• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode கனலிடம் காற்றுக்கென்ன நேசம் 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Arumbu

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Sep 10, 2020
Messages
152
Reaction score
233
Location
Cbe
View attachment 29823

KKN 1​

தமிழகத்தின் இரண்டாம் முக்கிய நகரமும், உலகின் மூன்றாம் சுவைமிகு நீரான சிறுவாணியையும், அழகான மனிதர்களையும், எம்மொழித்தவரையும் ஆதரித்து அரவணைக்கும் இயல்பையும் , சிறுவர் முதல் பெரியவர் வரை கொஞ்சும் பேச்சு மற்றும் கொங்கு தமிழுடன் மரியாதையும் கலந்து பேசும் மக்களையும், பருத்தி மற்றும் காட்டன் மில்களுக்கும் பெயர் போன தென் இந்தியாவின் ‘மான்செஸ்டர்’ என அழைக்கப்படும் கொங்கு வள நாடான கோயம்முத்தூரே நம் கதையின் கதைக்களம்.

கோவையின் செல்வ வளமிக்கோர் வாழும் பகுதியான ஆர்.எஸ். புரத்தில் உள்ள ஓர் இல்லத்தில் வளமை போல் சத்தமிட்டுக்கொண்டிருந்தார் அவ்வீட்டின் அரசியான செந்தமிழ் அரசி.

‘மணி என்னாச்சு இன்னும் எந்திரிக்கல, கடைசியில நம்மள சொல்லுவா இவ’ என்று அவ்வீட்டின் இளவரசியான தன் செல்ல மகளை எழுப்ப சென்றார் அவர். அங்கே தன் படுக்கையறையில் தன் மெத்தையில் பொம்மைகளுக்கு நடுவே பொம்மையாக துயில் கொண்டிருந்தாள் ஆத்விகா. நம் கதையின் நாயகி. ஒரு நொடி நின்று தன் மகள் துயில் கொள்ளும் அழகை ரசித்து பார்த்து பின் அவளை எழுப்ப தொடங்கினார்.

எழுந்ததும் தன் அன்னையை ஒருமுறை அணைத்துவிடுவித்து தன் காலை வேலைகளை செய்ய குளியலறை சென்றாள். பின் குளித்து கிளம்பி ஒருமுறை தன்னை கண்ணாடியில் பார்த்துவிட்டு கீழே இறங்குகையில் தன் தந்தை மணிமாறான் ஹால் சோபாவில் அமர்ந்திருப்பதை பார்த்து அவரிடம் சென்று காலை வணக்கத்தை தெரிவித்து, அவரின் அருகில் அமர்ந்து அந்நாளின் தினசரியை பார்வையிட ஆரம்பித்தாள் ஆத்விகா.

அவள் தந்தை அவளிடம் தன் மனதிலிருப்பதை எவ்வாறு கூறுவது? எனத் தெரியாமல் அவளையும் தினசரியையும் மாறி மாறி பார்வையிட ஆதுவும் அவரை தன் ஓர விழியால் பார்த்து மனதுக்குள் சிரித்துக்கொண்டே “என்னப்பா இப்படி மாறி மாறி பார்கரீங்க?, என்ன சொல்லனுமோ தயங்காம சொல்லுங்க என ஊக்க, மாறனும் தன் மனதில் இருப்பதை கூறத்தொடங்கினார்.

“ஆது குட்டி நான் சொன்னா நீ கண்டிப்பா திட்டுவ, இருந்தாலும் சொல்றேன் “நீ போகப்போறது மெடிக்கல் கேம்ப். நீ போகப்போற அந்த ஊர் எப்படி இருக்கும்? என்ன மாதிரி மனுசங்க இருப்பாங்க? உனக்கு அங்க எல்லாம் வசதிப்படுமா? சாப்பிடற உணவு உனக்கு ஒத்துகுமா? தங்கப் போற இடம் எப்படி? அப்படினுலாம் நான் கேக்கமாட்டேன்... அதுலாம் நீ எப்படி இருந்தாலும் சமாளுச்சுக்குவேனு எனக்கு தெரியும்”.

