுக்கு முதல் எதிரி’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். கோதாவரியிலிருந்து வந்ததும் முதலில் குடிசைக்குள் நுழைந்த காஞ்சனாதேவி, “இருங்கள், விளக்கை ஏற்றுகிறேன்” என்று கூறித் தன்னை வாசலில் நிற்க வைத்ததில் அர்த்தம் ஏதுமில்லை என்றே நினைத் தான் அந்த வாலிபன். விளக்கு ஏதோ பெரும் பாது காப்புப்போல் அவள் நினைத்தது எத்தனை பிசகு என்பதை அந்த விளக்கின் பணியே அந்தச் சமயத்தில் விளக்குவதாக அவன் நினைத்தான். அவள் அவயவங்களின் அழகுகளைப் பற்றி அளவுக்கு அதிகமாக ஊகத்தை அளித்துத் தன்னைத் திணறவிடும் அந்த விளக்கு தனக்கு விரோதியா அல்லது துரியைத் தூண்டிய அந்த மோகன வல்லிக்கு விரோதியா என்பதை நிர்ணயிக்க முடியாத மோகன’ நிலையிலும் சில விநாடிகள் சிக்கினான் இளைய பல்லவன்.

விளக்கைப் பாதி மறைத்து இளையபல்லவனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நின்றிருந்த காஞ்சனா தேவியின் பின்புறக் கழுத்திலும் முதுகிலும் விளக்கொளி படவில்லைதான். ஆனால் இளையபல்லவன் மன ஒளி இவற்றின்மீது வீசி ஏதேதோ விவரிக்க இயலாத வியாக்கி யானங்களைச் செய்துகொண்டிருந்தது. இப்படி ஒளியில் தெரிந்த இடப்புறக் கன்னத்தையும் தோளையும் ஆராய்ந்த புறக்கண்களும் இருளில் பின்புற எழில்களை ஆராய்ந்த அகக் கண்களுமாகச் சேர்ந்து, இருளும் ஒளியும் பாதிப் பாதியுள்ள மனித வாழ்க்கையையே ஆராய்வது போன்ற பிரமையை இளைய பல்லவன் இதயத்தில் ஏற்படுத்திய தால் அவன் பெரும் மயக்கத்திலிருந்தான்.

அவள் விளக்கைத் தூண்டி விநாடிகள் பல ஓடித் தான்விட்டன. ஆனால் அப்படி ஓடின நேரம் தெரியாவிட் டாலும் அந்த நேரத்துக்குள் கணத்துக்குக் கணம் ஏற்பட்ட நிகழ்ச்சிகளில் சிக்கித் தன்னையே மறந்துவிட்டாள் கடாரத்தின் கட்டழகி. விளக்கைத் தாண்டியதும் வெகு துரிதமாக இளையபல்லவன் தன்னை அணுகிப் பின்புறத் தில் நின்றதே பெரும் இன்பவேதனையை அளித்தது அந்தப் பேரழ௫க்கு. அத்துடன் கையிலிருந்த பூங்கொத்தை அவன் தன் குழலில் சூட்டியதும் குழலுக்குள் அவன் விரல்கள் புகுந்து விஷமம் செய்ததும் அஞ்சன விழிகளைத் திருப்பினாள் அவள். அந்தப் பார்வையுடன் கலந்த இளையபல்லவன் பார்வை தன் விழிகளில் கூரிய ஈட்டிகள் போல் பாய்ந்து இதயத்தையே அராய்ந்துவிடுவன போலிருந் ததைக் கண்ட அவன் இதயம் பெரு வேகத்தில் அடித்துக் கொண்டது.

ஆனால் அந்த இருவரின் கண்ணியமான பரம்பரை பெரும் விபரீதத்தைத் தடுத்து நின்றது. பரம்பரைக் கண்ணியம் விபரீதத்தைத்தான் தடுக்க முடிந்ததேயொழிய பிரவாகிக்கும் அன்பைத் தடுக்க முடியாததால் இருவரும் நிலைகுலைந்த தன்மையிலேயே நின்றிருந்தார்கள். நிலை குலைந்த தன்மையைச் சர்படுத்திக் கொள்ள முனையவும் செய்தார்கள். ஆனால் முனைந்தது முழுப் பலனை மட்டும் அளிக்கவில்லை. இளையபல்லவன் கண்களிலிருந்து தன் கண்களைக் காஞ்சனாதேவி விடுவித்துக் கொள்ளத்தான் செய்தாள். தலையைக்கூடத் தாழ்த்திக் கொண்டாள். ஆனால் உணர்ச்சிகளிலிருந்து விடுபட மட்டும் முடியாமல் திண்டாடினாள். பின்புறத்தில் அவளுக்குக் கண்கள் இல்லைதான். ஆனால் பின்புறத்தில் அந்தப் புருஷன் மிகச் சமீபத்தில் நின்றுகொண்டிருக்கிறான் என்ற நினைப்பே இன்ப ஜ்வாலைகளை அள்ளிக் கொட்டிக் கொண்டி ருந்தது அவள் தேகத்தில். பின்புறத்தில் அவள் கண்கள் இல்லைதான். இருப்பினும் தன் சேலையுடன் அவன் அங்கியின் நுனி உராய்ந்ததைக்கூட அவள் உணர முடிந்தது. பின்புறத்தில் தனக்கும் அவனுக்கும் இடை வெளி இருந்ததை அவள் அறிந்துதானிருந்தாள். இருப் பினும் அந்த இடைவெளி அதிகத் தைரியத்தைக் கொடுக்க வில்லை அவளுக்கு. சற்றுத் தவறினால் விழுவது பெரும் பாதாளம். அப்படித் தவறாவிட்டாலும் எந்த விநாடியில் தவறுவோமோ என்ற கிலி. அந்த நிலையில் தான் இருந்தாள் காஞ்சனாதேவி.

அந்த நிலை மட்டும் சாதாரண நிலையாயிருந்தால், அபாயம் மட்டும் சாதாரண அபாயமாயிருந்தால், அதி லிருந்து மனிதர் விலகுவதுண்டு. ஆனால் காதலின் அபாயம் மட்டும் விலகச் சந்தர்ப்பமளிக்கவில்லை. அபாயத்தை நோக்கிச் செல்லவே தூண்டுகிறது. அந்தத் ‘ துூண்டுதவினாலோ என்னவோ அவன் மார்பில் மெல்லச் சாய்ந்தாள் அந்தப் பூங்கொடி.

அவன் மார்பில் அவள் தலை சாய்ந்து கிடந்தது. இருவரும் நெருங்கிவிட்டதால் பாதாதிகேச பரியந்தம் ஏற் பட்ட ஸ்பரிச உணர்ச்சிகள் புதுப்புது இன்பக் கதைகளைச் சொல்லத் தொடங்கின. மனிதன் தோன்றிய கால முதல் ஏற்பட்ட கதைகள்தான் அவை. ஆனால் அவற்றைத் திரும்பத் திரும்பப் புதுக் கதைகள்போல் கேட்டுத் திருப்தி யடைவது மனித இயல்பாடவிட்டது.

பழைய காவியங்கள் திகட்டுவதில்லை. புதுப்புதுக் கருத்துகள் தோன்றுவதால் காதல் காவியமும் அத் தன்மையதுதான். காவியம் பழையது. கருத்துகள் என்றும் புதியவை. காவியத்தை நுகரும் முறைகள் பழமைதான். ஆனால் அந்த நுகர்ச்சியில் என்றும் புதுமை தோன்றத் தான் செய்கிறது. மாயை என்பதற்குப் பொருள் சொல்ல வேண்டுமானால் இயற்கையின் இந்தக் காவியத்தைச் சுட்டிக்காட்டலாம். பழமையில் புதுமையைக் காட்டுவது மாயை. கண்ணை மறைக்கும் விந்தையல்லவா இது!

மாளிகையில் பிறந்து மாளிகையில் வாழ்ந்த அந்த இருவர் கண்களும் அந்தத் தருணத்தில் மறைந்தே கடந்தன. அவன் மார்பில் சாய்ந்து கடந்த அவள் கண்கள் மூடியிருந்தன. அவள் அழகைப் பருகிக் கொண்டிருந்த அவன் கண்கள் திறந்திருந்தன. ஆனால் மூடிய விழிகளுக் கும் விழித்திருந்த விழிகளுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. இரண்டுக்கும் பார்வையில்லை. உணர்ச்சிகளுக்குத்தான் பார்வை இருந்தது. பார்வை மட்டுமென்ன? பேசும் சக்தியு மிருந்த தால் அவை ஏதேதோ பேசிக்கொண்டிருந்தன. “நான் அடை புனையும் அறைக்குள் வந்தாரே இந்தப் புருஷர் போயும் போயும்’ என்று நினைத்த அவள் உள்ளுக் குள் நகைத்துக் கொண்டாள். ‘சற்று முன்பு கோதாவரியில் நீராடிவிட்டு வந்தபோது எப்படி. வெறித்துப் பார்த்தார்! சே! அண்பிள்ளைகளுக்கு மட்டும் வெட்கம் சிறிதும் கிடையாது” என்று கண்டிப்பதுபோல் கண்டித்துக் கொண் டாள். ஆனால் அது உண்மையில் கண்டனந்தானா என்பதில் பெரும் சந்தேகமிருந்தது அவளுக்கு.

காஞ்சனாதேவி மெள்ள நகைத்தாள். அந்த நகைப்பு கருணாகர பல்லவனை இக உலகத்துக்குக் கொண்டு வரவே மெள்ள அவன் கேட்டான், “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று.

அவள் மீண்டும் நகைத்தாள். அந்த நகைப்பு அவனுக் குச் சற்றுக் கோபத்தைக் கொடுக்கவே, “பதில் சொல்லி விட்டு நகைத்தால் நன்றாயிருக்கும்” என்று கடுமையாகச் சொன்னான்.

மேல் ஸ்தாயியில் மிக மிருதுவாகச் சுண்டப்பட்ட வீணையின் நாதம்போல் வெளிவந்தது அவள் பதில், “பதில் சொல்லலாம்...” என்று.

“பின் ஏன் சொல்லவில்லை?” காதுக்குள் ரகசியமாக ஓதினான் அவன்.

அவன் மார்பிலிருந்த அவள் முகத்தாமரை அவன் முகத்தை நோக்கியது. “கேள்வி சரியில்லை” என்று உதடுகள் இருமுறை திறந்து மூடின.

“கேள்வி சரியில்லையா?” ஆம்.

“என்ன கேட்டேன்?” மக “ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டீர்கள்?”

“அதில் தவறென்ன?” திரிக்கிறீர்கள் என்பதில் மரியாதை எரகக்க்சாகிதள்.

“ஏன் மரியாதை கூடாதா?”

“கூடும், மற்றக் காரியங்களிலும் மரியாதை காட்டப் பட்டால்.

“என்ன மரியாதைக் காட்டவில்லை நான்?”

“இந்த நிலை மரியாதைக்கு அறிகுறியா!”

“தேவி! நான்...

“ஊஹாம்.

தவறு, தவறு” என்று சிரித்தாள் அவள்.

“காஞ்சனா!”

“அதுதான் சரி” என்றாள் அவள்.

“எது?”

“அழைத்த முறை.

“அவன் புரிந்துகொண்டான். புரிந்தும் விழித்தான். “என்ன விழிக்கிறீர்கள்? இன்னும் புரியவில்லையா? கண்ணில்லையா உங்களுக்கு?”

“கண்கள் இருக்கின்றன. ஆனால் பயனில்லை.

“ஏன்?”

“உன்னைக் காண இந்த இரு கண்கள் போதா.

“நம் இருவர் கண்களும் பயன் அற்றவை” என்றாள் அவன்...

அவள் சொன்னதன் பொருள் வேறு, ஆனால் கிடைத்த பொருள் வேறு. ஏனென்றால் அத்தனை விளக் கொளியிருந்தும், குடிசைக் கதவின் மூலம் ஓசைப்படாமல் உள்ளே நுழைந்து கதவை மெள்ளச் சாத்திவிட்டு அதன் குறுக்கே உருவிய வாளும் கையுமாக நின்றுகொண்ட ஓர் உருவத்தை அந்த இருவருமே கவனிக்கவில்லை.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 16

அரபு நாட்டு அமிர்

கோதலின் பிணைப்பிலும் உணர்ச்சி வெள்ளத்திலும் சிக்குண்டு பூலோகத்தை அறவே மறந்து சொர்க்கலோகத் தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த கடாரத்துக் கட்டழகியும், பல்லவ குல இளவலும் குடிசைக் கதவைத் திறந்து கொண்டு மனிதனொருவன் உள்ளே நுழைந்து கதவை மூடி உருவிய வாளும் கையுமாக நின்றதை அணுவளவும் கவனிக்காமல் ஒருவரையொருவர் மட்டுமே கவனித்த வண்ணம் நீண்ட நேரம் ஏதும் பேசாமல் நின்றிருந்தார்கள். அந்த நிலையில் காதல் அந்த இருவருக்கிடையே கிளப்பி விட்ட சங்கடத்தை விட அதைக் கவனித்த அந்த மூன் றாம் மனிதன் சங்கடம் பெரிதாயிருக்கவே, அவர்களைக் காதல் வானத்திலிருந்து பாலூர்ப் பெருந்துறை மண்ணுக்கு இழுக்க, அவன் பலமுறை தன் தொண்டையைப் பலமாகக் கனைத்தான். அந்தக் கனைப்பின் ஒலியால் இவ்வுலகத் துக்கு வந்துவிட்டாலும், இருந்த குடிசைக் கோடியை விட்டு மட்டும் நகராமல், குடிசைக் கதவுக்கருகே நின்ற அந்தப் புதுமனிதனை யாரென்று இருவரும் ஏறெடுத்து நோக்கினார்கள். வந்த மனிதனின் கோலமே பெரும் விந்தையாயிருந்ததைக் கவனித்த இளைய பல்லவன், அவன் எந்த நாட்டான் என்பதைக் கூட நிர்ணயிக்க முடியாமல் திணறினான். அவனது கொழுத்த கன்னங் களும், உதடுகளும் சிவந்த கண்களும் அவன் அராபியன் என்பதைத் தெளிவு படுத்தினவென்றாலும், நீளமாக இரு பக்கத்திலும் வளர்ந்த உதடுகளின் கோடியில் நீளமாக மடிந்த மீசை மட்டும் சனத்தவர் மீசையைப் போலிருந்தது. மேல் உடையும், கால் உறையும் அராபியர் அணிவதைப் போலிருந்தாலும், அவன் அணிந்திருந்த தொப்பி சதுர மாய்ச் சீனர்களின் தொப்பியைப் போலிருந்தது. சீனர்களைப்போல் அவன் குள்ளமில்லை. நல்ல உயரம், பருமன். அவன் இடைக்கச்சை மேல் நாட்டினர் அணியும் கச்சை யைப் போல் கெட்டித் தோலால் செய்யப்பட்டி ருந்ததன்றி, அந்தக் கச்சையில் அவன் கையில் பிடித்திருந்த வாள் தொங்குவதற்கு அமைக்கப்பட்டிருந்த இடத்தைத் தவிர இன்னும் இரு குறுவாள்களைச் செருகிக் கொள்ளவும் இடமிருந்தது. பாதி சீனர் உடையிலும், பாதி அராபியர் உடையுமாகக் கலந்து அணிந்திருந்த அந்த மனிதனைச் சில வினாடிகள் ஆராய்ந்த இளைய பல்லவன், “யார் நீ? இங்கு எதற்கு வந்தாய்?” என்று வினவினான். அவன் கேள்வி யைத் தொடுத்த அந்த சில வினாடிகளில் காஞ்சனாதேவி சரேலெனப் பின்னுக்கு அடைந்து குடிசைக் கோடியில் சாத்தியிருந்த தனது வாளை எடுத்துக் கொண்டாள். அதைக் கண்ட அந்த மனிதன் பெரிதாக நகைத்தான்.

அந்த நகைப்பினால் கோபத்தின் வசப்பட்ட காஞ்சனாதேவி, “எதற்காக நகைக்கிறாய்?” என்று சீறினாள்.

“பெண்ணே! நீ வாளை எடுத்ததைக் கண்டு சிரித்தேன்” என்று அவன் கூறி மறுபடியும் ராக்ஷஸத் தனமாகப் பெரிதாக நகைத்தான்.

“உன் கை வாள் என் வாளைவிடப் பலமுள்ளதென்று நினைக்கிறாயா?” என்று அவள் வினவினாள் ஆத்திரத்துடன்.

“பலமுள்ளதுதான் பெண்ணே! ஆனால் அதற்காக நகைக்கவில்லை. உன்னையும் இந்தச் சிறுவனையும் கொல்ல நான் வாளைத் தூக்கிக் கொண்டு அங்கு வரத் தேவையில்லை. வந்து போராடவும் அவசியமில்லை. நீங்கள் இதைவிட இன்னும் பத்து மடங்கு அதிகத் தூரத்தி லிருந்தாலும் என் கச்சையிலுள்ள இந்தக் குறுவாள்களை எடுத்தெறிந்தே மாய்த்துவிடுவேன்” என்று கூறித் தன் இடையிலிருந்த இரு குறுவாள்களையும் கையால் தட்டிக் காட்டினான்.

