Latest Episode கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் எபிசோட் - 26

Sara saravanan

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
Screenshot_2019-08-09-07-17-28.jpeg

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்….
– சாரல் சரவணன்.


அத்தியாயம் : 26

சொன்னது போலவே சுக்கா ரொட்டியும், சுரைக்காய் கூட்டுமாய் செய்து வைத்து கொண்டு காத்திருந்தார் வேதா…

“ஆல்ரெடி ஃபுல் கட்டு கட்டிட்டு வந்தது தெரிஞ்சா, தாய்க் கிழவி தாறுமாறாக கிழிச்சு தொங்க விட்டுரும்…. அதனால் நீ ஏதாவது சொல்லி சமாளி…. என்னைய அஞ்சு நயா பைசா க்கு கூட மதிக்காதுடா மாப்பிள…” கிருஷ்,

“என்கிட்ட சொல்லிட்டல, எப்படி அசத்துறேன் பாரு…” இளா காலரை தூக்கிவிட்டு கொண்டான்…

இளா வை கண்டதும் தட்டை சாப்பிட எடுத்து வைத்தவரிடம்,
“எனக்கு உணவு வேண்டாம்…. வகுறு சரியில்லை டாலி…”


“என்னது வகுறு சரியில்லையா….? அப்போ பருத்திப் பால் சாப்பிடுகிறாயா…?”வேதாஜியும் இம்சை அரசியா மாறி,

“வேண்டவே வேண்டாம் டாலி…”

“அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, பாதாம் பாலாவது சாப்பிடுகிறாயா…?”

“இல்லை டாலி…”, இளா சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஏவ் ஏப்பத்துடன் கிருஷ் எண்ட்ரீயை போட்டு விட,

“உண்மையை சொல்லுங்கள் எங்கே போய் மேய்ந்து விட்டு வந்தீர்கள் இருவரும்….”

“டாலி அது நாங்க……..”

“என்னடா நீ…? இத்தனை நாளா என் கூட இருந்தும் தொண்ணூறு வயசான ஒரு குடு குடு பாட்டியை கூட சமாளிக்க முடியாம திணருற…?”

“இங்க பாருங்க பாட்டிமா ….., நாங்க வாத்துக்கறியை வாயில உட்டுட்டோம். நீங்க தயாரிச்சு வச்ச விஷத்தை நாளைக்கு சூடு பண்ணி சுட சுட கொடுத்து மரண தண்டனையை நிறைவேத்திக்கோங்க… கேட்குதா…?” காது கேட்காதவரிடம் சொல்வது போல கத்தி சொல்லி, கிருஷ் வேதாஜியை வம்பிழுக்க…,

“அடிங்க….”, கரண்டியை தூக்கி கொண்டு மொத்துவதற்கு துரத்தியவருக்கு, பின்னாலிருந்து இருந்து அலேக்காக கிருஷை அரெஸ்ட் பண்ணி உதவி செய்தான் இளா….

“உன் உசுரையும் காப்பாத்த , உனக்கும் சேர்த்து இங்க நான் உசுரை கொடுத்து போராடிட்டு இருக்கேன்… நீ என்னன்னா , நண்பன்னு கூட பார்க்காம இந்த பூச்சாண்டி கிட்ட என்னை புடிச்சு கொடுக்குற…, துரோகி…”

“விடாத இளா… புடி அவனை….”

“இந்த வாயி இருக்கே வாய் , இனிமே இது பேசுமா…பேசுமா…? சொல்லியபடியே வாயிலேயே ரெண்டு போட்டார்…” வேதா,

“வெறும் கையில அடிக்காத பேபி , கரண்டியை வாய்க்குள்ள உட்டு குத்து…”

“என்னடா நண்பன் அடி வாங்குறப்போ சியர் பண்ற …?” கிருஷ் கொந்தளிக்க,

“போடா … எனக்கு என் டார்லிங் தான் முக்கியம்… என் குட்டிமாவை பாட்டிமான்னு சொல்லிட்ட, இதுக்கு அப்புறம் என்ன நட்பு நமக்குள்ள…?”

