• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கண்ணில் கலந்துவிட்டாயடி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Status
Not open for further replies.

Bhagyasivakumar

மண்டலாதிபதி
Author
Joined
Jul 29, 2019
Messages
171
Reaction score
335
Location
Tamilnad
என்னை சுற்றி ரோஜா கூட்டம் ,பன்னீர் ரோஜாக்களின் அந்த இனிமையான வாசம் என்னை என்னையே மறக்க செய்தது . பக்கத்தில் அமர்ந்தவர் ஹலோ எக்ஸ்கியூஸ் மீ டைம் என்ன என்று கேட்க சிரிப்பை மட்டுமே பதிலாக தந்துவிட்டு அந்த தோட்டத்தில் உள்ள பென்ச்சில் தட்டுத்தடுமாறிஅமர்ந்துக்கொண்டு எதையோ யோசித்து கொண்டிருந்தேன். என்னுடைய நாட்கள் அழகானவை ஆம் பெற்றோருக்கு ஒரே செல்ல மகள் ....என் பெயர் ஷைலஜா ...அன்று அன்று....
?????????

டேய் சந்தோஷ் என்னடா நீ இவ்வளவு நேரம் தூங்குற எழுந்திரு டா மணி 11,ஆகுது ...சீக்கிரம் ரெடியாகு உனக்கு 12 மணிக்கு இன்டர்வியூ.

ம்மா....என்னமா நீ நானே நல்ல ட்ரீம்ஸ் ல இருந்தன் நீ வேற தட்டி எழுப்பி என் மொத்த ட்ரீம்ஸ் கலைச்சிட்ட சரியான சண்டாலி மா நீ.

ஏண்டா சொல்லமாட்ட உனக்கு டெய்லி சோறு ஆக்கிபோட்டு படிக்க வச்சு ஆளாக்கி இம்புட்டு பெரிய மகனா வளர்த்து விட்டுருக்கேன்.

மை டியர் மம்மி..... இது உங்கள் கடமை..

மா டிபன் ஆச்சா நான் வேளைக்கு கிளம்பனும் னு சந்தோஷ் அக்கா ராகவி கிளம்ப ..."இதோ இப்படி இருக்கனும் ராகவி மாதிரி ..நீயும் இருக்கியே தடிமாடு."னு அவனோட அப்பாவும் அவர் பங்குக்கு திட்ட...எல்லாரும் மாரி மாரி திட்டி ஒரு வழியா ரெடியாகி இன்டர்வியூ க்கு கிளம்பினான்.

சரி நம்ப சந்தோஷ் எப்படி பட்ட ஆளு வாங்க பார்ப்போம்.?
"நான் தாங்க சந்தோஷ் வீட்டுக்கு செல்ல மகன் ஆனாலும் டெய்லி திட்டு வாங்கிட்டு இருக்கிறது என் வேலை ஹாஹா என்ன பன்றது என்னுடைய சோம்பல் தாங்க காரணம் ....நான் போட்டோகிராபி கோர்ஸ் முடிச்சிட்டன் . ஒரு ஸ்டுடியோ ல இன்னைக்கு வேலைக்கு சேர போறன். எனக்கு பெருசா ஆம்பிஷன் எதுவுமில்லை. போட்டோகிராபி சின்ன வயசுல இருந்தே பிடிக்கும். இந்த அழகான சென்னை மாநகரம் தான் எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர். ஆனால் சொந்த ஊர் மதுரை மாவட்டம் எப்பாவாச்சு திருவிழா னா போவோம்...ஐயோ பேசிட்டே இருந்ததுல நான் போட்டோ க்ளிக் எடுக்க மறந்துட்டன்...இன்டர்வியூ ல ...வரும்போது அழகாக இரண்டு க்ளிக். எடுக்க சொல்லியிருந்தாங்க ம்ம்......

பஸ்ஸை விட்டு இறங்கி நடந்துவந்துட்டு இருந்தேன் அங்க அண்ணாநகர் பார்க் பார்த்தேன் சரி நமக்கு தேவையான அழகான ஸ்டில் இங்க எடுக்க முடியும் னு தோனுச்சு . உள்ள வந்தேன். சுற்றி முற்றி பார்த்தேன் எனக்கு ஏத்த ஸ்டில் எங்கயும் கிடைக்கல பார்க்கில் நடையாக நடந்தன் அண்ணன் ஐஸ் னு ஐஸ்வண்டிக்காரன் வந்தான் அவனுக்கு வழி விட்டபடி பின்னாடி திரும்பி பார்த்தேன். ப்பா...அழகான பன்னீர் ரோஜா கூட்டம் அந்த கூட்டத்தில் நடுவில் அந்த பிங்க் கலர் சுடிதார் போட்ட பொன்னு...வாவ் வாட் ஏ ப்யூட்டிபுல் ...னு ரசிச்சிட்டே ஒரு க்ளிக் எடுத்தன் ,செம்மையா இருந்தது அந்த ஸ்டில் .......அடுத்து இன்னொரு ஸ்டில் என்ன எடுக்கலானு நினைக்கிறதுக்குள்ள ஒரு குட்டி நாய் வந்து அந்த பெண்ணை சீண்ட அதை ஆசையாக தூக்கி கொஞ்சும் போது ஒரு ஸ்டில் இரண்டு ஸ்டில் எடுத்துட்டு நான் அந்த பார்க்கை விட்டு வெளியே வந்தேன் ஆனால் நான் எதையோ தொலைச்சிட்டு வந்த மாதிரி ஒரு உணர்வு... இந்த உணர்வு இதுக்கு முன்னாடி அனுபவிசாசதுல்ல....அந்த பிங்க் சுடிதார் யாருன்னு சத்யமா தெரியாது ஆனால் மறுபடியும் அந்த பொன்னை பார்க்கனும் போல இருக்கு...

