• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கனலிடம் காற்றுக்கென்ன நேசம்-7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Arumbu

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Sep 10, 2020
Messages
152
Reaction score
233
Location
Cbe
inbound1569124085.jpg
KKN -7


அன்றைய நாள் ஆது *மாறன் குரூப்பில்* பொறுப்பேற்க போவதாக இருந்தது. எனவே அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்த ஆத்விகா தன்னை சுத்தப்படுத்தி கொண்டு சூரிய நமஸ்காரத்தை 108 சுற்று முடித்து கடிகாரம் பார்க்க ஐந்தே முக்கால் என காட்டியது. பின் யோகா மேட்டை விரித்து யோகா செய்ய ஆரம்பித்தாள். சரியாக ஆறு முப்பது மணிக்கு அரசி சத்துமாவு கஞ்சி எடுத்து கொண்டு ஆதுவின் அறைக்கு வரவும் ஆது தன் யோகாசனத்தை முடித்து கொண்டு குளியறையில் இருந்து வரவும் சரியாக இருந்தது.




பின் ஆதுவிடம் கஞ்சியை கொடுத்து கொண்டே அரசி அவளிடம் “ஆது குட்டி முதல் முதலா நம்ம கம்பெனிக்கு போகப் போற.... அதுனால கோவிலுக்கு போய்ட்டு அப்புறமா கம்பெனிக்கு போடா குட்டிமா” என்று கூற ஆதுவும் சரியென கூறி தயாராகினாள்.



பின் சரியாக காலை ஏழு மணிக்கு மாறனுடன் தன் காரில் சாரதாம்பாள் கோவில் சென்று சாமி தரிசனம் கண்டு ‘ எல்லாம் நல்ல படியா நடக்கனும் அம்மா’ என வேண்டிக்கொண்டு மூன்று முறை பிரகாரத்தை சுற்றி வந்து அமைதியாக கண் மூடி அமர்ந்திருந்தனர் ஆதுவும் மாறனும்.



அந்நேரம் சரியாக பரணிநாதன் அதே கோவிலுக்கு தன் மனைவி மற்றும் மகன் வெற்றி மற்றும் மகள் மதுவுடன் வந்தார். அவர்களும் சாமி தரிசனம் முடிந்து ஆது மற்றும் மாறனின் அருகில் அமரவும் அவ்விருவரும் கண் திறந்தனர்..



ஆது அவர்களை பார்த்து சிநேக புன்னகை வழங்கி மதுவிடம் பேச ஆரம்பித்தாள். பின் பரணி மற்றும் அவரின் மனைவியிடம் ஆசி பெற்று மாறனிடமும் தலை அசைத்து அவர்களிடம் விடை பெற்று அக்கோவிலில் இருந்தே நேராக வெற்றியுடன் *மாறன் குரூப்* சென்றாள்.



அவர்கள் இருவரும் கிளம்பியதும் மதுவை கல்லூரிக்கு அவர்களின் கார் டிரைவருடன் அனுப்பிவிட்டு மாறனுடன் பரணி தம்பதி அவரின் இல்லத்திற்கு சென்றார்கள்.



திவி மற்றும் கார்த்தி கிளம்பியதும் கரண் மற்றும் கலா இருவரும் ஆதுவின் இல்லம் வந்து சேர்ந்தனர். பின் அறுவரும் அடுத்து வரும் கரணின் ஐம்பத்தைந்தாவது பிறந்த நாளில் சிரியவர்களிடம் சம்மதம் பெற்று விரைவாக மூன்று திருமணத்தையும் வைத்து கொள்ளலாம் என பேசவும் திவிக்கு மணமகனாக பரணியின் தம்பி மகனை பேசிவைத்தனர்.



பரணிக்கு ஒரு தம்பியுண்டு. அவரும் அவரின் மனைவி பிரசவத்தின் பொழுது இறக்கவும் எனக்கு இக்குழந்தை வேண்டாம் என கூறி மனைவி இறந்த துக்கத்தை தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார். எனவே அக்குழந்தையும் பரணி குடும்பமே வளர்க்கிறது. அக்குழந்தையின் பெயர் சக்தி. இப்பொழுது சக்தி அவர்களின் தொழில் வளர்ச்சிக்காக வெளிநாடு சென்றுள்ளான்.



