• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கனலிடம் காற்றுக்கென்ன நேசம் - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Arumbu

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Sep 10, 2020
Messages
152
Reaction score
233
Location
Cbe
inbound114676595.jpg
KKN - 17

நடந்த அனைத்தையும் தமிழிடம் கூறிய சப்இன்ஸ்பெக்டர் “இப்போ சொல்லுங்க சார்.. நான் மேடம் கிட்டயும் அவன் ரொம்ப மோசமனவன். பெத்த புள்ளையையே வெறும் கௌரவத்திற்காகவும், கேவலம் மார்க்கிற்காகவும் அப்படி போட்டு அடிச்ச மனுசன் அவன். இப்போ இவுங்க பப்ளிக்கா அவனை புரட்டி எடுத்திருக்காங்க.. விடுவானா சார் அவன்.” என்றவன் தொடர்ந்து



“எங்க டிபார்ட்மெண்டைலயே யாரும் அவன்கிட்ட பேச்சு வச்சுக்கமாட்டாங்க.. ஹையர் அபிசியல் தவிர்த்து யாரும் அவன்கிட்ட நார்மலா கூட பேசமாட்டாங்க.. நீங்களாவது உங்க மனைவி கிட்ட இப்போ இருக்கிற நிலமையை எடுத்து சொல்லி அவர்கிட்ட மன்னிப்பு கேட்டு ஃபைல் பண்ணின கேஸையும் வாபஸ் வாங்க சொல்லுங்க சார்” என்று சொன்னார்.



தமிழோ ஆதுவை திரும்பி பார்த்து “நீ என்ன சொல்ற ஆத்விகா?” என்று கேட்க, ஆதுவோ “இதுல சொல்றதுக்கு ஒன்னும் இல்லை தமிழ். நான் முடிவு பண்ணியது பண்ணியதுதான். அவன் மேல கொடுத்துறுக்க கேஸை வாபாஸ் வாங்கப் போறது இல்லை. அவன் என்ன செய்றான்னுதான் பார்க்கலாமே” என்று நேர்பார்வையாக சொன்னாள்.



அதை கேட்ட தமிழோ “அப்ப உன் இஷ்டம் தான் ஆது. உனக்கு என்ன தோணுதோ அதை தாராளமா செய். அதுக்கு எப்பவும் நான் குறுக்க நிக்க மாட்டேன்.. உன் அப்பா எப்படி உன் விசயங்களில் உனக்கு சப்போர்டிவா இருந்தாங்களோ நானும் அப்படிதான் இருப்பேன் உனக்கு” என்று சொன்னான்.



ஆதிவிகா அவன் கூற்றில் திரும்பி தமிழை பார்த்து “இந்த வார்த்தையை கடைசிவரைக்கும் காப்பாத்துவீங்களா தமிழ்?” என்று கேட்க, தமிழோ ‘எதுக்கு இப்படி கேக்கிறா? நம்மமேல இவளுக்கு நம்பிக்கையே வராதா? எப்போதான் என்னை இவ புருஞ்சுக்குவா?’ என நினைத்துக் கொண்டே அவளிடம்



“நம்ம பர்சனல் விசயங்களை வெளிய போய் பேசிக்கலாம் ஆத்விகா” என்று சொல்ல, ஆதுவோ தலை அசைத்து அந்த சப்இன்ஸ்பெக்டரிடம் “நான் கேஸ் வாபஸ் வாங்கலை சார். எல்லாத்தையும் நான் சட்டப்படி பார்த்துக்கறேன்.. அதே மாதிரி அவன் அப்படி என்னதான் செய்யறான்னும் நான் பார்த்துக்கறேன்” என்று சொல்லி நிமிர்வாகவே காவல் நிலையத்தை விட்டு வெளியேறினாள்.



எப்பெண்ணிற்குதான் இருக்காது இத்தணை நிமிர்வும் தைரியமும்? தன் கணவனும் தந்தையும் தனக்கு பின்னால் முழு ஆதரவுடன் அவள் செய்யும் சிறுசிறு செயலுக்கும் ஊக்கமளித்தால்.