“ஆனா, நான் உன்கிட்ட கேக்கப்போறது எல்லாம் ஒன்னே ஒன்னுதான். அங்க போய் அவன் தப்பு பண்ணினான், இவன் அந்த பொண்ணை அடிச்சான், இவன் ராங் ஆ போனான்? அப்படி இப்படி னு யாரையும் கை மட்டும் நீட்டீராதடா” என கூறி

“இங்க இருக்கும் போதாவது நீ கொண்டுவர பிரச்சனையை நான் தீர்த்து வச்சேன். அங்க போய் நீ எதாவது பண்ணினா யாருடா வந்து 2 பக்கமும் சமாதனப்படுத்துவா?” எனக் கேட்க

ஆது, அவரை முறைக்கத் தொடங்கினாள். பின் அவரிடம் “என்னமோ எல்லா தப்பையும் நான் பண்றமாதிரி சொல்லாதிங்கப்பா, என் கண்ணு முன்னாடி நடக்கற தப்பை நான் கேக்கறேன்... எல்லாரும் எனக்கு என்னனு போறதுனாலதான் எல்லா தப்பும் நடக்குது. அதான் நான் தட்டி கேக்கறேன்” என சொல்லவும் அவளின் தாயான அரசி அவளின் தலையில் கொட்டி

“ நீ அங்க போய் உன் வேலையை மட்டும் தான் பாக்கனும். வேற எந்த பிரச்சனையும் இழுத்துட்டு வரக்கூடாது” என கண்டிப்பாக கூறி இருவரையும் காலை உணவு சாப்பிட அழைத்து சென்றார்.

ஆது தன் முன்னால் ஒருவன் தவறு செய்கிறான் எனத் தெரிந்தால் பின் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் கை நீட்டும் பழக்கமுடையவள். பள்ளி காலம் தொட்டே தொடர்ந்து வரும் இப்பிரச்சனையால் ஆதுவின் பெற்றோர் எப்பொழுதும் சஞ்சலத்துடனே இருப்பர் இவள் வெளியே செல்லும் காலங்களில். அதன் பொருட்டே மாறன் இவ்வாறு கூறியது ஆதுவிடம்.

பின் மூவரும் உணவு உண்டபின் ஆதுவின் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆதுவின் துணி அடங்கிய பைகளையும் அவளிற்கான எளிய உணவு அடங்கிய பைகளையும் எடுத்து கீழே வரவும் ஆதுவின் தோழி திவ்யா அவளின் உடமைகளுடன் அவ்வீடு வரவும் சரியாக இருந்தது.

பின் திவ்யாவிடமும் ஆதுவின் பெற்றோர் “ஆதுவை பார்த்துகோடா திவி மா. அவ யாரையும் அடிக்காமையும் யார்கிட்டயும் வம்பிழுக்காமையும் பார்த்துக்கோடா கொஞ்சம்” எனக் கூற

ஆது “எது திவி என்னைப் பார்த்துக்கனுமா? அவளையே நான் தான் பார்த்துக்கனும்.. யாராவது சின்னதா சத்தம் போட்டு பேசினாலே மிரளற குழந்தை மா அவ!!” என சிரிக்கவும் திவி அவளை முறைத்தாள்.

பின், திவி மற்றும் ஆது செல்ல வேண்டிய வண்டி வந்து விடவும் இருவரும் இவ்வளவு நேரம் இருந்த விளையாட்டுத்தனம் விட்டு தன் பெற்றோரிடம் விடை பெற்று அவ்வண்டியில் ஏறி கேம்ப் போடும் இடமான பொள்ளாச்சியை நோக்கி சென்றனர் தங்கள் குழுவுடன்.

ஆத்விகா மற்றும் திவ்யா இருவரும் கிண்டர் கார்டன் முதல் தற்பொழுது பார்க்கும் வேலை முதல் ஒன்றாக இருக்கின்றனர். இருவருமே மருத்துவர்கள்.

ஆது இருதய அறுவைசிகிச்சை நிபுணர் ஆகவும் திவி நரம்பியல் சிகிச்சை நிபுணர் ஆகவும் பணியாற்றுகின்றனர். தற்பொழுது அவர்கள் தொழில்முறை கேம்ப் ஆக பொள்ளாச்சியில் இருக்கும் வேப்பனூர் எனும் கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் மருத்துவராகிய பின் இது அவர்களின் ஐந்தாவது பயணமாகும்.

இப்பயணம் அவர்களின் வாழ்க்கையை மாற்றும் பயணம் எனத் தெரியாது இருவரும் சந்தோசமாக பயணமாகினர் வேப்பனூரை நோக்கி.

வேப்பனூர் அழகிய கிராமம். பொள்ளாச்சியின் கடைகோடியிலும் வால்பாறையின் துவக்க இடத்திலும் அமைந்துள்ளது. அதனால் எப்பொழுதும் சிலு சிலுவென்ற காற்றும் தொடர் மலைச் சாரலும் இருந்து கொண்டே இருக்கும். தென்னந்தோப்புகள் மற்றும் பாக்கு மரங்கள் ஒரு பக்கமும் மறுபக்கம் வயல்வெளிகளாகவும் இன்றளவும் பசுமை மாறாத அழகிய கிராமம்.

