• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கனலிடம் காற்றுக்கென்ன நேசம் -3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Arumbu

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Sep 10, 2020
Messages
152
Reaction score
233
Location
Cbe
inbound1831322009.jpg

கனலிடம் காற்றுக்கென்ன நேசம் - 3




அடுத்த நாள் அதிகாலை 3 மணியளவில் அக்கல்யாண மண்டபத்தில் அனைவரையும் எழுப்பி கொண்டும் சுபமூகூர்த்ததிற்கு தேவையான ஏற்பாட்டை பார்த்துகொண்டே ஐயர் கேக்கும் பொருட்களை மணமேடையில் எடுத்து கொடுத்து கொண்டிருந்தார் மகி மா.


அந்நேரத்தில் தயாளன் அவசர அவசரமாக மகிமாவிடம் வந்து அவரின் காதில் ஏதோ சொல்லவும் அவரும் தலையில் அடித்துகொண்டு “உங்களோட முடியலைங்க.... முக்கியமான பொருளை வீட்லையே இப்படி மறந்து வச்சுட்டு வந்துருகீங்களே?.. இப்போ முகூர்த்தத்துக்கு வேற நேரம் கம்மியா இருக்கு.... நான் போய் தமிழ்,தேவாவை எடுத்துட்டு வர சொல்லறேன்” என்று அவர் தமிழ் மற்றும் தேவா அறைக்கு வரவும், தமிழ் எழுந்து குளித்து தயாராகிய பின் தேவாவை எழுப்பி கொண்டிருந்தான். மகி மா உள்நுழையவும் தேவா எழுந்து அமர்ந்தான்.



பின் மகி மா இவர்களிடம் “தம்பி உங்க அப்பா தாலிக்கொடியை நம்ம வீட்டு சாமி ரூமிலையே வச்சுட்டு வந்துட்டாராம்... இப்போ ஐயர் வேற அதை கேக்க ஆரம்பிச்சுருவாரு... இப்போ அது இங்க இல்லனா எல்லாரும் அபசகுனம்னு பேச ஆரம்பிச்சுருவாங்க... மணி இப்போ 3:15 ஆச்சு 4 மணிக்கு சரியா முகூர்த்தம். கொஞ்சம் சீக்கிரமா நம்ம வீட்டுக்கு போய் எடுத்துட்டு வாங்கடா பட்டுங்களா...” என கூறினார்.




தமிழோ “அம்மா நான் மட்டும் போறேன். தேவா இங்கையே இருக்கட்டும். ஏதாவது வேற அவசரமா வேணும்னா உங்களுக்கு உதவிக்கு இருக்கட்டும். நான் சீக்கிரமா வந்தறேன்” என்று கூறி அவர்களின் மற்றொரு நண்பனின் இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு அவன் இல்லம் நோக்கி சென்றான்.





அதேநேரம் ஆதுவும் திவிக்கு தெரியாமல் பதுங்கி பதுங்கி தோட்டவீட்டை விட்டு வெளியேறினாள். பின் மெதுவாக மாலா கூறிய வழியில் அவள் வீட்டை நோக்கி சென்றாள். அவ்வீட்டை அடையும் சில தூரத்திலே பெரும் உருவம் கொண்ட இரண்டு ஆண்களுடன் அப்பெண்ணின் கணவனின் தம்பி அவள் வீட்டிற்கு முன் நின்று சத்தம் போட்டுகொண்டும் தகாத வார்த்தைகளால் அப்பெண்னை திட்டிகொண்டும் அவள் தோட்டத்தில் விளைந்திருந்த காய்கறிகளை பிடுங்கி போட்டுக்கொண்டும் இருந்தனர். இதை தூர்த்தில் இருந்து பார்த்த ஆது அவளின் அருகே கிடந்த ஓடை கல்லை எடுத்து அம்மூவரில் ஒருவன் தலையை குறி பார்த்து அடித்தாள்.




