• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் - 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
அடேய் என்னடா இப்படி கிளம்பிட்டீங்க... இனிமே என் கட்சிக்காரன்… ஒழுங்காக யூ டி தரவில்லை என்றால் மிளகாய் பொடி, பெப்பர் பொடி தண்டனையாமே…?!!!!!!?

ஒன்றும் அறியா, அப்பாவி குயந்த புள்ளையை இப்படியா மிரட்டுவது...? மிளகாய் பொடி தூவி சாப்பிட அவனென்ன சிக்கென் வறுவலா…? பெப்பர் தூவி சாப்பிட அவனேன்ன முட்டை பொரியலா…?

நேற்று எப்படி எல்லாம் காலில் விழுந்து கதறி அழுதான் என் கட்சிக்காரன்.. இரக்கமில்லையா உனக்கு...

இப்படித்தான் ... 3 மாதத்திற்கு முன்பு இதே எனது கட்சிக்காரன் இதே போன்று லேட்டாக யூடி தந்து மன்னிப்பு கேட்டான்... அப்போது பிள்ளைக்கு வலிக்க கூடாது என்று முன்னாடி சிரித்து விட்டு பின்னாடி போய் அவனை வண்டை வண்டையாக திட்டி தீர்த்து விட்டனர்.. அந்த மனிதாபிமானம் இல்லை தங்களுக்கு...

போற இடங்களில் எல்லாம் gate போட்டால் அவனும் என்னத்தான் செய்வான்...?????????????
வந்தோமா யூ டியை படிச்சோமான்னு போயிக்கிட்டே இருக்கனும்…


வெறித்தனமா உருட்டு கட்டைய வச்சிக்கிட்டு வெறிக்க வெறிக்க பார்க்கிறது…,
கையில் கல்லை எடுத்துகிட்டு கடு கடுன்னு காண்டாகுறது..,
முட்டு சந்துல நின்னுகிட்டு முறை முறைன்னு முறைக்கிறது….
இதுபோல எதுவும் டிரை பண்ண படாது…


ஏன்னா சனி ஞாயிறு க்கு நோ யூடி….
இன்னைக்கு ராத்திரி்யே ஊருக்கு நான் ஓடி…
திங்கள் கிழமை வருவேன் உங்களைத் தேடி….
விடைபெறுகிறேன் ஜெண்டில் லேடி….


சாரல் லாக மாறிய சாரா….

Screenshot_2019-04-08-00-57-27.jpeg





கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன். --சாரல்

அத்தியாயம் – 22

வைத்தியநாதன் ,ஒரு கணம் ஸ்தம்பித்து போனார்… இப்போ அவர் நின்று கொண்டிருந்த சூழ்நிலை அவருக்கு புதுசு… இதுவரை எவ்வளவோ அவமானப் பட்டபோதும் ,ஒதுங்கி மட்டுமே போன அவரோட தங்கை வேதவல்லி , ஆராவுக்காக ,எல்லா உறவையும் முடித்து கொள்ளும் அளவுக்கு வந்து விட்டார், என்பது முதல் அதிர்ச்சி...

ஆடிட்டிங்கின் போது ஏற்படும் அஃபிஷ்ஷியல் பிரச்சனையை தவிர, வேறு, எங்கேயும் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் வாய்ப்பு அமைந்தது இல்லை. அதாவது வந்தாலும் எதிர்த்து நிக்க மாட்டார்… அதுவும் கற்புக்கு வாக்கப்பட்ட பிறகு, அவர் கிட்டயிருந்து எஸ்கேப் ஆகறதுக்கு எழுநூறு வழிகள் மட்டுமே கத்து வச்சிருந்தவருக்கு, முதன் முதலாக பிரச்சனையை எதிர்கொண்டு நின்றாக வேண்டிய சூழல், மனதில் சூறாவளியாக சுழன்றடித்தது…. அதுலயும் கூட பிறந்தவள் வீக் பாய்ண்ட் தேடி அடிச்சதில்… ஓடவும் முடியல ஒளியவும் முடியல…

சீமா கொஞ்சம் அடாவடியாக இருந்தாலும், இளா மேல வச்ச ஆசை தான் , இங்க கொண்டுட்டு வந்துருக்கனும். அந்த பொண்ணு ஆரா மேல எதுக்கு கோவப்பட்டா கற்பகம்… ? ஒன்னியும் புரியலையே…??

