• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கனலை விழுங்கும் இரும்பு - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
'கனலினி' 'கனலினி' என்று முணுமுணுத்துக் கொண்டாள், சயனா. ஏதோ ஒரு ஏமாற்றம் உடலெங்கும் பரவியது. அது கண்களின் வழியே வெளியே தெரிவதைத் தவிர்க்க முயன்றாள்.

ரேவ், மேகத்தைக் கிழித்திடும் மின்னலைப் போன்ற பார்வையால், சயனாவைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

"என்ன சயனா, ஏதோ எக்ஸ்பெக்ட் பண்ணது கிடைக்கலையா? "

"சேச்சே.. அப்படியெல்லாம் இல்லை"

"நல்லது "

"கனலினி ரிலேட்டடா ஏதாவது பேப்பர் நியூஸ்"

"ய்யா, ஹியர் யூ கோ" என்று, தான் சேகரித்தச் செய்தித்தாள்களை எடுத்து நீட்டினாள்.

அதுகூறும் செய்தி என்னவென்றால், ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக, கையூட்டுப் பெற்றதாகச் சொல்லி, கனலினி என்ற வருமான வரித்துறை அதிகாரி, கைது செய்யப்படுவது போன்ற காட்சிகள் மற்றும் அதைப்பற்றிய விரிவான செய்திகள்.

பெருமூச்சுவிட்டாள் சயனா.

"வேறுவழியில்லை சயனா, டிபார்ட்மென்ட் போய் விசாரிக்கனும். நம்ம கேஸப் பத்திப் பேச வேண்டாம். இந்த லேடியப் பத்தி விசாரிக்கலாம்"

"ய்யா, வெயிட் அ வொயில். நான் ரெடியாகிட்டு வரேன்"

ஒளியின் வேகத்துடன், ராயல் என்ஃபீல்டு கிளம்பிச் சென்றது.
*****
அரசு அலுவலகத்திற்குச் சென்று, அன்றைய தினமே வேலை முடிந்து திரும்பியவர்கள், அரிய பொருளாக, அரும் காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டும்.

காத்திருந்தனர்… காத்திருந்தனர்… காத்துக் கொண்டே இருந்தனர். இது அவர்களின் அடையாளத்தை மறைக்க விரும்பியதால், வந்த காத்திருப்பு.

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

அப்பொழுது அவளது 'கூஃபி' வாழும் காதல் கிரகத்திலிருந்து அழைப்பு வந்தது.

ஏதோ, ஏமாற்றம் கண்டது போல் எடை கூடியிருந்த மனதை, எளிதாக்க முடிந்த ஒரே நபர்.

"ஹலோ" - கனத்த மனதால் வார்த்தைக் கம்மிய குரலில் வந்தது.

"ஹாய் ட்டேபீ. நல்லா தூங்கினியா? இப்போ பீல் பெட்டரா? " - காதல் கரிசனம்.

"யெஸ்" - அவளது 'கூஃபி'யின் அந்தக் கரிசனமே போதுமாயிருந்தது, இந்தப் பதிலைச் சொல்ல.

"என்ன பண்ணிட்டு இருக்கிற?"

"இன்வெஸ்டிகேஷன் விஷயமா டேக்ஸ் டிபார்ட்மென்ட் வந்திருக்கேன்"

"அதிசயமா இருக்கு. வேல நேரத்தில போஃன் பண்ணிருக்கேன், மேடம் கோபப்படவே இல்லை. ஏன்? " - காதலியைப் பற்றிய சரியான புரிதல்.

புரிதலைப் புரியாத மௌனம்.

"ஓ ஹேக்கர் பத்தின டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண வந்திருக்க. அதான் ரொம்ப சாஃப்டா இருக்க. ஏன்னா உனக்குத்தான் அந்த ஹேக்கர் மேல 'சாஃப்ட் கார்னர்' இருக்குல"

எந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்று தெரியவில்லை, ஆனால் கேட்டவளுக்கு அனர்த்தமாகத் தோன்றியது.

