• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கனலிடம் காற்றுக்கென்ன நேசம் -11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Arumbu

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Sep 10, 2020
Messages
152
Reaction score
233
Location
Cbe
inbound1168702540.jpg

KKN - 11



நிச்சயதார்த்தம் நல்முறையில் நடந்தேறவும் வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் இரவுணவை சாப்பிட சென்றனர். அதே நேரம் கார்த்தி, சக்தி,வெற்றி அவரவர் துணையுடன் எவ்வாறு தங்கள் விசயம் தெரியும் என தெரிந்து கொள்வதற்காக பரணி தம்பதியையும் கரண் தம்பதியையும் சுற்றி வளைத்தனர்.



இரு தம்பதிகளும் சொல்லிவைத்தாற் போல் தங்கள் பிள்ளைகளின் சந்தோசம் மட்டுமே தங்களுக்கு வேண்டும் என்றும் அவர்கள் மனைவி குழந்தைகள் என்று மன நிம்மதியுடனும் வாழ வேண்டுமே தவிர செல்வாக்கை பயன்படுத்தி சிறியவர்களிடம் இருந்து அவர்கள் மகிழ்ச்சியை பறித்து கட்டாய வாழ்க்கையில் திணிக்க மனமில்லை என்று தங்கள் பிள்ளைகளின் காதல் வாழ்க்கைக்கு சம்மதித்து இன்று இந்நிச்சயதார்த்த விழாவை அவர்களுக்கு இனிய ஆச்சரியமாக ஏற்பாடு செய்ததை கூறினார்கள்.



சிறியவர்கள் அறுவரும் அவரவர் பெற்றோர் காலில் மறுமுறை விழுந்து ஆசி பெற்று சாப்பிட சென்றனர். இத்தணையிலும் கார்த்தியின் கண் தன் இரு தங்கைகளையும் அவர்களின் வருங்கால மணாவாளன்களின் மீதும் இருந்தது.



அங்கு திவியோ ‘எப்பொழுதுடா இவன் நம் கையை விடுவான்? எப்பொழுது நாம் பெற்றோரின் அருகில் செல்லலாம்?’ என்று மனதுக்குள் நினைத்தவாறே தேவா பிடித்திருந்த தன் இடக்கையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதை கண்டு கொண்ட தேவா சிரித்தவாறே அவள் கையை விடவும் அம்பிலிருந்து வெளிப்பட்ட வில்லென கரண், கலாவை நோக்கி சென்றாள்.



இங்கு ஆதுவோ தமிழிடம் தீவிரமாக வாதாடிக் கொண்டிருந்தாள். தமிழிடம் “யார் நீங்க? எதுக்கு என் அப்பா அம்மாகிட்ட நாம லவ் பண்றதா சொல்லி இப்படி ஏமாத்திருக்கீங்க? இதுக்கு முன்னாடி நாம ஒருதடவை தான் கட்டுமான சங்கத்தில் வைத்து பார்த்திருக்கோம். அதுவும் நான் மாட்டேன் சொன்ன பதவிக்காக என் தன்மானத்தை தூண்டி விட்டு போட்டில கலந்துக்க வச்சிருக்கீங்க.. இப்போ போட்டில உங்களால ஜெயிக்க முடியாம போய்டும்னு தான என்னை இப்போ கல்யாணம் பண்ண போறீங்க? இது எல்லாம் உங்களுக்கு சரினு படுதா? போயும் போயும் ஒரு போட்டிக்காகவா என்னை கல்யாணம் பண்றீங்க?” என்று கேட்டாள்.



