• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode கணவனே என் காதலா! - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,930
Reaction score
23,971
Location
Phoenix
9

பால்கனியில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்த தீட்சண்யா, ஆதவ் எழும் சத்தம் கேட்டுத் திரும்ப, அவளைத் தான் தேடினான்.
“குட் மார்னிங்” ட்ரிம் செய்த அவன் தாடியையும் தாண்டி அவன் உதடுகள் மலர்வதைக் கண்டவள் புன்னகைத்து அவனுக்கு பதிலுக்கு குட் மார்னிங் கூறினாள்.
அவன் பாத்ரூமிற்குச் சென்றதும், அவனுக்கு ஒரு சட்டையை வழக்கம் போல அயர்ன் செய்து வைத்தாள்.
ஆதவ் வெளியே வந்ததும் அவனிடம், “எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க ஆதவா” என்றாள்.
“எஸ் மேடம்” கலைந்த தன் தலையை கோதிக்கொண்டே நிற்க, முதன் முதலாக தீட்சாவின் கண்களுக்கு அவன் வசீகரமாகத் தெரிந்தான். அவனது கண்களை அப்போது தான் அவள் பார்க்கிறாள்.
லென்ஸ் வைத்தது போல பழுப்பு நிறத்தில் இருந்தது அவனது கண்கள். கூர்மையான நாசி, சிவந்த உதடுகள் என தனித் தனியாக அவள் கண்களில் பட்டுத் தொலைத்தது.
‘இவ்வளவு அம்சமா இருக்கானே!’ மூளை இன்று தான் விழித்துக் கொண்டது அவளுக்கு.
அவள் பேசாமல் இருப்பதைக் கண்டு,
“என்ன வேணும் சொல்லு. எதுக்குத் தயங்கற?” அவள் முன் வந்து நின்றான்.
“அ..அது...அது...” என்ன சொல்ல வந்தோமென்று அவனைக் கண்டு மறந்து போனாள். அவனது வாசம் அவள் மனதை கிறங்கச் செய்தது. அவ்வளவு பக்கத்தில் நின்றான். அவள் அங்குமிங்கும் அலைபாய,
“என்ன.. என்ன.. ஏன் பதட்டப் படற?” அவளது தோளைப் பற்றி அங்கிருந்த ஒரு சோபாவில் அமர்த்தினான்.
“என்ன விஷயம் இப்போ சொல்லு?” அருகில் நிண்று கொண்டான்.
சற்று தெளிந்தவள், “அந்த சாஷா நம்பர் வேணும். நீங்க பிரதாப் அண்ணா கிட்ட கேளுங்க. இல்லனா அவர் நம்பர் தாங்க, நான் பேசறேன்.” நேற்று இருந்த துடிப்பு அவளிடம் இன்று குறைந்தது. அது ஆதவிற்கு நன்றாகவே தெரிந்தது.
“ஹா ஹா.. அந்த பொண்ணு கிட்ட பேசணுமா?” சிரித்தான்.
“ஆமா.. உங்க மேல அவளுக்கு இப்பவும் கண்டிப்பா லவ் இருக்கும். அவ கூட இருந்தா உங்க லைஃப் நல்லா இருக்கும்.” மனதில் இப்போது தானாகவே பாரம் ஏறியது.
அதை அவள் கண்களில் கண்டான் அவளது கணவன்.
“அப்படியா? நான் சந்தோஷமா இருப்பேன்னு உனக்கு எப்படித் தெரியும்.?” கூர்மையாக அவளையே பார்த்தபடியே கேட்க,
அவள் நிமிர்ந்து அவனைக் கண்டாளே தவிற, அவளால் பதில் சொல்ல முடியவில்லை. அவள் விழிப்பதைக் கண்டு,
“புரியலையா…? என்னைப் பத்தி உனக்கு என்ன தெரியும்னு நான் சந்தோஷமா இருப்பேனு சொல்றன்னு கேட்டேன்?” புன்னகைதான்.
