• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கனலிடம் காற்றுக்கென்ன நேசம் - 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Arumbu

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Sep 10, 2020
Messages
152
Reaction score
233
Location
Cbe
inbound991126381.jpg

KKN - 18


காரில் நீண்ட அமைதியே நிலவ அதை இருவருமே கலைக்க முற்படவில்லை. தமிழ் சந்தோச மன நிலையில் இருந்தான் என்றால் ஆதுவோ கலக்கமாக இருந்தாள். திருமணம் முடிந்த இந்த ஒரு மாத காலத்தில் எதற்கும் தன்னிடம் நெருங்கியிருக்காத தமிழ் இப்பொழுது அதிரடியாக முத்தம் கொடுத்தது ஆதுவிற்கு ஒரு புரியா உணர்வை கொடுத்தது.



தமிழிடம் மறுமுறை பேசவே தயங்கினாள் ஆத்விகா. தமிழும் அமைதியாகவே வர இவளும் அமைதியாக இருந்தாள். ஆனால் உள்ளம் மட்டும் தன் வேலையை செவ்வென செய்தது.



சிறிது தூரம் சென்றபின் காரை ஒரு நிழலில் நிறுத்திய தமிழ் ஆதுவிடம் “ஆத்விகா... இப்போ நாம போகப்போறது ஒரு ஆசிரமம். அதை நானும் தேவாவும் தான் நடத்திட்டு இருக்கோம். இந்த விசயம் நம்ம வீட்டுல இருக்க யாருக்குமே தெரியாது.. இப்போ நான் உனக்கு சொல்றேன்னா என்னோட எந்த விசயத்தையுமே நான் உன்கிட்ட மறைக்க விரும்பலை. நீயும் வீட்டுல காட்டிக்காத” என்று சொன்னான்.



ஆதுவோ “ஏன் தமிழ்? ஆசிரமம் வச்சு இல்லாதவங்களுக்கு உதவி செய்யறது நல்ல விசயம் தான.. இதை ஏன் நம்ம வீட்டுக்கு தெரியாம மறைவா செய்யனும்?” என்று கேட்டாள்.



தமிழோ “எல்லா விசயங்களுக்கும் இரண்டு பக்கம் இருக்கு ஆது.. நாம செய்யற தொழிலில் நிறையா ஆபத்து இருக்கு. உனக்கே தெரியும் செந்தூர் இப்போதான் வளர்ந்துட்டு இருக்கிற கம்பெனி. அட் சேம் டைம் நம்ம எடுக்கிற எல்லா காண்ட்ராக்ட்ஸும் கவர்மெண்ட் ஓடது. சோ நம்ம போட்டி கம்பெனிகள் செந்தூரை முற்றும் முழுதா அழிக்கனும்னு நிறையா பேர் காத்துட்டு இருக்கிறாங்க.. பத்தாததுக்கு இப்போ நான் எடுத்திருக்க ஒரு வேலையில என் உயிர் கூட போக வாய்ப்பு இருக்கு..” என்று சொல்ல, ஆது அவன் வாயின் மீது தன் கை வைத்து அவன் பேசுவதை தடுத்தாள்.



”என்ன பேசறீங்க தமிழ்? இப்படி எல்லாம் பேசாதீங்க.. எப்பவும் பாஸிட்டீவா பேசுங்க..” என்று சொல்ல, தமிழோ “சும்மா தீனு சொன்னா நம்ம நாக்கு சுடாது ஆது” என்று சொல்ல, ஆது அவனை முறைத்தாள். பின் அவனிடம் “இந்த வியாக்காணம் பேசறதை விட்டுட்டு கண்டினீயூ பண்ணுங்க” என்றாள்.



தமிழோ சிரித்துக் கொண்டே “இப்படியே நீ இருந்தா உன்னை சீக்கிரமா நான் காதலிக்க வச்சுறுவேன். சும்மா சொன்னதுக்கே பதட்டபப்டுறையே செல்லம்” என்று ஆதுவின் அருகில் வர, ஆது அவனை தள்ளிவிட்டாள்.



“என்ன பேசறதா இருந்தாலும் தள்ளி இருந்தே பேசுங்க.. எனக்கு நல்லா காது கேட்கும்” என சிறு முறைப்புடன் சொல்ல, தமிழ் வாய்விட்டே சிரித்தான்.



“என்ன டார்லிங்? இப்படி ஒரு கிஸ்க்கே இந்த நிலமைனா எப்படி நான் உனக்கு என் காதலை புரிய வைப்பேன்” என்று போலியாக சோக கீதம் வாசிக்க, ஆதுவோ “இந்த நடிப்பு எல்லாம் வேண்டாம் மிஸ்டர். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க” என தமிழும் சொல்ல ஆரம்பித்தான்.



