• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode கனலிடம் காற்றுக்கென்ன நேசம் - 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Arumbu

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Sep 10, 2020
Messages
152
Reaction score
233
Location
Cbe
inbound1886654497.jpg


22 கனலிடம் காற்றுக்கென்ன நேசம்


அன்றைய இரவு முழுவதும் ஆது அலைகளில் விளையாட, தமிழ் மணலிலையே உறங்கியிருந்தான். திடிரென விழிப்பு பெற்ற தமிழ் இன்னும் ஆது அலையில் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தவன் தன் கைக்கடிகாரத்தில் நேரம் பார்க்க, விடியக்காலை ஐந்து மணி என காட்டியது. பின் ஆழ்ந்த மூச்செடுத்த தமிழ் கைகளை தூக்கியவாறு சோம்பல் விட்டவன் எழுந்து தன் உடைகளில் ஒட்டிய மணலை தட்டி விட்டு ஆதுவிடம் நெருங்கினான்.




அலை வரும் பொழுது முன்னால் செல்வதும் அலை பின் செல்லும் போது தானும் பின் செல்வதுமாக விளையாடிக் கொண்டிருந்த ஆதுவின் பின்புறம் நின்றவாறே அவளின் முழங்கையை பிடித்த தமிழ் “போதும் ஆது.. நைட் எல்லாம் நீ தூங்கவே இல்லையா? இப்படியேதான் விளையாடிட்டு இருந்தியா? இப்போ போயி ரூம்ல குளிச்சுட்டு கிளம்பினாதான் மதியத்துக்குள்ள போகமுடியும்” என்று சொல்ல,




ஆதுவோ “இல்ல தமிழ். நான் தூங்கவே இல்லை. நன் திரும்பி பார்க்கும் பொது நீங்க நல்ல அசந்து தூங்கிட்டு இருந்தீங்க. அதான் டிஸ்டர்ப் பண்ணாம நானும் இங்கையே இருந்துட்டேன்” என இலகுவாக சொல்ல,



தமிழோ “லூசா ஆது நீ? நேத்துவரைக்கும் தான் நம்மள சுத்தியிருக்க சீரியஸ்னஸ் தெரியாம இருந்த.. இப்போ இப்படி யாருமில்லாத இடத்துல நீ மட்டும் விளையாடிட்டு இருந்திருக்க.. நான் தான் தூங்கிட்டேன்னா நீ வந்து என்னை எழுப்பிருக்கலாம் தான?” என்று டென்சனாக,



ஆதுவோ “அவ்ளோ சீக்கிரம் என்னையெல்லாம் ஒன்னும் பண்ணமுடியாது.. நான் அவுங்களை மறந்தே போயிட்டேன். இருந்தாலும் நோ டென்சன் தமிழ். என்னை எனக்கு பாதுகாக்க தெரியும்” என்று சொல்ல, தமிழோ “எல்லா நேரமும் ஒன்னுபோல இருக்காது ஆத்விகா” என்று சொன்னவன், தாங்கள் தங்கியிருந்த அறையை நோக்கி சென்றான். அவன் பின்னாலையே சென்ற ஆது அறைக்குள் அவனுக்கு முன்பாக நுழைந்தவள் குளியலறைக்குள்ளும் சென்றுவிட்டாள்.



அதை பார்த்த தமிழ் ‘இவ திருந்தவே மாட்டா’ என தனக்குள் சொல்லிக் கொண்டவன் ஆது வந்ததும் தமிழும் குளித்து முடித்து கோவையை நோக்கி பயணப் பட்டனர். இவர்கள் அதிகாலையே கிளம்பி சென்ற விபரம் அறியாமல் இருவரையும் பின் தொடர்ந்த சக்தியின் ஆட்கள் அவர்கள் அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.




காரில் முதல் ஒரு மணி நேரம் தொணதொணத்து வந்த ஆத்விகா உறங்கிவிட, அவளை பார்த்து மென் புன்னகை சிந்திய தமிழ் ‘நீ எப்போவும் இதே மாதிரி சந்தோசமா இருக்கனும் ஆது. எதுக்கும் பயந்து கலங்காம இதே மாதிரி தப்பை கண்டா தட்டி கேக்கிற தைரியத்தோடயே இருக்கணும்” என தனக்குள் சொல்லிக் கொண்டவன், ஆது சாய்ந்திருந்த சீட்டை கொஞ்சம் தளர்த்தி ஆது சரியாக படுக்க வழி செய்து கோவை நோக்கி காரை வேகமாக செலுத்தினான்.