தமிழோ ஆத்விகாவிடம் “என்னது நான் உன்னை போட்டில ஜெயிக்க முடியாதுனு நினச்சு கல்யாணம் பண்ணப் போறனா?.. வாட் அ ஜோக்!! ஹலோ டியர் ஒரு மாசத்துக்கு முன்னாடி ப்ரூக்ல வச்சு ஒருத்தன அடிச்சையே நியாபகமிருக்கா?” என்று கேக்க, ஆதுவோ ‘யாருக்கு தெரியும்?? ஒருத்தர் இரண்டு பேர்னா தெரியும்.. இவன் யாரை சொல்றானு தெரிலையே??’ என்று யோசித்து திரு திருவென விழிக்க, தமிழும் அவள் மைண்ட் வாய்சை கேட்ச் பிடித்தபடி “ஆமா நீ ஒன்னு இரண்டு பேரை அடிச்சிருந்தா தெரியும்.. நீ தான் ஜான்சி ராணி கணக்கா எல்லாரையும் அடிப்பியே!” என்று அவள் முழிப்பதை பார்த்துகொண்டே கூறினான்.



ஆத்விகா அவனை கூர்ந்து பார்த்து “அப்படினா நீயும் என்கிட்ட அடி வாங்கிருக்கியா?” என்று கேட்டு சிரிக்க, தமிழோ அவளை முறைத்துப் பார்த்தான். பின் தன் சிரிப்பை அடக்கிய ஆது அவனிடம் “சரி சொல்லு அப்போ நான் உன்னை அடிச்சதுக்காகவும் உன்னை எதிர்த்து போட்டியிடறதுனாலையுமா என்னை கல்யாணம் பண்ணப்போற?” என்று கேட்டு “அப்படி ஒரு எண்ணம் இருந்தா இந்த நொடியே விட்டுறு. என்னை அப்படிலாம் சமானியமா நினைக்காத” என்று கூறினாள்.



தமிழோ மனதுக்குள் ‘இந்த கல்யாணம் மட்டும் முடியட்டும்.. அப்புறம் பாரு டார்லிங்க்’ என்று நினைத்துக் கொண்டு ஆதுவிடம் “என்னைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு? எதுக்கு இந்த கல்யாணம்னு உனக்கே நம்ம மேரஜ்க்கு அடுத்து புரியும் பேபி” என்று கூறி அவளின் கன்னத்தை செல்லமாக கிள்ளி விட்டு மாறன் அரசியிடம் அழைத்துச் சென்றான். ஆதுவும் அவன் கிள்ளிய தன் கன்னத்தை புறங்கையால் துடைத்துக் கொண்டே அவள் பெற்றோர் இருக்குமிடம் சென்றாள்.



மாறனிடம் தயாளனும் மகிமாவும் அடுத்து செய்ய வேண்டிய திருமண வேலைகளை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். ஆதுவும் தமிழும் அருகில் செல்ல, மகிமா ஆதுவை கட்டியணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டார். பின் இரண்டாம் மருமகளை தேட, கலாவின் தோளில் முகத்தை புதைத்திருந்த திவ்யா அவரை விட்டு நகரமாட்டேன் எனும் விதமாக அவருடனே ஒட்டிக் கொண்டிருந்தாள்.



அதைப் பார்த்த மகிமா திவியின் அருகில் சென்று அவளின் தலையை ஆதுரமாக தடவி விட்டார். அவரை நிமிர்ந்து பார்த்த திவி அவரிடம் ஆசி பெற குனிய அவளை தடுத்த மகிமா அவளிடம் “எனக்கு நீங்க மரியாதைலாம் தர வேண்டாம் மா.. எப்பொழுதும் என் இரண்டு பசங்களையும் இதே மாதிரி ஒத்துமையா இருக்க வச்சா போதும்” என்று கூறினார்.



அதை கேட்ட ஆது மற்றும் திவி இருவரும் அவரின் இரு பக்கமும் சுற்றி வளைத்து “எப்போவுமே அவுங்க ஒன்னாதான் இருப்பாங்க மா. நீங்க பயப்பட வேண்டாம். நாங்க எங்க சுய நலத்துக்காகவே அவுங்க இரண்டு பேரையும் பிரிக்க மட்டோம்” என்று ஒரே குரலில் கூறி அவரிடம் யாருமறியாமல் தமிழிற்கும் தேவாவிற்கும் பிடிக்காததை கேட்க அவரும் யோசிக்காமல் இருபிள்ளைகளுக்கும் பிடிக்காததை பற்றி விரிவாக கூறினார்.



