• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கடல் புறா - முதல் பாகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அதித்யாயம் – 21

பூர்வாங்கம் ஒரு கதை

பூர்வாங்கம் ஒரு கதை சீனக் கடலோடியின் இதழ்களிலிருந்து’ சிதறிய இரண்டொரு சீனச் சொற்களைக் கேட்டதுமே வெகு துரிதமாக வெளியிலோடிய அரபு நாட்டு அமீர் இரண் டொரு விநாடிகளுக்கெல்லாம் அழைத்து வந்த இரண்டு தமிழர்களைக் கண்டதும், அறையிலிருந்த அநபாயன், இளையபல்லவன், காஞ்சனாதேவி ஆகிய மூவரும் பிரமிப் பின் எல்லையை எய்திய காரணத்தாலும், வந்த தமிழர் களும். வியப்பின் வரம்பை எட்டிவிட்டதால் திருதிரு வென விழித்து வாயடைத்து நின்றதாலும், சில விநாடிகள் அந்த அறையில் மெளனமே நிலவிக் கிடந்தது. பாலூர்ப் பெருந்துறையின் மூன்று நாள் நிகழ்ச்சிகளில் சிக்கிய அந்த ஐவரும் தாங்கள் இப்படி எதிர்பாராத விதமாகத் இடீரென அரபு நாட்டு வணிகனான அமீரின் உள்ளறையில் கூடும் சந்தர்ப்பம் ஏற்படுமென்றோ, அந்தச் சந்தர்ப்பமும் ஒரு சீனக் கொள்ளைக்காரனால் கிடைக்குமென்றோ தினை யளவும் நினைக்காததால் அவர்கள் மனங்களில் பற்பல விதமான எண்ணங்கள் பாய்ந்து பெரும் அறுகளாக ஓடிக் கொண்டிருந்தன. அந்த எண்ணங்களுக்கு உடனடியாக உருக்கொடுத்து, சொற்களை உதிர்க்கும் சக்தியை அந்த ஐவருமே இழந்திருந்ததைக் கவனித்ததால், ஏற்கெனவே முகத்தில் தவழ்ந்து கடந்த புன்னகை நன்றாக விகூக்கும் படி தன் இதழ்களை விரிவடையச் செய்த சீனக் கடலோடி யே மெள்ள உரையாடலைத் துவங்கு, “இந்த இரு தமிழரையும் உங்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும் பாக்கியம் எனக்கில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். அதுவும் ஒரு காரியத்திற்கு நல்லதுதான். அபாயமான பணிகளில் ஈடுபடும்போது, அதில் ஈடுபடுபவர்களுக்கு மூன் பரிச்சயம் இருந்தால் அதுவே ஒரு பெரும் பலம்” என்று கூறி அநபாயனையும் மற்ற இருவரையும் தன் சிறு விழிகளால் நோக்கினான்.

அதபாயனோ இளைய பல்லவனோ இதற்குப் பதில் சொல்லாமல், வந்த இரு தமிழர்களையும் உற்று நோக்கியதி லேயே சில விநாடிகள் முனைந்ததல்லாமல் பிறகு பேசத் துவங்கிய போதும், அகூதாவிடம் பேச்சுக் கொடுக்காமல் அந்த இரு தமிழர்களிடம் சம்பாஷணையைத் தொடங் கவும் செய்தார்கள். முதன் முதலில் பேசத் துவங்கிய சோழர்குல இளவல், “வியப்பைத் தரும் சந்திப்பு இது” என்றான் அந்த இரு தமிழரையும் நோக்கி,

அநபாயன் பேசத் துவங்கிய பின்பும் பேசும் திறனை இழந்திருந்த தமிழர் இருவரும், பதில் சொல்லத் திராணி யில்லாத காரணத்தால், ‘ஆம்’ என்பதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் அசைத்தனர்.

அடுத்து எழுந்த அநபாயன் சொற்களில் கருணை யோடு €ற்றமும் சிறிது கலந்தொலித்தது. “நீங்கள் கலிங்கக் காவலரிடமிருந்து விடுதலையடைந்து வந்திருப்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று கூறிய போது அவன் குரலில் கனிவும் கனலும் கலந்து கிடந் தாலும் சொற்களை உதிர்த்து மூடிய அவன் உதடுகளில் மட்டும் கடுமை தெளிவாகத் தெரிந்தன.

அநபாயன் சொற்களில் கலந்தொலித்த மாறுபட்ட உணர்ச்சிகளால் ஓரளவு சுரணை பெற்ற அந்த இரு தமிழர்களில் ஒருவன், “இளவரசர் ம௫ழ்ச்சியில் ஓரளவு வருத்தமும் கலந்திருப்பதாகத் தெரிகிறது” என்று மிகத் தாழ்மையாகவும், அந்தத் தாழ்மையிலும் சற்று ஏளனம் கலந்த தொனியிலும் பதில் சொன்னான்.

அந்தத் தமிழன் சொன்ன பதில் காஞ்சனாதேவிக்கோ அமீருக்கோ வியப்பாயிருந்திருக்கலாம். ஆனால் அந்தத் தமிழனை நன்கு அறியும்’ வாய்ப்புப் பெற்ற அநபாய னுக்கோ ஒரு இரவில் சில நிமிஷங்களே அறியும் வாய்ப்பை அடைந்திருந்த இளையபல்லவனுக்கோ எந்தவித வியப்பை யும் கொடுக்காததால் இருவரும் அவனைச் சற்றுக் கோபத் துடனேயே நோக்கினர். அந்தத் தமிழனிடம் அநபாயன் கொண்ட கோபத்திற்கும் இளைய பல்லவன் கொண்ட சற்றத்துக்கும் பெருவித்தியாசமிருந்தது. அநபாயன் கொண்ட சினம் பாலூர்ப் பெருந்துறையை விட்டுக் கடாரத்து இளவரசியையும் அவள் தந்தையையும் காப்பாற்றி, சோழ நாடு அனுப்புவதைப் பொறுத்திருந்ததால், அத்தகைய பொறுப்பில் பங்குகொள்ள வேண்டிய இரு தமிழரும் அஜாக்கிரதையால் எதிரிகளிடம் சிக்கிக் கொண்டார்களே என்ற நினைப்பால் அவன் உள்ளம் பொங்கிக்கொண்டிருந்தது. ஆனால் இளையபல்லவன் கோபமோ, பாலூர்ப் பெருந்துறையில் தான் கால்வைத்த நாளன்றே துணிவைப் பெரிதும் காட்டிய அந்தச் சுங்க அதிகாரி, அந்தத் துணிவையும் இடக்காகப் பேசும் தன்மையையும், தான் அடிபணிய வேண்டிய அநபாயனிடமே காட்டுகறானே என்ற எண்ணத்தால் கிளைத்தெழுந்தது. அதன் விளைவாக உக்கிரமான பார்வையொன்றைச் சுங்க அதிகாரிமீது வீசிய இளையபல்லவன், “தமிழகத்தின் குடிமகனான நீர் இளவரசரிடம் பேச. வேண்டிய முறை இது அல்ல” என்றான் குரலில்...அந்த உக்கிரம் ஊடுருவி ஒலிக்க.

இளையபல்லவன் சீற்றமும், பேச்சும் கோபத்தை விளைவிப்பதற்குப் பதிலாக சுங்க அதிகாரிக்குச் சரிப் பையே கொடுத்தாலும், அதை அவன் வெளிக்குக் காட்டா மல், “சோழ நாட்டுக் குடிமகன் இப்பொழுதும் சீன நாட்டு அடிமை” என்று கூறித் தன் உண்மை நிலையை மிகுந்த விஷமத்துடன் இளைய பல்லவனுக்கு நினைப்பூட்டினான்.

இதைக் கேட்டதும் இளையபல்லவன் கோபம் அத்து மீறிக் கொண்டிருப்பதைக் கடைக்கண்ணால் கவனித்த அநபாயன், அவனைப் பேசாமலிருக்கும்படி சைகை செய்துவிட்டுச் சுங்க அதிகாரியை நோக்கி, “கண்டியத் தேவரே! உம்மையும் இந்தக் கூலவாணிகன் சேந்தனையும் ‘ இங்கு சந்தித்ததில் எனக்கேற்பட்டுள்ள வியப்பின் காரணம் உமக்குப் புரிகிறதா, இல்லையா?” என்று சற்றுக் கடுமையுடன் வினவினான்.

“இளவரசருக்கு இந்தச் சந்திப்பால் உண்டாகக் கூடிய வியப்பும் வருத்தமும் என்னைவிட வேறு யாருக்குப் புரியும்?” என்று கேட்டான் சுங்க அதிகாரியான கண்டியத் தேவன் பதிலுக்கு.

“எங்கள் விடுதலைக்கு மூன்று பேர்களைத்தான் முக்கியமாக நம்பியிருந்தேன்” என்று அநபாயன் மீண்டும் உணர்த்தினான்.

“தெரியும்.” இந்த ஒற்றைச் சொல்லிலும் விளக்கத்தைக் காட்டினான் சுங்க அதிகாரி.

“அரபு நாட்டு அமீர் மூலம் இந்தப் பாலூரை விட்டு வெளியேறத் திட்டமிட்டுவிட்டுப் பிறகு உங்களை வர வழைக்கலாமென்றிருந்தேன்” என்றான் அநபாயன்.

“இப்பொழுது அந்தச் சிரமம் தங்களுக்கில்லை. நாங்களே வந்துவிட்டோம், ஆனால் ஒரு வித்தியாசம்” என்றான் கண்டியத்தேவன்.

“என்ன வித்தியாசம்?”

“உங்கள் விடுதலைக்கு எங்கள் கையை எதிர்பார்த்தீர்கள். ஆனால் இப்பொழுது எங்கள் விடுதலைக்கு உங்கள் கையை எதிர்பார்க்கிறோம். நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

“என் சொற்படி நடந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

“உங்கள் சொற்படிதான் நடந்தோம்.

“நான் வழக்கமாகச் சந்திக்கும் இடத்தில் சந்தித்தீர்களா?”

“அதே இடத்தில்தான். சிறைக்குப் பின்புறமிருக்கும் அந்தச் சிறு வீட்டில்தான் சந்தித்தோம். ஆனால் அங்கு நாங்கள் மட்டும் சந்திக்கவில்லை.

“வேறு யார் சந்தித்தது?”

“பீமனும் எங்களைச் சந்தித்தான்.

“இதைக் கேட்டதும் அநபாயன் புருவங்கள் வியப்பால் சற்றே மேல் நோக்கி எழுந்தன. “என்ன, பீமனா!” என்ற கேள்வியில் அந்த வியப்பின் ஒலி பலமாகப் பரவி நின்றது.

சுங்க அதிகாரி அநபாயனை நோக்கத் தலைதாழ்த்தி விட்டுச் சொன்னான் “ஆம், அநபாயரே! பீமன் எங்க ளுக்கு முன்னதாக அந்தச் சிறு வீட்டிற்குள் காத்திருந்தான். நாங்களிருவரும் அந்த விடுதிக்குள் நுழைந்ததுமே வீரர் களைவிட்டு எங்களை சிறை செய்தான். எந்தெந்த இடங் களை ரகசிய இடங்களாக இந்த ஊரில் நாம் நினைத் திருந்தோமோ, அந்த ‘இடங்களெல்லாம் இப்பொழுது பீமன் வசத்திலிருக்கன்றன. இதோ இருக்கும் கூலவாணிகர் மாளிகையை நமது ரகசிய இடமாக வைத்திருந்தோம். அந்த ரகசியம் ஆம்பலமாகி விட்டது. அவர் மாளிகை கைப்பற்றப்பட்டது. அவரும் ஒற்றராகச் சிறை செய்யப்பட்டார். வெளிநாட்டுப் பிரமுகர். வீதியில் குணவர்மரைத் தாங்கள் தங்க வைக்கச் சொன்ன விடுதியிலும் இப் பொழுது கலிங்க வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள். சிறைக் குப் பின்னாலிருக்கும் அந்தப் பழைய சிறு வீட்டையும் என்னையும் பீமன் புரிந்தகொள்ளவில்லையென்று நினைத் தேன். அதுவும் தவறாகிவிட்டது. இந்தப் பாலூரிலுள்ள நமது ஒற்றரில்லங்களெல்லாம் இப்பொழுது கலிங்கத்து வீரர் வசமிருக்கின்றன. மற்றும்...

“மற்றுமென்ன? சொல்லும் மேலே” அநபாயன் குரல் வறண்டு கிடந்தது.

“நீது மண்டபத்திலிருந்து இளைய பல்லவரையும் மற்றத் தமிழரையும் நீங்கள் விடுவித்து வந்தீர்களல்லவா!”

“ஆம்.

“அதற்குப் பிறகு எந்தத் தமிழ் வீரனும் இந்தப் பாலூரின் கோட்டை வாயில்களில் காவல் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இதைக் கேட்டதும் இளையபல்லவன் தன் அசனத்தி விருந்து பெரும் சீற்றத்துடன் எழுந்தான். அவனது ஈட்டிக் கண்கள் அநபாயனை ஒரு விநாடி நோக்கின. “அப்படி யானால், பாலூரிலுள்ள தமிழ் வீரர்களை நாம் திரட்டி, கோட்டை வாயில்களில் பொருதி வெளியேறினா லென்ன?” என்று வினவினான்.

கண்டியத்தேவன் இளைய. பல்லவனை நன்றாக ஏறெடுத்து நோக்கினான். “செய்யலாம். செய்வது சாத்திய மும்கூட. ஆனால் அதன் விளைவுகள் பயங்கரமா யிருக்கும்” என்றும் சொன்னான்.

“என்ன விளைவுகள்?”

“இப்பொழுது பாலூரில் தமிழர் ஓரளவுதான் துன்புறுத்தப்படுகிறார்கள். பெரும்பாலோர் மீது கண் காணிப்புதான் நடக்கறது. என்னைப்போல் தீவிரமாக வேவுத் தொழில் ஈடுபடுபவர்மீதுதான் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்குக் காரணம் இந்தப் பாலூரின் ஜனத்தொகை அமைப்பு, படைப் பகுதிகளின் அமைப்பு. பாலூரில் மூன்றிலொரு பங்கு தமிழர் இருக்கிறார்கள். படைப் பிரிவும் அந்தக் கணக்கில் தானிருக்கிறது. படையை முழுவதும் விரோதித்துக் கொள்வது பலனளிக்காது என்பதைப் பீமனும் அனந்த வர்மனும் உணர்ந்திருக்கிறார்கள். படையிலிருக்கும் தமிழர் புரட்சி செய்தால் பாலூரில் உண்டாகக்கூடிய நிலைமை யும் அவர்களுக்குத் தெரியும். அந்தப் பயம் அவர்கள் கொடுஞ்செயல்களைத் தேக்கியிருக்கிறது. தமிழ்ப் படைப் பிரிவை நாம் திரட்டி, கோட்டைக் காவலை உடைக்க முயன்றால் அடுத்து வருவது இரண்டு நாள் பாலூர்ப் போர். பிறகு சோழர் கலிங்கர் போர். இதற்கிடையே தமிழர்கள் பெருநாசம். நால்வர் விடுதலைக்காக இந்த நிலைமையை நாம் சிருஷ்டிப்பதானால் நீங்கள் சொல்லும் திட்டத்தை நாம் கடைப்பிடிக்கலாம்” என்றான் சுங்க அதிகாரி.

மேற்கொண்டு ஏதோ பேச முயன்ற இளைய பல்லவ னைத் தன் பார்வையொன்றினாலேயே தடை செய்த அநபாயன், சுங்க அதிகாரியை நோக்க, “முடியாது, முடி யாது. அந்தத் திட்டத்தை நாம் கடைப்பிடிக்க முடியாது. சோழநாட்டுக்கும் கலிங்கத்துக்கும் போர் நிகழ்வதானால் அதற்குக் காரணம் நாமாக இருக்கக் கூடாது. போரைத் தூண்டும் பொறுப்பு பீமனுக்கும் அனந்தவர்மனுக்குமே இருக்கட்டும்” என்று கூறினான். பிறகு சற்று நிதானித்து விட்டு, “அப்படியானால் எந்தக் கோட்டை வாசல் மூலமும் வெளியேற முடியாதா? பலவீனமான் காவல் எங்கும் இல்லையா?” என்றும் வினவினான் சுங்க அதிகாரியை நோக்கி.

சுங்க அதிகாரி சொன்னான் “அநபாயரே! இந்தப் பாலூர்ப் பெருந்துறையில் நான் அறியாத இடமோ வீரர் களோ கிடையாதென்பது தங்களுக்குத் தெரியும். இந்தக் கூலவாணிகர் இங்கு வருவதற்கு வெகுநாள்களுக்கு முன் னிருந்தே பாலூரின் சுங்கச்சாவடியில் மேலுக்கும் உண்மை யில் சோழநாட்டு அலுவலுக்கும் நான் பணி புரிந்து வருவது தங்களுக்குத் தெரியும். ஆகவே, உள்ள நிலை மையை உள்ளபடி சொல்கிறேன். நாம் எந்தெந்த இடங் களை ரகசியமென்று வைத்திருந்தோமோ அந்த இடங்க ளெல்லாம் கலிங்க வீரர்கள் கையிலிருக்கின்றன. அங்கு நாம் நிறுத்தியிருந்த புரவிகள் வணிகப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வண்டிகள் அனைத்தும் கலிங்கத்தின் குதிரை சாலைகளுக்கும், வாகனக் கூடங்களுக்கும் பறந்து விட்டன. அது தவிர உங்கள் நால்வரைப் பற்றிய அடை யாளங்களும், ஒவ்வொரு கோட்டை வாயில் காவலருக்கும் விவரமாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆகவே, நீங்கள் நால்வரும் தனித்தனியாகச் சென்றாலே கோட்டை வாயில்களைக் கடப்பது கஷ்டம். நால்வரும் சேர்ந்து சென் றால் கண்டிப்பாய்க் கடக்க முடியாது. நிலமார்க்கமும் அறவே அடைக்கப்பட்டு விட்டது. நிலவழியில் கோட்டை யைக் கடந்தாலும், அதற்கப்பால் ஒரு காதத்துக்கு வரிசையாக உள்ள சுங்கச் சாவடிகளில் ஏதாவதொன்றில் கண்டிப்பாய்ச் சிறைப்படுவீர்கள். கடலில் மட்டும் சுங்கச் சாவடிகளை ஏற்படுத்த முடியாது. கடலை அடைந்து விட்டால் தப்பலாம். ஆனால் கடலுக்குச் செல்லும் வாயில்களில் கடுமையான காவலும் சோதனைகளும் இருக்கின்றன. அமானுஷ்யமான அதி யுக்தியான ஏதாவ தோர் அற்புதத் திட்டம் இருந்தாலொழிய இந்த ஊரை விட்டு நாம் வெளியேற முடியாதென்று நினைக்கிறேன். “இதைச் சொல்லி முடித்த சுங்க அதிகாரி உள்ள நிலையை நினைத்துச் சோகப் பெருமூச்சு ஒன்றும் விட்டான்.

சுங்க அதிகாரியின் விவரணத்தைக் கேட்டதும் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான் அநபாயன். இளைய பல்லவ னுக்கு மட்டும் சுங்க அதிகாரி அளவுக்குமீறி அபாயத்தை எடுத்துச் சொல்வதாகத் தோன்றியதால், “நாம் அனாவூய மாக அஞ்சுகிறோமென்று நினைக்கறேன். நம்மைப் பிடிக்கப் பீமன் வலை விரித்திருக்கலாம். ஆனால் அதை நீக்கவோ அல்லது அறுக்கவோ நமக்குச் சக்தியில்லையா என்ன?” என்று சீறினான்.

அநபாயன் கண்கள் இளைய பல்லவனை நோக்கிக் கடுமையுடன் திரும்பின. “கருணாகரா! கண்டியத் தேவரை நீ சரியாக அறியமாட்டாய். ராணுவ தந்திரத்தில் இணை யற்றவர். நகரங்களில் கேந்திரங்களை அறிவதில் பிரசத்தி பெற்றவர். நிலைமை அபாயம் என்று அவர் சொன்னால் நிலைமை அபாயந்தான். பீமனையும் பாலூர்த் துறைமுகத் தையும் அவரைவிட அறிந்தவர்கள் வேறு யாரும் கடை யாது. தப்புவது அசாத்தியம் என்று அவர் சொன்னால் அது அசாத்தியம்தான்” என்றான் திட்டமாக.

“அப்படியானால் நாம் கையைக் கட்டிக் கொண்டு அமீரின் இல்லத்திலேயே இருக்க வேண்டியதுதானா?” என்ற இளைய பல்லவனின் குரலில் இகழ்ச்சி பலமாகத் தொனித்தது.

இளையபல்லவன் குரலில் தொனித்த இகழ்ச்சியை அநபாயன் கவனிக்கவே செய்தான். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல், “அசாத்தியம் என்ற சொல் என் அகராதியில் இல்லை. கருணாகரா. இதில் சம்பந்தப் பட்டிருப்பது நாம் இருவர் மட்டுமானால் இங்கு உட்கார்ந் திருப்பதைவிட எத்தகைய அபாயமுள்ள திட்டத்திலும் ஈடுபடலாம். ஆனால் கடாரத்தின் மன்னர் குலத்தின் நலன் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆகவே, நல்ல, கூடிய வரையில் வெற்றி தரக்கூடிய திட்டத்தை நாம் வகுக்க வேண்டும்” என்று கருணாகர பல்லவனை நோக்கக் கூறிவிட்டு, அந்த அறையிலிருந்த மற்றவர்கள் மீதும் கண்களைத் திருப்பி, “உங்கள் யாருக்காவது ஏதாவது வழி புலப்படுகிறதா?” என்று வினவினான்.

யாரும்’ ‘பதில் சொல்லவில்லை. நிலைமையின் நெருக்கடி அவர்கள் வாயை அடைத்திருந்தது. “நாம் தப்பத் இட்டம் வகுக்கக்கூடியவர்கள் இங்கு யாருமே இல்லையா?” என்று கடைசியாகச் சலித்துக் கொண்டான் அநபாயன்.

அதுவரை நடந்த சம்பாஷணையில் பங்கு கொள் ளாத அகூதா அநபாயனை இடைமறித்துக் கூறினான், “இத்தகைய சமயத்தில் சரியான இட்டத்தை வகுக்கக் கூடிய தறமை இங்கு ஒருவருக்குத்தான் உண்டு” என்று.

“யாரது?” அநபாயனும் இளைய பல்லவனும் ஏக காலத்தில் கேள்வியைத் தொடுத்தார்கள்.

சீனக் கடலோடி மெள்ள நகைத்தான். அவனது சின்னஞ்சிறு ஈட்டி, விழிகள் அமீரை நோக்கித் திரும்பின. ராட்சஸனைப் போலிருந்த அமீர் வெட்கத்தால் மிகவும் சங்கடப்பட்டான். தலையை இருமுறை அப்படியும் இப்படியும் ஆட்டிக் குழைந்து மற்றவர்களை நோக்கினான்.

கொள்ளைக்காரனான சேக் கடலோடி அமீரைப் பற்றிச் சிறப்பித்துச் சொல்லியது மற்றவர்களுக்கு வியப்பா யிருந்ததேயொழிய அநபாயனுக்குச் சிறிதும் வியப்பில்லை. “உனக்கு ஏதாவது யோசனையிருந்தால் சொல் அமீர்” என்று கேட்டான் அநபாயன்.

“ஒரு சிறு திட்டத்தை இந்த ஏழை ஏற்கெனவே வகுத் இருக்கிறேன்” என்று மிகுந்த பணிவன்புடன் சொன்னான் அமீர்.

“என்ன திட்டம் அமீர்?” என்று அநபாயன் ஆவலுடன் வினவினான்.

“அதற்குப் பூர்வாங்கம் ஒரு கதை” என்று அமீர் கதையையும் துவக்கினான். திட்டத்தையும் சொன்னான். இரண்டுமே பெரிய விந்தையாயிருந்தன கேட்டவர்களுக்கு. விந்தையில் பேராபத்தும் துணிவும் கூடக் கலந்திருந்தன.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் - 22

காந்தம் இழுக்கிறது

சோழ சாம்ராஜ்ய பீடத்தில் அமரக்கூடியவனும் இணையற்ற துணிவும், வீரமும் கொண்டவனுமான சோழர் குல இளவலான அநபாயனும், இளவயதிலேயே பல போர்களில் வெற்றி வாகை சூடியதால் எதிரிகள் மறைவிலும் அச்சத்துடன் பெயரை உச்சரிக்கும் &ர்த்த வாய்ந்த கருணாகர பல்லவனும், ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் விதியை நிர்ணயிக்கக் கடாரத்திலிருந்து வந்திருந்தவளும், தந்தையைப் பிரிந்து தன்னந்தனியாக மற்ற அண்களின் மத்தியில் உட்கார்ந்இருந்த அந்தச் சமயத்திலும் சிறிதும் குழப்பத்தையோ பயத்தையோ காட்டாதவளும் கட்டழகுக் கன்னியுமான காஞ்சனாதேவியும், ராஜ தந்திரத்திலும் பிற நாடுகளின் நகர அமைப்புகளையும் போர் பொறிக் கூடங் களை அறிவதிலும் நிகரற்றவனென்று அநபாயனாலேயே போற்றப்பெற்ற பாலூர்ப் பெருந்துறைச் சுங்க அதிகாரி கண்டியத்தேவனும் குழுமியிருந்த அந்த இடத்தில், அவர் களுக்கெல்லாம் விமோசனத்தை அளிக்க வழி சொல்லக் கூடியவன் தான் ஒருவனேயென்று சீனக் கடலோடியான அகூதா சுட்டிக் காட்டியதுமே, மிதமிஞ்சிய வெட்கத் தாலும், சங்கடத்தாலும், திண்டாடிய அரபு நாட்டு அமீர் அநபாயனே தன்னை நேரிடையாக யோசனை கேட்டதும், விவரிக்க இயலாத இன்ப வேதனையை அடைந்தான். அதன் விளைவாகத் தன் பிரும்மாண்ட மான சரீரத்தைச் சற்றுக் குறுக்கியும், திருப்பியும் அவஸ் தைப்பட்டதன்றி, தன் பெருவழிகளை அவர்களை நோக்கிச் சுற்றவிட்டபோது, ஓரளவு அச்சத்துடனும், சஞ்சலத்துடனுமே அவர்களைக் கவனித்தான். முன்னேற் பாடாகத் தான் திட்டத்தை வகுத்துவிட்டுச் சீனக் கடலோடியான தன் குருநாதர் உட்பட அந்தப் பிரமுகர் களையெல்லாம் வீண் தர்க்கத்தில் நீண்ட நேரம் நிலைக்க விட்டது - பற்றி அவர்கள் தவறாக ஏதாவது எண்ணி விட்டால் என்ன செய்வதென்ற பயம் அவன் இதயத்தில் ஏற்பட்டது. அதைத் தவிர, திட்டமும் பெரும் வீரர்கள் விரும்பி ஒப்புக்கொள்ள முடியாத திட்டமாயிருந்ததால், அதை எப்படிச் சொல்வதென்ற அச்சமும் அவனுக்கு உண்டாகவே அவன் அதைப்பற்றி ஆரம்பத்தில் நேரடி. யாகப் பிரஸ்தாபிக்காமல் சுற்றி வளைத்தே.. விவரிக்கத் தொடங்கினான்.

திட்டத்தை விவரிக்கு முன்பு அவன் அடைந்த சங்க டங்களும் அவற்றின் காரணங்களும் சீனக் கடல் வீரனான அகூதாவுக்கு மிகவும் தெளிவாகத் தெரிந்ததால் அவன் அமீரை நோக்க, “இதில் சங்கடமோ வெட்கமோ அடைய வேண்டிய அவசியம் ஏதுமில்லை அமீர். நிலைமை அபாய மானது. பெரும் அரசுகளை நிர்வகக்க வேண்டியவர்களின் நலன் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆகவே திட்டத்தின் முடிவு நற்பலனைத் தருமானால் அதன் மார்க்கங்களைப் பற்றியோ முறைகளைப் பற்றியோ நாம் அதிகமாகக் கவனிக்க வேண்டியதில்லை” என்று கூறிவிட்டுத் தன் கருத்துக்கு ஆதரவிருக்கிறதா என்பதை அறிய அநபாயனையும் இளைய பல்லவனையும் நோக்கினான்.

அமீரின் இட்டத்தையோ திட்டம் நிறைவேற்றப் படுவ தற்கான முறைகளையோ அறியாத அநபாயரின் முகத் துலோ கருணாகரனின் பார்வையிலோ அதற்கு எந்த விதமான பதிலும் கிடைக்காவிட்டாலும், திட்டமான எதிர்ப்பு காஞ்சனாதேவியிடமிருந்து வரவே எதற்கும் கலங்காத அகூதாவே சிறிது கலக்கம் கொண்டான். அதுவரை நடந்ததையெல்லாம் பார்த்துக்கொண்டும் சொல்லப் பட்டதையெல்லாம் செவி மடுத்துக் கொண்டும் முகவாய்க் கட்டையில் ஒரு கரத்தை ஊன்றி, சிரத்தை சற்றே ஒருக்களித்து. தன் அஞ்சன விழிகளை அகல விரித்து உட்கார்ந்திருந்த காஞ்சனாதேவி, “முடிவு மட்டும் முக்கிய மல்ல சனத் தலைவரே, முறைகளும் முக்கியம். தவறான முறைகளைக் கொண்டு சாதிக்கப்படும் முடிவுகள் இறுதி யில் விபரீத விளைவையே கொடுக்கும்” என்று தன் அழகிய உதடுகளை மெள்ளத் திறந்து சொற்களை மிக இன்பமாக உதிர்த்தாள்.