வந்தவனுடைய போர்த்திறமையைத் தீர்மானிக்கும் மனதிலையை அந்தச் சமயத்தில் பெற்றிராத இளைய பல்லவன் மட்டும் அதைப் பற்றிய ஆராய்ச்சியில் நுழை யாமல், “யார் நீ? இங்கு எதற்கு வந்தாய்?” என்று தன் முதல் கேள்வியை இரண்டாம் தரம் மிகப் பலத்துடனும் கண்டிப்புப் பெரிதும் தொனித்தக் குரலிலும் திருப்பினான்.

அந்தக் குரலில் இருந்த கண்டிப்பும், அதிகாரமும் வந்தவனுக்குச் சற்று எச்சரிக்கையை அளித்திருக்க வேண்டும். அதைக் கேட்டதும் அவன் முகத்திலிருந்து சிரிப்பு மறைந்து சிறிது குழப்பம் அதில் படரத் துவங்கியது. அந்தக் குழப்பம் குரலிலும் ஒலிக்கச் சொன்னான் அவன், “உண்மையில் அந்தக் கேள்வியை நான்தான் கேட்டிருக்க வேண்டும்” என்று.

கருணாகர பல்லவன் முகத்தில் வியப்பின் சாயை லேசாகப் படர்ந்தது. தானிருந்த குடிசைக்குள் ஓசைப் படாமல் நுழைந்ததன்றி, தன்னையே கேள்வி கேட்கவும் முனைந்த அந்த மனிதனை நன்றாக உஊன்றிக் கவனித் தான். அந்தப் பார்வையின் பொருளைப் புரிந்துகொண்ட அந்த மனிதன், “உங்கள் எண்ணம் புரிகிறது. நான் எப்படி உங்களைக் கேள்வி கேட்கலாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால் கேள்வி கேட்க எனக்கு உரிமை இருக்கிறது” என்று மீண்டும் கூறினான்.

கருணாகர பல்லவனின் ஆச்சரியம் அதிகமாகவே, “உரிமை இருக்கிறதா?” என்று அந்த ஆச்சரியம் குரலிலும் பிரதிபலிக்கக் கேட்டான்.

“ஆம். உரிமையிருக்கிறது” என்று திட்டமாகச் சொன் னான் அந்த மனிதன்.

“என்ன உரிமை?” அதுவரை மெளனமாயிருந்த காஞ்சனா தேவியும் ஒரு கேள்வியை வீசினாள்.

“சொந்தக்காரனுக்குள்ள உரிமை” என்றான் அந்த மனிதன்.

“அப்படியானால்...” என்று இழுத்தாள் காஞ்சனா தேவி.

“இந்தக் குடிசை என்னுடையது” என்று வாசகத்தை அந்த மனிதன் முடித்ததும், கருணாகர பல்லவனும் காஞ்சனாதேவியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண் டார்கள். பிறகு அந்த மனிதனை நோக்கிய கருணாகர பல்லவன், “நாங்கள் இங்கு பிற்பகலிலே வந்துவிட்டோம்” என்று சுட்டிக் காட்டினான்.

“மிகவும் சந்தோஷம்” என்று அந்த மனிதன் சொன்ன பதிலில் ஏளனமிருந்ததைக் கருணாகர பல்லவன் கவனிக் கத் தவறவில்லை. அதனால் சற்றுச் சீற்றத்துடன் கேட்டான், “அப்பொழுது நீங்கள் இங்கு இல்லையே” என்று.

“நான் இல்லாதது உங்களுக்குச் செளகரியமாகப் போய்விட்டதென்பது புரிகிறது” என்றான் அந்த மனிதன்.

காஞ்சனாதேவியின் முகம் வெட்கத்தால் குப்பென்று சிவந்தது. தானும் இளைய பல்லவனும் இருந்த நிலை யையே அவன் குறிப்பிடுகிறானென்பதைப் புரிந்துகொண்ட தால் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் அவள். இளைய பல்லவனுக்கும் அந்த மனிதன் பேச்சு சற்றுச் சங்கடத்தையே அளித்ததென்றாலும் அவன் அதைச் சமாளித்துக் கொண்டு, “நீங்கள் நினைப்பது தவறு. இந்தக் குடிசைக்கு நாங்களாக வரவில்லை” என்று தெரிவித்தான்.

“வேறு யார் அழைத்து வந்தார்களோ?”

“அதைச் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்.

“சொன்னால் என்ன நடந்துவிடும்?”

“ஆபத்து நிகழலாம்.

“யாருக்கு?”

“என் நண்பருக்கு!”

இதற்கும் பதில் சொல்ல யோசித்தான் இளைய பல்லவன். ‘இந்த நாட்டு அதிபர்களால் அபத்து என்று சொல்லலாமா? ஒருவேளை இவன் கலிங்க வீரர்களிடம் காட்டிக் கொடுத்துவிட்டால் என்ன செய்வது?” என்று சில விநாடிகள் சிந்தித்தான்..

அவன் சிந்தனையில் ஓடிய எண்ணங்களைப் புரிந்து கொண்ட அந்த மனிதன், “நீங்கள் யாரோ எனக்குத் தெரி யாது. உங்களை நான் இங்கு எதிர்பார்க்கவில்லை. வேறு ஒரு நண்பரை எதிர்பார்த்து வந்தேன். அவருக்குப் பதில் நீங்கள் இங்கு இருக்கிறீர்கள். உங்களை அழைத்து வந்து என் குடிசையில் தங்க வைத்தவர் பெயரையும் சொல்ல மறுக்கிறீர்கள். அது கிடக்கட்டும். உங்கள் பெயரையாவது சொல்லலாமா?” என்று வினவினான்.

“என் பெயரையும் சொல்வதற்கில்லை” என்று அறிவித் தான் இளையபல்லவன்.

“அந்தப் பெண்ணின் பெயர்?” என்று கேட்டுச் சற்றுப் பதிலுக்கு நிதானித்த அந்த விந்தை மனிதன், “சரி, சரி, சொல்லமாட்டீர்கள். அதுவும் மர்மம். ஆனால் அந்த மரா்மத்துக்குக் காரணம் தெரியும்” என்று கூறி இடி இடியென நகைத்தான்.

அந்த நகைப்பைக் கண்டுவெகுண்ட இளைய பல்லவன், “என்ன காரணத்தைத் தெரிந்துகொண்டு விட்டீர்?” என்று கேட்டான் குரலில் உஷ்ணம் பூரண மாகத் தொனிக்க.

“காரணம் எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும்.

ஆனால் இது ஒன்றும் புதிதல்ல” என்று சொல்லி மீண்டும் நகைத்தான்..

“எது புதிதல்ல?” இளையபல்லவன் குரலில் உக்கிரம் உச்சியில் நின்றது.

“ரகசியக் காதல்” என்ற அந்த மனிதன் தன் பெரு உதடுகளில் புன்சிரிப்பைத் தவழவிட்டான்.

“யோசித்துப் பேசு.

“இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது?”

யோசிப்பதற்கு ஒன்றுமில்லையென்பது இளைய பல்லவனுக்குப் புரிந்தேயிருந்தது. தாங்கள் இருந்த நிலையைப் பார்த்த எவரும் அந்தப் புது மனிதன் செய்த கற்பனையைத் தவிர வேறு கற்பனையில் ஈடுபட முடியா தென்பதைப் புரிந்தகொண்டான். அப்படி விஷயம் தெளிவாகப் புரியவே, சரியாகப் பதில் சொல்ல முடியாத காரணத்தால் இளையபல்லவன் இதய்த்தில் கோபமே பெரிதாக எழுந்து நின்றது. அந்தக் கோபத்தின் விளை வாகச் சரேலெனக் காஞ்சனாதேவியின் கையிலிருந்த கத்தியைத் தான் பிடுங்கிக்கொண்டு, “டேய், வாயை அடக்கிப் பேசு, இல்லையேல் வா அருகில்” என்று சொல்லிக்கொண்டு உருவிய வாளை நீட்டிக் கொண்டு சற்று முன்னேறினான்.

அந்த மனிதன் குடிசையின் கதவைவிட்டுச் சற்று அப்புறம் நகர்ந்தான். ஆனால் கையிலிருந்த வாளை அவன் நீட்டவில்லை,. அதை இடது கைக்கு மாற்றிக்கொண்டு வலது கையைக் கச்சையிலிருந்த குறுவாளுக்காகக் கொண்டு சென்றான். அவனது சிவந்த பயங்கரக் கண்கள் சற்றே குறுகின. முகத்திலும் கண்களில் உதயமான பயங்கரச் சாயை படர்ந்தது. இதையெல்லாம் வினாடி நேரத்தில் கவனித்த இளையபல்லவன் புலிக் கண்கள் தனக்குச் சமதையான எதிரியைக் கண்டுவிட்ட சந்தோஷத் தால் பளிச்சிட்டன, இந்த நிலை ஒரு வினாடி நீடித் திருந்தால், என்ன விளைவு ஏற்பட்டிருக்குமென்று சொல்ல முடியாது. அந்த விளைவைத் தடுக்கத் திடீரெனக் குடிசைக்கு வெளியே குதிரைகள் வந்து நிற்கும் காலடிகள் கேட்டன. “இந்தா, இந்தக் குதிரையைப் பிடித்து அந்த மரத்தில் கட்டு” என்று அதிகாரச் சொற்கள் குடிசையின் பயங்கர அமைதியை ஊடுருவிச் சென்றன. அடுத்த வினாடி குடிசைக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த அநபாயன் அங்கிருந்த நிலையைக் கண்டு அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.

அநபாயனின் திடீர்ப் பிரவேசம் அந்தக் குடிசையி லிருந்த மூவரிடையும் பெருத்த மாறுதலை விளைவித்தது. இளையபல்லவன் வாளைச் சிறிது தாழ்த்தினான். வெட்கத் தால் வேறுபுறம் முகத்தைத். தருப்பிக்கொண்டு நின்ற காஞ்சனாதேவி சரேலெனக் குடிசையின் கதவை நோக்கத் திரும்பி அநபாயனை. ஏறெடுத்து நோக்கினாள். அவளு டைய அந்தப் பார்வையில் பெரும் சாந்தியிருந்தது. ஏதோ பெரும் அபாயம் தடுக்கப்பட்டது என்பதற்கு அறிகுறியான அமைதியும் அதில் நிலவிக் கிடந்தது. ஆனால் குடிசைச் சொந்தக்காரன் போக்கு மிக விநோதமாயிருந்தது. அநபாய னைக் கண்டதும் சட்டென்று அவன் பெரிய வாள் கச்சையை நோக்குப் பறந்து அதில் இணைந்தது. குறு வாளை எடுக்கப் போன வலதுகை துவண்டு தொங்கியது. பெட்டிப் பாம்பைப்போல் அடங்கிய அவன் பிரும் மாண்ட சரீரம் அநபாயனை நோக்கித் தலையையும் தாழ்த்தியது.

அநபாயன் அந்தப் பெரிய சரீரத்தின் முதுகில் செல்ல மாகத் தட்டிக் கொடுத்தான். பிறகு இளைய பல்லவனை நோக்கிவிட்டு அந்த மனிதனிடம் திரும்பி, “அமீர்! இதென்ன சண்டைக்கு ஆயத்தம்?” என்று வினவினான். அமீர் தன் சீனக் குல்லாய் தரையில் தாழ அநதபாயனை நோக்கி வணங்கிவிட்டுச் சொன்னான், “என் குடிசையில் தங்களை. எதிர்பார்த்து வந்தேன். ஆனால் இவர்களிருந் தார்கள்” என்று.

“உனக்கு இவர்கள் அறிமுகமில்லை. இருந்தாலென்ன? யாரென்று கேட்டுத் தெரிந்து கொள்வதுதானே?” என்றான் அநபாயன்.

“வந்தவுடனே கேட்க முடியவில்லை” என்று பதில் சொன்ன அமீரின் உதடுகளில் நமட்டு விஷமம் தெரிந்தது.

“ஏன்?” என்று வினவிய அநபாயன் அமீரைவிட்டு இளைய பல்லவனையும் காஞ்சனா தேவியையும் நோக்கி னான். இளையபல்லவன் முகத்திலிருந்த சங்கடச் சாயை யும், காஞ்சனா தேவியின் முகத்தில் தடீரென. மண்டி விட்ட குழப்பமும், குழப்பத்தைத் தொடர்ந்து சிவந்த கன்னங்களும் ஓரளவு கதையைச் சொல்லவே அநபாயன் முகத்தில் ஓரளவு வியப்பே விக௫த்தது. வங்கக் கடலுக்கு அப்புறத்திலும் இப்புறத்திலும் இருக்கும் இரு நாடுகளைச் சேர்ந்த இருவர் தடீரெனச் சந்தித்து மூன்று நாள்களுக்குள் காதல் வலையில் கட்டுப்படுவது இயற்கையின் வன்மை யைச் சுட்டிக் காட்டுகிறதா, விதியின் வலிமையை வலி யுறுத்துகிறதா என்பதை நினைத்துப் பார்த்து விடை காணாத அநபாயன் இதழ்களில் மெல்லப் புன்முறுவல் தவழ்ந்தது. அதைத் தொடர்ந்து, “அப்படியா!” என்ற சொல்லும் வெளிவந்தது.

அந்த ‘அப்படியா’வில் ஆயிரம் அர்த்தங்கள் தொனிப் பதை உணர்ந்த இளைய பல்லவனின் குழப்பமும் காஞ்சனா தேவியின் சங்கடமும் அதிகரித்து விட்டதையும், அவர்கள் கண்கள் நிலத்தில் தாழ்ந்து விட்டதையும் கண்ட அமீர், “ஆம்! அதனால்தான் வந்தவுடன் விசாரிக்க முடிய வில்லை. விசாரித்தபோது இவர்கள் பதிலும் சரியாகச் சொல்லவில்லை. இவர்கள் பெயர்களையும் சொல்ல மறுத்தார்கள். இவர்களை அழைத்து வந்தவரின் பெயரையும் சொல்ல மறுத்தார்கள். போதாக்குறைக்கு அந்தப் பெண்ணும் வாளை எடுத்தாள். பிறகு அந்த வாளை அவர் பிடுங்கிக் கொண்டார். நானும்...

“குறுவாளிடம் கையைக் கொண்டு போயிருப்பாய்” என்று அமீரின் வாசகத்தை அநபாயன் முடித்ததைக் கண்ட இளையபல்லவன், வியப்பின் எல்லையை எய்தி னான். அநபாயன் மேற்கொண்டு சொன்னது அந்த வியப்பை ஆயிரம் மடங்கு அதிகரிக்கவே செய்தது. “நல்ல வேளை அமீர்! குறுவாளை எடுக்காதிருந்தாயே! அதைக் கண்டாலே எனக்குப் பயம்” என்று கூறிய அநபாயன் மறுபடியும் அமீரின் முதுகில் தட்டிக் கொடுத்தான்.

அநபாயன் போக்கு எதுவும் பிடிபடவில்லை இளைய பல்லவனுக்கு. யார் இந்த அமீர்? இவன் எப்படிப் பரிச்சயம் அநபாயருக்கு. குறுவாளை எடுத்து வீசுவது பற்றிச் சற்றுமுன்பு அமீர் சொன்னதை, அநபாயரும் சளா்ஜிதப்படுத்துகிறாரே, என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்ட இளையபல்லவன், அந்தக் கேள்விகளை நேரா கவே கேட்டுவிட இஷ்டப்பட்டு அநபாயனை ஏறெடுத்து நோக்கினான்.

இளையபல்லவன் மனத்திலோடிய எண்ணங்களை முகமே பிரதிபலித்திருக்க வேண்டும். அவையனைத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் அறிந்துகொண்ட அநபாயன், இளையபல்லவன் வாய் கேள்விகளைக் கேட்கு முன்பே பதில் கூறினான் “கருணாகரா! அமீர் எனக்கு நீண்ட நாள் பழக்கமுள்ளவன். அவனை விடத் திறமை யும் எந்த அபாயத்தையும் சமாளிப்பதில் வல்லமைச்சாலியு மான ஒருவனைக் கண்டுபிடிப்பது அசாத்தியம். கப்ப லோட்டுவதிலும், கப்பல் போரிலும் இணையற்ற சாமர்த்திய முள்ளவன். இந்தக் கீழ்க்கடல் பிராந்தியம் முழுவதையும் நன்கறிந்தவன். அரபு நாட்டிலிருந்து சனநாடு வரை உள்ள துறைமுகங்கள் அனைத்தும் தெரியும் இவனுக்கு. நூறு அடிக்கு அப்பாலு முள்ளவர்களைக் குறுவா! எளறி்ந் து கொல்லுவதில் நிகரற்றவன். பார்ப்பதற்கு பளுவாயிருக்கும் இந்தத் தேகத்தைச் சண்டை சமயத்தில் பார்த்தால் ஆச்சரியப்படுவாய், வாளிப்பான சரீரத்தைவிடச் சுறுசுறுப் பாய் வேலை செய்யும். இந்தப் பாலூர்ப் பெருந்துறையி லிருந்து நம்மைக் காப்பாற்ற வல்லவன் அமீர் ஒருவன் தான். அமீரிடம்தான் நம்மை ஒப்படைத்திருக்கிறேன்” என்று விளக்கினான் அநபாயன். “ஓன்று மறந்துவிட்டேன். அமீரின் தயவில்லாவிட்டால் தூதுப் புறா மூலம் நான் குணவர்மனுக்குச் செய்தியனுப்பியிருக்க முடியாது. புறா அமீருக்குச் சொந்தம்” என்று கூறினான் சோழர்குல இளவல்.