இங்கு, தமிழ் தாங்கள் புதிதாக ஏற்றுகொண்ட கட்டிடத்திற்கு வரைவுமாதிரிகளை கணினியில் பார்த்து கொண்டே தேவாவிடம் ஆலோசித்துகொண்டிருந்தான். அவர்கள் பேசி கொண்டிருக்கும் பொழுதே தமிழின் கைப்பேசிக்கு அவர்களின் கட்டிட சங்கத்திலிருந்து இன்று அவர்களுக்கான மீட்டிங் என்று மெஸேஜ் வந்தது.



அதே நேரம் ஆதுவிற்கும் மாறனின் குரூப்பில் பொறுப்பேற்ற பின் அங்குள்ள வேலைகளை பார்த்து மலைத்துதான் போனாள். அங்குள்ள அனைவருக்கும் ஆது ஒரு மருத்துவர் என தெரிந்ததால், தங்கள் தவறுகளை கண்டுபிடிக்கமாட்டாள் எனவும் தங்கள் மெத்தனத்தை தொடரலாம் என நினைத்து தங்களுக்குள் பேசி கொண்டே வேலைகளை பார்த்துகொண்டிருந்தனர்.



மாறன் குரூப் செந்தூரை போன்றே ஐந்து தளம் கொண்டது. மாறன் குரூப் கோவையில் காந்திபுரத்தில் அமைந்துள்ளது. மாறனின் காலம் தொட்டே இக்கம்பெனி செயல்பட்டு வருவதால் கோவை மக்களில் அநேக பேருக்கு தெரியும். இவர்களும் கட்டுமான தொழிலுடன் வீட்டுக்கு உபயோக பொருட்களான furniture’s, electronics போன்றவற்றை கொண்ட அங்காடிகளையும் கோவை மாநகரத்தில் முக்கிய இடங்களிலும் வைத்துள்ளனர்.

எனவே ஆதுவிற்கு இரு தொழிலையும் தன்னால் சரிவர கவனிக்க முடியுமா? என மலைப்பாக இருந்தது. வெற்றியுடன் சேர்ந்து சமாளித்து கொள்ளலாம் என நினைத்து அவனிடம் தொழில் கற்க ஆரம்பித்தாள்.



மாறன் குரூப்பில் முதல் தளம் வரவேற்பறையாகவும் புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு கற்றுத் தரும் அறைகளையும், இரண்டாம் தளத்தில் உணவு அறையாகவும் கேண்டீணாகவும், மூன்றாம் தளம் கட்டிட மாதிரிகளை கணினியில் வரைவதற்கும், பர்னீச்சர்களுக்கான டிசைன்களையும் வரையும் இடமாக நான்காம் தளமும், ஐந்தாம் தளம் மாறன் அறையாகவும் கான்பிரன்ஸ் ஹாலாகவும் மிகவும் ரகசியமான டாக்குமெண்டுகளை கொண்ட அறை என மொத்தம் ஆறு அறைகளை ஐந்தாம் தளம் கொண்டுள்ளது.

அவ்வறைகளில் ஒன்றில் தான் வெற்றியும் ஆதுவும் தங்களுக்காக எடுத்து கொண்டனர். சரியாக காலை பதினொன்றுக்கு அக்கம்பெனியில் பணிபுரியும் கடை நிலை ஊழியர் முதற்கொண்டு அனைவருக்கும் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டது.



அம்மீட்டிங்கில் ஒவ்வொரு தளத்தில் நடப்பவற்றை நேரடியாக பார்க்குமாறும், ஏதாவது தவறு செய்து, அது தங்கள் கவனத்திற்கு வந்தால் எவ்வித முன்னேற்பாடின்றியும் அவர்களை வேலை விட்டு அனுப்புவதற்கான அதிகாரம் கம்பெனிக்குள்ளதாகவும், இனி கட்டிட மாதிரிகளை வரைபவர்களுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரையும் பர்னீச்சர் மாதிரி வரைபவர்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரையும் வேலை நேரம் மாற்றப்படுவதாகவும், மற்ற நேரங்களில் இரு வகை பணியாளர்களும் பீல்டு வொர்க் கட்டாயம் செய்து அவர்களின் தினசரி வேலைகளுக்கான ரிப்போர்ட்டை சரியாக மாலை ஆறு மணிக்கு கம்பெனி மெயிலிற்கு அனுப்ப வேண்டும் என திட்டவட்டமாக கூறினர் ஆது மற்றும் வெற்றி.



