• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience கதை படிப்பது நல்லதா? கெட்டதா?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அக்கா... இந்த ஐயம் எனக்குப் பல முறை எழுந்துள்ளது...ஆனால் அப்படி யோசித்தால் டிக்டாக்கிலும் வாட்சப்பிலும் ட்விட்டரிலும் அறிவையா வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்???
பெரும்பான்மையைப் பற்றி மட்டும் சொல்கிறேன்...பிறரை விட்டு விடலாம்...நம்மைப் பற்றி பார்ப்போம்....கதை படிப்பதால் கற்பனை உலகத்தில் வாழ்கிறோமென்ற கருத்தில் எனக்கு ஒரு ஐயம்..இவர்கள் creativityஐ வளர்த்து கொள்ளுங்கள் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்களே..அதில் கற்பனை இல்லையா.....கற்பனை செய்ய செய்யத் தானே புதிய எண்ணங்கள் வளரும்...நம் எழுத்தாளர்கள் எத்தனை பேர் கதை படிக்க ஆரம்பித்து எழுத்துலகில் அடி எடுத்து வைத்தார்கள்? அது எழுத்துத் திறனை வளர்த்தெடுக்கிறது என்பதற்கு இதனை விட வேறென்ன கண் கூடான சான்று தேவை...

ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்க கதைகள் கற்றுக் கொடுக்கின்றனவே.... எடுத்துக்காட்டாக நம் வீட்டில் நாம் யாரையாவது எதிர்த்துப் பேசுகிறோம் என்றாலோ சண்டை போடுகிறோம் என்றாலோ அதன் தாக்கத்தை உணராமல் இருந்து விடுவோம்..இங்கே கதையில் அதுபோல் வருகையில் பிறரைப் பற்றி படிக்கையில் வீட்டினரின் கோணத்தையும் மதித்திருக்க வேண்டுமோ அவசரப்பட்டிருக்க கூடாதோ என எண்ணத் தோன்றுகிறது தானே....சுய மதிப்பீடு செய்ய உதவுகிறதே...

குடும்பக் கதைகள் மட்டும் தான் தமிழில் வருகிறது என்ற எண்ணம் கொண்ட பலரைப் பார்த்திருக்கிறேன்‌....அந்த குடும்பக் கதைகளிலும் romance மட்டுமே வருகிறது என்பது அவர்களின் ஆழமான கருத்து....எழுத்தாளர்களையும் வாசகர்களையும் இவர்கள் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்..romance படிக்க மட்டும் கதை வாசிக்க நேரம் ஒதுக்க நாம் என்ன முட்டாள்களா...அதுதான் நோக்கமென்றால் தொலைக்காட்சி பெட்டியை முடுக்கினால் போதாதா... குடும்பக் கதையில் என்ன இல்லை..மோனிஷா அக்கா எழுதும் கதைகளில் த்ரில்லர் இல்லையா...ஸீனாக்கா கதையில் வரும் வசனங்கள் நம்மைக் கவர்கிறதா இல்லை romance கவருகிறதா எனக் கேட்டால் நம் பதில் என்னவாக இருக்கும்...சக்கரவ்யூகத்தில் கேரள பாரம்பத்தியத்தை அறிய இயலவில்லையா.. அதையும் தாண்டி எத்தனை நோய்கள் மருத்துவம் சார்ந்த கதைகள் நம் தளத்திலேயே உள்ளன... இவையெல்லாம் அறிவு இல்லையென்றால் Newton's second law trigonometry share market மட்டும் தான் அறிவா என்ன..அப்படியிருந்தால் அதையும் கூட நம்மாலும் எழுத்தாளர்களாலும் திறம்பட செய்ய இயலும்..

குடும்பத்தை மட்டுமே உலகமாகக் கொண்டு பெண்கள் இருக்க முடியுமா.. அவர்களுக்கும் ஏதோ ஒரு பொதுவெளி தேவைப்படுகிறதே..அது குடும்பக் கதையாய் இருப்பதில் என்ன நேர்ந்தது விடப் போகிறது...