அத்தனை நாழிகையாக உதிர்ந்த ஆண் மக்களின் கரகரத்த கடுமையான குரல்களுக்குப் பரிகாரம் செய்யும் பாணியில் இன்ப நாதம்போல் திடீரென அறைக்குள் உருவாகிய அந்தக் கள்ளைக் குரலைக் கேட்டதும், அறையி லிருந்த அனைவரும் அது வந்த திசையில் கண்களைத் திருப்பினர். மற்றவர்களுக்கெல்லாம் சற்றுப் பின்னடைந்து இளைய பல்லவனுக்கு அடுத்தபடி லேசாக ஒதுங்கிக் கடைசியில் உட்கார்ந்திருந்த காஞ்சனா தேவியின் கண் களில் அழ்ந்த சிந்தனை தெரிந்ததை மற்றவர்கள் கண்கள் பார்க்கவே செய்தன. அந்த அழ்ந்த சிந்தனையால் அந்தக் கண்கள் மயக்கம் தரும் பார்வையொன்றை வீசினாலும் அந்த மயக்கத்தினூடே ஒரு தெளிவும் உறுதியும் சென்று கொண்டிருந்ததைக் கவனித்தான் சீனக் கடலோடியான அகூதா. அப்படிக் கவனித்ததால் அந்தப் பெண்ணிடம் அவனுக்கு முதலில் ஏற்பட்ட அன்பு பல மடங்கு பெரூகியதன்றி, அமீரின் திட்டத்தில் ஏதோ ஒப்புக்கொள்ள முடியாத ஓர் ஆம்சம் கலந்திருப்பதை அவள் புரிந்து கொண்டு விட்டாளென்பதையும் அவன் அறிந்து கொண் டதால், அவளது கூரிய அறிவை எண்ணிப் பெரிதும் வியந்தான். மேலே அவள் பேசப் பேச அந்த வியப்பும் அவள்மீது அவனுக்கு ஏற்பட்ட மதிப்பும் வளர்ந்து கொண்டே போயின. அந்தச் சம்பாஷணைத் தொடருக்கு அவனே வித்திட்டான். ஏனென்றால் ஆரம்பக் கருத்து அவனுடையதாயிருந்தது. அந்தக் கருத்தைக் காஞ்சனா தேவி வெட்டிப் பேசிவிட்டதால், அதை விளக்குவதும் அவள் சந்தேகத்தை நிவர்த்திப்பதும் அவன் கடமையாயிற்று. ஆகவே அவள் ஆட்சேபணைக்குப் பதில் கூற முற்பட்ட சனக்கடலோடி சொன்னான், “தேவி! முறைகள் தவறா சரியா என்பது சந்தர்ப்பங்களைப் பொறுத்தது.” என்று.

காஞ்சனாதேவியின் அழகிய விழிகள் சிறிதும் அச்ச மின்றி கொள்ளைக்காரனென்றும், கொடுமையின் அவதார மென்றும், பெயர் பெற்ற அகூதாவை நன்றாக ஏறெடுத்து நோக்கின. “சந்தர்ப்பங்களைப் பொறுத்து மட்டும் முறை களைக் கையாளுவது தவறு, சனத் தலைவரே!” என்று அவள் திட்டமாகக் கூறினாள்.

அகூதாவின் சின்னஞ்சிறு ஈட்டி விழிகளில் ஆச்சரியம் மேலும் படர்ந்தது. காஞ்சனாதேவியின் தைரியத்தைப் பற்றி அவன் உள்ளத்தில் பெரும் பக்தியும் உண்டாயிற்று. இவள் கடாரத்தை மட்டுமல்ல. ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத் தையே அரசாளத் தகுந்தவள்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் அகூதா. அவள் பேச்சுக்கு அவன் பதில் சொன்னபோது, அவன் குரலிலும் அந்தப் பக்தி விளக்க மாகத் தெரிந்தது. “சந்தர்ப்பங்கள் தாமாகவே முறைகளைச் சிருஷ்டிக்கின்றன தேவி!” என்றான் சீனக் கடலோடி.

“தவறு சனத் தலைவரே! சந்தர்ப்பங்கள் நம்மைச் சூழ்ந்து கொள்கின்றன. நாம் அவற்றிலிருந்து விடுவித்துக் கொள்ளப் பார்க்கிறோம். ஆகவே விடுவித்துக்கொள்ள முறைகளை நாம்தான் வகுக்கிறோம். சந்தர்ப்பங்களல்ல வகுப்பது” என்றாள் காஞ்சனாதேவி உறுதியுடன், சற்றே தன் பூவிதழ்களை மடித்து.

“நான் அப்படி, நினைக்கவில்லை தேவி. சந்தர்ப்பங்கள் தான் முறைகளை வகுக்க நம்மைத் தூண்டுகின்றன. அது மட்டுமல்ல, பழைய வழிகள் அடைபடும்போது புது வழி களுக்கும் முறைகளுக்கும் கோடி காட்டுவதும் சந்தர்ப்பங் கள்தான்.” என்ற அகூதா மேலும் விவரிக்கத் தொடங்க, “நான் அமீரிடம் அறிந்த விஷயங்கள் சரியானால், உண்மை நிலை இதுதான். நீங்களும் உங்கள் தந்தையும் இளைய பல்லவரும் அமைதியான பாலூர்ப் பெருந்துறையை நாடி வந்தீர்கள். ஆனால் உங்களை எதிர்நோக்கி நின்றது அமைதியுள்ள பாலூர்ப் பெருந்துறையல்ல. உங்களை நசுக்கிவிடத் தீர்மானித்துள்ள கடுமையான கலிங்கத்தின் கடல்வாசல். சூழ்நிலை விபரீதமாயிருந்தது. சந்தர்ப்பங்கள் மாறுபட்டிருக்கின்றன. தூதர் என்ற முறையில் நாகரிகமாக வரவேற்கப்பட வேண்டிய கருணாகர பல்லவர், வாள் முனையில் வரவேற்கப்பட்டார். இளவரசராக, அரச விருந்தினராக, அரண்மனையிலிருக்க வேண்டிய அநபாயர், ஊரில் தலைமறைவாகத் திரிந்து அவ்வப் பொழுது தலையை நீட்டுகிறார். இரண்டு கப்பல்களுடன் வர்த்தக நிமித்தமாகப் பாலூர் வந்த நான் வாணிபத்தை முடித்துக்கொண்டு எந்தவிதக் கஷ்டமுமில்லாமல் நங் கூரத்தை நீக்கிக் கடலில் செல்லலாம். ஆனால் அமீரைத் இடீரென்று கடற்கரையில் சந்திக்கும் சந்தர்ப்பம் கடைக் இறது. அந்தச் சந்தர்ப்பம் தருடனைப்போல் இங்கு வந்து ரகசிய - யோசனையில் உங்களுடன் கலந்துகொள்ளும் வாய்ப்பை அளித்திருக்கிறது. பெரும் ராஜ குடும்பங்களைக் காப்பாற்றும் பொறுப்பு அநபாயரைப் போலவே எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. அகையால் எதையும் நாமாகத் தீர்மானித்துவிட முடியாது. நமது இஷ்டப்படி காரியங்கள் நடக்கவும் முடியாது. சந்தர்ப்பங்களையொட்டி முறைகளை வகுப்பதுதான் விவேகம். அந்த விவேகம் அமீருக்கு உண்டு. ஏதோ சங்கடமான முறையை வகுத்திருக்கிறான் அமீர். அதனால்தான் சங்கடப்படுகிறான்” என்று கூறிவிட்டு, அமீரை நோக்கித் திரும்பி “எதுவாயிருந்தாலும் பாதக மில்லை. சொல் அமீர்” என்று அமீரை ஊக்கவும் செய்தான்.

அமீர் தன் பெருவிழிகளால் அநபாயன் முகத்தையும் இளையபல்லவன் முகத்தையும் சில விநாடிகள் துழாவி விட்டுப் பிறகு காஞ்சனாதேவியை நோக்கிச் சொன்னான். “இளவரசி! என் திட்டமோ அதன் முறைகளோ உங்க ளுக்குத் திருப்தியில்லாவிட்டால் வேண்டாமென்று தள்ளிவிடலாம். ஆனால் என் திட்டத்தைவிட வேறு வழி யில்லை யென்று எனக்குத் தோன்றுகிறது. உளர் நிலைமை உங்களுக்கு இப்பொழுது புரிந்திருக்க வேண்டும். அதைக் கண்டியத்தேவர் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லி விட்டார். இந்த நிலையில் பாலூரில் எந்த இடத்திலும் நீங்கள் தலையைக் காட்ட முடியாது. காட்டினால் தப்பிச் செல்லவும் முடியாது.

“அமீரின் இந்த வார்த்தைகளுக்குப் பிறகு அந்த அறையில் அமைதியே நிலவியது. அமீர் மேற்கொண்டு என்ன சொல்லப் போகிறான் என்பதை அனைவரும் எதிர்பார்த்து நின்றார்கள்.

அவன் தொடர்ந்தான் “ஆம்மணி! இதோ இருக்கும் அகூதா, அநபாயர், இளையபல்லவர் இவர்கள் மூவரின் வீரத்தில் மட்டுமல்ல, உங்கள் வீரத்திலும் எனக்குச் சந்தேகம் சிறிதும் இல்லை. அநபாயர் இளையபல்லவர் இவர்கள் வீரச் செயல்களைப்பற்றி இந்தப் பாலூரிலும் பல கதைகள் உலாவுகின்றன. இருவரையும் தமிழர்கள் தெய்வங் களைப்போல் பாவிக்கிறார்கள். அகூதாவின் வீரத்தை நான் நேரிடப் பார்த்திருக்கிறேன். உலகத்தின் மாபெரும் வீரர்களில் என் குருநாதர் ஒருவர். கடலில் இவருடைய ஒரே மரக்கலம் சீன அரசாங்கத்தின் பல மரக்கலங்களை ஒரேசமயத்தில் முறியடித்து ஓடச் செய்திருப்பதை நான் இந்த என் இரு கண்களாலும் கண்டிருக்கிறேன். உங்கள் வீரத்தைப் பற்றி நான் என்ன சொல்ல? அநபாயருக்கு அருகில் நாண் இழுத்து நின்று அனந்தவர்மனையே அச்சுறுத்திய உங்கள் செய்கை இன்று பிற்பகலே பாலூரில் தீயாகப் பரவிவிட்டது. இத்தனை வீரம் பொருந்திய உங்கள் அனைவருக்கும் சிறிதும் வீரமற்ற ஏன் கோழைத் தனமாகக்கூடத் தோன்றக்கூடிய ஒரு திட்டத்தைச் சொல்வேனானால், அதற்குக் காரணம் உங்கள் வீரத்து லுள்ள அவநம். பிக்கையல்ல, உங்கள் நலனில் எனக்குள்ள, அக்கறை, உங்களை எப்படியாவது இந்தப் பாலூரிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எனது ஊக்கம்...” என்று அமீர் மேலே சொல்லாமல் சிறிது தடுமாறினான்.

அவன் எதையோ சொல்ல சங்கடப்படுகிறானென் பதை அறிந்துகொண்ட அநபாயன், “பயப்பட வேண் டாம், எதுவாயிருந்தாலும் சொல் அமீர். ஏற்றுக்கொள் வதும், கொள்ளாததும் எங்களைப் பொறுத்தது” என்று அமீருக்குத் தைரியத்தைச் சற்று புகட்டினான்.

சற்று தைரியமடைந்த அமீர், அநபாயனை நோக்க, “அநபாயரே! இளைய பல்லவரையும் கடாரத்து அரசர், இளவரசி, இவர்களையும் தப்புவிக்கத் தாங்கள் திட்ட மிடச் சொன்னபோதே ஊர் நிலையைக் கவனித்தேன். மிகவும் பயங்கரமாயிருந்தது. நேர் வழியில் இங்கிருந்து தப்ப முடியாதென்பதைப் புரிந்துகொண்டேன். மிகவும் திண்டாடினேன். தத்தளித்தேன். கடைசியில் ஒரு முடி வுக்கு வந்தேன்” என்றான்.

“என்ன முடிவுக்கு வந்தாய் அமீர்?” என்று வினவி னான் அநபாயன்.

“இந்த ஊரில் என் வியாபாரத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிடுவதென்று முடிவு கட்டிவிட்டேன்” என்றான் அமீர்.

சர்வசாதாரணமாகத்தான் அமீர் அந்த வார்த்தை களைச் சொன்னான். ஆனால் அதன் விளைவு என்ன வென்பதைப் புரிந்து கொண்டதால் அந்த அறையிலிருந்த மற்றவர்கள் திகைப்பும் ஆச்சரியமும் கலந்த உணர்ச்சி களுக்கு வசப்பட்டனர். அநபாயனுக்கும் னக் கடலோடிக் கும் மட்டும் நண்பனும், தங்களை முன்பின் அறியாதவனு மான அந்த அரபு நாட்டு வணிகன் பாலூரில். பல வருஷங்களாக நிறுவி வளர்த்த வாணிபத்தை ஏறக்கட்டுவ தென்றால் காரணம் தங்கள் நல்வாழ்வாகத்தானிருக்க வேண்டுமென்பதைப் புரிந்துகொண்ட காஞ்சனா தேவியும், இளைய பல்லவனும் திகைப்பு ஆச்சரியம் இவற்றுடன் மதிப்பும் கொண்ட பார்வையை அவன்மீது வீசினார்கள். அத்தகைய பெரிய தியாகம் நியாயமற்றது என்பதை உணர்ந்த இளைய பல்லவன், தன் ஆசனத்தை விட்டுச் சரேலென எழுந்தான். “நியாயமில்லை வணிகரே! இது நியாயமில்லை. எங்களுக்காக உங்கள் வாழ்வை நாசப்படுத்திக் கொள்வது நியாயமில்லை” என்று சற்று இரைந்தே அமீரை நோக்கிக் கூறவும் செய்தான்.

அமீரின் சிவந்த பெருவிழிகள் கம்பீரமாக இளைய பல்லவனை ஏறெடுத்து நோக்கின. “இதில் நியாயப் பிசகான காரியம் ஏதுமில்லை இளைய பல்லவரே!”

“எங்களைக் காப்பாற்ற உங்கள் வாணிபத்தை ஏறக்கட்டுவது நியாயமல்ல” என்று மீண்டும் வலியுறுத்தி னான் இளையபல்லவன்.

“ஆம், நியாயமல்ல” என்று காஞ்சனாதேவியும் சம்பா ஷணையில் கலந்துகொண்டாள்.

“எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது” என்று அநபாயனும் தன் கருத்தைத் தெரிவித்தான்.

இந்தச் சொற்களைக் கேட்டதும் ‘சங்கடத்தால் அது வரை குறுகியிருந்த அமீரின் சரீரம் பெரிதாக நிமிர்ந்தது. அவன் கண்களில் பெருமை விரிந்தது. “இன்று கிடைத்த இந்தச் சொற்களுக்கு இதைப்போல் பத்துமடங்கு வர்த்தகத் தையும் நான் ஏறக்கட்டுவேன்” என்று பெருமிதத்துடன் கூறிய அமீர் மேலும் சொன்னான் “இளைய பல்லவரே! என் வாழ்க்கையில் சிறுமையையும் பார்த்திருக்கிறேன், பெருமையையும் பார்த்திருக்கிறேன், கஷ்டத்தையும் பார்த் திருக்கிறேன், மற்றவர்கள் காணாத, காண முடியாத சுகத்தையும் பார்த்திருக்கறேன். நான் இழந்த செல்வமும் சம்பாதித்த சொத்தும் நிரம்ப உண்டு. நான் எதையுமே லட்சியம் செய்வதில்லை. அரபுநாட்டுச் சீமான் குடும்பத் துச் செல்லப் பிள்ளையாகத்தான் பிறந்தேன். என்னிடமே அடிமைகள் நூற்றுக்கணக்கில் இருந்தார்கள். ஆனால் நானே அடிமையாகும் காலம் வந்தது. வாணிபத்துக்கு என் மரக்கலத்தில் சென்ற நான் இதே வங்கக் கடலில் சொர்ண பூமிக்கு அருகில் கொள்ளைக்காரர்களால் சிறை பிடிக்கப் பட்டுச் சனாவில் அடிமையாக விற்கப்பட்டேன். பிறகு, மீட்கப்பட்டேன் குருநாதரால். மரக்கலப் பயிற்சி அளிக்கப் பட்டேன். இவரால் இங்கும் வந்தேன். அவர் உதவியால் இங்கும் என் வாணிபம் பெருகுகிறது. இங்குள்ள பெரு வணிகர் எல்லோரையும்விட என் வாணிபம் பெரிது” என்ற அமீர் இடையே பேச்சை நிறுத்திக் கூலவாணி கனைச் சுட்டிக்காட்டி, “இவருக்கு என்னைத் தெரியாது. இவரை எனக்குத் தெரியும். இவர் வாணிபத்தைவிடப் பலமடங்கு பெரிது என் வாணிபம். இருந்தும் இந்தச் சிறு வணிகர் வீதியில் வெளியே சிறிதாகத் தெரியும் இந்த இல்லத்திலிருக்கிறேன். இங்கிருந்தே வாணிபம் செய்கிறேன். என் வாணிபத்தின் மொத்த அளவு இந்தப் பாலூரிலுள்ள மற்ற எல்லா வணிகர்களுடைய வாணிபத்தைவிட அதிகம். இங்கும் எனது அடிமைகள் இருப்பதை நீங்கள் உள்ளே வரும்போது கண்டிருக்கலாம். ஆம், எனக்குச் செல்வமும் அடிமைகளும் அதிகம். ஆனால் அந்தச் செல்வங்களையும் விருதுகளையும் நான் பொருட்படுத்தியதில்லை. இருவர் நட்பு எனக்கு ஆயுளில் இடைத்தது. அதுதான் எனக்குப் பெரும் செல்வம்” என்றான்.

இப்படிச் சொல்லிவிட்டுத் தன் பார்வையை அகூதா மீதும், அநபாயன் மீதும் திருப்பிய அமீர், “இந்த இருவரும் உலகத்தின் மகா புருஷர்கள். இவர்கள் நட்பு எனக்குக் கிடைத்ததுதான் பெரும் செல்வம். ஆகவே என் வாணிபத் தையோ, அதனால் வரும் செல்வத்தையோ நான் ஒரு பொருட்டாகப் பாவிக்கவில்லை. அகூதாவும் அநபாயரும் தனது அன்பு எத்தன்மையது என்பதை உணர்த்தினார்கள். அதன் தன்மையை நீங்கள் அறிய முடியாது. ஆகவே இந்த வாணிபத்தை ஏறக்கட்டுவதால் நான் பெரும் தியாகம் செய்வதாக நினைக்க வேண்டாம். இது நான் அநபாயர் அன்புக்கு அளிக்கும் சிறு காணிக்கை. இந்த ஏழையை அவர் நேற்று நாடி வந்தபோது இந்த முடிவுக்கு வந்து விட்டேன். அதுவும் குருநாதரைச் சந்தித்ததும் அந்த முடிவு உறுதிப்பட்டுவிட்டது. உண்மையில் பார்க்கப் போனால் இதில் தியாகம் எதுவுமில்லை. சுயநலமே இருக்கிறது. என் திட்டம் நிறைவேறிய பின் நான் இந்த ஊரில் இருக்கவும் முடியாது. ஆகையால் வேறு வணிகருக்கு இந்தக் கடையை விற்றுவிட்டேன் “ என்று கூறிய அமீர், சரேலென்று அகூதாவின் பக்கம் திரும்பி, “குருநாதரே! அது மட்டுமல்ல, காந்தம் என்னை இழுக்கிறது” என்றான்.

அதைச் சொன்ன அவன் கண்களில் பெரு ஒளி வீசுவதை அநபாயனும் மற்றவரும் கண்டனர். அதைக் கேட்ட அகூதாவின் கண்களிலும் அதே ஒளி படர்ந்த தையும் அநபாயன் கவனித்தான். அந்த ஒளியால் விக௫த்த முகத்துடனும் ஈட்டிபோல் ஜொலித்த விழிகளுடன் புன் முறுவல் தவழ்ந்த வதனத்துடன் தலையை அசைத்து ஆமோதித்த அகூதா, “இனி நீ சொல் கதையை ஆமீர்” என்று கூறினான். அமீர் தொண்டையைக் கனைத்துக்கொண்டு கதை யைத் துவங்கினான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 23

விடுதலைக்கு வழி

அமீரின் சொற்களிலிருந்து எது வெளியானாலும் ஓர் உண்மை மட்டும் தெள்ளென விளங்கியது இளைய பல்லவன் உள்ளத்துக்கு. எந்தத் தியாகத்தையும் தான் செய்யவில்லையென்பதைக் காரணங்களைச் சுட்டிக் காட்டி அமீர் வலியுறுத்தினாலும் அந்தக் காரணங்கள் வெறும் போலிக் காரணங்கள் என்பதையும், அநபாய னிடம் கொண்டுள்ள சொல்லவொண்ணா அன்பினாலும், மதிப்பினாலும் இத்தகைய இணையில்லாத் தியாகத்தைச் செய்ய அமீர் தீர்மானித்திருக்கிறானென்பதையும் இளைய, பல்லவன் சந்தேகத்துக்கு இடமின்றிப் புரிந்துகொண்டான். ஒரு மனிதன் தான் வெகு காலமாகக் கட்டிப் பெருக்கிய வாணிபம், வீடு வாசல், பொருள் அனைத்தையும் துறந்து ஊரை விட்டே வெளியேறுவதென்றால் அந்தத் தியாகம் சாமான்யமானதல்ல வென்பதை அறிந்துகொள்ள கண நேரம் கூடப் பிடிக்கவில்லை பல்லவ குலத்தின் அந்தப் பெருமகனுக்கு. கோதாவரியின் ஆற்றங்கரைக் குடிசையி லிருந்து மாறு வேடமணிவித்துத் தங்களைப் பாலூரின் பெரு வீதிகளில் பகிரங்கமாக அழைத்து வந்த அமீர் உண்மையில் இஷ்டப்பட்டால், கலிங்க அதிகாரிகள் கண் களில் மண்ணைத் தூவுவது பிரமாதமான காரியமல்ல வென்றும் இளைய்பல்லவன் எண்ணினான். சிறு வணிகர் வீதியில் வெளிப்பார்வைக்குச் சிறியதாகவும் உட்கட்டுகள் பெரிய அளவிலுமூள்ள வீட்டை அமைத்து, கலிங்கர் அறியாமல் வருடக் கணக்கில் பெருவாணிகம் செய்தும் சிறு வாணிகனாகவே வேஷம் போட்டு வரும் அமீருக்குத் தங்களைத் தப்புவித்த பின்பும் கலிங்க வீரரை ஏமாற்றுவது அப்படி அசாதாரணமான காரியமல்லவென்று நினைத் தான் இளையபல்லவன். அவன் செய்யும் தியாகமெல்லாம் அநபாயருக்காக என்பதில் தினையளவும் கருணாகர பல்லவனுக்குச் சந்தேகமில்லாததால் பெருவியப்பும் அடைந்தான் அவன். மனிதர்களைச் சந்தித்த மாத்திரத்தில் அவர்கள் மனங்களைக் காந்தம்போல் இழுக்கக்கூடிய பெரும் சக்தி அநபாயருக்கு எங்கிருந்து வந்தது” என்று சிந்தித்தான். மனிதர்கள் உடல், பொருள், அவியைத் துறப்பதற்குச் சமமான அன்பை வித்திடக்கூடிய திறன் வாய்ந்த அநபாயர், சோழர் அரியணையில் அமர்ந்தால் தமிழகத்தின் சிறப்பு எத்தனை ஓங்கும் என்பதை எண்ணிப் பார்த்து மேலும் மேலும் பிரமிப்பே அடைந்த கருணாகர பல்லவன், “காந்தம் என்னை இழுக்கிறது” என்று அமீர் சொன்னதைக் கேட்டதும் அந்தக் காந்தம் அநபாயனாகத் தானிருக்க வேண்டும் என்று திர்மானித்தான்.

ஆனால் அந்தத் தீர்மானத்துக்குக் குறுக்கே சந்தேக மொன்றும் புகுந்துகொண்டது. ‘காந்தம் என்று அமீர் கூறியது அநபாயனையென்றால், அவன் கண்களில் அத்தனை தூரம் புத்தொளியொன்று பிறப்பானேன்? அவன் அந்தச் சீனக் கடலோடியை நோக்குவானேன்? ஏதோ புரிந்ததற்கு அறிகுறியாக அந்தக் சனக் கடலோடி தலையை அசைப்பானேன்?” என்றெல்லாம் எண்ணிப் பார்த்த இளைய பல்லவன், தான் ஆராய்ந்துணர முடியாத வேறு ஏதோ பலத்த அபிலாஷையொன்று அமீரின் உள்ளத்தில் உலாவுகிறது என்று திட்டமான முடிவுக்கு வந்தான். ஆனால் அந்த அபிலாஷை எதுவாயிருக்கக் கூடும் என்பதைப்பற்றி மட்டும் அவனுக்கு விளக்கம் கிடைக்கவில்லையாகையால் அவன் நின்ற நிலையிலேயே அநபாயன்மீது கண்ணைத் திருப்பிக் கண்கள் மூலமே கேள்வியொன்றையும் வீசினான்.

அந்தச் சமயத்தில் அநபாயன் முகத்திலும் சிந்தனை பலமாகப் பரவிக் கடந்தது. கிட்டத்தட்ட கருணாகர பல்லவன் உள்ளத்தே எழுந்த கேள்விகளைப் போன்ற கேள்விகளே அவன் ஏிந்தனையிலும் எழுந்துலாவிக் கொண்டிருந்தன. ‘காந்தம் என்னை இழுக்கிறது என்று எதைக் குறிப்பிட்டான் அமீர்? அதைக் கேட்டதும் அகூதா ஏன் தலையசைத்தான்” என்பது அவனுக்கும் சந்தேகத்தை அளித்ததால், “இனி நீ சொல் கதையை, அமீர்” என்று அகூதா உத்தரவிட்டு அமீர் கதையைத் துவங்கத் தொண்டை யைக் கனைத்துக் கொண்டதும் அவனைக் கதையைத் துவங்கவிடாமல் தடுத்த அநபாயன், “உன்னை இழுக்கும் காந்தம் எது அமீர்?” என்று கேள்விக்கணை ஒன்றைத் தொடுத்தான் இடையே.

கதையைத் துவங்க முயன்ற அமீர், தனது நாவில் உதயமான சொற்களைச் சரேலெனத் தேக்கிக் கொண்டு புத்தொளியில் ஜொலித்த தன் கண்களை அந்த அறை யைச் சுற்றிலும் ஒருமுறை ஓடவிட்டு, அநபாயன் கேட்ட கேள்வி அங்கிருந்த ஒவ்வொருவர் முகத்திலிருந்தும் புறப் படுவதைக் கவனித்தான். அந்தப் பார்வைகளில் சந்தேகம் துளிர் விடுவதையும் அவன் புரிந்துகொண்டதன்றி அதன் காரணத்தையும் ஓரளவு ஊகித்துக் கொண்டானாதலால் அகூதாவிடம் திரும்பி, இதழ்களில் புன்முறுவலொன்றையும் கொட்டினான். அத்துடன், “நான் சொல்வதை இவர்கள் யாரும் நம்பவில்லை” என்றும் சீனக் கடலோடி யிடம் சுட்டிக் காட்டினான்.

அமீரின் சொற்களை ஆமோதிக்கும் வகையில் தலையை அசைத்த அகூதா, “இவர்கள் நம்புவது கஷ்டம். சந்தர்ப்பங்கள் அப்படியிருக்கன்றன. தவிர, இவர்கள் காந்தத்தின் சக்தியை அனுபவிக்காதவர்கள்” என்று பதிலும் சொன்னான். இந்தச் சில வார்த்தைகளை உதிர்த்த அகூதாவின் சொற்களில் அன்பு கனிந்து கடந்தது. அது அமீரிடம் ஏற்பட்ட அன்பா? அல்லது காந்தம் என்று சொல்கிறார்களே அதன் நினைப்பில் ஏற்பட்ட கனிவா? விடை சொல்ல முடியாத அளவுக்கு அந்தக் கொள்ளைக் காரன் குரலும் குழைந்து கடந்தது.

காந்தம் எதுவாயிருந்தாலும் அதை நினைத்த மாத்தி ரத்தில் அந்தக் கொள்ளைக்காரன் குரலில் குழைவையும் கண்களில் பேரொளியையும். வரவழைக்கக் கூடிய சக்தி அதற்கிருந்ததை அறிந்த அநபாயன் மிகவும் வியப்பெய் தினானாகையால், “எங்களுக்குக் காந்தத்தின் அனுபவ மில்லாதிருக்கலாம், அனுபவமிருப்பவர்கள் விளக்கலா மல்லவா?” என்று வினவினான்.

அந்த வினாவைக் கேட்டதும் சற்றே சங்கடப்பட்ட அமீர், “விளக்குவது அவசியமா?” என்று வினவினான்.

“மிகவும் அவசியம்” என்று திட்டமாகக் கூறினான் அநபாயன்.

“அநபாயரே! நான் சொன்னதில் நம்பிக்கையில்லையா உங்களுக்கு?” என்று மீண்டும் கேட்டான் அமீர்.

அநபாயன் விழிகள் அமீரின் மீது அன்பு வெள்ளத் தைச் சொரிந்தன. “எங்கள் நிலைமை உனக்கு விளங்க வில்லையா அமீர்? நாங்கள் அரசகுலத்தில் பிறந்தவர்கள். சில சம்பிரதாயங்களுக்கும் நல்லுணர்ச்சிக்கும் அடிமைப் பட்டவர்கள். உன்னை நாசம் செய்து ஆபத்திலிருந்து தப்பு வதை நல்ல ரத்தமுள்ள மன்னர்குலத் தோன்றல் எவன் தான் ஒப்புக்கொள்வான்? உன் வாணிபத்தை ஒழித்து உன்னை நாடு கடத்தி நாங்கள் தப்ப இஷ்டப்படவில்லை அமீர். நீ தியாகம் செய்யவில்லையென்று சொல்லுகிறாய். அது உண்மையல்ல. இதைவிடப் பெரும் தியாகத்தை ந்த உலகத்தில் யாரும் செய்ய முடியாது. என்னிடம் அன்பி னால் இந்தத் இயாகத்தை நீ செய்ய முன் வந்திருக்கிறாய். இதை நீ மறுத்தால் நானோ கருணாகரனோ, காஞ்சனா தேவியோ எப்படி. ஒப்புக்கொள்ள முடியும்? முடியாது, ஒருகாலும் முடியாது” என்ற அநபாயன் பேச்சிலும், அன்பு வெள்ளம் கரை புரண்டு ஒடியது.