பின் மாறன் இருக்கும் பொழுது கம்பெனியின் புதிய கட்டிட மற்றும் பர்னீச்சர் மாதிரிகளை திருடி மற்ற கம்பெனிகளுக்கு விற்றதுபோல் இப்பொழுதும் செய்தால் பிடிபடுவருக்கு அடுத்து எந்த கம்பெனியிலும் வேலை கிடைக்காமல் செய்வதுடன் அவரின் பெயரில் வழக்கு தொடரப்படும் என கூறவும் அனைவரும் சரியென கூறி தாங்கள் வேலை செய்யும் தளம் சென்றனர்.



அனைத்தும் முடிந்ததும் ஆதுவும் வெற்றியும் கிளம்பலாம் என எழுந்த பொழுது அவர்களுக்கும் சங்கத்திலிருந்து அழைப்பு வந்தது. பின் அவர்களும் கிளம்பி அங்கு சென்றனர்.



இன்று அச்சங்கத்தில் அவர்களின் தலைவருக்கான நபரை தேர்ந்தெடுத்து பொறுப்புகள் வழங்கப்படுவதாக இருந்தது. அதனாலையே அனைவருக்கும் செய்தி சென்றிருந்தது.



தமிழ் கட்டுமான தொழிலுக்கு வந்து ஒரு வருடம் தான் ஆகிறது என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். ஒரு வருடத்தில் அவன் கட்டிய பேரங்காடிகள் முதல் பல அடுக்கு அப்பார்ட்மெண்ட் வரை அனைத்திலும் அவன் கட்டும் கட்டிடங்களின் நுணுக்கங்கள் வரை அனைத்தும் பிரத்தியேகமாக இருக்கவும் அனைவரும் தமிழை அனுகுகின்றனர்.



இதனால் தமிழின் செந்தூர் குரூப், கோவையில் மாறன் குரூப்பை போன்றே பெயர் பெற்றது. அதுவுமில்லாமல் தமிழ் தொழிலில் காட்டும் கண்டிப்பும் அவனிடம் தவறு செய்பர்களை அவன் தண்டிக்கும் விதமும் தெரிந்ததால் அனைவரும் அவனை ஒருவித பயத்துடனே மற்றவர்கள் பார்ப்பர். அவனை பொருத்துவரை அவனிடம் சீண்டாமல் இருந்தால் அமைதியாக இருப்பான்.



அவனிடம் வேலையில் மோசடி செய்தாலோ இல்லை அவன் எடுக்கும் அரசு கட்டிடங்களின் மதிப்பை திருடி (டெண்டர் மதிப்புகள்) தன் கம்பெனியிற்கு உபயோகப்படுத்துவது தெரிந்தால் அவன் அவர்களை கண்டிப்பாக உயிருடன் விடமாட்டான் எனவும் தேவா தமிழிற்கு நிழலாக இருப்பதாலும் அனைவரும் தமிழ் மற்றும் தேவாவிடம் மரியதை கலந்த பயத்துடன் தள்ளியே நிற்பர்.



தேவா தமிழின் நிழல் போல்.. தமிழ் செய்யும் அனைத்து காரியத்திற்கு பின்னும் இவனின் தலையீடுகள் கண்டிப்பாக இருக்கும். தமிழிற்கு யாராவது மூலம் ஏதாவது தீங்கு ஏற்பட்டால் அவர்களுக்கு மும்மடங்காக திருப்பி கொடுப்பவன் தேவா.



எனவே இத்தேர்தலில் கண்டிப்பாக தமிழ் போட்டியிட விருப்பப்பட்டால் அவனுக்கு எதிராக யார் நிற்பர்? என்ற விவாதம் நடந்து கொண்டிருந்தது ஆது மற்றும் வெற்றி உள்நுழைகையில். ஆது “யார் தமிழ்?” என கேக்க, வெற்றிக்கு தமிழ் மற்றும் தேவா பற்றி தெரியுமாதலால் அவன் ஆதுவிடம் விளக்கி கொண்டிருந்தான் அவர்களின் ஒருவருட சாதனைகளை.



கேட்ட ஆதுவும் ‘ஒரு வருடத்தில் அசுர வளர்ச்சி போல தான் செந்தூர் குரூப்’ என நினைத்தும் ‘தப்பு செய்றவன தண்டிக்கிறதுல இவங்களும் நம்ம கட்சி போல’ என நினைத்து கொண்டிருக்கையிலே அவர்களின் பேச்சுக்கு சொந்தகாரங்களான தமிழ் மற்றும் தேவா அவர்களுக்கே உண்டான கம்பீர நடையுடனும் கூரிய பார்வையுடனும் அச்சங்கத்தில் நுழைந்தார்கள்.