இன்று மதியம் தான் சக்தி சொன்னது போல் அரசாங்கம் புதிய டெண்டருக்கான முடிவுகளை கூறப்போகிறது. இது தமிழின் உழைப்பில் முக்கியமான நிகழ்வு ஆகும்.

காலை பத்து மணியளவில் வழியில் இருக்கும் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு சரியாக ஒரு மணியளவில் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் தமிழும் ஆதுவும்.




தேவாவும் திவியும் மருத்துவமனை மற்றும் செந்தூருக்கு கிளம்பியதால் வீட்டில் ஒருவரும் இல்லை. வந்த இருவரும் அவசரமாக டிராவல் டையெர்ட் போக மீண்டும் குளித்துவிட்டு திவி காலையில் செய்து வைத்திருந்த உணவை உண்டு விட்டு இருவரும் தங்கள் காரில் ஏறி அவரவர் வேலை செய்யும் இடத்திற்கு சென்றனர்.




கடலளவு ஆதுவிற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அவள் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையின் காரணமாக தமிழிடம் ஒரு வார்த்தை பேசாமல் அது கிளம்ப,



தான் பலமுறை காதல் சொல்லியும் ஒரு முறைகூட ஆது சொல்லாமல் இருப்பதால் கவலை அடைந்த தமிழ் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் டெண்டர் சார்ந்த வேலைகளை கவனிக்க அரசு ஒதுக்கியிருக்கும் இடத்திற்கு சென்றான்.



கோவை கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக செயல் பட்டுக் கொண்டிருந்தது. தமிழும் தன் காரை பார்க்கிங்கில் விட்டவன் டெண்டர் நடக்கும் மூன்றாம் தளம் சென்றான். உள்ளே வந்த தமிழ் தேவாவை தேட, தேவா முதல் வரிசையில் அமர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் அவனருகில் சென்று அமர்ந்தான் தமிழ்.




தன் பக்கம் அமரும் அரவம் உணர்ந்த தேவா திரும்பி பார்க்க, தமிழோ வசீகரிய புன்னகையை சிந்தினான். அவனை பார்த்து சிரித்த தேவா “என்னடா வரமாட்டேன்னு நினைச்சேன். அதுக்குள்ளா வந்துட்ட?” என்று கேட்க,




தமிழோ “போன காரியம் சக்ஸஸ்.. அதான் வந்துட்டோம். அதுமில்லாம ஆதுக்கு இம்பார்ட்டண்ட் ஆப்பிரேசன் இருக்கு. நமக்கும் இது முக்கியமான தருணம். அதான் சீக்கிரமா வந்துட்டோம்” என்று சொல்ல, தேவாவும் தலை அசைத்து சரி என்றான்.




சிறிது நேரத்தில் டெண்டர் முடிவுகளை வெளியிட அரசு அதிகாரிகள் வர அவ்விடம் அமைதியானது. அனைவரும் தங்கள் கம்பெனிக்கு வருமென காத்திருக்க, டெண்டரோ செந்தூருக்கு சென்றது. இதில் தமிழ் எதிர்பாக்காதது மாறன் குரூப்பிற்கும் செந்தூரிற்கும் ஒரு ரூபாய் வீதத்தில் வித்தியாசமானது.




