• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode கடல் 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,562
Reaction score
7,650
அத்தியாயம் – 7

மயக்கத்தில் இருக்கும் அவர் பேத்தி ஶ்ரீதேவியை பார்த்து, அவர் மனது உடைந்து போனது. இந்த கல்யாணத்திற்கு வர மாட்டேன் என்றவளை, வம்படியாக இழுத்து வந்தவர் அவர் தான்.

பெற்றவர்கள் இருவரும் நேற்று நலங்கு முடித்த கையோடு, வேறு ஒரு உறவினர் வீட்டு விசேஷம் ஒன்றிற்காக ரயிலேறி சென்றனர்.

பாட்டியும், பேத்தியுமாக தான் வந்து இருந்தனர். வந்த இடத்தில், திடீர் திருப்பமாக பேத்தியின் கழுத்தில் இருக்கும் தாலி மணமகன் சேதுராம் வீட்டில் கட்டக்கூடியதாக இருந்தது.

ஆம்!! அந்த கல்யாண பரபரப்பில், ஒரே நிறத்திலும், ஒரே வளர்த்தியிலும் இருந்த இருவர் ஶ்ரீதேவியும், வசுந்தராவும் தான்.
இதை வைத்து தான் அங்கே அவர்கள், ஶ்ரீதேவியை மனையில் அமர வைத்துவிட்டு, இங்கே மறுபக்கம் தனபால் கையால் தாலியை வாங்கிக் கொண்டார் வசுந்தரா.

தாலியை பார்த்த பாட்டிக்கு, அந்த தாலி யார் கட்டியது என்று புரியவில்லை. ஏனெனில், இந்த தாலி ஜமீன் வம்சாவளியில் இருப்பவர்களுக்கு மட்டுமே உரியது.

ஒரு பெண்ணின் கழுத்தில், அத்தாலி ஏறியது என்றால், அவளும் அந்த ஜமீனின் கோட்டைக்கு உரியவள் என்று அர்த்தம்.

இப்பொழுது, இதை யாரிடம் சொல்லுவது? இங்கு இருந்து பேத்தியை எவ்வாறு அழைத்து செல்வது என்ற குழப்பத்தில் இருந்தார்.

முதலில் தாலியை உள்ளே புடவைக்குள் மறைத்து வைத்து, பின் குத்திவிட்டார்.

ஒரு பெண் வந்து, உங்கள் பேத்தி மயக்கத்தில் அந்த அறையில் இருக்கிறாள், என்று கூறியவுடன் மணமேடைக்கு கீழே உறவினர்களுடன் பேசிக் கொண்டு இருந்தவர், செய்தி கேட்டு அங்கே விரைந்தார்.

கழுத்தில் இருந்த தாலியை பார்த்து, அதிர்ந்தவர் தான் அதன் பின் முதலில் இங்கு இருந்து வெளியேற வேண்டும் என்று எண்ணினார்.

பேத்தியின் முகத்தில் தண்ணீர் எடுத்து அடித்து ஊற்றினார். அதற்கும், அவள் அசையவில்லை எனவும் பயம் பிடித்துக் கொண்டது.

இருந்தாலும் இப்பொழுது நிதானமாக இருக்க வேண்டும் என்று எண்ணியவர், உடனே அவருக்கு நம்பிக்கைக்குரிய உறவினர் ஒருவரை அழைத்துக் கொண்டு வந்துவிட்டார் அந்த அறைக்கு.

“என்ன அத்தை, தேவி தூங்குதா?!!” என்று கேட்டார் அவரின் அண்ணன் மகள் அனிதா.

“அனிதா!! தேவி மயக்கத்தில் இருக்கு, யாரோ அவளை இப்படி பண்ணி இருக்காங்க” என்று அழுதார்.

“ஹையோ அத்தை!! என்ன சொல்லுறீங்க?” என்று அதிர்ந்து போய் கேட்டார்.

“ஆமா அனிதா!! எனக்கு இப்போ உன்னை விட்டா யார்கிட்டேயும் உதவி கேட்க தோணல” என்று மருகினார்.

அவரை அப்படி பார்க்கவே, அவரால் தாங்க முடியவில்லை.

எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு நல்ல மனுஷி.

அதன்படி, நிறைய நேரம் உதவியும் செய்து இருக்கிறார். அவருக்கு உதவி செய்ய, இப்பொழுது அவர் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை, என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்.

“முதல இங்கு இருந்து போகணும் அனிதா, யார் கண்ணிலும் படாமல் இவளை கூட்டிட்டு ஆஸ்பத்திரி போகணும்” என்றார்.

