• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கதை கதையாய் காரணமாம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அது ஒரு அழகான வீடு.குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் நல்லவர்கள்.சமூகத்தில் அம்மா,அப்பா,தம்பி,தங்கை, சகோதரன்,குழந்தை,கணவன்,மனைவி என்று வாழும் மக்கள்.நல்ல வேலையில் இருப்பவர்கள்.சட்டம்,ஒழுங்கை மதிப்பவர்கள்.திருட்டு,கொலை,பிறர் குடியை கெடுப்பது எல்லாம் மிக பெரிய பாவம்,குற்றம் என்று மனசாட்சிக்கு பயந்து வாழும் பொதுமக்களில் ஒருவர் அவர்கள்.:love::love::love:

அப்படி இருப்பவர்கள் வாழ்வில் ஒரு நாள்.:)

அம்மா/அப்பா --இந்த கொரோனா வந்ததில் வெளியே கூட போக முடியாமல் ரொம்ப போர்....என்ன செய்யறதுன்னு கூட தெரிலை...

மகன்/மகள் ---அப்போ இந்த ----------வாட்ஸாப்ப் குரூப், முக நூல் குரூப்பில்,டெலிகிராம் குரூப்பில் இணையுங்கள்.இங்கே நாங்கள் பொது சேவை செய்யறோம்.

அம்மா/அப்பா ---என்ன பொது சேவை?தெருவில் உணவின்றி வாடுவோரை தத்து எடுக்கறீங்களா?இல்லை அனாதை ஆசிரமத்திற்கு தினமும் போய் ஏதாவது சேவை செய்கறீர்களா?

மகன்/மகள் -ச்சே ச்சே இதை எல்லாம் எவன் செய்வான்...நாங்க நான்கு சுவத்துக்குள் இருந்து கொண்டு, புதிது முதல் பழைய,ஆண் பெண் பேதமின்றி,publication என்ற தடைகளை எல்லாம் தாண்டி சுட சுட அவங்க முடிக்கும் கதைகளை pdf எடுத்து உடனுக்குடன் ஷேர் செய்வோம்.அதுவும் hd குவாலிட்டியோடு.நோவாம நோம்பு கும்பிடுவோம்.

அம்மா/மகன் ---அய்யயோ அந்த எழுத்தாளர்கள் எல்லாம் காசு வாங்கிட்டு தான் ஒவ்வொரு எபிசொட் போடறாங்களா என்ன ?அடுத்த எபிசோட் படிக்கச் வேண்டும் என்றால் publication உங்களிடம் கட்டணம் வசூலிக்கிறதா என்ன...அட பாவி பசங்களா.

மகன்/மகள் --ச்சே ச்சே...முக்காவாசி சைட்ல எல்லா எபிசொட் பிரீயா தான் இருக்கு.லிங்க் எல்லாம் எடுக்காம ரீடர் நினைத்த நேரத்தில் படிக்கலாம்.எழுத்தாளர்களுடன் பேசலாம்.அவங்களை பூஸ்ட் செய்வது போல் லைக்,கமெண்ட், ரெவியூ கொடுக்கலாம்.

அம்மா/அப்பா -அப்போ எதுக்கு பிரீயா இருப்பதை என்னவோ ராபின் ஹூட் ரேஞ்சுக்கு பிரீயா கொடுக்கிறோம் என்று பந்தா உங்களுக்கு? ஒரு கேள்வி.

உங்கள் வீட்டிற்குள் நுழைந்து உங்கள் குழந்தை, சகோதரி,அன்னை,தந்தை கடத்தறாங்க என்று வைத்துக்கோ...அது கூட வேண்டாம் உன்னிடம் இருந்து ஆயிரம் ரூபாய் திருடறாங்க என்று வைத்து கோ அதுவும் நல்ல குடும்பத்தில்பிறந்து,சமுதாயத்தில் நல்ல நிலையில் இருக்கும் ஒரு ஆள் இதை கொழுப்பு,திமிரு எடுத்து,நாட்டுக்கு நல்லது செய்யறேன் என்று கம்பு சுத்திட்டு செய்யறாங்க என்று வைத்து கொள்.என்ன செய்வே?அப்படியே விட்டுடுவியா என்ன?