இருவரும் அதை கவனமாக கேட்டுக் கொண்டு ஒருவரையொருவர் பார்த்துக் தங்கள் கட்டைவிரலை தூக்கி காட்டினர் மகிமாவின் பின் நின்றபடி.



அதன் பின் அனைவரும் இரவுணவை முடித்துக் கொண்டு தயளானும் மகிமாவும் அனைவரிடம் விடை பெற்று நாளை முகூர்த்தப்பட்டெடுக்க செல்லலாம் என்று கூறி விடை பெற, தமிழும் தேவாவும் அவரவர் துணைகளை பார்க்க திவியோ தேவா பார்ப்பதை பார்த்து முகம் தாழ்த்திக் கொள்ள, ஆத்விகாவோ தமிழை முறைத்துக் கொண்டிருந்தாள். அதை பார்த்த தமிழ் ‘இவக்கிட்ட வெட்க்கத்தை எதிர் பார்த்தது நம்ம தப்பு தான்’ என நினைத்துக் கொண்டு அனைவரிடமும் விடை பெற்றனர்.



அடுத்த நாள் காலை பத்து மணியளவில் அனைவரும் கோவையின் மிக பெரிய துணிக்கடையான ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் சென்றனர். அங்கு அனைவருக்கும் தேவையான புத்தாடைகள் எடுத்துக் கொண்டு ஆதுவிற்கு பிங்க் நிறத்திலையும் திவிக்கு மயில் பச்சை நிறத்திலையும் மதுவிற்கு இளமஞ்சள் நிறைத்திலயும் எடுத்துக் கொண்டும் மற்ற திருமணங்கள் ஆறு மாதம் கழித்து நடை பெறுவதால் மூன்று ஜோடிகளுக்கு மட்டும் தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு நகை கடைக்கும் சென்று தேவையான நகைகளை வாங்கி விட்டு இல்லம் திரும்பினர்.



நாட்கள் இவ்வாறே திருமண வேலைகளில் விரைவாக செல்ல, நாளை விடிந்தாள் திருமணம்.


அன்றைய மாலைப்பொழுதில் இரு பெண்களுக்கும் நலங்கு வைத்து தாய்மாமன் சீர் செய்து அவர்களை அழைத்துக் கொண்டு நகரின் மிகப்பெரிய மண்டபமான தாமரை மண்டபத்திற்கு சென்றனர். அதே நேரம் பரணிநாதன் இல்லத்திலையும் மதுவிற்கு நலங்கு வைத்து அவளையும் அழைத்துக் கொண்டு அதே மண்டப்பத்திற்கு வந்தனர்.



அவர்கள் செல்லுவதற்கு முன்பே தமிழும் தேவாவும் அவன் சுற்றாத்தாருடன் வந்திருந்தனர். பின் சிறியவர்கள் அவர்களுக்கு என்று ஒதுக்கிய அறையில் நுழைந்தனர். ஒன்றான் பின் ஒன்றாக அடுத்தடுத்து மூன்று திருமணம் என்பதால் திவ்யா,ஆத்விகா,மது ஒரே அறையிலும் தமிழ்,தேவா, கார்த்தி ஒரே அறையிலும் தங்கினர்.



கார்த்தியை தங்கள் அறையில் பார்த்த தேவாவும் தமிழும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டு அவனருகில் சென்று “அப்புறம் மச்சான் தங்கச்சிகங்க மேல ரொம்ப பாசமோ?” என்று தமிழ் கேக்க தேவாவோ “அன்னைக்கு அப்படி அடிச்சு பிடிச்சு வந்ததுலையே தெரிலையா தமிழ் நம்ம மச்சானுக்கு அவர் தங்கச்சிங்க மேல இருக்க பாசம்” என்று கூறினான்.



