• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode கனலிடம் காற்றுக்கென்ன நேசம் -21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Arumbu

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Sep 10, 2020
Messages
152
Reaction score
233
Location
Cbe
inbound869547397.jpg


KKN - 21

காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கூறியதை வைத்து கண்டுகொண்ட தமிழ் தேவாவை பார்க்க, அவனோ அவர் கூறுவதை கதை கேக்கும் பாவத்துடன் கேட்டுக் கொண்டிருக்க, தமிழும் இன்ஸ்பெக்டர் கூறுவதை கவனிக்க ஆரம்பித்தான்.




இன்ஸ்பெக்டரோ “சார் நான் எல்லாம் சொல்லியாச்சு. இப்போ நான் உங்க இரண்டு பேரையும் அரஸ்ட் பண்ணனும். இன்னும் உங்க மேல நான் எஃப்.ஐ.ஆர் போடலை. நீங்க தான் சொல்லனும்” என்று சொல்ல, தேவாவோ அவரிடம் “எங்களை நாங்க தற்காத்துக்கிறது தப்பா சார்?” என்று கேட்க, அவரோ “தப்பு இல்லை தேவா சார்” என்று சொல்ல, தேவாவும் “தென் பிரச்சனை சால்வ்... கொஞ்சம் இங்கப் பாருங்க” என்று சொல்லி அவனின் மொபைலில் சேவ் செய்த வீடியோ காட்சிகளை ஓட விட்டான்.




அதில் சக்தியின் ஆட்கள் சைட்டில் வந்தது முதல் அங்கு வேலை செய்பவர்கள் போல் வேடமிட்டு அவர்களிடம் தகராறு செய்வதும், அதை தடுக்க அவர்கள் கை நீட்டுவதும் ஒளிபரப்பாகி பின் தமிழ் மற்றும் தேவாயை சக்தியின் ஆட்கள் இரும்பு ராடை கொண்டு அடிக்க முற்படுவதும், இருவரும் அவர்களை பந்தாடுவதும் ஒளிபரப்பாகியது.




பின் தேவாவே “இப்போ உங்களுக்கு புரிஞ்சிறுக்கும்னு நினைக்கிறேன் சார். எங்க மேலை தப்பு இல்லை. நீங்க எங்க மேல கேஸ் போடுறதுனாலும் எங்களுக்கு பிரச்சனை இல்லை.” என்று சொல்ல, இன்ஸ்பெக்டரும் அவர்களிடம் ‘கேஸ் போடமுடியாது தான் சார்.. ஆனால் அந்த ஹாஸ்பிட்டல இருக்கிற ஒரு டாக்டரம்மா மட்டும் தான் புஸ் பண்ணுவாங்க” என்று சொல்ல, தேவா அவரிடம்,




“அதை தமிழ் பார்த்துக்குவாரு” என்று இதழ்கடை ஓரம் சிரித்துக் கொண்டே சொல்ல, இன்ஸ்பெக்டர் அவனின் சிரிப்பை தவறாக புரிந்து கொண்டு “அப்படி எதுவும் தப்பாலாம் பண்ணீறாதீங்க தமிழ் சார். அவுங்க ரொம்ப பெரிய இடம். அப்புறம் அது இன்னுமும் பெரிய பிரச்சனையா உருவாகிறும்” என்று சொல்ல, தேவா சத்தமாக சிரித்துவிட்டான் அவர் கூற்றில்.




தேவா சிரிப்பதை புரியாமல் இன்ஸ்பெக்டர் பார்க்க, தமிழோ “கொஞ்சம் அமைதியா இரு தேவா” என்று சொன்னவன் இன்ஸ்பெக்டரிடம் “இனி நாங்க போகலாம் தான சார்?” என்று கேட்க, அவரோ “கொஞ்சம் எது செய்யறதுனாலும் பார்த்து செய்யுங்க தமிழ்.. உங்களுக்கு சொல்லனும்னு அவசியம் இல்லை.” என்று சொல்ல, தமிழ் அவரிடம் வெறும் தலை அசைப்புடன் வெளியேறினான் தேவாவுடன்.