ஆது சென்ற பின் அந்த சப்இன்ஸ்பெக்டரிடம் தமிழ் “எனக்கு கொஞ்சம் அந்த இன்ஸ்பெக்கடரை பத்தின டீடைல்ஸ் கிளியரா வேணும் சார்” என்று சொல்ல அவரோ “அது சட்டப்படி தப்பு சார். அரசாங்க ஊழியரோட விவரங்களை அவுங்க சம்மதமில்லாம வெளிய சொல்ல முடியாது சார்” என்று மறுத்தார்.



அதற்கு தமிழோ “அது எல்லாம் நியாயமா இருக்கறவுங்களுக்கு தான் சார். அரசாங்கத்தை ஏமாத்தி பொழப்பு நடத்தறவுங்களுக்கும் குடும்பத்துல இருக்கவங்களையும் டார்ச்சர் பண்றவனுக்கும் இல்லை சார்” என்று சொல்லி அவரை சமாளித்து ஒருவழியாக அவனிடம் இருந்து அந்த மனித மிருகத்தின் விவரங்களை வாங்கிக் கொண்டு வெளியில் வர, ஆது அவனுக்காக காத்திருந்தாள் அவன் காரில் சாய்ந்தப்படி.



தமிழிடம் “ஏன் இவ்ளோ லேட் தமிழ்? உள்ளே என்ன பண்ணீட்டு இருந்தீங்க? என்கிட்ட ஒரு மாதிரி பேசிட்டு உள்ள அவுங்களுக்கு சாதகமா பேசிட்டு வந்தீங்களா?” என்று கேட்டாள்.



அதை கேட்ட தமிழ் ஆதுவிடம் “நீ உன் மனசுல என்னதான் நினைச்சுருக்க ஆத்விகா? என்னை ஏன் எப்பவும் நம்பவே மாட்டிங்கற? அப்படி எந்த விசயத்துல நான் உனக்கு நம்பிக்கை வராத மாதிரி செயல்பட்டிருக்கேன்?” என்று ஆற்றாமையாக கேட்டான்.



அதற்கு ஆதுவோ தமிழிடம் “நீங்க மறந்துட்டு பேசிட்டு இருக்கீங்க தமிழ்.. நம்ம வாழ்க்கையே பொய்யில் தான் ஆரம்பிச்சதுனு உங்களுக்கு புரியிலையா? இல்லை அது பெரிய விசயம் இல்லைனு அதை மறந்துடீங்களா? இல்லை தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா தமிழ்?” என்று கோவமாகவே கேட்டாள்.



அவளின் எதிர் வாதத்தை கேட்ட தமிழ் வெளிப்படையாகவே தலையில் அடித்து “நான் வாழ்க்கையில முதல் முதலா பண்ணிய தவறான செயல்னா அதுமட்டும்தான். நீ அதை மறக்கவே மாட்டியா? இந்த விசயத்துல என்னை மன்னிக்கவும் மாட்டியா?” என்று இறங்கியே கேட்டான்.



ஆதுவோ “இந்த ஜென்மத்துல இதை மறக்க முடியாது தமிழ். பிற்காலத்தில நாம சந்தோஷமாவே வாழ்ந்தாலும் இது என் ஆழ்மனசுல உறுத்திட்டே தான் இருக்கும்” என்று கூறி அவனின் காரில் ஏறி அமர்ந்துவிட்டாள் மேற்கொண்டு தமிழ் பேச இடம் கொடுக்காமல்.



தமிழும் ‘இவள எப்படிதான் சமாதானப்படுத்துறது? இவளை யாருக்கும் விட்டு கொடுக்க முடியாம தான நான் அப்படி பண்ணீனேன்.. இப்படியே போயிருமா எங்க வாழ்க்கை? இவ எப்போ மலையிறங்குறது? நாங்களும் எப்போ சந்தோஷமா வாழ ஆரம்பிக்கிறது?” என்று கூற அவனின் மனசாட்சியோ “நீ அந்த கல்யாணத்தை நிறுத்தாம இருந்திருந்தாலும் வெற்றியே நிறுத்திருப்பான்” என்று அவனை வாரியது.



