• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கனலிடம் காற்றுக்கென்ன நேசம் -4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Arumbu

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Sep 10, 2020
Messages
152
Reaction score
233
Location
Cbe
inbound195695561.jpg


KKN -4




அன்றைய நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆதுவின் இல்லம் அமைதியாக இருந்தது. ஆது, அன்று திவியுடனும் அவள் கல்லூரி தோழர்களுடனும் படம் பார்க்க செல்லுவதாக திட்டமிட்டிருந்தாள். திவியுடனும் அரசி மற்றும் கார்த்தியுடனும் போராடி சம்மதம் பெற்று அவள் வெளியே செல்வதாக இருந்தது.



ஆது தாயாராகி கீழே வரவும் அரசி அவர்களுக்கான காலை உணவை மாறனுக்கு பறிமாரியபடியே ஏதோ சீரியசாக அவரிடம் பேசிக்கொண்டிருந்தார். மாறனின் முகத்திலும் மற்றைய நாட்கள் இருக்கும் தெளிவும், மலர்ந்த முகமும் இல்லாமல் ஏதோ கலக்கமாக அரசியிடம் ஏதோ விவாதித்து கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.



ஆது அவர்கள் இருவரையும் கவனித்து ‘என்னாவாயிற்று இருவருக்கும் முகமே சரியில்லையே’ என நினைத்து கொண்டே அவர்கள் அருகில் வந்தாள். ஆது வரும் அரவம் கேட்டு இருவரும் தங்கள் முகத்தை சீராக்கி கொண்டு முயன்று சிரிப்பை வரவழைத்து ஆதுவின் முகம் பார்த்து சிரித்து, அரசி “வாடா ஆது... என்ன இவ்ளோ நேரம்.. சரியான டைம்க்கு சாப்பிடனும்ல... அப்போதுதான நீ சொன்ன இடத்துக்கு போக முடியும்... சீக்கிரமா சாப்பிட்டு கெளம்புடா திவி கூட” என்று கூறி அவளுக்கு காலை உணவு பறிமாரினார்.



மாறனும் ஆதுவிடம் ”எங்கடா போறிங்க இரண்டு பேரும்? என்று கேக்க “கல்லூரி தோழிகளுடன் சேர்ந்து வெளியில் செல்ல திட்டமிட்டிருப்பதாக” ஆது கூற அவரும் “சரிடாமா.. பார்த்து போய்ட்டு வாங்க.. அப்போ சீக்கிராமா சாப்பிட்டு கெளம்புடா” என அவசரப்படுத்தவும்



ஆது ‘இவங்க இரண்டு பேருக்கும் என்ன ஆச்சு? எப்பொழுதும் நான் போறேன்னு சொன்னாலும் விடமாட்டாங்க.. இப்போ போ,போ னு அவசரப்படுத்துராங்க’ என நினைத்து கொண்டே சாப்பிட்டு அவள் அறைக்கு பையை எடுக்க செல்லவும்



அரசி மாறனிடம் “இவ போறதுக்கு முன்னாடி அவுங்க வரக்கூடாதுங்க... ஆது அவுங்கள பார்த்துட்டானா பிரச்சனை ஆகிரும்.. நம்ம ஆதுவுக்கு தெரியாம மறச்சதுலாம் தெரிச்சுரும்” என்று கூறி புலம்புவதும் அதற்கு மாறான் “அப்படிலாம் ஆகாது அரசி” என்று சமாதனப்படுத்துவதும் கேட்டுக் கொண்டே மறுபடியும் கீழே வந்து இருவரிடமும் தாம் திவியின் இல்லம் செல்வதாக கூறிகொண்டு சென்றாள்.



திவியின் இல்லம் சென்ற ஆது, அங்கு உள்ளவர்களிடம் ஏதும் கூறாது நேராக அவர்களின் மொட்டை மாடிக்கு சென்று அங்குள்ள தடுப்பு சுவர் பின்னே நின்று தங்கள் வீட்டை கவனிக்கலானாள்.



திவியின் இல்லம் ஆதுவின் இல்லத்திற்கு நேர் எதிர்புறமாக அமைந்திருந்தது. அவர்களின் வீட்டில் இருந்து ஆதுவின் வீட்டையும் அங்கு வருவோர் போவோரை நன்றாக பார்க்கலாம். ஆனால் திவின் இல்ல மொட்டைமாடியில் இருந்த தடுப்பு சுவர் வழியாக ஆது வீட்டிலிருந்து பார்த்தால் இங்கே நின்றிருப்பது தெரியாது.



