• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கடைசி காலக் கஞ்சி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore
கடைசி காலக் கஞ்சி _ நந்தலாலா

அவன் அத்தனை தூரம் போகும் என்று நினைத்திருக்கவில்லை. இப்போது எல்லாம் கைமீறி போய்விட்டதாக தோன்றியது.

அத்தனை பெரிய விசயம் இல்லைதான் என்றாலும் சிறிய விசயமும் இல்லை.

'இப்போது பதட்டப்பட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். பொறுமை பொறுமை' என்று அவசரப்படும் தன் மனதை தானே இழுத்து பிடித்து அமைதிப்படுத்த முயன்றான்.

அப்போது அலைபேசி ஒலிக்க, அதை ஒருவித தவிப்புடனே எடுத்து காதில் ஒற்றினான்.



அவன் ஆசைப் படியே அவன் அம்மாதான் அழைத்து இருந்தார்.


அவன் _ ஜெயக்குமார்

அவன் அம்மா _ நீலநதி


நீலநதியும் நதியைப் போன்றவர் தான்.

அந்த நதியைத் தடுக்கும் அணை ஒன்று உண்டு என்றால் அது ஜெயன் ஒருவன் தான்.

அவன் அப்பா சக்திவேலுக்கும் கூட அந்த சக்தி கிடையாது.

இந்தக் காலத்தில் 'சாரி' சொல்வதையே கௌரவ குறைச்சலாக நினைக்கும் அவர் மகனிடம் தயங்காமல் “ மன்னிச்சிருமா.. செல்லம்ல “ என்று கெஞ்சுவார்.


ஜெயன் அன்னைக்காக என்னவும் செய்வான். ஆனால் அவர் அவனை தவறாக ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் முகமே மாறிவிடும் அவனுக்கு.

தாயறியாத சூலா?

தான் பேசுவது அதிகப்படி என்று தெரிந்தாலும் அந்த நேரத்தில் படபடவென பேசி விடுபவர் பின் ‘ அய்யய்யோ ! இதுக்கு கோவப்படுவானே?’ என்று பதறிப் போய் பார்ப்பதற்குள் இவனுக்கு முகம் இறுகி இருக்கும்.

அதன் பின் இவனை மலை இறக்க அரும்பாடு படுவார்.


“ அவனுக்குக் கூட பிறந்த பிறப்புங்க இல்லாத குறைக்கு நீ ஒருத்தி போதும். தேவை இல்லாம சண்டை போட்டு அவனையும் கஸ்டப்படுத்தி நீயும் அவன் உன்னை பார்த்து நார்மலா பேசுற வரைக்கும் புலம்பித் தள்ளுவே” என்று சக்திவேல் சலித்துக் கொள்ளுவார்.






அவனது இருபத்தி ஐந்தாம் வயதிலேயே பெண் பார்க்க ஆரம்பித்து இருந்தார் நதி.

‘நீலநதி’ ன்கிற பேரு நீளமா இருக்கு' என்று ஜெயன் தான் சுருக்கமாக 'நதி' என்பான்.

சக்திவேல் 'நீலா 'என்றுதான் அழைப்பார்.


‘ ஒரு புள்ளயை பார்த்தமா? சைட் அடிச்சமா ? போனமா?ன்னு இருக்கணும். அதவிட்டு - கல்யாணம், காய்ச்சி, கன்றாவிலாம் நமக்கு எதுக்கு?’ என்பது அவன் சித்தாந்தம்.

அதில்தான் இன்று பிரச்சனை ஆரம்பம்.


வழக்கம் போல காலையில் கிளம்பி சாப்பிட டைனிங் வந்தவனுக்கு டிபனை எடுத்து வைத்தார் நீலநதி.

கையுடன் அவன் கல்யாண பேச்சையும் எடுக்க 'கடுகடு' என்று ஆனான்.

“ இப்படி டார்ச்சர் பண்ணாதம்மா. கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளுங்க ஆடுற ஆட்டத்துக்கு ஒத்து ஊதல்லாம் என்னால முடியாது “ என்றதும் நதிக்குக் கோபம் வந்து விட்டது.


“அப்போ என்னையும் அப்படித்தான் இதுவரை நினைச்சு இருக்க? நான் ஆடுறனா? சொல்லு? சொல்லு? “ என்று ஆடித் தீர்த்து விட்டார்.

