• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazee queen

மண்டலாதிபதி
Joined
Oct 14, 2019
Messages
129
Reaction score
827
Age
29
Location
Pudukkottai
"ட்ரிங் ட்ரிங்" தொலைபேசியின் சொல்ல சிணுங்கல்.‌ அசட்டையாக தொலைபேசியை பார்த்துக் கொண்டேயிருக்கிறாள் அபர்ணா.

'ட்ரிங் ட்ரிக்' தொலைபேசி மீண்டும் உயிர் பெற்று என்னை கையிலெடு கெஞ்சியது.

மூன்றாம் முறையாக தொலைபேசி அழைக்கவே சோர்வோடு எரிச்சலோடும், நெஞ்சுவிம்ம கண்ணீரோடு ஒலிவாங்கியை கையிலெடுக்கிறாள்.

"ஹலோ நான் அபர்ணா" என்று தொடங்கும் போதே 'ஏன்டீ முண்டம். தூங்கி தொலைச்சியா? என்ன நினைச்சிட்டிருக்க உன் மனசுல ? இன்னும் அரை மணி நேரத்துல நான் பி.எல் மருத்துவமனையில் இருப்பேன். அங்கு வந்துவிடு" என மிரட்டும் தோணியில் வைக்கப்பட்டது தொலைபேசி.

அபர்ணா ஆடாமல் அசையாமல் அப்படியே சிலையாய் நின்று கொண்டு இருந்தாள். தொலைபேசி வைத்துவிட்டு நிதானமாய்‌ கிளம்பி மருத்துவமனை அடைந்தாள். மரத்துப்போன உடலும் மனமும் அவளை நடைப்பிணம் ஆகிவிட்டிருந்தது.

அழகிய தோகை மயிலாக இருந்த அபர்ணா தொகை பிடுங்கப்பட்ட மயிலாக கல்லூரியில் பலரது கனவுக் கன்னியாக, கல்வியில் முதன்மையாக இருந்த அபர்ணாவா இது ? கிண்டலும் கேலியும் கலகலப்பும் அவளைச் சுற்றி நிழலாக தொடர்ந்து. கடந்த காலம் அது, நிகழ்காலம் இது.‌எதிர்காலம் எப்படியிருக்குமோ ? அவளுக்கே இனி நிச்சயமில்லை.

தமிழகத்தில் தென்கோடியில் உள்ள குதிரை பந்திவிளை. அவ்வூரின் பெரிய மனிதர் சிவராமன். இரு மகள்களையும் ஒரு மகனையும் பெற்றெடுத்தவர் அதிக செல்லம் கொடுத்து குழந்தைளை அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் பயில வைத்தவர். மகள்கள் கேட்ட அழகு சாதன பொருட்களையும் விட்டு வைக்கவில்லை இப்பாசமிகு தந்தை.

'ஏண்டா இத்தனை பணம் செலவு செய்து பெண் பிள்ளைகளையும் படிக்க வைக்கணுமா?'

'வோய் உன் வேலைய பாரு' மூன்றும் எனக்கு முக்கிளிகள், ஒண்ணு கல்பனா சாவ்லா, இன்னொன்னு கிரண் பேடி, பையன் அப்துல் கலாம் புரியுதா?

'ம், ஆனா சரிதான்'

மனைவி "உங்கள் எதிர்பார்ப்பு நடந்தால் சரி தான்" என்றதோடு ஊர் கண்ணுப்பட்டுவிடாமல் இருக்கணும்" என்றாள்.

நான் தங்கங்களை பெத்து வச்சிருக்கேன் டி. என் பிள்ளைகள் என்னை போல் இருப்பார்கள். பாத்துக்கிட்டே இரு" என்றார்.

இவரின் மூத்த மகள் தான் அபர்ணா. சென்னையில் உள்ள கல்லூரியில் பி.இ இறுதியாண்டு படித்துக்கொண்டு இருந்தாள். இளையவள் அஜந்தா பி.இ இரண்டாம் ஆண்டு, அடுத்து இளையவன் முதலாமாண்டு படித்து வந்தான்.

மூத்த மகளுக்கு இனிய குரல். அதனால் எல்லாம் பாட்டு போட்டிகளும் அவளே முதலாவது வந்தாள். அதுவே அவளது வாழ்க்கையை, இவரின் கனவை கணல்நீர் ஆகப் போகிறது என்பது அப்போது எவரும் அறியவில்லை.

அஜந்தா அமைதியானவள். ஓவியம் வரைவதில் வல்லவள். யாரோடும் அவ்வளவாக கலந்துரையாடலில் கலந்து கொள்வதோ தனித்து இருந்து தன் கற்பனை, கனவுகளுக்கு உயிரூட்டி வந்தவள். அகிலன் மேடைப் பேச்சுக்கலையில் நம்பர் ஒன் விளங்கினான்.

பிள்ளைகள் கேட்பது தந்தை தட்டுவது இல்லை. இதுவே கூட அவர்களின் கவனம் சிதறுவற்கு காரணம் ஆயிற்று.

"டாட், பல்சர் வேண்டும்'- அகிலன்

‌'அடுத்த மாதம் அகில் பல்சரில் தான் கல்லூரி போகிறாய் சரியா'

'தேங்க்ஸ் டாட்.'

தோங்காய் விற்ற பணத்தில் பல்சர் வந்தது . வினையே அங்குதான் தொடங்கியது. பெட்ரோல் போட தாராளமாக கையில் பணம் புரண்டது நண்பர்கள் அதிகமாகினர். விளைவு ? எல்லா கெட்டப்பழக்கங்களும் வந்து கொண்டாடிக் தான்.

தேர்வு முடிவுகள் சிவராமன் எதிர்பார்த்தபடி வரவில்லை. அகிலன் கண்டுகொள்வதாக இல்லை. துவண்டார் சிவராமன். முன்மொடிந்தார். அதற்கு எதிர்மறையாக அபர்ணா, அஜந்தாவும் பொறியியல் கல்லூரியில் மதிப்பெண்களில் முதன்மையாக இருந்தார்கள்.

