• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode கனலிடம் காற்றுக்கென்ன நேசம் - 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Arumbu

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Sep 10, 2020
Messages
152
Reaction score
233
Location
Cbe
inbound1677615889.jpg


KKN - 20

அன்றைய நாள் தமிழிற்கு மிகவும் டென்சனாகவே கழிந்தது. அவனுடைய செந்தூர் கம்பெனி கட்டிடம் கட்டும் இடங்களில் எல்லாம், அங்கு வேலை செய்ய வரும் புது கட்டிட தொழிலாளிகள் மூலம் குழறுபடிகள் நடந்து வருவதால் அவனுடைய கட்டிடங்கள் கட்டும் பணி தாமதமானது.



தமிழ் தன் அறையில் கணினியில் எலிவேசன் (elevation) செய்து கொண்டிருக்கும் போது அவனுடைய அறைக் கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்த தேவா அவனிடம் “தமிழ்..“ என்றழைக்க, அவனும் கணினியை பார்த்துக் கொண்டே “சொல்லு தேவா” என்க, தேவாவோ “கொஞ்சம் என்னை பாரு..” என்று சொல்ல, தமிழும் “டேய் முக்கியமான இடத்துல இருக்கேன் டா.. இப்போ விட்டா அந்த வாலை (wall) மறந்துருவேன்... நீ சொல்லு நான் கேக்கறேன்” என்றான்.



தேவாவோ “தமிழ் இது சொல்லற விசயம் இல்லை.. பார்க்கிற விசயம்.. கொஞ்சம் இங்கப் பாரு” என்று கையிலிருந்த டேபை காட்டினான். தமிழும் “ப்ச்” என்று சலித்தப்படியே அதை பார்க்க, அதில் பார்த்த விசயம் அவனின் கண்களை விரிய செய்தது.



தமிழோ “என்னடா நடக்குது அங்க? எங்கே அந்த சைட் எஞ்னியர்? நீ அங்க போகாம இங்க வந்து காட்டிட்டு இருக்கிற? கிளம்பு போகலாம்” என்று அவன் செய்துக் கொண்டிருந்த வேலைகளை சேவ் செய்து கொண்டு கிளம்பினான், அவன் இப்பொழுது புதியதாக கட்டிக் கொண்டிருக்கும் கட்டிட்டத்திற்கு..



தமிழும் தேவாவும் அவர்கள் கட்டிக் கொண்டிருக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்திற்கு வர, அதன் அடித்தளத்திலையே அங்கே வேலை செய்யும் ஆண் தொழிலாளிகள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டிருக்க, பெண் தொழிலாளிகள் அவர்களை வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருந்தனர்.



அங்கு நடக்கும் சண்டைகளின் இரைச்சலில் தமிழின் கார் வந்ததை அவர்கள் யாரும் கவனிக்கவில்லை. தமிழும் தேவாவும் இறங்கி தன் காரில் சாய்ந்து நின்று அவர்கள் அடித்துக் கொண்டிருப்பதையே பார்த்திருந்தார்கள்.



பொறுத்து பொறுத்து பார்த்த தேவா, இப்பொழுது இவர்கள் இச்சண்டையை நிறுத்த மாட்டார்கள் என தெரிந்து கொண்டு “நிறுத்துங்க...”, ஜஸ்ட் ஸ்டாப் இட்” என்று சத்தமிட்டான்.



இவன் சத்தத்தில் அப்படியே நின்ற அனைவரும், சத்தம் வந்த திசையை பார்க்க, அங்கே காரின் முன்பக்கம் படு ஸ்டைலாக சாய்ந்து நின்று கைகளை கட்டியபடி தன் விழிகளால் அவர்களை தீர்க்கமாக பார்த்துக் கொண்டிருந்தான் தமிழ்.



அனைவரும் அமைதியானதும் தேவா தமிழிடம் “ஹாஸ்பிட்டலுக்கு நான் கால் பண்ணி முதலுதவி செய்யறதுக்கு வர சொல்றேன்” என்று சொல்லி செல்ல, தமிழ் தன் சட்டையை முட்டி வரை மடித்துக் கொண்டே வேக நடையுடன் அவர்களை தாண்டி சென்றான் தன் அலுவலக அறை நோக்கி.