"இதுக்கு நான் 'ஆமான்னு' பதில் சொல்லிடுவேன், அப்புறம் நீதான் கஷ்டப்படுவ" - கம்மிய குரல், இப்போது கடுமையாக ஒலித்தது.

"நான் கஷ்டப்பட மாட்டேனு சொன்னா, என்னயவிட நீதான் கஷ்டப்படுவ" - அதே கடுமை எதிர்முனையிலிருந்தும்.

எல்லோரிடமும், எல்லா இடத்திலும் எதையோ இழப்பது போல் உணர்வு சயனாவிடம். பதில் கூறாமல் இருந்து தன் இழப்பை, இயல்பாகத் தெரியப் படுத்தினாள்.

"ஹேய் ட்டேபீ, என்னாச்சு? ஜஸ்ட் பார் பஃன். நீ சீரியஸா எடுத்துக்காத"

".... " - 'நான் சொல்லுவேன், நீ எப்படி சொல்லலாம்' என்பதைக் கேள்வி கேட்கும் மௌனம்.

"ட்டேபீ… ஜஸ்ட் பஃன்"

"ஐ அம் நாட் அ கேம்"

"என்னாச்சி சயனா?" - இப்படி அவன் காதலின் கவனிப்பாய் கேட்கும் போது, அவளின் எல்லா இழப்பும், எதுவுமில்லாமல் ஆகிவிடுகிறது.

"நத்திங். ஹேக்கர் யாருன்னு தெரிஞ்சாச்சு"

"ஓ, யாரு? பேரென்ன? "

"ஹேக்கர் பேரு கனலினி"

"இது பொண்ணோட பேருமாதிரி இருக்குதே ட்டேபீ?? "

"மாதிரியெல்லாம் இல்லை. ஹேக்கர் பொண்ணுதான்." - தனது கனிப்பு தவறானதால் வந்த எரிச்சல்.

அவளது கூஃபியின் சிரிப்புகள்.

"ஏன் சிரிக்கிற?"

"காம்பட்டீசன் இல்லாத ஒன்சைட் லவ். அந்த சந்தோஷம் உனக்குப் புரியாது"

அவளும் சிரித்துவிட்டாள்.
இப்போதெல்லாம்
அவன் 'சிரியென்று' சொன்னால், அவள் 'சரியென்று' செய்யும்படி ஆயிற்றோ?!

"எப்ப பார்த்தாலும் உன்னப் பத்தி மட்டும்தான் யோசிப்பியா? என்னப் பத்தி யோசிக்க மாட்டியா?" - எதற்காக இந்தக் கேள்வி?

"நான் சொன்னனா? சொல்லு நான் சொன்னனா?"- ஆனால், காதலுக்காக மட்டுமே இந்த எதிர் கேள்வி.

" என்னப் பத்தி யோசிப்பியா?" - குரல் மிகக் கொஞ்சமே கொஞ்சமாக கொஞ்சியதோ??

"கண்டிப்பா ட்டேபீ. என்ன ஒன்னு உன்னப் பத்தி யோசிச்சாலே கபுள் கோல்ஸ்தான், முன்னாடி வந்து நிக்குது" - காதல் வாடிக்கை.

"அதான பார்த்தேன், ஆரம்பிச்சு பத்து நிமிஷத்துக்கு மேல ஆச்சே… இன்னும் இந்த பேச்சு வரலயேனு நினைச்சேன் " - காதல் வேடிக்கை.

"பார்த்தியா? நீ நினைக்கிற. நான் பேசறேன். அவ்வளவுதான் டிபெரன்ஸ்" - காதல் எல்லைக் கோடு.

"ஏய்! நான் அந்த அர்த்தத்தில சொல்லல" - குரலின் குழைவு காதல் எல்லைக் கோட்டைத் தாண்டப் பார்க்கிறதோ? ?

"தெரியும். போ, போய் வேலையை பாரு. ஐ கிஸ் யூ ட்டேபீ."

"என்ன? இன்னைக்கு 'ஐ லவ் யூ' சொல்லல" - காதல் ஓட்டை.