அவள் அடித்ததும் அவன் சத்தத்தில் திரும்பிய மற்ற இருவரும் யார் இவள்? என பார்த்து கொண்டிருக்கும் போதே ஆது அவர்களிடம் வந்து “என்னங்கடா ஒரு பொண்ணு தனியா இருந்தா போதுமே.. உடனே எப்படி அவ கிட்ட இருக்கிறதுலாம் பறிச்சுக்கலாம்? எப்போ அவள நம்ம உடமை ஆக்கிக்கலாம்? னே அழையறிங்களாடா புண்ணாக்கு ராமனுங்களா” என்று திட்டவும் அப்பெண்ணின் கொழுந்தன் “ஹே யார் நீ? உன்ன இதுக்கு முன்னாடி நான் இந்த ஊர் ல பாத்ததே இல்லையே? என்ன நீ இவளுக்கு சப்போர்ட்டா?” என்று ஆதுவிடம் கேக்க




ஆதுவோ “நான் யாரா இருந்த உனக்கென்ன? நீங்கல்லாம் ஏன் இப்பொ இங்க நின்னு பிரச்சனை பண்ணீட்டு இருக்கீங்க? அவளுக்கு யாரும் இல்லனுதான பிரச்சனை பன்றீங்க, நான் கேக்கறேன் அவளுக்காக” என்று கூறவும் “அதும் சரிதான் நீ அவளுக்கு சப்போர்ட்டா? அவ மட்டுமிருந்தா அவளும் இந்த நிலமும் மட்டும் தான் எனக்கு சொந்தமாயிருந்திருக்கும். இப்போ அழகு சுந்தரி நீ தான வந்துமாட்டிருக்க... அதுனால உன்னையும் சேத்தே இந்த மாமன் எடுத்துக்கறேன்” என்று கூறி ஆதுவை தொட நெருங்கவும் ஆது அவள் அருகில் இருந்த கம்பை (வயலில் கொடிகளுக்கு அருகில் நட்டு வைக்க வைத்திருந்த குச்சி) எடுத்து அம்மூவரையும் அடி வெளுத்தாள்.




ஆது பள்ளி காலங்களிலையே கராத்தே பிளாக் பெல்ட் பெற்றவள். கூடவே நம் ஊர் கலையான சிலம்பம் சுழற்றுவதிலும் கை தேர்ந்தவள். அவளிடம் எவ்வளவு நேரம் சாதரணமான ஆண்களால் தாக்கு பிடிக்க முடியும்? சிறிது நேரத்திலையே சுருண்டு விழுந்தனர்.




இங்கே நடந்த கலவரத்தை பார்த்த ஒரு சிலர் ஆது அடிப்பதை முத்துவிடம் தெரிவிக்க, அவரும் அதை திவியிடம் ஒப்புவிக்க, அவள் அரக்கபறக்க மாலா இடம் வந்து சேர்ந்தாள் முத்துவின் உதவியுடன்.



திவி வந்து பார்க்கும் பொழுது ஆது அவர்களை அடித்து முடித்து கையிலிருந்த கம்பை கீழே போட்டு கையிலிருந்த மண்ணை தட்டி விட்டு திரும்பினாள். திவியை பார்த்ததும் ஒன்றும் அறியா சிறுமி போல் முகத்தை வைத்து கொண்டும் திவி முறைப்பதை பார்த்து “இரு கையையும் விரித்து ஆது எந்த தப்பும் பண்ணல திவி... நான் சும்மா தான் இருந்தேன்.. இந்த மூணு தடிமாடுங்க தான் மாலா கிட்டையும் என்கிட்டையும் தப்பு தப்பா பேசினாங்களா!!! சோ ஆதுக்கு கோவம் வந்து அடிச்சுட்டேன்” என்று கூறினாள்.




திவி அவள் கூறுவதை கேட்டு உள்ளுக்குள் சிரித்தாலும் வெளியே ஒரு முறைப்புடன் எதுவும் கூறாமல் திரும்பி தோட்ட வீடு செல்லும் வழியில் செல்லவும், ஆது அவளிடம் கெஞ்சிகொண்டே பின்னால் சென்றாள். இல்லையென்றால் அரசியிடமும் வாங்கி கட்டி கொள்ள வேண்டுமே!!!.... இங்கே அடிபட்ட மூவரை அவ்வழியில் செல்லுபவர்களின் உதவியுடன் ஆதுவின் கேம்பிற்கே அழைத்து சென்றனர்.




இங்கு தமிழ் அவன் இல்லம் சென்று மங்கல நாணை எடுத்து கொண்டு கல்யாணமண்டபத்தை அடைந்து தாயிடம் கொடுக்கவும் தான் மகிமாவின் முக கலக்கம் தெளிந்தது. பின் அனைத்தும் நல் முறையில் நடக்க புகழ் மித்துவின் கழுத்தில் தாலி கட்டி தன் சரிபாதியாக ஏற்றான். பின் சிறிது நேரத்திலையே மறுசரடு மாற்றும் சடங்கு நடந்தேறவும் அனைவரும் புகழ் இல்லம் சென்றனர்.