“அமீரின் பெருவிழிகளில் நீர் மெல்லத் திரண்டது. பின்புறமாகத் தலையைத் திருப்பிப் பக்கத்தில் தொங்கிக் கொண்டிருந்த அங்கியின் பகுதியை எடுத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டான். பிறகு மீண்டும் திரும்பி அநபாயனை நோக்கிக் கேட்டான், “நீங்கள் இந்த பாலூர் வராதிருந்து நான் என் குருநாதரை மட்டும் சந்தித் தருந்தால் என்ன நடந்திருக்குமென்று நினைக்கிறீர்கள்?” என்று.

“என்ன நடந்திருக்கும்?” என்று அநபாயனும் பதிலுக்குக் கேட்டான்.

“நான் சொன்னால் நம்பமாட்டீர்கள். என் குருநாத ரைக் கேளுங்கள்” என்றான் அமீர்.

அகூதாவின்மீது தன் விழிகளைத் திருப்பினான் அநபாயன். அகூதாவின் சிறுவிழிகளில் ஆரம்பத்திலிருந்த புத்தொளியே பரவிக் கிடந்தது. அநபாயன் விழிகளில் தொனித்த கேள்விக்குப் பதில் சொல்லிய அவன் குரலிலும் பெருத்த உறுதியிருந்தது. “அப்பொழுதும் இந்த வாணிகம் விற்கப்பட்டிருக்கும்” என்று திட்டமாகக் கூறினான் அகூதா.

“ஏன்?” என்று குறுக்கட்டான் இளையபல்லவன்.

“காந்தம் இழுத்திருக்கும்” இன்னும் அதிகத் திட்டமாக வந்தது அகூதாவின் பதில்.

“என்ன காந்தம் அது?” என்று மறுபடியும் கேட்டான் இளையபல்லவன்.

அகூதாவின் சொற்கள் நிதானமும் உவகையும் கலந்து ஒலித்தன. “கடலெனும் காந்தம்” என்ற அகூதா மிகுந்த பெருமையுடன் அமீரைப் பார்க்கவும் செய்தான்.

“கடலெனும் காந்தமா!” இளையபல்லவன், அநபாயன் இருவருமே ஏககாலத்தில் வியப்புடன் கேள்வியை வீசினார்கள்.

அந்தக் கேள்விகள் ஏககாலத்தில் எழுந்ததையோ, அவற்றில் விவரிக்க இயலாத வியப்பு தொக்கியிருந்த ‘ தையோ, சிறிதும் கவனிக்காமல் சொற்களை மட்டும் காதில் வாங்கிக் கொண்ட அந்தச் சீனக் கடலோடி, தன் சிறு விழிகளை அவர்கள்மீது சில விநாடிகள் நிலைக்க விட்டான். பிறகு அறையில் இரண்டு விநாடிகள் அப்படி யும் இப்படியும் உலாவினான். கடைசியாக நின்ற தோரணையிலேயே தனக்கருகேயிருந்த மஞ்சத்தின் முகப்பில் கைகளைச் சுற்றி அணைத்து முதுகை லேசாகக் கூனி மற்றவர்களை நோக்கினான். அவன் கண்களில் பெரும் கனவு படர்ந்தது. கனவைத் தொடர்ந்து உதிர்ந்த வார்த்தைகளிலும் கனவில் பேசும் மனிதன் நிலைமையே நிலவிக் கடந்தது. “ஆம், கடலெனும் காந்தம்தான். சிலர் உள்ளங்களைப் பொன் கவர்கிறது. மற்றும் சிலர் உள்ளங் களை மண் கவர்கிறது. வேறு சிலர் உள்ளங்களைப் பெண் களின் விழிகள் கவர்கின்றன. இவை அனைத்துக்கும் மேலாக ஒரு காந்தம் இருக்கிறது. அதுதான் இந்த மாநிலத் தைச் சூழ்ந்திருக்கும் பெரும் கடல், மாலுமிகளின் மனத்தை அது கவர்வதுபோல் வேறு எதுவும் கவர்வது கஇடையாது. நிலையுடனிருக்கும் மண்ணில் வாழ்பவன் மண்மீது வைக்கும் ஆசையைவிட, நிலையற்றுச் சதா சலனப்படும் கடலின்மீது ஆசை வைக்கிறான் மாலுமி. அதன்மீது அடும் மரக்கலம் மாலுமிக்கு உயிர். நான் சொல்வது உங்களுக்குப் புரியாது. எந்த மனிதனாவது மாலுமியாக வாழ்க்கையைச் சில வருஷங்கள் நடத்திவிட்டால் அவனை மீண்டும் கடலெனும் காந்தம் இழுத்தே செல்லும். மாலுமிகளின் சரித்திரத்தைக் கவனியுங்கள் னஏ அநபாயரே! உங்கள் நாட்டின் மேல்புறத்துக்கும் எகிப்துக்கும் கடல் வழிகளை முதலில் கண்டுபிடித்த யவன ஹிப்பலாஸ் ஆயுள் முழு வதையும் மரக்கலத்தில் ஏன் கழித்தான்? அவனுக்கு யவன நாட்டில் பெண்டில்லையா, பிள்ளையில்லையா, நில மில்லையா? இருந்தது அநபாயரே! இருந்தது. அவன் பெருங்குடிமகன். ஆனால் மீண்டும் மீண்டும் கடலின் கவர்ச்சி அவனைக் கட்டி இழுத்தது. தன் மரக்கலத்தில் எரித்திரியக் கடலில் ஓடினான். அலைகளையும் புயல் களையும் எதிர்த்தான். சாகரத்தின் அபத்துகளே ஓர் இன்பமாயிற்று அவனுக்கு. பாரதத்துக்கும் எடப்துக்கும் மூன்று கடல் வழிகளை வகுத்தான். மரக்கலமே அவன் வீடாயிற்று. கடல் அலையே அவன் வாழும் நிலமாயிற்று. இந்தக் கீழ்த் தஇசையைத்தான் எடுத்துக் கொள்ளுங்கள். யவனனான அலெக்ஸாண்டர் பாரதத்தின் கீழ்த் துறை முகங்களுக்கும், சொர்ண பூமிக்கும் சாவகத்தின் தீவுக்கும் மூன்று வழிகளை வகுத்தான். இந்தக் கடல் பிராந்தியத்தின் அபாயங்கள் உங்களுக்குத் தெரியாது. இன்றும் புகாரி லிருந்தும், குருலாவிலிருந்தும் நாகையிலிருந்தும் மரக் கலங்கள் பாலூர் வந்தே கீழ்திசை செல்கின்றன. ஏன்? நேர்குழக்கு வழியில் கடல் சுழல்களும், பேரலைகளும் கடும் புயல்களும் உண்டு. அந்த வழியிலும் மாலுமிகள் சிலர் செல்கிறார்கள். மாலுமி வாழ்க்கையை ஒருமுறை நடத்தியவனுக்குக் கடலின் ஆபத்துகளே பேரின்பம். நீங்கள் சொர்ண பூமியின் ஜலசந்தியின் பெரும் அலை களையும் ஆங்கு எழும் பெரும் உப்பங்காற்றையும் அனுப விக்க வேண்டும். அப்பொழுது தெரியும்.

அகூதாவை இடைமறித்த அமீர், “சொர்ண பூமியின் துறைமுகங்கள் எத்தனை அழகு வாய்ந்தவை குருநாதரே! அங்கெல்லாம் எத்தனை சாந்தமானது கடல், ஆனால் பிறகு சீனக்கடலுக்குப் போய்விட்டாலோ கடலரசனுக்குத் தான் எத்தனைச் ற்றம்! மரக்கலத்தின் பக்கப் பலகையில் நின்றால் வாரியடிக்கும் அலை நீர்த்துளிகள் எத்தனை இன்பம், எத்தனை இன்பம்!” என்று கூவினான். அகூதா வின் கண்களைப் போலவே அவன் கண்களிலும் சனல் விரிந்து கிடந்தது. அந்தச் சமயத்தில் அந்த இருபெரும் மாலுமிகளும் அந்த அறையையும், ஏன் தங்கள் அனை வரையுமே மறந்துவிட்டதையும், இருவரும் சீனக் கடலில் சஞ்சரிக்க ஆரம்பித்துவிட்டதையும், சந்தேகமற உணர்ந்து கொண்ட அநபாயன், மனித உணர்ச்சிகளை அத்தனை தூரம் கவரக்கூடிய கடலைப் பற்றிச் சற்றுப் பொறாமையும் கொண்டான். அதுவரை அமீரைத் திறமையுள்ள மாலுமி என்று மட்டுமே நம்பியிருந்தான் அநபாயன். அவன் கடலிடம் காதல் வெறி கொண்ட உலகத்தின் மிகச் சிறந்த கடலோடிகளில் ஒருவனென்பதையும் அன்றே புரிந்து கொண்டதால் சொல்லவொண்ணா ஆச்சரியத்துக்கும் உள்ளானான்..

அகூதாவின் பேச்சைக் கேட்கக் கேட்கக் கடலில் மரக் கலத்தில் ஓடுவது. போன்ற உணர்ச்சிகளைப் பெற்றதால் இருப்பிடத்தை அறவே மறந்த அமீர் சில விநாடிகள் பேசாமலிருந்தான்.

பிறகு கடலைவிட்டு நிலத்தில் காலடி எடுத்து வைத்து, “உண்மை இதுதான் அநபாயரே! உங்களுக்கு மண்ணாசை யிருப்பதுபோல் எனக்குக் கட்லாசை. இந்த ஊரில் வாணிபம் நடத்திய நாள்களில் எத்தனை நாள் கடலோரத் தில் உட்கார்ந்திருப்பேன்! எத்தனை நாள் கடலின் பரந்த நீரையும் அதற்கப்பால் உள்ள நிலங்களையும் நோக்கி யிருப்பேன்! எத்தனை நாள் கடல் வாழ்க்கையை நினைத் துப் பெருமூச்செறிந்திருப்பேன் என்பது உங்களுக்குத் தெரியாது. உங்களைத் தப்புவிக்க நீங்கள் வழி கேட்டதும் சற்றுத் தணறினேன். ஆனால் குருநாதரைக் கண்டேன். தட்டம் விநாடி நேரத்தில் உருவாயிற்று. உங்களை, ஏன், என்னையும் வெகு சுலபமாக இந்த ஊரிலிருந்து வெளி யேற்றிவிட முடியும். சற்று இப்படி வாருங்கள்” என்று கூறிய அமீர் ‘மற்றவர்களைத் தன்னைத் தொடரும்படி சைகை செய்துவிட்டு அறையை விட்டு வெளியே நடந்தான். மற்றவர்களும் அவனைத் தொடர்ந்து சென்றார்கள். அந்த வீட்டின் மற்றொரு கட்டையும் தாண்டிக் கடைசிக் கட்டுக்கு வந்த அமீர் அந்தக் கட்டின் இறுதியிலிருந்த வாயிற்படியைச் சுட்டிக் காட்டினான். பிறகு பக்கத்தி லிருந்த ஒரு பெரும் அறையைச் சரேலெனத் திறந்தான். “இதோ நம் விடுதலைக்கு வழி. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு” என நான்கு பெரும் பிசாசுகளைக் கையால் சுட்டி எண்ணியும் காட்டினான்.

அதற்குமேல் யாருக்கும் விளக்கம் தேவையில்லா திருந்தது. தட்டமும் கதையும் தெளிவாகப் புரிந்தது மற்றவர்களுக்கு. திட்டம் புரிந்தது, அது விடுதலைக்கு நிச்சயம் வழியென்றும் புரிந்தது. ஆனால் அந்த வழியை ஒப்புக்கொள்வதா என்ற நினைப்பால் பெரும் சீற்றமே ஏற்பட்டது மற்றவர்களுக்கு. சீறும் வழிகள் பல திரும்பின அரபு நாட்டு அமீரின்மீது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 24

நீர்க்குடங்கள் நான்கு

சிந வணிகர் வீதியிலிருந்த தன் வீட்டுக் கடைக் கட்டின் பெரும் அறையொன்றைச் சரேலெனத் திறந்து ‘விடுதலைக்கு இதோ வழி’யென. அமீர் சுட்டிக்காட்டிய நான்கு பெரும் பிசாசுகளைக் கண்டதும் திட்டமும் வழியும் தெள்ளெனப் புரிந்துவிட்டதன் விளைவாக அநபாய னுக்கும் அவனைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் சந்துஷ் டிக்குப் பதிலாகச் சீற்றமே பெரிதும் ஏற்பட்டதால் கனல் கக்கும் விழிகள் பல அமீரின்மீது இரும்பினவென்றாலும், அமீர் மட்டும். அந்த விழிகளை ஏறெடுத்துப் பார்க்காம லும், தன் விழிகளை எதிரே அறையின் பெரும் பாகத்தை அடைத்து நின்ற அந்த நான்கு பிசாசுகளின் மீதே நாட்டிக் கொண்டும் நீண்ட நேரம் நின்றான். அந்தப் பிசாசுகளைப் பார்க்கப் பார்க்க அவன் ஓரளவு இருந்த இடத்தையும் சூழ் நிலையையுங்கூட மறந்துவிடவே அவன் விழிகளில் பெரிய அன்பும் ஆர்வமும் துளிர்விட்டதன்றி அந்தப் பிசாசு களைப் பற்றி அவன் விளக்க முற்பட்டபோது, குரலிலும் அந்த அன்பும் ஆர்வமும் தொனிக்கவே செய்தன.

“அநபாயரே! இளையபல்லவரே! பிசாசுகளைப் போல் பயங்கர உருவங்கள் தீட்டப்பட்ட காரணத்தா லேயே பிசாசுகளே எதிரே நிற்பது’ போன்ற பிரமையும் அச்சத்தையும் அளிக்கும் இந்த நான்கும் மண்ணால் செய்யப்பட்ட குடங்கள்தான். ஆனால் பாலூரிலுள்ள அத்தனைப் பொன்னையும் கொட்டிக் கொடுத்தாலும் இந்தக் குடங்கள் அகப்படுவுது கஷ்டம். தலையை வெளியே நீட்டும் கொட்டை எடுத்தெறியப்பட்ட முந்திரிப்பழம் ந்த் போல் அடியில் சற்றுக் குறுகலாகவும் இடையே பெரிதாக புடைத்தும் கழுத்தில் வளைவுக்காகச் இறிது குறுகிய போதிலும் பெரும் வாய்களுடன் உங்கள். முன்பு தோற்ற மளிக்கும் இந்த நீர்க்குடங்கள் நான்கும், உலகத்தின் ஒரே இடத்தில்தான் கஇடைக்கன்றன. அந்த இடம்தான் சனா. பார்ப்பதற்கு உலோகத்தால் செய்யப்பட்டவை போல் தெரியும் இந்தப் பெருங்குடங்கள் உண்மையில் மண் குடங்கள். சீனத்தின் உயர்ந்த மண்ணிலே செய்யப்பட்ட தால் சாதாரணமாக உடையாதவையும் மிகவும் கடின மானவையும், முந்திரிப் பழம் போலவே செவ்விய வர்ணம் பூசப்பட்டதாலும் பிசாசுகள் போன்ற பல உருவங்கள் அந்தச் சிவப்பு வர்ணத்தின்மீது வெள்ளைக் கோடுகளாக இழுக்கப்பட்டிருப்பதாலும் பார்ப்பதற்கு மிக பயங்கரத் தோற்றத்தை அளிக்கக் கூடியவையுமான இந்த மண் குடங் களில்தான் சீனர்கள் தங்கள் கப்பல்களில். பயணத்துக்கு நீர் சேகரித்து வைக்கிறார்கள். இந்த நீர்க்குடங்களின் விலை அதிகமாகையால் இவற்றைச் சாதாரண மரக்கலச் சொந்தக்காரர்கள் வாங்குவதில்லை. பெரும் வணிகரும் தனிகரான மாலுமிகளுமே வாங்க முடியும். மரக்கலங் களில் நீர் எடுத்துச் செல்ல இந்த மண் குடங்களைவிடச் சிறந்த பாண்டங்கள் உலகத்தில் வேறெந்த நாட்டிலும் இடையாது. அரபு நாட்டு மரக்கலங்களில் மரக்குடங்களில் நீர் சேகரித்து வைக்கப்படுகிறது. தமிழகத்தின் மரக்கலங் களில் யவனர் மரக்கலங்களைப் போல் உலோகங்களால் செய்யப்பட்ட தவலைகளில் குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆனால் அவையனைத்தும் இரண்டாம் பகூம். ஏன் தெரியுமா?” என்று கனவில் பேசுபவன் போல் பேசிய அமீர் கனவில் கேள்வி கேட்பவன் போலவே கேட்டான்.

அவன் மனம் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக் கவே யாரிடமிருந்தும் பதில் வராது போனாலும் பதில் வந்ததாகப் பாவித்துக் கொண்டு அந்தப் பதிலுக்குப் பதில் சொல்லும் முறையில் மேற்கொண்டு விவரிக்கவும் தொடங்க, “சொல்கிறேன் கேளுங்கள். யவனர் மரக்கலங் களிலும் தமிழகத்தின் மரக்கலங்களிலுமூள்ள குடங்கள் செம்பு அல்லது பித்தளையினால் செய்யப்பட்டவை. உலோகத்தில் வைக்கப்படும் நீர் காலக்கிரமத்தில் பாதிக்கப் படுகிறது. உலோகத்தின் அடியில் பலப்பல விதமான வண்டல்கள் சீக்கிரம் தேங்குகன்றன. ஆகவே அந்த மரக் கலங்கள் இரண்டு மாதங்களுக்கொருமுறை ஏதர்வது ஒரு துறைமுகத்துக்கு நீர் சேகரிப்பதற்கே செல்ல அவசியம் ஏற்படுகிறது. அரபு நாட்டு மரக்கலங்களில் நீர்க்குடங்கள் மர்த்தால் செய்யப்பட்டவையாகையால் உலோகத் தவலை களைவிட அவை சிறந்தவை. ஆனால் மரத்தில் நீரின் சம்பந்தத்தால் சீக்கிரம் பாசி பிடிக்கிறது. அதிக நாள் பாசியிருந்தால் குடிநீரில் ஒருவித வேகம் வருகிறது. ஆகவே மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது அரபு நாட்டுக் கப்பல்கள் ஏதாவது ஒரு துறைமுகத்தில் குடிநீர் சேகரிக்கத் தங்கும். ஆனால் இந்த மண் குடங்களை உடைய சீன மரக் கலங்களுக்கு அத்தகைய கஷ்டங்கள் ஏதுமில்லை. இவற்றில் சேகரிக்கப்படும் குடிநீர் ஒரு வருஷமானாலும் கெடாமலிருக்கும். குடிநீருக்காக எந்தச் சீனக் கப்பலும் துறைமுகங் களை நாடுவதில்லை. ஒரே சமயத்தில் குறைந்த பட்சம் அறு மாதங்களுக்கு வேண்டிய குடிநீரைச் சீனக் கப்பல் களில் பார்க்கலாம். நானும் என் குருநாதரும் சனஅரசினர் கப்பல்களுடன் போர் செய்த காலங்களில் நீர் சேகரிப்ப தற்கு எந்தத் துறைமுகத்தையும் நாடியது கிடையாது. தென் சீனாவில் எங்கள் துறைமுகத்தில் இந்தக் குடங்களில் பிடிக்கும் நீரே தேவைக்குப் போதுமானது! இப்பொழுது கூட குருநாதரின் மரக்கலம் ஒவ்வொன்றிலும் இம்மாதிரி குடங்கள் ஐம்பதுக்கு மேல் இருக்கும். ஆகையால்தான் எனக்குத் துணிவு ஏற்பட்டது. குருநாதரைக் கேட்டேன், மகழ்ச்சியடைந்தேன்” என்ற அவன் சொற்களில் உவகை பெரிதும் துள்ளி நின்றது.

அவன் வார்த்தைகளில் தொனித்த ஆனந்தம், சிவந்த வர்ணத்தின்மீது வெள்ளைக் கோடுகளில் பல்லை இளித்த பயங்கர உருவங்கள் தட்டப்பட்டிரந்ததால் பிசாசுகளைப் போலவே காட்சியளித்த அந்த நீர்க்குடங்களைப் பற்றிய விவரங்களைச் சொன்னபோது அவன் குரலில் எழுந்த உணர்ச்சி, வேகம் இவ்விரண்டையும் அநபாயன் கவனணிக் கவே செய்தானென்றாலும் அமீர் சொல்வதைச் சொல்லி முடிக்கட்டுமென்று பொறுமையோடிருந்தான். அதிகப் பொறுமையில்லாத கருணாகர பல்லவன் மட்டும், அமீரின் கனவில் குறுக்கிட்டு, “அமீர்! உங்களுக்குக் குரு நாதரைக் கண்டதும் ஆனந்தம், நீர்க்குடங்களை நினைத்த தும் அனந்தம். இன்னும் எதெதில் ஆனந்தம் இருக்கிறது?” என்று கோபத்தால் கடுமை பெரிதும் கலந்து நின்ற சொற்களை உதிர்த்தான்.

நீர்க்குடங்களின்மீது நாட்டிய கண்களை நாட்டியபடி இளைய பல்லவனைத் திரும்பிப் பாராமலே, “எனது உயிர்த் தோழர், தமிழகத்தின் பிற்காலப் பேரரசர் அநபாய ரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் தப்ப வைப்பதி லிருக்கிறது. மூன்றுக்கும் பெரும் சம்பந்தம் இருக்கிறது” என்றான் அமீர்.

அவன் சொன்னதன் பொருள் திட்டவட்டமாக விளங்கவில்லையாதலால், அதற்கு விளக்கம் கேட்க இடையே பாய்ந்தது ஒரு குரல், “எந்த மூன்றுக்கும் சம்பந்தம்?” என்று இயற்கையாகக் கடுமையில்லாத குரலில் சற்றே கடுமையை வரவழைத்துக் கொண்டு காஞ்சனா தேவி கேள்வியொன்றைத் தொடுத்தாள்.

அமீர் மெள்ளத் தலையைத் திருப்பி, காஞ்சனா தேவியின் கண்களோடு தன் கண்களை ஒரு விநாடி சந்திக்கவிட்டான். பிறகு சொன்னான், “குருநாதரைச் சந்தித்தது, சீனநாட்டு நீர்க்குடங்கள் என்னிடமிருந்தது, அநபாயர் இந்த ஏழையின் உதவியை நாடியது, இந்த மூன்றிலும் எனக்கு ஆனந்தம். மூன்றுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கறது.

“என்ன’ தொடர்பு?” என்று மீண்டும் கேட்டாள் காஞ்சனாதேவி.

அமீர், காஞ்சனாதேவியையும் பார்த்து நீர்க்குடங் களையும் பார்த்தான். பார்த்தது மட்டுமின்றி அந்தக் குடங் களை நோக்கிக் கையை நீட்டி, “இளவரசி! இந்தக் குடங் களை நான் ஏன் வாங்கினேன் தெரியுமா?” என்றொரு கேள்வியையும் கேட்டான்.

“எனக்கெப்படித் தெரியும்?” என்றாள் காஞ்சனாதேவி அவன் கேள்வியில் அதிகச் சிரத்தை காட்டாமலே.

ஆனால் நீர்க் குடங்களை மீண்டும் நோக்கிய அமீரின் கண்களிலோ சிரத்தையும், கனிவும் மிதமிஞ்சிப் பரந்து நின்றன. “இந்த நீர்க்குடங்களை நான் வாங்கியபோது இவை உங்களைத் தப்ப வைக்கும் என நான் கனவுகூடக் காணவில்லை. இந்த நில வாழ்க்கையில் சலித்ததால் நீர் வாழ்க்கையை மேற்கொள்ள இவற்றை வாங்கினேன். கடலெனும் காந்தம் என்னை இழுத்ததால் என் வாணி பத்தை ஏறக்கட்டிவிட்டு ஒரு மரக்கலம் வாங்கத் திரை கடலோடத் திட்டமிட்டேன். அந்தத் திட்டத்தின் முதல் படியாக இவற்றை வாங்கினேன். குருநாதரிடம் மரக்கலப் பயிற்சியை அடைந்த பிறகு வாணிபம் செய்வதாயிருந்தால் தரை வாணிபம் வேண்டாம். அலைகடலில் ஓடி மரக் கலத்தின் மூலம் வாணிபம் புரிவோம் என்ற அசை ஏற்பட்டது. அந்த அசையைப் பூர்த்தி செய்துகொள்ள பாலூர் வந்தேன். வாணிபத்தைப் பெருக்கினேன். சென்ற வருடமே வாணிபத்தை ஏறக்கட்டி. மரக்கலம் வாங்கி நீரின் மேல் நடந்திருப்பேன். ஆனால் கடலைப்போலவே மற்றொரு காந்தம் என்னைப் பற்றிக் கொண்டது. இந்தப் பாலூரிலே...“என்று சொல்லிக்கொண்டே போன அமீர் சற்று நின்று அநபாயரைத் திரும்பி நோக்கினான். “அது இந்தக் காந்தம்தான். இவர் நட்பில் சிக்குண்டேன். பாலூரில் தமிழருக்குத் தொண்டு புரியத் தீரமும் சாகசமும் நிறைந்த செயல்களில் ‘இவர் ஈடுபட்டதைக் கண்டு முதலில் வியப்பின் வசப்பட்டேன். பிறகு இவர் அடிமையாகவே ஆகிவிட்டேன். இவர் மூலம்தான் இப்பொழுது இந்த அடிமைத்தளையும் போகிறது. ஆனால் அந்த அடிமைத் தளை எத்தனை இன்பமானது!” என்று சொல்லிப் பெரு மூச்சும் விட்ட அமீர் திடீரெனத் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு, “அந்த நட்பு அவர் விடுதலைக்கு மட்டுமல்ல, அவர் நண்பர்கள் விடுதலைக்கும் மார்க்கம் கேட்டது. சமயத்தில் குருநாதரும் வந்தார். என்னிடமும் சந்தர்ப்ப வசத்தால் நீர்க்குடங்கள் இருந்தன. விதி எப்படித்தான் காரியங்களை நடத்திக் கொள்கிறது பாருங்கள்! குருநாதர் இல்லையேல் இந்த நீர்க்குடங்களால் எந்தப் பயனும் இல்லை. ஏனென்றால் இத்தகைய நீர்க்குடங்கள் €னக் கப்பல்களுக்காக ஏற்பட்டவை. வேறு கப்பல்களில் இவற்றை ஏற்றச் சொன்னால் நமது திட்டம் ஆம்பலமாகி விடும். ஆகவே குருநாதரைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்தேன். அவர் மரக்கலத்துக்கு நீர் சேகரிக்கும் பாவனையில் அவர் மரக்கலத்தின் ஐந்தாறு குடங்களை ஊருக்குள் கொண்டு வருவது, போகும்போது. குடங்களை மாற்றி விடுவது, அல்லது கூடச் சேர்த்துவிடுவது, சில குடங்களில் நீர், சில குடங்களில் மனிதர்! யார் கண்டுபிடிக்க முடியும்? குருநாதர் வந்ததால் குடங்களுக்குப் பயன் பிறந்தது. குடங்களுக்குப் பயன் பிறந்ததால் அநபாயருக்கு நான் உதவ முடிந்தது. மூன்றுக்கும் சம்பந்தம் கேட்டீர்களே, புரிகிறதா தேவி?” என்று கேட்கவும் செய்தான்.

காஞ்சனாதேவிக்கு மட்டுமென்ன மற்றவர்களுக்கும் தட்டம் தெளிவாகத்தான் புரிந்திருந்தது. எதிரே பயங்கர மாக உயரமாக நின்ற நீர்க்குடங்களைக் கவனித்த அநபாயன், “இந்த நீர்க்குடம் ஒவ்வொன்றிலும் மனிதர் எழுந்து நின்றாலும் தலை வெளியே தெரியாது. விந்தை யான திட்டம்!” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். “அமீர் சொல்லுவதுபோல் இந்த நீர்க்குடங்களில் ஒளிந்து சென்றாலும் இவற்றைப் பாலூர் சுங்க அதிகாரி கள் சோதிக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்ளவும் செய்தான் சிறிது சந்தேகத்துடன்.

அநபாயன் மனத்திலோடிய எண்ணங்களை அமீர் புரிந்துகொண்டிருக்க வேண்டும். ஆகவே அவன் சொன் னான் “இந்த நீர்க்குடங்களையும் சுங்க அதிகாரிகள் சோதிக்கலாமென்று நினைக்கிறீர்கள். ஆனால் நீர்க் குடங்கள் சுங்கச் சாவடிக்குச் செல்லவேண்டிய அவசிய மில்லை.

“ஆம் அவசியமில்லை” என்று அதுவரை மெளனமா யிருந்த சுங்க அதிகாரி கண்டியத்தேவனும் சொன்னான். “உண்மையாகவா?” என்று இடையே புகுந்து கேட்டான் இளையபல்லவன்.

“ஆம் இளைய பல்லவரே! மரக்கலங்களுக்குச் செல்லும் நீர்க்குடங்களைச் சாதாரணமாகச் சோதிப்பதில்லை. குடி நீருக்குத் தர்வை போடும் அளவுக்குக் கலிங்கம் இன்னும் உயரவில்லை” என்றான் கண்டியத்தேவன்.

“இருக்கலாம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் அவர்கள் நீர்க்குடங்களையும் சோதிக்க மாட்டார்க ளென்று எப்படிச் சொல்ல முடியும்?” என்று மீண்டும் வினவினான் இளையபல்லவன்.