அமீரின், இந்தப் பிரதாப புராணத்தைக் கேட்ட இளையபல்லவன் சில விநாடிகள் பதிலேதும் சொல்ல வில்லை. பிறகு கேட்டான் “நம்மைத் தப்புவிக்கும் பொறுப்பைப் பிற நாட்டார் ஒருவரிடம் ஒப்படைத்தி ருப்பதாகக் கூறினீர்களே, அவர் இவர்தானா?” என்று.

“ஆம்! அமீர் அரபு நாட்டைச் சேர்ந்தவன். சீன நாட்டில் அடிமையாக விற்கப்பட்டான். அங்கிருந்ததால் அந்த நாட்டுப் பழக்க வழக்கங்கள் கலந்துவிட்டன” என்று விளக்கிய அநபாயன், “அது மட்டுமல்ல கருணாகரா, யாரும் தப்பமுடியாத சன அடிமைத்தளத்திலிருந்து தந்தி ரத்தால் தப்பி வந்திருக்கிறான். இப்பொழுதுகூட அமீரைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குச் சனாவில் ஆயிரம் பொற் காசுகள் பரிசு கடைக்கும். ஆனால் அமீரைப் பிடிப்பது முடியாத காரியம்” என்று பெருமையுடன் சொல்லவும் செய்தான்.

அத்துடன் அமீரின் கதையை முடிக்க இஷ்டப்பட்ட அநபாயன், “கருணாகரா! அமீரின் கதையை முழுவதும் சொன்னால் கேட்கத் தெவிட்டாது. இன்னொரு நாள் சொல்கிறேன். இப்பொழுது நாம் கவனிக்க வேண்டிய அலுவல் வேறு” என்று கூறிவிட்டு, “என்ன அமீர்! நாங்கள் தப்பிச் செல்ல வழி ஏதாவது கண்டுபிடித்தாயா?” என்று அமீரை நோக்கி வினவினான்.

“கண்டு பிடிக்காமல் வருவேனா?” என்றான் அமீர்.

“எந்த வழியில் தப்பலாம்?” என்று அநபாயன் விசாரித்தான்.

“நிலவழி முடியாது.

பலமாகக் காக்கப்பட்டி ருக்கிறது.

நீர் வழிதான் செளகரியம்.

“அதற்குத் திட்டமிருக்கிறதா?”

“இருக்கிறது.

“.

“என்ன திட்டம்?”

“வந்தால் காட்டுகிறேன்.

“சரி, புறப்படுவோம்.

“அநபாயனின் இந்தக் கட்டளையைத் தொடர்ந்து குடிசையிலிருந்தவர்கள் வெளியேறினார்கள். அமீர் அழைத்துச் சென்ற இடம் மட்டுமல்ல, அவன் விவரித்த திட்டமும் மிகப் பயங்கரமாக இருந்தது. ஆனால் அதை விட்டால் தப்ப வேறு வழியுமில்லையென்பதை அநபாயன் மட்டுமின்றி மற்றவர்களும் புரிந்துகொண்டார்கள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 17

புதிதாக வந்தவன்

பாரலூர்ப் பெருந்துறையின் நிலவழிகள் பலமாகக் காக்கப்பட்டிருந்ததால் நீர்வழி ஒன்று மூலமே அநபாயச் சோழனும் அவன் நண்பர்களும் தப்ப முடியும். என்பதை எடுத்துச் சொன்னதன்றி, அவர்கள் தப்ப வேண்டிய முறை யையும் நிர்ணயித்துவிட்டதாகக் கூறிய அரபுநாட்டு அமீர், அவர்களைக் கோதாவரி ஆற்றங்கரைக் குடிசை யிலிருந்து அழைத்துச் செல்லுமுன்பு முன்னேற்பாடுகளை மிகுந்த எச்சரிக்கையுடன் செய்துகொண்டான். “சரி புறப் படுவோம்” என்று அநபாயன் கட்டளையிட்ட பின்பும் உடனே அதற்கு உடன்படாத அமீர், “சற்றுத் தாமதிக்க வேண்டும்” என்று கூறிவிட்டுக் குடிசைக்கு வெளியே சென்று சில விநாடிகளில் மூன்று பெரும் கறுப்புக் கம்பளங்களுடன் திரும்பி வந்து, “இதை ஆளுக்கொன்று எடுத்துத் தலையை முக்காடிட்டுக் கூடியவரை உடம்பை யும் மறைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினான். அவன் சொன்னபடி அவர்கள் போர்த்திக் கொண்டதும் அநபாய னைப் பார்த்த அமீர், “அந்தப் பழைய நடை தங்களுக்கு ஏற்கெனவே பழக்கமானது. நான் சொல்லித்தர வேண்டிய தில்லை” என்று கூறிப் புன்முறுவல் செய்து, மற்ற இருவரை யும் நோக்கி, “இதோ பாருங்கள்! எனக்குப் பின்னால் நீங்களிருவரும் முதுகை வளைத்துத் தலை குனிந்து இப்படி அடக்கமாக அரை ஓட்டமும் அரை நடையுமாக வர வேண்டும்” என்று சொல்லி அவர்கள் வரவேண்டிய முறையை. விளக்க, தன் பெரும் சரீரத்தை வளைத்துத் தலையைக் குனிந்து கால்களைக் குறுக்கிக் குடிசையில் அப்படியும் இப்படியும் இரண்டு மூன்று முறைகள் ஓடியும் காட்டினான்.

அத்தனை பெரிய சரீரத்தைத் தூக்கிக்கொண்டு அமீர் ஓடியதே பெரும் விந்தையாயிருந்தது கருணாகர பல்லவனுக்கு. அப்படியிருக்க அவன் தங்களையும் அப்படி ஓட வேண்டுமென்று வற்புறுத்தியது விந்தையின் எல்லையைத் தொடவே, கருணாகர பல்லவன் கேட்டான். “தங்கள் பின்னால் இப்படி ஓடுவதில் பயன் என்ன இருக்கிறது?” என்று.

அமீரின் கண்கள் மிகவும் விஷமத்துடன் கருணாகர பல்லவனை ஏறெடுத்து நோக்கியதன்றி உதடுகளும் விஷமத் துடனேயே சொற்களை உதிர்த்தன. “உயிர் காப்பாற்றப் படுவது போதிய பயன் அல்லவா?” என்று கேட்டான்.

அமீர் குடிசைக்கு வந்தது முதல் பேசிய பேச்சைக் கேட்டு வியப்பெய்தியிருந்த இளைய பல்லவனுக்கு அவன் கடைசியாகப் பேசிய பேச்சைக் கேட்டபோது வியப்புப் பன்மடங்கு அதிகமாயிற்று. காஞ்சனாதேவியின் காதல் வலையிலிருந்த சமயத்தில் சரேலெனக் கவனிக்கத் தவறிய பல விஷயங்களை அவன் கண்களும் செவிகளும் அதனின்று விடுபட்டதும் ஊன்றிக் கவனிக்கவே செய்தன. முதன் முதலாக இளைய பல்லவன் கவனித்தது அந்த அரபு நாட்டான் பேசிய தமிழ் மொழியின் தெளிவுதான். தமிழனாகப் பிறந்து தமிழ் நாட்டிலேயே வருடக் கணக்கில் வளர்ந்தவன் எத்தனை தூய்மையாகவும் சரளமாகவும் பேசுவானோ அத்தனைத் தூய்மையாகவும் சர்வ சகஜமா கவும் தமிழ் மொழியை அவன் கையாளுவதையும், அந்த மொழியின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்து விஷமத்தையும் கலந்து அவன் சொற்களை உதிர்ப்பதையும் கண்டு வியப் பெய்திய இளையபல்லவன், “நீங்கள் தமிழகத்தில் இருந் திருக்கிறீர்களா?” என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தான்.

“இல்லை, இருந்ததில்லை. ஏன் கேட்டறீர்கள்?” என்று ஆச்சரியத்துடன் வினவிய அமீர், அந்த அச்சரியம் கண் களிலும் மலர ஒருமுறை இளைய பல்லவனை ஏறெடுத்து நோக்கினான்...இதற்குக் கருணாகர பல்லவன் பதில் சொல்லுமுன்பு இடையே புகுந்து அநபாயனே பதில் சொன்னான், “அமீர்! உன் தமிழின் தூய்மை கருணாகரனைப் பிரமிக்க வைத்திருக்கிறது. வேறொன்றுமில்லை” என்று.

அதுவரை கருணாகர பல்லவன் பெயரைக்கூடக் கேட்காத அமீர், “இவர் பெயர் கருணாகரரா?” என்று வினவினான்.

“ஆமாம் அமீர்! இவர் எங்கள் நாட்டின் பெரும் அரச குலமொன்றில் பிறந்தவர்.

“கருணாகர பல்லவன் அரசகுலத்தைச் சேர்ந்தவன் என்பதைக் கேட்டதும், சனத்துக் குல்லாயுடன் தலையை ஒருமூறை தாழ்த்தி வணங்கிய அமீர், “வணக்கம் அரசே” என்று மிகப் பணிவுடன் சொற்களை உதிர்த்தான்.

“இவர் அரசரல்ல அமீர்” என்று திருத்திய அநபாயன் மெள்ளப் புன்முறுவல் செய்தான்.

அமீர் முகத்தில் குழப்பம் விரிந்தது.

“அப்படியானால் யாரிவர்?”

“எங்கள் நாட்டில் பல்லவ இலத என்றோர் அரச குலம் இருக்கிறது.”

“உம்”.

“அந்தக் குலத்து அரசரின் இளையவர் இவர்.

“இளவரசரா?”

“ஆமாம்.

அதுமட்டுமல்ல.

“இதைக் கேட்டதும் ஏதோ வினாவை வீசுவதற்கு அறிகுறியாக மேலே எழுந்தன அமீரின் புருவங்கள். கண்களும் அநபாயன் முகத்தை நோக்கிக் கேள்விக் குறியை வீசின. அவன் கண்களில் கண்ட கேள்விகளைப் புரிந்நுகொண்ட அநபாயன், “அமீர்! கருணாகர பல்லவர் தமிழகத்தின் பெரும் படைத்தலைவர்களில் ஒருவர். போரைவிட இவர் விரும்புவது எதுவுமில்லை. அப்பேர்ப் பட்டவர் சமாதானத் தூதராகப் பாலூர் வந்தார். இவர் வந்த வேளை கடைசியில் போர்தான் விளையும் போலி ருக்கிறது” என்று சொல்லி இதழ்களில் புன்முறுவலொன் றைப் படர விட்டதன்றி, “அமீர்! வந்தவுடன் இவர்களை உனக்கு நான் அறிமுகப்படுத்தி வைத்திருக்க வேண்டும். ஆனால் குடிசைக்குள் நுழைந்தபோது நிலைமை வேறு விதமாயிருந்ததால் அந்தப் பணியைச் செய்ய முடிய வில்லை. இப்பொழுது தெரிந்துகொள். கருணாகர பல்லவர் தமிழகத்தில் இணையற்ற படைத்தலைவர் மட்டு மல்ல. என் உயிர் நண்பருங்கூட. அதோ நிற்கும் அந்த எழிலரசி கடாரத்தின் இளவரசி. உன்னிடம் ஒப்படைத்தி ருக்கிறேனே ஒருவர், அவருடைய மகள்” என்று தெளிவாக அறிமுகப்படுத்தவும் செய்தான்.

அநபாயன் இப்படி விளக்கிச் சொல்லியதால் ஓரளவு தெளிவடைந்த அமீர், அந்த இருவருக்கும் மீண்டும் தலை தாழ்த்தி, “அப்படியா! மிக்க மகழ்ச்சி” என்று கூறியதோடு நில்லாமல், “கடாரத்து இளவரசி முன்பே தமிழ்நாடு வந்திருக்கிறார்களா?” என்றும் வினவினான்.

“இல்லை இல்லை. இன்னும் தமிழ்நாட்டில் அடி யெடுத்து வைக்கவில்லை. இனிமேல்தான் போகவேண்டும், அதுவும் உன் தயவால்” என்றான் அநபாயன்.

“தயவு என்று தாங்கள் சொல்வது தவறு, அடிமை யைக் கட்டளை இடுவதுதான் முறை” என்று பணிவுடன் சொன்ன அமீர், “நான் தவறாக நினைத்துவிட்டேன் அநபாயரே! இவர்களுக்கு நீண்டநாள் பரிச்சயமிருக்க வேண்டுமென்று நினைத்தேன். அதனால்தான் இளவரசி முன்பே தமிழகம் வந்திருக்கிறார்களா என்று கேட்டேன்” என்று சமாதானம் கூறி விஷமப் புன்னகை செய்த அமீ ரைச் சுட்டுவிடுவன போல் நோக்கின கருணாகர பல்லவனின் ஈட்டி விழிகள். அவன் சொற்களைக் கேட்ட காஞ்சனாதேவியின் அஞ்சன விழிகள் நிலத்தை நோக்கின. அந்த நிலையை நீண்ட நேரம் நிலைக்க விடுவதால் ஏற்படக்கூடிய சங்கடத்தைப் புரிந்துகொண்ட அநபாயன் அமீரைச் சரேலென மறித்து, “அமீர்! காஞ்சனாதேவியால் கருணாகரர் கலிங்கத்தின் காவலரிடமிருந்து காக்கப் பட்டார். அகையால் நன்றியின் விளைவாக இருவருக்கும் நட்பு புலப்பட்டது. தவிர, இருவரும் கலிங்கத்தின் மன்னர்களான அனந்தவர்மன், பீமன் இவர் பகைக்கு இலக்காகி ஆபத்தில் சிக்கியவர்கள். ஆபத்து நட்பின் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது இயல்பல்லவா?” என விளக்கினான்.

இந்த விளக்கத்திலும் சரி, அதற்கு முன்பு அமீருடன் நடந்த சம்பாஷணையிலும் சரி, அநபாயன் தன்னை மிகுந்த மரியாதையுடன், ‘கருணாகரர்’ என்றும், “இளைய பல்லவர்’ என்றும், ‘இணையற்ற படைத்தலைவர் என்றும் அழைத்ததைக் கவனித்து அதை ரசிக்க முடியாத இளைய பல்லவன், மீண்டும் சம்பாஷணை தன்னையும் காஞ்சனா தேவியையும் சுற்ற முயல்வதைக் கண்டு அதைத் தடுக்கும் நோக்கத்துடன், “அநபாயர் இந்த அடிமைக்கு அளவுக்கு மீறிய மரியாதையைக் காட்டுவது அழகல்ல” என்று சற்றுக் கோபத்துடன் சொன்னான். அந்தக் கோபத்தின் காரணம் அநபாயனுக்குப் புரிந்திருந்ததால் அவன் சற்று இரைந்தே நகைத்துவிட்டுச் சொன்னான், “கருணாகரா! உன்னை மரியாதையாக அழைக்க வேண்டுமென்ற காரணத்தால் அந்த மரியாதையைக் காட்ட வில்லைதான். புதிதாக அமீரிடம் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டிய அவசியம் நேர்ந்ததால் உன் குலப் பெயர், பதவி முதலியவற்றைக் குறிப்பிட வேண்டியதாயிற்று” என்று.

இதற்கு ஏதோ பதில் சொல்ல வாயெடுத்த கருணாகர பல்லவனைத் தன் கையை உயர்த்தி மீண்டும் தடை செய்த அநபாயன், “இப்பொழுது நீங்களிருவரும் அறிமுகமாகி விட்டதால் என் மனப்பளு பெரிதும் இறங்கிவிட்டது. நம்மை அமீர் கண்டிப்பாகத் தமிழகம் அனுப்பிவிடுவான். அமீரின் தூய தமிழைக் கண்டு நீ வியந்ததைப் புரிந்து கொண்டேன் கருணாகரா! ஆனால் அமீரை நன்கு அறிந்தவர்களுக்கு அதில் வியப்பு ஏதுமிருக்காது. அமீர் ஒரு விந்தை மனிதன். அவனுக்குப் பல மொழிகள் தெரியும். சீனமொழி தெரியும். சொர்ண பூமியையும் அதை அடுத்த தீவுகளிலும் வழங்கும் மொழிகள் பலவும் தெரியும். பாதி வடமொழி பாதி தென் மொழியும் கலந்த கலிங்கத்தின் பூதுமொழியும் தெரியும். அரபு மொழி தாய் மொழி. ஆனால் யவனர் மொழியைத் திறமையுடன் பேசுவான். ஏற்கெனவே சொன்னேன் உனக்கு, அரபு நாட்டிலிருந்து சீனா வரையிலுள்ள துறைமுகங்கள் அவனுக்குத் தெரியும் என்று. துறைமுகங்கள் மட்டுமல்ல, ஆங்காங்குள்ள மக்களின் மொழிகளும் தெரியும். மொழிகள் மட்டுமல்ல, ஒவ்வொரு துறைமுகத்திலும் இரண்டொரு அந்தரங்க நண்பர்களுமிருக்கிறார்கள். இந்தப் பாலூர்ப் பெருந்துறை யில் இவன் கையர்ட்கள் முக்கியமான பல இடங்களில் பரவிக் இடக்கிறார்கள். ஆகவே இவன் தூய்மையாகத் தமிழ் பேசுவதைப் பற்றி வியப்படையாதே. அது மட்டு மல்ல, அரும்பெரும் காரியங்களை இவன் சாஇத்தாலும் வியப்படையாதே. மற்றவர்களுக்கு அசாதாரணமானது அமீருக்குச் சர்வ சாதாரணம்” என்று கூறியதன்றி அமீரின் முதுகில் மீண்டும் செல்லமாகத் தட்டிக் கொடுத்தான்.