அங்கு அவர்களுக்கு ஆரத்தி சுற்றி வரவேற்று சாமி விளக்கேற்றி பால் பழம் கொடுத்து உப்பு, அரிசி, மஞ்சள், பருப்பு போன்றவற்றில் மித்துவை கைவைக்க அவளின் மாமியார் சொன்னார். அவளும் அதே போல செய்து முடிக்கவும் சிறிது நேரம் ஓய்வு எடுத்து புகழின் வீட்டிலிருந்து தமிழின் வீட்டிற்கு சென்றனர்.

அங்கையும் அவர்களுக்கு புகழின் வீட்டில் நடந்தபடியே ஆரத்தி சுற்றி சாமியறையில் விளக்கேற்றி பால் பழம் கொடுத்தனர். பின் மணமக்களை ஓய்வெடுக்க சொல்லவும் அவர்களும் மித்துவின் அறைக்கு சென்றனர். பின் உறவுக்காரர்களுக்கு விருந்தளிக்க அவர்களுக்கு கல்யாண பலகாரங்களை கொடுக்க என மகிமாவிற்கு நேரம் சென்றது.




இவையெல்லாம் பார்த்தபடியே தமிழும் தேவாவும் கோவைக்கு செல்ல கிளம்பி கீழே வரவும் தயாளன் மற்றும் மகி அவர்களை முறைத்தனர். அவர்களுக்கு அங்கு மிக முக்கியமான கலந்தாய்வு இருப்பதால் கிளம்புவதாக கூறவும் அவர்களுக்கும் இங்கு முக்கியமான வேலைகள் ஏதும் இல்லாததால் சரி என்று ஒரு முறைப்புடனே கூறினர் அவ்விருவரின் பெற்றோர். இவர்களும் கோவை வந்தடைந்தனர்.




இங்கு ஆதுவும், திவியை தன்னால் முடிந்தளவு சமாதனப்படுத்தி பார்க்க திவி அசைந்தாளில்லை. ஆது கொஞ்சியும் கெஞ்சியும் திவி மனமிறங்காமல் இருக்க ஆது அவளின் விடாமுயற்சியை கை விடாமல் திவியின் பின்னாடியே அழைந்து கொண்டிருந்தாள்.

பின் அவர்கள் கேம்பிற்கு வரவும் ஆது அடித்த மூவரையும் அங்கு சேர்த்திருந்தனர். ஆது அவர்களை பார்த்து சிரித்துவிட்டு செல்லவும் அம்மூவரும் ‘இன்னிக்கு நம்ம அவ்ளோதான்’ என நினைத்துகொண்டனர். அதற்கு தகுந்த மாதிரியே ஆது ராமிடம் சண்டை போட்டு இவர்களுக்கு சிகிச்சை அளிக்க வந்தாள். வேண்டுமென்றே அவர்களுக்கு சிறிது கையில் பட்டாலும் எரியக்கூடிய மருந்துகளையும் கழிம்புகளையும் பூசிவிடவும் அவர்கள் எரிச்சல் மற்றும் வலியினால் அலறினர்.




இவர்கள் சத்தம் கேட்டு வந்து பார்த்த திவி ஆதுவை முறைத்துப் பார்த்து அவளை இழுத்து கொண்டு போனாள். ராமிடம் அவர்களுக்கு சரியான சிகிச்சையளிக்க கூறிவிட்டு.





ஆதுவை இழுத்துவந்த திவி அவள் அறையில் வைத்து ஆதுவிடம் “இங்கபாரு ஆது “இப்போ நம்ம வந்துருக்கிறது சேவை செய்யறதுக்காக....ஆனால் நீ பண்றது எல்லாம் சரியா? நானே சொன்னேன்ல மாலா பிரச்சனைக்கு போலிஸ் மூலமா சரிபண்ணலாம்னு..கேட்டியா நீ? இப்போ இப்படி பண்ணிவச்சுருக்க... பத்தாதக்கு இங்கையும் இப்படி பண்ற!!!.. இது அங்க நம்ம அம்மா அப்பா க்கு தெரிஞ்சுதுனா எவ்ளோ கஸ்டப்படுவாங்க?? இதுலாம் நீ புரிஞ்சு செய்றியா? புரியாம செய்றியா ஆது?” எனக் கேக்க ஆது திவியிடம்