“உங்களைப் பத்தி எனக்கு அதிகம் தெரியாது தான், ஆனா நீங்க நல்லவருனு மட்டும் தெரியும். உங்களுக்கு எல்லாமே நல்லதா தான் நடக்கணும்.” சிறுபிள்ளைப் போல அவள் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருக்கையில் அவனது செல்போன் சிணுங்கியது.
அதை எடுத்துப் பார்க்க, அதில் தெரிந்த எண்ணைக் கண்டவன் சற்று சுதாரித்தான்.
பாவமாக அங்கே சோபாவில் அமர்ந்திருப்பவளை அங்கிருந்த அனுப்ப நினைத்து,
“எனக்கு கொஞ்சம் காஃபி கொண்டுவரியா ப்ளீஸ்” என்றான்.
“சரி” என அவள் சென்ற உடனே அறையின் கதவை சாத்தித் தாளிட்டான். வந்த காலை அட்டென்ட் செய்து, “என்ன?” குரலில் அத்தனை கடுமையும் கொண்டுவந்திருந்தான்.
“சார்..அந்த சத்யாவ என்ன சார் பண்றது? ரொம்ப அழுவுறான் சார்.” போனில் பேசியவன் நொந்து போய் கூறினான்.
“ம்ம் அதுக்கு…?” அலட்சியமாகப் பேசினான் ஆதவ்.
“இல்ல சார். இனிமே வாழ்க்கைல பொண்ணுங்களையே பாக்க மாட்டேன்னு சொல்றான். கொஞ்சம் தைரியமானவனா இருந்தா கூட வச்சு செய்ய நல்லா இருக்கும். இவன் சொம்ப பய சார். அதான் காண்டாகுது.”
“சரி நான் நாளைக்கு வரேன். அது வரை சமாளி.” ஆதவ் முடித்துக் கொள்ள,
“ரொம்ப தேங்க்ஸ் சார்.வச்சுடறேன்..” அந்தப் பக்கம் போனை வைத்தான்.
ஆதவ் வைக்கவும், தீட்சா கதவைத் தட்டவும் சரியாக இருந்தது.
காபியை வாங்கிக் கொண்டவன், அவளின் முகவாட்டத்தை அறிந்து அவளைக் கண்டான்.
அவளுக்குத் தன்னை வெளிப்படுத்த வெகு நேரம் அவனுக்கு ஆகாது தான். ஒரே ஒரு நிமிடத்தில் அவனது விருப்பத்தையும் சொல்லி, அவளின் காதலையும் அவனால் வலுக்கட்டாயமாகப் பெற முடியும். இருந்தாலும் சிலவற்றை அவள் அறிந்து புரிந்து தெளிந்து கொள்ளும் பக்குவம் பெற்றே ஆக வேண்டும் என்று நினைத்தான்.

உளி படாமல் எந்தக் கல்லும் சிலையாவதில்லையே! இதில் அவன் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. தங்களின் எதிர்கால காதல் வாழ்விற்கு இது அவசியம் என்றே உணர்ந்தான்.
அவனின் பார்வை துளைப்பதைப் போலிருக்க அவன் சிந்தனை என்னவென்று புரியாமல், ஆனால் அவனால் ஈர்க்கப் படுவதை மட்டுமே அவன் கண்களில் கண்டாள்.
‘இல்ல இல்ல... இவருக்கு நான் பொருத்தமில்ல. இவரை உருகி உருகி காதலிக்கும் சாஷா தான் பொருத்தம்.’ அவனைக் காதலிக்கச் சொல்லும் மனதை மாற்ற முயன்றாள்.
“பிரதாப் அண்ணாக்கு போன் பண்ணுங்க..” மெல்லிய குரலில் அவன் மனதைக் கலைத்தாள்.
‘அடிப்பாவி உன்னை எந்தக் ஸ்கூல்ல படிக்க வெச்சாங்க? இவ்வளோ அறிவா இருக்கியே..!’ “ஹ்ம்ம்...என்னை சாஷா கூட சேத்து வச்சுட்டுத் தான் மறுவேலை போல..?” லேசாகப் புன்னகைக்க,
“ஆமா.. பண்ணுங்க” அவனை வற்புறுத்தினாள்.