அபர்ணாவின் இன்னிசையில் கல்லுரி விழா இனைந்து கொண்டாள். இசை அமைப்பாளர் ஒருவரின் மகள் அக்கல்லூரியில் படித்தால் அவர் குடும்பம் விழாவுக்கு வந்திருந்தது.‌அபர்ணாவையும் தன் மகளாவே பாவித்து அவளை இசையரசியாக்கும் பணியில் முனைந்தார். அவரின் எண்ணத்தை தன் மகள் மலர்விழியிடம் தெரிவித்தார். மலர்விழியும் மகிழ்ந்து போனாள்.

'அபர்ணா! கங்கிராட்ஸ்! உன்னை என் டாட் பெரிய இசை அரசியாக போகிறாராம்.

'அப்படியா சந்தோஷம், ஆனா அதில் எனக்கு விருப்பமில்லை'

'நமக்கு தேர்வு முடிந்த பிறகு என் டாட் யு.எஸ்.ஏ- க்கு இசைக் கச்சேரி நடத்தப் போகிறார். நானும் நீயும் அம்மா அந்த குரூப் போட போகும் வருவோமே'

'என் டாட் சம்மதிக்க மாட்டார்'

'அனுமதி வாங்குவது என் டாட், நீ, ஆம் என தலையாட்டினாள் போதும்'

'என்னவோ செய்யுப்பா' என்ற ஆர்வம் இல்லாமல் சொன்னால் அபர்ணா.

ஐந்தாம் பருவத் தேர்வு நல்ல முறையில் எழுதி முடித்து ஊர் வந்து சேர்ந்த அபர்ணா தம்பி நிலையும், தந்தையின் மனமுடைந்த நிலையையும் கண்டாள். அவளுக்கு வெறுப்பை மிஞ்சியது. வீடு வீடாக இல்லை. விடுமுறைக்காக ஏனோர் வந்தோம் என்று நினைத்துக் கொண்டாள்.

அந்த நேரம் பார்த்து மலர்விழி என் தந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு யு.எஸ்.ஏ-க்கு தன் மகளுடன் அவளையும் அழைத்து செல்ல அனுமதி கேட்டார். சற்றுத் ஓய்ந்து போயிருந்த சிவராமன் தன் மகள் அங்கு செல்ல அனுமதி தோடு பாடவும் இசைவு அளித்தார். மேகலை உற்சாகப்படுத்தி அடுத்த வாரமே சென்னைக்கு அனுப்பி வைத்தார். அவள் தயங்கிய போது 'மலர் விழி உன் தோழி தானே! போய் வா. இன்னும் ஆறு மாதத்தில் வேலையில் சேர ஏதாவது ஊருக்கு போயி தானே ஆக வேண்டும்.

'உனக்கு ஒரு செய்தி தெரியுமா? அஜந்தாவின் ஓவியம் மாஸ்கோவில் ஓவியக் கண்காட்சியில் இடம் பெறுகிறது. இந்தியாவில் முதல் பரிசு அவளை மாஸ்கோவுக்கு அழைத்திருக்கிறார்கள். நான் கூடவே துணைக்கு போகலாம் நினைக்கிறேன்.

'சரிப்பா, நீங்க அவளுக்கு துணையா போயிட்டு வாங்க. நான் சமாளிச்சுக்கறேன்.

அபர்ணா கிளம்பிவிட்டாள். அஜந்தாவுடன் மாஸ்கோவுக்கு செல்வதற்காக ஆயத்தமானார். மகனை நினைத்து கண்ணீர் ஒருபுறமும் மகள்களை நினைத்து சரிந்த தலையை நிமிர்த்தினார்.

ஓவியக் கண்காட்சியில் அஜந்தாவின் ஓவியத்திற்கு மரியாதை கிடைத்தது. உலக அளவில் மூன்றாவது இடத்தைப் பெற்ற ஜனதாவிற்கு ரூ.5 லட்சம் பணமுடிப்பும் பாராட்டு பத்திரம் கிடைத்தது. சிவராமன் பெரிதும் அதிர்ந்து போனார். தன் எண்ணம், கனவு மெய்ப்பட்டு விட்டதாக கருதினார்.

மனைவிக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். டும் இந்தியா கிளம்புவதற்கு முன் தன் மூத்த மகள் அபர்ணாவை தொலைபேசியில் பிடித்தார்.

மகிழ்ச்சியில் தந்தை இருப்பதை உணர்ந்த மிகவும் பரவசமடைந்தாள். ஓரளவு தந்தை நீ நார்மல் ஆகி விடுவார் என உள்ளம் நிறைவு கண்டது. இன்னும் இரண்டு நாளில் தன் நிகழ்ச்சியில் பாடப் போவதாக கூறினாள்.

நிகழ்ச்சி மேடையில் அபர்ணா:-

"ஓவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே...

என்ற பாடலைப் பாடி முடித்ததும் அரங்கமே கைத்தட்டலில். ஒரு சந்தேகம். இவர்களுக்குத் தமிழ் எப்படி புரிந்தது என்று, இம்முடி மேடையில் அமர்ந்து அருகில் இருந்த மலர்விழியின் தந்தையிடம் கேட்க அவர் கூறியது வியப்பூட்டியது. இசை ரசிகர்களுக்கு மொழி தெரிய வேண்டுமென்பதல்ல. அரங்கில் இருப்பவர் 75 சதவீதம் பேர் தமிழர்களே என்பதுதான் அபர்ணா உற்சாகமானாள். பசியோடு இருந்தால் பார்வையாளர் பகுதியிலிருந்து துண்டு சீட்டுகள் வந்து வண்ணமிருந்தது. ஒரு இளைஞர் மேடையேறி வந்து நான் திருவான்மியூரைச் சார்ந்தவன் என்றும் தானே ஒரு பாடகன் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டு வந்தனாவிடம் தான் விரும்பிய பாடலைப் பாடுமாறு வேண்டினான்.

'உங்களுக்கு எந்தப் பாடல் வேண்டும்?'
'எங்கே அந்த வெண்ணிலா...'
'சரி நீங்கள் பாடகர் தானே'
'ஆம்'
'அப்போ அந்தப் பாடலின் ஆண் குரலில் பாடுவதை நீங்கள் பாடுங்கள். நான் பெண் குரலில் பாடலைப் பாடுகிறேன்'
'சரி' என்றார் விஷ்ணு.

"எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனியாக்கினாய்....

அரங்கம் மேன்மையான அமைதியானது. கோபக் குரலில் பாடி அரங்கமே அதிசயிக்க வைத்தான் விஷ்ணு.

