• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience கதை படிப்பது நல்லதா? கெட்டதா?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hai Friends

I'm very happy to share with u..
நான் இந்த தளத்தில் சேர்ந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது....

எனக்கு எந்த சமூக வலைதளத்திலும் ஈடுபாடு கிடையாது.. இந்த வலைதளத்திலும் கதைகள் வாசிக்கலாம் என்பதற்காக பதிந்தேன்.. கதை வாசிப்பதற்கு பல வலை தளங்கள் இருந்தாலும் கதை வாசிப்பை தாண்டி ஒரு சந்தோஷம் இங்கே கிடைத்த நட்பு வட்டம் தான்.. கல்லூரி கால நண்பர்களை விட பிணைப்பு அதிகம் இந்த நட்பிற்கு...

இத்தளத்தின் சிறப்பே.. ஒரு குடும்பமாக அனைவரும் செயல்படுவது தான்.. அதற்கு முழு சுதந்திரம் கொடுத்த தல பிரியா க்காக்கு ஒரு நன்றி.. @smteam

எனக்கு தெரிஞ்சு.. 3 or 4 வகுப்பு படிக்கும் போதிலிருந்து சிறுவர்மலர் தங்க மலர் படிக்க ஆரம்பத்திலிருந்து இந்த புத்தகம் கதை வாசிக்கிற பழக்கம் இருக்கு.. 8வகுப்பு படிக்கும் போது நூலகத்தில் உறுப்பினரா சேர்ந்தேன் அங்கே தான் ரமணிமா புக்லாம் எனக்கு கிடைத்தது...படிக்க ஆரம்பித்த எனது கதைகள் படிக்குற பழக்கம்.. இன்றும் தொடர்கிறது..

ஆனா கதைகளை மட்டும் படிப்பதை பொழுது போக்கா வச்சிருக்கிறவங்க கற்பனை உலகில் வாழ்பவர்கள்... அவர்கள் நிஜ வாழ்வின் எதார்த்தை புரியும் மனபக்குவம் இருக்காதுனு பிரபல பேச்சாளர் ஒருவர் அவரது புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்தார்..

ஒரு பிரபல நிகழ்ச்சியிலும் பொழுது போக்கு புத்தக வாசிப்பை சொன்னவர்கள் வாசித்த புத்தகமாக அவர்கள் குறிப்பிட்ட புத்தகங்கள்லாம்.. அறிவு சார்ந்த புத்தகங்கள்.. யாரும் கதை நாவல்களை கூறவில்லை.. அப்படியே சொன்னாலும் இங்கீலிஷ் நாவல்கள் தான்..

ஒரு time pass and relaxing ஆக படிக்கும் போது ஜாலியான குடும்ப நாவல் இப்படிதான் படிக்க தோன்றும் .. எனக்கு இப்ப தோன்றின சந்தேகம் என்னனா..

கதை படிக்கிறது நல்லதா? கெட்டதா?

நீங்க எந்த விதமான கதைகளை விரும்புவீங்க?

Share ur views and comments
 
Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
என்னை பொருத்தவரை கதை படிப்பது நமக்கு கிடைக்கும் ஒரு ரிலாக்ஸ் நிறைய விஷயங்களை நான் கற்றுகொண்டு இருக்கிறேன்
 
karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
என்ன திடீர்னு இப்படி ஒரு சந்தேகம் ஜெயா....

நாம யாருண்ணு நமக்கு தெரியும், நமக்கு என்ன வேணும்னு நமக்குதான் தெரியும்...

எல்லாரோட ரசனையும் எல்லாரோடையும் ஒத்துபோகாது, அதனால உனக்கு என்ன வேணும்ங்கிறதுல நீ தெளிவா இருந்தா அடுத்தவங்க பேசறத முக்கியமா எடுத்து குழம்ப கூடாது...

உனக்கு தேவை ஜாலியா ரிலாக்ஸ்ஸா படிக்க ஒரு புத்தகம் அது இந்த நாவல்ல கிடைக்கற போது அது தப்பில்லையே...

ஏன் ஆத்தா!!! என்னையும் யோசிச்சு இவ்ளோ பெரிய கமெண்ட் போட வச்சிட்ட... just enjoy it baby:p:p
 
jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
என்னை பொருத்தவரை கதை படிப்பது நமக்கு கிடைக்கும் ஒரு ரிலாக்ஸ் நிறைய விஷயங்களை நான் கற்றுகொண்டு இருக்கிறேன்
நானும் மணிக்கா.. நிறைய சந்தர்பங்களை கையாள கதைகள். கற்று தந்துருகின்றன..
 
jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
என்ன திடீர்னு இப்படி ஒரு சந்தேகம் ஜெயா....

நாம யாருண்ணு நமக்கு தெரியும், நமக்கு என்ன வேணும்னு நமக்குதான் தெரியும்...

எல்லாரோட ரசனையும் எல்லாரோடையும் ஒத்துபோகாது, அதனால உனக்கு என்ன வேணும்ங்கிறதுல நீ தெளிவா இருந்தா அடுத்தவங்க பேசறத முக்கியமா எடுத்து குழம்ப கூடாது...

உனக்கு தேவை ஜாலியா ரிலாக்ஸ்ஸா படிக்க ஒரு புத்தகம் அது இந்த நாவல்ல கிடைக்கற போது அது தப்பில்லையே...