திவியின் பெற்றோர்களும் கார்த்தியும் திவியும் அவளின் பின் வந்து அவள் செய்வதை கவனிக்க, ஆது அவள் வீட்டை பார்த்து நின்றிருப்பதை பார்த்து கேள்வி எழுப்பவும் ஆது அவர்களிடம் தன் தாய் தந்தை விசித்திரமாக நடந்து கொண்டதை தெரிவித்தாள். அவர்களுக்கு தான் முன்னமே தெரியுமே(திவியை தவிர) அவள் வீட்டில் நடைபெறவிருப்பதை...



அதனால் அவர்கள் அமைதியாக ஆதுவையும் திவியையும் கீழே செல்ல கூற ஆது மறுத்துவிட்டாள். கார்த்தி கண்டித்தும் “அங்க யாரோ வரப்போறாங்க அண்ணா... அது எனக்கு தெரியக்கூடாதுனு தான இப்படி தொரத்திரீங்க எல்லாரும்? நான் தெரிஞ்சுக்கறதுல என்ன பிரச்சனை?” என்று கேக்கவும் ஆதுவின் வீட்டிற்கு இரண்டு கார்கள் வந்தது.



கார்த்தி ஆதுவையும் திவியையும் இரு கைகளால் இழுத்து கீழே வந்து அவர்களை அவர்களின் திட்டப்படி செல்லுமாறு மிக கண்டிப்புடன் கூற, ஆது அவனை முறைத்துகொண்டே திவியுடன் கிளம்பி சென்றாள். பின் திவியின் பெற்றோர்களும் கார்த்தியும் ஆது வீட்டிற்கு சென்றனர்.



இங்கு தமிழ் கிளம்பி ஒரு புது கட்டிடத்தின் விரிவாக்கத்திற்கு அக்கட்டிடத்தின் உரிமையாளர்களை பார்க்க செல்லவும் தேவா அவர்கள் கட்டி கொண்டிருக்கும் கட்டிடங்களுக்கு மேற்பார்வை பார்க்க சென்றான்.



தமிழ், ராம் நகரில் இருக்கும் *ப்ருக் ஃப்பீல்ட்* எனும் பேரங்காடிக்கு அவனின் வாடிக்கையாளரை பார்க்க வந்தான். அங்கே இருக்கும் புட் கோட்டில் அமர்ந்திருந்து அவர்களிடம் எவ்வாறான கட்டிடம் வேண்டும் எனவும் அவர்களின் கையிருப்பையும் பற்றியும் வங்கிலோன் போன்றவற்றையும் பேசி கொண்டிருந்தான்.



அதே நேரம் ஆது அவர்கள் கல்லூரி தோழிகளுடன் படம் பார்த்துவிட்டு தமிழ் அமர்ந்திருந்த இடத்திற்கு வரவும் அவள் வந்தது முதலே அவர்களின் பின் இரு வாலிபர்கள் தொந்தரவு கொடுத்துகொண்டே அவர்களும் அவ்விடம் வந்தனர். இதற்கும் அவ்விருவர்கள் அவர்களின் கல்லூரியின் சீனியர் மாணவர்களே.



அவர்கள் கல்லூரி படிக்கும் காலம் தொட்டே திவியின் பின் காதல் என்று பிணாத்திகொண்டும் தொந்தரவு கொடுத்துகொண்டே இருப்பர். இப்பொழுதும் படம் பார்க்கும் பொழுது அவர்களின் பின் அமர்ந்து கால்களின் மூலம் தொட்டு கொண்டே இருக்கவும் தான், பாதி படத்திலையே தான் சத்தம் போட்டு மற்றவர்களுக்கு அது இடஞ்சலாக வேண்டாம் என்று அவர்களை அழைத்து கொண்டு புட் கோர்ட் வந்துவிட்டாள் ஆது.



அவளுக்கு தெரியும் நிச்சயமாக இவர்களின் பின் அவ்விருவரும் வருவர் என்று. அதேமாதிரி அவர்கள் வரவும் ஆதுவும் ‘வாங்கடா’ என்று கருவி கொண்டு அவர்களுக்கான உணவுகளை வாங்க திவியுடன் வரிசையில் நிற்கவும் அவ்வாலிபர்கள் அவர்களுக்கு பின் நின்று திவி என்று நினைத்து ஆதுவின் இடைபிடிக்கவும் ஆது திரும்பி அவனை பட்டென்று அறைந்தாள் அவன் முகத்தில். ஆனால் அடி வாங்கியதோ நம் அருந்தமிழன்.. இதை ஆதுவும் எதிர்பார்க்கவில்லை, தமிழும் கணிக்கவில்லை.