“அத்தை, முதல நான் வெளியே இப்போ என்ன நிலவரம்ன்னு பார்கிறேன். நீங்க உள்ள பூட்டிகோங்க, யார் தட்டினாலும் கதவை திறக்காதீங்க, நான் வந்து சத்தம் கொடுத்த பிறகு கதவை திறங்க”.

“நான் அதுக்குள்ள, நீங்க போக வண்டி இருக்கா பார்கிறேன்” என்று கூறிவிட்டு சென்றார்.

அவர் வரும் வரைக்கும், பேத்தியை பார்த்து பார்த்து, அவர் கண்கள் கலங்கிக் கொண்டே இருந்தது.

அதற்குள் வெளியே வந்த அனிதாவை, ஒரு கரம் வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு அந்த அறையில் இருந்து கடைக்கோடியில் உள்ள அறைக்குள் இழுத்துக் கொண்டது.

யாரடா அது என்று அவர் அதிர்ந்து பார்க்க, அங்கே மணமகன் சேதுராம் இருக்கக் கண்டு அதிர்ந்தார்.

“டேய்!! மேடையில் இருக்கணும்டா தம்பி நீ, இங்கின என்ன பண்ணுத?!” என்று கேட்டார்.

“அக்கா!! எனக்கு ஒரே குழப்பமா இருக்குக்கா, இந்த நேரத்தில் உம்ம விட்டால் யார் கூடவும் இத்த சொல்ல முடியாது என்னால” என்றார்.

“என்ன குழப்பம் உமக்கு??!! அங்கின மாப்பிள்ளையை தேடுவா எல்லாம்” என்று பதட்டப்பட்டார்.

ஏனெனில், அவருக்கு தான் தன் உறவினர்கள் பற்றி தெரியுமே. எங்கே என்ன செய்தி கிடைத்தாலும், பத்தோடு பதினொன்றாக எல்லாம் திரித்து கூறுவர் என்று.

“அக்கா நான் அப்பா கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன். ஒரு அரை மணி நேரம் இங்க தான் இருப்பேன், யாரும் தொந்தரவு பண்ணாதீங்கன்னு சொல்லிட்டு தான் வந்து இருக்கேன்” என்று அவனின் அடக்கப்பட்ட நிதானம் கண்டு அனிதா யோசனையானார்.

என்ன விஷயம் என்பது போல் அவர் பார்க்க, அவன் தன் சந்தேகத்தை விளக்கி கூறினான்.

அதை கேட்ட அனிதா அதிர்ந்து விட்டார், அவருக்கு அவன் சொன்னதை வைத்து இப்பொழுது அங்கே மயங்கி கிடக்கும் ஶ்ரீதேவி தான் கண் முன் தோன்றினார்.

மனம் சற்று படபடத்து போனது அவருக்கு, சற்று பொறு வருகிறேன் என்று கூறி மீண்டும் ஶ்ரீதேவி இருந்த அறைக்குள் நுழைந்தார்.

“என்னமா போகலாமா” என்று தவிப்புடன் கேட்ட அவரின் அத்தையை பார்த்து, அவருக்கு மனம் வலித்தது.

இருந்தும், இப்பொழுது சில விஷயங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நினைத்தவர், தன் அத்தையிடம் முதலில் சாப்பிட்டு வருமாறு கூறி அனுப்பி வைக்க பார்த்தார்.

“இங்க பாருங்க அத்தை, அண்ணியும், அண்ணாவும் வர ஒரு வாரம் ஆகும்னீங்க. நீங்க கொஞ்சம் சாப்பிட்டு தெம்பா இருந்தாதேன் நம்ம தேவியை பார்த்துக்க முடியும்” என்று மிரட்டி அனுப்பி வைத்தார் அவரை.

அதன் பின் கதவை அடைத்துவிட்டு, தாலி எதும் கழுத்தில் இருக்கிறதா என்று சோதனை செய்ய ஆம் அங்கே சேது கட்டிய தாலி இருந்தது.

மனதிற்குள் ஒரு வலி எடுக்க, இனி தேவியை எப்படி சேதுவுடன் சேர்த்து வைக்க என்று கவலையானார்.

தாலியை திரும்பி அதே போல், உள்ளே மறைத்து வைத்துவிட்டு அவரின் அத்தை வரவும் முதலில், இவர்களை அங்கு இருந்து பத்திரமாக வெளியே இருந்த அம்பாசடர் வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

அவருக்கு ஒரு பயம், உள்ளே மணமகள் வசுந்தரா வேறு இருக்க, இங்கே இவளும் இப்படி ஒரு நிலையில் இருந்தால் பிறகு பெரிய பிரச்சினை உருவாக வாய்ப்பு இருப்பதாகவே அவருக்கு பட்டது.

