• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கண் பிரச்சனைகளை தீர்க்க சித்த மருத்துவம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
கண் பிரச்சனைகளை தீர்க்க சித்த மருத்துவம்

கண் பிரச்சனை

கோடைகாலத்தில் ஏற்படும் அதிக வெப்பத்தால் கண் எரிச்சல், கண்களில் சிவப்பு தன்மை ஆகிய பிரச்னைகள் ஏற்படும்.
இதை முள்ளங்கி, தக்காளி, வெள்ளரி, கொத்துமல்லி போன்றவற்றை பயன்படுத்தி குணப்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:
முள்ளங்கி, தக்காளி, வெள்ளரி, சீரகப்பொடி, உப்பு - கால் டம்ளர் முள்ளங்கி சாறு, சம அளவு தக்காளி சாறு மற்றும் வெள்ளரி சாறுடன் கால் ஸ்பூன் சீரகப் பொடி, சிறிது சமயல் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து வாரம் இருமுறை குடித்து வந்தால் கண் எரிச்சல், கண்ணில் ஏற்படும் சிவப்பு தன்மை, சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சி குணமாகும். உடல் குளிர்ச்சி அடையும்.


நந்தியா வட்டை பூக்கள்
நந்தியா வட்டை பூக்களை பயன்படுத்தி கண் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். நந்தியா வட்டை பூக்களை இரவு நேரத்தில் தண்ணீரில் ஊற வைக்கவும்
இந்த தண்ணீரை கொண்டு கண்களை கழுவினால் கண் எரிச்சல் சரியாகும். பூக்களை கண்களின் மேல் வைத்து 15 நிமிடம் கட்டி வைத்தால், கண் சோர்வு, கண் எரிச்சல் குணமாகும். வெயிலில் செல்லும்போது கண்கள் சிவந்து போகும்.
இந்நிலையில், நந்தியா வட்டை பூக்கள் உடலில் ஏற்படும் உஷ்ணத்தை குறைப்பதால் கண் பிரச்னைகள் சரியாகும்.
கண்களில் அழுக்கு படிதலை தடுப்பதுடன், கண்களுக்கு ஆரோக்கியம் தரும். பார்வையை தெளிவுபடுத்தும்.


திரிபலா சூரணம்
திரிபலா சூரணத்தை பயன்படுத்தி கண் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
ஒரு ஸ்பூன் திரிபலா சூரணத்தில் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை நன்றாக ஆற வைத்து, 2 முறை வடிக்கட்டி எடுத்து கொள்ளவும்.
இந்த நீரை கொண்டு கண்கள், புண்கள், கொப்புளங்களை கழுவுவதால் அவைகள் வெகு விரைவாக ஆறும். கொத்துமல்லி இலைகளை சுத்தப்படுத்தி அரைத்து சாறு எடுக்கவும். மெல்லிய துணியில் இந்த சாறை நனைத்து கண்களுக்கு மேல் ஒத்தடம் கொடுக்கலாம் அல்லது கண்கள் மீது 15 நிமிடங்கள் வைத்திருந்தால் கண் எரிச்சல் சரியாகும்.


வில்வ இலை
இதேபோன்று, வில்வ இலை சாறு எடுத்து கண்களில் வைத்தால் கண் எரிச்சல் குணமாகும். தற்போதைய காலகட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. புற ஊதா கதிர்கள் அதிகளவில் தாக்குவதால் கண்கள் பாதிக்கிறது. கண்களின் சிவப்பு தன்மை, கண் எரிச்சல், கிருமிகள் தொற்றி கொள்வது போன்றவை நிகழும். இதற்கு கொத்துமல்லி, வில்வ இலை சாறு மருந்தாகிறது. இதுபோன்ற எளிய மருத்துவத்தின் மூலம் கண்களை நாம் பாதுகாக்கலாம்.
 




stella

அமைச்சர்
Joined
May 21, 2018
Messages
1,458
Reaction score
2,327
Age
28
Very very useful tips for our eyes👀 thank you so much sis🌹🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌷🌷🌷⚘⚘⚘⚘
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top