“என்னால தாங்க முடியல சாமி…என் பொண்டாட்டி புள்ளையெல்லாம் எங்க….? நான் தனிக் குடித்தனம் போறேன்…”

“அவ தூங்க போயிட்டா… வளைகாப்பு அது இதுன்னு இன்னைக்கு ஒரே அலைகழிப்பா ஆயிடுச்சு ரோ க்கு…அவளுக்கும் ஆராக்கும் திருஷ்டி சுத்தி தூங்க சொல்லியிருக்கேன்… போயி அவளை தொந்தரவு பண்ணாம நீ அப்படி கதவு ஓரமா வராண்டாவில படுத்துக்க….”

“அய்யயோ வராண்டா எதுக்கு..? வாசபடியிலே படுத்துக்கிறேனே…”

“இது நல்ல ஐடியா… வாச்மேன் வைக்கிற வேலை மிச்சம்….”
கிருஷை வறுத்து கொண்டிருந்தவரை, கையை பிடித்து இழுத்து வந்தான் இளா.


“நீ வா டார்லிங்…, உன் கையால அரளி விதையை அரைச்சு கொடுத்தாலும் எனக்கு அது அல்வா துண்டு போலத்தான் இனிக்கும்…”

“ஒரு வேளை சோத்துக்கு ,நீ ஏண்டா இவ்வளவு கேவலமா நடிக்கிற…?” கிருஷ்.

“எனக்கு முதல்ல சாப்பாடு வைங்க… முன்ன பின்ன தெரியாதவங்கிட்டலாம் என்ன வெட்டிபேச்சு…? இந்த பக்கம் வா டாலி, கழுத்து செயின அறுத்துட்டு போயிட போறான்…”

“அடப்பாவி வயசான கிழவின்னு கூட பார்க்காம இதை கொஞ்சுற… அதுவும் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் எல்லாத்தையும் ஈன்னு இளிச்சு கிட்டே ரசிக்குது …. இந்த ஆயா கிட்ட போடுற கடலைல பாதியை ஆராகிட்ட போட்டிருந்தால் இந்நேரம் நீ அப்பாவாவே ஆகியிருக்கலாம்….”

அதற்குள் ரோஜாவும் வந்துவிட,

“அடாடடா … ஊரே தூங்கினாலும் , உங்க வாய் மட்டும் ஓயாதே…. இப்ப ஏன் நடு ராத்திரியில இப்படி கத்துற கிருஷ்…?”

“ம்…வெண்டுதல்டி….”

“உன் வீட்டுகாரனுக்கு சோறு வேணாமா…? வெளியிலேயே எங்கேயோ மொக்கிட்டு வந்திருக்கு…. கேளு…” வேதா சின்னதா கொளுத்தி போட்டார்.

“நான் மட்டுமா தின்னென்… கிழவிய எல்லாம் கிளியோபாட்ரான்னு நம்ப வச்சிட்டு இருக்கானே அந்த பச்ச துரோகியும் தான் சாப்பிட்டான்.”

“இளா எப்பவோ சாப்பிட ஆரம்பிச்சுட்டான்… நீ எப்ப வர போற…?”

“நான் இனிமே இந்த வீட்டுல சாப்பிட போறதா இல்ல…”

“ஏன்…?”

“இவளுக்கு வளையல் காப்பு பண்ணுணீங்களே…., என்னை யாராவது கண்டுகிட்டிங்களா…?”

“என்ன…உனக்கும் வளைகாப்பு போடணுமா…?”
 

Sara saravanan

SM Exclusive
Author
SM Exclusive Author
#2

“இல்லை… அவளுக்கு மட்டும் புள்ளைத்தாச்சியா இருக்கான்னு ஏழு வகை சோறு செஞ்சு போட்டீங்க… ஆனா அதுக்கு காரணமான என்னை பெருமை படுத்துறது போல ஒரு அஞ்சு வகை டிஃபன்னாவது செஞ்சு போட்டீங்களா…?”

தலையிலேயே அடித்து கொண்டார் வேதா…

“ரூம் பக்கம் தூங்க வந்திடாத கிருஷ் அப்புறம் , தர்ம அடி வாங்குவ…” ரோஜா பத்திரம் காட்டினாள்.

“நான் ஒன்னும் உன் கூட தூங்க வரல , என் புள்ளை கூட கட்டிபிடிச்சி தூங்குவேன் போடி….”

