• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கனலிடம் காற்றுக்கென்ன நேசம்-10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Arumbu

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Sep 10, 2020
Messages
152
Reaction score
233
Location
Cbe
View attachment 30101

KKN - 10inbound665948429.jpg



கீழே வந்த பெரியவர்கள் சிறியவர்களிடம் மாலை ஒரு முக்கியமான விழா ஒன்று இருப்பதால் அவர்களை விரைவாக தயாராகிவரும் படியும் அவர்களின் தோழர் தோழிகளையும் விழாவிற்கு வரும்படி அழைக்குமாறு கூறினர். சிறியவர்களும் ”என்ன விழா?” என்று கேக்க, பெரியவர்கள் அவர்களிடம் “சஸ்பென்ஸ்” என்று மட்டும் கூறி சொன்னார்கள். சிறியவர் பட்டாளமும் சரியென கூறி மனதுக்குள் ‘என்ன நடந்தா என்ன?, நம்ம எஞ்சாய் பண்ணனும், நல்லா சாப்படனும்’ என்று தோள்களை குழுக்கி விட்டு அவரவர் நண்பர்களுக்கு தங்களின் கைப்பேசி மூலம் மாலை விழாவிற்கு வரும் படி அழைத்தனர்.




பின் தயாளன் மகி தம்பதி கிளம்பவுமே, பரணி நித்யா தம்பதியும் அவர்களுடன் சென்று மாலை விழாவிற்கு வருவதாக கூறி விடை பெற்றனர். சிறியவர் பட்டாளம் ஆதுவின் இல்லத்திலையே தங்கி கொண்டனர். இல்லம் சென்ற பரணிநாதன் வெற்றிக்கு தெரியாமல் அவன் காதலியின் பயடேட்டாவை தங்கள் கம்பெனி அலுவலர் மூலம் பெற்று நந்தினியின் (வெற்றியின் காதலி) இல்ல முகவரிக்கு விரைவாக நித்யாவுடன் சென்று முறைப்படி அவர்களிடம் தங்கள் மூத்த மகன் வெற்றிக்காக பெண் கேட்டனர்.




இந்த மதிய வேளையில் தங்கள் பெண் பணிபுரியும் கம்பெனியின் முதலாளி தங்கள் வீட்டுக்கு வந்ததில் ஆச்சரியமடைந்த நித்யாவின் பெற்றோர், அவர்கள் கூறியதை கேட்டு அச்சமடைந்தனர். அதை மறைக்காமல் பரணி தம்பதியிடமும் வெளிபடுத்த, அவர்களும் நந்தினியின் பெற்றோர் மன நிலைமையை சரியாக புரிந்து கொண்டு விளக்கினர்.




பரணிநாதன் தன் சரிபாதியிடம் கண்ணை காட்ட அவரும் நந்தினியின் பெற்றோரிடம் தங்களின் மூத்த மகனான வெற்றியும் அவர்களின் குமாரத்தியும் காதலிப்பதாகவும், அவ்விடையம் தெரியாமல் தாங்கள் வேறொரு இடத்தில் வெற்றிக்கு சம்பந்தம் பேசியாதகவும் கூறினார். மற்றும் இன்று மாலை நிச்சயவிழா வைத்திருப்பதாகவும் இது அனைத்தும் தங்கள் பிள்ளைகளுக்கு தெரியாது என கூறவும் நந்தினியின் பெற்றோர் குழப்பமடைந்தனர்.



வெற்றி கூறாமல் எவ்வாறு இக்காதல் விசயம் இவர்களுக்கு தெரியும்? என்று யோசித்த நந்தினியின் பெற்றோர், அதை நித்யாவிடமும் கேக்க அவரோ “அதுவா நாங்க பார்த்து வச்சிருந்த பொண்ணோட, காதலனோட அம்மா வந்து சொன்னாங்க” என்று கூற, அவர்களின் முகத்தில் சிரிப்பு வந்தது. அனைத்தும் தெளிவாக்கிய நித்யா அவர்களிடம் “நாங்க வெற்றி விசயம் தெரியாமதான் ஏற்பாடுலாம் செஞ்சுட்டோம். ஆனால் எப்போதுமே எங்களுக்கு எங்க பசங்க சந்தோசம் தான் முக்கியம். அதனால நீங்க பயப்படாம எங்க வீட்டுக்கு எங்க மருமகள முழுமனசோடு அனுப்பிவைங்க” என்று கூறி அவர்களின் சம்மதம் பெற அவர்களை பார்த்தார்.