"அதான், நீ சொல்லிட்டல ட்டேபீ" - காதல் சேட்டை.

"அய்யோஓஓஓ" - காதல் பிழை.

"இருந்தாலும்,என்னோட ட்டேபீ கேட்டு சொல்லாம இருப்பேனா? லவ் யூ லவ் யூ, லவ் யூ, ட்டேபீ. பை" - காதல் மழை.

காதல் கிரகத்தில் நாளுக்கு நாள், காதல் மழைப் பொழிவின் அளவு, மில்லி மீட்டரலிருந்து சென்ட்டி மீட்டர் ஆகிறதோ??

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

அழைப்புத் துண்டிக்கப்பட்டது.

" மனோவா? "-ரேவ்

" ம்ம்ம் மனோதான்" - சயனா.

ஆறுதல் புன்னகை - இருவரிடமும்.

ஒருவழியாக, அவர்கள் பேச நினைத்த அதிகாரியிடமிருந்து, அழைப்பு வந்தது. இருவரும் உள்ளே சென்றார்கள்.

அரசாங்க அலுவலகத்தின் அத்தனை அம்சமும் பொருந்தி இருந்தது, அந்த அறை. அழுக்குப் படிந்த கோப்புகள். 'ஏசி' இருந்தும் 'பேஃன்' போட்டுக் கொள்ளும், ஆண் அதிகாரிகள். செவ்வாய் கிழமை மங்களகரத் தோற்றத்துடன் பெண் அதிகாரிகள்.

"சொல்லுங்க என்ன வேனும்" - அதிகாரி.

செய்தித் தாளை நீட்டினாள், ரேவ்.

"இந்த லேடியப் பத்தி டீடெயில்ஸ் வேனும்" - ரேவ்.

"என்ன வேனும்? அதான் பேப்பர்ல இருக்குதுல"

"யெஸ். லஞ்சம் ஏன் வாங்கனாங்கனு தெரியுமா? "

"அதை நீங்க ஏன் கேட்கிறீங்க? அப்படியே கேட்கனும்னாலும் போலீஸ்கிட்ட கேளுங்க"

இதற்கிடையில்
ஒரு பெண் வேலையாள், அந்த அறைக்குள் நுழைந்தார்.

"சார் வூட்டுக்கு சீக்கிரமா போனும். இப்பவே சுத்தம் செய்றேன்"

ஒரே ஒரு தலையசைப்புடன், அந்தப் பெண்ணிற்கு அனுமதி அளித்தார், அந்த அலுவலகர்.

"கனலினி மேடம், இப்ப எங்க இருக்காங்க? அதாவது சொல்லுங்க" - ரேவ்.

அந்தக் கேள்வியில், அந்தப் பெண் வேலையாள், ஒரு சின்ன அதிர்ச்சிப் பார்வைப் பார்த்தார். அதை சயனா கண்டுகொண்டாள்.

சிறிது நேரம் ரேவிற்கும், அலுவலருக்கும் இடையே பேச்சுக்கள் இருந்தன. ஆனால் எந்த ஒரு பயனும், அளிப்பதாக இல்லை.

சுத்தம் செய்து முடித்துப் போகும் போது, தன் வாளியால், சயனாவை லேசாக இடித்துவிட்டுச் சென்றார்.

ஒரு ஐந்து நிமிடத்துக்குப்பின், சயனா வாய்திறந்தாள்.

"இங்க பாத்ரூம் எங்க சார் இருக்கு? " - சயனா.

ரேவ் வித்தியாசமாகப் பார்த்தாள்.

"லெப்ட்ல கட் பண்ணி ஸ்ட்ரைட்டா போனீங்கன்னா, டெட் என்ட்ல"

"ரொம்ப தேங்க்ஸ் சார்" என்று சொல்லி விடை பெற்றாள்,சயனா.

ரேவ், சயனா பின்னேயே ஓடி வந்தாள்.

"இப்ப பாத்ரூம் போகறதுதான் முக்கியமா?" - ரேவ்.