காரில் வந்து அமர்ந்த தேவா தமிழிடம் “என்னடா ஆத்விகா இப்படி பண்ணீட்டாங்க?” என்று கேட்க, தமிழோ “ஜான்சி ராணியாச்சே.. இப்படி செய்யாம இருந்தாதான் ஆச்சரியப் படணும்” என்று சொல்ல, தேவாவோ “அதும் சரிதான்.... சரி இப்போ எங்க ஆபிஸா? இல்லை வீட்டுக்கா?” என்று கேட்க, தமிழ் “ஆஸ்பிட்டல்” என்று சொல்லி காரை கிளப்பினான்.




ஹாஸ்பிட்டலில், ஆது நாளை செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைக்கான ஏற்படுகளை முடித்துக் கொண்டு அப்பொழுதுதான் தன் கேபின் வந்தாள். தன் சேரில் ஓய்வாக சாய்ந்து அமரவும் அவள் அறைக்கதவு படரென திறந்தது. அச்சத்தத்தில் கண்விழித்த ஆது முன் முகம் முழுவதும் ஆக்ரோசம் மற்றும் பழிவெறியுடன் நின்றிருந்தான் அவளால் அடிக்கப் பட்ட இன்ஸ்பெக்டர்.

வந்தவன் ஆதுவின் முன்னே போடபட்டிருந்த சேரில் சட்டமாக அமர்ந்தவன் அவளிடம் “ஹம்ம்.. பார்க்க நல்லா பளபளனு அழகாதான் இருக்க. டாக்டர் வேற.. அதான் அழகைவிட திமிர் கூடி இருக்கு உன்கிட்ட. அந்த திமிரை நான் அடக்குறேண்டி” என்று சொல்ல,


ஆதுவோ “ஹேய் மிஸ்டர்.. மரியாதையா பேசு. இனி ஒருவார்த்தை உன் வாயில இருந்து என்னை பத்தி வந்துச்சு உன்வாயை மறுபடியும் உடைச்சுறுவேன். ஆல்ரெடி வாங்கின அடிக்குதான இவ்ளோ நாள் இங்க இருந்த.. பார்த்து வார்த்தையை விடு. இப்போ கிளம்பு.. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்று சொல்லி அவள் முன் இருக்கும் பெல்லை அமுக்கினாள். சத்தம் கேட்டு வந்த நர்ஸ் “சொல்லுங்க டாக்டர்” என கேட்க, ஆதுவும் நர்ஸ்க்கு வேலைகள் கொடுத்துக் கொண்டே தன் வேலைகளில் கவனமானாள்.

தான் வந்து மிரட்டியும் ஆதுவின் முகத்தில் சிறுபயம் கூட தென்படாததால் வன்மத்துடன் வெளியேறினான் அந்த இன்ஸ்பெக்டர். அவன் ஆதுவின் அறையை கடந்து செல்லவும் தமிழ் ஆதுவின் அறைக்கு வரவும் சரியாக இருந்தது. அவனை பார்த்த தமிழ் ‘இவன் முகமே சரியில்லையே.. ஆதுவுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யனும்’ என நினைத்துக் கொண்டே ஆதுவின் அறைக்குள் சென்றான்.

கதவை தட்டிக் கொண்டு வந்த தமிழை பார்த்த ஆது, அவனை முறைத்துக் கொண்டு கணினியில் கவனம் வைக்க, தமிழோ அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே அவள் முன்னால் அமர, ஆது அவனை சட்டை செய்யாமல் தன் வேலைகளை பார்த்தாள்.