பரணிநாதனும் தன் பங்குக்கு அவர்களிடம் உத்திரவாதம் வழங்க நந்தினியின் பெற்றோரும் முழுமனதுடன் சம்மதித்து திருமணத்திற்கு ஒப்புக் கொண்டு அதை உறுதி படுத்தும் விதமாக பரணி தம்பதி கொண்டுவந்திருந்த தாம்பூல தட்டை சம்பதி சமேதராக மன மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.



பின் பேசிவைத்த முகூர்த்தத்திலையே தங்கள் பிள்ளைகளுக்கு நிச்சயம் செய்து விடலாம் என்று கூற, நந்தினியின் பெற்றோரும் சம்மதித்து மாலை நந்தினிக்கு தெரியாமலையே கரணின் இல்லம் அழைத்து வருமாறு சொல்லி, பரணி தம்பதியினர் அவர்கள் இல்லத்திலிருந்து கிளம்பி சக்தியின் காதலியான தாரணியின் இல்லத்திற்கு சென்றனர்.



தாரணியின் குடும்பம் ஓரளவுக்கு பரணியின் குடும்பம் போன்று செல்வாக்கானது. எனினும் அனைவரிடமும் பாசம் வைத்து உதவும் குணமுடையவர்களாக இருந்தனர் அங்கிருந்த அனைவரும். அதனால் தாரணியின் காதலை அறிந்ததும் தங்கள் பிள்ளையின் காதலை மறுக்காமல் அதனை ஏற்று அவர்களும் சம்மதித்தனர். பின் அங்கிருந்தே அவர்களையும் கரணின் இல்லத்திற்கு வந்துவிடுமாறு கூறிவிட்டு இவர்களும்(பரணி &நித்யா) கிளம்பினர் தங்கள் இல்லம் நோக்கி.




இங்கு தமிழின் வீட்டில், பெற்றோர்களின் வருகைக்காக குட்டி போட்ட பூனை போல் ஹாலிலையே தமிழும் தேவாவும் நடந்துகொண்டிருந்தனர். அப்பொழுது தேவா தன் நடையை நிறுத்தி விட்டு தமிழிடம் “ஏன் தமிழ் நம்ம காட்டின ஆது, திவி வீடியோஸ் பொய்னு தெரிஞ்சுட்டா என்ன பண்றது?” என்று கேட்டான்.



தமிழோ அவனிடம் “கண்டிப்பா தெரியாது.. ஏன்னா அதுல இருக்கிறது எல்லாமே ஒரிஜினல் ஒன் தான்” என்று கூற, தேவா அதிர்ந்தான்.



“டேய் என்னடா சொல்லற? ஒரிஜினல் ஆ!!!” என்று கேக்க தமிழும் “ஆமாம் டா நல்லா பார்க்கலையா நீ? என்று கேக்க தேவாவோ அவனிடம் “கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு தமிழ்” என்று கேட்டான்.




தமிழும் தேவாவிடம் “அது நல்லா பார்த்திருந்தா உனக்கே தெரிஞ்சிருக்கும்... அதுல இருக்கிறது நம்மதான்.. உனக்கு நியாபகம் இல்லையா? ஒரு வருசத்துக்கு முன்னாடி நம்ம முதல் முதலா ஒரு கம்பெனியில் வேலைக்கு போனோமே!! சைட் என்ஜினீயார இருந்த டைம் அப்போ கட்டிட்டிருந்த ஸ்லேப் கூட இடிஞ்சு விழுந்ததுல அடி பட்டப்போ பக்கத்திலிருந்த காலேஜிலிருந்து வந்த ஸ்டூடன்ட்ஸ்லாம் நம்மள ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போனாங்களே.... அது கே.கே ஹாஸ்பிட்டல் தான்.