“ இப்பவே இப்படி இருக்கியே? நீயெல்லாம் கடைசி காலத்துல எங்க கஞ்சி ஊத்த?”

நதி தன் வழக்கமான புலம்பலை எடுத்துவிட இவனுக்கு கோபம் வந்துவிட்டது.


அவன் சின்ன வயதில் இருந்தே அடிக்கடி சொல்லுவார்.

அப்போதெல்லாம் “ நான் உனக்கு கண்டிப்பா கஞ்சி ஊத்துவேன்” என்று தாயை முத்தமிடுவான்.

இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும் -

“ கஞ்சி மட்டும்தான் ஊத்துவியா?” என்ற நதிக்கு_


“ கஞ்சி, இட்லி,தோசை இன்னும் நீ என்ன கேட்டாலும் தருவேன் “ எனக் கொஞ்சுவான்.
அதைக் கேட்பதில் நதிக்கு ஒரு அளவில்லா ஆனந்தம் உண்டு.


ஒரு நாளும் விளையாட்டுக்கு கூட 'சாப்பாடு தர மாட்டேன்' என்று ஜெயன் சொன்னதே இல்லை.

அதில் ஏகப் பெருமை உண்டு நதிக்கு.

இன்று காலையிலும் அப்படி ஒரு பிட்டைப் போட இவனோ_

“ எப்பப் பாரு நீ கஞ்சி குடிக்கிறதிலயே இரு. எவளாவது ஆகாவழியை கட்டிகிட்டு மகன் கஞ்சிக்கு வழியில்லாம போயிட்டா என்ன செய்யனு கவலையே படாதே! “ என்று குதித்து விட்டு வந்திருந்தான்.

“ டேய் சாப்பிட்டு கிளம்புடா “ என்ற அன்னையின் பேச்சை ஒதுக்கி விட்டு அலுவலகத்திற்கும் வந்து விட்டான்.


இன்னும் கோபம் வந்தாலும் முயன்று அடக்கிக்கொண்டு இருந்த போது நல்லவேளையாக நதி ஃபோன் செய்து விட்டார்.


“ சொல்லும்மா”

“ என்னத்தைத் துள்ளுறது? சாப்பிடாம இருந்தா உனக்கு கோபம் நிறைய வரும். நம்ம வீட்டு ட்ரைவர் கிட்ட சாப்பாடு குடுத்து விட்டிருக்கேன். சாப்பிடு”

“ முடியாது. அப்படியே திருப்பிக் கொண்டு போக சொல்லு. நீ சொல்றியா? நான் சொல்லவா?”

“ இதுக்குதான் நீ சாப்பிட்டதும் பேச்சை ஆரம்பிக்கலாம் இருந்தேன். உங்கப்பா பேசு பேசுன்னு குடையிராரு.

அதான் மெல்ல ஆரம்பிச்சு பெரிய பிரச்சனை ஆகிருச்சு. இதுக்கு காரணமான அப்பா சைலன்ட்டா நழுவிட்டாருடா”

“ அப்பாவாமா?”

“ ஆமாடா” என்றார் பரிதாபமாக நதி.

“ அவருக்கு இருக்கிற அழும்புக்கு அளவே இல்ல. பாரு நம்ம ரெண்டு பேருக்குள்ள சண்டய இழுத்து விடறதே இவருக்கு வேல”

மகன் சமாதானமாகி விட்டதில் நதி நிம்மதி அடைந்தார்.



“ சாப்பிட்டு ஃபோன் செய் தங்கம் “ என்று ஃபோனை வைத்து விட்டார்.

அவர்களுடையது ஜவுளிக்கடை. பெரிய அளவில் இருந்தது அது. நல்ல வருமானம் உண்டு. அதற்கு அந்தக் கடையின் அமைவிடம் முக்கிய காரணம்.


ஜெயன் எம்.காம் படித்ததும் இங்கே அமர்த்தி விட்டார் சக்திவேல்.




இவ்வளவு சம்பாதிக்கிறான். வீட்டுக்கு ஒரே பிள்ளை. கல்யாண வயது வேறு! பெண் வீட்டார் நச்சரிக்காமல் என்ன?