“நீயே யோசி ஆது.. எப்போடா என்னையும் நம்ம கம்பெனியும் சாய்க்கலாம்னு இருக்கவங்க கிட்ட நானே இவுங்க எல்லாரையும் காட்டிக் கொடுத்தேன்னா இவுங்களை அழிச்சு அதன் மூலமா நம்மள அழிக்க பார்ப்பாங்க.. அதான் நம்ம கிட்ட அடைக்கலம் தேடி வந்தவங்களை நான் இஸீயா வெளிக்காட்டாம என்னால ஆன உதவியை அவுங்களுக்கு மறைமுகமா செய்யறேன்” என்றான்.



ஆதுவோ “இப்போ எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்க தமிழ்? என் மூலமா அவுங்களுக்கு ஏதாவது உதவி வேணுமா?” என்று கேட்க, தமிழோ “அதுவும் தான். ஆனால் நீ தான சொன்ன எங்கையாவது அமைதியான இடத்துக்கு போகனும்னு.. அதான் உன்னை இங்க் கூட்டீட்டு வந்தேன்” என்று கூறியவாறே காரை ஆசிரமத்தில் நிறுத்தினான்.



அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைவருமே ஆசிரமத்தில் இருந்தனர். குழந்தைகள் அங்கிருக்கும் சிறு மைதானம் போன்ற அமைப்பில் விளையாடிக் கொண்டிருக்க வயதானவர்களோ தோட்டத்தில் நடந்தவாறும் அமர்ந்து பேசியவாறும் இருந்தனர்.



தமிழின் கார்ச் சத்தத்தில் திரும்பிய பெரியவர்கள் எழுந்து நிற்க, தமிழோ முகத்தில் என்றும் இல்லா மகிழ்ச்சியுடன் இறங்கி ஆது இறங்குவதற்கும் கதவை திறக்க செல்ல ஆதுவோ “எனக்கே இறங்க தெரியும்” என்று கூறி அவனுடன் அவர்களை நோக்கி சென்றாள்.



இருவரையும் ஜோடியாக பார்த்தவர்களின் கண்கள் மகிழ்ச்சியை பிரதிபலித்தது. அவர்களில் ஒருவர் “போங்க யாரவது ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வாங்க.. முதல்முதலா புள்ளைங்க ஜோடியா வருதுங்க” என்று சொல்ல ஒரு பெண் ஆரத்தி கரைத்து எடுத்துவர சென்றார்.



இதற்குள் அனைவரையும் நெருங்கிய ஆத்விகா அவர்களை ஒரு சிரிப்புடன் பார்த்துக் கொண்டே “வணக்கம் “ என்று மரியதையாக கைகூப்பி சொன்னாள். பின் அங்கிருக்கும் அனைவரிடம் ஆசி வாங்க குனிய தமிழும் அவளுடன் குனியும் பொழுது அனைவரும் இருவரையும் தடுத்து நிறுத்தினர்.



பின் இருவரிடமும் “எங்க ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும் தங்கங்களா” என்று அங்கிருக்கும் ஒரு மூத்த பெண் கூற அனைவரும் அவரை ஆமோதித்தனர். பின் ஆரத்தி எடுத்துக் கொண்டு வர இருவரையும் ஜோடியாக நிறுத்திவைத்து அவர்களுக்கு ஆரத்தி சுற்றி உள்அழைத்து சென்று அமர வைத்தனர்.



இதற்குள் அங்கிருக்கும் சிறுவர்கள் தமிழிடம் வந்து அவனை சூழ்ந்துக் கொண்டு அவனிடம் “அண்ணா எங்களுக்கு சாக்லேட், பொம்மை” என கேட்க தமிழோ அவர்களிடம் “மறந்துட்டு வந்துட்டேன் குட்டிங்களா.. ஆனால் உங்களுக்கு உயிரோட இருக்க பொம்மையை இன்னைக்கு ஒரு நாள் மட்டும் விளையாட தரேன். ஆனா அப்புறம் என்கிட்டையே திருப்பி கொடுத்தரனும்” என்று சொல்ல, குட்டீங்களும் ஆர்வம் ஆகினர்.



ஆது அவனின் முகத்தில் வரும் பாவனைகளையும் மலர்ச்சியையுமே பார்த்துக் கொண்டிருந்தாள். எப்போழுதும் இருக்கமாக இருக்கும் தமிழின் முகம் இன்று மென்மையாக இருந்தது கூடவே சிரிப்புடன்.