மலர்விழி அப்பாவிடமிருந்து அபர்னாவின் முழு விபரம் அறிந்து கொண்டான். சரி முடிந்து அனைவரும் விமான நிலையம் வந்தனர். காத்திருக்க வேண்டிய நேரத்தில் அங்கு கிடந்த ஆங்கில செய்தித்தாளை கையில் எடுத்தாள்.

"மாஸ்கோவில் விமானம் வெடித்து சிதறியது" பத்தும் படித்தால் பயணம் செய்தவர் பெயர் பட்டியலை படித்தாள். அதிர்ந்தாள். அப்படியே மயங்கினாள். காரணம் தெரியாமல் மலர்விழி திகைத்தாள். தந்தை அதிர்ந்தார் ஏன் எப்படி ? என திகைத்தா போதும் மருத்துர் வரும் வந்து சேரவே பரிசோதித்து அதிர்ச்சி அடைந்ததை கூறினார்.

'ஐயோ, சிவராமனுக்கு என்ன பதில் சொல்ல' இன்னும் மலர்விழியின் தந்தை அதிர்ச்சியில் உறைந்தார். மலர் விழியும் 'அபர்ணா, அபர்ணா...' என அரற்றிக் கொண்டே இருந்தாள். பெரும் செய்தியை அறிந்த அபர்ணாவுக்கு அனுதாபப் பட்டனர். பயணத்தை ஒத்தி வைத்துவிட்டு மருத்துவமனையில் சேர்க்க விருப்புடன் இசைக்குழுவினர் செயலில் இறங்கி கொண்டிருக்கும் போது விஷ்ணு தன்னை அபர்ணா விட முழுவதுமாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஆர்வத்துடன் அங்கு வந்து சேர்ந்தான். அவனுக்கு பலத்த அதிர்ச்சி. உள்ளுர் காரன் என்பதால் சிறந்த மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து தானும் உடன் இருந்தான். இருநாட்கள் கழித்து அபர்ணா கண் விழித்தாள்.

'அஜந்தா... அஜ..ந்தா, ப்பா,' என அலறினாள்.

மீண்டும் மயக்கமுற்றாள். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டாள். அனைவரது கண்காணிப்பிலும் மயக்கம் தெளிந்து எழுந்து அமர்ந்து வாய் விட்டு கதறினாள். ஊரிலுள்ள தன் தாயிடம் பேச வேண்டும் என்றாள்.

அவர்களிடம் ஏற்கனவே பேசி விட்டேன். அவர்கள் உன் வருகைக்காக தான் எதிர்பார்க்கிறார்கள்" என்றால் மலர்விழி.

மலர்விழி அப்பா கைப்பேசியில் பொறுப்பாக பேசி அவரைத் தேற்றினார்.

'அபர்ணா நாளை மறுநாள் வந்துடுவா, நாங்கள் எல்லாம் இருக்கிறோம். சிரமமில்லாமல் பார்த்துக்குவோம். அபர்ணா உங்களையும் தம்பியையும் பார்த்துக்குவாம்மா. கலங்காதீங்க, தம்பிய சென்னை விமான நிலையத்துக்கு வர சொல்லுங்க.

ஊர் வந்து சேர்ந்தனர். விமான நிலையம் வரவில்லை. நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தான். அனைவரும் சென்னையில் ஒரு நாள் தங்கிவிட்டு ஊர் திரும்பினார்.

மலர்விழி அப்பா அபர்ணா ஊர்களை துணை வந்தார். 'எதற்கும் கவலைப்படாதீர்கள். அபர்ணாவும் என் குழந்தைதான். என்ன உதவி எப்ப வேண்டுமானாலும் தயங்காமல் என்னிடம் கேளுங்கள். முடிந்த வரை உதவுகிறேன். இந்தப் பையனுக்கு வேலை வாங்கிக் கொடுக்கிறேன். ரும்மி சென்னை வந்து விடுங்கள். இன்னும் 6 மாதம் அதன்பிறகு அபர்ணாவை நல்லவேளை போய்விடுவார் ஒரு கடவுள் ஒன்பது வாசல் திறப்பான்' இந்தாங்க ரூ. 50,000 செலவுக்கு வைச்சுக்குங்க" இன்று கொடுத்து விட்டு ஊர் திரும்பினார்.

அபர்ணாவின் தாய்க்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது புரியாத நிலையில் இருந்தாள். அபர்ணாவை தோற்றுவோர் யாரும் அருகில். அபர்ணா துணிவுடன் தாய்க்கு தாயாக அணைத்துக் கொண்டாள் ஆதாவாக.

இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கதறினார். வீட்டுக்குத் தலைப்பிள்ளை, இடையில் இடத்தைப் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள். சுற்றுலா சென்ற தம்பியோ வீடு வந்து சேரவில்லை.

ஊராரை தந்தையை பரிகசித்தனர். அளவுக்கு மீறி செலவழித்து பிள்ளைகளை வசதியாக வளர்ந்து விட்டார். ஆளாளுக்கு வாய் வந்ததைப் பேசினர். விதியே என் அனைத்தையும் உள்வாங்கி பொறுமையாக அமர்ந்திருந்தாள் அபர்ணா, சிதைந்த சிற்பமானாள். கலைந்த ஓவியமானாள். கல்லூரி விடுமுறையும் முடிந்து கல்லூரி திறக்கும் நாள் வந்தது. சென்னை சென்றாள். மகனின் வருகைக்காக தாயார் குதிரைபந்திவிளையிலே தங்கிவிட்டாள்.

திடுமென காலடி ஓசைகள் கேட்டு அபர்ணாவின் தாயார் வெளியே வந்து பார்த்தார். நான்கு காவலர்கள் அகிலனின் கையில் விலங்கிட்டு அழைத்து வந்திருந்தனர். கஞ்சா கடத்தலில் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறினர். விட்டிலும் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டோம் சோதனையிட வந்தோம் என கூறி அகிலனின் அறைச் சோதனையிடப்பட்டது. கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டது. ‌ ஏற்றி சென்றனர்

தாயின் மனநிலையே விவரிக்க வார்த்தைகள் இல்லை வேரறு அறுக்கப்பட்ட மரமானாள். அனாதையானாள். அகிலனும் சிக்னலுக்காக போலீஸ் வாகனம் நின்றபோது அதிலிருந்து குதித்து ஓடினான். அந்தோ பாவம் ! பச்சை விளக்கு எரியத் தொடங்கவும் பின்னால் வந்த வாகனம் முண்டியடித்து வரவும் அகிலன் குதிக்கவும் சரியாக இருந்தது. அகிலன் அந்த இடத்திலே தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டான்.