அப்போதான் ஆது என்ன அணைச்சு பிடிச்ச மாதிரியும், திவி உன்னை கைத்தாங்களா கூட்டிட்டு போறதும். அது அங்கே வந்திருந்த செய்தியாளர்கள் மூலமா எடுக்கப்பட்ட வீடியோ. எப்போவோ என்கிட்ட வந்த வீடியோ, இப்போ நமக்கு உதவி பண்ணிருக்கு” என்றவன் தொடர்ந்தான்.




அந்த வீடியோ நம்மாளோட சைட் வீயுல இருக்கிறதுனால ஆத்விகா என் தோளில் சாஞ்ச மாதிரி இருக்கும். கூடவே நமக்கு அடி பட்டதும் அதிகமா கவர் ஆகல. சோ ஈஸியா அவுங்கள நம்ப வைக்கிற மாதிரி இந்த வீடியோ அமைஞ்சிருச்சு” என்று கூறினான்.



தமிழ் கூறியதை கேட்ட தேவாவோ அவனிடம் “சரி மாமா அத்தைங்கள நம்ப வச்சிட்டோம். அத்தை பெத்த ரத்தினங்களுக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில தெரிஞ்சுருமே!! நம்ம பண்ணி வச்சிருக்க பிராடு வேலை. அப்போ என்ன பண்றது?” எனக் கேக்க



தமிழோ தேவாவிடம் “உன் மனைவியை சமாளிக்கிறது உன் பொறுப்பு. கொஞ்சு, கெஞ்சு என்னமோ பண்ணு. ஆதுவ நான் சமாளுச்சுக்குவேன்” என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே தயாளனும் மகிமாவும் உள் நுழைந்தனர்.



அவர்களிடம் என்னவென்று கேக்க மகிமாவோ துள்ளிக் குதிக்காத வகையாக தன் கட்டை விரலை வான்நோக்கி காட்டி தன் இருமகன்களையும் சேர்த்து அணைத்துக் கொண்டார். பின் மித்ராவிற்கும் கால் செய்து இன்று நடைபெறவிருக்கும் நிச்சயத்தைப் பற்றி கூறி அவளை வருமாறு கூற மித்துவோச் செல்ல கோவம் கொண்டு வரமுடியாது என்று கூறினாள்.




பின் அண்ணன்கள் இருவரும் மித்துவிடம் செல்லம் கொஞ்சி தங்கள் காதலை ஒத்துக் கொண்டு மித்துவை வருமாறு சொல்லியும் மித்துவின் புகுந்த வீட்டில், முறைப்படி அவர்களுக்கும் வீடியோ காலின் வாயிலாக அழைப்பு விடுத்து சூழ்நிலையின் காரணமாக நேரில் அழைப்பு விடுக்காததற்கு மன்னிப்பு யாசித்து நிச்சயத்திற்கு அழைப்பு விடுத்தனர் தயாளன் தம்பதி.

மித்துவும் அண்ணன்களின் கெஞ்சலிலும் கொஞ்சலிலும் மகிழ்ந்தவாறே மாலை விழாவிற்கு பயணமானாள். என்னதான் திருமணாமாகிய பின் கணவன் தாங்கினாலும், பிறந்த வீட்டில் கிடைக்கும் கொஞ்சல்களும் உடன் பிறந்தவர்களை கெஞ்ச வைப்பதிலும் பெண்களுக்கு அலாதிய மகிழ்வுதான்...



மாலை ஆறு மணி...



ஆதுவின் இல்லத்தில் இன்று அரசி ஆதுவை புடவை உடுத்த சொல்ல, ஆதுவோ “கரணப்பா ஃபர்த் டே பார்ட்டிக்கு நான் ஏன் மா சேரி கட்டனும்?” என்று கூற, அவளுடன் மல்லுக்கு நின்று ஒருவழியாக அழகிய இளஞ்சிவப்பு (பேபி பிங்க்) கலரில் சேரியை உடுத்தி ஆதுவை நிச்சயத்திற்கு தயார்படுத்தினார் அரசி. அதே போல திவியும், அழகிய இளமஞ்சள் நிறத்தில் புடவை உடுத்தி தன் நிச்சய விழாவிற்கு அவளுக்கு தெரியாமலையே தயாராகினாள். மதுவும் அழகிய மயில் பச்சை நிற புடவை உடுத்தி வந்திருந்தாள். வெற்றி,சக்தி,கார்த்தியும் அழகிய சர்வாணி அணிந்து வந்திருந்தனர்.