குட்டீஸ்களும் “எங்க அண்ணா அந்த பொம்மை? நாங்க விளையாட எடுத்துட்டு போறோம்” என சத்தமிட, தமிழோ அருகில் இருக்கும் ஆதுவை கை காட்டினான் “இதுதான் உங்களோட இன்னைக்கு விளையாட வந்திருக்க பொம்மை” என்று கூற ஆதுவோ தமிழின் இடையில் அழுத்தமாக கிள்ளினாள்.



அதில் நெழிந்த தமிழ் “எதுக்கு இப்படி கிள்ளுற??” என்று கேட்க, ஆதுவோ “கிள்ளினதோட நிறுத்தீட்டனேன்னு சந்தோசப்படுங்க” என்று கடிந்தாள். அதே நேரம் குழந்தைகளில் நான்கு வயதான ஒரு வாண்டு “அண்ணா உண்மையா இவுங்க பொம்மையா?.. என்கூடவே இருப்பாங்களா? நல்லா விளையாடுவாங்களா பாப்பாக் கூட” என தன்னை தொட்டுக் கொண்டே தன் மழழை மொழியில் கேட்க, ஆதுவோ அக்குட்டியை அள்ளிக் கொண்டாள்.



அக்குழந்தையிடம் “அச்சோ அழகு பேபி நீங்க.. பாப்பாவா நீங்க..பாப்பா பேரு என்ன? பாப்பாக்கூட பொம்மை விளையாட வரனுமா? என்ன விளையாடலாம்?” என கேட்டுக் கொண்டே அக்குட்டியின் கன்னத்தில் முத்தமிட்டள்.



அவ்வாண்டோ “நோ கிஸ்..”என்று கூறிக் கொண்டே தன் கன்னத்தை துடைக்க, அதன் அழகில் மயங்கிய ஆதுவோ “ஓ பாப்பாவை கிஸ் பண்ண கூடாதா?” என கேட்டுக் கொண்டே மறுமுறையும் முத்தமிட்டாள். அதில் அப்பிஞ்சு உதடை பிதுக்கி அழுகைக்கு தயாராக, ஆதுவோ அவசரமாக தமிழை திரும்பி பார்த்தாள்.



தமிழோ சிரித்துக் கொண்டே அக்குட்டியை வாங்கி “அச்சோ குட்டி பாப்பா அழக்கூடாது.. ஆதிரா பாப்பா அழுகலாமா? நாம பொம்மையை டிஸ்ஸூம் பண்ணீரலாம்” என்று சொல்லிக் கொண்டே ஆதுவின் கன்னத்தில் குழந்தையின் கை பிடித்தே மெதுவாக குத்தினான். ஆதுவும் அழுவதுபோல் முகத்தை வைத்து அப்பிஞ்சை பார்க்க, அப்பூங்குட்டியோ தமிழின் தோளில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு ஆதுவை எட்டிப் பார்த்து சிரித்தது.



இதற்குள் மற்றவர்கள் இருவருக்கும் சாப்பிட சிறிது இயற்கை வகையான சிற்றூண்டிகளை எடுத்துவர குழந்தைகளும் அதில் தன் கவனத்தை திருப்பி விளையாட சென்றனர்.



சிற்றூண்டியை சாப்பிட்ட ஆது “எல்லாம் சூப்பரா இருக்குமா.. நான் இதுவரைக்கும் இது எல்லாம் சாப்பிட்டதே இல்லை” என்று கூற, அங்கிருக்கும் பெண்களில் ஒருவர் “இது எல்லாமே இங்க பின்னாடி இருக்கிற இடத்துல நாமளே விளைச்சதுடா. அதான் எல்லாமே இயற்கையா ரொம்ப சுவையா இருக்கு.. இது பனிவரகுடா.. நம்ம நார்மல் வரகு இல்லை.. அதான் நீ இதை சாப்பிட்டு இருக்க மாட்ட” என்று சொன்னார்.



ஆதுவோ “ அது என்னமா பனி வரகு?” என்று கேட்க, அவரோ “இது பனிகலாங்கள்ல காலையிலையே வளர்ந்துரும்டா.. வறட்சிகாலத்துல வளராது.. ரொம்ப சீக்கிரமா வளரக்கூடிய தானியம். இது பனியில வளரதுனால இதுக்கு பனிவரகுனு பேருடா” என்றார்.