தாயாருக்கு தகவல் கூறினாலும் கேட்கும் நிலையில் இல்லாததால் அபர்ணாவுக்கு தகவல் சென்றது. அவளும் வந்தாள். தாயாரைவிடவும் மிகவும் மோசமான மனநிலையில் அபர்ணா இருந்தாள். தங்குவதற்கு கல்லூரி அருகில் வாடகை வீடு பார்த்துத்தர மலர்விழியின் தந்தையிடம் உதவி கேட்டாள். தாயாரை தன் சகோதரனை பார்க்க அழைத்துச் செல்வதாகக் கூறினாள். தாயும் சம்மதிக்கவே வில்லை. பெட்டி படுக்கைகளுடன் இருவரும் ரயிலில் ஏறினார்கள் சென்னைக்கு.

சென்னை வாசம் அபர்ணாவுக்கு புதிதல்ல. ஆனால் தனது தாயார் புதிய இடத்தில் தன்னை பதித்துக் கொள்ள இயலவில்லை. அடர்ந்த தென்னை மரங்கள், நீரோடை, வயல்வெளி, பூச்செடிகளின் நடுவே அமைந்த கிராமத்து வீட்டில் இருந்த சுத்தக் காற்று, சுதந்திர காற்று இங்கே கிடைக்காது மூச்சு முட்டியது.

தீப்பெட்டிக்குள்ளே அடைத்து போன்ற வீடு, சுற்றுச்சூழல், பேசும் சென்னை தமிழ்நடை, விலைவாசி என எதிலும் ஒட்ட முடியாத நிலை. மலைசசுமையை இறக்கி வைக்க இடமின்றி தவித்தார். தாயின் பரிதவிப்பை உணர்ந்த மகள் கிராமத்திலிருந்து தொலைக்காட்சிப் பெட்டி, வானொலி போன்றவற்றையும், தாய்க்கு கொண்டு வந்து கொடுத்தார். மனம் நில்லு என்றால் நிற்கவில்லை. தாய்க்கு மட்டுமா ? அபர்ணாவுக்கு ஆறுமாத படிப்பு ஆறு வருட படிப்பு போல் இருந்தது.

அவ்வப்போது மலர்விழியும் அவள் தாய், தந்தையர் வந்து செல்வது சற்று மாற்றாக இருந்தது. இது நிரந்தரமில்ல. தற்காலிகமானது என்பதை உணர்ந்தார். ஒரு நாள் மாலை வேளையில்.

'அம்மா, இதே சென்னையில் எனக்கு வேலைக் கிடைத்திருக்கிறது'

'வேண்டாம், நாம் ஊருக்கு போய் விடுவோம்'

'அங்கு போய் என்ன செய்வது?'

'நமது தோட்டம் நிலங்களைச் சரி செய்தாலே உனக்கு -உன் எதிர்காலத்திற்கு போதும்'

'அப்போ, அப்பா என்னைப் பற்றி கண்ட கனவு?'

'கனவு கண்டு கனவுலகம் போய்ட்டாரே'

'நான் ஒரு நாள் ஆகுது அவரது ஆசையை நிறைவேத்தி வைக்கிறேன் உன்னையும் நல்ல பார்த்துக்கிறேன்'.

'யாராவது என்றாவது என் பேச்சை கேட்டதுண்டா?"

'சரி சரி உன் இஷ்டம் போல செய்'

'நன்றிம்மா'

இவர்களின் உரையாடலின் இடையே மலர்விழியும் தந்தையும் வந்தனர்.

'அம்மா, மலர்விழிக்கு பெங்களூரில் வேலை கிடைத்திருக்கு. இந்தா இனிப்பு'

'எனக்கு சென்னையில் பி.எஸ்.சி சாப்ட்ல வேலை கிடைச்சிருக்கு'

'அப்படியா ரொம்ப சந்தோஷம், என்ன அபர்ணா அம்மா முகத்துல சந்தோஷத்தை காணோம்'

'அம்மா இப்படித்தான் முடிஞ்சதும் ஊருக்குப் போயிடலாம்னாங்க. நான் இப்பதான் தேத்தி வைச்சிருக்கேன்.

'அபர்ணா, சொல்ல வந்து மறந்துட்டேனே, நாம் யு.எஸ்.ஏ போயிருந்தப்ப வந்து உதவினாரே விஷ்ணு, அவரை எனக்கு போன் பண்ணி உன்ன ரொம்ப விசாரிச்சார். அவருக்கு கான்ட்ராக்ட் முடிஞ்சதும் இன்னும் மூணு மாசத்துல சென்னையில போஸ்டிங் ஆகிறாராம்.

'ம்...ம்'

'என்னம்மா இப்படி அசிரத்தையா இருக்கா?'

'ஒன்னும் இல்ல. எனக்கு எல்லாமே மறந்து போச்சு'

உன் நிலை அப்படி. உன்னை குறை சொல்லல. அவன் தமிழ்நாடு வந்ததும் நம்ம எல்லாரையும் வந்து பார்க்கிறதா சொன்னான்.

'ம்... ம் வரட்டும். அடுத்த மாது தேர்வு முடிந்துசிடும். உடனே வேலைக்கு சேரனும். வேற வசதியான வீடு கம்பெனி பக்கத்துல பாக்கணும்'

'செய்வோமா'

'மலர் டெல்லி பெங்களூர் போறப்ப நாங்களும் சென்று போறதா முடிவு எடுத்துக்கோம்'

' நல்லதுப்பா. அப்படியே செய்யுங்க'

'அதுக்கு முன்னாடியே உன்னோட கல்யாணத்த முடிக்கணும்னு நினைக்கிறேன்'

'அதுக்கென்ன அவசரம்' இரண்டு வருடம் போகட்டுமே'

உடனே அபர்ணாவை அம்மா இடை புகுந்தார்.