“சொல்ல முடியாது” என்று ஒப்புக்கொண்ட கண்டியத்தேவன், “நில மார்க்கங்களை அடைந்துவிட்ட பீமனும் அனந்தவர்மனும் உங்களை நீர் வழியிலும் தப்ப விடமாட்டார்கள். இத்தனை பெரிய நீர்க்குடங்கள் வண்டியில் போய் நீர்க் கரையில் படகுகளில் ஏற்றப்படு முன்பு சோதிக்கப்படலாம். அப்படிச் சோதிக்கப்பட்டால் தடை. அதில் ஆபத்து இருக்கத்தான் செய்யும்” என்று வலியுறுத்தினான்.

“ஆபத்து இரு வகையானது” என்று சுட்டிக் காட்டினான் இளையபல்லவன்.

நீர்க்குடங்கள்மீது கண்களை நிலைக்க விட்டு மற்ற வர்களுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நின்ற அமீர் சரேலெனத் திரும்பி, இளையபல்லவனை, “ஆபத்து இரு வகைப்பட்டதா?” என்று ஆச்சரியத்துடன் வினவினான்.

“ஆம் அமீர். இருவகைப்பட்டது” என்று உறுதியுடன் கூறிய இளையபல்லவன் குரலில் வெறுப்பும் மண்டிக் கிடந்தது.

“எனக்குப் புரியவில்லை இளைய பல்லவரே” என்றான் அமீர், “புரியச் சொல்லுகிறேன், கேளுங்கள் அரபுநாட்டு வணிகரே. உமது திட்டத்தில் உயிரைப் பற்றிய ஆபத்து ஒன்று. ஆனால் அதைவிட நாங்கள் பெரிதாக மதிக்கும் மானத்தைப் பற்றிய ஆபத்து ஒன்று, ஆக இரண்டு ஆபத்துகள் இருக்கின்றன. உயிரைப்பற்றி நாங்கள் கவலைப் படவில்லை. ஆனால் மானம், அதன் கதை வேறு” என்று உஷ்ணத்துடன் கூறிய இளையபல்லவன், “நீர்க்குடங் களில் நாங்கள் பதுங்கிச் சென்று சுங்க அதிகாரிகளிடம் அகப்பட்டுக் கொண்டால் பீமன் கையில் உயிர் போகும். ஆனால் மக்கள் கண்ணெதிரில் மானம் போய்விடும். உயிருக்காகக் குடங்களில் பதுங்கிய வீரர்கள் எனக் கலிங்கத்தின் “நாவலர் கவிதைகளைப் பொழிவார்கள். சரித்திரத்தில் நாங்கள் பெரும் இடம்...” என்று கூறி, பேச்சை முடிக்காமலே விட்டான். உள்ளெழுந்த கோபம் அவன் நாவைக் கூடக் கட்டியிருந்தது. அவன் குரலிலிருந்த சீற்றம் காஞ்சனாதேவியின் கண்களிலும் தெரிந்தது.

ஆனால் அந்தச். சற்றத்தைச் சிறிதும் லட்சியம் செய்யாத அமீர் சொன்னான் “தவறு, இளைய பல்லவரே, தவறு. தந்திரத்தால் தப்புவதை வீரத்தில் கண்ணியக் குறைவென்று சரித்திரத்தில் யாரும் கூறியதில்லை. எங்கள் நாட்டிலிருந்த பேரரசனான ‘கான்’ மாளிகைக்குள் புரட்சி வீரர்கள் குடங்களில். பதுங்கிச் சென்று அரசனை வெற்றி கண்டதாகப் பழங்கதை இருக்கிறது. இந்த வீரர்களைப் பேடிகளென்று சரித்திரம் கூறவில்லை. பதுங்கித் தப்பிச் சென்ற வீரர் கதைகள், மாறுவேடம் பூண்டு மாவீரர் தப்பிய கதைகள் சரித்திரத்தில் பல உண்டு. அரக்கு மாளிகையிலிருந்து சுரங்க வழியில் தப்பி வேதியர் வேடம் தாங்கி மறைந்துறைந்ததாக மாவீரர் ஐவரைப் பற்றி உங்கள் மகாபாரதமும் கூறுகிறது. அவர்களைக் கோழைகளாகப் புராணமோ சரித்திரமோ கூறவில்லை. பதுங்குவதும் மறை வதும் தவறல்ல. புலி பதுங்குவது பாய்வதற்காக. பதுங்கும் புலியைக் கோழையென்று யாரும் சொல்வதில்லை” என்றான் அமீர் திட்டமாக.

“அப்படிப் பதுங்கித் தப்ப நான் இஷ்டப்படவில்லை” என்றான் இளையபல்லவன்.

“எனக்கும் இஷ்டமில்லை” என்றாள் காஞ்சனாதேவி.

அமீரின் பெருத்த உதடுகளில் புன்முறுவல் தவழ்ந்தது. “இந்தத் திட்டத்தில் ஆபத்தில்லை.. வீரமில்லையென்று நினைக்கிறீர்கள். ஆனால் பேராபத்து இருக்கிறது. அதைச் சொன்னால் புரியும் உங்களுக்கு. கேளுங்கள்.” என்று ஆபத்தையும் விளக்கினான் அமீர். அவன் விளக்கத்தைக் கேட்டதும், ஆபத்து பலத்த அபத்துதான் என்பதை இளையபல்லவன் புரிந்துகொண்டான். அந்த ஆபத்தில் தங்களுக்கு உயிர் போகவும் கூடும் என்பதும் அவனுக்குப் புரிந்திருந்தது. வாளுக்கு நிரம்ப வேலை இருக்கத்தான் செய்தது அமீர் திட்டத்தில். ஆனால் திட்டம் சிறிது தவறினால்? காத்திருந்தது பெரும் படுகுழி!
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 25

வீரர்கள் திட்டம்

சீனத்து மரக்கல நீர்க்குடங்களில் அநபாயன், இளையபல்லவன், காஞ்சனாதேவி, குணவர்மன் ஆகிய நால்வரையும் பதுங்க வைத்துத் துறைமுகம் கொண்டு சேர்த்து, அங்கிருந்து மரக்கலம் மூலம் சோழநாடு அனுப்பி விட அமீர் இட்ட திட்டம் வீரர் ஏற்க முடியாத பெரும் கோழைத் திட்டமாக ஆரம்பத்தில் இளைய பல்லவனுக் குத் தோன்றியதென்றாலும், அந்தத் திட்டத்தையும், சூழ்ந்து நின்ற ஆபத்தையும அமீர் விளக்கியதும் அது அத்தனை தூரம் கோழைத் திட்டமல்ல என்பதையும் தனது வீரமும் வாளின் லாகவமும் அதில் பெரிதும் சோதிக்கப்படும் என்பதையும் இளையபல்லவன் இறுதியில் புரிந்து கொள்ளவே செய்தான். அப்படிப் புரிந்நுகொண்டதால் அந்தத் திட்டத்தின் மூலம் தனக்கு ஏற்படக்கூடிய ஆபத்தைப் பற்றி அவன் சிறிதும் பொருட்படுத்தவில்லை ‘யென்றாலும், அந்தத் திட்டத்தின் விளைவாகக் காஞ்சனா தேவிக்கு ஏற்படக்கூடிய கொடிய ஆபத்தைப் பற்றி உள்ளுக்குள் லேசாக நடுங்கவும் செய்தான் சோழர்களின் படைத்தலைவன். இத்தனை ஆபத்து சூழ்ந்திருந்த அந்தத் தட்டத்தைத் தீவிர சிந்தனைக்குப் பின்பே அமீர் வகுத் திருக்கிறானென்பதும் அதைவிடச் சிறந்த ஒரு திட்டத்தைப் பாலூரின் அந்தச் சூழ்நிலையில் வேறு யாரும் வகுக்க முடியாதென்பதும் புலனாயிற்று அந்த வாலிப வீரனுக்கு.

அமீர் தட்டத்தை நிறைவேற்ற வேண்டிய முறைகளை விளக்க முற்பட்டது முதலே அதில் கலந்து கிடந்த பல அபத்துகளையும். புரிந்நகொண்ட இளையபல்லவன், அமீரின் சொற்களைக் குருவிடம் பாடம் கேட்கும் சடன் போல் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் கேட்டான்.

“இந்தத் இட்டத்தில் ஆபத்தில்லை. இது கோழையின் திட்டம் என்று நினைக்கிறீர்கள் இளைய பல்லவரே! நன்றாகக் கேளுங்கள் நான் சொல்வதை!” என்று கூறி அறையைப் பெரிதும் அடைத்து நின்ற அந்த நான்கு நீர்க் குடங்களையும் காட்டி, “இந்த நீர்க் குடங்களின் பரிமா ணத்தைப் பாருங்கள். இந்த ஓவ்வொரு குடத்தையும் உள்ளே நீரோ வேறு பொருளோ இன்றித் தூக்குவதற்குக் குறைந்த பட்சம் நான்கு ஆட்கள் தேவை. அதில் ஒரு மனிதரையும் பதுங்க வைத்தால் ஆறு ஆட்கள் இல்லாமல் தூக்க முடியாது. ஆகவே இந்த நான்கு குடங்களில், உங்களையும், அநபாயரையும், கடாரத்து அரச குலத்தார் இருவரையும் பதுங்க வைத்தால் வண்டியில் இவற்றைத் தூக்கவைப்பதற்கும் இறக்குவதற்கும் இருபத்து நான்கு அடிமைகள் தேவையாயிருக்கும். அது மட்டுமல்ல. இந்த நீர்க்குடங்கள் நான்கை மட்டும் நாம் கொண்டுபோக முடியாது. இவற்றுடன் குருநாதர் மரக்கலத்திலிருந்து வரும் இன்னும் ஐந்தாறு குடங்களையும் கலக்க வேண்டும். சில குடங்களில் நீர், சில குடங்களில் மனிதர், இப்படிக் கொண்டு போனால்தான் இடையே சோதனையிருந் தாலும் நீரிருக்கும் குடங்களைக் காட்டி, காவலாளிகளை ஏமாற்றப் பார்க்கலாம். அப்படிக் குருநாதரின் மரக்கலக் குடங்கள் அறும் சேர்ந்தால் அவற்றைத் தூக்க’ ஐம்பது அடிமைகளுக்கு மேல் தேவையாயிருக்கும். ஆக மொத்தம் பத்து நீர்க்குடங்களைத் தூக்கவைத்து இறக்க சுமார் ஐம்பது அடிமைகள் படைசூழ வண்டியைக் கடற்கரைக்குக் கொண்டு போனால் சும்மா இருக்கச் சுங்க அதிகாரிகள் என்ன முட்டாள்களா?” என்று கேட்டான் அமீர் இளைய பல்லவனை நோக்கி,

மரக்கலங்களுக்கு நீர் சேகரிக்கும் முறைகள் எதையும் அறியாத இளையபல்லவன், “மனிதர் மறைந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் அக்குடங்களைத் தூக்கவும் இறக்கவும் ஆட்கள் தேவைதானே?” என்று வினவினான் பதிலுக்கு,

“தேவைதான் இளையபல்லவரே! ஆனால் அத்தனை அடிமைகளை யாரும் நகரத்திலிருந்து ஊர்வலமாகக் கடற் கரைக்கு அழைத்துப் போவது கிடையாது. கடற்கரையோர மாகப் படகுகள் தரையில் இழுக்கப்பட்டுள்ள இடங்களில் இவற்றை இறக்கவும், படகுகளில் ஏற்றவும் சுங்க அதிகாரி கள் நிரம்ப ஆட்களை நிறுத்தியிருக்கிறார்கள். அவர்கள் ஊழியத்துக்குப் பணம் கொடுப்பதுதான் நமது பொறுப்பு. அவர்களை விட்டு வேறு ஆட்களை அமர்த்தும் பழக்கம் கிடையாது. அப்படி அமர்த்தினால் ஆட்களுக்குள் சண்டை ஏற்பட்டுவிடும்” என்று விளக்கினான் அமீர்.

அமீரின் இந்தப் பதிலைக் கேட்டதும் உள்ள நிலையை மெள்ளப் புரிந்துகொள்ளத் துவங்கிய இளையபல்லவன், “அப்படியானால் நாம் யாரையும் இங்கிருந்து துணை கொண்டு செல்ல முடியாதா?” என்று வினவினான்.

“முடியாது இளையபல்லவரே! முடியாது! நீர்க் குடங்களைத் தவிர மேற்கொண்டு ஐந்தாறு பேர்களை அழைத்துச் செல்லலாம். அவர்களில் ஒருவன் வண்டி யோட்டலாம். இருவர் பின்பக்கம் உட்கார்ந்து குடங்கள் உருண்டு விடாதபடி பாதுகாக்கலாம். மீதியிருக்கும் அடிமைகள் மூவர் வண்டிக்கு முன்னும் பின்னும் ஓடலாம். இதுவே அதிகம். இதுவே அதிகாரிகளுடைய சந்தேகத்தை வளர்க்கும்.

“ஆறு பேர்கள் போனால் கூடவா?”

“ஆம் இளையபல்லவரே! வண்டியுடன் ஆட்கள் ஓடும் பழக்கம் பாலூரில் இடையாது. வண்டி ஓட்டுபவர், சரக்குகளைப் பாதுகாப்பவர் இவர்கள்தான் போவது வழக்கம். மற்ற எல்லாப் பணிகளுக்கும் சுங்கச் சாவடிக் கருகிலும் கடற்கரையோரத்திலும் ஏராளமான ஆட்க ளிருக்கிறார்கள்.

“ஆகவே யாரும் வண்டியுடன் வரமுடியாது.

“முடியாது. நான்கூட வர மூடியாது. வர்த்தகப் பொருள் அனுப்பும் வணிகர் தங்கள் வண்டிகளை எதிர் பார்த்துச் சுங்கச் சாவடியிலோ கடற்கரையோரத்திலோ காத்திருப்பார்களே தவிர வண்டியுடன் ஓடமாட்டார்கள்.

“அப்படியானால் நீங்கள்...

“நீர்க்குடமொன்றில் பதுங்கி வரவேண்டும் அல்லது வண்டியை ஓட்டிக்கொண்டு வரவேண்டும். இரண்டா வது பணியைத்தான் நான் செய்ய உத்தேசம்?” என்று கூறிய அமீர், “சற்று இப்படி வாரும்” என்று இளைய பல்லவனையும் மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு ஏற்கென்வே திறக்கப்பட்ட கொல்லைப்புறக் கதவு வழியாக வெளியே சுட்டிக்காட்டி, “அதோ அந்த வண்டி யைப் பாருங்கள்” என்றான்.

நீண்டதாக இருபுறங்களிலும் பெரும் மரச் சட்டங்கள் அடிக்கப்பட்டு மேற்புறம் திறந்து கிடந்த அந்த வண்டியில் அச்சு, இரிசி முதலியன மிகவும் பலமாயிருந்ததைக் கண்ட இளையபல்லவன், “பத்துப் பதினைந்து நீர்க்குடங்களை மட்டுமென்ன, இன்னும் அதிக பாரத்தையும் இந்த வண்டி தாங்கும்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். நீர்க் குடங்கள் திடமாகத் தங்குவதற்காக வண்டியின் பக்கப் பகுதிகளில் பெரும் பிணைக் கயிறுகள் இருந்ததையும் கண்ட கருணாகர பல்லவன் முன்னேற்பாடுகளை அமீர் அப்பழுக்கின்றிச் செய்திருப்பதை உணர்ந்தான்.

அந்த வண்டியைச் எட்டிக்காட்டி, “இதைப் பாருங்கள்” என்று மற்றவர்களுக்குக் கூறிய அமீர் அவர்கள் அதை நன்றாகப் பார்க்கச் சற்று அவகாசம் கொடுத்து விட்டுப் பிறகு சொன்னான் “இளைய பல்லவரே! அநபாயரே! நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். என் தட்டம் இம்மியளவும் தவறாமல் நிறைவேறுவதைப் பொறுத்திருக்கிறது நமது உயிர், சோழ நாட்டின் பிற்காலம், ஸ்ரீவிஜயத்தின் நற்காலம் இவையனைத்தும். இந்த வண்டி நல்ல கட்டுடையது. பெரும் கனப்பொருள்களை ஏற்றிச் செல்ல அச்சிலும் பூட்டுகளிலும் இருப்புப் பாளங்களையும் பாய்ச்சியிருக்கிறேன். சீனத்து நீர்க்குடங்கள் இருபதைக் கூட இதில் ஏற்றலாம். ஆனால் நமது திட்டத்துக்குப் பத்துக் குடங்களை ஏற்றினால் போதும். பத்துக் குடங் களில் நான்கு குடங்கள் நடுவண்டியில் வைக்கப்படும். மற்றவை அவற்றைச் சுற்றிலும் இருக்கும். நடுவிலுள்ள நான்கு குடங்களில் அநபாயர், குணவர்மர், இளைய பல்லவன், காஞ்சனாதேவி ஆகியவர்கள் இருக்கவேண்டும். மற்றக் குடங்களில் நீர் இருக்கும். குடங்கள் ஆடாமல் அசையாமல் இருப்பதற்காகப் பிணைக் கயிறுகளால் பிணைக்கப்படும். நான் வண்டியின் முகப்பில் உடகார்ந்து மாடுகளை ஓட்டுவேன். உங்களைச் சேர்ந்த மற்ற இருவர், அதாவது கண்டியத்தேவரும், கூலவாணிகரும் என் அடிமைகளின் உடைகளில் வண்டியின் பின்புறம் அமர்ந்து, நீர்க்குடங்களைப் பாதுகாப்பார்கள்...

“இப்படிச் சொல்லிக்கொண்டே போன மீர், சற்றுப் பேச்சை நிறுத்தி மற்றவர்களைத் திரும்பிப் பார்த்தான். அந்தத் திட்டத்தைக் கேட்டுக் கொண்டவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. அமீர் தன் உயிரை இந்தத் திட்டத்தின் மூலம் பணயம் வைக்கிறான் என்பது மற்றவர்களுக்குச் சந்தேகமறத் தெரிந்தது. எந்த இடத்திலாவது காவலருக்குச் சந்தேகமேற்பட்டு வண்டி நிறுத்தப்பட்டால், முதல் பலி அமீர்தான் என்பதையும், அப்படி அமீர் சிக்கும் பட்சத்தில் அ (வனுக்கு ஏற்படக்கூடிய கதி அதோ கதிதானென்பதை யும் உணர்ந்துகொண்டதால் மற்றவர்கள் யாரும் எந்தப் பதிலுமே சொல்லவில்லை. அப்படிப் பதில் சொல்லா விட்டாலும், அவர்கள் முகபாவத்திலிருந்தே அவர்கள் உள்ளூர ஓடிய எண்ணங்களைப் புரிந்துகொண்ட அமீர், “இப்படி என் சாரத்தியத்திலும், கூலவாணிகர், கண்டியத்தேவர் பாதுகாப்பிலும் செல்லும் வண்டி முதன் முதலில் பாலூர் கிழக்குக் கோட்டை வாசலில் காவலரால் நிறுத்தப்படும். காவலர் யாருக்கும் இதுவரை என்மீது எந்தச் சந்தேகமும் கிடையாது. என்னைப் பார்த்ததும் வண்டியைப் போகவிடுவார்கள். அப்படிப் போகவிட்டால் அடுத்தபடி நமக்கு ஏற்படக்கூடிய ஆபத்து வழியில் எதுவு மில்லை. கடற்கரையில் அலைகள் தரையைத் தொடு மிடத்தில்தான் உண்டு. ஒருவேளை என்மீது அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு...” என்று சொல்லிக்கொண்டு போன அமீரின் பேச்சை இடைமறித்த இளையபல்லவன், “கண்டிப் பாய்ச் சந்தேகம் ஏற்படும்” என்றான்.

அமீர் தன் பெருவிழிகளை இளையபல்லவன் மீது ஆச்சரியத்துடன் திருப்பினான். “ஏன் ஏற்பட வேண்டும்?” என்று கேட்கவும் செய்தான்.

“உங்களைப்போல் தனிகரான வணிகர் வண்டி யோட்டுவது அவர்களுக்கு விந்தையாயிருக்காதா?” என்று வினவினான் பல்லவன்.

“இருக்காது இளையபல்லவரே. ஒருகாலும் இருக்காது. பலமுறை எனது வண்டிகளை, நானே ஓட்டிக் கொண்டு சுங்கச் சாவடி. சென்றிருக்கிறேன். எளிய வாழ்க்கையில் சில அனுகூலங்கள் உண்டு என்று அரபு நாட்டுப் பழமொழி யொன்று சொல்லுகிறது. அத்தகைய வாழ்க்கையை நான் கடைப்பிடிக்கிறேன். பலமுறை என் ஆட்களுடன் வணிகப் பொதிகளை நானே இறக்கியும் இருக்கிறேன். அந்த விஷயத்தில் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். அதில் இல்லை ஆபத்து” என்றான் அமீர்.

“வேறு எதில்?” என்று இளையபல்லவன் சந்தேகத் துடன் வினவினான்.

“சோதனையில். சாதாரணமாக என் வண்டிகளை யாரும் சோதனை செய்வதில்லை. சுங்கக் காவலரையும் கிழக்குப்புறக் கோட்டைக் காவலரையும் நான் அவ்வப் பொழுது கவனித்துக் கொள்கிறேன். கலிங்கத்தின் ஊழல் இந்த விஷயத்தில் எனக்குப் பெரிதும் உதவியிருக்கிறது. சாதாரண நாள்களாயிருந்தால் நிச்சயமாக இந்தத் திட்டத்தை நான் நிறைவேற்றியிருப்பேன். ஆனால் இன்று பாலூர் குழப்பமான நிலைமையிலிருக்கறது. காவல் பலமாயிருக்கிறது. முதன் முதலில் கோட்டை வாசலிலேயே வண்டி சோதிக்கப்படலாம். சோதிக்கும் முறை தெரியுமா?”

“சொல்லுங்கள்.

“நீர்க்குடங்களைக் காவலர் கழிகளால் தட்டிப் பார்ப்பார்கள். நீர் இருக்கும் குடங்களின் சத்தம் வேறு. அப்படி அவர்கள் வித்தியாசத்தைக் கண்டு பிடித்துவிட் டால் நாம் உடனே நடவடிக்கை தொடங்க வேண்டும்!”

“என்ன நடவடிக்கை?”

“அருகிலிருக்கும் காவலரை நான் என் சிறு கத்திகளை வீசிக் கொன்றுவிடுவேன். நான் எச்சரிக்கைக் குரல் கொடுத்ததும் குடங்களிலிருந்து நீங்கள் எழுந்து மற்றக் காவலர்களில் இரண்டொருவரை வெட்டிவிட்டுக் கடற் கரை நோக்கி ஓடவேண்டும். மடக்கப்பட்டால் போரிட வேண்டும். ஒன்று தப்புவோம், இல்லையேல் மடிவோம்.

“இதைக் கேட்ட மற்றவர் மெளனமாயிருந்தனர். அமீர் மேற்கொண்டு சொன்னான் “கீழ்க் கோட்டை வாசலில் சோதனை நடக்காமல் தப்பி, கடற்கரையோரம் சென்றால் அங்கு எனது குருநாதரின் படகு நமக்காகக் காத்திருக்கும், நீர்க்குடங்கள் இறக்கப்பட்டதும் குடங்களை இறக்க ஆட்களை அழைக்கக் கூடாது. குடங்களிலிருந்து நீங்கள் வெளிவந்து படகில் ஏறிவிட வேண்டும். அங்குள்ள சங்க அதிகாரிகள் ஒருவேளை நம்மைக் கண்டு கொண் டால் அங்கும் சண்டையிருக்கும். படகில் ஏறிய பிறகும் நமக்குப் பாதுகாப்பு இல்லை. சுங்கக் காவலரின் படகுகள் நமது படகை உடனடியாகத் தொடரலாம். தொடர்ந்து கொண்டே ஆம்புகளை எய்யலாம், வேல்களையும் வீசலாம். அவற்றிலிருந்து பிழைத்து நமக்குப் படகின் துடுப்புகளை வேகமாகத் துழாவித் தப்பினால், பிறகு கஷ்டமில்லை. “இதைச் சொன்ன அமீர், “தட்டம் சரிதானா குருநாதரே?” என்றும் வினவினான்.

“இந்த ஊர் உள்ள சூழ்நிலையில் இதைவிடச் சிறந்த திட்டத்தைத் தயாரிக்க முடியாது. ஆபத்து நிரம்பியது தான். இரண்டு இடங்களில் சோதனையும் சண்டையும் எற்படுகிறது. இருப்பினும் வேறு வழியில்லை. ஆனால் அமீர்! இவர்கள் இந்தத் திட்டத்தை ஒப்புக்கொள்வது கஷ்டம்?” என்றான் சீனக் கடலோடி. “ஏன்?” என்று கேட்டான் அமீர்.

“அதோ அவர்கள் முகங்களைப் பார். அநபாயர், இளையபல்லவர், காஞ்சனாதேவி மூவர் முகங்களும் வீரக் களை சொட்டும் முகங்கள். நீர்க்குடத்தில் பதுங்க அவர் கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்” என்றான் அகூதா.

“வேறு வழி?” கவலையுடன் எழுந்தது அமீரின் கேள்வி.

“நீர்க் குடங்களில் காஞ்சனாதேவியும் அவர் தந்தை யும் நான் விடுதலை செய்த இந்த இரு தமிழரும் பதுங்கி வரட்டும். நீ வண்டியை ஓட்டு. அநபாயரும், இளைய பல்லவரும் உன் அடிமைகளைப் போல் மாறு வேடம் பூண்டு வண்டியின் பின்புறத்தில் உட்கார்ந்து வரட்டும். போரிட வேண்டியிருந்தால் இவர்கள் உடனடியாக வாளை உருவிக் காவலரைத் தாக்க முடியும். இது வீரர்கள் திட்டம். இதற்கு அவர்கள் மறுப்புக் கூறமாட்டார்கள்” என்றான் அகூதா.

அகூதாவின் திட்டத்தைக் கேட்ட அநபாயனும், இளைய பல்லவனும் அதை உடனே ஒப்புக்கொண்டார்கள்!”

“ஏன்? நானும் என் தந்தையும் மட்டும் கோழைகளா?” என்று கேட்டுத் தன் இடையிலிருந்த வாளையும் தட்டிக் காட்டினாள் காஞ்சனாதேவி. அகூதாவே அவளுக்குச் சமாதானம் சொன்னான். “தேவி! உங்கள் வீரத்தைப் பற்றி நான் சந்தேகப்பட வில்லை. அன்று நீதி மண்டபத்தில் நீங்கள் செய்த சாகசச் செயலைக் கண்டு பாலூர் அதிசயப்பட்டுக் கொண் டிருக்கிறது. நான் இங்கு வரும்போதே மக்கள் அதைப்பற்றி வழி நெடுகப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆகவே, மற்றவர் களைவிட உங்களைத்தான் அதிகமாகக் காவலர் தேடுவார்கள். காவலர் தீவட்டியைத் தூக்கிப் பிடித்துச் சோதனை செய்தால் நீங்கள் என்னதான் மாறுவேடமணிந்தாலும் உங்கள் கண்கள் உங்களைக் காட்டிக் கொடுத்துவிடும். உங்கள் கண்களே உங்களுக்குப் பெரும் விரோதி” என்று சொல்லி நகைத்த அகூதா, “பெண்கள் மறைவிலிருப்பதும் தவறல்ல தேவி. அதுமட்டுமல்ல, நீங்கள் கடல் கடந்து சோழர் உதவி நாடி. வந்திருப்பதை இவர்கள் பேச்சிலிருந்து புரிந்து கொண்டிருக்கிறேன். ஆகவே உங்களைப் பத்திர மாகச் சோழ நாடு சேர்ப்பது இவர்கள் பொறுப்பு. அது மட்டுமல்ல. யாராவது நீர்க்குடங்களில் பதுங்கவேண்டும். எல்லோரும் மாறுவேடமணிந்து கும்பலாக வண்டியில் போக முடியாது. சற்று நீங்கள் விட்டுக் கொடுங்கள் இந்த வீரர்களுக்காக” எனறு இளையபல்லவனையும் அநபாய னையும் சுட்டிக் காட்டினான்.

காஞ்சனாதேவி முதலில் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் இளையபல்லவன் மெள்ள ஒப்புக்கொள்ள வைத்தான்.

அபநாயன் கேட்டான், “நாம் எப்போது புறப்பட வேண்டும்?” என்று.

“நாளை இரவு.

“ஏன் நாளை இரவு?”

“நாளைக்குப் பெளர்ணமி முடிந்து நான்காவது நாள் எட்டு நாழிகைக்குப் பிறகுதான் நிலவு புறப்படும். அது வரை இருட்டு இருக்கிறது. இருட்டு நமது திட்டத்துக்குப் பெரிதும் உதவும்” என்றான் அமீர்.