அக்கா அதே மாதிரி நீங்கள் கூறிய ஆங்கில நாவல்கள் பற்றிய கருத்தும் கூட உண்மை தான்...பள்ளியில் கூட என்ன பொழுதுபோக்கு உனக்கு என்ற கேள்விக்கு கதைகள் படிப்பது என்றால் ஆங்கிலம் தானே என்று கேட்ட தமிழாசிரியை எல்லாம் உண்டு....கனிந்த மன தீபங்களாய் ஜெயசக்தி நாவலில் வரும் வரிகள் தான் ஞாபகம் வருகின்றன...சாண்டில்யன் படித்தால் வேறு என்னவெல்லாமோ தெரிந்து கொள்ளலாம் என்கிறார்களே என்ற கேள்விக்கு நாயகி குந்தவி அது நீங்கள் தேடிப் பிடித்துப் படிக்கும் பக்கத்தைப் பொருத்தது என்று பதிலடி கொடுப்பார்...அதேதான் என் கருத்தும் ...
பலர் relaxationக்கு என்று படிக்க தானே செய்கிறார்கள்..அதிலென்ன தவறு...பிறரைப் பாதிக்காமல் தன் பொழுதுபோக்கை ஏற்படுத்திக் கொள்வதில் என்ன பிழை....படிச்சுட்டே சந்தோஷமா இருங்க அக்கா

ஆஹா ரொம்ப பொங்கிட்டோம் போதும்....??☺☺
@Kavyajaya அக்கா என்ன படிக்காம இங்க வந்து என்ன பண்ணுறன்னு கேட்க கூடாது...நான் இந்த டாபிக்க பார்த்ததும் கட்டுப்படுத்த முடியாம கொட்ட ஆரம்பிச்சுட்டேன்‌..அது தமிழ் கட்டுரை அளவு வந்துடுச்சு
Just awesome explanation ennodathum ithu thaan.. sooper kavi..

Haha last naan keka varathukulla.. ??? sari polachi poo
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
கவி சொன்னதை சேர்த்துக்கோங்க கூடவே.. எதுனாலும் அளவாக இருந்தால் நல்லது தான்.. (நான் எனக்கு சொல்றேன். )

இரவெல்லாம் தூங்காம படிச்சி உடம்பை கெடுத்துன்னு ஓவரா போகாம அதாவது கதை படிக்குறதே வாழ்க்கையா வைக்காம நம்ம வேலையும் செஞ்சிட்டே நேரம் கிடைக்கும் போது படிப்பது நலம்.

ஒரு கட்டத்துல நம்மலையும் மீறி உள்ள இழுத்துருது பா.. ??
 
Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
கவி சொன்னதை சேர்த்துக்கோங்க கூடவே.. எதுனாலும் அளவாக இருந்தால் நல்லது தான்.. (நான் எனக்கு சொல்றேன். )

இரவெல்லாம் தூங்காம படிச்சி உடம்பை கெடுத்துன்னு ஓவரா போகாம அதாவது கதை படிக்குறதே வாழ்க்கையா வைக்காம நம்ம வேலையும் செஞ்சிட்டே நேரம் கிடைக்கும் போது படிப்பது நலம்.

ஒரு கட்டத்துல நம்மலையும் மீறி உள்ள இழுத்துருது பா.. ??
Exactly Akka... If it is in limit no worries
 
Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440

Kavi unnai site la paaka koodathunu sonnene
unakku time kidaikum Kannammaippo studies mattum paaruda ini inga one year ku Vara koodathu ok
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
முதலில் உங்களுக்கு வாழ்த்துக்க்கள் ஜெயா @jeyalakshmigomathi .... இரண்டாம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வச்சுருக்கீங்க...வாசகியா வந்தவங்க இப்போ ஒரு எழுத்தாளரா மாறியிருக்கீங்க... இதுலேயே தெரியலையா கதை படிப்பது நல்லது தான்னு... உங்க திறமை இங்கே வெளிப்பட்டிருக்கு....

கவிதை கட்டுரைகள்ல சொல்லி மனசுல பதிய வைக்க முடியாத விஷயத்தை கதைகள் பதிய வைக்கும்... அதுக்கு நம்ம இப்போவும் படிச்சுட்டு இருக்குற பொன்னியின் செல்வன் , கடல் புறா, சிவகாமியின் சபதம், இப்பிடி சொல்லிகிட்டே போகலாம்... கல்வெட்டுல இருக்குற செய்திய படிக்க சொன்னா யாரும் படிக்க மாட்டோம்... அதுவே ஒரு கதையோட சொன்ன எல்லோரும் படிப்பாங்க....

இந்த காலத்திலேயும் ஒரு செய்திய வெறுமனே வாசிச்சா யாரும் கேக்க மாட்டங்க.. அதையே ஒரு சின்ன கதையா எழுதி சொன்ன எல்லோருமே பாக்குறாங்க ... கேக்குறாங்க.. படிக்கிறாங்க.... இப்போ வர்ற குறும்படங்கள் தான் இதுக்கு சாட்சி... கதைகள் தான் இப்படி உருமாருது... சோ கதைகளுக்கு நம்ம lifela ஒரு முக்கிய இடம் இருக்கு...