'பெரியவங்க சொல்றது சரிதான்' அபர்ணாவுக்கு நான் மட்டும்தான் இருக்கேன். ஊர்ல சொந்த பந்தங்கள் இருந்தாலும் பொறுப்பானவங்க இல்ல. நீங்க ஏதாவது உங்க பொண்ணா நினைச்சு நல்லது செய்யுங்க.

'அம்மா, யு.எஸ்.ஏ ல நாங்க போனப்ப அபர்ணா எங்களுக்கும் உதவின பையன் நம் தமிழ்நாட்டை சேர்ந்த விஷ்ணு இருக்கான். அவனுக்கு அபர்ணாவை கட்டிக்க வைக்க விருப்பம். அவன் அங்கு சாப்ட்வேர் கம்பெனில லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறான். பார்க்க லட்சணமாய் இருப்பாள். ஒரு அப்பா , அம்மா அளவான குடும்பம். தங்கைக்கு கல்யாணம் ஆயிருச்சு. யோசிச்சு வைங்க. நான் பெங்களூர்ல் செட்டிலாவதற்கு முன்னே நடந்தால் தான் நல்லது'

'ம் ஆண்டவன் விட்ட வழி. ஆண்டவன் எங்கே இருக்கான்? நாம் என்று நினைக்க அவன் வேறல்ல நினைக்கிறான் என்று சலித்தாள் அம்மா.

உரையாடலுக்கிடையே தனக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் அபர்ணா டிஎம்டி பணம் கொடுத்து தந்தையையும் மகளையும் உபசரித்தாள். தாய் பரிவோடு மகளின் தலையை தடவி கொடுத்தாள். தாயின் குரல் கம்மியது .

‌'நல்லவர்களை பார்த்து பார்த்துதான் ஆண்டவன் சோதிக்கிறான்' என்றார்.

நாட்கள் மாதங்களாயின. பி.இ. தேர்வு முடிவும் வந்தது. விஷ்ணு சென்னை வந்து சேர்ந்து விட்டான். அளவுக்கதிகமான பணம் வரவால் தறிகெட்டே வந்திருந்தான். அவளது பெற்றோர் திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தவே அவன் சரி என்றான்.

திருமணப் பேச்சு பேச்சாக இருந்து கொண்டு இருந்தது. அப்பெல்லாம் வேலையில் கருத்தாயிருந்து பணி உயர்வு பெற்று அதிக ஊதியம் பெற்றாள். ஆனால் செலவழிக்க தெரியாமல் சேமித்து வைத்தாள்.

ஒருநாள் அபர்ணா தன் தாயிடம் சொந்த மண்ணுக்கு போக விரும்புவதாக கூறுவோம் இருவரும் புறப்பட்டு ஊருக்கு வந்தனர்.

ஊரும் உறவுகள் மாறிப் போயிருந்தது. சொந்த பந்தங்கள் வந்து பார்த்து நலம் விசாரித்து சென்றனர். நிலபுலன்களை அடிமாட்டு விலைக்கு வாங்கிக் கொள்ள பலர் முன்வந்தனர் ‌. தாய்க்கும் மகளுக்கும் அந்த விலைக்கே கொடுக்க மனமில்லை.


அபர்ணாவின் தந்தையின் நண்பர் வந்தார். அடித்து விட்டு தன் மகனுக்கு அபர்ணாவை திருமணம் செய்து வைக்க விரும்புவதாகத் தெரிவித்தார். தாய்க்கு மகளின் விருப்பத்தை விடவும் தன் கணவர் இருந்தால் நம் வீட்டில் சம்பந்தம் பேசுவர் என்று கேள்வியை பெரிதாக தோன்றியது.

பையன் பட்டப்படிப்பு படித்துவிட்டு தன்னில் ஐம்புலன்களை வைத்து விவசாயம் வியாபாரம் செய்து வந்தான். அபர்ணாவின் தோப்புகளையும், விளை நிலத்தையும் இவர்கள் பார்வையிட்டு பாதுகாத்து வந்தனர்.

'அபர்ணா, நீ எங்கே எங்கேனும் கல்லூரிகளில் வேண்டுமானாலும் வேலை செய்து கொள்ளலாம். படித்த படிப்பும் வீணாகாது. எந்த கெட்ட பழக்க வழக்கங்களும் என் மகனுக்கு கிடையாது. சொந்த ஊரில் பிழைக்கத் தெரியாதவன் எங்கே போயும் பிழைக்க மாட்டான் என்று தான் என் மகனை வேலைக்கு அனுப்ப வில்லை. எப்படியும் மாதம் ரூ. 10,000க்கு மேலே நிகரலாபம் வருகிறது. சொந்த வீடு, தோட்டம், கார் எல்லாம் இருக்கிறது. சுதந்திரக்காற்றை சுவாசித்து சுதந்திரமாய் இயற்கையோடு இயற்கையாய் வாழலாம். நீ என்ன சொல்கிறாய் ? உன் அப்பா வாழ்ந்த இடம். ஊரும் உறவும் விட்டுப் போகாது. யோசித்து முடிவு எடு' என்று தாம் விரும்புவதை கூறி சென்றார்.

அபர்ணா தன் தாயிடம் 'அம்மா, நீ என்ன நினைக்கிறாய்'

'எதைப் பற்றிக் கேட்கிறே'

'இப்போ மாமா சொல்லிவிட்டு சென்றாரே'

'ஓ அதுவா, யோசிக்கணும், அப்பா உங்கள் எல்லாம் மிக மிக உயரத்தில் வைத்துப் பார்க்கவே விரும்பினார். மாறாக விவசாயம் செய்து வாழும் ஒரு பனை நிச்சயம் அவர் இருந்தால் தேர்வு செய்ய மாட்டார்.

'எளிய வாழ்க்கை. ஆடம்பர பகட்டில்லாம் அமைதியான சூழலில் பிறந்த மண்ணில் இருக்கலாம்'

'எனக்கு விருப்பம் இல்லை. வேறு ஏதாவது பேசுவோம்'

அபர்ணாவும் தாய்க்கு மதிப்பளித்து மறுபேச்சின்றி வேறு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சில நாட்களில் தாயும் மகளும் அனைவரிடமும் விடைப்பெற்று சென்னைக்குத் திரும்பினார்.