முன்னாடியே இளா, சீமா பற்றி கொடுத்த வார்னிங்கை, கொஞ்சம் சீரியஸாக எடுத்திருக்க வேண்டுமோ ….? ரீதியில் ஏதேதோ கேள்விகள் துரத்தியது… மகளுக்கு அந்த இளா பையன் மேல ஆசை… அம்மாக்கு அவன் சொத்து மேல ஆசை… இதுங்களோட ஆசையே என் துன்பத்திற்கு காரணம்…ஒரு வழியா முடிவுக்கு வந்துவிட்டார்.

ஆத்தாளும் மகளும் நம்மள மதிச்சு ஒன்னும் சொல்ல மாட்டாளுங்க… இதுல வேதா , நம்மள கோர்த்து விட்டிட்டுதே…சரி போயி பார்ப்போம்…

வண்டலூர் ஜூ வில் சிங்கத்துக்கு சோறு போட போகும் அப்பரண்டீஸ் பீலிங்கில் , பொண்டாட்டி, பொண்ணு அவளோட அல்லகைன்னு எல்லாரும் முகாமிட்டிருந்த , வேதாவின் அறைக்குள் நுழைந்தார்…..

உள்ளே நுழைந்த வைத்தியநாதனை கண்டதும், கற்பகம்,

“நீங்க எங்க இங்க…..?”

“நீங்க எல்லாம் இங்க வந்ததுனால, வர வேண்டியதா போச்சு…..? லைட்டாக கோபம் கலந்த பார்வை யுடன்..”
(வைத்தி…. என்னய்யா நீ….? இன்னும் நல்லா விறைப்பா முறை……)


“யாரு அந்த கிரிஷும் அவன் பொண்டாட்டி அவனோட அந்த கூஜாவும் வர சொன்னாங்களா….?”

“இல்லை, என் தங்கச்சி, வர சொன்னுச்சு…. நீங்க ரெண்டு பேரும், இப்ப எதுக்கு இங்க வந்தீங்க…வந்து என்ன பிரச்சனை பண்ணின..? எங்க போறன்னு , ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லாமலே காலையில கிளம்பிட்டே…?”

“ஓஹோ வந்துட்டாளா….? என் அருமை நாத்தனார்….. மரியாதை தெரியாதவள்…. எப்படி இருந்த என் பொண்ணை ஒரே ராத்திரியில இப்படி இடிஞ்சு போயி நிக்கிற அளவுக்கு பண்ணிட்டாங்க….என் பொண்ணை இப்படி ஆக்கின அத்தனை, பேரும் எனக்கு பதில் சொல்லித்தான் ஆகனும்…ஏன் உங்க தங்கச்சி வீட்டுக்கு நான் வர உரிமை இல்லையா..? உங்க தங்கச்சி மவன் , குத்தி காட்டுறான் இது என் வீடு இல்லைன்னு… அந்த அனாதை கழுத ரோஜா நக்கலடிக்குறா , இன்னும் என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணாம வச்சிருக்கேன்னு… இதையெல்லாம் கேட்க்காம…, ஏன் இங்க வந்தேன்னு என்ன கேக்குறீங்க…? முன்னாடி எனக்கு பதிலை சொல்லுங்க.”

'காலையில கட்டின புருஷனுக்கு காப்பி தண்ணி கூட குடுக்காமா, போயிட்டு வரேன்னு கூட சொல்லிக்காம போயிட்டியேன்னு ஒரு பாவப்பட்ட மனுஷன் , பக்குவமா கேட்கிறாரு…அவருக்கு பதில் சொல்லாம, இந்தம்மாவுக்கு அது கேக்குற கேள்விக்கு வேற தனியா சொல்லனுமாமே பதிலை….'