அநபாயன் வார்த்தைகள் கருணாகர பல்லவனுக்கும் காஞ்சனாதேவிக்கும் மென்மேலும் அச்சரியத்தையே அளித்தன. அரபு நாட்டான் ஒருவனிடம் அநபாய சோழன் கொண்டுள்ள நம்பிக்கையைக் கண்டு பெரிதும் வியப்பெய்திய அவ்விருவரும் ஒருவரையொருவர் சில விநாடிகள் பார்த்துக்கொண்டனர். ஆனால் அமீரின் கண்கள் அதற்குப் பிறகு யாரையும் பார்க்கும் சத்தியை இழந்தன. அநபாயன் புகழ்ச்சிச் சொற்கள் அவனுக்குப் பெரும் சங்கடத்தையும் குழப்பத்தையும் அளித்திருந்தன. ஒரே ஒருமுறை மட்டும் கண்களை உயரத் தூரக்க அநபாய னைப் பார்த்துவிட்டு மீண்டும் நிலத்தைச் சில விநாடிகள் கவனித்த அமீர், அந்தச் சங்கடத்தைப் போக்கஒக் கொள்ளவோ என்னவோ துரிதமாகச் செயலில் இறங்க, “கருணாகர பல்லவரே! தேவி! நான் முதலில் காட்டியபடி போர்வையை நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு என் பின்னால் முதுகைக் கூனிப் பாதி ஓட்டமும் நடையு மாக வாருங்கள்” என்று கூறிப் புறப்பட ஆயத்தமானான்.

அமீர் சொன்னபடி எதற்காகக் கூனிக் குறுகி ஓட வேண்டுமென்று புரியாததால் அதை மட்டும் கேட்க முற்பட்ட இளையபல்லவன், “ஏன் அப்படி ஓட வேண்டும்?” என்று வினவினான்.

“அரபு நாட்டு வர்த்தகர்களின் அடிமைகள் ஓடும் முறை ஆது. நான் முன்னால் செல்ல நீங்கள் கம்பளம் மூடி ஓடி வந்தால் என் அடிமைகளில் மூவர் என்னைப் பின் தொடருவதாக இந்த நகர மக்களும் கலிங்க வீரர்களும் நினைப்பார்கள். தோப்பு முகப்பைத் தாண்டியதும் நீங்கள் அந்த முறையைப் பின்தொடர்ந்தால் போதும். இப்பொழுது சாதாரணமாகவே செல்லலாம்” என்று அமீர் விளக்கிவிட்டுக் குடிசைக் கதவைத் திறந்துகொண்டு அவர்களை உடன்வர சைகை செய்து வெளியே சென்றான். அவன் கூறியபடியே அநபாயன், கருணாகரன், காஞ்சனாதேவி மூவரும் தலையிலிருந்து கால்வரை முக்காடிட்ட கம்பளங்களுடன் குடிசையை விட்டு வெளியே வந்து அமீரைப் பின்பற்றிச் சென்றார்கள்.

இரவு நன்றாக ஏறிவிட்டதால், தோப்பில் பயங்கர இருள் சூழ்ந்து கொண்டது. அந்த இருளை இன்னும் அதிகப் பயங்கரமாக அடிக்கச் சற்று தூரத்தே இருந்த கோதாவரியின் பிரவாகமும் கடலும் சேரும் இடம் பெரும் இரைச்சலைக் கிளப்பிவிட்டுக் கொண்டிருந்தது. நல்ல ஸ்வரத்துடன் கூவும் பட்சிகள் அந்தத் தோப்பிலிருந்தும், அவை அதிகமாகச் சப்திக்காமல் ஏதோ ஓரிரு ஆந்தைகள் மட்டும் அலறியது பயங்கரத்தை உச்சிக்குக் கொண்டு போயிருந்தது. அந்த இருட்டையும் பயங்கரத்தையும் சிறிதும் லட்சியம் செய்யாமல் அமீர் சர்வ சகஜமாக அந்த அடர்ந்த தோப்பில் நடந்து சென்றான். அசையக்கூட முடியாத பிரும்மாண்டமான சரீரத்தைத் தாங்கிய அமீர் நடந்த வேகம் இளைய பல்லவனைப் பெரும் ஆச்சரி யத்தில் அமிழ்த்தியது. அவ்வப்பொழுது பின் வருபவர் களை அமீர் பார்வையிட்டபோது அத்தனை இருட்டிலும் காட்டுப் பூனையின் கண்களைப்போல் பளிச்சிட்ட அமீரின் விழிகளைக் கண்ட இளையபல்லவன் காட்டுப் பூனைகளுக்குள்ள தந்திர நடையும் திருப்பமும் அமீரின் கால்களிலிருந்ததைக் கண்டு, ‘அநபாயர் நட்புக் கொண் டி ருப்பது சாதாரண மனிதனையல்ல’ என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.

அமீர் வழிகாட்டி முன்செல்ல, அவனுக்குப் பின்னால் அநபாயன் செல்ல, அநபாயனுக்குப் பின்னால் இளைய பல்லவனும் காஞ்சனாதேவியும் அக்கம் பக்கத்தில் நடந்தார்கள். அமீரின் நடை வேகம் அதிகமாயிருந்ததால் சில சமயங்களில் காஞ்சனாதேவி இஷ்ட விரோதமாக அரை ஓட்டமும் அரை நடையுமாகவே செல்ல வேண்டி யிருந்தது. அப்படி. மற்றவர்களைப் பிடிக்கச் சற்று துரித நடையைக் காட்டியபோதெல்லாம் அவள் அழகிய சரீரம் பக்கத்தே நடந்த இளையபல்லவன் உடலுடன் மோதியது. அக்கம் பக்கத்திலிருப்பவர்களே சரியாகத் தெரியாத அந்த இருட்டில், முன்னே செல்பவர்கள் பின்னே வருபவர் களைப் பார்க்க முடியாதென்ற தைரியத்தில் காஞ்சனா தேவியின் இடது கையும் கருணாகர பல்லவனின் வலது கரமும் அடிக்கடி ஒன்றுபட்டு ஒன்றுபட்டுப் பிரிந்து கொண்டிருந்தது. அந்த அசாதாரண இருட்டு, அவர்கள் இருந்த அபாய நிலை, இந்த இரண்டையும் லவலேசமும் நினைத்துப் பார்க்காமல் ஏதேதோ எண்ணங்களில் உள்ளங் களை அலையவிட்டுக் கொண்ட அந்த இருவரையும் திரும்பிப் பாராமலே தீவிரமாகத் தோப்பில் நடந்து சென்றான் அமீர்

தோப்பின் பெருமரங்கள் இலைகளை நிரம்ப உதிர்த் இருந்ததால் பாதை மெத்து மெத்தென்றே இருந்ததென்றா லும் இரண்டொரு சுள்ளிகள் கால்கள் இடறி வருத்தவே செய்தன. அப்படிப் பாதங்களில் சுள்ளிகள் தட்டுப்பட்ட சமயங்களில் காஞ்சனாதேவியைச் சட்டென்று தன்னை நோக்கி இழுத்துக் கொண்டு நடந்தான் இளையபல்லவன். காஞ்சனாதேவியின் பஞ்சுப் பாதங்களுக்கு அந்தச் சுள்ளிகள் தைத்தது பெரும் வேதனையாக இருந்தது. அந்தத் துன்ப வேதனை அதிகமா அல்லது இளைய பல்லவன் அதைச் சாக்கிட்டுத் தன்னை வலது கையால் இழுத் தணைத்த இன்ப வேதனை அதிகமா என்பதை ஊகிக்க முடியவில்லை கடாரத்துக் கட்டழகக்கு. அப்படித் துன்ப மும் இன்பமும் கலந்ததால் ஏற்பட்ட விநோத உணர்ச்சி களுக்கு இலக்காகக் கொண்டே நடந்தாள் அவள்.

‘நெடுந்தூரத்திற்கு ஒரு தடவை குறுக்கிட்ட ஓரிரு குடிசைகள் வீசிய தீபங்களின் சிற்றொளியில் மட்டும் சற்று நிதானப்பட்ட அந்தக் காதலரிருவரும் மற்ற சமயங்களில் உள்ளக் களர்ச்சியடனேயே அமீரைப் பின்பற்றினர். அப்படி ஒரு நாழிகை நடந்து சென்றதும் தோப்பின் முனை வந்துவிடவே அமீர் சரேலெனத் திரும்பி, (இன்னும், சிறிது தூரம் நாம் பாலூரின் சிறு வணிகர் வீதியில் நட்க்கும் படியிருக்கும். நான் சொன்னது நினைப்பிருக்கட்டும்” என்று கூறி, தோப்பைக் கடந்து வீதிக்குள் நுழைந்தான்.

‘அமீர் அந்த வீதிக்குள் நுழைந்ததுமே தனது கம்பளத் தைப் பலமாக இழுத்து முகம் தெரியாமல் முக்காடிட்டுக் கொண்ட அநபாயன் குனிந்து, நடையும் ஒட்டமுமாகச் செல்லத் துவங்கினான். அவன் காட்டிய முறையை மற்ற இருவரும் பின் பற்றவே மூன்று அடிமைகள் பின்னால் ஓடி வரச் செல்லும் பெரு வணிகனென அமீர் அந்த வீதியில் நடந்து சென்றான்.

வீதியின் வீடுகளில் திபங்கள் அப்பொழுது நன்றாக எரிந்துகொண்டிருந்தன. அடிமை களுடன் சென்ற அமீரைப் பலரும் விசாரிக்க ஆரம்பித் தார்கள். அவர்களுக்கெல்லாம் தகுந்தபடி. பதில் சொல்லிக் கொண்டும் பெரிதாக இடி. இடியென அடிக்கடி நகைத்துத் தன் மகழ்ச்சியைக் காட்டிக்கொண்டு சர்வசகஜமாக அமீர் சொன்னானாலும் அவன். கண்கள் மட்டும் அக்கம் பக்கத்தை மிகக் கூர்மையுடன் ஊடுருவி நோக்கக் கொண்டிருந்தன. சில நிமிடங்களுக்கொருமுறை அந்த வீதியிலும் கலிங்கத்தின் காவல் வீரர்கள் புரவியில் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கும் அடிக்கடி தலைவணங்கியும் தன் இரு கரங்களையும் உயர்த்து உயர்த்தி மரியாதையைக் காட்டிக் கொண்டும் அடிமைகளையும் தனது தடித்த குரலால் அடிக்கடி விரட்டியும் நடந்து சென்ற அமீர் அந்தச் சிறுவணிகர் வீதியிலிருந்து பெரு வணிகர் வீதிக்குள் திரும்பினான். அந்த வீதியைக் கடந்ததும் கருணாகர பல்லவன் ஓரளவு பிரமிப்பையடைந்தானானாலும் அதை வெளிக்குக் காட்டாமல் உள்ளத்தில் மட்டும் பெரும் சந்தேகத்துடன் நடந்து சென்றான். அந்தப் பெரு வணிகர் வீதியை ஒருமுறை வலம் வந்த அமீர் மீண்டும் சிறு வணிகர் வீதியை நோக்கித் திரும்பியது இன்னுமதிக வியப்பை அளித்தது இளைய பல்லவனுக்கு. எதற்காக இந்த அமீர் திரும்பத் திரும்ப வீதுகளைச் சுற்றுறான் ‘ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்ட இளைய பல்லவன் விடை காணாமல் தவித்தான். அவன் தவிப் பைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத அமீர் ஆங்காங்கு ஒவ்வொரு வீட்டுக்கெதிரில் நின்று குரல் கொடுத்து உள்ளிருந்த வர்த்தகர்களைக் கூப்பிட்டு ஏதோ வர்த்தக சம்பந்தமாக வெவ்வேறு மொழிகளில் பேசிவிட்டு நடந்தான்.

இப்படி நடந்து மீண்டும் சிறுவணிகர் வீதியி லிருந்து ஒரு வீட்டுக்கெதிரில் வந்ததும், “உம், போங்கள் உள்ளே” என்று இரைந்த குரலில் கூவினான் பின்னால் வந்த மூவரையும் நோக்கி.

மூவரும் அந்த விடுதிக்குள் நுழைந்தனர். அந்த விடுதிக்குள் நுழைந்ததும் கதவைத் தாளிட வேண்டா மென்று அங்கிருந்த அடிமைகளைக் கண்களாலேயே எச்சரித்த அமீர், அநபாயனையும் மற்ற இருவரையும் அந்த விடுதிக்குள் அழைத்துச் சென்றான். அந்த விடுதி வெளிப் பார்வைக்குக் குறுகலாயிருந்ேதேயொழிய உள்ளே பல கட்டுகளை உடையதாகவும் விசாலமாகவும் இருந்தது. இரண்டு மூன்று கட்டுகளைத் தாண்டியதும் அங்கிருந்த அடிமைகளில் ஒருவனை விளித்த அமீர், “அவர் வந்து விட்டாரா?” என்று வினவினான்.

“வந்துவிட்டார்” என்று பதிலிறுத்தான் அடிமை.

“எங்கருக்கறார்?” என்று மீண்டும் வினவினான் அமீர்.

“தங்கள் அறையில்” என்றான் அடிமை.

இதைக் கேட்ட அமீர், அநபாயனை நோக்கத் திரும்பி, மூழ்ச்சி ததும்பும் விழிகளை அவன்மீது நிலைக்க விட்டு, “அநபாயரே! நமக்கு அதிர்ஷ்டம்தான். அவர் இத்தனை சீக்கிரம் வருவார் என்று நான் நினைக்க வில்லை” என்று கூறி உள்ளே நடந்தான். அநபாயன் ஏதோ புரிந்ததற்கு அறிகுறியாகத் தலையை அசைத்துவிட்டு அமீரைத் தொடர்ந்து சென்றான். ஏதும் புரியாமலே மற்ற இருவரும் முன்னே சென்றவர்களைத் தொடர்ந்தனர். இன்னும் இரண்டு கட்டுகளைத் தாண்டிய பின்பு தனது அறையை அடைந்த அமீர், மற்றவர்களை முன் செல்லச் சைகை காட்டித் தான் மட்டும் கடைசியில் நழைந்தான். அங்கு காத்திருந்த மனிதன் வந்தவர்களைக் கண்டதும் முதலில் சந்தேகத்துடன் விழித்தான். கடைசியில் நுழைந்த அமீரைக் கண்டதும் அவன் முகத்தில் சந்தேகச் சாயை மறைந்து இதழ்களில் புன்முறுவலொன்று படர்ந்தது. அமீரின் உவகை கட்டுக்கடங்காததாயிற்று. அந்த மனிதனைக் கண்டதும் ஏதோ பெரும் புதையலைக் கண்டுவிட்டவன் முகம்போல் பிரமிப்பும் உவகையும் திருப்தியும் கலந்து ஜொலித்தது அமீரின் முகம். அவன் கண்களில் மகழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 18

சீன சோதிடம்

சிறு வணிகர் வீதியிலிருந்த தனது பெரு விடுதியின் நான்காவது கட்டின் உட்புற அறைக்குள் நுழைந்த அரபு நாட்டு அமீர் அங்கு தனக்காகக் காத்திருந்த அந்தப் புது மனிதனைக் கண்டதும் மகழ்ச்சி வெள்ளத்தில் மூழ்க, “வரவேண்டும், வரவேண்டும். நீங்கள் இந்த ஊருக்கு வந்து வருஷங்கள் இரண்டாகின்றன. ஏதோ எங்களைப் பிடித்த நல்ல காலம் இந்தச் சமயத்தில் நீங்கள் இந்தத் துறை முகத்தில் காலடி வைத்திருக்கிறீர்கள்” என்று முகமன் கூறி வரவேற்றதன்றி, பின்புறம் திரும்பி அநபாயனை நோக்க, “அநபாயரே! நான் கூறிய நண்பர் இவர்தான். இவர் நினைத்தால் முடியாத காரியம் உலகத்தில் கிடையாது. நேற்றுக் கடற்கரைக்குப் போயிருந்தபோது தற்செயலாக இவரைச் சந்தித்தேன்” என்று அநபாயனுக்கு வந்த மனிதனை அறிமுகப்படுத்தினான். பின்பு பின்னால் வந்த மற்ற இருவரையும் பார்த்து, “இனி அந்த அடிமை வேடக் கம்பளங்கள் தேவையில்லை. எடுத்துவிடலாம். எல்லோரும் சற்றுச் செளகரியமாக உட்கார்ந்துகொள்ளலாம்” என்று கூறி, அங்கிருந்த ஆசனங்களையும் மற்றவர்களுக்குச் சுட்டிக் காட்டினான்.