விஷ்ணு சென்னை வந்து தன் கம்பெனியில் வேலை செய்தபோது அவர் நான் வேலை செய்யும் கம்பெனிக்கு வந்து விசாரித்தான். விடுமுறையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. மலர்விழியின் பெற்றோரை தேடி போனான். அங்கு அவர்களும் இல்லாததால் வெறுத்துப்போய் அலைந்து கொண்டிருந்தான். பொழுதுபோக்கு இடங்களை நாடிச் சென்று கொண்டு இருந்தான். மேல்நாட்டுப் பழக்கமும் பணம் நகர வாழ்வும் கொஞ்சம் கொஞ்சமாக விஷ்ணுவை அடிமைப் படுத்திக் கொண்டது. மீளமுடியாத நிலையில் அருகில் இருந்தான்.

அதிர்ச்சியாக ஒருமுறை அபர்ணாவின் உலகத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அவர் ஊரில் இருந்து வந்து பணியில் சேர்ந்து விட்டதை அறிந்து கொண்டு அவள் வீட்டை அடைந்தான். தாயார் மட்டுமே வீட்டில் இருக்க மிகவும் மகிழ்ந்து போனான். தான் யு .எஸ். ஏ.யில் இருந்து வாங்கி வந்திருந்த பல பரிசுப் பொருட்களுடன் தனது காரில் வந்து இறங்கினான். விஷ்ணுவின் தோற்றம், யு.எஸ்.ஏ. போய் வந்ததை பறைசாற்றும் ஆடம்பர கலாச்சாரமும் வெகுவாக அபர்ணாவின் தாயை கவர்ந்தது. விஷ்ணு மிகவும் பண்போடு, பணிவோடு , மரியாதையோடு, வருங்கால மாமியார் என உறுதி செய்யும் உரிமையோடு கலந்துரையாடினான். அவர்களின் மனதில் அழுத்தமாக இடம் பிடித்து விட்டு திருப்தியோடு பெருமையோடு தன் இருப்பிடம் சென்றான்.

சென்ற சில மணி நேரம் கழித்தே அபர்ணா வீட்டுக்கு வந்தாள். அழைப்பாயாத மனதை அபர்ணா சென்றிருந்தாள். ஆனால் தான் உயர வேண்டும், தந்தையின் ஆவலைப் பூர்த்தி செய்யவேண்டும் என்ற எண்ணமும் அடியோடு இல்லை. எதிலும் வெறுப்பு, சளிப்பு என்பது ஒன்றே அவளில் உறைந்து இருந்தது. உதட்டில் புன்னகையை பார்ப்பதே அரிதாக இருந்தது.

பலருக்கு அபர்ணாவின் செயல்பாடுகள் சந்தேகத்தை கிளப்பியது. ஆனால் யாருக்கும் நெருங்கி அவளின் தனிப்பட்ட வாழ்க்கையை தூண்டி துருவும் இருக்கும் தைரியம் வரவில்லை. நிதானம் ஒருபோதும் அவள் தவறியதில்லை. கொடுக்கப்பட்ட பணியை செவ்வனே செய்து முடித்து பணியில் கருத்தாய் இருந்தாள். வீட்டிலும் பொறுமையாக எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாகவே இருந்தாள்.

இடையிடையே மலர் விழயோடு தொடர்பு கொண்டு பேசுவது ஒன்றுதான் அவளது பொழுதுபோக்காக இருந்தது. விஷ்ணு வந்து சென்ற சுவடு வீட்டில் இருந்தாலும் அதைப் பற்றி விசாரிக்கும் ஆர்வம் அவளிடம் இல்லாதது கண்டு தாயார் துணுக்குற்றார்.

'அபர்ணா, இன்று நாம் வீட்டுக்கு முக்கியமான ஒருவர் வந்திருந்தார் யாருன்னு கண்டுபிடி பார்ப்போம்?'

'யாரா இருந்தா என்ன ? சரி, உனக்காக கேட்கிறேன், யார் வந்தது?'

'விஷ்ணு மா , நம்ம விஷ்ணு. இங்கே ஜாயின் பண்ணி ஏதும் நம்மைத் தேடி அலைந்திருக்கிறான் பாவம். மலர்விழி வீட்டுக்கும் போய் ஏமாந்திருக்கிறான். நல்லப் பிள்ளை. யு.எஸ்.ஏ போய் பந்து பிள்ளை என்ற பந்தா ஒன்றுமில்லை.

என்ன நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் நீ ஒன்றும் சொல்லல'

'என்ன சொல்லணும், நீ பேசிட்டே இரு. நான் கேட்க்கறேன்'

'அதில்ல , அந்தத் தம்பிக்கு உன்னை கட்டிக்கணும் என்று கொள்ள ஆசை. அடுத்த வாரம் அவன் பெற்ற மகளோடு வருவதாக சொல்லி இருக்கிறான் இந்த இடம் அமைஞ்சா நமது அதிர்ஷ்டம்'

'என்னம்மா சொல்றே . ஐ.டி.துறை , அமெரிக்க பண்ணி இதெல்லாம் பணம் கிடைக்கும். மன அமைதி கிடைக்குமா என்ன?'

'அந்தப் பிள்ளை அப்படியில்லை. உன்ன உள்ளங்கையில் வைத்து தாங்குவான் பாரு . நாம் விரும்புவதை விட நம்மை
விரும்பிகிறவனை ஏற்றுக்கொள்வது மேல். என்னையும் உங்கள் கூடவே வச்சிருக்க சம்மதிச்சிருக்கான். அவன் அப்பா அம்மா இவன் பேச்சை தட்ட மாட்டார்களாம்.'

'இன்னும் ஒரு வருடம் போகட்டுமே'

'ஏன்? ஏன்னு கேக்கிறேன். இடம் பணம் இல்லையா அல்லது அக்கா தங்கச்சி கல்யாணம் தான் ஆக வேண்டுமா? நல்ல காரியத்தை என்றைக்கும் தள்ளிப்போடக்கூடாது மா'

' உன் விருப்பம் போல் செய்'

இத்துடன் உரையாடலை முடித்துக் கொண்ட அபர்ணா தூங்கச் சென்றாள். ஆனால் இவள் அம்மா புத்துணர்ச்சியுடன் விஷ்ணுவை தொலைபேசியில் அழைத்தாள். 'தற்சமயம் இந்த தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது' என்ற பதில் கிடைக்கவே, விஷ்ணுவின் பெற்றோரை பிடித்தாள்.