“அமோதுிப்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத் தான் அநபாயன். அதற்குமேல் பேச எதுவுமில்லாமற் போகவே அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு அகூதா வெளியே சென்றான். அவர்கள் படுக்கத் தனித்தனி அறை களை ஒதுக்கிய அமீர் மேற்கொண்டு தனது அலுவல் களைக் கவனிக்க வெளியே சென்றான். இரவின் ஜாமம் வெகு வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. தனக்கு ஒதுக்கப் பட்ட அறையில் தீவிர சிந்தனையுடன் பஞ்சணையொன் றில் படுத்துக் கிடந்தாள் காஞ்சனாதேவி. அவள் அஞ்சன விழிகள் மூடிக் கொண்டிருந்தனவேயொழிய அவள் மனத் தின் சஞ்சல விழிகள் மூடாததால் வேதனையுடன் படுத் திருந்தாள் அவள். உள்ளம் எங்கோ ஓடிக்கொண்டி ருந்ததால் அறையில் நிகழ்ந்த எதையும் அவள் கவனிக்கச் சக்தியற்றவளானாள். அப்படிக் கவனித்திருந்தால் மெள்ள சாளரத்தின் மூலம் ஏறிக் குதித்து ஓசைப்படாமல் சுவரோரமாகப் பதுங்கிப் பதுங்கி அவள் பஞ்சணையை ஓர் உருவம் அணுக் கொண்டிருப்பதை அவள் உணர்ந் திருக்க மாட்டாளா என்ன?
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் - 26

அமைதியும், அபாயமும்

பெளர்ணமி கழித்து மூன்று பகல்கள் பறந்துவிட்ட தால் அறு நாழிகைகளுக்குப் பின்பே வான விளிம்பில் தலை நீட்டிய சற்றே தேய்ந்த வெண்மதி, இரவு பெரிதும் ஏறிவிட்ட அந்தச் சமயத்தில் சஞ்சலத்தின் வசப்பட்டுப் பஞ்சணையில் கிடந்த கடாரத்தின் அஞ்சுகத்தைக் காண அஞ்சிய காரணத்தால், தன் கிரணங்களால் அந்த அறைச் சாளரத்தின் கட்டைமீது மட்டும் மெள்ளத் தொட்டு ஏறித் திருடன் போல் உள்ளே நோக்க முயன்று கொண்டிருந்தான். கட்டிலில் கிடந்த அந்தக் கட்டழகியை அந்தத் இருட்டு மதி காணும்படி விடக்கூடாதென்று திட்டமிட்டுச் சாளரத்தின் மேற்புறத்தில் தொத்தி ஏறிய பூங்கொடி - யொன்று சாளரத்தை அரைப்பாகம் மறைத்துவிட்டதன்றி, தொங்கிய தன் கரங்களால் சாளரக் கட்டையில் பாய்ந் இருந்த வெள்ளிக் கரணங்களையும் அகற்றிவிட அப்படி யும் இப்படியும் அசைந்துகொண்டிருந்தது. அந்தக் கொடி யின் மனநிலையைப் புரிந்துகொண்டது போல் சற்று தூரத்திலிருந்த பெரிய இலவ மரமொன்றும் அதற்குத் துணை செய்ய இஷ்டப்பட்டுத்தன் இலைகளைக் கொண்டு சந்திரன் சிருஷ்டியைப் பெரிதும் தடுத்ததல்லாமல், கடற்காற்றில் இலைகளைச் சலசலக்க விட்டு அறையில் துயின்ற பூங்கொடியின் சஞ்சல நிலை தனக்கும் புரிகிற தென்பதைப் புலப்படுத்திக் கொண்டு நின்றது. அத்தனை இயற்கைப் பாதுகாப்பை மீறி அறையின் சாளரத்தில் ஏறிக் குதித்து உள்ளே நுழைந்த அந்தத் திருடன் யாரென்பதைச் சந்தேகத்துடன் பார்ப்பது போல் அந்தி வேளையிலே விகசித்துவிட்ட கொடியின் மலர்கள் சில தங்கள் பூங்கண் களை அகல விரித்து உள்ளே எட்டிப் பார்த்தன.

சாதாரணமாக இயற்கையின் கவர்ச்சி எழிலில் இத யத்தைப் பறிகொடுக்கும் இயல்பு வாய்ந்த காஞ்சனா தேவி மட்டும் அந்த இரவு நேரத்தில் தூங்காவிட்டாலும் அஞ்சன விழிகளைச் சிறிதும் திறக்காமலும் இயற்கை அழகுகளை அள்ளிப் பருகாமலும் செயலற்ற வண்ணமே பஞ்சணையில் படுத்துக் கிடந்தாள். உடல் செயலற்றுக் கஇடந்ததேயொழிய உள்ளம் செயலற்றிருக்காமல் பலப்பல எண்ண அலைகளில் புரண்டு கொண்டிருந்ததால் புறக் கண் விழிக்காவிட்டாலும் அகக்கண் பெரிதும் விரிந்து மனம் எடுத்துக்காட்டிய காட்சிகளையெல்லாம் கண்டு கொண்டிருந்தன. அந்தக் காட்சிகளில் இன்பமும் துன்ப மும், காதலும் கலையும், வீரமும் கோரமும், கோபமும் சுபமும், எல்லாமே கலந்து கிடந்ததால் பாபத்தாலும் புண்யத்தாலும் சமவலிமையுடன் இழுக்கப்படும் ஆத்மா வின் நிலையற்ற தன்மையிலிருந்து அவள் மனம் கடா ரத்தின் பெரிய ஆசார வாசல்களும் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத் தின் அகண்டமும் அவள் மனக்கண் முன்பு எழுந்ததால் அவள் இதயத்தில் பெருமிதம் சில விநாடிகள் தாண்டவ மாடியது. பின்பு தாயாதியான ஜெயவர்மனின் அநீதிகளை யும், சாம்ராஜ்ய பீடத்தில் அமரவேண்டிய தன் தந்தையும் தானும் ஒரு சிறு வணிகனின் தயவுக்கு ஏங்கி நிற்கும் நிலைக்கு வந்துவிட்டதையும் எண்ணி ஏக்கத்துக்குச் சில விநாடிகள் இலக்காகியது அவள் இதயம்.

அப்படி ஏங்கி நிற்பது தாங்கள் மட்டுமல்லவென்ற நினைப்பும், எந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் உதவியை நாடி வந்தோமோ அந்தச் சோழ சாம்ராஜ்ய பீடத்தில் ஒருநாள் அமரக்கூடிய இளவலும் அவன் படைத்தலைவரும் கூடத் தங்கள் நிலையிலேயே இருக்கிறார்கள் என்பதால் ஏற்பட்ட எண்ணமும், அவள் உள்ளத்திலே எள்ளத்தனை சாந்தியை யும் ஏற்படுத்தியது. அந்த எள்ளத்தனை சாந்தியில் கலந்து கடந்த படைத்தலைவன் முகம் அவள் மனக்கண் முன் எழவே அவள் இதயத்தில் இன்பம் வெள்ளமெனப் புரண்டது. அவள் நரம்புகள் ஒவ்வொன்றிலும் காதல் சுவை யோடி முகத்திலும் படர்ந்து, முகத்தில் ஒரு தெளிவையும் சந்துஷ்டியையும் நிலவ வைத்ததால் அவள் மிதமிஞ்சிய சாந்தியாலும் அனந்தத்தாலும் பெருமூச்சு விட்டாள். அதுவரை செயலற்றுக் கடந்த அவள் கையும் பஞ்சணை யில் எதையோ தேடுவதுபோல் தேடி, தேடிய பொருள் அகப்பட்டதால் அதைப் பலமாகப் பிடித்துக்கொண்டது. அப்படிப் பிடித்தக்கொண்டதன் விளைவாக அவள் உணர்ச்சிகள் தடீரெனக் கொந்தளித்து எழவே அவள் துடித்துப் பஞ்சணையில் எழுந்து உட்கார முற்பட்டாள். ஆனால் அவள் இருளில் தேடிப் பற்றிய ஆடவனின் கரம் அவளை எழுந்திருக்கவொட்டாமல் தடுத்ததன்றி, “அஞ்ச வேண்டாம், நான்தான்” என்ற சொற்களும் அவன் காதில் ஒலித்தன.

உள்ளத்தின் எழுச்சியாலும் உணர்ச்சிகளின் தூண்டுத லாலும் அவள் கனவில் தேடிய கை நனவில் கிடைத்த தானாலும், அப்படிக் கையைப் பற்றிப் பஞ்சணையில் தன் அருகில் உட்கார்ந்திருந்தவன் தன் உள்ளத்தையெல்லாம், கொள்ளை கொண்ட இளைய பல்லவனேயென்நாலும் அஞ்ச வேண்டாம் என்ற சொற்கள் உண்மையில் அவள் அச்சத்தை அறவே வெட்டிவிடுவதே நியாயமென்றாலும், அந்த நியாயத்திற்குப் புறம்பாகவே நடந்துகொண்ட அவள் மனம் உண்மையில் அவள் சிந்தையில் அச்சத்தையே விளைவித்ததால் சில விநாடிகள் என்ன செய்வதென்று அறியாமல் அவள் பஞ்சணையில் படுத்தே கிடந்தாள். நள்ளிரவில் ஓர் ஆடவன் கள்ளத்தனமாய்த் தன் கட்டிலின் முகப்பில் உட்கார்ந்திருப்பது எத்தனை முறைகேடு, எத்தனை விபரீதம் என்பதை நினைத்ததால் அவள் மனத்தின் சஞ்சலம் எத்தனையோ மடங்கு அதிகமாகவே, சஞ்சலத்தைக் குறிக்கும் பெருமூச்சு ஒன்றையும் விட்டாள் அவள். அந்தச் சஞ்சலத்தோடும் அச்சத்தோடும் சில விநாடிகள் மெளனமாகப் படுத்துக் கடந்த அந்த அஞ்சன விழியாள் தன் நெஞ்சத்தில் அத்தனை சஞ்சலத்தையும் அச்சத்தையும் மீறி இன்பமான ஒரு கள்ளத்தனமும் ஊடு ரவி நிற்பதை உணர்ந்து, கூடிய வரையில் நெறியைத் தகர்த்து எறிய உணர்ச்சிகள் எத்தனைத் துணை செய்கின்றன என்பதை எண்ணி இயற்கையின் சக்தியைக் குறித்துப் பெரிதும் வியந்தாள்.

அவளுக்குச் சஞ்சலம் இருந்தது கடந்த நிகழ்ச்சி களைப் பற்றி. கள்ளத்தனம் இருந்தது உள்ளத்திலோடிய எண்ணங்களின் விளைவாக, வியப்பு இருந்தது -- எண் ணங்களைத் தடுக்க முடியவில்லையே என்ற காரணத்தால். ஆனால் இத்தனையையும் மீறிய வெட்கமொன்று அவளை அழுத்திக் கொண்டதே, அது எதனால்? இந்தக் கேள்வியை அவள் தன்னைத்தானே இரண்டு மூன்று முறை கேட்டுக் கொண்டாள். உடனே விளங்கவில்லை அவளுக்கு. விளங்கியபோது தைரியமும் அடைந்தாள். பெண்களின் வெட்கம்தான். பெண்களின் நெறியைப். பாதுகாக்கும் பலத்த இரும்புக் கவசம் என்பதைப் புரிந்துகொண்டாள் காஞ்சனாதேவி. வெட்கம் பயத்தை அளிக்கறைது. பயம் நெறியைக் காக்கிறது. இவை இரண்டும் இல்லாததால்தான் ஆடவர் சக்கரம் நெறி குலைந்து விடுகிறார்கள். இவை இரண்டும் இருப்பதால் பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டே காஞ்சனாதேவி இளையபல்லவன் கையிலிருந்து தன் கையை மெள்ள விடுவித்துக்கொண்டு பஞ்சணையில் எழுந்து உட்கார்ந்துகொண்டாள்.

அவள் கையைத் தன் கையிலிருந்து இரு விடுவித்துக் கொண்டதையும் சரேலெனப் படுக்கையில் எழுந்து முழந்தாள்களைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்துவிட்டதை யும் கண்ட இளையபல்லவன் அவளைச் சில விநாடிகள் உற்று நோக்கினான். எட்ட இருந்த சாளரத்தைத் தொட்டு நின்ற வெண்மதிக் கரங்கள் உள்ளே முழுவதும் பாய வில்லையென்றாலும் அரைகுறை வெளிச்சத்தை அந்த அறைக்குள் வீசியதால் மங்கலமான மங்கல ஒளி அறையில் பரவி நின்றது. அப்படிப் பரவி நின்ற ஒளியில் காஞ்சனா தேவியின் மதிவதனம் தெளிவாகப் புரியா விட்டாலும், அந்தத் தெளிவற்ற தன்மையிலும் அது தனி அழகு வாய்ந்திருந்ததையும் தெளிவாகப் பார்க்க முடியாத தன்மையிலேயே அதில் பெரும் மர்மமும் கலந்திருந்ததை யும், அந்த மார்மமே தன் உள்ளத்தை ஆட்டி, அலைக் கழிப்பதையும் உணர்ந்தான் இளையபல்லவன். மங்கல மான வெளிச்சத்தில் லேசாகத் தெரிந்த காஞ்சனாதேவி அவன் கண்களுக்கு மெல்லிய ஒளித் திரைக்குப் பின் வீற்றிருந்த தெய்வீக மங்கை போலவே காட்சியளித்தாள். “தெய்வீகமான எதுவும் முழுதும் கண்களுக்குப் புலப்படுவ தில்லை, அப்படிப் புலப்படாத காரணத்தாலேயே அதில் மர்மம் கலக்கிறது. அப்படித் துளிர்விடும் மர்மமே அதனிடம் ஆசையைத் தூண்டுகிறது. இது இயற்கையின் விசித்திரம்’ என்று எண்ணினான் இளையபல்லவன்.

இத்தகைய எண்ணங்களால் நீண்ட நேரம் மெளனமே சாதித்த இளைய பல்லவனிடம் மனம் பாகாய் உருகிய காரணத்தால் மெல்லக் காஞ்சனாதேவியே உரையாட லைத் தொடங்க, “இரவு மிகவும் ஏறிவிட்டது” என்றாள்.

“ஆம்” ஏதோ பதில் சொல்ல வேண்டுமென்பதற்காகப் பதில் சொல்லுவது போலிருந்தது இளையபல்லவன் குரல் ஒலி. “இந்த வீட்டில் நிசப்தம் நிலவிக் இடக்கறது” என்று தொடர்ந்தாள் காஞ்சனாதேவி, அவனுக்குக் கேட்கும் படியாக மிக மெல்லிய குரலில். மனம் சஞ்சலப்பட் டிருந்ததால் வேறு யாரும் அந்த அறையில் இல்லையென்ற உணர்ச்சிகூட இல்லை அவளுக்கு.

“ஆம்” இளையபல்லவன் பழைய பதிலையே சொன்னான்.

“எல்லோரும் உறங்கியிருக்க வேண்டும்” என்று சுட்டிக் காட்டினாள் அவள். ‘நீங்கள் மட்டும் ஏன் உறங்கவில்லை” என்ற கேள்வி அவள் பேச்சில் மறைந்து கடந்தது.

அந்த மறைபொருளைப் புரிந்தகொள்ளாதவன் போல் பதில் கூறிய இளையபல்லவன், “ஆம். எல்லோரும் உறங்கி விட்டார்கள், இருவரைத் தவிர!” என்றான்.

“யார் அந்த இருவர்?” என்று வினவினாள் காஞ்சனா தேவி.

“நம்மைத் தப்புவிக்கும் பொறுப்பு வாய்ந்த இருவர்.

“யாரைச் சொல்கிறீர்கள்?”

“அநபாயரையும் அமீரையும்தான் சொல்கிறேன்.

“இருவரும் என்ன செய்டஒறார்கள்?”

“வெளியே சென்றுவிட்டார்கள்.

“இந்த இரவிலா!”

“ஆம்.

“எந்த இடத்துக்கு?”

“என்னிடம் சொல்லவில்லை.

“நீங்கள் கேட்கக்கூடாதா?”

“கேட்கச் சந்தர்ப்பமில்லை.

“ஏன் சந்தர்ப்பமில்லை?”

“எல்லோரும் படுக்கச் சென்றோமல்லவா?”

“அவர்களும் படுக்கச் செல்வதாகப் பாசாங்கு செய்தார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் அமீரும் அதபாயரும் என்னுடைய அறைக்கு எதிர் அறையிலிருந்து வெளியே வந்தார்கள். ஏதோ ரகசியமாகப் பேசிக்கொண்டார்கள். பிறகு அடிமேலடி வைத்துச் சத்தம் போடாமல் வாயிலை நோக்கி நடந்தார்கள். சில விநாடிகளில் வாயிற் கதவு’ இறந்து மூடும் சத்தம் கேட்டது” என்று விளக்கினான் இளையபல்லவன்.

இந்த மாரமத்தின் காரணம் விளங்காததால் காஞ்சனா தேவி மீண்டும் மெளனம் சாதித்தாள். பிறகு வாய்விட்டுத் தன் சந்தேகத்தைக் கேட்கவும் செய்தாள், “இளைய பல்லவரே!! நாம் அனைவரும் ஒரே நிலையில்தானே இருக்கிறோம்?” என்று.

“ஆம்” என்று ஒப்புக்கொண்டான் இளைய பல்லவன்.

“அநபாயருக்குக் கலிங்கத்தில் உள்ள ஆபத்து நமக்கும் உண்டு.

“உண்டு.

“அப்படியிருக்க நம்மிடம் சொல்லிச் சென்றால் என்ன? எதற்காக இத்தனை மர்மமாகச் செல்ல வேண்டும்?” - “அதுதான் எனக்கும் புரியவில்லை.

ஆனால் ஒன்று நிச்சயம்.

“எது?”

“தகுந்த காரணமில்லாமல் அநபாயர் எந்தக் காரியத்தையும் செய்யமாட்டார்.

“அது சரி. ஆனால் பாலூரில் அவருக்கு ஆபத்து காத்திருக்கிறதே?”

“ஆம், தலைபோகும் அபத்து.

“அப்படியிருக்க உங்களைத் துணைகொண்டு செல்லலாமே”.

“துணையைத்தான் அழைத்துச் சென்றிருக்கிறாரே”.

“யார், அமீரா?”

“ஆம்.

“உங்களைவிட அமீர் பெரும் துணையா?”

“அப்படித்தான் அநபாயர் நினைக்க வேண்டும்” இதைச் சொன்ன இளையபல்லவன் குரலில் துயரம் ததும்பி நிற்பதைக் கவனித்தாள் கடாரத்தின் இளவரசி, அதன் காரணமும் அவளுக்குத் தெள்ளென விளங்கவே செய்தது. பல போர்களிலே தோளுடன் தோளுராய்ந்து நின்ற அருமை நண்பனைவிட அரபுநாட்டு அமீரை. ஏன் பெரிதாக நினைக்கிறார் அநபாயர் என்பதை நினைக்க நினைக்க அவளுக்கும் வேதனையாகவே இருந்தது. அந்த வேதனையும், வேதனையால் இளையபல்லவனிடம் ஏற் பட்ட கருணையும் அவள் கையிலொன்றை மீண்டும் நீட்டி, சற்று எட்டி உட்கார்ந்திருந்த அந்தப் பல்லவ இளவரச னின் கையைச் சிறைப்படுத்தச் செய்தன. அப்படித் தன்னை நாடிவந்த பூங்கரத்தை வேதனையின் விளைவாகச் சற்று அழுத்தவே பிடித்தான் இளைய பல்லவன். அது வரை விலகியே உட்கார்ந்திருந்த காஞ்சனாதேவி அவனை அணு உட்கார்ந்தாள். அவளுடைய அஞ்சன விழிகள் துயரம் தோய்ந்த அவன் முகத்தை ஏறெடுத்து நோக்கின. “உங்கள் உள்ளத்தின் வேதனை எனக்குப் புரிகிறது” என்று மெள்ள வார்த்தைகளை உதிர்க்கவும் செய்தாள் அவள்.

சோழர் படைத் தலைவனும் மகா வீரனுமான கருணாகர பல்லவனின் மனம் அந்தச் சமயத்தில் பெரிதும் வேதனையில் சிக்கிக் குழம்பிக் கிடந்ததால் அவன் பதிலேதும் சொல்லவில்லை. பெருமூச்சொன்றுதான் பதிலாக வெளிவந்தது.

“வீணாக வருந்தாதீர்கள்” என்று சமாதானப்படுத்த முயன்றாள் காஞ்சனாதேவி.

துயரத்துடன் ஒலித்தன இளையபல்லவன் சொற்கள். “வீண் வருத்தமல்ல தேவி” என்றான் அவன்.

“அநபாயர் அமீரைத் துணைகொண்டு செல்லக் காரணமிருக்கும்” என்றாள் காஞ்சனாதேவி.

“இத்தனை நாள் அவர் என் துணையைத் தவிர வேறு துணையை நாடியதில்லை” என்று சுட்டிக் காட்டினான் இளையபல்லவன்.

“சோழநாட்டில் அது சரி, இப்பொழுதுள்ள காலதேச வர்த்தமானங்கள் வேறல்லவா?”

“வேறுதான்.

போகிற இடத்தை, அலுவலை என்னிடம் சொன்னால் என்ன?”

“நீங்கள் உறங்கிவிட்டதாக நினைத்திருக்கலாம்.

“எழுப்ப உரிமையில்லையா இளவரசருக்கு?”

“உண்டு, உண்டு” என்று கூறிய காஞ்சனாதேவி மேற் கொண்டு என்ன சொல்வதென்று அறியாமல் சில விநாடி கள் தத்தளித்தாள். பிறகு கேட்டாள், “ஆமாம். நீங்கள் எதற்கு வந்தீர்கள் இங்கு?” என்று.

“அமைதியை நாடி வந்தேன்” என்றான் இளைய பல்லவன்.

அவன் சொன்னது நன்றாகப் புரிந்தது அவளுக்கு. அவன் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டாள் அவள். அதில் ஓரளவு அமைதி ஏற்பட்டது இளையபல்லவனுக்கு. ஆனால் அமைதியை நாடிய அவன், அதே சமயத்தில் அந்த நகரத்தின் வேறொரு கோடியில் பெரும் அபாயத்தை நாடி அநபாயன் சென்றுகொண்டிருந்ததை மட்டும் அறியவில்லை.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 27

எங்கே என் தந்தை?

ரம்பத்தில் சாளரத்தின் அடிக்கட்டையை மட்டும் தொட்டு நின்ற வெண்மதிக் கரணங்கள் இரவு ஏறிவிட்ட தால் உள்ளே என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க இஷ்டப்பட்டனபோல் அறை நடுவிலிருந்த பஞ்சணை மீதும் லேசாகப் பாய்ந்துவிட்ட அந்த மனோகர வேளை யில், கடாரத்துக் கட்டழகியின் பட்டுக் கைகள் தன் கைகளை அவலுடன் பற்றிய காரணத்தால் முதலிலிருந்த சஞ்சலம் சற்றே நீங்கி மனம் ஒரளவு அமைதியையும் பெற்றுவிட்டதன் விளைவாக மெள்ள நீண்டதொரு பெருமூச்சு விட்ட இளையபல்லவன் அந்த அமைதி எத்தனை நிலையற்றது என்பதைச் சில விநாடிகளுக்குள் புரிந்நுகொண்டான். அறையின் சூழ்நிலையும் வெளியி லிருந்து காற்றில் மிதந்து வந்த இரவு பூத்த மலர்களின் நறுமணமும் அருகிலிருந்த பருவப் பெண்ணின் அருமை எழில்கள் அள்ளி வீசிய காந்தக் கதிர்களும், மெத்தென்ற. பஞ்ச சயனமும், அதைவிட மெத்தென மேலே உராய்ந்த பக்குவ உடலும் ஆகிய அனைத்துமே, எத்தகைய சஞ்சலத் தையும் அறுத்து அமைதிக்கும் இன்ப உலகத்துக்கும் இழுத்துச் செல்லும் பெரும் சக்திகளென்றாலும், அத்தனை சக்திகளும் தன் மனத்துக்குப் போதிய சாந்தியை அளிக் கும் திறனைப் பெற முடியாததை நினைத்துப் பரிதாபப் பெருமூச்சு விட்ட இளையபல்லவன், காமத்தின் சக்தியை விட நட்பின் சக்தி எத்தனை வலிது என்பதை நினைத்து வியக்கவும் செய்தான். அழகற் சிறந்த ஆரணங்கு ஒருத்தி பக்கத்திலிருக்க அநபாயனைப் பற்றிய எண்ணங்கள் திரும்பத் இரும்பத் தன் மனத்தில் அலைமோதி இடையே கஇடைத்த அமைதியைத் திரும்ப உடைப்பதை அறிந்த அவன் ‘இத்தனை அன்பு எனக்கு அநபாயரிடம் இருக்க அவர் மட்டும் என்னைவிட அமீரைப் பெரிதாக நினைத்து விட்டாரே! அரச குலத்தாரின் அன்பு இப்படித்தான் நிலை யற்றதோ என்னமோ?” என்று தனக்குள்ளேயே எண்ண மிட்டான். பாலூர்ப் பெருந்துறை அன்றிருந்த அபாய நிலையில் ஆபத்தைப் பற்றிச் சிறிதும் லட்சியம் செய்யாமல் அநபாயன் சென்றது அவனுக்கு எந்த வியப்பையும் அளிக்கவில்லையென்றாலும், தன்னைவிட்டு அமீரைத் துணைகொண்டு சென்றது மட்டும் அவனுக்குப் பெரும் வியப்பையும் மனக்கொதிப்பையும் அளிக்கவே அவன் இதயத்தில் இன்பநிலை அகன்று துன்ப நிலையே துள்ளி நின்றது. அந்தத் துன்ப நிலையின் விளைவாக அவன் நீண்ட நேரம் பேசாமலே இருந்தான்.

அவன் ஏதும் பேசாவிட்டாலும் சில விநாடிகளுக்குள் அவன் மனநிலை மாறிவிட்டதையும், தான் அளித்த மனஅமைதியைத் தன்னைவிடப் பெரும் சக்தியொன்று உடைத்து விட்டதையும் வெகு சுலபத்தில் புரிந்துகொண்ட காஞ்சனாதேவி அநபாயனுக்கும் இளைய பல்லவனுக்கும் இருந்த நட்பின் உரத்தைப் பற்றிப் பெரிதும் வியப் படைந்து, இந்த இருவரின் நட்பு பெரும் காரியங்களைச் சாதிக்க வல்லது என்றே எண்ணினாள். தன் கைகள் அவன் கைகளைப் பிடித்தபோது தன் விரல்களுடன் இணைந்த அவன் விரல்கள் மேற்கொண்டு விஷமம் ஏதும் செய்யாமல் சில விநாடிகளுக்குள் செயலற்றுவிட்டதையும் தன் உடல் உராய்ந்ததும் பதிலுக்குச் சாய்ந்து கொடுத்த அவன் உடம்புகூட திடீரென உணர்ச்சியற்றுவிட்டதையும் கவனிக்கத் தவறாத காஞ்சனாதேவி, அவன் இதய வேதனையை நன்றாக அறிந்து கொண்டாளாதலால், அவனை மீண்டும் சமாதானப்படுத்த முயன்று, “அநபாயர் உங்களை விட்டு அமீரை அழைத்துச் சென்றதை நீங்கள் இத்தனை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை” என்றாள் மெதுவாக.

இளையபல்லவன் இதற்கு உடனடியாகப் பதிலேதும் சொல்லவில்லை. குனிந்த தலை குனிந்தபடியே உட்கார்ந் இருந்தான். பிறகு தலையை நிமிர்த்தி அவள் முகத்தை அவன் ஏறெடுத்துப் பார்த்தபோது அவன் வாயினால் எதுவும் பேசாவிட்டாலும், ஏன் அவசியமில்லை?’ என்ற கேள்வி மட்டும் அவன் கண்களில் தொக்கி நின்றது. அந்தக் கேள்விகூட சண்ணிமைக்கும் நேரத்தில் அவன் கண்களிலிருந்து அகன்றது. பிரமித்து அவள் முகத்தையே பார்த்தன வேல்களைவிடக் கூரிய அவன் கண்கள். மாறி வரும் இருளும் ஒளியும் போல அவன் சித்தம் மாறுபட்ட சக்திகளால் இழுக்கப்பட்டது. அவள் முக வகரத்தில் அவன் மீண்டும் மயங்கினான். இரவு ஏறிவிட்டதால் பஞ்சணைமீது பாய்ந்த பால் நிலவு அவள் முகத்தில். மிக வெண்மையாக அடித்திருந்தது. அந்த வெண்மையில் அவ்வப்பொழுது அவள் கண்களில் ஏறும் குங்குமச் சிவப்பு கூடத் தெரியாததால் நல்ல பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்ட சலையெனக் காட்சியளித்தாள் காஞ்சனா தேவி. அந்த வெண்மை முகத்தில் கலந்த விண்மதியின் வெண் கிரணங்கள் அவள் நுதலிலும் கன்னங்களிலும் பிரதிபலித்து முகம் பூராவையும் கலப்படமற்ற வெண் ணொளி மயமாக அடித்துக் கொண்டிருந்தது. வெண் கிரணங்களில் கண்கள் பேரொளி வீசின. அத்தனை ஒளிக்கும் வெளுக்காத உதடுகள் மட்டும் அதிகச் சிவப் பாகப் பிரகாசித்து இருமுறை மெள்ள விரிந்து மூடின. அப்படி மூடிய சமயத்தில் ஒரு கணம் தெரிந்த இரண்டு உள்முத்துகள் திடீரென இளையபல்லவன் உள்ளத்தை அள்ளவே செய்தன. பெரும் மாயையில் மீண்டும் சிக்கினான் இளையபல்லவன். நிலவில் ஒரே ஒளிமயமாகக் இடந்த அந்தப் பருவ மங்கையின் வசீகர வதனத்தின் ஒவ்வோர் அசைவிலிருந்தும் காமக் கணைகள் கணக்கின்றி எழுந்து அவன் த்தத்தில் பாய்ந்தன. ஏதோ சொல்ல உதடுகள் விரிந்தபோது கவிழ்க்கப்பட்ட குமிழ்க் கண் ணாடிபோல் எழுந்திருந்த கபோலங்களில் விழுந்த குழிவு களும், உதடுகள் மூடியதும் ஏதோ மந்திர ஜாலம்போல் அவை மறைந்துவிட்ட மாயமும், கேள்வி கேட்க எழுந்தன போல் எழுந்து தாழ்ந்த பருவங்களின் அசைவும், சிறிது நேரம் நிலைத்து நின்று திடீரெனக் கொட்டிய இமைகளும் பளிச்சு பளிச்சென்று பற்பல ரகசியச் சேதிகளைச் சொல்லவே பிரமிப்பில் ஆழ்ந்து கடந்தான் இளைய பல்லவன். காஞ்சனாதேவி மட்டும் இஷ்டப்பட்டி ருந்தால் அந்தப் பிரமிப்பில் அவனை நீண்ட நேரம் ஆழ்த்தியே வைத்திருக்கலாம். ஆனால் அப்படி அவன்மீது கண்களை வீசிய காஞ்சனாதேவியே அவன் பிரமிப்பை உடைக்கவும் முயன்றாள்.