சண்டை இட்டவர்களில் முக்காவாசி நபர்கள் சக்தியின் கூலிகள் என்பதால் இந்நேரத்திற்கு தமிழ் இங்கு வருவான் என எதிர் பார்க்காததாலும் அவர்களுக்கு என்ன செய்வது என தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதில் ஒரு நபர் அவன் தலைவனிடம் “என்னண்ணா? இவன் வரமாட்டான்னு சொன்னதுனால தான இன்னைக்கு நம்ம இங்க வந்து நம்ம கைவரிசையை காட்டினோம். இப்போ என்னன்ன இப்படி வந்து நிக்கிறான்? அவனுக்கு நாம அவன் ஆளுக இல்லைனு தெரிஞ்சுட்டா பிரச்சனை அதிகம் ஆகறதை விட நம்ம உயிருக்கே ஆபத்து வரும்ண்ணா” என்று சொல்ல, அவன் தலையோ



“அது தெரியாமையாடா நான் இங்கே இருக்கேன். ஒன்னும் சொல்லாம போய்ட்டான்.. நீ நம்ம ஆளுகளை எல்லாம் கூட்டிட்டு வா பின்னாடி இருக்க கேட் வழியா போய்றலாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே தமிழின் தொழிலாளிகள் அனைவரும் கட்டிடத்தின் உள் சென்றனர்.



அதை பார்த்த ஒரு அடியாள் “என்னண்ணா? இதுக எல்லாம் உள்ளப் போகுதுங்க? இப்போ நாம என்ன பண்றது?” என்று கேட்க, தலைவனோ, “இப்போவே போய்றலாம். அந்த தமிழ் கிட்ட நம்ம ஆட்கள் எவனும் மாட்டக் கூடாது.. சீக்கிரம் வாங்க” என்று சொல்லி, பின் வாயிலை நோக்கி சென்றான். அவனின் கூலிகளும் அவனை தொடர்ந்து சென்றனர்.



இதற்குள் உள்ளே சென்ற மற்றவர்கள், தமிழின் அறை முன்னே நின்று கொண்டிருந்தனர். அதிலிருந்த சித்தாள் ஒருத்தி (பெண் தொழிலாளி) மேசனிடம் (கட்டிடம் கட்டுபவர்) அண்ணா நீங்க உள்ளப் போங்க.. போய் என்ன நடந்துச்சுனு பொறுமையா எடுத்துச் சொல்லுங்க அண்ணா... சார் வேற எதுவும் சொல்லாம போய்ட்டாரு.. தேவா சாரும் இன்னும் உள்ள வரவே இல்லை..” என்று சொல்ல, அவரும் “தேவா சார் வரட்டும்.. அவர் உள்ள போனதுக்கு அப்புறம் நான் உள்ள போயி சொல்றேன். இப்போ நான் போனா அவரு இருக்கிற கோவத்துக்கு என்னை அடிச்சாலும் அடிச்சுருவாரு” என்று பயந்தான்.



அப்பெண்ணோ “இனிமேல் தான் உங்களுக்கு அடி பட போகுதாண்ணா? அவர் இருக்கிற கோவத்துல நமக்கு இங்க வேலை இல்லைனு சொல்லிட்டாருனா நம்ம வயித்துபாட்டுக்கு என்ன பன்றதுண்ணா? நீங்க அவர் கிட்ட போய் நம்ம பக்கம் இருக்கிற நியாயத்தை சொல்லுங்க அண்ணா” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளுக்குள்ளிருந்து தமிழ் வேகமாக வெளியில் வந்தவன், அவர்கள் அனைவரும் தன் அறையின் முன்னால் இருப்பதை பார்த்து “என்ன உங்களுக்கு எல்லாம் வேலை செய்யனும்னு இல்லையா? காலையிலிருந்து வேண்டாத வேலை பண்ணி இப்போ இங்க நின்னு பறாக்கு பாத்துட்டு இருக்கீங்க? போங்க போயி வேலைகளை பாருங்க. இன்னைக்குள்ள இந்த வாலை (wall) முடிச்சிருக்கனும் என்று சொல்ல, அனைவரும் கலைந்து சென்றனர் தங்கள் வேலைகளை பார்க்க.