“சரி.. சரி..” உடனே தன் போனை எடுத்து நண்பனுக்கு டயல் செய்ய
அவனோ உடனே எடுக்க, “சொல்லு டா மச்சான். என்ன ஆச்சு?” ஸ்பீக்கரில் இருப்பது தெரியாமல் அவன் பேச வர,
உடனே சுதாரித்த ஆதவ், “இரு டா.. உன் தங்கச்சி பேசணுமா..” அவனுக்கு சிக்னல் கொடுக்க,
“ ஓ!” புரிந்துகொண்டான்.
“அண்ணா... அந்த சாஷா நம்பர் வேணுமே? இவரு மொபைல்கு அனுப்புங்க..” என்றாள்.
“ஏன் மா. அவள திட்டப் போறியா? பாவம் வேண்டாம். அவ தான் ஒதுங்கிட்டாளே! “ விஷயம் அறியாதவன் போல காட்டிக் கொண்டான்.
அப்போது தான் அவளுக்கு உரைத்தது எப்படி இந்த விஷயத்தை மறந்தாள் என்று..!’
நாக்கைக் கடித்துக் கொண்டு ஆதவ்வைப் பார்க்க, அவன் கண்ணை மூடி தலையை இரு புறமும் ஆட்டினான். தலையில் அடித்துக் கொண்டவள்,
“இல்ல..இல்ல ண்ணா... சும்மா தான் இன்னும் இவரையே நெனச்சுட்டு இருக்காம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லலான்னு” அவசரமாக கூறி முடித்தாள்.
“அப்படியா... அவ கேக்கற ஆள் இல்ல ம்மா. வேணும்னா பேசிப் பாரு.” அழகாக பொய் கூறினான்.
நண்பனின் இந்தத் திறனைக் கண்ட ஆதவ் உதட்டை மடக்கி சிரிப்பை கஷ்டப் பட்டு அடக்கிக் கொண்டிருந்தான்.
“சரி அண்ணா. நீங்க நம்பர் அனுப்புங்க. வைக்கறேன்” போனை அணைத்தவள்,
“எப்படி சமாளிச்சேன் பாத்தீங்களா?” புருவத்தை உயர்த்தி இடுப்பில் கைவைத்து நிற்க,
“சிறப்பு.. மிகச் சிறப்பு...இப்படியே வீட்ல ஒரு நாள் உளறு... ரெண்டு பேரையும் நல்லா செஞ்சுடுவாங்க..” கையை கழுத்துக்குக் குறுக்காகக் காட்ட,
தீட்ச்சா சிரித்துவிட்டாள்.
“அது சரி..இவ்வளோ தீவிரமா என்னை சாஷாவோட சேத்து வைக்கப் பாக்கற.. நீ என்ன பண்ணலான்னு இருக்க?” அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை நோண்டினான்.
“ம்ம்ம்.. நானா? என்னைப் பத்தி இன்னும் யோசிக்கல” முகம் வாடினாலும், தெளிவாக அவனிடம் கூற,
“ஓ! சரி அப்போ நான் சொல்ற மாதிரி கேக்கறியா?. அவளுக்காக அவன் யோசித்து வைத்திருந்ததை சொன்னான்.
“ம்ம் சொல்லுங்க.” இடுப்பில் கை வைத்து நின்றாள்.
“அந்த டேபிள்ல ஒரு பேப்பர் கவர் இருக்கு. அதை எடுத்துட்டு வா.” என்றவன் அவள் கொடுத்த காபியை அருந்தி முடித்தான்.
அவளும் அதை எடுத்து வந்தாள். அதன் மீது ஒன்றும் எழுதப் படாததால், என்னவென்று புரியாமல் அவனிடமே நீட்ட,
“பிரிச்சுப் பாரு" அவளையே சொல்ல,
அதைப் பிரித்ததும் அவள் விழிகள் விரிந்தது.
அது ஒரு கல்லூரியில் மூலமாக போஸ்டலில் படிக்கும் படிவம். அதுவும் சைக்கலாஜி.
“என்ன இது? காலேஜ் அப்ளிகேஷனா?”