மகன்/மகள் ---ஆங் அது எப்படி விட முடியும்...ஏதோ ஒருவேளை சொத்துக்கு வழியில்லாம தெருவில் நாதி என்று யாரும் இல்லாம இருக்கிறவன் திருடினா கூட ஏதோ பசி கொடுமை,வயத்துக்கு திருடறான் என்று விடலாம்.கையும் காலும் உலக்கை கனக்க நல்லா இருக்கு....நல்ல குடும்பத்தில் பிறந்து இருக்கான்...அம்மா அப்பா திருடுதல் என்பது பாவம் என்று சொல்லி கொடுத்து தான் வளர்த்து இருப்பாங்க.நல்ல படிச்சு இருப்பான்.நல்ல வேலையில் இருக்கான்...இவங்களை நம்பி குழந்தைங்க கூட இருக்கு...அப்படி இருக்கும் போது திருடினா அது குற்றம்...பிடித்து போலீஸ்ல தான் ஒப்படைக்கணும்.

அம்மா/அப்பா---ஓஹ் அதையே நீங்க செய்தா அது குற்றம் இல்லையா....தனி ஒருவன் படத்தில் வருவது போல் பல இன்னல்கள் இடையூறுகளுக்கு நடுவே எழுதும் எழுத்தாளர்களின் உழைப்பை அவர்களின் அனுமதி இல்லாமல் முடிந்த அடுத்த நொடியே pdf ஷேர் செய்யும் நீங்கள் செய்வது திருட்டு இல்லையா....அறிவு திருட்டு அந்த எழுத்துக்கள் அந்த எழுத்தாளரின் கற்பனை என்னும் கருவறையில் உதித்த குழந்தை இல்லையா....அதை திருடி நாட்டுக்கு நல்லது செய்கிறோம் என்று குழு அமைத்து அதை ஷேர் செய்து,கொஞ்சம் கூட மனசாட்சி,குற்ற உணர்ச்சி என்ற ஒன்று இல்லாமல் செய்வது இந்திய தண்டனை சட்டம் படி

i) The Paris Convention for the Protection of Industrial Property, 1967.
ii) The Berne Convention for the Protection of Literary and Artistic Works, 1971 along with Appendix.
iii) The Rome Convention for the Protection of Performers, Producers of Phonograms and Broadcasting Organisations, 1961, and
iv) The World Intellectual Property Organization (WIPO) Convention.
Copyright and Related Rights:
v) The Universal Copyright Convention (with Protocols)
vi) The Geneva Treaty on International Registration of Audio-Visual Works, 1992.
vii) WIPO Copyright Treaty, 1996
viii) WIPO Performance and Phonograms Treaty, 1996
போன்ற நூற்றுக்கணக்கான சட்டங்களை மீறி உங்கள் கையில் இன்னொருத்தரின் படைப்பை அவர்கள் அனுமதி இல்லாமல் கையில் எடுக்க கைகள் நடுங்கவில்லையா?

இதில் request வேறு...இந்த எழுத்தாளரின் படைப்பை எங்களுக்கு கொடுங்கள் என்று...இதை நீங்கள் உங்கள் 90 தோழமைக்கு போர்வேர்ட் செய்தால் அதை உங்கள் போன்,கம்ப்யூட்டர் பதிவு இது இருந்தால் அதுவும் சட்டப்படி குற்றம்.குழுவில் உள்ள அனைவரையும் கைது செய்ய முடியும் .

https://cybercrime.gov.in/ இங்கு எழுத்தாளர்கள் databreach என்ற தகவல் திருடுதல் என்ற என்ற குற்றத்தின் படி.

ஏபிசி என்று ஒன்று விடாமல் இந்த குழுவில் இருந்து நீங்கினாலும் உங்கள் சைபர் தடம் என்பது கல்லில் பதிந்த உளியின் செதுக்கல் மாதிரி பதிந்து இருக்கும்.சோ ஒட்டுமொத்தமாய் உங்கள் குடும்பத்தையே உள்ளே தூக்கி போடும் படி செய்யலாம்.அதுவும் நாடு விட்டு நாடு என்றால் இன்னும் சட்டம் இன்னும் அதிகம்.வாய்தா வாங்கியே உங்கள் வாழ்நாள் போய்டும்.