மாறன் குரூப் சார்பாக அக்கம்பெனி மேனஜர் வந்திருக்க, அவரோ இம்முடிவில் கோவப்பட்டு மாறனிற்கு கால் செய்து “சார் தமிழ் சார் நம்மள நல்லா ஏமாத்திட்டாரு.. நம்ம கம்பெனியை பார்த்துக்கிறேன்னு சொல்லி உள்ள வந்து இப்போ நாம் போட்டு வச்ச அமவுண்டை பார்த்து அதவிட ஒரு ரூபாய் கம்மியா அவுங்க கோட் பண்ணி இப்போ அவுங்களுக்கு டெண்டர் போயிடுச்சு சார்” என சொல்ல,





மாறனோ “அப்படி எல்லாம் ஏமாத்த மாட்டாரு நம்ம மாப்பிளை. கோட் போட்டது நீங்க தான.. மாப்பிளை இதை பத்தி ஒரு தடவை கூட என்கிட்ட கேட்டது இல்லை. இப்போ செந்தூருக்கு போனதுனால ஒன்னும் பிரச்சனை இல்லை. அதுவும் நம்ம கம்பெனிதான” என இலகுவாக சொல்ல,



மேனஜரோ “சரிங்க சார்” என கூறி வைத்துவிட்டு மனதிற்குள் ‘மாமனாரும் மருமகனும் நல்லா சமாளிக்கறானுங்க.. நம்ம கம்பெனியாமே.. டெண்டர் இங்க கிடைச்சிருந்தா எங்களுக்கு சம்பளமும் ஜாஸ்தி ஆகியிருக்கும். இப்போ அங்க கிடச்சு எங்களுக்கு என்ன புண்ணியம்?” என கருவிக் கொண்டு மாறன் குரூப்பிற்கு சென்றான்.





தமிழும் தேவாவும் அதிகாரிகள் காட்டிய இடங்களில் கையெழுத்து போட்டுவிட்டு மகிழ்ச்சியாக செந்தூருக்கு சென்றனர்.



செந்தூரில் வேலை செய்பவர்கள் அனைவரிடமும் புதியதாக கிடைத்த ஸ்லம் கிளியரண்ஸ் டெண்டரை பற்றி கூறி அனைவரின் ஒத்துழைப்பை கேட்டுக் கொண்டு அனைவருக்கும் ஸ்வீட்ஸ் மற்றும் போனஸை அறிவித்தனர். வேலை செய்பவர்களும் மகிழ்ச்சியாக அனைத்தும் பெற்றுக் கொண்டு கணினி மாதிரிகளை உருவாக்குவதும், ரீபிளேஸ்மெண்ட் மெட்டிரியல்களை பயன்படுத்தவும் ஆரம்பித்தனர்.



மாறன் குரூப்பிற்கு வந்த மேனஜேர் அனைவரையும் கான்பிரன்ஸ் அறையில் காத்திருக்க சொல்லி சென்றார். தன் அறைக்கு வந்த மேனேஜர் சக்தியிற்கு கால் செய்து அனைத்தும் சொல்ல, சக்தியும் “நான் சொன்ன மாதிரியே சொல்லி பிர்ச்சனையை உருவாக்கு. இனி தமிழ் மாறன் குரூப்புக்குள்ள அடி எடுத்து வைக்க கூடாது” என்று சொல்லி வைத்தான்.



மேனேஜரும் சக்தி சொல்லியவற்றை நினைவூட்டியபடியே முகத்தை கவலையாக வைத்துக் கொண்டு கான்பிரன்ஸ் அறைக்குள் நுழைந்தான்.

வேலை செய்பவர்கள் மேனேஜரின் கவலை முகம் கண்டு குழம்பினாலும் அவரே சொல்லட்டும் என காத்திருந்தனர்.




தொண்டையை செருமிய மேனேஜர் “நம்ம எல்லாரும் மோசம் போயிட்டோம். இப்போ நம்ம கம்பெனி இருக்கிற நிலமைக்கு இந்த டெண்டர் கிடைச்சிருந்தா நமக்கு முன்னேற்றமா இருந்திருக்கும்.. ஆனால் அந்த அருந்தமிழ் மாமனார் கம்பெனியை பார்த்துக்குறேன்னு பொய் சொல்லி உள்ள வந்ததுமில்லாம நாம கோட் பண்ணின அமவுண்டை தெரிஞ்சிக் கிட்டு அதை விட ஒரு ரூபாய் கம்மியா அவுங்க கோட் பண்ணி இந்த டெண்டரை அவுங்க கம்பெனியான செந்தூருக்கு வாங்கிட்டாங்க.. நம்ம மாறன் சாரோட ஹெல்த் கண்டீசனை சாக்கிட்டு இவரு வந்து நம்மளை மொத்தமா ஏமாத்திட்டாறு” என்று சொன்னான்.