"ஆமா முக்கியம்தான் "

"அவர்கிட்ட இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருந்தா, ஏதாவது விஷயம் கிடைச்சிருக்கும் "

"ஒன்னும் கிடைச்சிருக்காது. பேசாம வா "

"எவ்வளவு இம்பார்ட்டண்ட் வொர்க். பாத்ரூம் போகனும்னு சொல்ற."

"...."

"கவர்மெண்ட் டாய்லெட் சுத்தமா இருக்காது"

"அது பப்ளிக் டாய்லெட் "

"அப்ப, கவர்மெண்ட்டும் பப்ளிக்கும் ஒன்னில்லையா சயனா? "

அடஅடஅட! 'இந்தியன் டெமாகிரேஸி' பற்றி, இம்மியளவும் தெரியாத ஒருவரால் மட்டுமே, இந்தக் கேள்வி கேட்க முடியும்.

"மிஸ்.ரேவ், சிஐடி மாதிரி பேசுங்க. சீர்திருத்தவாதி மாதிரி வேண்டாம்"

'பாத்ரூம்' இருக்கும் இடத்திற்கு வந்தார்கள். சயனாவின் மூளை காத்திருக்க ஆரம்பித்தன. சிறிது நேரத்திற்குப் பின், அந்தப் பெண் வேலையாள் வந்தார்.

"வாங்க உங்களுக்குத்தான் வெயிட் பண்றேன். உங்களுக்குத் தெரிஞ்சத சொல்லுங்க? "

"கனலினி மேடம் ரொம்ப நல்ல ஆபீஸர். பெரிய இடத்துல நடந்த தப்ப பிடிக்கப் போனதால, இங்கிருந்த ஆபீஸருங்க எல்லாம் சேர்ந்து, மாட்டி விட்டுட்டாங்க"

"ம்ம்ம். இது கொஞ்சம் எங்களுக்குத் தெரிஞ்சதுதான். பேப்பர்ல கூட போட்டிருக்கு. வேற ஏதாவது சொல்லுங்க? "

"மூனு மாசம் ஜெயிலுக்குப் போயிட்டு வந்தாக. அதுக்கப்புறம் என்னாச்சுனு தெரியல"

"மூனு மாசமா? பேப்பரல இரண்டு மாசமானு போட்டிருக்கு"

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. வேற என்ன வேனும்னு சொல்லுங்க? "

"அவங்க வீடு எங்க இருக்குன்னு தெரியுமா? "

"அது எதுக்கு? " - ரேவ்.

"நீ பேசாம இரு"

"என்னமோ பண்ணு. நான் போறேன் " என்று சொல்லி ரேவ் கிளம்பி விட்டாள்.

"அது தெரியும்" என்று முகவரியைத் தந்தார், அந்த வேலையாள்.

"அவங்க வீடு இருக்கிற ஏரியா, உங்களுக்கு எப்படித் தெரியும்? "

"நான் சனி ஞாயிறுனா, அந்த மேடம் வீட்டுக்குப் போய், அவங்களுக்கு வீடு சுத்தம் பண்ண உதவி செய்வேன் "

"சரி. இதெல்லாம் இருக்கட்டும். நீங்க எந்த ஏரியால இருக்கிறீங்க" - இந்தக் கேள்விதான், சயனா கேட்க நினைத்து வந்தது.

"நான் இதுக்கு முன்னாடி, நுங்கம்பாக்கத்தில இருந்தேன் "

"நான் அத கேக்கல. இப்ப எந்த ஏரியால இருக்குறீங்க? "

"அட போம்மா உனக்கு உதவலாம்னு நினைச்சா? நீ என்னையவே கேள்வி கேட்கிற?" என்று நடந்து, இல்லை நழுவிச் சென்றுவிட்டார்

அவர் போவதையே பார்த்தபடி, சயனா நின்று கொண்டிருந்தாள். திடீரென்று பின்னால் இருந்து யாரோ இடித்தனர்.

"ஏன்மா பாத்ரூம் வந்தேன்னா, போயிட்டு போக வேண்டியதுதானே. இங்கனயே நின்னுக்கிட்டு இருக்க. நவுறு " - இன்னொரு வேலையாள்.