சக்தியின் ஆட்கள் பின் வாயிலுக்கு சென்று பார்க்க, அங்கே செல்லும் வழி முழுமையாக அடைத்து வைக்கப் பட்டிருந்தது. அதை பார்த்த ஒரு அடியாள் “என்னண்ணா? இங்க அடைச்சு வச்சிருக்காங்க? இங்கே இப்படி இல்லையே இதுக்கு முன்னாடி? இப்போ எப்படி வெளிய போறது?” என்று கேட்க, தலைவனோ “எகிறி குதிச்சுதாண்டா போகனும்” என்று சொல்லிக் கொண்டே அங்கிருக்கும் மரத்தினால் முட்டு கொடுக்கப்பட்ட பலகைகளில் ஏற முயற்சி செய்தனர்.



தமிழோ அவர்கள் செய்பவைகளை பின் இருந்து பார்த்தப்படியே நின்று கொண்டிருந்தான். அவர்களில் ஒருவன் “என்னண்ணா இது இப்படி வழுக்குது இந்த பலகை?” என்று கேட்க, தலையோ “டேய் நாமதான் கிரீஸை போட்டோம். அவனுகளை அடிக்கும் போது அவனுங்க கை வழுக்கிட்டு போகனும்னு.. இப்போ அதுவே நமக்கு எதிரா இருக்கு.. கையில மண்ணை தேச்சுட்டு ஏறுங்கடா” என்று சொல்ல,



பின்னிருந்து அந்த தலைவனின் சட்டையை பற்றி அலேக்காக தூக்கி பின்னால் போட்ட தமிழ், அவனின் அடியாட்களையும் இழுத்து கீழே போட்டான்.



விழுந்ததில் நிலை தடுமாறி எழுந்த அனைவரும் தட்டுத்தடுமாறி நின்றனர். தங்கள் முன்னால் நிற்கும் தமிழை பார்த்தவர்கள் ஒருவருக்கொருவர் கண் ஜாடை காட்டி அவனை அடிக்க தயாராகினர்.



இதற்குள் தேவாவும் அவ்விடம் வந்து சேர்ந்தவன் தமிழிடம் “என்ன என்று கண்களால் கேட்க, தமிழும் தன் இரு விரல்களை மட்டும் காட்டினான். அதை புரிந்து கொண்ட தேவாவும் சக்தியின் ஆட்களை எதிர்க்க தயாராகினான்.



இவர்களின் சைகைகளை பார்த்த சக்தியின் ஆட்கள் தங்களுக்குள் “எதுக்கு அண்ணா அவன் இரண்டுனு காட்றான்? இவனும் ஏதோ சிக்னல் அவனுக்கு கொடுக்கறான்.. என்னனு புரியலையே” என்று சொல்ல, தலைவனும் “நம்மளதுல இரண்டு பேரை மட்டும் அவனுங்க தூக்கிட்டு போவானுங்க போலிருக்கு. முடிஞ்சவரைக்கும் அவன் கையில நாம யாரும் சிக்க கூடாது. கேப் கிடைச்சா இரண்டு பேரையும் போட்டுறுங்க” என்று சொல்லி தன் இடுப்பில் இருக்கும் சிறு கத்தியை தொட்டு பார்த்துக் கொண்டான்.



பின் சக்தியின் ஆட்கள் தேவாவையும் தமிழையும் அடிக்க அங்கே இருக்கும் மரப் பலகைகளையும் இரும்பு ராடுகளையும் எடுத்துக் கொண்டு நெருங்க, இருவரும் தங்கள் மேல் அடி படாதவாறு தற்காத்துக் கொண்டே அவர்களின் கையிலிருக்கும் ராடுகளை அவர்களே கவனிக்காத சமையம் தங்கள் கைகளில் மாற்றிக் கொண்டனர்.



