• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode கனலிடம் காற்றுக்கென்ன நேசம் - 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Arumbu

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Sep 10, 2020
Messages
152
Reaction score
233
Location
Cbe
inbound451273737.jpg



KKN - 19

நாட்கள் அப்படியே செல்ல திவி மற்றும் தேவாவின் வாழ்க்கை தெளிந்த நீரோடையாகவும் மகிழ்ச்சியாக செல்ல, தமிழ் மற்றும் ஆதுவின் வாழ்க்கை அதற்கு அப்படியே எதிர்பதமாக அடிதடியாக சென்றது.



அன்றும் அப்படியே, ஆது அவள் அறையில் மருத்துவமனை செல்வதற்காக அவசரமாக ரெடியாகிக் கொண்டிருந்தாள். “மணி வேற ஏழு ஆகிடுச்சு.. இனி நான் எப்போ கிளம்பி? எப்போ ஹாஸ்பிட்டல் போய் சேருவது? இதுல இந்த தமிழை வேற காணோம் நான் எந்திரச்சுதுல இருந்து?” என புலம்பிக் கொண்டே தயாராகிக் கொண்டிருந்தாள்.



சற்று நேரத்தில் தயாராகிய ஆது, டைனிங் ஹால் வர அங்கு திவி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவளிடம் ஆது, “என்னடா நீயும் இன்னிக்கு லேட்டா? சீக்கிரமா சாப்பிட்டுட்டு போலாம்” என சொல்லியவாறே தட்டை எடுத்து அமர்ந்தாள்.



அவள் தட்டை எடுத்து டேபிளில் இருந்த பாத்திரத்திலிருந்து இட்லியை வைத்து சாப்பிட போக, அத்தட்டை பின்னால் இருந்து எடுத்தான் தமிழ்.



ஆதுவோ கோவமாக “ஏன் தமிழ்? சாப்பிடற தட்டை இப்படி பறிக்கறீங்க? நான் செம பசியில இருக்கேன். ஹாஸ்பிட்டலுக்கும் டைம் ஆச்சு” என்று கூற, தமிழோ அவள் முன்னாள் மூடிவைக்கப்பட்டிருந்த பாத்திரத்தை வைத்தான். பின் அவனே “இன்னிக்கு உனக்கு நோ இட்லி... உனக்கு பிடிச்ச டிஸ்ஸ நான் என் கையாலையே செஞ்சுறுக்கேன்.. சோ உன் ஆசை தீர ஃப்புல்லா சாப்பிடு” என்று கூறி ஆது வைத்த இட்லியை அவன் சாப்பிட்டான்.



ஆதுவோ “எது நீங்க செஞ்சதா? அதும் எனக்கு பிடிச்சதா?.. விளையாடாதீங்க தமிழ்.. நான் இட்லியையே சாப்பிட்டுக்கிறேன்” என்று அவள் மறுபடியும் இட்லி வைக்க போக, திவியோ “ஆது அதான் தமிழ் சொல்றாங்கல, அது என்ன டிஸ்னு ஆவது திறந்து பாரு.. கொஞ்சமா சாப்பிடு.. பாரு அவர் முகமே டவுன் ஆகிடுச்சு” என்று சொல்ல ஆது தமிழை திரும்பி பார்த்தாள்.




தமிழோ உப்பென முகத்தை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்க அதைப் பார்த்து சிரித்த ஆது “சரி சரி முகத்தை அப்படி வைக்காதிங்க.. நான் நீங்க செஞ்சதை சாப்பிடறேன்” என்று பெயருக்காக கூறி அவன் வைத்திருந்த பாத்திரத்தை திறந்தாள்.



அதில் அழகாக அடிக்கவைக்கப்பட்டிருந்தது பட்டர்நானும் நெய் தோசையும் பூரியும். உண்மையாலுமே அதை பார்த்ததும் ஆதுவிற்கு நாக்கில் எச்சில் ஊறியது.


அவள் பள்ளிகாலங்களில் சாப்பிட்ட பதார்த்தங்கள் அவை. எப்பொழுது மருத்துவதுறையில் கால் பதித்தாளோ அப்பொழுதோ கொழுப்பு சார்ந்த பதார்த்தங்களை ஒதுக்கிவிட்டாள். அவளும் சாப்பிடமாட்டாள் அவள் சுற்றி இருப்போரையும் சாப்பிட விடமாட்டாள்.



இன்று தமிழ் அவள் முன்னால் இவ்வுணவுகளை வைத்திருக்கவும் ஆது மனதிற்குள் “வாவ் எல்லாமே நமக்கு பிடிச்ச ஐட்டங்களா இருக்கே!! இப்போ என்னால சாப்பிடவும் முடியாது.. சாப்பிடாம இருக்கவும் முடியாது.. என்ன பண்றது’ என யோசித்துக் கொண்டே சுற்றி பார்க்க திவியோ தட்டில் பட்டர் நானையும் பூரியையும் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.