தமிழோ “எல்லாம் ஆர்வக்கோளாறுலையும் அவசரபுத்தியிலும் செஞ்ச வினை. இப்போ என்னை போட்டு படுத்துது” என்று ஆதுவை பார்த்து இருபக்கமும் தலை ஆட்டி பெருமூச்சு விட்டுக் கொண்டே காரில் அமர்ந்தான்.



பின் அவளிடம் “ஆதிவிகா..” என்று அழைக்க அவள் திரும்பவில்லை. மறுபடியும் அவளிடம் “வீட்டுக்கு போறியா? இல்லை ஹாஸ்பிட்டலுக்கே போறியா?” என்று கேட்க, அவளோ “எனக்கு இப்போ கொஞ்சம் அமைதியான இடத்துக்கு தான் போகனும்” என்று தமிழிடம் திரும்பாமலே கூறினாள்.



தமிழோ ஏதும் கூறாமல் காரை வேகமாக கிளப்பினான். ஆதுவும் சீட்டில் சாய்ந்து கண்மூடியவள் எப்பொழுது உறங்கினால் என்பது அவளுக்கே தெரியவில்லை. காரில் அமைதி மட்டுமே நிலவியது.



சிறிது நேரத்தில் தமிழ் காரை ஒரு வேகத்தடையின் மீது கவனிக்காமல் ஏற்றி இறக்க, ஆது சீட்டின்முன் இடித்து கண்விழிக்க, தமிழும் காரை நிறுத்தியிருந்தான்.



ஆது தமிழிடம் “என்னாச்சு? ஏன் இப்படி ஹார்ஸா டிரைவ் பண்றீங்க?” என்று கேட்க தமிழோ “சாரி ஆது. ஏதோ நியாபகத்துல ஓட்டிட்டேன். உனக்கு அடிபட்டிடுச்சா? என்று கேட்டு கொண்டே அவள் நெற்றியில் கைவைக்க கரத்தை அவளை நோக்கி நீட்ட, ஆது பின் நகர்ந்தாள்.



அவள் நகரவும் முகத்தை சுருக்கிய தமிழ் தன் கரத்தையும் பின்னால் எடுத்து “சாரி.. தெரியாம..” என்று சொல்லிக் கொண்டிருக்க ஆது “வண்டி எடுங்க முதல்ல.. எதுக்கு இப்படி நடு ரோட்டுல நிக்கனும்? எங்க போறோம்? என்ன இடம் இது?” என்று விடாமல் கேள்வி கேட்க,



தமிழோ “நீயே பாரு எங்க போறோம்னு.. அது வரைக்கும் தூங்கு.. இன்னும் கொஞ்ச நேரத்துல நாம போகவேண்டிய இடம் வந்துரும்” என்று சொல்லி வண்டியை கிளப்பினான்.



போகும் வழியிலையே ஆது தமிழிடம் “எனக்கு ரொம்ப பசிக்குது..” என்று முகத்தை சுருக்கி சொல்ல, தமிழும் தன் கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான். மதிய உணவை நேரம் தாண்டியதால் ஒரு நடுத்தரமான ஹோட்டலில் காரை நிறுத்தி இருவரும் சாப்பிட சென்றனர்.



அங்கும் ஆது அமைதியாகவே சாப்பிட, தமிழோ “இங்கப்பாரு ஆத்விகா” என்று சொல்ல அது அவனை நிமிர்ந்து பார்க்க, அவளிடம் தமிழ் “நீயே சொல்லு ஆத்விகா. எனக்கு நம்ம ரிலேஷன்ஷிப்பை எப்படி எடுத்துட்டு போகறதுனு தெரியல, ஒரு கணவனா உன்கிட்ட இருக்கனும்னு என் மனசுல அவ்ளோ ஆசை இருக்கு. ஆனா, நான் ஏதாவது பண்ண போய் உன் மனசு சங்கடப்படுமோனு தயக்கமாவும் இருக்கு. எனக்கு ஒரு முடிவு சொல்லு. நம்ம வாழ்க்கையோட அடுத்தகட்ட நடவடிக்கை நீ சொல்லப்போற வார்த்தையிலதான் இருக்கு. அதை வச்சிதான் நான் மேற்கொண்டு முடிவு எடுக்கனும்” என்று நீளமாக அவனின் உள்ளக்கிடங்கை சொன்னான்.