சரியாக ஆறு முப்பது மணிக்கு கரண் தன் குடும்பத்தின் முன்னிலையில் கேக் வெட்டி, வந்திருந்த அனைவரின் வாழ்த்தை பெற்ற பின் அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கினர். விருந்தினர்கள் தங்களுக்குள் பேசி கொண்டே ஜூஸ் மற்றும் ஸ்னேக்ஸ் சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது மாறனும் கரணும் பரணிநாதனும் அங்கிருந்த சிறுமேடையில் ஏறி அனைவரின் கவனத்தை தங்களிடம் திருப்பினர்.





அம்மூவரும் இன்று அவர்களுக்கு ஒரு சந்தோச விசயம் அறிவிக்க போவதாக கூறவும் ஆத்விகா, திவ்யா,மதுவும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டு “நம்மகிட்ட கூட சொல்லலை.. ஏதாவது புதுசா பிஸினஸ் ஆரம்பிக்கப் போறாங்களோ?? மூணு பேரும் சொல்லறத பார்த்த பாட்னர்சிப்ல ஆரம்பிப்பாங்களோ?” என்று தங்களுக்குள் பேச, வெற்றியும் சக்தியும் தங்களின் காதலிகளை அவர்களின் குடும்பத்துடன் பார்ததும் அவர்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு ‘இப்போதே சொல்லிவிடுவோமா தங்களின் காதலை’ என யோசித்துக் கொண்டிருந்தனர்.

பின் தாரனியின் பெற்றோரும் நந்தினியின் பெற்றோரும் மேடைக்கருகில் செல்லவும் வெற்றியும் சக்தியும் அங்கையே சென்று தந்தைகளின் பேச்சில் கவனம் செலுத்தினர்.






அனைவரும் மேடையில் கவனம் செலுத்தவும், மூவரும் பேச தொடங்கினர். முதலில் கரண் “இன்னைக்கு இந்த சந்தோச நிமிடத்துல உங்க கிட்ட இன்னோரு முக்கியமான நல்ல விசயத்தை பகிர்ந்திருக்க வந்திருக்கோம்” என்றும் பரணிநாதன் நட்பாக இருக்கும் தங்கள் மூன்று குடும்பங்களையும் ஒரே குடும்பமாக மாற்றும் விதமாக எங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்யவிருப்பதாகவும் கூறினார்.




அதை கேட்ட வெற்றி, சக்தி, ஆத்விகா, திவ்யா, நந்தினி,தாரணி அதிர்ந்தார்கள் என்றால் கார்த்தியும் மதுவும் மகிழ்ந்தார்கள். இவர்களின் முக பாவனைகளையே பார்த்துக் கொண்டிருந்த பெரியவர்கள் தங்களுக்குள் சிரித்தவாறே அடுத்த அறிவிப்பை கூறினர்.




மாறனும் விருந்தினர்களிடம் “நம்ம வெற்றிக்கு நந்தினியையும் சக்தியிற்கு தாரணியையும் சம்பந்தம் பேசியுள்ளதாகவும் அதேப்போல் கார்த்தியுடன் மதுவிற்கும் திருமணம் என்று கூறவும் அறுவரும் இன்ப அதிர்ச்சி அடைந்து வெற்றியும் சக்தியும் கார்த்தியும் ஒருவரையொருவர் கட்டி அணைத்து தங்களின் மகிழ்ச்சியை வெளிபடுத்தி அவரவர் துணையுடன் மேடை ஏறினர்.





அதைப்போல் ஆதுவிற்கும் திவிற்கும் *செந்தூர் குரூப்* இன் உரிமையாளர்கள் ஆன தமிழ் மற்றும் தேவாவுடன் திருமணம் என்று கூறி வாயிலை பார்க்க, அங்கே தமிழும் தேவாவும் ஆது திவியின் உடை நிறத்திற்கேற்ப சர்வாணி அணிந்து ஆறடி உயரத்தில் அழகில் மற்ற ஆண்களை மிஞ்சியவாறும் மிடுக்கான தோற்றத்துடனும் கம்பீர நடையுடனும் வேக எட்டுகளை எடுத்து ஆது மற்றும் திவியின் அருகில் நெருங்கி நின்று அவர்களின் இடையில் கை கொடுத்து அணைத்தவாறு மேடை ஏறினர்.