“ஆமா. உனக்கு தான். இது ஒரு ஆறு மாசம் கோர்ஸ் தான். என் ஃப்ரோபசர் தான் இத நடத்தறாரு. ரொம்ப சூப்பரா சொல்லித் தருவாரு.”
“சரி, ஏன் சைக்காலாஜி? நான் படிச்சதுக்கும் இதுக்கும் எதுவும் சம்மந்தம் இல்லையே?” தீட்சா குழம்பினாள்.
“இல்ல தான். ஆனா, இது உனக்கு உதவும்னு எனக்கு தோனுச்சு. அதோட, நீ எதுவும் தெரியாம வளந்துட்டேன்னு சொன்ன இல்லையா, சோ இது உனக்கு ஹெல்ப் பண்ணும். மத்தவங்கள புரிஞ்சுக்க இது உனக்கு கண்டிப்பா தேவை.
உனக்கு நான் கொடுத்த ஒரு வருஷத்துல , ஒரு ஆறு மாசம் இத படி. மீதி ஆறு மாசம் உனக்கு என்ன பிடிக்கும், எந்த நோக்கத்தோட யார் பழகறாங்க, இதெல்லாம் நீ கத்துக்க யூஸ்ஃபுல்லா இருக்கும்.
நீ காலேஜ் எல்லாம் போக வேண்டாம். இது ஆன்லைன் கோர்ஸ் தான். வாரம் மூணு கிளாஸ் தான். அதுவும் மூணு மணி நேரம். எக்ஸாம் எல்லாம் கடைசீல தான். உனக்கு ஓகே வா.? சாரி உன்னைக் கேட்காம செஞ்சுட்டேன்னு நெனைக்காத.
என்னோட ஃப்ரொபசர் இந்த கோர்ஸ் பத்தி சொன்னாரு. மத்தவங்க கிட்ட சொல்ல சொல்லி என்கிட்ட கேட்டப்ப உனக்காகவும் ஒரு அப்ளிகேஷன் வாங்கினேன். உனக்குப் பிடிக்கலன்னா நான் கட்டாயப் படுத்த மாட்டேன்.” அனைத்தையும் சொல்லிவிட்டு முடிவை அவளிடம் கொடுத்தான்.

தீட்ச்சா தனக்காக இத்தனை செய்யும் அவனை இதில் காதலிக்கத் தொடங்கினாள். மெய் மறந்து அவனைப் பார்க்க , ஆதவும் அவளை சில நொடிகள் விழிகளால் பருகிக் கொண்டான்.
‘ஏன் டி, என்னை கொல்ற..கொஞ்ச நாள் நல்லவனா இருந்துக்கறேன். அதுக்குள்ள என்னை எல்லை மீரா வைக்காத.’ அவள் கண்களில் லயித்து பின் சுதாரிக்க,
“ஒரு ப்ரென்ட் சொல்ற நல்ல அட்வைசா இத எடுத்துக்கலாம்.” தீட்சாவின் பதில் வராமல் போக அவனே வார்த்தைகளை உதிர்க்க,
சட்டென தெளிந்தவள்,
“யார் ப்ரென்ட்?” புரியாமல் குழம்பினாள்.
“நான் தான். நான் உனக்கு ப்ரென்ட் தான.. இல்லையா..? நமக்குள்ள என்ன ரிலேஷன்ஷிப்?” அவள் வாயை சற்று பிடுங்க,
‘பிரெண்ட்ஸா? நான் உங்க கைக்குள்ள கட்டிப் பிடிச்சுட்டு இருக்கற மாதிரி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் தோனுச்சு. அதுக்குள்ள எப்படி ப்ரென்ட்னு சொல்றது..’ அவளும் தன் மனதுடன் போராட,
“என்ன..?”
“ம்ம் ..ஆ..ஆமா ப்ரெண்ட்ஸ் தான்.” மனதே இல்லாமல் சொல்லி வைக்க, அவர்களின் அரைக் கதவு தட்டப் பட்டது.
“கமின்..” ஆதவ் குரல் கொடுக்க,
ராகேஷ் உள்ளே வந்தான்.