“ரோ , போயி பால் காய்ச்சி குடி… அப்படியே லட்டுவுக்கும் எடுத்து வை…சரியா சாப்பிடாமல் தூங்க போயிட்டா…”

“நீ இரு ரோஸ்… நான் பால் காய்ச்சரேன். “ சொல்லியபடி கை கழுவினான் இளா…

“இவனைப் பாரு தங்கச்சிக்கு உதவி பண்றான்… , இது பொறுப்பு. என் பொண்டாட்டி என் புள்ளைன்னு சொன்னா பத்தாது… கூட மாட இருந்து ஒத்தாசை பண்ணனும் அவளுக்கு…” வேதா…

“நாங்க ஒத்தாசை பண்ணாமத்தான் அவ பிரேகணன்ட் ஆனாளா… போம்மா அங்கிட்டு…”

“ச்சை… அசிங்கம் பிடிச்ச பய…. போடா… “ என்றபடி இளாவை நகர சொல்லிவிட்டு பாலை காய்த்து,

“ இந்தா ரோ… சூடா குடிக்க வேண்டாம்… கொஞ்ச நேரம் தன்னால ஆறினதும் குடிச்சுட்டு ,அப்புறம் தூங்குடா… காலையில எழுந்திருக்க வேண்டாம்… நான் பார்த்துக்கிறேன்…”

“ரோஸ் பால் பத்திரம்…. இங்க ஒரு முரட்டு திருட்டு பூனை சுத்திட்டு இருக்கு… அப்புறம் பாலை ஸ்வாஹா பண்ணிட போகுது.. கையிலேயே வச்சுக்க கீழ வைக்காத…” இளா வார்நிங் கொடுத்தான்.

கிருஷ் , கடு கடுத்தபடி ரோஜாவின் பின்னே நடந்தான்…

வேதாவிடம் ,

லட்டுவுக்கு நான் கொண்டு போயி தரேன் , நீ தூங்க போ டாலி… “மணி பன்னிரெண்டு ஆச்சு… “
வேதாவை வெக்கெட் பண்ணிட்டு, இளா ஆராவிடம் போனான்…

கவுந்தடிச்சு தூங்கி கொண்டிருந்தவளை எழுப்பி உட்கார வைத்து,

“லட்டு எழு… பாலை குடிச்சுட்டு தூங்கு…”

டமால்ன்னு எழுந்து உட்கார்ந்து விட்டாள்..கண்ணை மட்டும் திறக்கல..

கையில் கிளாசை வைத்ததும் ஒரே மடக்…. அப்பவும் தூக்கத்தில் தான்… 

Sara saravanan

SM Exclusive
Author
SM Exclusive Author
#5

“பன்னி…தூக்கத்துல கூட ஒரு கிளாஸ் பாலை ஒரே மூச்சுல குடிக்குது… இது எதுக்கு வெட்டி வீராப்பா பட்டினிலாம் கிடக்கு…” சிரித்தபடி இளா….

திரும்ப தூங்க ஆரம்பித்தவளின் அருகே அமர்ந்து அவளின் இருபுறமும் கைகளை ஊன்றி அமர்ந்தபடி , வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்…

'என் லட்டு செம்ம கியூட் ல….'
'நீ என்னைக்கு ஓகே சொல்லி நான் என்னைக்கு அப்பாவாகுறது… கிருஷ் சொன்னது போல ரொம்ப டயம் வேஸ்ட் பன்றோமோ…'

'சரியான பெருச்சாளி… எந்நேரமும் என் மனசை குடையறதையே வேலையா வச்சிட்டு இருக்கா…'

ஒருக்களித்த நிலையிலேயே பார்த்து கொண்டிருக்க,

டப்பென்று ஆரா கண் திறக்க…

“ஆ..” ( இது சின்ன ஆ)

“நான்தான் லட்டு…பால் எடுத்துட்டு வந்தேன்.” இளா திக்கினான்.

“சரி எழுப்பிவிட வேண்டியது தானே… கொடு.”

என்னது கொடுவா….

“எங்க கொடுக்கிறது, மேடம் கண்ணை கூட திறக்காமலேயே குடிச்சு முடிச்சிட்டீங்களே..”

“நானா..?”