“என்ன நடந்தது சீமா…..? நீயாவது சொல்லு….?”

“என்கிட்ட எதுவும் கேக்காதீங்கப்பா ..பிளீஸ்….”

ஆத்தாவுக்கு தப்பாமா பொறந்திருக்கு பாரு ஆயா…. ம்கும்….. இது ஆவுற கதை இல்லை… முடிவுக்கு வந்தவராய்….

“என் கூட மாடிக்கு வாங்க, வேதாகிட்ட கொஞ்சம் பேசணும்… பேசிட்டு வீட்டுக்கு கிளம்புவோம்….”

இங்க கெஞ்சி கேட்டாலும் மதிச்சு யாரும் பதில் சொல்ல போறது இல்லை, லீடர்க்கு அடங்காத பசங்கள , மிஸ்சுக்கிட்ட மாட்டி விடறது போல வேதா கிட்டயே , கோர்த்து விடலாம்ன்னு முடிவுக்கு வந்துவிட்டார்… அ தோடு, மாசா மாசம், லம்ப்பாக படியளக்கும், கிருஷ், இளா என்ற இரண்டு பெரிய கைகளை பகைச்சுக்க கூடாது என்ற சுயநலமும் இருந்தது….

“ஏன் உங்க தங்கச்சி மகாராணி ,இறங்கி வந்து என்கிட்ட பேசமாட்டாளாமா…..?”

கேள்வி தோரனையா இருந்தாலும், கிளம்பிட்டாங்க மாடிக்கு, எல்லாரையும் தோரணம் கட்டி தொங்க விடனும்ங்ற முடிவோட…

கிருஷ்ஷின் ரூமுக்கு எல்லாரும் படியேற…..
இன்னொரு ரூமில் ஆரா , இளாவின் கையை பிடித்துகொண்டு , இன்னதென்று சொல்லாமல் அழுகை…. இவ்வளவு அன்பும், பாசமும் கொண்ட இந்த உறவுகள், உரிமை இல்லாமல் போய்விட்டதோன்னு ஆதங்கம்…. எப்போதும் கொடுக்கிறவங்க இயல்பா இருந்தாலும், அதை வாங்கிக்கொள்பவர்களுக்கு என்று ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும்….. அதுதான் இப்போது அவளுக்கு… கற்பகத்தின் ஆக்ரோஷம் ,ஆராவிடம் அதீதமாக மன அழுத்தத்தையும், நமக்கே நமக்காய் உரிமை கொண்டாட சொந்தங்கள் இல்லாத அனாதை உணர்வையும் தூண்டிவிட்டிருந்தது… உபயம் மாதவிடாய் ஹார்மோன்கள்…. அது எப்போதும் இருக்கிறதை இல்லைன்னு காட்டுறதுல எக்ஸ்பர்ட் ஆச்சே…


இளா, விற்க்கு , ஆராவை அழ வைத்த கற்பகத்தின் மேல் தான் கொலை வெறி…. எப்போதும் ஆரா இப்படித்தான் ஏதாவது திடீர் அதிர்ச்சி ஏற்பட்டால் , அது அவளை அப்படியே ஸ்விட்ச் ஆஃப் செய்து விடும் என்பதால் அவளை விட்டு நகர மனமில்லாமல் உட்கார்ந்திருந்தான்…

வைத்தி அண்ட் கோ எண்ட்ரி கொடுத்ததும், ரோஜா வந்து ,ஆராவையும் இளாவை யும் அழைத்து போனாள்…

இருவருக்குமே எந்த உள்நாட்டு போரிலும் பங்கேற்க முடியாத மன நிலை…. அழைத்து வர சொன்ன வேதாவிற்காய் போனார்கள்…
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru

அமைதியாய் , போயி கட்டிலில் ஆராவை சாய்ந்து உட்கார வைத்துவிட்டு, இளா அவள் கையை பிடித்தபடி உட்கார்ந்து கொண்டான்… ஆராவுக்கு தான் எதையும் உணர முடியாத மனநிலை….இளா இங்கேயும் ஆராவைத் தவிர எங்கேயும் கவனம் செலுத்தவில்லை, யாரையும் பார்க்கவும் இல்லை… இறுக்கமான முகத்தோடு இருந்தான்.