"யக்கா, ஒரு கெல்ப்பு. அந்த போறாங்கள, அவங்க எந்த ஏரியா?" - முதல் சுத்தம் செய்பவரைக் காட்டி.

"அவ சைதாப்பேட்டை. நீ வழிய வுட்டு நகறு. நான் வேல பாக்கனும்"

தான் நின்று கொண்டிருப்பது, அரசு அலுவலகமா என்று சந்தேகம் எழுந்தது, அந்தப் பதிலால்.

எனினும் "தேங்க்ஸ்கா" என்று சொல்லி வெளியேறினாள்.

*****

வண்டியின் அருகே நின்று கொண்டு, இருக்கையில் விழுந்திருந்த வேப்பம் பூக்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள், ரேவ்.
சயனா வந்தாள்.

"கனலினி வீட்டுக்குப் போய் பார்க்கப் போறீயா? " - ரேவ்.

"கண்டிப்பா. ஆனா அங்க யாரும் இருக்க மாட்டாங்க. "

"அப்புறம் எதுக்கு போகனும்? "

"வெயிட் பண்ணி தெரிஞ்சிக்கோ"

ராயல் என்ஃபீல்ட் ரகளையாகச் சென்றது.

*******

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
குடியிருப்புகள் ஒன்றின் முன்னே வந்து ராயல் பார்க் செய்யப்பட்டது. ஒரு இனிப்புக் கடையில் மைசூர்பாகு மட்டுமா இருக்கும்? கடலைமிட்டாயும் உண்டல்லவா? இந்தக் கட்டிடம் அந்த வகையறா!

வண்டியிலிருந்து இறங்கினார்கள்.

"எத்தனாவது ப்ளோர் சயனா "

"எயிட்த். வா, அங்க இருக்கிற செக்யூரிட்டிய பிடிப்போம் "

இருவரும் செக்யூரிட்டி முன்…

"என்ன வேனும்?" - செக்யூரிட்டி.

"இங்க எயிட்த் ப்ளோர்ல கனலினினு ஒருத்தங்க இருக்காங்கள, அவங்கள பாக்கனும்" - சயனா.

அவர் யோசித்தார்.

"இப்ப அப்படி யாரும் இல்லையே"

"அவங்ககூட இன்கம்டாக்ஸ் ஆபிஸர்"

"தெரியல மேடம். அப்படி யாரும் இருக்கிற மாதிரி தெரியலைய"

"நாங்க ப்ளோர்ல போய், பக்கத்து வீட்டில விசாரிச்சிக்கிறோம்" - உள்ளே நுழையப் பார்த்தாள் சயனா.

"இல்ல மேடம். அப்படியெல்லாம் உள்ளே விடமாட்டோம் " - தடுத்தார் செக்யூரிட்டி.

இப்பொழுது அவர்களது அடையாள அட்டை எடுத்துக் காண்பிக்கப்பட்டது.

உடனே,

"உங்களுக்கு வேண்டிய விவரமெல்லாம் செக்கரட்டரி தருவாரு. நீங்க செகன்ட் ப்ளோர் போனீங்கன்னா, அங்க அவரோட ரூம் இருக்கும்" - செக்யூரிட்டி.

"தேங்க்ஸ்" என்று சொல்லி இருவரும் விடைபெற்றனர். விடை பெறும் முன் அவர் வசிக்கும் ஏரியா கேட்டு அறிந்து கொண்டாள், சயனா.
*****
இரண்டாவது தளத்தில்…

'செக்ரட்டரி அறை' என்று பெயரிட்ட அறைக்குச் சென்றனர்.

நடுத்தர வயதில் ஒரு பெண்மணி, அங்கு அமர்ந்திருந்தார்.

"வாங்க, உட்காருங்க" என்று இருக்கையைக் காட்டினார்.

இருவரும் அமர்ந்தனர்.

"இப்பத்தான் செக்யூரிட்டி இன்டர்காம்ல சொன்னாரு" என்றார், இன்முகமாக.