“எல்லாம் தெரிஞ்சுதான் செய்றேன் திவி...என்னால முடிஞ்ச வரைக்கும் நான் பாக்கிற தப்புகளை தட்டி கேக்க ஆசை படறேன்.. இது என் கடமையும் கூடதான்” என கூறி சென்றுவிட திவி இனி இவளிடம் பேசி பயனில்லை. கார்த்தியிடம் தான் கூற வேண்டும் என முடிவெடுத்தவளாக நோயாளிகளை பார்க்க சென்றாள்.




கார்த்தி திவ்யாவின் உடன் பிறந்த அண்ணன். திவி மற்றும் ஆது பிறந்தது முதல் ஒன்றாக இருப்பதால் கார்த்திக்கு இருவரும் செல்ல தங்கைகளே.... ஆம் திவி மற்றும் ஆது இருவரும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பிறந்த ஒட்டி பிறக்காத இரட்டையர்கள்.




எப்பொழுதுமே ஆதுவிற்கு கார்த்தியிடம் சிறிதே சிறிதளவு பயமுண்டு. இரு குடும்பங்களும் பக்கம் பக்கமென்பதால் மூவரும் ஒன்றாக வளர்ந்தவர்களே.. இதில் ஆது செய்யும் வேலைகளுக்கு ( இழுத்துவரும் பிரச்சனைகளுக்கு) அரசியிடம் வாங்குவதை( அறிவுரைகள் மற்றும் அடிகள்) விட கார்த்தியிடம் வாங்குவாள் ஆது. அறிவுரைக்கு பயந்தே சில நாட்கள் எந்த வம்புகளிலும் சண்டைகளிலும் தலையிட மாட்டாள். அதாவது நேரிடயாக தலையிடாமல் அப்பிரச்சனைகளின் பின்னால் இருப்பாள் இவர்களுக்கு தெரியாமல்.




ஆதுவின் அடிக்குபின் மாலாவிற்கு அம்மூவர்கள் எவ்வித தொந்தரவும் கொடுக்கவில்லை. கார்த்தி கொடுக்கவிடவில்லை. அன்றே திவி கார்த்தியை அழைத்து ஆது செய்தவற்றை கூறிவிடவும் கோவை வந்தபின் இதைபற்றி ஆதுவிடம் தான் கேட்பதாகவும் கூறிவிட்டான் கார்த்தி. ஆதுவும் இப்பிரச்சனை கோவையில் இருக்கும் குடும்பத்தாருக்கு தெரியாது என நினைத்து சந்தோசமாக சுற்றி வந்தாள். திவியும் அவளிடம் கூறவில்லை.




பின் இவ்வாறே ஆது மற்றும் திவியின் இரண்டு வார மருத்துவ முகாம் முடிவுக்கு வந்து அவர்களும் கோவை சென்றடைந்தனர். கோவை வந்ததும் கார்த்தி மற்றும் அரசியிடம் வாங்கி கொண்டது எல்லாம் தனி கதை ஆதுவிற்கு.




இவ்வாறே ஆதுவின் சாகசங்களும் அரசியின் திட்டுகளும் கார்த்தியின் அறிவரைகளும் திவிக்கு யார் பக்கம் பேசுவது எனத் தெரியாமலும் நாட்கள் சென்றது அவர்களுக்கு.





இங்கு தமிழோ தேவாவிடம் அடுத்தநாள் தான் ஒரு வேலை விசயமாக **** தியேட்டருக்கு செல்ல விருப்பதாகவும் இங்கு கட்டிகொண்டிருக்கும் கட்டிடங்களின் மேற்பார்வையை தேவாவை பார்த்து கொள்ளுமாறு கூறிகொண்டிருந்தான்.




ஆதுவும் திவியிடம் நாளை அதே தியேட்டருக்கு சென்றே ஆக வேண்டும் என்றும் அடம் பிடித்துக்கொண்டிருந்தாள்.
 




g3mani

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 30, 2019
Messages
3,197
Reaction score
6,400
Location
Sharjah UAE
Hey nice dear! kallieduthu adikirathellam vera level 😂😂😂
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top