இன்னொரு டவுட் எழுதும் எழுத்தாளர் எல்லோரும் jk rowling மாதிரி -அதான் ஹார்ரி பாட்டர் கதை எழுதி கோடிஸ்வரர்களா ஆகிட்டாங்களா என்ன?

மகன்/மகள்
-ஒன்று இரண்டு பேர் அதுவும் மிக பிரபலமானவங்க அப்படி இருக்கலாம்.விரல் விட்டு என்னும் அளவுக்கு தான்.

அம்மா/அப்பா - அப்போ எல்லா எழுத்தாளரும் ac ரூமில் அமர்ந்து எந்த குடும்ப கஷ்டமும் இல்லாமல் தான் கதை எழுதறாங்களா?இந்த கதை எழுதி அதன் மூலம் வரும் பணத்தில் தான் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நிலை இல்லாமலா இருக்கிறார்கள்.

மகன்/மகள் -ச்சே ச்சே publication தரும் பணத்தை வைத்து தான் பிள்ளைகளின் படிப்பு,குடும்ப செலவு பார்க்க வேண்டும் என்று 80 சதவீதம் பேர் இருக்காங்க.

அம்மா/அப்பா -அப்போ publication எல்லாமும் எல்லா எழுத்தாளருக்கும் ஒரே மாதிரி லட்சம் லட்சமாய் கதை எழுத பணம் தருகிறார்களா

மகன்/மகள் -இது உங்களுக்கே ஓவர் ரா இல்லை...கதை எழுதினா லட்சம் லட்சமாய் கொட்டுமா....ஒன்று ரெண்டு பேர் அப்படி இருக்கலாம்.லெஜெண்ட் எழுத்தாளர்கள் என்றால் ஆயிரத்தில் இருக்கலாம் பணம் கொடுப்பது.புதிய எழுத்தாளர்கள் என்றால் இத்தனை பக்கத்திற்கு இவ்வளவு தான் என்று ஆயிரம் கூட தாண்டாது.

அம்மா/அப்பா -அப்போ எல்லா எழுத்தாளர்களும் 24*7 எந்த கவலையம் இல்லாமல் குடும்பபத்தை பற்றி கவலை படாமல்,'ஹே நாங்க எழுத்தாளர்' என்று பிலிம் காட்டிட்டு குடும்ப பொறுப்புகளை தட்டி கழிக்கரங்களா?

மகன்/மகள் -ச்சே ச்சே...நிறைய வீட்டில் பெண் எழுத்தாளர் என்றால் தடையே இருக்கு.சில நல்ல கதைகளை கொடுக்கும் எழுத்தாளர்கள் குடும்ப பிரச்சனை காரணமாக எழுதுவதையே நிறுத்தி இருக்காங்க.இன்னும் சிலர் படித்த கொண்டு,வேலைக்கு சென்று,குழந்தை குட்டிகளை பார்த்து கொண்டு, சமையல் வேலை செய்து என்று கிடைக்கும் சில மணி நேரத்தில் உடல் நோக ஒரே இடத்தில் அமருவதால் பல உடல் உபாதை ஏற்பட்டு கூட எழுதறாங்க...

அம்மா/அப்பா -ரீடெர்ஸ் என்றால் மதிப்பு கொடுக்காமல், பயங்கரமாய் திட்டி எப்படி எதுவும் எல்லா எழுத்தாளர்களும் செய்யறாங்களா?

மகன்/மகள்
-ச்சே ச்சே ரொம்ப அன்பா நட்பு,சகோதர சகோதரி என்று பாசமாய் பேசும் எழுத்தாளர்கள் தான் அதிகம்.எந்நேரம் ஆனாலும் நமக்கு பதில் அளிக்க காத்து இருக்கும் எழுத்தளார்கள்,டவுன் டு எர்த் என்று சொல்வார்களே அது போல் நம் குடும்பத்தில் ஒரு சகோதர சகோதிரியாய் இருப்பவங்க.