பணியாட்களில் ஒருவன் “ஏன் சார் நம்ம கம்பெனி நல்லாதான ரன் ஆகிட்டு இருக்கு. நாம கட்டுற கட்டிடங்களும் சரி நாம உருவாக்குற ஃபர்னீட்சருகளும் சரி யூனிக்கா இருக்கிறதுனால நல்லாதான் இருக்கு நம்ம கம்பெனி பேரும் சொசைட்டில.. அதைவிட நம்ம கம்பெனி டாட் ஃபைவ் ல இருக்கு. இத்தணைக்கும் செந்தூர் பிலோ ஃபைவ்லதான் சார் இருக்கு” என்று கேட்க,



மேனேஜரோ நீங்க சொல்றது எல்லாம் மாறன் சாருக்கு உடம்பு சரியில்லாம போறதுக்கு முன்னாடி. உங்களுக்கு எல்லாம் தெரியுமா சாருக்கு ஏன் ஹார்ட் அட்டாக் வந்ததனு?” என கேட்க, அனைவரும் இல்லை என தலை ஆட்டினர்.



மேனேஜரே தொடர்ந்து “நம்ம மாறன் சார் போன தடவை வந்த டெண்டரை ஃபுல்லா முடிச்சு குடுக்க பைனான்ஸ் கிட்ட இருந்து கடன் வாங்கியிருந்தாரு.. இப்போ அவுங்க கடனை திருப்பி கேட்கவும் இவரும் அவர் கிட்ட இருந்த எல்லா பணத்தையும் கொடுத்து கடனை அடைக்க முயற்சி பண்ணியும் கடைசியில சில அமவுண்ட் கையை கடிச்சிருக்கு. அந்த டைம்ல தான் ஆத்விகா மேடம் பிரச்சனையை சால்வ் பண்ண வந்தது இங்க.. இப்போ அவுங்க நமக்கு மாத சம்பளமே கொடுக்க முடியாத இடத்துல இருக்காங்க” என்று சொன்னார்.





இதை கேட்ட மற்றொருவனோ “அதான் தமிழ் சார் ஆத்விகா மேடமை கல்யாணம் பண்ற மாதிரி நம்ம கம்பெனிக்குள்ள வந்து நம்ம ரகசியங்களை தெரிஞ்சுக்கிட்டாரா?” என்று கேட்க, மேனேஜரும் தலை அசைத்து அதை ஆமோதித்தார்.




பின் மற்றொருவன் “அதான் நமக்கு இன்னும் போன மாசத்தோட சேலரி கிரெடிட் ஆகலையா?” என்றும் கேட்க , அனைவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.



சில நிமிடங்களில் ஒருவன் “இப்போ நாம என்ன பண்றாது சார்? தமிழ் சாரை நாங்க எல்லாரும் நல்லவருனு நினைச்சிட்டு இருந்தோம். ஆனால் அவரு இப்படி குள்ளநரித் தனமா இருப்பாருனு நினைக்கவே இல்லை. நீங்க சொல்லுங்க சார்” என்று கேட்க,



மேனேஜரும் “நாளைக்கு இருந்து யாரும் எந்த வேலையும் செய்யாதீங்க.. இது நம்ம கிட்ட இருந்து ஏமாத்தி பறிக்கப் பட்ட டெண்டர். அதுக்கு நியாயம் கிடைக்காம நாம யாரும் வேலை பார்க்க கூடாது. முக்கியமா அந்த தமிழ் இனி நம்ம கம்பெனிக்குள்ள வரக்கூடாது” என்று சொல்ல அனைவரும் தலை ஆட்டி தங்களின் சம்மதத்தை கூறினர்.




இதை எதையும் அறியாத தமிழும் தேவாவும் மகிழ்ச்சியாக இருந்தனர். இருவரும் மகிமாவிற்கும் தயாளனிற்கும் கால் செய்து கூறி அவர்களின் ஆசி பெற்று புத்துணர்வுடன் வேலைகளை ஆரம்பித்தனர்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top