அமீரின் வீட்டு வெளிப்புறத்தைப் பார்க்கும் யாரும் அத்தகைய ஓர் அறை அந்த வீட்டிற்குள் இருக்க முடியும் என்று சொப்பனமும் காண முடியாத அளவுக்கு அத்தனை பெரியதாயிருந்ததன்றி, சிறந்த மஞ்சங்களும், படாடோபத்தைக் குறிக்கும் பல்வேறு பொருள்களும் நிரம்பியதால் ஏதோ ஒரு சிற்றரசனின் அந்தரங்க அறை போலவே அது துலங்கியதைக் கண்ட கருணாகர பல்லவன், அமீர் பெரிய நுழைநரியென்பதைப் புரிந்து கொண்டான். அது மட்டுமல்லாமல் தாங்கள் தாண்டி வந்த முதல் மூன்று கட்டுகளிலும் பலப் பலவிதமான வணிகப் பொருள்களும் பெரிய பெரிய மரப் பெட்டிகளும் பொதி மூட்டைகளும் நிரம்பிக் கடந்ததையும் ஏராளமான அடிமைகள் சதா அப்புறமும் இப்புறமும் நடமாடிக் கொண்டிருந்ததையும் கவனித்திருந்த கருணாகர பல்லவன், முன்னால் பார்ப்பதற்கு மிகச் சிறிதாகத் தெரியும் அந்த வீடு உண்மையில் ஒரு பெரும் வர்த்தகசாலை என்பதை யும் சந்தேகமற அறிந்துகொண்டான். தவிர முகப்பில் சிறியதாயிருந்த வீடு உள்ளே போகப் போகக் கட்டுக்குக் கட்டு விரிந்து நான்காவது கட்டு மிகப் பெரியதாயிருந்த படியாலும், மூதல் மூன்று கட்டுகளில் சதா அடிமைகளின் நடமாட்டம் இருந்ததாலும் நான்காவது கட்டில் எது நடந்தாலும் கண்காணிப்பது நடவாத காரியமென்ப தையும் தெரிந்துகொண்ட கருணாகர பல்லவன், ‘இந்த அமீரின் நட்பு அநபாயருக்கு எப்படிக் இடைத்தது?” என்று தனக்குள் எண்ணமிட்டான். அந்த எண்ணச்சூழலில் சிக்கிய வண்ணமே அமீர் காட்டிய மஞ்சமொன்றில் அமர்ந்து புதிதாக வந்த மனிதனை நோக்கித் தன் கண் களை உயர்த்தினான்.

அந்த மனிதனின் சின்னஞ்சிறிய கண்களும், தட்டை முகமும் சப்பை மூக்கும். அகன்று தடித்த உதடுகளும் லேசாக மஞ்சளோடிய சரும நிறமும், “ப” என்ற எழுத்தைக் கவிழ்த்து எழுதியதுபோல் தெரிந்த மீசையும் அவன் சீன நாட்டவன் என்பதைத் தெளிவுபடுத்தின. சன இனத்தைச் சேர்ந்ததால் மிகவும் குள்ளமாக இருக்க வேண்டிய அந்த மனிதன் அதிகக் குள்ளமாயிராமல் சுமாரான உயரத்துட னிருந்ததால், சில சமயங்களில் புகாருக்கு வரும் வ௨ சீனாவின் மங்கோல் ஜாதியும் சனமும் இணைந்த இரட்டை ஜாதி வகையைச் சேர்ந்தவனாயிருக்கலாம் என்று நிர்ணயம் செய்தான் இளைய பல்லவன். வந்த மனிதன் கைகள் பார்வைக்கு மெல்லியவையாயிருந்தாலும் எலும்புகளும், நரம்புகளும் வயிரம் பாய்ந்த நல்ல உறுதி யையும் பலத்தையும் காட்டியதைக் கண்டு அந்த மனிதன் பெரு வீரனாயிருக்க வேண்டுமென்பதையும் உணர்ந்து கொண்டான். எல்லாவற்றையும் விட இளையபல்லவன் கவனத்தைப் பெரிதும் சவர்ந்தவை அந்த மனிதனின் சின்னஞ்சிறிய கண்கள். மஞ்சள் நிறக் கன்னத்துக்கு நேரே மேலே தெரிந்த அந்த இரு சிறு கண்களும் மிகக் கூர்மை யான ஈட்டி முனைகளைப் போல் பளிச்சிட்டதன்றிப் பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தன. ஆனால் கண்களில் துளிர்த்த அழகு பயங்கர அழகாயிருந்தது. நம்பத்தகாத’ அளவுக்கு வஞ்சகம் கலந்த அழகாகத் தோன்றியது இளைய பல்லவனுக்கு.

இத்தனைக்கும் அந்த மனிதனின் அராய்ச்சி இளைய பல்லவன் ஆராய்ச்சியைப்போல் நீண்ட நேரம் பிடிக்காமல் விநாடி நேரத்தில் முடிந்துவிட்டதையும், சற்றே அப்புறமும் இப்புறமும் திரும்பி உள்ளே நுழைந்தவர்கள் அனைவரை யும் அந்தக் கண்கள் அளவெடுத்து ஒரு முடிவுக்கு வந்து விட்டதையும் அநபாயன் கவனித்தான். அந்தப் புது மனிதன் அதிகமாக நம்பத் தகுந்தவன் இல்லை யென்றாலும் தங்களைப் பாலூர்ப் பெருந்துறையிலிருந்து வெளியேற்ற அவனைவிடச் சிறந்த ஒரு மனிதனைக் கண்டு பிடிப்பது கஷ்டமென்பதையும் புரிந்நகொண்ட அநபாயன், அந்தச் சீனனைவிடத் துரிதமாகத் தனது ஆராய்ச்சியை முடித்துக்கொண்டு அமீரை ஏறெடுத்து நோக்கினான். தன்னுடன் வந்த மூவரையும் உட்காரச் சொல்லிவிட்டு னனையும் அமரச் சொன்ன அமீர், தான் மட்டும் ஆசனத்தில் அமராமல் மற்றவர் முகங்களை உற்று நோக்கி அவர்கள் உள்ளத்தில் ஓடிய எண்ணங்களைப் புரிந்து கொண்டானானாலும் அதை வெளிக்குக் காட் டாமல், அநபாயனை நோக்கி, “அநபாயரே! இவரை நீங்கள் அறியமாட்டீர்கள். இவர் என் குருநாதர்” என்று அந்தச் சனனுக்கும் தனக்குமுள்ள உறவை விளக்கினான்.

இதைக் கேட்ட அந்தச் னன் தன் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் தலை தாழ்த்தி அநபாய னுக்கு வணக்கம் செலுத்தினான். அநபாயனும் பதிலுக்குத் தலை தாழ்த்தி வணங்கினானாலும் அவன் முகத்தில் வியப்பின். குறி பெரிதும் படரலாயிற்று. வந்த மனிதன் எத்தனை அசகாய சூரனாயிருந்தாலும் அவன் வயதில் தன்னையும் கருணாகரனையும் விடக் கொஞ்சமே அதிக மென்பதையும், அப்படியிருக்கப் பாதி வயதைத் தாண்டி யுள்ள அமீருக்கு அவன் எந்தவிதத்தில் குருவாயிருக்க முடியுமென்பதையும் அறியாததால் அந்த வியப்பு குரலி லும் பாயக் கேட்டான், “இவர் உன் குருவா?” என்று.

அநபாயன் வியப்பைக் கவனிக்கத் தவறாத அமீர், “வியப்படையக் காரணமிருக்கிறது அநபாயரே! இந்த வாலிபர் எப்படி. எனக்கு குருவாயிருக்க முடியும் என்று எண்ணுகிறீர்கள். வயதைக் கண்டு இவரை எடை போடாதீர்கள். முதிர்ச்சி அனுபவத்திலிருக்கிறது” என்றான்.

“எதில் அனுபவம் இருக்கு?” என்று சம்பாஷணைக் குள் புகுந்தான் கருணாகர பல்லவன்.

“மரக்கலப் போரில் இவரிடம்தான் நான் மரக்கலம் ஓட்டும் பயிற்சியையும், மரக்கலங்களைப் போரில் நடத்தும் முறைகளையும் பயின்றேன்” என்றான் அமீர்.

“எப்பொழுது பயின்றாய் அமீர்?” என்று அநபாயன் வினவினான்.

“சன நாட்டில் அடிமையாயிருந்தபோது” என்று பதிலளித்தான் அமீர்.

“இவருக்கு அப்பொழுது வயது என்ன இருக்கும்?” இப்படி எழுந்தது கருணாகர பல்லவனின் கேள்வி.

“சுமார் பதினைந்து இருக்கலாம்” அமீரின் பதில் திட்டமாக வெளிவந்தது.

அமீர் உண்மையைத்தான் சொல்லுகிறானா? அல்லது ஏதாவது கதை திரிக்கிறானா.? பதினைந்து வயது சிறுவ னாவது, மரக்கலம் நடத்துவதாவது! நடக்கிற காரியமா?” என்று உள்ளுக்குள்ளேயே எண்ணமிட்ட அதபாயனின் முகத்திலிருந்தே விஷயத்தைப் புரிந்துகொண்ட அமீர், தொடர்ந்து சொன்னான் “அநபாயரே! இந்த வாலிபன் இந்த இளவயதில் மரக்கலத்தை நடத்தும் திறமை வாய்ந்தி ருப்பதைக் கண்டு பிரமிக்க வேண்டாம். சின்னஞ்சிறு வயதிலிருந்தே சீனத்துக் குழந்தைகள் நாட்டுக்குத் தேவையான தொழில்களிலெல்லாம் பயிற்சியளிக்கப்படு கிறார்கள். வயது வந்த மாலுமிகள் எட்டு பத்து வயதுச் சிறுவர்களைத் தங்களுடன் படகுகளில் ஏற்றிக்கொண்டு பெரும் அலைகளும் சுழல்களும் உள்ள சீனக்கடலில் ஓடுவதை நீங்கள் இன்றும் பார்க்கலாம். அந்தச் சிறுவர்கள் படகுகளைச் செலுத்துவதும் சீனக் கடலில் சர்வசாதா ரணக் காட்சி. இருபது வயதுக்குள் திறமையுள்ள மாலுமி களாகத் திகழும் கடலோடிகள் சீனாவில் மிக அதிகம். அத்தகைய மாலுமிகளில் தலை சிறந்தவர் என் நண்பர். பத்து வருடங்களுக்கு முன்பு நான் சீன நாட்டு வர்த்தக னிடத்தில் அடிமையாயிருந்த போது என்னை விலைக்கு வாங்கியதன்றி, தமது மரக்கலத்தில் என்னை ஏற்றிச் சென்று மரக்கலமோட்டும் பயிற்சியையும் அளித்தார். இந்த வயதிற்குள் அவர் செய்துள்ள வாணிபம் பலத்தது. இவர் செய்துள்ள கடற்போர்கள் பல. இந்த அடிமை அவற்றில் பங்கு கொண்டிருக்கிறேன். இவர் பெயரை அறியாத கடலோடி அரபு நாட்டிலிருந்து சனம் வரை யாருமே இல்லை.

“இந்த வார்த்தைகளை உணர்ச்சி ததும்பப் பேசினான் அமீர், அந்தச் சனநாட்டவன் கதையை அவன் சொல்லிக் கொண்டுபோன சமயத்தில் அவன் பயங்கரமான விழிகள் கிட்டத்தட்ட கண்ணீர் மல்கும் நிலையை அடைந்து விட்டதையும் குரல்கூட அதிகம் தழுதழுத்து விட்டதையும் கவனித்த அநபாயனும், கருணாகர பல்லவனும், காஞ்சனா தேவியும்கூட அவன் உள்ள நெகழ்ச்சியையும், சன நாட்டவனிடம் அவனுக்கிருந்த பக்தியையும் கண்டு பிரமி ப்படைந்தார்கள். இத்தனைக்கும் அந்தச் சீனத்தான் முகத்தில் மட்டும் உணர்ச்சி ஏதுமில்லை. ஏதோ சாதாரண விஷயம் பேசப்படுவதுபோல் அதைப்பற்றிச் சிறிதும் சட்டை செய்யாத அந்த முகத்திலிருந்த சிறிய கண்கள் மட்டும் விஷமத்துடன் இருமுறை அசைந்தன. மிக மெல்லியதாய் இருக்கிறதோ அல்லவோவென்று சந்தேகப் படும்படியாய் இருந்த அவன் புருவங்களிரண்டும் சிறிது சுருங்க. மேற்கொண்டு ஏதோ சொல்லப்போன அவரை ஏதும் பேச வேண்டாமென்பதற்கு அறிகுறியாக அவன் மெல்லிய வலது கரம் எழுந்து தடை செய்தது. “என் புராணம் போதும் அமீர். நாம் செய்ய வேண்டியது என்ன வென்பதைப் புரிந்தகொள்வோம்” என்று அதிகாரத் தோரணையில் சொற்களை அவன் உதடுகள் உதிர்த்தன.

அதற்கு மேலும் பேசாதிருப்பது மரியாதைக்கு அறி குறியாகாது என்று நினைத்த அநபாயன், “சீனத்தில் இந்த வயதில் இத்தனை சிறந்த மாலுமியிருப்பது மகழ்ச்சியைத் தருகிறது. தங்கள் புராணத்தை அமீர் சொன்னதில் தவறு இல்லை. புராணம் சுவையாகத்தானிருக்கிறது” என்றான்.

சீனத்தான் இதழ்களில் புன்முறுவல் படர்ந்தது. “சுவைகள் பலதரப்பட்டவை. அவற்றைச் சுவைக்கும் சமயங்கள் தனித்தனி” என்றான் அவன்.

அவன் பேச்சுத்திறமை பெரும் வியப்பைத் தந்தது மற்றவர்களுக்கு. சனத்தான் நுண்ணறிவு மிகச் சிறந்தது என்ற முடிவுக்கு வந்த அநபாயனும், இளையபல்லவனும் ஒருவரையொருவர் சில விநாடிகள் பார்த்துக் கொண்டனர். அந்தப் பார்வையைக் கவனித்த சனனின் இதழ்களில் ஏற்கெனவே இருந்த புன்முறுவல் இன்னும் அதிகமாகப் படர்ந்தது. “உரையாடலில் வல்லவனாயிருக்கிறானே, செயலில் எப்படியோ என்ற சந்தேகம் போலிருக்கிறது உங்களுக்கு” என்று சொல்லி மெள்ளச் சிரிக்கவும் செய்தான் சீனன்.

“அப்படி நினைக்கவில்லை நாங்கள்” என்றான் இளையபல்லவன்.

“ஏன்?” சனன் கேள்வி மீண்டும் திடமாக எழுந்தது.

“எதற்காக நினைக்க வேண்டும்?” என்று பதிலுக்குக் கேள்வியை வீசினான் இளையபல்லவன்.

“னத்தில் நாங்கள் வாய்ச்சொல் வீரரை மதிப்ப தில்லை. செயல் வீரரைத்தான் மதிப்போம்.

“ஏன், இரண்டிலும் வல்லவர்கள் கிடையாதா?”

“அநேகமாகக் கிடையாது. அதிகமாகப் பேசுபவன் எந்தச் செயலையும் திறமையுடன் செய்ய முடியாது. செயல் குறையும்போதுதான் நாக்கு நீளுகிறது.

“அப்படியா?”

“ஆமாம். எங்கள் நாட்டில் தொழில் செய்யும் குழந்தை கள் தொழில் புரியும் சமயங்களில் பேசினால் உடனே தண்டிப்போம். நான் மரக்கலப் பயிற்சி பெற்றபோது அலுவல் சமயத்தில் ஓரிரு வார்த்தைகள் பேசியதற்காகப் பலமுறை சவுக்கடி பட்டிருக்கிறேன். பயிற்சி சமயத்தில் அலுவல்மீது மட்டுமே நாங்கள் கண்ணும் கருத்துமாயிருக்க வேண்டும்.

இது எங்கள் தலைவர்கள் விதிக்கும் விதி.”

சீனன் வார்த்தைகள் திடமாகவும் பெருமையுடனும் வெளிவந்தன. தனது நாட்டின் பயிற்சி முறைகளைப் பற்றி அவன் கொண்டிருந்த அசாத்திய மதிப்பையும் அவன் சொற்கள் சந்தேகமின்றிச் சுட்டிக்காட்டின. தமிழகமும் பாரதமும் சீனநாட்டின் அளவுக்கு உயர்ந்து ஏழ் கடல் களிலும் தனது கீர்த்தியைப் பரப்ப வேண்டுமானால் மரக்கலப் பயிற்சியிலும் தொழில் புரிவதிலும் அவர்களுக் குள்ள வெறி நமது மக்களுக்கும் அவசியம் என்று அநபாயன் எண்ணினான். என்றாவது சோழ அரியணை யில் தான் ஏறும்பட்சத்தில் ராஜராஜனும், ராஜேந்திரனும் நிறுவிய கடற்படையைப் பத்து மடங்கு பலமுள்ளதாக்க, அவற்றைக்கொண்டு சேனநாட்டிலும் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்ற அசையும் அவன் உள்ளத்தில் படரவே அவன் கண்கள் தமிழக விஸ்தரிப்பின் சாம் ராஜ்யக் கனவில் சஞ்சரித்தன.