தமிழும் அவளையே விடாமல் பார்க்க, ஆதுவோ “ஸ்ப்ச்” என சலித்துக் கொண்டு “எதுக்கு இப்படி வச்ச கண்ணு எடுக்காம பார்க்கறீங்க? என்னால எப்படி வேலை செய்யமுடியும் இப்படி பார்த்துட்டே இருந்தா?” என்று கேட்க, தமிழோ “இப்போ உன்னை யாரு வேலை செய்ய சொன்னது?, கிளம்பு போகலாம்” என்று சொல்ல, ஆதுவோ,

“எது கிளம்புறதா? எங்கே போலிஸ் ஸ்டேசனுக்கா? ஆமா எப்படி நீங்க இங்க இருக்கீங்க? நான் உங்க மேல கம்பளைன் கொடுத்தேன்ல!!” என்று கேட்க, தமிழும் மனதிற்குள் ‘அவன் விட்டாலும் இவ விடமாட்டா போல’ என நினைத்துவிட்டு “ஆமா.. போலிஸ் ஸ்டேசனுக்குதான் போகனும்.. நீ தான கம்பளைன் கொடுத்த, சோ நீயும் வரனும் என்கூட” என்று சொல்ல,

ஆதுவோ “நான் எதுக்கு வரனும்? எனக்கு என் பேசண்ட்ஸை பார்க்கனும்” என்று சொல்ல, அந்நேரம் அவ்ளின் அறைக்கு அவளின் ஜுனியர் டாக்டர் வந்தார். அவனை பார்த்த ஆது “எதாவது எமர்ஜென்ஸியா?” என்று கேட்டுக் கொண்டே தன் ஸ்டெதஸை எடுத்துக் கொண்டு செல்ல பார்க்க, ஜுனியர் டாக்டர் “இல்லை டாக்டர். இன்னைக்கு உங்க கேஸ் எல்லாம் என்னை பார்க்க சொல்லி கார்த்தி சார் சொன்னார். அதான் உங்க கிட்ட டிடையில் வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்” என சொல்ல, ஆது தமிழை முறைத்தாள். ஜுனியர் முன் ஒன்றும் பேசமுடியாமல் “ஓ ஓகே டாக்டர்” எண்று சொன்னவள் “என் அப்பாயிண்ட்மெண்ட்ஸ் எல்லாம் இவுங்க கிட்ட இருக்கு” எண்று நர்ஸை கைகாட்ட, அந்த டாக்டருக்கு நர்ஸும் சொல்ல ஆரம்பித்தார்.

தமிழ் “அப்புறம் என்ன உட்கார்ந்துட்ட?, கிளம்பு போகலாம்” என்று சொல்ல, ஆதுவோ “கூட்டு சேர்ரீங்களா?” என்று கேட்டுக் கொண்டு தமிழுடன் கிளம்பினாள்.

இருவரும் காரில் அமர, ஆது “தேவா எங்க?” என்று கேட்டவள் “நான் திவிக்கிட்ட சொல்லலையே?” என்றும் சொல்ல, தமிழோ “பரவாயில்லை” என்று சொல்லி உற்சாகத்துடன் காரை கிளப்பினான்.

ஆது அவன் முகத்தில் இருக்கும் உற்சாகத்தை கேள்வியாக பார்த்தாலும் சீட்டில் கண்முடி படுத்துவிட்டாள். காலை முதல் இடைவெளி இல்லாமல் நோயாளிகளை பார்த்ததால் சோர்ந்தவள் உறங்கிவிட்டாள். அவள் உறங்குவதை பார்த்த தமிழ் “இதுவும் நல்லதுக்கு தான்” என சொல்லிக் கொண்டு காரை சென்னை செல்லும் பைபாஸ் சாலையில் விட்டான்.



இரண்டு மணிநேரத்தில் சேலத்தை அடைந்தவன், மாலை சிற்றுண்டிக்காக ஒரு ஹோட்டலில் நிறுத்தியவன் அசைந்து தூங்கும் ஆதுவை இமை சிமிட்டாமல் சிறிது நேரம் ரசித்தவன், அவள் சோர்ந்த முகம் கவனத்தில் வர, மிகவும் மென்மையாக ஆதுவை எழுப்பினான்.