அதை பார்த்து கடுப்பாகிய ஆது அவளிடம் “நீயெல்லாம் டாக்டரா? இப்படி மார்னிங்கே இவ்ளோ ஆயில் ஐட்டம்ஸ் சாப்பிடற.. உனக்கு அறிவே இல்லையா திவி” என கடுப்பாக சொல்ல, திவியோ “இங்கப்பாரு நீதான் சாப்பிடலைனா என்னையும் சாப்பிட விடாம பண்ணாத..”



“உன்கூட சேர்ந்து தினமும் இட்லி, ராகிக்கூழ்னு காலையில சாப்பிட்டு சாப்பிட்டு பாரு எவ்ளோ இளைச்சு போய்ட்டேன்” என்று கூறி எழுந்து காமிக்க ஆதுவோ அவளை முறைத்தாள்.




“எது நீ இளைச்சுட்டியா? எதுக்கு இப்படி காலையிலையே பொய் பொய்யா பேசற?” என்றவள் அப்பாத்திரத்தை மூடிவைத்தாள்.



பின் தட்டில் இட்லையை வைக்க போக அதை தடுத்த தமிழ் அவள் தட்டில் பட்டர்நானையும் வைத்து அதற்கு பாலக் பண்ணீரையும் வைத்தான். அதை பார்த்த ஆது தமிழை முறைக்க, அவனோ “இன்னைக்கு ஒருநாள் சாப்பிட்டா ஒன்னும் உன் உடம்புல கொழுப்பு கூடிறாது.. அமைதியா சாப்பிடு” என்று சொல்ல ஆது அவனை முறைத்துக் கொண்டே “தட்டில வைச்ச எதையும் வேஸ்ட் பண்ணக்கூடாதுனு தான் நான் சாப்பிடறேன்” என்று கூறி சாப்பிட தமிழும் “ஓகே ஒகே சாப்பிடு இதை மட்டும்” என்று கூறி அவன் தட்டில் கவனமானான்.



சாப்பிட தொடங்கிய ஆது “என்ன ஒன்னே ஒன்னு மட்டும் வச்சிறுக்கான்.. இதுல நல்லா சாப்பிடுனு வேற சொல்றான். இன்னும் இரண்டு சேர்த்தி வச்சிறுந்தா என்னவாம்’ என்றவள் கூடவே “எல்லா ஐட்டத்தியும் இன்னைக்கே செய்யாம நாளைக்கும் செஞ்சிருந்துருக்கலாம்.. நான் நாளைக்கும் நல்லா சாப்பிட்டிருப்பேன்” என்று தனக்குள் புலம்பியவாறே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.



ஆதுவின் முகத்திலிருந்தே அவளின் எண்ணப்போக்கை கண்டுகொண்ட தமிழ் தனக்குள் சிரித்தவாறே அவள் தட்டை கவனுமுடன் பார்த்துக் கொண்டான். அவள் தட்டில் நான் தீந்ததும் அடுத்து ஒன்றை தமிழ் வைக்க ஆது அவனை முறைத்தாவறும் உள்ளுக்குள் சந்தோசமாகவும் சாப்பிட்டாள்.



பின் காலை உணவு முடிந்த உடன் தன் ஸ்டெத்தை எடுத்துக் கொண்ட ஆது திவியை அழைத்து “நீ எப்படி வர? தேவாகூடவா? இல்லை என்கூடவா?” என்று கேட்க, திவியோ “நான் தேவா கூட வந்தறேன்’ என்று சொன்னாள்.



ஆதுவும் “ஓகே.. நான் கிளம்பறேன் கைய்ஸ்” என்றவள் தன் கார்சாவியை தேட அதுவோ அவளிடம் சிக்காமல் இருக்க ஆது “எங்கேதான் போகுமோ இந்த சாவி.. எனக்கு ஆல்ரெடி லேட் ஆச்சு.. இன்னைக்குனு எனக்கு இப்படியா நடக்கனும்” என புலம்பியவாறே தேடிக் கொண்டிருந்தாள்.



தமிழோ அவள் கார் சாவியை தன் கால் பேண்டிற்குள் போட்டவன் ஏதும் தெரியாததுபோல் அவளிடம் “நான் அந்த வழியாதான் போறேன் ஆது.. உன்னை டிராப் பண்ணீரட்டுமா ஹாஸ்பிட்டல்ல?” என்று கேட்க, ஆதுவோ “ஓகே தமிழ். நான் இன்னைக்கு ஒருநாள் மட்டும் என்னை டிராப் பண்ணுங்க” என்று சொல்லி அவன் காரில் அமர்ந்தாள்.