சிரித்து வைத்தனர்.

"ஏதும் குடிக்கிறீங்களா? "

மழுப்பி வைத்தனர்.

"சொல்லுங்க கனலினி மேடம் பத்தி என்ன தெரியனும்" - புரிந்துவிட்டது, அவர்களது மழுப்பல்.

"இப்போ அவங்க எங்க இருக்காங்கன்னு தெரியனும்" - ரேவ்.

"அவங்க எங்கன்னு தெரியாது. ஜெயிலுக்குப் போயிட்டு வந்த பிறகு எங்க போனாங்கன்னு தெரியலை"

"அவங்க ஃபேமிலி பத்தியாவது தெரியுமா? " - சயனா.

சயனா அதிக ஆவல் காட்டினாளோ? அது அப்பட்டமாகத் தெரிந்ததோ?

அந்தப் பெண்மணி பதில் சொல்லும் முன், சயனாவின் இருதயம் இஷ்டத்திற்கு இருமிக் கொண்டது.

"கனலினி மேடத்துக்கு ஹஸ்பண்ட் கிடையாது. ஒரே ஒரு பையன் உண்டு. "

சயனாவின் இருமிய இருதயத்துக்கு, இதமான சூட்டில், இஞ்சி டீ கொடுக்கப்பட்டது.

"அந்தப் பையன் பேரென்ன?" - சயனா.

சயனாவின் இந்தக் கேள்வியால், ரேவின் இருதயம் இம்சையாக இருமியது.

"பேரு சக்திவேல். இங்கு சோளிங்கநல்லூர்ல ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில வேலை பார்த்தாரு"

ரேவின் இருமிய இருதயத்துக்கு, இளநீர் கொடுத்து, மேலும் இருமச் செய்யப்பட்டது.

"சக்திவேல்" - சயனாவால் அந்த எழுத்துக்கள் உச்சரிக்கப்பட்டன.

உச்சரிக்கும்போதே
உயிர் சிலிர்த்தது!
உதடு இனித்தது!!

சிலிர்த்த உயிரைச் சீராக்க, தனிமை தேவைபட்டது. வெளியே சென்று விட்டாள்.

"வேற டீடெயில்ஸ்?" - ரேவ்.

"இவ்வளவுதான் தெரியும். நீங்க சக்திவேல் வேல பார்க்கிற ஆபீஸ்ல போய் கேட்டீங்கன்னா, மற்ற விவரங்கள் தெரியும் " என்று, அந்த விவரங்களை ரேவிடம் தந்தார்.

அவரிடம் விடைபெற்று, ரேவ் வெளியே கிளம்பி வந்தாள்.

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

மாலை 7 மணிக்கு மேல் ஆகிவிட்டது. வெளியே வந்த சயனா, என்ஃபீல்டு மேல் ஏறி அமர்ந்திருந்தாள்.

'சக்திவேல்' 'சக்திவேல்' என்று மனதிற்குள் சொல்லிப் பார்த்தாள். அந்தப் பெயர், அவளைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தது.

'அய்யகோ' என்ற முகத்துடன் ரேவ் வந்து நின்றாள்.

"போலாமா? - சயனா.

"ரொம்ப லேட்டாயிடுச்சு. இன்னைக்கு இன்வெஸ்டிகேஷன் போதும். ஐடி ஆபீஸ் நாளைக்கு காலையில போய் விசாரக்கலாமா? "

"ம்ம்ம், நான் உன்னை வீட்ல டிராப் பண்றேன்"

"ம்ம்ம்"

ராயல் கிளம்பியது.

ஆட்காட்டி விரல் நகம் கடித்தால் மட்டும் நாணமல்ல, ஆமை நடக்கும் வேகத்தில் ராயல் ஓட்டினாலும் நாணம்தான்!!

சாலையோர விளக்கின் மிதமிஞ்சிய ஒளியில், மெதுவாகச் சென்று, ரேவின் வீட்டை வந்தடைந்தது சயனாவின் என்பீல்ட்.