தூக்கம் கலைந்து எழுந்த ஆது “ரொம்ப நேரம் தூங்கிட்டேனா?” என கேட்டுக் கொண்டே கீழே இறங்கியவள், அவ்விடத்தை சுற்றி பார்த்து, “இது என்ன இடம்? எதுக்கு இங்க வந்தீருக்கோம்?” என்று புரியாமல் கேட்க, தமிழோ “உனக்கு ஒரு சர்ப்ரைஸ்” என்று சொல்லியவன் “வா.. கொஞ்சம் ஜுஸ், ஸ்னேக்ஸ் எல்லாம் சாப்பிட்டு கிளம்பலாம்” என்று சொல்லி ஆதுவின் கையை தன் கையுடன் இறுக்கமாக கோர்த்துக் கொண்டு ஹோட்டலினுள் நுழைந்தான்.




அங்கு இருவருக்கும் சாத்துக்குடி ஜூஸ் மற்றும் சாப்பிட சேண்ட்விச் ஆடர் கொடுத்துவிட்டு அமர்ந்தனர். ஆது தமிழிடம் “எங்க போறோம்? எனக்கு நாளைக்கு ஒரு ஆப்ரேசன் இருக்கு. இப்போவே மணி நாலு ஆச்சு” என்று சொல்ல, தமிழோ ”எத்தணை மணிக்கு ஆப்ரேசன் அலாட் பண்ணீருக்க?” என்று கேட்க, ஆதுவோ அவனை புரியாமல் பார்த்துக் கொண்டே “மதியத்துக்கு மேலதான்..” என்று சொல்ல, தமிழோ “அப்போ ஒன்னும் பிரச்சனை இல்லை” என்று சொல்ல, ஆது “மொட்டையா பேசாம எங்க போறோம்னு சொல்லுங்க தமிழ்” என்று கோவமாக கேட்க, தமிழ் “ஃபுட் வந்துடுச்சு பாரு.. அதை சாப்பிட்டுட்டு போற வழியில சொல்றேன்” என்று சொல்லி சாப்பாட்டில் கவனமானான்.





ஆது சலிப்பாக இருபக்கமும் தலை ஆட்டியவள் ‘என்னமோ பண்ணுங்க” என்று சொல்லி தன் வயிற்றை கவனிக்க ஆரம்பித்தாள். பசியில் வேகமாக உண்டு முடித்தவள் ஜூஸை பருகிக் கொண்டே வெளியே வேடிக்கை பார்க்க, அவள் கண்ணில் இருவர் சிக்கினர். ஆது அவர்களை பார்த்ததும் தடுமாறி தங்கள் கண்களை வேறு பக்கம் திருப்ப, ஆது அவர்களை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள்.




இருவரும் மறைமுகமாக தங்களை கண்காணிக்கிறார்கள் என கண்டு கொண்ட ஆது தமிழிடம் இரகசியக் குரலில் “தமிழ் நம்ம டேபிளுக்கு பக்கவாட்டுல இருக்க ஆளுங்களை பாருங்க.. அவுங்க கிட்ட ஏதோ தப்பு இருக்கு. எனக்கு அவுங்க இரண்டு பேரும் நம்மளையே கண்காணீக்கிற மாதிரி தோணுது” என்று சொல்ல,





தமிழ் அவர்களை பார்க்காமலே “உனக்கு இப்போதான் தோணவே செய்யுதா? கன்பார்மா அவுங்க நம்மளைதான் பாலோ பண்ணீட்டு இருக்காங்க... நீ எல்லாம் என்ன டாக்டர்? உன்னை சுத்தி என்ன நடக்குதுனு கூட தெரியாம இருக்க? இவுங்க உன்னையும் என்னையும் பாலோ பண்ண ஆரம்பிச்சு மூனுவாரம் ஆச்சு” என்று சொல்ல, ஆதுவிற்கு குடித்த ஜூஸ் புரை ஏறியது.