ஆகையால் முதலில் அவரின் அத்தையோடு, ஶ்ரீதேவியை அனுப்பி வைத்துவிட்டு, மணமகன் சேதுவை தேடி விரைந்தார்.

அதே அறையில், தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தான் சேதுராமன்.

“டேய்!! நான் நல்லா பார்துபுட்டேன் எல்லாம் உன் பிரம்மைல. போ முதல முகத்தை அழும்பிட்டு, போய் மேடையில் ஏறி நில்லு” என்று கூடவே இருந்து, மேடை அவர் ஏறி நின்ற பிறகு தான் ஆசுவாஸபட்டார்.

ஆனால் அங்கே சேதுராம் இன்னும் தெளியாத மனநிலையில், தான் இருந்தார்.

புகை மூட்டம் சரியாக தாலி கட்டும் பொழுது, அதிகமாக இருக்கவுமே அவர் சற்று சுதாரித்து தான் இருந்தார்.

இருந்தாலும் அங்கே சற்று மெல்லிய வெளிச்சத்தில், அங்கே அமர்ந்து இருப்பது யார் என்று தெரியவில்லை என்றாலும், அந்த புடவை அவரின் மனதில் சற்று நெருடலை கொடுத்து இருந்தது.

எதோ ஒரு உந்துதலில், தாலியை கட்டி விட்டார். இப்பொழுது யோசிக்கையில், எதோ தவறாக பட்டது அவருக்கு.

ஆகையால் தான் தனக்கு நெருக்கமான அனிதா அக்காவிடம், அவர் சற்று என்னவென்று பார்க்குமாறு கூறினார்.

இதில் யாரை குறை சொல்லுவது??!!

அடுத்து அடுத்து, மணமக்களை ஆசிர்வதித்து எல்லோரும் செல்ல,

ஒரு நெருடலுடன் தான் நின்று இருந்தார் சேதுராம்.

இரவில் அவர் அறையில் சாந்தி முகூர்த்த ஏற்பாடுகள் நடக்க, காலையில் இருந்து ஒரு வித அழுத்தத்துடன் இருந்தவருக்கு, பெண்ணிடம் தன் சந்தேகத்தை கேட்டு விடுவது என்ற முடிவுடன் இருந்தார்.

வசுந்தராவோ இவ்வளவு தூரம் வந்தவர், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தனக்குள்ளே அடுத்து அடுத்து திட்டங்கள் வகுத்து விட்டார்.

அன்றைய இரவில், சேதுராம் அறைக்குள் நுழைந்தவர், அவரிடம் தன் மனதில் இருப்பதை கூற தொடங்கினார்.

“காலையில் புகை மூட்டத்தில், ஆரம்பிச்ச தலைவலி இப்போ வரைக்கும் அப்படியே இருக்குங்க”.

“தப்பா எடுத்துக்காதீங்க, இன்னைக்கு இது வேண்டாமே. நாம ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சா பிறகு, இதை பார்த்துக்கலாமே” என்று இயல்பாக அவர் கூறவும், சேதுராம் ஒருவித நிம்மதி பெருமூச்சு விட்டார்.

அது ஏன் என்று தெரியவில்லை, ஆனால் ஒருவித அழுத்தம் குறைந்த உணர்வு தான் அப்பொழுது அவருக்கு.

இப்படியே நாட்கள் செல்ல, சென்னை குடி வந்தனர் தம்பதிகள்.

வசுந்தரா, கல்லூரிக்கு செல்ல ஆரம்பிக்க, இவர் அங்கே தனக்கு சொந்தமான சணல் பேக்டரி சென்று கொண்டு இருந்தார்.

இந்த பேக்டரி ஆரம்பித்து, கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகியது.

ஊரில் பருத்தி ஆலை, விவசாயம் எல்லாம் பார்த்துக் கொண்டாலும், இங்கே உள்ள பேக்டரி சென்னை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து, மக்களை வைத்து வித விதமான சணல் பொருட்களை உருவாக்கி, அதை வெளிநாட்டுக்கு, இன்னும் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு விற்பனை செய்து, லாபம் பார்க்கிறார்.
இது அவரின் கனவு மட்டும் அல்லாது, பல மக்களின் வாழ்வாதாரம் என்பதால் இதை அவர் கண்ணும் கருத்துமாக பார்த்து வந்தார்.