இறங்கி விடைபெறும் போது ரேவ்,

"எனக்கு ஒரு பிராமிஸ் பண்ணு"

"என்ன பிராமிஸ்?"

"வீட்டுக்கு போயி அந்த ஐடி கம்பெனி எம்பிளாய் டீடெயில்ஸ் பார்க்க கூடாது. முக்கியமா சக்திவேலப் பத்திப் பார்க்கவே கூடாது. "

"ஓகே, நாளைக்கே சக்தியைப் பத்தி தெரிஞ்சிக்கலாம்"

"சக்தியா? "

"ஏன்? அவன் பேரு அதான. "

"இங்க பாரு, ஹேக்கர் கனலினிதான்.
நீயா ஏதாவது கற்பனை பண்ணாதே "

" நிஜமாவா சொல்ற? "

"ஆமா, அந்தக் கொரியர்ல வந்த பேரு கனல்தான "

'சயனா, யூ ஆர் கிரேட் ட்டேபீ' என்று சொல்லித் தனக்குத் தானே கைதட்டிக் கொண்டாள், சயனா.

"இப்போ எதுக்கு இந்த சபாஸ்?"

"அன்னைக்கு ஹேக்கர் பேர கெஸ் பண்றப்போ, கனல்வேல்னு சொல்லிருப்பேன். அதுக்குத்தான் "

"அதுக்கு இப்ப என்ன? " - 'இது வேறயா' என்று பொருள் கொள்க.

"ஒன்னுமில்லை ரேவ்" - 'இது வேறதான்' என்ற பொருளில்.

தோழிகளின் செல்லச் சண்டை மௌனங்கள்.

"லிஸன் ரேவ், அவனோட அம்மாக்கு என்ன ஆயிருக்கும்னு கண்டுபிடிச்சா, கேஸ் முடிஞ்சிரும்"

"அப்போ, அவன் அம்மாக்காக பழி வாங்கிருக்கானு சொல்றியா?"

"ம்ம்ம்."

"ஓகே.பை" என்று திரும்பினாள்.

"குட்நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்"

இவள் ஏன் இதைச் சொல்கிறாள்? என்று நினைத்து, ரேவ் நின்றாள்.

"குட்நைட் சொன்னா, திரும்ப குட்நைட் சொல்லனும்".

காலையில் ரேவால் சொல்லப்பட்ட தத்துவம்தான். தவறாமல், இரவில் 'குட்நைட்' என்று பெயர் மாற்றப்பட்டு அவளிடமே கொடுக்கப்பட்டது.

"காலைல என்ன கேட்ட? ஹேக்கர் மேல எனக்கு கிரஸ்ஸானுதான? இப்பவும் ஸேம் கொஸ்டின் கேட்பியா?"

'சயனாவின் கிரஸ் சக்திவேல்' - சகிப்புத்தன்மையின் மறுஉருவான ரேவாலே சகிக்க முடியாதக் கூட்டணி.

"அப்புறம் என்ன சொன்ன? மைண்ட் கனெக்ட்டான…ச்ஞ்ச், ச்ஞ்ச் மனசே கனெக்ட் ஆனாலும் பரவாயில்லை அப்படித்தான? "

ரேவின் நிலை - அழுது அடம்பிடித்து வாங்கிய பலூனை, ஐந்தே நிமிடத்தில் விளையாடி உடைத்து விட்ட குழந்தை போலிருந்தது.

"சயனா, திஸ் இஸ் டூ மச்"

"தேங்க் யூ" - என்று சொல்லித் 'தெறி ட்டேபீ' விடைபெற்றது, ராயலாக ராயலில். .

அதிகமாகப் பேசி தெளிய வைப்பதை விட, குறைவாகப் பேசி குழப்புவதே காதலோ??!
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
கூபீ & ட்டேபீ வந்து பேசினாலே போதும்னு தோணுது... இந்த epi dialogues ellame super... Edha சொல்லறது, எத விட்ரது தெரியல எனக்கு... As usual rocking pari dear??????... Weekly 3 uds& ud illayhappo teaser pottu vidunga authorji ??
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top