“எது மூனு வாரம் ஆச்சா? நான் இவுங்களை பார்க்கவே இல்லையே” என்று சொல்ல, தமிழ் “ஆமா உன்கிட்ட வந்து சொல்லிட்டு தான் உன்னை பாலோ பண்ணூவாங்க பாரு.. எதுக்கு எடுத்தாலும் கையை நீட்டாத.. கொஞ்சம் யோசிச்சு பழகுனு இதுக்குதான் சொல்றது.. பாரு நீ யோசிக்காம விட்டு இப்போ உனக்கு மூளையே வேலை செய்யாம போயிடுச்சு” என்று அவளை கலாய்க்க, ஆதுவோ தமிழை முறைத்தாள்.




ஆது அவனிடம் “ஹலோ.. என்ன கிண்டலா? எனக்கு எல்லாம் மூளை வேலை செய்யுது. உங்களுக்கு தான் மூளை வேலை செய்யலை” என்று காட்டமாக சொன்னவள் மேலும் “நீங்க தான் புத்திசாக்லி ஆச்சே!!! இவனுங்களை இரண்டு தட்டு தட்டி அவனுங்க கிட்ட இருந்து உண்மையை வாங்காம இங்க உட்கார்ந்து சாப்பிட்டு இருக்கீங்க?” என்று கேட்க, தமிழை ஆதுவை ஏற இறங்க பார்த்தான்.




அவன் இவ்வாறு பார்ப்பதை கண்டு குழம்பிய ஆது தன்னை ஒருமுறை சரிபார்த்துக் கொண்டு “என்ன? எதுக்கு இப்படி பார்க்கறீங்க?” என்று கேட்க, தமிழ் “நீ உண்மையாலுமே டாக்டர் தானா? எனக்கு சந்தேகமாவே இருக்கு.. உண்மையை சொல்லு.. நீ பேப்பர் சேஸ் பண்ணீதான பாஸ் ஆகி, லைசென்ஸ் காசு கொடுத்து எடுத்துட்டு நீயும் டாக்டர்னு ஊரை ஏமாத்தற?” எண்று கேட்க, ஆதுவோ அவனை முறைத்துக் கோண்டே அருகில் இருக்கும் ஜக்கிலிருந்து நீரை தமிழின் முகத்தில் ஊற்றினாள்.




முகத்தில் விழுந்த நீரை துடைத்த தமிழ் “அறிவிருக்கா ஆத்விகா? பப்ளிக்ல இப்படிதான் பிகேவ் பண்ணுவியா? கொஞ்சம் கூட மேனர்ஸ், டீசெண்ட் இல்லை” என்று திட்ட, ஆதுவின் கண்கள் கலங்கிவிட்டது.




திருமணமான இந்த மூன்று மாதத்தில் ஒருமுறை கூட தமிழின் குரலில் இத்தணை கண்டிப்பு இருந்தது இல்லை. முதன் முதலில் ஆது தமிழை தெரியாமல் அடிக்கும் போது இருந்த கடுமைத் தன்மை இப்பொழுதும் தமிழில் குரலில் வெளிப்பட, ஆது தலை குனிந்து உட்கார்ந்துவிட்டாள்.




ஆது கண்கலங்கியதை பார்த்த தமிழ் தன் கோவத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன் “இதே தப்பை நீ நிறையமுறை செஞ்சுட்ட ஆத்விகா.. பப்ளிக்ல எப்படி பிகேவ் பண்ணனும்னு உனக்கு தெரியாதா? தமிழ் நாட்டுல இருக்க டாப்டென் கம்பெனிஸ்ல என்னுதும் ஒன்னு. இப்படி நீ பிகேவ் பண்றதை யாராவது பார்த்தா என்னாகும்னு கொஞ்சாமாவது யோசி..” என்றவன் மேலும் தொடர்ந்து,



“அன்னைக்கும் இப்படிதான் என்னை அத்தணை பேர் பார்க்க அடிச்ச, இப்போ“ என்று தன் முகத்திலும் சட்டையிலும் இருக்கும் நீரை காட்டியவன் ஆழ்ந்து மூச்சுவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.