அவ்வூரில் அனைவராலும் மதிக்கத்தக்க குடும்பம் அருந்தமிழன் குடும்பம். பாதி வேப்பனூரை தன்னகத்தே கொண்டுள்ள குடும்பம். அனைவருக்கும் அள்ளி அள்ளி கொடுக்கும் குடும்பம். இல்லாதவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து வாழ்வளிக்கும் குடும்பம்.

அருந்தமிழன், அக்குடும்பத்தின் ஒற்றை வாரிசு. தயாளனிற்கும் மகேஸ்வரிக்கும் காதல் வாழ்க்கையின் பரிசாக பிறந்தவன். தாய் தந்தையருக்கு சொல் பேச்சு தட்டாத மகனாகவும் தங்கை மித்ராவிற்கு பாசமுள்ள தமையணாகவும் சில நேரத்தில் தந்தையாகவும் இருப்பவன். பொறுமை என்பதன் பொருள் அறியாதவன். வாய் பேசும் முன்னே கை பேசும் குணமுடையவன். அழுத்தமானவன். ஆறடி உயரமும் அவ்வுயரத்திற்கேற்ப உடல் கட்டுடன் இருப்பவன்.

தமிழ் தற்பொழுது கோவையின் பேர் சொல்லக்கூடிய தொழில் அதிபர்களில் ஒருவன். அவனின் செந்தூர் குரூப்பை திறம்பட நடத்திக்கொண்டிருப்பவன். தந்தை எவ்வளவு செல்வந்தராக இருப்பினும் தன் சுய முயற்சி மற்றும் அயராத உழைப்பினால் தனக்கான தொழிலை உருவாக்கி கொண்டவன்.

செந்தூர் குரூப் என்பது ஒரு கட்டுமான நிறுவனம். அனைத்து விதமான தனி வீடுகள் முதல் ஸ்கைக்ரேப்பர் (அனைத்து விதமான வசதிகளையும் கொண்டுள்ள பல அடுக்கு அப்பார்ட்மெண்ட்) வரை அனைத்தும் கட்டித்தரக்கூடிய நிறுவனம்.

கோவை அவிநாசி சாலையின் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது செந்தூர் குரூப் ஆஃப் கன்ஸ்ட்ரக்ஸன்ஸ். தன் கம்பீரமான தோற்றத்தினால் செல்வோரை ஒருமுறை திரும்பி பார்க்க வைக்கும் கட்டிடம். ஐந்து தளங்களை தன்னுள் கொண்டுள்ள செந்தூர் குரூப் முதல் தளத்தில் வரவேற்பறை மற்றும் கலந்தாய்வு அறை கொண்டும் இரண்டாம் தளத்தில் அலுவலர்களுக்காக கேண்டீன் மற்றும் உணவு அறையும் மூன்றாம் தளம் கட்டிட மாதிரிளை கணினிகளில் வரையவும் நான்காம் தளம் அம்மாதிரிகளுக்கு உயிரூட்டி அவைகளை சிறு சிறு மினியேட்சர்களாகவும் அவற்றைப்பற்றி வாடிக்கையார்களுக்கு புரிய வைக்கவென தனி அறைகளாகவும் ஐந்தாம் தளம் முழுமையும் தமிழ் மற்றும் தேவாவிற்காகவும் வடிவமைக்கப்பட்டது.

அக்கட்டிடத்தின் ஐந்தாம் தளத்தில் இருவர் தமிழின் முன்னே உயிர் பயத்தை கண்களில் தேக்கி அவனின் முன் தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சி கொண்டிருந்தனர். அவர்களை துச்சமாக பார்த்த் தமிழ் தன் பக்கவாட்டில் திரும்பி தன் உயிர் தோழன் மற்றும் செந்தூரின் மேலாளரான தேவாவை பார்த்தான். அவன் பார்வையின் பொருள் உணர்ந்து அவ்விருவரையும் தேவா தமிழின் பண்னை வீட்டிற்கு அழைத்து சென்றான்.

சிறிது நேரம் கழித்து தமிழ் இன் ஆடி கார் அதே பண்ணை வீட்டை அடைந்தது. தனக்கே உரிய வேக நடையுடனும் கூர்மையான விழியால் எதிராளியை நடு நடுங்கவைக்கும் பார்வையுடனும் புயல் போல அவ்விருவரையும் வைத்திருந்த அறைக்கு சென்றான். தங்களின் முன்னால் தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்து நின்ற தமிழை பார்த்தவர்கள் பயத்தில் உமிழ்நீரை முழுங்கிக்கொண்டனர்.