அதற்கு கார்த்தியோ இருவரிடமும் “ஆமா எனக்கு திவி எப்படியோ அப்படிதான் ஆதுவும்.. அதுனாலதான் அவ்ளோ அவசரமா வந்தேன் அன்னைக்கு” என்று கூற அதற்கு தேவாவும் “வந்தது சரிங்க மச்சான்.. ஆனா ஏன் அவுங்களை அணைச்சு பிடிச்சிருந்தீங்க... அன்னைக்கு உங்கள பார்த்த எல்லாரும் தப்பாதான நினைச்சுருப்பாங்க“ என்று கூற அதற்கு கார்த்தியோ “நீங்க நினைச்சீங்கனு சொல்லுங்க மாப்பிளை” என்று கூற இருவரும் அசடு வழிந்தவாறே “கொஞ்சமே கொஞ்சம் மச்சான். ஆன இனி அவுங்களை இப்படி டக்கு டக்குனுலாம் ஹக் பண்ண கூடாது... இனிமேல் எங்களுக்கு அடுத்து தான் மச்சான் நீங்க அவுங்க இரண்டு பேருக்கும்” என்று தமிழ் கூறினான்.



அதை கேட்ட கார்த்தியோ “அது சரி மாப்பிளைங்களா!!!கல்யாணம் ஆகிறதுக்கு முன்னாடியே இவ்ளோ பொறாமையா? அதுவும் அண்ணன் மேலயே!! சுத்தம்” என்று செல்ல சலிப்பாக கூறினாலும் இருவரும் தங்கைகளின் மீது வைத்துள்ள காதலையும் அன்பையும் உணர்ந்து ஒரு அண்ணனாக மகிழ்ச்சியடைந்தான் கார்த்தி.



மூன்று ஜோடிகளின் பெற்றவர்களும் அடுத்த நாள் அதிகாலை திருமணம் என்பதால் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தனர். சிறிது நேரம் மட்டும் உறங்கி சமையலறையில் விருந்து உணவு செய்வதை மேற்பார்வை பார்த்த படியும் திருமணத்திற்கு மணமேடை அலங்காரத்தை சரி பார்த்த படியும் செயல் பட்டுக் கொண்டிருந்தனர்.



சரியாக அதிகாலை மூன்று மணிக்கு ஆது,திவியை எழுப்பி குளியலறையில் விட்டனர் அரசியும் கலாவும். அவர்கள் சத்தம் கேட்டு எழுந்த மதுவை இன்னும் கொஞ்ச நேரம் உறங்க சொல்ல அவளும் உறங்கி விட்டாள். மதுவிற்கு ஆறு மணிக்கு மேல் தான் முகூர்த்தம் என்பதால் அவளை விட்டு விட்டனர் இருவரும்.



ஆது குளித்து விட்டு வந்தபின் மூவருக்கும் அலங்காரம் செய்ய ஏற்பாடு செய்திருந்த பார்லர் பெண்கள் மூலம் ஆதுவை தயார்படுத்தினர். அதேப்போல் திவிக்கும் அலங்காரம் செய்து முடிக்கவும் மணி நான்கு என்று காட்டியது.



பின் அரசியும் கலாவும் ஐயர் கேட்பவற்றை எடுத்துக் கொடுக்க வருபவர்களை வரவேற்க என்று கலா, நித்யா, அரசி தம்பதிகளுக்கு நேரம் இறக்கை கட்டி பறந்தது.



சரியாக நான்கு முப்பதிற்கு தமிழ் ஹோம குண்டத்தின் முன் அமந்து பாத பூஜை முதல் செய்ய வேண்டியவைகளை செய்து முடித்து உடை மாற்ற அறை சென்றான். அதேப்போல தேவாவும் செய்து முடித்து உடை மாற்றி வருவதற்குள் மண பெண்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக பூஜை முடித்து முகூர்த்தப்பட்டு உடுத்த சென்றனர்.



பின் ஐயர் மணமகனை அழைக்க மூத்த மகன் ஆனதால் தமிழ் வந்து மணமேடையில் அமர்ந்தான். தேவா அவன் அருகில் நிற்க தமிழ் அவனை தூர தள்ளி நிற்க சொன்னான் அவன் முகம் புகையின் காரணமாக சோர்ந்துவிடும் என்பதால். பின் ஐயர் மணமகளை அழைக்க ஆத்விகா அழகிய பேபி பிங்க் வண்ண பட்டு உடுத்தி அழகிய மலராக நடந்து வந்தாள் மணமேடை நோக்கி.