ஆதுவிற்கோ இவ்வளவு நேரம் இலகுதன்மை போக, தான் செய்ததை நினைத்து குற்ற உணர்சியுடன் தமிழின் பின் சென்றாள். இதில் அவர்களை கண்காணித்தவர்களை சுத்தமாக மறந்துவிட்டாள்.




காரில் ஏறியதும் தமிழ் காரை வேகமாக சென்னை நோக்கி செலுத்த, ஆது அவனிடம் “சாரி தமிழ். இனிமேல் இப்படி பண்ணமாட்டேன். நான் எப்பவும் போல உங்ககிட்ட விளையாடிட்டேன்” என்று சொன்னவள், மேலும் “அன்னைக்கு நான் உங்களை வேணுமுனே அடிக்கலை தமிழ். அன்னைக்கு உங்களுக்கு முன்னாடி இருந்த இரண்டு பொறுக்கிங்க எங்க கிட்ட தப்பா டச் பண்ணவும் தான் நான் அவனை அடிக்க போகி அவன் நகர்ந்து அந்த அடி உங்க மேல பட்டுச்சு” என்று அன்று நடந்த விபத்திற்கு இப்பொழுது மன்னிப்பு கேட்டாள்.




தமிழும் “அது வெறும் ஆக்ஸிடெண்ச்னு எனக்கும் தெரியும் ஆது. பட் நீ கொஞ்சம் இருக்க இடத்தை தெரிஞ்சுகிட்டு எதுனாலும் ரியாக்ட் பண்ணு.. அவ்ளோதான் நான் சொல்லுவேன்” என்று சொல்லி சாலையில் கவனம் வைக்க, ஆதுவும் அமைதியாக சாலையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.




காரில் வெறும் பாட்டு சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்க, ஆது மறுபடியும் உறங்கியிருந்தாள். அவளை பார்த்த தமிழ் ‘சின்னதா சத்தம் போட்டதுக்கே மேடமோட கண்ணு கலங்கிருச்சு. இதுல நான் முழு கோவத்தையும் காட்டினா? இனிமேல் ஆது என்னால கலங்க கூடாது” என்று முடிவெடுத்தவன் காரை ஒற்றை கையில் மெதுவாக ஓட்டிக் கொண்டே எட்டி ஆதுவின் நெற்றியில் அழுத்தமாக தன் இதழ் முத்திரையை பதித்தான்.




சரியாக இரவு பதினோரு மணிக்கு சென்னையை அடைந்த தமிழ், அவன் புக் செய்த ரெசார்ட்டில் காரை பார்க் செய்தவன், அதுவை மெதுவாக உலுக்கி எழுப்பினான். ஆதுவும் உறக்கம் கலந்து எழுந்தவள் “ என்ன தமிழ்?” என்று கேட்க, “இறங்கு, வந்தாச்சு” என்று சொல்லி தமிழும் இறங்க, ஆது “இன்னும் கோவம் போகலியா? நான் தான் சாரி சொல்லிட்டேன்ல” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க, தமிழோ “செம டயர்ட். டிரைவ் பண்ணுனதுல.. சோ எதா இருந்தாலும் உள்ள போயி பேசிக்கலாம்” என்று சொல்லி முன்னே செல்ல, ஆதுவும் முகத்தை கவலையாக வைத்துக் கொண்டு தமிழின் பின் சென்றாள்.