கிளாசை காட்ட…

அசடு வழிந்தது ஆரா முகத்தில்…,
“அது ரொம்ப பசியா அதான்…”

“அய்ய துடைச்சுக்கோ…. வழியுது டி…”

உண்மையிலேயே ஆரா உதட்டை துடைத்துகொண்டாள்…

'கியூட்னஸ் ஓவர் லோடட்…'
'ஐயோ கொல்றாளே…'

“கண்ணை திறந்து பார்த்தா , நான் வேற யாரோன்னு பயந்துட்டென்…நீயின்னதும் தான் மூச்சு வந்தது…”

“ஏன் என்னை பார்த்தா பயமா இல்லையா..?”

“இல்லையே…” மண்டையை டிங் டிங்குங்க,

“மத்தவங்களை பார்த்து ஏன் பயப்படுவ…?”

“இதென்ன கேள்வி , ஏதாவது என்னை செஞ்சிட்டா…?”

“ஏன் நான் செய்ய மாட்டேனா…”

ஒரு களுக்… சிரிப்புடன்,” நீ என்ன செய்வ…”

“என்ன வேணும்னாலும் ….”

அவளது இரு பக்கமும் கை ஊணிய நிலையிலேயே, உடலோடு உடலுரசி இன்னும் கொஞ்சம் நெருங்கி…
“இப்போ கூட பயமா இல்லை …?”


“இல்லை….”

இன்னும் கொஞ்சம் ஆராவின் அருகில் குனிந்து , லப் டப் கேட்கும் தொணியில் இளாவின் லவ் டச்சுடன்…,

“இப்போவும் பயமா இல்லையா…?”

“ம்...ஹும்….”

இன்னும் நெருங்கி….,மூக்கோடு மூக்கு உரசி மூச்சு தொடும் தூரத்தில் இளா….

“இப்போ…?”


“ம்…ஹ்…” ஆராவின் குரல் மூணாவது ரவுண்டிலேயே பிஸ்தடித்தது…

இன்னும் கொஞ்சமாய் நெருக்கத்தை சுருக்கி , உயிரோடு உயிர் உரச,


“ம்…ம்…?”கேள்வியாய் உதடுகளால் , உதடுகளில் உச்சு கொட்ட,

“இள…..” உச்ச்சு இச்சுவாய் மாறி

பிச்சி முத்தமிட்டபடியே , ஆராவின் உதடுகளை அபேஸ் செய்து விட்டான் இந்த ஆராவமுதன்…'உயிரோடு உறிஞ்சவே …, உள்ளுக்குள்,
உன்மத்தம் கொள்ளுதடி…,
தேனோ …,தெய்வமுதமோ…, தெவிட்டாத,
ஏதோ ஒன்று நாவினால் ருசிக்கபட்டு,
உயிரருக்க, பிறிதொன்றில் உயிர்த்திறக்க,
மரணமும் ஜனனமும் மாறி தோன்றி மறையுதடி…
மாயவித்தை காட்டுதடி….
உதட்டினில்
உயிரை காய்ச்சும் முதல் முத்தம்மிது…,
இந்த காதலனுக்கு,
பேரின்பம் கொண்டேனடி , பெருந்தன்மையாய்…,
எனை நீ ஆட்கொள்ளடி….'

(முத்தங்கள் மிகவும் இன்றியமையாதவை…. சாரலின் சொந்த கவி கிறுக்கல்கள் தொகுப்பிலிருந்து…)

ஆரா உயிர்த்தெழ அவகாசம் தரா காதலை காட்டும் தாகத்தில் இளா…
தாகமோ மோகமோ….


ஆரா சிலைக்கு உயிர் வந்தது…
உதடுகளை பிய்த்து பிடுங்கி கொண்டாள்….


'ஏய்…! எங்க போற….?' கேள்வியாய் இளா…

முதல் முத்தம் பெறப்பட்ட உணர்வும் ,அது அவள் உடலில் தோற்றுவித்த அதிர்வும் நடுங்க செய்திருந்தது….
ஒரே சொட்டு கண்ணீர் நிற்கவா..? கொட்டவா …? கேள்விகளோடு,


“இப்ப நிஜம்மா எனக்கு ரொம்ப பயமா இருக்கு இளா….” அவனை இறுக்கி கட்டிக் கொண்டாள்….

இதை முன்னமே சொல்லியிருந்தா, சேதாரம் இல்லாம தப்பிச்சுருக்கலாம்.