நான்கு வேல்களும் உராய்வது போல் தன் கண்களும் அவன் கண்களும் உராய்ந்த சமயத்தில் அவன் கண்களே வெற்றியடைந்ததையும் அவன் வெறித்த பார்வை தன் கண்களுக்குள் பாய்ந்து இதயத்துக்குள்ளேயும் புகுந்து இதயத்தை மூடியிருந்த வெட்கச் சலையைக்கூடக் களை வதைப் போன்ற பிரமையைத் தனக்கு அளித்துவிட்ட தையும் கண்ட காஞ்சனாதேவி, பெரும் சங்கடத்துக்கு இலக்கானாள். அந்தச் சங்கடத்தின் விளைவாகவோ, மேற்கொண்டு அந்த நிலை நீடித்தால் விளைவு என்ன ஆகுமோ என்ற பயத்தாலோ, அவள் திடீரென அவன் கைகளைப். பற்றி நின்ற தன் கைகளை விடுவித்துக் கொண்டாள். பஞ்சணையில் சற்று நகர்ந்து உட்கார்ந்து கொண்டாள். அந்த இரண்டு செய்கைகளாலும் அவன் பிரமிப்பை உடைத்துவிடலாமென்று’ எதிர்பார்த்த காஞ்சனா தேவி, அவை இரண்டும் வேறு விபரீதங்களுக்குத் தூண்டி விட்டதை மறுவிநாடி உணர்ந்து என்ன செய்வதென்று தெரியாமல் திணறினாள்.

கைகள் விடுவிக்கப்பட்டதும் திடீரெனத் துடித்துப் பஞ்சணையிலிருந்து விடுதலையடைந்த அவன் கரங்க ளிரண்டும் அவள் முகத்தைச் சிறைப்படுத்தி நிலவொளிக் காக அதை நன்றாகத் தஇருப்பின. அவன் முரட்டு உள்ளங் கையில் அவள் பட்டுக் கன்னங்கள் குழைந்தன. சற்றே திருப் பப்பட்டதால் நிலவொளி பூரணமாக விழுந்த முகத்தின் ஒவ்வொரு சாயையும் அவன் கண்கள் ஆராய்ந்தன. கன் னங்களின் வழவழப்பை கைகள் உணர்ந்தன. முகம் லேசா கத் திருப்பப்பட்டதால் அவள் வீசிய கடைக்கண் பார்வை யின் வேகத்தை அவன் கண்கள் உணர்ந்தன. கன்னங்கள் அழுத்திப் பிடிக்கப்பட்டதால் இன்ப வேதனையால் அத்தனை நிலவிலும் சிவந்துவிட்ட நுதல் அந்தச் சிவப்பை நாசிமீது பாய்ச்சி. நிலவில் விக?க்கும் புதுச் செம்பருத்தி போல் அடித்திருந்ததைக் கண்கள் மட்டுமென்ன, அவன் இதயமும் கவனிக்கவே செய்தது. கண்ணும், கண் மூலம் இதயமும் கவனித்தவை இவை. இவை காணாதவற்றைச் சித்தம் கற்பனை செய்தது, கண்டது. உணர்ச்சிகள் பேரிரைச் சலுடன் அவன் உள்ளத்தில் எழுந்து அலைமோதின.

அந்த அலைகளில் ௫ிக்கித் தத்தளித்தாள் அஞ்சன விழியாளும்கூட. அலைகளிலிருந்து இதயத்தை’ மீட்க விரும்பிய அவள் விழிகளைச் சற்றே மூடினாள். மூடிய தால் அவன் பார்வையிலிருந்து மீளலாமென்றுதான் நினைத்தாள். ஆனால் மூடிய கண்கள் உள்ளே பல வாயில் களைத் திறந்துவிடவே இளையபல்லவன் கண்கள் எல்லா இடங்களிலும் எட்டிப் பார்ப்பன போலவே தெரிந்தது அந்தக் கடாரத்தின் கட்டழகக்கு. அந்த எண்ணக் கடலி லிருந்து, கடலின் அலைகளிலிருந்து, அதன் சுழல்களி லிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றாள் அவள். அத்தனை அலைகளையும் சுழல்களையும் மீறி எழ முயன்றது அவள் மனம். மீள முடியாமல் செய்திருந்தது இருவருக்கும் இடையே நிலவிய மெளனம். அந்த மெளனத் தைக் கலைக்க அவள் விரும்பிப் பேச முயன்றாள். உதடுகள்தான் அசைந்தன, சொற்கள் உதிரவில்லை.

அவள் மனமுயற்சி எதையும் புரிந்துகொள்ளக் கூடிய நிலையில் இளையபல்லவன் இதயம் இல்லாததால், அவள் உதடுகளின் அசைவைத் தவறாகவே பொருள் கொண்டான் அந்த வாலிபன். தவறான பொருள்களின் விளைவாகக் கன்னத்தைத் தழுவி நின்ற விரல்கள் இரண்டும் சற்றே விலகி அவள் செவ்விய உதடுகளின்மீது தவழ்ந்து பேச வேண்டாம் என வலியுறுத்தின. அந்த வலியுறுத்தல் அவசிய மில்லை. அவள்தான் பேசும் சக்தியை அறவே இழந்தி ருந்தாளே!

கண்களும் மூடி, உதடுகளும் மூடி முகமே உறைந்து விட்டது போன்ற அந்த நிலையின் அபாயத்திலிருந்து விடு தலைடைய முடியாமலிருந்த அவள் மனத்தில் பலப்பல எண்ணங்கள், பலப்பல கதைகள், பலப்பல பழைய கனவுகள் எல்லாம் எழுந்து அர்த்தமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தன. அந்த ஓட்டத்தில் அவள் வாழ்விலும் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் வாழ்விலும் சம்பந்தப்பட்ட பாத்திரங்களும் வலம் வந்தார்கள். அப்படி வலம் வந்த சமயத்தில் அவன் இதயத்தைச் சுற்றி நின்ற பெரும் வலை திடீரென அறுந்தது. அந்தப் பாத்திரங்களின் சுழற்சியில் ஒருவர் பின் ஒருவராகத் தோன்றிய மனிதர் வரிசையில் அவள் தந்தை குணவர்மனும் தோன்றினார். “எதற்காகத் தமிழகம் வந்தாய்? எந்த நிலையில் இருக்கிறாய்?” என்று ஏதோ குற்றத்தைச் சுட்டிக் காட்டுவதுபோல் அவள் மனக் கண் முன் எழுந்தது குணவர்மன் முகம். அதன் விளை வாகத் இடீரெனக் கட்டிலை விட்டு எழுந்த காஞ்சனா தேவி ஒருவிநாடி நின்ற இடத்தில் ஸ்தம்பித்து நின்றாள். பிறகு தலையைத் தானாக ஒருமுறை ஆட்டிவிட்டுச் சரசர வென அறைக்குக் குறுக்கே நடந்து தூரத்திலிருந்த சாளரத்தை எட்டினாள்.

காஞ்சனாதேவி தன் கைகளின் பிடிப்பிலிருந்து சரேலென எழுந்ததும், அப்படி எழுந்ததால் கன்னங்களிலிருந்து நழுவிவிட்ட தன் கைகளை அவள் எழில்கள் தடை செய்தும் சிறிதும் லட்சியம் செய்யாமல் கனவேகமாக அவள் தன்னை இடித்துத் தள்ளிக்கொண்டு சாளரத்தருகே சென்றுவிட்ட தையும் கவனித்த இளைய பல்லவன் சற்றே வியப்பை மட்டுமல்ல வியப்பின் விளைவாக சற்று சுயநிலையையும் அடைந்தான். அகவே சாளரத்தை நோக்கி அவனும் நடந்து சென்றான். சாளரத்துக்கு வெளியே மனோகரமான காட்சியே விரிந்து கடந்தது. அந்த இரவில் இயற்கை தன் வனப்பையெல்லாம் அள்ளிச் சொரிந்திருந்தது. கடலி லிருந்து வந்துகொண்டிருந்த காற்று சாளரத்தின் மீதிருந்த பூங்கொடியை அசைத்ததால் பூங்கொத்தொன்று கடா ரத்துப் பூங்கொடியின் நுதலை ஒருமுறை முத்தமிட்டுச் சென்றது. இயற்கையின் அந்தப் பெரும் கவர்ச்சி அவள் சம்பந்தப்பட்டவரை பயனற்றதாயிற்று. துன்பமும் கவலை யுமே அவள் இதயத்தைச் சூழ்ந்து கடந்தது.

திடீரென அவள் மனத்தில் காதல் அறுபட்டுக் கவலை புகுந்து கொண்டுவிட்டதை அவள் நின்ற நிலையிலிருந்தே புரிந்துகொண்ட இளையபல்லவன், அதன் காரணத்தை மட்டும் அறிய முடியாததால் அவளை அணுகி அவள் தோள்மீது தன் கரமொன்றைப் பொருத்த, “காஞ்சனா” என்று ஆறுதலை அள்ளிச் சொரிந்த குரலில் அழைத்தான்.

“ஹும்” இந்தப் பதில்தான் வந்தது அவளிடமிருந்து.

குரலில் துன்பம் மண்டிக் இடந்தது.

“ஏன் திடீரென இங்கு வந்துவிட்டாய்?” என்று மீண்டும் வினவினான் இளையபல்லவன்.

“ஒன்றுமில்லை” வெடுக்கென்று வந்தது அவள் பதில்.

“ஒன்றுமில்லாவிட்டால் நீ அங்கேயே உட்கார்ந்திருப் பதுதானே?” அதரவுடன் கேட்டான் அவன்.

“இங்கு நின்றால் என்ன?”

“நிற்கலாம், நிற்கலாம்.

“அதுதான் நிற்கிறேன்.

“இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் இளையபல்லவன் திகைத்தான். இன்பம். அதிகமாகும் போதும் சரி, துன்பம் அதிகமாகும்போதும் சரி, பெண்கள் வெடுக் வெடுக்கென்று பேசுவார்களென்பதை மனோ தத்துவ சாஸ்திரத்தில் அவன் கற்றிருந்தான். அன்று ஏட்டில் கற்றான், இன்று அமீரின் வீட்டில் கிடைத்தது அனுபவம் அவனுக்கு. அந்த அனுபவம் வேறொன்றையும் உணர்த்தியது அவனுக்கு. அந்தச் சமயத்தில்’ அவள் அப்படிப் பேசியது துன்பம் போல் தோன்றியதே தவிர, அது இன்பத்தாலுமல்ல துன்பத்தாலுமல்ல, இரண்டும் கலந்த விபரீத நிலையால் என்பதை மட்டும் புரிந்து கொண்டான் சோழர்களின் படைத்தலைவன்.

பஞ்சணையில் தாங்களிருவரும் மெளனமாகக் கொஞ்சி நின்ற நிலைகளில் திடீரென ஏதோ ஒரு துயரத்தின் கதிர் அவள் இதயத்தில் பாய்ந்துவிட்டதென்பதையும், அந்தத் துயரம் ஊடுருவிய இன்பநிலை அவள் இதயத்தைக் கலக்கி விட்டிருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து கொண்ட இளையபல்லவன் தன் உணர்ச்சிகளைப் பூர்ணமாக ஒரு கட்டுக்குள் கொண்டுவந்து “காஞ்சனா! உன் மனோநிலை எனக்குப் புரிகிறது. உன் இதயத்தைத் திடீரெனத் துயரம் ஊளடுருவியிருக்கிறது. அதன் காரணத்தை எனக்குச் சொல்லலாமா?” என்று குரலில் குழைவுடன் கேட்டான்.

காரணம் ஏதும் அவள் சொல்லவில்லை. “புதுத் துயரம் பாய என்ன இருக்கிறது? நாம் இருப்பதே துயரந் தோய்ந்த நிலைதானே?” என்று பொதுப்படையாகப் பதில் சொன்னாள்.

“உண்மைதான் காஞ்சனா! துயரம் ஆபத்து எல்லாமே நம்மைச் சூழ்ந்திருப்பது உண்மை.

அதனால்தான் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் விபரீதமாகவும் நடந்து கொள்கிறோம்” என்று துக்கத்துடன் இளைய பல்லவனும் பேசினான்.

“அப்படி என்ன விபரீதமாக நடந்துகொண்டுவிட் டோம்?” இளைய பல்லவனைத் திரும்பிப் பாராமல் வெளியே பார்த்தபடியே கேட்டாள் காஞ்சனாதேவி.

“என்னிடம் கலக்காமல் எதையும் செய்து பழக்கமற்ற எனது இளவரசர் என்னைப் புறக்கணித்து அமீரைத் துணை கொண்டு ஆபத்து நிறைந்த பாலூருக்குள் செல்கிறார். அதனால் வேதனையடைந்த நான் அமைதி நாடி உன்னிடம் வருகிறேன். நீ என்னைத் திடீரென உதறி இந்தச் சாளரத்திடம் வருகிறாய். என்ன காரணம் என்று சொல்லவும் மறுக்கிறாய். எந்த இருவரிடம் என் உயிரையே வைத்திருக்கறேனோ அந்த இருவரும் என்னிடம் நடந்து கொள்ளும் முறை விசித்திரமாயில்லையா” என்று வின வினான் இளைய பல்லவன்.

இதைக் கேட்ட காஞ்சனாதேவியின் உள்ளம் சிறிது நெகுழவே அவள் மெள்ளத் திரும்பினாள் அவனை நோக்கி. “உயிர் நண்பரையும் என்னையும் நீங்கள் இப்படி எடை போடுவது சரியல்ல” என்று சொல்லவும் செய்தாள்.

“ஏன் சரியல்ல?”

“அது நம்பிக்கையைக் குறிக்கவில்லை.

“உங்களிருவரிடம் எனக்கு நம்பிக்கையில்லை என் கிறாயா?”

“நம்பிக்கையிருக்கிறது. ஆனால் உங்கள் ஆசாபாசங் களை அறுக்கும் அளவுக்கு அந்த நம்பிக்கை வளரவில்லை. உங்கள் நண்பர் உங்களை விட்டுச் சென்றால் அதற்குக் காரணம் உதாசீனம் என்று நினைக்கிறீர்கள். வேறு முக்கிய காரணம் இருக்கக்கூடும் என்று ஏன் நீங்கள் நினைக்கக் கூடாது. அவர் போகுமிடம் நீங்கள் போகத் தகாததா யிருக்கலாம் என்று ஏன் முடிவு கட்டக்கூடாது? நமக்கு வேண்டியவர்கள் நம்மைச் சில அலுவல்களில் விலக்கும் போது அலுவல்களின் தன்மை அப்படியிருக்கும் என்று ஏன் தீர்மானிக்கக்கூடாது? அதிருக்கட்டும். துயரத்தின் காரணத்தை நான் சொல்லவில்லையென்கிறீர்கள். சொல்லத் தகாததாயிருக்கலாம் என்று நீங்கள் ஏன் எண்ணக் கூடாது.

“அவள் கேள்விகளில் உண்மை பெரிதும் ஒளி விடுவதைக் கவனித்த இளையபல்லவன் ஏதும் பதில் சொல்ல முடியாமல் சில விநாடிகள் திணறினான். பிறகு பேச முற்பட்டபோதும் “என்னிடம் சொல்லத் தகாதது என்ன இருக்க முடியும்...இத்தனைக்குப் பிறகும்?” என்று மெள்ள மெள்ள இழுத்து சங்கடத்துடன் பேசினான்.

“இத்தனைக்குப் பிறகு என்று அவன் எதைக் குறிக் கிறான் என்பதைப் புரிந்து கொண்டாளாதலால் மெள்ளப் புன்முறுவல் செய்தாள். அந்த இன்பப் புன்முறுவலிலும் ஓரளவு துன்பம் தோய்ந்து கிடந்தது. அந்த இன்பப் புன்முறுவலைத் தொடர்ந்து உதிர்ந்த அவள் சொற்களில் காதலும் வருத்தமும் கலந்தொலித்தன.

“நாமிருவரும் அங்கே...” என்று கட்டிலைச் சுட்டிக் காட்டினாள் அவள்.

“ஆம், உட்கார்ந்திருந்தோம்...” என்று அவன் பூர்த்தி செய்தான் வாசகத்தை.

“நான் மெய் மறந்திருந்தேன்.

“நானும்தான்.

“அநபாயர் விட்டுப் போனதைக் குறித்து.

“நான் துயரமடைந்தேன்.

“நான் அமைதியளிக்க...

முயன்றேன்.

“ஆம்.

“அந்த நிலையில்?”

“நிலையில்? “

“சுயநிலை மறந்தேன்.

“ஓகோ”

“எண்ணங்கள் சுழன்றன.

“என்ன எண்ணங்கள்?”

“தந்தையைப் பற்றிய எண்ணங்கள்” என்றாள் காஞ்சனாதேவி துயரத்துடன்.

அவள் பேதை உள்ளத்தை ஆம்பொஞ்ததான் அவன் புரிந்துகொண்டான். அடுத்தடுத்து நேர்ந்த துரித நிகழ்ச்சி களால் அவள் தந்தையை அனைவரும் மறந்துவிட்டதை அப்பொழுதுதான் எண்ணிப் பார்த்தான் அவன். அந்த எண்ணத்தின் விளைவாக, “ஆம் ஆம். உன் தந்தையை மறந்துவிட்டோமே. அவர் இப்பொழுது எங்இருக்கிறார்?” என்று வினவினான் அதிர்ச்சியுடன்.

“எனக்குத் தெரியாது” என்றாள் காஞ்சனாதேவி, “உனக்குத் தெரியாதா!”

“தெரியாது” என்றாள் கர்ஞ்சனாதேவி, கவலை தோய்ந்த குரலில்.

“நீயும் அவரும் எப்பொழுது பிரிந்தீர்கள்?” என்று மீண்டும் கேட்டான் அவன்.

“நீங்கள் என்னைவிட்டுப் பிரிந்த அன்றிரவே.

“பீமன் வீரர்கள் என்னை அழைத்துப் போனதுமா?”

“ஆம். நீங்கள் வீரர்களுடன் சென்ற அரை ஜாமத்துக் கெல்லாம் அநபாயர் அந்த இல்லத்தில் தோன்றி என்னை யும் தந்தையையும், பணிப் பெண்களையும் அவசர அவ சரமாக அழைத்துக்கொண்டு வெளியேறினார். எங்கள் பெட்டி பேழைகளும் துரிதமாக அவருடன் வந்த வீரர்களால் அப்புறப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் பிரமுகர் வீதியின் முகப்பிலேயே நான் வேறு, தந்தை வேறு, பணிப் பெண்கள் வேறாக, வெவ்வேறு திக்குகளில் பிரித்து அழைத்துச் செல்லப்பட்டோம். இரண்டு நாள்கள் நான் சிறைக் காவலன் ஒருவன் இல்லத்தில் தங்கியிருந்தேன். இன்று காலை அநபாயர் வந்து உங்கள் விசாரணை பற்றிக் கூறினார். அவசர அவசரமாக என்னையும் அழைத்துக்கொண்டு நீதி மண்டபம் வந்தார். பிறகு நடந்ததை நீங்கள் அறிவீர்கள். ஆனால் தந்தை எங்கிருக்கிறார், என்ன ஆனார் என்பது எனக்குப் புரியவில்லை. அமீரின் பாதுகாப்பில் இருப்பதாக சனக் கடலோடியிடம் அநபாயர் சற்று முன்பு கூறியது தான் எனக்குத் தெரியும். இந்தப் பாலூரில் தந்தையை எங்குதான் தங்க வைத்திருப்பார் அநபாயர்?”

இதற்குத் திடமான பதில் எதையும் இளைய பல்லவ னால்கூற முடியவில்லை, அநபாயன் போக்கு எதுவும் ஊ௫க்க முடியாத புதிராயிருந்தது அவனுக்கு. ஆகவே அவன் காஞ்சனாதேவிக்குச் சொன்ன பதிலில் உணர்ச்சி யிருந்ததேயொழிய தெளிவு லவலேசமும் இல்லை. “காஞ்சனா! உன் தந்தையை அநபாயர். எங்கு தங்க வைத்திருக்கிறாரோ எனக்குத் தெரியாது. நான் பாலூரில் கால்வைத்த நாளாக நேரிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் பிரமையை உஊளட்டக் கூடியனவாகவே அமைந்திருக்கின்றன. கனவில் நடப்பதுபோல் நிகழ்ச்சிகள் துரிதமாக நடந்திருக்கின்றன. நாமனைவரும் வெறும் பதுமைகள் போல் அநபாயரால் நடத்தப்பட்டிருக்கிறோம். அவர் இயக்கும் வழியில் நாம் இயங்குகிறோம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்லுவேன். அநபாயர் உடலில் உயிர் இருக்கும் வரை உன் தந்தைக்கு ஆபத்து எதுவும் இல்லை. ஆனால் உன் தந்தை இருக்குமிடத்தையோ, அநபாயர் இந்த இரவில் எதற்காக எங்கு போயிருக்கிறார் என்பதையோ என்னால் ஊகிக்க முடியவில்லை” என்று உணர்ச்சி ததும்பக் கூறிப் பெருமூச்சு விட்டான் இளைய பல்லவன்.

அவ்விருவரும் ஊ௫க்க முடியாத, ஏன் கனவிலும் நினைக்க முடியாத, மிகவும் ஆபத்தான இடத்தைத்தான் அந்தச் சமயத்தில் அநபாயன் அணுகிக் கொண்டிருந்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 28

தோப்பில் தெரிந்த தீபம்

இயற்கை தன் இன்பத்தையெல்லாம் அள்ளிச் சொரிந்தும் அதை அனுபவிக்க முடியாமல் தந்தை எங் இருக்கிறார் என்று கடாரத்துக் கட்டழகி எண்ணி ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த அந்தச் சமயத்தில், நீண்ட நாள் நண்பன் தானிருக்க அமீரைத் துணைகொண்டு சோழ குல இளவல் சென்றுவிட்டானே என்பதால் கருணாகர பல்லவன் கருத்துருகிக் கலங்கிய அந்த வேளையில், தள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்தாலும் மக்கள் நடமாட் டமோ காவலின் கெடுபிடியோ சிறிதும் குறையாத அந்த நேரத்தில், அச்சத்தை அணுவளவும் அறியாத அநபாய குலோத்துங்கன், அராபிய நாட்டவனும் அத்தியந்த தண்பனுமான அமீருடன் பாலூரின் அரச வீதியை மிகச் சாவதானமாக அணுகிக் கொண்டிருந்தான். அவனைத் தாங்கி வந்த புரவி மட்டுமின்றி, அமீரைத் தாங்கிய புரவியும்கூட அந்தச் சோழ நாட்டு அரசகுல வீரனின் கருத்தை நன்றாகப் புரிந்து கொண்டதுபோல் அமைதி யாகவும் அலட்சிய நடை போட்டும் நடந்தது. வடநாட்டு வர்த்தகர்களைப் போல் அந்த இருவரும் வேடமணிந் இருந்ததன் விளைவாக அவர்கள் உடைகளை இடுப்புக்கு மேல் அடியோடு மறைத்துத் தலையிலும் முக்காடாக வளைந்து, முகங்களின் மேல் நீண்டு சற்றே தொங்க, முகங்களின் மேற்பாகத்தை ஓரளவு மறைத்திருந்தாலும் பார்வையை மட்டும் மறைக்காத காஷ்மீரத்துச் சால்வை கள்கூட, கடற்புறமிருந்து வந்த காற்றில் அதிகமாகப் பறக்காது உடல்களுடன் ஓட்டி அமைதியையும் எச்சரிக் கையையும் காட்டின. பாலூர் அன்றிருந்த பயங்கர நிலை யில் அத்தனை அமைதியும் எச்சரிக்கையும் தேவையாக இருந்தன.

புரவியில் அமர்ந்து, விலகிய மக்கள் கூட்டத்திடையே சர்வசாதாரணமாகச் சென்று கொண்டிருந்த அநபாயன், எதிரே அடிக்கடி புரவிகளில் வந்து கொண்டிருந்த காவலர் கூட்டத்தையும், தெருக்கள் சேரும் மூலை விடுதிகளின் ஓரங்களிலெல்லாம் சாதாரண மக்களைப்போல் காணப் பட்டாலும் கழுகுப் பார்வையாகப் போகிறவர் வருகிற வர்களைக் கண்காணித்த ஒற்றர்கள் எண்ணிக்கையும், தலையை அதிகமாகத் தூக்காமல் கண்ணை மாத்திரம் லேசாகத் தூக்கி ஊடுருவிப் பார்த்து, பாலூரின் மூலை முடுக்குகள்கூடப் பரிபூரண எச்சரிக்கையுடன் பாதுகாக்கப் படுவதை உணர்ந்தான். தவிர தெரு மூலைகளில் அசட்டை யுடனிருப்பதாகக் காணப்பட்ட ஒற்றர்களின் இடைகளில் குறுவாள்கள் காட்சியளித்ததையும் கண்ட சோழர்குல இளவல், தான் சற்று நிலை பிசக யாரென்பதை வெளி யிட்டு விட்டால் அந்தக் குறுவாள்களுக்கும், ஏன், மூலை வீடுகளின் மறைவிலிருக்கக் - கூடிய பெருவேல்களும் அடுத்த க்ஷணம் இரையாகக் கூடும் என்பதைப் புரிந்து கொண்டான். இத்தகைய காவலிலிருந்து தனது நண்பர் களைத் தப்புவிக்க வேண்டுமானால் சாதாரண மனிதப் பிரயத்தனால் அது சாத்தியமல்லவென்பதையும், பெரும் தந்திரத்தாலும், சாகசத்தாலுமே அதைச் சாதிக்க முடியு மென்பதையும் சந்தேகத்துக்கிடமின்றி உணர்ந்துகொண் டான் அநபாயன். அந்தச் சமயத்தில் அவன் எண்ணங்கள் மறுநாளிரவு தப்பிச் செல்லும் முறைகளைக்கூட அவ்வள வாகக் கவரவில்லை. இத்தனை பலமான காவலை மீறி அப்பொழுது வந்து காரியத்தைச் சாதிக்க வேண்டுமே என்ற கவலை அவன் இதயத்தைப் பெரிதும் கெளவிக் கொண்டிருந்தது.

அந்தக் கவலையைச் சிறிதும் வெளிக்குக் காட்டா மலே பல வீதிகளையும் கடந்து அரச வீதியின் முகப்புக்கு வந்துவிட்ட அநபாயன், அந்த வீதியில் மற்ற வீதிகளை விட இரண்டு பங்கு காவல் இருந்ததையும், வீதிக்குள் நுழையும் ஒவ்வொரு புரவியும் நிறுத்திச் சோதிக்கப்படு வதையும் கண்டதும் குதிரையின் நடையை அதிகமாகத் தளர்த்தி முகத்தைக் குனிந்த வண்ணமே அமீரை அழைத் தான். அந்த அழைப்பின் விளைவாகத் தன் புரவியை அநபாயனின் புரவிக்கு வெக அருகில் கொண்டுவந்து விட்ட அமீர், “ஏன் அழைத்தீர்கள்?” என்று வினவினான். இருவரும் தலையைத் தூக்காமலும், மிகுந்த எச்சரிக்கை யுடனும் குதிரைகளை நிறுத்தாமல் மெல்ல நடத்திக் கொண்டே சம்பாஷணையைத் துவங்கினார்கள். “அரச வீதியின் முகப்பைக் கவனித்தாயா அமீர்?” என்று வினவி னான் அநபாயன்.

“கவனித்தேன்” என்றான் அமீர் தலையைக் குனிந்த வண்ணமே.

“அதோ செல்லும் ஒவ்வொரு வண்டியும் புரவியும் இதர வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன” என்று மீண்டும் குறிப்பிட்டான் அநபாயன், அமீருக்கு மட்டும் கேட்கும் குரலில்.

“அது மட்டுமல்ல, வாகனங்களை எட்டிப் பார்த்துச் சோதனையும் செய்கிறார்கள்” என்ற அமீரின் பதிலில் சிறிது கவலையும் தொனித்தது.

“புரவிகளில் வருபவர்கள் $ழிறக்கப்படுகிறார்கள்” என்று சுட்டிக் காட்டினான் அநபாயன்.

“ஆம். சிலருடைய வாள்களும் இதர ஆயுதங்களும் கூடப் பறிக்கப்படுகின்றன.

“ஆயுதமுள்ள யாரையும் அரச வீுக்குள் அனுமதிக்க மாட்டார்கள் போலிருக்கிறது “அதைப்பற்றி நமக்கு ஏன் கவலை? உங்களிடம் ஆயுதம் ஏதுமில்லை.

என்னிடமிருக்கும் குறுவாள்கள் இரண்டையும் காவலர் பறித்துக் கொண்டாலும் பாதக மில்லை.”

“இதை அறிந்துதான் ஆயுதமேதும் கொண்டுவர வேண்டாமென்று என்னைத் தடுத்துவிட்டாயா?”

“ஆம்”.

“எப்படித் தெரியும் உனக்கு?”

“இந்த ஆயுத நீக்கல் உற்சவம் பாலூரில் சில நாள் களாக அடிக்கடி நடக்கிறது. பாலூரின் ஜனத்தொகையில் நாள் தமிழ் வணிகரும், மற்றோரும் நிராயுத பாணி களாக்கப்பட்டிருப்பார்கள். அது முடியாததால், அடிக்கடி இத்தகைய பரிசோதனையும் ஆயுதப் பறிமுதலும் நடக்கிறது. சாதாரணமாகவே பாலூரில் தமிழரைப்பற்றி எச்ச ரிக்கை அதிகம். அதுவும் நீங்கள் சிருஷ்டித்த இன்றைய நிலை மிகவும் மோசமல்லவா?” என்று விளக்கினான் அமீர்.

“ஆம், ஆம்” அநபாயனின் அந்த இரண்டு “ஆமி’னில் கவலை மிதமிஞ்சித் தொனித்தது.