அநபாயன் கண்களில் விரிந்த கனவின் உண்மைக் கருத்து அந்தச் சீனன் சிந்தைக்கு நிமிட நேரத்தில் புலப் பட்டுவிட்டதால் அவன் அநபாயனை அதிசயத்துடன் நோக்கிவிட்டுச் சொன்னான், “உங்கள் கனவு பலித்தால் நாட்டுக்கு நல்லது” என்று.. அந்த வார்த்தைகளால் கனவுத் திரையைக் கழித்துக் கொண்ட அநபாயன் கேட்டான், “என்ன சொல்கிறீர்கள்?” என்று.

“உங்கள் கண்களில் கனவு விரிந்ததைக் கண்டேன்” என்றான் சீனன்.

“என்ன கனவு?”

“சாம்ராஜ்யக் கனவு.

“நான் ஏன் கனவு காண வேண்டும்?”

“நீங்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களா யிருப்பதால்.” “நான் அரச குடும்பத்தைச் சேர்ந்தவனென்று யார் சொன்னது உங்களுக்கு?”

“முகம் சொல்லுறது.

“முகத்தில் எழுதி ஒட்டியிருக்கிறதா?”

“எழுதி ஒட்டவில்லை. ராஜ களை இருக்கறது. முகத்தில் சிந்தனை நரம்பு ஒன்று குறுக்கே ஓடுகிறது.

“நீங்கள் சொல்வது விளங்கவில்லை” என்றான் அநபாயன்.

சினன் ஆசனத்திலிருந்து எழுந்தான். “விளங்கச் சொல்கிறேன் கேளுங்கள். ஏதோ நான்கு பேர்களைப் பாலூரிலிருந்து தப்புவித்து அழைத்துப் போகவேண்டு மென்று அமீர் சொன்னான். சரியென்று ஒப்புக்கொண் டேன். ஒப்புக் கொண்ட சமயத்தில் அந்த நான்கு பேரில் மூவர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாயிருப்பவர் களென்பதை நான் உணரவில்லை. உங்கள் மூன்று பேரைத்தான் குறிப்பிடுகிறேன். ஏனென்றால் நான்காவது பெயரை நான் இன்னும் பார்க்கவில்லை. அவரும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவராயிருக்கலாம். ஆனால் நீங்கள் மூவரும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்...ஆனால்...“என்று ஏதோ சோதுடம் சொல்வது போல் சொல்லிக் கொண்டு போனவனணைத் தடுக்க அநபாயன் ஆசனத்தி லிருந்து எழுந்தான். “எழுந்திருக்க வேண்டாம். உட்காருங்கள். எனக்கு மிக விளக்கமாகப் புரிகிறது. நீங்கள் மூவரும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அனாலும் மற்ற இருவருக்கும் அரசு பெறும் ராசி முகத்தில் இல்லை. உங்கள் முகத்தில் குறுக்கே ஓடும் அந்தப் பச்சை நரம்பு ஒரு காலத்தில் பெரும் அரசை நீங்கள் ஏற்பீர்கள், உங்களிடம் அந்த அரசு விரியும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. ஆம், திட்டமாகச் சுட்டிக் காட்டுகிறது. சந்தேகமேயில்லை” என்று கூறிய சீனன், அநபாயனை உடுருவிப் பார்த்தான்.

அவன் சொற்களால் வியப்படைந்த அநபாயன், அசனத்தைவிட்டுத் திடீரென எழுந்து அமீரை நோக்கி னான். “அமீர்! இவர் யார்? பெயரென்ன?” என்று வினவினான் குரவில் சந்தேகம் ஒலிக்க.

அவர் பெயரைச் சொன்னான்.

பெயரைச் சொன் னானா? அல்லது இடியைத்தான் எடுத்து வீசினானா? இடியைத்தான் வீசி இருக்கவேண்டும். அமீரின் பதிலைக் கேட்ட மற்ற மூவரும் விவரிக்க இயலாத அத்தனை அதிர்ச்சியை அடைந்தனர். எந்தச் சமயத்திலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்த அபாயத்திலும் அதிர்ச்சியடையாத அநபாயனே அந்தப் பெயரைக் கேட்டு அதிர்ச்சியடைந்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் - 19

கனவில் கதை

மூன்றே எழுத்துகள் கொண்ட அந்தச் சனக் கடலோடியின் பெயரை அரபு நாட்டு அமீர் உச்சரித்த மாத்திரத்தில், அந்த அறையில் தங்களிடையே உதிர்ந்தவை மூன்று எழுத்துகளா அல்லது மூன்று நெருப்புத் துண்டங் களா என்பதை நிர்ணயிக்க முடியாமல் பெரும் பிரமிப்பை அடைந்த மற்ற மூவரும், தங்களைப் பாலூர்ப் பெருந் துறையிலிருந்து தப்புவிக்க இந்த மனிதனைத் தவிர அமீருக்கு வேறு யாரும் கிடைக்கவில்லையா என்ற நினைப் பால் ஓரளவு ற்றமும் அடைந்தனர். அந்த மூன்று எழுத்துகளை அமீர் அன்றுதான் உச்சரித்தானென்றாலும், அந்த எழுத்துகள் துறைமுகங்களுள்ள எந்த நாட்டுக்கும் புதிதல்லவாகையால் அந்த எழுத்துத் தொடரைப் பெயராகத் தாங்கியுள்ள மனிதனின் பிரபாவம் சென்ற சில அண்டுகளாக வெளிநாடு சென்று வந்த சகல மாலு மிகள் வாயிலும் சதா புகுந்து புறப்பட்டுக் கொண்டுதானிருந்தது. வெளிநாடு சென்று வந்த தமிழகத்தின் வணிகர் சிலர் அந்தப் பெயரைப் பயத்துடன் உச்சரித்தனர். மற்றும் சிலர் அதைப்பற்றிப் பெருமையுடன் கதைகள் பல சொன் னார்கள். ஆனால் அத்தனை கதைகளிலும் வீரத்துடன் குரூரச் செயல்களும் கலந்தே கிடந்தன. வேறு பலருக்கு அந்த மூன்று எழுத்துப் பெயருடையவன் புரியாத புதிரா யிருந்தான். ஆனால் திட்டமாகப் புரிந்த விஷயம் ஒன்று இருந்தது. அவன் எதற்கும் அஞ்சாநெஞ்சம் படைத்த பெரும் கடற் கொள்ளைக்காரன் என்பதுதான் அது. ஆகவே அகூதா என்ற மூன்றெழுத்துச் சொல்லை அரபு நாட்டு அமீர் அந்த இரவில் உதிர்த்ததும் மற்ற மூவருக்கும், பிரமிப்பும் திகைப்பும் ஓரளவு ஏற்றமும் ஏற்பட்டதில் ஆச்சரியமில்லையல்லவா?

அரபுநாட்டு அமீர் தனது பெயரை உச்சரித்த மாத்தி ரத்தில் மற்ற மூவர் முகத்திலும் தெள்ளெனப் பிரதிபலித்த உணர்ச்சிகளை அகூதாவின் சிறு ஈட்டி விழிகள் வினாடி நேரத்தில் கவனித்து விட்டனவாகையால் அவன் கண் களில் விஷ்மச் சிரிப்பின் சாயை லேசாகப் படர்ந்த தென்நாலும், இதழ்கள் மட்டும் அந்தச் சிரிப்பை தனை யளவும் காட்டவில்லை. மற்றவர்களின் ஆரம்பக் குழப்பம் அடங்கச் சற்று நேரம் அளித்துவிட்டு அவன் பேச ஆரம் பித்த சமயத்திலும் அவன் சொற்கள் எந்தவித உணர்ச்சியு மின்றிச் சர்வ சாதாரணமாக வெளிவரத் தொடங்கின. “என் இந்த உடல் உங்களுக்கு அறிமுகமில்லையென்றாலும் என் பெயர் ஏற்கெனவே அறிமுகமாயிருப்பதாகத் தெரிகிறது” என்று மிகவும் சகஜமாகப் பேசினான் அந்தச் ‘ சீனக் கடலோடி.

பாதி கேள்வி போலும் பாதி ஏதோ விஷயத்தை அறிவிப்பது போலும் அகூதாவின் உதடுகளிலிருந்து உதிர்ந்த அந்தச் சொற்களுக்குக் கருணாகர பல்லவனோ காஞ்சனாதேவியோ பதில் சொல்லும் திறனை இழந் திருந்தார்களென்றாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் வெகு சிக்கிரம் உணர்ச்சிகளை அடக்கிக்கொள்ளும் திறன் வாய்ந்த அநபாயன் மட்டும் அவனை ஒருகணம் தன் சீரிய விழிகளால் ஏறெடுத்து நோக்கிவிட்டு, “தங்களுக்கு அது வியப்பாயிருக்கிறதா?” என்று ஒரு கேள்வியை வீசினான். அகூதா ஒரு சரித்திரப் பத்திரம், கடற்படை, தரைப்படை இரண்டையும் நடத்துவதில் பிரசித்தி பெற்றவன். தார்த்ததிகள் வமிசத்தின் கிளை யொன்றைச் சேர்ந்தவன். பிற்காலத்தில் சீனாவில் சொந்த “அரசை ஸ்தாபித்தவன், சினக் கடலோடியின் சின்னஞ்சிறு கண்களில் கேள்விக்குறி எழுந்ததன்றி, “எது வியப்பாயிருக்கிறதா என்று கேட்டிறீர்கள்?” என்று உதடுகளிலிருந்தும் கேள்வி யொன்று உதிர்ந்தது.

“உங்கள் பெயர் எங்களுக்கு ஏற்கெனவே அறிமுகமா யிருப்பதை.” என்று அநபாயன் விளக்கினான்.

“இல்லை. வியப்பாயில்லை. சில வருடங்களாக எனக்கு எதுவும் வியப்பை அளிப்பதில்லை” என்று பதில் கூறினான் அகூதா.

இந்தப் பதில் அநபாயனுக்கு ஆச்சரியத்தை அளித்த தால் அவன் மறுபடியும் கேட்டான், “ஏன் வியப்பு என்ற உணர்ச்சி மீதே உங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டதா?” என்று.

அகூதாவின் பதில் அநபாயனுக்கு மட்டுமின்றி, கருணாகர பல்லவனுக்கும் காஞ்சனாதேவிக்கும் கூட மேலும் மேலும் வியப்பையே விளைவித்தது. ஏதோ பெரும் காவியத்தை எழுதுபவன்போல் பேசினான் அந்தச் சீனக் கடலோடி. “உணர்ச்சிகளின் மீது வெறுப்பு ஏற்படுவது சாத்தியமில்லை. வெறுப்பே உணர்ச்சியின் சாயை. வியப்பு மற்றொரு சாயை. இப்படிச் சாயைகள் பல, பொறிகள் பல, உணர்ச்சியின் அலைகளில் உண்டு, அவற்றை நிறுத்த முடியாது. கடலின் அலைகளையும் நிறுத்த முடியாது. ஆனால் அந்த அலைகளில் மூழ்காதிருக்கலாம்” என்று கூறினான் அகூதா.

அகூதாவின் தீட்சண்யமான அறிவையும் தெளிவான சிந்தனையைப் பேசுவதில் இருந்த சாமர்த்தியத்தையும் கவனித்த மற்ற மூவரும் ஆச்சரிய அலைகளில் மேலும் ஆழ்ந்து போகவே செய்தனர். அந்த அலைகளிலிருந்து முதலில் மீண்ட அநபாயன் சொன்னான், “நீங்கள் பேசுவது காவியம் போலிருக்கிறது” என்று.

“உணர்ச்சியிலிருந்து காவியம் உதிக்கிறது. உண்மையி லிருந்து உணர்ச்சி உதிக்கிறது. உண்மையைச் சொன்னேன். அது உங்களுக்குக் காவியம் போலிருக்கிறது” என்றான் அகூதா.

“என்ன உண்மையைச் சொன்னீர்கள்” என்று வினவினான் அநபாயன்.

“வியப்பை நான் உதறி வருஷங்கள் பல ஆகின்றன என்று சொன்னேன், அது உண்மை.

“ஏன் அதை உதறினீர்கள்?”

“உலகம் உதற வைத்தது.

“உலகமா!”

“ஆம். உலகம்தான் நம்மை நல்லவனாகவும், கொடிய வனாகவும் ஆக்குகிறது. உலகத்தின் சில பகுதிகளில்தான் கடற்கொள்ளைக்காரனாக மதிக்கப்படுகிறேன். சில பகுதிகளில் நிலப்போரில் நிகரற்றவனாக மதிக்கப்படு கிறேன். சில பகுதிகளில் தெய்வமாக மதிக்கப்படுகறேன். சில பகுதிகளில் பிசாசாக மதிக்கப்படுகிறேன். இப்படிப் பலவகை மதிப்பீடுகள் என்னைப் பற்றி ஏற்பட்டிருக்கின்றன. இப்படிப் பல வகையாக மனிதர்கள் பேசுவதை நான் செல்லுமிடங்களில் கேட்கிறேன். இந்த நானாவகை மதிப்பீடுகள் முதலில் சற்று வியப்பை அளித்தது உண்மை. ஆனால் காலமும் அனுபவமும் அந்த வியப்பை அகற்றி விட்டன” என்று அகூதா ஏதோ தன் சரித்திரத்தை விவரமாகச் சொல்லுவதுபோல் பேசினான்.

அவன் சொற்களைக் கேட்ட அநபாயன் தன் ஆசனத்திலிருந்து சற்றே எழுந்து எதிரே அமர்ந்திருந்த அந்தச் சீனக் கடலோடிமீது தன் கண்களைச் சிறிது நேரம் நிலைக்கவிட்டான். “உலகம் உங்களைப் பலபடி மதிப்பீடு செய்வது எனக்குத் தெரியாது. உங்களைப் பெரும் கொள்ளைக்காரர் என்று மட்டும் எங்கள் நாட்டு வணிகர் சொல்கிறார்கள். உங்களைப் பற்றிப் புகாரிலும், நாகப்பட்டி. னத்திலும், ஏன் இந்தப் பாலூரிலும்கூட அத்தகைய வதந்தி தான் உலாவுகிறது. அதை நீங்கள் மறுக்கிறீர்களா?” என்று கேட்கவும் செய்தான் அநபாயன்.

அகூதாவின் இதழ்களில் வெறுப்புக் கலந்த இகழ்ச்சி நகையொன்று படர்ந்தது. “வதந்திகளை மறுக்க வேண்டி யது அவசியமா?” என்று வினவினான் அகூதா, அந்த இகழ்ச்சி குரலில் ஒலிபாய.

“அதாரமற்று இருந்தால் அவசியமில்லை” அநபாயன் பதிலில் உறுதி கலந்திருந்தது.

சீனக் கடலோடியின் சின்னஞ்சிறு கண்கள் பளிச் சிட்டன. “நான் கொள்ளைக்காரன் என்பதற்கு அதாரம் இருக்கிறதா தங்களிடம்?” என்றுவிஷமம் பூரணமாகத் தொனித்த குரலில் வினவினான் அகூதா,

அநபாயன் உடனே அந்தக் கேள்விக்குப் பதில் சொல் லாமல் இளைய பல்லவனையும் காஞ்சனா தேவியையும். ஒரு வினாடி பார்த்தான். பிறகு அமீரின் முகத்தை அவன் கண்கள் ஆராய்ந்தன. மூன்றாவதாக அவன் அகூதாவைக் கூர்ந்து நோக்கிவிட்டுச் சொன்னான் “அகூதா! நீங்கள் யாரென்பதை நிர்ணயிக்கவோ, உங்களைப் பற்றித் தீர்ப்புச் சொல்லவோ நான் முற்படுவதாக நினைக்க வேண்டாம். ஆனால் பெரும் பொறுப்பு என்மீது சுமந்து கடக்கிறது. அந்தப் பொறுப்பு என்னைப் பற்றியதல்ல. இதோ உட் கார்ந்திருக்கும் என் நண்பன் இளைய பல்லவனைப் பற்றியதுமல்ல. அது இளைய பல்லவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் கடாரத்து இளவரசியையும் அமீரின் பாதுகாப்பிலிருக்கும் அவள் தந்தையையும் பொறுத்தது. கடாரத்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்த காஞ்சனா தேவியும் அவள் தந்தையும் சோழநாட்டு உதவி நாடி இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களை இங்கிருந்து சோழநாடு கொண்டு சேர்ப்பது என் கடமை. அகவே அவர்களைச் சோழநாடு கொண்டு செல்ல வேண்டுமானால் யாரிடம் ஒப்படைக்கலாம் என்பதைத் தீர்மானிப்பது என் கடமை யாகிறது...