பின் அனைவரும் வந்ததும் அச்சங்கத்தில் இருக்கும் மூத்த வயதுடைய நபர் எழுந்து “ இன்று நம் சங்கத்திற்கான தலைவர் பொறுப்பிற்கான தேர்தலில் யார் நிற்கிறார்கள் என அறிய இக்கூட்டம் கூட்டியிருப்பதகாவும் யார்? யார்? பங்கேற்கலாம்?” என அவர்களுக்கான

போட்டி அறிவிப்புகளை வாசித்தார்.



அவர் முடித்ததும் தமிழ், தான் தலைவர் போட்டியில் பங்கேற்கபோவதாக தெரிவிக்கவும் அவ்வறையில் அமைதி சூழ்ந்தது. பின் அனைவரும் தமிழுக்கு எதிராக யாரை நிறுத்துவது என யோசிக்கையில் முன்னால் எழுந்து பேசியவர் மாறன் குரூப்பை கைகாட்டினார்.



அச்சங்கத்தில் இதுவரை நேரிடையாக தமிழும் மாறனும் பார்த்துகொண்டது இல்லை. ஆனால் தமிழுக்கு மாறன் குரூப்பை பற்றியும் அவர்கள் எவ்வாறு ஏழை மக்களுக்கு (ஸ்லம் பகுதி) கட்டிடங்கள் கட்டி தருகிறார்கள்? அவர்களின் சமுதாய சேவைகளை பற்றி அனைத்தும் அறிந்து வைத்திருந்தான். எனவே யார் மாறன் குரூப்பின் உரிமாயாளர் என பார்க்கவும் ஆது தன் தலையை நிமிர்த்தி எழவும் சரியாக இருந்தது.



இச்சமயத்தில் தமிழ் மற்றும் தேவா ஆதுவை இங்கே நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. அதுவும் அவர்களின் போட்டி கம்பெனியின் உரிமையாளராக நினைத்து கூட பார்க்க முடியாமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர்.



ஆத்விகா திடுக்கிட்டு எழுந்து “அப்பா இப்போ இருக்கிற நிலைமைக்கு அவரால் இதில் எல்லாம் பங்கேற்க முடியாது, எனக்கும் இந்த பொறுப்புகளை பார்த்துக்க கூடிய அனுபவம் இல்லை” என மறுத்து கூறி கொண்டிருக்கும் பொழுதே தமிழ் குறுக்கிட்டு “அம்மையாருக்கு தான் எல்லா இடத்திலையும் தைரியம் ஜாஸ்தி தான!! என்ன ஏதுனு தெரியாம அடிக்கிற தைரியம் மட்டும் இருக்கும்.. ஆனால் போட்டியில் கலந்து ஜெயிக்கிறதுக்கு மட்டும் தைரியம் இல்லையா?” என கேக்க அனைவரும் தமிழை ஆச்சரியமாக பார்த்தனர். இது வரைக்கும் யாரை பற்றியும் தெரிந்த மாதிரி காட்டி கொள்ளாதவன் ஆதுவை பற்றி கூறுவது மட்டுமில்லாமல் ஆதுவை வம்பிளுக்கும் படி பேசியது எல்லாம் மற்றவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.



ஆதுவும் “ஹே மிஸ்டர் யாரு நீங்க? நான் கலந்துக்கறேன் கலந்துக்காம போறேன்.. உங்களுக்கு என்ன மிஸ்டர்?” யென கேக்கவும் தமிழ் “அப்போ உங்களுக்கு போட்டியில் பங்கேற்க தைரியம் இல்லைனு ஒத்துகோங்க” என ஆதுவின் ஈகோவை டச் பண்ண ஆதுவும் நான் கலந்துக்கறேன் தலைவர் போட்டியில்” என கூறி விட்டு அப்பொழுதே விண்ணப்பைத்தும் வெளியேறினாள் வெற்றியுடன்.



தமிழும் செல்லும் ஆதுவை பார்த்து தனக்குள் சிரித்து கொண்டே தேவாவிடம் ஜாடை காட்டவும், தேவா தலை அசைத்து ஆதுவின் விபரம் அறிய ஏற்பாடு செய்தான்.



காற்றும் கனலும் தங்களின் நேரடி மோதலை ஆரம்பித்தது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top