தமிழும் தன் காரில் ஏறி அமர்ந்தவன் ஆதுவிடம் “இன்னைக்கு உனக்கு முக்கியமான கேஸ் ஏதாவது இருக்கா?” என்று கேட்க, ஆது “அப்படிலாம் இல்லை இன்னைக்கு.. ஓபி கொஞ்சம் பாத்துட்டு என் பேசண்ட்ஸை மட்டும் தான் பார்ப்பேன். நாளைனைக்கு எனக்கு முக்கியமான ஹார்ட் சர்ஜெரி இருக்கு.. அதுக்கு கொஞ்சம் முக்கியமான டெஸ்ட் எடுக்கிற வேலைகள்தான் இருக்கும்” என்றாள்.



தமிழோ அவளிடம் “அப்போ நாளானைக்கு அப்புறம் நீ ஃப்ரீயா?” என்று கேட்க ஆது அவனிடம் “லூசாங்க நீங்க? இந்த ஃப்பீல்டுல எப்படி இனி வரப்போற நாளுல நான் ஃப்பீரியா இல்லையானு சொல்ல முடியும்? அப்போ இருக்கிற நேரத்தை பொறுத்துதான் என் ஃப்பீரி டைம்” என்றாள்.



தமிழோ ஆதுவிடம் “அதும் சரிதான்.. ஆனா நீ இப்படியே பிசியா இருந்தா நான் எப்படி என் காதலை உனக்கு புரிய வைப்பேன்?” என்று கேட்க, ஆதுவோ “அது உங்க சாமார்த்தியம்.. எனக்கு அதுபத்தியெல்லாம் கவலை இல்லை..” என்று தோள் குழுக்கி சொன்னாள்.



தமிழும் “அதும் சரிதான்..” என்றவன் “இன்னைக்கு உனக்கு ஹஸ்பிட்டல்ல ஏதாவது பிராப்லம் வந்துச்சுனா டக்குனு கையை நீட்டாத.. எனக்கு கால் பண்ணு இல்லைனா மாமாக்கு கால் பண்ணு.. நீயா ஒரு முடிவு எடுத்து செய்யாத.. அந்த இன்ஸ்பெக்டர் இன்னைக்குதான் டிஸ்சார்ஜ் ஆகறான். சோ கேர்ஃப்புல்லா இரு அத்விகா” என்று சொல்லி ஆதுவை மருத்துவமனையில் விட்டவன் தன் கம்பெனியை நோக்கி சென்றான்.



அதே நேரம் சக்திக்கு சொந்தமான, முழுவதும் கட்டி முடிக்கப்படாத ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் பத்தாவது தளத்தில் அமர்ந்திருந்தான் அவர்களின் கூட்டாளிகளுடன்.



சக்தி வெள்ளைவேட்டி சட்டையில் கொஞ்சம் உடம்புடன் ஐந்தரடி உயரத்தில் மாநிறத்துக்கும் கொஞ்சம் அதிக நிறத்துடன் இருந்தான். வட்டி தொழில் செய்து பிழைப்பதினாலோ என்னவோ கழுத்திலும் கைகளிலும் தங்கத்தால் ஆன தடிமனான சங்கலிகளையும் மோதிரங்களையும் அணிந்திருந்தான்.



தன் முன்னால் இருந்த மது கோப்பையில் இருக்கும் மதுவை மெதுவாக குடிக்கும் போது, அவனின் கூட்டாளிகளில் ஒருவன் “ஏன் சக்தியண்ணா இன்னும் எதுக்கு இந்த தமிழை விட்டு வச்சுறுக்கீங்க?.. அன்னைக்கு அவன் அப்படி உங்களை மிரட்டும் போதே நீங்க அவன போட்டிருந்தா இப்போ அவன் நம்ம ஆளுங்களை கொன்னுருக்க மாட்டான். கிடைச்ச சான்ஸை விட்டுட்டு இப்போ உட்கார்ந்துட்டுறுக்கீங்களே.. இனி என்ன பண்ணப்போறிங்க அண்ணா?” என்று கேட்டான்.



சக்தியோ “அவனை போட்றதுக்கு எல்லாம் பக்காவா பிளான் பண்ணியாச்சு... ஆனால் அதுக்கு முன்னாடி எதுக்காக என் விசயத்துல மூக்கை நொழைச்சானோ அதுக்கான காராணி மட்டும் இனி இருக்க கூடாது.. அதுனால மாறன் குரூப்பையும் அழிக்கிறதுக்கும் அவன் மனைவி அந்த அவசரகுடுக்கையையும் போட்றதுக்கு எல்லாம் ரெடி பண்ணியாச்சு.. இன்னைல இருந்து அவுங்களுக்கான அழிவு ஆரம்பம்” என சொன்னான்.