“இப்படி வாக்கியத்தை முடிக்காமல் அநபாயன் விட்டு விட்டதைக் கவனித்த அகூதா அதன் காரணத்தைச் சந்தேகமறப் புரிந்துகொண்டு விட்டதால், “ஏன் அரை குறையாக முடிக்கிறீர்கள். மேலே சொல்லுங்கள்” என்று தூண்டினான்.

அநபாயன் மேலும் சொன்னான் “அகூதா! நாங்க ளிருக்கும் அபாய நிலை எங்களுக்குத் தெரியும். எங்களைத் தப்புவிக்க நீங்கள் முன்வந்ததை பீமனோ அனந்தவர் மனோ அறிந்தால் உங்கள் உயிருக்குத் தீங்கு நேரிடும் என்பதும் எங்களுக்குத் தெரியும். உயிரைத் தருணமாக மதித்து நீங்கள் எங்களுக்கு உதவ வரும்போது உங்களை எடை போடுவது நியாயமல்ல. இருப்பினும் சோழநாட்டு இளவரசன் என்ற முறையில் எனக்கு ஏற்பட்டுள்ள பொறுப்பை நான் கழிக்க முடியாது. அகையால்தான் யோசிக்கிறேன். உங்களைப் பற்றிய வெறும் வதந்திகளை மட்டும் நம்பி நான் யோசிக்கவில்லை. உங்களைப் பற்றிய பல விஷயங்கள் எனக்குத் தெரியும். ஆகையால் தீவிர யோசனைக்கும் ஓரளவு பயத்துக்கும் இடமிருக்கிறது.

“தன்னை’ப பற்ற ிய சந்தேகங்கள் இத்தனை அநபாய னுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தும் முகத்தில் புன்சிரிப்பைத் தவிர. எந்தவித உணர்ச்சியையும் காட்டாத அகூதா, “என்னைப் பற்றி வேறு பல விஷயங் களும் தெரியுமா உங்களுக்கு” என்று கேட்டான் விஷமத்துடன்.

“தெரியும்” என்ற சொல் அநபாயன் வாயிலிருந்து மட்டுமின்றி கருணாகர பல்லவன். வாயிலிருந்தும் ‘ஏக காலத்தில் வெளிவரவே, இளையபல்லவன் மீதும் கண் களைத் திருப்பிய அகூதா, “மிக்க மகழ்ச்சி, மகழ்ச்சி” என்று சொல்லித் தலை தாழ்த்தினான். அவன் தங்களுக்கு உபசார வார்த்தை சொல்லுகிறானோ அல்லது தங்களைப் பார்த்து நகைக்கிறானோ என்பதை அறிந்துகொள்ள முடியாத அநபாயனும் கருணாகர பல்லவனும் சில விநாடிகள் மெளனம் சாதித்தாலும் பிறகு மெளனத்தை இருவருமே கலைத்து ஒருவர் மாற்றியொருவர் பேச முற்பட்டார்கள்.

“நீங்கள் பிறந்த இடம் சீனாவிலுள்ள சங்கரி நதி தீரம்” என்றான் அநபாயன்.

“நூ சென் என்ற மங்கோலிய வகுப்பைச் சேர்ந்த வர்கள்” என்றான் இளையபல்லவன்.

“கிதான், கன் வகுப்பினர் பலரை நீங்கள் சிறை பிடித்துக் கொண்டு போய்ச் சித்தரவதை செய்திருக் கிறீர்கள்” என்று அநபாயன் கூறினான்.

“அவர்களிருப்பிடங்களைக் கொள்ளையடித்து, பெண் களையும் குழந்தைகளையும் சிறைபிடித்துக் கொண்டு போயு மிருக்கிறீர்கள். அவர்களில் பலரை அழித்துமிருக்கிறீர்கள் “ என்று இளையபல்லவன் விளக்கினான்.

“இத்தகைய உங்களிடம் எப்படிக் கடாரத்து இளவரசி யையும் அரசரையும் ஒப்படைப்பேன்?” என்று வினவிய அநபாயன் மேலும் ஏதோ சொல்லப் போனதும் இடி. இடி யென்று கலந்தொலித்த அமீரின் சிரிப்பும் சீனக் கடலோடி யின் சிரிப்பும் அந்த அறையை இடுகிடுக்க வைத்தன. அந்தச் சிரிப்பினால் வெகுண்ட அநபாயன், “ஏன் சரிக்கிறாய் அமீர்?” என்று கூறினான் அமீரை நோக்க, தீவிழி விழித்து.

அநபாயன் சீறியதால் திடீரெனச் சிரிப்பை நிறுத்திக் கொண்ட அமீர் சொன்னான், “சிரித்தது தவறுதான்” என்று. அத்துடன் நிறுத்தாமல், “நீங்கள் என் குருநாதரைக் கொள்ளைக்காரனென்று கூறியதற்கு உண்மையில் எனக்குக் கோபம்தான் வர வேண்டும். அதற்குப் பதில் சிரிப்பு வந்தது தவறுதான்” என்று கூறினான்.

தனது சொல் அமீருக்குப் பெரும் ஆத்திரத்தை அளித் திருப்பதை உணர்ந்துகொண்ட அநபாயன் கேட்டான், “நாங்கள் சொன்னதில் தவறு ஏதேனும் இருக்கிறதா?” என்று.

இதற்கு அமீர் பதில் சொல்லுமுன்பு சீனக் கடலோடி இடையே புகுந்து, “விவரங்களில் அதிகத் தவறு இல்லை. விளக்கத்தில்தான் இருந்தது” என்றான்.

“விவரம் வேறு, விளக்கம் வேறா?” என்று இகழ்ச்சி யுடன் வினவினான் அநபாயன்.

“ஆம். விவரம் விஷயத்தைக் குறிக்கும். விளக்கம் அதற்கு வியாக்கியானத்தைக் குறிக்கும்” என்று பதில் கூறினான் அகூதா.

“உங்களைப் பற்றிய என் முடிவு தவறு என்கிறீர்களா?” என்று கேட்டான் அநபாயன்.

“தவறுதான். முற்றிலும் தவறு. சந்தேகமென்ன?” என்று அநபாயனை என்றும் எதிர்த்துப் பேசாத அமீரே சொற்களைக் காரசாரமாக உதிர்த்தான்.

இதைக் கேட்டதும் அமீர் பக்கம் திரும்ப முயன்ற அநபாயனைக் கையைச் சற்றே உயர்த்தித் தடுத்த அகூதா, “சோழ நாட்டு இளவரசே! பெரும் நாடுகளின் அல்லது பெரும் மனிதர்களின் சரித்திரங்கள் வல்லவர்களால் எழுதப் படும்போதே தவறுகள் பல புகுந்து கொள்கின்றன. அப்படியிருக்க வணிகர்கள் மூலம் உங்களுக்குக் கிடைத்த தகவல்களைக் கொண்டு நீங்க எளப்ப டி எடை’ போட முடியும்? ஒருகாலும் முடியாது. எடைபோட முயல்வது தவறும் ஆகும். நான் பெரும் அக்கிரமக்காரன், கொள்ளைக்காரன் என்ற வதந்தி ஒருபுறமிருக்கட்டும். அப்படியானால் இந்த அமீரை நான் ஏன் அடிமைத் தளையிலிருந்து மீட்க வேண்டும்? எதற்காக மரக்கலப் போர்ப் பயிற்சி அளிக்க வேண்டும்? அமீரால் என் நாட்டுக்கோ, என் குலத்துக்கோ, என்ன பயன்? சற்று யோடத்துப் பாருங்கள்...“என்று சொல்லி அநபாயனைத் தனது சிறு ‘விழிகளால் கூர்ந்து நோக்கினான். அந்தக் கண்களை நிர்ப்பயமாகச் சந்தித்த அநபாயனின் விழிகளில் சந்தேகத்தின் சாயை சிறிது படரலாயிற்று. ‘ஆமாம்! பெரும் கொள்ளைக் காரனான அகூதா எதற்காக அமீரிடம் இத்தனை பரிவு காட்ட வேண்டும்? கருணையற்ற உள்ளத்தில் ஒருவனிடம் மட்டும் எப்படிக் கருணை பிறக்கும்?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்ளவும் செய்தான்.

அவன் முகத்தில் விரிந்த சந்தேகச். சாயையைக் கண்ட அகூதா மெள்ளப் புன்முறுவல் செய்துவிட்டுச் சொன் னான் “பார்த்தீர்களா, சோழர்குல இளவரசே! அமீர் ஒரு சிறு உதாரணம். அதைச் சொன்னதுமே தங்கள் மனத்தில் என்னைப்பற்றிய வதந்திகள் சரியா, அல்லவா வென்ற சந்தேகம் எழுந்துவிட்டது. ஆகவே ஒரு மனிதனை வதந்தி களைக் கொண்டு எடை. போடக் கூடாது. அதுவும் பின்னால் அரசாளப் போகும் நீங்கள் எடை போடக் கூடாது” என்று.

அநபாயனின் புருவங்கள் மெள்ள நுதலின் மேற் புறத்தை நோக்கி எழுந்தன. “நான் அரசாளப் போகிறேனா?” என்றும் வியப்புடன் வினவினான்.

“நீங்கள் மட்டுமல்ல, நானும் அரசாளப் போகிறேன்” என்றான் அகூதா.

“என்ன அப்படித் திட்டமாய்ச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டான் அநபாயன்.

“அநீதிகளிலிருந்து புது அரசுகள் எழுகின்றன” என்றான் அகூதா.

சொன்னதன் பொருளை அகூதாவே விளக்கினான். விளக்க விளக்க வியப்பே மேலிட்டது மற்றவர்களுக்கு. கனவில் கதை கேட்பதுபோல் அவன் சொல்வதை அவர் கள் கேட்டனர். சோழ, கலிங்க நாடுகளின் பிற்காலத்தை அத்தனைத் தெளிவாக அந்த நாட்டவராலேயே வர்ணிக்க முடியாது என்பதை அவர்கள்’ சந்தேகமறப் புரிந்து கொண்டனர். அப்படிப் புரிந்தகொண்டதால் சீனக் கடலோடியிடம் இருந்த சந்தேகம் பறந்து பெரும் மதிப்பும் நம்பிக்கையுமே ஏற்பட்டன அவர்களுக்கு.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 20

புலியிடம் வேதாந்தம்

அநீதியிலிருந்து பல அரசுகள் எழுகின்றனவென்ற பெரும் சித்தாந்தத்தைச் சர்வ சகஜமாகச் சொன்ன சீனக் கடலோடி அதன் பொருளை விளக்க முற்பட்டதும் அவன் சின்னஞ்சிறு கண்கள் பெரும் ஒளியைப் பெற்று ஜொலிக்கத் தொடங்கிவிட்டதையும், அந்த ஜொலிப்பில் பெரும் கனவும் தெள்ளிய சிந்தனையும் கலந்துறவாட முற் பட்டு விட்டதையும், விழிகளில் விரிந்த கனவு சொற் களிலும் ஓரளவு ஒளிவிட்டதையும் கண்ட அநபாயனும் மற்ற இருவரும், அவன் பேச ஆரம்பித்த சில விநாடி களுக்குள்ளேயே தாங்கள் ஒரு கொள்ளைக்காரன் முன்பு இருக்கிறோம் என்ற எண்ணத்தை அறவே அகற்றிக் கொண்டதல்லாமல், வரலாற்றில் நிரந்தரமான இடம் பெறப் போகும் ஒரு மாவீரன் முன்னிருக்கும் மனோ நிலையும் அடைந்தனர். பேச்சைத் துவங்கிய சில விநாடி களுக்குள்ளேயே தானிருக்கும் சூழ்நிலையையும், ஏன் அருமை நண்பனான அமீரையும்கூட மறந்து பின் வர இருக்கும் வரலாற்று உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தான் அந்தச் சீனக் கடலோடி. அவன் அப்படிச் சஞ்சரிக்க ஆரம்பித்ததை அவன் முகமும் கண்களும், சில விநாடி களுக்கொருமுறை யோசனையால் சுளித்த மெல்லிய புருவங்களும் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்தன.

பேசுவதற்கு முன்பு ஏற்கெனவே ஆசனத்திலிருந்து எழுந்துவிட்ட அந்தச் சனக் கடலோடி இரண்டு விநாடி கள் மட்டும் தன் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு சிந்தனையிலும், சிந்தனையின் விளைவாக ஏற்பட்ட மெளனத்திலும் ஆழ்ந்துவிட்டுப் பிறகு பேச்சைத் துவங்கிச் சொன்னான் “ஆம். அநீதிகளிலிருந்துதான் புது அரசுகள் பிறக்கின்றன. புது அரசுகள் என்ன, பழைய அரசுகளும் அப்படித்தான் பிறந்தன. அரசுகள் உதித்ததற்கு அநீதியே அஸ்திவாரம். அரசோ, அரசனோ இல்லாமல் மக்கள் வஹெறும் கூட்டங்களாகத்தான் முதலில் வாழ்ந்தார்கள். அப்பொழுது மக்களுக்குத் தேவை குறைவாயிருந்தது. தேவை குறைவாயிருந்ததால் திருப்தியிருந்தது. திருப்தியிருந்ததால் சண்டையில்லை, சச்சரவில்லை, அமைதி யிருந்தது. மனிதன் மெள்ள மெள்ளத் தேவையை அதிகப் படுத்தக் கொண்டான். அதிகத் தேவை அதிருப்தியைத் தந்தது, அதிருப்தி அசூயையைத் தந்தது. அசூயை சர்ச்சை யைத் தந்தது. அதை விலக்கி அமைதியாக வாழ்க்கை நடத்த மனிதக் கூட்டங்களுக்குத் தலைவன் அவசியமாயிற்று. அந்த அவசியம் தலைவனைச் சிருஷ்டித்தது. ஆரம் பத்தில் தலைவன் தேவைக்கும் கூட்டத்தின் தேவைக்கும் வித்தியாசமில்லாதிருந்தது. காலம் வித்தியாசத்தை விரிய வைத்தது. தலைவன் அரசனானான். அரசுக்குத் தனி அலங்காரங்கள் ஏற்பட்டன. தனி அந்தஸ்து ஏற்பட்டது. அத்தகைய அரசனைக் காப்பதற்கு மக்களின் ஒரு கூட்டம் தேவைப்பட்டது. அது படை என்று பெயர் பெற்றது. இப்படி ஏற்பட்ட அரசர்கள் பொதுப் பணியைத் தனித்தனி சொந்த நாடுகளாகப் பிரித்துக் கொண்டனர். இப்படிப் பிரிந்த நாடுகளில் வளர்க்கப்பட்ட சுயநலம் (இதற்குத் தேசபக்தி என்பது தற்காலப் பெயர் நாடுகளை மோத வைத்தது. அரசர்கள் பேச்சாளர்களானார்கள். இப்படி அதிருப்தி, அசூயை, தனிப்பட்ட நபர்கள் ‘இழைத்த அநீதி அரசுகளாகவும் பேரரசுகளாகவும் வளர்ந்தன. அந்த அரசுகளிற் சில மறைவதற்கும் சில உறைவதற்கும் அநீதி களே காரணமாயின. உதாரணமாக உங்கள் நாட்டையே எடுத்துக் கொள்ளுங்கள். இதைப் பரதகண்டம் என்று சொல்கிறார்கள். பரதன் என்ற அரசன் அண்டபோது இது ஓரே அரசாக இருந்தது. இப்பொழுது சேர, சோழ, பாண்டிய, கலிங்க, சாளுக்கிய நாடுகளாகப் பலபடி பிரிந்து விட்டது. அந்த நாடுகளும் அக்கம் பக்கத்தில் ஒற்றுமை யுடன் வாழ முடியவில்லை. வேங்கி நாட்டு அரியணையில் அமரவேண்டிய அநபாயர் இன்று மணிமுடியற்ற நாடோடியாகப் பாலூரில் திரிகிறார். பல போர்களைச் செய்ததால் போரில் சலிப்புற்றிருக்கும் வீர ராஜேந்திர சோழர் வேங்கியில் தலையிடாமல் அங்குள்ள அநீதியை அனுமதிக்கிறார். அந்த அநீதி காலக்கிரமத்தில் தமிழக மக்களிடையும், வேங்கி மக்களிடையும் கசப்பை உண்டு பண்ணும். காலம் அந்தக் கசப்பைப் பெரும் கனலாக்கும். அந்தக் கனல் வேங்கியிலுள்ள இந்த அரசை மாற்றிப் புது அரசை நிறுவும். அநபாயர் கண்டிப்பாய் மன்னனாவார், வேங்கிக்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதற்குமே...“இந்த இடத்தில் அநபாயன் ஏதோ சொல்லக் குறுக் கிட்டான். அவனைப் பேச வேண்டாமென்று சைகை யாலேயே தடை செய்த அகூதா மேலும் சொன்னான் “குறுக்கிடாதீர்கள். குறுக்கிட்டால் என் சிந்தனை ஓட்டம் அறுபட்டுவிடும். நான் சொல்வதில் சந்தேகம் வேண்டாம். உங்கள் முகத்தின் குறுக்கே ஓடும் அந்தப் பச்சை நரம்பு பெரும் சாம்ராஜ்யாதிபதியைக் குறிக்கிறது. இரண்டு மூன்று நாடுகளின் ஆதிக்கமில்லாமல் யாரும் சாம்ராஜ் யாதிபதியாக முடியாது. வீரராஜேந்திரருக்கு அடுத்தபடி சோழ வேங்கி நாடுகளை நீங்கள் கண்டிப்பாக ஆளுவீர்கள். அது மட்டுமல்ல. இந்தக் கலிங்கத்தின் பிற்காலமும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. நான் ஏதோ சந்தையில் சோதிடம் சொல்பவனைப்போல் உளறுவதாக நீங்கள் நினைக்கலாம். இல்லை இல்லை சூசகங்களை நிகழ்ச்சி களைப் பார்த்தே முடிவுகளைச் சொல்கிறேன். சீனக் கடலி லிருந்து எரித்திரியக் கடல் வரை சஞ்சரித்திருக்கும் நான் பல நாடுகளின் சரித்திரங்களைக் கவனித்திருக்கிறேன். எல்லா நாடுகளின் கதையும் இதுதான். எங்கும் அநீதியைச் சிலர் தூண்டுகிறார்கள். அந்த அநீதிக்கு உட்பட்ட மக்கள் முதலில் துவளுகிறார்கள், பிறகு எழுச்சியடைகறார்கள். அதன் பலன் பழைய அரசின் வீழ்ச்சி, புது அரசின் உதயம். எங்கும் இதே கதை. பாலூரிலும் சென்ற இரண்டு நாள்களாக இந்தக் கதையைத்தான் காண்டூறேன். தமிழர்கள் அனாவசியமாகத் துன்புறுத்தப் படுகிறார்கள். பலர் சிறையிலிருக்கிறார்கள். இன்னும் பலருக்குக் கசையடி கிடைக்கிறது. சிலர் வெளிநாட்டு மரக்கலங்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்டிருக்கிறார்கள். என்னிடம் அப்படி இருவர் இன்றுதான் விற்கப்பட்டிருக்கிறார்கள். நல்ல விலை கொடுத்து வாங்கியிருக்கிறேன். என் மரக்கலத் தின் துடுப்புகளைத் துழாவ அவர்களிருவரும் உதவுவார் கள். அதில் ஒருவனுக்கு ஏற்கெனவே மரக்கலம் ஓட்டும் பயிற்சியும் இருக்கிறது. ஆனால் விலை மட்டும் சற்று அதிகந்தான். ஒவ்வொரு தமிழனுக்கும் நூறு பொற்காசுகள் கொடுத்தேன். இதிலிருந்து உங்களுக்கு என்ன ஏற்படு கிறது?” என்று கேட்டுச் சற்றுப் பேச்சை நிறுத்தினான் அகூதா.