“என்ன டா?” ஆதவ் அவனிடம் வர,
“உடனே நீயும் தீட்ச்சாவும் உங்க திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு கிளம்புங்க..”
“என்ன டா? எங்க கிளம்பனும்?” அவசரமாகக் கேட்க,
“ம்ம்...கோயில் யாத்திரைக்கு... போடா... உங்க ரெண்டு பேருக்கும் இன்னிக்கு நைட்டு ஃப்ளைட்ல கோவா க்கு டிக்கெட் போட்டிருக்கேன். ஒன் வீக் கழிச்சு தான் ரிடர்ன். கெட் ரெடி” இருவரையும் பார்த்துக் கூற,
“மாமா..இப்போ எதுக்கு?” சங்கடமாக உணர்ந்தாள் தீட்சா.
அதைக் கண்டுகொண்டான் ஆதவ். எப்படியும் இந்தத் தருணத்தை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள நினைத்தான்.
“என்ன எதுக்குன்னு கேக்கற தீட்சா?” ராகேஷ் இருவரையும் பார்க்க,
“தீட்சா வோட அப்பா போன் பண்ணி நாளைக்கு அவங்க வீட்டுக்கு விருந்துக்கு வர சொன்னாரு. அதுனால தான் யோசிக்கறா..இல்ல?” அவளுக்கு ஜாடை காட்டி தலையாட்ட வைத்தான்.
“ஆங்... ஆமா மாமா.அதுக்குத் தான் சொல்ல வந்தேன்.” ஆதவைக் கண்டு தலையை ஆட்ட,
“ஓ! அப்படியா! பரவால்ல உங்க அப்பா கிட்ட நம்ம அப்பாவ விட்டு பேசச் சொல்லலாம். அவர் ஒன்னும் சொல்ல மாட்டாரு. இப்போவே சொல்றேன்..இட்ஸ் மை கிஃப்ட்!” என டிக்கெட்டை கொடுத்து விட்டு நிற்காமல் சென்று விட்டான் ராகேஷ்.
“டேய்..இரு..” ஆதவ் அங்கே காற்றுடன் தான் பேசிக் கொண்டிருந்தான்.
“ப்ச்.. இப்போ என்ன பண்றது?” தீட்சா அவனைப் பார்க்க,
“என் கூட வந்தா உனக்கு ஒன்னும் ப்ராப்ளெம் இல்லனா வா. எதுக்கு சொல்றேன்னா ராகேஷ் லேந்து அம்மா வரைக்கும் அன்னிக்கு உன்னை வெளிய கூட்டிட்டு போகச் சொன்னாங்க. நான் அப்போ முடியாதுன்னு சொன்னப்ப எல்லாரும் எதாவது பிரச்சனையானு தான் கேட்டாங்க. இப்பவும் நாம போலனா கண்டிப்பா கன்பார்ம் பண்ணிடுவாங்க. அதுக்குத் தான் சொல்றேன்.” அவள் மறுக்க முடியாதபடி பேசிவைத்தான்.
வேறு என்ன அவள் கூறி மறுக்க முடியும்? இருந்தாலும் அவள் யோசிக்க,
“அதுவுமில்லாம அங்க போனா நீயும் ஃப்ரீயா இருக்கலாம். நானும் சாஷா கூட பேசி ஒரு முடிவுக்கு வரலாம்.” சாஷாவின் பெயரை இழுக்க, அவளால் மறுப்பேதும் சொல்ல முடியாமல் போனது.
“கிருஷ்ணா..” கீழிருந்து தந்தையின் குரல் ஒலிக்கவும்,
“வா..” என அவளையும் அழைத்துக் கொண்டு கீழே சென்றான்.
“நடராஜா.. பசங்கள அடுத்த வாரம் அனுப்பறேனே. திடீர்னு சொல்லாம ராகேஷ் அவங்களுக்கு கோவாக்கு டிக்கெட் போட்டுட்டான் இன்னிக்கு நைட்க்கு.” பேசிக்கொண்டிருந்தார் ராஜவேலு.