ஏன் ஆத்தா!!! என்னையும் யோசிச்சு இவ்ளோ பெரிய கமெண்ட் போட வச்சிட்ட... just enjoy it baby:p:p
ஹீ.. ஹீ.. டவுட் டவுட்..
 
Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
நான் சிறுவயதில் இருந்து கோகுலம்,அம்புலி மாமா, சிறுவர் மலர், தங்க மலர், கண்மணி, பெண்மணி மாத இதழ்கள், ராஜேஷ் குமார் நாவல்கள், இந்திரா சௌந்தராஜன், சிவ சங்க ரி, அனுராதா ரமணன்... நாவல்கள் லாம் விரும்பி படிப்பேன். எங்க வீட்ல காதல் கதைகளுக்கு தடா . எனக்கு படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது எங்க அக்கா. அவங்க படிச்சிட்டு நல்லா இருக்கிற கதைகள் மட்டும்என்கிட்ட வரும்.

திருமணத்திற்கு பிறகு நாவல் படிப்பது சற்று குறைந்து போனது. என்னைப் போல அங்கு நாவல் படிப்பவர்கள் இல்லாததால் நான் வித்தியாசமாக பார்க்கப்பட்டேன்.

பிறகு கடந்த மூன்று நான்கு வருடங்களாகதான் இணைய தளத்தில் நாவல்கள் படிக்க்ஆரம்பித்தேன்.
ராஜேஷ் குமார்நாவல்களைத் தேடும் போது தான் நான் காதல் நாவல்களைப் படிக்க ஆரம்பித்தேன். நான் முதலில் இணையத்தில் படித்த நாவல் தமிழ் மதுரா வின் ' வார்த்தை தவறி விட்டாய்' தான்.
என்னை வெகுவாக கவர்ந்த இந்த நாவலுக்குப் பிறகு முழு நேர இணைய தள வாசகியாகி விட்டேன்.

நாவல்படிப்பதால் எனக்கு மன அழுத்தங்கள் இருப்பதில்லை. ஏதேனும் கவலைகள் இருப்பினும் படிக்கும் போது மனம் லேசாகி விடுகிறது.

யதார்த்த வாழ்க்கை வேறு, கற்பனை உலகம் வேறு என்று தெரியாத அளவு யாரும் இருப்பதில்லை.
ஆனால் கற்பனைகள் நிஜமானால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு வேண்டுமானால்சிலரிடம் இருக்கலாம்.

நல்ல தரமான புத்தகங்களைப்படிப்பதில் தவறில்லை என்பது என் கருத்து.
 
சூப்பர் செல்வாக்கா..
 
Gomathianand

அமைச்சர்
Joined
Nov 5, 2018
Messages
1,889
Reaction score
4,678
Location
Dindigul,Tamilnadu
நான் நான்காம் வகுப்பில் இருந்து சிறுவர் மலர்,தமிழ் பாடப்புத்தகத்தில் வரும் கதைகள் என எதுவாயிருந்தாலும் படிப்பேன் பின் நூலகத்தில் உறுப்பினர் ஆகி அனைத்து விதமான கதைகளும் படித்தேன்...
கதைகளில் வருவது போல் கற்பனையில் வாழ்வது ஒரு காலத்தில் இருந்திருக்கலாம்
இப்பொழுது படிக்கும் வாசகர்கள் தெளிவாக இருப்பதாகவே தெரிகிறது
கதைகள் படிப்பது நல்லதே....
பல கதைகள் படிப்பதால் அதில் வரும் சூழ்நிலைகள் அதை எவ்வாறு கையாள்வது ,பல மனிதர்களின் குணநலன்கள்,எதிரிகளை சாமர்த்தியமாக கையாள்வது,திருமண வாழ்க்கையில் துணைக்கு ஏற்படும் எதிர்பார்ப்புகள்,
புகுந்த வீட்டில் உண்டாகும் சிக்கல்கள்,
அதை கையாளும் முறைகள்,அதற்குரிய தீர்வுகள் இவைகளை தெரிந்து கொள்ளலாம்...
கதைகள் படிப்பதால் மன அமைதி கிடைக்கிறது.....
இந்த காலத்தில் வாசகர்கள் குறைவாக இருப்பது வருத்தமே....
இக்கால பெண்கள் சிலர் வாட்சப்,முகநூல்,டிவிட்டர்,டப்ஸ்மேஷ்,
டிக் டாக் பயன்படுத்துவதில் ஈடுபடுகின்றனர் அதை தவறேன சொல்லவில்லை அதே அளவு வாசிப்பதில் ஆர்வமில்லாமல் இருக்கின்றனரே .......
 
அழகா. சொன்னீங்க கோமதி.. ஆமா புத்தகம் வாசிப்பவர்கள் குறைவே
 
karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
எனக்கு வெளியுலக அனுபவம் ரொம்பவே கம்மி... பள்ளிகூடம் அதவிட்டா வீடு இவ்வளவுதான் என்னோட உலகம்...

ஆனா இந்த நாவல்கள் படிக்க ஆரம்பிச்ச பிறகு நிறையவே தெரிஞ்சுகிட்டேன்....படிப்பு, வேலை, பழக்கவழக்கம், இன்னும் நிறைய ..சூழ்நிலையை கையாள கத்துக்கிட்டேன் அது ரொம்ப முக்கியம்.

ஒவ்வொரு கதைலயும் ஒண்ணு புதுசா தெரிஞ்சுக்கறேன்.... ofcourse நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும், நாம நல்லத மட்டும் பாக்கலாமே....
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top