அவன் தந்தை பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். 'விஷ்ணுவைப் பற்றி முழுமையாக உங்களுக்கு தெரியுமா"என கேட்க "தெரியும்" என்ன பதில் அளித்துவிட்டு அவர்களின் சம்மதத்தை கூறினாள். அவர்களும் அவன் விருப்பமே தங்கள் விருப்பம் என்று சொல்லி கேட்கும் பூரிப்புடன் நிம்மதியாக தூங்க சென்றாள். ஆனால் ஏனோ அபர்ணாவுக்கு தூக்கமே வரவில்லை தூங்கியது நேரத்திலும் அவன் தந்தை கனவில் வந்தால் கனவு சோகமாக அமர்ந்திருக்கும் தந்தையைப் பார்த்து எழுந்து அமர்ந்தாள் கனவும் கலைந்தது. கண்களில் கண்ணீரில் அருவியாய் தந்தை, தங்கை தம்பியை நினைத்துக்கொண்டேன் இருந்தது. விஷ்ணுவைப் பற்றி எதுவும் அறியாமல் அபர்ணா இருந்தாள். அழியவும் விருப்பவில்லை. இடையிடையே விஷ்ணு அபர்ணாவுக்கு போன் செய்து நலம் மட்டுமே விசாரித்தான்.

'அபர்ணா, நாளைக்கு லீவ் சொல்லிடு'

'ஏன்ம்மா, உனக்கு உடம்பு சரி இல்லையா?'

'அதுயில்ல. விஷ்ணுவுடன் அவனைப் பெற்ற மகளும் உன்னை பொண்ணு பாக்க வர்றாங்களாம்'

' அப்படியா ? லீவு எதுக்கு எப்ப வர்றாங்க?'

'மாலை 6 மணிக்கு தான்'

'அப்போ அமைதி கேட்டு வாங்கி வர்றேன். மற்றபடி நான் இங்கிருந்து என்னதான் செய்யப் போகிறேன்'

'அதுவும் சரிதான். வீட்டில் இருந்தும் அழுது வடிஞ்சிக்கிட்டே இருப்ப.

'என்னப் பார்த்தா அப்படியா தெரியுது'?

'நீயே கண்ணாடியில் முகத்தைப் பாரு'

'சரி விட்டு தள்ளு , நான் இனிமே சிரிச்சிக்கிட்டே இருக்கேன் போதுமா ?'

'சரி. வர்றவங்க கிட்ட நல்ல சிரித்துப் பேசு. உன் வருங்கால மாமியார் ஆச்சே ' பார்த்து பதமா நடந்துக்கோ' என மகளிடம் கூறிவிட்டு சமையல் கட்டை நோக்கி சென்றாள்.

பார்த்துப் பார்த்து இனிப்பு, காரம் செய்தாள். குமரி மாவட்டம் கிராமத்து பெண் பார்க்கும் படலத்தை என்னென்ன இருக்கும் அதெல்லாம் சமைத்தாள். கடையிலும் வாங்கி தடபுடலாக ஆர்வமாக செய்தாள். மலர்விழியின் தந்தையிடம் பேசினாள். அவன் தனக்கு அன்று வர இயலாத நிலையை எடுத்துக் கூறி விட்டு, நிச்சயதார்த்துக்கு அவசியம் வந்திருந்து தந்தைக்குரியவைகளைச் செய்வதாக உறுதியளித்தார். மலர்விழியும் ஒரு வாரம் திருமணத்திற்கு விடுப்பு எடுத்து சென்னையிலே தங்குவதாக தெரிவித்தாள். அபர்னாவோ எதிலும் கலந்து கொள்ளாமல் தாமரை இல்லை தண்ணீராக இருந்தாள்.

விஷ்ணு தன் படகுகளில் பெற்றோர், தங்கை குடும்ப சகிதம் வந்தான். அனைவரும் தேனீர் வழங்கினாள் அபர்ணா. அழகும் அடக்கமும் பெண்ணைப் பிடிக்காமல் போகுமா? அனைவருக்கும் பிடித்தது. வகைவகையாக செய்து படைத்து இருந்த உணவு பதார்த்தங்களையும் உண்டனர். திருப்தியாக சென்றனர். அபர்ணாவின் தாயார் பட்டணத்தை படாடோபம் கவர்ச்சியின் முழுகி போனதால், தனக்குப் பிறகு தன் மகளுக்கு துணை வேண்டும் என்பதில் தான் கவனம் இருந்தாலொழிய விஷ்ணுவின் குணநலன்களைப் பற்றி சிறிதும் விசாரித்து அறிந்து கொள்ளவில்லை. மலர்விழி குடும்பம் இங்கு இருந்தாலாவது விஷ்ணுவின் வெளிதோற்றத்தை வைத்தே விஷ்ணு தெரிவு செய்துவிட்டனர். திருமணம் மிகவும் ஆடம்பரமாக மேல் நாட்டு கலாச்சாரம் கலந்து நடைபெற்றது. அபர்ணா, அம்பர்லா விஷ்ணுனாள் விருந்து, பார்ட்டி, கேளிக்கை என்ன கிட்டத்தட்ட ஒருமாதம் உருண்டோடியது.

அபர்ணா வீட்டிலேயே விஷ்ணுவும் குடி புகுந்தான். அபர்ணாவின் தாயாருக்கு தான் பெருமை தலை கால் புரியவில்லை. இந்தக் காலத்தில் வீட்டோட மாப்பிள்ளை கிடைப்பது என்பது சும்மாவா, அதிலும் சகல வசதிகளுடன் கிடைப்பதென்பது அரிதல்லவா ? விதம்விதமாக சமைத்துப் போட்டு மருமகனே ஒரு சுற்று பெருக்க வைத்து விட்டாள்‌. அபர்ணா ஏனோ அப்படியேதான் இருந்தாள். புது மணப் பெண்ணுக்கு உரிய பூரிப்பு பொலிவு அவளிடம் அவ்வளவாக காணப்படவில்லை.

திருமணத்திற்காக ஊரிலிருந்து வந்திருந்த மலர் விழியும், தந்தையும் மிக மகிழ்ந்து அனைத்துக் கடமைகளும் முடிந்த விட்டதாக கருதி திரும்பிச் சென்றார். திருமண சுவடு மறைவதற்குள்ளாக வாலை சுருட்டிக் கொண்டு இருந்த விஷ்ணு தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினான்.