இப்போவும் படிக்குற ஆர்வம் எல்லோருக்கும் இருக்கு.. ஒரு சின்ன மாற்றம் ... கைல புக் எடுக்க சோம்பேறிப்பட்டு சிஸ்டம்ல ஏத்தி வச்சு படிக்குறோம்... இதுவும் பெரிய நன்மை தான்.. புத்தகமா படிக்கிறப்போ நாம சொல்ல முடியாத கருத்து இங்கே ஆன்லைன்ல படிக்கிறப்போ சொல்ல முடியுது... அதனாலே ஒரு நட்பு வட்டம் உருவாகுது... எல்லாத்துக்கும் மேல கதையாசிரியர்கள் நம்ம கூட வந்து பேசும் போது வர்ற சந்தோசமே தனி....

அதனாலே கதை படிக்கிறது எந்த காலத்திலையும் தப்பில்ல... நல்லது தான்... எனக்கு கதை படிக்கிறத தவிர வேற பொழுதுபோக்கு இல்ல... ஒரு நாலு வருசமா இணையத்துல வந்து கதைகள் படிக்க ஆரம்பிச்சுருக்கேன்... அதுக்கு முன்னாடி லைப்ரரி தான்... அதுவும் ரொம்ப டைம் கிடைக்காது.. சோ நிறைய படிக்க ஆரம்பிச்சது நெட்ல தான்.... silent readera படிச்ச நான் இப்போ தான் கமெண்ட்ஸ் போட ஸ்டார்ட் பண்ணிருக்கேன்... என்னோட relaxion ஸ்டோரி ரீடிங் மட்டும்தான்....
 
jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
நான் எனது 8 வயதில் சிறுவர்மலர், வாரமலர், கதைமலர் என படிக்க ஆரம்பித்தேன்.

அதுவே, மாலைமதி, குங்குமம், ஆனந்தவிகடன், பாக்யா, ராணி, ராணிமுத்து,

சாண்டில்யன், லக்ஷ்மி, சுபா, ராஜேந்திரகுமார், ராஜேஷ்குமார், சிவசங்கரி, பட்டுக்கோட்டை பிரபாகர், அனுராதா ரமணன், ஸ்டெல்லா புரூஸ், ஆர்னிகா நாசர், வித்யா சுப்ரமணியன், பாலகுமாரன், காஞ்சனா ஜெயதிலகர், ரமணிசந்திரன், கல்கி, விக்ரமன், ராஜம் கிருஷ்ணன்,

ஜெயகாந்தன், சுஜாதா, வைரமுத்து, கோபிநாத், *******, ஹன்சிகா சுகா, தமிழ் மதுரா, சஷிமுரளி என இந்த தளத்திற்கு வரும் முன்பு படித்திருந்தேன். இடையில், அதாவது இவர்களின் புத்தகங்களுக்கு இடையில்,

பொருளாதாரம், மண்ணியல், ஆன்மீகம், உளவியல், சித்தர்கள் பற்றியவை, வானியல்,யோகா சார்ந்தவை, ஜோதிடம், ஊட்டம் சார்ந்த புத்தகங்கள், உணவு முறைகள் சார்ந்தவை, பாலுணர்வு சார்ந்த புத்தகங்கள்(மாத்ருபூதம், ஷாலினி, வாத்யாயசனார் ), மொழியாக்கம் செய்யப்பட்ட பல புத்தகங்கள் என எனக்கு கிடைத்த எதையும் வேண்டாமென ஒதுக்காமல், புத்தகம் கிடைத்தால் சற்று ஒதுங்கி இருந்து படித்த , நான் சேமித்த புத்தகங்கள் இன்று வரை எனக்கு எல்லா நிலைகளிலும் உதவியாக இருந்து வந்துள்ளது.

மன அழுத்தம் எனும் நம்மை அறியா நோயிலிருந்து வெளி வர புத்தகங்கள் போல சிறந்த மருந்து வேறில்லை.

சமயோசித புத்தி என்பது புத்தகங்களின் மூலம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

உலக ஞானம் கிட்டும்.

நான் கூற மறந்த துறைகளில் ஒன்றிரெண்டு புத்தகங்களை மட்டும் படித்திருந்தால் கூறாமல் விட்டுப் போயிருக்கும். ......

இதனால் நன்மையே தவிர வேறில்லை. ஆனால் கருத்துக்களை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்து....நமது விழிப்புநிலை இருக்கும்.
akka.. Neenga sona listah lam extraordinary ka.. விழிப்புநிலை போதுமே.. நாம எதுனாலும் படிக்கலாம்
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Hi !!! பொழுது போறதுக்கு மொக்க சீரியல் பார்க்கறத விட இது (கதைகள்
படிக்கறது )ரொம்ப நல்லது....
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: nachu comment.. ???
 
jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
கவி சொன்னதை சேர்த்துக்கோங்க கூடவே.. எதுனாலும் அளவாக இருந்தால் நல்லது தான்.. (நான் எனக்கு சொல்றேன். )

இரவெல்லாம் தூங்காம படிச்சி உடம்பை கெடுத்துன்னு ஓவரா போகாம அதாவது கதை படிக்குறதே வாழ்க்கையா வைக்காம நம்ம வேலையும் செஞ்சிட்டே நேரம் கிடைக்கும் போது படிப்பது நலம்.