ஆதுவோ அவன் பேசும்வரை அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவள் தமிழ் முடித்ததும் எழுந்து ஒன்றும் பேசாமல் கைகழுவ சென்றுவிட்டாள்.



ஏதும் பேசாமல் செல்லும் ஆதுவை பார்த்த தமிழ் “கொஞ்சமாவது என்னை மதிக்கிறாளா? எவ்ளோ அமைதியா என் மனசை அவகிட்ட சொல்லி அவ முடிவை கேட்டா!! ஒரு பதிலும் சொல்லாம போய்ட்டா!!” என்று திட்டியபடியே அவனும் உண்டு முடித்து கைகழுவ சென்றான்.



பின் இருவரும் காரில் ஏறி அமர்ந்ததும் தமிழ் பேசாமல் காரை கிளப்ப ஆது “நீங்க என்ன முடிவு எடுத்திறுக்கீங்க? ஏதோ என் பதிலை கேட்டுட்டு உங்களோட அடுத்த ஸ்டெப்னு சொல்றீங்க? என்ன முடிவு அது?” என்று கேட்டாள்.



தமிழோ “அது நீ சொல்லப்போறதை வச்சுதான் நான் முடிவு பண்ணப்போறேன்னு சொன்னேன். இன்னும் நான் ஏதும் முடிவு பண்ணலை. சப்போஸ் உனக்கு என்னோட வாழ பிடிக்கலைனு நீ சொன்னா லெட்ஸ் டைவர்ஸ்ங்கறதுதான் என் அடுத்த நடவடிக்கையா இருக்கும்” என்று சொல்ல ஆது அவனை முறைத்தாள்.




தமிழே தொடர்ந்து “இன்னும் எனக்கு நீ கேட்டது என் காதில் கேட்டுட்டேதான் இருக்கு. *உனக்கு பிடிச்சுதுனு என்னை கல்யாணம் பண்ணீன சரி. அப்போ என் மனசுனு? நீ கேட்டது...* எனக்கு நான் தப்பு பண்ணீட்டனோனு இருக்கு ஆத்விகா.. இனி உன் முடிவுலதான் நம்ம கல்யாண வாழ்க்கையோட முடிவும் ஆரம்பமும் இருக்கு” என்று சொன்னான்.



ஆது ஏதும் பேசாமல் கண்ணாடியில் தலை சாய்த்து ரோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள். தமிழும் ஆது ஏதாவது கூறுவாள் என திரும்பி திரும்பி பார்க்க ஆது “எனக்கு கொஞ்சம் டைம் வேணும் தமிழ்.. அன்னைக்கே நான் சொன்னதுதான். சும்மா என்னைத் திரும்பி திரும்பி பார்க்காம ரோட்டை பார்த்து ஓட்டுங்க” என்று சொன்னாள்.



தமிழ் ஒரு சின்ன சிரிப்புடன் “நான் கூட நீ பட்டுனு டைவர்ஸ்னு சொல்லுவனு நினைச்சேன். பரவாலை டைம் தான கேட்டுறுக்க.. பரவாலை உனக்கு எவ்ளோ காலஅவகாசம் வேணுமோ எடுத்துக்க.. ஆனால் அதுல எனக்கும் கொஞ்சம் கொடு..”என்று கேட்க ஆதுவோ “உங்களுக்கு எதுக்கு டைம்? நீங்க என்னை விரும்பிதான மேரேஜ் பண்ணீங்க? அப்புறம் எதுக்கு?” என்று புரியாமல் கேட்டாள்.



தமிழோ “நான் எப்போ எனக்கு டைம் கேட்டேன். உன்னோட டைம்ல எனக்கு டைம் கேட்டேன்” என்று சொல்ல, ஆதுவோ “கடுப்பை கிளப்பாதிங்க தமிழ். நான் ஆல்ரெடி அந்த இன்ஸ்பெக்டர் இஸ்ஸுல ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கேன். இதுல நீங்க வேற” என்று சலித்துக் கொண்டாள்.