“நீங்கள் உங்கள் நண்பர்களை நீதிமண்டபத்திலிருந்து விடுவித்தது முதல் ஊர் மூலை முடுக்குகளிலெல்லாம் காவல் பலப்படுத்தப்பட்டு விட்டது” என்று மேலும் விவரித்தான் அமீர்.

“அதைத்தான் வரும் வழியில் பார்த்தோமே” என்றான் அநபாயன்.

“அப்படியிருக்க, அரச வீதியில் மட்டும் எச்சரிக்கைக் குறைவாயிருக்குமா? அதுவும் பீமன் மாளிகையும் மாளிகை யின் முக்கிய வாயிலான கஇிழக்குப் பகுதியும் இருக்கு மிடத்தில் கேட்க வேண்டுமா?” என்று அமீர் விளக்கினான்.

அமீரின் இந்த விளக்கம் தேவையென்றாலும், அது தேவைப்பட்டதுபோல் தலையை அசைத்த அநபாயன், “ஆம் அமீர்! நிலைமை புரிகிறது எனக்கு. இருப்பினும் இந்த வீதிக்குள் எப்படி. நுழைவது என்பதுதான் புரிய வில்லை” என்றான்.

“அதற்கு மருந்து வைத்திருக்கிறேன்” என்று அமீர் சமாதானம் சொன்னான்.

“மருந்து பலிக்குமா?” என்று வினவினான் அநபாயன்.

“நாற்றுக்குத் தொண்ணூறு பலிக்கும்” என்று துடமாகச் சொன்னான் அமீர்.

“பத்து சந்தேகந்தான்?” ஆம்.

“அந்தப் பலிக்காத பத்தில் சிக்கிக் கொண்டால்?”

“போரிட்டுத்தான் தப்ப வேண்டும்.

“வாளைக்கூட வேண்டாமென்று நிராயுதபாணியாக அழைத்து வந்துவிட்டாயே! போரிடுவது எப்படி?” அத்தனை அபாயத்திலும் மெள்ள நகைத்தான். “அநபாயரே! உங்கள் திறமையை அறியாமலா உங்களை நிராயுதபாணியாக அழைத்து வந்தேன்? நம்மிடம் வாளில் லாமற் போனாலென்ன, எதிரிகளிடம் வாளிருக்குமே. காவலன் எவனாவது சந்தேகப்பட்டால் என் குறுவாள் அவனைத் தீர்த்துவிடும். அது பலிக்கவில்லையென்றால் நீங்கள் அவன்மீது பாய்ந்துவிடலாம். புலிக்குட்டிக்குப் பாய்ச்சலை நானா சொல்லித் தர வேண்டும்?” என்றான் அமீர்.

இந்தப் பதில் சொல்லி முடிவதற்கும் இருவரும் வீதி முகப்புக் காவலை எட்டுவதற்கும் சரியாயிருக்கவே, மேற்கொண்டு ஏதும் பேசாமல் ஈட்டிகளைக் கொண்டு வழிமறித்து நின்ற காவலர் கூட்டத்திடம் வந்து இருவரும் புரவிகளை நிறுத்தினார்கள். அவர்களுக்கு முன்பிருந்த இரண்டு வண்டிகள் சோதிக்கப்பட்டு அரச வீதிக்குள் நகர்ந்ததும் அமீரின் புரவியையும் அநபாயனின் புரவியை யும் இருமுறை சுற்றி வந்து அவை இரண்டிலும் பக்க வாட்டில் தொங்கிய நான்கு பெரும் பைகளைத் தட்டிப் பார்த்தனர் காவலர் இருவர். இந்தச் சோதனை நடந்து கொண்டிருக்கையிலேயே முன் வண்டிகளை அனுப்பி விட்டுப் புரவிகளை அணுகிய காவலர் தலைவனொரு வன், “ஏன் முக்காடிட்டிருக்கிறீர்கள்? எடுங்கள் முக்காட்டை? உங்கள் முகத்தைப் பார்ப்போம் “.

என்று மிக முரட்டுத் தனமாகக் கூறி, முக்காடுகளைக் களையத் தன் வாளின் நுனியையும் அநபாயன் முகத்துக்காகத் தூக்கினான். அந்த வாளின் நுனி மட்டும் அந்த முகத்திரையைச் சற்று விலக்கியிருந்தால் அடுத்து நிகழ்ந்திருக்கக் கூடிய சம்பவங்களையோ, அந்தச் சம்பவங்களின் முடிவையோ ஊளடப்பது கஷ்டம். ஆனால் அத்தகைய இக்கட்டான நிலையை அமீரின் அதிகாரக் குரல் தடுத்து நிறுத்தியது. “கலிங்கத்தில் பிறநாட்டு வணிகரை அவமதிக்கும் நாகரிகம் எத்தனை நாளாகப் பரவியிருக்கிறது?” என்று மிகவும் கசப்பும் கடுமையும் நிறைந்த குரலில் கேட்டான் அமீர்.

அமீரின் இந்தக் கேள்வியால் திடுக்கிட்ட காவலர் தலைவன் அநபாயனை விட்டு அமீரை நோக்கத் திரும்பி னான்.

“சில நாள்களாகத்தான் பரவியிருக்கிறது, அவசி யத்தை முன்னிட்டு” என்று அதிகாரத்துடன் கூறவும் செய்தான். “அந்த அவசியம் இதற்கும் தேவையா?” என்ற அமீர், தன் மடியிலிருந்து சின்னஞ்சிறு சலையொன்றை எடுத்துக் காவலர் தலைவனிடம் நீட்டினான்.

அதைக் கையில் வாங்கிக் கொண்டு பக்கத்திலிருந்த வீரனொருவனைப் பந்தம் பிடிக்கச் சொல்லி பந்தத்தின் வெளிச்சத்தில் லையைப் பிரித்துப் படித்த காவலர் தலைவனின் முகத்தில் குழப்பத்தின் ரேகை பெரிதும் படர்ந்தது. “ஆம், உத்தரவு திட்டவட்டமாகத்தான் இருக் கிறது. ஆனால்...” என்று ஏதும் புரியாமல் இழுத்தான் காவலர் தலைவன்.

“சிலையிலிருப்பது கலிங்கபிரான் மாமன்னர் பீமரு டைய முத்திரை” என்று சற்றுக் கடுமையுடன் உணர்த்தி னான் அமீர்.

“அது தெரிகிறது” காவலர் தலைவன் பதில் சொன்னானே தவிர, மேலும் குழப்பமே அவன் குரலில் தொனித்தது.

“அரண்மனைக்கு வேண்டிய பல வாணிபப் பொருள் களைக் கொடுப்பவன் நான். அரசமாளிகைப் புரவி வர்த்தகத்திலும் பங்கு பெற்றவன். அகையால் நான் அரச மாளிகைக்குள் நுழைவதையோ, அரசரை நேரிடையாகப் பார்ப்பதையோ யாரும் தடை செய்ய முடியாது. என் பெயரைக் கூடக் கேட்க முடியாது. சீலையில் உத்தரவு தெளிவாயிருக்கிறது” என்றான் அமீர்.

காவலர் தலைவன் சில விநாடிகள் யோசித்தான். பிறகு கேட்டான், “அது சரி. நீங்கள் வேண்டுமானால் போகலாம். உங்களைச் சோதனை செய்ய அவசியமில்லை. ஆனால் இவரை ஏன் நாம் அனுமதிக்க வேண்டும்?” என்று.

“அரச காரியமாகப் போவதால்” என்றான் அமீர்.

“அரச காரியமாக எங்கு போகிறீர்கள்?”

“அரண்மனையின் பின்புறத்துக்கு?”

“பின்புறத்துக்கு எதற்காக?”

“அங்குதானே குதிரைச் சாலை இருக்கிறது.

“ஆம்.

“அதன் தலைவனிடம் இருபது புரவிகள் வாங்கப் போகிறோம்.

“அரசர் குதிரைச் சாலையில் புரவி விற்கிறார்களா?”

“இல்லை.

விற்பதில்லை.

“பின் எதற்கு இருபது புரவிகள்?”

“மாற்றித் தர.

“இதைக் கேட்ட காவலன் விவரம் புரியாமல் விழித் தான். அவன் விழிப்பதைப் பார்த்த அமீர், “குதிரைச் சாலையிலுள்ள புரவிகள் சில பயனற்றுவிட்டன. நாளை அரபு நாட்டுக் கப்பல் ஒன்று புரவிகளுடன் வருகிறது. அவற்றில் வரும் புரவிகளுக்கு இவற்றை மாற்ற வேண்டும். இதைப்பார்” என்று மேலும் இரண்டு ஓலைகளை எடுத்து அமீர் காவலர் தலைவனிடம் சமர்ப்பித்தான்.

அந்த ஓலைகள் இரண்டிலும் பாலூர் அரண்மனைக் குதிரைச் சாலைத் தலைவனின் கையொப்பம் இருந்ததை யும் அமீர் சொன்ன செய்திக்கும் அவற்றிலிருந்த விவரத் துக்கும் மிகுந்த பொருத்தமிருந்ததையும் கவனித்த காவலர் தலைவன் அவர்களிருவரையும் அதற்குமேல் கேள்விகள் கேட்காமல் அரச விடுதிக்குள் செல்ல அனுமதித்தான். வீதிக்குக் குறுக்கேயிருந்த காவல் தடை நீங்கிப் புரவிகள் அரச வீதிக்குள் நுழைந்ததும், “அப்பாடா!” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட அநபாயன், “அமீர்! அந்தச் சிலையைப் பற்றி என்னிடம் ஏதும் சொல்லவில்லையே!” என்று வினவினான்.

“அநபாயரே! அரபு நாட்டிலிருந்து சனம் சென்று, அங்கிருந்து கலிங்கம் வந்து வாணிபம் செய்யும் நான், வாழ்க்கையில் எத்தனை சோதனைகளிலிருந்து தப்பியிருக் கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். அகவே சதா ஏதாவது இடுக்கண்களையே எதிர்பார்க்கிறேன். அதற்கு அவ்வப்பொழுது வேண்டிய பாதுகாப்புகளையும் செய்து கொள்றேன். சீலையும். ஓலைகளும் அத்தகைய பாது காப்புக் கருவிகள். ஆனால்...” என்று இழுத்தான் அமீர்.

“என்ன ஆனால்?”

“ஓலையிலிருந்த கையெழுத்துகள் குதிரைச் சாலைத் தலைவனுடையதல்ல.



“வேறு யாருடையது?”

“அடியேனுடையதுதான்.

“அநபாயன் பிரமித்து அமீரை நோக்கினான். “கையெழுத்துப் பொய்யென்று கண்டுபிடிக்கப் பட்டி ருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்று வினவினான்.

“என் சக்தியில் அநபாயருக்கு நம்பிக்கையில்லை போலிருக்கிறது. அவசியமானால் கலிங்கத்துப் பீமன் கையெழுத்தைக்கூடப் போட என்னால் முடியும். தேவை யில்லாததால் போடவில்லை” என்று அடக்கத்துடன் பதில் கூறினான் அமீர்.

மிகுந்த ஆபத்து சூழ்ந்து இடந்த அந்த நிலையிலும் சற்று இரைந்தே நகைத்துவிட்ட அநபாயன் மேற்கொண்டு ஏதும் கேள்வி கேட்காமல் அமீரைத் தொடர்ந்தான். அநபாயனைப் பின்னால் வரச்சொல்லி முன்னால் தன் புரவியைச் செலுத்திய அமீர், அரச வீதியின் நடுவுக்கு வந்ததும் அங்கிருந்த அரச மாளிகையின் கிழக்கு வாயி லுக்குள் நுழைந்தான். ஒவ்வோர் இடத்திலும் காவலரால் தேக்கப்பட்டாலும் உத்தரவுச் சலையின் மந்திரத்தால் காவலர் பணிந்துவிட அரண்மனையைச் சுற்றிச் சென்ற அமீர் அரண்மனையின் பின்புற வாயிலையும் கடந்து அதற்கு நேர்ப் பின்னாலிருந்த பெரும் தோப்பிற் வந்து சேர்ந்தான்.

சந்திர வெளிச்சத்தில் பிரும்மாண்டமான அந்தத் தோப்பு மிகவும் கவர்ச்சியாகத் தெரிந்தது. தோப்பைச் சுற்றியிருந்த பெரும் மதிளுக்கு முன்புறத்தில் காவல் இல்லையென்றாலும் அதன் வாயிலுக்குப் பின்னால் இரண்டு வீரர்கள் காவல் புரிவது அவர்கள் எச்சரிக்கைக் கோஷங்களிலிருந்தே புரிந்தது. அந்தக் கோஷத்தைத் தூக்கி யடித்துக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான புரவிகளின் கனைப்புச் சத்தம் வீரனான அநபாயன் காதுக்கு ரம்மி யமாயிருந்ததால் அவன் மனத்திலிருந்த ஆபத்து, கவலை முதலியன மறைந்து, அவை இருந்த இடத்தில் பெரும் இன்பம் புகுந்துகொண்டது. “பல சாதிக் குதிரைகள்! பல நாட்டுக் குதிரைகள்! எத்தனை விதம்! எத்தனை ரகம். எத்தனை விதமான கனைப்புகள்! எத்தனை விதமான உடற்கட்டுகள்! இத்தனை வித்தியாசத்திலும் புரவியென்ற ஒரு பொதுச் சாதிதானே இருக்கிறது. ஈசுவர சிருஷ்டியில் எது பொது? எது தனி? அப்பப்பா! என்ன விந்தை! என்று சிந்தித்துக்கொண்டே அமீரைத் தொடர்ந்தான் அநபாயன்.

அமீர் குதிரைச் சாலைத் தோட்டத்தின் அந்தப் பெருவாயிலைக் கண்டதுமே சிறிது ஏதோ ஏிந்தித்தான். பிறகு தலையை வேண்டாமென்பதற்கு அறிகுறியாக ஆட்டிவிட்டு மதிளை வலப்புறமாகச் சுற்றிச் சென்று ஒரு சிறு தட்டிவாசலுக்கு வந்து புவியிலிருந்து கீழே குதித்து அநபாயனையும் இறங்கச் சொன்னான். அவன் சொற்படி அநபாயன் இறங்கியதும், “அநபாயரே! இனிமேல்தான், நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்தக் குதிரைச் சாலைகூடக் கண்காணிப்பில்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று அமீர் எதிரேயிருந்த திட்டிவாசலை நோக்கி மெள்ள நடந்தான். மெள்ளத் திட்டிவாசற் கதவில் காதை வைத்துச் சில விநாடிகள் உற்றுக் கேட்டான். பிறகு அந்த வாயிற்கதவை மும்முறை லேசாகத் தட்டினான்.

சிறிது நேரம் பதில் ஏதுமில்லை. ஆளரவமும் கேட்க வில்லை. அநபாயன் மனத்திலும் மெள்ள மெள்ளச் சந்தேகம் எழுந்தது. “குதிரைகளின் இந்தக் கனைப்பில் நீ மெள்ளத் தட்டியது யாருக்குக் காது கேட்கும்” என்றும் வினவினான்.

“சற்றுப் பொருங்கள் அநபாயரே!” என்ற அமீர் திட்டி வாசலின் கதவிடுக்கின் மூலமாக உள்ளே நோக்கிவிட்டு அநபாயனையும் அழைத்து, “இதோ பாருங்கள்” என்றான்.

தட்டிவாசற் கதவின் பலகைகள் இடங் கொடுத்த இடத்தில் ஒரு கண்ணை வைத்து உள்ளே நோக்கினான் அநபாயன். தூர இருந்த மாளிகையின் வாசலில், திடீரென இரண்டு தீபங்கள் தெரிந்தன. அவற்றிலொன்று இட்டி வாசலை நோக்கி நகரவும் தொடங்கியது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் - 29

பரிசுகள் இருபது

தென்கலிங்கத்து மன்னன் அரண்மனைக்கு நேர்ப் பின்புறத்திலிருந்த குதிரைச் சாலைத் திட்டிவாசல் கதவிடுக்கு வழியாகத் தூரத்தே தீபங்கள் இரண்டு தெரித்த தையும் அந்தத் தீபங்களில் ஒன்று தாங்கள் இருந்த இடத்தை நோக்கி நகரத் தொடங்கியதையும் கண்ட அநபாயன் பெரும் ஆச்சரியத்திற்குள்ளாகிக் கதவிடுக்கிலிருந்து கண்ணை எடுத்துத் தலை நிமிர்ந்து உள்ளேயிருந்த வியப்பு முகத்திலும் ஒளிவிட அமீரை நோக்கினான்.

பாலூரையும் அதன் மக்களையும் அங்கிருந்த அரசாங்க அதிகாரிகளையும் சர்வ விளக்கமாக அறிந்தவன் நானொருவனே என்று மனப்பால் குடித்துக் கொண் டிருந்த அநபாயனுக்குத் தன்னை மீறி விவகாரங்கள் அறிந்தவன் ஒருவனிருக்கறானென்பதே பெரும் வியப்பா யிருந்ததால் அந்த வியப்பைச் சொற்கள் மூலம் காட்ட முற்பட்டு, “அமீர், உன் தறமை இன்றுதான் எனக்கு முழுவதும் புலப்படுகிறது” என்று கூறினான்.

இதழ்களில் லேசான புன்முறுவலொன்று தவழ அநபாயனை நோக்கிய அமீர், சற்று விஷமத்துடனேயே கேட்டான், “ஏன் இதுவரை புலப்படவில்லையா?” என்று.

அநபாயன் பதிலுக்குச் சிரித்தான். “புலப்பட்டது அமீர், புலப்பட்டது. நீ திறமைசாலியென்பதும் எந்த நிலை மையையும் சமாளிக்கும். வல்லமை உனக்கு உண் டென்பதும் எனக்கு ஏற்கெனவே தெரியும்” என்று பதிலும் சொன்னான் அநபாயன்.

“தெரியுமா?” அமீரின் கேள்வியில் ஏளனத்தின் சாயை நிரம்ப இருந்தது.

அதைக் கவனித்தும் கவனிக்காதவன்போல் பதில் சொன்ன அநபாயன், “தெரியும் அமீர். தெரியாவிட்டால். உன்னிடம் என்னுடைய அருமை நண்பர்களின் உயிரை யும் மாபெரும் கடாரத்தின் பிற்காலத்தையும் ஒப்படைப் பேனா? உன் திறமையைப் பற்றி நான் சந்தேகிக்கவில்லை. இந்தப் பாலூரின் முக்கிய இடங்களிலெல்லாம், நீ ஆள் களை உன் வாணிபத்துக்கு அனுகூலமாக வைத்திருப்பதும் எனக்குத் தெரியும். ஆனால் அரச மாளிகைக்கு அருகி லேயே, ஏன் உள்ளேயே என்று கூறலாம். நீ கை வைக்க முடியும் என்பதை நான் இதுவரை உணரவில்லை. இன்று வரை மூன்றிலொரு பங்கு தமிழரை உடைய இந்தப் பாலூரில் என் சக்திதான் அதிகம் என்று எண்ணியிருந்தேன். கை விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய சொற்ப அராபியர் உள்ள இந்த ஊரில் உன் சக்தியும் செல்வாக்கும் என் சக்தியைவிடப். பல மடங்கு அதிகம் என்பதை இன்று உணர்ந்து கொண்டேன்” என்று உணர்ச்சி பாய்ந்த குரலில் சொற்களை உதிர்த்தான்.

அந்தப் பாராட்டுதலால் ஓரளவு சங்கடத்துக்குள் ளான அமீர் சற்றே தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு, “தாங்கள் அளவுக்கதிகமாக என்னைப் புகழு கிறீர்கள்” என்று முணுமுணுத்தான்.

“இல்லை அமீர், அளவுக்கதிகமான புகழ்ச்சி அல்ல இது. உண்மையைத்தான் கூறுகிறேன். இன்று பாலூர் உள்ள நிலைமையில் அரச வீதிக்குள் புகுவதே கஷ்டம். ஏதோ பொய்க் கையெழுத்து ஓலைகளையும் பழைய உத்தரவுகளையும் காட்டி அதைச் சாதித்தாய். அரண் மனைக்குள் புகுந்து பின்புறம் வந்துவிட்டோம். குதிரைச் சாலைக்குள் நுழைவது மிகக் கஷ்டமென்று நினைத்தேன். அதற்கும் வழி வைத்திருக்கிறாய்” என்று மேலும் பாராட் டிய அநபாயனை இடைமறித்த அமீர், “அநபாயரே? வயதும் சந்தர்ப்பமும் அனுபவத்தை அளிக்கின்றன. அனுபவம் புதுப்புது முறைகளைச் சுட்டிக்காட்டுகிறது. தங்களைவிட அறிவில் நான் குறைந்தவனாயிருந்தாலும், வயதில் பெரியவன். பல நாடுகளில் தங்கியிருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வித அனுபவம், சிக்கல் எனக்கு இருந்தன. அவற்றைத் தீர்க்கப் பலப்பல தந்திரங் களைக் கையாள வேண்டி வந்தது. கடைசியில் சொந்த நாடு விட்டுத் தூர நாடுகளில் உறைய வேண்டிய அவசிய முள்ள எனக்குத் தந்திரம் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்டது. புதுப்புது நிலைகளில் புதுப்புது எச்சரிக்கைகளும், புதுப்புதுத் தந்திரங்களும் இயற்கையாகவே ஏற்படுவது பழக்கமாகிவிட்டது. என் கஷ்டங்களை வாழ்க்கையில் அனுபவித்த யாருக்கும் யுக்திகளும், குயுக்திகளும் தாமாகவே தோன்றும்” என்று கூறிவிட்டு அதற்குமேல் அந்தச் சம்பாஷணையை நீடிக்கவிட இஷ்டப்படாமல் பேச்சை வேறு திசையில் திருப்பி, “இதோ பாருங்கள் அந பாயரே! நீங்கள் தூரத்தில் பார்த்த விளக்கு சீக்கிரம் இந்த வாசலை நெருங்கூவிடும். கதவும் திறக்கப்படும். ஆகவே உள்ளே புகத் தயாராயிருங்கள்” என்று எச்சரித்தான்.

“சரி அமீர்! ஆனால் ஒரு சந்தேகம். இங்கு நீ கதவைத் தட்டினாய். விளக்கு தொலைவிலிருந்து வருகிறது. நீ மெள்ளத் தட்டியது அத்தனை தூரம் காதில் விழுமா?” என்று வினவினான்.

“விழாது அநபாயரே விழாது. இந்தக் கதவுக்கருகில் சதா காவல் உண்டு. விளக்குத்தான் இங்கே வைப்ப தில்லை. ஆனால் கதவு தட்டியதும் இங்குள்ள காவலன் சென்று தோப்பு நடுவிலுள்ள வீட்டிலிருந்து விளக்கைக் கொண்டு வருவான்” என்று விளக்கினான் அமீர்.

“கதவுக்கருகில் ஏன் விளக்கு வைப்பதில்லை?” என்று மீண்டும் கேட்டான் அநபாயன்.

“இது அரசர் நுழையும் வாயில்.

“பீமனா.

“ஆம். தென்கலிங்க மன்னருக்கு அரபு நாட்டுப் புரவிகளிடம் உள்ள அசை சொல்ல முடியாது. அகவே புரவிகளைப் பார்க்க அரசர் இங்கு வருவார். வந்து மும்முறை கதவைத் தட்டுவார். தட்டி உள்ளே நுழைந்து புரவிகளைப் பார்த்துவிட்டுப் போவார்.

“மேலே ஏதும் அமீர் விவரிக்கத் தேவையில்லா திருந்தது. பீமன் தன்னந்தனியே புரவிகளுடன் உறவாட ஆடம்பரமேதுமில்லாமல் நுழையும் திட்டிவாசலுக்குள் நுழைய அதே முறையை அமீரும் கையாண்டிருக்கிறான் என்பதைப் புரிந்தகொண்ட அநபாயன் மேலும் வியப்பே எய்தினான். “அரசர் வந்திருப்பதாக எண்ணித்தான் காவலன் விளக்குக் கொண்டுவரப் போயிருக்கிறானா?” என்று ஆச்சரியத்துடன் வினவினான்.

“ஆமாம்” என்று சர்வசாதாரணமாகப் பதில் கூறினான் அமீர்.

“ததவைத் திறந்தபின் வந்திருப்பது அரசனல்ல வென்பதைக் காவலன் புரிந்துகொண்டால் என்ன செய்வது?”

“புரிந்து கொள்ள முடியாது.

“ஏன் புரிந்துகொள்ள முடியாது?”

“அரசரைக் கண்டவுடன் காவலன் தலைகுனிந்து வணங்க வேண்டும். பிறகு குனிந்த தலையை நிமிராமல் திரும்பி வீட்டை நோக்கி நடக்க வேண்டும். திட்டிவாசல் காவலருக்கு இப்படித் திட்டமான உத்தரவிருக்கிறது. அது மட்டுமல்ல...

“வேறென்ன?”

“அரசரும் நம்மைப்போல் முக்காடிட்டுத்தான் வருவார். நமது புரவிகளைப்போல் அவர் புரவியும் சற்றுத் தொலைவில் தனித்துத்தான் நிற்கும்.

“திட்டிவாசல் பிரவேசத்தை மிகக் கெட்டிக்காரத்தன மாகவே பீமன் ஏற்பாடு செய்திருக்கிறானென்பதை உணர்ந்துகொண்ட அநபாயன், பீமனைப்போல் தாங்கள் நுழைவது அத்தனை கஷ்டமல்லவென்பதைப் புரிந்து கொண்டான். இருப்பினும் மேற்கொண்டும் சந்தேகம் ஏற்படவே கேட்டான் “மன்னன் வருவதாயிருந்தால் ஒரு புரவிதானே நின்றிருக்கும்.

“இல்லை, இல்லை. சில சமயம் பீமன் ஒரே ஒரு மெய்க்காவலனை அழைத்து வருவது உண்டு” என்று அந்தச் சந்தேகத்தையும் உடைத்த அமீர் மேலும் கையாள வேண்டிய முறைகளைக் கூறினான். “அநபாயரே! இதோ வாசல்! இன்னும் சில விநாடிகளில் இந்தத் திட்டிவாசற் கதவு ஓசைப்படாமல் திறக்கப்படும். முக்காட்டைத்,. தளர்த்தாமல் நேரே பார்த்தபடி உள்ளே நுழையுங்கள். காவலனைப் பேசாமல் பின்தொடருங்கள். தோப்பின் நடுவிலுள்ள வீட்டின் முகப்பில் சென்றதும் அவன் நின்று விடுவான். நீங்கள் சென்று எதிரேயிருக்கும் கதவைத் திறந்துகொண்டு உள்ளே செல்லுங்கள்” என்று விளக்கி னான் அமீர்.

குதிரைச் சாலைத் தோப்பு வீட்டை அடைய வேண்டியமுறை மிகத் தெளிவாக விளக்கப்பட்டதைக் கேட்ட அநபாயன், அமீரின் திறமையையும் அரண்மனை விவகாரங்கள், முறைகள் முதலியவற்றை அவன் நுட்பமாக அறிந்திருப்பதையும் எண்ணி உள்ளூர அவளைப் பாராட் டினான். அமீரைப்பற்றி அப்படி அவன் உவகை கொண்ட சமயத்தில் திட்டி வாசற்கதவு மெள்ளத் திறக்கப்பட்டது. முக்காட்டை நன்றாக இழுத்துவிட்டுக் கொண்டு தோப்புக் குள் அநபாயன் நுழைந்தான். அநபாயனிடம் நடை முறையை விவரித்துக் கொண்டிருக்கையிலேயே தன் புரவியின் பக்கங்களில் தொங்கிய பைகளிலொன்றிலிருந்து கனமான ஒரு துணி முடிப்பை எடுத்துக் கொண்ட அமீரும் அநபாயனைப் பின்பற்றித் தோட்டத்துக்குள் நுழைந்தான்.

தோட்டத்தில் சிறு செடி கொடிகள் அதிகமில்லாமல் எங்கும் பெரும் மரங்களே இருந்தன. அப்படியிருந்த பெரும் மரங்களும் நெருக்கமாக வைக்கப்படாமல் புரவி களைப் பிணைக்கும் நோக்கத்துடன் விட்டுவிட்டு வைக்கப் பட்டிருந்ததால் அவற்றின் ஒவ்வொன்றின் அடியிலும் நீளக் கயிறுகளில். பிணைக்கப்பட்ட புரவிகள் கால் பாவி நகர்ந்து கொண்டிருக்க முடிந்தது. முன்னே விளக்குக் காட்டிச் சென்ற காவலனைப் பின்பற்றிய அநபாயன் எத்தனை விதவிதமான சாதிக் குதிரைகள் அங்கிருந்தன வென்பதை மட்டுமின்றி அவற்றின் பழக்கத்துக்குத் தக்கபடி. அவை பிணைக்கப்பட்டிருப்பதையும் கண்டான். சில புரவிகளுக்குப் பின்னங்கால் ஒன்றில் மட்டும் பிணைக் கயிறு கட்டி மரத்தில் அக்கயிற்றைச் சுற்றிக் கட்டி யிருந்தார்கள். இன்னும் சில புரவிகளுக்குக் கழுத்திலும் இன்னும் சிலவற்றுக்கு இடுப்பின் வாளிப்பிலும் கயிறுகள் கட்டப்பட்டிருந்தன. இப்படிப் பலவிதமாகக் கட்டப்பட்ட கயிறுகளால் பலவிதமாக உடலைச் சிலுப்பியும் உலாவியும் கனைத்துக் கொண்டிருந்த குதிரைகள் மீது இடையே மரக் இளைகளில் ஊடுருவி வந்த சந்திர வெளிச்சம் விழுந் இருந்ததால் புரவிகள் தெய்வலோகப் புரவிகளைப் போலக் காணப்பட்டன..