எல்லாருக்கும் உட்கார வசதி செய்த ரோஜாவும் போய், ஆராவின் இன்னொரு பக்கத்தில் அவளை தோள் சாய்த்து உட்க்கார்ந்து கொண்டாள்… கிருஷ் ஒரு மோடாவை போட்டு கொண்டு , இளாவின் அருகில் சீட் பிடித்து கொண்டான்...
அவங்க படைவீரர்களேல்லாம் ,பக்கா சீட்டிங்கில் இருப்பதை பார்த்து விட்டு ராஜமாதா வேதாவல்லி அம்மையார் கட்டில் முனையில் அமர்ந்து கொண்டார்…

மகிழ்மதி குரூப் பொட திரிசூல வியூகத்தை , சமாளிக்கனும்ன்னு, காளகெயர்கள் தலைவி கற்பகம் அவர் சேரை இழுத்து ப்ரண்டில் நிறுத்தி அதில் சிட்டிவிட்டார்….

நிம்ம்மடா…கோஜ்ராஸ் தெல்மி…(Gkkla..…)
ஆர்த்த போஷ….(Gkkla..…)
க்கிரகிவிக்ந. பூஹும்லே (Gkkla..…)

( கிலிக்லி மொழிப்பா… பாகுபலி சீனை வச்சிட்டு (Gkkla..…)
சொல்லாம போனால் ,கட்டப்பா கண்ணை குத்திடுவார், அதான்)

போர்க்களம் ரெடி…. யாரு ஃபர்ஸ்ட் அம்பை உடுறதுன்னு தான் வெயிட்டிங்…. விக்ரம் ,' இதுங்க எப்ப ஆரம்பிக்குங்கன்னு தெரியலையே…?…. ப்ரேக் பாஸ்ட் போடாமலேயே , களத்துல இறக்கி விட்டுட்டாங்களே'ன்னு, எல்லார் வாயையும் கொட்டாவி விட்டபடி பராக்கு பார்த்திட்டு இருந்தான்…

வம்படியா ,வார் ஃபீல்டு க்குள் வரவைக்கபட்ட வைத்தியே சமாதான கொடியை ஏந்தி, பேச்சு வார்த்தையை துவக்கினார்….

“இங்க பாரும்மா வேதா…. உன் உறவும் வேணும், என் குடும்பத்தையும் என்னால விட்டு கொடுக்க முடியாது..(ஏன் கொடுத்துதான் பாருங்களேன்..).. என்ன நடந்ததுன்னு இன்னும் எனக்கு தெரியாது… நீர் அடிச்சு நீர் விலகாது…. ( ஆமா பீர் அடிச்சாத்தான் நீர் விலகும்….##?) அதான் எல்லாரையும் இங்க அழைச்சிட்டு வந்தேன்.. அவங்க நீ வீட்டுல இல்லாதப்போ ,அப்படி பேசினது தப்புதான்… எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்மா….”

மிஸ் மிஸ் இவங்க தான் மிஸ் நீங்க கிளாஸ் ல இல்லாதப்போ பேசினாங்க…. கடைசியாக மாட்டியே விட்டுட்டார் வைத்தி..

கற்பகம் ,கொலை காண்டில் முறைச்சி ஃபயிங் ,அவ ரோட புருஷனை…என்னான்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டு ,இங்க என்னமா மாத்தி பேசுறான் ,இந்த மனுஷன்னு…. பார்வை..

இளா, கிருஷ் மூலமா கிடைக்கிற சோறு முக்கியமா….? இல்லை கற்பகம் வாயில அகபடாம மிஞ்சுற சொரணை முக்கியமான்னு….? யோசிச்சு, சொரணை வேணாம் சோறுதான் முக்கியமுன்னு சோத்து கட்சிக்கு தாவிட்டார். பொண்டாட்டியை ஏறிட்டவர்,

என்னம்மா இப்படி முறைக்கிரீங்களேம்மா……? என்று திரும்பி கொண்டார்.