ஒரு கட்டத்துல நம்மலையும் மீறி உள்ள இழுத்துருது பா.. ??
பொழுது போக்கு காக படிக்கலாம்.. பொழுதுக்கும் அத மட்டுமே படிக்க கூடாது crctah authour ji
 
jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
முதலில் உங்களுக்கு வாழ்த்துக்க்கள் ஜெயா @jeyalakshmigomathi .... இரண்டாம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வச்சுருக்கீங்க...வாசகியா வந்தவங்க இப்போ ஒரு எழுத்தாளரா மாறியிருக்கீங்க... இதுலேயே தெரியலையா கதை படிப்பது நல்லது தான்னு... உங்க திறமை இங்கே வெளிப்பட்டிருக்கு....

கவிதை கட்டுரைகள்ல சொல்லி மனசுல பதிய வைக்க முடியாத விஷயத்தை கதைகள் பதிய வைக்கும்... அதுக்கு நம்ம இப்போவும் படிச்சுட்டு இருக்குற பொன்னியின் செல்வன் , கடல் புறா, சிவகாமியின் சபதம், இப்பிடி சொல்லிகிட்டே போகலாம்... கல்வெட்டுல இருக்குற செய்திய படிக்க சொன்னா யாரும் படிக்க மாட்டோம்... அதுவே ஒரு கதையோட சொன்ன எல்லோரும் படிப்பாங்க....

இந்த காலத்திலேயும் ஒரு செய்திய வெறுமனே வாசிச்சா யாரும் கேக்க மாட்டங்க.. அதையே ஒரு சின்ன கதையா எழுதி சொன்ன எல்லோருமே பாக்குறாங்க ... கேக்குறாங்க.. படிக்கிறாங்க.... இப்போ வர்ற குறும்படங்கள் தான் இதுக்கு சாட்சி... கதைகள் தான் இப்படி உருமாருது... சோ கதைகளுக்கு நம்ம lifela ஒரு முக்கிய இடம் இருக்கு...

இப்போவும் படிக்குற ஆர்வம் எல்லோருக்கும் இருக்கு.. ஒரு சின்ன மாற்றம் ... கைல புக் எடுக்க சோம்பேறிப்பட்டு சிஸ்டம்ல ஏத்தி வச்சு படிக்குறோம்... இதுவும் பெரிய நன்மை தான்.. புத்தகமா படிக்கிறப்போ நாம சொல்ல முடியாத கருத்து இங்கே ஆன்லைன்ல படிக்கிறப்போ சொல்ல முடியுது... அதனாலே ஒரு நட்பு வட்டம் உருவாகுது... எல்லாத்துக்கும் மேல கதையாசிரியர்கள் நம்ம கூட வந்து பேசும் போது வர்ற சந்தோசமே தனி....

அதனாலே கதை படிக்கிறது எந்த காலத்திலையும் தப்பில்ல... நல்லது தான்... எனக்கு கதை படிக்கிறத தவிர வேற பொழுதுபோக்கு இல்ல... ஒரு நாலு வருசமா இணையத்துல வந்து கதைகள் படிக்க ஆரம்பிச்சுருக்கேன்... அதுக்கு முன்னாடி லைப்ரரி தான்... அதுவும் ரொம்ப டைம் கிடைக்காது.. சோ நிறைய படிக்க ஆரம்பிச்சது நெட்ல தான்.... silent readera படிச்ச நான் இப்போ தான் கமெண்ட்ஸ் போட ஸ்டார்ட் பண்ணிருக்கேன்... என்னோட relaxion ஸ்டோரி ரீடிங் மட்டும்தான்....
Thanks sri.. Ha ha.. எழுத்தாளரா.. அது உண்ம தான் நிறைய கதை படித்ததால் வந்த எழுத்து திறமை தான்.. சொந்தமா . ரத்ததில். ஊறினது இல்ல.. ஹீ.. ஹீ..

உங்கள் கருத்து அருமை.. ஆமா நூலகத்தில படிச்ச டைம்லாம் நேரம் ஒதுக்கி போகனும் டைம் குள்ள புக் return பண்ணும் இப்ப அந்த பிரச்சனை இல்ல..
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top