அவள் வருவதை பார்த்த தமிழ் பார்த்துக்கொண்டே இருக்க தேவா வந்து அவன் முகத்தை முன் திருப்பினான். அதை பார்த்து சிரித்த ஆது அன்ன நடையிட்டு தமிழின் அருகில் அமர்ந்தாள்.



ஐயர் ஐந்து மணிக்கு “கெட்டி மேளம், கெட்டி மேளம்’ என்று குரல் கொடுக்க மேளதாளங்கள் முழங்க அனைவரும் அட்சதை தூவ தமிழ் ஆதுவின் சங்கு கழுத்தில் மங்கள நாணை முதல் இரண்டு முடி போட்டு மூன்றாவது முடியை தங்கையான மித்துவிடம் கொடுக்காமல் அவனே போட்டு ஆத்விகாவை தன்னில் பாதியாக ஏற்றான்.



பின் அவள் கழுத்தை சுற்றி வளைத்து தன் மீது பாதி அணைத்தவாறே அவள் நெற்றியில் குங்குமம் இட்டு அம்மியின் மீது ஆதுவின் பாதங்களை வைத்து மெட்டியும் போட்டுவிட்டான்.



அவ்வதிகாலை நேரத்தில் அனைவரின் மன மகிழ்வுடன் தமிழ் ஆத்விகா திருமணம் நடந்தேறவும் அனைவரும் ஆடுத்து தேவா திவ்யா கல்யாணத்திற்கு தயாராகினர்.



சரியாக ஐந்தே முக்கால் மணிக்கு தேவா திவ்யா திருமணமும் ஆறு முப்பதிற்கு மது கார்த்தியின் திருமணமும் அனைவரின் ஆசியுடன் சிறியவர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கிடயே மகிழ்ச்சியாக நடைபெற்றது.



பின் அனைவரும் ஆது தமிழ் ஜோடியையும் தேவா திவியையும் அழைத்துக் கொண்டு தமிழின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர் அரசி மாறன் தம்பதியும் தயாளன் மகி தம்பதியும்.



கரண் கலாவிற்கு எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் முழிக்க அரசி அவர்களிடம் திவியை தாங்கள் பார்த்து கொள்வதாக கூறி அவர்களை கார்த்தி மதுவை அழைத்துக் கொண்டு இல்லம் செல்ல கூறினார்.



தமிழின் இல்லத்தில் மித்ரா இரு ஜோடிக்கும் ஆரத்தி எடுத்து அவர்களை வரவேற்றாள். உள் நுழைந்த இரு மருமகள்களையும் பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிட சொல்ல ஆதுவும் திவியும் அவ்வாறே விளக்கேற்றி சாமி கும்பிட்டு அவர்கள் துணையின் அருகில் அமர்ந்தனர். பின் இரு ஜோடிகளுக்கும் பால் பழம் குடுத்து அருந்த செய்த பின் ஆதுவையும் திவியையும் சமயலறை கூட்டிச் சென்று உப்பு, புளி, அரசி,பருப்பு போன்ற பொருட்களில் கைவைக்க கூறினர் அங்கிருந்த மூத்த சுமங்கலிகள்.



இருவரும் அவ்வாறே செய்து முடிக்கவும் அவர்களை அறைக்கு அனுப்பினர். பின் மணமக்களை சிறிது தயாரகிய பின் அவசரமாக கரணின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். அதேப்போல் கார்த்தியின் இல்லத்தில் ஆரத்தி எடுக்க திவ்யாவிற்காக காத்திருக்க, திவியும் விரைவாக அவ்விடம் வந்து தங்கையின் கடமையை நிறைவேற்றினாள்.



மதுவிற்கும் அதேப்போல் விளக்கேற்றி மங்கள பொருட்களில் கைவைக்க சொல்லி மூன்று ஜோடிகளையும் ஒரு அறையில் ஓய்வெடுக்க சொல்லி அனுப்பினர் பெரியவர்கள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top