அவர்களைப் பார்த்தவன் “சிறு கடுகளவு கரிசனத்தயும் என்னிடம் எதிர்பக்காதிங்க...உண்மையை சொன்னால் உங்களை உயிரோடு விடுவேன். இல்லனா என் கையில் எதும் இல்லை. நீங்க இருவரும் மரணத்தை அடைவது உறுதி எனக் கூறி தேவாவை பார்த்தவன் பார்வையில் உள்ள தீவ்விரத்தை உணர்ந்தவன் அவ்விழி கூறிய செய்தியை படித்தவன் போல் செயல்பட ஆரம்பித்தான் தேவா.

அவ்விருவருக்கும் மரணத்தை அருகில் காட்டுவதை போல் தமிழின் பாதுகாவலர்கள் அடிக்க ஆரம்பித்தனர் அவ்விருவர்களை. பட்ட அடியினால் உண்டான வலியினால் உண்மையை கூறனலானார்கள்.

ஹரிஷ் மற்றும் சுரேஷ் இவ்விருவரும் தமிழின் கம்பெனியில் ஒருவருடமாக வேலை பார்த்துவருகிறார்கள். இருவருக்கும் விரைவில் தனமிக்கவர்களாக ஆக வெகுஆசை. அதன் பலனாக தமிழின் கம்பெனியின் தனித்துவமிக்க கட்டிட மாதிரியின் ரகசியத்தை திருடி எதிராளி கம்பெனிக்கு விற்றதன் தண்டணையை பெற்று கொண்டிருக்கிறார்கள் இப்போது.

தமிழை பொருத்தவரை நல்லவனுக்கு நல்லவனாகவும் எதிரிக்கு எமனாகவும் திகழ்பவன். எதிரிக்கே எமன் என்றால் நம்பிக்கை துரோகிகளுக்கு?... செய்த வினையின் பலனை அனுபவிக்கிறார்கள் சுரேஷ் மற்றும் ஹரிஷ். அவர்கள் இறந்த பின் உடல்களை பாதுகாவலர்களின் பொறுப்பில் விட்டவர்கள் ஆபிஸை நோக்கி சென்றனர்.

அனைவரும் ஆபிஸை விட்டு சென்றிருந்தனர். பின் இருவரும் தங்கள் தளத்திற்கு வந்த பின் அவர்களின் அறையில் புதுவிதமான கட்டிடங்களுக்கு உபயோகிக்கும் மாற்று பொருட்களை எவ்வாறு தாயாரிப்பது? மற்றும் அதன் சாதக பாதகங்களை விவாதித்து கொண்டிருந்தனர். பின் சிறிது நேரத்தில் தமிழின் கைப்பேசி “மகி மா” அழைக்கிறார் என சத்தமிட்டது. அவன் கைபேசியை எடுத்து காதில் வைக்கவும் அப்பக்கத்தில் இருந்து அவனின் தாயார் சத்தமிட தொடங்கினார்.

“எப்போ கிளம்பரிங்க இரண்டு பேரும்?. நாளானைக்கி மித்து கல்யாணம் இருக்கிறது மறந்துபோச்சா உங்களுக்கு? அங்க போய்ட்டா போதும் அந்த கல்லையும் மண்ணையும் வச்சு அப்படி என்னதான் பண்றீங்களோ? இரண்டு பேரும் சேக்கிரமா ஊரு வந்து சேரப்பாருங்க”... என அவர் மொபைலை வைக்கவும் தமிழ் மற்றும் தேவா இருவரும் அவசர அவசரமாக தங்கள் இருப்பிடத்துக்கு வந்து வேப்பனூரை நோக்கி செல்ல தயாராகினர்.

இப்பயணம் இருவரின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை தரவல்லது என அறியாமல் தங்கள் பயணத்தை தொடங்கினர்.
 
Arumbu

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Sep 10, 2020
Messages
152
Reaction score
233
Location
Cbe
Thank u akka😍😍
 
Rubavathy

இணை அமைச்சர்
Joined
Oct 27, 2019
Messages
609
Reaction score
1,685
Location
Chennai
ஹீரோ.

வாழ்த்துகள் டா
சூப்பர் எபி. நல்லா தொடக்கம். ஹீரோ, ஹீரோயின் பெயர் ரொம்ப அழக இருக்கு. சீக்கிரம் அடுத்த எபி போடு..👍👍
 
Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top