அதுவரை கனவில் சரித்திரக் கதையைக் கேட்பது போல் கேட்டுக் கொண்டிருந்த மூவருக்கும் அக்கதையின் கடைசிப் பகுதியைக் கேட்டதும் பெரும் சீற்றமே ஏற் பட்டது. அந்தச் சீற்றத்தை வெளிப்படையாகக் காட்டிய கருணாகர பல்லவன், “என்ன ஏற்படுகிறது? நீங்கள் உண்மையில் கொள்ளைக்காரர் என்றுதான் நினைத்திருந்தோம். இப்பொழுது அடிமை வியாபாரி யென்றும் ஏற்படுகிறது” என்றான். “வேறு எந்தவித செய்கையைத்தான் கொள்ளைக் காரனிடம் எதிர்பார்க்க முடியும்” என்று கள்ளைக் குரலில் விஷமத்தையும் கலந்து உதிர்த்தாள் காஞ்சனாதேவி.

இத்தனைக்கும் அகூதாவின் முகத்தில் எந்தவிதக் கோபமோ வெறுப்போ உதயமாகவில்லை. அவன் கண்கள் இளைய பல்லவனையும் சுடாரத்துக் கட்டழகயையும் இகழ்ச்சியுடன் பார்த்தன. “அந்த இரு தமிழர்களையும் நான் ஏன் வாங்கினேன் தெரியுமா?” என்று வினவினான் அகூதா, இளைய பல்லவனை நோக்கி.

“நீங்களே விளக்கலாம்” என்றான் இளைய பல்லவன் பதிலுக்கு.

“இருவரையும் இன்று மாலை வர்த்தகசாலைக்கு நடுவிலுள்ள கொடிமரங்களில் கட்டி ஆளுக்கு நூறு கசையடி கொடுக்க இந்த நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தார்கள். அந்த நூறு கசையடி கிடைத்திருந்தால்...“என்று அகூதா வாசகத்தை முடிக்காமல் விட்டான்.

“இருவரும் மூர்ச்சையாகிப் பிறகு ரணஜன்னி கண்டு இறந்திருப்பார்கள்” என்று அச்சத்துடன் கூறிய காஞ்சனா தேவி, தன் அழகிய பெரிய விழிகளை அகூதாமீது நிலைக்கவிட்டாள்.

“அத்தகைய சாவு எப்படியிருக்குமென்று உங்களுக்குத் தெரியாது. கசையடியின் தன்மையும் உங்களுக்குத் தெரியாது. எனக்குத் தெரியும். இதோ பாருங்கள்” என்ற அகூதா சரேலெனத் தன் மேலங்கியை நீக்கிச் சுழன்று முதுகுப்புறத்தை அவர்களுக்குக் காட்டினான்.

அந்த முதுகுப்புறத்தைக் கண்ட மூவரும் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டனர். பட்டை பட்டையாகப் பல கசையடிகளின் தழும்பு அந்த முதுகை விகாரமாக அடித்திருந்தது. அந்த முதுகைக் கண்ட மற்ற மூவர் உணர்ச்சிகள் எப்படியிருந்தாலும் அமீரின் ராட்சஸ விழிகளில் மட்டும் கண்ணீர் ஆறாகப் பிரவா$ூத்தது. குழந்தை போல் விக்கி விக்கி அழுதான் அமீர்.

அவன் விக்கல் காதில் விழவே சட்டென்று அங்கியை மூடி முதுகை மறைத்து அமீரைத் தன் ஒரு கையால் அணைத்துச் சமாதானப்படுத்திய அகூதா மற்றவர்களை நோக்கித் தன் விழிகளைத் திருப்பி, உங்களைவிடக் கசை யடிகளின் தன்மை எனக்கு நன்றாகத் தெரியுமென்பதைப் புரிந்து கொண்டீர்களல்லவா? இன்னும் புரிந்துகொள்ளுங் கள். எந்தக் குற்றம் செய்ததற்காகவும் இந்தக் கசையடிகளை நான் பெறவில்லை, இவையும் அநீதியின் விளைவு. என் கதையை உங்களுக்கு முழுவதும் சொல்ல நான் இஷ்டப் படவில்லை. அதற்கு அவசியமுமில்லை. ஆனால் எங்கு அநீதியின் கரம் நீள்கிறதோ, எங்கு மாந்தர் துன்புறுத்தப்படு கிறார்களோ அங்கு நானிருந்தால் நான் வாளாவிருப்ப தில்லை. அநீதிக்கு உட்பட்டவர்களை மீட்க முயலுகிறேன். அப்படி மீட்ட பலர் என்னிடம் அடிமைகளாயிருக் கிறார்கள். சாதாரணமான அடிமைகளல்ல. எனக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள். அமீரைக் கேட்டால் விவரமாகச் சொல்லுவான். இதிலிருந்து உங்களைத் தப்பு விப்பதில் எனக்குள்ள அக்கறையையும் ஓரளவு ஊ௫த்துக் கொள்ளலாம். நான் அநீதியை எங்கு கண்டாலும் களையத் தர்மானித்திருக்கிறேன்” என்று கூறிய அகூதாவின் குரலில் ‘ உறுதி பூரணமாகத் தொனித்தது. அந்த உறுதியடனேயே அவன் பேச்சைத் தொடர்ந்து, “அந்த அநீதியை நான் இங்கு காண்கிறேன், அநபாயரே! இந்தக் கலிங்கத்தில் தமிழர்கள் படும் பாடு உங்களையும் உங்கள் படைத்தலை வரையும் கொதிக்க வைத்திருக்கிறது. அந்தக் கொதிப்பு ஒருநாள் போராக மாறும். இந்தக் கலிங்கத்தில் பெருநாசம் ஏற்படும். ஏன் தெரியுமா?” என்று கேட்டான்.

“சொல்லுங்கள்” என்ற அநபாயன் குரலில் ஆச்சரி யத்தின் சாயை மண்டிக்கிடந்தது.

“ஓர் அநீதியிலிருந்து இன்னோர் அநீதி விளைகிறது” என்றான் அகூதா.

“அநீதிக்குப் பதில் அநீதி செய்வது தமிழர் பழக்க மல்ல” என்றான் அநபாயன்.

“மனிதர் பழக்கம்” என்று உறுதியுடன் கூறினான் அகூதா.

“மனிதத் தன்மை வேறு.

“உண்மை. ஆனால் அது சமயத்தில் கைகொடுப்ப தில்லை. அறிவு நல்லது. ஆனால் அது சமயத்தில் வெறியாக மாறுகிறது. அந்த வெறிக்குக் காரணங்களைக் கூறுகிறோம். பழி வாங்குதல் மனித சுபாவம். பழி வாங்கலாம். வாங்க வேண்டியதுதான். ஆனால் கருணையைச் சற்று அதில் கலந்துகொள்ள வேண்டும். என் வழி அதுதான்.

“உங்கள் வழியா?”

அதையும் விளக்க முற்பட்ட அகூதா, “ஆம் அநபாயரே! நீங்களும் உங்கள் நண்பர் படைத்தலைவரும் என்னைப் பற்றி வணிகரிடம் விசாரித்த விஷயங்களைச் சொன்னீர்களல்லவா? அதில் சில சரி, சில தவறு” என்றான்.

“எது சரி? எது தவறு?” கருணாகர பல்லவன் கேட்டான் சற்றுக் குழப்பத்துடன்.

“நான் பிறந்த இடம் சீனாவிலுள்ள சங்கரி நதிதீரம் என்று சொன்னீர்கள்.”

“ஆம்”

“அது சரி, அதில் தவறில்லை. ஆனால் நான் நூசென் என்ற மங்கோலிய வகுப்பைச் சேர்ந்தவன் என்று சொன்னீர்களே அது தவறு.

“தவறா?”

“ஆம், முற்றிலும் தவறு. உங்கள் நாட்டு வணிகர்கள் அரையும் குறையுமாகச் சொல்வதையெல்லாம் நீங்கள் பிரமாணமாக மதிக்கிறீர்கள். உங்கள் நாட்டைப் பற்றி எனக்கு ஓரளவுதான் தெரியும். எங்கள் நாட்டைப் ‘பற்றியும் உங்கள் வணிகருக்கு ஓரளவுதான் தெரியும். உதாரணமாக, சினா என்று எங்கள் நாட்டுக்கு ஏன் பெயர்’ வந்தது தெரியுமா?” என்று வினவினான் அகூதா.

“ஏன்?” என்று’ வினவினான் இளையபல்லவன்.

பதில் சொல்லத் துவங்கிய சனக் கடலோடியின் சிறு விழிகளில் அன்பின் சாயை விரிந்தது. “உலகத்தின் மிகச் சிறந்த நாடுகளில் எங்கள் நாடு ஒன்று. மக்கள் மிகவும் நல்லவர்கள். சல வேளைகளில் தலைவர்கள் சிலர் ஏற்படு கிறார்கள். தங்கள் சுயநலத்திற்கு மக்களைத் தூண்டுகிறார் கள். சனா! சனா! பெயரே பட்டு மாதிரியிருக்கிறதல்லவா. ஈட்ஸின் என்றால் பட்டு. எங்கள் நாடு பட்டு உற்பத்தியில் உலகத்திலேயே சிறந்தது. அதனால் ட்ஸின். நாடு பட்டு நாடு என்ற ஒரு பெயர் உண்டு. தவிர சுமார் 13 நூற்றாண்டுகளுக்கு முன் ட்ஸின் என்ற. அரச குலம் ஆசியாவின் கிழக்குப் பகுதி முழுவதையும் ஆண்டு வந்தது. அதனால் அந்தக் குடும்பம் அரசாண்ட பகுதியை பாரத நாட்டுக் கடலோடிகள் சீனாவென்றும், அராபியர் ஸின் என்றும், யவனர்கள் சினாய் என்றும் அழைத்தார்கள். ஆனால் உங்கள் கடலோடிகள் அளித்த பெயர்தான் நிலைத்தது. அந்தச் சீனாவில் நூசென் என்ற இனத்தில் நான் பிறந்தேன் என்று சொன்னீர்கள். அது சரி. ஆனால் மங்கோலியரின் இளை அது என்று சொன்னீர்களே, அது தவறு. மங்கோலியர்கள் காட்டுமிராண்டிகள், நாகரீக மற்றவர்கள். நாசென் அந்த வகுப்பின் களையல்ல, நாகரீகமுள்ள தார்த்தார் இனத்தின் களை. எங்களுக்கு அந்த மங்கோலியரும், நீங்கள் சொன்ன கிதான், கின் வகுப்பினரும் இழைத்த அநீதியால் நான் கொள்ளைக் காரனானேன்.

“உம்” என்ற குரல் மட்டும் அநபாயனிடமிருந்து எழுந்தது.

“மங்கோலியர், இதான், கின் இனத்தவர் மூர்க்கர்கள், மனிதத் தன்மையில்லாதவர்கள். அவர்கள் அடிக்கடி வடக்கிலிருந்து கூட்டம் கூட்டமாக வந்து என் வகுப்பி னரை நாசம் செய்தார்கள். பெண்களைக் கற்பழித்தார்கள். குழந்தைகளைக் கொலை செய்தார்கள். அந்த அநீதிகளி லிருந்து நான் எழுந்தேன். என் மக்கள் எழுந்தார்கள். பதிலுக்கு அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் நாங்கள் சிறை பிடித்தோம்.

“அநீதிக்குப் பதில் அநீதி செய்ய தமிழர் விரும்புவ தில்லை” என்றான் அநபாயன்.

“நாகரீகமுள்ள யாரும் விரும்புவதில்லை. ஆனால் விருப்பத்துக்கும் நீதிக்கும், நேர்மைக்கும் மாறாக நடக்க வேண்டிய சமயங்கள் சரித்திரங்களில் ஏற்படுகின்றன. மங்கோலிய கிதான், கன் இனத்தவர்களுக்கு நீதியின் சொல் புரியாது. வாளின் பதில் ஒன்றுதான் புரியும். அகையால்தான் அவர்களைச் சிறை பிடித்தேன். அவர்கள் இல்லங்களைச் சூறையாடினேன். அதனால் தூரத்தி லிருக்கும் “நீங்கள் என்னை இகழலாம். என் மக்கள் என்னை இகழ்வதில்லை. உங்கள் நாட்டுப் பழமொழி யொன்றைக் கேட்டிருக்கிறேன். புலியிடம் வேதாந்தம் பேசிப் பயனில்நாகரீக மற்றவர்களுக்கு வாள் ஒன்றுதான் பதில் சொல்ல முடியும்” என்று திட்டமாக அறிவித்தான் அகூதா.

அவன் சொன்னதில் உண்மைகள் பல இருப்பதை உணர்ந்தான் அநபாயன். அகூதாவை எத்தனை பிசகாக மதிப்பிட்டுவிட்டோம் என்பதையும் புரிந்து கொண்டதால் தன் பெருந்தன்மையைக் காட்ட முற்பட்ட அநபாயன் அசனத்தினின்றும் எழுந்திருந்து, “னர் தலைவரே! உங்கள் சரிதம் என் மனத்தைத் தொடுகிறது. உங்களிடம் எங்களை ஒப்படைத்துக் கொள்கிறேன். ஆனால் ஒரு வேண்டுகோள்” என்றான்.

“சொல்லுங்கள் அநபாயரே!” என்றான் சீனக் கடலோடி.

“நீங்கள் விலைக்கு வாங்கிய இரு தமிழர்களையும் எங்களுடன் அனுப்ப வேண்டும். நீங்கள் செலுத்திய பொற் காசுகளை...” அநபாயனை இடைமறித்த அகூதா, “வேண் டாம், தரவேண்டாம். அவர்களைக் கூடவே அழைத்து வந்திருக்கிறேன். இதோ வரவழைக்கிறேன்” என்றபடி சன பாஷையில் ஏதோ சில வார்த்தைகளைக் கூறினான்.

அடுத்த விநாடி வெகு வேகமாக அந்த அறையை விட்டு வெளியே நடந்த அமீர், சில, விநாடிகளுக்கெல்லாம் அந்த இரு தமிழருடன் இரும்பி வந்தான். வந்த தமிழர் மட்டுமல்ல உள்ளே இருந்தவர்களும் ஒருவரைப் பார்த்து ஒருவர் பிரமித்து விழித்தனர். உண்மையில் சீனக் கடலோடி பெரும் மந்திரவாதியாகத்தானிருக்க வேண்டு மென்று இளையபல்லவன் நினைத்தான். அநபாயன் அப்படி நினைக்கவில்லை. அகூதாவுக்குத் தாங்கள் எத்தனை தூரம் கடமைப்பட்டு விட்டோம் என்ற பெரும் சுமைதான் அநபாயனின் இதயத்தில் ஏறிக்கொண்டது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top