சாப்பிட்டு முடித்து நினைவாக அன்னைக்கு அழைத்து விட்டான்.


“நதி “

“ நதி நதினு கூப்பிட்டு என்னை மிதி மிதினு மிதிச்சிட்டியடா”

“ ஏம்மா ?என்ன சொல்ற?”


“ ஓ ! நான் தான் சொல்லனுமா உனக்கு? “

“ ம்மா படுத்தாதம்மா. என்ன? ஏதும் பிரச்சனையா?”

“ நீதான்டா பிரச்சனை. உன்னால தான்டா பிரச்சனை. உன்னை எப்படி எப்படி எல்லாம் வளத்தேன்? ஒருத்தி நாக்கு மேல பல்லு போட்டு பேச முடியாம சிங்கமாட்டம் வளத்தேனே? இப்படி பண்ணி வச்சிட்டியேடா?”. என்று நதி பலவாறாக புலம்பித் தள்ள இவனுக்கு மண்டை காய்ந்தது.


“ வியாபாரம் நடக்குற நேரத்துல என்னம்மா இது ஒப்பாரி?”

“ வாய மூடுடா. நான் பெத்த புள்ளை நல்லா இருக்கணும்னு உலகத்துல இருக்கற சாமியை எல்லாம் கும்புட்டுகிட்டு இருக்கேன்? நல்ல நாளும் அதுவும்மா என்ன இது அபசகுணமா?”


‘ இவ்வளவு நேரம் புலம்பித் தள்ளி விட்டு இவன் ஒரு வார்த்தை சொன்னது குத்தமாகிவிட்டதாமா?’


“ என்னம்மா? என்ன விசயம்?”

“ ஒன்னுமில்லை. நீ உடனே வீட்டுக்கு வா” இதுவே என் கட்டளை. என் கட்டளையே சாசனம் என்பதாக முடித்து விட 'என்னவோ ? ஏதோ?' என்று வீட்டுக்கு அடித்து பிடித்து போனால் அங்கே அவள் இருந்தாள்!


அவள் ! அவன் மாமன் மகள் சங்கரி.




'இவ வேற பொசுக்கு பொசுக்கு னு வீட்டுக்கு ஓடி வந்திருவா. 'என்று முணுமுணுத்து கொண்டவன்


வேற என்ன விசயம்? என்று யோசித்தவாரே வீட்டினுள் நுழைந்தான்.


“ நில்லுடா அங்கே? எத்தன நாளாடா நடக்குது இது? “

“ உளராதம்மா. சும்மா பில்டப் பண்ணிகிட்டு. முதல்ல விசயத்த சொல்லு. இல்ல தள்ளி நில்லு”

“ நீயெல்லாம் எங்கடா கடைசி காலத்துல கஞ்சி ஊத்தப் போரே?”


“ தெய்வமே . நீ சாப்பிட்டு மிச்சம் வச்சதைத்தான் நானும் என் பொண்டாட்டி பிள்ளைங்களும் சாப்பிடுவோம்”


“ அது வேறயாடா? என்னாடி சங்கரி? ஏதோ ஒருத்தருக்கு ஒருத்தர் விருப்பம்னு மட்டும் சொன்ன? இவன் புள்ள குட்டி வரை போறான்?”

‘ அத்தான் ஏதோ வாய் தவறி சொன்னதை அத்தை பந்தல் போட்டு வளக்குது. சரி நம்ம ரூட்டு க்ளியர் ஆனா சரிதான் ‘ என்று அமைதி காத்தாள் சங்கரி.



“ இப்போ சொல்லப் போறியா? இல்லையா?” எகிறினான் ஜெயன்.


“ இன்னும் என்னத்தைச் சொல்லனும்? இவளை கட்டிக்கிரேன்னு ஆசை காட்டி புடவை வாங்கி குடுத்தது மறந்திரிச்சோ? இவ தினமும் அந்த சேலய கட்டிபிடிச்சுகிட்டு உறங்கவும் உங்க அத்தை அந்த சீம சித்திராங்கி பிள்ளைய அடிச்சு இங்க தொறத்தி விட்டுட்டா.