“அதான் தீர்த்து வச்சி பேசிட்டாங்களே ,இவங்க…. இன்னும் என்ன பேசறதுக்கு இருக்கு….”
வேதா கற்பகத்தை கை காட்டியபடி சொல்லி முடிக்க….

எங்கயோ போன மாரியாத்தா , எம்மேல வந்து ஏறாத்தான்னு, வலுக்கட்டாயமாக, வராத சாமியை வரவைத்து கொண்டு , எழுந்து விட்டார்… கற்பகம் வேதாவுக்கு வேப்பிலை அடிக்கும் நோக்கில்……. நாத்தனார், மாமியார் கிட்ட எல்லாம் டெய்லியும் சண்டை போட முடியாது…. சான்ஸ் கிடைக்கிறப்போ எகிறி அடிச்சிடனும்…மோடில் கற்பகம்.
நிம் (Gkkla..…) கடீட் வூ (Gkkla..…) கொரோட்டா - ஜ்ற- ரெய்் ஃபகூ (Gkkla..…)
( அகைன் கிலிக்ளி தான், உங்க ஆயுதத்தை போட்டுட்டு, திரும்பி பார்க்காம விடுங்க ஜூட்டு… இல்லைன்னா மொத்த பேருக்கும் வச்சிருவேன் வேட்டு… என்று அர்த்தம்… கற்புவின் கண்ணசைவுக்கு எனது விளக்கம்.)



“என்ன வேதா, பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கு… அண்ணிங்ற மட்டு மரியாதை இல்லாம, கைய காட்டி, மறைமுகமா குத்துற… அது சரி, உன் மருமக என்னை அவமான படுத்துனப்பவே நினைச்சேன்… இது யாரு தந்த தைரியமுன்னு… இப்பதான தெரியுது… அது உன்கிட்ட இருந்து தான் வந்ததுன்னு…”

“என் மருமகள் என்னை போல தான்… யார் எதை கொடுத்தாலும், வச்சிக்காம திருப்பி கொடுத்திடுவா… அப்படி மட்டும் எங்கயாவது மிச்சம் மீதி விட்டுட்டு வந்தான்னா, நானே ரெண்டு கொடுப்பேன் அவளுக்கு , புரியுற மாதிரி…”

“நான் நேரடியா விஷயத்துக்கு வரேன்,என்னையும் என் பொண்ணையும் விட அந்த ஆரா உனக்கு உசத்தியோ….?”

“ஆமாம் அண்ணி…கண்டிப்பா…என் பொண்ணும் இளாவும் எனக்கு மத்தவங்களை விட ரொம்ப முக்கியம்.. இதை என் வாயால சொல்லனுமா….?

“புது பணக்காரி ஆனதும் உறவும் வந்து புதுசா ஒட்டிக்கிச்சு போல… என் பொண்ணாமே….? எப்போ பொறந்தா… வேதா என் கிட்டயே மறைச்சிட்ட பார்த்தியா…???” தேள் கொட்டியது…

“அவ எனக்கு பொண்ணா பொறக்கல அண்ணி…….ஒவ்வொரு ராத்திரியும் அவளை தனியா தூங்க வச்சிட்டு, மனசே இல்லாம இளாகிட்ட விட்டுட்டு கிளம்புவேனே, அப்ப கழுத்த கட்டிகிட்டு போகாதீங்க மாதாஜின்னு அழுவாளே, அந்த நிமிஷமே இந்த வேதா , ஆராவோட அம்மாவா பொறந்துட்டா… என்னை பெத்தவ அவ…. என் கோந்தை பறிகொடுத்துட்டு தனிமரமா நின்னப்ப அவ என்னை கட்டி பிடிச்சுக்கிட்டு விடவே இல்லை… என்னை பெத்தவளா மடி தாங்கி மீட்டு கொண்டு வந்தா….”