ரிசெப்சனில் அவர்கள் புக் செய்த அறையின் சாவியை பெற்றுக் கொண்டு தமிழ் ஆதுவை பார்க்க, ஆதுவும் அவனுடன் வந்து ஒட்டி நின்றாள். அவளின் நடவடிக்கையை பார்த்த தமிழ் தனக்குள் சிரித்தவாறே “வா.. நமக்கு தெர்ட் புளோர்” என்று சொல்லி லிப்டில் சென்று அவர்களுக்கான தளாத்தை அடைந்து அவர்களின் அறைக்கு சென்றனர்.



அவ்வறையை பார்த்தவள் தன் விழி விரிய நிற்க, அவளை பார்த்த தமிழ் “என்ன இங்கையே நிக்கிற உத்தேசமா? போயி ரெப்ரஸ் ஆகு முதல்ல.. நானும் ஃப்ரெஸ் கிட்டு வரேன்” என்று சொல்லி சென்று வந்தான். ஆது வெளியில் வந்தவனிடம் “எனக்கு குளிக்கணும்” என்று சொல்ல, தமிழ் “சரி குளி” என்று இலகுவாக சொல்ல, ஆதுவோ “டிரெஸ்” என்று கேள்வியாக கேட்க, தமிழோ “ஓ டிரெஸ்” என்று சொல்லிக் கொண்டே அவனின் சோல்டர் பேக்கை கைகாட்டினான். ஆது “இதுக்குள்ள இருக்கா?” என்று கேட்டு தன் உடையை எடுத்துக் கொண்டவள் குளித்து முடித்து வர, தமிழ் இரவுணவை காட்டினான்.




“செம பசி. அங்க சாப்பிட்ட சேண்ட்வெச் எப்போவோ டைஜிஸ்ட் ஆகிடுச்சு” என்று சொல்லி ஆது அமர, அவளை கண்டு கொள்ளாமல் இட்லியை சாப்பிட்டுக் கொண்டிருந்தான் தமிழ். ஆது “பேசமாட்டீங்களா தமிழ் என்கிட்ட?” என்று பாவமாக கேட்க, தமிழோ “எனக்கு பசிக்குது ஆது அதான்” என்று சொல்ல, அவளும் தன் சாப்பாட்டில் கவனமானாள்.





இரவுணவு முடித்தபின் கட்டிலில் படுத்த தமிழ் ஆதுவை பார்க்க, ஆது அந்த அறையில் இருக்கும் பால்கனியில் நின்று எதிரே தெரியும் கடலை வெறித்துக் கொண்டிருந்தாள். அவளை பார்த்த தமிழ் “ஆத்விகா.. வா தூங்கு” என்று கண்டிப்புடன் சொல்ல, அவளும் புலம்பிக் கொண்டே தூங்க வந்தாள்.




தமிழின் அருகில் படுத்த ஆது வரும் வழியில் உறங்கியதால் புரண்டு புரண்டு படுக்க, தூக்கம் கலைந்த தமிழ் “என்ன பண்ற ஆது? எதுக்கு இப்படி புரளற?” என்று கேட்க, ஆதுவோ “தூக்கம் வரலை தமிழ்” என்று சொல்ல, தமிழோ சட்டென்று ஆதுவை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன் தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு “இப்போ வரும். கண்மூடி தூங்கு” என்று சொல்லி தமிழ் தூங்க, ஆதுவோ சட்டென்று ஏற்பட்ட நெருக்கத்தில் திடுக்கிட்டவள் பின் அவனை அணைத்துக் கொண்டு தமிழின் நெஞ்சில் சாய்ந்து உறங்க ஆரம்பித்தாள்.




