கதைக்கான வாசகரின் விமர்சனம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Imaiyi

Author
Author
SM Exclusive Author
Joined
May 24, 2018
Messages
913
Reaction score
2,499
Points
93
Age
31
Location
Sri lanka
Hi lovliesss. என் கதைக்கான முகநூலில் பவானி பாலசுப்ரமணியம் அவர்களால் 'தமிழ் நாவல் விமர்சனம்' பக்கத்தில் பகிரப்பட்ட என் கதைக்கான விமர்சனம்.
அன்பின் நன்றிகள்...
Feeeelinggg Haaapppyyyy😍😍😍😍
//////////
வணக்கம் சகோதரிகளே ..

#வில்லனின் வீணையவள்

#ஆசிரியர் இமையி

வருவான் வில்ல நாயகன் என
காத்திருந்த வீணைக்கு..
வந்தான் வில்லாளன் வீணையை
மீட்டி துடிக்க வைத்து..
துயரம் போக்கிட..

நிழல்கள் துயரமாக நிஜங்களின் நெறுக்கங்கள்
நேசமதை உணர்த்திய வீணை இது..
மித்ர வீணை காதலின் உருகிய பனிதுளிகள்
இங்கே மீட்டிய சுரங்கள் எல்லாம் ..
சொல்லாத காதல் நிலைகளே..

வீராவோ வில்லனோ காதலே தந்தவனே
இவளின் வெளிச்ச வீட்டுக்கு ஒளிநகை..

கிருஸ்ணா பண்பான பாசக்கார மகன் ,தமையன்,நல்ல நண்பன் இவனின் நேசங்கள் உச்சம் தொட்டவை..
நண்பனின் நலனுக்காய் இவன் செய்யும் பாசபோராட்டம் தன் வாழ்வை தள்ளிவைத்து நாயகனாய் மிளிர்ந்தது மிகவும் அருமையே..

வீரமித்ரன் காதல் இவனுக்கு செய்த செயலால் தனை அழித்து நிஜம் தொலைத்து இவன் படும் துயரங்கள் கவலையின் நிலைகளே.. நிழல்களை தூரவிரட்டி நிஜத்தை அடையும் நிலையில் காதல் இவனுக்கு மருந்தாக வந்தது மிகவும் அருமை.
வீணையின் மித்ரனாக உருமாறியபோது அழகு நாயகனே..

வீணா வருவான் வில்லன் எனை தூக்கி செல்ல என சொல்லுமிடம் அழகே. எல்லோருக்கும் ஹீரோ பிடித்தம் இவளுக்கோ வில்லனே பிடித்தம் .அதற்காக இவள் கூறிடும் காரணங்கள் சிரிப்பு என்றாலும் ஓ.. இப்படியும் இருக்கிறதோ என நினைக்க தோன்றியது..
இவள் வாழ்வில் வில்லன் வந்தானா சிறை எடுத்தானா என படித்தாலே தெறியும் ரசனையும் கூட..

அழகை வசைப்பாடி இப்படியும் வாழும் மனிதர்கள் நம்மிடையே உண்டு என யதார்த்த நிலையை சொல்லி இருப்பது நிதர்சன கருத்தே.. சந்தேகம் வந்தால் வாழ்வே சூனியம் என்பதை கடைசிவரை புரியாத மனித இனம் இன்னும் இருக்கிறது இங்கேயும் அதே போல் உண்டு ,

அத்தனை பாத்திரங்களும் அழகு.சில மனிதர்களை தவிர.
சில நினைவுகளை மறப்பதும் நன்மைக்கே.

கிச்சா பட்டு மனதோடு

பாசமான குடும்பம் , உயர்வான நட்பு, காதலுக்காக காதலை மறைக்கும் காதல் உணர்வு என அழகாக கதை கொண்டு சென்றது மிகவும் அருமை ஆசிரிய தோழியே..

வித்தியாசமான கதை அம்சம் வாழ்த்துக்கள்

கவிதைகள் கட்டாயம் சொல்லவே வேண்டும் .கதையின் சாரத்தை சொல்லி சென்றது மிகவும் அருமை. வீராவின் வலி,வீணாவின் காதல்,துயரம் என வகைபடுத்தி கவிவந்தது காதலே.

வாழ்த்துக்கள் ஆசிரிய தோழியே மீண்டும் சந்திப்போம் அடுத்த உங்களின் படைப்பில் வாழ்த்துக்கள் மா.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top