ஆது “சூப்பரா இருக்குமா இது சாப்பிட” என்று சொல்லி சாப்பிட்டாள். பின் அங்கிருக்கும் குட்டிகளுடன் விளையாடி அனைவரிடமும் இன்முகமாக பேசி இருவரும் விடை பெற ஆதிரா தமிழை விட்டு இறங்க மாட்டேன் என அடம்பிடிக்க, ஆதுவோ அக்குழந்தையை பின்னால் இருந்து எடுத்தப்படியே “அண்ணா வண்டி ஓட்டட்டும்.. நாம பக்கத்துல உட்கார்ந்துக்கலாம்” என்று சமாதானப் படுத்தி அக்குழந்தையுடன் ஒரு சுற்று சுற்றி வந்து குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தங்கள் இல்லம் வந்தனர்.



இதுதான் முதல் முறை. ஆதுவும் தமிழும் ஒன்றாக வெளியில் செல்லுவது. திருமணத்திற்கு பின் அவனுடன் எங்கும் செல்லாமல் மறுத்துக் கொண்டு வந்த ஆத்விகா தமிழுடன் எதிர்பாரமல் சென்றதை உண்மையாலுமே மகிழ்வாக உணர்ந்தாள்.



இல்லம் வந்த ஆதுவை எதிர் கொண்ட திவி “எங்க போன ஆது.. போலீஸ் ஸ்டேசனுக்கு போன பின்னாடி கொஞ்சமாவது எங்களுக்கு கால் பண்ணி சொல்லனும்னு உனக்கு தோணுச்சா.. இதுல கார்த்தி வேற அப்பப்போ கால் பண்ணீ நீ வந்துட்டியா? ஏதாவது கால் பண்ணீனியானு கேட்டுட்டே இருக்காரு. அவர் விடாம கால் பண்றதை பார்த்து அங்க எல்லாரும் ஏதோ பிரச்சனைனு அவுங்களாவே புரிஞ்சுட்டு இங்க வந்துட்டு இருக்காங்க” என்று சொன்னாள்.



இதைக் கேட்ட ஆதுவோ “என்னது வந்துட்டு இருக்காங்களா? சும்மாவே அரசி என்னை திட்டும். இதுல நான் அந்த பொறூக்கியை அடிச்சது தெரிஞ்சுதுனா என்னை ரொம்ப பேசுமே” என புலம்ப தேவாவோ “அட நம்ம வீரமங்கையா அம்மாவ பார்த்து பயப்படுறது?” எனக் கேட்டான்.



திவியோ “அது பயம் இல்லைங்க.. எல்லாம் நடிப்பு.. இவ புலம்பறதை பார்த்து நீங்க நம்பாதீங்க.. அரசிமா இவளை திட்ட திட்ட கடைசியில அவுங்களை நம்ம கிட்ட திருப்பி விட்டுட்டு மேடம் எஸ் ஆகிறுவாங்க” என்று சொன்னாள்.



தேவாவோ “அப்படி எல்லாம் பண்ணுவீங்களா நீங்க?” என கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவர்களின் போர்டிக்கோவில் இன்னோவா கார் வந்து நின்றது.



நால்வரும் எழுந்து வருபவர்களை வரவேற்க, அரசியும் கலாவும் முதல் ஆளாக உள்ளே வந்தனர். பின்னாலையே மாறனும் கரணும் பதட்டமாக வந்தனர். கார்த்தியோ மதுவுடன் உள்ளே வந்தவன் நால்வரையும் பார்த்து சிரித்துக் கொண்டே தமிழையும் தேவாவையும் அணைத்து விடுவித்தான்.



மது அவள் தோழிகளை கண்ட சந்தோசத்தில் அவர்களை அணைத்து விடுவித்தவள் அவர்களுடனே அமர்ந்து கொண்டாள்.



உள்ளே வந்த அரசி ஆதுவிடம் “நீ உனக்கு கல்யாணம் ஆனதை மறந்துட்டியா ஆது? கல்யாணத்துக்கு முன்னாடிதான் ஊர் வம்பை விலைக்கு வாங்கிட்டு வந்தேன்னு பார்த்தா, இப்பவும் அதையே பண்ணற.. “ என்று ஆரம்பிக்கவும் ஆது கார்த்தியை முறைத்தாள்.



அவள் முறைப்பதை பார்த்த கார்த்தி “என்னை ஏன் ஆது முறைக்கிற? நான் ஒன்னுமே சொல்லலை.. கரணப்பா ஹாஸ்பிட்டல் வரவும் அவருக்கு விசயம் தெரிஞ்சு மாறனப்பா கிட்டையும் அரசிமா கிட்டையும் சொல்லீட்டாறு.” என்று சொன்னான்.