சரியாக இரவு இரண்டு மணிக்கு ஆது அந்தரத்தில் மிதப்பதுபோல் உணர்ந்தவள், தன் கண்ணை விழிக்க முற்பட, அவளின் கண்ணை விழிக்க முடியாமல் கட்டப்பட்டிருந்தது. பயந்தவள் “தமிழ், தமிழ்” என்று கத்த, அவளின் காதோரத்தில் “ஹே ரிலாக்ஸ்... நான் தான்” என்று மெதுவாக சொல்ல, ஆதுவோ “என்ன விளையாட்டு தமிழ் இது? எங்க என்னை தூக்கிட்டு போறீங்க? கண்ணை கட்டியதை அவுத்து விடுங்க ஃபர்ஸ்ட்” என்று சொல்ல, தமிழோ “அது அவிழ்க்க வேண்டிய நேரத்துக்கு அவிழ்த்து விடுறேன்” என்று சொல்லி நடக்க, ஆதுவோ “எனக்கு பயமா இருக்கு” என்று சொல்ல, ”என் கழுத்தை பிடிச்சுக்கோ” என்று சொல்லி ஆதுவை தன் கைகளில் ஏந்தி சென்றான்.




ரிசார்ட்டின் எதிர்புறம் இருந்த கடற்கரையை அடைந்த தமிழ் அலைகள் ஆதுவின் காலில் படுமாறு இறக்கிவிட, தன் கால்களில் வந்து மோதிய அலைகளை கண்டு கொண்டவள் தமிழை துலாவ, அவளின் பின் நின்றவன் ஆதுவின் கண்கட்டை அவிழ்த்துவிட்டான். தன் கண்கட்டு அவிழ்ந்ததும் கண்ணை கசக்கிவிட்டு, எதிரில் தெரிந்த கடலை பார்க்க, அவள் பின்னே அணைத்தவாறு தோளில் கைப்போட்டு நின்ற தமிழ் அவள் காதில் மெதுவாக “அப்படியே மேலையும் பாரு” என்று சொல்ல, ஆது நிமிர்ந்து மேல பார்த்தாள்.




பௌர்ணமி நிலவு தன் தோழிகளான நட்சத்திர தேவதைகளுடன் ஜொலிக்க, ஆது அவ்வானத்தை பார்த்து மென்மையாக சிரித்தவள், கடலலையில் தன் காலை நனைத்துக் கொண்டே பின்னால் நின்ற தமிழை திரும்பி அணைத்தாள். அவளின் அணைப்பின் இருக்கமே அவள் மகிழ்வை சொல்ல, காதலாக அவளை தன்னிடமிருந்து பிரித்த தமிழ் “இந்த பஞ்சபூதங்கள் சாட்சியா சொல்றேன் ஆது. எப்பொழுதும் என் இதயம் உனக்காக மட்டுமே துடிக்கும்... இம்மையிலும் மறுமையிலும் எப்போவுமே உன்னை மட்டும் காதலிப்பேன்” என்று சொல்லி அவளின் நெற்றயில் அழுந்த முத்தமிட்டான். மேலும் “உனக்கு இப்படி பௌர்ணமி டைம்ல நிலாவை பார்த்துட்டே கடலையும் பார்க்கணும்ங்கறது ரொம்ப நாள் ஆசைதான.. இன்னைக்கு இந்த முழு இரவும் உனக்குதான். உன் விருப்பப்படி நீ எஞ்சாய் பண்ணு” என்று சொன்னான்.




ஆது அவன் கூறியதற்கு எதுவும் கூறாமல் இருந்தாலும் ஆவளின் உள்மனது தமிழின் காதலில் கட்டுண்டது. இருந்தும் வெளிக்காட்டிக்காமல் “நான் கேக்கறதுக்கு பதில் சொல்லுங்க... உங்களுக்கு எப்படி தெரியும் எனக்கு இப்படி பார்க்கிறது பிடிக்கும்னு?” என கேட்க, தமிழோ “என் மனைவிக்கு எது பிடிக்கும்னு எனக்கு தெரியாதா?” என்று கேட்க, அவளோ “நீங்க அம்மாகிட்டயோ இல்லை திவிக்கிட்டையோ கேட்டிருப்பீங்க” என்று சொல்லியவள் அலையில் விளையாட ஓடிவிட்டாள்.





அவள் விளையாடுவதை காதலாக பார்த்தவாறே தமிழும் கடற்கரை மணலில் அமர்ந்து கொண்டான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top