அம்மா/அப்பா - அப்போ எதுக்கு எதுக்கு இப்படி கஷ்டபட்டு பல தடைகளை தாண்டி தங்களுக்கு என்று ஏதோ ஒரு முத்திரை பதிக்க நினைக்கும் உங்கள் தோழராய்,தோழியாய்,சகோதர சகோதரியாய் இருக்கும் எழுத்தாளர்களின் முதுகில் குத்துவது மட்டும் இல்லாமல் நெஞ்சில் குத்துகிறீர்கள்.
சரி இப்போ உங்களிடம் pdf ஹை குவாலிட்டி இருக்கு.100 ரூபாய் கொடுத்து கூட உங்களால் புத்தகமாய் வருவதை வாங்க முடியாத நிலை.ஆனால் ஸ்மார்ட் போன்,நெட் பேக் போட முடியும்.சரி இப்போ ஒரு எழுத்தாளரின் புக் 150 copy போடுறாங்க.அதில் உங்க குரூப் 100 பேர் ஏற்கனவே pdf பைல் இருக்கு.சோ 50 பேர் மட்டும் தான் புக் வாங்குவாங்க.புக் வாங்க வேண்டும் என்று நினைக்கும் இன்னும் 20 பேர் புக் வாங்கலாம்.அப்போ பாதி புத்தகம் கூட விற்பனை ஆகாத எழுத்தாளரின் புக் பதிவு இட publication யோசிக்குமா இல்லையா...

சரி பதிப்பகம் புத்தகம் விற்பனை ஆகாமல் லாஸ் ஆகுது.இழுத்து மூடறாங்க என்று வைத்து கொள்.இந்த பதிப்பகத்தில் இருக்கும் பாதுகாப்பு,சுதந்திரம் வேறு எங்கும் கிடைக்காது என்று அந்த எழுத்தாளர் தான் எழுதுவதையே நிறுத்துகிறார் என்று வைத்து கொள் , உங்கள் நண்பராய்,தோழியாய் பார்த்தீர்களா அவர்கள் எழுத்தையே நீங்கள் நசுக்குகிறீர்கள் தானே.

நீங்கள் சந்தோசமாய் இருக்க, எழுதும் எழுத்தாளரின் அறிவை அவர் குழந்தையை திருடி,அவர்களின் வாழ்வாதாரத்தையே நசுக்கும் உங்கள் கரம் அந்த pdf படிக்கும் போது கூசவில்லை?இதயம் செய்வது எவ்வளவு பெரிய குற்றம் என்று அஞ்சி நடுங்கவில்லை?

இதை தான் உங்கள் தாயும்,தந்தையும், கற்று கொடுத்த ஆசிரியரும் சொல்லி கொடுத்தது?உடம்பு நோவாமல் நான்கு சுவற்றுக்குள் இருந்து இன்னொருத்தரின் உழைப்பை மனசாட்சியே இல்லாமல் திருட?

நீங்கள் திருடவில்லை என்றாலும் திருட்டுக்கு நீங்களும் தானே துணை செல்கிறீர்கள்?

அவன் தான் ஏறி திருடினான்.நான் ஏணி மட்டும் தான் பிடித்தேன்,என்பதை விட மிக கேவலம் வேறு எதுவும் இல்லை.நீ ஏணி பிடிக்காவிட்டால்,இது வேண்டும்,அது வேண்டும் என்று உன் வளர்ப்பை தாண்டி தவறான வழியில் நீ செல்லவில்லை என்றால் திருட நினைப்பவன் ஏன் திருட போகிறான்?

டிமாண்ட் இல்லாத இடத்தில் சப்லை இருக்காது.நீ வேண்டும் என்கிறாய்.உன் ஆசையை பூர்த்தி செய்ய அவன் திருடுகிறான்.ஆக மொத்தத்தில் எழுத்தாளர்கள் சைபர் crime செல் கம்பளைண்ட் கொடுத்தால் குழுவில் உள்ள எல்லோரும் தான் மாட்டுவீர்கள்.

இப்போ சொல்லு உங்களை திருடனாக/திருடியாக தானா நாங்கள் வளர்த்தோம்?



கண்ட கனவு கலைந்து விட பதறி அடித்து எழுந்து அமர்ந்தான்/அமர்ந்தாள் யாரோ ஒருவன்/ஒருத்தி.

திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ithu nice illama....nethu en story pdf la hd quality vendum endru request poi iruku.intha site matum illai lots of site la write seiyum writers story complete aana with in 12hrs pdf share aagi iruku.mostly velinatu readers group form seithu,old new endru pagupadu illamal share seithu tu irukanga....namma site la lots of writers ithanal pathikapatu irukanga.....knowledge theft.
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
ithu nice illama....nethu en story pdf la hd quality vendum endru request poi iruku.intha site matum illai lots of site la write seiyum writers story complete aana with in 12hrs pdf share aagi iruku.mostly velinatu readers group form seithu,old new endru pagupadu illamal share seithu tu irukanga....namma site la lots of writers ithanal pathikapatu irukanga.....knowledge theft.
Oh
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
நீங்கள் சொல்வதெல்லாம் நெத்தியடியான உண்மை அனி dear... ஆனால் என்ன செய்ய ? இதனை எப்படி தடை செய்வது என்பது தான் புரியாத புதிராக இருக்ிறது. லட்சக்கணக்கில் எழுதுபவர் வளர்ந்து வரும் இந்த நேரத்தில் அவர்களை பாதிக்கும் படியான இச்செயலை ஆதரிப்பவரையும் தடுக்க mudiyaavillai என்பதும் ஆதங்கமான உண்மை...
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
நீங்கள் சொல்வதெல்லாம் நெத்தியடியான உண்மை அனி dear... ஆனால் என்ன செய்ய ? இதனை எப்படி தடை செய்வது என்பது தான் புரியாத புதிராக இருக்ிறது. லட்சக்கணக்கில் எழுதுபவர் வளர்ந்து வரும் இந்த நேரத்தில் அவர்களை பாதிக்கும் படியான இச்செயலை ஆதரிப்பவரையும் தடுக்க mudiyaavillai என்பதும் ஆதங்கமான உண்மை...
true....en story matum illai...sandiya,yuva, nu story mudinja udane avanga story hd print pdf share aagi iruku.new old,male,female,intha publication antha publication nu entha rules sum illai.unga story kooda request poi iruku.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
S
true....en story matum illai...sandiya,yuva, nu story mudinja udane avanga story hd print pdf share aagi iruku.new old,male,female,intha publication antha publication nu entha rules sum illai.unga story kooda request poi iruku.
So sad ppa... ?? இரத்தத்தை urinjura அட்டை பூச்சிய விட இவங்க மோசம்
 




Umaradha

மண்டலாதிபதி
Joined
May 19, 2018
Messages
357
Reaction score
646
Location
Bangalore
ithu nice illama....nethu en story pdf la hd quality vendum endru request poi iruku.intha site matum illai lots of site la write seiyum writers story complete aana with in 12hrs pdf share aagi iruku.mostly velinatu readers group form seithu,old new endru pagupadu illamal share seithu tu irukanga....namma site la lots of writers ithanal pathikapatu irukanga.....knowledge theft.
Oh, that is very sad. Sitelaye padikka mudiyum bodhu ennathukku copy pannanum, that too without the writer's permission?
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,397
Reaction score
22,044
Location
Tamil Nadu
?மிகவும் வருத்தத்திற்குரியது...

?நானெல்லாம் புத்தகப் பிரியை....

?எழுத்தாளர்களிடம் பேசலாம் என்ற ஒரே காரணத்திற்காக இத்தளத்தை சுற்றுகிறேன்....

?நீங்க சூப்பர் அனிதா....

?நீங்க விவரித்த விதத்தில் கண்டிப்பாக தவறை உணர்ந்திருக்க வேண்டும்...

?பொதுவாக நாவல் வாசிப்பவர்கள் மற்றவர்கள் மனநிலை உணர்ந்தவர்கள்... மற்றவர்களை கஷ்டப்படுத்த மாட்டார்கள்...மற்றவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் உள்ள வேறுபாடு இருப்பதெல்லாம் உண்மையில்லையா. ... ?

?இதை வாசிக்கும் போது எழுத்தாளர்களுக்காய் வருந்துகிறேன் ....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top