ஆம் தமிழ் அவன் சந்திக்க வந்திருந்தவர்களை அனுப்பிவிட்டு ஏதாவது உண்ணலாம் என அவ்விருவாலிபர்களுக்கு பின் நின்றிருந்தான்.



எனவே அம்மாணவனை ஆது அடிக்கும் பொழுதே அவன் நண்பனினால் இழுக்கப்ட்டு அவனிற்கு பின் நின்றிருந்த தமிழிற்கு அடி பட்டது. இதை பார்த்த மற்ற ஆதுவின் தோழிகள் எழுந்து நின்றனர். தமிழ் தன் கன்னத்தில் கை வைத்து ஆதுவை கொலை வெறியுடன் நோக்கவும் ஆதுவும் அவனை முறைத்து நின்றாள்.



பொதுவெளியில் இவ்வாறு ஒரு பெண்ணின் கையால் அடிவாங்கவும் தமிழின் தன்மானம் வெகுவாக அடிவாங்கியது.



கோவையில் கட்டுமானத்துறையை தவிர்த்தும் அனைத்துவிதமான தொழில்முனைவோர்களுக்கும் தமிழை தெரியும். அவ்விடத்தில் இருந்த பாதிபேருக்கும் அவனை தெரியும் என்கிற பட்சத்தில் தமிழ் அடிவாங்கவும் அவன் அவமானமாக கருதினான்.



இவ்விடைவெளியில் அவ்விளைஞனை அவன் நண்பன் இழுத்து செல்வதை பார்த்த ஆது தமிழிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை மறந்து அவள் தோழிகளுடன் அவசர அவசரமாக தமிழிடம் ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்து அவ்விளைஞனை பின் தொடர்ந்து சென்றாள். தமிழ் செல்லும் ஆதுவை கொல்லும் வெறியோடு முறைத்துகொண்டிருந்தான்.



ஆது அவ்வாலிபர்களை சரியாக பார்க்கிங்கில் பிடித்து அன்றைய நாள் முழுவதும் இருந்த கோவத்தை அவ்விளைஞனிடம் காட்டினால் தன் அடிகள் மூலம். ஆதுவின் தோழிகள் எவ்வளவோ முயற்சித்தும் ஆதுவை கட்டுபடுத்த முடியாமல் திண்டாடினர். ஆதுவும் ஒருவழியாக அடிப்பதை நிறுத்தி அவன் தோழனிடம் “இதுதான் இவனுக்கு கடைசி முறையா இருக்கனும்... இனி இவன் என் கண்ணு முன்னாடி வரக்கூடாது” என்று மிரட்டும் தொனியில் கூற அவனும் பயத்தில் தலையை சரி எனும் விதமாக ஆட்டி அவனை அனைத்துபிடித்து அழைத்து சென்றான்.



இதை எல்லாம் ஆதுவின் பின்னாடியே வந்த தமிழ் பார்த்து ‘சரியான சண்டைக்காரியா இருப்பா போல!!’ எனும் தன் மன நினைவை அவளிடம் இருந்து பிரித்து தான் செய்ய வேண்டியவைகளை ஆதுவின் நடவடிக்கைகளை பார்த்து கொண்டும் அவளை தன் கைப்பேசியில் படம் பிடித்து கொண்டும் தன் மனதில் அவளை பற்றி கணக்கிட்டு கொண்டே அவனுடைய வண்டியில் அவ்விடத்தை விட்டு வெளியேறினான்.



ஆதுவும் அவள் தோழிகளுடன் இல்லம் செல்லவும், அவளின் மனதில் தமிழ் அதிர்ச்சியுடன் தன் கன்னத்தில் கை வைத்து நின்றிருந்த தோற்றமே வந்து கொண்டிருந்தது. அவனிடம் மன்னிப்பு கேக்க வேண்டும் என நினைத்து கொண்டு திவியிடம் இங்கு நடந்ததை மறந்து விடும் படி கூறி கொண்டே சென்றாள் தன் இல்லத்திற்கு.