குற்ற உணர்ச்சியில் இளா….
கன்னத்தில் அறைந்திருந்தால் கூட தெரிந்திருக்காது, தன்னிடமே தஞ்சம் புகுந்தது ,இன்னும் கிழித்தது…

“சாரி டி…. இனிமே எப்பவும் நடக்காது… “
பதிலே இல்லாமல் ,இன்னும் இறுக்கி கொண்டு ஆரா அழ…,

“லட்டு பிளீஸ் என்னை பாருடி… ஏதோ உணர்ச்சி வசப்பட்டு தப்பு பண்ணிட்டேன்…உனக்கு என்னை இப்படி எல்லாம் பார்க்க பிடிக்கல தான….?தப்பா இருந்தா ,ரெண்டு அடி கூட அடிச்சுக்க, இப்படி அழாத , “
சொன்னவனின் கண்களில் இருந்தும் கண்ணீர்….


ஆராவிற்கே புரியாத கேள்வியை கேட்டுவிட்டதால் , பதில் சொல்ல முடியாத பயத்தில் இன்னும் இறுக்கமாக கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்…

அப்புறம் நிமிர்ந்து பார்த்தால், திரும்பவும் பிடிக்கலையா… ன்னு கேட்டால் பதில் என்ன சொல்வது…?

தன்னை சுற்றியிருந்த ஆராவின் கைகளை பிரித்தெடுத்து , அவளின் முகத்தை நிறுத்தியவன்,


“என்னை கொஞ்சம் பாரு லட்டு…,”
விழி விரித்தவளிடம்,


“இனிமே இப்படி நடக்காது… உன்னை ஹர்ட் பண்ணவே மாட்டேன்… உன் பக்கத்தில கூட வர மாட்டேன்… முடிஞ்சா தூரமாய் போயிடறேன்…. சரியா…? எனக்கு நீயும் நானும் சேர்ந்து வாழறதை விட ,நீ சந்தோஷமா வாழ்றதுதான் முக்கியம் லட்டு.”

கடைசியாய் அவள் கைகளை எடுத்து ,காயம் பட்ட இதயத்திற்கு மருந்து போல தன் நெஞ்சோடு அழுத்தி, கண்களை மூடியபடி சில நொடிகள் , பலமாய் சுவாசித்து விட்டு வெளியே போய்விட்டான்….


ஆராவிற்கு, முத்தம் தந்ததுக்கு அழுததை விட அஞ்சு டோஸ் அதிகமாக அழுகை பொங்கியது….
'நான் என்ன பிடிக்கலைன்னா சொன்னேன்…'


பிடிச்சிருக்குன்னும் நீங்க சொல்லலையே மேடம்….
அழுது அழுது தூங்கியே போனாள்…


புரண்டு புரண்டு படுத்தும் மனசு ஆறாம, கண்ணு மூடலை இளாவுக்கு…

'அவளை கிட்ட வச்சுயிருந்தால், நம்ம மனசை கட்டுபடுத்த முடியாது இனிமே..அது மட்டும் நிச்சயம்… அவளை தள்ளி வைக்க முடியாது…. தூரமாய் நாம பொய்டுவோம்….

மூடியும் வைக்க முடியல, திறந்தும் விட முடியல…நெஞ்சை நெருப்பாய் எரிக்குதுடா சாமி …. இந்த காதல்….

இதுவரை சுகமாய் மட்டுமே புரிந்திருந்த இந்த காதல், எனக்கு இன்னொரு பேர் இருக்கு… என்று இப்போ வலியையும் காட்டிக்கொண்டிருந்தது…

இல்லை இனிமே தேங்கி கிடந்தால் செத்துருவோம்… ஓடனும் நிற்காம ஒடனும்…'

யோசித்தபடி லேசாய் கண் மூடியவனை, களைப்பு தூங்க வைத்தது…

காலையில எழுந்ததும், ஆராவை நிமிர்ந்து பார்க்கவேயில்லை… காபி யோடு காரிடாரில் வந்து கொண்டிருந்த கிருஷிடம்,


“மச்சான்…

ஆசிர்வாத் தோட எல்லா பிரான்ச்செஸ்க்கும் ஒரு விசிட் போடணும்… லாபம் கம்மியா கிடைக்குற பிரான்ச்சுல கொஞ்ச நாள் தங்கி ,பிரச்சனைகளை சரி பண்ணனும்… திருப்பூர்ல ஒரு யார்ன் புரொடக்ஷன் யூனிட் விலைக்கு வருதுன்னு கேள்வி பட்டேன்… நாம வாங்கலாமான்னு போயி பார்க்கணும்…”

“என்னடா திடீர்னு…? எங்கேயோ கிளம்புற மூடை ஃபிக்ஸ் பண்ணிட்டு , எங்க லாம் போகனும்னு இடத்தை ஃபில் பண்ணினது போல பேசுற….”