ஆதுவோ கரணிடம் “ஏன்ப்பா இந்த வேலை? நானே சமாளிக்க மாட்டேனா? இப்போதான மாறானப்பாக்கு ஆப்ரேசன் முடிஞ்சுது” என சொல்ல அரசியோ “அந்த நினைப்பு உனக்கு கொஞ்சமாவது இருந்திருந்தா நீ இந்த வேலையெல்லாம் செய்வியா?” என கேட்டார்.



ஆதுவோ “என்னை கொஞ்சம் முழுசாதான் பேசவிடேன்மா” என்று சொல்லிக் கொண்டே சமையலறைக்கு சென்று அவர்களுக்கு குடிக்க ஜூஸ் தாயாரித்தாள். பின் அவற்றை அவர்களுக்கு கொடுத்துக் கொண்டே மாறனிடம் வந்தவள் “இவருக்கு இப்போதான் ஆப்ரேசன் ஆகிருக்கு. அவரை ஏன் அங்கையும் இங்கையும் அலைய வைக்கறீங்க.. சொல்லிருந்தா என்னை திட்டறதுக்கு நானே அங்க வந்திருப்பேன்லனு சொல்ல வந்தேன் மா” என்று சொல்லி மாறனிற்கு அருகில் அமர்ந்தாள்.



அரசியோ “உனக்கு கொழுப்பு கூடிப்போச்சு ஆது.. எல்லாம் சம்மந்தி அம்மாவை சொல்லனும். உன்னை அவ்ளோ சொகுசா இங்க வைச்சிறுக்கவும் தான நீ ஊர் வம்பை விலைக்கு வாங்கிட்டு இருக்க” என்றார்.

இவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல் கார்த்தியும் தேவாவும், மதுவும் திவியும் கலாவும், கரணிடம் மாறனிடமும் தமிழும் என தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.



அரசியின் கூற்றில் அயர்ந்து போன ஆது “ஏம்மா நல்ல இருக்கிற என் மாமியாரை உன்னை மாதிரி மாத்த திட்டம் போடற? அவுங்க இருந்தாலும் என்னை ஒன்னும் சொல்லமாட்டாங்க.. நான் பண்றது சரிங்கறதுனால தான் தமிழே எனக்கு சப்போர்ட் பண்றாங்க” என்றாள்.



அரசியோ “அடிக்கழுதை... மாப்பிளையை பேரு சொல்லியா கூப்பிடுற? இதுக்கு அவரும் உடந்தையா? அப்புறம் நீ வம்பை வளர்க்காம என்ன பண்ணுவ? என்று புலம்பியவர் திவியிடம் திரும்பி “திவிக்குட்டி நீயும் மாப்பிளையை பேரு சொல்லிதான் கூப்படறையா?” எனக் கேட்க திவியோ மலங்க மலங்க விழித்தாள்.



தேவாவோ அவரிடம் “பேரு எல்லாம் சொல்ல மாட்டாங்க அத்தை இரண்டு பேருமே.. உங்ககிட்ட வேணும்னேதான் ஆது விளையாடறாங்க” என்று சொன்னான்.



தமிழும் “ஆமாங்கத்தை.. நீங்க டென்சனாகாதீங்க.. ஆதுக்கு எதுவும் ஆகாது” என்று சொல்ல அரசியோ “இதுவரைக்கும் இவ சாதாரணமானவங்களை அடிச்சானு இவ அப்பாவும் சமாதானம் பேசி அவுங்களை சரிகட்டுனாரு.. இப்போ இவ கை வச்சிறுக்கிறது போலீஸ்மேல மாப்பிளை.. அவனுங்க சும்மாவே வம்பு பண்ணுவாங்க.. இதுல இவ போய் தலையை கொடுத்திட்டு வந்திருக்கா.. இவளுக்கு ஏதாவது ஆகிறுமோனுதான் மாப்பிளை என் பயமே” என்றார்.



தமிழும் அவரிடம் “உங்க மகளா இருந்தவரை எப்படியோ அத்தை.. ஆனால் என் மனைவி ஆனதுக்கு பின்னாடி என் நிழலை தாண்டிதான் ஆது மேல கைவைக்க முடியும் மத்தவங்கனால.. சோ என் மனைவியை என்னால பாதுகாக்க முடியும்.. நீங்க அந்த பொறுக்கிக்காகலாம் பயப்படாதீங்க” என்றான்.



ஆனால் அரசியின் பயம் உண்மையானது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top