“அப்படியா. ஒன்னும் பிரச்சனை இல்ல. அவங்க சௌரியமா போயிட்டு வரட்டும்.” நடராஜன் கூறிவிட, அந்தக் காரணமும் அவர்களுக்கு இல்லாமல் போனது.
இருவரும் தங்களின் உடைகள் மற்றும் தேவையான முக்கிய பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்ள, ராகேஷ் அங்கே வந்தான்.
“ஆதவா, இங்க வா”
ஆதவ் வெளியே செல்ல, அவர்களின் தோட்டத்தில் அழைத்துச் சென்று பேசினான்.
“எதாவது ப்ராப்ளெம்னா என்கிட்டே சொல்லு டா” அக்கறையுடன் கேட்டான்.
“டேய் என்ன டா. என்னைப் பத்தி உனக்குத் தெரியாதா. அதெல்லாம் ஒண்ணுமில்ல டா.” அண்ணனின் தோளில் கை வைத்து அவனைத் தெளிவு படுத்த,
“இல்ல டா. நீ அவள புடிச்சுத் தான் கல்யாணம் பண்ண. அது எங்க எல்லாருக்கும் தெரியும். ஆனா அவளுக்குத் தெரியாதே. அவளுக்கு ஒரு வேளை உன்னைப் பிடிக்கலையா? நீங்க ரெண்டு பேரும் மனசுவிட்டுப் பேசி நான் பார்க்கல. தீட்சா இன்னும் உன்கூட இலகுவா இருக்கற மாதிரி தெரியலையே அதுனால கேட்கறேன்.”
“ராகேஷ்.. எனக்கு அவள எந்த அளவு புடிக்குமோ , அதே அளவு அவளுக்கு என்ன புடிக்கும்னு எனக்குத் தெரியும். என்னை அவளுக்குப் புரியவைக்க இந்த ட்ரிப் யூஸ்புல்லா இருக்கும்னு நினைக்கறேன். இப்பவும் அவளுக்கு என்னைப் புடிக்கும் டா. ஆனா அவ லவ்வ உணரனும்னு தான் வெய்ட் பண்றேன்.” மனதில் இருந்ததை அண்ணனிடம் பகிர்ந்து கொண்டான்.
“நீ எல்லாத்தையும் தெளிவா ப்ளான் பண்ணுவ. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.” அவனது தோளில் தட்டி புன்னகைத்தவன்,
ஆல் தி பெஸ்ட் கூறி அவனை அனுப்பினான்.
அதே நேரம் தீட்சா உறுத்தலுடன் இருந்தாள்.
‘எனக்கு உங்கள புடிக்கும் தான். வேற ஒருத்தன புடிச்சிருக்குன்னு சொன்ன பிறகு மறுபடியும் உங்க கிட்ட வந்து நான் எப்படி இந்த மாதிரி சொல்ல முடியும் ? இப்போ உங்க கூட இந்த ட்ரிப் வேற...! நான் என்ன பண்றேன் எப்படி நடந்துக்கணும்னு ஒண்ணுமே எனக்குப் புரியல. கடவுளே!’ பெட்டியில் அடுக்கிக் கொண்டே முனகிக் கொண்டிருக்க, ஆதவின் செல்லில் ஒரு குறுஞ்செய்தி வந்தது.
பிரதாப் தான் சாஷா என்ற எண்ணை அனுப்பி இருந்தான்.
அதைக் கண்டவள் மனம் சுருங்கிப் போனது. அது பெரு வலியாக மாறும் என அப்போது அவள் உணரவில்லை.
“சாஷா..ஆதவ்”
“சாஷா ஆதவ் கிருஷ்ணா..” சொல்லிப் பார்த்தாள்.
“ஹ்ம்ம்...” என்ற பெருமூச்சு தான் மிஞ்சியது.
இரவு அவன் அருகில் அமர்ந்து ஃப்ளைட்டில் பயணமாகிக் கொண்டிருந்தாள் தீட்சண்யா.
தன்னருகில் ஜீன்ஸ் டிஷர்ட்டில் ஒட்டி அமர்ந்திருக்கும் மனைவியை கண்டவன், அவளைக் கண்ட முதல் நாளுக்கு மனதை செலுத்தினான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top