இப்படியே ஒரு வருடம் செல்ல, வசுந்தரா ஒரு பக்கம் தனபாலுடன் குடும்பம் நடத்த தொடங்கினார்.

“வசு இது ரிஸ்க், அப்புறம் கர்ப்பம் ஆகிட்டா அவனுக்கு சந்தேகம் வராதா?!!” என்று கேட்டார் தனபால்.

“தனு!! எல்லாம் நான் பிளான் பண்ணி தான் பண்ணுறேன். எப்படியும் அடுத்து வீட்டில் உள்ளவங்க இன்னும் விசேஷம் இல்லையான்னு கேட்பாங்க, அதுக்கு இப்படி ஒரு செக் வேணும்” என்றவள் அவரை காதல் பார்வை பார்க்க அதன் பின் அங்கே வேறு பேச்சுக்கள் இல்லை.

இதற்கிடையில் சேதுராமன் ஒரு வித யோசனையில் இருந்தார்.

திருமணம் நடந்த நாளில் இருந்து, அவருக்கு ஏகபட்ட குழப்பம்.

அதுவும் சில நாட்களாக, வசுந்தராவின் பார்வையும், காலையில் எழும் பொழுது தான் இருந்த நிலையும் அவருக்கு ஒருவித அசௌகரியத்தை கொடுத்தது.

இரவில் எப்பொழுதும் போல், பாலை குடித்துவிட்டு தூங்கினால் காலை நான்கு மணிக்கு எல்லாம் எழுந்து, சூரிய நமஸ்காரம் செய்யும் வழக்கம் கொண்டவர்.

இந்த ஒரு மாதமாக அவரால் எழ முடியவில்லை அந்த நேரத்திற்கு.

இரவும், மங்கலாக எதோ ஒரு வித்தியாசம் உணர்கிறார்.

எப்பொழுதும் விழிப்புடன் தான், அவர் இருப்பார். ஜமீன் வம்சமின் பாரம்பரியம் என்று கூறி, எப்பொழுதும் விழிப்புடன் இருக்க சில பயிற்சிகள் சிறு வயதில் இருந்தே, அவர்களுக்கு போதிகப்படும்.

அதுவும் இத்தனை நாட்களாக இல்லாமல், இந்த ஒரு மாதமாக மனைவியின் பார்வை வித்தியாசத்தை கூட அறிந்து வைத்து இருந்தவர், அவரிடம் என்னவென்று கேட்க கூட பிடிக்கவில்லை அவருக்கு.

அடுத்து அடுத்து என்ன நடக்கிறது என்று, சிறிது பொறுத்து பார்த்து முடிவெடுக்கலாம் என்று அவர் எண்ணியது தான் அங்கே அடுத்த பிழையாகி விட்டது.

வசுந்தரா உண்டாகி இருப்பதாக, அனைவரையும் அழைத்து தெரிவிக்க அங்கே குடும்பத்தில் அனைவரும் சந்தோஷமாக இருக்க இங்கே சேதுராம் திகைத்தார்.

அந்த ஒருமாத காலம் மனைவியின் வித்தியாசம், அதன் பின் இரவில் என்ன நடக்கிறது என்று தெரியாத அளவிற்கு தூக்கமா அல்லது மயக்கமா என்ற புரியாத நிலை எல்லாம் ஓரிடத்தில் இப்பொழுது வந்து நின்றது போல் இருந்தது.

இனி அவர் யாரையும் நம்ப போவதில்லை, தானே களத்தில் இறங்கி உண்மையை கண்டுபிடிக்க இறங்கினார்.

அடுத்த இரு வாரத்தில் அவர் கண்டுபிடித்த விஷயங்கள் எல்லாம், அவரை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுவிட்டது.

அதன்படி அவர் வசுந்தராவி்டம் தான் கண்டுபிடித்த விஷயத்தை கூறி, எதற்காக இப்படி ஒரு நாடகம் என்று கேட்க, அதற்கு அவர் சொன்ன பதிலில் வெறுத்து விட்டார்.

ஆகையால் அவர் சில முடிவுகளை எடுத்து, அதன் படி சென்று கொண்டு இருந்தவரை தன் சுயநலத்திற்காக வேறு வழியில்லாமல் தன் துணை கொண்டு இயற்கை முறையில் இதய துடிப்பை நிறுத்தி விட்டார், யாருக்கும் சந்தேகம் வராத வகையில்.

இவரின் இறப்பு செய்தி குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் அதிர்ச்சி என்றால், அங்கே ஶ்ரீதேவிக்கு தன் உயிர் பிரிந்த வலியில் மயக்கம் அடைந்தார்.

தொடரும்…
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top