மது பாட்டில்களுடன் வீட்டுக்கு வர தொடங்கினான். அபர்ணா முறையிட்டு பார்த்தாள். பின் ஒதுங்கிக் கொண்டாள். நத்தை பாதுகாப்பாக போட்டுக் கொள்வது போல் தன்னறைக்குள் முடங்கிக் கொண்டாள். அபர்ணாவின் தாயார் கண்டித்துப் பார்த்தாள். பலனில்லை விஷ்ணுவின் பெற்றோரிடம் முறையிட அவர்கள் இதுதான் அவனது பழக்கம். அதுதான் முதலிலேயே அவனைப் பற்றி தெரியுமா என்ன கேட்டோம். தெரியும் என்று விரும்பி தானே கற்றுக் கொண்டீர்கள் ? நாங்கள் திருத்த முயன்று தோற்றுப் போய் ஒதுங்கிக் கொண்டோனம். இனி எல்லாம் அபர்ணா கையில் தான் இருக்கிறது' என்று பரிதாபப்பட்டனார். வயதான அவர்களால் வேறு என்ன செய்ய இயலும்.இவன் மாதம்மாதம் கொடுக்கும் ரூ.5,000/த்தை வைத்தே தங்கள் தளர்ந்த காலத்தை தளர்ச்சியுடன் நடத்திக் கொண்டிருப்பவர்கள்.

அபர்ணா பெரிதும் சோர்ந்து போனாள். அன்புக்காக ஏங்கிய குழந்தை அவள். அடுக்கடுக்கான மரணங்களின் சோகத்தில் இருந்து மீள முடியாமல் தேவையான அரவணைப்பு இன்றி தவித்து கொண்டிருந்தவளுக்கு இது மேலும் ஒரு பேரிடியாக வந்து சேர்ந்தது. சோதனை மேல் சோதனை.

விஷ்ணு சம்பளம் வாங்கி அபர்ணாவிடம் கொடுப்பதில்லை. ஆனால் அவளின் சம்பளத்தை கேட்டு வாங்கிக் கொள்வான். சில இரவுகள் வீட்டுக்கு வராமல் இருப்பதுண்டு. பார்களிலும் விடுதிகளும் காலம் கழிக்கத் தொடங்கினான்.

இடையே அபர்ணா கருவுற்றாள். தாயார் இனிப்பை தித்திப்பாக செய்து இருவருக்காவும் காத்திருந்தாள். இருவரும் வந்து சேர்ந்ததும் இனிப்பை இருவருக்கும் கொடுத்ததும் விஷ்ணு புரிந்துகொண்டான். நான் மகிழ்ச்சியாக இருப்பது போல் காட்டிக் கொண்டான். தனி மீனவர் அண்ணாவிடம் குழந்தையை கலைத்துவிட கேட்டுக்கொண்டான். அவள் மறுக்கவே அடியும் உதையும் கிடைத்தது. கிடைத்த அடியிலே.....

'அம்மா... அம்..மா என அலறினாள் அபர்ணா. வாரி சுருட்டிக் கொண்டு எழுந்த தாயார் தன் மகளின் வழியைத் துடிப்பதற்கான சகியாகதா டாக்டருக்கு போன் செய்து வரவழைத்தார். கரு கலைந்தது விஷயமறிந்த தாயும் மகளும். எதுவுமே நிகழாதது தோல் போதையின் மயக்கத்தில் ஆழ்ந்திருந்தான் விஷ்ணு.

அன்று அபர்ணாவின் தாயார் உடைய தொடங்கினார். எல்லாம் கைமீறி விட்டது உணர்ந்து கண்ணீர் வடித்தாள் . வடிந்து பயன் என்ன?

பாவம் அபர்ணா. நைந்து தொய்ந்து விட்டாள். மாதக்கடைசியில் அன்பான கணவனாக இருப்பவன் மாதத்தின் இடைப்பகுதி வரை முரட்டு குடிகாரன் போல் மட்டுமல்லாமல் மனைவியை அடித்து உதைப்பவனாகவும் மாறிவிட்டான்.

இரண்டாம் முறையாக அபர்ணா கருவுற்றாள். தகவல் தெரிந்ததும் கருக்கலைவு செய்து கொள்ள மனைவியை துன்புறுத்தினான்.

தகவல் அறிந்து ஒருநாள் மலர்விழியின் தந்தை வந்தார். விஷ்ணுவைப் பார்த்து வேதனைப்பட்ட தோடு தன்னோடு அபர்ணாவை அழைத்துச் செல்ல இருப்பதாக கூறவே மிகவும் அரண்டு போனான் விஷ்ணு.

'அபர்ணா... நீ பட்ட துன்பம் எல்லாம் போதும். நீயும் உன் அம்மாவும் என்னோட கிளம்புங்க. இந்த வேலையை விட்டுட்டு. பெங்களூரில் நான் வேலை வாங்கித்தரேன்மா'

'அபர்ணா, மௌனம் காத்தாள்.'

அபர்ணா இப்போது பெங்களூரில் குடியேறி தன் தாயின் துணையுடன் வேலைக்கு போ வருகிறாள். மலர்விழியின் பெற்றோர் அவளுக்கு தனி வீடு அமர்த்தி கொடுத்து பாதுகாத்து வருகின்றனர்.

விஷ்ணு அவள் நிரந்தரமாக பிரிந்து விட்டாள். குழந்தை பிறந்த பிறகு அவள் முகத்தில் முதல் முதலாக புன்னகை தவழத் தொடங்கியது.

தந்தை கண்ட கனவெல்லாம் என்ன ? வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை என்ன?

குழந்தையா முகத்தில் அவள் தந்தையின் வடிவம் அவளுக்கு நம்பிக்கை கூட்டிக்கொண்டு இருந்தான்.

(・ัமுற்றம்・ั)
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,397
Reaction score
22,044
Location
Tamil Nadu
👍👍👍👍👍👍👍👍...

bcc6ae82d026cc5c53322016db5ecb6a.jpg
🌹நல்லாருக்கு... அபர்ணா இனியாவது சந்தோஷமா இருக்கட்டும்🌹🌹🌹🌹


IMG_20211213_094459.jpg
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top