மாறன் தங்களுக்கும் திருமணம் என்றதில் அதிர்ந்து நின்றிருந்த பெண்கள் இருவரும் தங்களின் இடையில் கையிட்டு அழைத்துச் செல்லும் வருங்கால துணையை பார்த்து மயங்கும் நிலைக்கு சென்றனர்.



திவியை சொல்லவே வேண்டாம் தேவாவை பார்த்த பார்வையை விலக்காமல் மேடை ஏற, தேவாவோ அவளின் காதுக்கருகில் “மாமாவ அப்புறமா சைட் அடி செல்லம்.. இன்னும் சில நொடில நான் உனக்கே உனக்குனு சொல்லிருவாங்க.. அப்புறமா பொறுமையா மாமன பார்ப்பியாம்.. இப்போ அழகா மாமா கையை பிடிச்சு வருவியாம்.. நம்ம போய் மோதிரம் மாத்தி நம்ம உறவ பலமாக்கிக்கலாம்” என்று கூறி திவியின் இடது முழங்கையை தன் வலது கையால் சுற்றிப் பிடித்தான்.




திவியோ எதும் புரியாமல் மலங்க மலங்க விழிக்க, தேவா இதழ்கடையில் சிரித்துகொண்டே அவளை அழைத்துக்கொண்டு மேடை ஏறினான். ஆது அவள் இடையில் தமிழின் கைப்படவுமே அவனின் சுண்டு விரலை மடித்து பிடித்து வளைத்தாள். அவன் காதுக்கருகில் “இங்கப் பாரு மேல கைவைக்கிற வேலைலாம் பார்த்தனு வை இப்போ ஒரு விரலதான் உடச்சுருக்கேன். அப்புறமா கை மொத்தமா கட்டு போட வேண்டியிருக்கும் எடு கையை..” என்று கடிய, தமிழும் அவளின் வார்த்தைகளில் இருக்கும் அழுத்தத்தை உணர்ந்தவறே தன் கையை விலக்கி அவளின் பின் மேடை ஏறினான்.




மேடை ஏறிய ஐந்து ஜோடிகளும் தங்களின் இணையுடன் பெரியவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். வந்திருந்த அனைத்து விருந்தினர்களும் ஜோடிகளின் பொருத்தத்தை பார்த்து வியந்தவாறே அவர்கள் அனைவரிடமும் தங்களின் வாழ்த்தை கைதட்டல் மூலம் தெரிவித்தனர்.




சரியான நேரத்தில் வெற்றியும் சக்தியும் கார்த்தியும் அவரவர் துணையின் கை விரல் பிடித்து மோதிரம் அணிவித்து தங்களின் உறவை நிலைநாட்டினர்.




தமிழும் அவன் கையில் மோதிரத்தை எடுத்து ஆத்விகாவின் முன் தன் ஒருகாலை மடக்கி “என் வாழ்க்கையின் மீதி வெற்று பக்கங்களை என் வாழ்க்கை எனும் நூலில் உன் வரவால் வண்ணமயமாக மாற்றும் வரம் தருவாயா என் அன்பே” என்று கூறி மோதிரத்தை நீட்டவும் ஆதுவும் தன்னையறியாமல் தன் கரத்தை முன் நீட்டி மோதிரத்தை தன் விரலில் தமிழின் கையால் அணிந்தாள்.




தேவாவோ தமிழ் மாதிரியே அமர்ந்து திவியிடம் “சாலை எனும் வாழ்க்கையில் மேடு பள்ளம் எனும் சந்தோச துயர நிலையில் என்னுடன் பயணித்து என் வாழ்க்கையில் உன் வரவை உறுதி செய்வாயா என் ஆருயிரே” என்று மோதிரத்தை நீட்ட, திவியும் தன் கரத்தை முன் நீட்டி மோதிரத்தை தன் விரலில் தேவாவின் கையால் அணிந்தாள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top