இன்டர்வியூ ஹாலில் நுழைந்தன் "வாங்க மிஸ்டர் சந்தோஷ்....ப்ளீஸ் டேக் யுவர் சீட்.

தாங்க்யூ சார்... சார் நீங்க கேட்ட ஸ்டில்ஸ் ஓகேவா பாருங்க... வேணாம் வேணாம் தம்பி உன் ஆர்வத்தை சோதிக்க தான் எடுக்க சொன்னேன். போட்டோகிராபி க்கு முதல்ல ஆர்வம் முக்கியம் அது உன் கிட்ட நிறையாவே இருக்கு... சரி நீ எங்க கோர்ஸ் படிச்ச???, எங்க உன் ரெஸ்யூம் காட்டு என்று கேட்க ரெஸ்யூமை நீட்டினான்.

அவனது ரெஸியூமை பார்த்துவிட்டு ஓகே மிஸ்டர் சந்தோஷ் யூவார் செலக்டட் . நீ இன்னைல இருந்து வேலை ஜாயின் பன்னிக்கலாம். ஈவ்னிங் ஒரு ரிசப்ஷன் பங்க்ஷன் நீயும் இதோ நிக்கிறாரு பாரு வீடியோகிராபர்..இரண்டு பேரும் போய் சிறப்பாக பன்னிட்டு வாங்க... உனக்கு மந்திலி பேமண்டு தான். ம்ம்ம் சாப்பாடு ல வீட்டிலே இருந்தே எடுத்துட்டு வந்துரு ...ஹோட்டல் ல சாப்பிடுறனு நேரத்தை வேஸ்ட் பன்னிட்டு பங்கஷன் டைமிங் மிஸ் பன்னிட கூடாது ..நம்ப தொழிலுக்கு முதல்ல டைம் மேனஜ்மன்ட் முக்கியம்.இன்னைக்கு நீ எடுக்குற ஸ்டில்ஸ் ல மொத்த திறமையையும் காட்டனும் ஓகேவா...

ஓகே சார்...

ம்ம்ம் ...சரி பாஸ்போட் சைஸ் போட்டோ ப்ரிண்டு போடனும் கொஞ்சம் ஹெல்ப் பன்னு வா..

அய்யோ....வந்த அன்னைக்கே நம்பள நம்பி பொறுப்பு கொடுக்கிறாரே...ஆண்டவா நல்லா பன்னுவேனா?????

எல்லாம் நல்லாதான் பன்னுவிங்க னு வீடியோகிராபர் நக்கல் அடிக்க...அட போங்க சார் நீங்க வேற நானே பயந்துட்டு இருக்கேன் னு சந்தோஷ் முனுமுனுக்க ...."தம்பி வாங்க இங்க வாங்க னு முதலாளி கூப்பிட அவர் பின்னாடியே சென்றான். அங்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ப்ரிண்டு எடுக்கிறப்ப அடடே என்ன ஒரு ஆச்சரியம் நம்ப அந்த பார்க்கில் பார்த்த அதே பெண்ணின் புகைப்படம் .
"தம்பி 4 காப்பி எடுக்கனும் ......னு சார் சொல்ல..

நாலு என்ன 5 காப்பி எடுக்கிறேனு எடுத்து அதுல ஒரு காப்பி இவன் ஆட்டைய போட்டுட்டான் எதுக்கு அதான் dslr camera la அந்த பொன்னை எடுத்தானே அதுவே போதுமே னு நீங்க நினைக்கலாம் ஆனால் இங்க தாங்க ட்விஸ்ட்... நம்ப ஹீரோவுக்கு போட்டோ அபேஸ் பன்ற பழக்கம்... அழகாக இருக்கிற எல்லா புகைப்படம் அபேஸ் பன்னி சேகரித்து வச்சுப்பான் ஹாஹா....

தம்பி நீங்க கிளம்பலாம் ஈவ்னிங் பங்க்ஷன்.இருக்குல ....வீட்டில் போய் ரெஸ்ட் எடுத்து வாங்க ..

சரி சார் நான் வரேனு பைக்கு எடுத்துட்டு வீட்டுக்கு வந்தான் ...சாவியை சுழட்டி அடிக்க "என்ன டா சந்தோஷ் வேலை கிடைச்சிதா???

ஹலோ இனிமே இந்த டேய் டுயி எல்லாம் வேணாம் ஓகே...அய்யாவுக்கு வேலை கன்பார்ம்.
�????????
continues
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பாக்யாசிவகுமார் டியர்
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Inboxla smteam or Thendral contact pannungapa. Puthu thread open panni tharuvaanga. Athula unga storyah podunga.
 




Status
Not open for further replies.

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top