தமிழும் “சரி சரி டென்சன் ஆகாத.. நீ என்னை ஏத்துக்க அவகாசம் கேட்டீல்ல. சோ அதே டைம்ல நானும் உனக்கு புரியவைக்கிறேன். அதாவது உன்மேல நான் எவ்ளோ காதல்,பாசம் வச்சிறுக்கேன்னு.. சோ அப்போ அப்போ நான் உன்கிட்ட கொஞ்சமே கொஞ்சம் உரிமை எடுத்துப்பேன்.. நீ அதுக்கு எல்லாம் ஏதும் சொல்லக்கூடாது.”என்று சொன்னான்.



ஆதுவோ அவனிடம் “அப்படி என்ன புரியவைக்கப்போறிங்க? என்னை கோவப்படுத்தாம, நேத்துக்கு மாதிரியான கிறுக்குதனம் பண்ணாம இருந்தாலே எனக்கு போதும்” என்று சொன்னாள்.



தமிழோ “அப்போ உனக்கு ஓகேவா. என்னை உனக்கு புரியவைக்கிறதுல உனக்கு ஒன்னும் கஸ்டம் இல்லையே?” என்று மறுபடியும் கேட்க, ஆது “அது எல்லாம் ஒன்னும் இல்லை. நீங்க முதலில் வண்டியை ஒழுக்கமா ஓட்டுங்க” என்று சொல்ல, தமிழோ எட்டி ஆதுவின் கன்னத்தில் தன் முதல் இதழ் முத்திரையை அழுத்தமாக பதித்தான்


.

இதில் அதிர்ந்த ஆத்விகா, தன் உள்ளங்கையை கன்னத்தில் வைத்து தமிழை பார்க்க தமிழோ “அட என்ன பார்க்கிற ஆது? இதுக்கே இப்படி ஷாக் ஆனா எப்படி?” என்று கேட்டான்.




ஆதுவோ அதே அதிர்ச்சியுடன் “என்ன பண்ணீங்க தமிழ்? நான் டைம் கேட்டும் நீங்க இப்படி பண்றது தப்பு. என்கிட்ட நீங்க இப்படிலாம் நடந்துக்க கூடாது” என்று சொல்ல, தமிழோ “அட என்னம்மா நீ? இப்பதான நான் சொன்னேன். உன் கால அவகாசத்தில் எனக்கான நேரத்தை கொடுன்னு.. நீயும் இப்போ அதுக்கு சம்மதிச்சதான?” என்று கூலாக கேட்டான்.



ஆது புரியாமல் “அதுக்கு இப்படிதான் பண்ணுவீங்களா?” என்று கேட்க தமிழோ “ஆமா இப்படிலாம் பண்ணீதான் நான் உனக்கான என் காதலை உணர்த்தப்போறேன்” என்று சொல்லி “இனிமே நீ நிறையா என் காதலை பார்க்கப்போற.. மொத்தமா இப்பவே உன் ஷாக்கை எல்லாம் முடிச்சுக்கோ.. இனி அடிக்கடி இதுவும் நடக்கும். இதுக்கு மேலையும் நடக்கும்.. ஏன்னா நீ எனக்கு வாக்கு கொடுத்துறுக்க.. நான் என் காதலை உணர்த்துறதுல உனக்கு ஒரு கஸ்டமும் இல்லைனு” என்று சொல்லி ஆதுவை பார்த்து தன் கண்ணை சிமிட்டி கூலாக விசிலடித்தப்படியே வண்டி ஓட்டினான்.




ஆதுவோ “அய்யோ ராமா.. இந்த தமிழ் இப்படிலாம் செய்வான்னு தெரியாம நான் எனக்கு கஸ்டம் இல்லைனு வேற சொல்லீட்டனே.. இதுக்கும் மேலைனு இவன் என்ன சொல்றான்? என்ன பண்ணப் போறான்? என்ன கிறுக்குதனம் செய்யப்போறானோ?” என்று தனக்குள் யோசித்தவாறே தமிழ் முத்தமிட்ட கன்னத்தை கையால் மறைத்தப்படியே அவனுடன் பயணமானாள்.
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top