“இன்னைக்கு சொந்தம்னு சொல்லிட்டு நிக்கிற யாரும், அன்னைக்கு எங்க போயிருந்தாங்கன்னு தான் தெரியலை…”

“ஏன் வேதா ,நீயும் கிரிஷும் எங்க வீட்டுல தங்கி சாப்பிட்டது எல்லாம் மறந்து போச்சா…? அன்னைக்கு உழைச்சு கொட்டி, உங்க ரெண்டு பேருக்கும் சோறு போட நாங்க தேவைப்பட்டோம்….இன்னைக்கு தேவைபடலையோ….???”

“ஓஹோ நீங்க உழைச்சு, சோறு போட்டிங்களா அண்ணி… நான் கூட நினைச்சேன், எங்கப்பாவோட பூர்வீக வீட்டையும், நிலத்தையும் எனக்கு பங்கு பிரிச்சி தரவேண்டாம், அண்ணனே வச்சுகிட்டும்னு சொன்னேனே…. அந்த நன்றியில போடுறீங்கன்னு தப்பா நினைச்சிட்டேன் அண்ணி….
பாருங்க அண்ணா நீங்க கூட மறைச்சுட்டீங்க, உழைச்சு எங்களுக்காக ஓடா தேய்ஞ்சதை….”

நிமிர்ந்து பார்த்து விட்டு, மீண்டும் அவங்க அண்ணாச்சி தலை தொங்கி கிடந்தது…
கடல்ல தத்தளிக்கிறவன் தப்பிக்க குகைன்னு நினைச்சு, தெரியாத்தனமாக திமிங்கலத்தோட வாய்க்குள்ள வம்படியா நுழைஞ்ச கணக்கா, திக்கும் தெரியல திசையும் தெரியல தப்பிக்க….
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
“யாருக்கு வேணும் உன் பிச்சைக்கார பங்கு… விட்டெரிங்க அவ மூஞ்சில, இதோட இந்த பிரச்சினை முடிவுக்கு வரணும்.”கற்பு வைத்திக்கு ஆர்டர் போட…

'அய்யோ…உன்னோட திருவாயை மூடினாலே எல்லா பிரச்சனையும் தானா முடிஞ்சிடும்... பேசி பேசி என் சம்பாத்தியத்தில் மண்ணை அள்ளி போடாம ஓயமாட்டா போலயே …' கற்பகத்தை பார்த்து..
மைண்ட் வாய்ஸ் தான்… சொல்லிட்டா தான் மந்திரிச்சு விட்டுபுடுமே அந்தம்மா…

“தாராளமா தாங்க… புள்ளை குட்டி இல்லாத வீடா இது, சொத்தையெல்லாம் தானம் வழங்க…அப்புறம் இன்னொன்னு கேட்டீங்களே…. புது பணத்துக்கு வந்து ஒட்டிக்கிட்ட சொந்தம்னு, இத்தன வருஷம் , ஒன்னுமே இல்லாதப்போ வராத, நீங்களும் உங்க பொண்ணும் ,இப்ப புதுசா உரிமை கொண்டாடுறீங்களே… அதைத்தான் சொன்னீங்களோ….?”

“ஏன்னா…, இந்த புள்ளைங்க இத்தனை வருசமா எங்க நல்லது கெட்டது எல்லாத்துலயும் எங்க கூடத்தான் இருந்ததுங்க… அப்பயும் பாசத்தை தான் எங்களுக்கு உணர்த்தினதுங்க, பணத்தை உணர வைக்கல… அப்பா ,அம்மா வை பறிகொடுத்திட்டு அன்புக்காக நின்னுச்சுங்க, எங்க கிட்ட, சொத்தையெல்லாம் பறிகொடுத்துவட்டு சோத்துக்காக வரல …. வசதி வந்ததும் எங்களுக்கு இறங்கி வந்து மரியாதை தரல… அவங்களுக்கு சமமா எங்களை வளர்த்துவிட்டுட்டு எங்களோட வந்து கூட இருக்குதுங்க துணையா…”

“இன்னும் ஒரு வார்த்தை என் புள்ளைகள பத்தி கூட்டியோ இல்லை குறைச்சியோ பேச யாருக்கும் எந்த உரிமையும் இல்லை…அப்படி பேசிறவங்க கூட எனக்கு உறவும் இல்லை.”