சிறு நேரத்தில் அந்த இடமே புழுதி பறக்க சக்தியின் ஆட்களை முழுதாக வீழ்த்திய தமிழும் தேவாவும். தங்கள் கையிருந்த ராடை கீழே போட்டு அந்த தலைவனின் கழுத்தில் தன் காலை வைத்து மிதித்த தமிழ் “போய் உன் முதலாளி கிட்ட சொல்லு. இன்னும் ஒரு சேன்ஸ் தான் அவனுக்கு இருக்கு. அதுலையாவது அவனால என்னை ஏதாவது செய்ய முடியுமானு பார்க்க சொல்லு.. இப்போவரைக்கும் அவனை நான் உயிரோட விட்டு வச்சுறுக்கிறதுக்கு காரணம், அவனும் முயற்சி செஞ்சு பார்க்கட்டுமேனுதான்.. இப்போ நடந்த மாதிரி தேவை இல்லாம என் ஆட்களை அடிக்கிறது எல்லாம் வேண்டாம். மோதறதுனா என்கிட்ட நேரடியா மோத சொல்லு. இப்படி சில்லரைத் தனம் எல்லாம் என்கிட்ட வேண்டாம்” என்று சொல்லி செல்ல, தேவா அவர்களை ஏற்றி செல்ல, ஆம்புலன்ஸை வரவைத்தான்.



தமிழ் மற்றும் தேவாவின் கெட்ட நேரம் கே.கே. ஆஸ்பிட்டலிருந்து ஆம்புலன்ஸ் வந்திருந்தது. இருவருமே அதை கவனிக்கவில்லை. பின் இருவரும் அங்கு நடந்து கொண்டிருந்த வேலைகளை பார்த்துக் கொண்டே தங்களின் அலுவலகத்துக்கு சென்று விட்டனர். அவர்கள் போவதை பார்த்த சித்தாள் “என்ன நம்ம கிட்ட ஒன்னுமே கேக்கலை. அவரு பாட்டுக்கு வந்தாரு.. ரூம்க்கு போனாரு.. அப்புறம் அவனுகளை அடிச்சு போட்டுட்டு போயிட்டாரு” என்று சொல்ல, மேசனோ “இப்போ நீ கம்முனு வேலை பார்க்கலைனா நீயும் கம்முனு போக வேண்டியதுதான் உன் வீட்டை பார்த்து” என்று சொல்ல, அவளும் தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.



கே.கே. ஆஸ்பிட்டல்,


தமிழ் மற்றும் தேவா அடித்தவர்களை அங்கே எமர்ஜென்ஸியில் வைத்து வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கும் போது ரவுண்ட்ஸ் வந்த ஆத்விகா, இவர்கள் அலறும் சத்தம் கேட்டு அவர்கள் இருக்கும் இடம் வந்தாள். வந்தவள் அங்கே இருக்கும் டியூட்டி டாக்டரிடம் “என்னாச்சு? இவங்களுக்கு எல்லாம் எப்படி அடி பட்டுச்சு? பார்த்தா ஆக்ஸிடண்ட் மாதிரி தெரியலையே?” என்று கேட்க, டியூட்டி டாக்டரும் “ஆக்ஸிடண்ட் இல்லை மேடம். யாரோ இவங்க எல்லாரையும் இப்படி போட்டு அடிச்சுருக்காங்க. கொஞ்சம் இன்னும் பலமா பட்டிருந்தாலும் இவங்க எல்லாரும் உயிர் பிழைக்கிறதே கஸ்டம் ஆகியிருக்கும்..” என்று சொல்ல, ஆத்விகா அவர்களை பார்க்க சென்றாள்.