அங்கு தன் தாய் தந்தை இருந்த கோலத்தை பார்த்து மிகவும் அதிர்ச்சியாகி உடனே தான் பணிபுரியும் மருத்துவமனைக்கு அழைத்து அவசர ஊர்தியை தன் வீட்டிற்கு அனுப்பும் படி கூறிவிட்டு இருவருக்கும் முதலுதவி வழங்க ஆரம்பித்தாள். ஆம் ஆது வந்து பார்க்கும் பொழுது அரசி மற்றும் மாறன் வீட்டு ஹாலில் மயக்கமாகி கிடந்தனர்.



அரசிக்கு சாதாரண மயக்கம் என அறிந்து கொண்டவள் ஆசுவாசமாகி தந்தையை கவனிக்க அது அவருக்கு சாதாரண மயக்கமல்ல. சிவியரான அட்டாக் என்பதை இருதய மருத்துவரான ஆது அறிந்து கொண்டதும் அனைத்தும் மறந்து அமர்ந்தாள். பின் அவள் அழைத்த அவசர ஊர்தி வரும் சத்தம் கேட்டு திவி வீட்டினர் வந்து பார்க்கவும், நிலமையின் தீவிரம் உணர்ந்து அரசி மற்றும் மாறனை தூக்கி கொண்டு மருத்துவமனை விரைந்தனர்.



ஆதுவை எழுப்பி எழுப்பி பார்த்த திவி அவள் அசைவற்று இருப்பதை கண்டு கொண்டு அவளுக்கு அதிர்ச்சிவைத்தியமாக அவளை அடித்து எழுப்பவும் ஆது தன் சுய நினைவுக்கு வந்து திவியை கட்டி கொண்டு அழுது கரைந்தாள்.



திவியும் அவளை சமாதனப்படுத்தி நிலமையின் தீவிரம் உரைத்து அவளை அழைத்துகொண்டு தாங்கள் பணிபுரியும் மருத்துவனைக்கு சென்றாள்.



அங்கு சென்று பார்க்க மாறனை மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்திருக்கவும் ஆது திவியிடம் அரசியை பார்த்துகொள்ளுமாறு கூறி கொண்டு ஐ.சி.யு. வில் தன்னை மருத்துவராக தன் மனநிலையை மாற்றிகொண்டு உள்நுழைந்தாள்.



பின் மாறனுக்கு வழங்க வேண்டிய சிகிச்சைகளாக இ.சி.ஜி. எடுத்து அவரின் இதய துடிப்பின் அளவை அறிந்து கொண்டும் இரத்த அழுத்தத்தை பரிசோதித்து அதையும் குறித்து கொண்டு ஸ்கேன் மூலம் அவரின் இதயத்தில் இருக்கும் அடைப்புகளை கண்டுகொண்டும் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை (ஆப்ரேசன்) செய்ய வேண்டும் என தன் உதவி மருத்துவரிடம் தெரிவித்து தியேட்டரை ரெடி செய்ய கூறி அவ்விடம் விட்டு வெளியேறி வெளியில் இருந்த கார்த்தி மற்றும் திவியின் பெற்றோரான கரண் மற்றும் கலாவிடம் தற்போதைய நிலயை உரைத்து விட்டு கார்த்தியிடம் வீட்டிற்கு திவியுடன் சென்று தேவையான பொருட்களை எடுத்துவரக் கூறினாள்.



பின் கலாமாவிடம் அம்மாவின் மயக்கம் தெளிந்த பின் அவரிடம் பக்குவமாக கூறுங்கள் என்று கூறி கொண்டிருக்கவும் ஒரு நர்ஸ் வந்து ஆதுவிடம், தியேட்டர் ரெடி என்று கூற ஆதுவும் தன் மனதை திடப்படுத்தி கொண்டு ஆப்ரேசன் அறைக்குள் சென்றாள்.



இங்கு தேவா, தமிழிடம் எவ்வாறு கன்னத்தில் கைரேகை பதிந்தது? என்று எவ்வளவு கேட்டும் பதிலில்லாமல் போனதால் அமைதியாக அடுத்த வேலைகளை பார்த்து கொண்டிருக்கும் போது மெதுமெதுவாக தமிழ் பேரங்காடியில் நடந்ததை விளக்கினான். தமிழ் கூறியதை கேட்ட தேவா தமிழிடம் “நீ எப்படி சும்மா விட்ட? திருப்பி அடிக்கலையா?” எனக் கேக்க அதற்கு தமிழ் கூறியதை கேட்டு தன் கண்களை விரித்தான் தேவா.
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
Achoo pali vanga tamil aduva marrriage pannna poran ah
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top