“அதான் உரிமை இல்லை உறவும் இல்லைன்னு அத்துவிட்டாளே உங்க தங்கச்சி, அப்புறம் ஏன் மரம் மாதிரி இங்கேயே உட்கார்ந்து இருக்கீங்க. இனிமே தங்கச்சி தொங்கச்சின்னு கொஞ்சிகிட்டு இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சிங்க தெரியும் சேதி….”

“கார்டியனா இருந்து இத்தனை வருஷமா இந்த அனாதை கழுதைகளை காப்பாத்தி விட்டதுக்கு என் பொண்ணு வாழ்க்கைக்கே உலை வைக்க பாக்குறீங்க. அங்க போடு இங்கே போடுன்னு எத்தனை கையெழுத்து உங்களுக்காக ஒவ்வொரு ஸ்கூலுக்கும் ஒவ்வொரு காலேஜுக்கும் வந்து போட்டுருப்பாரு,உங்களுக்காக ராப்பகலா அலையோ அலைன்னு அலைஞ்சாரே…… அதுக்கு காற்று காட்டுகிற நன்றியா இது. என் பொண்ணு மனசுல ஆசையை வளர்த்து இப்படி மோசம் பண்ணதுக்கு நீங்க நல்லா அனுபவிப்பீங்க. நன்றி கெட்டவங்களா, ரெண்டு பேரும் நல்லா இருங்க.”

“அடியேய் , ஊமைக் கோட்டான் ஆரா… நீ எப்படி சந்தோஷமா வாழ்ந்துடறேன்னு நானும் பாக்…………....”

“நிறுத்துங்க..”
பேசிக்கொண்டே போன கற்பகத்தின் குரலில், அந்த கர்ஜனை கேட்டு, பிசுறு தட்டியது.
பார்த்தால் நம்ம இளா தான்… வெட்ட படவேண்டியது உறவுகளை அல்ல…, லட்டுவை பற்றி லகுடத் தனமாக பேசுபவர்களின் நாக்கை….,என்ற ரீதியில் நம்ம ஹீரோப்பா… அடேங்கப்பா….

“வயசாகிட்டு தான அறிவுன்னு ஒன்னு இருக்குதா உங்களுக்கு, உங்க மக வயசு உள்ள பொண்ணுகிட்ட எப்படி பேசணும்னு தெரியாது… சும்மா உங்க பொண்ணு வாழ்க்கைய நாசம் பண்ணிட்டோம்ன்னு பேசுறீங்க…
நான் எப்பயாவது சொன்னேனா சீமாவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு… அவகிட்ட கிருஷ் கூட பழகுற மாதிரி நல்ல பிரெண்டா தான் இருந்தேன்…இடையில் அவளுக்கு கிறுக்கு புடிச்சி போச்சு… இதெல்லாம் வேணாம்னு நல்ல முறையில் சொல்லி பார்த்தேன் கேட்கல… இதோ நிக்குறாரே உங்க புருஷன் அவர்கிட்ட , உங்க பொண்ணை கண்டிச்சு வச்சுக்கோங்கன்னு கூட சொன்னேன்.”

“அவளோட அம்மா தான நீங்க, அவ பண்ற தப்பையெல்லாம் சரி பண்ணாம ,என்னங்க இது எங்களை குத்தம் சொல்றது… வயசு ஆக ஆக அன்பு பெருகனும், இப்படி வஞ்சத்தை பெருக்கிகிட்டீங்கன்னா , நீங்க அழியுற நாள் நெருங்கிட்டுன்னு அர்த்தம்”.