புரவிகளின் கவர்ச்சி, வீரரான அநபாயன் இதயத்தை வெகு வேகமாக அந்தப் புரவிகளை நோக்கி இழுக்கத் தொடங்கியது. அப்படி இழுத்ததன் விளைவாகப் பேரு வகை கொண்ட அநபாயன் அத்தகைய புரவிகளைக் கொண்ட பீமனை அந்தச் சமயத்தில் மனத்துக்குள் பாராட்ட்வும் செய்தான். குதிரைகளுடன் உறவாட ஒரு மன்னன் தன்னந்தனியே திட்டிவாசல் வழியாக வருவா னேன் என்று முதலில் எண்ணிய அந்தச் சோழர்குல இளவல், “இத்தகைய புரவிகளுடன் விருதுகளில்லாமல், காவலர் பாதுகாப்பு இல்லாமல், தன்னந்தனியே இருப் பதைவிடச் சிறந்த இன்பம் வேறென்ன இருக்க முடியும்?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். அத்தகைய சிறந்த புரவிகளை உடைய பீமனிடம் பெரும் பொறாமை யும் கொண்டான் அவன். அந்தப் பொறாமையுடன் அரச ரீதியான பொறாமையும் கலந்துகொண்டது அந்த வீரன் மனத்திலே. சோழ நாட்டுக்கும் வெளிநாட்டுப் புரவிகள் வரத்தான் செய்கின்றன. ஆனால் அவை சோழர் &ழமுள்ள முசிறிப் பெருந்துறையில் இறக்கப்படுகின்றன. அங்கிருந்து வடநாட்டவரும் சேரரும் வாங்கியது போக மீதிக் குதிரை களே சோழநாட்டுக்குக் கிடைக்கின்றன. முசிறிப் பெருந் துறைக்கு அடுத்தபடி பாலூரே பெரும் துறைமுகம். அரபு நாடுகளிலிருந்து வரும் பல்வகைப் புரவிகள் கடாரத்துக்கும் காம்போஜத்துக்கும் சீனத்துக்கும் போகின்றன. ஆகவே இந்தப் பாலூர் பெருந்துறை மட்டும் சோழர் வசமிருந்தால் எத்தனை வகைப் புரவிகளை வாங்கலாம். எத்தனை தரமான வேகமான புரவிப் படையை அமைக்கலாம்!” என்று எண்ணம் துளிர்த்தது அந்த வீரனின் சிந்தையில். ‘ஏற்கெனவே திறமைமிக்க யானைப் படையை உடைய சோழர்களிடம் சிறந்த புரவிப் படையும் பெருகிவிட்டால் கலிங்கத்தை விழுங்குவதோ அந்தப் பீமனுக்குத் தகுந்த படிப்பினை அளிப்பதோ ஒரு பிரமாதமல்ல’ என்று தனக்குத்தானே கனவு கண்ட அநபாயன் அங்கிருந்த புரவிகளின் மீது வைத்த கண்ணை வாங்காமலே நடந்து சென்றான். புரவிகளிடம் இருந்த அந்த வீரச் சிந்தனையில் கனவு கண்டுகொண்டே தான் தோப்பின் நடுவிடுதிக்கு வந்துவிட்டதைக் கூட அறியால் விடுதியின் முகப்புக்கு வந்து ஏதோ பதுமைபோல் கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்குள்ளும் நுழைந்த பின்புதான் அவன் சுரணையடைந்தான். “இவர்தான் என் நண்பர்” என்று அமீரின் வார்த்தைகள் பலமாக ஒலித்தபின்பே இக உலகத்துக்கு வந்த அநபாயன் தன் கண்களைத் தூக்கி எதிரேயிருந்த குதிரைச் சாலைத் தலைவனை ஏறெடுத்து நோக்கினான்.

கலிங்கத்து அரண்மனைக் குதிரைச் சாலைத் தலைவன் அமீரைப் போலவே அரபு நாட்டைச் சேர்ந்தவனென் பதைப் பார்த்ததும் தெரிந்துகொண்ட அநபாயன், “சரி யான நபரைத்தான் புரவிகளின் பாதுகாப்புக்குப் பீமன் பொறுக்கியிருக்கறான்” என்று பீமனைக்கூட அந்தச் சமயத்தில் சிலாகித்தான். அமீரைவிட அதிக உயரம் பரும னுடனும் பெரிய தாடியுடனும் புஷ்டியான கன்னங்களுடன் னும் காணப்பட்ட அந்த அரபு நாட்டான் அநபாயர் தன்னை ஏறெடுத்துப் பார்த்ததுமே தலை வணங்கினான். அத்துடன் பணிவு பெரிதும் தொனித்த குரலில், “தாங்கள் யாரென்பது எனக்குத் தெரியும்” என்றும் கூறினான்.

அந்த அரபு நாட்டானை அதுவரை பார்த்திராத அநபாயன், ஆச்சரியத்தில் தஇளைத்தான். “என்னைப் பற்றிக் கேள்விப்பட்டி ருக்கலாம், பார்த்திருக்க முடியாது” என்றும் கூறினான்.

“கேட்டிருக்கிறேன். கேட்டது பார்த்தது போல்தான்” என்றான் குதிரைச் சாலைத் தலைவன்.

அமீர் இடைபுகுந்து, “தலைவரே! எங்களுக்கு மொத்தம் இருபது புரவிகள் வேண்டும். அதுவும் கட்டுக்கடங்காத, அதிகமாக பழக்கப்படாத புரவிகள் வேண்டும்” என்றான்.

குதிரைச் சாலைத் தலைவனின் புருவங்கள் ஆச்சரியத் தால் மேலெழுந்தன. “முரட்டுப் புரவிகளா வேண்டும்!” என்று அந்த அச்சரியம் முகத்தில் விரியவும் குரலில் தொனிக்கவும் கேட்டான்.

“ஆம்” என்றான் அமீர்.

“அதுவும் யாருக்கும் அடங்காமல் நாலா பக்கத்திலும் சிதறி வெகு வேகத்துடன் ஓடக்கூடிய புரவிகள் வேண்டு மென்பாய் போலிருக்கிறதே?” என்று ஏளனமாகக் கேட்டான் அரபு நாட்டான்.

“ஆம். அவைதான் வேண்டும்” என்று திட்டவட்ட மாகப் பதில் சொன்னான் அமீர்.

குதிரைச் சாலைத் தலைவனின் முகத்திலிருந்த ஏளனக் குறி மறைந்து அது இருந்த இடத்தைப் பயத்தின் சாயை ஆட்கொண்டது. “அவற்றை அவிழ்த்துவிட்டால் நேரக்கூடிய ஆபத்து என்னவென்று தெரியுமா?” என்று வினவினான் அந்த அரபு நாட்டான் குரலிலும் கிலியின் ஒலி பாய.

“தெரியும்” என்றான் அமீர்.

“அபத்தை எதற்காக விலைக்கு வாங்குகிறாய்?”

“தேவையாயிருக்கிறது.

“ஆபத்து தேவையாயிருக்கிறதா?”

“ஆம்!”

இதற்குப் பதில் என்ன சொல்வதென்று விளங்க வில்லை அந்தக் குதிரைச் சாலைத் தலைவனுக்கு. அமீரின் முகத்தை விட்டு அநபாயன் முகத்தை நோக்க, “அமீர் சொன்னதைக் கேட்டீர்களா?” என்று வினவினான்.

“ஆகா! கேட்டேன்” என்றான் அநபாயன்.

அவன் குரலில் பெரு மகழ்ச்சி ஒலித்தது.

அமீர் தன் கையிலிருந்த பொற்கழஞ்சுகளைக் கலகல வென்று அரபு நாட்டான் எதிரில் கொட்டினான். “இரண் டாயிரம் பொற்கழஞ்சுகள் இருக்கின்றன” எனறு கணக்குச் சொல்லி, பொற்குவியலைச் சுட்டியும் காட்டினான். புரவிச் சாலைத் தலைவன் கண்கள் பிரமை பிடித்த வண்ணம் பொற்காசுக் குவியலை இமைகொட்டாமல் பல விநாடிகள் பார்த்துக் கொண்டிருந்தன.

அரண்மனைப் புரவிகளில் ஒன்றை அரசர் அனுமதி யின்றி விற்பதே பெரும் குற்றம். அதற்கு மரண தண்டனை உண்டு. இருபது புரவிகளை விற்பது கனவிலும் நினைக்க முடியாத காரியம். அத்தகைய காரியத்துக்குத் தன்னைத் தூண்டிய இருவரையும் எதிரேயிருந்த பொற் குவியலையும் மாறி மாறிப் பார்த்த புரவிச் சாலைத் தலைவனின் முகம் பிரமையும் கிலியும் பிடித்துக் கலவரப் பட்டுக் கடந்தது. அடுத்தபடி புரவிகளை விற்க அமீர் சொன்ன திட்டம் அவனைப் பைத்தியம் பிடிக்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் - 30

இரவில் வந்த இருவர்

அரும்பாடுபட்டுப் பெரும் விலை கொடுத்துக் கலிங்கத்து மன்னனான பீமன் திரட்டி வைத்திருக்கும் இணையற்ற அரபுப் புரவிகளில் இருபதை விலைக்கு வாங்க வந்ததன்றி, அவற்றுக்கான பொன்னையும் தன் முன்னால் கொட்டிக் குவித்த அமீரையும் அவனுடன் ஆஜானுபாகுவாய் நின்ற அநபாயனையும் குழப்பமும் திகிலும் கலந்த பார்வையுடன் நோக்கிய அரண்மனைக் குதிரைச்சாலைத் தலைவன் நீண்ட நேரம் பதில் சொல்ல வகையறியாது மிரண்டு விழித்துக்கொண்டு நின்றான். அமீர் தன் நாட்டவன் என்ற காரணத்தாலும் அத்துடன் தன் உயிர் நண்பனென்ற நினைப்பினாலும் அவனுக்கு எந்த உதவியும் செய்யத் தயாராயிருந்த குதிரைச் சாலைத் தலைவன், அமீர் கேட்ட உதவியால் தன் பதவி, உயிர் அத்தனையும் பறிபோய்விடும் என்பதை உணர்ந்ததன் விளைவாகப் பெரும் பிரமை பிடித்துப் பல நிமிஷங்கள் குழம்பவே செய்தான். அது தவிர, யாரும் வாங்க அஞ்சும் பழக்கப்படாத முரட்டுப் புரவிகளை அவர்கள் ஏன் வாங்க முற்படுகிறார்களென்பதும் அவனுக்குப் புரியாத புதிராயிருக்கவே, இதில் ஏதோ மர்மம் புதைந்து கிடக்கிற தென்பதை மட்டும் உணர்ந்துகொண்டாலும் அந்த மர்மம் எதுவாயிருக்கக்கூடும் என்பது தெரியாததால் ஓரளவு திணறவும் செய்தான். அவர்கள் கேட்பதுபோல் தான் எந்தக் காரணத்தைக் கொண்டு விற்பது, விற்றாலும் அவற்றை எப்படிக் குதிரைச் சாலையிலிருந்து அப்புறப் படுத்துவது, என்ற விஷயங்களை எண்ணிப் பார்த்துச் சிந்தை கலங்கிய அந்த அரபு நாட்டான் தன் குழப்பத்தி லிருந்து விடுதலையடைந்தாலும் கிலியிலிருந்து விடுதலை யடையாதவனாய் மெள்ள மெள்ளத் தன் எண்ணங்களைக் கேள்விகளாகத் தொடுக்கவும் முற்பட்டு, “அரண்மனை விற்பனைச் சாலையல்லவென்பதை நான் உனக்குச் சொல்ல வேண்டுமா அமீர்?” என்று வினவினான் உள்ளத் தில் பரவி நின்ற கிலி குரலிலும் ஒலி பாய.

வந்த காரியத்தின்மீது மெதுவாக ஆட்சேபனைப் புயல் வீச முற்பட்டுவிட்டதை உணர்ந்த ‘அநபாயன், தன் கூரிய விழிகளை அமீரின்மீது திரும்பினான். அந்த விழி களைச் சந்திக்க முடியாத அமீர், தன் பார்வையைக் குதிரைச் சாலைத் தலைவன் விழிகளுடனேயே உறவாட விட்டு, “அரண்மனையை வர்த்தகச் சாலையென்று யாரா வது சொல்வார்களா? அதற்குத்தான் கலிங்கத்தின் பொது அங்காடி இருக்கிறதே. அது மட்டுமா? பெருவணிகர் சிறு வணிகர் வீதுகளிலும் வர்த்தகசாலைகள் இருக்கின்றனவே” என்றான் சர்வ சாதாரணமாக.

“அப்படியிருக்க அரண்மனையில் புரவி வாங்க ஏன் வந்தாய்?” என்று மீண்டும் வினவினான் அந்த அரபு நாட்டான்.

“மற்ற இடங்களில் கடைக்காதவை இங்கஇிருப்பதால் தான்” என்று பதில் சொன்னான் அமீர்.

“கலிங்கத்தில் வேறெங்கும் புரவிகள் கிடைக்காதா?” குதிரைச்சாலைத் தலைவன் குரல் அப்பொழுதும் குழம்பிக் கடந்தது.

“திடைக்காமலென்ன? கிடைக்கும், ஏராளமாகக் கடைக்கும்” என்றான் அமீர்.

“அப்படியானால் அந்தப் பொதுச் சாலைகளில் வாங்குவதுதானே?” என்று வினவினான் அரபு நாட்டான்,

“நாங்கள் பொதுச் சாலையில் தலைகாட்ட முடியா தென்பது ஒரு காரணம்” என்றான் அமீர் மெதுவாக.

“ஏன்?” கேள்வி ஆச்சரியத்துடன் எழுந்தது.

“இன்று கலிங்கத்தின் நீதி மண்டபத்தில் நடந்தது தெரியுமல்லவா?” அமீரின் இந்தப் பதிலில் ஓரளவு விளக்கமும் இருந்தது.

“தெரியும் தெரியும்” என்று கூறித் தலையையும் ஆட்டிய குதிரைச் சாலைத் தலைவன் அநபாயனை ஆச்சரியம் ததும்பும் கண்களுடன் நோக்க, “இத்தகைய சாகசச் செயல்கள் அரபு நாட்டில் நடப்பதுண்டு. இந்த நாட்டில் நடப்பதை இன்றுதான் கேள்விப்பட்டேன். மிகவும் துணிகரச் செயல்” என்று பாராட்டிவிட்டு, மீண்டும் அமீரை நோக்கி, “புரிகிறது அமீர்! நீதி மண்டபச் சம்பவத்துக்குப் பிறகு அநபாயர் பொதுச்சாலைகளில் தலை காட்டுவது அபாயம். நீ அவர் நண்பன் என்பதும் கலிங்கத்தின் ஆட்சியாளருக்குத் தெரியும். ஆம், ஆம். நீங்களிருவரும் மறைவிலிருப்பதுதான் உ௫தம்” என்று உள்ள நிலையைத் தெளிவாக விவரித்தான்.

குதிரைச்சாலைத் தலைவன் அத்தனை திட்டமாக நிலைமையைப் புரிந்தகொண்டதைப் பற்றி மகழ்ச்சி கொண்ட அமீர் புன்முறுவலொன்றையும் தன் பெரு உதடு களில் தவழவிட்டு, “இப்பொழுது புரிகிறதா நான் உங்களி டம் புரவி வாங்க வந்த காரணம்?” என்றும் வினவினான்.

உண்மையில் அந்த அரபு நாட்டானுக்கு விளங்க வில்லை காரணம். ஆகவே அவன் கேட்டான், “பொதுச் சாலைகளுக்கு நீங்கள் போக முடியாதிருக்கலாம். நான் போகலாமல்லவா?” என்று.

“போகலாம்” என்றான் அமீர்.

“அப்படியானால் உங்களுக்குப் பதில் புரவிகளை நான் வாங்கலாமே?” என்றான் குதிரைச் சாலைத் தலைவன்.

“வாங்கலாம். அதில் சில கஷ்டங்களிருக்கின்றன” என்று சுட்டிக் காட்டினான் அமீர்.

“என்ன கஷ்டம்?”

“முதன் முதலில் உங்களை அரண்மனைக்குப் புரவி வாங்கவே அரசர் நியமித்திருக்கிறார்.

“ஆம்.

“அரண்மனைப் புரவிகள் அங்காடியிலிருந்து வாங்கப் படுவதில்லை.

“இல்லை.

“நேராக மரக்கலங்களில் வந்திறங்கும் ம றவிகளில் சிறந்தவற்றை வாங்கிவிட்டுப் பிறகுதான் அங்காடிக்குப் புரவிகள் அனுப்பப்படுகின்றன.

“ஆம்...” உள்ளூர ஏற்பட்ட சந்தேகத்தால்’ வார்த் தையை நீள இழுத்தான் அரபு நாட்டான்.

“நீர் அங்காடியில் புரவி வாங்குவது அரசருக்குத் தெரிந்தால் முதலில் பதவி போய்விடும்...” என்று அமீரும் இழுத்தான்.

அரபு நாட்டான் கண்கள் அச்சத்தால் பெரிதாக விரிந்தன.

“உம்...” என்ற பதில் ஒலியிலும் அந்த அச்சம் விரிந்து கடந்தது.

“அடுத்தபடி.

புரவிகள் பிறருக்கு வாங்கப்பட்டது என்பது தெரிந்தால்...” என்று நீட்டினான் அமீர்.

“திறை வாசம்” என்று திகிலுடன் வந்தது.

அரபு நாட்டான் பதில்.

“அநபாயருக்காக வாங்கப்பட்டது என்பது தெரிந்தால் சிரச்சேதம்” இதைச் சர்வ சகஜமாகச் சொல்லி. வார்த்தையை முடித்த அமீர், “இப்பொழுது தெரிகிறதா பொதுச் சாலைகளில் எங்களுக்காக நீரும் புரவி வாங்க முடியா தென்பது?” என்றும் கேட்டான்.

அமீருக்கு என்ன பதில் சொல்வதென்பதை அறியாமல் விழித்த குதிரைச் சாலைத் தலைவன், “அப்படி யானால் அரண்மனைப் புரவிகளை விற்பது உ௫தம் என்பது உனது கருத்தா?” என்று ஆத்திரத்துடன் வினவினான்.

“இதைப் பாருங்கள்” என்று பதிலக்கு அமீர் எதிரே குவித்திருந்த இரண்டாயிரம் பொற்கழஞ்சுகளைச் சுட்டிக் காட்டினான்.

“என் உயிர் இரண்டாயிரம் பொற்காசுகள்தான் பெறுமா?” அரபு நாட்டான் கேள்வியில் ஆத்திரத்தின் எல்லை தெரிந்தது.

“பெறுமானம் எத்தனை என்பதைச் சொன்னால் கொடுக்கச் சித்தமாயிருக்கிறோம்.

ஐயாயிரம்...” என்று கேட்டு நகைத்தான் அமீர்.

அரபு நாட்டானின் பெரும் கண்கள் கனலைக் கக்கின.

“விளையாட இது நேரமல்ல அமீர்.

புரவி விற்பனைக்கு இது இடமுமில்லை” என்றான் அவன்.

“உண்மை, உண்மை” என்றான் அமீர்.

“எது உண்மை?” என்று சீறினான் குதிரைச்சாலைத் தலைவன்.

“விளையாட இது நேரமில்லையென்பது.

“விற்பனைக்கும் இது இடமில்லை என்று கூறினேன்” என்று கோபத்துடன் சுட்டிக் காட்டினான் அரபு நாட்டான்.

“அதில்தான் அடியவனுக்குச் சற்று கருத்து வேற்றுமை யிருக்கிறது” என்று அமீர் விண்ணப்பித்துக் கொண்டான், “கருத்து வேற்றுமையா?” உச ஆம்.

“என்ன கருத்து வேற்றுமை?”

“புரவிகளை நாங்கள் எங்காவது வாங்க வேண்டு மென்றால் அரண்மனையில்தான் வாங்க முடியும். அது மட்டுமல்ல. எங்களுக்குத் தேவையான முரட்டுப் புரவிகள் பொதுச் சாலைகளில் கிடைக்காது.

“இந்தப் பதிலைக் கேட்டதும் குதிரைச் சாலைத் தலைவனின் இதழ்களில் இகழ்ச்சி நகை விரிந்தது.

“புரவிகள் வாங்க வேண்டுமானால் இங்குதான் வாங்க வேண்டுமா?”

“ஆம்” என்றான் அமீர்.

“அதுவும் முரட்டுப் புரவிகள்!”

“ஆம்.

ஆம், “

“அமீர்!”

“உம்.

“உனக்குப் பைத்தியம் ஏதாவது உண்டா?”

“இதுவரை இல்லை.

“அப்படியானால் புரவிகளை வாங்க அரண்மனை தான் சரியான இடம் என்று ஏன் சொல்லுகிறாய்?” “ஏனெனில் நாங்கள் புரவிகளை மீண்டும் விற்க வேண்டியதில்லை” என்று மிக மெதுவாகவும் திடமாகவும் சொன்னான் அமீர்.

முன்னுக்குப் பின் முரண்பாடாக’ வந்த அமீரின் பதிலில் ஏதோ மர்மம் புதைந்திருக்கிறதென்பதைப் புரிந்து கொண்ட குதிரைச் சாலைத் தலைவன் அமீரின் முகத்தை நன்றாக அராய்ந்தான். இருவர் கண்களும் நீண்ட நேரம் சந்தித்தன. அந்தச் சந்திப்பிலிருந்து பார்வையை அகற்றாமலே சொன்னான் அமீர், “புரவிகள் விற்பனைக்கு வேண்டியதில்லை. வாடகைக்குத்தான்” என்று.

“வாடகைக்கா?” மெள்ள வந்தது அரபு நாட்டான் கேள்வி. அவன் மூச்சு மட்டும் பெரிதாக வந்தது.

“ஆம். சில நாழிகைகளுக்கு” என்ற அமீர், “வேண்டு மானால், அநபாயரைக் கேளுங்கள்” என்றான்.

அவர்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டும் ஏதும் பேசாமல் மெளனமாக நின்றிருந்த அநபாயனை நோக்கிய அரபு நாட்டான், அமீரின் பேச்சுக்கு அந்த வீர முகத் திலும் ஆமோதிப்பு இருந்ததைக் கவனித்தான். அவன் விழி களில் பயம் விரிந்தது. ஏதோ அபாயமான திட்டத்தில் அந்த இருவரும் தன்னை ஆழ்த்தத் திட்டமிட்டு வந்திருக் கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட குதிரைச் சாலைத் தலைவன், அமீரை மீண்டும். நோக்கி, “விவரமாகச் சொல் அமீர். புரவிகள் தற்காலிகமாக உங்கள் வசமிருக்க வேண்டுமா?” என்று கேட்டான்.

“இல்லை, இல்லை. உங்கள் வசமே இருக்கலாம். இரண்டு நாழிகைகள் நாங்கள் சொல்லும் இடத்திலிருந் தால் போதும். அதற்குப். பிறகு நீங்கள் புரவிகளை இங்கு கொண்டு வந்துவிடலாம். அதற்குத்தான் இரண்டாயிரம் பொற்காசுகள்” என்று விளக்கிய அமீரின் பெருவிழிகள் அர்த்த பாவத்துடன் அரபுநாட்டான் முகத்தில் நிலைத்தன.

“எந்த இடத்தில் புரவிகளை நிறுத்த வேண்டும்?” என்று கேட்டான் விஷயத்தை மெள்ளப் புரிந்துகொள்ளத் துவங்கிய குதிரைச்சாலைத் தலைவன்.

“கடற்கரையில்” என்று அமீர் குறிப்பிட்டான்.

“கடற்கரைக்குப் புரவிகளை ஏன் கொண்டு போனாய் என்று கேள்வி வந்தால்?”

“அரபு நாடு பாலைவன நாடு.

“ஆம்.

“அராபியப் புரவிகளை மணலில்தான்’ பழக்க வேண்டும்.

“ஓகோ!”

“அகவே அரண்மனை முரட்டுப் புரவிகள் இருப் பதைக் கடற்கரையில் பழக்குகிறீர்கள். இதை யாரும் ஆட்சேபிக்க முடியாது.

“முடியாது, முடியாது.

“பழக்கப்படும்போது புரவிகள் தாறுமாறாக ஓடுவது வழக்கந்தானே.

“ஆமாம்.

“அதையும் யாரும் ஆட்சேபிக்க முடியாது.

“முடியாது.

“அவ்வளவுதான் எங்களுக்குத் தேவை.

“எந்தச் சமயத்தில் புரவிகள் கடற்கரைக்கு வர வேண்டும்?” என்று கேட்டான் அரபு நாட்டான்.

“நாளை இரவு ஆறாவது நாழிகை வரட்டும். எட்டா வது நாழிகைக்கு மேல் அவை அங்கிருக்கத் தேவையில்லை. முரட்டுக் குதிரைகளை இரவில் பழக்குவது வழக்கமாத லால் எவ்விதச் சந்தேகமும் ஏற்படாது” என்று சுட்டிக் காட்டினான் அமீர்.

குதிரைச் சாலைத் தலைவன் அநபாயன்மீது தனது கண்களைத் திருப்பினான். “அநபாயரே! உஙகளைப் போல் சிறந்த வீரர்கள் உலகத்தில் மிகவும் அபூர்வம். அந்த வீரத்துக்கும் அமீரின் நட்புக்கும் நான் பணிகூறேன். எந்த நேரத்துக்கு நான் குதிரைகளைப் பழக்க வேண்டும் கடற்கரையில்?” என்று கேட்டான்.

“அதற்கு அடையாளம் தரப்படும்” என்றான் அநபாயன்.

“எப்பொழுது? எங்கு?” என்று வினவினான் அரபு நாட்டான்.

“கடற்கரையில், ஆகாயத்தைக் கவனித்திரும்.

“புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக தலையசைத்தான் அந்த அரபு நாட்டான்.

அநபாயன் மீண்டும் சொன்னான் “குதிரைச் சாலைத் தலைவரே! நீர் நமக்கு இன்று செய்யும் உதவிக்குப் பிரதி இந்த இரண்டாயிரம் பொற்கழஞ்சுகளல்ல. உமது உதவி யால் பெரும் அரசுகள் பயன்பெறப் போகின்றன. அந்தப் பயன் தகுந்த உருவெடுக்கும்போது அநபாயன் நெஞ்சத்தில் முதலில் நீர்தானிருப்பீர்.

“உணர்ச்சியுடனும் அவேசத்துடனும் ராஜரீகத்துடனும் உதிர்க்கப்பட்ட சொற்களால் சொர்க்க போகத்தை அடைந்த அந்த அரபுநாட்டான் தலையை மிகவும் தாழ்த்தி அநபாயனை வணங்கினான். “இந்த அடிமையின் உயிர் இனி தங்களுடையது” என்றும் கூறினான்.

இந்த உறுதிமொழிக்குப் பிறகு அவனிடம் விடை பெற்றுக்கொண்டு செல்ல எழுந்த அநபாயன், அமீர் இருவரில் அமீர் மட்டும் தஇடீரென ஒரு விநாடி நின்று, “ஒரு முக்கிய விஷயம் மறந்துவிட்டேன்” என்று குதிரைச் சாலைத் தலைவனை நோக்கிக் கூறினான்.

“என்ன விஷயம்?”

“தங்களிடம் ஒப்படைத்தேனே சில பணியாட்கள்...

பணிப்பெண்கள்...

“ஆம், ஆம்.

“அவர்களைப் பொழுது விடிவதற்குள் இல்லத்திற்கு அனுப்பிவிட வேண்டும்.

“மிகவும் கஷ்டமாயிற்றே!”

“தங்களுக்கு எதுவும் கஷ்டமில்லை. அவசியம் அனுப்பிவிடுங்கள்” என்று திட்டமாகக் கூறி அந்த அரபு நாட்டானைத் தலை தாழ்த்தி வணங்கிய அமீர், அதற்கு மேல் தாமதிக்காமல் அநபாயனை அழைத்துக்கொண்டு புறப்பட்டு, பழையபடி திட்டிவாசலுக்கு வெளியே வந்ததும், இருவரும் தலை முக்காடுகளை இழுத்துப் போர்த்திக் கொண்டு புரவிகளில் ஏறிச் சென்றார்கள்.

வணிகர் வீதியிலிருந்த இல்லத்தை அணுகியதும் அதற்குமேல் ஆபத்து ஏதுமில்லையென்ற காரணத்தால் முக்காட்டை நீக்கிய அமீர், “பிரபு! நீங்களும் முக்காட்டை எடுத்துவிடுங்கள் “ என்று உற்சாகத்துடன் கூற முற்பட்ட வன் திடீரென்று பேச்சை நிறுத்திக் கடிவாளத்தை இழுத்துப் புரவியையும் நிறுத்தினான்.

அவன் செய்கையைக் கவனித்த அநபாயனும் தானும் புரவியை நிறுத்தி, “என்ன அமீர்?” என்று கவலையுடன் வினவினான்.

பதிலுக்கு அமீர் தன் இல்லத்தின் வாயிலைச் சுட்டிக் காட்டினான். வாயிலில் இரு புரவிகள் நின்றிருந்தன. இரண்டும் அரசாங்க வீரர்களின் புரவிகள் என்பது அவற்றின் மீதிருந்து தொங்கிய பக்கச் சிலைகளிலிருந்து மிகத் திட்டமாகத் தெரிந்தது. அந்தப் புரவிகளிலிருந்து அப்பொழுதுதான் இறங்கிய இரு வீரர்கள் அமீரது விடுதி யின் பெருங்கதவை நோக்கி மெள்ளச் சென்றனர். அடுத்த படி கதவு தட்டப்படும் என்று அமீரும் அநபாயனும் எதிர்பார்த்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடி காரியம் நடக்கவில்லை. வர்த்தகர்களில் ஒருவன் தன் அங்கியி லிருந்த பெரும் சாவியொன்றை எடுத்து அந்தப் பெருங் கதவின் பூட்டு வாயில் பொருத்தினான். அமீரின் கண் களில் வியப்பும் பிரமிப்பும் மிதமிஞ்சித் தாண்டவமாடின. “பிரபு! பிரபு! ஆபத்து வந்துவிட்டது!” என்று அச்சத்துடன் குழறினான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top