ஒருவருவனுடைய கால் முட்டியை பார்க்க, அது முழுதாக சிதலமடைந்திருந்தது. அவன் நன்றாக நடப்பதற்கு எப்படியும் ஆறு மாத காலமாவது ஆகும் என்பதை தெர்ந்து கொண்ட ஆது, மற்றவனை பார்க்க, அவனின் தோளில் பலமாக தாக்கப் பட்டிருந்தது. இதே போல் அனைவரின் தலையில் மட்டும் அடிபடாமல் அவர்களின் உடல்களில் எழுந்து நடப்பதற்கும் தங்களின் வேலைகளை தாங்களே செய்வதற்கும் குறைந்தது ஒருவருடமாவது ஆகும் அளவிற்கு அடிக்க பட்டிருப்பதை கண்டு கொண்ட ஆது,



ஒருவனின் அருகில் சென்று “யார் உங்களை போட்டு இப்படி அடிச்சது? சொல்லுங்க உங்களுக்கு நான் உதவி பன்றேன்” என்று சொல்ல, அவளை பார்த்த தலைவன் சைகையில் ஏதோ சொன்னான். அவன் சொன்னதை புரியாமல் பார்த்த ஆது டியூட்டி டாக்டரை கேள்வியாக பார்க்க, அவரோ “அவுங்க கழுத்துல ரொம்ப பலமா அடிபட்டிருக்கு. அதான் அவரோட குரல் வாரமாட்டேன்ங்குது. இனி அவர் பேசறது கொஞ்சம் கஸ்டம்தான்” என்றூ சொல்ல, ஆது மற்றவனை பார்த்தாள்.



அவனிடம் “நீ சொல்லு. நான் அவனுங்களுக்கு தண்டனை வாங்கி தரேன்” என்று சொல்ல, அவனோ “செந்தூர் குரூப்ஸ் ஓட முதலாளிங்க” என்று சொல்ல, ஆத்விகா அதிர்ந்தாள்.



ஆத்விகா டியூட்டி டாக்டரிடம் “போலிஸ்க்கு இன்பார்ம் பண்ணியாச்சா? இன்னும் காணோம் போலிஸை?” என்று கேட்க, சரியாக அந்நேரம் போலிஸ் வந்தது அவ்விடத்திற்கு.



வந்த காவலர்கள் அடிபட்டவர்களிடம் விசாரிக்க அவர்களோ ஆதுவை பார்த்தனர். அவளும் “தைரியமா சொல்லுங்க.. நான் உங்களுக்கு உதவி பன்றேன்” என்று சொல்ல, தமிழ் மற்றும் தேவாவின் மேல் கொலை முயற்சி வழக்கு போடப்பட்டது.



பின் ஆத்விகா தன் வேலையை பார்க்க கிளம்பிவிட, போலிஸும் கிளம்பினர்.



தமிழும் தேவாவும் தங்கள் அறையில் சக்தியை பற்றியும் அவனை என்ன செய்யலாம் என பேசிக்கொண்டிருக்கும் போது தமிழின் கைப்பேசி இசைத்தது. காவல் நிலையத்திலிருந்து அழைத்திருப்பதை பார்த்த தமிழ் யோசனையுடன் எடுத்து பேச, இருவரையும் இன்ஸ்பெக்டர் ஒரு விசாரணைக்காக வர சொல்லியதாக எஸ்.ஐ கூறினார்.



தமிழ் இதை தேவாவிடம் சொல்ல, அவனும் “சரி போய் பார்க்கலாம் தமிழ்” என்று சொல்லி இருவரும் காவல் நிலையத்திற்கு சென்றனர்.



இருவரும் இன்ஸ்பெக்டரை சந்திக்க அவர்களை வரவேற்ற இன்ஸ்பெக்டர் “சார் உங்க இரண்டு பேருமேல கொலை முயற்சி கேஸ் கொடுத்துருக்காங்க.. நீங்க அடிச்ச ஆட்கள் இப்போ உயிருக்கு போறாடுற ஸ்டேஜ்ல ஆஸ்பிட்டல இருக்காங்க. சோ அதை பத்தி சொல்லவும் உங்களை விசாரிக்கவும் தான் வர சொன்னோம்” என்று சொல்ல, தமிழ் கண்டு கொண்டான் இது யார் வேலை என.
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top