“வைத்தியநாதன் சார்… இதோட என்னோட ஆடிட்டர் போஸ்ட்லயிருந்து உங்களை விலக்குறேன்…உங்க செட்டில்மென்ட் பணம் ,மிச்சம் சொச்சம் எல்லாம் உங்க அக்கவுண்ட்டில வந்துடும்.. என் கம்பனி கணக்கை பார்த்தவரைக்கும், ஃபயில க்ளோஸ் பண்ணி மெயில் பண்ணி விடுங்க…”

“இளா ,இவங்களுக்காக நம்ம பிசினஸ் உறவை…,” வைத்தி இழுக்க…

“என்ன சார் இவங்க…? யார் சார் இவங்க..? காசு இல்லாம ஓ சீயா பார்த்தீங்களா எங்க ஆடிட்டிங்கை.. இல்லை தர்மத்துக்கு கார்டியன் போஸ்ட் பண்ணினீங்களா…? ஆரா ஆசிர்வாத் த்தோட முதலாளி… முதலாளியை உங்க வை ஃப் மரியாதை குறைவா பேசுவாங்க, நாங்க பார்த்திட்டு சும்மா இருக்கனுமா…? தட்ஸ் இட்.”
வாயைத் திறக்க முடியவில்லை வைத்திக்கு…

“என்னா…? பெரிய கம்பனி அதுக்கு ஒரு அர லூசு ஓனர்… நீங்க வாங்க, இவன் இல்லைன்னா ஆயிரம் கம்பனி… நம்ம பொண்ணு தங்கம், போனால் போகுது, அந்த பைத்தியத்தை பார்த்துக்கிட்டு , கம்பெனியும் பார்த்துகட்டும் என் பொண்ணுன்னு நினைச்சா, இவன் இந்த பேச்சு பேசுறான்.. இவனே கெஞ்சினாலும் என் சீமா இவனுக்கு கிடையாது.. அனாதைங்க…” கற்பு கதகளி ஆடினார்..

“இளா…. நில்லுங்க…”
இப்ப யாருடா…. கற்பு பேசுறப்ப மட்டும் கண்ணி வச்சி வெடிக்கிறது…
நம்ம கிருஷ் தான்.

“இளா என் மச்சான், ஆரா என் தங்கச்சி… அனாதைன்னு சொல்லிகிட்டு என் வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்காதீங்க… இதோட என் ஆடிட்சையும் க்ளோஸ் பண்ணிடுங்க மாமா.”
“வாங்க போகலாம்…” கற்பகம் கையை பிடிச்சு இழுக்க…,

“இன்னும் ஒரு கணக்கு பாக்கி இருக்கு.நீங்க பெத்த தங்கத்தோட தரத்தை தெரிஞ்சுகிட்டே போங்க..”
மொபைல் ரெக்கார்டிங்கை கிருஷ் ஒலிபரப்பினான்…
வைத்தி வாயடைத்து போக..,
கற்பகம் கனலை கக்க,
சீமா சிவந்து நிற்க…
விக்குக்கு பக்குன்னு ஆச்சு…

ஒலிபரப்பு முடிஞ்சதும், மூட்டை முடிச்ச கட்டிக்கிட்டு கிளம்ப பார்க்க,

“ஒரு நிமிஷம்,”
மறுபடியும் யாருடா….?
இளா,
“ச்சை….! இவ்வளவு கீழ்த்தரமான வேலை பார்த்துருக்கா பாருங்க உங்க பொண்ணு… டேய்.., விக்ரம், உனக்கு என் ஆரா கேட்க்குதா…? உன்னை இனிமே எங்கயாவது பார்த்தேன்.., அங்கேயே மண்ணைத் தோண்டி புதைச்சிடுவேன் ராஸ்கல்..”
சட்டையை பிடித்து கேட்டுவிட்டு விக்கியை உதறி தள்ளினான்.
“இப்ப சொல்றேன், நல்லா கேட்டுக்கொண்க.
ஆமாம், ஆராவைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்… அவ என் முறைப்பொண்ணு… அவளை கட்டிக்க நான் யாரைக் கேட்கணும்… அவ படிப்பு முடிஞ்சு மூணு மாசத்துல எங்களுக்கு கல்யாணம், எங்க பழைய கார்டியங்கிர முறையில் கூட தயவு செஞ்சு வந்துராதீங்க, உங்க மூஞ்சில முழிச்சிட்டு ,நாங்க வாழ்க்கையை ஆரம்பிக்க விரும்பல…”



சாரல் ஆக சாரா....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top