இத்தனை வருஷ நட்பு, கண்ணாடியாய் எதிரில்…

இளா அமைதியா இருக்க…,

“என்னவோ இருக்குன்னு புரியுதுடா மாப்பிள…. போ …. எங்க போனாலும் ஆராவையும் எங்களையும் விட்டுட்டு உன்னால ரொம்ப நாள் இருக்க முடியாதின்னு எனக்கு நல்லாத் தெரியும்…. மனசு சரியானதும் திரும்ப வா. “

பதில் பேசாமல் கட்டிகொண்டான் நண்பனை….

“நானும் கூட வந்திடுவேன்… ரோஜா இப்படி இருக்கிறப்ப தனியா விட முடியாது… பார்த்துக்கோடா உன்னை…”

“தெரியும் டா…” இளநகை ஒன்று இளாவிடம்…

“ஆரா அப்போ இங்கேயே இருக்கட்டும்… ரோஜாக்கும் ரிலாக்ஸா இருக்கும்..”

“சரி டா…”

எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு,
ஆராவிடம் போய்,

“லட்டு….”
அவள் கண்களை பார்த்து,
“நேத்து நைட்டு நடந்ததுக்கு சாரி லட்டு… நான் வேலையா வெளியில போறேன்…. அதனால ஒரே ஒரு முறை மட்டும்.,”

வேகமாய் இழுத்து அணைத்து கொண்டவன் , சில நொடிகளில் விடுவித்து ,
“தாங்க்ஸ் டா… பத்திரம்…”

திரும்ப பார்க்காமல் ரூமை விட்டு வெளியேறி விட்டான்….

“அம்மா அவன் ஏதோ பிரச்சனையில்…”, வேதாவிடம் கிருஷ் சொல்ல முற்பட,

“ அவன் மூஞ்சை பார்த்தாலே தெரியுதுடா நல்லா… எங்க போனாலும் ஆராகிட்ட வந்துதான் ஆகணும்… போகட்டும் விடு…”
சகஜமான மனநிலையில் வேதா…


சாரல்… 

Sara saravanan

SM Exclusive
Author
SM Exclusive Author
#6

Sara saravanan

SM Exclusive
Author
SM Exclusive Author
#7
#8
இன்னாதூஊஊஊஊ...???
இங்கேயும் பருத்திப்பால் பாதாம் பாலா...?
சாரல் டார்லிங் சாரல் டார்லிங்....அங்கேதான் பாதாம் பாலை ஆசை காட்டிட்டு கண்ணுலயும் காட்டாம விட்டுட்ட...இங்கேயாவது கிடைக்குமா....???பாதாம் பால்.
மச்சா seekkiram vaa.... @Sathya sivaprakash
 
Last edited:

srinavee

Author
Author
SM Exclusive Author
#9
இந்த ஆரா புள்ளைக்கு ஆறிப்போன போன டீய ஒரு அண்டா ஊத்துங்க ஆத்தர் ji...:(:(
பயபுள்ள அழுதே அவனை ஊர் கடத்திட்டாலே.... :eek::eek:

அவ தான் கண்ணை கசக்குனா நீயும் போறியேடா இளா... போடா உனக்கு சுறாபுட்டு, இறாபுட்டு செஞ்சு குடுத்தும் ஒண்ணும் பிரயோசனம் இல்ல... :oops::oops:o_Oo_O

கிருஷ் தங்கம் உன்னை எப்படா இந்த உலகம் புரிஞ்சுக்க போகுது தெரியலையே... அந்த நல்ல காலம் இன்னும் வரல போல... என்னவோ போடா:ROFLMAO::ROFLMAO:(y)(y):love::love:
 

Sponsored

Advertisements

Top