மற்றொருவனோ “மாறன் குரூப்பை என்ன அண்ணா பண்ணப்போறீங்க.. இப்போ அந்த கம்பெனி இருக்கிற நிலமைக்கு அதை எப்படி உங்க பேர்ல மாத்தலாம்னு பாருங்க.. சும்மாவா தமிழ்நாட்டுல டாப் பைவ் கம்பெனில அதுவும் ஒன்னு.. சோ அதுக்கான வேலையை பாருங்க அண்ணா” என்றான்.



அதற்கு சக்தியும் “அது எனக்கு தெரியாமையாடா.. இன்னும் கொஞ்ச நாள்ல கவர்மெண்ட் ஒரு டெண்டர் அனவுன்ஸ்மெண்ட் கொடுக்கப் போகுது.. அதுல கண்டிப்பா தமிழோட செந்தூரும் இருக்கும். மாறான் குரூப்பும் இருக்கும். இதுல அவன் கண்டிப்பா செந்தூருக்கு அந்த டெண்டர் கிடைக்கிற மாதிரிதான் செய்வான். ஏன்னா மாறன் குரூப் ஆல்ரெடி வளர்ந்த கம்பெனி.”



“இதை வச்சே நான் மாறன் குரூப்புக்குள்ள நம்ம ஆளுங்க மூலமா கலகம் பண்ணலாம். அந்த நேரத்துல அவன் மாறன் குரூப் பிரச்சனையை பார்ப்பானா? இல்லை கவர்மெண்ட் டெண்டரை பார்ப்பானா? ஒரு நொடிவிடாம நாம அவனுக்கு தொந்தரவு கொடுத்தோம்னா அவனுக்கு மற்ற பிரச்சனைகள்லாம் பின்னாடி போகும். அந்த டைம்ல நாம அந்த லூஸை தூக்கனும்.. அதுக்குதான் அவங்களுகே தெரியாம நம்ம ஆளுங்களை ஃப்பாலோ பண்ண சொல்லீறுக்கேன்.. தக்க நேரம் பார்த்து நாம வேலையை செஞ்சா போதும்” என்றான்.



அவன்கூட இருந்தவர்களில் ஒருவன் “அண்ணே அந்த தமிழ் கூட தேவானு ஒருத்தனும் வீரானு ஒருத்தனும் இருக்கானுங்க.. அவனுகளை தாண்டி நாம நினைச்ச வேலையை செய்ய முடியுமா?” என்று கேட்டான்.



சக்தியோ “அவனுங்க இருந்தா நம்மனால முடியாதா? அங்கயாவது வெறும் இரண்டு பேர்தான் இருக்காங்க.. இங்க நீங்க இவ்ளோ பேர் இருக்கீங்கள்ல... உங்கனால முடியாதா அந்த தமிழையும் ஆதுவையும் போட?” என்று கேட்டான்.



அதற்கு மற்ற அனைவரும் “எங்கனால கண்டிப்பா முடியும். நாங்க அவுங்க இரண்டு பேரையும் போட்டுட்டு உங்க கிட்ட பேசறோம்” என்று சொன்னார்கள்.



மருத்துவமனைக்கு வந்த ஆது அவள் அறையில் ஓபி பார்த்துக் கொண்டிருக்க அந்த இன்ஸ்பெக்டரின் மனைவி அவள் அறைக்கு வந்தார். வந்தவரை அமர சொன்ன ஆது “இப்போ உங்க பொண்ணுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.. நீங்க கவலை படாதீங்க.. இன்னும் ஒரு சில டெஸ்ட் எடுத்துட்டு ஒரு இரண்டு நாளுல உங்க பொண்ணை நீங்க கூட்டிட்டு போகலாம்” என சொன்னாள்.



அவரும் ஆதுவிடம் கை எடுத்து கும்பிட்டவாறே “என் பொண்ணை காப்பாதினதுக்கு ரொம்ப நன்றிம்மா.. என் கணவன நீங்க ரொம்ப ஈஸியா எடுத்துக்காதீங்க மா.. அவன் ரொம்ப மோசமானவன்.. அத்தணைபேர் முன்னாடி நீங்க அவனை கை நீட்டினதுக்கு எப்படியாவது உங்களை பழிவாங்கனும்னு துடிப்பான்.. நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.. இப்போ ஏதாவது பண்ணீனா அவரை கண்டுபிடிச்சிருவாங்கனு காலம் தாழ்த்திகூட செய்யுற மனுசன் அவரு.. நீங்க உங்களை சுத்தி நடக்கிறதை எப்போதும் ஒரு சந்தேக கண்ணோட பாருங்கம்மா” என்று சொல்லி வெளியேறினார்.



ஆது அவர் கூறியவற்றை அசட்டையாக நினைக்க, அவளை சுற்றி அவளறியாமல் சதிவலை சக்தியின் மூலமும் அந்த இன்ஸ்பெக்டரின் மூலமும் பிண்ணப்பட்டது.
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top