நம்ம ரெண்டு பேரு குடும்பத்துக்கும் ஆகாதுனு தெரிஞ்சும் மருமக மனசுல ஆசய வளத்துட்டு இன்னிக்கு ஒண்ணுமே தெரியாத மாதிரி முழிக்கிரத பாரு


அப்படியும் யோசிச்சேன். இவ அம்மாவுக்கும் நமக்கும் ஆகாது. இவ அடிக்கடி வீட்டுக்கு வந்திர்ராலேனு. இப்படினு நான் நினைக்கலியே நினைக்கலியே” என்று அவர் மறுபடியும் ஆரம்பித்தார்.

‘ நான் எப்ப டி உனக்கு புடவை எடுத்து தந்தேன்?” என்று விழிகளால் சங்கரியிடம் கேட்க அவள் அதை கண்டு கொள்ளாமல்_


“ அத்தை என்னை மன்னிச்சிடுங்க அத்தை. அத்தான் சொன்னாலும் எனக்கு அறிவில்லாமல் போச்சு” என்று நதியின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து விட்டாள்.

பின்னே? எத்தனை குறிப்பு கொடுத்தும் புரியாமல் ‘ என்னை பொண்ணு பார்க்க வர்றாங்க ' என்று சொல்லியும் இவளையும் இவள் காதலையும் புரிந்து கொள்ளாத இந்த அத்தான் மஞ்ச மாக்கானை என்னதான் செய்ய?


வேறு காதல் ஊதல் ஏதாவது இருக்குமோ? என்று அவள் துப்பு துலக்கியதில் அவன் முரட்டு சிங்கிள் என்று தகவல் கிடைத்திருந்தது.


'இந்த கிழடுங்க என்னைக்கு பழய பகையை விடுறது? 'என்று அவள் களத்தில் குதித்து விட்டாள்.

புடவை அவள் வாங்கியதுதான்.


அப்போதுதான் புதிதாக பார்ப்பது போல சங்கரியைப் பார்த்தவன் மெல்ல சிரித்துக் கொண்டு தானும் அன்னையின் கால்களில் விழுந்தான்.



“ ஏங்க. எங்க நிக்கறிங்க. வாங்க. வந்து பக்கத்துல நில்லுங்க. புள்ளைங்கள ஆசிர்வாதம் பண்ணுவோம்” என்றதும் சக்திவேல் விரிந்த புன்னகையுடன் தன் மனைவியின் அருகில் நின்றார்.

“ கடைசி காலத்துல கஞ்சி ஊத்தனும்னு நீயும் உன் பசங்களுக்கு சொல்லி குடும்மா. அவங்களை எதிர்பார்த்து நாம இருக்கக் கூடாது. அதே நேரத்துல பெத்தவங்களுக்கு செய்யறதை பிள்ளைங்க சுமையா நினைக்கக் கூடாது. அதுக்குத்தான் அவன்கிட்ட அடிக்கடி அப்படி கேட்பேன்.


எனக்குத் தெரிஞ்ச மாதிரி என் ஓபிள்ளைய வளத்தேன். இப்படித்தான் வளக்கணும்னு சொல்லலை. “


என்ற தன் தாயை அணைத்துக் கொண்டான்.


'நானும்' என்று சங்கரியும் அவனிடம் ஒட்டிக் கொண்டாள்.

“ எல்லாரும் சேர்ந்துகிட்டு எனக்கு கடைசி காலத்து கஞ்சி ஊத்தாம விட்டுறாதீங்க” என்று சிரித்த சக்திவேலுவை நோக்கி சட்டைப் பையில் இருந்த பேனாவை வீசினான் ஜெயன்.
அதை அழகாக கையில் பிடித்த சக்திவேல் _

“ நீ இங்க வந்திட்ட. உங்க அப்பா அம்மாவுக்கு உன் அண்ணன் கடைசி காலத்துல கஞ்சி ஊத்திருவானா?” என்று சங்கரியைப் பார்த்துக் கேட்டார்.

“ அங்கேயும் என் அண்ணன் நம்ம அத்தான் மாதிரிதான். இல்லனாலும் நாம இருக்கோம்ல? “ என்று சங்கரி சிரிக்க_

” நீ பொழச்சுகிடுவ”

மருமகளின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்து மனமார சிரித்தார் சக்திவேல்.
_____________________________________
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top